Showing posts with label JE. Show all posts
Showing posts with label JE. Show all posts

Wednesday, June 27, 2012

ஜூவிக்கு சுளுக்கு, ஜெ கையில் சவுக்கு - பின்னணி என்ன?

http://www.vikatan.com/news/images/23.jpg 

சென்னை: முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதற்காக ஜூனியர் விகடன் இதழ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,


கடந்த 24 ம் தேதி வெளியான ஜூனியர் விகடன் இதழில் முதல்வருக்கு எதிராக "யாக பூஜையில் போயஸ் கார்டன், அதிகார பயம், பரிகார நிஜம்" என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது. முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உள் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது. எனவே இந்த செய்தியை வெளியிட்ட ஜூனியர் விகடன் ஆசிரியர் கண்ணன், வெளியீட்டாளர் அசோகன், மாதவன் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.



இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


ஏற்கனவே, முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாகக் கூறி நக்கீரன் இதழ் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தற்போது ஜூனியர் விகடன் இதழும் சேர்ந்துள்ளது.


http://www.envazhi.com/wp-content/uploads/2011/06/jaya-news.jpg

சர்ச்சைக்கு உள்ளான அந்த கட்டுரை 

மிஸ்டர் கழுகு: யாகப் புகையில் போயஸ் கார்டன்!

கழுகாருக்கு மேளதாளம் வைக்காத குறையாக வரவேற்பு கொடுத்தோம்! 
புரியாதவர் போலவே நம்முடைய அலுவலகத்துக்குள் நுழைந்தார். லட்டைக் கிள்ளி கொஞ்சமாய் வாயில் போட்டுக்​கொண்டவரிடம், ''பிரணாப் பராக்... என்று நீர் சொன்னீர். அதுதான் நடந்தது!'' என்றோம்.


''அதிகாரப் பட்சிகளுக்குள் அடிக்கடி பிரணாப் முகர்ஜி பெயர்​தான் இடம் பெற்றது. அதை வைத்துத்தான் சொன்னேன். பிரணாப்தான் ஜனாதிபதி வேட்பாளர் என்று, வெள்ளிக்​கிழமை மதியம்தான் சோனியா முடிவு எடுத்தார். இடைப்பட்ட நேரத்தில் அவருக்கு எத்தனையோ யோசனைகள். ஆனால், அத்தனையையும் மத்தியப் புலனாய்வுத் துறை கொடுத்த ஒற்றை வரி லாஜிக் அறிக்கை தகர்த்து விட்டதாம்!''


''அது என்ன?''


''ஜனாதிபதி பதவிக்கு யார் தகுதிஆனவர் என்று சோனியா கேட்ட அறிக்கைக்கு, எப்போதோ மத்திய உளவுத்துறை அறிக்கை கொடுத்து விட்டது. ஆனால், வெள்ளிக்கிழமை மாலை ஒரு தகவல் தந்தார்களாம். 'பிரணாப் வேட்பாளராக நியமிக்கப்​பட்டால், காங்கிரஸ் வலுவான போட்டியை எதிர்கொள்ளத் தேவை இல்லை. 


அவரை ஆதரிக்க எதிர்க்கூட்டணியிலேயே பல கட்சிகள் தயாராக இருக்கின்றன’ என்றதாம் அறிக்கை. 'வெற்றி பெறுவதற்கான பலம் இருந்தாலும் வேட்பாளர் ஸ்ட்ராங் ஆக இருக்க வேண்டும்’ என்பதில் உறுதியாக இருந்த சோனியா, இறுதியாக பிரணாப் முகர்ஜியை ஓகே செய்தார்.


 இந்தத் தகவல் கிடைத்ததும், 'ஆண்டவனின் ஆசீர்வாதம்’ என்றாராம் பிரணாப்!''


''சோனியாவின் ஆசீர்வாதம் என்றுதானே சொல்ல வேண்டும்?''


''கடந்த மூன்று மாதங்களாக கோயில் கோயிலாக வலம் வந்தார்கள் பிரணாபின் ஆட்கள். 'எதிர்ப்புகளை உடைக்க காளி பூஜை’ என்று உமது டெல்லி நிருபர் எழுதி கடந்த மாதமே ஒரு கட்டுரை நீர் வெளியிட்டு இருந்​தீர்


. 'இப்போது ஜோதிடருடன் சேர்ந்து மகாகாளியையும் நம்பத் தொடங்கி விட்டார் பிரணாப். எதிர்ப்புகளை நசுக்குவதற்காக தன்​னுடைய வீட்டிலேயே காளி பூஜையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. நள்ளிரவில் நடக்கும் இந்தக் காளி பூஜை, எதிர்ப்புகளை எல்லாம் உடைத்துத் தள்ளுமாம்’ என்று உமது நிருபர் எழுதி இருந்தார். அந்த அளவுக்கு பூஜையில் மூழ்கினார் பிரணாப்.

 http://rajkanss.files.wordpress.com/2008/11/pg2a.jpg

கும்பகோணம் வந்து சூரியனார் கோயிலுக்கு ஒன்பது பசு மாடுகளைத் தானம் செய்து, அதற்கான சிறப்பு பூஜைகள் செய்து உள்ளார்கள் பிரணாபின் ஆட்கள். பூரி ஜெகந்நாதர் ஆலயத்திலும் பிரணாபின் வெற்றிக்காக சிறப்பு பூஜை நடந்துள்ளது. அவருடைய குடும்பத்தின் ஆஸ்தான புரோகிதர் என்று சொல்லப்​படும் ராஜேஸ் தைதபதி என்பவர்தான் இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளார். 


மூன்று மாதங்களுக்கு முன்பே அந்த ஆலயத்தில் பூஜை செய்யப்பட்ட வஸ்திரங்கள், பிரணாப் வீட்டு பூஜை அறையையும் அலங்கரித்து உள்ளன. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, தன்னுடைய நம்பிக்கை​யின் அடிப்படையில் ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக்​கொண்டாராம் பிரணாப்!''


''அடுத்த நிதி அமைச்சர்?''


''பலர் குறி வைக்கிறார்கள். ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன. ஊரகத் தொழில் துறை அமைச்சராக இருக்கும் ஜெய்ராம் ரமேஷ், பொருளாதாரம் படித்தவர். பிரணாப் முகர்ஜியோடு பணியாற்றி இருக்கிறார். திட்டக் குழு உறுப்பினர்போன்ற தகுதிகள் உண்டு. அதனால் அடுத்த நிதிஅமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்தான் என்பது சோனியாவின் சாய்ஸ்.''


''தி.மு.க-வுக்குப் பிடிக்காத ஆள் ஆச்சே?''


''ஆமாம். 2009-ல் ஜெய்ராம் ரமேஷ் மத்தியச் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது, கேரளா புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வுக்கு அனுமதி அளித்தார். இதைக் கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். 'ஜெய்ராம் ரமேஷ§க்குக் கண்டனம் தெரிவித்து மதுரையில் நவம்பர் 1-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும்’ என அப்போது தி.மு.க. அறிவித்தது.


 கேரள அணை தொடர்பாக அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி எழுதிய கடிதத்துக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில் அனுப்பாததையும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புகாராகத் தெரிவித்தார் கருணாநிதி. ஜெய்ராம் ரமேஷ§க்கு எதிரான போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால், போராட்டத்தைக் கைவிட்டார். அப்படிப்பட்டவரை நிதி அமைச்சராக்க தி.மு.க. நிச்சயம் எதிர்க்கும்!''


''ப.சிதம்பரம் நிதிஅமைச்சர் ஆவதை தி.மு.க. விரும்புமே?''


''ஆமாம்! பிரணாப் முகர்ஜியை வேட்​பாளராக அறிவிக்கும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில், தி.மு.க. சார்பில் டி.ஆர். பாலுவும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருமா வளவனும் கலந்துகொண்டார்கள். வேட்பாளர் பெயர் அறிவிப்புக்கே பொக்கே, சால்வைகளை சோனியாவுக்கு இவர்கள் வழங்கியதைப் பார்த்து வட இந்தியத் தலைவர்கள் முகம் சுளித்தார்கள். 'பிரணாப் முகர்ஜி நாடாளுமன்ற அவை முன்னவராகவும் இருக்கிறார். காலியாகும் அந்தப் பதவியை சோனியாவுக்கு வழங்க வேண்டும்’ என்று காங்கிரஸ்காரர்களே சொல்லாதபோது, அவர்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளராக மாறி டி.ஆர். பாலு பேட்டி கொடுத்ததையும் டெல்லிப் பத்திரிகையாளர்கள் மௌனச் சிரிப்புடன் குறித்துக்கொண்டார்கள்!''

http://www.envazhi.com/wp-content/uploads/2012/02/vijayakanth_jayalalitha_59.jpg


'இப்படி பாலு ஐஸ் வைப்பதற்குக் காரணம் கேபினெட் மீது அவருக்கு இருக்கும் கண்தான்.’ என்கிறார்கள்!'' என்றவர், டெல்லிச் செய்திகளில் இருந்து தமிழக அரசியலுக்குள் புகுந்தார்.


''புதுக்கோட்டை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாகவே, அ.தி.மு.க-வுக்கு வெற்றி கிடைக்கும். விஜயகாந்த்தும் நிறைய வாக்குகள் வாங்குவார். இது தொடர்பாக தமிழக உளவுத் துறை போலீஸார், முதல்வருக்கு அனுப்பி உள்ள ரிப்போர்ட்டையும் கடந்த இதழில் சொல்லி இருந்தேன். 'நாமதான் ஜெயிப்போம். அப்புறமா எதுக்கு செலவு செய்யணும்?’ என்ற மிதப்பில் பலரும் பணத்தைப் பதுக்கி​ விட்டதையும் சொன்னேன்.


தேர்தல் முடிவு வெளியான வெள்ளிக்கிழமை, அப்செட் ஆனார் முதல்வர். தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் இருந்தவர், அதைப் பாதியில் முடித்துவிட்டு, கார்டன் கிளம்​பினார். வழக்கம்போல அம்மாவை வழி அனுப்ப போர்டிகோவில் காத்திருந்தார்கள் அமைச்சர்கள். சீரியஸான முகத்துடன் அவர்களைப் பார்த்து விட்டுக் கிளம்பினார். மறுநாள் காலை கார்டனில் இருந்து அமைச்சர்களுக்கு அழைப்பு போனது!''


''அனல் பறந்ததா?''


''11.30-க்கு வரச்சொல்லிவிட்டு, 1.30-க்குத்தான் அவர்களைச் சந்தித்தார். மொத்தம் 14 அமைச்சர்கள் போனார்களாம். பத்தே நிமிடங்கள்தான் பேசினாராம் முதல்வர்... அத்தனையும் அனலான வார்த்தைகள். தே.மு.தி.க. டெபாசிட் வாங்கியது எப்படி என்பதுதான் ஜெயலலிதாவின் கேள்வி.


 'ஜெயிச்சிடுவோம்கிற மிதப்பிலேயே இருந்திருக்கீங்க’

 என்றாராம் முதல்வர். '


நகர்ப் புறங்களில் நமக்கு ஓட்டு விழவில்லை. முஸ்லிம் வேட்பாளர் என்பதால் முஸ்லிம் வாக்குகள் அவருக்கு முழுமையாகச் சென்றுவிட்டன’ என்று மந்திரிகள் சில சமாதானங்களைச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் எதையும் முதல்வர் ஏற்கவில்லை!''


''ஆனாலும், 1006 திருமணங்களை சந்தோஷமாகத்​தானே முதல்வர் நடத்தி வைத்தார்?''


'திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் நடக்கும் திருமண விழாவை தனது முக்கியமான பரிகாரமாகவே ஜெயலலிதா செய்து முடித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்போது, சிலர் இதற்குத் தடை போடும் காரியத்தையும் பார்த்தார்கள். 


'திருமணம் நடப்பதற்காகக் குறிக்கப்பட்டுள்ள திருமண நாள் முழுஅமாவாசை நாள். எனவே இந்தத் தேதியில் திருமணம் செய்வது கெடுதல்’ என்று சிலர் கடிதம் எழுதி அனுப்பவும் ஆரம்பித்தார்கள். இந்து அறநிலையத் துறையில் இருக்கும் அதிகாரி ஒருவரைக் குறிவைத்து, அவருக்குப் பிடிக்காத கோஷ்டியினர் செய்த வேலைபோல அது இருந்தது. 


19-ம் தேதி செவ்வாய்க்கிழமைதான் அமாவாசை. அதன்படி பார்த்தால் 18-ம் தேதி இரவு 7 மணியில் இருந்துதான் போதாயன அமாவாசை தொடங்கும். ஆனால், முதல்வர் ஏற்பாடு செய்த திருமணங்கள், காலை 9.30-க்கு நடந்து விட்டன. எனவே, கடிதத்தில் சொல்லப்பட்டுள்ள பீதி இதற்குப் பொருந்தாது. 6, 9, 15, 18, 24, 27 ஆகிய தேதிகளில்தான் முக்கியமான தனது நடவடிக்கைகளை முதல்வர் வைத்துக்கொள்வார் என்பதால் இந்தத் தேதி குறிக்கப்பட்டதாம்!''


''அப்படியா?''


''19-ம் தேதி அன்று போயஸ் கார்டன் முழுக்க யாகப் புகை வீச இருக்கிறது. அதே நேரத்தில் பையனூரிலும் யாகம் நடக்க இருக்கிறது. சுமார் 11 மணி நேரம் நடக்கு​மாம் இந்த யாகம். 'ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது, உடல் நலமும் சிறப்பாக இருக்க வேண்டும், எதிரிகளின் பலம் குறைய வேண்டும்... என்பதற்காக இந்த யாகம் நடத்தப்பட உள்ளது’ என்கிறார்கள்.

http://www.envazhi.com/wp-content/uploads/2011/12/jaya-sasi-21.jpg


 இதற்கென மாயவரத்தில் இருந்து பிரத்யேகமான புரோகிதர்கள் சென்னை வந்து நான்கைந்து நாட்களாக டேரா போட்டு உள்ளனர். இவை முடிந்த பிறகுதான் கொடநாடு பயணம் குறித்த திட்டங்களை வகுக்க இருக்கிறார்.''


''கொடநாடு பயணம் இருக்காது என்றும் சொன்னார்களே?''


''இறுதி முடிவுக்கு இன்னும் முதல்வர் வரவில்லை. அப்படிச் சென்றால், குறைந்தது இரண்டு மாதங்கள் வரை அவர் அங்கு இருக்கலாம் என்றும் சொல்​கிறார்கள்!''


''சசிகலாவை அழைத்துச் செல்வாரா?''


''கேட்பீர் என்று நினைத்தேன். இவர் செல்லும்போது அவர் செல்ல மாட்டார். அப்புறம் தனியாகப் போகலாம்!''


''ஓ!'' பெங்களூரு கோர்ட் மேட்டரை ஓப்பன் செய்தார் கழுகார்... ''சசிகலாவுக்கு தனி நீதிமன்றம் மீண்டும் கிடுக்கிப்பிடி போட்டு உள்ளது. கடந்த 6-ம் தேதி சசிகலா கோர்ட்டுக்கு வரவில்லை. கண்டித்தார் நீதிபதி. '18-ம் தேதி நிச்சயம் வருவோம்’ என்றார்கள். அன்றும் வராவிட்டால் நீதிபதிக்கு கோபம் பொங்கத்தானே செய்யும்!''


''தைரியம்தான்!''


''18-ம் தேதி காலை 11 மணிக்கு, 'சசிகலாவிடம் மிச்சம் இருக்கும் கேள்விகளுக்குப் பதில்களைப் பிடுங்க வேண்டும்’ என்ற வேகத்தில் வந்தார் நீதிபதி மல்லிகார்ஜுனையா. வந்ததும் குற்றவாளிக் கூண்டை நோட்டமிட்டவருக்கு ஷாக். சசிகலா, சுதாகரன், இளவரசி மூவரையும் காணவில்லை


. கடிகாரத்தைப் பார்த்தவர், 'ஒருவேளை தாமதமாக வருவார்கள்’ என்று நினைத்தார். ஆனால், வழக்கம்போல மூவரின் வக்கீல்களும் மனுவை நீட்டினார்கள். 'என்ன இது? கொஞ்சம்கூட சட்டத்தை மதிக்காமல் நடந்து கொள்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் ஏதாவது காரணம் காட்டி இழுத்தடிக்கிறீர்கள்?’ என்று சீறினார் நீதிபதி.  


முதலில் எழுந்த சசிகலாவின் வக்கீல் மணிசங்கர், 16 பக்க அறிக்கையை ஏற்ற இறக்கங்களோடு வாசித்தார். அதில் ஆறு பக்க மருத்துவச் சான்றிதழும் இருந்தது. '63 வயதான சசிகலா சட்டத்தை எப்படி எல்லாம் மதித்து இருக்கிறார். மதிக்கப்போகிறார்’ என்பதை 10 நிமிடங்கள் விலாவாரியாக‌ எடுத்துச் சொன்னவர், '1991-ம் ஆண்டு சசிகலா கார் விபத்தில் சிக்கினார்.அப்போது இருந்து அவரது இடது கண்ணில் பிரச்னை இருக்கிறது. 


http://www.envazhi.com/wp-content/uploads/2012/05/jaya-vkanth.jpg

கடந்த 22 வருடங்களாக கண்ணில் 'குளுக்கோமா’ கோளாறு இருப்பதால் கடும் அவதிப்பட்டு வருகிறார். கண் புரையும் இருக்கிறது. இதைத் தொடர்ந்தே கடந்த மே 26-ம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள உதி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. நீண்ட தூரம் பயணம் செய்யக் கூடாது..


. நீண்ட ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தி இருக்கிறார்’ என்று சொன்னார் வக்கீல். இவர் வாதாடிக்கொண்டு இருக்கும்போது, வக்கீல் செந்திலும் ஜெயலலிதா வக்கீல் பி.குமாரும் அவருக்கு பாயின்ட்ஸ் எடுத்துக் கொடுத்தனர். அதனால் டென்ஷன் ஆன‌ நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா, 'இது கோர்ட்டா? இல்லை மார்க்கெட்டா?’ என்று சத்தம் போட, செந்தில் எழுந்து மன்னிப்பு கோரினார்.


மேலும் டென்ஷனான நீதிபதி மல்லிகார்ஜுனையா, 'தமிழ்நாடு சி.எம். ஆக இருக்கிற ஜெயலலிதாவே கோர்ட்டின் கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டார். சசிகலா கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்காமல் இழுத்தடிக்கிறார். உலகில் வியாதி இல்லாத மனிதர்க‌ளே இல்லை. அதேபோன்று எல்லா குற்றவாளிகளுக்கும் எதாவது ஒரு வியாதி இருக்கத்தான் செய்கிறது. 


அதற்காக கோர்ட்டில் ஆஜராகாமலா இருக்கிறார்கள்? பிடிவாரன்ட் பிறப்பித்தால் கோர்ட்டைத் தேடி வருவீர்கள்தானே?’ என சீறிவிட்டு, சுதாகரன் வராத காரணத்தைக் கேட்டார். அப்போது எழுந்த வக்கீல் சரவணகுமார், 'சுதாகரனுக்கு கடுமையான முதுகுவலி. அதனால் பயணம் செய்ய முடிய​வில்லை’ என்றார். அதன் பிறகு இளவரசியின் வக்கீல் அசோகன் எழுந்து, 'இளவரசிக்கு சர்க்கரை நோய் அதிகமாக இருக்கிறது. தொடர் வாந்தி வேறு. அதனால் பயணம் செய்ய முடியவில்லை’ எனப் பள்ளிக்கூடத்துக்கு வராத பிள்ளைகள்போல் வரிசையாகக் காரணங்களை அடுக் கினார்கள்!''


''ஓஹோ!''


''நீதிபதி மல்லிகார்ஜுனையா கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். 'அதெப்படி மூன்று பேரும் ஒரே காரணத்தை மாறிமாறிச் சொல்லி கோர்ட்டின் நேரத்தை வீணாக்குகிறீர்கள். ஒவ்​வொரு முறை தேதி கேட்பதும், ஆஜராகாமல் இழுத்தடிப்பதுமே வாடிக்கையாகி விட்டது.


 உலகில் குற்றவாளிகளுக்கு நோய் இருக்கிறது என்பதால், சட்டத்தையும் கோர்ட்டையும் மூடி விட முடியுமா? இவ்வளவு சொன்ன பிறகும் உங்கள் இழுத்தடிப்பு இன்னும் ஓயவில்லையே? இனி சசிகலா ஆஜராகத் தவறினால், சுதாகரனிடமும் இளவரசியிடமும் கேள்விகள் கேட்கப்படும். அதற்குத் தயாராக வந்து விடுங்கள்.


 அடுத்த முறை கட்டாயம் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால், என்னிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்காத ஆர்டர் வரும்’ என்று கடுமை​யாக எச்சரித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு 25-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றும் வராவிட்டால், வாரன்ட் பிறப்பிக்கப்படுமாம்!''


''இதுவரை ஒழுங்காக ஆஜராகி வந்தாரே சசிகலா?''


''திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமி சமாதிக்கு அமாவாசை தோறும் வருவதாக சசிகலா வேண்டி இருக்கிறாராம். இங்கு வந்தால் செவ்வாய்க்கிழமை அங்கு போக முடியாது என்று நினைத்தாராம். அதனால் வரவில்லையாம்!'' என்ற கழுகாரிடம்...


''இன்று சொன்ன பாதி மேட்டர்கள் பூஜை, புனஸ் காரங்களாகவே இருக்கின்றனவே!'' என்று கேட்டோம். பதில் சொல்லாமல் சிரித்தார், பறந்தார்!


    
குண்டாஸ்..!
சேலம், அங்கம்மாள் காலனியில் இருந்த குடிசைகளுக்குத் தீ வைத்த விவகாரத்தில் இரண்டு வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். அங்கம்மாள் காலனியில் இருந்த ஜெயலலிதா ஃப்ளெக்ஸுக்குத் தீ வைத்தது, கடந்த முறை அவர் கைது செய்யப்பட்ட நேரத்தில் தி.மு.க-வினர் ஜெயலலிதா போன்று சேலை அணிந்து அசிங்கப்படுத்தியது என ஆறுமுகத்தின் மீது தீராத கோபத்திலேயே இருந்தது மேலிடம்.


 அதனால்தான், சென்னையில் கைது செய்யப்பட்டவரை சேலம், புழல், வேலூர் என்று அலைக்கழித்தது போலீஸ். இன்னும் சில நாட்களில் ஜாமீன் கிடைத்து விடும் என்ற நிலையில், இப்போது குண்டர் தடுப்புச் சட்டம்  பாய்ந்திருக்கிறது. இப்போதைக்கு, ஆறுமுகம் வெளியில் வருவது கஷ்டம்தான்!



 நன்றி - தட்ஸ் தமிழ் , ஜூ வி , தகவல் சொன்ன ட்விட்டர் நண்பர்கள்,தினமணி, கார்ட்டூனிஸ்ட் மதி

Saturday, August 27, 2011

ஜெ நினைத்தால் தூக்கு தண்டனையை ரத்து செயலாம்.. செய்வாரா ஜெ?

தூக்குக் கயிறை வெட்டும் கத்தி முதல்வர் கையில்!

தழுதழுத்த தமிழருவி மணியன்

டந்த 22-ம் தேதி, சென்னை எம்.ஜி.ஆர். நகரில் 'மூன்று தமிழர்கள் உயிர்க் காப்பு இயக்கத்தின்’ சார்பில் நடந்த பொதுக் கூட்டம்... முன்பு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்தையே அசை போடவைத்தது. அலை கடலெனத் திரண்டிருந்த கூட்டத்தின் முன், அடங்காத ஆவேசத்துடன் இயக்கத்தினர் பேசிய பேச்சுக்கு, பெரும் வீச்சு!

 தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மணியரசன் எடுத்த எடுப்பிலேயே, ''காந்தி நம் தேசத் தந்தை என்று கூறிக்கொண்டு, அன்பு, அமைதி, சமாதானம் குறித்து வாய் கிழிய முழங்கும் மத்திய அரசே, தூக்குத் தண்டனையை உடனடியாக நீக்கு. 'பழிக்குப் பழி... ரத்த வெறி...’ என்ற போக்குடன் நீ தொடர்ந்து செயல்பட்டால், இந்தியாவின் தேசத் தந்தையாக கோட்சேவைப் பிரகடனம் செய். அசோகச் சக்கரத்தை அப்புறப்படுத்திவிட்டு தூக்குக் கயிறை வை!'' என்று சீற, கூட்டம் முறுக்கேறி நிமிர்ந்தது.


அடுத்துப் பேசிய தமிழருவி மணியன், ''தமிழினத்தின் உண்மை​யான தலைவர் பழ.நெடுமாறன் அவர்களே... தமிழினத்தின் உண்மையான தளபதி வைகோ அவர்களே...'' என்று புன்முறுவலுடன் ஆரம்பிக்க, தி.மு.க. மீதான முதல் அட்டாக்கை கரகோஷத்தோடு ரசித்தது கூட்டம்.

தொடர்ந்த மணியன், ''இன்று இனத்தைக் காட்டிக்கொடுப்பதுதான் காங்​கிரஸின் ஒரே அடையாளமாக இருக்கிறது. அந்தக் கட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்றும் வரை யாரும் ஓயக் கூடாது. கடந்த தேர்தலில் பி.ஜேபி. போட்ட பிச்சையில் காங்கிரஸ் சார்பில் ஐந்து பேர் சட்டமன்றம் போனார்கள்.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஓர் இடத்தில்கூட காங்கிரஸ் ஜெயிக்கவில்லை என்ற சூழலை நீங்கள் உருவாக்கினால், உங்கள் மான உணர்வு உலகுக்கு உணர்த்தப்படும். ப.சிதம்பரம் குறித்து எனக்கு முன்பு சிலர் பேசினார்கள். விதி வசத்தாலும், வினைப் பயனாலும் தமிழனாக வந்து உதித்தவர் சிதம்பரம். உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய தமிழன், மூன்று தமிழர்களின் உயிரைப் பறிப்பதற்கு பரிந்துரை செய்தால், 'அவர் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம்தானா?’ என்று சந்தேகமாக இருக்கிறது...'' எனக் கொந்தளித்தவர், ''தமிழக முதல்வர் அவர்களே... இந்த மூன்று தமிழர்களின் தூக்குக் கயிறை அறுத்து எறியும் கத்தி உங்களிடம்தான் இருக்கிறது. உங்களால் மட்டுமே இது முடியும்!'' என்ற கோரிக்கையுடன் முடித்தார்.

தண்டனைக்கு உள்ளான தமிழர்களுக்காக, கடந்த காலத்தில் நடத்திய சட்டப் போராட்டங்களைப் பட்டியலிட்டுப் பேசிய பழ.நெடுமாறன், ''விரைவில் நமது இயக்கத்தின் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிர் காக்க வலியுறுத்துவோம்!'' என்றார்.

கடைசியாக மைக் பிடித்த வைகோ, ''சில நாட்களுக்கு முன்பு பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை சந்திக்க, வேலூர் சிறைக்குப் போனேன். மூவர் முகத்திலும் நான் எந்தக் கலக்கத்தையும் பார்க்கவில்லை. பதற்றம், பயம் இன்றி எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்தார்கள். ஏன் தெரியுமா? 'தாய்த் தமிழகம் தங்களைக் கைவிடாது, காப்பாற்றும்’ என்ற நம்பிக்கைதான் காரணம்.

உலகத் தமிழர்கள் அனைவரும் தற்போது முதல் அமைச்சரின் உரிமையை எதிர்பார்த்துக் காத்து இருக்கிறார்கள். 'முதல்வர் அவர்களே... மூவர் உயிரைக் காத்திடுக... வரலாற்றுச் சாதனை புரிந்திடுக... விதி 162-ஐ கையில் எடுங்கள்’ என்பதே அனைவரின் கோரிக்கை. இனி யாரிடத்தில் போய் நாங்கள் முறையிடுவோம்? 'கருணை மனுக்களை ஜனாதிபதி விரைவில் நிராகரிக்கப்போகிறார்’ என்று நம்பத் தகுந்த தகவல் வந்ததும், உடனடியாக டெல்லிக்கு ஓடினேன்.

பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, 'மூன்று நிரபராதிகளைத் தூக்கிலிட முயலாதீர்கள்’ என மனு கொடுத்து மன்றாடினேன். ஆனால், அந்தக் கல்லுளிமங்கர் கண்டுகொள்ளவில்லை. அடுத்த சில நாட்களில் கருணை மனு நிராகரிக்கப்பட்டது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கோத்தபய ராஜபக்ஷே விமர்சிக்கிறான். மத்திய அரசே நீ இலங்கைத் தூதரை அழைத்துக் கண்டித்தாயா? அவன் யார் எங்கள் சட்டமன்றத் தீர்மானத்தை விமர்சிக்க? அது யாரோ ஒரு சிலரின் குரல் அல்ல... ஏழரைக் கோடி தமிழர்களின் குரல்!'' என்று முழங்கிய வைகோ, இறுதியாக, ''மூவர் உயிர் காக்கப்பட வேண்டும் என்ற காரணத்தால் அமைதியாக இருக்கிறோம். எதிர்மறையாகப் பேச விரும்பவில்லை.

அவர்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால்... அந்தச் சம்பவம் நடந்தது 1991. இது 2011. நினைவில் வைத்துக்கொள். அவர்களுக்கு ஆபத்து என்றால், இன்னும் நிறைய முத்துக்குமரன்கள் வருவார்கள். தீயை தங்கள் மேல் வைத்துக்கொள்ள அல்ல..! தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல் இதே போக்குடன் நீ செயல்பட்டுக்கொண்டுஇருந்தால்... இந்தியா சுதந்திரம் அடைந்தது 1947... ஆனால், 2047-ல் தமிழ்நாடு உன்னோடு இருக்காது!'’ என்று கர்ஜிக்க... ஆர்ப்பரித்தது கூட்டம்!


''கௌரவத்தைக் கைவிடுங்க!''

மூவர் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் குரல் கொடுக்கும், ராமதாஸ், திருமாவளவன், சீமான் ஆகியோர் எம்.ஜி.ஆர். நகர் கூட்டத்துக்கு வரவில்லை. அவர்கள் கட்சிப் பிரதிநிதிகள் மட்டும் வந்திருந்தனர். ''அனைத்துக் கட்சி சார்பில் நடக்கும் இதுபோன்ற நிகழ்வுக்கு வராமல் அப்படி என்ன கௌரவம் பார்க்கிறாங்களோ? இவங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தா, அடுத்த முறை புறக்கணிக்கக் கூடாது!'' என்று தமிழ் உணர்வாளர்கள் பேசிக்கொண்டனர்.


தூக்கு?

அதிர்ச்சி அரசியல்... திகில் விவரங்கள்

''அம்மா, மிகுந்த அறிவும் ஆய்ந்தறியும் பேராற்றலும் கொண்டவர் நீங்கள். இந்த வழக்கில் இருக்கும் குளறுபடிகளை நீங்கள் நிச்சயம் அறிவீர்கள். என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் சாவின் மடியில் கிடப்பவனாகக் கேட்கிறேன்... தயவுசெய்து தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுங்கள். இத்தனை வருடங்களாக வாடும் எங்களுக்காக உங்களின் ஒற்றைக் குரல் ஒலித்தால் போதும்!'' - கடந்த ஜூ.வி. இதழ் மூலமாக முதல்வர் ஜெயலலிதாவிடம் பேரறிவாளன் வைத்திருந்த கண்ணீர்க் கோரிக்கை இது. ஆனால், இந்தக் கண்ணீர் இன்னமும் அரசுத் தரப்பை அசைக்கவில்லை என்பதுதான் துயரம்!

ஆம்; நடக்கக் கூடாது என நினைத்தது, நடந்தேவிட்டது. ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக்கு ஆளாகி வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருடைய கருணை மனுக்களும் சமீபத்தில் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து மூவருக்கும் தூக்கு வேளை நெருங்கிவிட்டதாகப் பரபரப்புக் கிளம்ப, தமிழகம் முழுக்க உருக்கமான கோரிக்கைப் போராட்டங்கள் நடந்தன.

இலங்கையின் போர்க் குற்றங்களைக் கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய முதல்வர் ஜெயலலிதாவை நோக்கி கண்ணீர்க் கரங்கள் நீண்டன. சட்டமன்றக் கூட்டத் தொடர் நடக்கும் இந்த நேரத்தில் தூக்குத் தண்டனைக்கு எதிரான சட்ட வடிவத்தை ஜெயலலிதா இயற்றுவார் என்கிற எதிர்பார்ப்பும் நிலவியது.


ஆனால், அந்த நம்பிக்கையை தகர்க்கும் விதமாக, சிறைத் துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அதிரவைத்திருக்கிறது தமிழக அரசு. கடந்த 25-ம் தேதி மாலை உள்துறைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா மூலமாக வேலூர் சிறைக் கண்காணிப்பாளருக்கு ஸ்பீட் போஸ்ட்டில் அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், ''நடவடிக்கை எடுப்பதற்கான கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளேன். நடவடிக்கை எடுத்த பின் உடனடியாக அரசுக்கு அறிக்கை அனுப்பவும்!'' என மிகச் சுருக்கமான முறையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


மூவருடைய தூக்குத் தண்டனைக்கும் எதிராக நிச்சயம் தமிழக அரசு குரல் கொடுக்கும் என உறுதியாகப் பலரும் நம்பி இருந்த வேளையில், அதிர்ச்சிகரமான இந்த முடிவு எப்படி எடுக்கப்பட்டது?

இது குறித்துப் பேசும் அரசுத் துறையில் உள்ள உணர்வாளர்கள், ''கருணை மனு நிராகரிக்கப் பட்ட கடிதம், கடந்த 16-ம் தேதியே தமிழக அரசுக்கு வந்துவிட்டது. உடனே அரசுத் துறை செயலாளர்கள் அந்தக் கடிதம் குறித்து ஆலோசனை நடத்தி, முதல்வரிடம் தகவல் சொன்னார்கள். 'கூட்டத் தொடர் நடக்கும் இந்த நேரத்தில் இது குறித்து எந்த முடிவு எடுப்பதும் சரியில்லை. அதனால், கூட்டத் தொடர் முடிந்த பிறகு இதுபற்றிப் பேசலாம்!’ என்றார் முதல்வர்.

அதனால், இப்போதைக்கு இந்த விவகாரத்தில் பயப்பட வேண்டியது இல்லை என்கிற நிலை நிலவியது. இதற்கிடையில், கிருஷ்ணசாமி, சரத்குமார், ஜவாஹிருல்லா, தனியரசு உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்கள் பலரும் இந்த விவகாரம் குறித்து முதல்வரிடம் பேச முயற்சித்தார்கள். சீமான் மூலமாகவும் முதல்வருக்கு உருக்கமான கோரிக்கை வைக்க முடிவானது. 'முதல்வரை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைப்போம்’ என எம்.ஜி.ஆர். நகர் கூட்டத்தில் நெடுமாறன் பகிரங்கமாகவே அறிவித்தார். ஆனால், இதற்கிடையில் எங்கிருந்து உத்தரவு வந்ததோ... அரசுத் தரப்பு அதிகாரிகள் 25-ம் தேதி காலையில் இருந்தே பரபரப்பாக இந்த விவகாரம் குறித்துப் பேசத் தொடங்கினார்கள்.

முதல்வரின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த கருணை மனு நிராகரிக்கப்பட்ட ஃபைல் முதன்மைச் செயலாளர் சாரங்கியின் டேபிளுக்குக் கொண்டுவரப்பட்டது.

'இதில் நாம் ஒன்றும் செய்ய முடியாது. உடனே மத்திய அரசின் கடிதத்தை சிறைத் துறைக்கு அனுப்பிவிடுங்கள்’ எனச் சொல்லிவிட்டாராம் சாரங்கி. 'அரசு உத்தரவு வந்த ஏழு நாட்களுக்குள் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவோம்’ என சிறைத் துறை அதிகாரி டோக்ரா ஏற்கெனவே அறிவித்திருக்கும் நிலையில், அரசுத் தரப்பின் இந்த வேகம் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்திருக்கிறது. 26-ம் தேதி காலையில் கடிதம் சிறைத் துறைக்குக் கிடைக்க, அடுத்த ஏழு தினங்களுக்குள் மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனையை அதிகாரிகள் நிறைவேற்றக் கூடும்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக செயல்படாவிட்டாலும், அந்தக் கடிதத்தைக் கிடப்பில் போட்டு வைக்கலாம் என்பதுதான் முதல்வரின் எண்ணமாக இருந்தது. ஆனால், அதிகாரிகள் தரப்பில் சிலர் திட்டமிட்டு மத்திய அரசின் பெயரைச் சொல்லி இந்த விவகாரத்தை விரைவுபடுத்திவிட்டார் கள்.

முதல்வர் நல்லது செய்ய நினைத்தும் அதிகாரிகள் சிலரால் நிலைமை கைமீறிப் போய்விட்டது தமிழக அரசு கைவிரித்துவிட்ட நிலையில், முறைப்படியான சட்டப் போராட்டங்களால் மட்டுமே மூவருக்குமான தூக்குத் தண்டனையைத் தடுக்க முடியும். ஐந்து நாட்களுக்குள் சட்ட ரீதியான தடை உத்தரவை நீதிமன்றத்தில் பெற முடியாமல் போனால்... மூவருக்கும் எந்த நேரத் திலும் தூக்குக் கயிறு விழும்!'' என்கிறார்கள் ஆதங்கமாக.


அரசுத் தரப்பில் பேசும் அதிகாரிகளோ, ''கொலையானவர் முன்னாள் பிரதமர் என்கிற நிலையில் ஒரு மாநில அரசால் இந்த விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது. கொலையாளியை நியாயப்படுத்தும் செயல்பாடாகக் கருதப்பட லாம் என்பதற்காகவே, முறைப்படி கடிதம் சிறைத் துறைக்கு அனுப்பப்பட்டது!'' என்கிறார்கள்.


இதற்கிடையில் சீமான் மூலமாக தூக்குத் தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பேரறிவாளன், முருகன் சாந்தன் மூவரின் சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியை களம் இறக்கும் வேலைகள் தீவிரமாக நடக்கின்றன. வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட உணர்வாளர்கள் பலரும் ஒன்றுகூடி சட்டப் போராட்டம் நடத்தவும் தீவிர வேலைகள் நடக்கின்றன. 'தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பல விவகாரங்களில் நீதிமன்றம் மூலமாக தடை வாங்கிய பல தீர்ப்புகளை முன் உதாரணமாக வைத்து மூவருடைய உயிர்களையும் காப்பாற்ற முடியும்’ என்றும் உறுதியாக நம்புகிறார்கள்.


கைவிடப்பட்ட இந்த மூவரின் உயிரை அடுத் தடுத்த சட்டப் போராட்டங்களாவது மீட்டுக் கொடுக்குமா? கண்ணீரோடு காத்திருக்கிறார்கள், கவலைப்பட மட்டுமே தெரிந்த தமிழர்கள்!

thanx -ju vi