Sunday, February 26, 2023

வயசுப்பொண்ணு (1978) - தமிழ் - சினிமா விமர்சனம்

  ஸ்பாய்லர்  அலெர்ட்


இதயம்  பேசுகிறது  மணியன்  எழுதிய  தொடர்கதையான  லவ் பேர்ட்ஸ்  நாவல்  வடிவில்  வந்து  பின் சினிமாப்படம்  ஆகி  உள்ளது 


நாயகியோட  அக்கா  அம்மா , அப்பா  பேச்சைக்கேட்டு அடக்க  ஒடுக்க மாக  இருக்கும்  குடும்பப்பெண் , நாயகி  மாடர்ன்  கேர்ள்  ஆக  வாழ  விரும்பும்  ஆடம்பரமான  பெண்.நாயகன் ஒரு  வெட்டி  ஆஃபீஸ். அவன்  கூட  ஊர்  சுத்திட்டு  இருக்கா  நாயகி. அதை  அப்பா  பார்த்து  கண்டிக்க  நாயகி  லூஸ்  மாதிரி  வீட்டை  விட்டு  ஓடிப்போக  முடிவு  பண்ணி  ரயில்  ஏறி  எங்கேயோ  போக  முடிவு  பண்றா. ரயிலில் ஒரு  பணக்காரர்  சினேகிதம்  கிடைக்கிறது. அவர்  கூடவே  அவரது  பங்களாவிற்கு  செல்கிறார். அங்கே  தங்குமிடம்  தந்து  வேலையும்  தருகிறார் பணக்காரர். நாயகியை  அவர்  எதுவும்  தொந்தரவு  செய்யவில்லை , ஆனால்  அந்த  பணக்காரர்  வேறு  பெண்களுடன்  நெருக்கமாக  இருப்பது  நாயகிக்குப்பிடிக்கவில்லை , அதனால்  அவரை  விட்டு  விலக  நினைக்கிறா:ள்


 நாயகி  பட்டணத்தில் நல்ல  வேலையில்  இருப்பதை  அறிந்த  நாயகியின் அக்கா  தங்கையைப்பார்க்க  பட்டணம்  வருகிறாள் . நாயகன்  நாயகி , நாயகியின்  அக்கா  இருவரையும்  ஃபாலோ பண்ணி  அங்கே  வருகிறான். இந்த  சமயத்தில்  நாயகி  சில  ரவுடிகளால்  பாலியல்  பலாத்காரம்  செய்யப்படுகிறாள் 


 இதற்குப்பின்  என்ன  ஆனது  என்பதுதான்  திரைக்கதை 


சேலை  அணி  ந்து  அடக்க  ஒடுக்கமாக  இருந்தால்  யாரும்  ரேப்  செய்ய  மாட்டார்கள் , மாடர்ன்  டிரஸ்  போட்டால்  அரை  குறை  ஆடை  தப்பு  செய்ய  ஆண்களைத்தூண்டும்  என்பதுதான்  கதையின்  ஒன்  லைன் . இதைக்கண்டு  பிடிக்க  ரெண்டரை  மணி  நேரம்  ஆனது ., இது  ஒரு  தோல்விப்படம், ஆனா  அட்டகாசமான  பாட்டு  ஒண்ணு  இருக்கு 


நாயகியாக  ரொஜா  ரமணி  அழகிய  முகம் அருமையான  நடிப்பு ., கிளாமரான  தோற்றம்  நாயகியின்  அக்காவாக லதா  பண்பட்ட  நடிப்பு  , கண்ணிய  உடை 


நாயகனாக  முத்து ராமனுக்கு  நவரச  நாயக்ன்  கார்த்திக்கின்  ரோல், அக்கா, தங்கை  இருவருக்கும்  நூல்  விடும்  கேரக்டர் 


 பணக்காரராக  நம்பியார் , இவரை  வில்லன்  மாதிரி  காட்டலாமா? நல்லவராகக்காட்டலாமா?? என  இயக்குநருக்குக்குழப்பம் 

எம் எஸ்  விஸ்வநாதன் இசையில்   மூன்று  பாடல்கள், அதுல  ஒரு  பாட்டு  மெகா  ஹிட் 


இரண்டரை  மணி  நேரம்  ஓடும்  அளவுக்கு  இழு  இழு என  இழுத்து  ட்ரிம்  பண்ணி  எடிட்  பண்ணி  இயக்கி  இருப்பவர்  கே  சங்கர் 


ராஜாராம்  ஒளிப்பதிவு  கண்ணுக்குக்குளுமை 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  காஞ்சிப்பட்டுடுத்தி  கஸ்தூரிப்பொட்டு  வைத்து  தேவதை  போல்  நீ  நடந்து  வர  வேண்டும் 


2  அதோ  அதோ  ஒரு   செங்கோட்டை  இதோ  இதோ  ஒரு பெண்  கூட்டை  நான்  ஒரு   மும்தாஜ் , நீ ஒரு  ஷாஜகான்


3  மாத்தலாத்தா


4  மை  ஹூங்  லக்கி  லக்கி 


  ரசித்த  வசனங்கள் 


1   எங்க  வீட்டு  பசு  மாடு  பொல்லாதது , உங்க  வீட்டுக்காளையை  அடக்கி வைங்கனு  சொல்ல  முடியுமா?


2  பெண்கள்  தலை  குனிந்து  நடந்தாதான்  ஆண்கள்  தலை  நிமிர்ந்து  நடக்க  முடியும்


3  அடுத்தவங்களைப்பத்தி  கவலைப்பட்டுட்டே  இருந்தா  நாம  சந்தோஷமா  இருப்பது  போய்டும்

4   அவ  வழி  தவறிப்போறா , நீங்க  முறை  தவறிப்போறீங்க 

5  அவ  படி  தாண்டி  வெளில  போய்ட்டா, இனி நான்  எப்படி  படி  தாண்டி  வெளீல  போக  முடியும் ? 


6  அவ  இப்படி  தறிகெட்டுப்போகக்காரணம்  குறைந்த  பட்ச  சுதந்திரத்தைக்கூட  நீங்க  தராததுதான்

7  திருப்தியா  சாப்பிடறவங்களாலதான்  ஒரு  செயலை  முழுசா  செய்ய  முடியும்

8  இவ  தன் பேருக்கு  ஏத்த  மாதிரி ஆடி  அசைஞ்சு  ஸ்லோவாதான்  போவா  , ஏன்னா இவ  பேரே  சுலோச்சனா

9  தப்பை  மடில  கட்டிக்கிட்டவங்க  நாம  பணிஞ்சுதான்  போகனும்


10  நான்  ஒண்ணு  சொன்னா  தப்பா  நினைக்க  மாட்டீங்களே?

  நீங்க  எப்படி  நினைச்சுக்கச்சொல்றீங்களோ  அப்படியே  நினைச்சுக்கறேன்


   11 உடைஞ்சு  போன  தேனடைல  கூட  ஒரு  சொட்டுத்தேனாவது  மிச்சம்  இருக்கும் 


12  உலகத்துல  எத்தனையோ  பேரைப்பார்க்கிறோம், பழகுகிறோம், ஆனா  யாரோ  ஒரு  சிலர்  மேல தான்  பாசமும், அன்பும்  தோணுது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஸ்விம்மிங்  டிரஸ் ல  நீ  எவ்ளோ  அழகா  இருக்கே  தெரியுமா? அதை  உனக்கு  காட்டத்தான்  ஆள்  விட்டு  ஃபோட்டோ  எடுக்கச்சொன்னேன்  என  நாயகன்  சொன்னதும்  நாயகி  கோபப்பட்டு  கண்ணாடி  முன்  பார்த்தா  தெரியுமே? எதுக்கு  அதை  ஃபோட்டோ  எல்லாம்  எடுக்கனும்னு கேட்டிருக்க  வேண்டாமா? 


2  அக்கா , தங்கை  இருவரும்  ஒரே  காலேஜில்  படிக்கிறார்கள்,  தங்கை  அடிக்கடி  லீவ்  போடுகிறாள். ஒரு  முறை  ஒரு  சித்தி  வீட்டு  விசேஷம் என  லீவ்  போடும்போது  தங்கை  சொல்வது  உண்மையா? என  தெரிந்து  கொள்ள  காலேஜ்  பிரின்சிபால்  அக்காவைக்கூப்பிட்டு  விசாரிக்கிறார்கள். அக்கா  லீவ்  எடுக்கலை  என்னும்போது  அது  டுபாக்கூர்  என்பது  நமக்கே  தெரியுதே? பிரின்ஸ்க்கு  தெரியாதா? 


3  நாயகி  ஸ்விம்  டிரசில்  இருப்பதை  ஃபோட்டோ  எடுத்தது  அப்பாவுக்கு  தெரிய  வந்ததும்  பிரச்சனை  ஆகிறது .,  அப்போ  நாயகி  நாயகனிடம்  இந்த  ஃபோட்டோ  எப்படி  பப்ளிக்ல  லீக்  ஆச்சு ? என  கேட்டு  சண்டை  போட்டிருக்க  வேண்டாமா? ஆனா  செய்யல


4 வில்லன்  சென்னை  டூ  டெல்லி  போக  ரிசர்வேஷன்  டிக்கெட்  எடுத்திருக்கிறான், நாயகிக்கு  அன் ரிசர்வ்டு  கம்பார்ட்மெண்ட்  ஓப்பன்  டிக்கெட்  எடுத்துத்தருகிறான்,  நாயகி  எப்படி  வில்லனுடன்  ரயிலில்  ஒரே  கம்ப்பார்ட்மெண்ட்டில்  பயணிக்க  முடியும் ?


5  நாயகி  தன்  அக்காவுடன் , வீட்டில்  இருக்கும்போது  ரொம்ப  ஃப்ரீயா  இருப்பது  போல  காட்டிக்கொள்பவள்  வீட்டை  விட்டு  வெளியே  வந்ததும்  ரொம்ப  கட்டுப்பெட்டியான  பெண்  போல்  நடந்து  கொள்வது  கேரக்டர்  டிசைனில்  நிகழ்ந்த  குழப்பம் 


6  காஞ்சிப்பட்டுடுத்தி  கஸ்தூரிப்பொட்டு  வைத்து  தேவதை  போல்  நீ  நடந்து  வர  வேண்டும்   பாடல்  காட்சியில்  சரணம்  வரிகள்  “ நீ  பொய்க்கோபம்  கொண்டு  என்னை  நீ  விலக்கனும்  என  காட்சிப்படுத்தும்போது  நாயகி  கோபமே  படலை , வெட்கம் தான்  படுது . சூப்பர்  ஹிட்  பாட்டு  பிக்சரைசேஷனில்  கோட்டை  விட்டு  விட்டார்களே? 


7  நாயகி  வீட்டில் சண்டை  போட்டுக்கொண்டு  எல்லாம்  வரவில்லை , அக்கா  தேடி  வரும்போது  அவரை  அலட்சியம்  செய்வதற்கான  காரணம்  சொல்லப்படவில்லை 


8  நாயகி  ஹோட்டலில்   சாப்பிட்டு விட்டு  அக்காவுக்குப்பிடித்த  க்ளோப்ஜாமூன்  பார்சல்  வாங்குகிறாள் , அதிகபட்சம்  10 வாங்குனாக்கூட  பார்சல்  சைஸ்  என்ன  சைஸ்ல  இருக்கலாமோ  அதை  விட  25  மடங்கு  பெருசா  அந்த  பார்சல்  இருக்கு


9   ஹோட்டலில்  நாயகி  சாப்பிடும்போது 4  பொறுக்கிப்பசங்க  அவளை  உத்துப்பார்க்கறாங்க , அப்பவே  அவ   உஷார்  ஆகி    நாயகனுக்கு  ஃபோன்  பண்ணி  தகவல்  தெரிவித்திருக்கலாமே?


 10  ஹோட்டலில்  லேட்  நைட்  ஆகி  விட்டதால்  நாயகி டாக்சியில்  வரும்போது  பேக்  கிரவுண்டில்  இருட்டாக  இருக்கிறது , ஆனா  ரவுடிகள்  அவளை  ஃபாலோ  பண்ணி  ரேப்  பண்ணும்போது  வெளிச்சம்  வெய்யில்  இருக்கு , அடுத்த  நாள்  காலை  வரை  வெயிட்  பண்ணி  ரேப்  பண்ணி  இருப்பாங்களோ ? 

11   கல்யாண  மேடையில்  நாயகி , நாயகன்  ஏதோ  ஒரு  ஆளிடம்  தகறாரு  செய்து  ஃபைட்  போட்டுக்கொண்டு  இருக்கிறார். டெம்ப்போ  ஏத்தறதுக்கான  சீனா? நம்பகத்தன்மையே  இல்லை ,  காலைல 6  மணிக்கு  முகூர்த்தத்தை  வெச்சுட்டு  யாராவது  அலாரம்  வெச்சு  நாலரை  மணிக்கு  வெள்ளென  எழுந்து  போய்  சண்டை  போட்டுட்டு  இருப்பாங்களா? 


12  நாயகனின்  கேரக்டர்  டிசைன்  ஆரம்பம்  முதல்  கடைசி  வரை   நாயகி  அல்லது  நாயகியின்  அக்கா  யார்  கிடைச்சாலும்  கரெக்ட்  பண்ணிடலாம்  என்ற  எண்ணத்தில்  இருப்பவராகத்தான்  காட்டப்படுகிறார், ஆனால்  க்ளைமாக்சில்  நாயகியின்  அக்காவிடம்  உனக்காகத்தான்  உன்  தங்கை  பாதுகாப்புக்காக  அவள்  பின்னால்  சுற்றினேன்  என  பல்டி  அடிப்பதும்  நாயகி  தன்  அக்காவிடம்  அக்கா  நீயும்  அவரும்  ஒருவரை  ஒருவர்  விரும்புகிறீர்கள்  என  எனக்குத்தெரியும் என  சொல்வதும்  நம்ப  முடியாத காட்சிகள் 


13  வில்லனான  நம்பியார்  லேடீஸ்  விஷயத்தில்  வீக் என   சில  காட்சிகளில்  தெளிவாக  காட்டி  விடுகிறார்கள், முன்  பின்  அறிமுகமே  இல்லாத  நாயகிக்கு  அவர்  உதவுவது , வீட்டில்  தங்க  ஏற்பாடு  செய்வது  எல்லாமே  உள்  நோக்கம்  கொண்டுதான்  என்பது  தெள்ளத்தெளிவாகதெரிகிறது , ஆனால்  அவரை  அநியாயத்துக்கு  நல்லவன்  ஆகக்காட்டி  இருப்பது  எல்லாம்  ஓவர் 


14  நாயகிக்கு  ஹிந்தியே  தெரியாது , ஆனால்  க்ளைமாக்சில்  அவர்  ஹிந்திப்பாட்டு  பாடுவது  போல  காட்டி  இருக்கிறார்கள் 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - நாயகி  கிளாமர்  டிரசில்  வருகிறார். மற்றபடி  அடல்ட்  கண்ட்டெண்ட்  காட்சிகள்  இல்லை . ரேப்  சீன்  கூட  பூடகமாக  உணர்த்தப்படுகிறது 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - . நாவலாக வந்து  படமாக  ஆன  படங்களைப்பார்க்கும்  ஆர்வம்  உள்ளவர்கள் மட்டும்  பார்க்கலாம்,  யூ  ட்யூப்ல  கிடைக்குது / ரேட்டிங்  2 / 5 




வயசு பொண்ணு
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புகே. என். குஞ்சப்பன்
ஆர். ஜி. எம். புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
ரோஜாமணி
லதா
வெளியீடுசெப்டம்பர் 21978
ஓட்டம்.
நீளம்3979 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

HUNT (2023) தெலுங்கு - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) @அமேசான் பிரைம்


சுதீர்  பாபு    
ரசிகர்களை  க்ளைமாக்சில்  அதிர்ச்சியில் ஆழ்த்தப்போகும் படம்.  டைட்டில் , போஸ்டர்  டிசைன்  எல்லாம் பார்த்து  இதுவும் வழக்கம்  போல  சிங்கம்  போலவோ , சாமி போலவோ  ஒரு போலீஸ்  ஆக்சன்  ஸ்டோரியாத்தான் இருக்கும்னு அசால்ட்டா   இருக்க  வேண்டாம் . இது  சைக்கோ  க்ரைம் த்ரில்லர்  படம் 

 

ஹீரோ சுதீர் பாபு ,  பரத்   இருவரும்  செம  க்ளோஸ்  ஃபிரண்ட்ஸ் . இருவருமே  அசிஸ்டெண்ட்  கமிஷனர்   கேட்டகிரி  தான். ஸ்ரீ காந்த்  கமிஷனர் . இவங்க  3  பேருமே  பதவியைத்தாண்டிய ஒரு நட்பு வட்டத்தில் இருக்காங்க

 

ஒரு தருணத்துல  கப்பல்  படையைச்சேர்ந்த  ஒரு  உயர்  அதிகாரியை  ட்ரங்க்கன்  டிரைவிங் கேஸ்ல  பரத்  பிடிச்சுடறார். அவர்  தன்னோட  செல்வாக்கைப்பயன்படுத்தி  என்ன என்னமோ செஞ்சு  பார்க்கறார். ஆனா  மீடியாவில்  அவர்  பேர்  ரிப்பேர் ஆகிடுது . இதனால  அந்த  ஆஃபீசருக்கு    பரத்  மேல செம காண்டு

 

பரத்தால் பாதிக்கப்பட்ட  இன்னொரு  ரவுடி  ஒருத்தன் இருக்கான். போலீஸ்  ஆஃபீசருக்குப்பகையாதான் ஏகப்பட்ட  பேர்  இருப்பாங்களே? இது மாதிரி  அவருக்குப்பைகையான  சில நபர்களின் சம்பவக்கோர்வைகளா  திரைக்கதை  நகருது

 

 ஒரு கட்டத்துல  பரத்துக்கு  ஒரு விருது  தரப்படும் விழாவில்  அவர்  மேடைல பேசிக்கொண்டு இருக்கும்போது  யாரோ  துப்பாக்கியால்  ஷூட்  பண்ணி  கொலை பண்ணிடறாங்க / ஸ்பாட்ல  இருந்த  சுதீர் பாபுவும்  , ஸ்ரீ  காந்த்தும்   எவ்வளவோ  முயற்சித்தும்  கொலையாளியைப்பிடிக்க  முடியல

 

 மீடியாக்கள்  இதைப்பெரிய  இஷ்யூ ஆக்குது . கேசை  க்ளோஸ்  பண்ணவேண்டிய  நெருக்கடி . சுதீர்  பாபு  ஒரு கட்டத்துல  ஸ்ரீ  காந்த்க்கு  ஃபோன்  பண்ணி  கொலையாளியை  கண்டு பிடித்து விட்டேன்னு  சொல்லும்போது எதிர்பாராத விதமா  ஒரு கார் ஆக்சிடெண்ட்ல மாட்டிக்கொள்கிறார்

 

 ஆஸ்பத்திரில  அவருக்கு  பழைய  நினைவுகள்  எல்லாம்  அழிந்து  விடுகிறது . அதாவது  அவர் போலீஸ்  ஆஃபீசர்  என்பதும்  மற்ற  சில  விபரங்கள்  எல்லாம் நினைவு   இருக்கிறது , ஆனால்  இந்த  கொலைக்கேஸ்  விபரங்கள்  மற்றும் இவரது  நண்பர்கள்  பற்றிய  விபரங்கள்  மறந்து  விடுகிறது

 

 

 இந்த  கேசை  மீண்டும்  நீயே டீல்  பண்ணுனு  ஸ்ரீ  காந்த்  சுதீர் பாபு  கிட்டே   ஒப்படைக்கறார்.அதுக்குப்பின்  அவர்  கொலையாளீயை  கண்டுபிடிச்சாரா? என்பதுதான் கதை 


சுதீர்பாபு   நடிப்பை  நான்  முதன் முதலாக AA AMMAYI KURINCHI MEEKU CHEPALI (2022) தெலுங்குப்படத்தில்தான்  பார்த்தேன் , சிறப்பான  நடிப்பு .. இதிலும்  அவரது   நடிப்பு பக்கா . குறிப்பாக  க்ளைமாக்ஸ்  காட்சியில் பின்னிப்பெடல்  எடுத்து விட்டார்


ஹிந்தியில்  வந்த  தல்வார்  படத்தில் வருவ்து  போல  ஹீரோவான  போலீஸ்  ஆஃபீசரை   சிலர்  குறை  சொல்லும்  காட்சிகள்  உண்டு. அதில் தயங்காமல்  நடித்தது  சபாஷ் . குறிப்பாக  அவருக்குக்கீழே  வேலை  செய்யும்  3  போலீஸ்  ஆஃபீசர்களும்  டீம் லீடரை  மாத்தனும்  என அவர்  முன்னாலயே  கமிஷனரிடம்  முறையிடும்  இடத்தில் சுதீர்பாபு  நடிப்பு  கலக்கல் 


பரத் நடிப்பில்  குறை  வைக்கவில்லை . மேடையில்  என்ன  பேசப்போகிறோம்  என்பதை  மனைவியிடம்  ஒத்திகை  பார்க்கும்  சீன்  ஒரு உதாரணம் . நண்பனை  விட்டுக்கொடுக்காத  நடிப்பும்   அருமை 


ஸ்ரீகாந்த்   ஹையர்  ஆஃபீசராக , கமிஷனராக  இருந்தாலும்  அலட்டிக்கொள்ளாத நடிப்பு 


ஜிப்ரானின்  இசையில்  ஒரே  ஒரு  பாடலுடன்  நிறுத்திக்கொண்டது  மகிழ்ச்சி, இது  போல  த்ரில்லர் படங்களுக்கு  பாடல்கள் , காமெடி  டிராக்  , டூயட்  எல்லாம்  ஸ்பீடு  பிரேக்கர்கள் , பின்னணி  இசையில்  பிரித்து  மேய்ந்து  இருக்கிறார்


அருள்  வின்செண்ட்டின் ஒளிப்பதிவு  கச்சிதம் பிரவீன் புடியின்  எடிட்டிங்கில் காட்சிகள்  விறுவிறுப்பாக  ட்ரிம்  செய்யப்பட்டு  இருக்கின்றன.

2013ஆம்  ஆண்டு  பிருத்விராஜ்  நடித்த  மும்பை  போலீஸ்  படத்தின்  அஃபிஷியல்  ரீமேக்  இது / 





சபாஷ்  டைரக்டர் 


1   முறைப்படி  படத்தின்  கதை  மொத்தமே  40 நிமிடங்கள்  தான். அதை  2 மணி நேரப்படமாக  இழுக்க  இயக்குநர்  கண்டு  பிடித்த  வெற்றி விழா  கமல்  ஞாபக மறதி உத்தி  அருமை 


2  கொலை  நடக்கும்  ஸ்டேடியம்   அருகில்  இருக்கும்  பில்டிங்  டீட்டெய்லிங்  எல்லாம் பக்கா 



3  திரைக்கதையின்  திருப்புமுனைக்காட்சியாக  வரும் GAY  காட்சி  கையளப்பட்ட   விதம்  குட் 


நச்   டயலாக்


 சில  கேஸ்களில்  சிலர்  பேசற  சாதாரண  விஷயங்கள்  கூட  க்ளூவாக  மாறும் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள்


1   ஒரு  கமிஷனர்  தன் செல் ஃபோனில்  வந்த  வாய்ஸ்  மெசேஜைக்கூட  கவனிக்காமல்  இருப்பாரா?


2  முக்கியமான  கொலைக்கேஸ்  பற்றிய  விபரத்தை  அவருக்குக்கீழ்  பணி ஆற்றும்  போலீஸ்  ஆஃபீசர்  அனுப்பிய  மெசேஜை  அவர்  கவனிக்காமல்  இருப்பது  நம்பும்படி  இல்லை . அதை  சில  மாதஙக்ள்  கழித்து  அவர்  சொன்னதும்  டக்னு  ஃபோனில்  எடுத்து  உடனே  ஓப்பன்  பண்ணுவதும்  நம்பற  மாதிரி  இல்லை 


சி.பி ஃபைனல்  கமெண்ட்  -   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  பிரமாதம்  ,அந்த  ஒரு  ப்ளஸ்  பாய்ண்ட்டை  வைத்தே  குறும்படமாக  எடுக்க வேண்டிய  படத்தை  முழு நீளப்படமாக  எடுத்த  இயக்குநரின் திறமைக்கு  ஒரு ஷொட்டு . ரேட்டிங்  3 / 5 



Hunt
Directed byMahesh Surapaneni
Based onMumbai Police
Produced byV. Ananda Prasad
StarringSudheer Babu
Srikanth
Bharath
CinematographyArul Vincent
Edited byPraveen Pudi
Music byGhibran
Production
company
Release date
  • 26 January 2023
CountryIndia
LanguageTelugu

Thursday, February 23, 2023

ஃபைவ் ஸ்டார் (2002) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா )@ராஜ் டிவி


 ஆனந்த  விகடன்  பத்திரிக்கையில்  பணியாற்றும்போதே  பிரமாதமான  ஆர்ட்டிக்கிள்ஸ்  எழுதி  மக்கள்  மனம்  கவர்ந்த  சுசி கணேசன்  இயக்குநர்  மணிரத்னம்  அவர்களிடம்  அசிஸ்டெண்ட்  டைரக்டராக  பம்பாய் , இருவர் , உயிரே ( தில் ஸே )  ஆகிய  படங்களில் பணியாற்றினார். இவரது  முதல்  படமே  ஃபைவ்  ஸ்டார் தான் . இது  தமிழக  அரசின் சிறந்த  திரைக்கதைக்கான  விருது  பெற்றது .. சினேகா  அறிமுகம்  ஆன  விரும்புகிறேன் 2004 ஆம்  ஆண்டில்  தமிழக  அரசின்  சிறந்த  இயக்குநருக்கான  விருதை  பெற்றுத்தந்தது . 2003 ம்  ஆண்டில்  ரிலீஸ்  ஆன திருட்டுப்பயலே  தமிழக அரசின்  சிறந்த  படத்துக்கான  விருதைப்பெற்றதோடு  கமர்ஷியலாகவும்  சூப்பர்  டூப்பர்  ஹிட்  படமாக  அமைந்தது  . மிகப்பெரும்  எதிர்பார்ப்புடன்  ரிலீஸ்  ஆன  கந்தசாமி  அட்டர் ஃபிளாப்  படமாக  அமைந்ததால்  அதற்குப்பின்  இவருக்கு  எல்லாமே  சறுக்கல்  படங்களாக  அமைந்தன


ஸ்பாய்லர்  அலெர்ட்


காலேஜ்  நண்பர்கள்  ஐந்து  பேர், அதில்  மூன்று  ஆண்கள், இரு  பெண்கள் . இந்த   ஒன்லைனைக்கேட்டதும்  உங்கள்  கற்பனையில்  எழும்  கதையே  இதில்  இல்லை 


  ஐந்து  பேரும்  ஒரே  கம்பெனியில்  ஒன்றாக  வேலை  செய்ய  ஆசைப்படுகிறார்கள் . அதற்காக  சில வேலை  வாய்ப்பையும்  இழக்கிறார்கள் . அவர்கள்  ஆசைபப்படி  ஒரே  கம்பெனியில்  வேலை  கிடைக்கும்போது  அந்த  ஐவரில்  ஒருவனுக்கு  மட்டும்  கம்பெனியின்  மும்பை  பிராஞ்ச்சில்  போஸ்ட்  கேட்க  சென்னை  பிராஞ்ச்சில்  போஸ்ட்  கிடைத்த  மற்ற  நான்கு  பேரும் திடுக்கிடுகிறார்கள் 


 கிராமத்தில்  அப்பாவின்  வற்புறுத்தலால்  ஒரு  கிரமாத்துப்பெண்னை  திருமணம்  முடித்த  கையோடு  அவளை  அங்கேயே  விட்டு  விட்டு  இங்கே  வந்திருக்கும்  நண்பன்  அந்த  அவமானத்தை  மறைக்கத்தான்  இவர்களோடு  பணி  புரிய  ஆசைப்படவில்லை  என  தெரிகிறது


அந்த  ஐந்து  பேரில்  மற்ற   இரு  பெண்களுக்கும்  ஒரு  ஆணுக்கும்  வெவ்வேறு  இடத்தில்  திருமணம்  முடிகிறது


  சம்பவம்  நடந்து  இரு  வருடங்கள்  கழித்து நாயகன்  ரயிலில்  ஒரு  பெண்ணைப்பார்த்து  காதல்  கொள்கிறான். நாயகி  பணி புரியும்  இடத்திற்கு  அடிக்கடி  வந்து  பழக்கம்  வைத்துக்கொள்கிறான். நாயகியின்  வீட்டுக்கு  தன்  நண்பர்களுடன்  வந்து  பிரப்போஸ்  பண்ண  நினைக்கும்  தருணத்தில்  தான்  நாயகி  தங்கள்  ஓடிப்போன  நண்பனின்  மனைவி  என  தெரிகிறது


 அதிர்ச்சி  அடைந்த  அனைவரும்  ஓடிப்போன  நண்பனைக்கண்டு பிடித்து  நாயகியிடன்  சேர்த்து  வைக்க  முடிவெடுக்கிறார்கள் 


ஓடிப்போன  நண்பனை  வில்லன்  என  வைத்துக்கொள்வோம்,  நாயகி  மீது  ஆசைப்படும்   நண்பனை  நாயகன்  என  வைத்துக்கொள்வோம், இப்போது   நாயகன், நாயகி ,  வில்லன்  என  முக்கோண  சிக்கல்  கதை  தான்  மீதி  திரைக்கதை


நாயகனாக  பிரசன்னா  அருமையான  நடிப்பு . நாயகி  தன் நண்பனின்  மனைவி  என  தெரிந்து  அதிர்ச்சி  காட்டும்  இடம்  கச்சிதம் . ரயிலில்  பாடும்  காட்சியில் இவரது  நடன  அசைவுகள்  நளினம்

ஹாலிவுட்டின்  சிறந்த  உதட்டழகி  என  அஃபிஷியலாக  அறிவிக்கப்பட்ட  ஏஞ்சலீனா  ஜூலியின்  தங்கையோ  என  வியக்க  வைக்கும்  கோலிவுட்டின்  உதட்டழகி  கனிகாவின்  லிப்ஸ்  க்ளோசப்  ஷாட்ஸ்  கலக்கல்  ரகம், ஒளிப்பதிவாளர்  ரசனையோ ரசனை .  ரயிலில் நாயகனுடன்  காம்போ  காட்சிகள் , ஷாப்பிங்  காம்ப்ளெக்சில்  மேனேஜராகக்காட்டும்  கம்பீரம் , கிராமத்தில்  வாளுடன் கிராமத்தில்  காட்டும்  க்ளைமாக்ஸ்  வீரம்  என  படம்  முழுக்க  நாயகிக்கு  ஸ்கோப்  உள்ள  கதை ,  கனிகா  உணர்ந்து  நடித்திருக்கிறார்


வில்லனாக  கிருஷ்ணா  கனகச்சிதம், க்ளைமாக்சில்  அவரது  மாறுபட்ட  கெட்டப்   அடடே  போட  வைக்கிறது 


மற்ற    நண்பர்களாக  சந்தியா  பிரகாஷ் , மங்கை ,  கார்த்திக்  மூவரும்  ஓக்கே  ரகம்

 வில்லனின்  அப்பாவாக  உதிரிப்பூக்கள்விஜயன்  அருமையான  நடிப்பு, இவர்  குணச்சித்திரம் , வில்லத்தனம் , நாயகன்  என  எந்த  கேரக்டர்  கிடைத்தாலும்  அதில்  முத்திரை  பதிப்பவர் 


டிடிஆர்  ஆக  சிட்டி  பாபு  ஒரே  ஒரு  சீனில்  காமெடிக்கு /


ஸ்ரீராம்  பரசுராம், அனுராதா  ஸ்ரீராம்   இருவரும் தான்  இசை   எல்லாப்பாடல்களும்  செம  ஹிட்  , மணி  ரத்னம்  படம்  பார்ப்பது  போல்  இருக்கிறது  பிஜிஎம்  கச்சிதம் 


ரவிவர்மனின்  அற்புதமான  ஒளிப்பதிவில்  காட்சிகள் கலர் ஃபுல் 

வெளிநாட்டுக்காட்சிகள்  கண்ணுக்குக்குளுமை 


ஸ்ரீகர்  பிரசாத்தின்  எடிட்டிங்கில்   கடைசி  30  நிமிடங்கள்  தவிர்த்து  அனைத்தும்  கச்சிதம் இரண்டரை  மணி  நேரம்  படம்  ஓடுது , 




சபாஷ்  டைரக்டர்


1  தன்  விருப்பத்துக்கு  மாறாக  கிராமத்துப்பெண்ணை  அப்பாவின்  வற்புறுத்தலால்  திருமணம்  செய்யும்  நபர்  மண  மேடையில்  பெண்ணைப்பார்க்கும்போது  அங்கே  கல்யாணக்கோலத்தில்  கண்டிஷன்  ஆன  அப்பா  உட்கார்ந்திருப்பது  போல்  கற்பனை  செய்வது 


2   படம்  ஆரம்பித்த  முதல்  20  நிமிடங்களிலேயே  அடுத்தடுத்து  3 கொண்டாட்ட  பாடல்களுடன்  மணிரத்னம்  பாணியில்  ஜாலி வாலி பட்டாசு 


3  பிரசன்ன  கனிகாவை  ரயிலில்  பார்த்த  நிமிடமே  விருப்பப்பட்டு பின்  பழகிய  பின்  அவரை  நினைத்து  துள்ளாட்டத்துடன்  பாடும்  மெகா ஹிட்  மெலோடி  சாங்க்,,, அந்தக்காட்சியில்  கனிகாவுக்கான க்ளோசப்  ஷாட்கள் , பிரசன்னாவின்  நடிப்பு 


4   நாயகன்    ஒருதலையாய்  காதலித்த  பெண்  நண்பனின்  மனைவி  என்று  அறிந்ததும்  தான்  கொண்டு  வந்த  மியூசிக்  கிஃப்டை  தராமல்  மறைத்து  வைக்க  முற்படும்போது   அது  எதேச்சையாக  கீழே  விழுந்து  ”    ஈஸ்வரி  உன்னைக்கல்யாணம்  பண்ணிக்க  ஆசைப்படறேன்”  என  ஓப்பன்  ஆகி  பாட்டு  வரி  வரும்போது  நாயகியும் , அவள்  குடும்பத்தாரும்  அதிர்ச்சி  ஆவது , நண்பர்கள்  முகம் சுருங்கிப்போவது 


5  நாயகி  கிஃப்டாகத்தந்த  பேண்ட்  சர்ட்டை  ஹேங்கருடன்   அந்தரத்தில்  தொங்க  விட   கற்பனையில்  அந்த  டிரஸுக்குள்  இருந்து  நாயகி  சோளக்கொல்லை  பொம்மை  போல  முளைத்து  வந்து  டான்ஸ்  ஆடும்  காட்சி 


6  நிச்சயக்கப்பட்ட  திருமணங்களில்  இரு  தரப்பு  சம்மதமும்  பெற வேண்டும், அப்படி செய்யாமல்  நடக்கும்  திருமணங்கள்  ஆபத்தே  என்ற  கதைக்கருவை  கமர்ஷியலாக  சொன்ன விதம்  அருமை 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  சண்டே...   (  ஓப்பனிங்  சாங்  கொண்டாட்ட  பாடல் )


2   எங்களுக்கு  (  ஃபிரண்ட்ஸ்  எஞ்சாய்  மொமெண்ட்  சாங்)


3  ஃபைவ்  ஸ்டார்  ஃபைவ்  ஸ்டார்  ஹொரே  ஹுர்ரே  ( நண்பர்கள்  வேலை  கிடைத்த சந்தோஷப்பாடல் )


4 ரயிலே  ரயிலே  ஒரு  நிமிஷம்   (  ஹீரோ  ஹீரோயினை  நினைத்துப்பாடும்  மெலோடி)


5   ஈஸ்வரி  உன்னைக்கல்யாணம்  பண்ணிக்க  ஆசைப்படறேன், திரு  திருடா   திரு  திரு திருடா  தீஞ்சுவை  தானடா   (  லவ் ப்ரப்போஸ்  ட்ரீம்  சாங் ) 



6  எங்களுக்கு  நல்ல  காலம்  இது   ( இன்ஸ்ட்ரூமெண்ட்டல்  ம்யூசிக் சாங்)


7  எங்கிருந்து  வந்தாயடா  எனை  பாடுபடுத்த  எனைத்தேடி  எடுக்க 



  ரசித்த  வசனங்கள் 


1  ஆணும்  பெண்ணும்    சேர்ந்து  பழகுனா  அது  காதலாதான்  இருக்கனும்னு  அவசியம்  இல்லை 


2   இங்கே  பீச்சுக்கு  வர்றவங்க  பலர்  நண்பர்களா  வந்து  காதலர்களா  மாறிடறாங்க , அல்லது  காதலர்களா  வந்து  நண்பர்களா  பிரிஞ்சுடறாங்க 


3   சமையல்காரான்னா  அவ்ளோ  கேவலமா?  எல்லா  ஹோட்டல்களிலும்  ஆண்  தான்  சமையல், ஒரு ஹோட்டல்லயாவது  பொம்பளை  சமைச்சுப்பார்த்திருக்கீங்களா?


4  இத்தனை  பேரு  என்னைக்காதலிச்சப்ப  என்  கணவர்  உங்களுக்கு  மட்டும்  ஏன்  என்னைப்பிடிக்காம  போச்சு ? அப்டினு  கேட்கப்போறேன்


5  தொலைஞ்சு  போனவனைக்கண்டு பிடிக்கலாம், ஆனா  மறைஞ்சு  நிக்கறவனை  எப்படிக்கண்டுபிடிக்க ?

6  தொலைஞ்சு  போன  புருசனைக்கண்டு  பிடிக்கப்போறோம்கற  சந்தோஷத்தை விட  ஜாலியா  ஃபாரீன்  டூர்  சுத்திப்பார்க்கலாம்கற  சந்தோஷம்  தான்  அதிகம், இல்லையா?


சரி , நான்  வர்ல


7  அப்பன்  மகனுக்கு  செஞ்சதை  , அண்ணன்    தங்கைக்கு  செஞ்சதை  சொல்லிக்காட்டக்கூடாது 


8  கோபம்  வந்தா   கொட்டித்தீர்ப்பதுதான்  கிராமத்து  அப்பாக்களின்  பழக்கம் 


9  உலகத்துல  சந்தேகப்படாத  புருசன்  கிடைச்சுட்டா  அதை  விட  சந்தோஷம்    பெண்ணுக்கு  வேற  இல்லை 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  தனக்கு  கிராமத்துக்குப்போக  விருப்பம்  இல்லை  என்று  கூறும்  நண்பனை  வலுக்கட்டாயமாக  ரயில்  ஏற்றி  அனுப்பும்  நண்பர்கள்  அவன்  பாதி  வழியில்  இறங்கி  ரூட்  மாற  வாய்ப்புண்டு  என்பதை  ஏன்  மறந்தார்கள்:?  யாராவது ஒருவர்  அவர்  கூட போய்  விட்டு  வந்திருக்கலாமே? கதைப்படி  அவர்  பாதி  வழிலயே  இறங்கிடறார்

2  நாயகி  தான்  அந்த  ஷாப்பிங்  காம்ப்ளெக்ஸ்  மேனேஜர்  , அவரது  ஃபோட்டோ  வை  டெவலப்  பண்ண  ஹீரோ  அவரது  ஃபோட்டோஷாப்பிலேயே  கொடுக்கிறார். அதை  டெவலப்  பண்ணி  பிரிண்ட்  போட்ட  ஆள்  மேனேஜரிடம்  அதை  தெரிவிக்க  மாட்டாரா? அட்லீஸ்ட்  இது  மேனேஜர்  ஃபோட்டோ  ஆச்சே? என  வியக்க  மாட்டாரா? 


3   விஜயன்  தற்கொலை  செய்ய  முயற்சிக்கும்  காட்சி  உதிரிப்பூக்கள்  க்ளைமாக்ஸ்  காட்சியை  நினைவுபடுத்துகிறது. அதைத்தவிர்த்திருக்கலாம்.அந்த  தற்கொலையால்  மகன்  ஃபாரீனில்  இருந்து  சாவு  சடங்குக்கு  திரும்பி  வருவதாகக்காட்டி  இருந்தால்  கூட  ஏதாவது  பிரயோஜனமாக  இருந்திருக்கும், அதுவும்  இல்லை  என்பதால்  அந்தக்காட்சி  தண்டம்தான்’


4   படத்தின்   கடைசி  அரை  மணி  நேரம்  தேடுதல்  வேட்டை  என்பதால்  கொஞ்சம்  போர்  அடிக்கிறது, இதே போல்  திரைக்கதை  அம்சம்  கொண்ட  ஆறு  மெழுகுவர்த்திகள் ,  உட்பட  பல  படங்கள்  அந்த  ஸ்லோனெஸ்  காட்சிகள்  கொண்ட  படங்கள்  தான் 


5  நாயகியின்  கணவன்  கடைசி  வரை  தன்  தவறை  உணர்ந்ததாகவே  தெரியவில்லை . அவனுக்கு  ஒரு படிப்பினைக்காட்சி  வைத்திருக்கலாம் 


6  படம்  முழுக்க  தன்  கணவனைக்காண  ஆவலாக  இருந்த  நாயகி   கணவனின்  யோக்யதை  தெரிந்ததும் இனி  நான்  எதுக்காக  அவனுக்காக அழனும் என  ஒரே  வசனத்தில்  பல்டி  அடிப்பது  கொஞ்சம்  செயற்கை  தட்டும்  காட்சியாக  இருந்தது


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  க்ளீன்  ய்யூ சர்ர்டிஃபிகேட்  ஃபிலிம்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ரொமாண்ஸ் பட  ரசிகர்கள் , மணிரத்னம்  ரசிகர்கள் , கனிகா  ரசிகர்கள்  பார்க்கலாம், ஜாலியான  டைம்  பாஸ் லவ்  மூவி  , ரேட்டிங்  3.25 / 5 

நீ நான் நிழல் (2014) - தமிழ் - ASHA BLACK(2014) - (மலையாளம்) சினிமா விமர்சனம் ( சைபர் க்ரைம் த்ரில்லர் ) @ ஜெ மூவிஸ்


  2014 ஆம் ஆண்டு  மலையாளம், தமிழ்  ஆகிய  இரு  மொழிகளில் ஒரே  சமயத்தில்  எடுக்கப்பட்டஇந்தப்படம் இண்டர்நெட்  வசதி  பெருகிய  பின் நடக்கும்  ஆன் லைன்  சேட்டிங் , அதனால்  ஏற்படும்  குற்றங்கள்  பற்றி  பேசுகிறது


ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1 


நாயகன் ஒரு  போலீஸ்  ஆஃபீசர். நகரில்  அடுத்தடுத்து  ஐந்து  ஆண்கள்  கொலை  செய்யப்படுகிறார்கள் . பொது  வாழ்க்கையில்  அந்த  ஐந்து  பேருக்கும்  எந்த  விதமான  தொடர்பும்  இல்லை , அதனால்  பர்சனல்  வாழ்க்கையை அலசி  ஆராய்ந்ததில்  அவர்கள்  ஐந்து  பேரின்  ஃபேஸ்  புக்  அக்கவுண்ட்டிலும்  பொது  நண்பர்  ஒருவர்  இருக்கிறார்..அவரைப்பற்றி  விசாரணை  நடக்கின்றது


சம்பவம்  2 


நாயகி 17  வயது  நிரம்பிய  அழகி . அவள் தன் 12  வயது  முதல்  ஆன்  லைனில்  பலருடன்  சேட்டிங்கில்  இருக்கிறாள், அது  அவளுக்கு  ஒரு  டைம்  பாஸ்.அவளது  பெற்றோர்  அவளுக்கு  சரியான  அன்பு, பாசம், கவனிப்பு, நேரம்  எதையும்  ஒதுக்கவில்லை ,அதனால்  இப்படி  ஆகிறாள் ,மலேசியாவைச்சேர்ந்த  நாயகி  இந்தியாவில்  கோவையில்  ஒரு இளைஞனுடன்  சேட்டிங்  செய்கிறாள் , ஆரம்பத்தில்  சாதா  சேட்டிங்கில்  ஆரம்பித்த  அவர்கள்  நட்பு  பிறகு  ஆன்  லைன்  வீடியோ  கால்  நட்பாக  வளர்ந்து   நேரில்  சந்திக்க  முடிவெடுக்கும்  அளவுக்கு  நட்பு  இறுகுகிறது


இந்தியாவில்  இருந்து  மலேசியாவுக்கு  வந்த  அந்த  இளைஞன் குறிப்பிட்ட  இடத்தில்  காத்திருக்க  நாயகி  வரவில்லை . பிறகு  அலைந்து  திரிந்து  அவள்  வீட்டைக்கண்டு  பிடித்துப்போனால்  அங்கே  அவள்  தற்கொலை  செய்து  இறந்திருக்கிறாள் 


 மேலே  கூறிய  இரண்டு  சம்பவங்களும்  எந்தப்புள்ளியில்  இணைகிறது  என்பதுதான்  திரைக்கதை 


  போலீஸ்  ஆஃபீசராக  சரத்குமார்  கம்பீர  நடிப்பு , ஆனால்  அந்த  ஒட்டுத்தாடியை  தவிர்த்திருக்கலாம், அவர்  கூடவே  இருக்கும்  இரு  ஆஃபீசர்கள்  சும்மா  வந்துட்டுப்போறாங்க 


 நாயகியாக   இஷிதா  கண்களைக்கொள்ளை  கொள்ளும்  அழகு. 17  வயதுப்பெண்ணாக  கச்சிதமாக  வந்து  போகிறார்


 அவரது  காதலனாக அர்ஜூன்  லால்  நிறைவான  நடிப்பு , வசதி மிக்க  நபரான  அவர்  கொஞ்சம்  கொஞ்சமாக  ஆன்  லைன்  சேட்டிங்க்கு  அடிமை  ஆவது கச்சிதமாக  காட்டப்படுகிறது. நடிப்பும்  கனகச்சிதம் 


டாக்சி  டிரைவராக மனோஜ்  கே  ஜெயன் , நாயகியின்  தந்தை  ஆக  ராஜன்  பி  தேவ், காதலனின்  அம்மாவாக  ஃபாத்திமா  பாபு  அனைவரும்  கொடுத்த  கேரக்டரை  கச்சிதமாக  உள் வாங்கி  நடித்திருக்கிறார்கள் 


நிகில்  வேணுவின்  எடிட்டிங்கில்  கச்சிதமாக  2  மணி  நேரத்தில்  படத்தை  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்


 கதை  திரைக்கதை  வசனம்  எழுதி  இயக்கி இருப்பவர்  ஜான்  ராபின்சன்


 க்ரைம்  த்ரில்லர்    மாதிரி  ஆரம்பித்து  ஃபிளாஸ்பேக்கில்  ரொமாண்டிக்  ஸ்டோரி  ஆக  டோன்  ஆப்  ஆகும்  கதை  மீண்டும்  த்ரில்லர்  ஜோனுக்குள்  வரும்போது  ஆடியன்சுக்கு  சரியாக  கனெக்ட்  ஆகவில்லை 


இதை  ரொமாண்டிக்  த்ரில்லராக  எடுக்கலாமா? க்ரைம்  த்ரில்லராக  எடுக்கலாமா? என  இயக்குநர்  கொஞ்சம்  குழம்பி  இருக்கிறார் என்பது  தெரிகிறது 


 ஜெசின்   ஜார்ஜ்ஜின்  இசையில்  பாடல்கள் சுமார்  ரகம், பிஜிஎம்  அதை  விட  சுமார்  ரகம் . ஒளிப்பதிவு  குட் 


சபாஷ்  டைரக்டர்

1  நாயகியின்  ஃபேஸ் புக்  ஐடியின் பாஸ்வோர்டை  அவளது  காதலன்  கண்டுபிடிக்கப்பயன்படுத்தும்  யுக்தி  குட் 


2  நாயகியின்  ஃபிளாஸ்பேக் கதையை  கார்ட்டூன்  வடிவில்  கவிதை  போல  தந்த  விதம் , வெரிகுட்  பிரசண்ட்டேஷன்


3   இந்தக்கால  இளைஞர்கள்  மனம்  கவர்ந்த  விதத்தில்  ஆன்  லைன்  சேட்டிங்கை  படம்  ஆக்கிய  விதம்


4  மெயின்  கதையோடு  டாக்சி  டிரைவர்  மனைவி  கதை , போலீஸ்  ஆஃபீசரின்  13  வயது  மகள்  கதையை  சாமார்த்தியமாக  இணைத்தவிதம்


5   க்ளைமாக்ஸ்  காட்சி  சட்டத்துக்கு  உட்படாததாக  இருந்தாலும்  அப்ளாஸ்  அள்ளும்  காட்சி 

  ரசித்த  வசனங்கள் 


1  வீட்டு  வாடகை  எப்போதான்  தர்றதா  உத்தேசம் ? 


டோண்ட்  ஒர்ரி, காந்தி  ஜெயந்தி  அன்னைக்கு  தந்துடறேன்


 எப்படி ? அவனை  மிரட்டி  பணம்  தர  ஒத்துக்க  வெச்சுட்டேன் பார்த்தியா?


 ஆனா இப்போதைக்கு  நீங்க  அவன்  கிட்டே  இருந்து  பணம்  வசூலிக்கவே  முடியாது

ஏன்?


ஏன்னா இன்னைக்கு  தேதி அக்டோபர்  3 , இனி  இன்னும்  ஒரு  வருசம்  நீங்க  காத்திருக்கனும் 


2-டெய்லி  நேரில்  சந்தித்துப்பழகும்  பெண்களையே  இப்பவெல்லாம்  நம்ப  முடியறதில்லை , ஆனா  இண்ட்டெர்நெட்டில்  பழகிய  பெண்ணை  நம்ப  முடியுமா?


3   இசை , கலை  இரண்டிலும் அதிர்ஷ்டம்தான்  துணை  நிற்கனும், எப்போ  ஜெயிப்போம்னு  சொல்ல  முடியாது



4   டேய்.. உன்  ஆளை  அடுத்த  சேட்டிங்ல  ஆறு  ஃபோட்டோஸ்  அப்லோடு  பண்ணச்சொல்லு 


எதுக்கு  ஆறு?


 ஒண்ணு  உனக்கு , மீதி  அஞ்சு  எங்க  அஞ்சு பேருக்கும்  தலா  1 


5




 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 



1  தற்கொலை  செய்த  பெண்ணின்  லேப்  டாப்பை  போலீஸ்  ஏன்  கைப்பற்றவில்லை ?  காதலியின்  லேப் டாப்  காதலன்  கைக்கு  எப்படி  வந்து  சேர்கிறது ?


2  காதலன்  ஃபேஸ்புக்  அக்கவுண்ட்டில்  நுழைய  முயற்சிக்கும்போது  பாஸ்வோர்டு  தெரியாமல்  குத்து  மதிப்பாக  ஒவ்வொன்றாக  போட்டு  வரும்போது குறிப்பிட்ட  முயற்சிக்கு  மேல் செல்  ஃபோன்  நெம்பர்க்கு  பாஸ்வோர்டு  ரி   செட்டப்  ஆப்சன்  வருமே?  அப்படி  வராதது  ஏன் ?


3  சீரியசான  கதையில் எம் எஸ்  பாஸ்கரின்  மொக்கை  காமெடி  டிராக்  எரிச்சல் .




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- கதைக்களம்  எசகு பிசகானது  என்றாலும்   காட்சிகள்  கண்ணியம், வாய்ப்பிருந்தும்  கிளாமர்  காட்சிகளை  இயக்குநர்  தவிர்த்திருக்கிறார், குட்  



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஆன்  லைன்  சேட்டிங் , லவ்வர் , மர்டர்  என  கதை  செல்வதால்   2 கே  கிட்ஸ்க்கு  எண்ட்டர்டெயின்மெண்ட்  படமாகவும், நைண்ட்டீஸ்  கிட்ஸ்க்கு அவரவர்  மகள்களுக்கான  விழிப்புணர்வுப்படமாகவும்  எடுத்துக்கொள்ளலாம்.  பார்க்கத்தகுந்த  இந்தப்படம்  யூ  ட்யூப்பில்  கிடைக்கிறது , நான்  ஜெ  மூவிசில்  பார்த்தேன் , ரேட்டிங் 2.25 /5 







Asha Black / Nee Naan Nizhal
Asha Black.jpg
Malayalam poster
Directed byJohn Robinson
Written byJohn Robinson
Screenplay byJohn Robinson, Santhosh Laxman
Story byJohn Robinson
Produced byBindhu John Varghese
StarringIshitha Chauhan
Arjun Lal
R. Sarathkumar
Krishnabhaskar Mangalasserri
CinematographyAlby
Edited byNikil Venu
Music byJecin George
Production
company
Nimita Productions
Release date
  • 10 October 2014
CountryIndia
LanguagesMalayalam
Tamil

Tuesday, February 21, 2023

விடுதலை (1986) -தமிழ் - QURBANI (1980) ஹிந்தி - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா) @முரசு டி வி

 


வினோத் கண்ணா , ஜீனத் அமன், அம்ஜத்கான், ஃபெரோஸ்  கான்  காம்பினேஷனில்  ஹிந்தியில்  ஃபெரோஸ்கான்  இயக்கிய  குர்பாணி  என்ற  ஹிந்திப்படம் 1980ல்  ரிலீஸ்  ஆகி  மியூசிக்கல்  ஹிட்  ஆனது,டைட்டிலுக்கு  அர்த்தம் தியாகம்.  அதை  தமிழில்  ரீமேக்கும்போது  அந்தக்காலத்தில்  ஒரு  மல்ட்டி  ஸ்டாரர்  படமாக  தமிழ் , கன்னடம் ஆகிய  இரு  மொழிகளில்  ரிலீஸ்  பண்ண  தமிழக  சூப்பர்  ஸ்டார் rரஜினி  , கன்னட  சூப்பர்  ஸ்டார்  விஷ்ணு வர்தன் ,நடிகர் திலகம்  சிவாஜி  கணேசன்  காம்பினேஷனில்  மிகப்பெரும்  எதிர்பார்ப்பில்  ரிலீஸ்  ஆகி எதிர்பார்த்த  அளவு  மாபெரும்  ஹிட்  ஆகாமல்  மீடியம்  ஹிட்  ஆன  படம் 


ஆனால்  ஹிந்தியில்  இது  ஒன்றரைக்கோடி  பட்ஜெட்டில்  தயார்  ஆகி   12  கோடி  பாக்ஸ்  ஆஃபீசில்  வசூலைக்குவித்த  படம்.தமிழில் இதற்கு  ரிலீஸ்  டைமில்  பிரம்மாண்டமான  விளம்பரங்கள்  எல்லாம்  தந்தும்  ஏன்  படம்  மெகா  ஹிட்  அடிக்கவில்லை  என  தெரியவில்லை 

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு  திருடன். கார்  திருடுவது ,  பூட்டிய  வீட்டை  சாவி  இல்லாமல் , பூட்டை  உடைக்காமல்  திருடுவது  ஆகியவற்றில்  எக்ஸ்பர்ட். இவனுக்கு  ஒரு  காதலி  உண்டு ., காதலி கிளப்ல  டான்ஸ்  ஆடுபவர். சில  திருட்டுக்கேசில்  நாயகன்  கைது  ஆகி  ஒன்றரை  வருடங்கள்  ஜெயில்  தண்டனை  பெற்று  உள்ளே  போகும்போதுதான்  காதலிக்கு  தன்  காதலன்  ஒரு  திருடன்  என்பதே  தெரியும் 


வில்லன்  ஒரு  பெரிய  கடத்தல்காரன், அவனிடம் பணி புரியும்  நாயகன்  நெ 2  ஒரு கட்டத்தில்  கடத்தல்  தொழிலை  விட்டு  விலக நினைக்கும்  அடியாளை  வில்லன்  போட்டுத்தள்ளுவதைப்பார்த்து  வில்லனுடனான  கூட்டணியை  முறித்துக்கொள்கிறான், நாயகன்  நெ  2  திருமணம்  ஆகி  மனைவியை  இழந்து  ஒரு மகளுக்கு  தந்தை . நாயகன்  நெ 2 , அவன்  குழந்தை  இருவரும்  நாயகியிடம்  நெருக்கமாகப்பழகுகிறார்கள் .நாயகன்   நெ2 விற்கு  நாயகியின்  காதல்  பற்றி  தெரியாது , ஒருதலையாய்  நாயகியைக்காதலிக்கிறான். நாயகிக்கு  நாயகன்  நெ 2 வின்  காதல்  பற்றி  தெரியாது 


 நாயகன்  ஜெயிலில்  இருந்து  தண்டனைக்காலம்  முடிந்து  ரிலீஸ்  ஆகிறான். நாயகனை  ஜெயிலில்  அடைத்த  போலீஸ்  ஆஃபீசர்  வேறு  வேலை  எதுவும்  இல்லாமல்  நாயகன்  பின்னாலேயே  சுற்றிக்கொண்டிருக்கிறார். அவன்  அடுத்து  பண்ணப்போகும்  திருட்டை  தடுக்கவாம்


  வில்லனுக்கு  நாயகன்  உதவி  தேவைப்படுகிறது 


 இதற்குப்பின்  நாயகன்  நெ1 , நாயகன்  நெ2 , நாயகி , போலீஸ்  ஆஃபீசர் . வில்லன்  ஆகியோர்  வாழ்க்கையில்  என்ன  நடந்தது ? என்பதுதான்  திரைக்கதை 


நாயகன்  நெ 1  ஆக   சூப்பர்  ஸ்டார்  ரஜினி , எனர்ஜெடிக்கான  பர்ஃபார்மென்ஸ் ,  சிகரெட்  தூக்கிப்போடுவது முதல்  அவரது  அக்மார்க்  ஸ்டைல்கள்  பல  இதில்  உண்டு 


நாயகன்  நெ 2  ஆக  கன்னட  சூப்பர் ஸ்டார்  விஷ்ணுவர்தன்.. அழகிய  முகம், மோகன் , சுரேஷ்  போல  லவ்  சப்ஜெக்ட்டில்  நடிக்க   ஏற்ற  முகம், ஆக்சன்  காட்சிகளிலும்  நல்லா  பண்ணி  இருக்கார் ‘


 நாயகி  மாதவி , படத்தின்  அனைத்துப்பாடல்களும்  இவருக்கே , 2  கிளப்  டான்ஸ் ,  2  டூயட் ,  ஒரு  மெலோடி  , ஒரு  டப்பாங்குத்து  என  பாடல்  காட்சிகளுக்கே  தனி சம்பளம்  தந்திருப்பாங்க  போல .  டூ பீஸ்  டிரஸ்  காட்சிகளும்  உண்டு 


தமிழ்  சினிமா  உலகில்   டூ பீஸ்  டிரசில்  அழகாக  வந்து  போன  நாயகிகளில்  மாதவி  முக்கியமான  நபர் 


நடிகர்  திலகம்  சிவாஜி  கணேசன்  போலீஸ்  ஆஃபீசராக  வருகிறார். போலீஸ்  யூனிஃபார்மில்  கம்பீரமாக  இருந்தாலும்   தொப்பையுடன்  அவர்  நாயகனுடன்  போடும்  ஃபைட்ஸ்  எல்லாம்  காமெடி 


ரஜினி - விஷ்ணுவர்தன்  இருவர்  இடையே  ஏற்படும்  நெருக்கமான  நட்பு  சரியாக  கனெக்ட்  ஆகவில்லை , ரொம்ப  செயற்கையாகத்தான்  அவர்களது  நட்பு  இருக்கிறது, உயிரைக்கொடுத்து  காப்பாற்றும்  அளவு  என்ன  இருக்கு  என  சொல்லப்படவில்லை 


ஒய்  ஜி  மகேந்திரன்  காமெடி  என்ற  பெயரில்  வழக்கம்  போல  லூஸ்தனமாக  என்னென்னமோ  செய்கிறார், எரிச்சல். 


சந்திரபோசின்   இசையில்  பாடல்கள்  எல்லாமே  சூப்பர்  ஹிட்.  தீம்  இசையாக  படம்  முழுக்க  வரும்  அந்த  இசையில்  மட்டும்  ஹிந்தி  வாசனை . பின்னணி  இசை  படம்  முழுக்க   பிரயாணம்  செய்திருக்கிறது 


டி வாசுவின்  எடிட்டிங்கில்  141  நிமிடங்கள் தான்  ஓடுது , ஆனால்  படம்  ரொம்ப  நேரம்  ஓடுவது  போல  தோன்றுகிறது  


திவாரி  , சுரேஷ்  சந்திரமேனன்  ஆகியோரின்  ஒளிப்பதிவில்  காட்சிகள்  பிரமாண்டமாக  கண்  முன்  விரிகின்றன 



சபாஷ்  டைரக்டர்


1   இரு நாயகர்கள்  , ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  மூவருக்கும் சரி  சமமாக  காட்சிகள்  இருக்க  வேண்டும் என  வரிந்து  கட்டிக்கொண்டு  திரைக்கதை  எழுதி  இருப்பது  நன்றாகத்தெரிகிறது 



செம  ஹிட்  சாங்க்ஸ்


1  ராகம்  நானே  தான்  (  ஹீரோயின்  ஓப்பனிங் சாங் கிளப்  டான்ஸ் 1 )

2   நீலக்குயில்கள்  இரண்டு   பாடித்திரியும்  இன்று  ( ஹீரோ நெ 2  ட்ரீம்  டூயட்  சாங்- செம  ஹிட்  மெலோடி )

3  ராஜாவே  ராஜா  நான்  தானே  ராதா  (  ஹீரோயின்  கிளப்  டான்ஸ் 2)

4  தங்கமணி  ரங்கமணி  வாம்மா  நீ  வெள்ளிமணி  வைரமணி  பூமேனி  ) நாயகன்  நாயகி  முதல்  டூயட் ) 

5  நாட்டுக்குள்ளே  நம்மைப்பற்றிக்கேட்டுப்பாருங்க , அம்மம்மா  இவர்தான்  சூப்பர்  ஸ்டாருங்க 


  ரசித்த  வசனங்கள் 


1   ஏழைங்க  வயிற்றில்  அடிச்சே  ஆண்டவன்  ஏதோ  ஒரு  ரூபத்தில்  உங்களை  அழிச்சிடுவான்


2   ஏது  புது  கார்?


எனக்கு  புது  டிரஸ்  மாத்தற  மாதிரி  கார்   மாத்தற  ஆள் 


3   ஜூஜூ பி  , இதெல்லாம்  ஒரு  பூட்டா?


4  மேலே  இருந்து  கீழே  விழுந்துட்டேன்னு  பார்த்தீங்களா? எத்தனை ரவுண்ட்  ஆகும் உருண்டு  வரனு  செக்  பண்ணினேன்


5  இதுல  3  தோட்டா  இருக்கு , சாப்பிடறியா?


 எனக்கு  பசிக்கல, நீங்களே  சாப்பிடுங்க 


6  சிலருக்கு  எதிரிகளால்  ஆபத்து ,சிலருக்கு  நண்பர்களால்  ஆபத்து, 


7  ஒரு  பெண்ணோட  உண்மையான  அன்பை  விட  உயர்ந்தது  இந்த  உலகத்தில்  வேற  எதுவும்  இல்லை , அந்த  விஷயத்தில் நான்  கொடுத்து  வைக்காதவன் 


8   ரோடு முன்னால  இருக்கு 


 ஆனா  நீ  பின்னால  இருக்கியே? 





 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  கடலில்  குளித்து  விட்டுக்கரையில்  ஹீரோ  அருகில்  அமரும்  நாயகி  ரொம்பக்குளிருது  என்கிறார்,   ஏம்மா  மின்னல்  துண்டு  எடுத்து  துவட்டாம  ஈரத்தலை  ஈர  உடம்போட  இந்த  டயலாக்கை  ஏன்  சொல்றே? துவட்டலாமில்ல  என  கேட்கத்தோணுது 


2  சிவாஜி  கணேசன் நல்ல நடிகர் தான் , அவருக்கு  முக்கியத்துவம்  கொடுப்பதற்காக  சம்பந்தமே  இல்லாமல்  பல  காட்சிகளில் அவரை  உலா  வர  விட்டது  மேட்சே  ஆகலை .  குறிப்பாக  ராஜாவே  ராஜா  பாடல்  காட்சியில்  அவர்  டிரம்ஸ்  வாசிப்பவராக  மாறு  வேடம்  அணிந்து தேவை  இல்லாமல்  எதுக்கு  ஃபர்னிச்சரை  உடைக்கிறார்?


3  விஜயகுமாரும்  , விஷ்ணுவர்தனும்  ஒரு  சீனில்  மோதிக்கொள்வது  சம்பந்தமே  இல்லாத  சீன், அதுல  ஒரு  ஃபைட்  வேற . இரு  ஹீரோக்களுக்கும்  சமமான  அளவில்  காட்சிகள்  வைக்க  வேண்டும் தான், ஆனால்  அது  திரைக்கதைக்கு  சம்பந்தம்  உள்ளதாக  இருக்க வேண்டும், வலியத்திணித்து  இருக்கக்கூடாது 


4  பிந்து கோஷ்  காமெடி  காட்சிகள்  எல்லாமே  பாடி  ஷேமிங்  கேட்டகிரியில்  வருவதுதான் அந்தக்காலத்தில்  மாதர்  சங்கங்கள்  ஆக்டிவாக  இல்லாததால்  தப்பி  விட்டார்கள்  படக்குழுவினர் 


5  பேபி  ஷாலினி  துறுதுறுப்பான  சிறந்த  குழந்தை  நட்சத்திரம்தான்  , ஆனால்  பல  கட்டங்களில்  அதன்  ஓவர்  ஆக்டிங் , அதிகப்பிரசிங்கித்தனம்   இதை  எல்லாம்  சகித்துக்கொள்ள  வேண்டியதாக  இருக்கிறது , குறிப்பாக டூ பீஸ்  டிரஸ்ல  ஒய்யாரமாக  நடந்து  வருவதெல்லாம்  கொடுமை 


6  ரஜினி  ஜெயிலில்  இருந்து  ரிலீஸ்  ஆகி  வெளியே  வரும்போது  அவரை  சந்திக்க  வரும்  மாதவி  இனிமே  நீங்க  திருடக்கூடாது  என்றோ  அது  பற்றியோ  எதுவுமே  பேசவில்லை , இன்னொரு  சந்தர்ப்பத்தில்  சம்பந்தமே  இல்லாம  திருட்டுத்தொழிலை  விடனும்  என்கிறார்


7 நாயகி  சிறந்த  டான்சர், ஆனால்  கிளப்  டான்ஸ்  காட்சிகளில்  அவருக்கு  கிரவுண்ட்  எக்சசைஸ்  போல  ஸ்டெப்ஸ்  கொடுத்தது  கொடுமை  யார்  அந்த  கொரியோகிராஃபர்  என  கேட்கத்தோணுது


8  நாயகன்  நெ1  நாயகன் நெ2  நாயகி  மூவரும்  சந்திக்கும்  முதல்  காட்சியிலேயே  யாராவது முறையாக  அறிமுகம்  செய்திருக்கலாம், வாய்ப்பிருந்தும்  அது  நடக்கவில்லை 

9  விஜயகுமார், விஷ்ணுவர்தன்  இருவருக்கும்  நடக்கும்  முதல்  ஃபைட்டே  நம்பவே  முடியாத  காரணம்னு  சொன்னேன், ஆனா அந்த  சப்பைக்காரணத்துக்காக  அவரைக்கட்டி  வைத்து  ஆள்  வைத்து  அடித்து  கொலை  வரை  போவது  எல்லாம்  லாஜிக்கே  இல்லை 


10  விஷ்ணுவர்தன்க்கு  எப்போது  யாரால்  ஆபத்து  வந்தாலும்  ரஜினி  கச்சிதமாக  அங்கே  வருவதும்  காப்பாற்றுவதும்  நம்பவே  முடியாதது 

11  கவிழ்ந்து  கிடக்கும்  போலீஸ்  ஜீப்பை  நிமிர்த்தி  விட்டு  சிவாஜி  மாதவி  முன்  ஒரு  டான்ஸ்  மாதிரி    ஏதோ  பண்ணுவது  காமெடியா?  அவரது  இமேஜையே  கேலி பண்ணுவது  போல  இருக்கிறது 


12  அனுராதா  வில்லனை  ஷூட்  பண்ண  வரும்போது  வில்லன்  பார்த்துக்கிட்டே  நிக்கறான். இத்தனைக்கும்  ஒரு  பஞ்ச் டயலாக்  வேற  பாப்பா  சொல்லுது , என்  அண்ணனோட  திமிரை  நீ  பார்த்திருக்கே , உன்னோட  திமிரை  நான்  பார்த்திருக்கேன் என்னோட  திமிரை  நீ  பார்த்ததில்லையே , இப்போ  பாரு  இத்தனையும் பேசற  வரை  பே-னு பார்த்துட்டே  இருக்கான்


13   ரஜினி  தன்னைக்கொலை  கேசில்  மாட்ட  வைக்க  விஷ்ணுவர்தன்  பிளான்  போடுகிறார்  என சந்தேகிக்க  எந்த  வித  முகாந்திரமும் இல்லை , சும்மா  இருவருக்கும்  ஒரு  ஃபைட்  சீன்  வைக்க  வேண்டுமே  என  வலியப்புகுத்திய  காட்சி  ஒட்டவில்லை


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  மாதவி  டூ  பீஸ்  டிரசில்  ஸ்லோமோஷனில்  வரும் ஒரு  காட்சி  தவிர  வேறு  18+  காட்சிகள்  ஏதும் இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ரஜினி  ரசிகர்கள்  பார்க்கலாம்,  பொது  ரசிகர்கள்    சூப்பர்  ஹிட்  பாட்டுக்காக  பார்க்கலாம்  ரேட்டிங் 2.5 / 5 


Viduthalai
Viduthalai 1986 poster.jpg
Theatrical release poster
Directed byK. Vijayan
Written byAaroor Dass (dialogues)
Story byK. K. Shukla
Produced bySuresh Balaje
StarringSivaji Ganesan
Rajinikanth
Vishnuvardhan
CinematographyTiwari
Suresh Chandra Menon (second unit)
Edited byD. Vasu
Music byChandrabose
Production
company
Sujatha Cine Arts
Release date
  • 11 April 1986
Running time
141 minutes
CountryIndia
LanguageTamil