Showing posts with label பிகேபி தொடர். Show all posts
Showing posts with label பிகேபி தொடர். Show all posts

Tuesday, June 02, 2015

12.01.1967 எம் ஜி ஆரை சுட்ட வழக்கில் எம் ஆர் ராதா மாட்டியது எப்படி? -க்ரைம் வழக்கு

பட்டுக்கோட்டை பிரபாகர்

12.01.1967 அன்று எம்.ஜி.ஆர் சுடப் பட்டார். எம்.ஆர். ராதாவும் சுடப் பட்டார். வழக்கின் விசாரணையில் ‘எம்.ஆர். ராதா என்னை சுட்டார். பிறகு தன்னைத் தானே கூட்டுக்கொண்டார்' என்றார் எம்.ஜி.ஆர். ‘எம்.ஜி.ஆர் என்னை சுட்டதால், அந்தத் துப்பாக்கியைப் பிடுங்கி நான் அவரை சுட்டேன்' என்றார் எம்.ஆர். ராதா. எது உண்மை?
சம்பவத்தை கண்ணால் பார்த்த ஒரே சாட்சி எம்.ஆர். ராதாவுடன் எம்.ஜி.ஆர் வீட்டுக்கு சென்றிருந்த தயாரிப்பாளர் வாசு மட்டுமே. அவர் தன் சாட்சியத்தில், ‘எம்.ஆர். ராதா தன் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டுப் பிறகு தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். அவ ரிடம் இருந்து துப்பாக்கியைப் பிடுங்கப் போராடினேன். அப்போது அவர் தன் னைத் தானே இரண்டாவது முறையாக சுட்டுக் கொண்டார். அதன் பிறகு நான் அந்தத் துப்பாக்கியைப் பறித்தேன். பிறகு போலீஸில் ஒப்படைத்தேன்' என்றார்.
எம்.ஜி.ஆர் செல்வாக்கு மிக்கவர் என்பதாலும், எம்.ஜி.ஆர் தரப்பின் நிர்பந்தத்தாலும் தயாரிப்பாளர் வாசு பொய் சாட்சி சொல்கிறார் என்றது டிஃபன்ஸ் தரப்பு.
அரசுத் தரப்பு இருவருக்கும் இடை யில் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு களைப் பதிவு செய்தது. ‘தொழிலாளி' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா சம்பந்தப் பட்ட ஒரு காட்சியில், தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு பஸ் வாங்கும் சூழலில் எம்.ஜி.ஆர், ‘இந்த பஸ்தான் இனி தொழி லாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்' என்று வசனம் பேச வேண்டும். எம்.ஜி.ஆர் ‘இந்த பஸ்தான் இனி தொழிலாளர்களின் உதயசூரியன்' என்றார். அதை எம்.ஆர்.ராதா ஆட்சேபித்தார். ‘சினிமாவுக்குள் உன் கட்சியின் சின்னத்தைக் கொண்டு வராதே' என்றார். இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட, படப்பிடிப்பு நின்று போனது. தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் வந்து சமாதானப்படுத்தி இறுதியில் திரைக்கதையில் இருந்தபடி ‘நம்பிக்கை நட்சத்திரம்’ என்று பேசவைத்தார்.
‘நாத்திகம்’ பத்திரிகையில் எம்.ஆர். ராதா எழுதிய ஒரு கட்டுரையில் எம்.ஜி.ஆரின் பெயரைக் குறிப்பிடாமல், ஆனால் அது எம்.ஜி.ஆர்தான் என்று புரியும்விதமாக ஒரு செய்தியைக் குறிப் பிட்டிருந்தார். காமராஜரைக் கொலை செய்ய ஒருவர் சதி செய்வதாக குறிப் பிட்டிருந்தார். இதனால் எம்.ஜி.ஆரின் மனம் புண்பட்டது.
டிஃபன்ஸ் தரப்பில் எம்.ஜி.ஆர் சினிமா வில் எம்.ஆர். ராதாவை வளரவிடாமல் இடையூறுகள் செய்ததாகவும், எம்.ஆர். ராதாவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் செய்ததாகவும் வாதிட்டார்கள்.
போலீஸ் தரப்பு தங்களிடம் வாசு ஒப்படைத்த ராதாவின் துப்பாக்கியின் ஆறு சேம்பர் களில் மூன்றில் மட்டுமே குண்டுகள் இருந்ததாகவும், எம்.ஜி.ஆர் வீட்டில் கைப்பற் றப்பட்ட அவரது துப்பாக்கியில் குண்டுகள் எதுவும் நிரப்பப்படாமல் இருந்ததாகவும் தெரிவித்தது.
சம்பவம் நிகழ்ந்தபோது எம்.ஜி.ஆர் அணிந்திருந்த உடைகள் அவசரமாக ஏன் துவைக்கப்பட்டன என கேள்வி எழுப்பியது ராதா தரப்பு. அவற்றில் ரத்தக் கறைகள் அழிக்கப்படாமல் இருந்திருந் தால் அதில் எம்.ஜி.ஆரிடம் இருந்து துப் பாக்கியைப் பறிக்க ராதா முயன்றபோது, சிந்திய அவரின் ரத்தத் தடயங்களை நிரூபித்திருக்க முடியும் என்றது.
வழக்கு விசாரணை முடிந்து 1967-ம் வருடம் நவம்பர் 4-ம் தேதியன்று நீதிபதி லட்சுமணன் தீர்ப்பை வாசித் தார். தீர்ப்பின் சுருக்கம்: ‘எம்.ஆர். ராதா குண்டுகள் நிரப்பப்பட்டத் துப்பாக்கியை எம்.ஜி.ஆரின் வீட்டுக்கு எடுத்துச் சென்றதிலேயே அவரின் கொலை நோக்கம் தெரிகிறது.
அரசியல் விரோதம் காரணமாக ராதாதான் தன் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டார். பிறகு தன்னைத் தானே இரண்டு முறை சுட்டுக்கொண்டார். இதை அரசுத் தரப்பு ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளது. ஆகவே, ராதாவுக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்குகிறேன்.'
இந்த வழக்கில் உண்மை யைக் கண்டறிய மிக உதவி யாக இருந்தது தடயவியல் துறைதான். ஒரு துப்பாக்கி யில் இருந்து குண்டு வெளி யேறும்போது வெப்பத்தினால் சற்றே விரிவடைந்து சுழன்ற படி துப்பாக்கியின் குழலின் உட் பகுதியில் கடுமையான அழுத்தத் துடன் உரசியபடி வெளியேறும். அப்படி உரசுவதால் குண்டின் மேல் கோடுகள் விழும். குழலின் உட்புற அமைப்பு எல்லாத் துப்பாக்கிகளிலும் ஒரே மாதிரி இருக்காது. இரண்டு வெவ்வேறு துப்பாக்கிகளில் இருந்து சுடப்பட்ட குண்டுகளின் மேல் இருக்கும் உராய்வுக் கோடுகள் வெவ்வேறு விதமாகவே இருக்கும்.
இதன் அடிப்படையில் எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா இருவரின் துப்பாக்கிகளி லும் குண்டுகள் போட்டு சோதனைக்காக சுட்டு அந்த குண்டுகளையும் அவர் களின் உடல்களில் இருந்து நீக்கப்பட்ட குண்டுகளையும் மைக்ராஸ்கோப் வழியாக ஒப்பிட்டுப் பார்த்து ஆராய்ந் தார்கள்.
தடயவியல் துறையின் நிபுணர் களான டாக்டர். கே.சி.பி.கோபால கிருஷ்ணன், டாக்டர். பி.சந்திர சேகரன் மற்றும் துப்பாக்கி நிபுணர் ஏ.வி.சுப்பிரமணியம் ஆகியோர் இந்த சோதனைகளை நடத்தி மூன்று குண்டு களும் ராதாவின் துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்டவை என்று உறுதி செய்தார்கள்.
தீர்ப்பை எதிர்த்து ராதா உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தார். அங்கே அவரது அப்பீல் தள்ளுபடி செய்யப் பட்டது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அங்கே தண் டனை காலம் ஐந்தாண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிறையில் அவ ருடைய நன்னடத்தை காரணமாக நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்களில் அவர் விடுதலையானார்.
விடுதலைக்குப் பின் மலேசியாவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் ராதா பேசியபோது, ‘எம்.ஜி.ஆரும் நானும் 50 வருஷமா நண்பர்கள். சின்ன கோபம். செல்லமா சண்டை போட்டுக்கிட்டோம். அந்த சமயம் கம்பு இருந்திருந்தா, கம் பால சண்டை போட்டிருப்போம். துப் பாக்கிதான் இருந்துச்சி. அதனால துப் பாக்கியால சுட்டுக்கிட்டோம்' என்றார்.
அன்றைய தினம் ராயப்பேட்டை மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் ஆப்ரஹாம் சுகுமார் ராதாவுக்கு முதலுதவி செய்தபோது அவர், ‘நான் தான் சுட்டேன், போலீஸுக்கு ஸ்டேட் மெண்ட் கொடுத்தாச்சு' என்று சொன்ன தாக தன் பிளாக்கில் எழுதியிருக்கிறார்.
பிறகு ஒருநாள் எம்.ஜி.ஆர் தடயவியல் நிபுணர் பி.சந்திரசேகரனிடம், ‘மிகவும் பக்கத்தில் இருந்து சுடப்பட்டபோதும் நானும், எம்.ஆர்.ராதாவும் எப்படி பிழைக்க முடிந்தது?' என்று கேட்ட தால், அவர் அந்த ரவைகளை (குண்டு) தீவிரமாக ஆராய்ந்தார். ஒரு துப்பாக்கி ரவையின் வேகத்தை உள்ளேயிருக்கும் ரவையின் பிடிப்புதான் தீர்மானிக்கிறது. ராதா பயன்படுத்திய ரவைகள் 15 வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட் டவை.
அவற்றை ஒரு தகர டப்பாவில் போட்டு அடிக்கடி பயன்படுத்தும் மேஜை யின் டிராயரில் வைத்திருந்தார். டிரா யரை ஒவ்வொரு முறை இழுத்து மூடும் போதும் ரவைகள் உருண்டு ஒன்றோடு ஒன்று உரசி தேய்ந்திருக்கின்றன. அத னால் ரவையின் மேல் பிணைக்கப் பட்டுள்ள கேட்ரிஜ் கேசின் பிடிமானம் தளர்ந்து போய்விட்டது. இப்படி அழுத்தம் குறைந்த ரவைகளைப் பயன்படுத்திய தால்தான் இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்றார்.
கதையில் உத்தி
நான் எழுதிய ஒரு கதையில் ஒரு கொலை. போலீஸ் சந்தேகிக்கும் ஒருவனைச் தேடிச் செல்வார்கள். அவன் தங்கியிருக்கும் அறை பூட்டப்பட்டிருக்கும். காத்திருப்பார்கள். அவன் கையில் சூட்கேஸோடு வருவான். தான் மூன்று நாட்களாக ஊரில் இல்லை என்று சொன்னபடி அறைக் கதவை சாவி போட்டு திறப்பான். கதவின் கீழ் இடுக்கு வழியாக உள்ளே தள்ளப்பட்டிருந்த மூன்று தினங்களின் தினசரி பேப்பர்களை எடுத்து மேஜையில் வைப்பான்.
அவனை சிக்க வைக்கும் எந்தத் தடயமும் கிடைக்காது. அந்த மூன்று தினங்களின் பேப்பர்களை செக் செய்வார்கள். அதில் ஞாயிற்றுக்கிழமையின் இலவச இணைப்புப் புத்தகம், சனிக்கிழமை பேப்பருக்குள் இருக்கும். அதை வைத்து அதட்டி விசாரித்ததும், தான் பேப்பர்களை செட்டப் செய்தபோது மாறிவிட்டதாகச் சொல்வான். செய்த குற்றத்தையும் ஒப்புக்கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
- வழக்குகள் தொடரும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]


நன்றி - த இந்து

Sunday, May 17, 2015

துப்பறியும் கதைகளை எழுதும்போது- பட்டுக்கோட்டை பிரபாகர் -குற்றங்களைக் கண்டுபிடித்தது தொடர்பாக ஓர் அலசல் தொடர்...

குற்றங்களைக் கண்டுபிடித்தது தொடர்பாக ஓர் அலசல் தொடர்...
தொடர்’வதற்கு முன்..
அன்புள்ள உங்களுக்கு…
வணக்கம்.
பள்ளி நாட்களில் இருந்தே துப்பறியும் கதைகளில் எனக்கு ஆர்வம் அதிகம். முத்து காமிக்ஸ் புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்த காலம். ‘இரும்புக் கை மாயாவி’-க்கு ரசிகர் மன்றம் வைக்காததுதான் பாக்கி. துப்பறியும் கதாபாத்திரங்களில் தேவனின் சாம்பு என்னை வெகுவாக கவர்ந்தார். பிறகு, சுஜாதாவின் கணேஷ்-வஸந்த். கல்லூரி காலத்தில் ஜேம்ஸ் ஹாட்லி சேஸின் பைத்தியமானேன். ஜெய்சங்கர் நடித்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் படங்களை விடாமல் பார்ப்பேன். அவர்தானே அப்போது தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்!
ஒரு படத்தில் சி.ஐ.டியான ஜெய்சங்கர் தன் நண்பருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருப்பார். இருவரும் வெளியே புறப்படும்போது ஒரு சிறிய காகிதத் துண்டை மடக்கி கதவின் ஓரத்தில் செருகி வைத்து கதவை மூடுவார். ‘என்ன செய்கிறாய்?’ என்று நண்பர் கேட்பார். ‘வா, சொல்கிறேன்’ என்று அழைத்துப் போவார். வெளியே வேலை முடிந்து இருவரும் திரும்புவார்கள். அந்த மடக்கப்பட்ட துண்டு சீட்டு கீழே கிடக்கும். ‘யாரோ கதவைத் திறந்தி ருக்காங்க’ என்பார் ஜெய். எனக்கு ‘அட’ என்று இருந்தது.
இதுபோல சின்னச் சின்ன ஐடியாக்களை எங்கே படித்தாலும், பார்த்தாலும், பேசினாலும் நான் ரசிக்கத் தொடங்கினேன். நான் கதை எழுதத் தொடங்கியபோது ‘அட’ என்று நினைக்க வைக்கிற கதைகள் அதிகம் எழுத வேண்டும் என்று ஆர்வப்பட்டேன்.
நான் எழுதிய முதல் சிறுகதையான ‘அந்த மூன்று நாட்கள்’ கதையில் அரைக் கிறுக்காக நடித்து ஒருவனை நம்ப வைத்து, அவனுக்கே தெரியாமல் கடத்தி வைத்து, அவனுடைய பெற் றோரை பிளாக் மெயில் செய்து பணம் பெற்றபின் அவனை விடுவிப்பான் ஒருவன். தான் கடத்தப்பட்டதோ, தன்னை வைத்து மிரட்டி பணம் வாங் கப்பட்டதோ தெரியாமல் கூலாக வீட்டுக்குத் திரும்பி பெற்றோர் சொன்ன பிறகுதான் உணர்வான் அவன்.
இந்த முதல் கதை எனக்குப் பெற் றுத் தந்த பாராட்டுக்கள்தான் என் னைத் தொடர்ந்து எழுத வைத்தது பரத், சுசிலா என்கிற துப்பறியும் ஜோடியை உருவாக்க வைத்தது. அவர்கள் காத லித்துக்கொண்டே துப்பறிந்தார்கள். இப்போதும் என்னைச் சந்திக்கும் வாசகர் கள் அவர்களை நலம் விசாரிக்கிறார்கள்.
துப்பறியும் கதைகளை எழுதும்போது எக்ஸ்ட்ரா லார்ஜ் ஆர்வம் சேர்ந்து கொள்ளும். செஸ் விளையாடுவது போல மூளை துறுதுறுக்கும். ஒரு புதி ருக்கு விடை தேடுவது எப்படி சுவாரஸ் யமான விஷயமோ அதுபோல சுவாரஸ் யமான புதிரை உருவாக்குவது இரண்டு மடங்கு சுவாரஸ்யமான விஷயம்.
‘Who Done it?’ என்கிற குற்றத்தை யார் செய்தது என்று கண்டுபிடிக்க வைக்கும் வகையான கதைகளில் பல கதாபாத்திரங்களின் மேல் சந்தே கத்தை விதைப்பதும், இறுதியில் ஒரு எதிர்பாராத முடிவைத் தருவதும் சவாலான வேலை. படிக்கும்போது பரபரப்பாக இருக்க வேண்டும் என்றால் எழுதும்போது கொஞ்சம் மண் டையை உடைத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கும்.
இப்போது குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதில் விஞ்ஞானத்தின் பங்கு அதிகமாக இருக்கிறது. மிகவும் குயுக்தி யான, விசித்திரமான உத்திகளுடன் குற்றங்களை செய்கிறார்கள் என்றால், அதை கண்டுபிடிப்பதிலும் அதே மாதிரி நுணுக்கமான புத்திசாலித்தனமான அணுகுமுறை அவசியமாகின்றன.
இந்தியாவின் உளவு ஸ்தாபனமான ரா (RAW), யுரேனியத்தைப் பயன் படுத்தி பாகிஸ்தான் அணு ஆயுத ஆராய்ச்சி நடத்தி வருவதை ரகசியமாக உளவு பார்த்து, அப்போது பிரதம ராக இருந்த மொரார்ஜி தேசாயிடம் தெரி வித்தது. இந்தத் தகவலை ’ரா’ எப்படி கண்டுபிடித்தது தெரியுமா? பாகிஸ் தானின் அணு ஆராய்ச்சி நிகழும் கவுட்டா ஆராய்ச்சி நிலையம் அமைந்திருக் கும் பகுதியில் உள்ள சலூன்களில் வெட்டப்படும் தலைமுடிகளை சேகரித்து அதை கதிரியக்க ஆராய்ச்சி செய்து இந்தமுக்கியமான தகவலைக் கண்டுபிடித்தது.
பல குற்ற வழக்குகளில் குற் வாளிகளைக் கண்டுபிடிக்க சின்ன தடயங்களே உதவியாக இருந்திருக் கின்றன. சில வழக்குகளில் அந்தத் தடயங்கள் உடனடியாக கிடைக் காமல் 10 ஆண்டுகளுக்குப் பிறகுகூட கிடைத்திருக்கின்றன. கற்பனை களைவிடவும் உண்மைகள் வித்தியாச மானவை என்பார்கள்.
இந்தத் தொடரில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நிகழ்ந்த பல வகையான குற்ற வழக்குகளில் குற்ற வாளிகளை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று விரிவாக பார்க்கலாம். அத்தோடு இலவச இணைப்பாக நான் எழுதிய துப்பறியும் கதைகளில் கையாண்ட சில உத்திகளைப் பற்றியும் எழுத இருக் கிறேன்.
‘எப்படி? இப்படி!’ என்கிற புதிய தொடர் ‘அட’ என்று உங்களை புருவம் உயர்த்த வைக்கும். அல்லது ‘அடப் பாவிகளா!’ என்று அங்கலாய்க்க வைக் கும். அடுத்த வெள்ளி முதல் வாரா வாரம் சந்திப்போம். அதுவரை ஏற்கெனவே வணக்கம் கூறிவிட்டதால் ‘காத்தி ருங்கள்’ என்று மட்டும் கூறுகிறேன்.
பிரியங்களுடன்,
பட்டுக்கோட்டை பிரபாகர்
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]

நன்றி =  hindu