Showing posts with label ஹன்சிகா. Show all posts
Showing posts with label ஹன்சிகா. Show all posts

Thursday, December 25, 2014

மீகாமன் - சினிமா விமர்சனம்


 

1000  கிலோ கொக்கைன் எனும்  போதை  மருந்து  வில்லன்  கிட்டே  இருக்கு.இன்னொரு  வில்லன் குரூப்  அதை அபேஸ்  பண்ண  நினைக்குது. அதைக்கைப்பற்ற போலீஸ்  திட்டம்  போடுது. ஹீரோ  ஒரு  போலீஸ் ஆஃபீசர். 2  க்ரூப்  வில்லன்களையும்  மோத  விட்டு  பிடிக்க  பிளான், ஹீரோயின்  வழக்கம்  போல  ஒரு லூஸ். எல்லா  தமிழ்ப்படத்துலயும் அப்டித்தானே  காட்டறாங்க?தன்   வீட்டுக்கு  வாடகைக்கு  குடி  வந்தவன்  ஒரு தீவிரவாதியா? சாஃப்ட்வேர் எஞ்சினியரா?ன்னே தெரியாம  பேக்கு  மாதிரி  இருக்கு .


வில்லன்  க்ரூப் ல   2  போலீஸ் ஆஃபீசர்ங்க  அவங்க ஆள்  மாதிரியே  சேர்ந்து வேலை செய்யறாங்க . குருதிப்புனல் ல வர்ற  மாதிரி  ஒருஆளை  கண்டு  பிடிச்சு  26  நிமிசம்  சித்ரவதை பண்ணி வில்லன்  இன்னொரு ஆள்  யாரு?னு  கேட்கறார்.இந்த   26  நிமிஷம்  சித்ரவதை செஞ்சதுக்கு  ஹன்சிகா  கூட 4  ரொமான்ஸ்  சீன்  வெச்சிருக்கலாம். தமிழன்  ஜாலியா  கிறிஸ்மஸ்  லீவைக்கொண்டாடி  இருப்பான். ஸ்டண்ட்  சீன் நல்லா  வடிவமைச்சுட்டா  போதும் , திரைக்கதை  எப்படிப்போனா  என்ன? -னு  நினைச்சுட்டாங்க  போல .


தன்  குடும்பம் நல்லாருந்தா போதும் , தமிழன்  எக்கேடு  கெட்டா என்ன?னு  சில அரசியல்வாதிக  நினைக்கற  மாதிரி  இப்பவெல்லாம்  ஆக்சன்  படம்  எடுக்கும்  இயக்குநர்கள்  ஸ்டண்ட்  மாஸ்டரை  வெச்சு ஆக்சன்  சீக்வன்ஸ்  நல்லா  பண்ணிட்டா  படம்  தேறிடும்னு  நினைக்கறாங்க . 


ஹீரோவா ஆர்யா. லவ் , காமெடின்னு  கலக்கிட்டு  இருந்தவர்  ஆக்சன் படத்தில்  களம்  இறங்கி  இருக்கார். அவரது  வாட்டசாட்டமான  உடம்புக்கு  ஆக்சன்  பேக்கெஜ் செமயா   ஃபிட் ஆகுது. இறுக்கமான  முகத்துடன்  படம்  பூரா வர்றாரு. நல்ல  நடிப்பு 


 ஹீரோயினா  ஹன்சிகா. ஏனோதானோ நடிப்பு.  சிம்பு  காதல் தோல்வியால  பாப்பா  ரொம்ப  மனசை  விட்டுடுச்சு  போல,


வில்லன்  நடிப்பு சுமார் தான். ரகுவரன்  பிரகாஷ்ராஜ்  மாதிரி பல வித்தியாச ஆக்டிங்க் பார்த்த  நமக்கு இது  எல்லாம்  ஜுஜுபி







மனதைக் கவர்ந்த  வசனங்கள்



ஒரு செல்போனை ,சிம்மை ஒரு நாளுக்கு மேல் யூஸ் பண்ண மாட்டான் # மீகாமன்


எங்கே போய் இருந்தே? 


 ஆர்யா = பொம்பளையைப்பார்க்க. 

 யாரு? 

 போலீஸ்காரன் பொண்டாட்டி

 டேய் காதல் இளவரசா ! # மீகாமன்


3
எதிரி நமக்குக்கொடுக்கும் வலியை அப்படியே திருப்பிக்கொடுக்கனும்# மீகாமன்


4  நீங்க  சாஃப்ட்வேர் இஞ்சினியரா?

அதுக்குதான் படிக்க ஆசை.ஆனா வீட்ல ரொம்ப கஷ்டம், அதனால  அக்யூஸ்ட் ஆகிட்டேன் # மீகாமன்


5  வில்லன் = அவன்  ஃபைட்  போடும் ஸ்டைலைப்பார்தியா? 30  செகண்ட்ல  6  பேரை  அடிச்சிருக்கான். இதுல  இருந்து  என்ன  தெரியுது?#மீகாமன்




6   நீ  ஆடறது  தற்கொலை  ஆட்டம்.

 களம் இற ங்கியாச்சு. ஆடி தான்  பார்ப்போமே?#மீகாமன்



 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்



ஓப்பனிங் ஷாட் ல ஹீரோ பிளேடை எடுக்கறாரு. ஓஹோ.இது சிம்பாலிக் ஷாட்டா?


2
ஹீரோயின் ஓப்பனிங் ஷாட் ல தலைக்கு மேல தென்னை மரத்தை ,தேங்காயைக்காட்றாங்க.்.ஏதோ குறியீடு போல


3
120 செமீ சைஸ் பனியன் போட வேண்டிய ஹீரோயின் 85 செமீ பனியன் போட்டிருக்கு.பாவம்.லோ பட்ஜெட் படம் போல


4
ஹன்சிகா பேசும் வசனத்தில் சிம்பு க்கு ஏதாவது மெசேஜ் கொடுப்பார்னு தமிழன் எதிர்பார்க்கறான்.பார்ப்போம்

5  நீங்க சாஃப்ட்வேர் இஞ்சினியரா? அதுக்குதான் படிக்க ஆசை.ஆனா வீட்ல ரொம்ப கஷ்டம், அதனால அக்யூஸ்ட் ஆகிட்டேன் # மீகாமன்


6 U/A சர்ட்டிஃபிகேட் பாத்துட்டு ஹன்சிகாவுக்குத்தான் சீன் இருக்கும்னு நம்பி வந்தா  வில்லன் அரை மணி நேரம்  போலீஸை , அடியாளை சித்ரவதை பண்றான்




7  தடையறத்தாக்க  போலவே  இதிலும் அனல் அரசு பட்டாசைக்கிளப்பி இருக்காரு. ஆக்சன் காட்சிகள்  அதகளம்@மீகாமன்




8  குருதிப்புனல்  டைப்ல ஒரு படம்  பண்ணனும்னு தான் இயக்குநர்  நினைச்சிருக்காரு. திரைக்கதை அந்த சாயல்ல  தான்  போகுது. ஆனா டோட்டல்  ரிசல்ட்?




9 ஜேம்ஸ்பாண்ட்  படம்  மாதிரியே   இருக்கு, ஐ மீன்  ஹீரோ  10 நிமிசமா  சீட்டாடிட்டே  இருக்காரு.,நல்ல  வேளை செஸ்  விளையாடற மாதிரி  காட்டலை

10 புன்னகை மன்னன்லகமல்ரேவதியைப்புரட்டிஎடுத்தமாதிரி  டான்ஸ்சொல்லித்தரும் சாக்கில் ஆர்யா ஹன்சிகாவை  என்னென்னமோ  பண்றாரு.என்ன கொடுமை சிம்பு இது?


11   மன்மதன்  ல  வர்ற மாதிரி  ஹீரோ  தன்னை  ரேப்  பண்ண ட்ரை பண்றதா   ஹீரோயின்   கனவு  காணுது # அய்யோ  ராமா










இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  கேமரா ஆங்கிள் எல்லா  ஷாட்லயும்  ஒரு  வித்தியாசமான  படம்  பார்க்கும்  உணர்வைத்தருது. 


2  இடைவேளைக்கு  முன் வரும்  2  ஃபைட்  சீன்ஸ் , பின் வரும்   ஒரு ஃபைட்  சீன்  மூன்றும் கலக்கல்  ரகம் .  வெல்டன்  அனல்  அரசு 


3  காமெடி டிராக் என்ற  பெயரில்   மொக்கை போடாமல்  படம்  பூரா  ஆக்சன்  த்ரில்லர்  ட்ராக்கில்  பயணிப்பது  பிளஸ்




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  போலீஸ் ஆஃபீசர்ஸ்  எல்லாரும்  ஐயப்ப சாமிக்கு மாலை  போட்டிருக்காங்களா? ஃபங்க்  விட்டுட்டு  தாடியோட    சுத்திட்டு  இருக்காங்க ? 


2  ரவுடிங்க  , தீவிரவாதிங்க  எல்லாருமே   முஸ்லீமாத்தான்  இருப்பாங்களா? 


3 ஹீரோ  வில்லன்  அடியாட்களை சுடும்போது  கூட ஸ்டைலா  கூலிங்  கிளாஸ்  போட்டுட்டே  சுடறாரு .  எப்படி  குறி  வைக்க  முடியும் ?

4  ஹீரோ  -  ஹீரோயின்  ரொமான்ஸ்  காட்சிகள்  க்ளைமாக்ஸ்  வரும்போது  தான்  வருது . ஏன் ? சிம்பு  தடுத்துட்டாரா? முன்  பாதி  காட்சிகள் ல  மருந்துக்குக்கூட  காதல்  காட்சியே  வர்லையே? 





 




சி  பி  கமெண்ட்  -   மீகாமன் - ஆர்யாவின்  ஃபுல் அண்ட் ஃபுல் ஆக்சன்  ஹீரோ அவதாரம்.ஸ்டைலிஸ்  மேக்கிங் - விகடன்  மார்க் = 43   , ரேட்ட்டிங் = 3 / 5 . தடையறத்தாக்க  அளவு  வர்லை . இருந்தாலும்  ஓக்கே  ரகம்,  ஏ செண்ட்டர்ல  ஓடிடும.  பெண்கள்  பார்க்க  முடியாது   . வன்முறைக்காட்சிகள்  அதிகம்



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -  43



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = ஓக்கே


டிஸ்கி  - கயல்  - சினிமா விமர்சனம்


http://www.adrasaka.com/2014/12/blog-post_58.html

டிஸ்கி 2  கப்பல் - சினிமா  விமர்ச்னம்


http://www.adrasaka.com/2014/12/blog-post_83.html

  டிஸ்கி - 3 வெள்ளக்காரதுரை - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2014/12/meegaman-stills.html



 ரேட்டிங்  =  3  / 5



a








மீகாமன் படத்தில் ஹன்சிகா வை ஹீரோயினாக போட்டதில் என்ன ரகசியம் ? -இயக்குநர் மகிழ்திருமேனி பேட்டி

யதார்தத்தைப் புரிந்து கொள்வதில் சிக்கல்! இயக்குநர் மகிழ்திருமேனி

mega


“”சில நேரங்களில் வாழ்க்கையை ஆச்சரியமும், அச்சமும் கலந்து பார்க்க நேர்ந்து விடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வரலாறு இருக்கிறது. பிறக்கும் போது அவனோடு பிறக்கிற வரலாறு, அவன் இறந்த பின்னாலும் அவன் உறவுகள் மூலமாக சுத்திக் கொண்டே இருக்கிறது. என் கடவுள், என் மதம், என் ஜாதி, என் பயம், என் பணம்… இப்படி எத்தனை எத்தனை விஷயங்கள் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இந்த எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடைய துடிக்கிறார்கள். ஒரு சிலர்தான் சில நல்ல நிமிஷங்களை தவிர வேறு எதையும் விட்டு விட்டு போகக் கூடாது என நினைக்கிறார்கள். இந்த மாய மந்திரம் சினிமாவுக்கும் பொருந்தும். ஆமாம், இது நல்லதொரு சினிமா.” புத்தகங்கள் விரிந்து கிடக்கும் அறையிலிருந்து உதடுகள் பிரியாமல் சிரிக்கிறார் மகிழ்திருமேனி. “தடையறத் தாக்க’ தந்து கவனம் ஈர்த்தவர். இப்போது “மீகாமன்’ படத்தின் இறுதிக் கட்ட பணிகளில் இருக்கிறார்.



“மீகாமன்’ என்னென்ன விசேஷங்கள்….?




மீகாமன் என்றால் கப்பலின் தலைவன் என்று பொருள். மாலுமிகளின் துணை கொண்டு கப்பலை கடலுக்குள் பத்திரமாக செலுத்தும் பொறுப்புள்ளவன். அவனுடைய வழிகாட்டுதல் இல்லையென்றால் கப்பல் குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாது. எங்கேயும், எந்த இடத்திலும் இலக்கை மட்டுமே யோசிப்பவன். இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு அப்படியொரு பக்குவம் கலந்த கதாபாத்திரம். அதன் குறியீடாகத்தான் படத்துக்கு “மீகாமன்’ என்ற பெயர். ரொம்பவே அடர்த்தியான ஆக்ஷன் த்ரில்லர். கூடவே ரொமான்டிக் உள்ள கதை. போதை பொருள் கடத்தல் இந்த படத்தின் பேசு பொருள்.



ஒரே மாதிரியாக வந்தாலும், ஒவ்வொரு படத்திலும் ஆர்யா “ஹேண்ட்சம்….’ இதில் எப்படி வந்திருக்கிறார்….?



ஆர்யாவுக்கு ஆக்ஷன் படங்கள் அந்நியமில்லை. ஆனால் இது தனித்து தெரியக் கூடிய படமாக இருக்கும். அவரின் “ஆக்ஷன் எபிசோடு’ பற்றி பேசும் போது இந்தப் படம் முன்னுக்கு வந்து நிற்பதை தவிர்க்க முடியாது. யாரை நடிக்க வைக்கலாம் என்பதில் எனக்கு எந்தத் தீர்மானமும் இல்லை. சில யோசனைகளுக்குப் பின் தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜபக்தான் ஆர்யா எப்படி? என்று ஆரம்பித்தார். நான் உருவாக்கி வைத்திருந்த கதாபாத்திரம் ஆர்யாவுக்கு அப்படியே பொருந்தி வந்தது. ஆர்யா ரொம்பவே கலாட்டா பேர் வழி. சீரியஸ் கதையில் அவர் எப்படி…? என்கிற வாதங்களும் முன் வைக்கப்பட்டன. ஆனால் அவர் கதை கேட்ட விதம், இதை அவர் பக்குவமாக முடித்து தருவார் என்ற நம்பிக்கையை தந்தது. இதுதான்… இப்படித்தான் இருக்கும் என்று வருபவர்களுக்கு இன்னும் நிறைய ஆச்சரியங்கள் தர போகிறார் ஆர்யா.





ஹீரோயின் இடத்துக்கு சமந்தா, நயன்தாரா என “செம மியூசிக்கல் சேர்’ நடந்ததே… ஆனால் சீட்டு குலுக்கி போட்டது மாதிரி ஹன்சிகாவே வந்து விட்டாரே…?




“மீகாமன்’ என்றால் கட்டளைகள் பிறப்பிப்பவன். அதிகாரம் மிக்கவன். அவன் காதலிக்கிற பொண்ணு ஏஞ்சல் மாதிரி இருக்க வேண்டும் இல்லையா? நிறைய ஹீரோயின்கள் மனசுக்குள் இருந்தார்கள். கடைசியாக அந்த இடத்துக்கு ஹன்சிகாதான் பொருத்தமாக வந்தார். ஏற்கெனவே ஆர்யாவுக்கும், ஹன்சிகாவுக்கும் இருக்கிற கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். ஆனால், சினிமாவைத் தாண்டி நண்பர்களாக பழகும் அவர்களின் தோழமை படத்துக்கு இன்னொரு பலம். காசு, பணம் தாண்டி ஹன்சிகா நல்ல உழைப்புக்கு தயாராக இருக்கிற ஹீரோயின். நேரம் கடைப்பிடித்தல், வசனங்களை முடிந்த அளவுக்குப் புரிந்து கொண்டு பேசுதல் என படப்பிடிப்பில் அசத்தி விட்டார் ஹன்சிகா. ஆர்யாவுக்கு கதையில் எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அதில் சரி பாதி ஹன்சிகாவுக்கு உண்டு. கதையின் முழு பலத்தை தாங்கி பிடிக்கிற மாதிரி ஹன்சிகாவுக்கு இன்னும் படங்கள் இல்லாதது பெரும் குறை. அதை ஓரளவுக்குப் பூர்த்தி செய்திருக்கிறது இந்தப் படம்.




தீவிர புத்தக வாசிப்பாளர் என்பதால் இந்த கேள்வி… தமிழில் எவ்வளவோ நல்ல இலக்கியக் கதைகள் இருந்தும் படமாக உருவெடுப்பது இல்லையே… ஏன்…?




சமுதாயம் மாதிரி… அரசியல் மாதிரி… இந்த மக்கள் மாதிரிதான் சினிமாவும் இருக்கும். மக்கள் எப்படியோ அரசனும் அப்படியே என்று சொல்லுவார்களே அதுபோல்தான். ஒரு தலைவனைப் போல் கலைஞனுக்கும் பங்கு இருக்கிறது. மக்கள் விரும்பும் ஆட்சி போல, மக்களுக்கு பிடிக்கிற சினிமாக்களை கொடுக்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. இங்கு எது யதார்த்தம் என்று புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கிறது. எதைக் காட்டினாலும் அதன் ஒரிஜினல் முகத்தைக் காட்ட வேண்டும். ஈரான் படமான “தி செபரேஷன்’ பார்த்தால், நம்மூர் இயக்குநர்கள் மீது கோபம் வரலாம். மக்களின் வாழ்க்கையை, போராட்டங்களைக் காட்டுகிற படங்கள் ஒரு போதும் தோற்காது என்கிற நிலைமை வர வேண்டும். அதன் பின் இலக்கியத்தரம் பற்றி பேசலாம்.




- ஜி.அசோக்

Monday, October 20, 2014

ஹன்சிகா, நயன்தாரா திரும்பவும் உங்ககிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொன்னா ஏற்றுக்கொள்வீர்களா? - சிம்பு பேட்டி

உங்களுக்கு வரப்போற மனைவி ஹன்சிகா மாதிரி இருக்கணுமா, நயன்தாரா மாதிரி இருக்கணுமா? என்ற கேள்விக்கு, ‘‘என் மனைவி மாதிரி இருக்கணும். ஹன்சிகா, நயன்தாரா மாதிரியெல்லாம் எனக்கு மனைவி எதுக்கு?’’ என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார் சிம்பு. சர்ச்சையான கேள்வியாக இருந்தால் வேண்டாம் என்னும் நடிகர்கள் மத்தியில், எந்தக் கேள்வி என்றாலும் பளிச்சென்று பதில் சொல்லிவிடுவார் சிம்பு. அவருடன் பேசியதிலிருந்து.. 


‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ படங்கள் எப்போ ரிலீஸ்? 

 
‘வாலு’ படத்தில் ஒரு பாட்டு மட்டும் பாக்கி இருக்கு. நீங்க எப்போ கூப்பிட்டாலும் நடித்துக் கொடுக்கிறேன் என்று சொல்லிட்டேன். தேதி முடிவு பண்ணிட்டுச் சொல்றேன் என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர். ‘இது நம்ம ஆளு’ முக்கியக் காட்சிகள் எல்லாம் எடுத்து முடிச்சாச்சு. இன்னும் மூணு பாட்டு மட்டும் பாக்கி. ஒரு மாதத்தில் இசை தயாராகிவிடும். 


உங்களோட படங்கள் வருதோ இல்லயோ, ஆனா சர்ச்சைகள் மட்டும் வந்துகிட்டே இருக்கே. உதாரணமா அந்த வீடியோ? 

 
வேறு யாருக்காவது இந்த மாதிரி வந்திருந்தால் அவர் க்ளோஸ். ஆனா, நமக்கு வீடியோ வந்தா அது மாஸ். நான் எதற்கு பீல் பண்ணிட்டு இருக்கணும்? நான் எதுவுமே பண்ணவில்லை என்றாலும், வாராவாரம் என்னைப் பற்றி எழுதிக்கொண்டேதான் இருக்கிறார்கள். வாராவாரம் எழுதிட்டு, அதுக்குப் பதில் சொல்லுங்க, இதுக்குப் பதில் சொல்லுங்க என்று சொன்னால், நான் என்ன சொல்லணும்னு நினைக்கிறீங்க? திடீரென்று பாம் வெடிச்சா பதற்றம் இருக்கும். தினமும் பாம் வெடித்துக்கொண்டேதான் இருக்கிறது. அப்புறம் எதுக்குப் பயப்படணும். 


வீடியோ வந்த அன்றைக்கு, என்னிடம் பதற்றமாகக் கேட்டர்கள். “அப்படியா.. வீடியோவில் நான் என்ன பண்றேன்” என்று கேட்டேன். நீங்க ஒரு பொண்ணை கிஸ் பண்றீங்க என்றார்கள். யாரையாவது கத்தி எடுத்துக் குத்திட்டேனா... கிஸ்தானே பண்ணினேன். எல்லாரும் பண்ணினதுதானே. அடுத்த தடவை நல்ல லைட் எஃபெக்ட் எல்லாம் பண்ணி வீடியோ எடுத்துப் போடலாம் என்று இருக்கிறேன். ஆனா அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. 


உதவி செய்யும் விஷயத்திலும் அஜித்தை பாலோ பண்ணுகிறீர்கள் போல? 


 
உதவி பண்ண வேண்டும் என்று தோன்றியது பண்ணினேன். எனக்கு உதவி செஞ்சா போட்டோ எடுத்துக்கிறது எல்லாம் பிடிக்கவே பிடிக்காது. அரசியல் ஆசை இருந்தால், உதவிகள் பண்ணும்போது போட்டோ எடுத்து விளம்பரம் பண்ணிக்கொள்ளலாம். எனக்கு அரசியல் ஆசையும் கிடையாது. அஜித் சாரை இந்த விஷயத்திலும் பின்பற்றுகிறேன் என்று இல்லை. எப்போதுமே உதவி பண்ணியிருக்கேன். அதைப் பற்றி எல்லாம் சொல்லணும், பேசணும் என்று அவசியமில்லை. 



நயன்தாராவுடன் காதல் பிரிவுக்குப் பிறகு நடிக்கிறீங்க. இப்போ பார்ட்டி போற அளவுக்கு நெருக்கமாகிவிட்டீர்களே? 


 
முதல் விஷயம், நாங்க இரண்டு பேருமே சண்டை எல்லாம் போட்டுக்கொள்ளவில்லை. அந்த நேரத்தில் ஒத்துப்போகவில்லை, பிரிந்துவிட்டோம். அவ்வளவுதான். எங்கள் இருவரது மனதிலும், இப்போது எதுவுமே இல்லை. அவங்க வேலையை அவங்க பாக்குறாங்க, என் வேலையை நான் பாக்குறேன். அதனால்தான் எங்களால் இணைந்து நடிக்க முடியுது. நான், தனுஷ், நயன்தாரா, அனிருத் எல்லாருமே நட்பா இருக்கோம். அன்றைக்கு எல்லாருமே ப்ரீயா இருந்தோம். வெளியே போனோம். அவ்வளவுதான். 



இந்திப் படங்கள், தயாரிப்பு நிறுவனம் எனப் போய்க்கொண்டிருக்கும் உங்களது நண்பர் தனுஷ் வளர்ச்சியைப் பற்றி என்ன நினைக்கிறீங்க? 


 
ரொம்ப சந்தோஷப்படுறேன். தமிழ் சினிமாவில் இருந்து இந்தி சினிமாவிற்குப் போனது கொஞ்ச ஆட்கள்தான். அவரது முதல் படம், அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கு. இப்போ அங்கேயும் தொடர்ச்சியா படங்கள் பண்றார். வேறொரு மொழி பேசும் திரையுலகுக்குப் போய் ஒரு நடிகர் நடிச்சு, பெயர் வாங்குறது பெரிய விஷயம். அந்த விஷயத்தில் தனுஷ் மீது எனக்குத் தனி மரியாதை உண்டு. 


தங்கச்சி கல்யாணம் முடிந்தவுடன் எனது கல்யாண அறிவிப்பு இருக்கும் என்றீர்கள்? 


 
அப்போ ஒரு பெண்ணைக் காதலித்தேன். இப்போதான் இல்லையே. வீட்டில சொன்னா உடனே கல்யாணம் வைப்பாங்க. யாரை வேண்டுமானாலும் பண்ணுவது கல்யாணம் இல்லயே. என்னைப் புரிஞ்சுக்கிட்டு வர்ற ஒரு பெண் வர்ற வரைக்கும் எனக்குக் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா கிடையாது. 



இயக்குநர் சிம்பு என்ன ஆனார்? 

 
அடுத்த வருஷம் ஒரு படம் இயக்க இருக்கிறேன். வரும் நாட்களில் நான் எந்த மாதிரி இருப்பேன், படங்கள் பண்ணுவேனா என்பதெல்லாம் சந்தேகமே. சினிமா ஈடுபாடு வரும் காலங்களில் எப்படியிருக்கும் என்பது தெரியாததால், அடுத்த வருஷம் நானே இயக்கி, நடிக்கலாம் என்று முடிவு பண்ணியிருக்கேன். 


ஆன்மிகப் பாதையில் இருந்துகொண்டே பார்ட்டிக்குப் போவது நியாயமா? 

 
ஆன்மிகத்தில் நிறைய வழிகள் இருக்கின்றன. நான் ஆன்மிகத்திற்குள் போனதுக்குப் பிறகுதான் நிறைய பார்ட்டிகளுக்குப் போக ஆரம்பித்தேன். முதல்ல நான் யாருக்காக வாழ்கிறேன்? நான் முதல்ல என்னைச் சந்தோஷமா வைச்சுக்கணும். நான் சந்தோஷமா இருந்தால்தான், என்னைச் சுற்றி இருக்கிறவங்க சந்தோஷமா இருக்க முடியும். ஆன்மிகத்திற்குள் போன பிறகுதான், நான் வெளியே போக ஆரம்பித்தேன். 



காதலித்துத் தோல்வியடையாமல் இருக்க என்ன பண்ணணும்? 

 
காதல் அப்படின்னாலே இரண்டு பேர் கிடையாது. காதலிக்க ஆரம்பித்த உடனே நீங்க ஒருத்தர்தான் அப்படின்னு ரெண்டு பேருமே உணரணும். ஒருத்தருக்கு அது புரியல, புரிய வைக்க முடியலன்னாலும் அது வேலைக்கு ஆவாது. எல்லா விஷயத்தையும் நாம கட்டாயப்படுத்த முடியாது. ஒரு சில விஷயங்களில் விட்டுக் கொடுத்துதான் ஆகணும். 


உங்களுடைய காதல் கதையை ஒரு படமாக எடுத்தால் என்ன? 

 
என்னோட காதல் கதையைப் படமா எடுத்தால், பலருக்கு நெஞ்சு வலிதான் வரும். நிறைய சர்ச்சைகள் இருக்கும், சோகங்கள் இருக்கும். என்னோட சோகம் எல்லாம் என்னோடயே இருக்கட்டுமே. 

 

ஹன்சிகா, நயன்தாரா திரும்பவும் உங்ககிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொன்னா ஏற்றுக்கொள்வீர்களா? 

 
யாரா வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒரு பொண்ணு வந்து, எனக்கு உன்னை மட்டும்தான் பிடிக்கும். உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னா பண்ணிப்பேன். 100% எனக்குப் பிடிக்கணும். அதுதான் விஷயம். 


thanx - the hindu

Sunday, May 18, 2014

அரண்மனை -பேய்ப் படத்துக்கு மூன்று அழகான கதாநாயகிகள் எதுக்கு?: இயக்குநர் சுந்தர்.சி பேட்டி

காமெடிதான் இன்றைய டிரென்ட் என்று சொன்னாலும் பல படங்கள் ரசிகர்களை சிரிக்க வைப்பதில்லை. ஆனால் காமெடிக்கு கேரன்டி தரும் சுந்தர்.சி போன்ற இயக்குநர்கள் கோடம்பாக்கத்தில் மிகக் குறைவு. தற்போது மூன்று முன்னணிக் கதாநாயகிகளை வைத்து ‘அரண்மனை' படத்தை ஒரே மூச்சில் இயக்கி முடித்திருக்கும் அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து... 



அரண்மனை படத்தில் என்ன ஸ்பெஷல்? 


 
நான் பண்ற முதல் பேய்ப் படம் இது. முன்னால் எல்லாம் பேய்ப் படங்கள் அப்படின்னாலே பார்க்கவே மாட்டேன். திடீர் பார்த்தா இந்தப் பேய்ப் படங்களுக்கு எல்லா இடத்துலயும் ரொம்ப வரவேற்பு. குடும்பத்தோடு படம் பார்க்குறவங்களைச் சொல்லலாம். என்னோட குடும்பமே ஒரு உதாரணம். எல்லாரும் ஒண்ணா இருக்கும்போது பேய்ப் படங்கள் டிவிடியில பிளே பண்ணிட்டு ஒவ்வொரு செகண்டுக்கும் பயப்படுற மாதிரி உட்கார்ந்து ரசிப்போம். நானும் அவங்ககூட உட்கார்ந்து பேய்ப் படங்கள் பார்த்து பார்த்து ரசிகனாகிட்டேன். அந்தப் பாதிப்பில் உருவானதுதான் ‘அரண்மனை' படம். அரண்மனை வீட்ல இருக்குறவங்க ஒருத்தர் உடம்புல பேய் இருக்கு. அந்தப் பேய் யாரு அப்படிங்கிறதுதான் கதையை நகர்த்திக்கிட்டு போற சஸ்பென்ஸ். 

 

அப்போ உங்க பாணி காமெடி இதில் இருக்காதா? 


 
முழுக்க பயமுறுத்தினா நல்லா இருக்காது. அதனால காமெடி, கலர்ஃபுல் பாடல்கள் இப்படி எல்லாம் சேர்ந்த பிரம்மாண்டமான ஒரு ஜாலியான படம்தான் ‘அரண்மனை'. பூர்வீக அரண்மனை வீட்டை விற்பதற்காக வெவ்வேறு ஊர்கள்ல வாழுற ஒரே ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவங்க, அரண்மனைக்கு வந்து தங்குறாங்க. அப்போ என்ன நடக்குதுங்கிறதுதான் படம். குடும்பத்தோட வந்தாங்கன்னா சிரிக்கவும், பயப்படுவதற்கும் இதில நிறைய ஸ்கோப் இருக்கு. 



ஒரு பேய்ப் படத்துக்கு ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமி ராய்னு எதுக்கு மூணு அழகான ஹீரோயின்ஸ்? 



மூணு பேரோட கேரக்டருமே புதுசா இருக்கும். ஹன்சிகான்னாலே துறுதுறு, பப்லி இப்படிதான் இருக்கும். இதுல அந்த மாதிரி இல்லாத ஒரு ஆச்சரியமான வில்லேஜ் கேரக்டர். அதே மாதிரி ஆன்ட்ரியா இந்தப் படத்துக்கு கிடைச்ச ஒரு சர்ப்ரைஸ் பேக்கேஜ். இதுல எல்லா கேரக்டருமே முக்கியம்தான். ஹன்சிகா, ஆன்ட்ரியா, லட்சுமி ராய், நான், வினய், சந்தானம், கோவை சரளா இப்படி எல்லாருமே முக்கியமான கேரக்டர். 

 

முதல்ல இயக்குநர், அப்புறம் ஹீரோ, இப்போ இயக்கி ஹீரோவா நடிச்சிருக்கீங்க. அடுத்து என்ன திட்டம்? 


 
எனக்கு எந்தத் திட்டமும் கிடையாது. அடுத்த படம் என்ன அப்படின்னுதான் யோசிப்பேன். ‘தீயா வேலை செய்யணும் குமாரு', ‘கலகலப்பு' படங்கள்ல நான் நடிக்கிற மாதிரி எந்த ஒரு பாத்திரமும் கிடையாது. ‘அரண்மனை' கதைல நான் நடிக்கிற மாதிரி ஒரு கேரக்டர் இருந்துச்சு. நடிச்சேன். இந்த படத்தைப் பொறுத்தவரை நான் ஹீரோ கிடையாது. எனக்கு லவ், டூயட் எதுவுமே கிடையாது. அடுத்து நான் பண்ற ரெண்டு படங்களுமே வெறும் இயக்கம்தான். 

 

உங்க படங்கள்ல வர்ற காமெடி மட்டும் பெரிய வெற்றிபெற என்ன காரணம்? 


 
30 படங்கள் இயக்கியிருக்கேன், முழுநீள காமெடி படங்கள்ன்னா 3 அல்லது 4 சொல்லலாம். என்னோட படங்கள்ல காமெடி ஏன் பேசப் படுதுன்னா, எனக்குப் படங்கள்ல காமெடியைத் தனி டிராக்கா உபயோகப் படுத்துறதுல உடன்பாடு இல்ல. கதை நகர்த்துவதற்கு நான் காமெடியை யூஸ் பண்ணிக்கிறேன். காமெடி பெரிய அளவிற்குப் பேசப்படுறதுனால காமெடி படம்னு முத்திரை குத்துறாங்க. ஆனா நான் ‘அன்பே சிவம்' பண்ணியிருக்கேன். ‘கிரி' மாதிரி கமர்ஷியல் படங்களும் பண்ணியிருக்கேன். ‘வின்னர்' பார்த்தீங் கன்னா அது காமெடி படமே கிடையாது. அது ஒரு பயங்கரமான மசாலா படம். சண்டைக் காட்சிகள் எல்லாம் அவ்வளவு மெனக்கெட்டு பண்ணியிருப்போம். ஆனா அதுல வைச்ச காமெடி பெருசா பேசப்பட்டதுல காமெடி படம் ஆயிடுச்சு. 



உங்க பெண்ணை நாயகி ஆக்கிற திட்டம் ஏதும் வைச்சுருக்கீங்களா? 


 
அதெல்லாம் கிடையாது. அவங்க விருப்பம்தான். தகப்பனா நல்ல படிப்பு கொடுக்கணும், நல்ல வசதிகள் பண்ணிக் கொடுக்கணும். அது மட்டும்தான் என்னோட கடமை. 

 
நீங்களும் அரசியலுக்கு வர்ற திட்டம் இருக்கா? 

 
வீட்டுக்கு ஒருத்தர் போதும்ன்னு நினைக்கிறேன். 

 
 a



நன்றி - த இந்து

Friday, April 04, 2014

மான் கராத்தே - சினிமா விமர்சனம்

 

5 நண்பர்கள்  ( 2 பொண்ணுங்க,3 பசங்க)  கார்ல பிக்னிக் போறாங்க. ஏதோ கிளிகிளுப்பா நடக்கும்னு தமிழன் எதிர்பார்க்கறான் ( இங்கே தமிழன் கறது சாட்சாத் நான் தான் ) ஆனா அவங்க ஒரு கொல்லிமலை சித்தரை சந்திக்கறாங்க. அவர்  என்னடான்னா  எதிர்காலத்தில் வர இருக்கும்  தினத்தந்தி பேப்பரை வர வழைக்கறாரு. ( நல்ல வேளை ,சரோஜா தேவி , விருந்து எல்லாம் வர வைக்கலை )  அதுல   பீட்டர் என்கிற பாக்சரால இவங்க 2 கோடி  ரூபாய் சம்பாதிப்பாங்கனு  நியூஸ் இருக்கு. 


பீட்டரை த்தேடிப்போனா அவர் பாக்சிங்-னா என்னனே தெரியாத பகத்சிங்கா இருக்காரு. அவங்க  தங்கள்  2 கோடியை செயிச்சாங்களா? இல்லையா? என்பதே  கதை .


ஏ ஆர் முருகதாஸ் தான் கதை. அவர் இன்னும் ஏழாம் அறிவு பாதிப்பில்  இருந்து வெளில வர்லை போல . சித்தர் பாபா-னு அள்ளி விட்டுட்டு இருக்கார் 

 ஹீரோ சிவ கார்த்திகேயன் நாளைய இளைய தளபதி என்பதில் சந்தேகமே  இல்லை . நல்ல முன்னேற்றம்.  டான்ஸ் காட்சிகளில் அவர்  உழைப்பு தெரிகிறது . திரைக்கதையில்  தன்  மேடை மிமிக்ரி காட்சிகளை லாவகமாகப்பொருத்தி விடும் சமயோசிதமும்  சூப்பர் . பெண்கள் , குழந்தைகளைக்கவரும் நடிப்பு 




ஹீரோயின்  தர்பூசணிப்பழத்தின்  உள் கலர் மேனி சருமம் கொண்ட முலாம் பழ குளிர் அழகி . குழந்தைத்தனமாக முகத்தைக்காட்டி , கிளாமர்த்தனமாய் தேகத்தைக்காட்டினால் சென்சார்  ஏமாந்து  யு தருவாங்க என்ற   வித்தையை நன்கு தெரிஞ்சு வெச்சிருக்கார். 

சதீஷ்   இன்னொரு சந்தானமாக வரும் வாய்ப்புகள் பிரகாசமாத்தெரியுது . காமெடி பஞ்ச் ஒன் லைனர்கள்  குட் 


 வில்லனாக வரும்  வம்சி கிருஷ்ணா  நல்ல நடிப்பு . அவர் மனைவியாக வரும்  ஃபிகர் நல்லாருக்கு ( வில்லனின் மனைவியையும் சைட் அடிக்கும் பார பட்சம் காட்டா வாலிபர் சங்கம் ) 


சூரி பாக்சிங் நடுவரா வந்து   கொஞ்சம் காமெடி பண்றார் . 

 





இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்



1.  ஒளிப்பதிவு  சுகுமாரன் கலக்கல்  ரகம் .  ஓப்பனிங்கில் வரும் வனம், அருவிக்காட்சிகள் , பாடல் காட்சிகள்  லொக்கேஷன் செலக்சன் எல்லாம் பக்கா 


2 அனிரூத் -ன் இசை துள்ளாட்டம் போட வைக்கிறது . 3 பாடல்கள்  சூப்பர்  ஹிட் . டான்ஸ் மூவ்மெண்ட் விஜய் படங்களுக்கு நிகர் . ஒரு பாட்டில்  அனிரூத் ஆடறார். செம ரெஸ்பான்ஸ்


3 திரைக்கதையில்  போர் அடிக்காமல் காமெடியாக கொண்டு சென்றது . 


4  சிவகார்த்திகேயனை எதார்த்தமான ஆளாகக்காட்டியது , ஓவர் ஆக்டிங் பண்ணாமல்  நல்ல நடிப்பு  , சபாஷ் சி கா 


5  வசனம் செம  காமெடி. ஒரு காமெடி என்ட்டர்டெய்னருக்கு டயலாக் ரொம்ப  முக்கியம் 




இயக்குநரிடம் சில கேள்விகள் 


1. யாரோ  அறிமுகம் இல்லாத ஆட்களிடம் தன் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் சித்தருக்கு ஏன் வந்தது ? அப்படி ஒரு ஈகோ வந்தால் அவர் என்ன சித்தர் ? 


2  எப்படி  இருந்தாலும்   2 கோடி கிடைப்பது உறுதி எனும்போது அந்த 5 பேரும் ஏன் எப்போதும் அழகிரி மாதிரி டென்சனாகவே  இருக்கனும் ? 


3 அனுதாப ஓட்டு வாங்குவதற்க்காக  ஹீரோ  வில்லன் காலில்  விழுந்து  கெஞ்சுவது , அதுக்கு  வில்லன்  தரக்குறைவாக  ஹீரோ வைப்பேசுவது  தவிர்த்திருக்கலாம்


4  வில்லனின் மனைவி   கணவரிடம்  ஹீரோவுக்காக ஏன் பரிந்து பேசுகிறார் ? 


5  திருக்குறள் 10  ஒப்பிச்சா பொண்ணு உனக்குத்தான் என்பது செம காமெடி . ஊருக்கு 100 பேர் அப்டி வந்துட்டா  என்ன ஆகும் ஹன்ஸ் நிலைமை . 


6   ஹீரோ  பாக்சர்  ஆவது , அதுக்குப்பயிற்சி எல்லாம் பெருசா எடுக்காம  ஜெயிப்பது  எல்லாம் நம்பகத்தன்மை இல்லை  



மனம் கவர்ந்த வசனங்கள்

1. உலகத்துலயே கேவலமான விஷயம் எது தெரியுமா ? நாம வேலைக்கே ஆக மாட்டோம்கற விஷயம் நாம லவ் பண்ற பொண்ணுக்கு தெரிய வர்றது தான் # மா க

2. சி கா டூ ஹன்ஸ் = நான் இப்போ ஆக்சனுக்கு மாறவா? வேணாமா? # உள் குத்து டயலாக்



 3.என்ன ஜூசு? 


ஓசி ஜூசு. அன்னாசி.



இமான் அண்ணாச்சி ஜூசா?,



சூப்பர் ஜோக் சார்.அந்தப்பக்கமா போய் சிரிச்ட்டு வரேன்.இருங்க # மா க 


 

4. சி கா - கூலிங் இருக்கா? னு தெரிஞ்சுக்க பீர் வாங்கும்போதே கன்னத்துல வெச்சுப்பார்த்து வாங்கனும் # மா க



 
5.சதீஷ் டூ சிவா -,என்னடா வைப்ரேட்டிங் மோடுலயே போறே?,நார்மலாவே நடக்க மாட்டியா?,#,மா க





 6.ஹன்ஸ் - எப்டி ஜெயிச்சீங்க ? 


சிவா - சின்சியாரிட்டி ,டெடிகேசன் ,உழைப்பு #,உள் குத்து வசனம் டூ சிவா ஹேட்டர்ஸ்




 7.காமத்துப்பால் னா என்ன ? 


ஆண் பால் + பெண் பால் + பாதாம் பால்








9. என்ன அனிமல்ஸ் எல்லாம் ஐ பேடு வெச்சிருக்கு ? #,மா க



10. நெய்க்குழந்தை மாதிரி கும்முனு இருக்கீங்க.உங்களுக்கு பாய் பிரண்டு இல்லையா?,


ஆமா.சிங்கிள் தான். சரி டபுள்ஸ் ஆக்கிடுவோம் #,மா க






11.டெய்லி லொட லொட னு பேசிட்டிருந்தவன் டக் னு பேசாம இருந்தா பொண்ணுங்க டிஸ்டர்ப் ஆவாங்க # மா க



12.  ஹன்சிகா ரொம்ப இளைச்சிடுச்சே! சிம்பு கை வண்ணமா? # மா க




13.  கடல் வத்தி கருவாடு திங்கலாம்னு நினைச்சா கொக்கு குடல் வத்தி செத்துப்போய்டும்டா.#,சிகா பஞ்ச் @ மா க




14.  டேய் 20 ரூபா இருந்தா இவ கிட்டே எறி. 



அவ்வளவு பெரிய தொகைக்கு நான் எங்கே போவேன் ?,# மா க




15.  ஹன்சிகா ஓப்பனிங் சீன் - என் ஐஸ் க்ரீமை லிக் பண்ணுனியா? 



 அய்யய்யோ இல்லீங்க # டபுள் மீனிங் @ மா க




16.  டேய்.அந்த் பொண்ணு சூப்பரா இருக்குடா



.அடேய் அது என் மாமியார்டா.ஆனாலும் சூப்பர்தான் இல்ல?# மா க





17. நீ என்னை விட்டுட்டுக்குடிக்கலாமா? சொல் குடிக்கலாமா? # செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? பாணி 



18. அடிச்சு ஜெயிக்கறது அவன் பாலிசி.அடிக்காமயே ஜெயிக்கறது இந்த மான் கராத்தே பீட்டர் பாலிசி # மாக சிவா பஞ்ச் 


 

படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S

1. ட்ரெய்லரில் கலக்கிய டா டிகிடா ஆத்தாடி பாட்டு டான்ஸ் ஸ்டெப் பை விட லொக்கேசன் செலக்சன் ,கேமரா அள்ளுது # மா க

2.சூரி இன்ட்ரோ.அடேங்கப்பா.என்னா அப்ளாஸ்!

3.அனிரூத்க்கு இளையராஜாவை விட ரஹ்மான் தான் பிடிக்கும் போல.பாபா தீம் இசை சுட்டிங்

4. ஜாலியாப்போகுது .டைம் பாஸ் @ மான் கராத்தே இடைவேளை. ஓடிய நேரம் 1.11 மணி நேரம். இதுல ஏதாவது குறியீடு இருக்குமோ? நமோ நாராயணா ;-)




5. மாஞ்சா பொண்ணு தான் பாட்டு செம ஹிட்டு .ஒளிப்பதிவு கலக்கல்.டான்ஸ் மூவ்மென்ட் கொஞ்சமா வெச்சு நாயகி க்ளோசப் அதிக்மா வெச்சுட்டாங்க # அனிரூத்




6. ரம்பா வுக்கே சவால் விடும் ஹன்சிகாவின் துக்ளியூன்டு டிரவுசர் #,ரசிகர்களு க்கு THIGHபூச வாழ்த்துகள்




7.  தமிழ் நாட்டின் அடுத்த இளைய தளபதி ஓப்பனிங் சாங் # சுறா மாதிரி கடல் கரையில் டான்ஸ்



8.  சந்தானத்துக்கு இணையான சதீஷின் கவுன்ட்டர்ஸ் டயலாக்ஸ் # மா க



9.  பாபா ல வர்ற மாதிரி ஒரு சித்தர் # என்னய்யா கலர் கலரா ரீல் விடறீங்க?



10.  ஒரு நல்ல சிறுகதை முதல் வரியிலும் ,நல்ல சினிமா முதல் காட்சியிலும் கதையை சொல்ல ஆரம்பிச்சுடனும் # மா க குட் ஓப்பனிங்



11.  11 மணி ஷோ 10 22 க்கே போட்டாச் # ஹவுஸ்புல்



12.  அஜித் ,விஜய் படங்களுக்கு இணையான கூட்டம.ஆனா டிக்கெட் ரேட் கவுன்ட்டர் ரேட் தான் # மான் கராத்தே்



13 10 திருக்குறள் சொன்னா பொண்ணு கட்டித்தரேன்னு சொன்னதும் 10 மிமிக்ரி குரல் தரும் காட்சி அப்ளாஸ்.மழை # மா க





சி பி கமெண்ட் -மான் கராத்தே - நம்ப முடியாத கதை ,நம்ப வைக்க முயற்சிக்கும் மேஜிக் ரியலிச திரைக்கதை ,- டைம் பாஸ். மீடியமா ஹிட் ஆகிடும் . ஏ சென்ட்டரில்  50 நாள் ஓடிடும்


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =41


குமுதம் ரேட்டிங்க் =ஓக்கே


 ரேட்டிங் = 2.5  / 5


ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்




ஈரோடு அபிராமி யில்
Embedded image permalinkஅ\\


டிஸ்கி 1 -மான் கராத்தே - வீடியோ விமர்சனம் பை சி பிஎஸ்-

2  ஒரு கன்னியும் ,மூன்று களவாணிகளும் - சினிமா விமர்சனம் -http://www.adrasaka.com/2014/04/blog-post_896.html


டிஸ்கி 3 - ஒரு கன்னியும் 3 களவாணிகளும் - வீடியோ விமர்சனம் பை சி பி எஸ் -

https://www.youtube.com/watch?v=5aEaCr89cVA