Showing posts with label RAJINI. Show all posts
Showing posts with label RAJINI. Show all posts

Friday, December 12, 2014

லிங்கா - சினிமா விமர்சனம்



ஹீரோ  ஒரு திருடன்.அவரும் , அவர் நண்பர்கள் குழாமும்  செய்யும்  லூட்டிகள் செம  ஜாலியாப்போகுது.


  சோலையூர்  அணையை இஞ்சினியர் செக்  பண்ணி  அணைக்கு ஆபத்து .அந்த ஆபத்தில்  இருந்து அணையைக்காப்பாத்தனும்னா ராஜாவோ அல்லது அவரது  வாரிசான  லிங்காவோ  வந்து தான் அணையைத்திறக்கனும் .ஆனா  லிங்கா   வர மாட்டேங்கறார்


நகைக்கண்காட்சில வைக்கப்பட்ட  மரகத நெக்லசை  ஆட்டையைப்போட  திட்டம் போடும்  இடங்கள்  காதில்  பூச்சுற்றல் என்றாலும்  சுவராஸ்யம். ஹீரோயினை  சோலையூர்  கிராமத்துக்கு கூட்டிட்டு வரவேண்டிய  பணி  ஹீரோயினுக்கு. அதே  ஊரில்  இருக்கும்  கோயிலில்  உள்ள  மரகதச்சிலையை திருட வந்த  ஹீரோ வுக்கு  தன்  தாத்தா  வின்  ஃபிளாஸ்பேக்  கதை  சொல்லப்படுது.  

பிரிட்டிஷ் அரசை எதிர்த்து  தன் கலெக்டர் பதவியை  துறந்து  ஹீரோவின்  தாத்தா  ஊர் மக்களின்  நன்மைக்கு  அணை  கட்டுகிறார். அந்த அணை  கட்ட  ஏகப்பட்ட  தடங்கல்கள்  சதிகள்  சவால்கள் .எல்லாத்தையும்  முறியடிச்சு  சொந்த  செலவில்  எப்படி  அணையைக்கட்டுகிறார்  என்பதே  கதை

ஹீரோவா  த  ஒன் அண்ட்  ஒன்லி சூப்பர் ஸ்டார்  ரஜினி. 4 வருட  இடைவெளிக்குப்பின்  அவர்  காட்டும்  அட்டகாசமான  ஓப்பனிங்  சீன்  கலக்கல் . 60வயது ஆன  பின்னும் அவர்  25  வயது  இளைஞர்  போல்   சுறுசுறுப்பாக  பின்னிப்பெடல்  எடுக்கிறார். பாடல்  காட்சிளில்  தமிழ் நாட்டு  மக்களின் நன்மைக்காகவும் , ரசிகர்களுக்காகவும்  வேண்டா  வெறுப்பா  ரொம்ப  சிரமப்பட்டு  அனுஷ்கா  கூட  சோனாக்சி  சின்ஹா  கூட  டூயட்  பாடி ஆடி  நடிச்சிருக்கார்.




டிவி நிருபராக வரும் அஸ்கா உதட்டழகி  குஸ்கா கன்ன அழகி அஞ்சே  முக்கால் அடி உயர கொழுக் மொழுக்  ரேஸ் குதிரை அழகி அனுஷ்கா தான்  நமக்கெல்லாம்  பூஸ்ட்.பாப்பாவுக்கு  முகத்தில்  கொஞ்சம்  முதிர்ச்சி எட்டிப்பார்க்குது என்றாலும்  தமிழன் முகத்தை அதிகம்  கவனிக்காததால்  தப்பி விடுகிறார்.கண்காட்சியில்  ரஜினியுடன்  நெருக்கமாக  இருக்கும் காட்சி ஆல்ரெடி    பீரோவுக்குள்  கொஞ்சிக்குலாவிய  தூள்  படத்தின்  தழுவல்  காட்சி  தான் ( விக்ரம் -ஜோதிகா)  என்றாலும்  கிளு  கிளு தான்.


மெயின்  ஜோடி  சோனாக்சி சின்ஹா.ஹிந்தில  சோனா  என்றால்  தங்கம்னு அர்த்தம் .அதே  போல்  தங்கம்  போல்  ஜொலிக்கும் அழகி. ஏறு நெற்றி  இவருக்கு  மைனசாவே  தெரியலை.நல்லா பரம பத  மேப்பை  விரிச்சு  வெச்சு  விளையாடும் அளவுக்கு அகலமான  முதுகு அழகி.முதல்  மரியாதை  ராதா  கணக்கா  ஜாக்கெட்  இல்லாம  வர்றார். ( சேலை  கட்டி  இருக்கார் ) கண்ணியமான   கேமரா மேனாக இருந்தாலும்  ஒரு  பாடல்  காட்சியில்  அவரையும் அறியாமல்  கிளாமர்  எட்டிப்பார்க்குது



சந்தானத்தின்  காமெடி  வழக்கம்  போல்  கலக்கல்.இவரது  ஒன் லைனர்கள்  அப்ளாஸ் அள்ளுது. கருணா வும்  கேப்  கிடைக்கும்  இடத்தில்  எல்லாம்  சிரிக்க வைக்கிறார்.நண்பேண்டா  என  அவர்  முழுசாக  சொல்ல  முடியாமல்  வயசு  சீனியாரிட்டி  கருதி நண்பேன்  என  நிறுத்த  ரஜினி  டா என  முடிக்க  தியேட்டரே  கல கல



ஃபிளாஸ்பேக்  காட்சிகள்  ரொம்ப  நீளம் .படத்தின்  மெயின்  கதையே  ஃபிளா   ஸ்பேக் தான்  என்பதுதான்  படத்தின்  பலமும்  பலவீனமும். ரஜினி  படம்  எனில்  பாட்ஷா  படையப்பா  போல்  சவால்  விடும்  கேரக்டரா  பார்த்து  மக்கள்  ட்யூன் ஆகிட்டாங்க .எனவே  இது போல்   பென்னி  குயிக்   அணை  கட்டும்  கதை  எல்லாம்  ரிப்பீட் ஆடியன்சை  வர  வைப்பது  சிரமம்.


வில்லனாக  வரும்  பிரிட்டிஷ்  வில்லன்   ஆள்  நல்ல  பர்சனாலிட்டி  எனில் அவர்  மனைவியாக  வந்து  ரஜினிக்கு  சப்போர்ட்  செய்யும்   கேரக்டர்  நல்ல  கலர் . ஜவஹர்லால்  நேரு  - மவுண்ட்பேட்டன்  பிரபு  சம்சாரம்  கதை தான்  நினைவு  வருது.



இசை  ஏஆர்  ரஹ்மான் . 2 பாட்டு  நல்லாருக்கு . ஆனா  பின்னணி  இசை  சுமார்தான் .


மிகக்குறுகிய  காலத்தில்   பெரிய பிராஜக்ட்டாக  சக்சஸ்ஃபுல்லா  தருவது  சாதா  விஷயம் இல்லை . கே எஸ்  ரவிக்குமார்  தான்  அந்த  மேஜிக் கை  நிகழ்த்திக்காட்டி   இருக்கார்.












மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1. திருடப்போர வீட்டுல யாரும் இல்லயான்னு பாருங்கடான்னா காலிங்பெல் அடிச்சுப் பாக்குறானுவ # சந்தானம்

2. "என்ன ஜோக்கா?


" "ஜோக்கா இருந்தா சிரி...வீக்கா இருந்தா விட்று


3. எந்த தொழில் செஞ்சாலும் தூங்கலாம், ஆனா தூங்காம செய்யுர ஒரே தொழில் திருட்டுத்தொழில் !

4. வாழ்க்கைல எதுவும் ஈஸி இல்லை! முயற்சி பண்ணினா எதுவும் கஷ்டம் இல்லை! - ரஜினிகாந்த்

5. நான் காரியத்துல எறங்கிட்டா முடிக்காம விடமாட்டேன்! முடியாததுல இறங்க மாட்டேன் !

6. ஸ்பெஷல் டீ-ய குடிச்சும் தூக்கம் வருதுன்னா உங்க மூஞ்சிய மூதேவி லீசுக்கு எடுத்துருக்கான்னு அர்த்தம்!!! - சந்தானம்!

7. மனுசன்னா நம்பணும்.. மாசு உள்ள போனா தும்மனும் -/// 

8. "ஆந்திராவுக்கு போடுவோமா , அங்க என் மாமா வேல செய்ராரு" 

"என்ன வேல செய்யுராரு" 

"அதான் சொன்னனே..."

9.சந்தானம் டூ ரஜினி ; நீ வேணாம் வேணாம்னா கூட ஜனங்க விட மாட்டாங்க போல... ஊரே உனக்கு மரியாதை கொடுக்குதே-

10. ஐடியாவும் அப்பளமும் ஒன்னு.. ஆறவிட்டா நமுத்துடும்!!! -சந்தானம் 

11. "மரகத நெக்லஸ்கு 3Cன்னா மரகத சிலைக்கு ஒரு 15C வருமா?" 

சந்தானம் ;"15C, 21C எல்லாம் மந்தவெளி பஸ்டாப்புக்குத்தான் வரும்-/"

12. எதிர்பார்க்காதது நடந்தாதான் அது சுவாரஸ்யம்!

13. ஹாஹா விஜயகுமார் : "அய்யா நான் இந்த சோலையூர் கிராமத்து நாட்டாமைங்க

14. ஒரு வேல சாப்புடலன்னா பிரச்சனை இல்லை..ஒரு வேல கூட சாப்புடலன்னா அது பிரச்சனை!!!

15. I haven't failed .... I just postponed my success

16. ஒரு காரியம் முடியுரதுக்கு நிறைய பேரு உதவியா இருப்பாங்க.. ஆனா அந்த அந்த காரியம் நடக்க எதிரிதான் காரணமா இருப்பான்!

17.இஷ்டப்பட்டது கிடைக்கனும்னா கஸ்டப்பட்டுத்தான் ஆகணும்..!

18.எவ்ளோ உயரத்துல வாழ்ந்தாலும் தூங்குற இடம் நம்ம உயரம்தான்..!

19. வெள்ளக்காரன்; "மிஸ்டர் லிங்கேஸ்வரன், நீ DAM கட்டுர மாதரி தெரியல... இவள வேணா கட்டுவ



20  
பிரம்மானந்தம் = சும்மா ங்கற வார்த்தை என் அகராதிலயே கிடையாது



 சந்தானம் = சம்பளம் மட்டும் சும்மா வாங்கறீங்க?


21
பணம் இருந்தா மரியாதை தானா தேடி வரும்


22
வாழ்க்கைல எதும் ஈசி இல்லை.முயற்சி பண்ணுனா எதும் கஷ்டம் இல்லை


23
இந்த மரகத நெக்லஸ் என்ன விலை?


3 கோடி. அடப்பாவி .சேட்டு 1 1/2 கோடின்னானே


24  
சந்தானம் ஹிட் பஞ்ச் = பறக்காஸ் ( கிளம்புவோம்)


25
அனுஷ்கா = யோவ் கில்லாடி கிங்குய்யா நீ.


 ரஜினி = இப்போ என்னை விட்டேன்னாத்தான் நான் அடுத்த வேலையைப்பார்க்க முடியும்


26 
அனுஷ்கா = யோவ்.உன் பார்ட்ஸ் எல்லாம் எப்டிய்யா இப்டி வேலை செய்யுது? # ரஜினி படம்னா டபுள் மீனிங் கூட சாதாவா ஆகிடுது


27 
சந்தானம் டூ ரஜினி = ஒயின்ஷாப் ல சரக்கு அடிக்கும்போது அப்பாவைப்பாத்த மாதிரி ஏன் பம்முறே?


28   பிரிட்டிஷ்  வில்லன் -
என் முன்னால ஏன் இப்டி நிக்கறே?


 என் முன்னோர்கள் உங்களை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்கல # ரஜினி கலக்கல் டயலாக் டெலிவரி



29
நாம எந்த வேலை செய்யறோம்கறது முக்கியம் இல்லை. செய்யற வேலையை சந்தோசமா செய்யனும் # லிங்கா


30 
அரண்மனை ல இருக்கறவன் எல்லாம் ராஜா இல்லை.எங்கே இருந்தாலும் தன் கிட்டே இருப்பதை இல்லாதவங்களுக்குத்தர்ற எல்லோரும் மனசளவில் ராஜாதான் # லிங்கா


31
நல்லது நடக்கும்போது 1 மேல ஒண்ணா நடக்குது. கெட்டது நடக்கும்போதும் அப்டித்தான்.ஒண்ணு மேல ஒண்ணா நடக்கும் # லிங்கா





படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

1. உஸ்ஸ்.. வானத்தைப்போல படத்துல செந்தில் தன்னை புகழ்ந்து பேசும் பிச்சைக்காரனைவெச்சு பண்ணும் காமெடிய உல்டா பண்ணிருக்காங்கப்பா:-))


2  சூப்பர் ஸ்டாரின்  ஓப்பனிங்தாறுமாறு தக்காளிசேறு பாட்டு சீன்  60 வயசா?30 வயசா?




3
அனுஷ்கா தேவதையை தாவணி ல ரொம்ப சிம்ப்பிளா காட்டறாங்க.அதுலயும் பாப்பா சிறப்பா காட்டுது # அனுஷ்காடா





கால்ல மாட்ட வேண்டிய ரவுண்ட் கொலுசை கட் பண்ணி காதுல தொங்க விட்டிருக்கு அனுஷ்கா





அனுஷ்கா " ஏய்யா என் இடுப்பைப்பிடிக்கறே? ஏய்யா விட்டுட்டே?னு கேட்கும்போது ரஜினி எந்த பதிலுமே சொல்லலையே?




6
மோனா மோனா பாட்டில் ரஜினி கலக்கல்.ஆனா அனுஷ்கா கெட்டப் எடுபடலை.யாரு மேக்கப்விமன்?






7
ARR ரஜினி படத்துக்கு சரியா செட் ஆகலை.பிஜிஎம் சுமார்தான்.தேவா வா இருந்தா செமயா இருந்து இருக்கும்.ஆனா இன்ட்டர்நேசனல் மார்க்கெட்டிங் வேணுமே




8 அனுஷ்கா கால் மேல் கால் போட்டு டயலாக் பேசும் காட்சியில் கெண்டைக்கால் வரை பாரசூட் தேங்காய் எண்ணெய் தடவி மினுமினுப்பை ஏத்திட்டாங்க




9
சந்தானம் மேக்கப்பே இல்லாம செம யூத்தா இருக்கார்.




10
அனுஷ்கா உட்கார்ந்திருக்கும் எல்லா சீன் லயும் கால் மேல கால் போட்டு தெனாவெட்டா உக்காருது.இதுல ஏதாவது குறியீடு இருக்குமோ




11
முதல் 1 மணி நேரம் ஆட்டம் பாட்டம் சந்தானம் காமெடி ரஜினி அலப்பறைனு நல்லா தான் போகுது.இப்போ பிளாஸ்பேக் ஸ்டார்ட்




12 ரஜினி பஞ்ச் = லெட்ஸ் பிகின் # ரயில் பைட்




13
ராஜா காலத்து ரஜினி ஓப்பனிங் சீன் ல THE LEGEND OF ..,னு ஏதோ புக் படிச்ட்டு இருக்கார்.குறியீடு




14

பிளாஸ்பேக் காட்சிகளில் லைட்டா போர் அடிக்க ஆரம்பிக்குது




15
ரஜினி பஞ்ச் = SEE YOU SOON




16
HAPPY BIRTH DAY TO YOU என ரஜினி பிறந்த நாளில் ரிலீஸ் ஆன படத்தில் காட்சி வைத்தது இயக்குநர் டச் .ரசிகர்கள் கை தட்டல் அதிருது தியேட்டர்






17
ரஜினி முன் வில்லன் நிற்கும் காட்சியில் கேமரா கோணம் டாப் ஆங்கிளில் வெச்சிருக்கனும்.லோ ஆங்கிள் ல வெச்சா எடுபடாது.வில்லன் உயரம்




18 
படையப்பா வுடன் ஒப்பிடும்போது அதில் பாதி கூட வர்லை.இடைவேளை. 10மடங்கு னு சொன்ன ஷங்கர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்




19 
சூப்பர் ஸ்டாரின் ஓப்பனிங்தாறுமாறு தக்காளிசேறு பாட்டு சீன் 60 வயசா?30 வயசா?




20 
மக்களுக்காக ஏதாவது செய்யனும்னு ரஜினி 10 நிமிசத்துக்கு ஒரு டைம் சொல்லிட்டே இருக்காரு # தலைவர்டா




21
எஜமான் படத்தில் பட்டாம்பூச்சி பிடிக்கும் காட்சி போல் புயல் காற்றில் பறக்கும் பிளான் மேப் பேப்பர்சை பிடிக்கும் காட்சி




22
சின்னச்சின்ன நட்சத்திரங்கள் பிடிக்க வந்்தாய் .குட் மெலோடி. ஆனால் விஷூவல் டெம்ப்ளேட்்




23
60 வயதைக்கடந்த பின் நடித்த படத்தில் எம் ஜி ஆர் காட்டிய சுறுசுறுப்பை விட அதீத வேகத்தில் ரஜினி.இதுதான் ரஜினி




24
இஞ்சினியர் பில்டிங் கட்ட படும் சிரமங்களைக்காட்டினா அது மருமகன் தனுஷ் படம் ,அணை கட்ட கலெக்டர் படும் சிரமங்களைக்காட்டினா அதுரஜினி படம்




25
தேசியக்கொடியை ரஜினி பிடித்தபடி நிற்கும் காட்சி கலக்கல்.குறியீடு.இருவர் படத்தில் மணிரத்னம் உபயோகித்த டாப் ஆங்கிள் ஷாட் டெக்னிக்




26
பென்னி குயிக் ன் அணை கட்டிய வரலாற்றை சாமார்த்தியமான திரைக்கதையால் தியாக சரித்திரமாய் மாற்றியது அருமை




27
ரஜினி படத்துக்கே உண்டான பர பர சவால் காட்சிகள் நிறைந்த திரைக்கதையை எதிர்பார்க்காமல் பென்னி குயிக் ன் போராட்டக்கதையாகப்பார்க்கனும்







இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்



1   ஆறு  மாத காலத்தில்  பெரிய  விஐபிகள்  கால்ஷீட்டில்   ஒரு  சக்சஸ்  மசாலாப்படம்  எடுப்பது    சாதா  விஷயம்   இல்லை.  பிரமாதமான  நிர்வாகம்.

2  அணைக்கட்டு  செட்டிங்   அட்டகாசமான  ஆர்ட்  டைரக்சன்


3   அருவி  , மலை  என  கேமரா  கண்ணுக்குக்குளிர்ச்சி


4   வசனங்கள்  ரஜினி  ரசிகர்களை  உசுப்பேற்றும்  விதத்தில்  இருப்பது


5 அனுஷ்கா  , சோனாக்சி  சின்ஹா  என  2  நாயகிகள்   இருந்தும்  கண்ணியமாக  கிளாமர் கண்ட்ரோலரா  இருந்தது





இயக்குநரிடம்  சில கேள்விகள் , திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1  ரஜினி படத்துக்கு ஃபிளாஸ்பேக்  ஏன் இவ்வளவு  ஸ்லோவாக   இருக்கனும் ?  கோச்சடையான்  போல்  தீப்பொறி  பறக்கும்னு  பார்த்தா  முத்து   ஃபிளாஸ்பேக்  போல் தத்தித்தத்தி  வருதே?


2  ரயில் ஃபைட்  சீன்  எந்திரன்  ஃபைட்  போலவே   அதீத  கிராஃபிக்ஸ்  சீன் . ஏமாற்றம்  அளிக்கிறது .அதை  இன்னும்  நல்லா  ரியலிஸ்ட்டிக்கா  ரஜினி ஸ்டைலோட  காட்டி  இருக்கலாம்.


3  வில்லன்  பவர்ஃபுல்லா  காட்டப்படலை .அது  பெரிய  பின்னடைவு . பலமான வில்லனை   ஹீரோ  இன்னும் சாமார்த்தியமா  ஜெயிச்சாத்தானே  அதுல ஒரு கெத்து  இருக்கும் ? சோப்ளாங்கி வில்லனை  ஈசியா   ஹீரோ  ஜெயிச்சா  அதுல  எப்படி பாராட்டோ  , அப்ளாசோ அள்ள  முடியும் ?

4  நிலத்தின்  மதிப்பு  போல்  100  மடங்கு  பணம்  தர  ரஜினி ஒத்துக்கொள்கிறார். நிலத்துக்கு சொந்தக்காரர்களான  மக்களுக்கு அதிக  பணம்  தர்றார். இவ்வளவு  சொத்து ஏது ? என்ன தான்  ஜமீனா , ராஜாவா  இருக்கட்டுமே?

5  ஆர்  சுந்தர்ராஜன்   வில்லனாக  மாறி  மக்களுக்கு  ரஜினியை  கெட்டவனாக  காட்டும்  காட்சி அக்மார்க்  டிராமா . இது அந்தக்கால அரதப்பழசான  டெக்னிக்


6  ரஜினி கோபமாகப்பார்க்கும்  மாஸ்   பார்வை  தளபதிக்குப்பின் பெரிதாக  யாரும்  காட்டவில்லை . இந்தப்படத்திலாவது  உபயோகித்து  இருக்கலாம்






சி  பி  கமெண்ட் -
லிங்கா = ரஜினி மேஜிக் ,பென்னிகுயிக் கதை .பாட்ஷா படையப்பா அளவு இல்லை.ஆனா  முத்து  லெவல் ஹிட்  எதிர்பார்க்கலாம். குறுகிய காலத்தயாரிப்பான  பாபா , பாண்டியன்  போல்  பிளாப் ஆகிவிடும் என்ற   பலரது  யூகங்களுக்கு  ஆப்பு  -விகடன் மார்க் =42 ,ரேட்டிங் = 3 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 42



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = ஓக்கே



 ரேட்டிங்  =  3 / 5






டிஸ்கி - வசனம் அப்டேட்டில்  முதல் 19 ம் கருத்து கந்தன்  டி எல்லில் இருந்தது.நன்றி

Thursday, November 13, 2014

'லிங்கா' படம் 'முல்லைவனம் 999' படத்தின் காப்பியா? ரஜினி அதிர்ச்சி


கதைத் திருடப்பட்டதாக 'லிங்கா' படத்துக்குத் தடை கோரும் மனுவுக்கு பதிலளிக்க நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மதுரை - சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்த ரவி ரத்தினம் என்பவர், 'லிங்கா' படத்துக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "பல ஆண்டுகளாக சின்னத்திரை இயக்குநராக இருக்கும் நான், முதன்முறையாக 'முல்லைவனம் 999' என்ற திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளேன். முல்லை பெரியாறு, முல்லை பெரியாறு அணை மற்றும் அந்த அணையைக் கட்டிய பென்னி குக்கின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டது இப்படம்.
எனது படத்துக்கு வேறு யாரும் உரிமை கொண்டாடாமல் இருக்க, இந்தப் படத்தின் கதையை யூடியூப்பில் 24.2.2013-ல் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்தேன். அதன்பின், படபூஜை நடைபெற்றது. கடந்த 10 மாதங்களாக மதுரை, கேரளம், தேனி பகுதிகளில் படத்தின் ட்ரெய்லருக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. 



இந்த நிலையில், எனது கதையை 'லிங்கா' என்ற பெயரில் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பதாகவும், கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவதாகவும், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பதாகவும் அறிந்தேன். 'முல்லைவனம் 999' படத்தின் கதையை யூடியூப்பில் இருந்து திருடி 'லிங்கா'வை தயாரித்துள்ளனர். 


சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த எனது கதையைத் திருடியது சட்டப்படி குற்றமாகும். எனவே, ரஜினிகாந்த் மற்றும் லிங்கா படக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், லிங்கா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் ரவி ரத்தினம் கோரியுள்ளார். 


இந்த மனு இன்று (புதன்கிழமை) நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், லிங்கா படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தனது வாதங்களை முன்வைத்தார்.
இதையடுத்து, எதிர்மனுதாரர்களிடம் கருத்துகளை கேட்காமல் தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, டிஜிபி, தென் மண்டல ஐஜி, மதுரை மாநகர் காவல் ஆணையர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலர், மத்திய அரசு சினிமா பிரிவு முதன்மை தயாரிப்பாளர் மற்றும் லிங்கா படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதாசிரியர் பொன்குமார், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் இம்மாதம் 19-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். 



 thanx -the hindu

Saturday, December 15, 2012

ரஜினி அரசியலுக்கு வர உள்ளூர ஆசைப்படுகிறாரா?

''இனி என்ன செய்ய..?'' தவிக்கும் ரஜினி!

ஜினியின் பிறந்த நாள் என்பது, அவரது படம் ரிலீஸ் மாதிரியே பரபரப்பைக் கிளப்பும். இந்த ஆண்டு 12.12.12 என்ற அபூர்வ தேதியில் வருவதால் ரஜினிக்கே இந்த பிறந்த நாள் செம ஸ்வீட் தினம். பொதுவாக பிறந்த நாள் அன்று எஸ்கேப் ஆகிவிடுபவர், இந்தப் பிறந்த நாள் அன்று போயஸ் தோட்டம் வீட்டுக்கு வந்த ரசிகர்களை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.



 திரைப்படத் துறைக்கு ரஜினிகாந்த் வந்து 36 ஆண்டுகள் ஆகின்றன. அவருக்கு இந்த ஆண்டு 63-வது பிறந்த நாள். ரசிகர்களுக்குத் தேவை இல்லாத சிரமத்தைக் கொடுக்கக் கூடாது என்றுதான், பிறந்த நாள் அன்று ரசிகர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துவந்தார் ரஜினி. கடந்த ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிறகு ரசிகர்களைச் சந்திப்பதில் அதிக அக்கறை செலுத்தத் தொடங்கினார்.



ஒவ்வோர் ஆண்டும் ரஜினியின் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடிவந்தாலும், கடந்த ஆண்டுதான் சென்னை மாவட்டத் தலைமை ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி​யின் 62-வது பிறந்த நாள் விழாவை பெரிய அளவில் கொண்டாடினார்கள். இந்த ஆண்டும் வள்ளுவர் கோட்டத்திலேயே விழா எடுக்க, கடந்த மாதமே வேலைகளைத் தொடங்கினர். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மண்டபத்துக்கு விண்ணப்பத்தோடு வாடகையும் செலுத்தப்பட்டது. கடைசி நேரத்தில், அரசு விழாவுக்கு புக் செய்யப்பட்டுள்ளது என்று காரணம் கூறி, அனுமதி மறுத்துவிட்டனர். அதனால், ரசிகர் மன்ற விழாவை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு மாற்றினார்கள்.



கடந்த சில வருடங்களாக டிசம்பர் 12-ம் தேதி பிறந்த நாள் விழா கொண்டாடுவதைத் தவிர்த்துவந்த ரஜினியின் வீடு, இந்தத் தடவை விழாக்கோலம் பூண்டது. போயஸ் கார்டன் வீட்டில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டன. பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது.  



சென்னையில் ரஜினி இருக்கும் விவரத்தைத் தெரிந்துகொண்ட ரசிகர்கள், அதிகாலை 6 மணிக்கே போயஸ் தோட்டத்தில் குவியத் தொடங்கினர். ரஜினி வீடு இருக்கும் பகுதியில்தான் முதல்வர் ஜெயலலிதாவின் வீடும் இருப்பதால், உடனடியாகப் பாதுகாப்புப் பணியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கவே, ரசிகர்களை ரஜினி சந்திப்பதற்கு ஸ்பெஷல் மேடை தயாரானது. மின்னல் போன்று வீட்டைவிட்டு வெளியே வந்த ரஜினி, ரசிகர்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்தார்.



'சூப்பர் ஸ்டார் வாழ்க, தலைவர் வாழ்க’ என்று ரசிகர்கள் கோஷம் விண்ணைப் பிளந்தது. பட்டு வேட்டி, பட்டுச் சட்டை, கழுத்தில் ருத்திராட்ச மாலையோடு விறுவிறுவென மேடை ஏறிய ரஜினி, கைகளை தலைக்கு மேல் தூக்கிக் கும்பிட்டார். ரசிகர்களின் வாழ்த்து கோஷமும் விசில் சத்தமும் காதைப் பிளக்கவே... புன்னகையுடன்  ரசிகர்களை அமைதிப்படுத்திய ரஜினி மைக்கில் பேசினார்.  



''அனைவருக்கும் நன்றி. உங்களால் பெருமை அடைகிறேன். உங்களது பூஜை, வேண்டுதல்களால் நான் நலமுடன் இருக்கிறேன். இந்த ஏரியா செக்யூரிட்டி நிறைந்த இடம். முதல்வர் வசிக்கும் இடம். நாம் யாருக்கும் தொந்தரவாக இருக்கக் கூடாது. உங்கள் எல்லோரையும் தனித்தனியாகப் பார்த்து கைகுலுக்கி போட்டோ எடுத்துக்கொள்ள ஆசை. ஆனால் அதற்கு நேரம் போதாது. உங்களது பெற்றோரை, குடும்பத்தை அன்போடு கவனித்துக்கொள்ளுங்கள். அதுதான் எனக்கு மகிழ்ச்சி தரும்'' என்றார்.



ரசிகர்கள் கொண்டுவந்த பிரசாதங்கள், வாழ்த்து அட்டைகள், மலர்க் கொத்துகளை சந்தோஷமாகப் பெற்றுக்கொண்டார். பின்னர், பத்திரிகையாளர்களை வீட்டுக்குள் அழைத்துப் பேட்டி கொடுத்தார். ''இந்தப் பிறந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள். 'கோச்சடையான்’ படம் இன்னும் இரண்டு மாதங்களில் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருக்கிறது. இந்தப் படம் வெற்றிபெற்றால், 'பொன்னியின் செல்வன்’, 'ராமாயணம், மகாபாரதம் எல்லாவற்றையும் அருமையான படங்களாக எடுக்கும் காலம் மலரும். திரையுலகில் புதிய டிரெண்டை இது உருவாக்கும்'' என்றார்.



''பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு நீங்கள் சொல்லும் மெசேஜ்?''


''நல்லதையே நினைக்கவேண்டும். நல்லதே நடக்கும். நம்பிக்கையோடு காரியங்களில் ஈடுபட​வேண்டும். அனைவரிடமும் அன்பாக இருங்கள்'' என்றவர் மீண்டும் ரசிகர்களைச் சந்திக்க மேடை ஏறினார்.



இந்தச் சந்திப்பு முடிந்த பிறகு, 'ரஜினி வெளியே செல்கிறார்’ என்று சொல்லி, ரசிகர் மன்ற மூத்த நிர்வாகி சத்யநாராயணாவும் போலீஸாரும் ரசிகர்களை அப்புறப்படுத்தினர். அனைவரையும் போயஸ் தோட்டத்தின் நுழைவாயிலான பின்னி சாலை சந்திப்பில் கொண்டுபோய் விட்டனர். அதன் பிறகு வந்த ரசிகர்களை அனுமதிக்காமல், பின்னி சாலை சந்திப்பின் அருகிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினார்கள். ஆனாலும், 'ரஜினியைப் பார்த்துவிட்டுத்தான் போவோம்’ என்று ரசிகர்களும் அங்கேயே நின்றனர். இந்தப் பிரச்னையை ரஜினியின் காதுக்கு அவரது ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகள் கொண்டுசென்றனர். 



அதன் பிறகு, 'ரசிகர்களை ரஜினி தொடர்ந்து சந்திக்கிறார். உள்ளே விடுங்கள்’ என்று போலீஸாருக்குத் தகவல் சொல்லப்பட்டது. அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை என்று ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. ஆனால், ரஜினியின் பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுவரில் ரசிகர்கள் அதிக அளவில் ஏறி நின்றதால், சுவர் இடிந்து விழுந்தது. நல்லவேளையாக யாருக்கும் எந்தக் காயமும் இல்லை.



பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் போயஸ் தோட்டம் பகுதியில் 10-ம் தேதி இரவு போஸ்டர் ஓட்டினார்கள். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீ​ஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி... ஒட்டிய போஸ்டரையும் கிழித்துள்ளனர். 'யாரும் போஸ்டர் ஒட்டக் கூடாது’ என்று எச்சரித்து விரட்டினார்கள். ஏனாம்?


அந்த போஸ்டரில், 'தலைவா, தமிழர்களை ஏமாற்​றும் விதியை மாற்று! தமிழர்களுக்கு ஏற்றம் தரும் கொடியை ஏற்று!’ என்று குறிப்பிட்டு இருந்தனர். அதில் விதி என்ற வார்த்தையில் 'வி’-யை கறுப்பு - சிவப்பு நிறத்திலும், 'தி’-யை கறுப்பு - வெள்ளை - சிவப்பு நிறத்திலும் எழுதி இருந்தனர். இந்த பிரச்னையும் ரஜினி கவனத்துக்குப் போனதாம். அந்த வாசகங்களை திரும்பத் திரும்பப் படித்து சிரித்துக்கொண்டாராம்.



இதையடுத்து 13-ம் தேதி ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் நடைபெற்ற ரசிகர் மன்ற விழாவில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென கலந்துகொண்டார் ரஜினி. அந்தக் கூட்டத்தில் தனது அரசியல் பிரவேசம் பற்றி பரபரப்பாகப் பேசவும் செய்தார்.



''1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில் பலரும் என்னை அரசியலுக்கு அழைத்தார்கள். நான் அரசியலில் இறங்க விரும்பாமல் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டேன். அப்போதும் என்னை விடவில்லை. நான் வெளிப்படையாக யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்பதை அறிவிக்கவில்லை என்றால் கோழை என்று சொல்வார்கள் என்றார்கள். நான் பிச்சை எடுத்து வாழ்ந்தாலும் வாழ்வேனே தவிர, கோழையாக வாழ விரும்பவில்லை. அந்த சூழ்நிலை காரணமாக என்னுடைய ஆதரவை வெளிப்படையாக அறிவித்தேன். 


அதனால் ஆட்சி மாற்றம் நடந்தது. ஆதரவு கொடுத்துவிட்டேன் என்பதால் அடுத்த ஐந்து ஆண்டுகளும் அமைதியாக இருந்தேன். அதற்குப் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டேன்.



அரசியல் கட்சி நடத்துவது எளிதல்ல. எந்தத் தலைவரும் சந்தோஷமாக இல்லை. தொண்டர்கள் மட்டும்தான் சந்தோஷமாக இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் நல்லது செய்ய நினைத்தாலும் முடிவது இல்லை. ஆட்சியில் அமரவைக்கும் தொண்டர்களே... அவர்களைத் தோற்கடிக்கவும் செய்கிறார்கள்.



 ஒரு மனிதனுக்கு எப்படி தலையெழுத்து இருக்கிறதோ அதுபோலவே ஒரு மாநிலத்துக்கும் தலையெழுத்து உண்டு, ஒரு நாட்டுக்கும் தலையெழுத்து உண்டு. யார் ஆளவேண்டும் என்பது சந்தர்ப்ப சூழல்களால்தான் நடக்கும்,  தனிப்பட்ட திறமையால் நடக்காது. நேரம் என்பது முக்கியப் பாத்திரம் வகிக்கிறது. காமராஜரைவிட நல்ல தலைவர் ஒருவர் இருக்காரா? அவரையே தோற்கடித்துவிட்டனர். எல்லாம் காலம்தான்.



நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். தமிழ் மக்கள்தான் எனக்கு எல்லாம். நான் என்ன செய்யவேண்டும் என்பதை கோஷம்போட்டுச் சொல்கிறீர்கள். நான் பொய்யான வாக்குறுதி கொடுக்கத் தயார் இல்லை...'' என்று அரசியல் பேசியவர் அடுத்து 'பாபா’ விவகாரம் குறித்தும் பேசினார்.



''என்னுடைய ஒரு படம் வெளியிடுவதற்கு பிரச்னை செய்தார்கள். சிகரெட் பிடிக்கக்கூடாது என்றார்கள். நான் சினிமாவில் வீம்புக்காகவே சிகரெட் பிடித்திருப்பேன். ஆனால், அவர்கள் சொன்ன விஷயம் நல்லது. ஆனால், அதைச் சொன்னவிதம் சரியில்லை. இப்போது நான் சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டேன். சிகரெட் காரணமாகத்தான் என்னுடைய உடல் கெட்டுப்போனது. நான் குணமாகிவந்ததை மெடிக்கல் மிரக்கிள் என்றுதான் மருத்துவர்கள் சொல்கிறார்கள். அந்த மெடிக்கல் மிரக்கிள் என்பது நீங்கள் செய்த பிரார்த்தனைதான்'' என்றவர் ரசிகர்கள் சிகரெட் பிடிக்கவேண்டாம் என்பதை பிறந்த நாள் கோரிக்கையாகவும் வைத்தார்.


ரஜினிக்கு அரசியல் ஆசை இருந்தாலும் பிரச்னைகளுக்குள் எப்போதும் சிக்கிக்கொள்ள அவர் விரும்பியது இல்லை. இப்போது கோர்ட், கேஸ் என்று அலையும் விஜயகாந்த்தின் அரசியல் நிலைமையைப் பார்த்து ரஜினியின் தவிப்பு மேலும் அதிகமாகிவிட்டது. ஆனாலும் இதுவரை அரசியல் பற்றி வெளிப்படையாகப் பேசாத ரஜினி, ரசிகர்கள் மத்தியில் மனம்திறந்து பேசியிருப்பது சோர்ந்துகிடக்கும் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.



- எம்.குணா, எஸ்.முத்துகிருஷ்ணன்,


அட்டை மற்றும் படங்கள்:


சொ.பாலசுப்பிரமணியன், பா.கார்த்தி


 வெளியே செல்லாத முதல்வர்!


கடந்த மாதம் 11-ம் தேதி சிறுதாவூர் சென்ற முதல்வர் ஜெயலலிதா, அங்கு இருந்தபடியே, தினமும் போயஸ் தோட்டம் வீட்டுக்கு வந்து கோட்டைக்குச் செல்வார். மாலையில் சிறுதாவூர் சென்றுவிடுவார். இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி கிறிஸ்துமஸ் விழா முடிந்த பிறகு அவர் போயஸ் தோட்டம் வீட்டிலேயே தங்கிவிட்டார். வழக்கமாகக் கோட்டைக்குச் செல்லும் அவர், ரஜினி பிறந்த நாள் அன்று, வீட்டில் இருந்தபடியே பணிகளைக் கவனித்தாராம்.


 ஓ, நண்பனே!


ரஜினிக்கு நெருக்கமான நண்பர்கள் வட்டாரத்தில் முக்கியமானவர் மயிலாப்பூர் காந்தி. இவர்தான், கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தைக் கவனித்துவந்தார். மனதில் பட்டதை ரஜினியிடம் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். எந்த உதவியையும் ரஜினியிடம் கேட்டது கிடையாது. சிறப்பு தினங்களில் காந்தியின் வீட்டில் இருந்துதான் ரஜினிக்கு மீன் குழம்பு செல்லும். திரைப்படக் கல்லூரியில் படிக்கும்போது இருவருக்கும் இடையே உருவான நட்பு, 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. அத்தகைய நண்பரான காந்தி, கடந்த 10-ம் தேதி இரவு மாரடைப்பால் இறந்துவிட்டார். செய்தியைக் கேட்டு துடிதுடித்துப்போன ரஜினி, பிறந்த நாளுக்கு முந்தைய நாளான 11-ம் தேதி காலை மனைவி லதாவுடன் காந்தி வீட்டுக்குச் சென்று மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினார். ரஜினியின் சார்பில் அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ், கூடவே இருந்து இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளைக் கவனித்துக்கொண்டார்.



 நன்றி = ஜூ வி 



மக்கள் கருத்து 



1. ஹூம்.. செலிபிரட்டிகள் தான் தமிழகத்தை ஆள முடியும்.இதை வேறு சிலர் வக்காலத்து வாங்கு கிரார்கள். என்று மறையும் இந்த செலிபிரட்டி கிரேஸ். 




2. யார் சொன்னது ஜெயல்லிதா துணிச்சல் மிக்கவர் என்று? மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் எவ்வளவு கோலை என்று. வழக்கமாக கோட்டைக்கு செல்லும் ஜெயலலிதா, ரஜினியின் பிறந்த நாள் அன்று கோட்டைக்கு செல்லாமல், பயந்து வீட்டிலேயே வேலையை செய்துவந்தாராம்!




3. புலி வருது...புலி வருதுன்னு சொல்லியே சம்பாதித்த பணத்தை வைத்து நோகாமல் நோம்பி கும்பிட வேண்டியதுதான். தன்னால் எதையும் செய்ய இயலாது. கடவுள் கட்டளையிடும் நாளுக்காக காத்திருக்கிறேன் என்று சொல்லியே சுய முடிவெடுக்க முடியாமல் தடுமாறிவரும் பயந்தாங்கொள்ளி.



4. அரசியல் கட்சி நடத்துவது எளிதல்ல. எந்தத் தலைவரும் சந்தோஷமாக இல்லை--- ஆம் கொள்ளையடிக்க தலைவன் ஆனவனெல்லாம் சந்தோஷமாக இல்லை. சேவை செய்ய வ்ந்த நல்லகண்ணு போன்றவர்கள் ஏழ்மையிலும் சந்தோஷமாகத் தான் இருக்கிறார்கள். ரஜினி இனி வேஷம் போட வேண்டாம். படம் வரும் போது பில்டப் கொடுத்து ஏமாற்றுவது , கோழைத்தனத்திலும் கீழ்மையானது.


5. பிறந்த நாளன்று, பத்திரிகையாளர்களிடம் தனியாக 'கோச்சடையான்' பற்றி பேச்சு... ரசிகர்களிடம் 'அரசியல்' பற்றி பேச்சு... ம்ம்ம், நடத்துங்க...



ரஜினி - பிறந்த நாள் விழா - வீர உரை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzhMmfGhECdKMX7xu48S5aG4Vj0ee10mN0TtvLeooBY86pbLaD0raZUVIvIVUIZcscZke8dWCihtABUFCK4U9JNi8ihW4G87rZMIob_cG8ZEnw1KP603NGWOPM6sgiy7nuNKo-uA5_Z44/s1600/rajinikanth-birthday-special13.jpg'என்னை கோழை என்று நினைத்து விடாதீர்கள்' - ரஜினி

தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், ரஜினியின் 63வது பிறந்தநாள் விழா YMCA மைதானத்தில் நடைபெற்றது.  நடிகர் சங்க தலைவர் சரத்குமார், ராதாரவி, சந்திரசேகர், லாரன்ஸ், கலைப்புலி எஸ்.தாணு, எஸ்.வி.ரம ணன், பாண்டு, நமீதா, உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.


அவ்விழாவில் ரஜினி கலந்து கொண்டு பேசியது :

ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாள் அன்று சென்னையில் இருக்க மாட்டேன். இதற்கு முக்கிய காரணம், 22 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு துயரமான சம்பவம்தான், அப்போது நடந்த என் பிறந்தநாள் விழாவுக்கு வெளியூரிலிருந்து வந்த 3 பேர் ஊருக்கு திரும்பிச் சென்றபோது, விபத்தில் சிக்கி இறந்தனர். அதற்குப் பிறகுதான் நான் இந்த முடிவுக்கு வந்தேன்.

என் பிறந்தநாளில் வெளியூருக்கு சென்றுவிடுவேன். அங்கு தனியாக அமர்ந்து, இதுவரை நான் என்ன செய்தேன்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன்? இனி என்ன செய்யப் போகிறேன் என்று நினைத்துப் பார்ப்பேன். என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. அது ஆண்டவன் கையில் இருக்கிறது.

மிகப் பெரிய பிளான் போட்டால், அது நடக்காது. மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்று ஒருவன் நினைத்தால், அப்படியே நடந்து விடாது. அதிகமாக சம்பாதிக்கலாம். அல்லது அதைவிட குறைவாக சம்பாதிக்கலாம். இதிகாசம், புராணங்களில் கூட நினைத்தது அப்படியே நடந்து விடாது.

நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அபூர்வமாக வரும் 12.12.12 அன்று என் பிறந்தநாளில், என் உயிரினும் மேலான ரசிகர்களை சந்தித்தது அதிக மகிழ்ச்சி அளித்தது. ஆனால், இது நடக்குமா என்று சந்தேகமாக இருந்தது. காரணம், என் உயிர் நண்பன், எனக்கு அனுமான் மாதிரி துணையாக இருந்த காந்தி, 10ம் தேதி ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். 11ம் தேதி உடல் அடக்கம் நடந்தது. மறுநாள் காலையில் என் பிறந்தநாள். 11ம் தேதியே ரசிகர்களுக்கு தகவல் சொல்லியாகி விட்டது. 


ஒரு நானூறு பேர் காலையிலேயே என் வீட்டுக்கு வந்து விட்டார்கள். உடனே நான் குளித்து முடித்து, அவர்களைப் பார்க்க வந்துவிட்டேன். ரசிகர்களைப் பார்த்த பிறகுதான் மகிழ்ச்சி ஏற்பட்டது. காந்தி இறந்த கவலையில் மூழ்கியிருந்த நான், அதிலிருந்து வெளியே வர ஆரம்பித்தேன். ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும், அந்த வலியை தீர்த்திருக்க முடியாது. ரசிகர்களை சந்தித்துப் பேசியபோது, அவர்கள் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டபோது கிடைத்த சந்தோஷம் எல்லாம் ஆண்டவன் செயல்தான்.

சத்யநாராயணாவை நான் மன்றத்தை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டேன் என்றெல்லாம் சொன்னார்கள். அவர் இவ்வளவு நாட்கள் ஓய்வு எடுத்தார். காரணம், உடல்நிலை சரியில்லை. அவர் வந்தால்தான் ரசிகர்களை கட்டுப்பாடாக வைத்திருக்க முடியும் என்று அவரை வரவழைத்தேன். என் ரசிகர்கள் பவர்புல் ஆட்கள் என்பது எனக்கு தெரியும். அரசியல் கடல் மாதிரி. அதுபற்றி நான் பேச விரும்பவில்லை. 



இங்கு அ.தி.மு.க கூட்டணியில் உள்ள சரத்குமார், தி.மு.கவில் உள்ள சந்திரசேகர் எல்லாம் வந்திருக்கிறார்கள். போயஸ் கார்டனும் வந்திருக்கிறது. கோபாலபுரமும் வந்திருக்கிறது. சரத்குமார் ஜெயலலிதா மேடத்திடமோ, சந்திரசேகர் டாக்டர் கலைஞரிடமோ இந்த விழாவுக்கு செல்ல வேண்டும் என்று கேட்டிருந்தால், கண்டிப்பாக அவர்கள் அனுமதிப்பார்கள். காரணம், நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். தமிழ் ரசிகர்கள்தான் என்னை வாழ வைத்தவர்கள். அவர்கள் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும். 1996ல் எனக்கு நடந்த பிரச்னை பற்றி எல்லாருக்கும் தெரியும். அதற்குப் பிறகு என் பெயரையோ, புகைப்படத்தையோ ரசிகர்கள் பயன்படுத்தக் கூடாது என்று சொன்னேன்.

அப்போது இந்தியாவிலுள்ள மிகப் பெரிய அரசியல் தலைவர்கள், அவர்கள் பெயரைச் சொல்ல விரும்பவில்லை, அவர்கள் எல்லாரும், ‘உங்க ஆதரவு யாருக்கு? நீங்க தேர்தல் பிரசாரத்துக்கு வர வேணாம். ஆதரவை மட்டும் தெரிவிச்சா போதும்’ என்று கேட்டுக்கொண்டார்கள். நான் எந்த பதிலும் சொல்லவில்லை. அதற்காக என்னை கோழை என்று நினைத்து விடாதீர்கள். 


நான் செத்தாலும் சாவேனே தவிர, பிச்சை எடுத்தாவது வாழ்வேனே தவிர, கோழையாக மட்டும் சாக மாட்டேன். டாக்டர் கலைஞர் என்னை ஒரு நண்பராக ஏற்றுக் கொண்டவர். அதனால், டாக்டர் கலைஞரை எனது அருமை நண்பர் என்று சொல்லிக்கொள்கிறேன். அவரை பலமுறை சந்தித்துப் பேசியிருந்தாலும், அவர் என்னிடம் அரசியல் பற்றி பேசியதில்லை.

பிறகு ஒருமுறை என் படத்துக்கு ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். அதுவும் ரசிகர்களுக்கு தெரியும். ஆனால், அவர்கள் சொன்ன பாயின்ட் ரொம்ப நல்ல பாயின்ட். அதற்குப் பிறகு நான் நடிக்கின்ற படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சியை வைக்கவில்லை. அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தது வேண்டுமானால் வேறுவிதமாக இருக்கலாம். ஆனால், அவர்கள் சொன்ன கருத்து நல்ல கருத்து.  மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றுதான் ஒவ்வொரு அரசியல் தலைவரும் வருகிறார்கள். 


ஆனால், இங்கு அவர்கள் நினைத்த மாதிரி எதுவும் செய்ய முடியவில்லை. காரணம், இங்கு இருக்கும் சிஸ்டம் அப்படி. அரசியல் கட்சிகளுக்கு மிகப் பெரிய பலமே அதன் தொண்டர்கள்தான். அவர்கள் நினைத்தால், ஒரு ஆட்சியை வரவழைக்க முடியும். அதைக் கவிழ்ப்பதும் அவர்கள்தான். என் குரு சச்சிதானந்த சுவாமிகள், தலையெழுத்து பற்றி அடிக்கடி சொல்வார். ஒரு நாட்டுக்கு யார் தலைவராக வர வேண்டும்? யார் ஆள வேண்டும் என்பது தலையெழுத்துப் படியே நடக்கும். அரசியலில் நேரம் ரொம்ப, ரொம்ப முக்கியம். இல்லை என்றால், காமராஜர் மாதிரி ஒரு நல்ல தலைவர் தோற்றிருக்க முடியுமா?

உடம்பு சரியில்லாமல் இருந்தபோது, நிறைய விஷயங்களை, டாக்டர்களின் ஆலோசனைப்படி என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டார்கள். பிறகு சென்னைக்கு வந்தவுடன் எல்லா நியூஸ் பேப்பர்களையும், பேப்பர் கட்டிங்குகளையும் பார்த்தேன். ரசிகர்கள் நான் நலம்பெற வேண்டும் என்று கோயில், கோயிலாகச் சென்று வேண்டியதையும், பிரார்த்தனை செய்ததையும் படித்து தெரிந்துகொண்டேன். அவர்கள் என்மீது கொண்ட இந்த அன்புக்கு எப்படி ரியாக்ட் பண்றது என்று தெரியவில்லை. இங்கே பேசிய ராதாரவி, நான் நலம்பெற ஒரு வாரம் விரதம் இருந்ததாக சொன்னார். அதற்கு என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை.

‘சந்திரமுகி’க்கு பிறகு ‘சிவாஜி’. அதற்குப் பிறகு ‘எந்திரன்’ படத்தில் நடித்தேன். வேட்டையன் கேரக்டரும், மொட்டை பாஸ் கேரக்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதால், அடுத்து உருவாக்க இருந்த ‘ராணா’ படத்தில் வில்லனாக நடிக்க முடிவு செய்தேன். அப்போது எனக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே மருத்துவமனையில்  சேர்ந்தால், தேவையில்லாத வதந்திகள் வரும் என்று தள்ளிப் போட்டுக்கொண்டே வந்ததால் ஏற்பட்ட விளைவு இது.

நான் கண்டக்டராக இருந்தபோது, நிறைய மது அருந்தியதுண்டு. அப்போது சில நண்பர்களின் தூண்டுதலால் இது நடந்தது. சினிமாவில் நடிக்க வந்த பிறகு நல்ல சரக்கு குடித்தேன். பிறகு இடைவிடாத ஷூட்டிங்கில் கடுமையாக உழைத்ததால், மன உளைச்சல் ஏற்பட்டது. அப்போது நடந்தது பற்றியும் ரசிகர்களுக்கு தெரியும். பிறகு லதாவை திருமணம் செய்தேன். மது அருந்துவதை குறைத்தேன். 


யோகா, உடற்பயிற்சி என என் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டேன். ஆனால், அளவுக்கதிமாக சிகரெட் பிடித்தேன். அதனால் வந்த வினை தான், எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. நுரையீரல் பாதிப்பை தொடர்ந்து கிட்னியில் பிரச்னை ஏற்பட்டது. முதலில் சென்னையிலும், பிறகு சிங்கப்பூரிலும் சிகிச்சை பெற்றேன். இந்த நேரத்தில் ரசிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது இது தான், தயவுசெய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே, இப்போதே விட்டு விடுங்கள். தொடர்ந்து நான் மருந்துகளும், மாத்திரைகளும் எடுத்துக்கொண்டதால், சில மாதங்களாக உடம்பு ‘வீக்’ ஆகிக்கொண்டே வந்தது. உடனே மருத்துவ முறையை மாற்றினேன். இப்போது சொல்கிறேன். கடந்த ஓரிரு மாதங்களாக ரொம்ப நன்றாக இருக்கிறேன். டாக்டர்களே கூட, ‘இது ஒரு மிராக்கிள்’ என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்.

நான் உடல்நிலை தேறி வந்ததற்கு முக்கியமான காரணம், ரசிகர்களின் அன்பும், பிரார்த்தனையும்தான்.  என் ரசிகர்களாகிய நீங்கள் முதலில் உங்கள் தாய், தந்தையரை கவனியுங்கள். நமக்கு நம் வீடுதான் சொர்க்கம். பெற்றோரை வணங்குங்கள். அவர்களின் காலில் விழுந்து வணங்கி, அவர்களுடைய ஆசிகளைப் பெறுங்கள். எனது பிறந்தநாளை, உங்கள் பெற்றோரை வணங்கும் நாளாக நினைத்தால் அதுவே எனக்குப் போதும் " என்று பேசினார்.


நன்றி - விகடன்



http://timesofap.com/wp-content/blogs.dir/3/files/2012/10/rajinikanth-amitabh-bachchan1.jpg

Wednesday, December 12, 2012

ரஜினி - பிறந்த நாள் சிறப்புக்கொண்டாட்டம்

அபூர்வம் என்றால் ரஜினி. மயக்கத்தில் மந்திரன், இயக்கத்தில் எந்திரன், சுண்டும் ஸ்டைலில் சூப்பர் மேன். 63 வயது அபூர்வ ராகத்தின் ஆச்சர்ய கீதங்கள் இதோ..!


'எவன் ஒருவனும் உன்னை விரும்பிவிட்டால், அதை அடைவதில் இருந்து அவனை உலகின் எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது' விவேகானந்தரின் இந்தப் பொன்மொழிதான் ரஜினி வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கிறது!


உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு அடுத்ததாக இப்போதும் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்குவது நம்ம சூப்பர் ஸ்டார்தான்!

தமிழ்ப் படங்கள் ரஷ்ய மொழியில் டப் ஆகின்றன. முதல் படம் 'சந்திரமுகி'!

ரஜினி முன்பு தன் கையில் அணிந்திருந்த காப்பு, இப்போது நெல்லையைச் சேர்ந்த ரஜினி ரசிகர் திருமாறன் என்பவரிடம் இருக்கிறது!

25 தடவைகளுக்கு மேல் ரத்த தானம் செய்துள்ள ரசிகர்களுக்குத் தன் கையெழுத்துப் போட்ட சர்ட்டிஃபிகேட் தருவது ரஜினியின் வழக்கம்!

'தளபதி' காலத்தில் வலது கணுக்காலில் கறுப்புக் கயிறு கட்டியிருப்பார் ரஜினி. பிறகு, இடது கை கட்டை விரலில் தங்க வளையம். இப்போது, ருத்ராட்ச மோதிரம், ரஜினி ஸ்பெஷல்!

'செக்ஸ் என்பது பரமசுகம், ஆனந்தம். வெறுத்து ஒதுக்குற அளவுக்கு இது விஷம் இல்லை. சோஷியல் சர்வீஸ் பண்றவங்களுக்கு இது இடைஞ்சல், அவ்வளவுதான். பெண் இல்லாமல் தூங்கவே முடியாதுன்னு ஒரு நிலைமை இருந்தது. இப்போ அது குறைஞ்சிருக்கு. எதிர்காலத்தில் எப்படி மாறுமோ?'


-1981ம் வருடம் 'சாவி'க்கு ரஜினி கொடுத்த பேட்டியின் சில வரிகள் இவை.

இப்போதும் பேருந்தில் ஏற நேர்ந்தால், நின்றுகொண்டே போவதுதான் ரஜினியின் வழக்கம். அதுவும் கம்பியைப் பிடிக்காமல்தான் நிற்பார். கேட்டால், 'கண்டக்டர் காலப் பழக்கம்' என்பது பதிலாக வரும்!

மத்திய அரசு இந்திய சினிமாவைப் பற்றி ஓர் ஆவணப் படம் தயாரிக்கிறது. தமிழில் ரஜினி, கமல் இருவரையும் தேர்ந்தெடுத்து அவரவர் பற்றிக் கருத்துக் கேட்டது. கமல் சொல்லிவிட்டார். ரஜினி மறுத்துவிட்டார். 'என்னைப்பற்றி நான் சொல்ல முடியாது. என் ரசிகர்களிடம்தான் கேட்க வேண்டும்' என்று சொன்னதால், ரஜினி ரசிகர்கள் சிலர் அந்த ஆவணப் படத்தில் பேசியிருக்கிறார்கள்!

ரஜினி ஃப்ரீயாக இருந்தால், அடையாளத்தை மறைக்கும் அளவுக்குச் சின்னதாக கெட்டப் சேஞ்சுடன் வெளியே கிளம்பிவிடுவார். சமீபத்தில் அப்படிப் போய் வந்த இடம்... திருப்பதி!

மாப்பிள்ளையான பிறகு, தனுஷின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் வெள்ளித் தட்டு, வெள்ளி டம்ளர் பரிசளிப்பது ரஜினியின் வழக்கம்!

திரையுலக வெளிச்சமோ, புகழ் வெளிச்சமோ படாத ரஜினியின் மிக நெருங்கிய நண்பரின் பெயர் காந்தி. அக்கவுன்ட்ஸ் ஜெனரல் ஆபீஸில் வேலை பார்க்கும் காந்திக்குக் கிட்டத்தட்ட தினமும் ஒரு தடவை ரஜினியே போன் செய்து பேசுவார்!


தனுஷ், தன் மாமனார் ரஜினியை இப்போதும் 'சார்' என்றுதான் அழைக்கிறார். ரஜினியும் தனுஷை 'தனுஷ்' என்றே அழைக்கிறார்!

'முள்ளும் மலரும்' பார்த்துவிட்டு இயக்குநர் பாலசந்தர் எழுதிய கடிதத்தை இப்போதும் பொக்கிஷமாகப் பாதுகாக்கிறார் ரஜினி!

'எந்திரன்' படத்தில் ஒரே பாடலில் 100 விதமான ஸ்டைல்களில் தோன்றுகிறார் ரஜினி. ஒவ்வொரு தோற்றத்துக்கும் ஒவ்வொரு உடை என இந்த ஒரு பாடலில் மட்டும் மொத்தம் 100 விதமான உடைகளில் வருகிறார். ரஜினியின் விருப்பத்தின் பேரில் இந்த ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் அமைத்து இருப்பவர் பிரபுதேவா!

ஆன்மிகம் தவிர, உலகத் தலைவர் களின் வரலாறு தொடர்பான புத்தகங் களில் ரஜினிக்கு எக்கச்சக்க ஆர்வம்!

கறுப்பு நிற உடைகளை விரும்பி அணிந்த ரஜினி பிறகு வெள்ளைக்கு மாறினார். இப்போது ஓய்வு நேரங்களில் காவி, கறுப்பு, நீலம் என கலர் வேட்டிகள் அணிகிறார்!

ரஜினி நடித்த ஒரே ஆங்கிலப் படமான Blood stone-ல் ரஜினி பேசும் முதல் டயலாக், 'Your Problem is bloodstone whereas my problem is stomach'

ரஜினியின் ஆன்மிகம் பற்றிய விமர்சனங்கள் வந்தபோது அவர் சொன்னது, 'நான் ஆன்மிகவாதிதான். ஆனால், ஒரு கன்னத்தில் அறைந்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டும் அளவுக்கு ஆன்மிகத்தில் இன்னும் உயரவில்லை. அந்த மாதிரியான ஆன்மிகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை!'

கிருஷ்ணகிரி அருகே உள்ள நாச்சியார்குப்பம்தான் ரஜினியின் பெற்றோரின் பூர்வீக ஊர். அங்கு இப்போது ரஜினியின் பெற்றோர் நினைவாக மண்டபம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை நாச்சியார் குப்பத்துக்கு அடிக்கடி சென்று பார்வையிடுபவர் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ் கெய்க்வாட்!

ரஜினிக்கு மட்டன் பிடிக்கும். குறிப்பாக தலைக்கறி!

'பைரவி' படத்தின்போது ரஜினிக்கு முதன்முதலில் 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தைக் கொடுத்து விளம்பரப்படுத்தியவர் கலைப்புலி தாணு!

ரஜினிக்குப் பழக்கமான வாடகை கார் டிரைவர் இருக்கிறார். இரவு நேரங்களில் திடீரென அவருக்கு போன் செய்து வரச் சொல்லி, எங்காவது கையேந்தி பவனில் சாப்பாடு வாங்கி காருக்குள்ளேயே உட்கார்ந்து சாப்பிடுவார்!

ஒரு படத்தின் சூட்டிங் முடியும்போது அந்தப் படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குநர்களுக்கு ஒரு தொகையைப் பரிசாகத் தருவது ரஜினியின் பழக்கம். குறைந்தது 50 ஆயிரம் ரூபாய்!

ரஜினிக்குத் தெரிந்த மொழிகள் தமிழ், ஆங்கிலம், கன்னடம், மராத்தி, மலையாளம், ஹிந்தி, தெலுங்கு!

ரஜினியின் 'பில்லா' ரீ-மேக்கைத் தொடர்ந்து 'அன்புக்கு நான் அடிமை ரீ-மேக் ஆகிறது. விரைவில் அறிவிப்பு வரும்!

மார்ல்பரோ சிகரெட்டை விரும்பிப் புகைக்கும் ரஜினி, இப்போது வில்சுக்கு மாறிவிட்டார். முன்பெல்லாம் செயின் ஸ்மோக்கராக இருந்தவர் இப்போது டென்ஷன் பொழுதுகளைத் தவிர மற்ற நேரங்களில் புகைப்பது இல்லை!

ரஜினியை வைத்து அதிகப் படங்கள் இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். ரஜினி நடித்து முத்துராமன் இயக்கிய 25 படங்களில் 7 படங்கள் ஏவி.எம். தயாரிப்பு!

பொங்கல், தீபாவளி என அனைத்து விசேஷங்களிலும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தன்னுடன் இருக்க வேண்டும் என்பது ரஜினியின் சென்டிமென்ட். அவர் வரத் தாமதமானால், 'இன்னும் வரலையா?' என்று போன் செய்துவிடுவார்!

இமயமலை மட்டும் இல்லாமல், எந்த ஆன்மிக ஸ்பாட்டுக்குச் சென்றாலும் அங்கிருந்து ருத்ராட்சம் வாங்கி வந்து சேர்த்துவைப்பது ரஜினியின் பழக்கம். இப்படிச் சேர்த்த ருத்ராட்சங்கள் வீட்டில் எக்கச்சக்கமாகக் குவிந்துகிடக்கின்றன!

ரஜினி வீட்டில் இருக்கும் நேரங்களில் அவரது அறையில் 'ஓம்' என்னும் பிரணவ மந்திரம் ஒலித்துக்கொண்டே இருக்கும்!

ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் தொலைபேசிக்கு இன்னொரு இணைப்பு உண்டு. ரஜினி மண்டபத்தில் இருக்கும்போது ரசிகர்கள் யாராவது போன் பண்ணினால், அந்த இன்னொரு இணைப்பு வழியாக எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டு இருப்பார். அந்த ரசிகருடன் பேச வேண்டும் என்று விரும்பினால் அவரே லைனில் வருவார்!

ரஜினி ஒரு பாத்ரூம் பாடகர். குஷி மூடில் இருந்தால் அப்போதைய ஹிட் பாடல்களை முணுமுணுக்க ஆரம்பித்துவிடுவார். அப்படி ஒரு பாடல் மனதுக்குப் பிடித்துவிட்டால், சம்பந்தப்பட்ட இசை அமைப்பாளர், பாடகருக்கு சர்ப்ரைஸாகப் போன் போட்டுப் பாராட்டுவது ரஜினி ஸ்டைல்!

50 கோடி ரூபாய் செலவில் ரஜினி, திருவள்ளுவராக நடிக்கும் படத்தைத் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்றது. என்ன காரணமோ தெரியவில்லை, அது அப்படியே டிராப் ஆகிவிட்டது!

ரஜினியின் போயஸ் தோட்டத்து வீட்டின் பெயர் 'பிருந்தாவன்'. இது ரஜினியே ஆசையாக வைத்த பெயர்!

ரஜினியின் அனைத்துச் சந்திப்புகளையும் சுப்பையா என்பவர்தான் நிர்வகிக்கிறார். ரஜினியின் நம்பிக்கைக்கு உரிய ஊழியர் இவர்தான்!

பழமொழிகள், குட்டிக் கதைகள், பொன்மொழிகள் இவற்றுக்காகவே தனியாகப் பல நூறு புத்தகங்களை வாங்கிவைத்திருக்கிறார். அவற்றை மேடையில் பேசும்போது பயன்படுத்துவார்!

அடிக்கடி நண்பர்களின் வீடுகளுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடிப்பது ரஜினியின் பழக்கம். வாசலில் தலையில் மப்ளர் கட்டிக்கொண்டு நின்றபடி மலர்ந்து சிரிப்பார்!

தன்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள வருபவர்களுடன் குழந்தைகள் இருந்தால், குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டு போஸ் கொடுப்பதுதான் ரஜினியின் பழக்கம்!

யார் தன்னைப் பார்க்க வந்தாலும், வயது குறைந்தவர்களாக இருந்தால்கூட எழுந்து நின்று வரவேற்பது ரஜினியின் வழக்கம். வந்தவர் அமர்ந்த பின்புதான் இவர் அமர்வார்!

'தலைவா, உங்க பிறந்த நாளன்று உங்களைச் சந்திக்க ஆசைப்படுகிறேன்' என்று ரசிகர் ஒருவர் சொன்னதற்கு, ''பிறந்த நாளன்று 'நான் ஏன் பிறந்தேன்?' என்று சிந்திக்க எனக்கு அவகாசம் தேவை. அன்றைய நாளில் என் ஃபேமிலி மெம்பர்ஸ்கூட என்னைத் தனியாக விட்டுவிடுவார்கள். அன்னிக்கு வேண்டாமே ப்ளீஸ்!'' என்று பிறந்த நாள் பற்றிய வித்தியாசமான கோணம் ஒன்றைக் கொடுத்தார் ரஜினி!

ரஜினி எந்த காரில் வருவார் என்று யாராலும் தீர்மானிக்க முடியாது. அம்பாஸடர், குவாலீஸ் என்றுதான் அதிகபட்சம் செல்வார். எந்தக் காரணம்கொண்டும் விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ, பென்ஸ் போன்ற கார்களைப் பயன்படுத்த மாட்டார்!

ரஜினி சூ போடுவதை விரும்புவது இல்லை. சூட்டிங்கின்போதுகூட அவசியப்பட்டால் மட்டுமே சூ அணிவார். மற்றபடி எப்போதும் செருப்பு அணிவதுதான் தலைவரின் சாய்ஸ்!

விமானப் பயணத்தைவிட ரயில் பயணம்தான் ரஜினிக்குப் பிடித்தமானது. 'படையப்பா' வரையிலும் ரயிலில்தான் போய்க்கொண்டு இருந்தார்!

தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு வெகுகாலம் முன்பே ஒரு பெருந்தொகையை ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டுவிட்டார். அந்த வட்டிப் பணத்தில்தான் அந்தக் குடும்பங்களுக்கான விழாச் செலவுகள் நடைபெறும்!

ராகவேந்திரா மண்டபத்தில் வெயில் காலத்தில் மக்களுக்கு இலவசமாக மோரும், ஐஸ் வாட்டரும் வழங்குவார்கள். இதைத் தன் அறையில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருப்பார் ரஜினி!

எந்தக் காரணத்தைக் கொண்டும் கேரவனில் ஓய்வெடுக்க மாட்டார். காலையில் வந்தவர், மாலை சூட்டிங் முடியும் வரைக்கும் செட்டுக்கு உள்ளேதான் இருப்பார். மதிய இடைவேளையில் அங்கேயே துண்டை விரித்துப்போட்டு சற்றுக் கண்ணயர்வார்!

டான் - பில்லா, தீவார் - தீ, மர்த் - மாவீரன், திரிசூல் - மிஸ்டர் பாரத், குத்தார் - படிக்காதவன் உள்ளிட்ட அமிதாப் பச்சனின் 10 தமிழ் ரீ-மேக் படங்களில் ரஜினி நடித்திருக்கிறார்!

பாலசந்தர் மீது ரஜினி வைத்திருக்கும் மரியாதை அளவிட முடியாதது. பாலசந்தர் போன் பண்ணினால்கூட எழுந்து நின்றுதான் பேசுவார் ரஜினி!

பெங்களூர் ஃப்ளாட்டில் ரஜினி தனியாகவே இருப்பார். புத்தகங்கள், டி.வி.டி-க்கள் என ரஜினியின் தனிமை தவம் பெரும்பாலும் இங்கேதான்!

ரஜினியின் போயஸ் வீட்டுக்கு அருகே ஒரு காலி மனை கிடந்தது. ஐஸ்வர்யா திருமண வரவேற்பு அங்குதான் நடந்தது. இப்போது அந்த இடத்தில் ஒரு கெஸ்ட் ஹவுஸ் கட்டப்பட்டு இருக்கிறது. விருந்தினர்களை அங்குதான் சந்திக்கிறார்!

யாரிடம் பேசினாலும் யாரையும் குறை சொல்லிப் பேசவே மாட்டார். சமீப காலங்களில் இதை மேலும் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார்!

கேளம்பாக்க வீட்டுக்கு ரஜினியைப் பார்க்க யார் சென்றாலும், அவர் அங்கு இருந்தாலும், இல்லை என்றாலும் முதலில் இளநீர் வந்துவிடும்!

'ஃபைன், குட்' இவைதான் ரஜினியின் உதடுகள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகள்!

முன்பு எல்லாம் நெருங்கிய நபர்கள் இறந்துபோனால் அவர்களின் துக்கத்துக்குப் போக மாட்டார். நடிகர் ஜெய்சங்கரின் மரணத்துக்குக்கூடப் போகவில்லை. 'அவர்களின் சிரித்த முகம்தான் எனக்கு நினைவில் இருக்க வேண்டும்' என்பதுதான் காரணம். பிற்பாடு இந்த நிலையை மாற்றிக்கொண்டார்!

ரஜினி இதுவரை நடித்ததிலேயே அவருக்கு மிகவும் பிடித்த படம் 'முள்ளும் மலரும்'!

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பிறந்த நாளுக்குப் பிறகு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தும் திட்டம் ரஜினிக்கு இருக்கிறது. இதற்கான ஆஃப் த ரெக்கார்ட் அழைப்புகள் சென்றுவிட்டன!

சிகரெட் சர்ச்சைகளுக்காக அன்புமணி ரஜினியிடம் பேசியபோது பேச்சு நீண்டு ஜாலியாக, 'புரவிப்பாளையம் என்ற ஊரில் சாமியார் ஒருவரின் சமாதி இருக்கிறது. அங்கு அவசியம் ஒருமுறை போய் வாருங்கள்' என அன்புமணிக்கு ஆலோசனை சொன்னாராம் ரஜினி!

'ஏன் இவ்வளவு சிம்பிளாக இருக்கிறீர்கள்?' என்று மகள்கள் கேட்டால், 'கண்ணா... உங்க அப்பா சூப்பர் ஸ்டார். நீங்க எப்படி வேணும்னாலும் இருக்கலாம். எங்க அப்பா சாதாரண போலீஸ்காரர். நான் இப்படித்தான் இருப்பேன்' என்பார்!

சினிமா நகைச்சுவையில் ரஜினிக்கு இஷ்டமானவர் வடிவேலு. அவ்வப்போது அவருடன் பேசிச் சிரிப்பார். 'உங்ககிட்ட பேசினா, எனக்குப் புதுசா ரீ-சார்ஜ் பண்ணின மாதிரி இருக்கு வேலு' என்பார்!
ரஜினி சொன்ன 12 செய்திகள்!


சென்னை: தனது பிறந்தநாளை பெற்றோரை வழிபடும் நாளாக கொண்டாடுமாறு தனது   ரசிகர்களுக்கு பிறந்தநாள் செய்தியாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக தனது பிறந்த நாளன்று தனிமையில் கழிக்கும் ரஜினிகாந்த்,இன்று தனது   பிறந்த நாளையொட்டி ரசிகர்களை சந்தித்தார்.



நிருபர்களும், டி.வி.கேமராமேன்களும் போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டு  முன்னால் கூடி நின்றனர். திடீரென்று அவர்களை ரஜினி வீட்டுக்குள் அழைத்தார்.  அப்போது நிருபர்கள் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள். பதிலுக்கு ரஜினி  நன்றி கூறினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த்,"என் பிறந்தநாளையொட்டி ரசிகர்கள்  வாழ்த்து சொல்ல வீட்டுக்கு வந்தார்கள். அவர்களை சந்தித்தேன். மகிழ்ச்சியாக உள்ளது.  எனது பிறந்த நாள் 12.12.2012 தேதியில் வந்து இருப்பது பெரிய விஷயம்.

என்னுடைய பிறந்தநாளை ரசிகர்கள் அவர்களின் பெற்றோரை வழிபடும் நாளாக  கொண்டாடினால் இன்னும் சந்தோஷப்படுவேன். அப்பவும், இப்பவும், எப்பவும்  சொல்வேன், என்னைவிட பெற்றோர்கள்தான் முக்கியம். அவர்களை நன்றாக கவனித்துக்  கொள்ளவேண்டும்.

‘கோச்சடையான்’ படம் இன்றைய சினிமா தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டம். இப்படம்  மட்டும் வெற்றிப்பெற்றால் இனி ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச படங்களும்  இதே தொழில்நுட்பத்தில் வெளிவந்து வெற்றி பெறும்.

நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். எப்போது  வருவீர்கள் என்று கேட்கிறீர்கள். அதுபற்றி எத்தனையோ தடவை சொல்லிவிட்டேன்.  இப்போது சொல்வதற்கு ஒன்றும் இல்லை"என்றார்.



டிசம்பர் 12-12-12 அன்று ரஜினிக்கு பிறந்தநாள் தேதி, மாதம், வருஷம் எல்லாமே 12-ஆக அமைந்தது தனிச்சிறப்பு ஆகவே ரஜினியைப்பற்றி அவரே சொன்ன 12-செய்திகள் இங்கே...

தெய்வம்...

" பெங்களூர்ல இளமையான காலத்துல ஒரு தடவை வீட்டுல இருக்குறவங்க எல்லாரும் மோசமா திட்டுனாங்க. மனசே வெறுத்துப் போச்சு.. பேசாம தற்கொலை பண்ணிக்கிற முடிவுக்கு வந்தேன். சாகறத்துக்கு முன்னாடி எனக்கு ரொம்ப பிடிச்ச ஃப்ரெண்ட் ஒவியர் ரமேஷை பார்க்கனும்னு தோணுச்சு. அவரோட வீடுதேடி போனேன்.. அவர் அங்கே இல்லை. அனுமார் மலைக்கோயிலுக்கு போனதா சொன்னாங்க. தேடிப்போனேன் மலையில் இருக்குற பாறையில விதவிதமா ஒவியம் வரைஞ்சுகிட்டு இருந்தார். அந்த படங்கள்ல தாடிவச்ச ஒருத்தர் என்னை வெறிச்சு பார்த்து சிரிச்சார். 'உன்னை யாருமே புரிஞ்சுக்கலையா.. கவலையை விடு.. எல்லாத்தையும் என்கிட்டே விட்டுவிடு.. நான் பார்த்துக்கறேன்'னு பேசினார். பிரமிச்சுப் போயிட்டேன். ரமேஷிடம் 'இவர் யாருப்பா'னு கேட்டேன் 'அடப்பாவி இதுகூடவா தெரியாது.. இவர்தான்டா ராகவேந்திரர்'னு சொன்னார்!

பெற்றோர்...

எப்போ பார்த்தாலும் என்னோட அம்மா ராம்பாய் 'வெயிலுல அலையாதே.. மறக்காம தலைக்கு எண்ணேய் தேய்ச்சு குளி.. நல்லா சாப்பிடு... வேலையில்லாட்டி பேசாம வீட்டுல படுத்து தூங்கு..'னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க! என் வாழ்க்கையோட எதிர்காலத்தைவிட என் உடம்புமேல ரொம்ப அக்கறை. அப்பா கோபக்காரர்.. படிக்கிறப்போ பிடிவாதம் பிடிப்பேன். அதனால் அப்பாவிடம் நிறைய அடிவாங்கிட்டு அப்படியே துங்கிடுவேன்.

மறுநாள் எதைக்கேட்டு அடம்பிடிச்சோம்... எதுக்காக உதை வாங்கினோம் என்பதே மறந்து போயிடும்.

குருநாதர்....

'எம்.எஸ்.வி-யை சந்திக்கறதுக்கு முன்னாடி சோத்துக்கு வழியில்லை.... சந்திச்ச பின்னாடி சோறுதிங்க நேரமில்லை'னு எம்.எஸ்.விஸ்வநாதனை பத்தி பேசறபோது வாலி சார் அடிக்கடி சொல்லுவார். அப்படித்தான் நானும் கே.பி-சாரைபத்தி சொல்லுவேன். எனக்குள்ளே இருக்குற நடிகனை முதன்முதலா கண்டிபிடிச்ச கடவுள். அப்புறம்தான் உலகத்துக்கே நான் தெரிஞ்சேன். என்னை தெரியவச்சார்! 'காமிரா முன்னாடி நடி... பின்னாடி நடிக்காதே..'னு சொன்னதை இன்னிக்கு வரைக்கும் கடைபிடிச்சுட்டு வர்றேன்.

கண்டக்டர்....

கர்நாடகா ட்ரான்ஸ்போர்ட்ல கண்டக்டரா வேலை பார்த்தப்போ ராஜ்பகதூர் நண்பனா கிடைச்சான். இப்போகூட ரெஸ்ட் கிடைச்சு பெங்களூரு போனால் வீட்டுலகூட அதிகம் இருக்க மாட்டேன். நண்பர்களோட பொழுது போக்குவேன். இப்போ பணம், பேர், புகழ் எல்லாம்  இருக்கு.. ஆனா அப்போ இருந்த சந்தோஷம், நிம்மதி இப்போ டெபனேட்டா இல்லை.

வீடு...

ராயப்பேட்டையில விட்டல் வீட்டு மாடியில் குடியிருந்தேன். அப்பவே அந்த ஹவுஸ்ஒனர் பாத்திமா அக்தர் நல்லா பழகுவாங்க. இப்போ நான் போயஸ் கார்டன்ல வசிக்கிற வீடு அந்தக்காலத்துல அவங்களுக்கு சொந்தமானது. நான்தான் விலைக்கு வாங்கினேன் இப்போ அதுக்கு பிருந்தாவன்னு பேர் வச்சிருக்கேன்.

மனைவி...

திருமணம் முடிஞ்ச பிறகுதான் 'ஏண்டா இவ்வளவு லேட்டா கல்யாணம் செய்தோம்னு ஃபீல் செய்யுற அளவுக்கு லதா அன்பா இருந்தாங்க. என்னோட முன்கோபம், சினிமா தொழில்ல இருக்குற ப்ராப்ளம் எல்லாத்தையும் நல்லா உணர்ந்து உறுதுணையா இருக்குறாங்க. அம்மாவுக்கு என்னோட ஆரோக்கியம் முக்கியம்னா, லதாவுக்கு என்னோட எதிர்காலத்து மேல் ரொம்ப ரொம்ப அக்கறை.

நட்பு...

நான் கஷ்டபட்டபோதும் சரி... இப்போ வசதியா இருக்கும் போதும் சரி என்மேல ஒரே மாதிரி அன்பு செலுத்துற ராஜ்பகதூர் ஆச்சர்யமான நண்பன். அதுபோல இன்ஸ்ட்டியூட்ல படிச்சப்போ பழகிய நண்பர்கள் எல்லாருமே எனக்கு இப்பவும் நல்ல ப்ரெண்ட்ஸ்! சினிமாவுல, அரசியலுல எல்லாத்துலயும் நண்பர்கள் நிறையபேர் இருக்காங்க!

வாகனம்...

நான் பெங்களூர்ல கண்டக்டரா வேலை செஞ்ச பஸ் நம்பர் 10ஏ.  சென்னையில முதன்முதலா வாங்கின ஸ்கூட்டர் டிஎன்ஆர்- 4306, அப்புறம் பியட் கார் இப்போ இன்னோவா!

பட்டம்...

'திரிசூலம்' வெள்ளிவிழா பங்ஷனுக்கு மதுரைக்கு போயிருந்தேன். அப்போ எல்லாரும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போய் அவங்க அவங்க பேரைச்சொல்லி சாமிகிட்டே அர்ச்சனை செஞ்சாங்க. குருக்கள் என்னோட நடத்திரத்தை கேட்டார் 'தெரியாது சாமீ..'னு சொன்னேன். இப்போதான் உண்மை தெரியுது மக்கள் கொடுத்து இருக்குற பட்டம்தான் (சூப்பர்ஸ்டார்) என்னோட உண்மையான  நட்சத்திரம்னு!

மேக்கப்....

'அபூர்வராகங்கள்' படத்துல முதன்முதலா மேக்கப் போட்ட சுந்தரமூர்த்திதான் 'குசேலன்’வரை எனக்கு மேக்கப் போட்டவர்.

நடிப்பு...

படப்பிடிப்புக்கு போகும்போது முக்கியமான காட்சிகள் இருந்தால் என்னோட டயலாக்கை முதல்நாளே வாங்கிட்டுப் போய் வீட்டுல ரிகர்சல் செய்வேன். வசனத்தை ஷூட்டிங் ஸ்பாட்டுல மனப்பாடம் செய்யத் தெரியாம அப்படி செய்யறது இல்லை. மறுநாள் தேவையில்லாம நேரத்தையும், ஃபிலிமையும் வேஸ்ட் பண்ணாம நடிகனும்னு ஒரு அக்கறை அவ்வளவுதான்!

ரசிகர்....

'அபூர்வ ராகங்கள் ' படத்தை சென்னை கிருஷ்ணவேணி தியேட்டர்ல முதன்முதலா பார்த்தேன். நான் நடிச்ச காட்சியை திரையில பார்த்ததும் சீட்டுல உட்கார்ந்து இருந்த ஒரு சிறுமி என்னை திரும்பி பார்த்தார். படம் முடிஞ்சி வெளியில வரும்போது என்கிட்டே ஓடிவந்த சிறுமி சினிமா டிக்கட் பின்னாடி கையெழுத்து கேட்டார்.. நான் போட்டேன். எனக்கு கிடைச்ச முதல் ரசிகை அந்த சிறுமிதான்.  அவர் எங்கேனு தேடிக்கிட்டே இருக்கேன். நான் போட்ட முதல் ஆட்டோகிராப் சினிமா டிக்கட் பின்னாலதான்!
-திருவாரூர் குணா

எம்.குணா


படங்கள் : ஸ்டில்ஸ் ரவி


ஜினி இப்போது இந்தியாவின் சூப்பர் ஸ்டார்! கோடம்பாக்க சாதனைப் புத்தகத்திலும் 'மேனேஜ்மென்ட்’ பாடப் புத்தகங்களிலும் இடம்பெற்று இருக்கும் ரஜினியின் வாழ்க்கை எப்போதுமே ஒரு 'ஓப்பன் புக்’!


 இப்போதும் குருநாதர் பாலசந்தர் தொலைபேசியில் லைனுக்கு வந்தால், எழுந்து நின்றே பேசுவார். 'பைரவி’ படம் மூலம் தன்னை ஹீரோவாக அறிமுகம் செய்த கலைஞானம் வந்தால், வாசலுக்கே வந்து வரவேற்று அமரவைப்பார். தான் நின்றுகொண்டே பேசுவார். வாசல் வரை சென்று வழியனுப்புவார்.


'என்னுடன் வா... தனியாகத் தொழில் வைத்துத் தருகிறேன்!’ என்று பல முறை அழைத்தும் வராததாலேயே, ரஜினிக்கு அன்றும் இன்றும் என்றும் நெருக்கமான நண்பராக இருக்கிறார் ராஜ்பகதூர். 58-வயது வரை கண்டக்டராகப் பணிபுரிந்து சமீபத்தில்தான் ஓய்வு பெற்றிருக்கிறார் ராஜ்பகதூர்.


'பாபா’ படம்பற்றி எதிர்மறை விமர்சனங்கள் கிளம்பிய சமயம், 'சூப்பர் ஸ்டார் அவ்வளவுதான்’ என்று சினிமா உலகப் புள்ளிகள் சிலர் பார்ட்டி வைத்துக் கொண்டாடியதைக் கேள்விப்பட்டு, மிகவும் சங்கடப்பட்டுப் போனார். அவர்களுள் தான் நெருக்கமான நண்பர்களாக நினைத்துப் பழகிய சிலரும் இருந்ததே, வருத்தத்துக்குக் காரணம்.



'அன்புள்ள ரஜினிகாந்த்’, 'வள்ளி’ பட இயக்குநர் கே.நட்ராஜ், அபரிமிதமான அன்பு காரணமாகத் தன் மகளுக்கு 'ரஜினி’ என்று பெயர் சூட்டியதில் மிகவும் நெகிழ்ந்துபோனார் ரஜினி. சமீபத்தில் நடிகர் விஷ்ணு - 'ரஜினி’ திருமணத்தில் கலந்துகொண்டு ரஜினி வாழ்த்தியதற்கு அந்தப் பிரியமே காரணம்.



'என் வாழ்க்கையில் வந்த பெண்களில் ஸ்ரீப்ரியாவுக்கு முக்கியமான இடம் உண்டு’ என்பார். இடைவிடாத படப் பிடிப்பு தந்த அழுத்தம் காரணமாக, ஒரு சமயம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டபோது, அருகில் இருந்து பார்த்துக்கொண்டவர் ஸ்ரீப்ரியா.



அசைவ உணவுகளை வகை பிரித்து வேட்டையாடுவார். 'இந்தந்த ஹோட்டலில் இன்னின்ன அயிட்டங்கள் வாங்கி வா!’ என்று வரவழைத்து ருசிப்பார். ஆனால், அதெல்லாம் அப்போது. சிங்கப்பூர் சிகிச்சைக்குப் பிறகு, காலையில் பழங்கள், அதிகபட்சம் இரண்டு இட்லி. மதியம் கொஞ்ச மாக சாதம், இரவு எண்ணெய் இல்லாத சப்பாத்தி. அவ்ளோதான்.


நண்பர் கிட்டுவின் 'டி போர்ட்’ அம்பாஸடர் காரில்தான் அடிக்கடி ஊர் சுற்றுவார். நினைத்தால் சட்டென்று காரில் ஏறி ஊரைவிட்டுத் தள்ளிச் சென்று, எங்காவது ஒரு டீக்கடை பெஞ்ச்சில் டீ கிளாஸும் செய்தித்தாளு மாக அமர்ந்துகொள்வார். சுற்றிலும் இருப்பவர்கள் பேசுவதை உன்னிப்பாகக் கவனிப்பதுதான் பிடித்த பொழுதுபோக்கு. சமீபமாக இன்னோவாவில் பயணிக்கிறார்.


'எந்திரன்’ படம் வெளியானபோது தன்னைச் சந்திக்க வந்த நண்பர்களிடம் 'எம்.ஜி.ஆரோட 'உலகம் சுற்றும் வாலிபன்’ மாதிரி 'எந்திரன்’ படம் எல்லா இடத்துலயும் ரீச் ஆகியிருக்கா? என்ன பேசிக்கிறாங்க?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தார். கேள்விக்கான காரணம் புரியாமல் திகைத்து நின்றிருக்கிறார்கள் நண்பர் கள்.



'என் பெங்களூரு அண்ணன் சத்திய நாராயணா. சென்னை அண்ணன் எஸ்.பி.முத்துராமன்!’ - இயக்குநர் முத்துராமன் மீது அந்த அளவுக்குப் பாசம் காட்டுவார்.



எட்டு எட்டாக வாழ்க்கையைப் பிரித் துக்கொள்ளச் சொன்னவர், தனதுநண்பர் களை நான்கு வகையாகப் பிரித்து வைத்திருக்கிறார். பெங்களூரு போக்கு வரத்துக் கழக நண்பர்கள், சென்னை திரைப்படக் கல்லூரி நண்பர்கள், சினிமா உலக நண்பர்கள், இமயமலை யாத்ரா நண்பர்கள்.


படங்களில் நடிக்காதபோது மிகவும் ரிலாக்ஸாக நண்பர்களிடம் அரட்டை அடித்தபடி உற்சாகமாக நேரம் செலவழிப் பார். ஆனால், தான் நடிக்கும் பட வேலைகள் ஆரம்பித்தது முதல் படம் வெளியாகி ரிசல்ட் தெரியும் வரை டென்ஷன்... டென்ஷன்... டென்ஷன் மட்டுமே.


ரஜினியின் செல்போன் எப்போ தும் அவருடைய உதவியாளர் சுப்பையாவிடம் இருக்கும். ரஜினி யின் எண்ணுக்கு வரும் அழைப்பு களுக்கு முதலில் காது கொடுப் பதும் சுப்பையாதான். ரஜினி பேச விரும்புபவர்களை சுப்பையா லைனில் பிடித்துக் கொடுத்த பிறகு, 'வணக்கம்... நான் ரஜினி பேசுறேன்!’ என்று கணீரென ஆரம்பிப்பார் ரஜினி.


கடவுளுக்கு இணையாக ரஜினி மனதில் போற்றுபவர் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர். தன்னுடைய பூஜை அறையில் தேவர் படத்தை வைத்து வணங்கி வருகிறார்.


சென்சேஷனல் இளைஞர்களை வீட்டுக்கு வரவழைப்பார். நீண்ட நேரம் மனம்விட்டுப் பேசி, புகைப்படங்கள் எடுத்து என... அந்த நாள் முழுவதும் அவர்களுக்குத் தான் டெடிகேடட்.



தான் நடித்த படங்களில் ரஜினி யின் மனதுக்கு நெருக்கமானது 'ராகவேந்திரா’. மிகவும் பிடித்தது 'அண்ணாமலை’, 'பாட்ஷா’. அவரே ஒரு ரஜினி ரசிகனாக ரசிப்பது 'எந்திரன்’.



ப்படி ஒரு விழா இதுவரை தமிழகத்தில் நிகழ்ந்தது இல்லை!


அரங்கமெல்லாம் மக்கள் வெள்ளம், ஆறரை மணி நேரம், ரஜினி முதல் ரஹ்மான் வரை, பாலசந்தர் முதல் இளையராஜா வரை, மம்மூட்டி முதல் மோகன்லால் வரை ஒட்டுமொத்தத் தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள். கமல்ஹாசன் என்பதாலேயே இது சாத்தியமாகி இருக்கிறது. கமல் 50 தொடரும் ஒரு சரித்திரம் என்ற கமலின் கலையுலகப் பொன்விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விஜய் டி.வி. நிகழ்த்திய விதம் வியப்பூட்டியது!


பாலசந்தரின் பாதம் தொட்டு ஆசி வாங்கிய கமலை, கட்டிப் பிடித்துக்கொண்டார் ரஜினி. பதிலுக்கு கமல் ரஜினிக்கு முத்தம் கொடுக்க, அருகில் இருந்த நடிகைகளிடம், ''உங்களுக்குக் கொடுத்த முத்தங்களைவிட இந்த முத்தம்தான் பெஸ்ட்!'' என்று ரசித்துச் சிரித்தார்!



நெகிழ்வாய் இருந்தார் கே.பாலசந்தர் ''கமலுக்கு நான்தான் குருனு எல்லாரும் சொல்றாங்க. ஆனா, என் இடத்தில் ஒரு குப்பனோ சுப்பனோ இருந்திருந்தால்கூட கமல் இந்த உயரத்தைத் தொட்டிருப்பார். அவர் ஒரு யுக புருஷன். 'தசாவதாரம்' வரை சாதித்துவிட்டார். அதையெல்லாம் மிஞ்ச அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதுதான் என் கவலை. கமல் அதையும் மிஞ்சிக் காட்டுவார். அவர் என்றுமே 'மை டியர் ராஸ்கல்'தான்!'' என்றார் உணர்வுபூர்வமாக.


ராதிகா பின்னிவிட்டார். ''காதல் காட்சிகளில் நடிக்கும்போது கமல் உண்மையிலேயே காதலிக்கிற மாதிரியே இருக்கும். ஆனா, ஹீரோயின்களுக்குப் பதிலா அங்கே ஒரு எருமை மாடு இருந்தாக்கூட அதையும் இவர் காதலோடு பார்ப்பார்னு அப்புறம்தான் எனக்குப் புரிஞ்சது!'' என்றவர், கமலுடன் நடித்த ஹீரோயின்கள் 12 பேரை மேடையேற்றினார். அப்போது கமல்



''சினிமாவில் ஹீரோ - ஹீரோ யின் காதல் பண்றதை வெளியே இருக்கிறவங்க பொறாமையாப் பார்ப்பாங்க. ஆனா, அதுல இருக்கிற கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும். பல சமயம் ஹீரோயின்களைத் தம் பிடிச்சுத் தூக்க முடியாமக் கீழே போட்டிருக்கேன்!'' என்றார். உடனே ராதிகா, ''அப்படி எத்தனை பேரைப் போட்டிருக்கீங்க?'' என்று அப்பாவியாகக் கேட்க, முதலில் அதிர்ந்து பிறகு குபீரெனச் சிரித்துவிட்டார் கமல் (மொத்த அரங்கமுமே!) ''இல்லைங்க, நான் போட்டது கொஞ்ச பேரைத் தான். தானா கீழே விழுந்தவங்கதான் நிறைய!'' என்று 'ஒரு பொருட் பன்மொழி'யாகச் சமாளித் தார் கமல்.



ஹீரோயின்கள் சங்கமம் முடிந்தவுடன் சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்தது பிரபுதேவா. ''கமல் சாருக்காக நடக்கும் விழாவில் அப்பாவோடு சேர்ந்து ஆடணும்னு தோணுச்சு. அப்பாகிட்ட கேட்டேன். 'எனக்கு உடம்பு சரியில்லையே டா'ன்னாரு. 'அப்பா... கமல்ப்பா'ன்னேன். உடனே 'ஓ.கே!' சொல்லிட்டாரு!'' என்றவர், தன் அப்பா மாஸ்டர் சுந்தரத்துடன் 'காசு மேல காசு வந்து' எனத் தொடங்கி ஏழெட்டுப் பாடல்களுக்குக் கலக்கல் காக்டெயில் நடனம் ஆடினார். பாடலுக்கு இடையே ஒற்றை ரோஜாவை கமலிடம் பிரபுதேவா கொடுக்க, கட்டியணைத்து நெகிழ்ந்தார் கமல்.


மலையாள தேசத்தில் இருந்து மம்மூட்டி, ''கமல், எங்கள் மண்ணுக்கும் சொந்தக்காரர். எனக்கும் கமலுக்கும் ஒரு சவால் இருக்கிறது. நானும் அவரும் இதுவரை சிறந்த நடிப்புக்காக ஆளுக்கு மூன்று தேசிய விருதுகள் வாங்கியிருக்கோம். நான்காவது முறையா விருது வாங்கப்போவது யார் என்பதில் எங்கள் இருவருக்கும் ஆரோக்கியமான போட்டி நடக்கிறது!'' என்று முடித்தார்.


மைக் பிடித்தார் ரஜினி. சட்டென அரங்கில் ஓர் அமைதி. '' 'அபூர்வ ராகங்கள்' படத்துக்குப் பிறகு மூணு படங்களில் நானும் கமலும் சேர்ந்து நடிச்சோம். அப்பவே ஃபீல்டுல கமல் பெரிய பிஸ்தா. 'இந்தப் படத்துல ரஜினியைப் போட வேண்டாம்'னு கமல் ஒரு வார்த்தை சொல்லி இருந்தார்னா, கண்டிப்பா எனக்கு அந்த வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கும். ஆனா, கமல் அப்படிச் சொல்லலை. கமல்தான் என்னோட கலையுலக அண்ணா.



நீங்களெல்லாம் கமல் படங்களைப் பார்த்து நடிக்கக் கத்துக்கிட்டேன்னு சொன்னீங்க. நான் கமல் நடிக்கிறதையே பார்த்துப் பார்த்து நடிக்கக் கத்துக்கிட்டவன். 'அவர்கள்' படத்தோட ஷூட்டிங் நடந்துட்டு இருக்கும்போது எனக்கு ஷாட் இல்லைன்னா, நைஸா செட்டைவிட்டு வெளியே கிளம்பிடுவேன். ஒருநாள் கே.பி சார், 'எங்கேடா போற... தம்மடிக்கவா?'ன்னு கேட்டார். எதுவும் சொல்லாம நின்னேன். 'உள்ளே போடா. கமல்னு ஒருத்தன் அங்கே நடிச்சுட்டு இருக்கான்ல. அவனைப் பாருடா. அவன் எப்படி நடிக்கிறான்னு பாரு. கொஞ்சமாச்சும் கத்துக்கோ'ன்னு சொன்னாரு. அதுக்கப்புறம் கமல் நடிக்கும்போது நான் வெளியே போனதேஇல்லை.



கமல் மட்டும் எப்படி இப்ப டின்னு நான் அடிக்கடி யோசிப்பேன். அதுக்குக் காரணம், அவருக்கு கலைத்தாயின் அம்சம் இருக்கு. அதனால்தான் கலைத்தாயே அவரைப் பல ரூபங்களில் ரசிக்கிறாள். இங்கே நான், மோகன்லால், மம்மூட்டி, வெங்கடேஷ், சரத்குமார் மாதிரியானவங்களை கலைத் தாய் கையைப் பிடிச்சு அழைச்சுட்டுப் போறா. ஆனா, கமலை மட்டும் தோள்ல தூக்கிவெச்சு மார்போடு அணைச்சுட்டுப் போறா. நான் கலைத் தாய்கிட்டே கேட்டேன், 'ஏம்மா... இது உனக்கே நியாயமா? நாங்களும் உன் குழந்தைங்கதானே? அப்புறம் ஏன் இந்தப் பாரபட்சம்?'னு. அதுக்கு கலைத் தாய், 'ரஜினி! நீ போன ஜென்மத்துலதான் நடிகனாகணும்னு ஆசைப்பட்டே.


ஆனா, கமல் ஒரு ஜென்மத்துல டான்ஸ் மாஸ்டர், இன்னொரு ஜென்மத்துல அசிஸ்டென்ட் டைரக்டர், வேறொரு ஜென்மத்துல நடிகர், இன்னும் ஒரு ஜென்மத்துல டைரக்டர்னு கடந்த 10 ஜென்மங்களாப் போராடிட்டு இருக்கான். அதனாலதான் கமலைத் தோளில்வெச்சுக் கொண்டாடு றேன்!'ன்னு சொன்னா. கமல் வாழ்ந்த காலத்தில், கமல் நடித்த காலத்தில், நானும் வாழ்ந்தேன், நானும் நடித்தேன்கிற பெருமையே எனக்குப் போதும்!'' என்று படபடவெனப் பேசி ரஜினி அமர, அரங்கமே ஒரு கணம் ஸ்தம்பித்து, சுதாரித்து, கைத்தட்டல்களால் பிரதேசத்தையே அதிரவைத்தனர்.


ஏற்புரைக்கு எழுந்த கமல் முகத்தில் அத்தனைக் கலவையான உணர்ச்சிகள். ''இங்கே வர்றதுக்கு முன்னாடி ரெண்டு விஷயங்களை முக்கியமா முடிவு பண்ணிட்டு வந்தேன். 'சுருக்கமா பேசணும்... அழாமப் பேசணும்'னு. ஆனா, அது ரெண்டுமே சாத்தியமில்லைன்னு நினைக்கிறேன்.


நான் சினிமாவுக்குள் நுழைந்தபோது போட்டுவெச்சிருந்த லிஸ்ட்ல என்னென்ன செஞ்சிருக்கோம்னு பார்க்கும்போது முழுசா எதுவுமே முடிக்கலைன்னு தோணுது. பாதியைக்கூட இன்னும் செய்யலை. இது அவையடக்கம் இல்லை... உண்மை! எனக்கான நேரம் குறைவு, செய்ய வேண்டிய வேலை அதிகம் இருப்பதை இந்த விழா உணர்த்துகிறது.


சினிமாவில் என்னையும் ரஜினியையும் போல நண்பர்கள் யாரும் கிடையாது. ஒரு சக நடிகனைப்பத்தி ஒரு பொது மேடையில் மனசுவிட்டு எவன் இப்படிப் பேசுவான்? அந்த மனசு ரஜினிகிட்ட இருக்கு. தன்னைத் தாழ்த்தி என்னை உயர்த்திப் பேசி இருக்காரு. நான் ஒரு சவால் விடுறேன். தமிழ் சினிமாவில் ரெண்டு ஹீரோக்கள் இருந்தாங்கடா. கமல் - ரஜினின்னு. அவங்களைப் போல நட்பு சினிமாவில் யார்கிட்டே இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்.




நிச்சயம் அப்படி யாரும் இருக்க மாட்டாங்க. இதுக்கு முன்னாடியும் கிடையாது... இனிமேலும் அப்படி ஒரு நட்பு யார்கிட்டயும் துளிர்க்காது. அவர் தான் யார் என்பதைத் தேடி இமயமலைக்குப் போறார். நான் இங்கே அலைஞ்சுட்டு இருக்கேன்.
நான் கடவுள் இல்லைன்னு சொல்லலை. இருந்தால் நல்லா இருக்குமேன்னுதான் சொல்றேன். நான் வளர்த்தாலும் என் மகள் ஸ்ருதி ஆத்திகம் பேசுபவள். கோயிலுக்குச் செல்கிறாள். பொட்டு வைத்துக்கொள்கிறாள். சமயங்களில் எனக்கும் வைத்துவிடுகிறாள்.



 ஆனால், அதை நான் அழிக்க மாட்டேன். அன்பு கருதி அழிப்பதில்லை. அந்த அன்புதான் உங்களை இங்கு வரவழைத்திருக்கிறது. நான் தந்தையாக மதிக்கும் சிவாஜி, நாகேஷ் இங்கு இல்லை. அவர்களுக்கு நிகராக நீங்கள் இருக்கிறீர்கள். தயவுசெய்து மேடைக்கு வாருங்கள். குரூப் போட்டோ எடுத்துக்கொள்வோம். அதை என் வீட்டில் மாட்டிவைக்கணும்!'' என்று திரைத் துறையினரை மேடைக்கு அழைத்த கமல், ஒரு கணம் யோசித்தார். பிறகு தடாலென மேடையில் மண்டியிட்டு கூட்டத்தினை நோக்கி வணங்கினார்.
அந்த மகா கலைஞனுக்கு வேறு என்ன செய்து தன் நன்றியைத் தெரிவிப்பது என்று தெரியவில்லை!



நன்றி - விகடன்

சென்னை: ரஜினி தன் காதலச் சொல்லி திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டதற்கு லதா வெட்கப்பட்டுக் கொண்டு தனது பெற்றோரிடம் சம்மதம் கேட்டுமாறு கூறியுள்ளார். தில்லு முல்லு ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் ரஜினிகாந்த் லதா ரங்காச்சாரியை முதன் முதலாக சந்தித்தார். லதாவின் தந்தை பெங்களூரில் பணியாற்றியதால் அவர்கள் மல்லேஸ்வரம் பகுதியில் வசித்தனர். சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்த லதா கல்லூரி பத்திரிக்கைக்காக ரஜினியை பேட்டி எடுக்கச் சென்றபோது தான் அவரை முதன் முதலாக சந்தித்தார். அவரை முதல் தடவைப் பார்த்ததுமே எனக்கு பிடித்துவிட்டது. ஒரு சினிமா நடிகரைச் சந்தித்தோம் என்ற மாதிரியே இல்லை. ஏதோ நீண்ட காலம் பழகியவரை சந்தித்தது போன்று இருந்தது என்றார் லதா. ரஜினி உதவியாளர் சத்யநாராயணா கூறுகையில், அந்த பேட்டியின்போதே ரஜினி லதாவிடம் தன்னை மணக்க இஷ்டமா என்று கேட்டார். அவர் வெட்கப்பட்டுக் கொண்டு எனது பெற்றோரிடம் கேளுங்கள் என்றார். லதா ரஜினியை சந்தித்தபோது தான் அவர் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு தேறி வந்தார். அந்த சந்திப்பிற்கு பிறகு அவர்களுக்கு இடையேயான அன்பு வளர்ந்தது என்றார். ரஜினி சிறுவனாக இருந்தபோது கஷ்டப்பட்டது, குடும்பப் போராட்டம், இளம் வயதில் தாயை இழந்தது பற்றி லதா கொஞ்சம், கொஞ்சமாக தெரிந்து கொண்டார். அவருக்கு தாயின் அன்பு தேவைப்பட்டது என்பதை நான் உணர்ந்தேன் என்றார் லதா. பெரிய ஹீரோவாக ஆன ரஜினிக்கு ஒரு துணை தேவைப்பட்டது. அந்த நேரத்தில் தான் லதா வந்தார். லதாவின் பெற்றோரை திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளச் செய்யும் பொறுப்பு நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் தலையில் விழுந்தது. அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்தே ரஜினிக்கு ஒய்.ஜி. மகேந்திரனைத் தெரியும். லதாவின் சகோதரி சுதாவை ஒய்.ஜி. மகேந்திரன் மணந்திருந்ததால் ரஜினிக்கு பெண் கேட்கும் வேலை ஈசியாகிவிட்டது. மேலும் சத்யநாராயணாவும் லதாவின் பெற்றோரை சந்தித்து திருமணம் குறித்து பேசி சம்மதம் வாங்கினர். இதையடுத்து ரஜினியின் நண்பர் ராஜா பாதர் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று மணப்பெண் பற்றி கேட்டார். ரஜினி தன் காதலைப் பற்றியும் லதாவை மணக்க விரும்புவதைப் பற்றியும் ராஜாவிடம் தெரிவி்த்தார். உடனே ரஜினி லதாவை போன் செய்து வரவழைத்து இவர் தான் நான் மணக்க விரும்பும் பெண் என்றார். அதன் பிறகு ராஜா பாதர் பெண் குறித்து பல கேள்விகளை கேட்டுவிட்டு ஓ.கே. கல்யாணம் செய்துகொள் என்றார்.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2012/12/rajinikanth-proposes-latha-accepts-166147.html
சென்னை: ரஜினி தன் காதலச் சொல்லி திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டதற்கு லதா வெட்கப்பட்டுக் கொண்டு தனது பெற்றோரிடம் சம்மதம் கேட்டுமாறு கூறியுள்ளார். தில்லு முல்லு ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் ரஜினிகாந்த் லதா ரங்காச்சாரியை முதன் முதலாக சந்தித்தார். லதாவின் தந்தை பெங்களூரில் பணியாற்றியதால் அவர்கள் மல்லேஸ்வரம் பகுதியில் வசித்தனர். சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்த லதா கல்லூரி பத்திரிக்கைக்காக ரஜினியை பேட்டி எடுக்கச் சென்றபோது தான் அவரை முதன் முதலாக சந்தித்தார். அவரை முதல் தடவைப் பார்த்ததுமே எனக்கு பிடித்துவிட்டது. ஒரு சினிமா நடிகரைச் சந்தித்தோம் என்ற மாதிரியே இல்லை. ஏதோ நீண்ட காலம் பழகியவரை சந்தித்தது போன்று இருந்தது என்றார் லதா. ரஜினி உதவியாளர் சத்யநாராயணா கூறுகையில், அந்த பேட்டியின்போதே ரஜினி லதாவிடம் தன்னை மணக்க இஷ்டமா என்று கேட்டார். அவர் வெட்கப்பட்டுக் கொண்டு எனது பெற்றோரிடம் கேளுங்கள் என்றார். லதா ரஜினியை சந்தித்தபோது தான் அவர் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு தேறி வந்தார். அந்த சந்திப்பிற்கு பிறகு அவர்களுக்கு இடையேயான அன்பு வளர்ந்தது என்றார். ரஜினி சிறுவனாக இருந்தபோது கஷ்டப்பட்டது, குடும்பப் போராட்டம், இளம் வயதில் தாயை இழந்தது பற்றி லதா கொஞ்சம், கொஞ்சமாக தெரிந்து கொண்டார். அவருக்கு தாயின் அன்பு தேவைப்பட்டது என்பதை நான் உணர்ந்தேன் என்றார் லதா. பெரிய ஹீரோவாக ஆன ரஜினிக்கு ஒரு துணை தேவைப்பட்டது. அந்த நேரத்தில் தான் லதா வந்தார். லதாவின் பெற்றோரை திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளச் செய்யும் பொறுப்பு நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் தலையில் விழுந்தது. அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்தே ரஜினிக்கு ஒய்.ஜி. மகேந்திரனைத் தெரியும். லதாவின் சகோதரி சுதாவை ஒய்.ஜி. மகேந்திரன் மணந்திருந்ததால் ரஜினிக்கு பெண் கேட்கும் வேலை ஈசியாகிவிட்டது. மேலும் சத்யநாராயணாவும் லதாவின் பெற்றோரை சந்தித்து திருமணம் குறித்து பேசி சம்மதம் வாங்கினர். இதையடுத்து ரஜினியின் நண்பர் ராஜா பாதர் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று மணப்பெண் பற்றி கேட்டார். ரஜினி தன் காதலைப் பற்றியும் லதாவை மணக்க விரும்புவதைப் பற்றியும் ராஜாவிடம் தெரிவி்த்தார். உடனே ரஜினி லதாவை போன் செய்து வரவழைத்து இவர் தான் நான் மணக்க விரும்பும் பெண் என்றார். அதன் பிறகு ராஜா பாதர் பெண் குறித்து பல கேள்விகளை கேட்டுவிட்டு ஓ.கே. கல்யாணம் செய்துகொள் என்றார்.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2012/12/rajinikanth-proposes-latha-accepts-166147.html