ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி அம்மா இல்லாமல் வளர்ந்த அப்பா செல்லம்.முதுகலைப்படிப்பிற்காக வெளியூர் காலேஜில் சேர்ந்து ஹாஸ்டலில் தங்கிப்படிக்கிறார்
நாயகனுக்கு அப்பா இல்லை.அம்மா மட்டும் தான்.காலேஜில் ரேகிங் நடக்கும்போது சீனியர் சொல்படி டான்ஸ் ஆடி அனைவரையும் கவர்கிறார்.
நாயகனின் டான்சால் ஈர்க்கப்பட்ட ஒரு பெண் வலிய வந்து தன் காதலை சொல்லும்போது நாயகன் ஏற்கவில்லை.(இவ்ளோ நல்ல ஆம்பளைஙக ஊரில் இருக்காஙகளா?)
நாயகன்,நாயகி இருவரும் ஒரு கட்டத்தில் காதலிக்கிறார்கள்.முதலில் காதலை சொன்னது நாயகன் தான்.நாயகி ஏற்றுக்கொள்கிறாள்.
இவர்களது காதல் காலேஜ் முழுக்கப்பரவி விடுகிறது.
நாயகனின் வீட்டுக்கு நாயகி ஒரு முறை போனபோதுதான் நாயகனின் அம்மா ஆணாதிக்கம் மிக்க குடும்பத்தால் கட்டுப்பெட்டியாக இருப்பதை நாயகி உணர்கிறார்.
நாயகனுடன் திருமணம் செய்து வாழ்ந்தால் தன்னால் சுதந்திரமாக இருக்க முடியாது.அடிமை ஆகத்தான் வாழ வேண்டும் என்பதை உணர்கிறாள்.
நாயகி நாயகன் பிடியிலிருந்து விலகி அந்த டாக்சிக் ரிலெசன்ஷிப்பை முறித்துக்கொண்டாரா? நாயகன் விட்டாரா?என்பது மீதி திரைக்கதை.
நாயகி ஆக ராஷ்மிகா மந்தனா பிரமாதமான நடிப்பை வழஙகி இருக்கிறார்.கிளாமர் இருக்குமிடத்தில் குணச்சித்திரம் தங்காது என்ற பழமொழியை உடைத்திருக்கிறார்.(அப்படி ஒரு பழமொழி இருக்கா?)
நாயகன் ஆக வில்லன் ஆக டூ இன் ஒன் ரோலில் தீக்ஷித் ஷெட்டி நம் வெறுப்பை சம்பாதிக்கும் அளவு நடித்திருக்கிறார்.தாடியுடன் அவர் வரும் முதல் சீனிலேயே இது விளஙகாது என நினைத்தேன்.
நாயகன் மீது ஒரு தலைக்காதல் வைத்திருக்கும் நபர் ஆக அனு இமாநுவேல் கச்சிதமாக நடித்திருக்குறார்.ஓவர் மேக்கப்.கொஞ்சம் குறைச்சுக்கம்மா என சொல்ல வைக்கிறார். நாயகிக்கே சிங்கிள் கோட்டிங்க் பவுடர் தான்.இவருக்கு மட்டும் டபுள் கோட்டிங் எதுக்கு?
நாயகியின் அப்பாவாக ராவ் ரமேஷ கன கச்சிதம்.
நாயகனின் அம்மாவாக ரோகினி ரகுவரன் டயலாக்கே பேசாமல் உடல் மொழியாலேயே கவர்கிறார்.
காலேஜ் ஹெச் ஓ டி ஆக நடித்து திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ராகுல் ரவீந்திரன்
ஹேசம் அப்துல் வகாபின் இசையில் இரண்டு பாடல்கள் அருமை.பிரசாந்த் ஆர் விஹாரியின் பின்னணி இசை கலக்கல் ரகம்.
கிருஷ்ணன் வசந்த்தின் ஒளிப்பதிவு கவிதை..சோட்டா கே பிரசாத்தின் எடிட்டிஙகில் படம் 138 நிமிடஙகள் ஓடுகிறது.
சபாஷ் டைரக்டர்
1 நாயகனின் அம்மா ரோகிணி யின் கேரக்டர் டிசைன் புதியது.வருஙகால மருமகளை அவர் ரிசீவ் செய்யும் பாங்கு இதுவரை நாம் காணாதது.
2 ஆணாதிக்கம் மிக்க குடும்பத்தில் நாம் சிக்க இருக்கிறோம் என்பதை நாயகி உணரும் தருணம் அருமை.
3 ஒளிப்பதிவாளர் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.ஆல மர வேர்களால் நாயகி சிறைப்பட்டு இருப்பதை சிம்பாலிக்காய் உணர்த்திய விதம் அருமை.
4 நாயகியின் அப்பா ஹாஸ்டலுக்கு சர்ப்பரைஸ் விசிட் ஆக வரும் சீனும் அதைத்தொடர்ந்து நாயகி சந்திக்கும் சிக்கலும் அருமை
5 ஜாலியான முதல் பாதிப்படத்துக்கு லைட் கலர் ஷேடு கொடுத்த ஒளிப்பதிவாளர் கனமான பின் பாதிப்படத்துக்கு டார்க் ஷேடு கொடுத்த ஐடியா அருமை.
ரசித்த வசனங்கள்
1 நம் வாழ்வின் முக்கிய தீர்மானஙகளை நாம் தான் எடுக்கனும்.அப்பாவோ ,கணவனோ எடுக்கக்கூடாது
2 லவ் பண்றப்போ கிஸ் அடிக்கிறா,கல்யாணம் பண்ணிக்கலாம்னு கூப்பிட்டா பிரேக்கப் அப்டிஙகறா
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 கேர்ள்ஸ் ஹாஸ்டலுக்கு நாயகன் அசால்ட் ஆக வந்து நாயகி ரூமில் தங்குவது எப்படி?
2 கோர்ஸ் முடிய இன்னமும் ஒரு மாசம் தான் இருக்கு,அதற்குல் மகள் படிப்பை ஏன் கெடுக்கப்பார்க்கறீங்க?என்று நாயகியின் அப்பாவிடம் வாதிடும் நாயகன் அடுத்த காட்சியில் நாயகியிடம் இனி நீ படிச்சு ,கோர்ஸ் முடிச்சு என்ன பண்ணப்போறே?என முன்னுக்குப்பின் முரணாகப்பேசுவது எப்படி?
3 நாயகனை விரும்பும் இன்னொரு பெண் நாயகியிடம் அதைப்பற்றி விளக்கியபின் நாயகி அது பற்றி நாயகனுடன் டிஸ்கஸ் செய்யாதது ஏன்?பொதுவாக எந்தப்பெண்ணும் விசாரிப்பாளே?
4 கோபத்தில் நாயகியின் அப்பா உடைத்த லேப்டாப்புக்கு நட்ட ஈடாக புது லேப்டாப் வாங்கித்தருவதாக நாயகி சொல்லும்போது காலேஜ் ஹெச் ஓ டி கூலாக அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை என்பது எப்படி!50,000 ரூபாய்
5 நாயகன் நாயகியை அவமானப்படுத்த நாயகியைப்பற்றித்தவறாக ஹாஸ்டல் ரூம் வாசலில் எழுதி வைப்பது ஓவரோ ஓவர்
6 காலேஜ் ஹெச் ஓ டி க்கு நாயகி இதுதான் எங்கள் ஹாஸ்டல் என அறிமுகப்படுத்துவது காமெடி.அது கூட அவருக்குத்தெரியாதா? காலேஜூம் ,ஹாஸடலும். அடுத்தடுத்து இருக்கு.
7 நாயகன் ஓவர் அலப்பறைகள் பல செய்தும் கல்லூரி நிர்வாகம் அவரை எச்சரிக்கக்கூட இல்லை.
8 நாயகிக்கு கிளாமர் சீன் வைக்கனும்னா டூயட் சீனில் வைக்கலாம்.மிக இறுக்கமான சோகக்காட்சியில் எல்லாம் கிளாமர் காட்ட வைக்கலாமா?
9 நாயகன் மீது ஆடியன்சுக்கு வெறுப்பு வர வேண்டும் என்பதற்காக சும்மா கண்டபடி அந்த கேரக்டர் டிசைனை சொதப்பி விட்டிருக்கிறார்கள்
10 எந்த ஒரு அப்பாவும் போனில் அழும் மகளுக்கு ஆறுதல் சொல்லாமல் வீராப்பு காட்ட மாட்டார்கள்
11 அர்ஜூன் ரெட்டி (ஆதித்யவர்மா)பட சாயல் ஆங்காஙகே தெரியுது
12 க்ளைமாக்சில் நாயகி திடீர் என பெரிய பதவியில் அமர்வது எல்லாம் ரஜினி படமா?என எண்ண வைக்கிறது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.ஆண்களுக்கு கடுப்படிக்கும்.ரேட்டிங்க் 2.75 /5
| The Girlfriend | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Rahul Ravindran |
| Written by | Rahul Ravindran |
| Produced by |
|
| Starring | |
| Cinematography | Krishnan Vasant |
| Edited by | Chota K. Prasad |
| Music by | Songs: Hesham Abdul Wahab Score: Prashanth R. Vihari |
Production companies | Dheeraj Mogilineni Entertainment Geetha Arts |
| Distributed by | |
Release date |
|
Running time | 138 minutes[1] |
| Country | India |
| Language | Telugu |
| Box office | ₹29.07 crore[2] |

0 comments:
Post a Comment