Sunday, October 17, 2010

தல -உங்களைக்கலாய்க்கல (ஜோக்ஸ்)

 

1. தலைவரே! ஊழலை ஒழிக்க என்ன வழி?

ஏய்யா! உனக்கு எவ்ளவ் தைரியம் இருந்தா என்னை அழிக்க
என்கிட்டயே ஐடியா கேப்பே?




2. மாப்ளை அக்ரிகல்ச்சர் ஆஃபீஸரா?

எப்டி தெரியும்?

பொண்ணோட தோழிகள்கிட்டே செம கடலை போடறாரே?




3. கேப்டனோட விருதகிரி ஹிட் ஆகனும்னு தலைவர்வேண்டிக்கறாரே! ஏன்?

அப்படியாவது அவரு சினிமால கான்செண்ட்ரேட் பண்றாரா?-னுபார்க்கத்தான்.




4. தலைவரே! போலி ரேஷன் கார்டுகள் எவ்வளவு புழங்குதுனு
எப்படி துல்லியமா சொன்னீங்க?

பிரம்மாவுக்குத் தெரியாத படைப்பு ரகசியமா?




5. தலைவர் பஞ்சத்துல அடிபட்டு இருக்கார்-னு எப்படி சொல்றே?

பாதுகாப்புக்கு எந்த போலீஸும் வேண்டாம். என் பாதுகாப்புக்கு
ஆகற செலவை மட்டும் எனக்கே குடுத்துடுங்க அப்டிங்கறாரே?




6. பஞ்ச சீலக் கொள்கை பற்றி தலைவரை பேசச் சொன்னது
தப்பா போச்சா? ஏன்?

என்னதான் மகளிர் அணித்தலைவி பல கலர்ல சேலை
கட்னாலும் வாராவாரம் வெள்ளிக்கிழமை மஞ்சள் கலர்ல
சேலை கட்ற அவங்களோட மஞ்ச சீலைக் கொள்கை
ரொம்ப பிடிச்சிருக்குங்கறாரே?




7. ஆட்சிக்கு வந்ததும் முத வேலையா டெக்ஸ்டைல் டிபார்ட்மெண்ட்
பக்கம் தலைவர் போறாரே? ஏன்?

ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க ஆவண செய்வோம்-னு
சொன்னாரே? கர்ச்சீப் ரெடி பண்ண ஏற்பாடு பண்றாரு.




8. முதல் இரவு அறைல பொண்ணு தைரியமா இருக்கு. தலைவர்
படபடப்பா, டென்ஷனா இருக்காரே?

லஞ்சம்னா கலக்கிடுவாரு. மஞ்சம்னா கலங்கிடுவாரு.




9. கோர்ட்டுல ஃபிகருங்க நிறைய பேர் இருப்பாங்களா?-னு
தலைவர் கேட்கறாரே?

நீதிமன்றங்கள் கணினிமயம் ஆக்கப்படும்-னு நியூஸ்ல சொன்னதை
கன்னிமயம் ஆக்கப்படும்னு தப்பா புரிஞ்சுட்டாராம்.




10. அந்த டி.வி. ரொம்ப ஸ்ட்ரிக்ட்னு எப்படி சொல்றே?

டான்ஸ் போட்டிக்கு ஜட்ஜா வர்றவங்களுக்கு கூட இனி கணினி
அறிவு வேணும்னு சொல்லிடுச்சு.




11. தலைவரே! நம்பிக்கை வாக்கெடுப்புல தொடர்ந்துஜெயிக்கறீங்களே,எப்படி?

ஹி... ஹி... ஜெயிச்சா ஓட்டு போட்டவங்களை செமத்தியா
கவனிப்பேன்னு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி வெச்சிருக்கேன்.




12. ராமநாராயணன் அஜித்தை ஹீரோவாபோட்டா என்ன டைட்டில்?

மங்க்கிஆத்தா


13. தலைவர் இவ்ளவ் அப்பாவியா இருப்பார்னு யாரும் எதிர்பார்க்கலை.

ஏன்?

விஜயதசமி அன்னைக்கு விஜய் படம் ஏன் ரிலீஸ் ஆகலை-னு கேட்கறாரே?



14. தலைவரே! மற்ற மாநிலத்துக்கு போனா ரோமிங் கட்டணம்உண்டு.

ஓஹோ... அப்போ ரோம் ரோம் நகருக்கு போனா...?




15. சினிமாவுக்கு பாட்டு எழுதற கவிஞர்கள் ஏன் ஸ்ட்ரைக்பண்றாங்க?

ரோமிங் சார்ஜ்
இனி கிடையாது-னு வந்த அறிவிப்பை ரைமிங்சார்ஜ் இனி கிடையாது-னு தப்பா புரிஞ்சுக்கிட்டாங்களாம்.


16. ஜட்ஜைப் பார்த்து அறிவிருக்கா?-னு ஏன் கேட்டீங்க?

கணினி அறிவு இருக்கா?-னு கேட்டேன்.

Saturday, October 16, 2010

கவுரவர்கள் - சினிமா விமர்சனம்

பாலுமகேந்திராவின் ராமன் அப்துல்லாவில் பிள்ளப்பூச்சி மாதிரி வந்த விக்னேஷ்க்கு இதில் பிரமோஷன்,தாதாவின் அடியாள்,நடிப்பும்,தோற்றமும் சகிக்கவில்லை.ஏதோ சத்யராஜ்ஜுக்காக பாக்க வேண்டி இருக்கு.அசல் அஜீத்தின் கெட்டப்பில் விக்னேஷ் வந்து நம்மை பாடாய் படுத்தி எடுக்கிறார்.பிரபுதேவாவுக்கு நயன்தாரா எப்படி பாலைவனத்தில் சோலையாக தெரிந்தாரோ அது மாதிரி மோனிகா இருக்கறதால பொழுது போகுது.

ஊருக்கெல்லாம் நல்லது செய்யும் தாதா சத்யராஜ் அவரது நண்பன் பானுச்சந்தரின் மகன் செய்த கொலைக்கு போலீஸால் தேடப்படும்போது அடைக்கலம் கொடுக்க மறுத்து விடுகிறார்.போலீசால் கொல்லப்பட்ட பானுச்சந்தரின் மகன் சத்யராஜால்தான் இறந்தான் என வெறி கொண்ட பானுச்சந்தர் அவரை பழி வாங்க பல வகைகளில் முனைவதும், என்ன நடக்குது என்பதும்தான் கதை.

ஆனால் இந்தக்கதை போதுமா என்ற சந்தேகம் இயக்குநர் சஞ்சய்ராம்க்கு வந்துவிட்டதால் பல பல கிளைக்கதைகளை புகுத்தி மஹாபாரதம் ரேஞ்சுக்கு இழு இழு என்று இழுக்கிறார்.திரைக்கதை ஓவர் லோடால் தடுமாறுகிறது.அமரர் எழுத்தளர் சுஜாதாவின் கூற்றுப்படி ஒரு திரைக்கதை தெளிந்த நீரோடை போல் இருக்க வேண்டுமே தவிர இப்படி குழம்பிய குட்டையாக இருக்கக்கூடாது.

படத்தோட ஓப்பனிங்கில் வரும் கட்டை கட்டை நாட்டுக்கட்டை நீயா வந்து கோத்துக்கிட்டசெம டப்பாங்குத்து.அந்தப்பாடலில் கோடம்பாக்க வழக்கப்படி திருநங்கைகள் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.படத்தின் ஓப்பனிங்க் ஃபைட்டுக்கு டைரக்டர் கண்டு பிடித்த காரணம் புதுசு.ஹீரோ வேலை செய்யும் பைக் ஸ்டேண்டிற்கு வரும் ஓனரின் அடியாட்கள் ஹீரோவை டீ வாங்கி வரசொல்கிறார்கள்.வாங்கி வந்த பின் அதற்கு காசு கொடுக்கவில்லை,உடனே ஹீரோ பொங்கி எழுகிறார்,(4 டீக்கு 16 ரூபா குடுத்திருந்தா போதுமே)

ஹீரோவின் அம்மாவாக குயிலி (நாயகனில் நிலா அது வானத்து மேலே),அவருக்கு அம்மாவாக வரும் பாட்டி இருவருக்கும் ஓவர் மேக்கப்.லாங்க்‌ஷாட்டில் கூட பவுடர் கிளார் அடிக்கிறது.

நல்ல நடிகரான பானுச்சந்தர் சாதாரண சீனுக்குக்கூட பதறுவதும்,பாடிலேங்குவேஜ்ஜில் அநாவசிய துடிப்புகள் காண்பிப்பதும் ஏன்?வில்லனின் மகன் வில்லனை போடா டாடி என அடிக்கடி கூறுவதை இயக்குநர் காமெடி என்று நினைத்து விட்டாரோ?சிரிப்பு சத்தியமா வர்லை,எரிச்சல்தான் வருது.


மேஜிக் நிபுணரான (நிஜத்தில்) அலெக்ஸ் பேசாமல் அதே தொழில் கவனம் செலுத்தலாம்.மற்றவர்கள் வசனம் பேசற சீன்களில் அவர் சும்ம வேடிக்கை பார்த்தாலே போதும்,தேவையே இல்லாமல் முகத்தில் நவரசங்களையும் காண்பித்து கடுப்பேற்றுகிறார்.


தாமிரபரணியில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த பானு காலத்தின் கட்டாயத்தால் இதில் தகடு தகடுக்கு ஜோடி.பார்ட்டி செம கட்டை.

ஆர் பார்த்திபனின் அழகி படத்தில் 2வது ஹீரோயினாகவும் ,சீன் இல்லாத சிலந்தி எனும் சீன் படத்தில் நாயகியாகவும் வந்த மோனிகா இதில் நாயகி.விக்நேஷுக்கும் ,இவருக்கும் ஜோடிப்பொருத்தம்,பாடி கெமிஸ்ட்ரி,எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை.(அதென்ன சீன் இல்லாத சீன் படம்?சீன் படம் போல் விளம்பரம் செய்து ஏ முத்திரையோடு வந்து ஒரு சீனும் இல்லாமல் ஏமாற்றும் படம்)

ஆஹா சொக்க வெச்சான்,அழகா சிக்க வெச்சான் பாட்டு செம ஹிட் அடிக்கப்போகும் மெலோடி.குப்பையில் கோமேதகம் மாதிரி இப்படி ஹிட் பாட்டுகள் அமைவதுண்டு.அந்தப்பாட்டுக்கு மோனிகாவின் ஆடைஅலங்காரம்,நடன அசைவுகள் ,முக பாவனைகள்,காதல் சேட்டைகள் என அனைத்தும் கொள்ளை அழகு.

(இந்தப்பாட்டின் இறுதியில் கேமரா டாப் ஆங்கிளில் ஒரு லோ கட் சீன் ஸூட் பண்ணி இருக்கு ,6 செகண்ட் மட்டுமே வரும் சீனை டோண்ட் மிஸ்)


படத்தின் வசனகர்த்தா மனதைத்தொட்ட இடங்கள்

1.நாம் ஜெயிக்கறப்பதான் தோத்ததைப்பத்தி நினைக்கனும்.

2.நான் கும்பிடற சாமியை விட பண்ணுற அரசியலை நம்புறவன்.

3.தலைவரே,எனக்கு உயிர் போற பிரச்சனை,நீங்கதான் உதவனும்.

சொல்லு,உனக்கு என்ன வேணும்?

உங்க உயிர்தான்.

4.பொண்ணுங்க ஐ லவ் அமெரிக்கானு சொன்னா கல்யாணத்துக்கு முன்னமே மேட்டருக்கு ஓக்கே சொல்றாங்கனு அர்த்தம்,ஐ லவ் பாகிஸ்தான்னு சொன்னா என்னால எல்லாரும் வெட்டிக்கிட்டு சாகப்போறீங்கனு அர்த்தம்,ஐ லவ் இந்தியானு சொன்னா டூயட் பாட ரெடினு அர்த்தம்.(என்ன ஒரு கண்டுபிடிப்பு?)

5.தலைவரே,எங்கம்மா அப்பா உங்களைப்பாக்க வரனும்னு ஆசைப்படறாங்க.

ம்ஹூம்,எப்பவும் பெரியவங்களை நாமதான் போய் பாக்கனும்.

6.என்னப்பா ,என்னைப்பாக்க பல டிக்கெட்டுங்களோட வந்திருக்கே,பயமா?

ம்ஹூம்,நான் எப்பவும் தரை டிக்கெட்டுதான்.


டைரக்டரிடம் சில கேள்விகள்

1.சாதரண ஃபைட் சீனில் ஹீரோ வில்லனின் அடியாளை பிதாமகன் ரேஞ்சுக்கு ஆவேசத்துடன் அடிப்பது ஏன்?

2.ஹீரோ ஒரு சீனில் ஹெல்மெட்டை ஆயுதமாக கொண்டு போடும் ஃபைட் நம்பும்படியே இல்லையே?ஒரு ஹெல்மெட்டால் 47 பேரை அடிக்க முடியுமா?

3.படத்தில் வரும் அனைத்து ஆண் கேரக்டர்களுக்கும் அசல் அஜித் அல்லது விருமாண்டி கமல் மீசை எதற்கு?

4.கணவ்னின் ஃபோன் நெம்பரை எந்த மனைவியும் ஸ்டோர் பண்ணித்தான் வைத்திருப்பாள்,ஆனால் சத்யராஜுக்கு ஒவ்வொரு முறை ஃபோன் பண்ணும்போதும் நெம்பரை டயல் பண்ணுவது ஏன்?

5.பாட்டு சீனில் கூட ஹீரோ கலைத்துப்போட்ட பரட்டைத்தலையோடு கர்ணகொடூரமாக வருகிறார்,ஏன்?

6.உன் சங்கை அறுத்துடுவேண்டா என்ற டயலாக்கை படத்தில் 17 பேர் சொல்கிறார்கள்,ஏன் இந்த கொலை வெறி?

7.நான் 1 சொன்னவனையும் பாத்திருக்கேன் 100 சொன்னவனையும் பார்த்திருக்கேன்.நான் சொன்னதை மட்டும்தான் செய்வேன் என தேவை இல்லாமல் ரஜினியை வம்புக்கு இழுக்கும் பன்ச் டயலாக் எதற்கு?

8.ஹீரோ விக்நேஷ்க்கு தங்கையாக வருபவர் பக்கா அயிட்டம் போல் தெரிகிறாரே,தீபாவெங்கட்,ஆட்டோகிராஃப் மல்லிகா போன்ற எத்தனையோ நல்ல நடிகைகள் இல்லையா?

9.இடைவேளைக்கு பிறகு கதை ஏன் திசை மாறி பூங்கொடியை கட்டிக்கப்போறதுயாரு? எனும் திசையில் பயணிக்கிறது?

10.ஆசை பிரகாஷ் ராஜ் மாதிரி மச்சினி மேல் ஆசைப்படும் ரஞ்சித் கேரக்டரை ஏன் வடிவமைத்தீர்கள்?

டைரக்டரை  அட போட வைத்த சீன்கள்

1.வில்லனின் கையாளாக வரும் அல்லக்கை கிளைமாக்ஸ் வரை எதுவுமே பேசாமல் மலையூர் மம்பட்டியானில் செந்தில் செய்வது போல் போட்டுத்தள்ளி எனக்கு பதவிதான் முக்கியம் என சொல்லும் சீன்(செம அப்ளாஷ்)

2.ரஞ்சித்தை அழகாக பயன்படுத்தியது.

3.உள்துறை அமைச்சராக வருபவர் வாய் விட்டு எதுவும் பேசாமல் ஒவ்வொரு சீனுக்கும் மனசாட்சியாக கவுண்ட்டர் பன்ச் கொடுப்பது நல்ல டெக்னிக்.


தெலுங்கில் இந்தப்படம் நல்லா ஓடும்,தமிழில் தீபாவளி வரை ஓடும் (20 நாட்கள்)

வாடா - சினிமா விமர்சனம்



டாக்டர் ராஜசேகருக்குப்பிறகு “மரியாதை”யாக டைட்டில் வைக்க தமிழில் ஆள் இல்லையே என்ற கவலை விட்டது.இயக்குநர் ஏ.வெங்க்டேஷ் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.அதே போல் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய நாவல்களிலேயே சிறந்த நாவலான தொட்டால் தொடரும் போல் அவர் வசனம் எழுதிய படங்களிலேயே மிக மோசமான படம் என்ற தகுதியும் இதற்கே.

படத்தின் முதல் பாதி முழுக்க ஹீரோ ரவுடியாகவும்,தீவிரவாதி போலும் காட்டப்பட்டாலே நமகெல்லாம் தெரிந்து விடும் இடைவேளைக்குப்பிறகு ஃபிளாஷ்பேக்கில் ஹீரோ ஒரு கலெக்டராகவோ,போலீஸ் ஆஃபீசராகவோ காட்டப்படுவார் என.ஆனானப்பட்ட கேப்டன் நரசிம்மாவில் ஜெயிக்க முடியாத கதை,இளைய தளபதி விஜய் மதுர படத்தில் அடி வாங்கிய கதையை வைத்துக்கொண்டு ஏ வெங்கடேஷ் என்ன தைரியத்தில் படத்துக்கு பூஜை போட்டார் என்றே தெரியவில்லை.

சுந்தர் சிக்கு ஓரளவு மார்க்கெட் இருக்கிறது (ரிலீஸ் அன்று தியேட்டரில் 38 பேர்)என்பதை ஒத்துக்கொள்ளலாம்,அதற்காக அவர் பாட்ஷா ரேஞ்சுக்கு பாய்வதும்,பஞ்ச் டயலாக் பேசுவதும் ரொம்ப ஓவர்.இனி எந்த ஹீரோவாவது பஞ்ச் டயலாக் பேச வேண்டும் என்றால் அதற்கு மினிமம் குவாலிஃபிகேஷன் 50 படம் முடித்திருக்க வேண்டும்,10 சூப்பர் ஹிட்ஸ் கொடுத்திருக்க வேண்டும் என யாராவது கோடம்பாக்கத்துக்கு ரூல்ஸ் போட்டாதான் தமிழ் சினிமா உருப்படும்.

ஜீன்ஸ் பேண்ட்டை இவ்வளவு லோ லெவலில் போட்ட முதல் கோலிவுட் நடிகை என்ற அந்தஸ்தை(!) பெறுகிறார் ஷெரில் ஃபிண்ட்டோ.அவர் உடுத்தும் உடைகள் எங்கே அவிழ்ந்து விடுமோ என நாம் தான் பயந்து கொண்டே படம் பார்க்க வேண்டி இருக்கே தவிர அம்மணி ஒன்றும் கவலைப்பட்ட மாதிரியே தெரியவில்லை.

இயக்குநர் காதலை எவ்வளவு கேலிக்கூத்தாக நினைக்கிறார்,தமிழ் ரசிகர்களை மாங்கா மடையன் ஆக்க நினைக்கிறார் என்பதற்கு ஒரு சாம்ப்பிள்.ஹீரோயின் செப்பல் அறுந்து விடுகிறது,ஹீரோயின் தெனாவெட்டாக ஹீரோவிடம் அதை கையில் எடுத்து வருமாறு கூறுகிறார்.உடனே ரோஷம் பொங்கி எழுந்த ஹீரோ கண்டபடி இங்கிலீஷில் திட்டி விடுகிறார்,உடனே அபரிதமான காதல் வந்து விடுகிறது,டூயட் பாட ஃபாரீன் கிளம்பிடறாங்க,என்ன கொடுமை சார் இது?





படத்தில் சம்பந்தமில்லாமல் பொங்கல் பாட்டு ஒன்று வருகிறது,தெரிந்த உதவி இயக்குநர் ஒருவரிடம் விசாரித்தபோது வந்த தகவல்,இந்தப்படம் 2009 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வேண்டிய படமாம்.அட தேவுடா.

படத்தில் பாடல் ஆசிரியருக்கு பணம் தர பட்ஜெட் பற்றவில்லை போல பாரதியார் பாடல்கள்,கண்ணதாசன் பாடல் என ஒப்பேற்றி இருக்கிறார்கள்.அவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.

இந்தப்படத்தில் ரஜினியே இதுவரை செய்யாத காட்சி ஒன்று உண்டு.வில்லன் குரூப்பில் 5 பேர் நிற்கிறார்கள்.அவர்கள் எதிரே படுத்தபடி அடிபட்டிருக்கும் ஹீரோ தன் தோளில் கிடக்கும் ஈரல் துண்டால் சாய்ந்து கிடக்கும் ஒரு பனை மரத்தையே இழுத்து அதை அவர்கள் மேல் விட்டெரிகிறார்,அவர்கள் அனைவரும் அவுட்.ஈரோடு டெக்ஸ்டைல் சிட்டி என்பதால் ஈரல் துண்டு தயாரிப்பாளர்களிடம் இதன் சாத்தியம் குறித்து விசாரித்தேன்,அவர்கள் அதிசயித்துப்போய் இந்த ஒரு காட்சிக்காகவே அந்தப்படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்றார்கள்.

அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நினைப்பு என்ற நல்ல பாட்டை ரீமிக்ஸ் என்ற பெயரில் கெடுத்து குட்டிச்சுவர் ஆகி இருக்கும் குற்றத்திற்காகவே இயக்குநருக்கு ஒரு வருஷம் படம் எடுக்க தடை விதிக்கலாம்.




மைக்ராஸ்கோப் வைத்து தேடியதில் தென்பட்ட படத்தின் நல்ல அம்சங்கள்

1.கிஸ் குடுத்த பின் காதல் ஜோடியிடம் இந்தியா -சைனா ஒப்பந்தம் எப்படி இருந்தது? என கேட்பது.

2.அதோ ,அஞ்சலி வர்றா.

என்னது அஞ்சரைக்குள்ள வண்டி பட போஸ்டர் மாதிரியே வர்றா?

3.செல்ஃபோன் ரீசார்ஜ் செய்ய வேண்டிய சீக்ரட் நெம்பரை விவேக்கிடம் ஃபோனில் ஃபிரண்டு சொல்ல அதைக்கூட இருந்து கொண்டே குறித்து வரும் மனோகர் நன்றிப்பா ரூ 2000க்கு ரீ சார்ஜ் ஆகிடுச்சு என சொல்வது.

4. புது ரூட்ல நிறைய பஸ் விடனும்னு பொதுமக்கள் நிறைய பேர் பெட்டிஷன் குடுத்திருக்காங்க.

பஸ்ங்க நிறைய விடவேணாம்னு தனியார் பஸ் ஓனருங்க பெட்டி குடுத்திருக்காங்களே?

5.கடத்தப்பட்ட தலைவர் கடத்திய ஆளிடம்,”பிளீஸ்,என்னை விட்டுடுஎவ்வளவு பணம் கேட்டாலும் தர்றேன்”
அப்போ கூட இருக்கும் தலைவரின் பி ஏ “ஆஹா,இந்த ஐடியா இத்தனை நாளா எனக்கு தோணாம போச்சே?

6.யோவ்,நான் யாரு தெரியுமா?மந்திரி வணங்காமுடி.

அப்போ நான் யாரு?எம் எல் ஏ தேங்கா மூடியா?

7.பிரைம் மினிஸ்டரே ஒரு ஊருக்கு வரனும்னா அந்த ஊர் கலெக்டரோட பர்மிஷன் வேணும் தெரியுமில்லை?

8.பழைய பேப்பர்காரண்ட்ட பலாக்கொட்டை விக்கறவன் மாதிரி இருக்கே..

நீ மட்டும் என்ன அல்டிமேட் ஸ்டார் அஜித் மாதிரியா இருக்க்கே?நாமெல்லாமே மாயாண்டி குடும்பத்தார் மாதிரிதான்  இருக்கோம்.

9. மினிஸ்டர் பையன் மேல 18 கேஸ் இருக்கு.

யோவ்,மினிஸ்டர் மேல எத்தனை கேஸ் இருக்கு தெரியுமா?

அடப்பாவி,அவன் உன்னை கேட்டானா?ஏன் போட்டு குடுக்கறே?

10. குடம் ரொம்ப அடி வாங்கி இருக்கே,

குடத்தை பாக்காதே,குடத்தை வெச்சிருக்கற பொண்ணை பாரு.





விவேக்கின் காமெடியை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.அவர் சுருளிராஜன் கெட்டப்பில் வந்து அவர் குரலில் பேசி ,அவர் பாணியில் நடித்து அவரும் சிரமப்பட்டு அவர் பெயரையும் கெடுத்து சுருளி பெயரையும்
கெடுத்து குதறி விட்டார்,போதாக்குறைக்கு படம் முழுக்க டபுள் மீனிங்க் டயலாக்ஸ் வேறு.

கே பாக்யராஜ் காலத்தில் காமெடியின் டபுள் மீனிங் இலை மறை காய் மறைவாக இருந்து ரசிக்க வைத்தது.இப்போது எஸ் ஜே சூர்யா,வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகிடோர் வந்து அதை நாஸ்தி பண்ணி விட்டார்கள்,அதை விவேக் பின்பற்றுகிறார்.


படத்தில் புத்திசாலித்தனமாக ஒரு சீன் உண்டு என்றால் அது மினிஸ்டர்  ராஜ்கபூரை ஹீரோ சாதரண டவுன் பஸ்ஸில் பயணிக்க செய்து, ஜி ஹெச்சில் ட்ரீட்மெண்ட் எடுக்க வைத்து ஏழைகளின் இன்னல்களை உணர வைப்பதுதான்.படாத பாடுபடும் அவர் “யோவ்,எம் எல் ஏ சீட்டுக்கு கூட இவ்வளவு நேரம் லைன்ல நிக்கலைய்யா.”என புலம்புவது செம காமெடி.

ஒரு கலெக்டர் புரூஸ்லீ ரேஞ்சுக்குன் சண்டை போடுவதெல்லாம் ரொம்ப ஓவர்.ஒரு 35 கிலோ எடை உள்ள இரும்புக்கழியால் வில்லனின் கையாள் ஹீரோவை கை மணிக்கட்டுப்பகுதியில் அடிக்கிறார்,என்ன ஆச்சரியம் ஹீரோவின் கைக்கு எதுவும் ஆகவில்லை,அந்த இரும்புக்கழி உடைந்து விடுகிறது.

அப்பா ,ஆளை விடுங்க ,நான் எஸ்கேப்

Friday, October 15, 2010

தொட்டுப்பார் - சினிமா விமர்சனம்

யாருக்காவது ஜாமீன் போடற மாதிரி இருந்தா யார் எவர்னு விசாரிங்க,முன்ன பின்ன தெரியாத ஆளுங்களுக்கு ஜாமீன் போட்டா  என்ன விபரீதம் எல்லாம் ஏற்பட வாய்ப்பு இருக்கு அப்படிங்கறதை முடிஞ்சவரை சுவராஸ்யமா சொல்லி இருக்கார் இயக்குநர்.

புதுமுகம் வித்யார்த்தான் ஹீரோ.தாதா கேரக்டர்,ரவுடி கேரக்டர் ,வேலை வெட்டி இல்லாத ஆள் கேரக்டர் என்றாலே தலை சீவக்கூடாது, பரட்டையாக ஹிப்பி தலையோடு இருக்க வேண்டும் என்ற கோடம்பாக்கத்தின் (கேனத்தனமான)செண்ட்டிமெண்ட் பிரகாரம் கெட்டப் போட்டிருக்கிறார்.குத்தாட்டப்பாட்டு,ஹீரோயின் கூட டூயட் என்றால் முகத்தில் பல்ப் எரிகிறது,மற்ற இடங்களில் தேமே என்று நடித்திருக்கிறார்.

ஹீரோயின் லக்‌ஷனா.பேருக்கேத்த மாதிரி லட்சணமான முகம்தான்.ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்திழுக்கக்கூடிய கரிஷ்மா இல்லை.கன்னக்குழி அழகு,உதட்டழகு என முடிந்தவரை சமாளிக்கிறார்.பாடல் காட்சிகளில் ஜோதிகாவை இமிடேட் செய்கிறார்.பாடி கெமிஸ்ட்ரி சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை.(அதற்கு ஹீரோயின் மேல் எந்தத்தவறும் இல்லை)

படத்தின் டைட்டில் டிசைனில் பீர் பாட்டில்கள் டிசைன் வரும்போதே தெரிந்து விடுகிறது கதைக்களன் டாஸ்மாக்தான் என்று.ஹீரோ பாரில் வேலை செய்பவராகக்காட்டியதில் டைரக்டருக்கு எவ்வளவு சவுகரியம்.குத்தாட்டம்,மப்புக்காட்சிகள் என ஒரே போதை மயம் தான்.

இந்திரா புகழ் அனு ஹாசன் (விஜய் டி வி காஃபி வித் அனு) டாக்டராக வந்து கண்ணியமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.அவரது டிரஸ்ஸிங் சென்ஸ் அற்புதம்.காமா சோமா என்று உடை உடுத்தும் நடிகைகளுக்கு நல்ல ஒரு படைப்பினை இவரது கவுரவமான உடைகள்.

வசனகர்த்தா பல இடங்களில் ரசிக்க வைக்கிறார்.

1.ஒயின்ஷாப்பை பார்த்தாதான் தெரியுது ஊர்ல எத்தனை பேர் வேலை இல்லாம இருக்காங்கன்னு.

2.ஃபர்ஸ்ட் கட்டிங்க்லயே தூங்கிடற ஆம்பளையும்,ஃபர்ஸ்ட் நைட்லயே தூங்கிடற பொம்பளையும் உருப்பட்டதா சரித்திரம் இல்ல.

3. தம்பி,ஒரு உயர் அதிகாரி லஞ்சம் கேட்டா குடுத்திடனும்,கேள்வி கேக்கப்படாது.

4.பாத்தா பிச்சைக்காரனாட்டம் இருக்கியே,உன் பேர் என்ன?     மகாராஜா.
ரேஷன் கார்டு வெச்சு இருக்கியா?      என் கிட்ட இருக்கற ஒரே சொத்து அதுதான்.

5. ஒரு மனுஷன் கோயிலுக்கு எதுக்கு போறான்?  நிம்மதியை தேடி

ஒயின்ஷாப்புக்கு எதுக்கு போறான்?  நிம்மதியை தேடி.

அப்போ 2 ம் ஒன்னுதானே?
6.ஹீரோயின் - நான் விஸ்கோஸ் படிக்கறேன்.

ஹீரோ - படிங்க ,நான் வேணாம்கலையே?

ஹீரோயின் -நீங்க?           ஹீரோ -என்னைப்பாத்தா படிக்கறவனாட்டமா இருக்கு?

7.உங்களுக்கு இங்கிலீஷ்ல பேசத்தெரியுமா?

ஓ.ஓல்டுமங்க்,ஓல்டு கேஸ்க்,மானிட்டர்,கோல்கொண்டா.

8.எங்கே வேலை செய்யறீங்கன்னு கேட்டப்ப கவர்மெண்ட் வேலைனு சொன்னீங்க?    ஏன்?டாஸ்மாக் கவர்மெண்ட் கிடையாதா?

9.ஒவ்வொரு மனுஷனுக்கும் வாழ்க்கைல கறுப்புப்பக்கங்கள்னு ஒண்ணு கண்டிப்பா இருக்கும்.


டைரக்டர் ஒரு ஷோக்குப்பேர்வழி என்பது குத்தாட்டப்பாடல்களிலும்,டூயட் சீன்களிலும் பட்டவர்த்தனமாய் தெரிகிறது.கேமரா,எடிட்டிங்க் 2லும் பாடல் காட்சிகள் சைன் (SIGN) பண்ணுது.

ஓலை வெடியே ஒத்தை வெடியே குத்தாட்டப்பாடலின் சரணத்தில் ச ச ச ச சரசு,உ உ உ உ உனக்கு பெரிசு (சென்சாரில் அதை மவுசு என மாற்றினாலும்)
ஓவர் அலப்பறை.ஷகிலா இட்லிக்கடையில் ஹீரோவும்,தோழனும் சாப்பிடும்போது நடக்கும் உரையாடலிலும் பச்சை வாசனை தூக்கல்.

வர வர உங்க கடை இட்லி சைஸ் சின்னதாகிட்டே வருது.

கேரளா,கர்நாடகா,ஆந்திரா,தமிழ்நாடு எங்கே போய்  யார்கிட்ட வேணாலும் கேட்டுப்பாரு,இந்தக்கடை இட்லி மாதிரி வருமான்னு.

அதே ஷகீலாவிடம்  -  இது யாரு?   என் தங்கை அம்மு.  பேரும் ஆளும் கும்முனு இருக்கே
அடுத்த சீனே பாட்டு.(ஹூம்)

ஆடி மாசம் காத்தடிக்க வாடி கொஞ்சம் சேத்தணைக்க பாட்டு ரீ மிக்ஸா இருந்தாலும் பிக்சரைசேஷனில் மனம் கவர்கிறார்கள்.

ஹீரோயினை ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் ஹீரோ சாவு கிராக்கி என சொல்லுகிறார்.உடனே ஹீரோயினுக்கும் அதே பழக்கம் தொற்றிக்கொள்கிறது,அவரும் தோழிகளை அப்ப்டியே சொல்கிறார்.என்ன கொடுமை டைரக்டர் சார்.அந்த மாதிரி காலேஜ் பொண்ணுங்க இருக்காங்களா என்ன?
ஹீரோவும்,ஹீரோயினும் சந்தித்து பேசும் காட்சிகளில் ஸ்கீரீனில் கார்னரில் இதற்கு முந்தைய சந்திப்புகளின்  சாராம்சத்தை போடுவது கவிதை.


அதே போல் காதல் மூடில் வரும் ஹீரோயின் தனது வீட்டு பெட்ரூமில் நுழைந்ததும் ஹேண்ட்பேக்கை வீசுவதும் அது ஃப்ரீஸ் ஆகி அந்தரத்தில் நிற்பதும்,டைரக்டரின் ரசனையான கற்பனை.

ஸ்கூலுக்கு போகும் மாணவர்கள் ஸ்கூல் பேக் சைஸ் பார்க்கும் ஹீரோ மனதில் அவர்கள் பெரிய பெரிய மூட்டைகளை சுமப்பது போல் கற்பனையில் நினைப்பது டைரக்டரின் சமூக சாடல் அக்கறையை காட்டுகிறது.

அதே போல் அடிக்கடி டாஸ்மாக் வரும் மயில்சாமி தன்னை சினிமாக்கு ட்ரை பண்ணும் கவிஞன் என அறிமுகப்படுத்துவதும்,பின் அவர் சரோஜாதேவி விருந்து போன்ற அஜால் குஜால் பத்திரிக்கைகளுக்கு கசமுசா கதை எழுதுபவர் என தெரிவதும் வெடிச்சிரிப்பு. (இந்தக்காட்சி தியேட்டரில் பலத்த கை தட்டலை பெறுகிறது)

தண்ணி அடித்த நபர் ஒருவர் ஹீரோவுக்கு 100 ரூபாய் டிப்ஸ் வைப்பதும் ,பின் டிப்ஸ் வைத்தவரின் குழந்தை சாப்பாட்டுக்கு கதறுவதும் டச்சிங்க் சீன்.

தொட்டுப்பாரு என்னை தொட்டுப்பாரு பாட்டு படத்தின் டைட்டிலை நியாயப்படுத்துவதற்காக.(அந்தப்பாட்டின் சரணத்தில் சீமை சிறுக்கி சங்கதியை குலுக்கி என வரும் வரம்பு மீறிய வரிகளை நீக்கி இருக்கலாம்)

டைரக்டர் சறுக்கிய இடங்கள் - ஒரு மாணவனின் உயிரை ஸ்கூல் வாசலில் காப்பாற்றுகிறார் ஹீரோ,ஸ்கூல் பேக் காலியாக இருப்பது அப்பட்டமாய் தெரிகிறது.

பல இடங்களில் கண்டினியூட்டி மிஸ்ஸிங்க்.வில்லன் பேசும் பன்ச் டயலாக் மோசம்.பாம்புக்கடியைக்கூட பொறுத்துக்கலாம்,கொசுக்கடியை பொறுத்துக்க முடியாது.(இது எல்லாம் ஒரு பன்ச்சா)

மனசைக்கவர்வது மாதிரி காட்சிகள் வைப்பது வேறு,மனதை பாதிப்பது மாதிரி காட்சிகள் வைப்பது வேறு,கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் தாலி அறுக்கும் சீனை இவ்வளவு விலாவாரியாக காட்ட வேண்டுமா?மனதை பிசைகிறது,தேவை இல்லாத சீனும் கூட.அதே போல் வில்லன் ஒரு திரு நங்கை என்பதும் அவ்ரை சேலையில் புரட்டி அடித்து வெட்டுவதும் கர்ண கொடூரம் (லேடீஸ் ஆடியன்ஸ் வரனுமா? வேணாமா?)

படம் சுவராஸ்யமாக போவது ஒரு பிளஸ் என்றாலும் இதே படத்தை இன்னும் டீசண்ட்டாக எடுத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

பி சி செண்ட்டர்களில் 30  அல்லது 20  நாட்கள் ஓடும் (தீபாவளி வருதே)

ஆனந்த விகடன் மார்க் 40,    குமுதம் ரேட்டிங்க் ஓக்கே  (EXPECTING)

எந்திரன் - சினிமா விமர்சனம் -ஷங்கரின் ஜாலவித்தை

அட



ஸ்ரீதர் காலத்தில் பிரபலமான முக்கோணக்காதல் கதையை சயின்ஸ் ஃபிக்‌ஷன் எனும் கட்டுக்குள் கொண்டுவந்து,ஜனரஞ்சகமாக ஒரு மசாலா படம் எடுக்க முடியும் என நிரூபித்ததற்காகவே ஷங்கரை பாராட்டலாம்.


பொதுவாக ஷங்கரின் படங்களில் கதைக்குள் போகும் முன் ஒரு ரிலாக்ஸ் சாங்க் வைப்பார்.ஷக்கலக்க பேபி (முதல்வன்),ஊர்வசி ஊர்வசி (காதலன்),ஆனால் இந்தப்படத்தில் சுஜாதாவின் பாணியில் ஓப்பனிங்கிலேயே கதைக்குள் போய் விடுகிறார்.


விஞ்ஞானி ரஜினி ரோபோவுக்காக செலவிடும் நேரத்தை அவர் குடும்பத்துக்காகவோ,காதலிக்காகவோ கொஞ்சம் கூட செலவிடவில்லை என ஆரம்பத்திலேயே பொட்டில் அடித்தாற்போல் சொல்லி விடுவதால் ஆடியன்சுக்கு ரோபோவின் பாத்திரப்படைப்பு சுவராஸ்யம் ஊட்டுவதாய் தானாகவே அமைந்து விடுகிறது.


அண்டர்பிளே ஆக்டிங்க் (அடக்கி வாசிப்பது)ஏற்கனவே ரஜினி ஸ்ரீராகவேந்திரர்,நாட்டுக்கு ஒரு நல்லவன்,வள்ளி ஆகிய படங்களில் செய்து இருந்தாலும் அவை யாவும் வணிக ரீதியாக தோல்விப்படங்கள் என்ற அளவில் இந்த எந்திரன் ரஜினிக்கு முக்கியமான படம் ஆகி விட்டது.


ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள நடிகர் ,ஸ்டைல் மன்னன் இந்த அளவு கட்டுக்கோப்பாக எந்த இடத்திலும் தன் தனித்தன்மை வெளிப்படாமல் டைரக்டர் சொன்னபடி நடித்து அந்த பாத்திரத்துக்கு உயிர் ஊட்டி இருக்கிறார் என்றால் அதுதான் தொழிலை நேசிக்கும் ஒரு நடிகனின் வெற்றி.


அமரர் எழுத்தாளர் சுஜாதாவின் பேனா விளையாடி இருக்கிறது.என் இனிய இயந்திரா,மீண்டும் ஜீனோ ஆகிய நாவல்களின் கலவைதான் எந்திரன் என்றாலும் அதற்கு ஷங்கரின் மெனக்கெடல் கவனிக்கத்தக்கது.ஜீனோ என்னும் நாய் கேரக்டரை ரோபோ ஆக்கி அதை ரஜினியின் 2வது ஆக்டிங்க்குக்கு யூஸ் பண்ணலாம் என கணித்த அவர் கெஸ்ஸிங்க் டேலண்ட்டிற்கு ஒரு சல்யூட்.ஆனால் படத்தின் பின் பாதியில் ரோபோவின் ராஜ்ஜியத்திற்கு அதே சுஜாதாவிம் பேசும் பொம்மைகள் நாவலின் சாரம் தேவைப்பட்டிருப்பினும் டைட்டிலில் கதை,திரைக்கதை உதவி சுஜாதா எனவும் வசனம் சுஜாதா வசன உதவி ஷங்கர் என போட்டிருந்தால் பெருந்தன்மையின் அர்த்தமும்,ஒரு படைப்பாளிக்கு உரிய கவுரமும் அளிக்கப்பட்டிருப்பதாக பெருமை கொள்ளலாம்,ஆனால் சினிமா உலகம்.....??


எழுத்தாளர் சுஜாதா புகுந்து விளையாடிய இடங்கள் -




1. ஐஸ் - அவர் என்னை பாக்க வர்றதே இல்லை,ஆள் உயிரோடதான் இருக்காரா?

இல்லை,வயரோட இருக்கார்.

2.சந்தானம் - மேடம்,உங்களுக்கு சிஸ்டர் இருக்காங்களா?

ஐஸ் - வாட்?

.சந்தானம் - சாரி,பிரதர்,மதர் இவங்களை பற்றி கேட்டேன்,கண்ட்ரோல் ஆல் டெலீட் குடுத்துடுங்க.


3.டி வி ஐ ஏன் கீழே போட்டு உடைச்சே?

ரோபோ - டி வியை போடுனு சொன்னாங்க.


4.எவ்வளவு டேஞ்சர்,ஏன் பிரேக் போடலை?

என்னைக்கேக்காம எதுவும் செய்யக்கூடாதுனு நீங்கதானே சொன்னீங்க?




5. என்னப்பா,தண்ணியை போட்டுட்டு வண்டியை ஓட்டறியா?


இல்லை.பெட்ரோல் போட்டுட்டு ....


6.ஷேவிங் செட்டை யாராவது கேர்ள் ஃபிரண்டுக்கு கிஃப்ட்டா தருவாங்களா?


இல்லை,தேவைப்படுமோன்னு....


7.வேலண்ட்டைன்ஸ்டேக்கு யாராவது முருகர் படம் தருவாங்களா?


8.என்னது இது? போஸ்ட் ஆஃபீஸ் முத்தம்?


9.உனக்கு அம்ம அப்பா இல்லையா?அப்புறம் எப்படி நீ பிறந்தே?


நான் பிறக்கலை,செஞ்சாங்க.


10.எங்க ஹோம்க்கு ஜெண்ட்ஸ் நாட் அலோடு (ALLOWED)


நாங்க ஜெண்ட்ஸ்னு யார் சொன்னது?


11. யார் இது? பாய் ஃபிரண்டா?      நோ,டாய் ஃபிரண்ட் . ( BOY - TOY)


12.மனுஷனால முடியாதுனு சொல்லப்பட்ட பல விஷயங்கள் நடந்திருக்கு.


13.இது இயற்கைக்கு எதிரானதுனு சொல்றாங்களே?


நோ.இது இயற்கைக்கு புதுசு.


14. என்ன நக்கலா?     நோ,நிக்கல்


15.இதுதான் ஹைடெக் பிட்டா?    நோ ,பைட்.


16. இறைவன் படைத்த 2 அதிசயங்கள் 1. நீ   2.நான்.

ஷங்கர் கலக்கிய இடங்கள் -தீ விபத்து நடந்த இடத்தில் இருந்து ரோபோ எல்லோரையும் காப்பாற்றுவதும் அது பிளஸ் ஆகிப்போன சந்தோஷத்தில் சயிண்டிஸ்ட் இருக்கும்போதே பாத்ரூமில் குளிக்கும் பெண்ணை மனித உணர்வுகளை புரிந்து கொள்ளாத ரோபோ அப்படியே தூக்கி வந்து மைனஸ் ஆகும் இடம்,,பெண்ணுக்கு நார்மல் டெலிவரி ஆகாது என டாக்டர்கள் நிராகரித்த ஒரு கேசை ரோபோ வெற்றிகரமாக நிறைவேற்றுவது,ரோபோவுக்கு மனித உணர்வுகள் புரியத்தொடங்கிவிட்டது என தெரிந்து எல்லோரும் சந்தோசப்படும்போது வில்லன் மட்டும் “இனி ஐஸ் உடன் ரோபோவுக்கு காதல் வரும் என கணித்து மர்மமாக ஒரு புன்னகை செய்து இடைவேளை ட்விஸ்ட் ஆக்குவது,ரோபோ வில்லன் ஆனதும் தனி ராஜ்ஜியம் அமைப்பது என பல இடங்களில் ஷங்கர் தனது முத்திரையை அழுத்தமாகவே பதித்து இருக்கிறார்.


ஷங்கர் சறுக்கிய இடங்கள் - எஜமான் படத்தில் மீனா பட்டாம்பூச்சி வேணும் என ரஜினியை கேட்டதும் ரஜினி படாத பாடுபட்டு அதை பிடித்துதரும் சீனை உல்டா செய்து ஐஸ் உடலில் கடித்த கொசுவை ரோபோ ரஜினி பிடித்து சாரி கேக்க வைக்கும் சீன்,என் கிட்ட இருக்கற ஒண்ணு உன் கிட்ட இல்ல என சந்தானம் ரோபோவை கலாய்க்கும் ஆபாச சீன்,இடைவேளைக்கு பிறகு ஏற்படும் அரை மணி நேர தொய்வு ,சந்தானம் கருணாஸ் கேரக்டர் வடிவமைப்பில் ஏற்பட்ட குழப்பம் அவர்களை சரியாக பயன்படுத்தாதது என சில இடங்களில் சறுக்கியது மைனஸ்.

ரஜினியின் முத்திரைகள் -விஞஞானியாக அடக்கி வாசித்த அவர் ரோபோவாக வரும்போது முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் டயலாக் டெலிவெரியில் கலக்குவது,ரோபோவுக்கும் மனுஷனுக்கும் முக்கிய வித்தியாசமான கண்கள் அமைப்பை சமாளிக்க கூலிங்க் கிளாஸ் அணிந்து சமாளிப்பது,ரோபோ வில்லன் ஆன பிறகு அதுவரை அடக்கி வைத்திருந்த நடிப்பாற்றலை எல்லாம் கட்டவிழ்த்தா காட்டாறு போல வெளிப்படுத்துவது.
1.ரோபோ என சைடாக தலையை திருப்பி பன்ச் டயலாக் பேசுவது
2.விஞ்ஞானி ரோபோவின் மாளிகையைல் மாறுவேடத்தில் நுழைந்ததை கண்டுபிடித்த ரோபோ கறுப்பு ஆடு யாரு என கேட்டு மே மே ம் மே என நக்கல் அடிப்பது
3.நகைக்கடை ஓனர் கேஷா,செக்கா எனக் கேட்கையில் GUN என நக்கலாக கூறுவது
4.தீ விபத்தில் இருந்து எல்லோரையும் காப்பாற்றுகையில் பாத்ரூமில் குளிக்கும் பெண் நான் டிரஸ் இல்லாம இருக்கேன் என கதறும்போது சோ வாட் நான் கூட அப்படித்தான் இருக்கேன் அசால்ட்டாக கூறுவது
5.ரோபோ ரஜினியை ஐஸ் முதன் முதலாக கிஸ் பண்ணும்போது ஏன் என் கன்னத்தை எச்சில் பண்றே என கேட்பது
6.சூப்பர்ஸ்டார் இமேஜை மீறி ரோபோவாக வரும் ரஜினி உயிர் பிச்சை கேட்டு கதறுவது

ஆர்ட் டைரக்‌ஷன்,ஒளிப்பதிவு என டெக்னிக்கல் பிரம்மாண்டங்கள் கலக்கல் ரகம்.அரிமா அரிமா பாடல் காட்சியில் ரஜினியின் ஆண்மை மிளிரும் நடையும்,தெனாவெட்டும் ஸ்பெஷல் முத்திரை.இத்தனை பிளஸ்கலை மீறியும் படத்தை பற்றி நெகடிவ் டாக் வருதுன்னா அதற்கான காரணங்கள்

1.சன் டிவியின் ஓவர் அலப்பறை
2.டிக்கட் ரூ 300 ,ரூ 200 என முதல் 15 நாட்களுக்கு விற்றது
3.படத்தை பற்றிய ஓவர் எதிர்பார்ப்பு
4.ரஜினியை ஸ்டைல்,பன்ச் வசனங்களோடு எதிர்பார்த்தது
5.ரஜினியின் அடக்கிவாசித்த நடிப்பை விரும்பாதது

பாடல் காட்சிகளில் ஐஸ் 37 வயசுப்பெண் மாதிரியே தெரியவில்லை,கொள்ளை அழகு.கிராஃபிக்ஸ் காட்சிகள் மிரட்டல் ரகம் என்றாலும் பாம்பு மாதிரி ரோபோ வருவது மட்டும் ராமநாராயணன் படம் எஃப்க்ட் ஏற்பௌத்துது.மற்றபடி தமிழில் வந்து மறக்க முடியாத ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம்.