Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Friday, April 10, 2015

AMEDEUS - சினிமா விமர்சனம் ( உலக சினிமா -ரஷ்யா , ) 8ஆஸ்கார் அவார்டு பெற்ற படம் - 1984

ஒரு பெரும் நிலப்பரப்பை, கானகத்தை, பிரம்மாண்டமான அரங்கின் பேரமைதியை, மூடிய கண்களுக்குள் காட்சிப் படிமமாக விரிக்க, தேர்ந்த இசைக்கலைஞர்களால் முடியும். இரவின் நிசப்தத்தை, பனி மலையின் உறைந்த அழகை இசைக் கருவிகளாலேயே காற்றில் வரைந்து காட்ட அவர்களால் முடியும்.



உலகின் மாபெரும் இசைமேதைகள் தங்கள் கற்பனை மூலம் எத்தனையோ ஜாலங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மொசார்ட். அமேடியஸ் வுல்ஃப்காங் மொசார்ட். பீத்தோவன், சைக்காவ்ஸ்கி போன்ற இசை மேதைகளுக்குத் தாக்கம் தந்த பெருங்கலைஞர்.
அவரது சமகாலத்தில் இயங்கிய மற்றொரு இசைக்கலைஞர் ஆன்டானியோ சலியேரி. மொசார்ட்டை விட 6 வயது மூத்தவர். இருவரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து பெருமளவில் கற்பனை கலந்து ‘மொசார்ட் அண்ட் சலியேரி’ எனும் நாடகமாக எழுதினார் ரஷ்யக் கவிஞரும் எழுத்தாளருமான அலெக்சாண்டர் புஷ்கின்.
இந்த நாடகத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ‘அமேடியஸ்’. 1984-ல் வெளியான இப்படம், 8 ஆஸ்கர் விருதுகள் உட்பட, 40 சர்வதேச விருதுகளை வென்றது. உலகமெங்கும் உள்ள திரைப்பட ஆர்வலர்களால் கொண்டாடப்படும் படைப்பு இது.
சலியேரி மூத்தவர் என்றாலும், அவருக்கு முன்னதாகவே இசையுலகுக்கு வந்துவிட்டவர் மொசார்ட். அவரது தந்தை லியோபோல்ட் மொசார்ட்டும் இசைக்கலைஞர்தான். தனது மகனுக்கும் மகள் மரியா அன்னாவுக்கும் இளம் வயதிலேயே இசை கற்றுத் தந்திருந்தார்.
‘சின்னப்பயல்’ மொசார்ட்டின் அசாத்தியமான இசைப் புலமை, அவரது இசைக்கு இருந்த வரவேற்பு ஆகியவற்றின் காரணமாகப் பொறாமை கொள்ளும் சலியேரி, ஒரே நேரத்தில் அவரது இசையை ரசிப்பவராகவும், அவரது இருப்பை முற்றிலும் வெறுப்பவராகவும் உருவாவதைப் படம் சித்தரிக்கிறது.
வயதான சலியேரி தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயல்கிறார். நீண்ட நாட்களாகவே, மொசார்ட்டின் இறப்புக்குத் தான்தான் காரணம் என்று புலம்பிக்கொண்டிருக்கிறார். சிகிச்சைக்குப் பிறகு மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படும் சலியேரியைச் சந்தித்துப் பாவமன்னிப்பு வழங்க வருகிறார் பாதிரியார் ஒருவர். அவரிடம் தனது கதையைச் சொல்லத் தொடங்குகிறார் சலியேரி.
மொசார்ட் முழுமையான இசைக்கலைஞராக உருவான காலத்தில், விளையாட்டுப் பையனாகத் திரிந்தவர் சலியேரி. மொசார்ட்டின் தந்தையைப் போல் அல்லாமல், தனது இசையார்வத்துக்குத் தடைவிதிக்கும் தனது தந்தை மீது வெறுப்புடன் இருக்கிறார்.
தந்தை இறந்துபோனதை கடவுள் ஏற்பாடு செய்த ‘அதிசய நிகழ்வாக’க் கருதி தனது இசைக்கனவை நனவாக்கிக் கொள்கிறார். இத்தாலியையும் ஜெர்மனியையும் ஆட்சி செய்த ரோமப் பேரரசர் இரண்டாம் ஜோசப்பின் அரண்மனையின் தலைமை இசைக் கலைஞராக உயர்கிறார்.
அவரது மகிழ்ச்சியை, மனநிறைவைக் குலைக்கும் வகையில் அமைகிறது மொசார்ட்டின் வருகை. ஆர்ப்பாட்டமான சிரிப்பும், துள்ளும் இளமையும், வேடிக்கை குணமும் கொண்ட மொசார்ட்டை ஒரு அசந்தர்ப்பச் சூழலில் சந்திக்கிறார் சலியேரி. மொசார்ட்டின் இசைக்குறிப்புகளில் தெறிக்கும் மேதைமை தனது இருப்பைக் கேள்விக்குரியதாக்குவதை உணர்கிறார்.
இரண்டாம் ஜோசப்பின் அரண்மனைக்கு அழைக்கப்படும் மொசார்ட்டை வரவேற்க சலியேரி எழுதிய ‘மார்ச் ஆஃப் வெல்கம்’ இசைக் குறிப்பை, பேரரசர் இசைத்துக் காட்டும் காட்சி படத்தின் மொத்தக் கதையையும் சொல்லிவிடும். அந்த இசைக் குறிப்பை ஒரு முறை கூட பார்க்காமல், ஒரே ஒரு முறை கேட்டதை நினைவில் வைத்து அப்படியே வாசித்துக்காட்டுவார் மொசார்ட். சலேரியின் இசைக்குறிப்பில் இருந்த ‘சாதாரணத் தன்மையை’ மெருகேற்றி வாசித்துக் காட்டும் மொசார்ட் மீது ஆத்திரம் கொள்வார் சலியேரி. மொசார்ட்டின் வாழ்வில் விதியின் நிழலைப் போல் விளையாடத் தொடங்குவார்.
வறுமையையும், புறக்கணிப்பையும் சந்திக்கும் மொசார்ட் இளம் வயதிலேயே மரணமடையும் வரை தொடர்கிறது சலியேரியின் வன்மம். தனது தந்தை இறந்த அதிர்ச்சியில் இருக்கும் மொசார்ட்டை வீழ்த்த, முகமூடி அணிந்த மர்ம மனிதராக வந்து ‘ரெகுயெம் மாஸ்’ எனும் இசைக்கோவையை எழுதப் பணிப்பார். உடனடியாகப் பணம் கிடைக்கிறது என்ற காரணத்தால், அதை எழுதத் தொடங்கும் மொசார்ட் குடிப்பழக்கம், ஓய்வில்லாத உழைப்பு காரணமாக அகால மரணமடைவார்.
படத்தின் மொத்த பாரத்தையும் சுமந்திருப்பவர் சலியேரியாக நடித்த முர்ரே ஆபிரஹாம். உயர்தர இசையை உருவாக்கி மறைந்துவிட்ட மொசார்ட், அவரை ஆராதிக்கும் ரசிகர்கள் ஒருபுறம் என்றால் வெறுப்பின் உடல் வடிவமாக, தோல்வியின் ஆராதகராக மேன்மையான கலையைக் கேலிசெய்துகொண்டே தனது இருப்பை நிலைபெறச் செய்யும் முயற்சியில் இருக்கும் பாத்திரம் அது.
தனது திறமையைக் கேலிசெய்யும் மொசார்ட் மூலம் தன்னிடம் வெறுப்பைக் காட்டுவது கடவுள்தான் என்று முடிவுசெய்யும் பாத்திரம். முகபாவனை, உடல்மொழி, கண்ணசைவு என்று நடிப்பின் அனைத்து பரிமாணங்களையும் வெளிப்படுத்தி அந்தப் பாத்திரத்தை மேன்மைப்படுத்தியிருப்பார் முர்ரே ஆபிரஹாம்.
தான் இசையமைத்த மெட்டுக்களை இளம் பாதிரியாரிடம் பியானோவில் சலியேரி வாசித்துக் காட்டும் காட்சியைச் சொல்லலாம். அவர் இசையமைத்த மெட்டு எதையும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பாதிரியார் கேள்விப்பட்டதில்லை; கடைசியாக சலியேரி வாசிக்கும் இசைக்குறிப்பைக் கேட்டதும் பாதிரியாரின் முகம் மலர்கிறது. ‘ஆமாம், இதை நான் கேட்டிருக்கிறேன்’ என்று சொல்லி, கூடவே பாடுகிறார்.
நொந்துபோகிறார் சலியேரி. “இது என்னுடைய இசை அல்ல. மொசார்ட்டுடையது “ என்று வெறுப்புடனும், அவமானத்துடனும், அதை மறைக்க முயலும் வெற்றுப்புன்னகையுடனும் சொல்லும் காட்சியில் நடிப்பின் உச்சத்தைத் தொட்டிருப்பார் முர்ரே ஆபிரஹாம். மொசார்ட்டாக நடித்திருக்கும் டாம் ஹல்ஸ் துள்ளலும் துடிப்புமாக அந்தப் பாத்திரத்தைச் செதுக்கியிருப்பார்.
உண்மையான திறமையைப் புரிந்துகொள்ளத் திராணியற்ற அதிகாரவர்க்கம், அதைச் சுற்றியிருப்பவர்களின் அசட்டுத்தனம் என்று பல்வேறு விஷயங்கள் படத்தின் அடிநாதமாகப் பின்னப்பட்டிருக்கும். இன்று வரை இந்தப் படத்தைப் பிரதியெடுக்கும் முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், அது வெற்றிகரமாகவில்லை. ஏனெனில், இந்தப் படத்தின் ஆன்மா அத்தனை மேன்மையானது. மொசார்ட்டின் சாகாவரம் பெற்ற இசையின் ஆன்மாவுக்கு ஒப்பானது அது!



நன்றி  - த இந்து

Sunday, March 01, 2015

ஒய் திஸ் கொலை வெறி நாயகனின் நிலா அது வானத்து மேல வின் காப்பியா?-ஆண்ட்ரியாவின் ஃபேமிலி (லிப் லாக் ) ஃபிரண்ட் பேட்டி

அனிருத் படம்: எல்.சீனிவாசன்
அனிருத் படம்: எல்.சீனிவாசன்
குருவி தலையில் பனங்காயை வைத்தது போல மிகச் சிறிய வயதிலேயே மிகப்பெரிய இசையமைப்பாளர் என்ற புகழைச் சுமந்து நிற்கிறார் அனிருத்.
‘3’ படத்தில் ஆரம்பித்து அடுத்தடுத்து ஹிட் பாடல்களைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ள அவரைச் சந்தித்தோம். பியானோவில் விரல்களை ஓடவிட்டவாறு நம் கேள்விகளுக்கு பதிலளித்தார் அனிருத்.
இவ்வளவு சீக்கிரம்... இத்தனை உயரம்... எதிர்பார்த்தீர்களா?
இல்லை. இது நான் எதிர்பார்க்காத ஒன்று. நான் 6-ம் வகுப்பு படிக்கும்போதே பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வேன். பள்ளி யில் பஜன்ஸ் குழு, கல்லூரியில் ராக் குழு என்று நிறைய இசைக்குழுக்களில் இருந்த தால் இசையில் அதிக ஆர்வம் இருந்தது.
ஒரு இசையமைப்பாளராக வேண்டும் என்ற ஆசை அப்போதிலிருந்தே எனக்கு இருந்தது. ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் இசைய மைப்பாளர் ஆவேன் என்று நினைக்க வில்லை. இன்னும் நிறைய கற்றுக்கொண்ட பிறகுதான் இசையமைப்பாளராக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இந்த இளம் வயதிலேயே இப்படி ஒரு அந்தஸ்து கிடைத்ததற்கு என்னுடைய நல்ல நேரம்தான் காரணம் என்று சொல்லவேண்டும்.
சிறு வயதிலேயே இசையமைப்பாளர் ஆனதால் இளமைக் கால கலாட்டாக்களை தவறவிட்ட வருத்தம் இருக்கிறதா?
கண்டிப்பாக இருக்கிறது. நான் கல்லூரி யில் படிக்கும் போது என்னுடைய வருகைப் பதிவேடு மிகவும் மோசமாக இருக்கும். நான் அடிக்கடி கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள போவதால் வகுப்புக்கு அதிகம் போகமாட்டேன். ஆனால், கல்லூரியில் முதல் வகுப்பில் தேர்வானேன்.
படிப்பு, கலை நிகழ்ச்சிகள் என்று ஓடிக் கொண்டே இருந்ததால் என்னால் கல்லூரி கலாட்டாக் களை அனுபவிக்க முடியவில்லை. கல்லூரியில் எனக்கு நிறைய நண்பர்களும் இல்லை. இப்போதும் எனக்கு நண்பர்கள் என்றால் என்னுடைய பள்ளி நண்பர்களும் என்னுடன் பணிபுரிபவர்களும்தான்.
தனுஷ், சிம்பு இருவருக்கும் நீங்கள் நண்பராக இருக்கிறீர்கள். இருவருக்கும் இடையிலான நட்பு எப்படி இருக்கிறது?
இரண்டு பேருக்குமே அவ்வளவாக ஆகாது என்று நான் இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பு கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் இருவரிடமும் பழகியதை வைத்து பார்க்கும்போது அவர்களிடையே எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை. இருவருமே நெருங்கிய நண்பர்கள்தான்.
பள்ளி நாட்களில் நான் கலை நிகழ்ச்சியில் இசைப் பிரிவில் இருக்கும்போது சிம்பு வேறு பள்ளியின் நடனப்பிரிவில் இருப்பார். அதனால் அவரை எனக்கு அப்போதில் இருந்தே தெரியும். அவர் எனக்கு மிகவும் சீனியர்.
‘நானும் ரவுடிதான்’ படத்தில் நீங்கள் நாயக னாக நடிக்க இருப்பதாக ஒரு செய்தி வலம் வந்ததே?
அந்தச் செய்தி எப்படி வந்தது என்று தெரிய வில்லை. ‘3’ படத்துக்கு கிடைத்த வரவேற் பைத் தொடர்ந்து நிறையப் பேர் எனக்கு கதை சொல்ல வந்தார்கள். கதையைச் சொல்லி முடித்தவுடன் ‘நீங்கள்தான் படத்தில் நாயகன்’ என்று சொல்வார்கள். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியாது.
நடிப்பதில் எனக்கு ஆர்வமில்லை. கடந்த 3 வருடங்களில் என்னுடைய 7 ஆல்பங்கள் வெளிவந்திருக்கிறது. எனக்கு கிடைத்திருக் கும் இந்த இடத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இப்போது இருக் கிறது. இசைக்காக வீடியோ தயார் பண்ணும் போதே, அதில் எப்படி ஆடுகிறோம், நடித்திருக்கிறோம், அழகாக இருக்கிறோமா என்றுதான் எண்ணம் போகிறது. என்னால் ஒரே நேரத்தில் பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்த முடியாது. அதனால் எனக்கு நடிப்பில் விருப்பமில்லை.
அப்படியென்றால் நாயகனாக நடிக்கவே மாட்டீர்களா?
இசைக்கான வீடியோ ஆல்பங்களில் மட்டும் நடிப்பேன். இரண்டு மூன்று நாட்கள் இசை ஆல்பத்தில் நடிப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது நாயகனாக நடிக்க வாய்ப்பே இல்லை.
உங்களுடைய இசைக்கு கிடைத்த மறக்க முடியாத பாராட்டு என்ன?
மறக்க முடியாத பாராட்டு என்றால் ‘எதிர் நீச்சல்’ படத்துக்கு கிடைத்ததுதான். நான் இசையமைத்த படங்களை முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடுவது வழக்கம். அந்த வகையில் ‘எதிர் நீச்சல்’ படத்தை முதல் ஷோ பார்த்தேன். அதில் பெயர் போடும்போது, என் பெயர் இசையமைப்பாளர் அனிருத் என்று வந்தது.
அப்போது ரசிகர்கள் எழுப்பிய கைதட்டல் மற்றும் விசிலைக் கேட்டபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். என்னுடைய இரண்டாவது படத்துக்கே இப்படி ஒரு வரவேற்பா என்று ஒரு பிரமிப்பு இருந்தது.
திரையுலகில் எனக்கு எல்லாமே ரஜினிகாந்த்தான். என் இசை வெளியாவதற்கு முன்பே அதன் சிடியை ரஜினிகாந்துக்கு அனுப்பிவிடுவேன். என்னுடைய இசை வெளியாவதற்கு முந்தைய நாளே அவரு டைய விமர்சனம் கிடைக்கும்.
அது தான் திரையுலகத்தில் எனக்கு கிடைக்கும் சிறந்த பாராட்டு. ஒரே ஒரு ஆல்பத்தை மட்டும் அனுப்ப மறந்து விட்டேன். அப்போதுகூட அவராகவே போன் செய்து ஆல்பத்தைக் கேட்டு வாங்கினார். எப்போதுமே அவரிடம் இருந்து பாராட்டு கிடைக்கும் அளவுக்கு நன்றாக இசையமைக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.
மறுபடியும் ‘கொலவெறி’ பாடல் மாதிரி ஒரு பாடலை உங்களால் கொடுக்க முடியவில்லையே?
அந்த மாதிரி பாடல்கள் 20, 30 வருடங்களுக்கு ஒருமுறைதான் வரும். எனக்கு முதல் படத்திலேயே அப்படி ஒரு பாடல் அமைந்தது. அதுபோன்ற ஒரு பாடல் மீண்டும் எப்போது அமையும் என்று யாருக்குமே தெரியாது. அப்போது கிடைத்த பெயரை தக்கவைத்துக் கொள்ளத்தான் உழைக்கிறேன், போராடுகிறேன்.
இளம் வயதில் பெரிய இசையமைப்பாளர் என்ற புகழ் கிடைத்தாலும் மறுபுறம் காதல் சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறீர்கள். அப்படி காதல் சர்ச்சையில் சிக்கும்போது இருந்த மனநிலை என்ன?
முதல் முறையாக என்னுடைய வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய அடி என்று அதைச் சொல்லலாம். ஏனென்றால் அது வரைக்கும் எல்லாருமே என்னுடைய இசையைக் கொண்டாடினார்கள். முதல் தடவையாக என்னைப் பற்றி ஒரு எதிர்மறையான செய்தி வந்தது.
இரண்டு நாட்கள் மனநிம்மதி இல்லாமலேயே இருந்தேன். இரண்டு வாரங்களுக்கு வெளியே தலைகாட்டா மலேயே இருந்தேன். என் பொழுதை தனிமையில் இசையோடு கழித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது பண்ணிய பாடல்கள் தான் ‘வணக்கம் சென்னை’ படத்தின் பாடல்கள். இப்போது எதிர்மறைச் செய்தி களை தாங்கிக்கொள்ள மனம் பக்குவப் பட்டுள்ளது. அதுபோன்ற செய்திகளைப் படிக்கும்போது நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறேன்.
இவ்வளவு ஒல்லியாக இருப்பதற்கு அப்படி என்னதான் சாப்பிடுகிறீர்கள்?
நீங்கள் ஒருநாள் என்னுடன் இருந்து, நான் சாப்பிடுவதைப் பாருங்கள். சாப்பாட்டை சும்மா வெளுத்துக் கட்டுவேன். ஒரு வேளை, சைவ சாப்பாட்டைச் சாப்பிடுவதால் எடை கூடாமல் இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை.




நன்றி - த இந்து

  • Seetharaman  
    காப்பி அடிச்சு மியூசிக்ல பெரிய ஆளு ஆயிடிங்க , அது போல விக்ரம் , கமல் மாதிரி பெரியே ஆளுங்கள காப்பி அடிச்சு இன்னும் பெரியே ஆள் ஆயிடுங்க அனிருத்... நமக்கு தான் புதுசா யோசிக்க தெரியாதே
    about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
    • Gnanasekaran  
      "ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்." -திருவள்ளுவ நாயனார். கமெண்ட்: அனிருத் அய்யா அவர்களே, முதலில் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். பிறகு நடிப்பை பற்றி யோசிக்கலாம். அது மட்டுமின்றி இப்போவே சிவகார்த்திகேயனுக்கும், தனுஷுக்கும் அப்படி இப்படின்னு பேச்சு அடி படுத்து. நீங்களும் நடிக்க வந்துடீங்கன்ன நிலைமை இன்னும் சூப்பர். முதலில் நீங்கள் சொந்தமாக மியூசிக் போட கற்றுக்கொள்ளுங்கள். இப்படி காமெடி எல்லாம் பண்ணாதீங்க. "சைவ சாப்பாட்டைச் சாப்பிடுவதால்..." இது தவறு. இதற்கு பின்னால் ஒரு அரசியல் தென்படுகிறது. வீணான குழப்பத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டாம். " (கொலைவெறி) அந்த மாதிரி பாடல்கள் 20, 30 வருடங்களுக்கு ஒருமுறைதான் வரும்." கமெண்ட்: கொலைவெறி பாடல் இசைத்தாய் இசைஅமைத்த "நாயகன்" படத்தில் இடம்பெற்ற, "நிலா அது வானத்து மேல" பாடலின் காபிதான். "ஓடுற நரியில ஒரு கிழ நரி தான்" = "why திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டி" காபி அடிங்க, ஆனா தெரியாத மாதிரி காபி அடிங்க... நன்றி. தமிழ் வாழ்க.

    Tuesday, January 27, 2015

    இளையராஜா இசை அமைக்காதது அதிக இழப்பு ரஜினிக்கா? கமலுக்கா?

    ரஜினி, கமல், ராஜா


    ராஜாவிடம் கமல் தந்த ஒவ்வொரு படமும் ராஜாவுக்கு அல்வா சாப்புட்றமாதிரி. ஒவ்வொரு படமும் டிமாண்டிங் ஆனா வெவ்வேறு மாதிரி! உதாரணம், குணாவில் வரும் 'உன்னை நானறிவேன்" பாடல், இது கமர்ஷியலா சூப்பர்டூப்பர் ஹிட் அடிக்கணும், ஒரு கண்ணே கலைமானே போல ஹிட் ஆகணும்னு எந்த பிரஷரும் ராஜாவுக்கு முன் வைக்கப்படலை(கிட்டதட்ட அதே சிச்சுவேஷன்) எனவே ராஜா, எந்த கமர்ஷியல் அழுத்தமும் இல்லாமல் ஒரு கலைஞனாக, மிக சுதந்திரமாக மெட்டமைக்கலாம்! இதுபோல் கமல் ராஜாவுக்கு தந்தது பல கலைப்படைப்புக்கள்! ராஜாவுக்கு இருந்த பெரும் கலைப்பசிக்கு, புகுந்து விளையாடவும் சேலஞ்சிங்காகவும் தன் திறமைக்கேற்ற அட்டகாசமான தீனியாகவும் அமைந்தன!

    ஆனா ரஜினி படங்களோ, பலதும் கிட்டதட்ட அதே கதைகள்தான். கிட்டதட்ட ரிப்பீட் சிச்சுவேஷன் பலப்பல. அம்மா செண்டிமென்ட், தங்கச்சி/தம்பி செண்டிமென்ட், ஹீரோ இன்ட்ரோ, வில்லன் இன்ட்ரோ, திமிர்ப்பிடித்த நாயகி, காமெடி காட்சிகள் இப்படி பல ரிப்பீட்கள். ஆனாலும் ராஜா, ரஜினியின் ஸ்டைலுக்கு இசையால் சேர்த்த பரிமாணம் வாய்ப்பே இல்லை! வெகு சுமாரான அந்தப்படங்களில் நம்மை உட்காரவைத்ததும், ரசிக்கவைத்ததும், ஏன், சிலமுறை, ரஜினியின் ஸ்டைலை சரியானபடிக்கு ஹைலைட் செய்ததுமே ராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் தான்!

    அதுவும், ரஜினியானவர், பணக்காரனாக நடித்தாலும் சரி, ஏழையாக நடித்தாலும் சரிம் ரொமான்ஸ் காட்சியிலும் சரி,ஜல்சா, நகைச்சுவை கோபம் சோகம் நகைச்சுவை, வில்லனிடம் சவால் வசனம், கூலாக பேசும் வசனம், இப்படி எல்லாவற்றிலுமே தன் அக்மார்க் ஸ்டைலோடு தான் பேசுவார் நடிப்பார் மேனரிசம் காட்டுவார்! சொல்லப்போனால், கிட்டதட்ட ஒரேமாதிரி அமைந்த அனைத்து கதைகளிலுமே, சுவாரசியம் கூட்டினது ரஜினியின் இந்த ஸ்டைல் தான்!

    இந்த ஸ்டைலுக்கு ராஜா, தன் பின்னணி இசையின் மூலம் எத்தகைய பரிமாணம் கொடுத்திருக்கிறார் என அத்தனை படங்களிலும் பாருங்கள்!

    ராஜாவுக்கு பின்னான இசையமைப்பாளர்கள், ரஜினிக்கு இன்ட்ரோ பாடல் என்றாலே, உடனே பிரம்மாண்டத்துக்காக Trumpet இசையை வைத்துவிடுவார்கள்! முத்து ஒருவர் ஒருவன் முதலாளி, சந்திரமுகி தேவுடா தேவுடா, அதாண்டா இதாண்டா, இப்படி பல உதாரணங்கள்! (தேவாவின் பாட்ஷா ஜேம்ஸ்பாண்ட் இசை, படையப்பா கிக்கு ஏறுதே, ஆரம்ப ஃப்ளூட் இசை போன்ற மிகச்சில exceptions மட்டுமே இருக்கிறது)

    ஆனால் ராஜாவோ, ரஜினி என்றால் பயன்படுத்தும் இசைக்கருவிகள் ஆகட்டும், வாசிக்கும் இசை ஆகட்டும், எத்தனை வெரைட்டி! Bass Guitar, Classic guitar, Electric Guitar, Strings section, Trumpet, Sax type Wind instruments, Synth Music, Rythmsஇல் எக்கசக்க தாளவாத்திய கருவிகள், இப்படி, இசைக்கருவிகளிலாகட்டும் இசையிலாகட்டும், இளையராஜா ரஜினி படங்களில் ஒரு Musical SuperStar ஆகவே வலம் வந்து பட்டையை கிளப்பியிருக்கிறார்!

    இப்படி, ராஜாவின் ரஜினிக்கான இசை என்பது மட்டுமே ஒரு தனி Genre! ராஜா, கமலுக்கு கூட, வேறு எந்த நாயகனுக்குமே இப்படி ஒரு சிறப்பை தந்ததில்லை! கமல் ஒருகட்டத்தில் முற்றிலும் வெவ்வேறு படங்களை தந்ததால் ராஜா சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார். ஆனால் சிச்சுவேஷன் சாதா என்றால் பாடலும் சாதா தான்! உதாரணம், சத்யா படத்தில் 'நகரு நகரு' போன்ற பாடல்கள். ஒருவேளை, கமல் தொடர்ந்து காதல் இளவரசன் டைப் படங்களில் மட்டுமே நடித்திருந்தால், ராஜாவின் இசை output தரம் சற்றே குறைந்திருக்கும் என்று கூட எனக்கு தோன்றும்!

    ஆனால், ரஜினியை ராஜா ட்ரீட் செய்த விதமே வேறு. வள்ளி படத்தில் டிங்கு டாங்கு ரப்பப்போ பாடலில் வரும் Guitar Strummingஐ கேளுங்கள்! அதுபோன்ற ஒரு Stylish இசை, வாய்ப்பே இல்லை! இதுபோல் கணக்கற்ற உதாரணங்கள் ராஜா இசையமைத்த ரஜினி படங்களுக்கு உண்டு!

    அதிசயப்பிறவி படம், ஒரு லோ பட்ஜெட் படம். MD உள்பட எல்லாருக்குமே கொஞ்சம் குறைந்த சம்பளம் தான் தரப்பட்டிருக்கும். ஆனால் அதற்குக்கூட ராஜாவின் இசை, எந்தவித தரக்குறைவும் இல்லாமல் தான் இருக்கிறது!

    இத்தனைக்கும், அப்போதெல்லாம் ரஜினிfilms (&கமல் films too) தொடர்ந்து ராஜாவிடம் போகாது! அவ்வப்போது சங்கர்கணேஷ் சந்திரபோஸ் என மற்றவர்கள் இசையமைப்பார்கள்! ஆனால் திரும்ப ராஜாவிடம் வரும்போது அதகளம் தான்!!

    இன்றைய தேதியில், நிச்சயம் கமல், ரஜினி இருவருமே அவ்வப்போது ராஜாவிடம் சென்றிருக்கக்கூடாதா என்ற எண்ணம் தோன்ற காரணமே அவர் இதற்குமுன் இசையமைத்ததன் தரம் தான்!

    அதுமட்டுமல்ல, ஒட்டுமொத்தமாகவே, கமலும் ரஜினியும், தம்முடைய மிக நீண்ட கேரியரில், வேறு யாருடனுமே( Same producer/heroine/comedian etc ) இத்தனை முறை, அசோசியேட் ஆனதே இல்லை! ரஜினி கிட்டதர்ர 80படங்கள் கமல் கிட்டதட்ட 68 படங்கள் ராஜாவுடன்! இதில், ராஜாவின் பாடல்கள், பின்னணி இசையை எடுத்துவிட்டு பார்த்தால், நிச்சயம் ஒரு மிகப்பெரிய மைனஸ் தெரியும்! (இந்த இசையோடு கம்பேர் செய்தால், இன்றைய காலகட்டத்தில் மற்றவர்கள் ரஜினி படங்களில் அமைக்கும் எத்தனை BGMs செல்ஃப் எடுத்திருக்கிறது, நினைவில் நிற்கிறது என நீங்களே ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளவும்! ;)))

    (மகாநதி விகடன் விமர்சனத்தில் சொன்னதைப்போலவே) பலப்பல ரஜினி படங்களிலும் அவரது ஸ்டைலையும் படத்தையும் நாம் ரசிக்க, நம்மையுமறியாமல் நம்மை இயக்கிய சக்தியாக ராஜாவின் பின்னணி இசை & பாடல்கள் இருந்திருக்கிறது!

    எனவே, ரஜினி கமல் இருவருமே, ஒட்டுமொத்தமாகவே ராஜாவை புறக்கணித்தது நிச்சயம், இருவருக்குமே, (குறிப்பாக ரஜினிக்கு அதிகம்) பேரிழப்பு தான். இதில், கமல் ரஜினி என பிரித்துப்பார்க்க முடியாதபடி இருவரின் படங்களுக்குமே இழப்பு தான். 

    நன்றி -

    Monday, January 12, 2015

    புலி - விஜய் 58 பட இசை வீரம் இசையை மிஞ்சுமா?-தேவி ஸ்ரீபிரசாத் பேட்டி

    தேவி ஸ்ரீபிரசாத் | படம்: கிரண் சா
    தேவி ஸ்ரீபிரசாத் | படம்: கிரண் சா 
     

    'புலி'யில் புது இசை: சிலாகிக்கிறார் தேவி ஸ்ரீபிரசாத்

     

     
    2014ல் அஜித் நடித்த 'வீரம்' படத்திற்கு இசையமைத்தவர், 2015ல் விஜய் நடித்து வரும் 'புலி' படத்திற்கு இசையமைத்து வருகிறார்... அவர்தான் தேவி ஸ்ரீபிரசாத்.
    தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அதிகமான படங்களுக்கு இசையமைத்து வரும் தேவி ஸ்ரீ பிரசாத்திடம் பேசினோம்.
    "2014ம் ஆண்டு எனக்கு ‘வீரம்’ படம் மூலமா நல்ல ஒரு வரவேற்பு கிடைத்தது. தெலுங்கிலும் பல படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது. இந்த 2015ம் ஆண்டு மிகவும் மகிழ்ச்சியாக ஆரம்பித்திருக்கிறது.
    விஜய் படத்திற்கு இசையமைப்பது என்பது ஒரு இனிமையான அனுபவம். அவர் நடிச்ச படங்களில் எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்த படம் 'வில்லு' தான் என்று என்னிடம் பலமுறை கூறியிருக்கிறார்.
    இயக்குநர் சிம்புதேவன் என்னிடம் 'புலி' படத்தைப் பற்றி பேசும் போதே எனக்கும் அவரும் நல்ல செட்டாகி விட்டது. அவர் ஒரு கார்டூனிஸ்ட் என்பதால், படத்தில் ஒவ்வொரு பாத்திரத்தையுமே கார்டூனாக காட்டியதால் எனக்கு ரொம்ப எளிமையாக இருந்தது. 'புலி'யில் புது இசையை கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். 'புலி' தலைப்பிற்கே ஒரு பெரிய ரீச் கிடைத்திருக்கிறது.
    'புலி' ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். இதற்கு முன்னால் இந்த மாதிரியான படத்திற்கு நான் இசையமைத்ததில்லை. இப்படத்திற்கு நான் பண்ணப் போகிற இசையில் படத்தோட கதைக்கும், பிரம்மாண்டத்துக்கும், அதனோட அழகுக்கும், பொருத்தமா இருக்கணும். அதற்கு ஏற்றார் போல் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.
    இரண்டு பாடல்களை முடித்து கொடுத்துவிட்டேன். ஒரு பாடலின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மொத்தம் 6 பாடல்கள் இருக்கிறது. விஜய், ஸ்ருதிஹாசன் இப்படத்தில் பாடுகிறார்களா என்பது இப்போதே சொல்ல முடியாது. நான் எதையாவது சொன்னால் புலி என்னை சாப்பிட்டு விடும்.
    என்னுடைய பாடல்கள் குழந்தைகளுக்கும் பிடிக்கணும் என்பதை மனதில் வைத்து தான் அனைத்து பாடல்களையும் பண்றேன். தெலுங்கில் நிறைய படங்கள் பண்ணுவதால், தமிழில் ரொம்ப தேர்ந்தெடுத்து தான் பண்றேன்.
    என்னோட குரு மறைந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு மிகப்பெரிய இசை அஞ்சலி நிகழ்ச்சியை அடுத்த மாதம் நடத்த இருக்கிறோம். இந்தியாவில் இருக்கிற பெரிய இசைக் கலைஞர்கள் பலரும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். நிறைய பேருக்கு நான் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் சிஷ்யன் என்பது தெரியாது.
    நாலைந்து வயது இருக்கும் போதே அவர்கிட்ட மாண்டலின் கற்றுக் கொள்ள போய்விட்டேன். என்னை மிகப் பெரிய மாண்டலின் கலைஞராக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், நான் சினிமா பக்கம் போய்விட்டேன்" என்றார். 


    நன்றி -த இந்து

    Saturday, February 23, 2013

    இசை ஞானி இளையராஜா மீதான 18 குற்றச்சாட்டுகள்



    இளையராஜா மீதான குறைபாடுகள், குற்றச்சாட்டுகள் தாக்குதல்கள் என்று இதுவரை நான் கேள்விப்பட்ட சிலவற்றை கடந்த அரைமணி நேரத்தில் நினைவு கூற முடிந்ததை கீழே தொகுத்துள்ளேன். இவை இப்போதைக்கு எழுதும் போக்கில் நினைவுக்கு வந்தவை மட்டுமே.


    1. ஆணவம் மிகுந்தவர்; இவரது ஆணவத்தினாலேயே பல இயக்குனர்கள் இவரை அழைப்பதில்லை. ஒரு இயக்குனரிடம் வாயை கொடுத்து கன்னத்தில் அறை வாங்கினார்; அவரது ஈகோ அடிவாங்கிய அந்த நிகழ்விலிருந்து அவரது சரிவு தொடங்கியது.


    2. வைரமுத்து மீது காரணமின்றி தீராத வன்மம் கொண்டிருப்பவர். மாறாக வைரமுத்து இன்னமும் ராஜா மீது அன்பு கொண்டு கவிதை எழுதுபவர்.



     3. தன் நிகழ்ச்சியின் மேடையில் தன் படம் மட்டுமே இருக வேண்டும் என்று சொன்னார்; தன் நிகழ்ச்சிக்கு முன் வேறு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படக்கூடாது என்று நிபந்தனை விதித்தவர்; அதனால் அல்பமானவர். பணத்தை ஆடம்பரமாக செலவழித்தார்; படாடோபமாக பிறர் பணத்தில் வாழ்ந்தார்;


    4. வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பி தரவில்லை; அது மக்களின் பணம். ஜவுளிக்கடைகள் பலவற்றில் கடன் வைத்து திருப்பித் தரவில்லை. இன்னும் எத்தனையோ பேருக்கு பணம் திருப்பி தரவில்லை. தொலைத்த காசை கண்டு பிடித்து கொடுத்தவருக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை. ரசிகர் எழுதிய கடிதத்திற்கு பதில் போடவில்லை.

    5. திருவாசகம் சிம்ஃபனியில் ஜெகத் காஸ்பரிடம் நன்றியில்லாமல் நடந்து அவமரியாதை செய்தவர்; திருவாசகம் விற்பனையில் பெரும் நஷ்டம் ஏற்பட காரணமாக இருந்தவர். திருவாசகத்திற்காக அரசு உதவியை பெற்று மறைமுகமாக அரசு பணத்தை திருடினார். ஆன்மீகம் பேசுபவர்; போலி ஆன்மிகம் பேசுபவர்; பிரமண அடிவருடி; அசைவம் உண்ணாதவர்;


    6. அசைவ உண்ணும் பழக்கத்தை மதிகாதவர். புகழ்மோகம் கொண்டவர்; அதற்காக பல ஸ்டண்டுகளை நடத்துபவர். பாவலர் வரதராஜன், பாப் மார்லெயை குப்பை என்றார்; கதாரை குப்பை என்றார்; அடுத்து பாப் டைலனை கூட குப்பை என்றார். மலையாள கவிஞர் ஒன்வி குருப்பை பற்றி மோசமாக பேசினார்.

    7. தன் பாட்டு காப்பியடிக்கப்பட்டதற்கு கோபப்பட்டார். ஆனால் அவரே சில காப்பிகள் அடித்தார். உதாரணமாக 'பா' திரைப்படத்தில் 'கும்சும்..' பாட்டு "இஸ்தான் புல்..' என்ற பாட்டிலிருந்து காப்பியடிக்கப் பட்டது. ஆபா, போனிஎம் இசையை திருடினார். அவர் ஒரு தலித் பார்ப்பனர்; பூணூல் அணியாவிட்டாலும் நரம்பையே பூணுலாக கொண்டவர்.

    8. முல்லை பெரியார் நிகழ்வின் போது ஜாய் ஆலுக்காஸ் ஆதரவுடன் இசை நிகழ்ச்சி நடத்தினார். மாவீரர் மாதத்தில் வேண்டுமென்றே சிங்கள அரசிடம் கைக்கூலி பெற்று கனடா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். பெரியார் படத்திற்கு இசையமைக்க மறுத்தார்; பெரியாரை சிலைக்கு மாலையிட மறுத்தார். ரமணரை பற்றி பாடினார்; புருஷசுக்தத்திற்கு இசை வடிவம் தந்தார். இவ்வாறு இந்துத்வ ஆதரவாளராக திகழ்ந்தார்.


    9. யுவனுக்கு ஏதோ ஒரு விலை உயர்ந்த கார் வாங்கி தந்தார். ('யுவனுக்கு இந்த கார் வாங்கி தர்ரான்.. திருவாசகம் இசையமைக்க பணம் இல்லைன்றான்..") தன் பழைய வாழ்க்கையை நினைத்து பார்க்காதவர். தான் ஜாதி பற்றிய உணர்வு இல்லாதவர். தலித்களுக்காக குரல் கொடுக்காதவர். ஒரு கழுகின் உயரத்திற்கு பறந்து கழுகாகவே மாறி விட்டவர். சனாதனத்தை அசைக்காமல் இசைத்தவர். தன் ஜாதியை குறிப்பிட்டதற்காக கே ஏ குணசேகரன் மீது வழக்கு தொடுத்தவர்.


    10. 'ஆசை நூறுவகை..' பாட்டை தான் அனுமதித்ததை விட அதிகமாக பயன்படுத்தியதற்காக ராம் கோபால் வர்மா மீது வழக்கு போட்டவர். விஞ்ஞானம் என்றால் என்னவென்று அறிவில்லாதவர்.

    11. அதை முடம் மூடம் என்பவர். எஸ்பிபி மீது பொறாமை கொண்டவர். அவரை ஒழித்துக் கட்ட முயற்சித்தவர். பிள்ளை பாசத்தால் 'நீதானே என் பொன் வசந்தம்' படத்தில் யுவனை பாடவைத்தவர்.

    12. பாரதிராஜாவை பற்றி மோசமாக பேசியவர். ரஹ்மானை மதிக்காதவர். ரஹ்மானின் சாதனைகளை அங்கீகரிக்காதவர். ரஹ்மானுக்கு பத்மபூஷன் கிடைத்த போது பாராட்டாமல்' 'I can only feel for myslelf' என்றவர். தன் சிம்பனியை வெளியிடவில்லை; சிம்ஃபனி எழுதினாரா என்பதே சந்தேகம்; எழுதியதற்கான ஆதாரம் இல்லை. சிம்ஃபனி எழுதியதாக பொய் சொல்லி ஃப்ராடு வேலை செய்தவர்.


    13. அவரது திருவாசகம் உண்மையில் ஆரட்டோரியா இல்லை. ஹிந்தி இசையமைப்பாளர்கள் பற்றி தவறான செய்தியை மேடையில் சொன்னவர். மலேசியா வாசுதேவனை அவரது கடைசி காலத்தில் போய் பார்க்காதவர்; மலேசிய வாசுதேவனுக்கு உதவாதவர். தம்பி கங்கை அமரனுடன் கோபம் கொண்டு பேசாதவர். அவரையும் அவர் குடும்பத்தையும் ஒதுக்கி வைத்திருப்பவர். கங்கை அமரனுக்கு தர வேண்டிய காம்பையர் வேலையை பார்திபனுக்கும், பிரகாஷ்ராஜுக்கும் தன் நிகழ்ச்சிகளில் கொடுத்தவர்.


    14. தன்னிடம் வேலை பார்க்கும் இசை கலைஞர்களுக்கு ஒழுங்காக சம்பளம் தராதவர்; தன்னிடம் வேலை பார்ப்பவர்கள் பற்றி அவர்களின் முதுகுக்கு பின்னால் கேவலமாக பேசுபவர். கேஸட்டுகளில் சிடிக்களில் வாத்தியங்களை இசைத்தவர்களின் பெயர்களை (ரஹ்மான் செய்வதுபோல்) குறிப்பிடாதவர். பாட்டுக்கு மெட்டு என்று இல்லாமல் தன் இசைக்கு பாட்டு போடும் வழக்கத்தை கொண்டு வந்தவர். திருவாசகத்திலேயே முதலில் மெட்டை தேர்ந்தெடுத்து விட்டு, பின்பு அதற்கு ஏற்ப பாடல்களை கண்டுபிடித்தவர்.


    15. பல பாடல்களை பவதாரிணியை பாடவைத்து கெடுத்தவர். மேலும் பல பாடல்களை சுருதி இல்லாமல் தான் பாடி கெடுத்தார். மாண்டு ராகம் ஒரு கர்நாடக ராகம் என்று தவறான தகவலை தந்தவர்; அவருக்கு கர்நாடக இசை ஒழுங்காக தெரியாது. இன்றய திரை இசை தரம்குறைந்தது என்றார்; ஆனால் யுவன் சங்கர் ராஜா இசை பற்றி குறை சொல்லவில்லை.


    16. திரையிசையில் ஆன்மா இல்லை என்றார். அவரது பல பாடல்களுக்கு உண்மையில் இசையமைத்ததே ரஹ்மான்தான். 'How to name it' 25வது ஆண்டு விழாவிற்கு நரசிம்மனை அழைக்கவில்லை; அதன் ஒரிஜினல் கேஸட்டில் நரசிம்மன் பெயரை போடவில்லை. அற்பமான மனிதர்; மனிததன்மை இல்லாதவர். மூகாம்பிகை கோவிலுக்கு காசு கொடுத்தார்; ஆனால் திருவாசகத்திற்கு காசு இல்லை என்றார்.


    17. எம் எஸ் விஸ்வநாதன் இசை குறிப்புகள் எழுதி இசையமைப்பதில்லை என்று குறை சொன்னார். நவபார்ப்பனர்; தன்னை பார்பனர்களை விடவும் உயந்தவராக கருதிக்கொள்பவர். கவிதையைவிட இசையே சிறந்தது என்று நினப்பவர். அதை நிறுவ படாதபாடுபடுபவர்.


    18. "தாமரை மலரில் மனதினை வைத்து.." என்ற கண்ணதாசனின் வரிகளில் அர்த்தமில்லை என்று சொன்னார். கவிதை என்பதே குப்பை என்று நிறுவ படாதபாடு பட்டார். அதனால் மனப்பிறழ்வு கொண்டவர்…. இன்னமும் ஏகபலது உண்டு. இப்போதைக்கு இவ்வளவுதான் நினைவுக்கு வந்தது.



    இதற்கெல்லாம் விரிவான பதில் சொல்வதும், விமர்சன பூர்வமாக அணுகுவதும் சாத்தியம். ஆனால் அதுவல்ல விவேகமான அணுகுமுறை. நாம் கேட்க வேண்டியது, உலகின் எந்த மூலையிலாவது, எந்த சமுகத்திலாவது ஈடு இணையற்ற தங்களின் மேதையை பற்றி இப்படி பேசி கேட்க முடியுமா? அப்படி இளையராஜாவை விட தமிழகம் தந்த மேதை என்று வேறு யாராவது இருக்கிறார்களா?

    இந்திய அளவில் யாருடனும் ஒப்பிட முடியாத ஒரு மேதையை, அதுவும் எந்த வாய்ப்பும் வசதியும் அற்ற, இளையராஜா என்று ஒருவர் பிறந்திருக்காவிட்டால் ஏனையோர் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லாத ஒரு கிராமத்தில், ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, தமிழகம் முழுக்க அலைந்து, கடின உழைப்பில் முன்னேறி, பட்டினி கிடந்து, வாய்ப்புக்காக காத்திருந்து, வாய்ப்பு வந்த பின் பிரபஞ்ச கூத்தாடிய (இதை எழுதும் போது கண்ணீர் வருகிறது) 



    ஒருவனை வெறும் வம்புகளாலும், வசைகளாலும் எதிர்கொள்ளும் சமூகம் உருப்பட ஏதேனும் துளி சாத்தியம் உள்ளதா? உள்வாங்க முடியாத விஷயத்தை, அளவிட முடியாததை, ஒரு சட்டகத்தில் புரிந்து கொள்ள முடியாததை பற்றி இவ்வளவு தன்னம்பிக்கையுடன் சின்னதனமாக விமர்சனங்களால் அணுகும் ஒரு சமூகம், தன்னை பற்றி மற்றவர்களின் முன்முடிவுகள் குறித்து கழிவிரக்கம் கொள்வதில் ஏதேனும் நியாயம் உள்ளதா? 

     நன்றி -

    rozavasanth (@rozavasanth)

    Wednesday, December 19, 2012

    ரீ ரெக்கார்டிங்கில் பட வெற்றியை கணிக்க முடியுமா? - இசை ஞானி பேட்டி @ குமுதம்

    இளையராஜாவின் பதில்:ஒரு படத்துக்குக் Re-recording செய்யும்போதே, அந்தப் படத்தின் வெற்றி/தோல்வியை உங்களால் கணிக்க முடியுமா?

    ♫ ஒரு கதை தேறும்-தேறாது என்பது ஒருவர் வந்து கதை சொல்லும்போதே தெரிந்துவிடும். Just imagine.. நான் தொள்ளாயிரத்து சொச்சம் படம் பண்ணியிருக்கிறேன் என்பது பெரிய விஷயமில்லை. அதற்குப்பின் எவ்வளவு சகிப்புத்தன்மை இருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.

    நீங்கள் ஒரே ஒருமுறை பார்த்துவிட்டு, “ச்ச.. படமா எடுத்திருக்கிறான்?” என்று எண்ணி, அதைப் பார்க்கமுடியாமல் பாதியில் எழுந்து போன படங்கள் எத்தனை இருக்கும்? அதுபோன்ற படங்களையும் நான் நான்குமுறை பார்த்தாகவேண்டும். முதல்முறை எனக்கு முழுவதும் போட்டுக்காட்டுவார்கள். அதன்பின்னர் Music Compose பண்ணுவதற்காக Theater’ல் வந்து ஒவ்வொரு ரீலாக பார்க்கவேண்டும். அதன்பின்னர் Music எழுதிமுடித்து, அத்துடன் Conduct செய்து காட்டும்போது ஒருமுறை பார்க்கவேண்டும். Take’ன் போது எத்தனை Takes ஆகும் என்று தெரியாது. அத்தனை முறை மறுபடி மறுபடி பார்க்கவேண்டும். 



    ஆக, நீங்கள் ஒருமுறை பார்த்து ”பிடிக்கவில்லை” என்று கூறும் படத்...தை நான் இத்தனை முறை பார்த்தாகவேண்டும். அப்போதும்கூட, ‘இந்தப் படம் இப்படி இருக்கிறதே.. இதற்கு எப்படி Music போடுவது?’ என்று எனக்குத் தோன்றாது. மாறாக, ‘இந்தப் படத்தை எப்படிப் பிழைக்கவைப்பது?’ நம் இசை இதற்கு எப்படி உதவியாக இருக்கும்?” என்றே தோன்றும். இல்லையென்றால், நிறைய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்களை நீங்கள் பார்த்தேயிருக்கமாட்டீர்கள்.

    பாடல்கள் நன்றாக இருந்தும் படம் ஓடவில்லை என்பது ரொம்ப Normal’ஆன விஷயம்தானே? பாடல்களுக்காக படம் என்று சொன்னால், ‘தென்றல் வந்து தீண்டும்போது’ என்ற பாடலுக்காகவே அந்தப் படத்தை நீங்கள் ஓட்டியிருக்கவேண்டும். அது உங்கள் தவறுதானே தவிர என் தவறு அல்ல. பாடலுக்காக அந்தப் படத்தில் இருந்த தவறை எல்லாம் நீங்கள் மன்னித்திருக்கலாம் அல்லவா? ‘காதல் ஓவியம்’ படத்தின் ஒவ்வொரு பாடலுக்காகவும் அந்தப் படம் Silver Jubilee’ஐ தாண்டியிருக்கலாம்.

    ஆக, படம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், தவறு என்னிடத்திலில்லை. பாடல்கள் நன்றாயிருக்கிறது என்று இன்றைக்கும் சொல்கிறீர்களா இல்லையா?”







    #ilayaraja இளையராஜா - பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் கூட்டணியில் உருவான பாடல்களை விட இளையராஜா - பாலுமகேந்திரா கூட்டணி உருவாக்கிய பாடல்கள் மனத்திற்கு இதமாக இருக்கிறதே.. என்ன காரணம்?

    - கருப்பையா பாலகிருஷ்ணன், மதுரை.

    நான் என்ன கட்சி வைத்துக் கொண்டா இருக்கிறேன்? கூட்டணி சேர! யாருடனும் நான் இல்லை! இவர்கள் வருகிறார்கள்! போகிறார்கள்! - எல்லாப் பாடல்களும் அவர்களின் கதைக்காக நானாகிய நானே உருவாக்கியதுதான்!


    இளையராஜாவை கேளுங்கள், குமுதம் (26.12.2012)  ,


    நன்றி -

    பகிர்வு நன்றி: திரு. ஜெகதீஷ் ஜெயராமன்., புது மாப்ளை பறவை,இளையராஜா ஃபேன்ஸ்