Sunday, August 08, 2010

உயிர்த்தெழுந்தது ஓ பக்கங்கள்-ஞாநியின் புதிய தளம்

ஓ பக்கங்கள் பத்திரிக்கை உலகில் ஏற்படுத்திய தாக்கங்கள் நாம் அறிந்ததே.ஆனந்த விகடனில் மதன் கேள்வி பதில்களும்,சினிமா விமர்சனமும் வாசகர்களால் அதிகம் படிக்கும் பகுதியாகவும்,விரும்பி புரட்டும் பக்கமாகவும் விளங்கி வந்த நேரத்தில் ஓ பக்கங்கள் அதிரடியாய் அவைகளை பின்னுக்குத்தள்ளி சூப்பர் ஹிட் ஆனது.ஒவ்வொரு வாரமும் அவர் வைத்த குட்டு,ஷொட்டு,ஹிட்டு கவனிக்கப்பட்டது.டாக் ஆஃப் டவுன் (TALK OF TOWN)
ஆனது.ஆனந்த விகடனில் இருந்து ஞானி வெளி வந்த பிறகும் கூட குட்டு,ஷொட்டு,ஹிட்டு வாசகர்களால் நிரப்பப்பட்டு வந்தது அதன் வெற்றியை பறை சாற்றியது.
அடுத்து குமுதம். 2 முன்னிலைப்பத்திரிக்கைகளிலும் அடுத்தடுத்து எழுதியதால் பலதரப்பட்ட வாசகர்களை சென்றடைந்த அவர் எழுத்து 2வது முறையாக தேக்கம் கண்டது.ஆளுங்கட்சி மீது அவர் வைத்த விமர்சனங்கள் 2 பத்திரிக்கைகளையும் யோசிக்க வைத்தது.
அடுத்து எந்த பத்திரிக்கையில் அவர் எழுதப்போகிறார் ?ஆளாளுக்கு ஜோசியம் சொல்ல ஆரம்பித்தார்கள்.சிலர் தினமணி இதழில் ஞாயிறு எடிசன் தினமணிக்கதிரில் எழுதுவார் எனவும் ,தினமலர் வாரமலரில் எழுதுவார் எனவும் ஆரூடம் கூறப்பட்ட்து.
தினமலர் வாரமலரில்அந்துமணியின் பார்த்தது கேட்டது,படித்தது பக்கங்கள் பரவலாக வரவேற்புப்பெற்ற பக்கம் எனவும்,ஓ பக்கங்கள் தினமலர் வாரமலரில் வந்தால் அது அந்துமணியை இருட்டடிப்பு செய்து விடும் என்று அந்துமணி அஞ்சுவதாகவும் பேசப்பட்டது.
இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் கல்கி வார இதழில் அடுத்த வாரம் முதல் ஓ பக்கங்கள் வருவதாக கல்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.

நமது கேள்வி எல்லாம் 6 லட்சம் முதல் 8 லட்சம் வாசகர்களை சென்றடைந்த ஓ பக்கங்கள் இனி வெறும் 40 ஆயிரம் வாசகர்களை மட்டுமே சென்றடையும்.
ஆனால் கல்கி ஒரு தரமான பத்திரிக்கை என்பதிலோ அதன் நடுநிலைத்தன்மையிலோ எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.அதன் வீச்சு குமுதம் ,விகடனுடன் ஒப்பிடும்போது பல மடங்கு குறைவாகவே இருக்கும்.
குங்குமம் பத்திரிக்கை ஆளுங்கட்சிப்பத்திரிக்கை என்பதால் 4வது இடத்தில் இருக்கும் கல்கியை அவ்ர் தேர்ந்தெடுத்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என எதிர்பார்க்கலாம்.

Saturday, August 07, 2010

FIRE BALL 18+ - ஹாலிவுட் சினிமா விமர்சனம்-

கோலிவுட்டுக்கு ஒரு வெண்ணிலா கபாடிக்குழு எப்படியோ,பாலிவுட்டுக்கு ஒரு லகான் (அமீர்கான்) எப்படியோ,ஹாலிவுட்டுக்கு பிளட் ஸ்போர்ட்  (ஜீன் கிளாட் வேண்டம்)எப்படியோ அதே போல் சைனீஷ் பட உலகிற்கு ஒரு ஃபயர் பால் ( FIRE BALL).


பேஸ்கட்பால் விளையாட்டை இவ்வளவு வன்முறையாகச்சொன்ன ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும்.1985 களில் தமிழக கிராமங்களில் ஊமைப்பந்து என ஒரு விளையாட்டு விளையாடுவார்கள்.குழுவில் உள்ள வீரர்களை ஓட விட்டு பந்தை அவர்கள் மீது எறிந்து அது அவர்கள் மேல் பட்டால் அவுட்.அந்த விளையாட்டையே கொஞ்சம் மாடர்ன் ஆக்கி ,வன்முறையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு திணித்தால் ஃபயர்பால் கேம் ரெடி.

அதாவது 2 டீம்.பேஸ்கட் பால் கிரவுண்டில் இறங்கும்.பாலை (BALL)எடுத்து யார் வலைக்குள் போடுகிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள்.ஆனால் அதற்குள் அவர்களூக்குள் அடித்துக்கொள்ள வேண்டும்.நோ ரூல்ஸ்,நோ கண்ட்ரோல்,நோ அம்ப்பயர்.எப்படி இருக்கும்.?அடி போட்டு பின்னு பின்னு என பின்னுகிறார்க்ள்.

இந்த விளையாட்டில் அடிபட்டு கோமா ஸ்டேஜில் இருக்கும் அண்ணனை மருத்துவ சிகிச்சை செய்து காப்பாற்ற ஜெயிலில் இருக்கும் தம்பி பெயிலில் வருகிறான்(அண்ணன்,தம்பி 2 பேரும் ஒருவரே-வாழ்க் டபுள் ஆக்ட்பாலிசி)
கஜினி சூர்யா மாதிரி கெட்டப்பில் இறுகிய முகத்துடன் வரும் ஹீரோ கதாபாத்திரத்துடன் ஒன்றி விடுகிறார்.மேட்ச் ஃபிக்சிங் நடக்கும் 2 குரூப்களீடம் சிக்கி விளையாட்டு குழுக்கள் எப்படி சின்னாபின்னன்மாகின்றன என்பதே கதை.
கேம் ட்ரூப்பில் இருப்பவர்களை ஒவ்வொருவருக்கும் ஒரு செண்ட்டிமெண்ட் டச் குடுத்து உலவ விடிருப்பது டைரக்டரின் சாமார்த்தியம்.வீட்டு வாடகை கட்ட முடியாததால் துரத்தப்படும் ஒரு அம்மாவின் மகன்,மோசமான தொழிலை கணவன் செய்கிறான் என தெரிந்தும் வேறு வழி இல்லாத நிலையில் அவனை ஏற்றுக்கொண்டு இருக்கும் மாசமான மனைவி (கர்ப்பவதி),இப்படி கேரக்டர்களை உருவாக்கி இருப்பது அவர்கள் மேல் ஈடுபாடு காட்ட உதவும் திரைக்கதை சாமார்த்தியம்.

இந்த மாதிரி கடுமையான படங்களில் வசனங்கள் பொதுவாக ரொம்ப ட்ரையாக (DRY) இருக்கும்.இந்தப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல.இருந்தாலும் பாலைவனத்தில் நீரூற்று போல ஆங்காங்கே சில பளிச் வசனங்கள் உண்டு.


1. கோர்ட்ல இருந்து உனக்கு சம்மன் வந்திருக்கு.


ஹூம்,நல்லவனா வாழ விடமாட்டாங்களே?


2. மனசாட்சியை கழட்டி வெச்சிட்டுதான் சில தொழிலை  செய்ய வேண்டி இருக்கு.

என் கிட்ட அவ பணம் கடன் வாங்கி இருக்கா.பணத்தை கொடுத்துக் கழிக்கிறாளா?படுத்துக் கழிக்கிறாளா?



 தமிழ் படம் ஏதாவது பார்த்திருப்பாரோ டைரக்டர் என சந்தேகப்படும் அளவு ஏகப்பட்ட தமிழ்ப்பட ஃபார்முலாக்கள் ஆங்காங்கே.
படத்தின் ஹீரோயின் நிலாப்பெண்ணே பட ஹீரோயின் திவ்யபாரதியின் சாயலில் இருக்கிறார்,மாசு மரு இல்லாத,மச்சம் ஒன்றைக்கூட சருமத்தில் மிச்சம் வைக்காத அழகு முகம்.செர்ரிப்பழங்களை தோற்று விடச்செய்யும் அழகு சிவப்பில் அதரங்கள்.உடல்நிலை சரி இல்லாத காதலனாக இருந்தாலும் எஸ்கேபாகாமல் கடைசி வரை கூடவே இருந்து கவனித்துக்கொள்ளும் கதாபாத்திரம்.மிக நன்றாக செய்திருக்கிறார்.


மருத்துவ சிகிச்சைக்கான செலவுப்பணத்துக்கு அவள் விலைமகளாக பணி புரிந்துதான் பணம் ஈட்டுகிறாள்ள் என்பதை மிக நாசூக்காக ,ஒரே ஒரு லாங் ஷாட்டில் 2 செகண்டில் சொல்லி விடுவது டைரக்டரின் சாமார்த்தியம்.படத்தின் டைட்டில் போடும்போது திரைக்கதை என்ற லிஸ்ட்டில் 6 பேர் பெயர் வருகிறது.எனக்குத்தெரிந்து எந்த தமிழ்ப்படத்திலும் அப்படி வந்ததாக வரலாறே இல்லை.இருக்கவே இருக்காங்க  அப்பாவி  உதவி டைரக்டர்கள் குழு.


படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய 2 முக்கிய மைனஸ்கள்-

1.ஒளீப்பதிவு. மகா மட்டம்.தன்னை மேதை எனவும் ,ஆடியன்ஸை முட்டாள் எனவும் நினைக்கும் ஒரு ஒளிப்பதிவாளர்தான் இப்படி மோசமாக பணீயாற்ற முடியும்.லைட்டிங்க் அடிப்பது பார்ப்பவர் கண்களை உறுத்துகிறது.படம் பார்ப்பதற்குள் கண் வலி வந்துவிடும் போல.


2.பின்னணி இசை.என்னதான் சண்டைப்படமாக இருக்கட்டும்.இப்படியா டம் டம் டமால் டமால் என 2 மணி நேரம் நான் -ஸ்டாப் ஆக இசை அமைப்பது?


காதலனான அண்ணன் ஹாஸ்பிடல் பெட்டில். (HOSPITAL BED)காதலனின் தம்பி அதே முகச்சாயல்.கூடவே தங்க,பழக வேண்டிய சூழல் ,இவை அனைத்தையும் பிரமாதமாக கண்களில் வெளீப்படுத்தி கோல் போட்டிருக்கிறார் ஹீரோயின்.ஆனால் இருவரும் இணையும் காட்சிக்கான லீட் ஜீன் கிளாட் வேண்டம்மின் ஹார்டு டார்கெட்டிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.


மாற்றான் தோட்டத்து மல்லிகையை மணம் நுகரும் மசாலாக்காட்சியைக்கூட அழகியல் உணர்வு வெளிப்படுவது மாதிரி எடுத்தது  சபாஷ் டைரக்டர் என சொல்ல வைக்கிறது,



மேற்கூறிய காட்சிகளில் கத்திரியுடன் அத்து மீறி நுழைந்து முக்கியமான சீன்களை கட் செய்த இந்திய சென்சார் குழுவை அகில இந்திய அஜால் குஜால் சீன் பட ரசிகர் மன்றம் இளைஞர்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறது.



படத்தின் நீதி -பணத்திற்காக வாழ்க்கையைத்தொலைக்கிறோம்.அது தெரிவதற்குள் நமக்கு வாழ்க்கை முடிந்து விடுகிறது.


கேப்டன் போடும் கணக்கு

ஆர்.டி.ஓ ஆஃபீசருக்கும்,விஜய்காந்த்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.என்ன அது?
ஆர்.டி. ஓ ஆஃபீசர் 8 போட்டு காட்ட சொல்வார்.விஜய்காந்த் 8 % ஓட்டு கைவசம் இருக்கு என்பார்.
இது பழைய கணக்கு.இப்போது இவரின் ஓட்டு 12.8 %.தி.மு.க,அ.தி.மு.க,காங்கிரஸ் போன்ற பாரம்பரியமான கட்சிகள் பல வருடங்களாக கட்டிக்காத்து வந்த தொண்டர்கள்,மக்கள் ஆதரவு,ஓட்டு வங்கி இவை அனைத்தையும் குறுகிய காலத்தில் அசைத்துப்பார்க்க ஆயத்தமானவர்.
கே.பாக்யராஜ்,டி.ராஜேந்தர்,சிவாஜி போன்றவர்கள் சினிமா புகழில் வந்த செல்வாக்கை அரசியலில் புகுத்தி தனிக்கட்சி தொடங்கிய போது மக்கள் ஆதரவு பெரிய அளவில் கிடைக்கவில்லை.ஆனால் விஜய்காந்த் தனி ரகம்.

தி.மு.க,அ.தி.மு.க 2 கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என துணிந்து கருத்து கூறினார்.இவர் ஒரு குடிகாரர் என ஜெ கூறிய போது அருகில் இருந்து ஊற்றிக்கொடுத்தாரா எனக்கேட்டு அதிர வைத்தார்.
இவர் போகும் இடங்களெல்லாம் கூட்டம் கூடினாலும் ,கலைஞர் சொல்வது போல் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது.
 எம் ஜி ஆர்க்குப்பிறகு எந்த நடிகரும் அரசியலில் வென்ற சரித்திரம் இல்லை என கலைஞர் நினைக்கிறார்.விதிவிலக்காக விஜயகாந்த் திகழ ஒரு வாய்ப்பு இருப்பதாக அவரது ரசிகர்கள் நினைக்கிறார்கள்.பொதுவாக நடிகர்களின் 100வது படம் ஹிட் ஆவதில்லை.(விதிவிலக்கு எம்.ஜி ஆரின் ஒளிவிளக்கு,சிவாஜியின் நவராத்திரி)ரஜினி சம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுத்த ஸ்ரீ ராகவேந்திரர்,கமலின் முதல் சொந்தப்படமான ராஜபார்வை,சத்யராஜின் சொந்தப்படமான வாத்தியார் வீட்டுப்பிள்ளை 3 படங்களும் அவரவரின் 100வது படம்தான்.3மே தோல்விப்படங்கள்.ஆனால் விஜயகாந்த்தின் 100வது படம் கேப்டன் பிரபாகரன் சூப்பர் ஹிட் படம்.அதற்கும்,அரசியலுக்கும் என்ன சம்பந்தம் என கேட்டால் அவரது ரசிகர்கள் சினிமாவில் விதிவிலக்காக 100வது படத்தை வெற்றிப்படமாக்கியவர்ரால் அரசியலிலும் ஏன் வெற்றி பெற முடியாது என்கிறார்கள்.
நடுநிலையாளரும்,சிறந்த அரசியல் நையாண்டி பத்திரிக்கையாளருமான சோ அவர்கள் ஒரு வாசக்ரின் கேள்விக்கு அளித்த பதில் சிந்திக்க வைக்கிறது.
கே- 2011 சட்ட மன்றத்தேர்தலில் அ.தி.மு.க + ம தி மு க + காங்கிரஸ்+ தே மு தி மு க + கம்யூனிஸ்ட் கூட்டணி அமைந்தால் அந்தக்கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?
ப- அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் அது கூட்டணி அல்ல.அதுதான் அசெம்ப்ளி.
அவரது கருத்து சரிதான்.ஏனெனில் அரசியலில் அரித்மேட்டிக் கால்குலேஷன் இருக்கிறது.ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீத ஓட்டு உண்டு.

அ.தி.மு.க 26 %,  தி. மு.க 28 %,காங்கிரஸ் 20 %.,பா ம க 4 %,ம தி மு க 3%, என ஒரு கால்குலேஷன் உண்டு.கலைஞர் சிறந்த ராஜ தந்திரி என்பதால் சோ நினைப்பது போல் ஒரு கூட்டணி அமைக்க விடமாட்டார்.
விஜயகாந்த் நினைப்பது என்ன?தி மு க கூடவோ,அ.தி.மு.க கூடவோ கூட்டணி வைத்தால் அதிக பட்சம் 25 சீட் தான் கிடைக்கும்.அதுவே காங்கிரஸ் கூட தனியாக கூட்டணி வைத்தால் 50 % சீட் நிச்சயம்.கட்சியை வளர்த்து விடலாம்.
ராகுல்காந்தி அதேபோல் காங்கிரசை தனிப்பெரும் சக்தியாக வளர்க்க நினைப்பதால் எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் ராகுல் விஜய்காந்த் கூட்டணியில் ஆர்வமாக உள்ளார்.பொதுவாக ஜெ யாரையும் மதிக்க மாட்டார் என்ற பேச்சு முத்துசாமி கட்சியை விட்டு விலகியபோது நீர்த்துப்போனது.எப்போதுமில்லாத அதிசியமாக “எப்போது வேண்டுமானாலும் கட்சியினர் என்னை சந்திக்கலாம் எனக்கூறி அ தி மு க தொண்டர்கள் மனதில் ந்ம்பிக்கையை விதைத்தார்.
மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.விஜயகாந்த் தனியாக நின்றதால் கிடைத்த 12% ஓட்டுகள் தி மு க வுடனோ,அ தி மு க வுடனோ கூட்டணி வைத்தால் அதே அளவு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.
எனவே இப்போது இருக்கும் நிலவரப்படி விஜயகாந்த் காங்கிரஸ் உடன் கூடணி காண்பதே அவரது கட்சி வளர்ச்சிக்கு நல்லது.ஆனால் 50 வருடங்களுக்கு மேல் பொது வாழ்க்கையில் அனுபவம் நிறந்த கலைஞர் அதற்கு வழி விடுவாரா என்பதில்தான் கேப்டனின் எதிர்காலமும் ,தமிழக அரசியலின் போக்கும் தீர்மானிக்கப்படும்.
பி.கு-என்னைப்பொறுத்தவரை அவர் அரசியலில் பிரகாசிப்பதே நல்லது ஏன் எனில் எங்கள் ஆசான்,சபரி,காந்தி பிறந்த மண் மாதிரி படங்களில் அவரைப்பார்ப்பதற்கு அது ஒன்றும் மோசம் அல்ல.

Friday, August 06, 2010

பாணா காத்தாடி - சினிமா விமர்சனம்

படத்தோட ஓப்பனிங்கே நெத்திஅடி.அதாவது ஆர்.பாண்டியராஜனின் நெத்தியடி படத்திலிருந்து பட்டம் பறப்பதை பின் தொடர்ந்து ,துரத்தி ,படாத பாடு படுத்தி காமெடி பண்ணி இருப்பாங்களே அந்த சீனை அப்படியே சுட்டு நான் மகான் அல்ல என நிரூபித்து இருக்கிறார் டைரக்டர்.



காத்தாடிக்கு எல்லை கிடையாது. எதைப் பற்றியும் கவலை இல்லை. காற்று போகிற போக்கில் சுற்றிக்கிட்டே இருக்கும். காற்றுதான் காத்தாடியோட வாழ்க்கையை தீர்மானிக்கிறது. அது மாதிரி சூழ்நிலைகளால் திசை மாறித் திரியும் ஒரு இளைஞனின் கதைதான் இது.


மேலே குறிப்பிட்ட 4 லைன் படம் பூஜை போடறப்ப புரொடியூஸரிடம் டைரக்டர் சொன்னது.லாஜிக்,நம்பகத்தன்மை,திரைக்கதை திருப்பம்,தமிழ் ரசிகனின் விசாலமான ரசனை என  எதைப் பற்றியும் கவலை இல்லாமல் டைரக்டர் தன் இஷ்டத்துக்கு படம் எடுத்து இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.


அழகு ஓவியமாய் ,18 வயசு பர்பி பொம்மை மாதிரி வருகிறார் விண்ணை தாண்டி வருவாயா செகண்ட் ஹீரோயின் சமந்தா.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பிஸியாக இருக்கிற சமந்தா இந்தப்
படத்தில் பணக்கார வீட்டுப் பெண்ணாக வருகிறார்.



அதர்வாவுக்கும்,சமந்தாவுக்கும் பாடி கெமிஸ்ட்ரி நல்லாவே ஒத்துப்போகுது.ஏ ஆர் முருகதாஸ்+சந்தானம் 2 பேரின் கலவையாய் முகச்சாயலில் வரும் அதர்வாவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.


அக்னி நட்சத்திரம் படத்தில் ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா பாட்டுக்கான அதே லீடு இந்தப்படத்தில் வரும் முதல் பாட்டுக்கும். டைரக்டர் சார்,சொந்தமாக யோசிங்க சார்.



ஹீரோவின் அம்மாவாக மவுனிகா.பாலுமகேந்திரா பார்த்தால் ரொம்ப வருத்தப்படுவார்.


படத்தில் தேவையா என சிந்திக்கும் அளவு 2 முக்கிய காட்சிகள்.பட்டம் விடும் ஹீரோ(இந்தக்காலத்துல யார் சார் பட்டம் எல்லாம் விடறாங்க?ஃபிகருங்களுக்கு நூல்தான் விடறாங்க.).ரசிகர்களிடம் அவ்வப்போது க்ளாப்ஸ் வாங்குவதற்காக்வே ரஜினி பட க்ளிப்பிங்க்ஸ்.



ஓக்கே,படத்தோட கதை என்ன?ஹீரோவுக்கும்,ஹீரோயினுக்கும் மோதல்,அதன் பின் காதல்,பின் ஊடல் ,அதற்குப்பின் நம் பொறுமையை சோதிக்கும் வண்ணம் க்ளைமாக்ஸ்.வெரைட்டி காண்பிக்காவிட்டால் மணிரத்னமே மண்ணைக்கவ்வும் காலம் இது.



படத்தில் வசன்கர்த்தா கவனிக்க வைக்கிறார்.



”நல்லவங்களுக்கு மட்டும்தான் அழுகை வரும்.”




”சண்டைல காதல் வரலாம்.ஆனா காதல்ல சண்டை வரக்கூடாது”



”தோற்கும்போது ஏற்படற வலி பெரிசில்லை,அப்போ அதையும் தாங்கிக்கிட்டு சிரிக்கிறதுதான் பெரிசு.”


அதே சமயத்தில் படத்தில் கருணாஸ் வரும் ஆரம்பக்காட்சிகளில் (போரிங் பைப்பில் தண்ணீர் அடிக்கும் சீன்) வசனங்கள் பச்சை.
.ஆனால் அதற்குப்பரிகாரமாக போலீஸ் ஸ்டேஷன் காமெடியில் கருணாஸ் கலக்கி இருக்கிறார்.

டேய்,இவன் மேல 60 வயசு கிழவி ரேப் கேஸ் ஒண்ணு ரொம்ப நாளா பெண்டிங் இருக்கே அதை எழுது.



ஐயா வேணாம்,எங்கப்பா கமிஷனர் ஆஃபீஸ்லதான் இருக்கார்


அப்படியா? என்னவா?

விசாரணைக்கைதியா.

30 வருஷமா அம்மா வளர்த்துட்டாங்க,அடுத்து ஒயிஃப்,15 வருஷம் போயிட்டா மக்னோ ,மகளோ வந்து காப்பாத்தட்டும்.இப்படியே காலத்தை ஓட்டிட வெண்டியதுதான்.



ஹீரோயின் சேரி ஜனங்களை கேவலமாக திட்டும் சீன் படத்துக்கு தேவை இல்லாதது.அதே போல் ஹீரோ பார்க்க கம்ப்யூட்டர் புரோகிராமர் மாதிரி இருக்கிறார்,அவரைப்போய் சேரிப்பையன் என்பது நம்பும்ம்படி இல்லை.



ஹீரோயின் லவ்வை சொல்லும் சீன் டிரமாட்டிக்காக இருந்தாலும் தியேட்டரில் டாக்குமெண்ட்ரி படம் மாதிரி எடுத்து வந்து ஹீரோவுக்கு போட்டுக்காட்டுவது ரசிக்க வைக்கிறது.


இண்ட்டர்வல் ட்விஸ்ட்டுக்காக சொல்லப்பட்ட காதலிக்கு கிஃப்டாக காண்டம் குடுக்கும் அதிர்ச்சி காட்சி நம்பகத்தன்மை 0%.என்னதான் ஒருவன் அவசரத்தில் இருந்தாலும் காத்லிக்கு பரிசை அப்படி மாற்றிக்குடுக்க நினைப்பானா?
அதை தொடர்ந்து வரும் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளில் இன்ஸ்பெக்டர் ஹீரோவிடம் டெமோ பண்ணி காண்பி என சொல்வது ரொம்பவே ஓவர்.
படத்தின் கதைக்களம் திடீர் என குஜராத் போவது காதில் பூ சுற்றும் வேலை.
பாடல் காட்சிகளில் ஒளீப்பதிவாளர் உள்ளேன் ஐயா சொல்கிறார்.
தாக்குதே கண் தாக்குதே….,
என் நெஞ்சில்… என பாடல்கள்ஏற்கனவே
ஹிட்டாகி விட்டது.
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ். “பாணா காத்தாடி’ படத்தின் இயக்குநர். திரைப்படக் கல்லூரி மாணவர்.  ஹிட் படங்களின் காட்சிகளை எப்படியாவது திணீத்து விட வேண்டும் என நினைத்து ஒர்க் பண்ணி இருப்பது மைனஸ்.

டி பி கஜேந்திரன் சர்ட் பாக்கெட்டில் பணம் வைத்து விட்டு படுப்பதும்,அதை தொடர்ந்து அதை கருணாஸ் தேடுவதும்,கடைசியில் அது கருணாசின் பேண்ட் பாக்கெட்டில்லேயே இருப்பதும் 1980 களில் வந்த காமெடிதான்.


ஹீரோயின் திருந்தி வலிய வந்து காதலை சொல்லும்போது ஹீரோ ஏற்றுக்கொள்ளாமல் முறுக்கிக்கொள்வது நமக்கு எரிச்சலையே தருகிறது.
பிரசன்னா சத்யா கமல் கெட்டப்பில்,வந்து ரவுடி கேரக்டர் பண்ணுவது நல்ல பர்ஃபார்ம் தான் என்றாலும் எடுபடவில்லை.



சத்யஜோதி ஃபிலிம்ஸுக்கு ஒரு செண்ட்டிமெண்ட்ஸ் உண்டு.அது க்ளைமாக்ஸ் காட்சி சோகமாக இருக்க வேண்டும்.ஆனால் இந்தப்படத்தில் அந்த ஆண்ட்டி க்ளைமாக்ஸ் எடுபடவில்லை.(படம் மட்டும் எடுபட்டுச்சா என ஆடியன்ஸ் தரப்பு முணுமுணுப்பு).


பி.கு-(படத்தில் மேலே கண்ட ஹீரோயின் குளியல் ஸ்டில் படத்தில் இடம் பெறவில்லை.போஸ்டர் அட்ராக்‌ஷனுக்காக எடுக்கப்பட்டது.)

Thursday, August 05, 2010

தல தலயா அடிச்சுக்கிட்டேன் யார் கேட்டா..? இப்போ பாருங்க...

நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய மெயில் இது.இந்தியாவுல ஏன் இவ்வளவு பிரச்சனை இருக்கு தெரியுமா?னு கேட்டு அதைப்பற்றி காமெடியா ஒரு விளக்கம் கொடுத்திருக்காங்க.தேவைப்பட்ட இடத்துக்கு மட்டும் தமிழ்ல மொழி பெயர்த்திருக்கேன்.ஒரு வெளை இதை ஏற்கனவே பார்த்திருந்தால் ரிப்பீட் ஆடியன்ஸாக ரசிக்கவும்.

இந்தியாவின் மக்கள் தொகை 110 கோடி,அதுல 9 கோடி பேரு ரிட்டயர் ஆகிட்டாங்க.37 கோடி பேரு மாநில அரசில் பணி புரிகிறார்கள்.20 கோடி பேரு நடுவண் அரசில் பணி புரிகிறார்கள்.(மத்திய அரசுன்னு சொன்னா டாக்டர் ராம்தாஸ்க்கு கோபம் வந்துடும்.)

2 பிரிவுலயும் யாரும் வேலை செய்யறதில்லை. ஐ டி ல (அதாவது தகவல் தொழில் நுட்பம் எனப்படும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி )1 கோடி பேரு இருக்காங்க.ஆனா அவங்க இந்தியாவுக்காக வேலை செய்யறதில்லை.25 கோடி பேரு ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ். 1 கோடி பேரு குழந்தைங்க.(5 வயசுக்கும் கீழ).15 கோடி பேரு வேலை இல்லா பட்டதாரிகள்.1 கோடியே 20 லட்சம் பேரு எப்பவும் ஹாஸ்பிட்டலே கதினு இருக்காங்க.79,99.998 பேரு ஜெயில்ல களி சாப்பிட்டுட்டு இருக்காங்கன்னு ஒரு நிலையியல் புள்ளி விபரம் சொல்லுது.மிச்சம் இருக்கறது நீயும் ,நானும் மட்டும்தான்.நீ  வெட்டியா மெயிலை படிச்சுட்டு ,அதை ஃப்ரண்ட்ஸ்க்கு ஃபார்வர்டு பண்ணிட்டு இருக்கே.நான் மட்டும் தனியா இந்தியாவை எப்படி காப்பாத்தறது?அதான் மடேர் மடேர்னு தலைல அடிச்சுக்கறேன்.

Why INDIA is in trouble.....


Population: 110 crore






9 crore retired 
[][][][][]
37 crore in state Govt; 


20 crore in central Govt. 


(Both categories don't work) 
[][]




1 crore IT professional (don't work for India ) 
[][][][]




25 crore in school 
[][][]




1 crore are under 5 years 




[][]




15 crore unemployed 




[][][]




1.2 crore u can find anytime in hospitals 
[][][][][][]




Statistics says u find 79,99,998 people anytime in jail 




The Balance two are U & Me. 


U are busy " checking Mails /sending fwds.. "..!! 
[][][][][][]












HOW CAN I HANDLE INDIA alone? 


[]



- பி.கு-இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பதிவிடப்படவில்லை.