ஹக் என்றால் உரிமை என்று அர்த்தம்.7/11/2025 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் 2/1/2026 முதல் நெட் பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.
45 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப்படம் பாக்ஸ் ஆபீசில் 28 கோடி மட்டுமே வசூலித்தது.ஆக்சன் குப்பைகளையும் ,டப்பாப்படங்களையும் ஹிட் ஆக்கும் ரசிகர்கள் தரமான படத்தைக்கண்டு கொள்ளாததில் ஆச்சரியம் இல்லை.ஆனால் நெட் பிளிக்சில் வெளியான 2 வது நாளே டாப் 2 இடத்தைப்பிடித்து விட்டது
ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் ஒரு வக்கீல் .நாயகி ஒரு முஸ்லீம்.நாயகனைப்பார்த்ததும் காதல் கொள்கிறாள்.இருவருக்கும் திருமணம் ஆகிறது.இரு குழந்தைகள் பிறக்கின்றன.முதல் 6 வருடங்கள் வாழ்க்கை ஜாலியாகப்போகிறது.
வில்லன் திடீர் என்று வேலை விஷயமாகப்பாகிஸ்தான் போகிறேன்.3 வாரஙகளில் திரும்புவேன் என்று சொல்லி விட்டுப்போகிறான்.ஆனால் 3 மாதஙகளாக வரவில்லை
பிறகு வருகிறான்.வரும்போது வில்லியுடன் வருகிறான்.வில்லனின் அத்தை மகள் திடீர் என்று விதவை ஆகி விட்டாள்.அவளுக்கு வாழ்க்கை கொடுத்தேன் என்கிறான்.
நாயகிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.மாமியார் வேற வில்லனுக்கு சப்போர்ட்.என் மகனுக்கு விருப்பமே இல்லை.நான் தான் கட்டாயப்படுத்தினேன் என்கிறார் மாமியார்.
வேறு வழி இல்லாமல் நாயகி சகித்துக்கொண்டு வில்லி ஆன சக்களத்தியை வீட்டுக்குள் அனுமதிக்கிறாள்.
ஒரு கட்டத்தில் வில்லி சொன்ன உண்மை நாயகியை சுடுகிறது.வில்லன் சின்ன வயதிலேயே வில்லியை விரும்பியவன்.வில்லிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்ததால் தான் வில்லன் நாயகியைத்திருமணம் செய்து கொண்டான்.
நாயகி வில்லி சொன்னது உண்மையா?என வில்லனிடம் கேட்கிறாள்.வில்லன் பம்முகிறான்.நாயகி கோபத்துடன் தன் வாரிசுகளை அழைத்துக்கொண்டு தன் அம்மா வீட்டுக்குப்போய் விடுகிறாள்.
மாதா மாதம் பராமரிப்பு செலவுக்கு ரூ 400 மட்டும் கேட்கிறாள்.ஆரம்பத்தில் தந்த வில்லன் பின் அதைக்கூட தரவில்லை.
நாயகி ஜீவனாம்சம் கேட்டு கேஸ் போடுகிறாள்.வில்லன் கோபம் ஆகி 3 முறை தலாக் சொல்லி விடுகிறான்..
அப்போது எல்லாம் (1985) தலாக் சொன்னால் பிரியலாம்.நாயகி கோர்ட்டில். வாதாடி எப்படி ஜெயிக்கிறார் என்பதே மீதிக்கதை.
நாயகி ஆக யாமி கவுதம் பிரமாதமாக நடித்திருக்கிறார். அவரது கண்களும் ,புருவமும் கொள்ளை அழகு.
வில்லன் ஆக இம்ரான் ஹஸ்மி கச்சிதமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
வில்லி ஆக வர்த்திகா சிங்க் அருமை.
நாயகிக்காக வாதாடும் வக்கீல் ஆக ஷீபா சத்தா அட்டகாசமான நடிப்பு.
விஷால் மிஸ்ராவின் இசையில் 6 பாடல்கள்.3 அருமை.பின்னணி இசை கச்சிதம்
பிரத்தம் மேத்தாவின் ஒளிப்பதிவில் வில்லி ,நாயகி இருவருக்குமான க்ளோசப் ஷாட்கள் அருமை
நீனத் கனோல்கரின் எடிட்டிஙகில் படம் 136 நிமிடஙகள் ஓடுகிறது.
ரேஷு நாத் திரைக்கதை எழுத சுபார்ன் வர்மா இயக்கி இருக்கிறார்
சபாஷ் டைரக்டர்
1 கோர்ட் ரூம் சீன்களில் ஜட்ஜ் ,வக்கில்,நாயகி மூவரும் போட்டி போட்டு நடித்த விதம்
2 நாயகி ,வில்லி இருவருக்கும் மனஸ்தாபம் வரும் காட்சிகள்
3 பெண்களைக்கவரும் வகையிலான காட்சி அமைப்புகள் ,வசனஙகள்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஆம்பளைஙக புத்தி பத்தி நாயகிக்குத்தெரியாதா?3 மாசமா ஆள் வர்லைனதும் உஷார் ஆக வேண்டாமா?
2 மாதாமாதம் வெறும் 400 ரூபாய் தர வில்லனுக்குக்கசக்குதா? கோர்ட் கேஸ் என ஏன் அலையனும்?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்:16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பெண்களைக்கவரும் பிரமாதமான படம்.பின் பாதி முழுக்க கோர்ட் சீன்கள்.பொறுமை தேவை.ரேட்டிங்க் 3/5
| Haq | |
|---|---|
![]() Theatrical release poster | |
| Directed by | Suparn Verma |
| Written by | Reshu Nath |
| Produced by | Vineet Jain Vishal Gurnani Juhi Parekh Mehta Harman Baweja |
| Starring | Yami Gautam Dhar Emraan Hashmi Vartika Singh Sheeba Chaddha |
| Cinematography | Pratham Mehta |
| Edited by | Ninad Khanolkar |
| Music by | Vishal Mishra |
Production companies | |
| Distributed by | Junglee Pictures |
Release date |
|
Running time | 136 minutes[1] |
| Country | India |
| Language | Hindi |
| Budget | ₹40–45 crore[2] |
| Box office | est. ₹28.68 crore[3] |


0 comments:
Post a Comment