2021 ஆம் ஆண்டில் எமிலி ஹென்றி எழுதிய இதே டைட்டிலைக்கொண்ட நாவலைத்தழுவி திரைக்கதை எழுதப்பட்டது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன்,நாயகி இருவரும் பிரியாத வரம் வேண்டும் பட ஜோடிகள் போல நண்பர்கள்.ஒருவர் மீது ஒருவர் நேசம் கொண்டிருந்தாலும் நண்பர்கள் தான் என அவர்களை அவர்களே ஏமாற்றிக்கொண்டு இருப்பவர்கள்.
பறவைகள் பல விதம் படத்தில் வருவது போல குறிப்பிட்ட ஒரு நாளில் வருடா வருடம் சந்திப்பது என்பது இவர்களுக்குள் இருக்கும் ஒப்பந்தம்.
நாயகி சந்தோஷ் சுப்ரனணியம் பட ஜெனிலியா போல செய்யும் அசட்டுத்தனஙகள் நாயகனுக்குப்பிடிக்கும்.சார்லி மலையாளப்பட நாயகன் துல்கர் சல்மான் போல நாயகி அடிக்கடி எங்காவது பிரயாணம் செய்ய வேண்டும்,பல புது மனிதர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவள்.
நாயகன் கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவன்.இவனுக்கு ஒரு காதலி உண்டு.அவளுடன் அவ்வப்போது பிணக்கு வருவதும் ,பின் சேர்வதும் வழக்கம்.
நாயகிக்கும் ஒரு காதலன் உண்டு.அது தனியாக ஒரு டிராக்கில் போய்க்கிட்டு இருக்கு.
நாயகனின் சகோதரனுக்குத்திருமணம்.அதற்கு நாயகியை நாயகன் அழைக்கிறான். இது தான். படத்தில் ஓப்பனிங சீன்.கடந்த 8 வருடங்களாக இவர்கள் நட்பு பற்றிய காட்சிகள் நான் லீனியரில் கட் பண்ணி நிகழ்காலம் ,கடந்தப்காலம் என மாறி மாறிப்பயணிக்கிறது.
ஒரு கட்டத்தில் நாயகன் தன் காதலியுடன் தனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆக இருக்கிறது என்பதை நாயகன் சொல்கிறான்.அப்போது நாயகி தன் காதலனால் தான் கர்ப்பம் ஆனதைப்பற்றி சொல்கிறாள்.
இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை.
நாயகன் ஆக டாம் பிளைத் நம்ம ஊர் சித்தார்த் போன்ற சாயலில் அருமையாக நடித்திருக்கிறார்.இவ்வளவு கண்ணியமான ,அப்பாவி ஆன ஆண் உண்டா?என வியக்க வைக்கும் கேரக்டர் டிசைன்.
நாயகி ஆக எமிலி பேடர் சிறந்த அழகி இல்லை எனினும் நம் மனதைக்கவர்ந்து விடுகிறார்.
இவர்கள் இருவர் தாம் முக்கியக்கேரக்டர்கள்.மற்றவர்கள் எல்லாம் சும்மா வந்து போகிறவர்கள் தான்.நாயகனின் காதலி ,நாயகியின் காதலன் எல்லாம் சரியாக வடிவமைக்கப்படாத கெஸ்ட் ரோல் கேரக்டர்ஸ்
ஒளிப்பதிவு,இசை,எடிட்டிங போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் தரம்
5 பேர் கொண்ட குழு திரைக்கதை எழுத இயக்கி இருப்பவர் பிரட் ஹெலி
சபாஷ் டைரக்டர்
1 விமானப்பயணத்தின் மீதி அச்சம் கொண்ட நாயகன் அதைப்பற்றி விவரிக்கும்போது நாயகியின் அப்பா நாயகன் தாம்பத்யத்தில் தான் அச்சம் என்பதாகப்புரிந்து இருவரும் நடத்தும் உரையாடல் கிரேசி மோகன் டைப் கலக்கல் காமெடி
2 நாயகிக்குக்காய்ச்சல் என்றதும் தன் வெளியூர் ட்ரிப்பையே கேன்சல் செய்து விட்டு அவரைப்பார்த்துக்கொள்ளும் காட்சி டச்சிஙக்
3 இருவரும் இணைவார்களா?மாட்டார்களா?என்ற பதை பதைப்பைக்கிளப்பும் உணர்ச்சி மிக்க கிளைமாக்ஸ்
ரசித்த வசனங்கள்
1 விடுமுறை.உங்களிடம் இருக்கும் இன்னொரு முகத்தை உங்களுக்கே காட்டும்
2 சாமி கிட்டே வேண்டிக்கிட்டதை வெளியில் சொன்னா அது நிறைவேறாது
3 சாக்சபோன் இசையில் வந்த ஒரு பாடல் கூட நல்லாருந்ததில்லை
4 சின்ன ஊர் அல்லது ஒரு கிராமத்தில் நம்மைப்பற்றி ஒரு முடிவு எடுத்துட்டா அதை மாத்தவே முடியாது.
5. நண்பர்கள் எப்பவும் கை கொடுத்துக் க மாட்டாங்க (ஷேக் ஹேண்ட்ஸ்)
6 நான் தனியா தான் சாகப்போறேனோ?
நாம 2 பேரும் சேர்ந்து தனியா சாகலாமா?
7 வீடு திரும்புதல் கூட ஒரு பயணம் தான்.
8 பயணத்தின் சிறப்பே அதன் முடிவில் அவரவர் வீடு திரும்புவதுதான்
9 எனக்கு இப்போ அன்பான வாழ்க்கை தேவைப்படுது,அதுக்காக என் லட்சியத்தை விட்டுட்டேன்.
கிடைத்ததே போதும்னு இருக்கேன்னு சொல்லு
10 உன் கூட இருக்கும்போது என் சந்தோசம் டபுள் ஆகுது. சோகம் பாதியாக்குறையுது
11தேடுவதற்கும்,விலகி ஓடுவதற்கும் நூல் அளவு தான் வித்தியாசம்
12 வீட்டில் மட்டும் தான் நாம் நாமளா இருப்போம்
13. நீங்க நேசிக்கறவஙக உங்க வீட்டில் இருந்தா எப்பவும் நீங்க வீட்டிலேயே தான் இருப்பீஙக
14 உன்னைப்பார்த்தா நாய்களுக்கு நடுவே சிக்கிய பூனை மாதிரி இருக்கு
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகனின் சகோதரன் இன்னொரு ஆணைத்தான் திருமணம் செய்து கொள்கிறான்.மெயின் கதைக்கும் ,இதற்கும் சம்பந்தமே இல்லை.
2 நாயகன் தன் காதலியை எப்படி சமாளித்தான்?நாயகி தன் காதலனை எப்படி சம்மதிக்க வைத்தாள் என்பது விளக்கப்படலை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -18+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - தமிழ் சினிமா பார்ப்பது போலவே இருக்கு.நெட் பிளிக்ஸ் தயாரிப்பு என்பதால் 18+ எதிர்பார்த்துப்பார்க்க வேண்டாம்.ரேட்டிங்க் 2.5/5
0 comments:
Post a Comment