Tuesday, August 10, 2010

ஜூனியர் விகடனை மிரட்டிய அழகிரி-

ஜூனியர் விகடன் இதழில் அரசல்புரசலாக வெளியான ஒரு செய்தியை முன்வைத்து அப்பத்திரிகை அலுவலகம் முன் சட்டம் - ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக சில அமைப்புகள் அறிவித்துள்ளன. பலரும் தொலைபேசியில் அச்சுறுத்தி மிரட்டுகிறார்கள்.
இதையடுத்து, சென்னைப் பத்திரிகையாளர்கள் மன்றத்தில் இன்று பத்திரிகையாளர்களின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.
இந்த அவசரக் கூட்டத்தில், பல்வேறு பத்திரிகைகளையும், செய்தித் தொலைக்காட்சி சேனல்களையும் சேர்ந்த பத்திரிகையாளர்கள், புகைப்பட பத்திரிகையாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் செய்தி ஊடகங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்தும், ஜூனியர் விகடன் பத்திரிகையாளர்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்து, ஜூனியர் விகடன் ஆசிரியர் வாசித்த கடிதத்தின் விவரம் வருமாறு: 
மதிப்புக்குரிய ஊடக நண்பர்களுக்கு,
வணக்கம்...
ஜூனியர் விகடன் 8.8.2010 தேதியிட்ட இதழில் 'மிஸ்டர் கழுகு' பகுதியில் 'மடக்கப்பட்ட மதுரை திலகம்' என்ற செய்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 10.8.2010 அன்று காலை நாளிதழ் ஒன்றில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை சென்னையில் உள்ள ஜூனியர் விகடன் பத்திரிக்கை அலுவலகம் முன்பு நடத்தப்போவதாக வெளியான விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குறிப்பிட்ட செய்தியால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவர்களுக்கு ஆதரவாக சட்டம் ஒழுங்கிற்கு இத்தகைய சவாலை ஏற்படுத்தப்போவதாக இவர்கள் கூறியிருப்பது, இந்திய தேசத்தின் அரசமைப்புச் சட்டத்துக்கும், அடிப்படை கருத்துரிமைக்கும் எதிரானது மட்டுமல்ல - பத்திரிகையாளர்கள் அத்தனை பேருக்கும் விடுக்கப்படும் மறைமுக மிரட்டலாகவே அமைந்துள்ளது.
இதற்கிடையே செய்தியை எழுதியவர்கள் இன்னார்தான் என்று தாங்களாகவே முடிவு செய்த சிலர் பத்துக்கும் மேற்பட்ட வகையில் மிரட்டல் போஸ்டர்கள் அடித்து மதுரை நகரமெங்கும் ஒட்டியுள்ளனர். அதில் நிருபர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு, அவர்களின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படக் காரணமாகியுள்ளனர்.
தொலைபேசி வாயிலாக முகம் தெரியாத மனிதர்களின் அச்சுறுத்தலும் தொடர்கிறது. இந்நிலையில், தமிழக காவல்துறை இயக்குநர், சென்னை மாநகர கமிஷனர் ஆகியோரிடமும் அச்சுறுத்தல் குறித்து முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூனியர் விகடன் அலுவலக ஊழியர்களின் பாதுகாப்புக்கும், அலுவலகத்தின் அச்சமற்ற செயல்பாட்டுக்கும், வழியேற்படுத்த வேண்டி தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களிடம் மனு அளிக்க உள்ளோம்.
தமிழக காவல்துறை இயக்குநர், சென்னை மாநகர கமிஷனர் ஆகியோரிடமும் அச்சுறுத்தல் குறித்து முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தை தனிப்பட்ட ஒரு பத்திரிகைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாக எண்ணிவிடாமல் ஒட்டு மொத்த ஊடக சுகந்திரத்துக்குமான மிரட்டலாக கருதி ஊடக நண்பர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கண்டனக்குரல் எழுப்பியிருப்பதை நன்றியோடு வரவேற்கிறோம். குறிப்பிட்ட அந்தச் செய்தி தொடர்பாக சட்டரீதியாக விடுக்கப்படும் சவால்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளிலும் முறைப்படி இறங்கியுள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஊடக சுகந்திரத்துக்கும் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் குரல் கொடுத்து திரண்ட அத்தனை நண்பர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் கூடிய பத்திரிகையாளர்கள் அவசர கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
1. ஜூனியர் விகடன் இதழில் அரசல்புரசலாக வெளியான ஒரு செய்தியை முன்வைத்து அப்பத்திரிகை அலுவலகம் முன் சட்டம் - ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக சில அமைப்புகள் அறிவித்துள்ளன. அப்பத்திரிகையில் பணியாற்றும் ஊழியர்களின் பெயரைக் குறிப்பிட்டு மதுரையில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. பலரும் தொலைபேசியில் அச்சுறுத்தி மிரட்டுகிறார்கள். இந்த ஜனநாயக விரோதச் செயலை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
2. ஜூனியர் விகடன் சார்பில் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு கேட்டு காவல்துறை டி.ஜி.பி. மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு தரப்பட்ட மனுவை - சென்னை பத்திரிகையாளர் மன்றம் டி.ஜி.பி.க்கு, மாநகர காவல்துறை ஆணையருக்கு வழங்க வேண்டும்.
3. இன்று காவல்துறையிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தும் பத்திரிகை அலுவலகத்தில் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
4. தமிழகத்தில் பத்திரிகையாளர்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை சென்னை உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய பாதுகாப்புக்கு உத்தரவாதம் பெறுவோம்.
5. பத்திரிகையாளர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பகிங்கரமாக அச்சுறுத்தல் விடுத்த நபர்கள், சங்கங்களின் அமைப்புகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கைகள் வைப்போம்.
6. பத்திரிகைகளை விமர்சித்து மிரட்டி வெளியான விளம்பரத்தை சில பத்திரிகைகள் வெளியிட்டது  பத்திரிகையாளர்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பான பத்திரிகை உரிமையாளர்களை சந்தித்து நமது வருத்தத்தை பதிவு செய்வோம்.
7. ஜூனியர் விகடன் சம்பவம் உள்ளிட்ட பத்திரிகையாளர்களுக்கு எதிரான சம்பவங்களை அனைத்துக் கட்சித் தலைவர்கள், பிரஸ் கவுன்சில் மற்றும் அகில இந்திய பத்திரிகையாளார் அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.
8. பத்திரிகை உரிமையாளர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திப்பது என அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்துச் செல்ல ஒரு குழு அமைக்கப்படும்.
9. பத்திரிகையாளர் மீதான பொய் வழக்குகளை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அந்தத் தீர்மானங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்துக்கு முன்பு கூடிய நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள், "பத்திரிகை அலுவகத்துக்கு மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், பத்திரிகையாளர்கள் மீதான பொய்ப் புகார்களை திரும்பப் பெற வேண்டும், பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்" என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி அடையாள ஆர்ப்பாட்டத்திலும் சிறிது நேரம் ஈடுபட்டனர்.

 பத்திரிக்கையாளரின் நண்பர் என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் கலைஞர் ஆட்சியில் இப்படி நடக்கலாமா என பத்திரிக்கைத்துறை நண்பர்கள் தங்களூக்குள் அங்கலாய்த்துக்கொள்கின்றன.

புதிய பார்வை இதழில் வெளிவந்த எனது ஜோக்ஸ்!

புதிய பார்வை இதழில் வெளிவந்த எனது ஜோக்ஸ்


ஊர் வம்பு (நாட்டு நடப்பு நையாண்டி)

1)இந்த வாரத்தின் சிறந்த ஜொள்ளின் செல்வர் விருது நடிகர் விவேக்கிற்கு.
எந்திரன் பட விழாவில் ,’’ ஐஸ்வர்யாராய்க்கு வெளிநாடு போகும்போதெல்லாம் பிரச்சனைதான்.பாஸ்போர்ட் விண்ணப்பத்தில்  வயது 30+ என பூர்த்தி செய்திருக்கிறார்,ஆனால் நேரில் பார்க்கும்போது 20+ மாதிரிதான் தெரிகிறார் என அனைவரின் முன்பும் பிரமாதமாக வழிந்தமைக்காக.

2) இந்த வாரத்தின் சிறந்த மாமியார் விருது இயக்குநர் பிரதாப் போத்தனுக்கு.
கலைஞர் டி வி யின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கு பெறும் கலைஞர்களின் குறும்படங்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும்,இயக்குநர் ஷங்கர்,ஹாய் மதன் உட்பட யார் பாராட்டினாலும் ,”எனக்கு படம் பிடிக்கலை,இயக்கம் ரொம்ப மோசம் என எல்லாத்தையும் நொட்டு (குறை)
சொல்வதற்காக.

3) இந்த வாரத்தின் சிறந்த மல்டி பல்டிமங்காத்தா விருது எஸ் வி சேகருக்கு.நான் இப்போது அ தி மு க வில் இல்லை,இருந்தாலும் அம்மா விரும்பினால் அவரை சந்திப்பேன்,அவர் ஓக்கே என்றால் மீண்டும் அ தி மு க வில்இணைவேன் என ஜெமினி சர்க்கஸ் கலைஞர் போல் பல்டி அடித்தமைக்காக.

4)இந்த வாரத்தின் சிறந்தஅடைக்கல்ராஜ் விருது கேப்டன் டி விக்கு.டிராபிக் ராமசாமியை தனது டி ஆர் பி ரேட்டிங்கிற்காக உபயோகிக்க ஒரு கருவியாய் உபயோகிக்க முடிவு எடுத்தமைக்காக.

5) இந்த வாரத்தின் சிறந்த கொலம்பஸ் கோகிலா விருது ஸ்ருதி கமலுக்கு.
ஏ ஆர் முருகதாசின் ஏழாம் அறிவு படத்திற்கும் டைட்டானிக் நாயகன் டி காப்ரியோ நடித்த தி இன்செப்ஷன் (THE INCEPTION) படத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என அறிவித்தமைக்காக.(படத்தோட டைரக்டரே கம்முனு இருக்காரு)

6) இந்த வாரத்தின் சிறந்த விரிவுரையாளர் விருது கலைஞருக்கு.உமாசங்கர் ஐ ஏ எஸ் பழி வாங்கப்படுகிறாரா எனக்கேட்டதற்கு பத்திரிக்கையாளர்களிடம் அ தி மு க ஆட்சியில் பழி வாங்கப்படவில்லையா என விளக்கியதற்கு.

7) இந்த வாரத்தின் சிறந்த மெம்மரி பிளஸ் மொமெண்ட்டோ +அரிச்சந்திரன் விருது சன் டிவியில் ஸ்டேண்ட் அப் காமெடி பண்ணும் மதுரை முத்துக்கு.
பத்திரிக்கைகளில் வெளிவந்த ஜோக்குகளை யும்,பேராசிரியர் கு ஞானசம்பந்தன் அவர்கள் எழுதிய சிரிக்கலாம் வாங்க புத்தகத்தில் இருந்து உருவி எடுத்த சரக்குகளை யும் பிரமாதமாக மனப்பாடம் செய்து ஒப்பித்து தானே உருவாக்கியதாக சொன்னதற்காக.

8) இந்த வாரத்தின் சிறந்த செய்தி வாசிப்பு விருது கலைஞர் டி விக்கு.
கபினி அணை மழை வெள்ளத்தால் நிரம்பியபோது வேறு வழி இல்லாமல் அணையை திறந்து விட்டனர்.உடனே கலைஞர் டி வி செய்தியில் முதல்வர் கலைஞர் கேட்டுக்கொண்டத்ற்கு இணங்க திறந்து விட்ட்தாக வாய் கூசாமல் வாசித்ததற்காக.

ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் வெளிவந்து 6 வருடங்களுக்கு முன் சூப்பர் ஹிட் ஆன தஞ்சை தாமு எழுதிய ஜோக்


இவ்வளவு வசதி இருந்தும் சோபா,மெத்தைல படுக்காம தலைவர் ஏன் பாய்ல படுக்கறார்?


காலைல எந்திரிச்சதும் அவருக்கு எதையாவது சுருட்டனும்.

Monday, August 09, 2010

சைனீஷ் சினிமா விமர்சனம்-FIRE BALL 18+

  சைனீஷ் சினிமா விமர்சனம்-FIRE BALL 18+

கோலிவுட்டுக்கு ஒரு வெண்ணிலா கபாடிக்குழு எப்படியோ,பாலிவுட்டுக்கு ஒரு லகான் (அமீர்கான்) எப்படியோ,ஹாலிவுட்டுக்கு பிளட் ஸ்போர்ட்  (ஜீன் கிளாட் வேண்டம்)எப்படியோ அதே போல் சைனீஷ் பட உலகிற்கு ஒரு ஃபயர் பால் ( FIRE BALL).
பேஸ்கட்பால் விளையாட்டை இவ்வளவு வன்முறையாகச்சொன்ன ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும்.1985 களில் தமிழக கிராமங்களில் ஊமைப்பந்து என ஒரு விளையாட்டு விளையாடுவார்கள்.குழுவில் உள்ள வீரர்களை ஓட விட்டு பந்தை அவர்கள் மீது எறிந்து அது அவர்கள் மேல் பட்டால் அவுட்.அந்த விளையாட்டையே கொஞ்சம் மாடர்ன் ஆக்கி ,வன்முறையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு திணித்தால் ஃபயர்பால் கேம் ரெடி.

அதாவது 2 டீம்.பேஸ்கட் பால் கிரவுண்டில் இறங்கும்.பாலை (BALL)எடுத்து யார் வலைக்குள் போடுகிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள்.ஆனால் அதற்குள் அவர்களூக்குள் அடித்துக்கொள்ள வேண்டும்.நோ ரூல்ஸ்,நோ கண்ட்ரோல்,நோ அம்ப்பயர்.எப்படி இருக்கும்.?அடி போட்டு பின்னு பின்னு என பின்னுகிறார்க்ள்.

இந்த விளையாட்டில் அடிபட்டு கோமா ஸ்டேஜில் இருக்கும் அண்ணனை மருத்துவ சிகிச்சை செய்து காப்பாற்ற ஜெயிலில் இருக்கும் தம்பி பெயிலில் வருகிறான்(அண்ணன்,தம்பி 2 பேரும் ஒருவரே-வாழ்க் டபுள் ஆக்ட்பாலிசி)
கஜினி சூர்யா மாதிரி கெட்டப்பில் இறுகிய முகத்துடன் வரும் ஹீரோ கதாபாத்திரத்துடன் ஒன்றி விடுகிறார்.மேட்ச் ஃபிக்சிங் நடக்கும் 2 குரூப்களீடம் சிக்கி விளையாட்டு குழுக்கள் எப்படி சின்னாபின்னன்மாகின்றன என்பதே கதை.
கேம் ட்ரூப்பில் இருப்பவர்களை ஒவ்வொருவருக்கும் ஒரு செண்ட்டிமெண்ட் டச் குடுத்து உலவ விடிருப்பது டைரக்டரின் சாமார்த்தியம்.வீட்டு வாடகை கட்ட முடியாததால் துரத்தப்படும் ஒரு அம்மாவின் மகன்,மோசமான தொழிலை கணவன் செய்கிறான் என தெரிந்தும் வேறு வழி இல்லாத நிலையில் அவனை ஏற்றுக்கொண்டு இருக்கும் மாசமான மனைவி (கர்ப்பவதி),இப்படி கேரக்டர்களை உருவாக்கி இருப்பது அவர்கள் மேல் ஈடுபாடு காட்ட உதவும் திரைக்கதை சாமார்த்தியம்.
இந்த மாதிரி கடுமையான படங்களில் வசனங்கள் பொதுவாக ரொம்ப ட்ரையாக (DRY) இருக்கும்.இந்தப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல.இருந்தாலும் பாலைவனத்தில் நீரூற்று போல ஆங்காங்கே சில பளீச் வசங்கள் உண்டு.
கோர்ட்ல இருந்து உனக்கு சம்மன் வந்திருக்கு.
ஹூம்,நல்லவனா வாழ விடமாட்டாங்களே?

மனசாட்சியை கழட்டி வெச்சிட்டுதான் சில தொழிலை  செய்ய வேண்டி இருக்கு.

என் கிட்ட அவ பணம் கடன் வாங்கி இருக்கா.பணத்தை கொடுத்துக் கழிக்கிறாளா?படுத்துக் கழிக்கிறாளா?
 தமிழ் படம் ஏதாவது பார்த்திருப்பாரோ டைரக்டர் என சந்தேகப்படும் அளவு ஏகப்பட்ட தமிழ்ப்பட ஃபார்முலாக்கள் ஆங்காங்கே.
படத்தின் ஹீரோயின் நிலாப்பெண்ணே பட ஹீரோயின் திவ்யபாரதியின் சாயலில் இருக்கிறார்,மாசு மரு இல்லாத,மச்சம் ஒன்றைக்கூட சருமத்தில் மிச்சம் வைக்காத அழகு முகம்.செர்ரிப்பழங்களை தோற்று விடச்செய்யும் அழகு சிவப்பில் அதரங்கள்.உடல்நிலை சரி இல்லாத காதலனாக இருந்தாலும் எஸ்கேபாகாமல் கடைசி வரை கூடவே இருந்து கவனித்துக்கொள்ளும் கதாபாத்திரம்.மிக நன்றாக செய்திருக்கிறார்.
மருத்துவ சிகிச்சைக்கான செலவுப்பணத்துக்கு அவள் விலைமகளாக பணி புரிந்துதான் பணம் ஈட்டுகிறாள்ள் என்பதை மிக நாசூக்காக ,ஒரே ஒரு லாங் ஷாட்டில் 2 செகண்டில் சொல்லி விடுவது டைரக்டரின் சாமார்த்தியம்.படத்தின் டைட்டில் போடும்போது திரைக்கதை என்ற லிஸ்ட்டில் 6 பேர் பெயர் வருகிறது.எனக்குத்தெரிந்து எந்த தமிழ்ப்படத்திலும் அப்படி வந்ததாக வரலாறே இல்லை.இருக்கவே இருக்காங்க  அப்பாவி  உதவி டைரக்டர்கள் குழு.

படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய 2 முக்கிய மைனஸ்கள்-

1.ஒளீப்பதிவு. மகா மட்டம்.தன்னை மேதை எனவும் ,ஆடியன்ஸை முட்டாள் எனவும் நினைக்கும் ஒரு ஒளிப்பதிவாளர்தான் இப்படி மோசமாக பணீயாற்ற முடியும்.லைட்டிங்க் அடிப்பது பார்ப்பவர் கண்களை உறுத்துகிறது.படம் பார்ப்ப்த்ற்குள் கண் வலி வந்துவிடும் போல.

2.பிண்ணனி இசை.என்னதான் சண்டைப்படமாக இருக்கட்டும்.இப்படியா டம் டம் டமால் டமால் என 2 மணி நேரம் நான் -ஸ்டாப் ஆக இசை அமைப்பது?

காதலனான அண்ணன் ஹாஸ்பிடல் பெட்டில். (HOSPITAL BED)காதலனின் தம்பி அதே முகச்சாயல்.கூடவே தங்க,பழக வேண்டிய சூழல் ,இவை அனைத்தையும் பிரமாதமாக கண்களில் வெளீப்படுத்தி கோல் போட்டிருக்கிறார் ஹீரோயின்.ஆனால் இருவரும் இணையும் காட்சிக்கான லீட் ஜீன் கிளாட் வேண்டம்மின் ஹார்டு டார்கெட்டிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

மாற்றான் தோட்டத்து மல்லிகையை மணம் நுகரும் மசாலாக்காட்சியைக்கூட அழகியல் உணர்வு வெளிப்படுவது மாதிரி எடுத்தது  சபாஷ் டைரக்டர் என சொல்ல வைக்கிறது,
மேற்கூறிய காட்சிகளில் கத்திரியுடன் அத்து மீறி நுழைந்து முக்கியமான சீன்களை கட் செய்த இந்திய சென்சார் குழுவை அகில இந்திய அஜால் குஜால் சீன் பட ரசிகர் மன்றம் இளைஞர்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறது.
படத்தின் நீதி -பணத்திற்காக வாழ்க்கையைத்தொலைக்கிறோம்.அது தெரிவதற்குள் நமக்கு வாழ்க்கை முடிந்து விடுகிறது.

சிறந்த பதிவுக்கு ரூ 500 வாராவாரம் பரிசு

அன்பான பதிவுலக நண்பர்களுக்கு ,
பிளாக்கில் எழுதுவதால் என்ன பயன் என இனி யாரும் நம்மை எள்ளி நகையாட முடியாது.ஒரு லட்சம் ஹிட்ஸ் குடுத்த பிறகு விளம்பரம் மூலம்தான் சம்பாதிக்க வேண்டும் என்றில்லை.வாராவாரம் திங்கள் அன்று ஜீஜிக்ஸ் நிறுவனம் சிறந்த 5 பதிவுகள் தேர்வு செய்து  ரூ 500 பரிசு தருகிறது.கேபிள் சங்கர்,கே ஆர்.பி செந்தில்,நல்ல நேரம் சதிஷ் என நம் நண்பர்கள் பரிசு பெற்றிருக்கிறார்கள்.
வெற்றி பெற்றவர்களுக்கு முதலில் இந்த மெயில் வரும்.



Tamilselvan Subramanian sent you $10.00 USD

Transaction ID: 527778778K902814N
 
Dear sir,
Just thought you'd like to know Tamilselvan Subramanian sent you $10.00 USD.

Note from Tamilselvan Subramanian:

Best Wishes from www.jeejix.com
 
Keep Writing..

Get the details
 

Don't see the money in your account?

Don’t worry - sometimes it just takes a few minutes for it to show up.
Thanks,
PayPal
 
Please do not reply to this email. This mailbox is not monitored and you will not receive a response. For assistance, log in
 
to your PayPal account and click the Help link in the top right corner of any PayPal page.

To receive email notifications in plain text instead of HTML, update your preferences
 
.

Copyright © 1999-2010 PayPal. All rights reserved.

Consumer advisory- PayPal Pte. Ltd., the holder of PayPal’s stored value
facility, does not require the approval of the Monetary Authority of Singapore.
Users are advised to read the terms and conditions carefully.

PayPal Email ID PP1546


பிறகு நம் பேங்க் அக்கவுண்ட் டீடெய்ல் கேட்டு ஒரு மெயில் வரும்.



Congratulations! You have successfully added an India bank account to your PayPal account. You can now withdraw funds from your PayPal account to this bank account.
Yours sincerely,
PayPal

Please do not reply to this email. This mailbox is not monitored and you will not receive a response. For assistance, log in

 
to your PayPal account and click the Help link in the top right corner of any PayPal page.

To receive email notifications in plain text instead of HTML, update your preferences
 
.


அவர்கள் கேட்கும் அக்கவுண்ட் நெம்பர்,பெயர்,போன்ற தகவல் தெரிவித்து விட்டால் நம் பேங்க் அக்கவுண்ட்டில் பணம் க்ரெடிட் ஆகி விடும்.
www.jeejix.com என்ற முகவரியில் பதிவு செய்து பயன் பெறுங்கள்.
மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்ற நமது நண்பர்கள் கேபிள் சங்கர்,கே ஆர்.பி செந்தில்,நல்ல நேரம் சதிஷ்  ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்

  • சென்ற வார சிறந்த எழுத்தாளர்கள்

  • Valavan l 08-08-2010 15:00 DST l


  •     பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும்,
    அனுபவசாலிகளிடமும்  ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் 
    வெளி உலகிற்கு கொண்டுவருவதே நம் நோக்கம். 

     உங்களின் பதிவு செய்யும்  சமூக  மாற்றங்களை சுவாசியுங்கள் !! 



    சென்ற  வாரத்தின் தலை சிறந்த ஜீஜிக்ஸ் எழுத்தாளர்கள் 

    ரவிப்ரகாஷ்  நரசிம்ஹன்      - கலைஞரும் நானும் !
    கேபிள் சங்கர்                        -  சால்ட் திரை விமர்சனம்  !
    ஆர். கே சதிஷ்குமார் 
               -  அசினுக்கு கவிஞர் தாமரை பதிலடி !
    சி.பி. செந்தில்குமார்            - சினிமா விமர்சனம் - பாணா காத்தாடி
    அறிவழகன். கை                   - அங்காடி தெருவும் ,  வாழ்கையும்

    உங்களுக்கான பரிசு பேபால் ( paypal ) வழியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்தடையும். paypal வழியாக பரிசு பெறுவதில் சிக்கல் இருந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும். 

    வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

    - வளவன்