Friday, January 16, 2026

வா வாத்தியார் (2026) - தமிழ் - சினிமா விமர்சனம் (பேண்ட் டசி டிராமா )

         

            கலைஞர்  டி வி யின்  நாளையை  இயக்குனர்  மூலம்  புகழ்  பெற்ற இயக்குனர்  நலன்  குமார சாமி  சூது  கவ்வும் (2013) , காதலும் கடந்து போகும் (2016) ஆகிய  வெற்றிப்படங்கள்  இயக்கியதன் மூலம்  கவனிக்க வைத்தவர்   தீயா வேலை செய்யணும் குமாரு (2013)  , மாயவன் (20170 ஆகிய  படங்களின் திரைக்கதை  ஆசியராகவும் இருந்திருக்கிறார் . காமெடி + திரில்லர்   தான் இவரது பாணி .14/1/2026  முதல்  திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் ஒர்க்  அவுட்  ஆனதா? என்பதைப்பார்ப்போம்        


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  தாத்தா  தீவிரமான எம் ஜி ஆர் ரசிகன் . எம் ஜி ஆர்  இறந்த அதே  நாளில்  பிறந்த  தனது  பேரன்  உடலில்  எம் ஜி ஆர்  தான் குடி இருக்கிறார்  என்று நம்புபவர் . சின்னவயதில் இருந்தே  அவனை எம் ஜி ஆர் படங்கள் எல்லாம் காட்டி வளர்த்து வருகிறார் . எம் ஜி ஆர்  போல  கடமை தவறாத  வீரனாக பேரன் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார் . ஆனால்  நாயகன்  நம்பியார் ஆக வளர்கிறான்.,பெ ரியவன் ஆனதும் போலிஸ்   இன்ஸ் பெக் டர்  ஆகி  லஞ்ச்ம  வாங்கும் கெ ட்ட போலீஸ் ஆக இருக்கிறான் .இந்த  உண்மை  தாத்தாவுக்குத்தெரிய வரும்போது அவர் மாரடைப்பில் மரணம் அடைகிறார் 


நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை எல்லாம் படம் பிடித்து ஒரு இளைஞர் கூட்டம் மஞ்சள் முகம் என்ற அமைப்பின் பெயரில் இயஙகுகிறது.இது வில்லனுக்கு இடைஞ்சல் ஆக இருப்பதால் போலீஸ் என்கவுண்ட்டர் மூலம் அந்தக்கூட்டத்தை அழிக்க நினைக்கிறான் வில்லன்.இதற்கு நாயகனும் உடந்தை.

ஒரு கட்டத்தில் எம் ஜி ஆரின் ஆவி நாயகனின் உடலில் புகுந்து  அவனை நல்லவன் ஆக்குகிறது.இதற்குப்பின் நிகழும்  சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை


நாயகன் ஆக கார்த்தி.பருத்தி வீரன் ல இருந்தே இவரது அசால்ட்டான உடல் மொழியை ரசித்து வந்திருக்கிறோம்.இதில் இவரது கேரக்டர் டிசைன் கச்சிதம்.எம் ஜி ஆர் மேனரிசம் ஓரளவு இவருக்கு வருகிறது.ஆனால் இவருக்கு முன் எம் ஜி ஆர் போல ஸ்டைலிசம் காட்டிய சத்யராஜ்,எஸ் எஸ் சந்திரன் ,அளவுக்கு இல்லை.ஆனால் மு.க .முத்து அளவுக்கு மோசம் இல்லை.


நாயகி ஆக கீர்த்தி ஷெட்டி எடுபடவில்லை.ஆவிகளுடன் பேசும் கேரக்டர்.அவரது முகமும்,நடிப்பும் சுமார் ரகமே.

நாயகனின் தாத்தா ஆக ராஜ்கிரண் நல்ல குணச்சித்திர நடிப்பு.வில்லன் ஆக சத்யராஜ் .கெட்டப் நடிப்பு இரண்டுமே எடுபடவில்லை.

கருணாகரன்,ஆனந்தராஜ்,நிழல்கள் ரவி ,சில்பா மஞ்சுநாத் சும்மா வந்து போகிறார்கள்.


வில்லியம்சின் ஒளிப்பதிவு அருமை.சந்தோஷ நாராயணன் இசையில் பாடல்கள் பெரிதாக ஹிட் ஆகவில்லை.பின்னணி இசை ஓக்கே ரகம்.வெற்றி கிருஷ்ணன் எடிட்டிஙகில் படம் 127 நிமிடஙகள் ஓடுகிறது.


கதை ,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் நலன் குமார சாமி

சபாஷ்  டைரக்டர்


1   டூயட் சாங்கில்  பிரேமுக்குள்  இருக்கும் பிம்பங்கள்  உயிர்  பெற்று  ஆடுவதைப் போன்ற  காட்சி  ரசிக்க வைத்தது 


2  தாத்தாவுக்குப்பிடித்தது   எம் ஜி ஆர் , பேரனுக்குப்பிடித்தது  நம்பியார் , அதை  வைத்துக்காட்சிகள்  என்ற   தாட்  பிராசஸ்   அருமை 

3 எம் ஜி ஆர் ரசிகர்களைக்கவரும் வகையில் எம் ஜி ஆர் ஹிட் பாடல்களை பொருத்தமான இடங்களில் சேர்த்த விதம்

4 ரசிகர்களின் கை தட்டலைபெற்ற இண்ட்டர்வெல் பிளாக் சீன்



  ரசித்த  வசனங்கள் 


1 ஒரு  நல்லவனுக்கு  சோதனை  வந்தால் அவனுக்கு நாம் துணை நிக்கணும் .

2   அரசியல்வாதின்னாலே நடிக்கறதுதானே வேலை 

3   எதுக்கு சார்  அடிக்கறீங்க? வாரண்ட் இருக்கா? 

 அடிக்கறதுக்கு  எதுக்குடா  வாரண்ட் ? 

4 பயப்படுவதற்கு ஒன்றும்  இல்லை , கொஞ்சம்   பயந்திருக்கிறார் 

5   கோயிலுக்கு செலவு செய்து தான் புண்ணியம் சேர்க்கணும் என்று இல்லை , சில சமயம் போருக்கும் செலவு செய்யலாம் 

6  நீ பயப்படாதே , நான் இருக்கேன் 


 நான் பயப்படவே இல்லை 

7  என்னய்யா போலீஸ்  நீங்க ? எனக்கும் வேலை  செய்ய மாட் டேங்கறிங்க , மக்களுக்கும் வேலை  செய்ய மாட் டேங்கறிங்க


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1    கோர்ட்  சீனில்  ஜட்ஜ்  எரிந்து  எரிந்து  விழுந்து  கத்திப்பேசுவது எல்லாம் ஓவர் . நிஜத்தில்  எந்த  ஜட்ஜும்  அப்படிக்கிடையாது . அமைதியாகத்தான் பேசுவார்கள் 

2   நாயகன்   6 மாதங்கள் சஸ்பெண்ட்  ஆன செய்தி  பேப்பரில்  வந்திருக்கிறது . அது தாத்தாவுக்குத்தெரியாமல் இருக்க  தாத்தாவின்  கண்ணாடியை  நாயகன்  ஒளித்து   வைக்கிறான் . அக்கம், பக்கம் , சொந்த பந்தம்  யாரும் பேப்பரே  படிக்க மாட்டார்களா? தாத்தாவிடம் விசாரிக்க  மாட்டார்களா? 

3 தாத்தாவாக  வரும் ராஜ்கிரண்  ஓப்பனிங்க் சீனில்  எப்படி இருக்கிறாரோ  அதே கெட்டப்பில்  25  வருடங்களுக்குப்பின்னும்  மாற்றம்  இல்லாமல்  இருக்கிறார் , எப்படி ?

4  எம் ஜி ஆருக்கு  சோக சீன்  செட் ஆகாது , இருந்தும்  தரை மேல்  பிறக்க வைத்தான்  பாடலுக்கு  எம் ஜி ஆர்  போல் வேடம் இட்ட  கலைஞர்கள்  டான்ஸ்  மூவ்மென்ட்  தருவது எடுபடவில்லை 

5  நாயகன்  ஒரே  ஒரு கருப்புக்கர்ச்சிப்பைக்கண்களில் கட்டிக்கொண்டால்  சக போலீஸ் அதிகாரிகளுக்கு அவரை அடை யாளம் தெரியாமல் போய் விடுமா? 

6   ஆவிகளுடன்  பேசும் நாயகி  வரும் போர்ஷன்களும்  எடுபடவில்லை ,நாயகனுடனான  ரொமாண்டிக் போர்சனும் கவரவில்லை 

7   நாயகன்  கெடடவன் ஆகவும்  வாத்தியார்  எம் ஜி ஆர் மாதிரியும்  மாறி மாறி  ஒரே ஷாட்டில் நடிப்பது  அந்நியன் , அம்பி யி  ன்=சீனை  நினைவு படுத்துவதால் ரசிக்க முடியவில்லை 

8   ராஜாவின்  பார்வை ராணியின் பக்கம்   ரீ மிக்ஸ்   சாங்க்  சகிக்கவில்லை  டான்ஸ்   ஸ்டெப்  கொடுமை 

9 திரைக்கதை அமைப்பில் மாஸ்க் ஆப் ஜாரோ ,சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் கண் முன் வந்து போகின்றன.


10 நாயகன் ஸ்பிலிட் பர்சனாலிட்டியால் அப்படி நடந்துகொள்கிறானா? எம் ஜி ஆர் ஆவி புகுந்ததாலா ?என்பதைத்தெளிவாக சொல்லவில்லை


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 13+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - எம் ஜி ஆர் ரசிகர்களுக்கு ஓரளவு பிடிக்கும்.நலன் குமாரசாமி ரசிகர்களுக்கு ஏமாற்றம்.கார்த்தி ரசிகர்கள் பாவம்.விகடன் மார்க் யூகம் - 40 குமுதம் ரேங்க்கிங்க். சுமார்.ரேட்டிங் 2/5


0 comments: