மேதகு பாகம் 1 ,பாகம் 2 ஆகிய இரு படங்களைக்கொடுத்த இயக்குனர் கிட்டு இயக்கிய படம் இது.
பொங்கல் ரிலீஸ் ஆக ஜனநாயகன்,பராசக்தி ஆகிய படங்கள் வருவதால் 1/1/2026 முதல் திரை அரங்குகளில் வெளியாகி இருக்கும் படத்திற்கு சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை.இப்போது. ஓடிடி பிளஸ் சேனலில் காணக்கிடைக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு டாக்டர்.இலங்கையில் பணிபுரிகிறார்.சிறுமியாக இருந்தபோது போராளிகளுக்கு ரத்த தானம் ஏற்பாடு செய்து தந்ததற்காக நாயகியின் அப்பா ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படுகிறார்.நாயகி பெரியவள் ஆனதும் டாக்டர் ஆகி போர்க்களத்தில் பணி புரிகிறார்.
போர்க்களத்தில் காயம் அடைந்தவர் போதாளிகள் ஆக இருந்தாலும் ,ராணுவ வீரர் ஆக இருந்தாலும் சிகிச்சை அளிப்பது தான் இவரது கடமை.
இராணுவத்தளபதி இந்த போர்க்களத்தில் இருக்கும் மருத்துவ சிகிச்சை முகாம்களை (மெடிக்கல் பங்கர்) வெடி வைத்துத்தகர்க்க திட்டம் இடுகிறார்கள்.
நாயகி டாக்டர் ஆகப்பணியாற்றும் அந்த மெடிக்கல் பங்கரில் ஒரு சிங்கள ராணுவ வீரன் போர்க்காயத்துடன் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.நாயகி ஆன டாக்டர் அவனுக்கு சிகிச்சை அளிக்கிறார்.
இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.
தெரிந்த முகஙகள் யாரும் இல்லை.நாயகியின் அப்பாவாக வரும் கருணாஸ் மட்டும் தெரிந்த முகம்.மற்றவர்கள் புதுமுகங்கள்.
அனைவரது நடிப்பும் அருமை.
ஒளிப்பதிவு ,இசை,எடிட்டிங போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் ஓக்கே ரகம்.
சபாஷ் டைரக்டர்
1 யாருக்கும் தெரியாத போர்க்கள மருத்துவர்கள் பற்றி பதிவு செய்த ஐடியா
2 போர்க்களத்தில் காயம் அடைந்த வீரர்களுக்கு ரத்த தானம் செய்ய சேகரித்த ரத்த ப்பாக்கெட்டுக்களை ராணுவ வீரர்கள் வீணாக்கும் சீன்
3 கருணாஸ் இறக்கும் முன் பேசும் வீர வசனம்
ரசித்த வசனங்கள்
1 உயிர் மேல பயம் வரனும்னா உயிரைக்காப்பாற்றும் ஆட்களை முதலில் அழிக்கனும்
2 இந்த மண்ணைக்காப்பாற்ற உன் உசுரைப்பற்றிக்கூடக்கவலைப்படாம போர்க்களத்துக்குப்போகும் நீ தான் பேரழகன்
சரி.நீ எப்போ பேரழகி ஆகப்போறே?
3 இந்த உசுரு போனா இந்த மண்ணுக்காகத்தான் போகனும்
4 மெடிக்கல் பங்கர் சாமி மாதிரி
5 நம்மைக்காப்பாற்றும் சாமியை நாம காப்பாற்றுவதில் என்ன தவறு?
6 உனக்குக்கடவுள் நம்பிக்கை இருக்கா?
தலைவர் மீது நம்பிக்கை இருக்கு
7 சம்பளத்துக்காகக்களத்தில் நிற்பவனுக்கும் ,விடுத்தலைக்காகக்களத்தில் நிற்பவனுக்கும் வித்யாசம் உண்டு
8 போர்க்களத்தில் தேவை இரண்டு தான் 1 உயிர் 2 ஆயுதம்
9 எப்படியும் நம்மை சுடப்போறாங்க.சாகும்போது கூட தலை குனியக்கூடாது
10 உசுரை விதையா விதைக்கிறோம்.அது வெடிச்சு வெளியே ஒரு நாள் நிச்சயம் வரும்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - இலஙகைத்தமிழர்கள் வரலாறு தெரிந்தவர்கள் பார்க்கலாம்.இது ஜனரஞசகப்படம் அல்ல.விகடன் மார்க் யூகம் 41.குமுதம் ரேங்க்கிங் ஓக்கே .ரேட்டிங்க் 2.5 /5

0 comments:
Post a Comment