Monday, April 15, 2024

அதோமுகம் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர் டிராமா)

           


மாஸ்  ஹீரோ  பின்னால்  போய்  தண்டமாக  200  கோடி சம்பளம் கொடுத்து ஒரு  டப்பாப்படம்   எடுத்து  பேரையும்   கெடுத்துக்கொண்டு , கைல  இருந்த  காசையும்  விடும்  தயாரிப்பாளர்களுக்கு  நடுவே   பக்காவான  ஸ்கிரிட்டுடன்  களம்  இறங்கும்  இயக்குநரை  நம்பி , நல்ல  திரைக்கதையை  நம்பி  களம்  இறங்கும்  தயாரிப்பாளர்கள்  கவனிக்க  வைக்கிறார்கள் . புதுமுகங்கள் , புது  இயக்குநர் , புது  திரைக்கதை  என  ஆடியன்சுக்கு  நல்ல  அனுபவம்  தரும்  மினிமம்  பட்ஜெட்  படங்களை  வரவேற்க மக்கள்  தயார்  ஆக  வெண்டும்


தமிழ் , மலையாளம்  ஆகிய  இரு  மொழிகளீலும்  தயார்  ஆன  இப்படம்  1/3/2024  முதல்  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆகி  பாசிட்டிவ் விமர்சனங்களைப்பெற்றது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் , நாயகி  இருவரும்  காதலித்து  திருமணம்  செய்து  கொண்டவர்கள் . தன் மனைவிக்கு பிறந்த  நாள்  பரிசாக  ஷாக்  சர்ப்பரைஸ்  தர  நினைக்கும்  நாயகன்   தன்  மனைவியின்  செல்  ஃபோனில்  ஒரு  ரகசிய  ஆப்  இன்ஸ்டால்  செய்து  வைக்கிறான். அதன்  மூலம்  மனைவியின்  சின்ன  சின்ன  அசைவுகளை . க்யூட்  மொமெண்ட்களை  ரெக்கார்டு  செய்து  எதிர் பாராத பரிசாக   மனைவிக்குத்  தர  நினைக்கிறான் (  முதல்வன்  படத்தில்  நாயகன்  அர்ஜூன்  நாயகி  மணீஷா  கொய்ராலா வின்  அழகிய  முக  பாவனைகளை  அவர்  அறீயாமல்  வீடியோ  எடுப்பாரே  அது  போல ) 


இப்போதுதான்  நாயகனுக்கு  ஒரு   அதிர்ச்சி   கிடைக்கிறது . நாயகன்  ஆஃபீசில்  இருக்கும்போது  நாயகியைப்பார்க்க  ஒரு  மர்ம  நபர்  அடிக்கடி  வீட்டுக்கு  வருகிறான். இதை  முழுதாக  அறிய  நாயகன்  தன்  வீட்டிலேயே  இன்னொரு  செல்  ஃபோனை  கேமராவை  ஆன்  பண்ணி  வைக்கிறான்


அந்த  மர்ம  நபர்  நாயகியிடம்  உன்  புருசனைக்கொன்னுடு  என  சொல்கிறார். நாயகனுக்கு  அது  அதிர்ச்சி . ஒரு  கட்டத்தில்  நாயகியே  அந்த  மர்ம  நபரைக்கொலை  செய்கிறார்


இதற்குப்பின்  நாயகன், நாயகி  ஆகிய  இருவர்  வாழ்க்கையிலும்  நிகழும்  திருப்பங்கள்  தான்  மீதி  தீரைக்கதை 


நாயகன்  ஆக   எஸ் பி  சித்தார்த்   அமைதியாக  நடித்திருக்கிறார். அவரது  முகத்தில்  அதிரிச்சி  ரேகைகள்   நன்கு  தெரிகின்றன


நாயகி  ஆக  சைதன்யா  பிரமாதப்படுத்தி  இருக்கிறார். ஆனால்  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  சீனில்  இன்னும்  கலக்கி  இருக்கலாம்


நிஷாத்  யூசஃப்  தான்  எடிட்டர் . 130  நிமிடங்கள்  ஓடும்படி  ஷார்ப்  ஆக்   ட்ரி ம்  செய்து  இருக்கிறார். 


மணீகண்டன்  முரளி , சரண்  ராகவன்   ஆகிய இருவரும்  இசை. பாடல்கள்  இரண்டு, இரண்டும்  ஓக்கே  ரகம் ,  பிஜிஎம்  அருமை 


 ஒளிப்பதிவாளர்  அருன்  விஜயகுமார்  மூடுபனி  படத்தில்  பாலுமகேந்திரா  உபயோகித்த  டெக்னிக்குகளை  நினைவு  படுத்துகிறார். நீலகிரியில்  பெரும்பாலான  படப்பிடிப்பு  நடந்துள்ளது


கதை  , திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  சுனில்  தேவ்  


சபாஷ்  டைரக்டர்


1 இடைவேளை  ட்விஸ்ட் , க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  என  ஏகப்பட்ட  ட்விஸ்ட்கள்  படத்தில்  இருப்பது  சுவராஸ்யம்


2  மனைவியை  சந்தேகிக்கும்  கள்ளக்காதல்  கதை  மாதிரி  ஒரு  டிராக்  போனாலும்  எஸ்டேட்  ஓனர் , சொத்து  அபகரிப்பு , நீண்ட  நாள்  திட்டமிடல்  என  இன்னொரு  கிளைக்கதை  மெயின்  கதை  ஆகும்  தருணம்  அருமை 


3  நடிகர்களின்  பங்களிப்பு   மற்றும்  டெக்னிக்கல்  டீமின்  உழைப்பு 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகன்  தன்  மனைவியின்  செல்  ஃபோனில்  ஒரு  ரகசிய  ஆப்  இன்ஸ்டால்  செய்தவன்  அதே  போல்  அதே  ஆப்  தன்  செல்  ஃபோனில்  யாராவது  இன்ஸ்டால்  பண்ணி  இருக்கிறார்களா? என்பதை  செக்  செய்ய  மாட்டானா? 


2   அன்  நோன்  நெம்பரில்  இருந்து  கால்  வந்தால்  இக்கட்டான  சூழலில்  இருக்கும்போது  நாம்  அதை  எடுக்க  மாட்டோம், ஆனால்  டெட்  பாடியின்  அருகே  இருக்கும்போது   3  முறை  தொடர்ந்து  கால்  வரும்போது  3  முறையும்  நாயகன்  அட்டெண்ட்  செய்கிறான். பின்  கட்  ஆகி  விடுகிறது . அப்போதே  இது  ஏதோ  ட்ராப்  என  சந்தேகிக்க  மாட்டானா? 


3  வில்லி  தன்  உண்மையான  பெயரை  மறைத்து  வேறு  பெயரில்  உலா  வருகிறாள் . அப்போது  ஜெயிலில்  நாயகனைப்பார்க்க  வரும்போது  தன்   போலி  பெயரைத்தானே  ரிஜிஸ்டரில்  பதிவு  செய்வார்?  உண்மையான  பெய்ரை  சொன்னால்  அதை  சொல்லி  அழைக்கும்போது  நாயகனுக்கு  டவுட்  வரும்  என  யூகிக்க  மாட்டாரா? 


4  வில்லன்  நாயகனை  மடக்கி  இருக்கும்போது  டக்னு அவனைப்போட்டுத்தள்ளாம  10  பக்கத்துக்கு  டயலாக்  பேசிட்டு  இருக்கான் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - - புதுமுகங்கள்  , புது  இயக்குநர்   எப்படி இருக்குமோ  என  யோசிக்காமல்  தைரியமாகப்பார்க்கலாம் . தரமான  த்ரில்லர் .  டைட்டில்  ஆன  அதோமுகம்  என்ற  சொல்லுக்கு   மறைக்கபப்ட்ட  முகம்  என்று  பொருள் .   பேசாம  எனக்கு  இன்னொரு  முகம்  இருக்கு  என  டைட்டில்  வைத்திருக்கலாம் . ரேட்டிங் 3 / 5 


Athomugam
Theatrical release poster
Directed bySunil Dev
Written bySunil Dev
Produced byReel Petti
Starring
CinematographyArun Vijaykumar
Edited byNishad Yousaf
Music byManikandan Murali
Saran Raghavan
Production
companies
Hazeebs Films
JAIHO & MGC
Distributed byDream Warrior Pictures
Release date
  • March 1, 2024 (India)
Running time
130 minutes
CountryIndia
LanguageTamil

Sunday, April 14, 2024

MASTHU SHADES UNNAI RA ( 2024) - தெலுங்கு - சினிமா விமர்சனம் ( மோட்டிவேஷனல் டிராமா) @ அமேசான் பிரைம்

          


நான் பத்தாவது  படிக்கும்போது  பால்யகால  நண்பன்  ஆன  குமராபுரி  அய்யப்பன்  உடைய  நண்பன்  ஆன  ஜெகதீஷின்  தம்பி  நந்தா  ஈரோடு  பன்னீர்  செல்வம்  பார்க்கில்  நந்தா  ஆர்ட்ஸ்  என   கடை  வைத்திருந்தார். தத்ரூபமாக  நடிகர், நடிகைகளை  வரைவதில்  விற்பன்னர் . அவரைப்போலவே  ஓவியர்  ஆன  கதையின்  நாயகனின்  போராட்டம்  தான்  கதை  என்பதால்  என் மனதுக்கு  நெருக்கமாக  அமைந்த படம் , ஆனால்  பொது  ரசிகர்களுக்கு  எந்த  அளவு  பிடிக்கும்  என  சொல்ல  முடியாது . சொந்தத்தொழில்  செய்ய  போராடுபவர்கள் , தனித்திறமையால்  முன்னுக்கு  வந்தவர்களூக்கு  இந்தப்படம்  பிடிக்கலாம்.,. 
ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  சிறந்த  ஓவியன் . ஆனால்  வசதி  வாய்ப்புகள்  இல்லை . அவருக்கு  திருமணம்  நிச்சயம்  ஆகி  இருக்கிறது . ஆனால்  மணப்பெண்  திருமணத்துக்கு  முந்தின  தினம்  வேறு ஒருவருடன்  ஓடிப்போய்  விடுகிறார்

 இதனால்  நாயகன் உறவினர்களின்  கேலிக்கு  ஆளாகிறார் . நாயகனுக்கு  அந்தப்பெண்  ஓடிப்போனதை  விட  பெரிய  வருத்தம்  என்ன   எனில்  அவள்  எழுதி  வைத்த  கடிதம்  தான் .  நீ  ஓவியம்  வரைந்து  சம்பாதிக்கும்  பணம் என்   மேக்கப்   செலவுக்குக்கூடப்பத்தாது   என்று  சொன்னதுதான்

 அதனால் சொந்தத்தொழில்  தொடங்கி   வாழ்க்கையில்  முன்னேற  நினைக்கிறார். ஒரு  ஆப்செட்  பிரிண்ட்டிங்  பிரஸ்  வைக்கலாம்  என  முடிவெடுக்கிறார். ஆனால் அவருக்கு  ஃபோட்டோ  ஷாப்  ஒர்க்  தெரியாது.  அதனால்  அந்த  வேலை  தெரிந்த  நாயகியின்  உதவியை  நாடுகிறார்

 ஆக்சுவலாக  நாயகிக்கும்  ஃபோட்டோஷாப் ஒர்க்  தெரியாது . ஆனால்  குடும்ப  சூழ்நிலை  காரணமாக  பொய்  சொல்லி  நாயகி  நாயகனிடம்  பணிக்கு  சேர்கிறார்

ஒரு  கட்டத்தில்  நாயகனுக்கு  நாயகி  ஒரு  டுபாக்கூர்  என்பது  தெரிய  வருகிறது . ஆனாலும்  நாயகனுக்கு  நாயகியைப்பிடித்து  இருப்பதால்  இருவரும்  சேர்ந்து  வில்லனிடம்  ஃபோட்டோஷாப்  கற்க  செல்கின்றனர் . வில்லனும்  பிரிண்ட்டிங்  பிரஸ்  வைத்து  முன்னேற  நினைப்பவன் .அவனும்  நாயகிக்கு  ரூட்  விடுகிறான். இப்போது  நாயகன் வில்லன் இருவருக்கும்  தொழில்  போட்டி , காதல்  போட்டி  இரண்டும்  உருவாகிறது . இறுதியில்  யார்  தொழிலிலும், காதலிலும்  வெற்றி  பெற்றார்கள்  என்பது  மீதி  திரைக்கதை 

 நாயகன்  ஆக   அபினவ்  கோமதம்  இயல்பாக  நடித்திருக்கிறார். முக  சாயலில்  தமிழ்ப்படம்  புகழ்  மிர்ச்சி  சிவா  + 7 ஜி  ரெயின்போ காலனி  ரவி  கிருஷ்ணா  கூட்டு சாயலில்  இருக்கிறார். டயலாக்  டெலிவரியில்  இன்னும்  கவனம்  தேவை 

 வில்லன்  ஆக   அலி  ரேசா  பிரமாதப்படுத்தி  இருக்கிறார். இவர்  முக  சாயலில்  இஸ்பேட்  ராஜாவும்  இதயராணியும்  படத்தின்  வசனகர்த்தா  அவினாசி  ராஜன்  போல  இருக்கிறார். இவரது  டிரஸ்சிங்  சென்ஸ்  , உடல்  மொழி  அபாரம் 

நாயகி  ஆக  வைஷாலி  ராஜ்  நடித்திருக்கிறார் . இவர்  கீர்த்தி  சுரேஷ்  +  கோகுலத்தில்  சீதை  சுவலட்சுமி  இருவரையும்  கலந்து  கட்டிய  கலவையாக  இருக்கிறார். நடிப்பு   குட் 

லாவண்யா  ரெட்டி  கெஸ்ட் ரோல் ., ஓக்கே  ரகம் 

இரண்டரை  மணி  நேரம்  ஓடும்படி  எடிட்டர்  கட்  செய்து  இருக்கிறார்

ஒளிப்பதிவு  , இசை  போன்ற  டெக்னிக்கல்  மசங்கள்  சராசரி  தரம் 


சபாஷ்  டைரக்டர்

1    சூரியவம்சம், அண்ணாமலை  படங்களில்  காட்டியது  போல  நாயகன்  ஒரே  பாடலில்  பெரிய  ஆள்  ஆவது  போல  காட்டாமல்  யதார்த்தமாக  காட்சிகளை  அமைத்தது 

2   வில்லனுக்கான  ஆடை  வடிவமைப்பு 


  ரசித்த  வசனங்கள் 

1  மிமிக்ரில  ரஜினி  வாய்ஸ்  ட்ரை  பண்ணினேன்\\

  அப்போ  முதல்  பரிசு  உனக்குத்தான் ?

 எங்கே?  நெக்ஸ்ட்  டைம்  ரஜினி  வாய்ஸ்  கரெக்ட்டா  ட்ரை  பண்ணுனு  சொல்லிட்டாங்க 

2  பணக்காரப்பொண்ணுங்க  எல்லாம்  ஐ  லவ் யூசொல்வதற்கு  முன்  ஐ லைக்  யூ  தான்  சொல்வாங்க 

3  இங்க்லீஷ்  நாலெட்ஜை  விட  டேலண்ட்  தான்  முக்கியம் 

4   எல்லாப்பெண்களூக்கும்  கலர்ஃபுல்லான  லைஃப்  தேவை , ஆனால்  யாருக்கும்  ஒரு ஓவியன் ஜோடியா  தேவை  இல்லை ? 

5  வாங்க  தம்பி , உக்காருங்க 

 உமாவைப்பார்க்க  வந்தேன் 

  ஓ.  டீ  சாப்பிடறீங்களா?

 நோ 

   காஃபி ?

 நோ\

 பாதாம்  பால்?

 வேணாம்ங்க 
  ஆனா , எனக்கு  வேணும்,, பக்கத்துல  தான்  கடை , போய்  ரெண்டு  பேருக்கும்  வாங்கிட்டு  வந்துடறீங்களா? 

 6  காதல்  என்பது  ஃபிரிட்ஜ்  ல  வெச்சிருக்கும்  கூல்ஃபிரிங்க்  மாதிரி , சில்னெஸ்  போபதற்குள்  குடிச்சிடனும்

7  ஒருத்தன்  பணக்காரன்  ஆகும்போது  ஆளாளுக்கு  அவனை  சொந்தம்  கொண்டாடுவாங்க 

8  பயப்படறதுக்கு  ஒண்ணுமில்ல , மிஷின்ல  சின்ன  ரிப்பேர்  தான் ,

 ஓஹோ  எவ்ளோ   செலவு  ஆகும் ? 


5  லட்சம்  ரூபா 

 அய்யோ

9  ஹாஸ்பிடலில்  அவன்  இவ்ளோ  நேரம் என்ன  பண்றான் ? 

 பிரெக்னென்சி  டெஸ்ட்  தவிர  எல்லா  டெஸ்ட்டும் எடுத்துட்டான்


10  வில்லன்  கிட்டே  என்னதான்  கோபம்  இருந்தாலும்  அவனை  அடிக்கலாம், உதைக்கலாம், ஆனால்  அவன்  திறமையை  அவன்  கிட்டே  இருந்து  பிடுங்க  முடியாது 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகன்  தான்  புதிதாக  ஓப்பன்  பண்ணப்போகும் ஃபோட்டோ  ஷாப்  கடைக்கு  தன்  மாமாவிடம்  ஒரு  லட்சம்  அட்வான்ஸ்  கொடுத்து  விட்டு  இந்த  விஷயம்  வில்லனுக்குத்தெரியக்கூடாது  என  உறுதி  மொழி   வாங்கிக்கொள்கிறார். அடுத்த  சீனில்  நாயகனே  அந்த  விஷயத்தை  வில்லனிடம்  ஓப்பன்  செய்கிறார்

2  ஒரு  லட்சம்  ரூபா  அட்வான்ஸ்  கொடுக்கும்போது  ரிசீப்ட்  வாங்கிக்கொள்ளவில்லை . வாடகை  ஒப்பந்தப்பத்திரமும்  ரெடி  செய்து  கொள்ளவில்லை 

3   வில்லன் நாயகனிடம்  தான்  நாயகியுடன்  தனிமையில்  இருக்கப்போவதாக  தவளை  மாதிரி  உளறுகிறான். அதை  நாயகன்  நாயகியிடம்  சொல்லி  விட்டால்  தன்  இமேஜ்  டேமேஜ்  ஆகும்  என்பதை  உணர  மாட்டானா? 

4   ஃபோட்டோஷாப்  ஒர்க்கே  தெரியாத  பெண்ணை  வேலைக்கு  எடுக்கும்  நாயகனுக்கு  அவளுக்கு  அது  தெரியாது  என்பதைக்கண்டு  பிடிக்கவே  17  நாட்கள்  ஆகின்றன 

5   நாயகனை  விட   வில்லன்  பர்சனாலிட்டி , அழகு , உயரம், டிரஸ்சிங்  சென்ஸ்  எல்லாவற்றிலும்  ஒரு  படி  மேலாக  இருக்கிறான். ஆடியன்சுக்கு  நாயகி  வில்லன்  கூடவே  ஜோடி  சேர்ந்தால்  என்ன  என்ற  எண்ணம்  தான்  தோன்றும் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ரொம்ப  ஸ்லோவான  திரைக்கதை . பொறுமை  உள்ளவர்கள்  பார்க்கலாம், ரேட்டிங்  2 / 5

Saturday, April 13, 2024

சந்திரோதயம் (1966) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ) @ யூ ட்யூப்

 


1934 ல்  ரிலீஸ்  ஆன  ஹாலிவுட்  படமான  இட் ஹேப்பண்ட் ஒன்  நைட்   படத்தின்    இன்ஸ்பிரேஷனில்  எடுக்கப்பட்ட  படம் தான்  இந்தப்படம் .ஒரிஜினல்  படத்தைப்பார்த்து  விட்டு  ரீமேக்  படத்தைப்பார்த்தால்  ஒரு  ஹாலிவுட்  படத்தை  தமிழ்  ரசிகர்கள்  ரசனைக்கு  ஏற்றபடி  எப்படி  பட்டி  டிங்கரிங்  செய்வது ? செண்ட்டிமெண்ட்  காட்சிகளை  எந்த  விகிதத்தில்  சேர்ப்பது  என்பதை  அறியலாம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு  ஜமீன்  தாரரின்  மகள் . மிகவும்  செல்லமாக  வளர்க்கப்பட்ட  அவருக்கு  பருவ  வயது  வந்ததும்  திருமணத்திற்கு  ஏற்பாடுகள்  நடக்கின்றது. அது  பிடிக்காமல்  நாயகி  வீட்டை  விட்டு  வெளியே  போகிறார். அந்த  நேரம்  நாயகியைப்பெண்  பார்க்க  வந்த  மாப்பிள்ளை  வீட்டாரை  சமாளிக்க    ஜமீன்  தாரர்  அவர்  வீட்டுப்பணிப்பெண்ணை    தன்  மகள்  என  பொய்  சொல்லி  பெண்  பார்க்கும்  படலத்தை  நடத்துகிறார்,இதில்  என்ன  ஒரு  ட்விஸ்ட்  எனில்  அந்த  மாப்பிள்ளை  தான்  அந்த  பணிப்பெண்ணை  பாலியன்  வன்கொடுமை  செய்தவர் 


  வில்லன்  ஒரு  பிரபல  பத்திரிக்கையின்  முதலாளி.  இவர்  வாலிப  வயதில்  ஒரு  பெண்ணை   ஆசை  காட்டி  மோசம்  செய்தவர். அவர்  மூலம்  பிறந்த  குழந்தையை  அந்த  அபலை  இன்னொரு  தம்பதிக்கு  தத்து  கொடுத்து  விட்டு  இப்போது  ஜமீன்  தாரரிடம்  பணிப்பெண்ணாக  இருக்கிறார்


நாயகன்  வில்லனின்  பத்திரிக்கையில்  ரிப்போர்ட்டர்  ஆகப்பணி  புரிபவர். வீட்டை  விட்டு  ஓடி  வந்த  நாயகியை  மீட்டு  அவர்  அப்பாவிடம்  சேர்க்க  நினைப்பவர் , நாயகன்  நாயகி  இடையே  காதல்  மலர்கிறது 


 இதற்குப்பின்  நிகழும்  சம்பவங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  எம் ஜி ஆர். அவரது  வழக்கமான  அம்மா  செண்ட்டிமெண்ட்  இதில்  இல்லை , மாறாக  தங்கை  செண்ட்டிமெண்ட்  இருக்கிறது . வழக்கம்  போல்  தத்துவப்பாட்டுப்பாடுகிறார்.  வில்லனுக்கு  அட்வைஸ்  செய்கிறார்.  சேலை  கட்டிய  பெண்  தான்  நல்லவர். அவரைத்தான்  பிடிக்கும், மாடர்ன்  டிரஸ்  போட்ட  பெண்ணைப்பிடிக்காது  என்கிறார்.  எம் ஜி ஆர்  ரசிகர்கள்  என்ன  எல்லாம்  எதிர்பார்ப்பார்களோ  அந்த  ஃபார்முலாப்படி  அவரது  கேரக்டர்  டிசைன்  இருக்கிறது 


 நாயகி  ஆக  ஜெ . ஜமீன்  தாரர்  பெண்ணுக்கான  உடல்  மொழி  அவரிடம்  இயர்ஐயாகவே  இருப்பதால்  அசால்ட்  ஆக  நடிக்கிறார்


ஜமீன்  தாரர்  ஆக  அசோகன்  கச்சிதமான  நடிப்பு .  மெயின்  வில்லன்  எடிட்டர்  ஆக  எம்  ஆர்  ராதா  கலக்குகிறார். சைடு  வில்லனாக  எம் என்  நம்பியார்  அசத்துகிறார்

 காமெடி  டிராக்  பை  நாகேஷ்  + மனோரமா . சுமார்  தான் 


சபாஷ்  டைரக்டர்


1  ஒரிஜினல்  கதையான  ஒரு  ரொமாண்டிக்  ஸ்டோரியில்  ஃபேமிலி  செண்ட்டிமெண்ட்ஸ் , வில்லன்  எக்ஸ்ட்ரா  ஃபிட்டிங்  எல்லாவற்றையும்  கச்சிதமாக  மிக்சிங்  செய்தது 


2  மூன்று  மாபெரும்  வில்லன்களை  புக்  செய்தது , கச்சிதமாக  அவர்களிடம்  வேலை  வாங்கியது 


3   எம்  ஜி ஆர்  ஃபார்முலாவில்  பாடல்களை  உருவாக்கியது 


செம  ஹிட்  சாங்க்ஸ்

1  புதியதோர்  உலகம்  செய்வோம்  ( டைட்டில்  சாங்க் ) 

2   புத்தன்  காந்தி  ஏசு  பிறந்தது  பூமியில்  எதற்காக? ஏழைகள்  நமக்காக 


3  கெட்டி  மேளம்  கொட்டுற  கல்யாணம் 


4 காசிக்குப்போகும்  சன்யாசி  உன்  குடும்பம்  என்னாகும்  நீ  யோசி 


5   எங்கிருந்தோ  ஆசைகள் 


6  சந்திரோதயம்  ஒரு  பெண்ணானதோ

ரசித்த  வசனங்கள் 


1 பெண்களூக்குப்பஞ்சம்  இல்லை , பெண்களின்  உரிமைக்குத்தான்  பஞ்சம்


2  யாரை  நீ  எதிர்க்கிறே  தெரியுமா?


 எதிரி  எனக்கு  சம  பலம்  இல்லாதவனா  இருந்தா  அவனை  ஒரு  பொருட்டாகவே  மதிக்காதவன்  நான்  


3  வாழ்க்கைல  முன்னுக்கு  வரனும்னு  நினைக்கறது  தப்பில்லை , ஆனா  குறுக்கு  வழில  அடைய  நினைப்பதுதான்  தப்பு 


4  எதேது? வம்பை  விலை  கொடுத்து  வாங்கிட்டேன்  போலயே?


நீங்க  எங்கே  விலை  கொடுத்தீங்க ? நானே  தானே  உங்க  கூட  வந்தேன் ?


5  சரி  , சாப்பிட  என்ன  வேணும் ?


  இட்லி , தோசை , பூரி , பொங்கல்’


 ஒண்ணு  விட்ராத . உலகில்  உணவுப்பஞ்சம்  ஏன்  வராது ? நான்  ஹோட்டல்  வெச்சா  நடத்தறேன் ?


6  சந்தேகம்  தான்  மனிதனை  சுறுசுறுப்பா  வெச்சிருக்குது 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நிருபராக  இருக்கும்  நாயகன்  தந்த  செய்தியை  வில்லனான  சீஃப்  எடிட்டர்  தவறாக பிரசுரிக்க  அந்தப்பெண்ணின்  அப்பா  தற்கொலை  செய்து  கொள்கிறார். அந்தத்தவறான  செய்தியைப்பிரசுரித்த  பத்திரிக்கையின்  செய்தியை  நாயகன்  அதுவரை  பார்க்கவே  இல்லை. அவர்  பணி  புரியும்  பத்திரிக்கையின்  செய்தியைக்கூட  அவர்  பார்க்க  மாட்டாரா? 


2   நாயகன்  தன்  ஹீரோ  இமேஜை  வளர்த்திக்கொள்ள  வரும்  ஓப்பனிங்  சாங்கில்  பல  குழந்தைகளுடன்  மழையில்  நனைந்தபடி  அட்வைஸ்  பண்ணுவது  போல்  ஒரு  காட்சி.  இவர்  இமேஜை  வளர்த்த  தேவை  இல்லாமல்  அத்தனை  குழந்தைகளை  மழையில்  நனைய  வைக்க  வேண்டுமா? 

3  நாயகி  வில்லனான  சீஃப்  எடிட்டருக்கு  லேண்ட்  லைன்  ஃபோன்  போட்டுப்பேசும்போது  நிருபர்  ஆன  நாயகன்  அந்த  ஃபோன்  காலை  அட்டெண்ட்  செய்வது  எப்படி? ரிஷப்சனிஷ்ட்டோ, சீஃப்  எடிட்டரோ தானே  காலை  அட்டெண்ட்  பண்ணனும் ?


4   நாயகன்  வில்லனான  தன்  ஓனரை  அடிக்கடி  மிரட்டுகிறார். அது  எப்படி ?  வேலை  பிடிக்கலைன்னா  ரிசைன்  பண்ணிட்டுப்போக  வேண்டியதுதானே?


 5  ஜமீன்  தாரர்  தன்  மகளை  திடீர்  என  வெறுப்பதற்குக்காரணம்  சொல்லப்படவே  இல்லை 


6  பெண்  பார்க்க  வந்த  மாப்பிள்ளை  வீட்டார்  வீட்டுக்குள்ளே  அமர்ந்திருக்கிறார்கள் . வெளியே  கேட்டில்  மகள்  நிற்க  அப்பா  தாராளமாக  மகளிடம்  உண்மை சொல்லி  இப்போ  போய்ட்டு  அப்றம்  வா  என  சொல்லி  அனுப்பி  இருக்கலாம்,  அதை  விட்டுட்டு  மகளைத்துரத்தி  விட்டுட்டு  அப்றம்  ஆள்  அனுப்பி  தேடச்சொல்வது  வேண்டாத  வேலை


7  அந்தக்காலத்தில்  நிருபர்  ஜிப்பா  தான்  போட்டிருப்பார். ஆனா ல்  நாயகன்  சேட்டு  வீட்டுப்பையன்  போல  டிப்  டாப்  டிரஸ்  போட்டிருப்பது  எப்படி ? 


8 அறிமுகம்  இல்லாத  வில்லன்  கையைப்பிடித்ததும்  தாம்  தூம்  எனக்குதிக்கும்  நாயகி   அறிமுகம்  இல்லாத  நாயகன்  இடுப்பைப்பிடிக்கும்போதும்  சும்மா  இருப்பது  ஏன் ?  (  காதலும்  இல்லை ) 


9 ஜமீன்  தாரர்  மகளை  கவனித்துக்கொள்ளும்  ஆயா  பாயில்  படுக்க  மாட்டாரா? அவருக்கு  ஜமீன்  வாரிசுக்கு  நிகரான  படுக்கை , மெத்தை  வசதி 


10  நாயகி  மாடர்ன்  டிரஸ்  மட்டுமே  போட்டு  வளர்ந்தவர். நாயகன்  பரிசாக  சேலை  கொண்டு  வர  அப்போதுதான்  முதன்  முதலாக  நாயகி  சேலை  கட்டுகிறார். அப்போது  மேட்சிங்  பிளவுஸ்  ஏது ? 


11  நாயகிக்கு  உதவியாக  எட்டு  பெண்கள்  இருக்காங்க . அவர்கள்  பணி  என்ன?


12     சைடு  வில்லன்  ஆன  நம்பியார்  தான்  கெடுத்த  ஏழைப்பெண்  தான்  ஜமீன்  தார்  வீட்டில்  பெண்  பார்த்த  நபர்  என்பதை  அறிந்தும்  எதற்காக  மேரேஜ்க்கு  சம்மதம்  சொல்கிறார் ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சுமாரான  கதை  தான் . ஆனால்  பொழுது  போக்கு  அம்சங்கள்  நிறைந்த  டைம்  பாஸ்  படம் . ரேட்டிங்  2.25 / 5 


Chandrodayam
Theatrical release poster
Directed byK. Shankar
Based onIt Happened One Night
Produced byG. N. Velumani
StarringM. G. Ramachandran
J. Jayalalithaa
CinematographyThambu
Edited byK. Narayanan
Music byM. S. Viswanathan
Production
company
Saravana Films
Release date
  • 27 May 1966
CountryIndia
LanguageTamil

Friday, April 12, 2024

HOW TO DATE BILLY WALSH (2024) -ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ) @ அமேசான் பிரைம்

    

   தமிழ்  சினிமா வில்  வருவது  போலவே  ஹாலிவுட்டிலும்  இப்போது  ் காதல்  கதைகள்  வர  ஆரம்பித்து  விட்டன . நாயகியின்  அழகுக்காகவும் , நாயகன் - நாயகி  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆனதற்காகவும் , போர்  அடிக்காத  திரைக்கதைக்காகவும்  தாராளமாக  இப்படத்தைப்பார்க்கலாம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்

  எஸ்  ஜே  சூர்யாவின்  குஷி  படத்தில்  வருவது போல  நாயகன் , நாயகி  இருவரும்  ஒரே  ஹாஸ்பிடலில்  பிறந்தவர்கள் . அழகி  படத்தில்  வருவது  போல சின்ன  வயசில்  இருந்தே  இருவரும்  கிளாஸ்  மேட்ஸ் , ஸ்கூல்  மேட்ஸ் . ஆனால்  96  படத்தில்  வருவது  போல  இருவரும்  ஒருவரை  ஒருவர்  காதலிக்க  வில்லை 


 நாயகன்  இதயம்  பட  முரளி  போல  ஒரு  தலையாக  நாயகியைக்காதலிக்கிறார். ஆனால்  தன்  காதலை  வெளிப்படுத்தவில்லை . தக்க  சமயம்  பார்த்துக்கொண்டிருக்கிறார்


  நாயகனுக்கு  ஏழரையாய்  வந்து  சேர்கிறான்  நாலரையும், நாலரையும்  சேர்த்தாற்போல  இருக்கும்  ஒரு  வில்லன் . அவனைப்பார்த்ததுமே  அந்த  ஸ்கூல்  மாணவிகளில்  பலர்  அவனை  விரும்புகிறார்கள் . நாயகியும்  தான். வில்லனிடம்  தன்  காதலை  சொல்ல  தக்க  தருணம்  பார்த்துக்கொண்டிருக்கிறார்.


 இப்போது  நாயகன்  ஒரு  ஐடியா  செய்கிறார். ஒரு  ஆப்  மூலம்  தன்  முகத்தை  வயதானவனாக  மாற்றி  ஒரு  ஃபேக்  ஐடி  உருவாக்கி  நாயகியிடம்  நட்பு  வளர்க்கிறார்.  நாயகி  வில்லனுடன்  டேட்டிங்  போக  நாயகனிடமே  ஐடியா  கேட்கிறார். நாயகன்  சொதப்பல்  ஆகுமாறு  மட்டமான  ஐடியாக்கள்  கொடுத்து  அந்தக்காதலைக்கலைக்கிறார்


 ஒரு  கட்டத்தில்  நாயகிக்கு  நாயகன்  மீது  தான்  உண்மையான  காதல்  என்பதை  உணரும்போது  நாயகனின்  ஃபேக் ஐடி  விஷய்ம்  தெரிய  வர  செம  கடுப்பாகிறார்


 இப்போது  நாயகி  வில்லன்  கூட  ஜோடி  சேர்ந்தாரா?  நாயகன்  கூட   ஜோடி  சேர்ந்தாரா?  என்பது  மீதி  திரைக்கதை  + க்ளைமாக்ஸ் 


  நாயகன்  ஆர்ச்சி  ஆக   செபாஸ்டியன்  கிராஃப்ட்  அழகாக  நடித்திருக்கிறார். தமிழ்  சினிமாவில்  ஷாம் ,  அப்பாஸ் , மாதவன்  போல்  மீசை  இல்லாத  முகம் . . இளவயது  பெண்களை  வசீகரிக்கும்  முகம், இண்ஸ்டாவில்  ஏகப்பட்ட  ரசிகைகள்  ஃபாலோயர்ஸ்  இவருக்கு \


நாயகி  ஆக  சரித்ர  சூர்ய  சந்திரன்  அமெரிக்க  நடிகையா க  இருந்தாலும்  இந்திய  வமசாவளி  போன்ற  முகம். நந்திதா  தாஸ்  முக  சாயலில்  இருக்கிறார். அட்டகாசமான  முக  பாவனைகள்.  க்யூட்  எக்ஸ்பிரஷன்ஸ் 


வில்லன்  ஆக   டன்னீர்  பச்சனன். நடிப்பு  குட்  , ஸ்டைலும்  ஓக்கே , ஆனால்  தனிப்பட்ட  முறையில்  எனக்குப்பிடிக்கவில்லை 


இந்த  மூன்று  முக்கியக்கேரக்டர்களை  சுற்றியே  மொத்தத்திரைக்கதையும்  அமைந்தாலும்   மற்ற  சின்ன  சின்ன  கேரக்டர்களீல்  நடித்தவர்களும்  கச்சிதமாக  நடித்திருக்கிறார்கள் 

ஒளீப்பதிவு , இசை ம் ஆர்ட்  டைரக்சன்  போன்ற  டெக்னிக்கள்  அம்சங்கள்  ஓக்கே  ரகம் 



சபாஷ்  டைரக்டர்


1    நாயகன்  , நாயகி  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆன விதம் 


2    வில்லன்  நாயகியை  நெருங்கும்போதெல்லாம்  நாயகன்  நந்தி  மாதிரி  குறுக்கே  வந்து  அணையைக்கட்டுவது   ரசிக்க  வைத்தது 


3  ஸ்கூல்,/ காலேஜில்  இளவயது  மாணவ  மாணவிகள்   கலாட்டாக்கள்  அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1  வெற்றியின்  முதல்  எதிரி  குழப்பம்  தான் 


2  நான்   சொர்க்கத்துக்குப்பக்கத்துலயே  இருந்துட்டு  எங்கே  சொர்க்கம்னு   தேடிட்டே  இருந்திருக்கேன் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   எநாயகியின்  மனக்குழ்ப்பம்  நம்ப  முடியவில்லை . இவனா? அவனா?  என  அவர்  குழம்புவது  சரியாகக்காட்சிப்படுத்க்தப்படவில்லை


2  நாயகியே  ஓப்பனாக  ஒரு  முறை  நாயகனிடம்  நீ  என்னை  லவ்  பண்றியா? என  கேட்டும்  நாயகன்  பம்முவது   ஏனோ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ . ஆனால்  வசனங்களில்  சில  பச்சை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   வழக்கமான  ரொமாண்டிக்  காமெடி  மெலோ  டிராமா. பார்க்கலாம் , ரேட்டிங்  2 / 5 

Thursday, April 11, 2024

MUSICA (2024) - அமெரிக்கன் மூவி - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி ) @ அமேசான் பிரைம்

      


 சவுத்  பை  சவுத்  வெஸ்ட்டில்  உலகப்பட  விழாவில்  13/3/2024  அன்று  திரை இடப்பட்ட   படம், இன்னும் தியேட்டர்  ரிலீசுக்குத்தயார்  ஆக  வில்லை . அமெரிக்காவில்  ஏப்ரல்  மாதம்  கடைசி  வாரம்  ரிலீஸ்  ஆக  இருக்கும்  படம்..அமேசான்  பிரைம்  ஓடிடி  யில்  4/4/2024  முதல்  காணக்கிடைக்கிறது . இது  மியூசிக்கல்  ரொமாண்டிக்  காமெடி  ஃபிலிம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்   அவர்கள்  படத்தில்  கமல்  பாடிய  கடவுள்  அமைத்து  வைத்த  மேடை  பாடலில்  ஒரு  பொம்மையை  வைத்து  மிமிக்ரி  செய்யும்  கலைஞன்  போல   வீதிகளில்  பொம்மலாட்டம்  செய்பவன்.  தன்  அம்மாவுடன்  வசித்து  வருகிறான்.  அவன்  ஒரு  அமெரிக்கப்பெண்ணை  விரும்புகிறான். அவள்  வசதியானவள், ஆனாலும்  ஏழையான  நாயகனை  விரும்பு கிறாள் . 


 நாயகனின்  அம்மாவுக்கு   தன்  மகன்  ஒரு    அமெரிக்கப்பெண்ணை  விரும்புவது  பிடிக்கவில்லை . பிரேசில்  நாட்டுப்பெண்ணை  அறிமுகம் செய்து  வைக்கிறாள் 


நாயகனின்  அமெரிக்கக்காதலி  ஒரு  கட்டத்தில்  நாயகனை  பிரேக்கப்  செய்து  கொண்டு  செல்ல  நாயகன்  பிரேசில்  பெண்ணான  இசபெல்லா  உடன்   பழகுகிறான்.  இருவரும்  காதலிக்க  ஆரம்பிக்கலாம்  என  நினைக்கும்போது  நாயகனின்  முதல்  காதலி  ஆன  அமெரிக்கப்பெண்  மீண்டும்  நாயகனின்  வாழ்க்கையில்  வருகிறாள் 


  நாயகன்  முடிவெடுக்க  முடியாமல்  தடுமாறுகிறான். இதற்குப்பின்  நிகழும்  சம்பவங்கள்  தான்  மீதிக்கதை 


 நாயகன்  ஆக  நடித்து  திரைக்கதை  எழுதி , இசை  அமைத்து  இயக்கி  இருப்பவர்  ரூடி  மன்சுகோ,இவருக்கு  இது  முதல்  படமாம்,  நம்ப  முடியவில்லை.  மிகவும்  யதார்த்தமாக ,  இயல்பாக  நடித்திருந்தார் 


இசபெல்லாவாக  நாயகி  ஆக  கமீலா  கலக்கலான  நடிப்பை  வெளிப்படுத்தி  இருக்கிறார்., அவர்  முகத்தைப்பார்த்துக்கொண்டே  இருக்கலாம்  போல  கொள்ளை  அழகு 


அமெரிக்கப்பெண்  ஆக   ஃபிரான்சிஸ்கா  ரியல்  நடித்திருக்கிறார். இவரும்  பொம்மை  மாதிரி  அழகு 


படத்தில்  அதிக  கேரக்டர்கள்  இல்லை  நாயகன் , நாயகிகள்  இருவர் , அம்மா, நண்பன்  ஆகிய  முக்கியக்கேரக்டர்கள் ஐவர்  தான் 


91  நிமிடங்கள்  ஓடும்படி  ஷார்ப்  ஆகக்கட்  செய்து  இருக்கிறார்  எடிட்டர்.


 இசைக்கு   முக்கியத்துவம்  கொண்ட  கதை  என்பதால்  படம்  முழுக்க  துள்ளாட்டம்  போடும்  பிஜிஎம்  அசத்தல் 


ஒளிப்பதிவு  அருமை .



சபாஷ்  டைரக்டர்


1  நாயகன்  மாறி  மாறி  இரு  நாயகிகளை  சந்திப்பதை  ஓரங்க  நாடக  மேடையில்  வருவது  போல  ஒரே  ஷாட்டில்   செட்டிங்க்ஸ்  மாறி  மாறி  வர  லொக்கேஷன்  சேஞ்ச்  ஆவது  புதுமையான  காட்சி  அமைப்பு 


2  நாயகன்  தன்  காதலியிடம்  பேசும்போது  இசையால்  கவனம்  சிதறுவது . அதனால்  தன்னைக்கவனிக்காமல்  இருக்கிறான், தனக்கு  முக்கியத்துவம்  தராமல்  இருக்கிறான்  என  கோபித்துக்கொண்டு  காதலி  பிரேக்கப்  செய்வது  என  யதார்த்தமான  காட்சி  அமைப்பு  அழகு 


3  க்ளைமாக்ஸ்  சீன்  தமிழில்  வந்த  விண்ணைத்தாண்டி  வருவாயா  க்ளைமாக்சை  நினைவுபடுத்தினாலும்  கவிதையாக   இருந்தது


ரசித்த  வசனங்கள் 


1 வாழ்க்கைல  அடுத்து  என்ன  நடக்கும்னு  தெரியாம  இருப்பதே  சுவராஸ்யம், அதை  நான்  விரும்புகிறேன்


2   நீ  பார்ப்பதை  என்னால்  பார்க்க  முடியலை , ஆனால்  நீ  உணர்வதை  என்னால்  உணர  முடியுது 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  யூ  படம்  தான் . லிப்  கிஸ்  சீன்  மட்டும்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இசைக்காதலர்களுக்கு , ரொமாண்டிக்  ஃபிலிம்  பார்ப்பவர்களுக்குப்பிடிக்கும்,   ரேட்டிங்  2.5 / 5 


இசை
போஸ்டர் வெளியிடவும்
இயக்கம்ரூடி மன்குசோ
எழுதியவர்
உற்பத்தி
நடிக்கிறார்கள்
ஒளிப்பதிவுஷேன் ஹர்ல்பட்
திருத்தியவர்மெலிசா கென்ட்
இசை
  • ரூடி மன்குசோ
உற்பத்தி
நிறுவனங்கள்
மூலம் விநியோகிக்கப்பட்டதுஅமேசான் பிரைம் வீடியோ
வெளியீட்டு தேதிகள்
நேரம் இயங்கும்
91 நிமிடங்கள் [1]
நாடுஅமெரிக்கா
மொழிகள்
  • ஆங்கிலம்
  • போர்த்துகீசியம் [2] [3]

Wednesday, April 10, 2024

HYPNOTIC (2023) - ஆங்கிலம்/தமிழ் - சினிமா விமர்சனம் ( மிஸ்ட்ரி ஆக்சன் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்

      


  2011 ஆம்  ஆண்டு  ரிலீஸ்  ஆன  ஏழாம்  அறிவு  எந்த  ஹாலிவுட்  படத்தில்  இருந்து  உருவிய  கதை   என  தெரியவில்லை., ஆனால்  ஏழாம்  அறிவு  படத்தை  அட்லீ  இடம்  தந்து  ஹாலிவிட்  படம்  ஒன்று  எடுக்கச்சொன்னால்  எப்படி  இருக்கும்? அதுதான்  ஹிப்னாட்டிக்  படம். இது  ஏற்கனவே  இதே  டைட்டிலில்  2021ல்  ரிலீஸ்  ஆன  படத்தின்  ரீ  க்ரியேஷன்  தான். 65  மில்லியன்  டாலர்  செலவில்  எடுக்கப்பட்டு  17  மில்லியன்  டாலர்  மட்டுமே  வசூலித்த  படம்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  போலீஸ்  ஆஃபீசர். அவரது  மகள்  காணாமல்  போய்  3  வருடங்கள்  ஆகிறது . அந்த  நிகழ்ச்சியால்  மன  நிலை  பாதிக்கப்பட்ட  நாயகன்  எப்போதும்  தன்  மனைவி , மகள்  நினைவாகவே  இருக்கிறான் . மன  நல  மருத்துவரிடம்  கவுன்சிலிங்  பெற்று  விட்டு  வெளியே  வரும்  நாயகன்  போலீஸ்  காரில்  செல்லும்போது  ஒரு  தகவல்  வருகிறது.


 ஒரு  வங்கியில்  குறிப்பிட்ட  ஒரு  லாக்கர்  கொள்ளையடிக்கப்பட  இருக்கிறது . அந்தத்தகவல்  கிடைத்ததும்  நாயகன்  அந்த  பேங்க்குக்கு  விரைந்து  செல்கிறான். குறிப்பிட்ட  அந்த  லாக்கரைத்திறந்து  பார்த்தால்  அதில்  நாயகனின்  மகளின்  ஃபோட்டோ  இருக்கிறது . நாயகனுக்கு  ஒன்றும்  புரியவில்லை 


 வில்லன்  நோக்கு  வர்மம்  கற்றவன். அதாவது  எதிராளியின்  கண்களைப்பார்த்தாலே  வசியம்  செய்து  விடுவான்  . எதிராளியின்  மூளையை  அவன்  கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு  வந்து   தான்  நினைத்ததை  முடித்து  விடுவான். அவனுக்கும்  தன்    மகள்  காணாமல்  போனதுக்கும்  ஏதோ  தொடர்பு  இருப்பதாக  நாயகன் சந்தேகப்படுகிறான். துப்பு  துலக்கக்களம்  இறங்குகிறான்


 நோக்கு  வர்மம்  கற்ற  இன்னொரு  பெண்ணின்  நட்பு  நாயகனுக்குக்கிடைக்கிறது . அவள்  நாயகனுக்கு  உதவுகிறாள் . இவளுடனான  பயணத்தில்  சாகசத்தில்  நாயகனுக்கு  ஒரு  உண்மை  தெரிய  வருகிறது . நாயகனுக்கும்  நோக்கு  வர்மம்  தெரியும். ஆனால்  வில்லனை  விட  பவ்பர்  ஃபுல்  ஆன  சக்தி  கொண்டவன்  நாயகன்.  நாயகன் , நாயகி  இருவரையும்  விட  அதிக  சக்தி  கொண்டவள்  தான்  நாயக்னின்  மகள் . அதனால்  தான்  அவள்    மறைத்து  வைக்கப்பட்டிருக்கிறாள் . இதற்குப்பின்  நாயகன்  எடுக்கும்  ஆக்சன்  அவதாரம்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  பெஞ்சமிக்ன்  அஃப்லெக்ஸ்  அபாரமாக  நடித்திருக்கிறார். அர்னால்டு  பாணியில்  அவரது  ஆக்சன்  அதிரடிகள்  ரசிக்க  வைக்கிறது . 


நாயகி  ஆக  அலைஸ்  பிராகா  அழகாக  நடித்திருக்கிறார். இவர்  ஒரு  தயாரிப்பாளரும்  கூட  . பிரேசில்  நாட்டைச்சேர்ந்த  நடிகை . 2002 ல்  ரிலீஸ்  ஆன  சிட்டி  ஆஃப்  காட்  படத்தில்  நடித்தவர் 


வில்லன்  ஆக  வில்லியம்  எய்ட்ச்னர்  மிரட்டி  இருக்கிறார். பார்வையாலேயே  அனைவரையும்  கட்டிப்போடும்  காட்சிகள்  அபாரம்


 மகள்  ஆக  வரும்  சிறுமி  கொள்ளை  அழகு 


94  நிமிடங்கள்  ஓடும்  படத்தில்  பெரும்பாலும்  சேசிங்  காட்சிகள்  தான் .பரபரப்பாக  படம்  ஓடுகிறது 


ரெபல்  ரோட்ரிக்ஸ்  இசையில்  பிஜிஎம்  தெறிக்கிறது 


ஒளிப்பதிவை  இருவர்  கவனித்திருக்கிறார்கள் .  ஹிபானடிக்  காட்சிகள்  பிரம்மாண்டமாகப்படம்  ஆக்கப்பட்டுள்ளன


ராபர்ட்  ரோடிங்க்னஸ்  தான்  கதை , திரைக்கதை , இயக்கம்  எல்லாம் 


சபாஷ்  டைரக்டர்


1  நாயகனுக்கு  நடக்கும்  சம்பவங்கள்  செட்  செய்யப்பட்டு  ரீ  க்ரியேட்  ஆகும்  தன்மை  கொண்டவை  என்ற  சஸ்பென்ஸ்  ஓப்பன்  ஆகும்  இடம்  அருமை 


2  நாயகனுக்கு  உதவி  செய்யும்  பெண்  , நாயகனின்  மனைவி  இருவரையும்  கனெக்ட்  செய்யும்  யுக்தி  அபாரம் 


3    நாயகனின்  மகளுக்கு என்ன  ஆகி  இருக்குமோ? என  பதற  வைத்து  பின்  அவள்  ஒல்ரு  சூப்பர்  பவர்  உள்ள  ஆள்  என்ற  ட்விஸ்ட்டை  ஓப்பன்  செய்யும்  காட்சி 


4  நாயகனின்  மகள்  அறிமுகக்காட்சியில்  தொட்டால்  சரியும்  சீட்டுக்கட்டு  போல  செட்டப்பை பிரம்மாண்டமாகக்காட்டிய  ஆர்ட்  டைரக்சன்    



  ரசித்த  வசனங்கள் 


1  நீங்க்  கற்பனை  பண்ணிப்பார்க்க  முடியாத  விஷயங்களை  ஹிப்னாடிக்சால  செய்ய  முடியும், உங்களுக்குத்தேவையான  வேலையை  அவங்க  மூளையை  வெச்சு  செய்ய  முடியும் 


2  டெலிபதியால  மைண்ட்  ரீடு  மட்டும்  தான்  செய்ய  முடியும், ஹிப்னாடிசத்தால  இன்சிடெண்ட்டை  ரீ  ஷூட்  செய்ய  முடியும் 


3 நீ  எனக்கு  துரோகம் பண்ணிட்டு  இருக்கே

  அதை  எனக்குக்கத்துக்கொடுத்ததே  நீ தான்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  லிப்  லாக்  சீன்  மட்டும்  ஒரு  இடத்தில்  உண்டு  , யூ  படம்  தான் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஆக்சன்  பிரியர்கள்  பார்க்கலாம் , படம்  போர்  அடிக்காமல்  ஸ்பீடாகப்போகிறது . ரேட்டிங்  2.75 / 5 


Hypnotic
Theatrical release poster
Directed byRobert Rodriguez
Screenplay by
Story byRobert Rodriguez
Produced by
  • Mark Gill
  • Guy Botham
  • Lisa Ellzey
  • Jeff Robinov
  • John Graham
  • Racer Max
  • Robert Rodriguez
Starring
Cinematography
  • Pablo Berron
  • Robert Rodriguez
Edited byRobert Rodriguez
Music byRebel Rodriguez[2]
Production
companies
Distributed by
Release dates
  • March 12, 2023 (SXSW)
  • May 12, 2023 (United States)
Running time
94 minutes[3]
CountryUnited States
LanguageEnglish
Budget$65 million[4]
Box office$16.3 million[5][6]

Tuesday, April 09, 2024

THE SWINDLERS (2017) - சவுத் கொரியன் மூவி /தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் ஆக்சன் த்ரில்லர்) அமேசான் பிரைம்

       

லோ பட்ஜெட்  படமாக  உருவான  இப்டம்  மொத்தம்  29  மில்லியன்  டாலர்கள் வசூல்  சாதனை  செய்தது. சிறந்த  நடிகைக்கான  விருதை நாயகியாக  நடித்த  நானாவுக்குக்கிடைத்தது.அமெரிக்காவில்  மட்டும்  முதலில்  ரிலீஸ்  ஆன  இப்படம்  ஹிட்  ஆனதும் சர்வதேச  அளவில்  பத்து  நாடுகளில்  பரவலாகத்திரை  இடப்பட்டது 


டைட்டில்  ஆன  ஸ்விண்ட்லர்ஸ்  என்பதற்கு  மோசடிக்காரர்கள்   என்று  அர்த்தம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

கதை  நிகழும்  காலம்  2008


வில்லன்  சீட்டுக்கம்பெனி  நடத்தி  பல  கோடி  பணம்  சேர்ந்தது,ம்  எஸ்கேப்  ஆகிடறான். பணம்  போட்ட  பொதுமக்கல்  கம்பெனி  மேனெஜரைக்கேள்வி  கேட்கிறார்கள் , அவங்களுக்கு  பதில்  சொல்ல  முடியாம  மேனேஜ்ர்  மாடில  இருந்து  குதிச்சு  தற்கொலை  செய்து  கொள்கிறார்

 நாயகன்  ஒரு   திருடன். நாயகனோட  அப்பா  வில்லனுக்கு  போலி  பாஸ்போர்ட்  ரெடி  பண்ணித்த்தருகிறார். அந்த  பாஸ்போர்ட்டை  வில்லன்  வாங்கிய  அடுத்த  நாள்  மர்மமான  முறையில்  நாயகனின்  அப்பா  தூக்கில்  தொங்கி இறக்கிறார்


 எந்த  நாட்டுக்கு  பாஸ்போர்ட்  ரெடி  பண்ணி  நாயகனின்  அப்பா  வில்லனிடம்  தந்தாரோ  அதே  நாட்டுக்கு  நாயகனும்  கிளம்புகிறான்.அப்போதானே  வில்லனைப்பிடிக்க  முடியும் ? 


ஆனால்  வில்லன்  ஒரு  விபத்தில்  இறந்ததாக்  மீடியாக்களில்  செய்தி   வருகிறது , ஆனால்  நாயகன்  அதை  நம்பவில்லை 


 அப்டியே  கட்  பண்ணினா  இப்போ  9  வருடங்கள்  கழித்து 2017 


வில்லன்  தப்பிப்போக  காரணமாக  இருந்த  பெரிய  தலைகள் , அர்சியல்வாதிகள்  மேல் விசாரணை  நடத்த  வேண்டும்  என  கோரிக்கை  கிளம்புகிறது / அந்த  லிஸ்ட்டை  வெளியிட்ட  பப்ளிக்  பிராசிக்யூட்டர்  தன்  உயர்  அதிகாரிகளை  ச்ந்திக்கிறார். அவங்க  கிட்டே  அவரு  பம்முவார்னு  பார்த்தா  அவங்க  தான்  இவரைப்பார்த்து  பம்மறாங்க . இந்தப்பிரச்சனையை  எப்படியாவது  முடிச்சு  விட்டுடு  என  கெஞ்சறாங்க 


  நாயகி  ஒரு  திருடி .ஒரு  நகைக்கடைல  தன்  கூட்டாளிகளோட  சேர்ந்து  நெக்லஸ்  கொள்ளை  அடிக்கறா. பப்ளிக்  பிராசிக்யூட்டர்  நாயகி  அண்ட்  கோ  வை  வேலைக்கு  அமர்த்தி   வில்லனைப்பற்றிய  டீட்டெய்ல்சை  எடுக்கிறான்


 நாயகன்  வில்லனைக்கொலை  செய்ய  அலைவது  பப்ளிக்  பிராசிக்யூட்டருக்கு  தெரிகிறது . இப்போது  பப்ளிக்  பிராசிக்யூட்டர் , நாயகன்  இருவரும்  இணைந்து  வில்லனை  சிக்க  வைக்க  திட்டம்  போடுகிறார்கள் . கடைசியில்  என்ன  ஆச்சு  என்பதுதான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  ஹியூன்  பின்  நடித்திருக்கிறார். அப்பாஸ்  மாதிரி  மைதா  மாவு  முகம், ஆனால்  ஆக்சனில் கலக்குகிறார்.  நாயகன்  போடும்  பல  கெட்டப்கள்  சிட்டிசன்  அஜித்  நினைவு  வருகிறது 


பப்ளிக் பிராசிக்யூட்டர்  ஆக   பார்க்  ஹி  ஷூ . நாயகன் , வில்லனை  விட  இவருக்குத்தான்  அதிக  காட்சி . கலக்கலான  நடிப்பு 


வில்லன்  ஆக  பே  சியாங்  வியூ  மிரட்டி  இருக்கிறார். ஆனால்  அதிக  காட்சிகள் இல்லை 


 நாயகி  ஆக  நானா .இவர்  புதுமுகம்  அறிமுகம், ஆனால்  புதுமுகம்  போலவே  தெரியவில்லை  பிரமாதமான  நடிப்பு .  நாயகனுடன்  டூயட்டோ  காதலோ  இல்லை 


பேங்க்  ஜூன்  ஜியோ  தான்  இசை . ஒரு  பரபரப்பான  ஆக்சன்  த்ரில்லருக்கு  பிஜிஎம்  எந்த  அளவு  விறுவிறுப்பாக  இருக்க  வேண்டுமோ  அந்த  அளவு  உழைத்திருக்கிறார்


லீ  டே  யூன்  ஒளிப்பதிவில்  கார்  சேசிங்  காட்சிகள்  கலக்கலாகப்படம் ஆக்கப்பட்டுள்ளன 


117  நிமிடங்கள்  ஓடும்படி  எடிட்டர்  படத்தை  கிரிஸ்ப்  ஆக  கட்  செய்து  இருக்கிறார்

ஜாங்க்  சாங்க்  வ்யோ  என்பவர்  தான்  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்

1 பிரமாதமான  கார்  சேசிங்  சீன்  படமாக்கப்பட்ட  விதம்  கண்ட்ரோல்  ரூமில்  இருந்து கேமரா  மூலம்  கண் காணித்து  டைரக்சன்  சொல்லிக்கொண்டே ஒரு க்ரூப்  செயல்படுவதும்  அதை  செயல்  ஆக்கம்  செய்வது  ஒரு  டீம்  என  பிரித்து  வேலை  செய்யும்  விதம்  அபாரம் 


2  வில்லனின்  கையாளை  மடக்க  ஜெயிலில்  நாயகன்  அண்ட்  போலீஸ்  டீம் போடும் திட்டம்  குட்


3  லேடியை  வைத்து வாலட்  அபேஸ்  செய்யும்  காட்சி 


4 கேபிள்  காரில்  வில்லன்  தப்பிக்கும்  காட்சி


5  க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்  , இண்ட்டர்வெல்  ட்விஸ்ட்  போக  இன்னும்  ரெண்டு  ட்விஸ்ட்  வேற 


  ரசித்த  வசனங்கள் 

1  அதிகப்படியான  சந்தேகம்  கூட  சில சமயம்  ஒருவரை  நம்பக்காரணமா  ஆகிடும்


2  ஆயிரம்  பேரை  நீ  ஏமாற்றினாலும்  நீ  ஏமாறும்  தருணம்  வந்தே  தீரும் 


3 எவ்ளோ  பெரிய  கூட்டத்தில் ஒருத்தன்  இருந்தாலும் ஒரு  சொதப்பல்காரனை  நான்  ஈசியா  அடையாளம்  கண்டு பிடிச்சுடுவேன்


4  எந்த  வேலை  செய்யறதா  இருந்தாலும்  அதுல  ஒரு  ஜாப் எதிக்ஸ்  வேண்டும்


5 எதிரே  இருப்பவன்  அமைதியா  இருக்கானேன்னு எகிறக்கூடாது ,இறக்கிட்டுப்போயிடுவேன்


6 நரியை  விடமோசாமானவன்  நீ,  ஆனா  அதை  இன்னொரு  நரி  கிட்டே  காட்டலாமா?


7 உலகத்துல இருக்கும்  எல்லா  ஆம்பளைங்களும்  ஒரே  மாதிரி  தான்  இருக்காங்க


8  ஒருத்தன் கிட்டே  முதல்  டைம்  ஏமாந்தா  அது  அவனோட  தப்பு , ரெண்டாவது  டைமும்  ஏமாந்தா  அது  நம்மோட  தப்பு 


9  திரும்பத்திரும்ப  அவனை  ஏமாத்துவதுதான்  அவனுக்கு  தரப்போகும் தண்டனை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 என்ன  தான்  பப்ளிக்  பிராசிக்யூட்டர்  சரக்கு  உள்ள  நபராக  இருக்கட்டுமே?அவரை  விட  பண  பலமும், அரசியல் பலமும்  மிக்க  அதிகாரிகள்  அவரிடம்  பம்முவது  நம்பவே  முடியவில்லை , 


2 நாயகன்  பல முறை  சாவின்  விளிம்பில்  வந்து  விட்டுத்திரும்புகிறான், ஆனால்  எதற்குமே  அலட்டிக்கொள்ளவில்லை .  என்னதான்  கெத்து  காட்டினாலும்  உயிர்  பயம்  எல்லோருக்கும்  உண்டு 


3  நகைக்கடையில்  நாயகி  கிளாமர்  காட்டி  மயக்கி  கொள்ளை  அடிப்பது  எம் ஜி ஆர்  கால  டெக்னிக். அவ்ளோ  பெரிய  கடையில்  அந்த  ஒரு  ஆள்  மட்டும்  தானா? மற்ற  சேல்ஸ்மேன்  யாரும்  அந்த  போலி  நகை  மாற்றுவதைப்பார்க்க  மாட்டார்களா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தமிழ்ப்படம்  பார்ப்பது  போலவே  இருக்கு . ஒரு  துளி  ஆபாசம்  இல்லை . கண்ணியமான  காட்சி  அமைப்புகள்  அருமை .  ஆக்சன்  த்ரில்லர்  ரசிகர்களுக்கு  விருந்து . ரேட்டிங்  3 / 5 


மோசடி செய்பவர்கள்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
ஹங்குல்
மற்றும்
திருத்தப்பட்ட ரோமானியமயமாக்கல்க்குன்
இயக்கம்ஜாங் சாங்-வொன்
எழுதியவர்ஜாங் சாங்-வொன்
உற்பத்திசங் சாங்-யோன்
நடித்துள்ளார்ஹியூன் பின்
யூ ஜி-டே
பே சியோங்-வூ
பார்க் சுங்-வூங்
நானா
அஹ்ன் சே-ஹா
ஒளிப்பதிவுலீ டே-யூன்
இசைபேங் ஜுன்-சியோக்
தயாரிப்பு
நிறுவனம்
மூலம் விநியோகிக்கப்பட்டதுஷோபாக்ஸ்
வெளிவரும் தேதி
  • நவம்பர் 22, 2017
நேரம் இயங்கும்
117 நிமிடங்கள்
நாடுதென் கொரியா
மொழிகொரியன்
திரைப்பட நுழைவு சீீட்டு விற்பனையகம்US$28.9 மில்லியன் [1]