Showing posts with label TWITTER. Show all posts
Showing posts with label TWITTER. Show all posts

Wednesday, October 31, 2012

என்னை கவர்ந்த பிரபல ட்விட்டரின் கடிதம்

வசந்த் (@)

தோழர் சதீஷுக்கு வணக்கம்,

நான் நேற்று உங்களுடனான உரையாடலை தொடங்கியதற்கு காரணம் நீங்கள் அச்சமயத்தில் எழுதிய ட்வீட் மட்டுமல்ல,அதற்கு முன் நீங்கள் எழுதிய தமிழ் டிவிட்டர்கள் மற்றும் பாடகி சின்மயிக்கு இடையேயான பிரச்சனை பற்றிய பதிவும் கூட. அது ஒரு நடுநிலைமை பார்வையாக எனக்கு தெரியவில்லை, அதற்காக நீங்கள் இந்த விசயத்தில் நடுநிலைமையுடன் தான் இருக்கவேண்டும் என்பது என் விருப்பமும் அல்ல.


முதலில்,நாகரீகம் மட்டும் கட்டுபாட்டுடன் கூடிய கருத்துச் சுதந்திரம் என்பது இணையத்தில் எதிர்பார்க்ககூடாது என்பதே எனது கருத்து. இவ்வாறு ஏன் கருதுகிறேன் என்றால் நான் முன்னொரு முறை சொன்னது போல் நாகரீகம் என்பது நபருக்கு நபர் மாறுபடக்கூடியது, கரண்டி மூலம் மட்டுமே உணவை உண்ணும் மக்கள் பெருகிவிட்ட இன்றைய நிலையில் கையினால் பிசைந்து உணவை உண்பவர்கள் நாகரீகம் அற்றவர்களாகவே பார்க்கப்படுகின்றனர்.




ஆனால் இதில் உள்ள நியாயம் இருவருக்கும் வெவ்வேறானது. ஒருவரின் நாகரீகமானது அவரின் கடந்து வந்த வாழ்க்கை, பொருளாதார சூழல், சுற்றி உள்ள மனிதர்கள் என்று பல காரணிகளால் ஆளுமைக்கு உட்படுத்தப்படுகிறது. உதாரணமாக இன்வர்ட்டர் & ஜெனரேட்டர் போன்ற கருவிகள் உடைய பணக்காரர் மின்வெட்டு ஏற்படுகையில் அலட்டிக் கொள்ளமாட்டார், ஆனால் உடல் உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் ஏழை,ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுக்கு அடியில் ஒற்றை மின்விசிறியின் துணையால் காற்று வாங்கிக் கொண்டிருக்கும்போது மின்வெட்டு ஏற்ப்பட்டால் வட்டாரவழக்கை தான் துணை கொள்வார், இவர்களுக்கு இடையேயான பொருளாதார வித்தியாசத்தை கணக்கில் கொள்ளாதவர்கள் பின்சொன்னவரின் வட்டார வழக்கை மட்டும் குற்றம் சொல்வது நியாயமே கிடையாது.



அதுமட்டுமல்ல வட்டார வழக்கு என்பது எங்கெங்கும் நிறைந்து உள்ளது, அதை பல பெண்கள் உபயோகிப்பதை கூடக் கண்டிருக்கின்றேன், நண்பர்களுக்கு இடையே இதுபோன்ற வட்டார வழக்கு சொற்கள் வெகு இயல்பாக புழங்கும். புத்தகங்களில் இல்லாத வட்டார வழக்கு வார்த்தைகளா ? எத்தனை எழுத்தாளர்கள் அத்தகைய வார்த்தைகளை உபயோகிக்காமல் எழுதி உள்ளார்கள் என்று யோசியிங்கள்? பத்திரிக்கைகள்,சினிமாக்கள் மற்றும் டிவிக்களும் தன் பங்கிற்கு நாகரீக மீறல்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. நிற்க. ஒரு அரசியல் கட்சி தலைவரை ஒருவர் திட்டுவது என்பது சொந்தக் காரணத்திற்க்காகவா ?




 ஒரு சாதாரண பொதுஜனமாக,அரசியல்வாதிகள் தொடர்ந்து செய்து வரும் அத்துமீறிய அநியாயங்களை எவ்வாறு கண்டிப்பது? அவர்களிடம் நேரில் சென்று நீதி கேட்பதோ,அவர்கள் மேல் வழக்கு தொடர்வதோ எத்தனை பேரால் முடியும் ? ஒருபுறம் அரசியல்வாதிகளின் சகிக்கமுடியாத அநீதிகள் மறுபக்கம் அதை தட்டிக் கேட்க்க முடியாத சூழ்நிலை, இத்தகைய நிலையில் ஒரு மனிதன் வெடித்து பேசத்தான் செய்வான், இதில் அவன் பேச்சை மட்டும் குற்றம் சொல்வது நியாயமே இல்லை. இவ்வாறு வெடித்து பேசாதவர்களும் இருக்கிறார்களே எனக் கேட்கலாம், அவ்வாறு பேசாதவர்களில் பெரும்பான்மையினர் மேட்டுக்குடியினர், பொதுப் பிரச்சனைகளால் பெரிய அளவில் பாதிக்கப்படாதவர், அதனால் இவர்களை உதாரணமாக எடுத்துக் கொள்வது சரியல்ல.




நீங்கள் நம்பும் நாகரீக மனிதர்களும் உணர்ச்சிவசப்படும்போது நாகரீகத்தை உடைத்தே வெளிவருகிறார்கள், நமக்கு தெரிந்த உதாரணமான மாயவரத்தானை எடுத்துக் கொள்ளுங்கள், அவர் மற்றொருவரை மிக ஆபாசமான வார்த்தையால் வசை பாடினார், காரணமாக அந்த நபர் மட்டும் திட்டலாமா என்று கேட்டார். இதுதான் அனைத்து மனிதர்களின் நிலையும், இங்கு யாராலும் ஒரு கட்டத்துக்கு மேல் நாகரீகத்தை கடைபிடிக்க முடியாது. பாதிப்பை பொறுத்தே நமது நாகரீகம் நிக்கும் மற்றும் நிலைக்கும். பிரபல பின்னணி பாடகி சின்மயி ஆங்கிலத்தில் பல வசை சொற்களை தொடர்ந்து பயன்படுத்தி கொண்டே தான் இருக்கிறார் (WTF, Shit, Bullcrap, முதலியவை)





அதுமட்டுமில்லாமல் அவர் என்ற ஐடியில் இருந்து வரும் ட்வீடுக்களை RT செய்திருக்கிறார். அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இவ்வளவு ஏன் மகேஷ் மூர்த்தி சின்மயியை சில ஆங்கில வன் சொற்களால் திட்டி உள்ளார்(Idiot, Fool). இதை சின்மயியோ அவரை ஆதரிப்பவர்களோ கூட கண்டுகொள்ளவில்லை. இதன் மூலம் நாம் உணர்வது ஆங்கிலத்தில் பேசும்போது நாகரீகம் தேவையில்லை ஆனால் தமிழுக்கு மட்டும் அது கட்டாயத்தேவை என்பதே. இதை ஏற்றுக்கொள்பவர்கள் பற்றி எனக்கு கவலை இல்லை ஆனால் நான் இதை ஏற்றுக்கொள்ளமுடியாது.




இங்கு பெரும்பாலான இடங்களில் மற்றும் சமயங்களில் கருத்து சுதந்திரம் இல்லாமல் தான் இருக்கிறோம். பள்ளி மற்றும் கல்லூரிகளை எடுத்துக் கொள்ளுங்கள், அங்கு ஒரு ஆசிரியர் தவறு செய்யும் போது அதை சுட்டிக்காட்டினால் அதன் பலன் என்னவாக இருக்கும், அந்த ஆசிரியர் தமது பலத்தை தவறாக உபயோகித்து நம்மை சஸ்பென்ட் செய்வது, பெற்றோரை கூட்டி வரச்சொல்வது, இன்டர்னல் மார்க்கில் கை வைப்பது போன்றவையை செய்கிறார்.




 அலுவலகங்களில், அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி வேலை செய்யச்சொல்லப்படும்போது எதிர்த்துக் கேட்டால் அப்ரைசல் சமயங்களில் "கவனித்துக்" கொள்ளப்படுகிறோம். சொந்த வேலைக்காக பிற அலுவலகங்களுக்கு செல்லும்போது அங்கு நம்மீது காட்டப்படும் அலட்சியங்களை சகித்துக்கொள்கிறோம். ஏன் குடும்பத்திலே தந்தைக்கோ, தாய்காகவோ, சகோதர சகோதரிக்காகவோ, வாழ்க்கை துனைக்காகவோ நாம் அடங்கிச் சென்றுகொண்டுதான் இருக்கிறோம். பின்பு எங்குதான் நாம் நம்மை சுதந்திரமாக வெளிப்படுத்தி கொள்வது, அதற்கு நமக்கிருக்கும் ஒரே வாய்ப்பு இந்த இணையம் தான்.இங்கும், நாம் நியாயம் என்று நினைப்பதுவே உலகப்பொது நியாயம் என்று நினைப்பவர்களால் அடக்கி வைக்கப்பட்டுக் கொண்டிருப்பது மிகவும் கொடுமையானதென்றே நான் நினைக்கிறன்.



உங்களின் மற்றொரு கருத்தான ஒருவரைப்பற்றி விமர்சனம் வைக்கும்போது அதற்கான ஆதாரம் இருத்தல் வேண்டும் என்பதும் என்னால் ஏற்கமுடியவில்லை. 2G ஊழலிலும் நிலக்கரி ஊழலிலும் சில அரசியல் கட்சிகள் சம்மந்தப்பட்டிருப்பதாக எனக்கு தோன்றுகிறது ஆனால் அதற்க்கான ஆதாரம் என்னிடம் இல்லை ஆதலால் இந்த விசயங்களை நான் இணையத்தில் பகிர்ந்தால் சம்பந்தப் பட்டவர்கள் என் மேல் வழக்குப்பதிவது நியாயமே என்பது என்ன மாதிரியான நியாயம் என்று எனக்கு புரியவில்லை. அப்பேர்ப்பட்ட ஆதாரங்கள் என்னிடம் இருந்தால் நான் நேரிடையாக நீதிமன்றத்துக்கு சென்று வழக்குபதிந்து விடமாட்டேனா? அதைவிட்டு இணையத்தில் எதற்காக புலம்பப்போகிறேன்? டீக்கடை விவாதத்தை கவனித்திருக்கிறீர்களா, அங்கு பல விசயங்கள் பேசப்படும், பேசுபவர்கள் பெரும்பாலும் நடுத்தரத்துக்கு குறைந்த பொருளாதார நிலை உடையவர்களாகவே இருப்பார்கள். அவர்களையும் அவ்வாறு பேசாமல் இருக்க ஏதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்றால் எதுவும் இல்லை. ஆனால் அது போன்ற விவாதத்தை இணையத்தில் சராசரி மற்றும் அதுக்கும் மேலுள்ள பொருளாதார நிலை உள்ளவர்கள் பேசினால் இந்த அரசாங்கத்துக்கு பிடிக்கவில்லை.



அதுக்கு காரணம் இத்தகைய சராசரி மக்கள் தங்களை தாண்டி எதையும் பார்க்கும் திறன் இல்லாமலே இருந்திருக்கிறார்கள், அதனாலேயே இந்த அரசாங்கம் பல தவறுகளை துணித்து செய்து கொண்டிருக்கிறது, இந்த நிலையில் இந்த சராசரி மனிதர்கள் உலகத்தை புரிந்துகொள்வதில் உள்ள ஆபத்தை இந்த அரசாங்கம் பயத்துடன் கவனிக்கிறது, இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற முடிவுக்கு வருகிறது, அதன் காரணமாகவே சில நாட்களுக்கு முன் ட்விட்டரை தடை செய்யவேண்டும் என்ற பரிசீலனையை முன்வைத்தது. இப்போது சைபர் கிரைம் மூலமாக சில கைதுகளை நிகழ்த்தி மக்களை பயமுறுத்துகிறது.




சரி,அப்பிடியே இணையம் மூலம் செய்யப்படும் தனிப்பட்ட அவதூறுகளை கண்டிக்கும் விதமாக இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கும்பட்சத்தில் அதனால் அனைவரும் பயன் அடைவார்களா என்று பார்த்தால் அதற்கான பதிலும் சந்தேகமே. உங்களையோ என்னையோ ஒருவர் திட்டிவிடுகிறார் என்று வைத்துகொள்வோம் நாம் சென்று சைபர் கிரைமில் புகார் குடுத்தால் அவர்கள் நியாயமான முறையில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நினைகிறீர்களா? இப்பொழுது சின்மயி சொன்ன கருத்தை எடுத்துக்கொள்வோம், இப்பொழுது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு சரியானது இல்லை என்று சொல்கிறார்.




 இவருக்கு இட ஒதுக்கீட்டு பற்றி முழுவது தெரியுமா இல்லை இவர் கூறிய கருத்துக்கு ஏதேனும் வலுவான ஆதாரம் இவரிடம் உள்ளதா ? இது கட்டாயம் என்னை பாதிக்கிறது, எனவே நான் இதை எடுத்துக்கொண்டு சைபர் கிரைம்முக்கு செல்வது தான் சரியா ? அப்பிடி நான் சென்றால் நியாயமான நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுமா ? இதை பற்றி உங்களுடைய கருத்து எப்படிப்பட்டது என தெரியவில்லை ஆனால் நான் தெளிவாக நம்புவது இந்த சட்டமும் நடவடிக்கையும் தங்களின் செல்வாக்கை தவறாக பயன்படுத்தி அடுத்தவர்களை அடக்குபவர்களுக்கு மட்டுமே உரியது என்பதே.




நான் கடேசியாக சொல்ல விரும்புவது என்னவென்றால், மேலே நான் குறிப்பிட்ட அணைத்து கருத்துகளும் இந்த இணைய வசதியினால் நான் மற்றவர்களிடமிருந்து உள்வாங்கிக் கொண்டவையே. இந்த வரம்பற்ற இணையம் இல்லை என்றால் இது சாத்தியப்பட்டு இருக்காது. நீங்கள் நியாயம் என நினைக்கும் கருத்தடக்கும் சட்டப் பாய்ச்சலினால் இவை போன்ற கருத்துபகிர்வுகள் சாத்தியம் இல்லாமல் போய்விடும். அது ஆரோக்கியமற்றது சகோ, தொடர்ந்து பல சமூக விசயங்களை பகிரும் நீங்களுமா இதற்கு ஆதரவாக இருக்கப் போகிறீர்கள், வேண்டாமே. இவ்வளவு விளாவரியாக நான் இதை எழுதி இருப்பதற்கு உங்களின் ஏற்றுக்கொள்ளும் புரிதலும் ஒரு காரணமே, அந்த வகையில் உங்களுக்கு நன்றிகள்.

நன்றி,


கணேஷ்-வசந்தாகவே அறியப்பட விரும்பும் சக தோழர்.

Monday, October 22, 2012

ட்விட்டர் ராஜன் கைது ! சின்மயி விளக்கக்கடிதம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN2ud5ChttLCTS4zvqe-FggIP-R5nsF85ZqZz1iB2N2rUdPdgeWjB3RbiVxcx2Hct3V6e7E7vdLlBFSZu_7VTX4zWvIiZgAv91J5yvdhr6AyDtZrtAVxJ1877zzbHWkqhye3xgOeECKbg/s800/Chinmayi-in-city.jpg

 ராஜன் லீக்ஸ் எனும் ஹேண்டிலில் இருக்கும் அவினாசியை சேர்ந்த திரு ராஜன் சைபர் க்ரைம் போலீசால் இன்று கைது செய்யப்பட்டார். அவர் இப்போது சென்னை அழைத்து செல்லபட்டார் -அவர் மீது பாடகி சின்மயி கொடுத்த புகாரே இதற்குக்காரணம். இது பற்றிய செய்தி அறிய 


ட்விட்டரில் பலர் ராஜனுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகிறார்கள். சின்மயி கொடுத்த விளக்கம் இது



ஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிரானவள், ஒரு குறிப்பிட்ட சாதித் திமிர், மீனவர்கள் குறித்து தரக்குறைவாகப் பேசினேன் என்று பலரும் தங்களுக்குத் தோன்றிய வகையில் மனம் போன போக்கில் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்கள்.

நான் ஒரு தமிழச்சி. பல தமிழர்களின் வீட்டின் செல்லப் பிள்ளை. தமிழர்களின் ஆதரவினாலும், கடவுள் கிருபையினாலும், என் தாயாருடன் ஆசிர்வாததினாலும் வளர்ந்து வரும் இளம் திரைக் கலைஞர்களில் நானும் ஒருவள்.

சிறு வயது முதலே என்னை சீராட்டி, பாராட்டி வளர்த்து வருவது இந்தத் தமிழ்ச் சமூகம் தான். பாரம்பரியமாகவே தமிழ் வளர்க்கும் பரம்பரையில் வந்தவள் நான். வித்வான் ரா.ராகவ ஐயங்கார் , முனா ராகவ ஐயங்கார் அவர்களின் பேத்தி என் தாயார். மறவர் சீமையில் தமிழ் வளர்த்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள் தான் நான்!

உள்ளூர்த் தமிழர்களானாலும் சரி, வெளிநாடுகளில் வசிக்கும் புலம் பெயர் தமிழர்களானாலும் சரி என்னை அவர்களின் சொந்த சகோதரியாகவே பார்த்து வருகிறார்கள். நானும் அவர்களிடத்தில் எனக்குள்ள மதிப்பை கட்டிக் காத்து வருகிறேன். அதிலும் சிறப்பாக இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரையில், எங்கள் மறவன் சீமையின் ஒரு Extension ஆகத்தான் நாங்கள் கருதுகிறோம். அவர்களுடைய கஷ்டத்தை இன்னும் அதிகமாக உணர்ந்திருக்கிறோம். நான் இலங்கை தமிழர்களுக்காக நடத்தி வந்த கச்சேரிகளில் பங்கு பெற்று மருத்துவம் மற்றும் படிப்பிற்கு சம்பந்தப்பட்ட Charitieகளுக்கு நிதியுதவி திரட்டியிருக்கிறோம்.

இந்தச் சமுதாயத்தால் வளர்ச்சி பெற்று வரும் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற அளவு சமுதாயம் வளரவும் பங்களிப்பு தரவேண்டும் என்ற நம்பிக்கை உடையவள் நான்.

என்னுடைய கடுமையான பணிகளுக்கு இடையே சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாக என்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்வதோடு இல்லாமல் அடுத்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை எப்படி அணுகுகிறார்கள் என்று தெரிந்து கொண்டால் எனக்கு மிகுந்த பயனாக இருக்கும் என்று நம்பினேன். சுமார் இரண்டாண்டுகளுக்கு முன் சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் இணைந்து கொண்டேன். உலகெங்கிலும் வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்றார்கள். பேசினார்கள். விவாதித்தார்கள்.

திடீரென ஒரு நாள் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலைக் கண்டிக்கக்கோரி ட்விட்டரில் ஒரு சிலரால் ட்விட்டுகள் வெளியாகின. #TNFisherman என்ற hashடேக் (தொடர் கீச்சு) மூலம் அனைவரும் இலங்கை அரசை கண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கினார்கள். என்னையும் கேட்டார்கள். நல்லதொரு காரியத்தில் நானும் இணைந்து செயல்படுவதில் என்றுமே தயங்கியதில்லை. ஆனால் மேற்படி #TNFishermanதொடர்பில் வெளியான பல்வேறு ட்வீட்டுகளில் நம் நாட்டு மூத்த அரசியல் தலைவர்கள் உள்பட பலரை கேவலமாகவும், அவதூறாகவும் திட்டி ட்விட்டினார்கள்.



எனவே எனக்கு இந்த ஒரு குழுவுடன் இணைந்து (இந்த எண்ணம் நல்லதாக இருந்தாலும்) குறிப்பிட்ட hashtag ஐ ஆதரிக்க மாட்டேன் என்று கூறினேன். இந்த hashtag இல் மேற்கண்ட காரணங்களுக்காக நான் வெகுவாக புறக்கணிக்கும் ஒரு குழுவினரால் வற்புறுத்தப் பட்டதால் இந்தத் தொடர் கீச்சில் இணைய மறுத்தேன். இதற்கும் மீனவர்கள் மேல் எனக்குள்ள அனுதாபத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. என் அனுதாபத்தை என்னுடைய முறையில், hashtag போடாமல் நானே தனியாக ஒரு ட்விட் போட்டேன். இவர்களுடன் இணைய மறுத்தேன். இது தவறா? இதில் மீனவர்களுடைய பிரச்னையை பேசுகிறார்கள, அல்லது தங்களுடைய தனிப்பட்ட பிரச்சனைய புகுத்துகிறார்களா?



http://www.ndtv.com/news/images/story_page/Singer_Chinmayi_case_second_arrest_295.jpg

அடுத்து “நீங்கள் மீன் சாப்பிடுவது இல்லையா?” என்ற கேள்விக்கு “இல்லை. நான் நான் சைவம்” என்று பதில் கூறினேன். ”மீன் தொட்டி வாஸ்துக்காக இருக்கறிதே” என்று அதே ட்விட்டில் பதில் கேலி செய்த பொது, ”நான் மீன் சாப்பிடுவதுஇல்ல, தொட்டியில் வைத்து துன்புறுத்துவதும் இல்லை. PETA supporter” என்று ஒரு ":)" போட்டேன். இந்த பதில் கூட மேலே சொன்ன#TNFisherman Hashடேக் பிரச்னை நடப்பதற்கு முதல் நாள் வேறொரு கருத்துப் பரிமாற்றத்தின் போது தான்! ஆனால் நான் மீனவர்களைக் கொல்பவர்களைக் கண்டிக்க மாட்டேன். மீனவர்கள் மீன்களை கொல்கிறார்கள் என்றெல்லாம் கூறியதாக தகவல் திரித்துக் கூறப்பட்டு இணையம் முழுவதும் பரவியது. இந்த கற்பனை கீச்சுக்குச் சொந்தக்காரர் திருவாளர் . இதெல்லாம் உண்மை தானா என்று உங்களில் பலர் என் தரப்பு என்று ஒன்று இருக்கவேண்டும் என்று கூட நினைக்கth தவறியது எனக்கு மிகவும் வருத்தமே. மற்றும் என்னுடைய சாதி, மதம், இனம் என்று சகல வகைகளிலும் ஏசப்பட்டேன் .

பிறகொரு சமயம் ‘இடஒதுக்கீடு’ தொடர்பான கருத்து விவாதத்தில் ஒரு மாணவி நூற்றிக்கு அருகில் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், 'FC’ என்ற காரணத்தினாலும், பண வசதிக் குறைவாலும், தனது மேற்படிப்பு தடைபட்டு போன வருத்தத்தை பகிர்ந்த போது, அந்த தருணத்தில் இந்த இட ஒதுக்கீடு அவசியம் தானா என்று நினைத்தேன். அது அந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு. நீங்களும் அப்படித் தான் யோசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் மீண்டும் என் சாதியைப் பிடித்து இழுத்து, ‘இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவள் சின்மயி’ என்று பிரச்னை கிளப்பப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை பல சமயங்களில் பல இடங்களில் என்னை நேரடியாகவும், மறைமுகமாகவும் படு கேவலமான வசைச் சொற்களைக் கொண்டு ட்விட்டரில் விமரிசித்து வருகிறார்கள் ஒரு சிலர் கொண்ட கும்பல் ஒன்று.

என்னைப் பெற்று வளர்த்தெடுத்த என் தாய்..என்னுடைய வளர்ச்சிக்காவே தன் நேரம் முழுவதையும் செலவழித்து வரும் என் தாய்.. இந்த மாதிரியான வசைச் சொற்களைக் கண்டு மனம் வருந்தினார். இப்படிப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்து, இந்த மாதிரி தொடர்ந்து வசைபாடுபவர்களின் பட்டியலைத் தயாரித்து போலீஸ் துறையிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம்.பொது வெளியில் இப்படி அநாகரீகமாக நடந்த பலரின் பின்னணியை என் தாயார் கண்டறிந்து இவர்களில் பெரும்பாலானவர்கள் இள வயதும், திருமணம், சிறு குழந்தைகள் என்ற நிலையில் இருப்பதை உணர்ந்து அவசரத்தில் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவேண்டாம், பொறுமையாக பேசி உணர்த்த முயற்சிக்கலாம் என்று பலரிடம் அலைபேசியிலும், அவர்களின் நண்பர்கள் மூலமாகவும், ஒரு முடிவு காண, என் தாயார் முயற்சித்தார். அதன் விளைவு தான் திரு sharankay அவர்களின் மிக கீழ்த்தரமான கீசுகளின் வெளிபாடு. இதற்கு பிறகும் நாங்கள் சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்காவிட்டால் எங்களுக்கே மிகவும் தீதாத முடியும் என்ற காரணத்தினால் இந்த முடிவிற்கு தள்ளப்பட்டோம். நாங்கள் பரிதாபப்பட்டதை பயந்து விட்டதாக நினைத்து அதன் பிறகு தான் அநாகரிகத்தின் உச்சத்தையும் கடந்துவிட்டனர். மற்றபடி யாரையும் பழிவாங்குவதிலோ, தண்டனை வாங்கி கொடுப்பதிலோ எங்களுக்கு எந்த விதமான மகிழ்ச்சியும் கிடையாது.

இவற்றைத் தொடர வேண்டாம் என்று ஃபோன் மூலம் என் அம்மா சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்பு கொண்டு பேச முயற்சித்த போதும் அதனை மிரட்டல் விடுவதாகக் கூறி திசை திருப்ப முயன்றார்கள். என் அம்மாவையும் மிகத் தரக்குறைவாக கிண்டல், கேலி செய்து ட்விட்டினார்கள்.

அதன்பிறகு சட்டத்தின் துணியை நாடுவதை தவிர வேறு வழில்லாத நிலைக்கு தள்ளப்பட்டோம்.

இதற்குப் பிறகும் ஒரு பத்திரிகையின் கார்ட்டூனிஸ்ட் மூலம் நாங்கள் பேசாத வார்த்தைகளை நாங்கள் பேசியதாகச் சொல்லி பொய்ச் செய்தி பரப்பி உலகம் முழுதும் உள்ள தமிழர்களின் கொந்தளிப்பான உணர்சிகளை தூண்டும் வகையாக விஷயத்தை திசை திருப்பப்பட்டது.

இந்நிலையிலும் ஏராளமான தமிழ்ச் சகோதர, சகோதரிகள் தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் எங்களுக்குச் செய்தார்கள். வழி நடத்தினார்கள். ஆறுதல் சொன்னார்கள்.

இந்தவொரு சிரமமான சூழலில் எனக்கு முழு ஆதரவளித்த ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்துக்கும் நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.



டிஸ்கி - 1 - சின்மயி போலீசில் புகார் - http://www.adrasaka.com/2012/10/blog-post_3736.html



டிஸ்கி 2 - சமாதான முயற்சிகள் , சின்மயி தரப்பு விளக்கங்கள் | அட்ரா சக்க


http://www.adrasaka.com/2012/10/blog-post_24.html

டிஸ்கி 3 -  ஆனந்த விகடனில் சின்மயி சர்ச்சை | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_25.html


டிஸ்கி 4  -சின்மயி - புதிய தலைமுறை - நேர்படப்பேசு - விவாதங்கள் | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_7117.html


டிஸ்கி 5 -  சாருநிவேதிதா சின்மயி புகார் பற்றி சொன்ன கருத்து |

http://www.adrasaka.com/2012/10/blog-post_26.html


டிஸ்கி 6. - ஜெயமோகன் கருத்து - சின்மயி புகார் பற்றி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_27.html

டிஸ்கி 7. -லீனா மணிமேகலையின் ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த சின்மயி சர்ச்சை விவாதங்கள்

http://www.adrasaka.com/2012/10/blog-post_4186.html

Tuesday, September 25, 2012

கோவை மினி ட்வீட்டப்


aகோவை வ உ சி பார்க் கண் காட்சி நடக்கும் இடம் , முகப்பு , டிக்கெட் 40 ரூபா


ட்விட்டர் நண்பர் சேலம் குணாவுக்கு மேரேஜ். பத்திரிக்கை வைக்க  ஈரோடு வந்தார். வரும்போதே ஃபோனில் இரவு 7 மணிக்கு சேலத்துல பஸ் ஏறிட்டேன், ஒரு மணி நேரத்துல வந்துடறேன்னார். ஆனா 9 மணி வரை வர்லை,.. சரி , கூட யார் இருக்காங்களோ, என்னவோ ஏதோ என நானும் சென்னிமலை கிளம்பிடேன். இது நடந்தது 22.9.2012 சனிக்கிழமை நைட். 


அடுத்த நாள் அவர் கோவை போனார் . அங்கே இருக்கும் ட்வீட்டர்களை எல்லாம் சந்திச்சு கல்யாணப்பதிரிக்கை வைக்கலாம்னு ஐடியா. ஒவ்வொருவர் வீட்டுக்கும் போவதை விட அந்த ஏரியா மக்கள் எல்லாரையும் ஒரு இடத்துல வரவெச்சா எல்லாரும் சந்திச்ச மாதிரி இருக்கும் என்பது அவரோட மாஸ்டர் பிளானாம் . 

நானும் சொன்ன டைம்க்கு அதாவது மாலை 3 மணிக்கு ஆஜர் ஆகிட்டேன். குணாவுக்கு ஃபோனை போட்டேன் . அரை மணி நேரத்துல வந்துடறேன்னார். நான் கோவை வ உ சி பார்க்கில்  கண் காட்சி நடக்கும் இடத்துல இருந்தேன். அவங்க எல்லாம் பார்க்குக்கு பேக் சைடு ஆஜர் ஆகி இருக்காங்க. பேக்னா பிடிக்கும் போல . அப்புறம்  என்னை வந்து பிக்கப் பண்ணிட்டு போனாங்க.. 


ட்வீட்டப் 3.30 டூ 6 வரை நடந்தது. ஜூஸ் கடைல   தர்பூசனி ஜூஸ் சாப்பிட்டோம். ஒரு ஜூஸ் 30 ரூபா , 17 பேர் கலந்துக்கிட்டோம் 510 ரூபாய்க்கு  தர்பூசணிப்பழமே வாங்கி இருந்தாலும் ஒரு பழமே 40 ரூபா வீதம்  13 பழம் வாங்கி இருக்கலாம் , ஹூம்.


 பில் யார் கொடுப்பது என்று குணாவுக்கும், ஆதலினால் அன்பு செய்க்கும் தகறாரு. சின்ன தம்பி  பெரிய தம்பி  சத்யராஜ் பிரபு போல அடிச்சுக்கிட்ட்டாங்க. நான் ரொம்ப அமைதியானவன் என்பதால் அதில கலந்துக்கலை


 ட்வீட்டப்பில் என்ன பேசிக்கிட்டோம்,  யாரைப்பத்தி எல்லாம் விவாதம் போச்சு என்பதை வெளியிட வேண்டாம் என அண்ணன் ஜெண்ட்டில்மேன் அறிவுக்கரசு  அவர்கள் டி எம்மில் அன்போடு கேட்டுக்கொண்டதால்.... ஒன்லி ஃபோட்டோஸ் ஷேரிங்க்.. 
 

 குணா அழைப்பிதழை எடுத்து கொடுத்தார். அந்தக்கால மன்னர்கள் எல்லாம் ஓலை அனுப்புவாங்களே அந்த ஸ்டைல்ல இருந்துது. ஒரு வே:ளை இவர் சாண்டில்யனின் ரசிகராக இருக்கலாம், ( அந்தப்புரம் எல்லாம் வெச்சுக்க மாட்டாருன்னு நம்பலாம்)



 


நண்பர் சரவணன் இவர்தான், மீனாட்சி யாருன்னு கேக்கபடாது , ஏன்னா அண்ணனோட ஆளுங்க பேரு காமாட்சி, விசாலாட்சி , ஊராட்சி ( எல்லாமே ஆட்சிலயே முடியுது பாருங்க . அடேய்.. ;-0
Embedded image permalinkஅஅ
 
 
 
 
கேடி போஸ் மட்டும் ரொம்ப நல்லவன் மாதிரி கொடுப்பாரு, விடிகாலைல  மூணே   முக்காலுக்கே எந்திரிச்சு குட்மார்னிங்க் சொல்லிட்டு குப்புறக்கா படுத்துக்குவாரு 
 
 
 
 
 
 


.அ






அது எப்படித்தான் நல்லவன் மாதிரி மூஞ்சிய வச்சுருக்காரோ இந்த கேடி கள்
Embedded image permalink
 
 
 
 
 
 
 
இந்த போட்டோவ கண்டிப்பா போடு அப்பதான் எனக்கு ஏதாவது ஃபிகர் செட்டாகும் என்கிறார் மச்சி
 அ
 
 
 
 அ
 
 
 
 
 
 
குழந்தை முகத்தில் ஒரு.....................
 அ
 
 
 
 
 
இவர்தானப்பா பிழைதிருத்தி ஆனா என்ன பிழையை திருத்துராருன்னு கடைசிவரைக்கும் சொல்லல‌ pic.twitter.com/exl3FjoA. 38 வயசாகியும் ஏன் நரைக்கலைன்னு கேட்டா ஐ டெக்ஸ் மை டப்பாவை எடுத்து காட்டறாரு
 அ
 
 
 
 
புதுமாப்பிள்ளை உடன் உங்களில் ஒருவன் 
 
 
 
 
 
 
தீவிர விவாதத்தில்

Embedded image permalink

Tuesday, August 14, 2012

ட்விட்டரில் கலைஞர் - காமெடி கலாட்டா

திமுக தலைவர் கருணாநிதி பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் இன்று தனது பெயரில் கணக்கு தொடங்கியுள்ளார்.






1.மக்கள் பணத்தை கொள்ளையடித்தால் உருப்பட முடியாது: விஜயகாந்த் #  எனக்கு 89 வயசு ஆகுது - கலைஞர் சூசகத்தகவல்



---------------


2. டெசோ மாநாடு மீண்டுமொரு பராசக்தி நாடகம்: பா.ஜ., குற்றச்சாட்டு # ஆமா, அது டிராமாதான், காமா சோமா என ஏதாவது நீங்க எதிர்பார்த்தா?



-----------------------


3. சுந்தர்.சி - அஞ்சலி நட்பு...! # கூடா நட்பா? கூடி முடிச்ச நட்பா? - குஷ்பூ காட்டமான கேள்வி



------------


4. ஸ்ரீதேவி - எனக்கு 49 வயசு ஆகுது  # எத்தனை வருஷத்துக்கு முன்னால மேடம்?


--------------------

5. பிச்சை கேட்கறப்போ தர்மப்பிரபோன்னா வயிற்றுப்பசி இரவலன், தர்ம குஷ்பூன்னா கில்மா புரவலன்



----------------------

6. பெண்களுக்கான தனி நகரத்தை உருவாக்குகிறது சவுதி அரேபியா # சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி உண்டா?


-----------------------

7. மாட்டுக்கு கொம்பு சீவுவோருக்கு நல்ல காலம் : ஐ.டி., தொழிலை விட கூடுதல் வருமானம்#தமிழன் கொம்பு சீவிவிடுவதில் வில்லன் ஆச்சே?



----------------------------


8. பொருத்தமானவர் கிடைத்ததும் திருமணம் செய்வேன் -த்ரிஷா.. # ரிசப்ஷன் மவுண்ட்ரோட்ல மிட்நைட்ல?



----------------


9.  டொக் டொக்.. 



சோனியா காந்தி - யாரு?


 ...........  




சோனியா காந்தி - ஓ, மன்மோஹனா? எஸ் கம் இன் # FB remix


-------------------------------------

10.ட்விட்டரில் தீய சக்திகள் நடமாட்டம், தமிழ்நாட்டில் ட்விட்டருக்கு தடை - ஜெ அவசர அறிவிப்பு! கலைஞர் திகைப்பு


------------------------


11.234 தொகுதிகளில்  போட்டி இட்டு ஜெயித்தவன் நான், 140இல் வெற்றிக்கனியை பறிக்க மாட்டேனா? - கலைஞர்



--------------

12. நிருபர் - தலைவரே! கிரந்தம் தவிர்ப்பீங்களா?


கலைஞர் - ஜெவை மட்டும் தவிர்ப்பேன்



------------------

13. கலைஞர் குஷ்பூவுடன் டி எம்மில் கடலையா? இவர் என்ன விடலையா? அட்ரா சக்க அதிரடி ஆய்வு



---------------------


14. கலைஞரை ட்விட்டரில் ஃபாலோ செய்பவர்கள் குடும்பத்தில் யாருக்கும் அரசுப்பணி இல்லை - ஜெ அறிவிப்பு



-----------

 15. கலைஞர் -தம்பி அனிரூத், தங்கை ஆண்ட்ரியா முத்தக்காட்சி வெளிவந்ததும், நான் ட்விட்டரில் வந்ததும் எதேச்சையானது, கயிறு திரிக்காதீர்



--------------

16. டெசோ மாநாட்டுக்கு அடுத்து ட்விட்டர் மாநாடுதான் - கலைஞர்


 ------------------


17. கலைஞர் - ஸ்விஸ் பேங்க்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுனப்ப எவனுக்கும் தெரில, ட்விட்டர்ல உடனே தெரிஞ்சுடுச்சே?




-----------------------------


18. மு,க ஸ்டாலின் - எப்படியோ இவரு ட்விட்டருக்கு அடிமை ஆகிடுவாரு, அடுத்த சி எம் நான் தான்


---------------------------


19. அழகிரி, ஸ்டாலின் இருவரில் எனது ட்வீட்ஸை அதிகம் யார் ஆர் டி, ஃபேவரைட்ஸ் பண்றாங்களோ அவர்களுக்கே அடுத்த சி எம் ஆகும் வாய்ப்பு - கலைஞர்



--------------------------

20.  கலைஞர் - கழக உடன் பிறப்புகள் யாரும் குஷ்பூவை கூட்டத்தில் கிள்ளக்கூடாது, ட்விட்டரில் டி எம் போடக்கூடாது # ஸ்டாலின், அழகிரி விதி விலக்கு



--------------------------

 21. ட்விட்டர்ல வெறுமனே DMனு போட முடியலை, ஆனா CMனு போட முடியுது # நீதி - CM விட DMக்கு பவர் ஜாஸ்தி



-------------------------


22. ஜெ- நான் ட்விட்டர் அக்கவுண்ட் தொடங்க மாட்டேன், 140 கட்டுப்பாடு ஆகாது.என் இஷ்டப்படி தான் இருப்பேன்



--------------------------


23. ஜெ-போய் பொழப்பை பார்க்காமல் ட்விட்டரில் வீணாய் பொழுதைக்கழிக்கும் சில அரசியல்வாதிகளை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது



----------------------------


24. அச்சமின்றி வாழ்வது தான் சுதந்திரம்: ஜெயலலிதாவின் சுதந்திர தின செய்தி # அப்புறம் நீங்க ஏன் சசிகலாவுக்கு பயப்படறீங்க?மேடம் டம் டம்


------------------------

25. ஆண்ட்ராய்டு ஃபோனின் விற்பனையை அதிகரிக்கவே மார்க்கெட்டிங்க்காக செய்த டிராமாவே அது - ஆண்ட்ரியா பல்டி



-----------------------


26. சுதந்திர தின செய்தி - கொடநாடு நட்பு கூடா நட்பு


-------------------


27. வாய்க்குள்ளே இருந்து லிங்கத்தை எடுத்தா சாமியாரு,சுவிங்கத்தை எடுத்தா ரோமியாரு # ஆண்ட்ரியா டைரிக்குறிப்புகள்



----------------------

28. டெசோ மாநாட்டில் ஒரு போலீசார் கூட மருந்துக்கும் கண்களில் தென்படவில்லை கருணாநிதி # திருடர்கள் போலீசை தேடுவது வேடிக்கையா இருக்கு - ஜெ



----------------------------






Tuesday, February 28, 2012

தமிழகம் தழுவிய மெகா , மகா ட்வீட்டர் கம் பதிவர் சந்திப்பு @சென்னை

http://www.technobaboy.com/wp-content/uploads/twitter-logo-1.jpg 

இது ட்விட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் பதிவர்களுக்கான பதிவு. இந்த மெகா ட்விட்டப்பில் கழந்து கொள்ளும் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் தான். உங்களின் கருத்துக்களையும், திறமைகளையும் வெளிக்கொணரத் தான் இந்த ஏற்பாடு. அவசியம் கலந்து கொண்டு இந்த வெளிச்சத்தில் உங்களை இந்த உலகிற்கு காட்டிக் கொள்ளுங்கள். நகைச்சுவை மிளிர இந்த அழைப்பு பதிவை எழுதிக் கொடுத்த அவினாசி அன்னாசி அடச்சே அண்ணாச்சி ,கொங்கு மண்டல சந்நியாசி நண்பர் ராஜன் லீக்ஸுக்கு TNmegatweetup என்றும் கடமைப்பட்டுள்ளது.




ஏப்ரல்-30ம் தேதிக்குள் கலந்து கொள்ள விரும்பும் அனைவரும் [email protected] என்ற முகவரியில் உங்கள் Twitter handle குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ளவும்.

விழா நடைபெறும் தேதி : 13-05-2012

நடைபெறும் இடமும், நேரமும் ஏப்ரல்-30ம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும்.

R u want to know Mega tweetup updates plz follow our twitter handle : www.twitter.com/TNmegatweetup


@
டுவிட்டரப்பன் துணை
#Chennai Mega TweetUp
தமிழ் கூறும் நல்லுலகின் டுவிட்டர் சந்து/சமுதாய மக்கள் அனைவரையும் ஒரு குடைக்கீழ் கொணருமோர் பெருமுயற்சியாய் சென்னை மெகா ட்வீட் அப் 13-05-2012

சி.பி - இந்த 13ந்தேதி ஏன் செலக்ட் பண்ணோம்னா அந்த நாள்ல வேற நல்ல காரியம், அல்லது சுப முகூர்த்தம் எதுவும் இல்லை.. மாமா பொண்ணுக்கு திரட்டி, பக்கத்து வீட்டு பம்ஸ் குட்டிக்கு நிச்சயதார்த்தம்னு யாரும் சால்ஜாப்பு, ஒயிட் காலர் ஜாப்பு எதுவும் சொல்ல முடியாது..


இணையத்தின் மற்றெந்த சந்துகளையும் விட டுவிட்டர் சந்தில் நமது மக்களின் அளவளாவல் அடா, புடா ரேஞ்சில் மானாவாரியாக பொங்கி ஓடும் சமயத்தில், இயன்றவரை, எல்லாரையும் ஓரிடத்தில் சந்திக்கவைப்பது என்று முடிவு! மக்களனைவரும் குடும்பத்துடன் புளிசோறு கட்டிக் கொண்டு கிளம்பி வரலாம்! பொடுசுகளைத் தூக்கி வருவோர் பேப்பர்ஸ் சொந்த செலவில் கொண்டு வரவேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


சி.பி - ட்வீட்ஸ் போடும்போது நான் பிரமாதமா சமைப்பேன், என் சமையலை சாப்பிட்டு எங்க குடும்பமே மயங்கி (!!) கிடக்கும்னு ரீல் ரீலா விடும் தாய்க்குலங்கள் மாட்னாங்க.. )

தெருக்கள்தொறும் புண்ணியாத்மாக்களாய் உலவுவதால் கரண்ட் கட் எனும் கடுஞ்சாபமின்றி உய்யும் சென்னை மாநகரில் மேற்படி நிகழ்வை நடாத்துவதில்(!) புழுங்கிச் சாவும் பிறமாவட்ட மக்கள் நாங்கள் களிபேருவகை கொள்கிறோம்!

இதுவரை தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில், ரெஸ்டாரண்டுகள், உயர்தர ஜைவ உணவகங்கள், சோம்பேறி பார்க்குகள், புத்தகக் கண்காட்சிகள், பச்சை போர்டு டாஸ்மாக்குகள், பொண்டாட்டியை ஊருக்கு அனுப்பிய வீடுகள் என சிறிய அளவில் டுவீட் அப்புகள் வெகுசிறப்பாக நடந்தேறியிருக்கலாம், ஆனால் இம்முறை வங்கக் கடலோரம் சிங்கத்தமிழரை அலைகடலென பெருந்திரளாய் ஒன்றிணைத்து, 2016 சட்டசபை தேர்தல் ரேசில் நாமும் இருக்கிறோம் என்பதனை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மட்டுமல்லாமல் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


சி.பி - ஒரு ரகசியச்செய்தி..இந்த ட்வீட்டப்புக்கு பாம்பு சட்டையை மாற்றுவது போல் தன் காதலரை மாற்றும் பிரபல கேரளா நடிகை வந்தாலும் வரலாம் . 

வழமை போல், சப்பைக் காரணங்கள் சொல்லி ஜகா வாங்கும் அப்பாட்டக்கர்கள் இம்முறையாவது திருமுகரையை வந்து காட்டிப் போகப் பிரையாசைப்பட்டே 2 மாதங்கள் முன்னதாகவே அறிவிப்பை வெளியிடுகிறோம்.



ட்வீட் அப் நடக்கும் ஞாயிற்றுக்கிழமை கூட, டேமேஜர் கூப்பிட்டார், ஹோம் மினிஸ்டர் திட்டும்னு கூவறவங்க எல்லாம் அன்றைய தினம் தாத்தா பாட்டிகளைப் போட்டுத்தள்ளவோ, சுளுக்கு, பேதிகளால் பீடிக்கப்படவோ ஆயத்தமாவீர்களாக.

12 வருசம் முந்தி எடுத்த படங்களை டிபியில் வைத்துக் கொண்டு ஸ்டடி லீவில் இருப்பதாக ஸ்டேடஸ் போடும் பெர்சுகள், பாப்பா போட்டோ பூ போட்டோ போட்டிருக்கும் பாட்டிகள் என பலரையும் கண்டு களிக்க ஒரு அற்புதமான வாய்ப்பு!


சி.பி - மாறுவேடத்தில்  வரும் பெண்கள் மட்டுறுத்தப்படுவார்கள்

பதிவினைத் தந்தி போல் பாவித்து, கிளம்பத்தயாராகவும்! சனிக்கிழமை இரவே அவரவர் ஊர் காய்கறி மார்க்கெட்டிலிருந்து புறப்படும் உருளைக்கிழங்கு லோடு லாரிகளில் முன்பதிவு செய்து கொள்வீர்.

குடிவெறியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்: சந்திப்பின் போது மட்டும் சாராயம் தவிர்ப்பீராக! போதையில் வரும் நபர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

( ஏன்னா எப்பவும் மப்புலயே இருக்கறவங்க அன்னைக்கு ஒரு நாளாவது தெளிவா இருக்கனும்கறதுதான் இந்த சந்திப்போட முக்கிய நோக்கமே.. )

சென்னை மெகா ட்விட் அப்பில் கலந்துகொள்ள உள்ளோர் தத்தமது டுவிட்டர் ஹேண்டில் உள்ளிட்ட விபரங்களுடன் chennaitweetup@gmail.com என்ற முகவரிக்கு மின்மடலிட்டு வருகையை உறுதி செய்யவும்.


( சி.பி - மெடிக்கல் ஷாப் மேனகா போனற வெவ்வேறு பெயர்களில் உலா வரும் ஒளிக்கதிர்கள் ஏதாவது ஒரு ஹேண்டில் மட்டும் குறிப்பிட்டால் போதும்.. )

எண்ணிக்கையை உத்தேசித்து, விரைவில் சென்னையில் நிகழ்வு நடைபெறும் அரங்கம் குறித்த விபரங்கள் வெளியாகும்.


சி.பி - க்ராசிங்க்20,000 ட்வீட்ஸ் முதல் தமிழ்ப்பெண் கொங்கு மண்டல தீக்கங்கு, ஆணாதிக்க வாதிகளுக்கு சங்கு, கோவை டேமேஜர் வாழ்த்துகள் (19780 ,கேள்விகள்,213 பதில்கள்,45 ஓய், 41கவிதைகள் ) இவர் விழா மேடையில் தோன்றி கேள்வி கேட்டே கொலையாய் கொல்லுவது எப்படி? என்ற தலைப்பில் உரை ஆற்றுவார்

மேலும் தகவல்களுக்கு டைம்லைனில் பதிலளிக்கக் காத்திருக்கிறோம்!