டைட்டிலைப்பார்த்ததும் பாஞ்ச் மைனர் எனில் 5 விடலைப்பையன்கள் என்பதுதான் அர்த்தம் ஆக இருக்கும் என நினைத்தேன்.பாஞ்ச் மினார் என்பது ஒரு இடத்தின் பெயராம்.காமெடி க்ரைம் ட்ராமா என்று கேள்விப்பட்டதால் பார்த்தேன்.
21/11/2025 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் இப்போது அமேசான் ப்ரைம் ஓடி டி யில் காணக்கிடைக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு வெட்டாபீஸ்.இந்த லட்சணத்துல ஒரு காதலி வேற.இருந்த கொஞ்ச நஞ்ச பணத்தை சூதாட்டத்துல பாதி ,க்ரிப்டோ கரன்சி ல பாதினு தொலைச்சுடறான்..
இப்போ வேற வழி இல்லாம கேப் டிரைவரா வேலை செய்யறான்.காது கேட்காத டிரைவர் எனில் சம்பளம் அதிகம் என்பதால் பொய்யாக காது கேளாதவன் போல சர்ட்டிபிகேட் ரெடி செய்து வேலையில் சேர்கிறான்.
நாயகனுக்குக்காது கேட்காது என நினைத்து 2 காண்ட்ராக்ட் கில்லர்ஸ் காரில் ஏறி ஒரு தகவல் பேச அதைக்கேட்டு நாயகன் கோடிக்கணக்கான கேஷ் உள்ள பேக்கை பாஞ்ச் மினார் என்னும் ஹோட்டலில் டோக்கன் கொடுத்து பெறுகிறான்
இதற்குப்பின் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் ,வில்லன் க்ரூப் சேசிங்,போலீஸ் பாலோ எல்லாம் மீதி திரைக்கதை
நாயகன் ஆக ராஜ் தருண் சுமாராக நடித்திருக்கிறார்.காமெடி டயலாக்ஸ் காப்பாற்றுகிறது அவரை.
நாயகி ஆக சுமார் முக குமாரி ஆக ராசி சிங்க் வந்து போகிறார்.அதிக வேலை இல்லை.
நாயகனின் அப்பாவாக பிரம்மஜி பாத்திரத்தை உணர்ந்து காமெடி செய்திருக்கிறார்.
போலீஸ் ஆக ஸ்ரீனிவாஸ் காமெடி நடிப்பில் பாஸ் மார்க்.
மெயின் வில்லன் ஆக அஜய் கோஷ் அவ்வப்போது மிரட்டல் அப்பப்ப காமெடி செய்கிறார்.
ரவி வர்மா கெஸ்ட் ரோலில் வருகிறார்.
சேகர் சந்தரா இசையில் 3 பாடல்களும் அருமை.பின்னணி இசை. ஓக்கே ரகம்.
ஆதித்ய ஜவ்வாடி தான் ஒளிப்பதிவு.குட்.
பிரான் புடியின் எடிட்டிஙகில் 134 நிமிடஙகள் ஓடுகிறது.
ராம் கடுமலா தான் திரைக்கதை ,இயக்கம்
சபாஷ் டைரக்டர்
1 ஹாஸ்பிடலில் நாயகன் ,நாயகி,வில்லன் க்ரூப். மூன்று தரப்புக்கும் இடையே நடக்கும் உரையாடல் காமெடிக்கலக்கல்.
2 பின்சீட்டில் வில்லன் க்ரூப் மிரட்ட முன் சீட்டில் நாயகன் ,நாயகி காரில் அவர்களை சமாளிக்க செய்யும் ஐடியா அருமை.
3 வில்லன் நாயகனின் பெற்றோரைப்பிடித்து வைத்து மிரட்ட நாயகனிடம் போனில் பேசும் அவரது அப்பா பேசும் டயலாக் செம காமெடி
4 க்ளைமாக்சுக்கு முன் வரும் கடைசி அரை மணி நேரக்காமெடி சீக்வென்ஸ்
செம ஹிட் சாங்க்ஸ்
1 ஜானு மேரி ஜானு
2 எம் பாத்துக்குற நாடி
3 மண்டு தேரா
ரசித்த வசனங்கள்
1 ஏண்டா,அந்தக்கம்பெனி ஓனரே ஆட்டோல போறான்.உனக்கு யார் கார் குடுத்தா?
2 சார்.அவனுக்குக்காது கேட்காது.சத்தமாப்பேசுஙக..
நீ பேசுனது மட்டும் அவனுக்கு எப்படிக்கேட்டுச்சு?
நான் அவன் பிரண்ட்
முதல்ல என்கொயரி பண்றப்போ அவன் என் பிரண்ட் இல்லன்னு சொன்னியே?
3 போலீஸ் - உன் சதித்திட்டம் எனக்குத்தெரிஞ்சிடுச்சு.2 கோடி ரூபாய் கொடுத்தா கேஸ் இல்லாம பண்றேன்
மிரட்றியா?
சொல்யூசன் சொல்றேன்.
ஆதாரம் இல்லையே? வந்துட்டுப்போறதுக்கு பெட்ரோல் செலவுக்கு வேணா 2000 ரூபா தர்றேன்
4 உங்க வீட்டுக்கு நாய் கூட வராது
இப்போ கொஞ்ச நேரம் முன் நீங்க வந்தீஙக?
5 டியர்.நான் உன் கிட்டே உண்மை சொல்லாம இருந்திருக்கலாம்.ஆனா பொய் சொன்னதில்லை.
6 என் துப்பாக்கியைத்திருப்பித்தர்லைன்னா உன்னை என்கவுண்ட்டர்ல போட்டுத்தள்ளிடுவேன்
அதெப்பிடி? உன் கன் தான் என் கிட்டே இருக்கே?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 கொலையைக்கண்ட சாட்சி ஆன நாயகனை அருகில் வைத்துக்கொண்டே போலீஸ் ஆபீசர் வில்லனிடம் டீல் பேசுகிறாரே? மாங்கா மடையரா?
2 வில்லன் டீலிங்க் முடிக்கும் முன்னே போலீஸ் ஆபீசர் நாயகனைக்கொல்ல முடிவெடுத்தது ஏனோ?கொன்னுட்டா டீலிங்க் எப்படி சக்சஸ் ஆகும்?
3 ஆபரேசனுக்கான 10 லட்சம் ரூபாயை கவுண்ட்டர்ல கடாம நாயகன் பணத்துடன் ஹாஸ்பிடல் ஆபரேசன் ரூமுக்கு வந்து வில்லனிடம் மாட்டுவது ஏன்?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மொக்கைக்காமெடி டிராமா பார்க்க நினைக்கும் ஆடியன்ஸ் பார்க்கலாம்.ரேட்டிங்க் 2.25 /5
| Paanch Minar | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Ram Kadumula |
| Written by | Ram Kadumula |
| Produced by |
|
| Starring | |
| Cinematography | Aditya Javvadi |
| Edited by | Prawin Pudi |
| Music by | Shekar Chandra |
Production company | Connect Movies |
Release date |
|
Running time | 134 minutes |
| Country | India |
| Language | Telugu |

0 comments:
Post a Comment