கேரள இயக்குனர் ஆன நிதிஷ் சகாதேவ் பலிமி ( பேமிலி ) என்ற குடும்பக்கதையை இயக்கி ஹிட் அடித்தது போலவே இதையும் ஹிட் ஆக்கி விட்டார் . இது மம்முட்டிக்கு சொல்லப்பட்டு ஓகே ஆன கதை . ஆனால் சில பிரச்சனைகளால் அவரால் நடிக்க முடியாமல் போக ஜீவா நடித்தார் . ராம் , கற்றது தமிழ் , சிவா மனசுல சக்தி , கோ ஆகிய வெற்றிப்படங்கள் வரிசையில் ஜீ வாவுக்கு இது ஒரு ஹிட் படம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் அந்த ஊரின் பஞ்சாயத்துத்தலைவர் . அடுத்தடுத்த வீடுகளில் இருக்கும் இரு நபர்களின் வீட்டில் ஒரே இரவில் கல்யாணக்கோலமும் , கருமாதிக்கோலமும் அரங்கேறுகிறது . இரு வீட்டாருக்கும் ஏற்கனவே வாய்க்கால் தகராறு இருக்கிறது . காலை 10.30 க்கு கல்யாண முகூர்த்தம் . வம்படியாக அதே டைமில் தான் டெட் பாடி யையும் எடுப்பேன் என அடம் பிடிக்கிறார் . இந்த சீரியஸ் ஆன பிரச்சனையை காமெடியாக எப்படி சொல்லி இருக்கிறார் இயக்குனர் என்பதே திரைக்கதையின் சிறப்பு அம்சம்
நாயகன் ஆக ஜீவா சிறப்பாக நடித்திருக்கிறார் , ஆனால் சிவா மனசுல சக்தி அளவுக்கு அதிக வாய்ப்பு இல்லை . படத்தில் இவருக்கு ஜோடி இல்லை , டூயட் இல்லை . இளவரசு திருமணப்பெண்ணின் அப்பாவாகவும் , தம்பி ராமய்யா இறந்து விட் ட அப்பாவின் மகனாகவும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள் . மைனா வுக்குப்பின் , தம்பி ராமய்யா க்கு உருப்படியான கேரக்ட்டர் . முத்துக்கு முத்தாக படத்ததுக்குப்பின் இளவரசு இயல்பான கேரக்ட்டரில் மிளிர்கிறார்
ஜென்சன் திவாகர் ,சர்ஜின் குமார் இருவரின் காமெடி களை கட்டுகிறது ,மாப்பிள்ளையாக வரும் சுபாஷ் கண்ணன் நேரம் காலம் தெரியாமல் மணப்பெண்ணுக்கு போன் போட்டு கடலை போடுவதும் , டார்ச்சர் தாங்காமல் மணப்பெண் பொருமுவதும் கலகல
மணப்பெண் சவும்யாவாக வரும் பிரார்த்தனா அழகு முகம் , பாந்தமான நடிப்பு , கவுரவமான உடை என கவர்கிறார் . இப்போது வரும் படங்களில் எல்லாம் நாயகிகளை அரை குறை யாகவே பார்த்து இப்படிப்பார்க்க நிம்மதியாக இருக்கிறது
பப்லு அஜூ தான் ஒளிப்பதிவு . லொக்கேஷன் இரண்டு வீடுகள் மட்டும் தான் என்பதால் சவாலான பனி தான் .அர்ஜுனே பாபுவின் எடிட்டிங்கில் படம் 113 நிமிடங்கள் மட்டுமே ஓடுகிறது . ஷார்ப் ட்ரிம்மிங்க்
இசை விஷ்ணு விஜய் . கேரள மாநிலத்தவருக்கு இனி வாய்ப்பு வரலாம் . பாடல்கள் ஓகே ரகம் , பின்னணி இசை ஆஹா ரகம்
சஞ்ஜோ ஜோசப் ,அனுராப் ஆகிய இருவருடன் இணைந்து திரைக்கதை எழுதிய கேரள இயக்குனர் ஆன நிதிஷ் சகாதேவ் தனித்து இயக்கி இருக்கிறார் . ஒரு சிம்ப்பிள் ஆன ஒன லைன் , அதை வைத்து நல்ல திரைக்கதை எழுதிய இவரைப்பாராட்டலாம்
சபாஷ் டைரக்டர்
1 ஜீவா இளவரசிடம் இழவு செய்தியை சொல்லும்போது வாடா வாடா பையா என் வாசல் வந்து போய்யா என்ற குத்தாட்டப்பாட்டு ஒலிப்பது கலக்கல் காமெடி
2 மணப்பெண் சவும்யாவாக வரும் பிரார்த்தனா கண்ணியமான ஆடை வடிவமைப்பு .,அடக்கமான கிராமத்து அழகி . இது போன்ற அடக்கமான அழகியைக்கடைசியாக 1998ம் ஆண்டு நினைத்தேன் வந்தாய் படத்தில் தேவயானியாகப்பார்த்ததுடன் சரி
3 மணப்பெண்ணின் ஒருதலைக்காதலனாக வரும் அந்த தறுதலை தாலியுடன் மணப்பெண் வீட்டுக்கு வந்து செய்யும் காமெடி அலப்பறைகள்
4 அடுத்த கட்டமாக கதையை எப்படி நகர்த்துவது என்று தெரியாத நிலையில் ஒருதலைக்காதலனை வைத்து காமெடி செக்மன்ட் , பதட்டமான சூழல் என விறுவிறுப்பாகக்கதையை நகர்த்திய லாவகம்
5 கல்யாண வீட்டுக்கு வந்த பெண்கள் நகை , ஒப்பனையை அகற்றி அப்படியே அருகில் இருக்கும் இழவு வீட்டுக்குப்போகும் சீன் செம கலக்கல் யதார்த்தம்
செம ஹிட் சாங்க்ஸ்
1 பூவா சிரிக்கணும், தொட் டா சிவக்கனும்
ரசித்த வசனங்கள்
1 அண்ணே! ஜூஸ் போடவா?
ஒரு நிமிஷம் இருடா .. டியர் , உனக்கு என்ன கலர் பிடிக்கும்? பிங்க்க்கா?
கிளிப்பச்சை
டேய் ,பச்சை க்கலர்ல ஒரு ஜூஸ் போடு
2 இழவு வீட்டுக்குப்பக்கத்துல கல்யாண வீடு
அப்போ ஒரு பக்கம் தப்பு , இன்னொரு பக்கம் தவிலு , அடி கிழியப்போகுது ?
3 கல்யாண வீட் டு ல வேணா நீ ராஜாவா இருக்கலாம், ஆனா சாவு வீட்டில் நான் தான் ராஜா
4 பக்கத்து வீட்டுக்காரனுக்குப்பிரஷர் தருவதற்காக பெத்த அப்பனையே கொல்வாங்களா?
5 கேட்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன், நீ யார்வீட்டுத்தாத்தா? இங்கிட்டும் இருக்கே ? அங்கிட்டும் இருக்கே ?
6 அண்ணா, உங்களுக்காகத்தான் இந்த குவாட்டரை வாங்கி வந்தேன் , திடீர்னு செத்துப்போயிட்டீங்க , இனி யாருன்னா இதை க்குடிப்பாங்க ?
7 இந்தக்கிறுக்கனை எந்தக்கிறு க்கன் வரச்சொன்னான்?
நான் தான்
8 அய்யாவைத்தேருல கூட்டிட்டுப்போறேன்னீங்க , இப்போ சேறு ல கிடக்காரு ?
8 கன்னி யப்பன்னு உனக்கு யாரு பேரு வெச்சது ? கல்யாணமே ஆகாம இருக்கே ?
9 சவுமி சவுமின்னா அவ வந்துடுவாளா ?அவ என்ன சின்னப்பொண்ணா? ஆளாளுக்குத்தே டிட்டு இருக்கீங்க ?
10 அடப்பாவி , செத்த அப்பனை மறுபடியும் கொன்னுட்டியே?
11 ஆம்பளைங்களுக்கு கொம்பு மட்டும் தான் இல்லை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 இழவு வீட்டுக்குப்போனா குளிக்கணும் , ஆனால் ஜீவா டீக்கடைக்குப்போவது போல இழவு வீட்டுக்கும் கல்யாண வீட்டுக்கும் மாறி மாறி அசால்டாப்போய்க்கிட் டே இருக்காரே? எப்படி ?
2 கிராமத்தில் ( மார்த்தாண்டம் வடடார வழக்கு ) நடக்கும் கதையில் ஆங்காங்கே சென்னை பாஷை புகுந்தது எப்படி ?
3 வாட் டர் டேங்க் இடிந்து விழுந்து தண்ணீர் பெருகும் காடசியில் சி ஜி ஒர்க் சரி இல்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 13+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் -தரமான மலையாளப்படம் பார்த்த திருப்தி , ரூரல் காமெடி டிராமா ரசிகர்கள் பார்க்கலாம் , விகடன் மார்க் யூகம் 45 , குமுதம் ரேங்க்கிங்க் அருமை . ரேட்டிங்க் 3 / 5
| Thalaivar Thambi Thalaimaiyil | |
|---|---|
Film poster | |
| Directed by | Nithish Sahadev |
| Written by |
|
| Produced by | Kannan Ravi |
| Starring |
|
| Cinematography | Bablu Aju |
| Edited by | Arjune Babu |
| Music by | Vishnu Vijay |
Production company | Kannan Ravi Productions |
Release date |
|
Running time | 113 minutes[1] |
| Country | India |
| Language | Tamil |

0 comments:
Post a Comment