Friday, May 10, 2024

ரெபெல் ( REBEL) 2024 . தமிழ் - சினிமா விமர்சனம் ( பொலிடிக்கல் ஆக்சன் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்

         

      வாரா வாரம்  வெள்ளிக்கிழமை  ஆனாப்போதும்  சின்ராசைக்கைல  பிடிக்க  முடியாது  என்பது  போல   நவீன  ராமராஜன்  ஆக  ஜி வி  பிரகாஷ்  படங்கள் இப்போதெல்லாம்  வாரா  வாரம்  ரிலீஸ்  ஆகிறது.ஓடுகிறதா? என்று  கேள்வி  எல்லாம்  கேட்கக்கூடாது . 22/3/2024  அன்று  திரை  அரங்குகளில்  ரிலீஸ்  ஆன  இப்படம்  அட்டர்  ஃபிளாப்  ஆனது. அமேசான்  பிரைம்  ஓடிடி  யில்  காணக்கிடைக்கிறது 


1980களில்  நடந்த  உண்மை சம்பவத்தின்  அடிப்படையில்  ஒரு  புரட்சிகர  மாணவரின்  கதை  இது  என  சொல்லப்படுகிறது . பா  ரஞ்சித்தின்  படங்களில்  சில  எப்படி  ஜாதி  வெறியைத்தூண்டுமோ  அது  போல  இது  தமிழன்  -மலையாளி  என  இன  வெறியைத்தூண்டும்  படமாக  அமைகிறது . நல்ல  வேளை  இது  ஃபிளாப்  ஆச்சு , ஹிட்  ஆகி  இருந்தால்  ஆளாளுக்கு  இன  வெறிப்படங்களாக  எடுத்துத்தள்ளி  இருப்பார்கள்   

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  மற்றும் அவனது  நண்பர்கள்  சிலர்  மூணாறில்  வசிக்கிறார்கள் , அவர்களது  அம்மா  , அப்பா  தேயிலைத்தோட்டத்தொழிலாளர்கள் . ஏழ்மை நிலையிலும்  கல்வி  கற்க  மெரிட்டில்  அவர்களுக்கு  பாலக்காட்டில்  உள்ள  ஒரு    அரசுக்கல்லூரியில்  சீட்டுக்கிடைக்கிறது 


அந்தக்காலேஜில்  இரு  பெரும்  சங்கங்கள்  உண்டு . இரண்டுமே  அரசியல்  பலம்  மிக்கவை .  ராகிங்  என்ற  பெயரில்  அவர்கள்  தமிழர்களைக்கேவலப்படுத்துகிறார்கள் , இதில்  ஒரு  மாணவர்  உயிர்  இழக்கிறார்.இதனால்  வெகுண்டு  எழுந்த  நாயகன்  அவர்களைப்பழி  வாங்கக்கிளம்பும்போது  காலேஜில்  எலக்சன்  அறிவிக்கப்படுகிறது


  எலக்சனில்  நின்று  ஜெயித்து  விட்டால் அவர்கள்  கொட்டத்தை  அடக்கலாம்  என  நாயகன்  நினைக்கிறார். ஆனால்  பெரும்பாலும்  மலையாளிகள்  படிக்கும் காலேஜில்  அது  நடக்குமா?  தமிழர்கள்  அங்கே  30 %  கூட  இல்லை 


இதற்குப்பின்  நாயகன்  எடுத்த  முடிவு  என்ன?  என்ன  நடந்தது  என்பதே  மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக  ஜி வி  பிரகாஷ். தாடி, மீசை, பரட்டைத்தலையுடன்  பிச்சைக்காரன்  போல  கெட்டப் . தமிழர்களின்  அடையாளம்  இதுதானா?இயக்குநரே  தமிழர்களைக்கேவலப்படுத்துகிறார்.ஒரு  மாணவன்  கூட  டீசண்ட்  ஆக  இல்லை , எல்லாருமே  பொறுக்கி , ரவுடி  போல காட்டுகிறார்கள் 


நாயகி  ஆக மமிதா  பைஜூ  அழகிய  முகம் , நல்ல  நடிப்பு , படத்தில்  ஒரே  ஆறுதல்  இவர்  தான் . ஆனால் இவருக்கு  அதிக  காட்சிகள்  இல்லை .முக்கியமான  தருணத்தில்  இவர்  நாயகனுக்கு  ஆதரவாக  இல்லை ., இந்த  இரண்டு  விஷயங்களும்  பின்னடைவு 


மெயின்  கதை  மாணவர்  மோதல் , போராட்டம் , தேர்தல்  என்று  போனாலும்   சைடு  டிராக்கில்  நாயகன்  -  நாயகி  காதல்  கதை  மனம்  கவர்கிறது 


ராகிங்  என்ற  பெயரில்  தெலுங்கு  டப்பிங்  படத்தை  விட  மோசமாகக்காட்சிகள்  நகர்கின்றன. 


வெற்றி  கிருஷ்ணனின் எடிட்டிங்கில்  படம்  141  நிமிடங்கள் ஓடுகின்றன .முதல்  பாதி  ரொம்பவே  ஸ்லோ ., பின்  பாதி  பரவாயில்லை 


பாடல்களுக்கான  இசையில்  ஜி வி  பிரகாஷ் குமார்  பாஸ்மார்க்  வாங்குகிறார். பின்னணிக்கான  இசை  சித்து  குமார் . ஆர்  ஈ  பி ஈ  எல்  ரிபெல்  என  தொடங்கும்  பாட்டு  ஓவர்  டோஸ் . ரஜினி  அல்லது  விஜய்  மாதிரி  ஸ்டார்களுக்குத்தான்  அது  பொருந்தும் 


அருண்  ராதா  கிருஷ்ணனின்  ஒளிப்பதிவில்  நாயகியின்  அழகு  பிரமாதமாக  க்ளோசப் , லாங்க்  ஷாட்களில்  படமாக்கப்பட்டுள்ளது 


 ஏ  பாரதி ராஜா ,   எஸ்  பாலகிருஷ்ணன்  ஆகியோருடன்  இணைந்து  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார்  அறிமுக  இயக்குநர்  நிகேஷ்


சபாஷ்  டைரக்டர்  ( அறிமுக  இயக்குநர்  நிகேஷ் ) 


1   பாலைவனமாகப்போகும்  அடிதடிக்கதையில்  பாலைவனச்சோலையாய்  நாயகி  வரும்  காட்சிகள் 


2  இந்தப்படத்தின்  மூலம்  நீங்கள்  புரட்சி  நாயகன்  முரளி  போல  , புரட்சிக்கலைஞர்  விஜய்காந்த்  போல  ஆக்சன்  ஹீரோ  ஆகி  விடலாம்  என  ஜி வி  பி  யை  நம்ப  வைத்து  ஹீரோவாக  புக்  பண்ணிய  சாமார்த்தியம்


  ரசித்த  வசனங்கள் 


1  எங்கெல்லாம்  ஒருவன்  ஒடுக்கப்படுகிறானோ   அவன்  கரத்தைப்பலப்படுத்த   முன்  வருவதுதான்  கம்யூனிசம் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    சாதா  மாணவர்கள்  10 பேர்  எப்படி  ரவுடிகளான  200  பேரை  அடிக்க  முடியும் ? 


2   கொலையே  நடந்தாலும்  காலேஜூக்குப்போலீஸ்  வராதா?


3   நாயகன்  ஒரு  காட்சியில்நம்ம  கொடிக்கு  ரெண்டே  கலர்  தான்  இருக்கனும். சிவப்பு , கறுப்பு  என்கிறார். ஆனால்  கொடியில்  வெள்ளை  நிறத்தில் லெட்டர்ஸ்    டிசைன்ஸ்  வருது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் --ஓவர்  வன்ம்முறை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது  ஒரு  டப்பாப்படம், குப்பைப்படம் , விமர்சனத்துக்கான  காரணம்  யாம்  பெற்ற  துன்பம்  பெறக்கூடாது  இவ்வையகம்  என்ற  எண்ணமே  . ரேட்டிங்  மைனஸ்  1 / 5 


கிளர்ச்சியாளர்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்நிகேஷ் ஆர்.எஸ்
எழுதியவர்நிகேஷ் ஆர்.எஸ்
. ஏ. பாரதிராஜா
பாலகிருஷ்ணன் எஸ்
உற்பத்திகே.இ.ஞானவேல்ராஜா
நடித்துள்ளார்
ஒளிப்பதிவுஅருண் ராதாகிருஷ்ணன்
திருத்தியவர்வெற்றி கிருஷ்ணன்
இசை
தயாரிப்பு
நிறுவனம்
மூலம் விநியோகிக்கப்பட்டதுசக்தி திரைப்பட தொழிற்சாலை
வெளிவரும் தேதி
  • 22 மார்ச் 2024
நேரம் இயங்கும்
141 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Thursday, May 09, 2024

HI NANNA(2023) - தெலுங்கு / தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ) @ நெட் ஃபிளிக்ஸ்


ஹாய்  அப்பா    என்பதுதான்  டைட்டிலுக்கான  அர்த்தம் ..7.12.2023  அன்று  திரை  அரங்குகளில் ரிலீஸ்  ஆன  இப்பட,ம்   பாக்ஸ்  ஆஃபீசில் 76  கோடி  வசூலித்தது. நெட்  ஃபிளிக்ஸில்  ரிலீஸ்  செய்ய  மட்டும்  உரிமைத்தொகை  ஆக  ரூ  37  கோடி  கிடைத்தது.இப்படத்தின்  டைட்டில்  கார்டில்  நேச்சுரல்  ஸ்டார்  நானி  என    பட்டம்  சூட்டப்பட்டது 


நாயகியாக  நடித்த  மிருணாள்  தாக்கூர்க்கு பின்னணிக்குரல்  கொடுத்தவர்  பாடகி  சின்மயி. ஸ்ருதி  கமல்  , நேஹா  சர்மா இதில்  மாடலிங்  கேர்ள்  ஆக  கேமியோ  ரோலில்  வருகிறார்கள் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  சிங்கிள்  டாடி . அவருக்கு 6    வயதில்  ஒரு  மகள் . சிஸ்டிக் ஃபிப்ரோசிஸ்  எனும்  வினோத  வியாதி  மகளுக்கு  உண்டு. அதனால்  கண்ணை இமை  காப்பது  போல  நாயகன்  தன்  மகளைப்பார்த்துக்கொள்கிறார். இவர்  ஒரு  ஃபோட்டோகிராஃபர்


  மகள்  அடிக்கடி  தன்  அப்பாவிடம்  தன்  அம்மாவைப்பற்றிக்கேட்கும்போதெல்லாம்  நாயகன்  பிடி  கொடுக்காமல்  நழுவி விடுவார்


ஒரு  நாள்  நாயகி  மகளை  சந்திக்கிறார். இப்போது  இருவரும்  சேர்ந்து  நாயகனிடம்  அம்மா  பற்றி  கதை  கேட்கிறார்கள் . வேறு  வழி  இல்லாமல்  நாயகன்  ஃபிளாஸ்பேக்  கதையை  சொல்கிறான் 


நாயகன்  ஃபோட்டோ கிராஃபர்  ஆக  இருக்கும்போது  நாயகியைகண்டதும்  காதல்  கொள்கிறார்.  ஐ  லவ்  யூ  சொல்கிறார். நாயகி  கோடீஸ்வரியின்  மகள் . நாயகியின்  அம்மா, அப்பா  இருவரும்  லவ்  மேரேஜ் , அனால்  அடிக்கடி  சண்டை  போட்டுக்கொள்கிறார்கள் . இதனால் நாயகிக்கு  காதல் , கல்யாணம்  இவற்றில்  எல்லாம்  விருப்பம்  இல்லை 


  ஆனால்  ஒரு  கட்டத்தில்  நாயகி  நாயகனின்  காதலுக்கு  ஓக்கே  சொல்லி  விடுகிறாள் . இருவருக்கும்  திருமணம்  நடக்கிறது. பெற்றோரின்  எதிர்ப்பை  மீறி  நாயகி  நாயகனைத்திருமணம்  செய்து  கொள்கிறார். இருவருக்கும்  ஒரு  பெண்  குழந்தை  பிறக்கிறது . ஆனால்  குழந்தைக்கு  அந்த  அபூர்வ  வியாதி  இருப்பதால்  இருவரும்  மனம்  உடைகிறார்கள் 


  நாயகன் , நாயகி  இருவரும்  காரில்  போய்க்கொண்டிருக்கும்போது  ஒரு  விபத்தில்  நாயகிக்கு  தலையில்  அடிபட்டு  பழைய  நினைவுகளை  எல்லாம்  இழந்து  விடுகிறார். அதனால் நாயகியின்  அம்மா  நாயகியைத்தன்னுடன்  அழைத்துசென்று  விடுகிறார் 


 இதில்  கதையை  நிறுத்துகிறார்  நாயகன் 


 இந்தக்கதையைக்கேட்கும்போது  மகள்  அம்மாவாக  நான்  யாரைக்கற்பனை  செய்து  கொள்ள?   எனக்கேட்டு  விட்டு  இதோ  இந்த  நாயகியையே  அம்மாவாக  நினைத்துக்கொள்ளவா? என்கிறாள் 


 அப்போதுதான்  ஒரு  ட்விஸ்ட் .  கதை  சொல்லுங்கள்  எனக்கேட்ட  நாயகி  , ஃபிளாஸ்  பேக்  கதையில்  வரும்  நாயகி  இருவரும் ஒருவரே


 இப்போது  நாயகனுக்கு   நாயகி  யார் ? என்பது  தெரியும், ஆனால்  நாயகிக்கு  தான்  நாயகனின்  மனைவி  என்பதோ , மகளின்  அம்மா  என்பதோ  தெரியாது 

 நாயகியின் அம்மா  நாயகிக்கு  வேறு  ஒருவருடன்  திருமணம்  செய்து  வைக்க  ஏற்பாடு  செய்கிறார். இதற்குப்பின்  நிகழும்  திருப்பங்கள்  தான்  மீதித்திரைக்கதை 

நாயகன்  ஆக  நானி  இரு  வேறு  தோற்றங்களில்  வருகிறார். ஃபிளாஸ்பேக்  காட்சியில்  வரும்  [போது  குறும்புத்தனம் , சுட்டித்தனம் ,  சுறு சுறுப்பு  என  கலக்குபவர்  . அப்பாவாக  வரும்போது  ஹேர்  ஸ்டைல் , உடல்  மொழி  எல்லாவற்றையும்  மாற்றி  முதிர்ச்சியான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார். பல  இடங்களில்  பெண்களைக்கவரும்  விதத்தில்  அவரது  நடிப்பு  சிறப்பாக  அமைந்திருக்கிறது


 நாயகி  ஆக  மிருணாள்  தாக்கூர் ., கொள்ளை  கொள்ளும்  அழகு . ஆனால்  அவர்  மூக்குத்தி  போட்டிருப்பது  அவரது  அழகைக்கூட்டவில்லை.கார்ணம்  அவரது   நாசிக்கு  ஏற்ற  மாடல் அது  இல்லை , மாடர்ன்  டிரஸ்  , சேலை  என  எல்லா  உடைகளிலும்  அழகாக  இருக்கிறார். நடிப்பிலும்  குறை  இல்லை 


  மகள்  ஆக  க்யாரா  கன்னா  பிரமாதமான  அழகுடன்  நடித்திருக்கிறார். அள்ளிக்கொள்ளும்  மழலை  அழகு . இந்த  மாதிரி  குழந்தை  வேணும்  என  எல்லோரையும்  ஏங்க  வைக்கும்  அழகு , நடிப்பும்  அருமை 


நாயகியின்  அப்பாவாக  ஜெயராம்  கச்சிதமான  நடிப்பு   நாயகியின்  அம்மாவாக  ஷில்பா  ஊளாஸ்கார்  கிட்டத்தட்ட  வில்லி  ரோல். ஓக்கே  ரகம் 


பிரவீன்  அந்தோனியின்  எடிட்டிங்கில்  155  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது. இன்னும்  20  நிமிடங்கள்  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம் 


ஹேசாம்  அப்துல்  வகாப்  தான்  இசை . பாடலக்ளனைத்தும்  இனிமை , பின்னணி  இசை  குட் 


சனு  வர்கீஸ்  தான்  ஒளிப்பதிவு , நாயகனின்  கேரக்டர்  டிசைன்  ஒரு  புரொஃபசனல்  ஃபோட்டோகிராஃபர்  என்பதால் ஒளிப்பதிவாளருக்கு ஓவர்  டைம்  ஒர்க், நன்றாக  செய்திருக்கிறார்


நாகேந்திர  காசி , வம்சி  போவண்ணா  ஆகிய  இருவரும்  இணைந்து  வசனம்  எழுதி  இருக்கிறார்கள்   ஏழு  வசனங்கள்  வானவில்  போல்  மிளிர்கின்றன 


  மேலும்  மூவருடன்  இணைந்து  திரைக்கதை  எழுதி  இருக்கும்  ஷோர்யூவ்  இயக்கியும்  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்


1    காட்சிகள்  ஒவ்வொன்றும்  ரிச்  ஆக  தெரிய  ஃபோட்டோகிராஃபி  முக்கிய  பங்கு  வகிக்கிறது


2  நாயகன் , நாயகி , மகள்  மூவரின்  கேரக்டர்  டிசைன் ,  நடிப்பு  அனைத்தும்  அருமை 


3  குட்டி  நாயாக  நாயகியிடம்  வளரும்  நாய்  பின் பெரிய  நாய்  ஆன  பின்பு  நாயகியைக்கண்டதும்  ஓடி  வருவது  கொள்ளை  அழகு 


4  தன்  பணக்காரத்திமிரைக்காட்ட  நாயகியின்  அம்மா  ஃபைவ்  ஸ்டார்    ஹோட்டலில்  மூவரும்  சாப்பிட  ஆர்டர்  தந்த  பின்  பில்லை  நாயகனைக்கட்டச்சொன்னதும்  அதை  நாயகன்  டீல்  செய்யும்  விதம் 

5  நாயகன்  , மகள்  இருவருக்குமான  பாண்டிங், குட்டிப்பெண்ணின்  க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் 



  ரசித்த  வசனங்கள் 


1   அவளைப்பார்த்ததும்  முதல்  எடுத்ததும்  ஏன்  ஐ  லவ்  யூ சொன்னே?


அவ  கிட்டேப்பேசும்  முதல்  வார்த்தையே  உண்மையா  இருக்கனும்னு  நினைச்சேன் 


2   என்னோட  தவறான  முடிவால் , தவறான  கல்யாணத்தால்  நானாவது  பங்களாவில்  உட்கார்ந்து  அழுதுட்டு  இருக்கேன் , நீ  நடு  ரோட்ல  நின்னுதான்  அழனும் 


3   நம்  இருவருக்குமிடை யே  உள்ள  தூரத்தை  நீங்க   கிலோ  மீட்டரால்  அளக்கறீங்க .  நான்   காலத்தால்  அளக்கிறேன் . எத்தனை  வருடங்கள்  ஆனாலும்  தூரம்  மாறாது , ஆனால்  காலம்  மாறும்


4   அவங்க  ரெண்டு  பேரும்  ஒண்ணு  சேராம  இருக்க  முடியல , ஆனால்  ஒண்ணு  சேர்ந்தாலும்   ஒண்ணா  இருக்க  முடியல


5    நான்  பழைய  நினைவுகளை  மறந்து  போனாலும்  எனக்கு  வேண்டியவங்க   எப்பவும்  என்  பக்கத்துலயே  இருக்காங்க 


6  உங்களை  விட்டுடுப்போனவங்க  மீது  உங்களுக்கு  ஏன்  இவ்ளோ  காதல் ?


 ஏன்னா  இதுதான்  காதல் 


7    வெட்கத்தை  விட்டு  ஒரு  பெண்  தன்  காதலைச்சொன்னா  இப்படித்தான்  கேரக்டர்  அசாசினேஷன்  பண்றதா? இதனால தான்  பெண்கள்  தன்  காதலைச்சொல்ல  முன்  வருவதே  இல்லை 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    இந்த  மாதிரி  கிளாசிக்கான  லவ்  ஸ்டோரியில்  நாயகியை  கிளாமராகக்காட்டக்கூடாது   ஆடை  வடிவமைப்பில் கண்ணியம்  தேவை \


2 நாயகி  பெரிய  கோடீஸ்வரி . மீடியாக்களில்    அவர்  முகம்  பிரபலம் . அவரது  திருமண  ஃபோட்டோக்கள்  நிச்சயம்  வந்திருக்கும்.  வில்லனுக்கோ  , அவன்  தம்பிக்கோ  அது  தெரியாமல்  போவது  எப்படி ? 


3  ஆறு  வயதான  மகள்  10ஆம்  வகுப்பு  வரை  படிக்க  வந்துட்டா  என  ஒரு இடத்தில்  டயலாக்  வருது .,


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  லிப்  லாக்  சீன்கள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தரமான  ஒரு  ஃபீல்  குட்  லவ்  ஸ்டோரி. பார்க்கலாம்  . ரேட்டிங்  3 / 5 


Hi Nanna
Teaser poster
Directed byShouryuv
Screenplay byShouryuv
Bhanu Dheeraj Rayudu
Vasanth Sameer Pinnamaraju
Story byShouryuv
Dialogues byNagendra Kasi
Vamshi Bommena
Produced byMohan Cherukuri (CVM)
Dr. Vijender Reddy Teegala
Murthy K. S.
Starring
CinematographySanu Varghese
Edited byPraveen Anthony
Music byHesham Abdul Wahab
Production
company
Vyra Entertainments
Release date
  • 7 December 2023
Running time
155 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Box officeest.₹76 crore[2]

Wednesday, May 08, 2024

CASE OF KONDANA (2024) -கன்னடம் /மலையாளம்- சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

 


2021 ல்  ரிலீஸ்  ஆகி  ஹிட்  ஆன  சீதராம் டினோய்  கேஸ்  நெம்பர் 18  கன்னடப்படத்தின் காம்ப்போ  ஆன   இயக்குநர்  தேவி  பிரசாத் ஷெட்டி  +  நாயகன் விஜய ராகவேந்திரா   மீண்டும்  இணைந்து  அந்தப்படத்தை  விட  தரமான  ஒரு  த்ரில்லர்  படத்தை  தந்திருக்கிறார்கள் 


கொண்டானா  என்பது  கர்நாடகா  மாநிலத்தில்  பெங்களூர்  அருகே  உள்ள  ஒரு  இடம் . அஞ்கே  நடக்கும்  சில  சம்பவங்களை  வைத்து  திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் . 26/1/2024  அன்று  திரைக்கு  வந்து  வெற்றி  பெற்ற  இப்படம்  மீடியாக்களால்  பெரிதும்  பாராட்டப்பட்டு  இப்போது  அமேசான்  பிரைம்  ஓடிடி  யில்  காணக்கிடைக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு   போலீஸ்  சப் இன்ஸ்பெக்டர் .இவர்  தன்  காரில்   இரவு  நேரத்தில்   போகும்போது  ஒரு  பானி  பூரிக்கடை  அருகே  சின்ன  விபத்தில்  மாட்டுகிறார். அப்போது  அங்கே  இருக்கும்  பானி  பூரிக்காரன்  நாயகனுக்கு  உதவுகிறான்.உதவும்போது  நாயகனின்  ஜீப்பில்  உள்ள  ரூ  ஒரு  லட்சம்  பணத்தைபார்த்து  அதை  அபேஸ்  செய்கிறான்


 ஆக்சுவலாக  பானிபூரிக்காரனின்  மகனுக்கு  ஒரு  ஆபரேஷன்  நடைபெற  இருக்கிறது. அதற்குப்பணம்  தேவைப்பட்டதால்  இப்படி  ஒரு  செயலை  வேறு  வழி  இல்லாமல்  செய்கிறான். நாயகன் அந்த  திருட்டைக்கண்டு  பிடித்து  விடுகிறான். இருவருக்கும்  ஒரு  கை  கலப்பு  உருவாகிறது . அதில் ஆக்சிடெண்ட்டலாக  அந்த  பானிபூரிக்காரன்  கீழே  விழுந்து  தலையில்  கல்  பட்டு  ஸ்பாட் அவுட்  ஆகி  விடுகிறான்


 நாயகனுக்கு  என்ன  செய்வது  என்று  தெரிய  வில்லை . அப்போது  அந்த  வழியாக  போலீஸ்  ஜீப்  ரோந்து  வருகிறது . நாயகன்  உடனே   டெட்  பாடியை  மறைத்து  விடுகிறான். அவர்கள்   சென்றதும்  டெட்  பாடியை  நாயகன்  தன்  காரில்  ஏற்றிக்கொள்கிறான்


நாயகனின்  நண்பன்    ஒரு  ஹையர்  போலீஸ்  ஆஃபீசர்.  வழியில்  லிஃப்ட் கேட்டு  நாயகனின்  காரில்  ஏறிக்கொள்கிறார்


ஆரம்பத்தில்  போலீஸ்  ஜீப்பில்  ரோந்து  வ்ந்த  இரண்டு  போலீஸ்  ஆஃபீசர்கள்  நாயகனின்  காரை  ஃபாலோ  செய்கிறார்கள் 


ஒரு  இடத்தில்  நாயகன்   அந்த  டெட்  பாடியை  பெட்ரோல்  ஊற்றி  எரிக்க  முற்படுகையில்  நாயகனின்  நண்பன் , ஃபாலோ  பண்ணி  வந்த  இரண்டு  போலீஸ்  ஆஃபீசர்கள்  மூவரும்  வாக்குவாதம்  செய்கிறார்கள் . 


 நாயகனின்  நண்பன்  நாயகனைக்காப்பாற்ற  முற்படும்போது  ஒரு  தள்ளு  முள்ளு  ஏற்பட்டு  பெட்ரோல்  கேனில்  துப்பாக்கிக்குண்டு  பட்டு  மூவரும்   எரிந்து    இறக்கிறார்கள் 


 நாயகன்  தெரிந்தோ  தெரியாமலோ  இப்போது  நான்கு  பேர்  இறப்புக்கு காரணம்  ஆகி  விட்டான் 


இறந்து  போன  போலீஸ்  ஆஃபீசரின்  மகள்  அசிஸ்டெண்ட்  கமிசனர்  ஆஃப்  போலீஸ் . அவர்  தான்  நாயகி 


 இதற்குப்பின்  நாயகன்  தப்பிக்க  என்ன  எல்லாம்  திட்டம்  போடுகிறான்? நாயகி  எப்படி  நாயகனைக்கண்டு பிடிக்கிறாள்  அதற்குப்பின்  என்ன  ஆனது  என்பதுதான்  மீதி  திரைக்கதை 

நாயகன்  ஆக  விஜய ராகவேந்திரா   போலீஸ்  கட்டிங் , ஜிம்  பாடி  என  ஒர்க்  அவுட்  பண்ணி  நடித்திருக்கிறார். குற்ற  உணர்ச்சியில்  கலங்கும்போது  நல்ல  நடிப்பு . ஆக்சன்  காட்சிகளில்  தடுமாறுகிறார்


அசிஸ்டெண்ட்  கமிஷனர்  ஆஃப்  போலீஸ்  ஆக  பாவனா.போலீஸ்  கெத்து  ஓக்கே  ரகம் .ஆனால்  வைஜெயந்தி  ஐபிஎஸ்  விஜயசாந்தி , டெல்லி  க்ரைம்   நாயகி  ஷெஃபாலி  ஷா  ரேஞ்சுக்கு  இல்லை 


நாயகானின்  மனைவியாக  குஷி  ரவி  கச்சிதம், அழகான  முகம் , அளவான  நடிப்பு ., இவருக்கு  அதிக  காட்சிகள் இல்லாதது  ஒரு  குறை 


2  மணி  நேரம்  20  நிமிடங்கள்  ஓடும்படி  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர் 


ககன்  ப்தேரியா  வின்  இசையில்  இரண்டு  பாடல்கள் ஓக்கே  ரகம் .பின்னணி  இசை  குட் விஸ்வஜித்  ராவின்  ஒளிப்பதிவில்  லாங்க்  ஷாட் , க்ளோசப்  ஷாட்  எல்லாம்  கச்சிதம் 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  தேவி  பிரசாத் ஷெட்டி


சபாஷ்  டைரக்டர்


1    படம்  போட்ட  30 வது  நிமிடத்தில்  இருந்து  பரபரப்பு  தொற்றிக்கொள்கிறது.கிரிஸ்ப்  ஆக  திரைக்கதையை  நகர்த்திய  விதம் 


2   நாயகனுக்கு  டூயட் , மொக்கைக்கா,மெடி  டிராக்  என  எதுவும்  சொதப்பாமல்  எடுத்துக்கொண்ட  திரைக்கதைக்கு  நியாயம்  செய்த  விதம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  அஞ்சு  லட்சம்  ரூபா  கடன்  கேட்கும்  ஆள்  நேரில்  போய்க்கேட்பதுதானே  மரியாதை ? ஃபோன்ல  கேட்டா  கிடைக்குமா?

2   ஹைவே  ரோட்டில்  நாயகன்  ரத்தக்கறை  பட்ட  கல்லைக்கழுவிக்கொண்டிருப்பது  எல்லாம்  ஆகாத  வேலை 


3  நாயகன்  சம்பவம்  நடந்ததுமே  தன்  செல்  ஃபோனை  ஸ்விட்ச்  ஆஃப்  பண்ணாதது  ஏன்?பின்  ஒரு  நாளில்  சைபர்  க்ரைம்  போலீஸ்  லொகேஷனை  வைத்து  கண்டுபிடிக்கும்  என்பது  போலீஸ்  ஆன    அவருக்குத்தெரியாதா?


 4  மெயின்  கதைக்கு  வர   அரை  மணி  நேரம்  எடுத்துக்கொள்கிறார்கள். இன்னும்  ஷார் ப்  ஆக  கட்  பண்ணி  இருக்கலாம் 


5 க்ளைமாக்ஸ்  ஃபைட்   தேவை  இல்லாதது . அந்த  கேங்க்ஸ்டர்  கூட்டம்   மோதல்  தேவை  இல்லாதது 


6  க்ளைமாக்சில்  நாயகன்  திடீர்  என  நல்லவன்  ஆக  மாறி  அத்தனை  ரவுடிகளையும்  அடித்துப்போட்டு  பாவனாவைக்காப்பாற்றுவது  நம்ப  முடியவில்லை 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  க்ரைம்  த்ரில்லர்  ரசிகர்கள்  அவசியம்  பார்க்கலாம் .. முதல்  அரை  மணி  நெரம்  பொறுமை  தேவை. நான்  பத்து  பத்து  நிமிடங்களாக  மூன்று  முறை  பார்த்து  நான்காவது  முறை  தான்  முழுப்படத்தையும்  பார்த்தேன். ரேட்டிங்  3 / 5 


Case of Kondana
Theatrical release poster
Directed byDevi Prasad Shetty
Written byDevi Prasad Shetty
Screenplay byDevi Prasad Shetty
Produced byDevi Prasad Shetty
Sathwik Hebbar
StarringVijay Raghavendra
Bhavana Menon
CinematographyVishwajith Rao
Music byGagan Baderiya
Production
company
Flying Elephant Story Tellers
Release date
  • 26 January 2024
CountryIndia
LanguageKannada

Tuesday, May 07, 2024

TILLU SQUARE (2024) - தெலுங்கு / தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்

     

    125  கோடி  ரூபாய்  வசூல்  செய்த  பிளாக்  பஸ்டர்  ஹிட்  படம்  இது . தெலுங்குப்பட  உலகின்  எஸ் ஜே  சூர்யா  ஆன    சித்து  ஜோன்னாலா  கட்டா  திரைக்கதை  எழுதி  நாயகனாக நடித்த  படம் . 29/3/2024  அன்று  தியேட்டர்களில்  ரிலீஸ் ஆகி  மெகா  ஹிட்  ஆன  இப்படம்  இப்போது  நெட்  ஃபிளிக்ஸ் ஓடிடி  யில்     காணக்கிடைக்கிறது, இதன் முதல்  பாகம்  ஆல்ரெடி  ஹிட்  ஆன  படம்  தான். அதை  விட  பல  மடங்கு  ஹிட்  ஆகி  உள்ளது  இதன்  இரண்டாம்  பாகம், அதனால்  மூன்றாம்  பாகம்  கூட  விரைவில்  வெளி  வர  இருக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  மேரேஜ்  புரோகிராம்  நடத்தறவர் . அதாவது  ஒரு  கல்யாணம்  காட்சி  நடந்தா  அதற்கான  காண்ட்ராக்ட்  வேலைகள்  எல்லாம்  செய்பவர் ., கூடவே  மேடை  ஏறிப்பாடுவார் , டான்ஸ்  ஆடுவார் , இவருக்கு  ஏகப்பட்ட  ரசிகைகள் இருக்காங்க 


ஒரு  நாள்  நாயகியை  ஒரு  பார்ட்டில  பார்க்கறார் , பேசறார்.அன்று  இரவே  அவர்கள்  இருவரும்  தம்பதி  ஆகிடறாங்க .ஒன்  நைட்  ஸ்டேண்ட்  கப்பிள் 


 அடுத்த  நாள்  காலை  நாயகி  ஒரு  லெட்டர்  எழுதி  வெச்சுட்டுப்போயிடறா 


நாயகன்  நாயகியின்  நினைவாகவே  ஒரு  மாசமா  சுத்திட்டு  இருக்கார்  . நாயகியைக்கண்டு  பிடிச்ச  பாடில்லை 


 ஒரு  நாள்  ஒரு  ஹாஸ்பிடலில்  நாயகியை  அவளது  அப்பாவுடன்  சந்திக்கிறார்


நாயகி  கர்ப்பமா  இருக்கா. நாயகியின் அப்பா  நாயகனைக்கல்யாணம்  பண்ணிக்கச்சொல்றார். நாயகனின்  குடும்பம்  நாயகனைக்கல்யாணம்  பண்ணிக்க  வற்புறுத்துது. நாயகனும்  ஓக்கே  சொல்லிடறார்


 இப்போதான்  ஒரு  திருப்பம் . நாயகி  ஒரு இண்ட்டர் நேசனல்  ஆஃபீசர் . ஒரு  கேங்க்ஸ்டரைப்பிடிக்க  டாஸ்க்   நடத்தறார். நாயகனிடம்  ஒரு  டாஸ்க்  கொடுக்கிறார். விஷம்  கலந்த  லட்டை  நாயகன்  அந்த  கேங்க்ஸ்டர்க்கு  தரனும்.


  நாயகன்  அதுக்கு  சம்மதிக்கலை .இப்போ  அடுத்த  திருப்பம். ஒரு  வருசம்  முன் ( அதாவது  படத்தின்  முதல்  பாகம் )  நாயகன்  ஒரு  ஆளைப்போட்டுத்தள்ளிடறார். புதைக்கிறார்.  அதை  ஃபோட்டொ  எடுத்து  வெச்சு  நாயகி  மிரட்றா


 இதுக்குப்பின்  நிகழும்  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை 

நாயகன்  ஆக  சித்து  நம்ம  ஊர் திருட்டு  பயலே  புகழ் , நான்  அவன்  இல்லை  புகழ்  ஜீவன்  முக  சாயலில்  இருக்கிறார். எஸ்  ஜே  சூர்யாவின்  குறும்புத்தனம், ஆர்  பார்த்திபன்  தெனாவெட்டு  என  எல்லாம்  கலந்த  கலவையாக  இருக்கிறார்.  இவரது  அசால்ட்டான  நடிப்பு , உடல்  மொழி  பெரிய  பிளஸ் 


நாயகி  ஆக  அனுபமா  பரமேஸ்வரன் நிறைவான  நடிப்பு ,குறைவான  ஆடைகளுடன்   வலம்  வருகிறார். படத்தில்  முத்தக்காட்சிகளுக்கு  எக்ஸ்ட்ரா  பேமண்ட்  என  சொல்லி  விட்டார்கள்  போல . அடிக்கடி  கிஸ்சிங்  சீன்கள்  தான் 


நேகா  ஷெட்டி  , மடோனா  செபாஸ்டியன்  போன்றோரும்  உள்ளேன்  ஐய்யா  என்கிறார்கள் , அதிக  வேலை  இல்லை 


நவீன்  நூலியின்  எடிட்டிங்கில்  123  நிமிடங்களில்  ஷார்ப்  ஆக  கட்  பண்ணி  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்


ராம் மிரியாலா , அச்சு  ராஜா மணி  ஆகிய  இருவரும்  பாடல்களுக்கான  இசை நான்கு  பாடல்களில் 3  சிறப்பு 

பீமா  செக்யூரலி  தான்  பின்னணி  இசை .பல  இடங்களில் பிஜிஎம்  குட் 


ஸ்ரீ  பிரசாத்  உம்மான்சிங்  ஒளிப்பதிவில்  இரு  நாயகிகளையும்  கிளாமராக  படம்  பிடித்து  இருக்கிறார் 


ரவி ஆண்ட்டனியுடன்  இணைந்து  திரைக்கதை  எழுதி  இருக்கிறார்   சித்து  ஜோன்னாலா  கட்டா 

மல்லிக்  ராம்  தான்  இயக்கம்


சபாஷ்  டைரக்டர்


1  இரண்டே  மணி  நேரத்தில்  க்ரிஸ்ப்  ஆகக்கட்  செய்து  பரபரப்பாக  திரைக்கதையை  நகர்த்திய  விதம் 


2  இளைஞர்களைக்கவர்வதற்காக  திரைக்கதைக்கு  சம்பந்தம்  இருக்கோ  இல்லையோ  எகப்பட்ட  லிப்  லாக்  காட்சிகள்  வைத்தது 


3   நாயகி  போலீஸ்  ஆஃபீசர்  ஆக  இருந்தாலும்  ஒரு  சீனில்  கூட  யூனிஃபார்மில்  வர  விடாமல்  படம்  முழுக்க  டூ  பீஸ்  டிரசிலேயே  காபரே  டான்சர்  போல  உலவ  விட்டது 



  ரசித்த  வசனங்கள் 


1  பன்னிக்குத்தெரியுமா?பான்ட்ஸ்  பவுடர்    வாசனை?


2   எல்லாருக்கும்  உடம்புல  வீக்  பார்ட்  இருக்குமே? உன்  உடம்பு  ல  வீக்  பார்ட்  எது ?


 என்  கண்ணு . உனக்கு ?


 என்  வீக்  ஹார்ட் 


3   என்ன  பர்ஃபியூம்   யூஸ்  பண்றே?  இந்த  தூக்கு  தூக்குது ?


 என்  பாடி  நேச்சர்  ஸ்மெல் இதுதான்


 நீ  டீப்பா  பேசற  , நான்  சீப்பா  பேசறேன் 


4  பெஸ்ட்  பார்ட்  ஆஃப்  கிஸ்  எது ?


கிஸ்  தான்


 நோ . கிஸ்  தர  நீ  அருகே  வரும்போது  துடிக்கும்  உன்  உதடுகள் 


5   அவளைப்பார்க்காம  பசியே  எடுக்கலை 


 ஒரு  கிலோ  கறியை  முழுங்கி  இருக்கே  எப்படி  பசிக்கும் ? 


6    என்  ஒப்பீனியனை  சொல்லட்டா ?


  உன்  மேல  எனக்கு  எந்த  ஒப்பீனியனும்  கிடையாது .உன்  ஒப்பீனியனை  யார்  கேட்டா ? 


7  ஒரு  பொண்ணைப்பெத்த  அப்பாவா  கேட்கறேன் . உங்க  பையனை  இப்படியா  வளர்ப்பீங்க ?


ஒரு    பையனைப்பெற்ற  அப்பாவா  சொல்றேன்.  நான்  வளர்க்கலை . அவனே  வளர்ந்துட்டான்


8  டியர் , நிஜமாவே  என்னை  நீ  தேடுனியா?


வெள்ளத்தால  பாதிக்கப்பட்டவன்பிரியாணிப்பொட்டலத்தைத்தேடுவது  போலத்தேடினேன்


9   சீரியசாப்பார்ககலை , க்யூரியசா பார்த்தேன் 


10  அவரோட பர்த்டே  க்கு  அவரே  சர்ப்பரைஸ்  கிஃப்ட்  கொடுத்துக்கறாராம்


11  நீயே  கேஸ்  பின்னால  ஓடற  கேஸ்  மாதிரி  தான்  இருக்கே ,  உன்  மேல  யார்  கேஸ்  போடுவா?


12    தயவு  செஞ்சு  உக்காருங்க 


 என்னால  உக்கார  முடியாதுங்க  பைல்ஸ்  பிராப்ளம்


13   ஒவ்வொரு  ஆம்பளையோட  வாழ்க்கைலயும்  முக்கியமான , மிகப்பெரிய  முடிவு  எடுக்க  வேண்டிய  தருணம்  வரும்


14    அவ  புள்ளத்தாச்சி  இல்ல , கள்ளத்தாச்சி 

15   ராவா  சரக்கு  குடிச்சா  நீ ரா    ஏஜெண்ட்டா?


16  லட்சுமி  தேவி இல்ல  அவ , பூலான்  தேவி


17   குடிச்ச  பின்  வாந்தி  எடு  , தப்பில்லை , ஆனா  வாந்தி  எடுத்த  பின்  குடிக்காத , துப்பில்லை 


18  ராதிகா  என்னை காதலிச்சு  ஏமாத்துனா

லில்லி  என்னை  ஏமாத்தறதுக்காகவே  காதலிச்சா  



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகி  கர்ப்பம்  என்றதும்  நாயகன்  ஏன்  உடனே  நம்பனும் ?  ஹாஸ்பிடல்  கூட்டிட்டுப்போய்  செக்  பண்ணி  இருக்கலாமே?


2  நாயகன்  ஒரு  ப்ளே  பாய்.  அபப்டி  இருக்கும்போது  பாதுகாப்பு  ஏற்பாடுகள்  இல்லாமயா  உறவு  வைத்திருப்பார்  ? 


3   நாயகன்  கேங்க்ஸ்டர்  கொலை  செய்யும்  டாஸ்க்கில்  அவரைக்காப்பாற்றுகிறார். அதுதான்  அவர்  திட்டம்  எனில்  எதற்காக  கேங்க்ஸ்டர்  அடியாட்களிடம்  அவ்ளோ  அடி  வாங்கனும் ? 


4   மட்டன் , சிக்கன் , சரக்கு  இதில்  எல்லாம்  விஷம்  கலந்தா  தெரியாது . பாலில்  விஷம்  கலந்தால்  கலர்  காட்டித்தராதா?  அதை  எப்படி  கேங்க்ஸ்டர்  டவுட்  படாமல்  குடிக்கிறார் ? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  நான்கு  இடங்களில்  லிப் லாக்  காட்சிகளும், நாற்பது   இடங்களில்  டார்க்  பச்சை  வசனங்களும்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தெலுங்கில்  மெகா  ஹிட்  ஆன  படம்  என்ற  அளவில்  பார்க்கலாம் , டைம்  பாஸ்  மூவி  தான் .  ஃபேமிலி  உடன்  பார்க்க  முடியாது . ரேட்டிங்  2.75 /  5


Tillu Square
Theatrical release poster
Directed byMallik Ram
Written bySiddhu Jonnalagadda
Ravi Anthony Pudota
Produced bySuryadevara Naga Vamsi
Sai Soujanya
StarringSiddhu Jonnalagadda
Anupama Parameswaran
CinematographySai Prakash Ummadisingu
Edited byNaveen Nooli
Music bySongs:
Ram Miriyala
Achu Rajamani
Score:
Bheems Ceciroleo
Production
companies
Sithara Entertainments
Fortune Four Cinemas
Distributed bySrikara Studios
Release date
  • 29 March 2024
Running time
123 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Box office₹125 crore[2]

Monday, May 06, 2024

ரணம் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்

     

    வைபவ்  நடிக்கும்  25  வது  படம்  என்ற  பெருமையுடன்  ரிலீஸ்  ஆன  இப்படம்  பல  மீடியாக்களால் பாராட்டப்பட்டு  பெரும்பாலான  விமர்சகர்க்ளால்  3/5  ரேட்டிங்  தரப்பட்ட  தரமான  படம் . லோ  பட்ஜெட்  படமாக  இருந்தாலும்   ஒரு  நல்ல  க்ரைம்  த்ரில்லர்  படம்  இது .23/2/2024  முதல்  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இப்படம்  இப்போது  அமேசான்  பிரைம்  ஓடிடி யில்  காணக்கிடைக்கிறது .ரணம் : அறம்  தவறேல்  என்பது  முழுமையான  டைட்டில் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  போலீஸ்  ஸ்டேஷனுக்கு  வந்து  அங்கே    சில கேஸ்களுக்கு  க்ரைம்  ஸ்டோரி  எழுதித்தருபவன். அது  போக  ஓவியன்.  முகம் சிதைந்த  நிலையில்  ஒரு  டெட்  பாடி  இருந்தால்  அந்த  முகம்  இப்படித்தான்  இருக்கும்  என  கெஸ்  பண்ணி  வரைந்து  தருபவன்.சில  க்ரைம்  கேஸ்களில்  துப்பு  கிடைக்காத  போது  நாயகன்  இந்த  க்ரைம்  இப்படித்தான்  நடந்திருக்கும்  என  யூகித்து  க்ரைம்  ஸ்டோரி  எழுதித்தருவான். இது  போலீஸ்க்கு  மிகவும்  உதவியாக  இருக்கும் 


நகரில்  ஆங்காங்கே  எரிக்கபப்ட்ட  இரு  கைகள் , இரு  கால்கள் . உடல்  என  தனித்தனியாக  வெவ்வேறு  லொக்கேஷன்களில்  கிடைக்கிறது.போலீஸ்  ஸ்டேஷனுக்கு  எதிரிலேயே  ஒரு  அட்டைப்பெட்டியில்  எரிக்கப்பட்ட  நிலையில்   இரு  கைகள்  கிடைக்கின்றன.இவை  எல்லாம்  ஒரே  டெட்பாடியுடையது  அல்ல  என  நாயகன்  யூகித்து  சொல்கிறான்


நகரில்  பல  இடங்களில்  புதைக்கப்பட்ட  பிணங்கள்  திடீர்  என  காணாமல்  போகின்றன.


இந்த  இரண்டு  கேஸ்களும்  போலீஸ்க்கு  பெரிய  தலைவலி  தருகின்றன. இந்தக்கேசை  விசாரிக்கும் இன்ஸ்பெக்டர்  திடீர்  என  காணாமல்  போகிறார். இது  மீடியாவில்  பரப்ரப்பான  பேசுபொருள்  ஆகிறது 


 இந்த  இரண்டு  கேசை  விசாரிக்க  , காணாமல்  போன  இன்ஸ்பெக்டர்  கேசை  துப்பு  துலக்க  புதிதாக  ஒரு  பெண்  போலீஸ்  ஆஃபீசர்  வருகிறார்.  அவர்  எப்படி  கேசை  டீல்  செய்தார்  என்பது மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக  வைபவ். அலட்டல்  இல்லாத  , ஆர்ப்பாட்டம்  செய்யாத  அமைதியான  ஹீரோவைப்பார்த்து  ரொம்ப  நாட்கள்  ஆகிறது . நல்ல  நடிப்பு .பர்சனாலிட்டியான  தோற்றம். வழக்கமாக  இப்போதெல்லாம்  நாயகனைக்காட்டும்போது    தண்ணி  அடிப்பது ,  தம்  அடிப்பது  என்பதாகவே அதிகக்காட்சிகள்  காட்டுவார்கள் , இதில்  அப்படி  இல்லை , நிம்மதி


போலீஸ்  ஆஃபீசர்  ஆக தன்யா  ஹோப்  அழகாக  இருக்கிறார். ஆனால்  போலீஸ்  கம்பீரம்  இல்லை . நாயகனுடன்  டூயட்  எல்லாம்  பாடவில்லை . அதுவரை  பரவாயில்லை 


 ஃபிளாஸ்பேக்  காட்சிகளில்   நந்திதா  ஸ்வேதா  நடிப்பு  குட் .அவரது  மகளாக  வரும்  ப்ரணதி  அமைதியான  நடிப்பு 


கவுரவ  வேடத்தில்  சரஸ்  மேன்ன்  கச்சிதம் 


அரோல்கோரெல்லி  தான்  இசை .நான்கு  பாடல்களும்  குட் . பின்னணி  இசை  பரபரப்பு 

பாலாஜி  கே  ராஜா  தான்  ஒளிப்பதிவு.. நாயகன் , நாயகி ,காதலி  மூவரையும்  அழகாகாட்டி  இருக்கிறார் 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ஷெரீப் 


சபாஷ்  டைரக்டர்


1    க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் , இடைவேளை  ட்விஸ்ட்   என  பொருத்தமான  இடங்களில்  சஸ்ப்[என்சை  ஓப்பன்  செய்த  விதம் ‘

2  அழுத்தமான  ஃபிளாஸ்பேக்  காட்சி 

3   அமரர்  சில்க்  ஸ்மிதா  இறந்த  பின்  நடந்த  ஒரு  சம்பவத்தை  சாமார்த்தியமாக  திரைக்கதையில்  புகுத்திய  விதம் 

4  பெண்ணை  பாலியல்  வன்கொடுமை  செய்பவருக்கு  தண்டனை  இருக்கு , ஆனால்  பிணத்துடன்  உறவு  கொள்ளும்  கொடூர  ஆசாமிகளுக்கு  சட்டத்தில்  தண்டனை  வழங்க  வழி  இல்லை  என்ற   கான்செப்ட்டை  எடுத்து  திரைக்கதை  அமைத்த  விதம் 

செம  ஹிட்  சாங்க்ஸ்


1  பொன்னான  கண்ணு  தன்னால  நின்னு  கதை  அடிக்க 

2  சட்டுனு  பொட்டுனு  அட்டுல  விட்டு 

3  அச்சுப்பெண்ணே  ஆசை  முகமே  மண்ணில் எனக்காக  வாழும்  உயிரே


4  அம்மா  அம்மா  ஆசை  அம்மா 


  ரசித்த  வசனங்கள் 

1   அவள்  பறந்து போனாளே  என்னை  மறந்து போனாளே 



 யோவ்  ஹெட்  செட்  போட்டு  பாட்டு  கேட்கலாமில்ல? இப்படியா  ஊர்க்கே  கேட்கற  மாதிரி  சவுண்ட்  வெச்சு  கேட்பே?


 அந்தப்பாட்டெல்லாம்  ஹெட்  செட்ல  போட்டுக்கேட்க  முடியாது , ஏன்னா  அந்தப்பாட்டு  வந்தப்போ  ஹெட்  செட்டே  கண்டு  பிடிக்கப்படலை 


2    டைரக்டர்  = பாம்  பார்ட்டீஸ்.. நான்  ஓக்கே  சொன்னதும்  பாம்  வெடிக்கனும், ஓக்கே?


 பூம்


3  இந்த  ஜோக்  சொல்லும்போது  ஏன்  எந்திரிச்சு  நின்னு  சொல்றே?


  ஏன்னா  இது  ஸ்டேன்ட்  அப்  காமெடி 


4   எந்த  விஷயத்துக்கும்  முடிவு  , ஆரம்பம்  என்பது  கிடையவே  கிடையாது  நம்மைத்தேடி  வரும்  எந்த   விஷயத்துக்கும்  ஒரு  காரணம்  இருக்கும் 


5   சிலகேள்விகளுக்கு  பதில்  தேடிப்போனாதான்  கிடைக்கும்


6  அவசரப்பட்டுக்கொலை  பண்றவன்   இவ்ளோ  அக்யூரேட்டா  கட்  பண்ண  வாய்ப்பே  இல்லை .பிராப்பரா  சர்ஜரி  பண்ற  மாதிரி  பொறுமையா   கட்  பண்ணி  இருக்கான் 


7  தப்பு  பண்றது  மட்டும்  பாவம்  இல்லை , அந்த  தப்பைப்பார்த்துட்டு  எதுவும்  சொல்லாமல்  இருப்பதும், எதிர்ப்பு  காட்டாமல்  இருப்பதும்  பாவம்  தான் 


8  எல்லாருமே  சூழ்நிலையை  அவங்களுக்கு   சாதகமா  பயன்படுத்திக்கறாங்க


9   நாம  இறந்ததுக்குப்பின்  நாம  செஞ்ச  நல்லது கெட்டதுதான்   நம்ம  குணத்தை  தீர்மானிக்கும் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகி  ஆன  போலீஸ்  ஆஃபீசர்  நாயகனிடம்  கேட்கிறார்.காணாமல்  போன  இன்ஸ்பெக்டர்  கடைசியா  உன்  கிட்டே  என்ன  பேசினார்? அதற்கு  நாயகன்  சொல்வது  “  கேஸ்  சம்பந்தமா  ஏதாவது  தகவல்  கிடைச்சா  இம்மீடியட்டா  ஷேர் பண்ணு  என்றார்  என்பதுஆனால்  நிஜத்தில்  அவர்  சொன்னது . இந்த  கேசில்  இருந்து  நீ  விலகிடு. நான்  பார்த்துக்கறேன்  என்பது. ஏன்  அதை  மறைத்தார் ? ( இதற்கான  பதில்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டில் இருந்தாலும்.. )


2   நாயகனுக்கு  கைலாசம்  யார்  என்றே  தெரியாது . அப்போதுதான்  போலீசே  கைலாசத்தை  ரவுண்ட்  அப்  பண்றாங்க.நாயகன்  எப்படி  கைலாசம்  இப்போதுதான்  தப்பிப்போனான்  என்கிறார் ? 


3   மகளுக்கு  சாலை  விபத்து  ஏற்ப்ட்டு  ஆம்புலன்ஸ்ல  அழைத்து  செல்லப்படும்போது  அம்மாவுக்கு  ஃபோன்  பண்ணி   ஜி ஹெச்  வந்துடுங்க  என்றதும்  அம்மா  ஜி ஹெச்  வேணாம், பிரைவேட்  ஹாஸ்பிடல்  கூட்டிட்டுப்போங்க  என்கிறார்.  இந்தக்காட்சி  பொது  மக்களிடையே  ஜிஹெச்  மீது  அவநம்பிக்கை  ஏற்படுத்தாதா?


4   ஆக்சிடெண்ட்க்கு  ஆளான  மகள்  சீரியசாக  ஐசியூ  வில்  இருக்கும்போது  அம்மா  அருகில்  இல்லாமல்  ப்ரே  பண்ண  சர்ச் க்குப்போவதாக காட்சி. இது  எதுக்கு ?  ஹாஸ்பிடல்லயே  ப்ரே  பண்ணினா  ஏசு  ஒத்துக்க  மாட்டாரா?


5  க்ளைமாக்ஸ்ல  நாயகன்  ஒரு  பைக் குக்குப்பக்கத்துல  எல்லா  ஃபோட்டோசையும்  எரிச்சுட்டு  இருக்காரு . பெட்ரோல் டேங்க்  பக்கத்துல  நெருப்பு  இருந்தா  ஆபத்து  தானே? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  யூ

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சஸ்பென்ஸ்  த்ரில்லர் , க்ரைம்  த்ரில்லர்  ரசிகர்களூக்குப்பிடித்தமான  தரமான  படம் , ரேட்டிங்  3.25 / 5 


ரணம் அறம் தவறேல்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்ஷெரீஃப்
எழுதியவர்ஷெரீஃப்
உற்பத்திமது நாகராஜன்
நடித்துள்ளார்
ஒளிப்பதிவுபாலாஜி கே ராஜா
திருத்தியவர்முனீஸ்
இசைஅரோல் கோரெல்லி
தயாரிப்பு
நிறுவனம்
மிதுன் மித்ரா புரொடக்ஷன்ஸ்
மூலம் விநியோகிக்கப்பட்டதுசக்தி பிலிம் பேக்டரி
வெளிவரும் தேதி
  • 23 பிப்ரவரி 2024
விவரங்கள் தேவை ]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Saturday, May 04, 2024

அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை (1982) - தமிழ் -- சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ) @ யூ ட்யூப்

     

    1982  ஆம்  ஆண்டு  வெளியான  மெகா  ஹிட்  படமான  பயணங்கள்  முடிவதில்லை  படத்தை  இயக்கிய  ஆர்  சுந்தர்  ராஜனின்  இரண்டாவது  படம்  தான்  இது . கே  பாக்யராஜின் க்ளாஸ்  மேட்  ஆன  இவர் டச்  ஆரம்ப  கால  கே  பாக்யராஜ்  படங்களில்  காணலாம். பின்னாளில்  இருவரும்  வேறு  வேறு  திசையில்  சென்றதால்  பாணியும்   மாறியது 


1983ல்  சரணாலயம், தூங்காத  கண்ணின்று  ஒன்று  ஆகிய  சுமார்  ரகப்படங்களைக்கொடுத்தவர்  அதற்குப்பின்  நான்  பாடும்  பாடல்  (1984)  , வைதேகி  காத்திருந்தாள்  (1984) ,  சுகமான  ராகங்கள்  (1985) ,  குங்குமச்சிமிழ் (1986)  , அம்மன்  கோவில்  கிழக்காலே  (1986)  , மெல்லத்திறந்தது  கதவு (1986)      என்று  தொடர்ச்சியாக ஆறு  வெள்ளி  விழாப்படங்களைக்கொடுத்தார்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  கிராமத்தில்  வசிப்பவள் .அந்த  ஊருக்கு  ரோடு  போடும்  எஞ்சினியர்  ஆக  அந்த  ஊரைச்சேர்ந்த  நாயகன்  நீண்ட  இடைவெளிக்குப்பின்  சொந்த  ஊருக்கு  வருகிறான்.. வந்த  இடத்தில்  நாயகியுடன்  காதல். இவர்களது  காதல்  சுவராஸ்ய்மாக  முதல்  பாதி  திரைக்கதையை  ஆக்ரமிக்கிறது 


  நாயகிக்கு  மாலைக்கண்  நோய்  உண்டு ., இது  ஊரில்  யாருக்கும்  தெரியாது .நாயகனுக்கும்  தெரியாது . ஒரு  நாள்  இரவு  நாயகி  தனிமையில்  இருக்கும்போது  தன் கல்யாணத்துக்குப்பத்திரிக்கை  வைக்க  வந்த  வில்லன்  நாயகியை  பாலியல்  வன் கொடுமை  செய்து விடுகிறான்


நாயகிக்குக்கெடுத்தவன்  யார்  என்று  தெரியாது. அதற்குப்பின்  நாயகிக்கு  சிகிச்சை  அளிக்கப்பட்டு  பார்வை  சரி  ஆகிறது . வில்லன்  நாயகியைத்திருமணம்  செய்து  கொள்ள  முன்  வருகிறான் , நாயகன்  உண்மை  தெரிந்தும்  நாயகிக்கு  வாழ்க்கை  கொடுக்க ஆசைப்படுகிறான் . இதற்குப்பின்  நிகழ்ந்தது  என்ன  என்பதே  க்ளைமாக்ஸ் 


நாயகன்  ஆக  புதுமுகம்   கபில்  தேவ். ஆள்  நல்ல  உயரம், சுரெஷ்  போன்ற  முகச்சாயல். நடிப்பு  ஓக்கே  ரகம் 


நாயகி ஆக  சுலக்சனா. கச்சிதமான  நடிப்பு .காதலி  ஆக  வரும்போதும்  சரி  மன  நலம்  பாதிக்கப்பட்டவாராக  வரும்போதும்  சரி  மனம்  கவரும்  நடிப்பு 


வில்லன்  ஆக  சிவச்சந்திரன். கொடுரமான  வில்லன்  ஆக  இல்லாமல்  தப்பை  உணர்ந்து  திருந்தும்  வில்லன் . குட்  ஆக்டிங் 


  கோயில்  பூசாரி  ஆக  வில்லத்தனம்  காட்டும் கவுண்டமணி  எரிச்சல்  மூட்டுகிறார்

  எஸ்  எஸ்  சந்திரன் , செந்தில் , கல்லாப்பெட்டி  சிங்காரம்  என  காமெடி  பட்டாளம்  இருந்தும்  காமெடி  டிராக்  ஒர்க்  அவுட்  ஆகவில்லை 


கே  வி மகாதேவன்  இசையில் நான்கு  பாடல்கள் , அவற்றில் ஒரு  பாட்டு  மெகா  ஹிட்டு 


என் கே  விச்வநாதன்  இசை  சிறப்பு. கே  ஆர்  மகாலிங்கம்  எடிட்டிங்கில்  படம்   இரண்டே  கால்  மணி  நேரம்  ஓடுகிரது 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ஆர்  சுந்தர்  ராஜன் 


சபாஷ்  டைரக்டர்


1   நாயகன்  நாயகி  காதல்  கதையில்  ஆள் மாறாட்டக்காதல் , காணாமல் காதல்  ஆகிய  அம்சங்களைப்புகுத்தி  சுவராஸ்யமாக  முதல்  பாதி  திரைக்கதையை  அமைத்த  விதம் 


2   பாடல்  காட்சிகளைப் படமாக்கிய  விதம் குட் 



செம  ஹிட்  சாங்க்ஸ்

1  யானை  வர்றதைப்பாருங்கம்மா 


2   மணி  ஓசையும் ,   கை வளை  ஓசையும்   ஆனந்த  ராகம்  சொல்ல 


3  எதிர்பார்த்தேன் , இளங்கிளியைக்காணலையே? 

4  சுமை  தாங்கியே  இன்று  விழுகின்றது 


  ரசித்த  வசனங்கள் 


1   கடன்  வாங்கும்போது  கணக்குல  எழுதி  வெச்சுக்கனு  சொன்னீங்க , அப்புறமா எழுதுனதையே  வெச்சுக்கனு  சொல்லிட்டீங்க , என் பணம்  எப்போங்க  வரும் ? 


2 பொண்ணுன்னா  வீட்டில்விளக்கு  ஏற்ற  மட்டுமில்ல .அப்பப்ப  தேவைப்படும்போது  விளக்கை  அணைக்கவும்  செய்யனும். அவ  வீட்ல  திருவண்ணாமலை  தீபம்  மாதிரி  விடிய  விடிய  விளக்கு  எரிஞ்சுக்கிட்டே  இருந்தா  அவன்  தான்  என்ன  செய்வான்  பாவம் ? 


3  புருசனோட  இன்பத்தில்  மட்டும்  பங்கு  போடுபவள்  பொண்டாட்டி  இல்லை , துன்பத்திலும்  பங்கு  போட்டுக்கனும்


 புருசனோட  இன்ப  துன்பத்தில்  பங்கு  போட்டுக்கலாம், ஆனால்  புருசனையே  பங்கு  போடச்சொன்னால்  எப்படி ? 


6  ஊசி  தங்கமாக  இருக்கலாம், அதுக்காக  அதை  எடுத்து  கண்ல  குத்திக்க  முடியுமா?( ஆனந்த  சீனிவாசனின்  ஃபேம்ஸ்  டயலாக்  - வைர  ஊசி  என்பதற்காக  கண்ல  குத்திக்க  முடியாது )


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1நாயகன்  நாயகியை  நேரில்  பார்த்ததில்லை .ஆனால்  நாயகியின்  செருப்பு  எது  ? என்பது அவளது  அப்பா  மூலம்  தெரியும். வேறொரு  பெண்  தான்  நாயகி  ருக்கு  என  நாயகி  ருக்குவே  டிராமா  போடுகிறாள். கிராமத்தில்  பல  முறை  நாயகியை  நாயகன்  சந்திக்கிறான். அப்போதெல்லாம்  நாயகி  அந்த  ஹை  ஹீல்ஸ்  செப்பலைப்போட்டிருக்கிறாள். நாயகன்  அதை  வைத்து  அவள்  தான் ருக்கு  என்பதைக்கண்டு  பிடிக்க  முடியலையா? 


2  மலைக்கோயில்  வாசலில் நாயகி  தன்  செப்பலைக்கழட்டிக்கோயிலுக்குள் செல்கிறாள். நாயகனுக்கு  அது  நாயகியின்  செப்பல்  என்பது  தெரியும். ஆனால்  நாயகி  தான்  தான்  தேடி  வந்த  நாயகி  ருக்கு  என்பது  தெரியாது . அதை  நாயகனே  நாயகியிடம்  சொல்கிறான், இன்னைக்கு  எப்படியாவது  ருக்குவைக்கண்டுபிடிப்பேன்  என  நாயகன்  சவால் விடுகிறான். அப்போ  நாயகி  கோயிலில்  இருந்து  கிளம்பும்போது  அந்த  செப்பலை  காலில்  போட்டுக்கொண்டால் நாயகன்  ஃபாலோ  பண்ணி  அதைப்பார்த்து  தான்  தான்  ருக்கு  என்பதைக்கண்டு  பிடித்து  விடுவான்  என்பது  தெரியாதா? 


3  நாயகன்  நாயகியிடம்  இன்னைக்கு  நைட்  எட்டு  மணிக்கு  குளத்துப்பக்கம்  வந்துடு  என  சொல்லும்போது  நாயகி  எதுவும்  மறுக்கவில்லை . அப்போதே  முடியாது  என  சொல்லி  இருக்கலாம்.பின்  அவனைக்காக்க  வைத்து  ஏமாற்றி  விட்டு  அடுத்த  நாள்    சமாதானப்படுத்தும்போது “ வயசுப்பொண்ணு  நைட்  டைம்ல  வெளீல    எப்படி  வர்றது?  கோபமா?  எனக்கேட்கிறார்.அதை  அப்பவே  சொல்லி  இருக்கலாமே? 


4  நாயகிக்கு  மாலைக்கண்  வியாதி  இருப்பது  கிராமத்தில் யாருக்கும்  தெரியாது  என  அவள் அம்மா   டாக்டரிடம்  சொல்கிறாள் .  அது  எப்படி ? ஒரு  கிராமத்தில்  மாலை ஆறு  மணிக்கு மேல்  வெளியே  வராத  நபரை  யாரும்  சந்தேகப்பட  மாட்டார்களா? 


5  மாலைக்கண்  நோய் உள்ள  நாய்கியை  தனியாக  விட்டு  விட்டு  இரவு  நெரத்தில்  அவள்  அம்மா  ஏன்  பட்டணம்  போக  வேண்டும் ? 


6  மாலையில் வெளியில்  இருந்து  வீட்டு  க்கு  வரும்  நாயகி  வீட்டுக்கதவை  தாழ்  போடாமல்  பாத்ரூம் போய்  குளிப்பது  எப்படி ? 


7  நாயக்ஜியின்  வீட்டுப்பக்கம்  பல வீடுகள்  இருக்கு .வில்லன்  நாயகியை  பாலியல்  வன்கொடுமை  செய்யும்போது  கத்தி  ஆர்ப்பாட்டம்  செய்கிறாள்.கிராமத்தில்  யாருமே  அதைக்கண்டுக்க  மாட்டார்களா? 


8  மாலைக்கண்  வியாதிக்கு  நிரந்தரத்தீர்வு  இல்லை  என  கண்  டாக்டர்கள்  கூறுகின்றனர் . ஆனால்  டாக்டர்  ஒரு  ஆபரேசன்  கூட  செய்யாமல்  10  நிமிடத்தில்  உங்களுக்கு  சரி  ஆகிடுச்சு , இனி  கண்  தெரியும்  என்கிறாரே? 


9 நாயகியும் அம்மாவும்  ஊரை  விட்டுப்போய்  25  நாட்கள் கழித்து  சொந்த  ஊருக்கு  திரும்பி  வருவதாக  கோயிலில்  வில்லனிடம்  சொல்கிறார்கள் ., அவர்கள்  கையில்  பெட்டி  படுக்கை  எல்லாம்  இருக்கிறது . வெளியூர்  போய்ட்டு  ரிடர்ன்  வருபவர்கள்  நேராக  வீட்டுக்கு  வந்து  குளித்து  விட்டு  பின்  தானே  கோயிலுக்குப்போகனும் ?பெட்டியோடவே  கோயிலுக்கு  ஏன்  போனங்க ?


10  காட்டில்  இருந்து  ஊருக்குள்  வந்து  மக்களைத்தொந்தரவு  செய்யும்  ஆண்  புலியை  நாட்டாமை  ஆன   வில்லன்  துப்பாக்கியால்  சுட்டுக்கொன்று  விடுகிறான்,  அந்த  புலியின்  சம்சாரம்  ஆன  பெண்  புலி  வில்லன்  வீட்டு  வாசலில்  பழி  வாங்க  வருவதெல்லாம்  ஓவர்.  அட்லீஸ்ட்  வில்லன்  காட்டுக்குப்போகும்போது  அப்படிக்காட்டி  இருக்கலாம் 


11   பஞ்சாயத்து  தலைவரான  வில்லன்  எந்த  தீர்ப்பும்  தரவில்லை.கோயில்  பூசாரிதான்  இனிமே  ருக்கு வுக்கு  ஊர்  மக்கள்  யாரும்  தண்ணீர்  கூடத்தரக்கூடாது  என்கிறார். ஆனால்  ஒரு  சீனில்  வில்லனின்  மனைவி  வில்லனிடமே  நீங்க  தானே  ருக்குவுக்கு  யாரும்  தண்ணீர்  தரக்கூடாது  என்று தீர்ப்பு  சொன்னீர்கள்  என்கிறார். 


12  எஸ்  எஸ்  சந்திரன் , செந்தில் , கவுண்டமணி  போன்ற  காமெடி  கிங்குகள்  இருந்தும்  காமெடி  ஒர்க்  அவுட்  ஆகவில்லை . அதிலும்  வில்லன்  கவுண்டமணி  வில்லத்தனம்  பண்ணூவதை  ரசிக்க  முடியவில்லை 


13  நான்  தான்  உன்னைக்கெடுத்தவன்  என  வில்லன்  நாயகியிடம்  சொல்ல  முடிவு  எடுக்கிறான் . அதை  பகலில்  சொல்லலாமே? நைட்  டைமிலா  ஒரு  கிராமத்தில்  ஒரு  பெண்  தனியாக  வீட்டில்  இருக்கும்போது  போவது ? 


14  அந்த  ராத்திரி  நேரத்தில்  நாயகி  ஏன்  கோயிலுக்கு  வருகிறாள் ?


15  கோயில்  பூசாரி  நாயகியிடம்  ஊர்  மக்கள்  முன்னிலையில்  சவுக்கால்  அடித்து  அடித்து  உன்னை  கெடுத்தது  யார்? என  சொல்லு  எனக்கேட்டுக்கொடுமைப்படுத்துவது  மடத்தனமான  காட்சி 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -    ஜாலியான  முதல்  பாதிப்படத்துக்காகப்பார்க்கலாம் .  ரேட்டிங்  2.5 / 5


அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை
தலைப்பு அட்டை
இயக்கம்ஆர்.சுந்தர்ராஜன்
எழுதியவர்ஆர்.சுந்தர்ராஜன்
உற்பத்திகே.ஆர்.கங்காதரன்
நடிக்கிறார்கள்கபில்தேவ்
சுலக்ஷனா
சிவச்சந்திரன்
வனிதா
ஒளிப்பதிவுஎன்.கே.விஸ்வநாதன்
திருத்தியவர்கே.ஆர்.ராமலிங்கம்
இசைகே.வி.மகாதேவன்
தயாரிப்பு
நிறுவனம்
கேஆர்ஜி ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
வெளிவரும் தேதி
  • 15 அக்டோபர் 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்