ஓ பக்கங்கள் பத்திரிக்கை உலகில் ஏற்படுத்திய தாக்கங்கள் நாம் அறிந்ததே.ஆனந்த விகடனில் மதன் கேள்வி பதில்களும்,சினிமா விமர்சனமும் வாசகர்களால் அதிகம் படிக்கும் பகுதியாகவும்,விரும்பி புரட்டும் பக்கமாகவும் விளங்கி வந்த நேரத்தில் ஓ பக்கங்கள் அதிரடியாய் அவைகளை பின்னுக்குத்தள்ளி சூப்பர் ஹிட் ஆனது.ஒவ்வொரு வாரமும் அவர் வைத்த குட்டு,ஷொட்டு,ஹிட்டு கவனிக்கப்பட்டது.டாக் ஆஃப் டவுன் (TALK OF TOWN)
ஆனது.ஆனந்த விகடனில் இருந்து ஞானி வெளி வந்த பிறகும் கூட குட்டு,ஷொட்டு,ஹிட்டு வாசகர்களால் நிரப்பப்பட்டு வந்தது அதன் வெற்றியை பறை சாற்றியது.
அடுத்து குமுதம். 2 முன்னிலைப்பத்திரிக்கைகளிலும் அடுத்தடுத்து எழுதியதால் பலதரப்பட்ட வாசகர்களை சென்றடைந்த அவர் எழுத்து 2வது முறையாக தேக்கம் கண்டது.ஆளுங்கட்சி மீது அவர் வைத்த விமர்சனங்கள் 2 பத்திரிக்கைகளையும் யோசிக்க வைத்தது.
அடுத்து எந்த பத்திரிக்கையில் அவர் எழுதப்போகிறார் ?ஆளாளுக்கு ஜோசியம் சொல்ல ஆரம்பித்தார்கள்.சிலர் தினமணி இதழில் ஞாயிறு எடிசன் தினமணிக்கதிரில் எழுதுவார் எனவும் ,தினமலர் வாரமலரில் எழுதுவார் எனவும் ஆரூடம் கூறப்பட்ட்து.
தினமலர் வாரமலரில்அந்துமணியின் பார்த்தது கேட்டது,படித்தது பக்கங்கள் பரவலாக வரவேற்புப்பெற்ற பக்கம் எனவும்,ஓ பக்கங்கள் தினமலர் வாரமலரில் வந்தால் அது அந்துமணியை இருட்டடிப்பு செய்து விடும் என்று அந்துமணி அஞ்சுவதாகவும் பேசப்பட்டது.
இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் கல்கி வார இதழில் அடுத்த வாரம் முதல் ஓ பக்கங்கள் வருவதாக கல்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.
குங்குமம் பத்திரிக்கை ஆளுங்கட்சிப்பத்திரிக்கை என்பதால் 4வது இடத்தில் இருக்கும் கல்கியை அவ்ர் தேர்ந்தெடுத்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என எதிர்பார்க்கலாம்.
ஆனது.ஆனந்த விகடனில் இருந்து ஞானி வெளி வந்த பிறகும் கூட குட்டு,ஷொட்டு,ஹிட்டு வாசகர்களால் நிரப்பப்பட்டு வந்தது அதன் வெற்றியை பறை சாற்றியது.
அடுத்து குமுதம். 2 முன்னிலைப்பத்திரிக்கைகளிலும் அடுத்தடுத்து எழுதியதால் பலதரப்பட்ட வாசகர்களை சென்றடைந்த அவர் எழுத்து 2வது முறையாக தேக்கம் கண்டது.ஆளுங்கட்சி மீது அவர் வைத்த விமர்சனங்கள் 2 பத்திரிக்கைகளையும் யோசிக்க வைத்தது.
அடுத்து எந்த பத்திரிக்கையில் அவர் எழுதப்போகிறார் ?ஆளாளுக்கு ஜோசியம் சொல்ல ஆரம்பித்தார்கள்.சிலர் தினமணி இதழில் ஞாயிறு எடிசன் தினமணிக்கதிரில் எழுதுவார் எனவும் ,தினமலர் வாரமலரில் எழுதுவார் எனவும் ஆரூடம் கூறப்பட்ட்து.
தினமலர் வாரமலரில்அந்துமணியின் பார்த்தது கேட்டது,படித்தது பக்கங்கள் பரவலாக வரவேற்புப்பெற்ற பக்கம் எனவும்,ஓ பக்கங்கள் தினமலர் வாரமலரில் வந்தால் அது அந்துமணியை இருட்டடிப்பு செய்து விடும் என்று அந்துமணி அஞ்சுவதாகவும் பேசப்பட்டது.
இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் கல்கி வார இதழில் அடுத்த வாரம் முதல் ஓ பக்கங்கள் வருவதாக கல்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.
நமது கேள்வி எல்லாம் 6 லட்சம் முதல் 8 லட்சம் வாசகர்களை சென்றடைந்த ஓ பக்கங்கள் இனி வெறும் 40 ஆயிரம் வாசகர்களை மட்டுமே சென்றடையும்.
ஆனால் கல்கி ஒரு தரமான பத்திரிக்கை என்பதிலோ அதன் நடுநிலைத்தன்மையிலோ எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.அதன் வீச்சு குமுதம் ,விகடனுடன் ஒப்பிடும்போது பல மடங்கு குறைவாகவே இருக்கும்.குங்குமம் பத்திரிக்கை ஆளுங்கட்சிப்பத்திரிக்கை என்பதால் 4வது இடத்தில் இருக்கும் கல்கியை அவ்ர் தேர்ந்தெடுத்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது.