ஆனந்தவிகடன் பத்திரிக்கை உலகின் ஜாம்பவான் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது.பல எழுத்தாளர்களை அது இலக்கிய உலகிற்கு அளித்துள்ளது.சினிமாத்துறையில் உள்ள ஷங்கர்,மணிரத்னம் போன்ற பெரிய இயக்குனர்கள் கூட விகடனில் சினிமாவிமர்சனம் படிக்கத்தவறுவது இல்லை.
விகடனில் ஒரு படம் 40 மார்க் வாங்கி விட்டால் அந்தப்படம் தேறி விடும் என்று ஒரு பேச்சு திரை உலகில் உண்டு.
உதிரிப்பூக்கள்(65 மார்க்),நாயகன்(60 மார்க்)அஞ்சலி,பசங்க (50 மர்க்) என சொல்லிக்கொண்டே போகலாம்.அவ்வளவு ஏன் அமரர் சுஜாதா கற்றதும் பெற்றதும் கட்டுரையில் ஏழைதாசன் என்ற சிற்றிதழை பற்றி ஒரு வார்த்தை எழுதினார்.அதுவரை 500 பிரதிகள் மட்டும் விற்ற புத்தகம் அந்த வாரம் மட்டும் 2400 பிரதிகள் விற்றது.வாரா வாரம் வியாழன் அன்று வெளியாகும் அது கிட்டத்தட்ட 7 லட்சம் பிரதிகள் வெளீயாகி 10 லட்சம் மக்களை சென்றடைகிறது.
அப்படிப்பட்ட இதழில் நாளை வெளிவரப்போகும் இதழில் சிறந்த 5 வலைப்பூ எழுத்தாளர்கள் பற்றி ஒரு கட்டுரை மினி பேட்டியுடன் வருகிறது.
1.கேபிள் சங்கர்-இயற்பெயர் சங்கரநாராயனன்.இவ்ர் சினி ஃபீல்டில் காலடி எடுத்து வைக்க பிளாக்ஸ்பாட் உத்வி இருப்பதாக பேட்டியில் கூறி உள்ளார்.
2.பரிசல்காரன் -இயற்பெயர் கே.பி.கிருஷ்ணகுமார்.திருப்பூர்.நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவரான இவர் ஆரம்ப காலத்தில் பத்திரிக்கைகளில் முத்திரை பதித்தவர்.
3.விக்னேஷ்வரி -பெண்களுக்கான சரியான உபயோகமான துறை வலைப்பூ என பேட்டியில் தெரிவித்துள்ளார்
4.சுந்தர்ராஜன் - இவர் மக்கள் சட்டம் என்ற வலைப்பூ நடத்தி மக்களுக்கு சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஊட்டி வருகிறார்.
5. தீபா-இவர் தனது பேட்டியில் தனது வலைப்பூ பெயரை குறிப்பிடவில்லை.
ஆனந்த விகடன் கவுரவித்த இவர்களை நாமும் வாழ்த்துவோம்.