Tuesday, April 04, 2023

ALMOST PYAAR WITH DJ MOHABBAT (2023) -ஹிந்தி- சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா )@ நெட் ஃபிளிக்ஸ்


இயக்குநர்  அனுராக்  கஷ்யாப்  பற்றி அறியாதவர்கள்  இருக்க  முடியாது 2004 ல்  ரிலீஸ்  ஆன  பிளாக்  ஃபிரைடே  எனும்  படம்  தான்  இவரது  முதல் படம்  என்றாலும் 2012 ல் ரிலீஸ்  ஆன  கேங்க்ஸ்  ஆஃப்  வாஷிபர் தான்  இவரை  புகழின்  உச்சிக்கு  ஏற்றியது . இவரது  லேட்டஸ்ட்  ரிலீஸ்கள்  2020 - சோக்கட் , 2022  துபாரா .

இப்போது  ரிலீஸ்ஆகி  இருக்கும்  படம்  ரிலீஸ்  ஆகும்  முன்பே  இரு  இண்ட்டர்நேசனல்  ஃபிலிம்  ஃபெஸ்டிவல்களில்  கலந்து  கொண்டு  பலரது  பாராட்டுதல்களைப்பெற்றது . பத்திரிக்கை , மீடியாக்களின்  பாசிட்டிவ்  விமர்சனங்கள்  அமைந்தும்  ஏனோ  கமர்ஷியல்  சக்சஸ்  ஆகவில்லை . 16 கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்   தயாரான  இப்படம்  2  கோடி  மட்டுமே  வசூலித்துள்ளது 


இரு  வெவ்வேறு  காதல்  கதைகள், ஆனா அடுத்தடுத்து  நிகழ்பவையாக  காட்டப்படும் , அதாவது  ஒரு  காதல்  ஜோடியின்  கதை  முதல்  ஷாட்  எனில்  அடுத்த  ஷாட்  இன்னொரு  காதல்  ஜோடியின்  கதை.  . இப்படியே  மாறி  மாறி  காட்சிகள்  வரும், இதில் சவாலான  விஷயம்  இரு  கதைகளிலும்  நாயகன்  , நாயகி  இருவரும்  ஒருவரே. அதாவது  நாயகன், நாயகி  இருவரும்  டூயல்  ரோல். கதைப்படி  இருவருக்கும்  எந்த  உறவு  முறையும்  இல்லை . ஒரே  தோற்றம்  உடைய  நாயகர்கள்  இருவரும்  அண்ணன், தம்பி  கிடையாது . அதே  போல்  ஒரே  தோற்றம்  கொண்ட  நாயகிகள்  இருவரும்  அக்கா , தங்கை  கிடையாது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


முதல்  காதல்  ஜோடியின்  கதை - நாயகி  ஒரு  இந்து . ஸ்கூலில்  படிக்கும்  ஒரு  மைனர்  பெண் இவளது  பொழுது  போக்கே  உள்ளூரில்  இருக்கும்  வீடியோ  கேசட்  கடையில்  டிவிடி  வாடகைக்கு  எடுத்து  வந்து  படம்  பார்ப்பதே. நாயகன்  ஒரு  முஸ்லீம்.,அந்த டிவிடி  கடை  முதலாளியின்  மகன், நம்ம  ஊர்  டிக்  டாக்  போல  அங்கே  டிங்க்  டாங்க்  என்ற  ஒரு  ஆப்பில்  வீடியோஸ்  போட்டு  பிரபலம்  ஆகி  வருபவன், அவனுக்கு  ஏகப்பட்ட  ஃபாலோயர்ஸ்  இருக்கிறார்கள் . நாயகியின்  பெரிய  லட்சியமே  ஹோலி  பார்ட்டியை  ஒரு  ரக்சியமான  இடத்தில்  தன்  ஃபிரண்ட்ஸ்  உடன்  கொண்டாட  வேண்டும்  என்பதே . ஆனால்  அவளது  பெற்றோர்  பாரம்பரியம்  மிக்க  குடும்ப  பழக்க  வழக்கங்கள்  கொண்டவர்கள்  என்பதால்  இந்த  டிக்  டாக்  வீடியோ, பாய்  ஃபிரண்ட்  என்பதை  எல்லாம்  விரும்பாமல்  நாயகியை  ஹவுஸ்  அரெஸ்ட்டில்  வைக்கிறார்கள் . ஆனால் நாயகன்  வீட்டுக்கு  வ்ந்து  இரவோடு  இரவாக  நாயகியை  அழைத்துக்கொண்டு  ஊரை  விட்டு  ஓடி  விடுகிறான்.இவர்களைத்தேடி  நாயகியின்  அப்பா, சகோதரன்  போலிஸ்  படையுடன்  கிளம்ப  இந்த  ஜோடிக்கு  என்ன  ஆனது  என்பது  க்ளைமாக்ஸ் 


இரண்டாவது  காதல்  கதை -நாயகி  ஒரு  பாகிஸ்தானி , அப்பா  ஒரு  செல்வந்தர் , பிஸ்னெஸ் மேன். நாயகன்  இசைக்கலைஞர்  ஆக  முயற்சி  செய்து  வருபவர் , இருவரும்  காதலிக்கிறார்கள் , இந்தக்கதையிலும் நாயகியின்  பெற்றோருக்கு  இது  பிடிக்கவில்லை . நாயகனை  சிறையில்  தள்ளுகிறார்கள் . நாயகன்  ஜெயிலில்  இருந்து  ரிலீஸ்  ஆகி  வந்த  பின்  என்ன  முடிவு  எடுக்கிறான்  என்பதே  கதை 


 இரண்டு  கதைகளிலும்  க்ளைமாக்ஸ்  சோக  முடிவு  என்பதுதான்  ஒரு  பெரிய  சோகம் 


 நாயகியாக அலயா  எஃப்  என்பவர் அருமையாக  நடித்துள்ளார் , இரு  வேடங்களிலும்  நல்ல  வித்தியாசம்  காட்டுகிறார். உடல்  மொழியிலும் சரி  முக  பாவனைகளிலும்  சரி. சிறப்பான  பங்களிப்பு. . கிளாமர்  கொஞ்சம்  தூக்கல் 


 நாயகன் ஆக கரன்  மேத்தா லாங்  ஹேர்  ஸ்டைலில்  கலக்குகிறார். சில  சமயங்களில்  லாங்க்  ஷாட்டில்  இவர்  நாயகனா? நாயகியா? என  சந்தேகம்  வருகிறது . கோபப்ப்டும்  காட்சியில்  கச்சிதம் 


டிஜே மொகபத் எனும் பாடகர்  வேடத்தில் விக்கி கவுசல்   கவுரவ  வேடத்தில்  வருகிறார். அவர்  பாடும்  பாடல்கள்  எல்லாம்  தத்துவ  முத்துக்கள் 


அமில்  திரிவேதியின்  இசையில்  லட்டு  மாதிரி  எட்டு  பாடல்கள் ., 3  பாடல்கள்  செம  ஹிட் கோனார்க்  சக்சேனாவின்  எடிட்டிங்கில்  கச்சிதமாக  2  மணி  நேரத்தில்  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்., ஆனால்  3  மணி  நேரம்  ஓடுவது  போல  ஒரு  பிரமை 


சில்வெஸ்டர்  ஃபோன்சேகா  தான்  ஒளிப்பதிவு . ஃபாரீன்  லொக்கேஷனை  பிரமாதமாக  படம்  பிடித்துள்ளார்


காதலர்களுக்குப்பிடிக்கும்  இந்தப்படத்தை  நெட்  ஃபிளிக்ஸ்  ஓ டி டி  யில்  காணலாம்


சபாஷ்  டைரக்டர்


1  இரு  கதைகளும்  வெவ்வேறு  ஜோடியுடையது, நாயகன், நாயகி  இருவரும்  டூயல்  ரோல் , இரு கதைகளுக்கும்  எந்த  கனெக்சனும்  இல்லை  என்று  தெரியவே  3  மணி  நேரம்  ஆகிறது , ஆனால்  மொத்தப்படமே  2  மணி  நேரம்  தான் , படம்  முடிஞ்சு  ஒரு  மணி  நேரம்  கழித்து  வீட்டுக்குப்போய்  யோசித்துப்பார்த்த  பின்  தான்  கதையே  புரிகிறது 


2  நாயகியின்  அழகு , ஆடை  அலங்கார  வடிவமைப்பு 


3  இரு  லவ்  ஜோடி  என்றாலும்  ஒரு  காட்சியில்  கூட  லிப்  கிஸ்  அல்லது  நெருக்கமான  காதல்  காட்சி  எதுவும்  இல்லாதது , குடும்பத்துடன்  காணத்தக்க  படம் 



  ரசித்த  வசனங்கள் 


1  மே  ஐ  கம்  இன்? என  அனுமதி  கேட்டு  வருவதில்லை  காதல் . எந்த  விஷ  எச்சரிக்கையும் தராமல்  திடீர்  என  வருவதே  காதல் 


2 காதலின்  வரையறைய  ஒரு  சமூகம்தான்  தீர்மானிக்கிறது 


3  செல்ஃபோன்  இந்த  ஜெனரேஷனின்  அழிவிற்கு  முக்கியக்காரணம்


4  என்னை  எந்தப்பையனும்  நிராகரிக்கவே  கூடாது, ஒருத்தன்னா  ஒருத்தன்  கூட... 


5  காதல்  என்பது  உனது  பலவீனம்  எனில்  பிரேக்கப்  என்பது  ஒரு கம்ப்பெல்சன்


6  ஒரே  நாளில்  என்  ஃபாலோயர்ஸ்  ஒரு  கோடி  ஆகிட்டாங்க 

 எப்படி?


 1 கே  எனக்காட்டுது  கே  ஃபார்  க்ரோர்  தானே?


 அது  சரி .. 1 கே = 1000


7  கோயில்  அல்லது  மசூதி  அல்லது  சர்ச்சுக்குள்  அமர்ந்து  சரக்கு  அடிக்கக்கூடாதுன்னா  க்டவுள்  இல்லாத  இடம்  ஒன்றைக்காட்டனும், அங்கே  அடிக்கலாம் 



8  முதல்  முறையா  நாம  சரக்கு  அடிக்கறோம்

, டேஸ்ட்கேவலமா  இருக்கு, எப்படி  இதைக்குடிக்கறாங்கஜனங்க?


  எப்படிக்குடிக்கறாங்க? என்பதை  விட  ஏன்  குடிக்கறாங்க  என்பதே  முக்கியம்


9   காதல்  என்பது  எது  தெரியுமா? விழி  ஒளி  இழந்தவன் ஒருவன்

 இருட்டான  அறையில்  கறுப்புப்பூனையைத்தேடுவது  போல 


10  இந்த  உலகம் ஏன்  இப்படி  இருக்கு ? தானும்  சந்தொஷமா  இருப்பதில்லை , மற்றவர்களையும்  சந்தோஷமா  இருக்க  விடுவதில்லை ?


11  காதலிப்பவர்களுக்கு  ம்ரியாதை  கிடைப்பதில்லை , அல்லது  யாரும்  அவர்களை  மதிப்பதில்லை  , அது  ஏன் ?


12  காதல்  என்பது  கத்தி  அல்ல,  அது  ஃபேமிலியை  கட்  ஆக்கிடாது


13 இந்த  உலகத்தில் எதற்கும்  கேரண்டி  இல்லை 


14   அவன்  ஒரு  முஸ்லீம், நான்கு  திருமணம்  வரை அவனுக்கு  அனுமதி  உண்டு , அவனை  நம்பாதே


15   வயசு  அதிகம்  ஆக  ஆக மனிதன்  முட்டாள்  ஆகிறான்

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகி  வீட்ல  பிரச்சனை . ஹவுஸ்  அரெஸ்ட். அப்பா, அண்ணன்  எதிரிகள் ஆகிட்டாங்க , ஆனா  காதலன்  வீடு  தேடி  வரும்போது  பாட்டி  ரொம்ப  கூலா  அவ  மேலே  தான்  இருக்கா  அப்டினு  ரூட்  சொல்லுதே? எந்த  வீட்ல  அப்படி  ந்டக்கும் ?

\

2  நாயகி  வீட்ல  மற்றவர்கள் தூங்கும்  முன்  கதவை  லாக்  பண்ற  பழக்கமே  இல்லையா? பெப்பரப்பேனு  ஹால். பெட்ரூம்கதவு  எல்லாம்  ஓப்பனா  இருக்கு ? அது  என்ன  கட்சி  ஆஃபீசா?  மெடிக்கல்  ஷாப்பா? 24  மணி  நேரமும்  திறந்திருக்க?

3  ப்பூ..  இதெல்லாம்  ஒரு பூட்டா? என விடுதலை  படத்தில்  ரஜினி  சொல்றார்னா  அதுல  அவர்  கேரக்டரே  திருடன்  தான். ஆனால்  குடும்பப்பெண்ணான  நாயகி அறிமுகம்  இல்லாத  வீட்டின்  பூட்டை  நாயகன்  கல்லால்  உடைக்கப்போகும்போது  தன்  ஹேர்  பின்னால்  அசால்ட்டாகத்திறப்பது  எப்படி ?


4  நாயகியின்  தம்பியின்   பைக்கை  ஆட்டையைப்போட்ட  நாயகன்  அதை  ஒரு  பெட்ரோல்  பங்க்கில்  அடமானமாக  வைத்து  5000  ரூபாய்  பெற்றிருக்கிறார். ஏதாவது  மெக்கனைக்  ஷாப்  அல்லது ஒர்க் ஷாப்பில்  வைத்தால்  இன்னும் அதிகமாககிடைக்குமே? 


5ஆண்களின்   தன்  பால்  ஈர்ப்பு  (  ஹோமோ)  பற்றி  பல  இடங்களில்  நக்கல்  அடிக்கிறார்  இயக்குநர் ., அது  இந்தக்கதைக்கு  சம்பந்தம்  இல்லாதது 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது  எல்லோருக்கும்  பிடிக்காது . காதலர்களுக்கும்  காதலில்  தோற்றவர்களுக்கு  மட்டுமே  பிடிக்கும். பெண்ணை  நம்பாதே  உன்னை  ஏமாற்றும்  என்ற  நீதியும்  இதில்  இருக்கு  , ரேட்டிங்  2.5 / 5 


Almost Pyaar with DJ Mohabbat
Almost Pyaar with DJ Mohabbat film poster.jpg
Theatrical release poster
Directed byAnurag Kashyap
Written byAnurag Kashyap
Produced byZee Studios
Ranjan Singh
Akshay Thakker
Dhruv Jagasia
Kabir Ahuja
Ajay Rai
Starring
  • Karan Mehta
  • Alaya F
  • Amber Arya
  • Vicky Kaushal
CinematographySylvester Fonseca
Edited byKonark Saxena
Music byAmit Trivedi
Production
companies
Good Bad Films
Zee Studios
Release date
  • 3 February 2023
CountryIndia
LanguageHindi
Budget₹15 crore[1]

Monday, April 03, 2023

PURUSHA PRETHAM (2023) -மலையாளம் - MALE GHOST- சினிமா விமர்ச்னம் ( க்ரைம் த்ரில்லர் & பிளாக் ஹ்யூமர் காமெடி மெலோ டிராமா) @ சோனி லைவ்


இரண்டரை  மணி  நேரப்படத்தில்  முதல்  இரண்டு  மணி  நேரம்  காமெடி , கடைசி  அரை  மணி  நேரம் கலக்கல்  த்ரில்லர்  என  ஒரு  படம்  இரண்டரை  மணி  நேரம் ஓடினால் நீங்கள் பார்க்கத்தயாரா? அப்போ  இந்தப்படம்  உங்களுக்குத்தான். இந்தப்படத்தைப்பார்த்து  விட்டு  மெகா  ஸ்டார்  மம்முட்டி  பட  டைரக்டரை ( கிருஷாந்த்) அழைத்து  எனக்கு  ஒரு  படம்  பண்றீங்க என  சொல்லி  டேட்ஸ்  கொடுத்திருக்காராம்

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  போலீஸ்  சப் இன்ஸ்பெக்டர் , இவ்ர்  சும்மா  ஒரு  பில்டப்  பகவதி. இவர்  ஒரு போலீசாக  பெரிதாக  சாக்சம்  எதுவும்  செய்யவில்லை  என்றாலும்  இவராக  ஒரு  இமேஜ் மெயிண்ட்டெயின்  பண்ண  நான்  அப்படி  செஞ்சேன் ,இப்படி  செஞ்சேன்  என  பில்டப்  கதைகளாக  ரெடி பண்ணி  இமேஜை  மெயிண்ட்டெயின் செய்பவர் , இதனாலயே  இவர்  பேரு  சூப்பர்  செபாஸ்டின்  என  ஆகு  பெயர்  ஆனது 


பொதுவாக  யாராலும்  அடையாளம்  காட்டாத  அல்லது  யாரும்  க்ளெய்ம்  பண்ணாத  அனாதைப்பிணங்களை  7  நாட்கள்  வரை   வைத்திருந்து  பின்  புதைத்து  விடுவதுதான்  போலீசின்  பழக்கம், ஆனால்  ஆல்ரெடி  மார்ச்சுவரியில்  ஏகப்பட்ட  பாடிகள் இருப்பதால்  மேலும்  கிடைத்த  ஒரு  எக்ஸ்ட்ரா  டெட்  பாடியை  நாயகன் புதைத்து  விடுமாறு  ஆணை  இடுகிறார்


புதைத்த  பின்  தான்  ஒருஏழரை;  ஸ்டார்ட்  ஆகுது. ஒரு  திருமணமான  பெண்  தன்  கணவன்  தான்  அது , இப்போதுதான்  உங்கள்  விளம்பரம்  பார்த்தேன் , அதைத்தோண்டி  எடுங்க  என  உரிமை  கோரி  வருகிறார்/


 ஆனால் அந்த  டெட்  பாடி அந்தப்பெண்ணின்  கணவன் அல்ல  என்பதை  நாயகன்  கண்டு  பிடிக்கிறார். அப்போ  அந்தப்பெண்ணின்  கணவன்  என்ன  ஆனார்?  அவரை  யார்,  ஏன்  கொலை  செய்தார்கள் ?   என்பதுதான்  மீதி  திரைக்கதையே


 நாயகன்  செபாஸ்டின்  ஆக பிரசாந்த்  அலெக்சாண்டர். பிரமாதமான  நடிப்பு. நம்ம  ஊர்  வடிவேலு  மாதிரி  பில்டப்  செய்வதாகட்டும் , பசுபதி    மாதிரி  சீரியஸ்  முகம்  காட்டுவதாகட்டும்  இரண்டிலும்  அதகளப்படுத்தி  இருக்கிறார்


 நாயகி  அல்லது  வில்லி  ஆக  தர்சனா  ராஜேந்திரன். ஜெய ஜெய ஜெயஹே  படத்தில்  காமெடியில்  கலக்கியவரா  இப்படி  வில்லித்தனம்  புரிகிறார்  என  ஆச்சரியப்படுத்தும்  அளவில்  அருமையாக  நடித்திருக்கிறார்


படத்தில்  இவர்கள்  இருவர்  போக  ஏராளமான  கதாபாத்திரங்கள்  இருந்தாலும்  கவனம்  ஈர்ப்பவர்கள்  இவர்கள்  இருவர்  மட்டும்தான்


 அடையாளம்  காணப்படாத  டெட்  பாடியின்  மனைவியாக  நடித்தவர் நாயகன்  மேல்  சந்தேகப்பட்டு  நீதான்  என்  புருசனைக்கொன்னியா? என  கேட்கும்  காட்சி  பரபரப்பு . அவருடனான  நாயகனின்  ரொமாஸ்  காட்சிகளும்  எல்லை  மீறாத  அளவில்  கண்ணிய  ரசிப்பு


படத்துக்கு  பின்னணி  இசை , ஒளிப்பதிவு  இரண்டும்  பலம் . இரண்டு  மணி  நேரப்படமாக  சுருக்கி  ட்ரிம்  பண்ணி  இருக்கலாமோ  என  எண்ண  வைக்கும்  எடிட்டிங்


காமெடியாகவே  முழுப்படமும்   போய்  விடுமோ  என  நினைக்கும்  நேரத்தில்  கடைசி  அரை  மணி  நேரத்தில் க்ரைம்  த்ரில்லர்  ஆக  டோன்  அப்  ஆகும்  திரைக்கதை  செம  விறுவிறுப்பு 


 குடும்பத்துடன்  பார்க்கத்தகுந்த  இந்த  த்ரில்லர்  மூவி  சோனி  லைவ்  ஓடிடி  யில்  தமிழ்  டப்பிங்கிலேயே  கிடைக்கிறது 


சபாஷ்  டைரக்டர்


1   மிஸ்சிங்  கேஸ்  டீல்  பண்ண  தனி  போலீஸ்  படை  நியமிக்கப்படவேண்டும். அப்படி  செய்யாவிட்டால் ரெகுலர்  ட்யூட்டி  பார்க்கும்  போலீசின்  பணி  பாதிக்கப்படும்  என  இயக்குநர்  சொல்ல  வந்த  மெசேஜ்  பக்காவாக  பதிந்து  விட்டது 


2  அனாதைப்பிணம்  என  நினைத்த  ஆளின்  மனைவியை  நாயகன்  கரெக்ட்  பண்ணுவதும்  அவரிடம்  தன்  வீர  சாகசங்கள்  பற்றி  அளந்து  விடும் காட்சிகளும் 


3  என்  கணவர்  நகைகள் , செயின் , மோதிரம்  எதுவும்  அணிய  மாட்டார்  எனற  கீ பாயிண்ட்டை  வைத்து  துப்பு  துலக்கும்  காட்சி  அருமை 


4   காமெடியாக  செல்லும்  திரைக்கதை  கடைசி  அரை  மணி  நேரம்  த்ரில்லராக  செல்வது  , பின்  க்ளைமாக்சில்  மீண்டும்  வெட்டி  பில்ட்ப்  காமெடி  என  ஃபினிசிங்  டச்  பக்கா 


  ரசித்த  வசனங்கள் 


1  சார், நேத்து பூரா  அவங்க  உங்களை  திட்டிட்டே  இருந்தாங்க  சார்


 வயசானாலே  அபடித்தான், நீ  எதும்  மன்சுல  வெச்சுக்காதம்மா..


அய்யோ  சார், அவங்க  திட்டுனது  என்னை  இல்லை , உங்களை 


2 டெட்பாடியை முதல்ல  பார்த்தது  யாரு?


 அவன்  தான்  சார்


நான்  இல்லை,இவன்  தான்  சார்  முதல்ல  பார்த்தான்


  யோவ், டெட்  பாடியை  முதல்ல  பார்த்தவங்களுக்கு  பஞ்சாயத்தில் 1000  ரூபா  தர்றாங்களாம்

 அப்படி  இருந்தாலும்  அவன்  தான்  சார்  முதல்ல  பார்த்தான் 



3   எதுக்காக  பீடி  குடிச்சீங்க ?

 ஆதோட  கெட்ட  நாற்றம்  போகத்தான்


4  உங்க  புருசனுக்கு  ஆத்துல  குளிக்கற பழக்கம் உண்டா?


 இல்லை சார் , நாங்க  யு எஸ்  ல  இருந்தோம்

 ஏன்? ஃபாரீன்ல  இருக்கறவங்க  ஆத்துல  குளிக்க  மாட்டாங்களா?


5  சார், என்  டிரைவிங்  ;லைசென்சை  காணோம்


 பர்ஸ்ல  பத்திரமா  வெச்சிருக்கலாமில்ல?


 அப்டிதான்  சார்  வெச்சிருந்தேன், பர்சோட  காணாம  போயிடுச்சு 


6  அந்தப்பொண்ணைப்பார்த்தா  உனக்கு  என்ன  தோணுது ?


 சார், எனக்கு  இடுப்புல  சுளுக்கு  பிடிச்சதுல  இருந்து  யாரைப்பார்த்தாலும்  எதுவும்  தோன்றதில்லை  சார் 


7  போலீஸா  இருக்கும்  நீ  இந்த  அளவுக்கு  நேர்மையா இருக்க  வேண்டிய  அவசியம்  இல்லை 


8 ஹையர்  ஆஃபீசர்  மீட்டிங்னா  என்ன  தெரியுமா? அவங்க  நம்மைத்திட்ட  நாம  அவங்களுக்கு கிடைக்கனும்


9  பேயைப்பார்த்து நாம  ஏன் பயப்படனும்? நாம் போலீஸ், நம்மைப்பார்த்துதான்  எல்லாரும்  பயப்படனும்


10 போதை  அதிகமா  இருக்க  மட்டமானச்ரக்கு  வாங்கினா  போதும்


11  ஒரு  சுப்பீரியர்  ஆஃபீசர்  உனக்குப்பிடிக்காத  வேலையை  செய்யச்சொல்லும்போது  அவர்  முகத்துக்கு நேரா  முடியாதுனு  சொல்லி  இருக்கனும்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   க்ளைமாக்சில் வில்லி  தப்பி  விட்டது  போல்  காட்டியதை  தவிர்த்திருக்கலாம்,  அட்லீஸ்ட்  பாகம்  2  வருவதாக  லீட்  கொடுத்திருக்கலாம் 


2  டெட்  பாடியை  அடையாளம்  அறிய  டி என் ஏ  டெஸ்ட்  ஒரு வழி  அச்சே? அதை  ட்ரை  பண்ணவே  இல்லை 


3  வக்கீலாக  வருபவர்  நாயகிக்கு  ஏன்  வீட்டு  எடுபுடி  வேலைகள் எல்லாம்  செய்கிறார்? என்பதற்கு  சரியான  பதில் இல்லை 


4  நாயகியின்  தம்பி  பொடிப்பையன்  மாதிரி  இருக்கிறான் அவன்  ஒரு போலீஸ்   இன்ஸ்பெக்டரை  அசால்ட்டாக  தாக்குவது  எல்லாம்  ஓவர் 


5  இரண்ட்ரை மணி  நேரம்  திரைக்கதையை  இழுத்தவ்ர்கள்  நாயகி  தன்  கணவனை  என்ன  செய்தார்? என்பதை  விஷூவலாக  காட்டாதது ஒரு  குறை 



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   முக்கால்  வாசிப்படம்  பிளாக்  ஹ்யூமர்  காமெடி  கடைசி  அரை  மணி  நேரம்  பர பரப்பான  த்ரில்லர்  என  அமைந்து  இருப்பதால்  படம்  ஓக்கே  ரகம்  தான் , ரேட்டிங்  2. 75 / 5 

Sunday, April 02, 2023

CONGRADULATIONS (2023) (குஜராத்தி) - சினிமா விமர்சனம் ( காமெடி மெலோ டிராமா ) @ அமேசான் பிரைம்

 


பெண்களுக்கு  இணையாக  ஆண்களுக்கும்  எல்லா  உரிமைகளும்  , வசதிகளும் , வாய்ப்புகளும்  கிடைக்க  வேண்டும்  என  எதிர்காலத்தில்  ஆண்கள்  போராடக்கூடிய  சூழ்நிலை  வரலாம். ஒரு  ஆண்  கர்ப்பமானால்  என்ன  ஆகும் ? என்ன என்ன  பிரச்சனைகளை சந்திக்க  நேரும்  என்பதுதான் கதையின்  ஒன்  லைன் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் , நாயகி  இருவரும்  தம்பதிகள் . திருமணம்  ஆன  சில  நாட்களிலேயே  குழந்தைக்காக  தவம்  இருக்கிறார்கள் , நாயகி  கர்ப்பம்  ஆனதும்  குடும்பத்தில்  ஒரே  கொண்டாட்டம் , ஆனால்   சீமந்த  விழாவில்  நாயகி  கால்  வழுக்கி  குப்புற  விழ  கர்ப்பம்  கலைகிறது 


 ஒரு  அதிர்ச்சி  செய்தியும்  வருகிறது.  நாயகி  கர்ப்பப்பை  பலவீனம்  அடைந்து  விட்டது  , இனி  அவர்  குழந்தை  பெற்றுக்கொள்ளும்  வாய்ப்பு  அறவே  இல்லை 


வாடகைத்தாய்  முறையில்  குழந்தை  பெற பல  லட்சங்கள்  செலவாகும்  என்பதால்  அந்த  ஐடியா  கை  விடப்படுகிறது 

 வேறு  ஏதாவது  குழந்தையை  தத்து  எடுத்துக்கொள்ளலாம்  என  தம்பதி  நினைக்கும்போது  நாயகனுக்கு  ஒரு  ஐடியா தோன்றுகிறது. பல  சாதனை   பரிசோதனை  முயற்சிகளை  எடுத்து  வரும்  ஒரு  டாக்டரை  சந்தித்து   ஒரு  ஆணான  தன்னால்  கர்ப்பம்  ஆக  முடியுமா:? என  கேட்கிறான் 

 டாக்டர்  ஓக்கே  சொல்கிறார். மனைவியின்  கரு  முட்டை ,  கணவனின் உயிர்  அணு  இரண்டையும்  இணைத்து  நாயகனின்  வயிற்றில்  வைக்கப்படுகிறது


இந்த  விஷயம்  மீடியா  மூலம்  பரவி இயற்கைக்கு  எதிரானது  என  எதிர்ப்பு  கிளம்புகிறது. 25  கோடி  ரூபாய்  செலவில்  ஆராய்ச்சி  செய்த  நிறுவனம்   அந்த  குழந்தைக்கு  தாங்கள்  தான்  சொந்தம்  என  உரிமை  கோருகிறார்கள் 


நாயகனுக்கு  குழந்தை  பிறந்ததா? இல்லையா? என்பது  க்ளைமாக்ஸ் 


நாயகன்  ஆதித்யாவாக  ஷர்மான்  ஜோஷி  மிகப்பொறுமையான  கேரக்டரில்  கச்சிதமாக  நடித்துள்ளார் . குறிப்பாக  அந்த  ரேடியோ  இண்ட்டர்வ்யூ  சீனில்  கோக்குமாக்கான  கேள்விகளுக்கு  அவரது  மனதைத்தொடும்  பதில்  பிரமாதம் .


நாயகி  ராகிணிஆக  மான்சி  பரேக். கர்ப்பம்  ஆன  விஷயத்தை  தன்னிடம்  மறைத்த  கணவனைக்கண்டு  கோபம்  கொள்ளும்  அவர்  ரேடியோ  பேட்டியில்  தன்னை  உயர்த்தி  அவர்  பேசியது  கண்டு நெகிழ்வது  நல்ல  தருணம், சிறப்பாக  செய்திருக்கிறார் 


ஆபரேஷன்  செய்யும்   டாக்டர்களாக  நடித்த  இருவரின்  நடிப்பும்  கச்சிதம் . நாயகனின்  பெற்றோராக  நடித்தவர்கள்  குணச்சித்திரம், காமெடி  என  இரு  கோணங்களிலும்  நல்லா  ஸ்கோர்  செய்து  இருக்கிறார்கள் 


132  நிமிடங்க்ள்  டியூரேஷன்  என  விக்கி பீடியா  சொல்கிறது , ஆனால்  112 நிடங்கள் தான்  படம், மிகச்சுருக்கமாக  ட்ரிம்  செய்து  எடிட்  செய்து  இருக்கிறார்கள்


பாவிக்  ஹிராலை   சராணியா  உறுத்தாத  ஒளிப்பதிவில்  காட்சிகளைப்படம்  பிடித்து  இருக்கிறார்

ராஹன் சவுத்ரி  திரைக்கதை  இயக்கம்,ஒரு  மாறுபட்ட  ஃபேமிலி  காமெடி  டிராமை  தந்த  விதத்தில்  அவ்ரை  பாராட்டலாம் .


 அமேசான்  பிரைம் ல  காணக்கிடைக்கிறது 

சபாஷ்  டைரக்டர்

1   நாயகனின்  வீட்டின்  முன்    ஆண்  கர்ப்பம்  ஆவதை  எதிர்த்துப்போராட  வந்த  மாதர்  சங்க  அமைப்பின்  தலைவியிடம்  நாயகனின்  அப்பா  பேச்சுக்கொடுத்து கடலை  போட்டு கரெக்ட்  பண்ண  முயற்சிக்கும்  காமெடி கலாட்டாக்கள்


2  நாயகனின்  எம் டி  அவங்க  ரேடியோ  ஸ்டேஷன்  சார்பாக  ஒரு  இண்டர்வ்யூ  கேட்க  அதற்கு  மறுக்கும்  நாயகனிடம்  அவன் அப்பா  தன்  தரப்பு  விளக்கத்தை  அளித்து இண்டர்வ்யூ  பண்ண  ஓக்கே  வாங்கும்  காட்சி  வசனம் , நடிப்பு  அனைத்தும்  கச்சிதம் 


3  ரேடியோ  ஸ்டெஷனில்  கேள்விகளுக்கு  பதில்  அளிக்கும்  காட்சியில்  இயக்குநர்  டச்  தெரிகிறது 


 ரசித்த  வசனங்கள் 


1  ஒரு  மருமகளா  உன்  கிட்டே  எங்க  வீட்டு  லாக்கர்  சாவி  ஒப்படைககனும்னு  எனக்கும்  ஆசைதான், ஆனா  எங்க  வீட்ல  லாக்கர்  இல்லையே?


2 ஒரு  நல்லது  நடக்க  எப்பவும்  தாமதம்தான்  ஆகும், இது  இயற்கையின்  விதி 


3   கடல்  குதிரை  ஆண்  பால்  தான்  கர்ப்பம்  தரிக்கும், அதை  கடல் நீருக்கு  அடியில் தான்  பார்க்க  முடியும் 


4  பயம்  என்பது  நல்ல  விஷயம்  தான், அது  பல  விஷயங்களை  ஃபோகஸ்  பண்ண  வைக்கும் . ஒவ்வொரு  விஷயத்தையும்  நீ  ஃபோகஸ்  பண்ணும்போது  உன்  முன்னேற்றத்துக்கு  அது  வழி  வகுக்கும் 


5  நான்  அப்பா  ஆகப்போறேன்னு  சொல்லவா? நான்  அம்மா  ஆகப்போறேன்னு  சொல்லவா? சரி, நான்  கர்ப்பமா  இருக்கேன்,  உலகின்  முதல் ஆண்  கர்ப்பவதன் 


6  நான்  ஒரு  பயங்கரமான  கனவு கண்டேன், நம்ம  மகன்  கர்ப்பமா  இருக்கான் 


 அடியே  அது  கனவு  இல்ல  , நிஜம் தான், ஆந்த  தகவலை  மகன்  சொன்னதும்தான்  மயங்கி  விழுந்தே 


7  நான்  உன்  கிட்டே  பொய்  சொல்லலை , ஒரு  ரகசியத்தை  மறைத்தேன், அவ்வளவுதான்


 ரகசியத்தை  மறைப்பது பொய்  சொல்வதை  விட மோசமானது 


8  உனக்காகத்தான் , உனக்காக  மட்டும் தான்  நான்  இந்த  குழந்தையை  பெத்துக்கபோறேன்


 அதுதான்  பிராப்ளம். நம்ம  இரண்டு  பேருக்காகவும்தான்  நான்  குழந்தை  பெத்துக்க  நினைச்சேன், ஆனா  நீங்க  எனக்காக  மட்டும்  குழந்தை  பெத்துக்கறதா  சொல்றீங்க,, ரெண்டுக்கும்  வித்தியாசம்  பார்த்தீங்க  இல்ல ? 


9 நம்ம  வீட்டுக்கு  முன்னால  பலர்  கோஷம்  எழுப்பிப்போராட்டம்  பண்றாங்க, நான்  உடனே  போலீஸ்க்கு  ஃபோன்  பண்றேன்


 வேண்டாம் ,வந்தது ஆண்கள்னா  நானே  போலீஸ்க்கு  ஃபோன்  பண்ணி  இருப்பேன். வ்ந்தது  பூரா  பெண்கள் . ஹிஹி 


10  ஆண்  கர்ப்பம்  ஆவது  இயற்கைக்கு  எதிரானதுனு  உங்களுக்கு  தோன்றவில்லையா?


 இல்லை . எதிர்காலத்தில்  ஒரு  வீட்டில்  இரண்டு  குழந்தைகள்  எனில்  ஒரு  குழந்தை  மனைவி  பெற்றதாகவும்  ஒரு  குழந்தை  கணவன்  பெற்றதாகவும்  இருக்கும்


11  அன்பு  இருக்கும் இரு  இதயங்களிடையே  மிஸண்டர்ஸ்டேண்டிங்  வரலாம், ஆனா  வெறுப்பு  வராது 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஓப்பனிங்  ஷாட்ல  டைனிங்   டேபிளில்  உட்கார்ந்து  குடும்பம்  சாப்பிடுது. புது  மருமகளின்  முதல்  நாள் .மருமகள்  ஸ்லீவ்லெஸ்  ஜாக்கெட் , பேக்  ஃபுல்  ஓப்பன்  மாடல்  ஜாக்கெட்  போட்டுட்டு  கிளாம்ரா  இருக்கு புது  வீட்ல  சகஜமா  பழக  அட்லீஸ்ட்  10  நாட்கள்  ஆகாதா?  அதே  போல்  மாமியார்  தன்  கணவருக்கு  சப்பாத்தி  சர்வ் பண்ணும்போது  இடது  கைல  எடுத்து  பரிமாறுகிறார். வலது  கைல  தானே   பரிமாறுவாங்க ?


2  கல்யாண  முகூர்த்தம்  நல்ல  நாள்  குறிக்கும்போது    சாந்தி  முகூர்த்தத்துக்கு  உகந்த  நாள்  பார்த்துத்தான்  தேதி  குறிப்பாங்க , அதாவது  குழந்தை  உருவாக  தோதான  சமயம்  மென்சஸ்  தேதி  முடிந்து  12 வது  நாள்  இப்படித்தான்  முகூர்த்தம்  வரும் , ஆனால்  நாயகி  முதல்  இரவில் சாரி  இன்னைக்கு  எனக்கு  மென்சஸ்  டேட்  என  சொல்கிறார்  எப்படி ?                                                                                                                              

3  நாயகியின்  மாமியாருக்கும்  , நாயகிக்கும்  ஆகாது , கர்ப்பமா  இருக்கும்போது  பிறந்த  வீட்டுக்கு  அழைத்துச்செல்ல  வ்ந்த  அம்மாவிடம்  எல்லா  வசதியும்  வேணா  நம்ம  வீட்டில்  இருக்கலாம், ஆனா  ஃபேமிலி  இங்கே  தான்  இருக்கு  வர  மாட்டேன்  என  சொல்வது  டி வி  சீரியல்  டிராமா  பார்ப்பது  போல  இருக்கு 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  க்ளீன்  யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   முதல்  பாதி  பார்த்துப்பழகிய  கதை , பின் பாதி  காமெடி  + சுவராஸ்ய  நிகழ்வுகள் ..  பார்க்கலாம் . ரேட்டிங்  2. 5 / 5 


thanx to    anicham minnidhazh  1/4/2023 

நன்றி - அனிச்சம்  மின்னிதழ் 1/4/2023


Congratulations
Directed byRehan Chaudhary
Written by
  • Rehan Chaudhary
Produced by
Starring
CinematographyBhavik Hiralal Charania
Music byKedar - Bhargav
Production
companies
  • Sharman Joshi Productions
  • Rehan Chaudhary Films
Distributed byRupam Entertainment Pvt Ltd
Release date
  • 3 February 2023
Running time
132 minutes
CountryIndia
LanguageGujarati

Saturday, April 01, 2023

BALAGAM (2023) தெலுங்கு - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா ) @ அமேசான் பிரைம்


 திரைக்கதை  பலமாக  அமைந்து  விட்டால்  முன்னணி  நாயகர்கள்  கால்ஷீட்டுக்காக  அலையத்தேவை  இல்லை , வெளி நாடுகளில்  ஷூட்டிங்  வைக்கத்தேவை  இல்லை.  என்பதை  மீண்டும்  ஒரு  முறை  நிரூபிக்க  வந்துள்ள நல்ல  படம், மிகக்குறைந்த  முதலீட்டில்  புதுமுகங்கள்  பெரும்பாலானோர்  பங்களிப்பில்  உருவாகி  மனதைத்தொடும்  படமாக  அமைந்த  இந்த  பாலகம்  15  கோடி  ரூபாய்  பாக்ஸ்  ஆஃபீஸ்  கலெக்சனை  தொட்டிருக்கிறது

2015 ஆம்  ஆண்டு  வெளியான   திதி  என்னும்  கன்னடப் படத்தின்  அஃபிசியல்  ரீமேக்  தான்  இந்த  பாலகம்  எனும்  தெலுங்குப்படம் ,  ஒரிஜினல்  வெர்சன்  ஆன  திதி   சர்வதேச  திரைப்பட  விழாவில்  தங்க  சிறுத்தை  விருதை  வென்றது , மேலும்  63  வது  தேசிய  திரைப்பட  விழாவில்  சிறந்த  கன்னடப்பட  விருதை வென்றது . மேலும்  சிறந்த  இயக்கம் , சிறந்த  படம் , உட்பட  18  விருதுகளை  வென்ற  படம் 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  கிராமத்தில்  தன்  தாத்தாவுடன்  வசித்து  வருகிறான். நாயகனுக்கு  முக்கியமாக  ஒரு  கடனை  அடைக்க  வேண்டிய  கட்டாயம்  இருக்கிறது . அந்த  கடனை  அடைக்க  வசதியான  ஒரு  பெண்ணைக்காதலித்துக்கல்யாணம்  பண்ண  திட்டம்  இடுகிறான்.


ஆனால்  அதற்குள்  அவன்  எண்ணத்தில்  இடி  விழுந்தாற்போல  நாயகனின்  தாத்தா  இறந்து  விடுகிறார்.  இனி  11  நாட்கள்  வீட்டில்  விசேஷம்  வைக்க  முடியாது ., அதனால்  நாயகன்  கடன்காரரிடம்  12  நாட்கள்  கால  அவகாசம்  கேட்கிறார்


  ஈமக்கிரியை  நடத்த  சொந்தபந்தம்  எல்லாம்  ஒன்று  கூடுகிறது . அப்போதுதான்  நாயகனுக்கே   தனக்கு  ஒரு  முறைப்பெண்  இருப்பதே  தெரிய  வருகிறது .  மிக  வசதியான்  பெண். ஆனால்  சில  சச்சரவுகள்  காரணமாக  இப்போது  அவர்கள்  குடும்பத்துடன்  போக்குவரத்து  எதுவும்  இல்லை 


 உடனே  நாயகன்  தான்  கல்யாணம்  பண்ணலாம்  என  நினைத்த  பெண்ணை  ஓபிஎஸ்  சை  கழட்டி  விட்ட  இபிஎஸ்  மாதிரி   அம்போ  என  நட்டாத்தில்  விட்டு  விட்டு  இந்த  அத்தை  பெண்ணுடன்  நட்பு , பழக்கம்  ஏற்படுத்திக்கொள்ள  விழைகிறார்


 தாத்தாவுக்கு  படையல்  வைக்கும்போது  காகம்  அதை  ஏற்று  உண்ணவில்லை , அப்போ  தாத்தாவுக்கு  ஏதோ  மனக்குறை  என  முடிவாகிறது . அந்த  கிராமத்து  பஞ்சாயத்து  கூடி  காகம்  படையலை  ஏற்கவில்லை  எனில்  இந்த  குடும்பத்தை  ஊரை  விட்டு  தள்ளி  வைக்க  முடிவாகிறது 


காகம்  ஏன்  படையலை  ஏற்றுக்கொள்ளவில்லை , அதற்கு  பரிகாரமாக  என்ன  செய்தார்கள் ? சண்டையில்  பிரிந்த  குடும்பம்  ஒன்று  சேர்ந்ததா? நாயகன்  தன்  முறைப்பெண்ணை  மணந்தாரா? எனப்துதான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஷைலுவாக  பிரியதர்ஷி பக்கத்து  வீட்டுப்பையன்  போன்ற  எதார்த்தமான  தோற்றம் , மிகை  இல்லாத  அடக்கி  வாசிக்கும்  நடிப்பு  என  மனம்  கவர்கிறார், கடனை  அடைக்க  கடன்காரர்களிடம்  கெஞ்சுவது , பெண்ணைப்பார்த்ததும்   வழிவது  , க்ளைமாக்சில்  தாத்தாவின்   மரணத்தை    தன்  சுயநலத்துக்காக உபயோகித்தது  குறித்து  வருந்துவது  என  கனகச்சிதமான  பங்களிப்பை  வழங்கி  இருக்கிறார்


நாயகி  சந்தியாவாக  காவ்யாகல்யாணராம் கிராமத்து  அழகியாக  அடக்கமான பெண்ணாக  வருகிறார். அதிக  வாய்ப்பில்லை  என்றாலும்  வந்தவரை  ஓக்கே  ரகம் 


மற்ற  சொந்த  பந்தங்கள்:  அனைவரும்  புதுமுகங்கள்  நடிப்பா?  யதார்த்தமா  வாழ்ந்துட்டுப்போய்  இருக்கிறார்களா ? என  கண்டு  பிடிக்க  முடியாதபடி  அவ்வளவு  யதார்த்தமான   நடிப்பை  வழங்கி  இக்ருக்கிறார்கள் 


ஆச்சர்யா  வேணுவின்  ஒளிப்பதிவில்  ஒரு  கிராமத்தின்  அழகை  கண்  முன்  கொண்டு  வந்திருக்கிறார் 

ஹிமல்ராஜ்  ரெட்டியின்  எடிட்டிங்கில்   2  மணி  நேரம்  5  நிமிடம்  ஓடும்  படமாக  கச்சிதமாக  ட்ரிம் பண்ணி  இருக்கிறார்


பீம்ஸ்  சிசிரேலியா வின்  இசையில்  3  பாடல்கள்  செம  ஹிட்  மெலோடிஸ் .பின்னணி  இசை    மனம்  கனக்க  வைக்கிறது 


ஓப்பனிங்  சீனில்  இருந்து  முதல்  20  நிமிடங்கள்  காமெடியாகப்போகும்  படம்  தாத்தாவின்  இறப்புக்குப்பின்  ஸ்லோ  ஆகி  க்ளைமாக்சில்  கடைசி  20  நிமிடங்கள்  நெஞ்சை  கனக்க  வைக்கிறது 


  வருசம் 16  படத்தில்  எப்படி  கதை  மாந்தர்கள்:உடன்  நாம் ஒன்றி  இருந்தோமோ , காதலுக்கு  மரியாதை  படத்தின்  க்ளைமாக்ஸ்  எப்படி  நம்  மனதை  கொள்ளை  கொண்டதோ  அது  போல்  இந்தப்படத்தின்  க்ளைமாக்சும், திரைக்கதையும்  நம்  மனதில்  தங்கி  விடுகிறது 




சபாஷ்  டைரக்டர் ( வேணு   ஏள்தந்தி ) 


1    கிராமத்து  பாரம்பர்ய  நம்பிக்கைகள் , சம்பிரதாயங்கள்  எல்லாம்  ஏற்றுக்கொள்ளும்படி  சொல்லப்பட்ட  விதம் 


2  ஃபிளாஸ்பேக்  காட்சியில்  இரு  குடும்பத்துக்கும்  எப்;படி  பகை  வந்தது ? என்பதில்   சாதாரண  சாப்பாட்டு  விஷயத்தில்  ஈகோ  எப்படி  எட்டிப்பார்க்கிறது?  என்பதை  யதார்த்தமாக  காட்சிப்படுத்திய  விதம் 


3   க்ளைமாக்ஸ்க்கு  முன்  க்டைசி  20  நிமிட  காட்சிகள்  பெண்களின்  கண்களைக்குளம்  ஆக்கி  விடும் , குறிப்பாக  அந்த  சோகப்பாட்டு  அட்டகாசம் 


4   படம்  முழுக்க  ஒரு இழவு  வீட்டில்  நடக்கும்  சம்பவங்கள்  என்றாலும்  அதை  எந்தவிதமான சினிமாத்தனமும், இல்லாமல்  இயற்கையாக  சொன்ன  விதம் 



  ரசித்த  வசனங்கள் 


1  ஏம்மா  மின்னல் , கவர்மெண்ட்  உத்தியோகமா  பார்க்கறே?  இப்படி  வேலைக்கு  வர   மதியம்  12 க்கு  மேல  ஆகுதே?


 தாத்தா,  நைட்  படுக்க  லேட்  ஆகிடுச்சு 


 ஏன்? உன்  வீட்டுக்காரன்  உன்னை  தூங்க  விட  மாட்டேங்கறானா?


 அவரு  ஊர்லயே  இல்லை 

 அட, முதல்லியே  சொல்லி  இருந்தா  நான்  வந்திருப்பேனே? 


 பிள்ளை  இல்லாத  ஊரில்  கிழவன்  துள்ளி  விளையாண்ட  கதையா  இருக்கு  பெருசு 


2  யோவ் , டெய்லரே , அளவெடுக்க  வரச்சொன்னா  வரமாட்டீரோ?


 கொஞ்சம்  பிசி  


 ஓஹோ , பெரிய  வீட்லயா? சின்ன  வீட்லயா? 


3   ஏன்  என்  ஃபோனைம்   நீ  அட்டெண்ட்  பண்ணலை ?

  பக்கத்துலயே  என்  அம்மா  படுத்திருந்தாங்க ‘

 அய்யய்யோ  , மேரேஜூக்குப்பிறகும்  இப்படித்தான்  செய்வாங்களா?


 டேய் .. ச்சீய்


4 உலகத்துல  எத்தனையோ  பறவை  இருந்தாலும்  காகத்துக்கு  மட்டும்  ஏன்  படைக்கறோம்னா  மற்ற  உயிரினங்களுக்கு  இல்லாத  ஒரு  சக்தி  காகங்களுக்கு  இருக்கு ,   மற்ற  உயிரினங்கள்  கண்களுக்குத்தெரியாத  ஆன்மாக்கள்  காகங்கள்  கண்களுக்கு  தெரியும் 


5  ஆன்மாக்களின்  செய்திகள்  காகங்களால்  புரிந்து  கொள்ள  முடியும், அதனால்தான்  சுடுகாட்டில்  காகங்கள்  அலைந்து  கொண்டிருக்கும்


6  ஆன்மாக்களுக்கு  திருப்தி  இல்லை  எனில்  காகம்  படையலைத்தொடாது 




 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  நாயகி  மீது  உண்மையான  அன்பு  வைக்காமல்  பணத்துக்காக  கல்யாணம்  பண்ணிக்கொள்ள  நினைப்பது  உறுத்துகிறது , என்னதான்  அவர்  திருந்தியதாக  ஒரு  காட்சி  இருந்தாலும்,  சர்க்கரைப்பொங்கலில்  கல்லாய்  அந்த  நினைவு  மனதில்  தங்கி  விட்டது 


2  ஓப்பனிங்  காட்சிகளில்  தாத்தாவின்  குறும்புகள் , லொள்ளுகள்  தான்  காட்டப்படுகி]றது. தாத்தா  மற்றவர்  மீது  எப்படி  எல்லாம்  பாசமாக  இருந்தார்  என்பது  பாடல்  வரிகள்  மூலமாகவும்  வசனமாகவும்  மட்டும் தான்  நமக்கு  காட்டப்படுகிறதே  தவிர  விஷூவலாக  ஒரு காட்சி  கூட  தாத்தா  பாசம்  காட்டப்படவே  இல்லை 


3    சில  காரணங்களுக்காக  காகம்  படையலை  சாப்பிடவில்லை  எனில்  கிணற்றில்  அலலது   குளத்தில்  மீன்களுக்கு  படையல்  இடலாம், அந்தக்காட்சி  வைக்கப்படவே  இல்லை  


4  படத்தின்  முதுகெ;லும்பு  மாதிரி  ரொம்ப  ஸ்ட்ராங்க்  ஆக அமைந்த  காட்சி  க்ளைமாக்ஸில்  காகம்  படையலை  சாப்பிடும்  காட்சி தான் . அந்த  சீனில்  பிஜிஎம்  சும்மா  உற்சாகமாய்  தெறிக்க   விட்டிருக்க வேண்டாமா?




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -    பெண்களுக்கு  மிகவும்  பிடிக்கும்  சீரியல்  டைப்  கதைதான்  ஆனால் குடும்பத்துடன்  ரசிக்க  வைக்கும்  நல்ல  படம் , மாமூலான  மசாலா  அம்சங்கள் , ஆட்டம்  பாட்டம்  காமெடி  டிராக்  என  எதிர்பார்த்துப்போக  வேண்டாம், மனதைத்தொடும்  படம்   ரேட்டிங்  3 / 5 


Balagam
Balagam Movie Poster.jpg
Theatrical release poster
Directed byVenu Yeldandi
Written byVenu Yeldandi
Produced byHarshith Reddy
Hanshitha Reddy
StarringPriyadarshi
Kavya Kalyanram
Sudhakar Reddy
Muraleedhar Goud
CinematographyAcharya Venu
Edited byHimaj Reddy
Music byBheems Ceciroleo
Production
company
Release date
3 March 2023
CountryIndia
LanguageTelugu
Box officeest. ₹15.20 crore[1]

Friday, March 31, 2023

CHOR NIKAL KE BHAGA (2023) -ஹிந்தி - சினிமா விமர்சனம் ( ராபரி த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ்


 சோர்  நிகால்கே  பாகா  என்ற  ஹிந்தி  டைட்டிலுக்கு  திருடன்  தப்பி  ஓடி விட்டான்  என  தமிழில்  அர்த்தம். யமி கவுதம்  நாயகியாக  நடித்த  இந்த  ஹிந்திப்படம்  நேரடியாக  நெட்  ஃபிளிக்ஸ்  ஓடிடி  தளத்தில் 24/3/2023 அன்று   ரிலீஸ்  ஆகி உள்ளது. 110 நிமிடங்கள்  ஓடும்  இந்த  விறுவிறுப்பான  ராபரி  த்ரில்லர்  படம்  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆகி  இருந்தால்  நல்ல  வரவேற்பைப்பெற்றிருக்கும்

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு  விமானப்பணிப்பெண்.ஒரு  நாள்  விமானப்பயணத்தில்  ஒரு  பயணி  ஆக  நாயகனை  சந்திக்கிறாள் . தொடர்ந்து  அடுத்தடுத்து  நாயகன்  நாயகியை  சந்திக்க  சந்தர்ப்பங்களை  உருவாக்கிக்கொள்கிறான். ஆரம்பத்தில்  என்னப்பா? என்னை  ஸ்டாக்கிங்  பண்றியா? என்னை  கரெக்ட்  பண்ணப்பார்க்கிறாயா? என  கலாய்க்கும்  நாயகி  நாளடைவில்  அவன்  காதலை  ஏற்றுக்கொள்கிறாள் 


இருவரும்  திருமணம்  செய்து  கொள்ளாமல்  லிவ்விங்  டுகெதர்  வாழ்க்கை  வாழ்கிறார்கள் . இதனால்  நாயகி  கர்ப்பம்  ஆகிறார்


ஒரு  நாள்  ரெஸ்டாரண்ட்டில்  இருவரும்  சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது  நாயகனுக்கு  ஒரு  ஃபோன்  கால்  வருகிறது .வெளியே  இருவர்  நாயகனுக்காக  காத்திருக்கிறார்கள் . நாயகனை  அவர்கள்  மிரட்டுகிறார்கள் . நாயகி  என்ன  விஷயம்  என  கேட்டபோது  ஆரம்பத்தில்  மழுப்பும்  நாயகன்  பிறகு  நாயகியின்  வற்புறுத்தலால்  அவனது  பிரச்சனையை  ஓப்பன்  செயுகிறான்


 நாயகனுக்கு  கோடிக்கணக்கில்  கடன்  இருக்கிறது . அதை  உடனடியாக  அடைக்க  வேண்டும் , அல்லது  குறிப்பிட்ட  வைரங்களை  திருடி  அதை  ஒப்படைக்க  வேண்டும். இதுதான்  நாயகன்  தரப்பு  விஷயம் 


 நாயகி  அதற்கு  சம்மதிக்கிறாள் , வைரங்களை  கொண்டு  வரும்  ஆள்  விமானத்தில்  பயணிக்கும்போது  அதை  திருட  முடிவு  செய்கிறார்கள் . 


 விமானத்தில்  நாயகன்  பயணி  ஆகவும் , நாயகி  விமானப்பணிப்பெண்ணாகவும்  பயணிக்கும்போது  திடீர்  என  எதிர்பாராத  ஒரு  திருப்பம். பயங்கரவாதிகள்  நான்கு  பேர்  விமானத்தை  ஹைஜாக்  செய்கிறார்கள் / இதற்குப்பின்  என்ன  நடந்தது ? நாயகன் , நாயகி  உயிர்  பிழைத்தார்களா? வைரங்களை  திருடினார்களா? அரசியல்வாதியின்  தாக்குதல்  என்ன  ஆனது ? எனபதற்கு  எல்லாம்  திரைக்கதையில்  விடை  உள்ளது


நாயகியாக  யாமி  கவுதம்  நன்றாக  நடித்துள்ளார்.ஒரு  விமானப்பணிப்பெண்ணுக்கான   ஆடை  வடிவமைப்பு , உடல்  மொழி  அனைத்தும்  நேர்த்தியாக  உள்வாங்கி   பர்ஃபார்மென்ஸ்  பண்ணி  இருக்கிறார், இடைவேளைக்குப்பின்  ஆன  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  காட்சிகளில்  கலக்கி  இருக்கிறார்


 நாயகனாக சன்னி  கவுசல் சராசரி  தமிழ்  சினிமா  நாயகன்  மாதிரி  நாயகியை  துரத்தி   துரத்தி  காதலிக்கும்  நபராக  அறிமுகம்  ஆகி  வில்லன்  ரோல்  செய்யும்போது  கவனிக்க  வைக்கிறார். இவரது  கேரக்டர்  டிசைன்  கனகச்சிதம் 


கேதான் சோதா  தான்   இசை . த்ரில்லர்  படங்களுக்கு  பிஜிஎம்  ரொம்ப  முக்கியம். படத்தை  விறுவிறுப்பாகக்கொண்டு  செல்ல  பின்னணி  இசை  முக்கியப்பங்கு  வகிக்கிறது . சாரு  தக்கர்  தான்  எடிட்டிங். ஷார்ட்  அண்ட்  ஸ்வீட் ஆக 110  நிமிடங்களில்  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார், இந்தக்கதையை  இரண்டரை  மணி  நேரம்  இழுத்திருந்தால்  போர்  அடித்திருக்கும் . ஜியானி தான்  ஒ:ளிப்பதிவு . பெரும்பாலான  காட்சிகள்  விமானத்துக்கு  உள்ளேயே  நடப்பதால்  சவாலான  வேலை  தான் ,  ஆர்ட்  டைரக்சன்  கச்சிதம் 


அஜய்  சிங்  தான்  இயக்கம் , விறுவிறுப்பாக  கதையை  நான்  லீனியர்  கட்  திரைக்கதையில்  வடிவமைத்து  சொன்னது  சிறப்பு,  எந்த  விதமான  குழப்பமும்  இல்லாமல்   திரைக்கதை   அமைத்த  மூவர்  கூட்டணி  ஆன   சிராஜ்  அஹ்மத் , அமர் கவுசிக் , ராஜ்குமார்  குப்தா  அனைவரும் சிறப்பாக  பணி  ஆற்றி  இருக்கிறார்கள் . திரைக்கதை  எழுதிய  மூவரில்  அமர்  கவுசிக்  தயாரிப்பாளர்களில்  ஒருவர்  என்பது  நல்ல  விஷயம் 




சபாஷ்  டைரக்டர்  ( அஜய்  சிங் ) 


1  ரொமாண்டிக்  போர்சன் ரசிக்கும்படி  இருக்கிறது , அதே  சமயம்  மெயின்  கதையை  ஓவர் டேக்  பண்ணாமல்  அடக்கி  வாசிக்க  வேண்டிய  தேவை  உள்ளதால்  லவ்  போர்சனை  கொஞ்சமாக  வைத்தது  சிறப்பு 


2 இடைவேளை , ட்விஸ்ட்   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  இரண்டும்  ரசிக்கும்படி  உள்ளது 


3  த்ரில்லர்  படங்களின்  முக்கிய  எதிரிகளான  மொக்கை  காமெடி  டிராக் ,  தேவையற்ற  டூயட்  காட்சிகள்  இரண்டையும்  தவிர்த்தது  சிறப்பு 

4    இந்தக்கொள்ளை  விமானத்தில்  ஏன்  செய்ய  வேண்டும் > என்ற  கேள்விக்கு  விடையாக  வைரம்  இருக்கும்  செல் ஃபோனில்  ஜிபிஎஸ்  பதிக்கப்பட்டு  இருக்கிறது , அதை  வேறு  இடத்தில்  கடத்தினால்  காட்டிக்கொடுத்து  விடும் , விமானம்  பறக்கும்போது  அங்கே   ஜிபிஎஸ்  ஒர்க்  ஆகாது  என  காரணம்  சொன்ன  விதம்  அபாரம் 


ரசித்த  வசனங்கள் 


1  மிஸ்! இன்னைக்கு  நைட்  என்  கூட  டின்னர்  சாப்பிட  வர்றீங்களா?



 நீங்க  ரொம்ப  வேகமா  இருக்கீங்க 


 உங்களுக்குப்பிடிக்காதுன்னா  ஸ்லோ  பண்ணிக்கறேன்


2   நான்  உங்களைப்பார்த்தேனா? உங்க  கண்ணை  செக்  பண்ணிக்கறது   நல்லது


 உங்க  கண்ணைத்தான்  செக்  பண்ணனும், ஆனாலும்  உங்க  கண்  நல்லாதான்  இருக்கு 


3  குழந்தை  பிறக்கும்  முன்பே  குழந்தைக்காக  பொருட்கள்  பர்ச்சேஸ்  பண்றது  அபசகுனம்னு  சொல்வாங்க 


4  எந்த  ஒரு  விஷயத்தையும்  முழு  நம்பிக்கையோட செஞ்சா  அதுல  எந்தத்தப்பும்  நடக்காது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகி  ஒரு  ஏர்  ஹோஸ்டல். இந்தப்பணியில்  இருப்பவர்கள்  கர்ப்பம்  ஆகக்கூடாது, அப்படி  ஆனால்  வேலை  போய்  விடும் இது  தெரிந்திருந்தும்  நாயகி  எப்படி  கர்ப்பம்  ஆனதும்  சந்தோஷப்படுகிறாள் ?  நாயகனுக்கும்  வருமானம்  இல்லை , இவள்  வேலையும்  போய்  விட்டால்  பூவாவுக்கு  என்ன  செய்வார்கள் ? 


2 பெண்ணை  தாக்குதல் , கர்ப்பத்தை கலைத்தல்  இந்த  இரண்டு  தவறுகளை  செய்யும்  ஒருவனை  மிகச்சுலபமாக சட்டப்படியே  தண்டனை  வாங்கித்தரலாம்.  அதைச்செய்யாமல்  நாயகி  போடும்  திட்டம்  தலையைச்சுற்றி  மூக்கைத்தொடுவதாக  இருக்கிறது 


3  ஒரு  ஆக்சன்  சீக்வன்சில் நாயகியின்  செல் ஃபோன்  தெறித்து  ஒரு  இடத்தில்  விழுகிறது . இப்படி  தெறித்து  விழும்போது  செல்ஃபோன்  ஸ்விட்ச் ஆஃப்  தான்  ஆகும், ஆனால்  நாயகியின்  ஃபோன்  மட்டும்  ஸ்பீக்கர்  ஃபோன்  ஆன்  ஆகி  ஒரு  கான்வோவை  ரெக்கார்டு  செய்கிறது 


4   விமானத்தை  விட்டு  பயணிகள்  இறங்கி  வரும்போது  குறிப்பிட்ட  சிலர்  மட்டும்  லக்கேஜ்  உடன்  வருகிறார்கள் .  இதற்கு  அனுமதி  இல்லையே? போலீஸ்  சந்தேகப்பட்டு  பேக்கை  செக்  செய்யவே  இல்லையே? 


5   விமானத்தில்  இருக்கும்  ஒரு  ஆஃபீசர்  மூன்று  தீவிரவாதிகளை  தாக்குகிகிறார். துப்பாக்கிக்குண்டு  பட்டு  அவர்கள்  இறப்பதாகக்காட்டப்படுகிறது , ஆனால்  ஒரு  சொட்டு  ரத்தம்  கூட  வரவில்லை , இதில்  பயணிகள்  யாருக்கும்  டவுட்  வராதா? 


6  வைரத்தை  விமானத்தில்  கொண்டு  வரும்  நபர்  வைரங்கள்  உள்ள  ஃபோனை  தன்  பாக்கெட்டில்  மறைத்து  எடுத்து  வராமல்  பேக்கில்  வைத்து லெக்கேஜ்  செக்சனில்  விட்டு  அசால்ட்டாகவா  வருவார் ? 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ  சர்ட்டிஃபிகேட்  ஃபிலிம்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  படையப்பா, மன்னன் , மாப்பிள்ளை , பச்சைக்கிளி  முத்துச்சரம், GONE GIRL  போன்ற  படங்களை  அதில்  உள்ள நெகடிவ்  ஷேடு  வில்லி  கேரக்டருக்காக  ரசித்தவர்கள்  இந்தப்படத்தையும்  ரசிப்பார்கள் , த்ரில்லர்  ரசிகர்களுக்கான ஒரு  நல்ல படம்   ரேட்டிங் 2.75 /5 



Chor Nikal Ke Bhaga
Chor Nikal Ke Bhaga film poster.jpg
Official release poster
Directed byAjay Singh
Written bySiraj Ahmed
Amar Kaushik
Raj Kumar Gupta
Produced byDinesh Vijan
Amar Kaushik
Starring
CinematographyGianni Giannelli
Edited byCharu Thakkar
Music byScore:
Ketan Sodha
Songs:
Vishal Mishra
Production
company
Distributed byNetflix
Release date
  • 24 March 2023
Running time
110 minutes[1]
CountryIndia
LanguageHindi

Thursday, March 30, 2023

ERA ORA (2023)இத்தாலி - ( STILL TIME) - சினிமா விமர்சனம் ( சயின்ஸ் ஃபிக்சன் காமெடி மெலோ டிராமா ) @ நெட் ஃபிளிக்ஸ்


 ஏண்டா  சுடுதண்ணீரைக்காலில்  ஊற்றிக்கொண்டவன்  போல்  பறக்கிறாய்? என  சிலர்  சொல்லக்கேள்விப்பட்டிருப்போம். இந்த  அவசர  உலகத்தில் நாம்  எல்லோருமே  வேகமாக  பயணிக்கிறோம். இப்படி  இருந்தால்  எதிர்  விளைவுகள்  எப்படி  இருக்கும்  என  காமெடி கற்பனையாக  உருவான  கதை  தான்  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  கம்பெனியில்  இன்சூரன்ஸ்  ஏஜெண்ட்டாக  பணி  புரிகிறான்.கூடுதல்  நேரம்  பணி புரியும்படி  கம்பெனி  கேட்டுக்கொண்டதால்  ஓவர்  டைம்  ஒர்க்  என  எப்போதும்  பிசியாகவே  இருப்பவன். நாயகி  ஒரு  ஆர்ட்டிஸ்ட். இருவரும்  காதலித்து  திருமணம்  செய்து  கொண்டவர்கள் 


நாயகனின்  40 வது  பிறந்த  நாள் விழா  சிறப்பாககொண்டாடப்படுகிறது. அன்று  இரவு  தம்பதியர்  இருவரும்  தாம்பத்யம்  வைத்துக்கொள்கிறார்கள். அடுத்த  நாள்  காலையில் நாயகனுக்கு  ஒரு  அதிரச்சி. கண்  இமைக்கும்  நேரத்தில்  ஒரு திருப்பம்


நாயகி  6 மாத  கர்ப்பிணியாக  இருக்கிறார். பிறகுதான்  நாயகனுக்கும்  ஆடியன்சுக்கும்  புரிகிறது. நாயகன்  ஒரு நாளில்  ஒரு வருடத்தை  கடந்து  வந்திருக்கிறான், இது  தொடர்கிறது

அதாவது  நாயகனின்  அடுத்தடுத்த  நாட்கள்  அவனது  பிறந்த  நாளாக  வருகிறது. ஒரு  வருடம்  ஒரு  நாளில்  கழிகிறது . இடைப்பட்ட  364  நாட்களில்  என்ன  நடந்தது  என  நாயகனுக்கு  நினைவு  இருப்பதில்லை 


இன்னும்  தெளிவாக  சொல்ல  வேண்டும்  எனில்  முதல்  நாள்  நாயகனுக்கு  40 வது  பிறந்த  நாள் . அடுத்த  நாள்  விடிந்தால் 41 வது  பிறந்த  நாள் .  அடுத்து  42 வது  பிறந்த  நாள்  இப்படியே  போகிறது


 நாயகன்  ஒரு  மனநல  மருத்துவரை  நாடி  இந்தப்பிரச்சனைக்கு  தீர்வு  காண  முயல்கிறான். நாயகனின்  தந்தைக்கு  அல்சைமர்  எனும்  மறதி  வியாதி  இருக்கிறது . அதனால்  இருக்குமோ? என  நாயகன்  ச்ந்தேகிக்கிறான்


இப்போது  நாயகன்  ஒரு  பெண்  குழந்தைக்கு  அப்பா . ஆனால்  குழந்தையுடன்  ஜாலியாக  பொழுதைக்கழிக்க  முடியவில்லை


நாயகனுக்கு  தன்  ஆஃபீஸ்  செகரட்டரியுடன்  தொடர்பு  ஏற்பட்டு  மனைவியைப்பிரிந்து  வாழ்கிறான். அது  எப்படி  நிகழ்ந்தது  என்றே  அவனுக்கு  நினைவு  இல்லை 


 இந்த  பிசியான  வேலையே  வேண்டாம்  என  ரிசைன்  பண்ண  ரிசைன்  லெட்டர்  எம் டி  யிடம்  கொடுக்கலாம்  என  செல்லும்போதுதான்  தெரிகிறது  இப்போது  பிரமோஷன்  கிடைத்து  அவன்  தான்  எம்  டி  என 


  ஆஃபீஸ்  வாழ்க்கையில்  முன்னேற்றம்  கண்ட  நாயகன்  குடும்ப  வாழ்வில்  பின்னடைவை  சந்திக்கிறான்..  நாயகனின்  மனைவி   வேறு  ஒரு  ஆணுடன்  லிவ் இன் டுகெதர்  வாழ்க்கையில்  இருக்கிறார். நாயகன்  ஆஃபீஸ்  செகரட்ரியுடன்  வாழ்கிறார்


 இந்த  சிக்கலில்  இருந்தெல்லாம்  நாயகன்  எப்படி  மீண்டு   வருகிறான்  என்பதுதான்  மிச்ச  மீதி  திரைக்கதை


நாயகனாக  எடோர்டோ  லியோ  நம்ம  ஊர்  கமல்  மாதிரி  பல  கெட்டப்களில்  வருகிறார்.  நடிப்பு  கனகச்சிதம் . நாயகி ஆக  பர்பாரா  ரோன்ச்சி அழகுப்பதுமையாக  வந்து  நடிப்பில்  நம்  மனதைக்கொள்ளை  கொள்கிறார்


நாயகனின்  இரண்டாவது  ,  மனைவியாக , ஆஃபீஸ்  செகரட்ரியாக  ஃபிரான்செஸ்கா  காவலின்  நடித்திருக்கிறார். இவருக்கு  அதிக  வாய்ப்பில்லை , கெஸ்ட்  ரோல்  போல 


 நாயகன் - நாயகி  தம்பதியின்  ஐந்து   வயது  சிறுமியாக  நடித்தவர்  கொள்ளை  அழகு


படத்தில்  வில்லன்  என  யாரும்  இல்லை. நாயகன் - நாயகி - குழந்தை - வில்லி  என  நான்கு  பேரைச்சுற்றியே  கதை  நகர்கிறது 



22/10/2022  அன்று  உலகம்  முழுக்க  ரிலீஸ்  ஆன  இந்த  இத்தாலியன்  மூவி  இப்போது  நெட்  ஃபிளிக்சில்  காணக்கிடைக்கிறது


 குடும்பத்துடன்  காணத்தக்க  காமெடி  ஃபேமிலி  மெலோ  டிராமா


 148  நிமிடங்கள்  ஓடுகிறது  திரைக்கதை  இயக்கம்  அலெக்சாண்ட்ரியோ  அர்னாடியோ



  சபாஷ்  டைரக்டர்


1  ஓப்பனிங்  சீன்லயே  நாயகியை  பார்ட்டியில்  சந்திக்க  வேண்டிய  நாயகன்  நாயகி  போலவே   உடை  அணிந்த  வேறு  பெண்ணுக்கு  முத்தம்  கொடுத்து  மாட்டிக்கொண்டு  அந்தப்பெண்ணிடம்  அறை  வாங்கும்  காட்சி  காமெடி  ரகளை   (நந்தா  நடித்த  புன்னகை  பூவே (2003)  படத்தில்  இதுதான்  இண்டர்வல் பிளாக்  சீன் ) 


2  நாயகன்  முதல்  நாள்  இரவில்  நாயகியுடன்  தாம்பத்யம்  வைத்ததும்  அடுத்த  நாள்  காலை  நாயகி  6  மாத  கர்ப்பிணி  ஆக  இருப்பதைக்கண்டு  அதிர்வது  அடுத்த  நாள்  நாயகி  வயிறு  சரியானதைக்கண்டு  நிம்மதிப்பெருமூச்சு  விடுவது , திடீர்  என  குழந்தை  அழுகுரல்  கேட்டு  திகைப்பது  எல்லாமே  காமெடி  கண்ட்டெண்ட்


3    தான்  எம்  டி  ஆனதை  அறியாமல்   எம்  டி  ரூமுக்கு  ரிசைன்  லெட்டருடன்  சென்று   அங்கே  எம் டி  சேர்  காலியாக  இருப்பதை  அறிந்து  சக  கொலீக்ஸ்  இடம்  எம்  டி  எங்கே  என  கேட்டு  பல்பு  வாங்குவது 


4 நாயகன்  தன்  குழந்தையுடன்  டைம்  ஸ்பெண்ட்  பண்ண  நினைக்கும்போது  குழந்தை  பேசும்  வசனமும்  அதைத்தொடர்ந்து  வரும்  செண்ட்டிமெண்ட்  காட்சிகளும் 


5  நாயகன்  தன்  மனைவியை  விட்டுப்பிரிந்து  ஆஃபீஸ்  செகர்ட்ரியுடன்  வாழ்வதை  அறியாமல்  நாயகிக்கு  ஃபோன்  பண்ணி  உடனே  வீட்டுக்கு  வா  என  அழைப்பதும்  மனைவி  வாசலில்  நின்று  காலிங்  பெல்  அடிக்கும்போது  செகரட்ரி  சமையல்  அறையில்  இருந்து  வருவதைப்பார்த்து  அதிர்ந்து  அவரை  பாத்ரூமில்  ஒளித்து  வைப்பதும்  காமெடி  கலாட்டா 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   ஆள்  மாறாட்டம்  நிகழ்ந்து  நாயகன்  வேறு  ஒரு  பெண்ணுக்கு  முத்தம்  தரும்போது  அந்தப்பெண்  எதுவும்  சொல்லவில்லை ., பிறகு  தப்பு  நடந்துடுச்சு . என்  மனைவி  போலவே  டிரஸ்  போட்டிருந்ததால்   மாறி  கிஸ்  பண்ணிட்டேன்  என  தன்னிலை  விளக்கம்  கொடுக்கும்போது  நாயகனுக்கு  பளார்  கிடைக்கிறது , என்ன  கொடுமை  சார்  இது ?


2  நாயகன்  தன்  ஆஃபீஸ்  செகர்ட்ரியின்  செப்பல் வீட்டின்  டைனிங்  டேபிள்  அருகே  இருப்பதைப்பார்த்து  நாயகி கேட்கும்போது  உனக்கு  கிஃப்ட்  பண்ணத்தான்  வாங்கி  வைத்திருக்கிறேன்  என  சமாளிக்கிறான். யாராவது  இப்படி  மடத்தனமாக  பொய்  சொல்வார்களா? மனைவியை  விட  செகரெட்ரி  ஆள்  ஹைட்  வேற . செப்பல் சைஸ்  மாறுமே ? 


3   முதல்  நாள்  இரவு  படுத்து  உறங்கி எழும்போது  அடுத்த  நாள்  அடுத்த  வருடம்  ஆகிறது  என்ற  லாஜிக்  சரி , ஆனால்  தொடர்ந்து  பகலிலேயே  ஒரு  வருடம்  கழிவது  எப்படி ? அந்த  லாஜிக்  படி  ஒவ்வொரு  நாளும்  இரவு  தூங்கப்போய்  அடுத்த  நாள்  விடியும்போதுதானே  அடுத்த  வருடம்  வர  வேண்டும் ? 





 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மாறுபட்ட  கதைகளை  விரும்புபவர்கள்  பாரக்கலாம். படத்தில்  டயலாக்ஸ்  அதிகம், ஸ்லோவாகத்தான் காட்சிகள்  நகரும் . ரேட்டிங்  2.75 / 5 




Era ora
Lingua originaleitaliano
Paese di produzioneItalia
Anno2023
Durata109 min
Generedrammaticocommedia
RegiaAlessandro Aronadio
SoggettoAlessandro AronadioRenato Sannio
SceneggiaturaAlessandro AronadioRenato Sannio
ProduttoreCarlo Degli EspostiRiccardo RussoNicola SerraCristina Tacchino
Produttore esecutivoJamie HiltonMichael PontinPiergiuseppe Serra
Casa di produzioneBIM Production
Distribuzione in italianoNetflixVision Distribution
FotografiaRoberto Forza
MontaggioRoberto Di Tanna
MusicheSanti Pulvirenti
ScenografiaDaniele FrabettiLara Sikic
CostumiElena Minesso