Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Monday, August 27, 2012

சென்னை பதிவர் சந்திப்பு கொண்டாட்டம் பாகம் 1

24.8.2012 வெள்ளிக்கிழமை நைட் 9 மணிக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ்ல நானும் ஈரோடு பதிவர் லாயர் நண்டு நொரண்டும்  கிளம்புனோம். இவர் ஒரு லாயர், ஜட்ஜைத்தவிர எல்லார்ட்டயும் இவர் நொரண்டாதான் பேசுவார்.. ( ஜட்ஜ் கிட்டே பேசுனா  வெளில அனுப்பிடுவாங்களே?).பேரு ராஜசேகரன். சனிக்கிழமை காலைல 4 மணிக்கு ரயில் சென்னை செண்ட்ரல்ல நின்னுது. நாங்க இறங்கி பார்க் ஸ்டேஷன்ல ரயில் ஏறி மாம்பலம் போய் அங்கே இருந்து வாக்கிங்க்ல ரோஹினி இண்ட்டெர்நேஷனல் ஹோட்டல், ஜி என் செட்டி தெரு அட்ரஸ்க்கு போய்ட்டோம், அங்கே ஆல்ரெடி ரூம் புக் பண்ணி இருந்தாங்க.



போய் 2 மணி நேரம் குட்டித்தூக்கம் ( நோ இமேஜினேஷன் ப்ளீஸ்.. சிறிய தூக்கம்). ஆரூர் மூனா செந்தில் தான் வெளியூர்ப்பதிவர்கள் தங்க ஏற்பாடு.அவர் மத்தியானம் வர்றேன்னார், ஆஃபீஸ்ல டியூட்டி அவருக்கு.நான் கிஷ்கிந்தா போலாம்னேன், லாயர்க்கு வேற ஏதோ எங்கேஜ்மெண்ட் போல, யாரையோ வரச்சொல்லி இருக்கார்.. வெயிட்டிங்க். யார் வந்தாங்க? என்ன நடந்தது என்பதெல்லாம் இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத மேட்டர் என்பதாலும் ஒரு பதிவரின் பர்சனல் மேட்டர்ஸை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது சபை நாகரீகம் இல்லை என்பதாலும் ( இப்போ இதுக்குப்பேரென்ன?) அதை அப்படியே விட்ருவோம். 


நான் கிஷ்கிந்தா போன அனுபவம், கட்டுரை, படங்கள் தனிப்பதிவாய் பின் ஒரு நாளில்.. மாலை 4 மணிக்கு நான் ரிட்டர்ன். மதுமதி ரூமுக்கு வந்து எங்களை வரவேற்றார்.. எத்தனை ஃபிகர் எனக்கு செட் ஆனாலும் சரி என் தாடியை மட்டும் எடுக்கவே மாட்டேன்னு 12 வருஷமா பதிவுலகில் டி ஆராய் வலம் வந்தவர் என்ன காரணத்துக்காகவோ தாடி எல்லாம் எடுத்து மாப்ளை கெட்டப்ல வந்த மர்மம் என்னன்னு இன்னைக்கு வரை விடை தெரியல. அவர் கிட்டே கொ ஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்.


அப்புறம் ஆரூர் மூனா செந்தில், மின்னல் வரிகள் கணேஷ், திண்டுக்கல் தனபாலன், குடந்தையூர் சரவணன்,புது மாப்ளை கோகுல் எல்லாரும் வந்தாங்க. பேசிட்டு இருந்தோம். 



26.8.2012 ஞாயிறு..காலை 5 மணிக்கே வானம் மழையை அனுப்பி தன் வருகையை சென்னை பதிவர் சந்திப்புக்கு பதிவு செய்தது. நான் 6 மணிக்கு குளிச்சு ரெடி ஆகி வாக்கிங்க்லயே பதிவர் சந்திப்பு நடக்கும் மண்டபத்துக்கு போய்ட்டேன். 



மண்டப முகப்பே அட்டகாசமா பேனர் எல்லாம் வெச்சு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.ட்விட்டர்  உலகின் ஜேம்ஸ் பாண்ட், கூலிங்க் கிளாஸ் கூல் டாக்கர் அய்யா சென்னை பித்தன் அவர்கள், நம்ம தமிழ் வாத்தியார் மாதிரியே தோற்றம் உள்ள புலவர் ராமானுசம் அய்யா இருவரும் அருமையான உரை ஆற்றினார்கள்.. வலைச்சரம் சீனா அய்யாவும் சிறப்பாக பேசினார்


அப்புறம்  வந்த பதிவர்கள் அறிமுகம்.. அதுக்கு  கலகலப்பு உதவி வசனகர்த்தாவும் கொத்து புரோட்டாக்காரருமான கேபிள் சங்கர், சித்தார்ல வீடு, பூர்வீகம் எல்லாம் இருந்தும் கோவையில் பணி ஆற்றும் ஒரே காரணத்துக்காக கோவை பதிவர் ஆகி விட்ட சங்கவி சதீஷ் ( நிறைய பேரு சங்கவின்னா பெண் பதிவர்னு இன்னும் அவர் கிட்டே  சேட் பண்ணிட்டு இருக்காங்க , ஹி ஹி ) ,  ,பதிவுலகின் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சேகர் , கடைசியா நான் 4 பேரும் ஒவ்வொருவரா பதிவரை மேடைக்கு அழைத்து உரை ஆற்ற வைத்தோம். 


விழாவின் ஹை லைட்ஸ்


1. அதுல அதிகமா கை தட்டல் வாங்குனது பதிவே அதிகம் போடாத, மிட் நைட்ல பல பதிவர்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தே  கொலையாய் கொல்லும் அன்பு உள்ளம், டாஸ்மாக்கே இல்லம் என இருக்கும் நாய் நக்ஸ் பிளாக் ஓனர் நக்கீரன் தான்.. இவரும், விபரீதமான மனிதாபிமானி பிளாக் ஓனரும் பதிவர் சந்திப்பு நடப்பதற்கு முன் சிம்பு , தனுஷ் போல நட்பு பாராட்டியதும், மண்டபத்தில் கட்டிப்பிடித்து பயங்கர பாசத்தை பகிர்ந்து கொண்டதைப்பார்க்கையில் தேர்தல் நேரத்தில் பகையாளியுடன் கூட கூட்டணி வைக்கும் கலைஞர் - ராம்தாஸ் நடிப்பு போல தத்ரூபமாக இருந்தது.. விழா ஃபுல்லா இந்த நாயம் தான் அன்னைக்கு 



2. அடுத்து பதிவுன்னு வந்துட்டா எல்லாரையும் கண்டபடி கிழிக்கும் பிளாக் உலகின் சைக்கோ ஸ்பெஷலிஸ்ட் செல்வராகவன் ஒயின் ஷாப் ஓனர் ஃபிலாசபி பிரபாகரன் நல்ல பிள்ளை மாதிரி இந்தப்பூனையும் அமலாபாலை சைட் அடிக்குமா? என்பது போல் கையை கட்டி அடக்கம் காட்டி நடித்தது  நடிகர் சூர்யா மேடைகளில் காட்டும் போலி பவ்யத்தை தூக்கி சாப்பிட்டது



3. அடுத்த அதிரடி அண்ணன் சேட்டைக்காரன் - இதுவரை டி பி யில் பிளாக்கில் நாகேஷ் படத்தையும் , ட்விட்டரில் கவுண்டமணி படத்தையும் வைத்தவர் இந்த முறை தன் நிஜ முகத்தை காட்ட வேண்டிய கட்டாயம், ஏன்னா விழா ஏற்பாட்டாளர்கள் புத்தக வெளியீட்டை பெற்றுக்கொள்பவர் சேட்டைக்காரன் என பத்திரிக்கையில் போட்டு விட்டனர்.. இவர் 4 நிமிட நறுக் சுருக் உரை ஆற்றினார். அது விரிவாக பின்னர்.. இவர் 30 வயசுக்காரராக இருப்பார் என்றே இவர் எழுத்தை வைத்து அனைவரும் கணித்தனர்.ஆனால் நயன் தாரா வயசைப்போல் டபுள் மடங்கு வயசுள்ள இவர் இனியாவது நடிகை ஸ்ரேயாவிடம் டைம் லைனில் ட்விட்டரில்  கடலை போடாமல் கண்ணியம் காப்பார் என எதிர்பார்க்கிறேன்



4. அடுத்து மிக இளம் பெண் பதிவர் தூயா. கலைஞர் குடும்பமே எப்படி அரசியலிலும், ஊழலிலும் தங்கள் பங்கை சிறப்பா ஆற்றி வருகிறார்களோ அதே போல்  இவங்க குடும்பமே ஒரு பிளாக் குடும்பம். தமிழ் மணத்தில் இவங்க எப்போ போஸ்ட் போட்டாலும் உடனே 7 ஓட்டுக்கள் வாங்கி 10 நிமிஷத்தில் ஹிட் ஆவதை கவனித்து நான் மிரண்டு போனேன். பின் கழுகார், குருவியார் மூலம் விசாரித்தபோது அவங்க ஃபேமிலில 7 பேர் பிளாக்கர்ஸ் என்ற தங்கமலை ரகசியம் தெரிய வந்தது.. இவரை மேடையில் கலாய்த்தோம்



5. பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தன் தமிழ் மிஸ்க்கு லவ் லெட்டர் கொடுத்து ஏரியாவையே கதி கலக்கிய தமிழ்வாசி பிரகாஷ் ( தமிழ் மிஸ் வீட்லயே தான் எந்நேரமும் குடி இருப்பாராம்) என்னமோ டிஸ்கொத்தே கிளப்புக்கு டான்ஸ் ஆட வந்தவர் மாதிரி  கசாமுசா காலேஜ் ஸ்டூடண்ட் டிரஸ் அணிந்து வந்து கலக்கி இருந்தார்.. யூத்தாம். யோவ்.. 


6. மாமூல் வாங்காத போலீஸ் கவிதை வீதி சவுந்தர்,டீசண்ட் ரவுடி வேடந்தாங்கல் கருண்  மதிய உணவு பரி மாறும் வேலை இருக்கு முன் கூட்டியே பேசிட்டு போறோம்னு சொல்லிட்டு எங்கியோ எஸ் ஆகிட்டாங்க


7. பிறவிக்கலைஞன் கமலின்  குணா ரசிகை மன்றத்தலைவி கண்மணி அன்போடு பிளாக் ஓனரை கிண்டல் செய்து மேடைக்கு அழைத்தோம், அவங்க அப்பாவும் வந்திருக்காராம், அவரும் பிளாக்கராம். அவ்வ்வ்வ் ( இனிமே பொண்ணுங்களை கலாய்க்கறப்போ அப்பா வந்திருக்காரா?ன்னு செக் பண்ணிக்கனும்)



8. கோவை சரளா அப்டினு ஒரு பெண் பதிவர்.. இப்படி ஒருவர் இருப்பதே எனக்கு அங்கே தான் தெரியும்.. பயங்கரமா கவிதை எல்லாம் எழிதி இருக்காராம், அவரே சொன்னார்.. இனி தான் பார்க்கனும்.. 



9. வசந்த மண்டபம்’ மகேந்திரன் விழாவுக்காகவே புது வெள்ளை கதர் சட்டை, பேண்ட் , திருப்பூர் பனியன் எல்லாம் புதுசா போட்டு வந்து அசத்தினார்.. சூப்பர் ரின் விளம்பரத்துல கூட அப்படி ஒரு வெள்ளையை நான் பார்க்கலை. 


10. ஊக்குவிக்கும் சமீரா மேடம்.. அவர் எல்லார் பிளாக்கும் போய் அவங்களை ஊக்கி விப்பாராம்.. இதுவரை அட்ராசக்கவை ஊக்கு வித்ததில்லை.. ஏன்னு தெரியலை


11. பொதுவா லேடீஸ் தான் கல்யாணம் , காட்சின்னா காலைல ஒரு புடவை, மாலை ஒரு புடவை கட்டிட்டு வருவாங்க.,. ஆனா உலகத்துலயே முதல் முறையா கோவை நேரம் ஜீவானந்தம் காலை ஒரு சட்டை , மதியம் ஒரு ஜிப்பா, மாலை ஜீன்ஸ் என 3 வெவ்வேறு டிரஸ் அணிந்து  வந்து கலக்கினார். மனசுக்குள்ள கமலஹாசன்னு நினைப்பு , யோவ்.. 


12. சாதிகா, ஆதிரா இரண்டு பெண் பதிவர்கள் “ ஏன் எங்க பிளாக் எல்லாம் வர்றதே இல்லை? என கேட்க “ எங்கேங்க, இப்பவெல்லாம் அதிகம் கரண்ட் இல்லாததால்  எந்த பிளாக்கும் போக முடியறதே இல்லை, இருக்கற கொஞ்ச நஞ்ச நேரத்துல போஸ்ட்  ரெடி பண்ணவே நேரம் சரியா இருக்கு “ என்று சமாளித்தேன்.. அதற்கு அவர் சசிகா மேனகா பிளாக் மட்டும் போயிடறீங்க? என மடக்கினார்.. அவ்வ் பல்பு பல்பு.. 





13.  நம்ம ட்விட்டர் ஃபிரண்ட் சுரேகா ஹீரோ கணக்கா , கணக்கா 10 மணிக்கு ஆஜர் ஆனார். . அவர் பியூட்டி பார்லர் எல்லாம் போய் மிகச்சிரத்தையாக மேக்கப் போட்டு வந்தது  பதிவர் சந்திப்பில் அவர் காட்டிய ஈடுபாட்டை பறை சாற்றியது. மதியத்துக்குப்பின் இவர் ஆட்சிதான்..


1.30 மணிக்கு லஞ்ச், பின் கவியரங்கம், தென்றல் புத்தக வெளீயீட்டு விழா, பி கே பியின் அட்டகாசமான உரை போன்ற விபரங்கள் அடுத்த பதிவில்



வலம் இருந்து இடமாக கோவை நேரம் ஜீவா, சங்கவி சதீஷ், கோவை சரளா,சசிகலா, அவர் நண்பர், மின்னல் வரிகள் கணேஷ் ( மக்கள் டி வி பேட்டி)








தஞ்சை குமணன், மோகன்குமார். சீனு மற்றும் சிராஜுதீன்         







 மைக் மோகன் = ஆரூர் மூனா செந்தில்







அகநாழிகை வாசுதேவன், மணிஜி, சிவகுமார்  












சேட்டைக்காரன் அண்ணன்





பட்டர்பிளை சூரியா, சுகுமார் சாமிநாதன்,  மணிஜி , ஜாக்கி,மோகன்குமார், உண்மை தமிழன், ரோஸ்விக்   


 வீடு திரும்பல் மோகன், ரேகா ராகவன்அ




துவக்க விழா .. ராமானுசம் ஐயா, சீனா  ஐயா,  சென்னைப்பித்தன்  ஐயா
துவக்க உரை ஆற்றுகிறார் மதுமதி 
வரவேற்புரை மற்றும் விழா குழுவை அறிமுகம் செய்கிறார் வீடுதிரும்பல் மோகன்குமார் 
வரவேற்பு/ Registration  குழு   -  சீனு மற்றும் நண்பர்கள் 
புதிய தலைமுறை டிவி குழுவிற்கு பேட்டி தருகிறார்  முக்கிய பொறுப்பாளர் மதுமதி 
ப்ளாகில்  பெண்களின் பங்கு பற்றி  புதிய தலைமுறை டிவி க்கு   பேசுகிறார் தென்றல் சசிகலா 

புதிய தலைமுறை டிவி குழு வீடுதிரும்பல் மோகன்குமாரிடம் பேசுகிறது 
***



கரை சேரா அலை அரசன் அறிமுகம் செய்து கொள்கிறார் 

இளம் ஆளுமை மெட்ராஸ் பவன் சிவகுமார் 

மூத்த பதிவர் வல்லிசிம்ஹன் .... 
கேட்டால் கிடைக்கும்னு நாங்க இயக்கமே வச்சிருக்கோம் ; நான் கேட்டும் கூட எனக்கு ரெண்டாவது சுவீட் தர மாட்டீங்களா? - இப்படி கேட்கிறாரோ  கவிஞர் கேபிள் சங்கர் 
சங்கவி தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் 

ரஹீம் ஹசாலி சுய அறிமுகம்  (தம்பி ரெண்டு போட்டோ எடுத்தேன். ரெண்டிலும் கண்ணை மூடி கிட்டு தான் இருக்கீங்க) 

விழா முடிந்த பின் மேடையில்  விழா குழுவினர் 
****நன்றி - படங்கள் வீடு திரும்பல் மோகன், ரஹீம் கசாலி

Monday, August 20, 2012

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மர்மங்கள்

http://resultsbuzz.in/wp-content/uploads/2012/05/TNPSC-Images.jpg 
கேள்வித்தாளை லீக் செய்தவர் யார்?

பிடிக்கத் துடிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை


நல்ல நம்பிக்கையை பெற்றுவந்த டி.என்.பி.எஸ்.சி.க்கு திருஷ்டிப் பரிகாரம்... கடந்த வாரத்தில் நடந்தது. எல்லாம் ஒழுங்காய் போய்க்கொண்டு இருப்பதைப் பொறுக்காத மனிதர்கள் புகுந்து விளையாட.. எது ஓட்டை என்பதற்கான தேடுதல் துரிதமாய் நடக்கிறது!


சமீபத்தில் நடந்த தேர்வில் மட்டும் அல்ல, கடந்த சில ஆண்டுகளாகவே  டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் வினாத்தாள் லீக் ஆகி இருக்கிறது என்று அதிர்ச்சியைக் கிளப் புகிறார்கள், லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரத்தினர். ''டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு, கல்வித்துறை ஆசி ரியர்கள், டியூஷன் சென்டர்கள், டுடோரியல் கல்லூரிகள் என்று ரகசியத் தொடர்பு இருக்கிறது. இந்தத் தொடர்பு மூலம் கோடிக்கோடியாக கொள்ளை அடித்திருக்கிறார்கள்.


 இந்த முறை சென்னையில் இருந்து கேள்விகள், பாலன் என்பவருக்குப் போய் இருக்கிறது. பாலன் மூலம் இ-மெயிலில் பல்வேறு நபர்களுக்கு வினாக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த பாலன் யார்? அவருக்குக் கேள்வித்தாள் யார் மூலம் கிடைத்தது என்பதைத்தான் விசாரித்து வருகிறோம்'' என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில். அவர்களே கடந்த ஆண்டு நடந்த இரண்டு சம்பவங்களைச் சொல்கிறார்கள்.




டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதுகிறவர்கள் சென்னையைச் சேர்ந்த பாலன் அண்டு கோ நெட்வொர்க் ஆட்களிடம் பணம் கொடுத்தால் போதும். ஒரு துண்டுக் காகிதத்தில் பீச் ரோட்டில் உள்ள ஒரு நூலகத்தில் இருக்கும் ஒரு நபரைப் பார்க்கச் சொல்வார்கள். 'புத்தகம் கொடுக் கவும்' என்ற வார்த்தை மட்டும்  பென்சிலால் அதில் எழுதப்பட்டு இருக்கும்.

 அங்கே போனால், ஒரு குறிப்பிட்ட புத் தகத்தைக் கொடுத்து, அதை நன்றாகப் படித்து தேர்வு எழுதச் சொல்வார்கள். அந்தப் புத்தகத்தில் வினாத்தாளில் வர விருக்கும் கேள்விகளில் 80 சதவிகிதம் வரை இருக்குமாம். கடந்த வருடம்தான், டி.என். பி.எஸ்.சி. உறுப்பினர் ஒருவரின் அரவ ணைப்பில் இந்த நெட்வொர்க் இயங்குவதைக் கண்டுபிடித்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், அந்த நூலக நபரையும் பிடித்து விட்டனர். ஆனால், இந்த வருடமும் அதேபோன்று நெட்வொர்க் இயங்கி உள்ளதுதான் ஆச்சர்ய்ம்! 



சென்னையில் இருந்து உடுமலைப்பேட்டையில் உள்ள ஒரு சென்டருக்கு குரூப் 2 தேர்வுக்கு முந்தைய நாள் இரவு, அங்கே படிக்கும் மாணவர்களை எல்லாம் வரவழைத்து இருக்கிறார்கள். தலைக்கு ஒரு லட்சம் வீதம் வசூல் செய்துகொண்டு, பாடம் நடத்தும் போர்டில் வினா - விடைகளை எழுதிப் போட்டு இருக்கிறார்கள். அந்த போர்டில் எழுதி யதை அழிக்காமலேயே போய்விட்டதால், அடுத்த நாள் விஷயம் வெளியே கசிந்து விட்டது என்கி றார்கள்.



இந்த வருடம் நடந்த சம்பவம் குறித்து டி.என்.பி.எஸ்.சி. அலுவலக வட்டாரத்தில் விசாரித்தோம். ''எங்களைப் பொறுத்தவரை, நிஜ வினாத்தாளை எடுத்து, யாரோ மற்றவர்களுக்குப் படித்துக் காட்டியிருக்கிறார்கள். அதைக்கேட்டு, தப்பும் தவறுமாக எழுதியுள்ளனர். வினாக்களுக்கான பதில்களிலும் தவறுகள் இருக்கின்றன.


இதையெல்லாம் தவறு செய்தவர்களிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களில் இருந்து அறிய முடிகிறது. திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி, நாமக்கல், ஆயக்குடி ஆகிய இடங் களில் உள்ள சில சென்டர்களில் படித்துத் தேர்வு எழுதி யவர்கள் இதுவரை 100% வேலையில் சேர்ந்திருக்கிறார்கள். இவை எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதையெல்லாம் ரகசியமாக சர்வே செய்து வருகிறோம்'' என்றனர்.


http://www.thehindu.com/multimedia/dynamic/01072/TH-EXAM_1072396f.jpg

லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி களிடம் பேசியபோது, ''பயங்கரமான நெட்வொர்க் அமைத்து வேட்டை நடத்தி இருக்கிறார்கள். இதை நிச்சயம் லோக்கல் போலீஸாரால் டீல் செய்ய முடியாது. முன்னர் நாங்கள் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வீடுகளில் சோதனை நடத்தியபோது பல்வேறு ஆதாரங்களைக் கைப்பற்றினோம்.


மேற்கொண்டு விசார¬ணையைத் தொடர முடியாமல் தடை வாங்கி விட்டனர். அதனால், தமிழக அரசு உடனே தலையிட்டு எங்களுக்கு இருக்கும் தடையை உடைத் தால், திடுக்கிடும் பல விவரங்களைக் கொண்டு வருவோம். இப்போதைய வினாத்தாள் லீக்கின் ஆணிவேர் எங்கே இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது என்பதால் வேறு வழியின்றி வேடிக்கை பார்க்கிறோம்'' என்றனர் வருத்தத்துடன்.



இந்தச் சூழலில் கடந்த வருடம் குரூப் 2 தேர்வு எழுதித் தோற்றுப் போன, சென்னையைச் சேர்ந்த  போலீஸ் அதிகாரி ஒருவரின் மகன், நம்மைத் தொடர்பு கொண்டு பேசினார்.



''கடந்த ஆண்டு குரூப் 2 தேர்வுக்காக நான் மெனக்கெட்டுப் படித்து எழுதினேன். அப்போது மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த சிலர் என்னிடம் வந்து, 'கஷ்டப்பட்டுப் படிச்சா, வேலை கிடைக்காது. எங்களைக் கவனி. அப்பத்தான் உனக்கு வேலை கிடைக்கும்' என்று என்னிடம் சொன்னார்கள். வினாத்தாள் முன்கூட்டியே வாங்கித் தருவதாகப் பேரம் பேசியவர்கள், மூன்று லட்சம் கேட்டனர். அந்த அளவுக்கு வசதி இல்லை என்பதைவிட, குறுக்குவழியில் போக விரும்பாமல் நோ சொல்லி விட்டேன்.


ஆனால், என்னை அணுகிய அதே நபர், தேர்வில் மிகஅதிக மதிப்பெண்கள் பெற்று அரசுப்பணியில் சேர்ந்துவிட்டார். அவருக்கு வேண்டப்பட்ட பலரும் அதிக மதிப்பெண்கள் எடுத்து அரசுப் பதவிகளைப் பிடித்து விட்டனர். குறுக்கு வழியில் பதவியைப் பிடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கொதித்தார்.



என்ன செய்யப்போகிறது அரசு?


  நன்றி - ஜு வி 



http://i.ytimg.com/vi/utTdVEjTb9E/0.jpg

Sunday, August 19, 2012

சென்னை ஈ சி ஆர் ரோடு NH 47 ஆ? NH 143?யா?

http://www.ecrbeachhouse.com/images/chennai-beachhouseecr.jpgடான்ஸுக்கு கூட்டிட்டு வந்து உடான்ஸ் பண்ணச் சொல்றாங்க!


ஈ.சி.ஆர். பார்ட்டி... மைனர் பொண்ணு!



விபசாரத்தில் பெண்களைத் தள்ளுவதற்காக புதுசு புதுசாகத்​தான் யோசிக்கிறார்கள்.அப்படிக் கையாளப்பட்ட ஒரு டெக்னிக் அம்பலமாகவே, 11 புரோக்கர்களும், 23 பெண்களும் போலீஸாரிடம் சிக்கி இருக்​கிறார்கள்.



சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் அருகே சுதந்திர தினத்துக்கு முன் தினம் இரவு, ஒரு சொகுசுப் பேருந்து நின்றது. பேருந்துக்கு வெளியே சில பெண்கள் கூச்சல் போட்டுக் கொண்டிருக்க... அந்த வழி யாகச் சென்ற ஒருவர் போலீஸுக்குத் தகவல் தட்டிவிட்டார்.
 போலீஸார் ஸ்பாட்டுக்கு வந்ததும், ''இந்த ஆளு எங்களை டான்ஸ் ஆடினா போதும்னு கூட்டியாந்துட்டு, இப்போ வேற மாதிரி இருக்கச் சொல்றான் சார்'' என்று பெண்கள் குற்றம் சாட்டினர். 'ஆஹா... இது வேற விவகாரம்’ என்று உஷாரான போலீஸ், உடனே பஸ்ஸில் இருந்த பெண்களை மயிலாப்பூர் அரசு காப்பகத்துக்கு அனுப்பினர். பிரச்னை செய்த புரோக்கர்கள் 11 பேரை ரிமாண்ட் செய்து விட்டனர்.


http://images03.olx.in/ui/11/06/41/1295810330_160350541_1-Farm-House-for-Daily-Rent-in-ECR-Chennai-ECREast-Coast-Road.jpg

காப்பகத்துக்கு அனுப்புவதற்கு முன், அந்தப் பெண்களில் ஒருவரிடம் பேசினோம். ''என் பேரு சந்தியா. எனக்கு டான்ஸ் நல்லா ஆட வரும். சினிமாவுல முயற்சி செஞ்சேன். பெருசா வாய்ப்பு கிடைக்கலை. அதனால, ஹோட்டல்ல டான்ஸ் ஆடுறேன். நுங்கம்பாக்கத்தில் இருக்குற ஒரு ஸ்டார் ஹோட்டல்ல வெள்ளி, சனி, ஞாயிறு மூணு நாள் மட்டும் டான்ஸ் ஆடப் போவேன். ராத்திரி 9 மணிக்கு ஆரம்பிச்சா 2 மணி வரைக்கும் ஆடுவேன். டிப்ஸ் எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு 2,000 ரூபா கிடைக்கும். சில பேர் டான்ஸ் முடிஞ்சதும் ரூமுக்குப் போகலாம்னு வம்பு பண்ணிக் கூப்பிடுவாங்க. அவங்களை சமாளிக்குறதுக்குள்ள தாவு தீர்ந்துடும்.




போன வாரம் எங்க ஹோட்டலுக்கு அன்​சாரினு ஒரு புரோக்கர் வந்தார். 'ஈ.சி.ஆர். ரோட்டுல இருக்கிற பண்ணை வீட்டுல வெளிநாட்டுக்காரங்க விருந்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க. 25 பேரு அந்த விருந்துல கலந்துக்கப் போறாங்க. அங்கே டான்ஸ் ஆடணும். நிறையத் துட்டு கிடைக்கும்’னு சொன்னார். என்கூட டான்ஸ் ஆடுற பொண்ணுங்க நாலு பேரு இருக்காங்க. அவங்ககிட்டேயும் விஷயத்தைச் சொல்லி, நாங்களே 13 பேரை ரெடி பண்ணிட்டோம். எனக்கு வீடு வடபழனி பக்கத்தில் இருக்கு. 'ராத்திரி 9 மணிக்கு பஸ் வரும் ரெடியா இருங்க’னு அன்சாரி எனக்குப் போன் பண்ணிச் சொன்னார். நாங்க எல்லோரும் வடபழனியில் நின்னுட்டு இருந்தோம். ஏசி பஸ் வந்து எங்களை ஏத்திக்கிட்டு கிளம்புச்சு.




பஸ்ல போகும் போது, அன்சாரி என்கிட்ட வந்து, 'ஃபாரீன்ல இருந்து வர்றவங்களுக்கு தமிழ்நாட்டுப் பொண்ணுங்கன்னா ரொம்பப் பிடிக்கும். டான்ஸ் முடிஞ்சதும் அவங்க ஆசைப்படுற மாதிரி நடந்துக்கோங்க. பணத்தைப் பத்தி கவலைப்பட வேண்டாம். எவ்வளவு வேணும்னாலும் கொடுப்பாங்க’னு சொல்லவும் எனக்கு பக்குன்னு ஆகிடுச்சி. என் கூட வந்த மத்த பொண்ணுங்ககிட்டயும், அன்சாரி கூட வந்த ஆளுங்க இதே மாதிரி பேசினாங்க. உடனே, எல்லா பொண்ணுங்களும் கத்திக் கூச்சல் போட்டு வண்டியை நிறுத்திட்டோம். அதுக்குள்ள போலீஸ் வந்துட்டாங்க...'' என்று நடந்த சம்பவத்தை விளக்கினார்.



http://www.southdreamz.com/wp-content/uploads/2010/11/Lohas-Hotel-New-Well-Being-Spa-Resort-Clark.jpg

''ஈ.சி.ஆர். ரோட்டுல மாயாஜால் தாண்​டிட்டா நிறைய கெஸ்ட் ஹவுஸ் இருக்கின்றன. அங்கதான் இது மாதிரி பார்ட்டிக்கு ஏற்பாடு பண்றாங்க. வெளிநாட்டில் இருந்து வரும் சில பார்ட்டிகளைத் திருப்திபடுத்த சில நிறுவனங்கள் இது மாதிரியான பார்ட் டிகளுக்கு ஏற்பாடு பண்ணுவாங்க. வெளி நாட்டுக்காரங்க, 'ப்ரஷ்ஷா’ வேணும்னு கேட்பாங்க. 
அதுக்காகத்தான் டான்ஸ் அது இதுன்னு பொய் சொல்லி பொண்ணுங்களை ஏமாத்திக் கூட்டிட்டுப் போவாங்க. அங்கே வச்சுப் பணத்தைக் காட்டினா சிலர் சைலன்ட் ஆயிடுவாங்க. பிடிக்காதவங்களை டான்ஸ் முடிஞ்சதும் அனுப்பி வைச்சிடுவாங்க. காசுக்காக சில ஸ்கூல் பொண்ணுங்க கூட இந்த பார்ட்டிக்கு வந்து போறாங்க. இந்த மாதிரி பார்ட்டிகளை அரேஞ்ச் பண்றதுக்காகவே நிறைய புரோக்கர்கள் இருக்காங்க'' என்று நம்மிடம் சொன்னார் ஈ.சி.ஆர். ரோட்டில் உள்ள ரிசார்ட்ஸ் ஒன்றில் பணிபுரியும் மேனேஜர் ஒருவர்.




இந்த வழக்குத் தொடர்பாக விசாரணை நடத்தி இருக்கும் ஐ.ஜி. மஞ்சுநாதாவிடம் பேசினோம். ''மீட்கப்பட்ட பெண்களில் ஒருவர் மைனர். ஏதாவது ஸ்கூல் பொண்​ணாக இருக்குமோன்னு நினைச்சோம். விசாரிச்சபோது அந்தப் பொண்ணு வெளியூரில் இருந்து சென்னைக்கு வந்து, இங்கே ஒரு வீட்டில் வேலை செய்வது தெரியவந்தது. 
பார்ட்டியில டான்ஸ் ஆட ணும்னு சொல்லித்தான் அந்த பொண்ணுங்க 23 பேரையும் கூட்டிட்டுப் போயிருக்காங்க. இருந்தாலும் பிடிபட்ட புரோக்கர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. புரோக்கர்களிலும் பெண்கள்தான் அதிகம். ஈ.சி.ஆர். பகுதியில் இதுபோல பார்ட்​டிகள் நடப்பது தெரிய வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்'' என்றார் உறுதியாக.



இருட்டுக்குள் இன்னும் என்னனென்ன  நடக்கிறதோ...!
http://mithunonthe.net/wp-content/uploads/2010/02/mamallapuram-chennai-ecr.jpg

thanx - ju vi

Monday, June 25, 2012

கோவை பதிவர்கள் சந்திப்பு @ பெருந்துறை

சேலத்துல பாடகர் மனோ,திருடா திருடி மன்மத ராசா பாட்டு புகழ் மாலதி, பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் கலந்துக்கற  நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தது.. லக்‌ஷ்மண் ஸ்ருதி ஆர்க்கெஸ்ட்ரா @ ஜவஹர் திடல், சேலம்..அழைப்பு விடுத்தவர் பிரபல ட்விட்டர் கம் பதிவர்.. ஆனா பேர் சொல்லக்கூடாதாம்.. பெயர் வெளீயிட விரும்பாத பதிவர்.. கம் ட்வீட்டர்.. 

 நானே கேள்வி நானே பதில் என்ற பகுதி முதன் முதலா ஆனந்த விகடன்ல தான் ஆரம்பச்சதுன்னு யாராவது நினைச்சா அந்த நினைப்பை உடனடியா ரப்பர் வெச்சு அழிச்சிடுங்க.. ஏன்னா தினமலர் வார மலர் பகுதில தான் அது முதல் முதலா அந்தரங்கம் கேள்வி பதில்ல ஆரம்பிச்சுது.. இவங்களே ஒரு கேள்வி போட்டு 2 பக்கத்துக்கு ஒரு மேட்டர்  ஆஃப் த மேட்டர் போடுவாங்க.. பெயர் வெளியிட விரும்பாத வாசகி அப்டினு போடுவாங்க... அதுக்கு தமிழ்ல உள்ள மாற்றுப்பெயர்.. அனாமிகா.. அந்த மாதிரி பெயர் வெளியிட விரும்பாத வாசகர் அல்லது பதிவர்னா அவர் மிஸ்டர் அனாமிகாவா? தெரியல.. 


ஒரு க்ளூ வேணா தர்றேன். அவர் லக்கி யுவா, அதிஷா 2 பேருக்கும் தோஸ்த்..அவர் ஃபோன்ல மெசேஜ் அனுப்பி தகவல் சொன்னதும் போலாமா? வேணாமா?ன்னு யோசனை பண்ணிட்டு இருந்தேன்.. கம்ப்பெனிக்கு ஆள் வேணுமே.. அப்புறம் தான் மாயவரத்தான் ட்விட்டர்ல  அவரும் சேலம் போக இருப்பதா சூசகமா தகவல் சொன்னார் . ( சூசகம் -நன்றி  டூ கலைஞர்)


சரின்னுட்டு சேலம் போக ரயில் டைம், ரயில் பேரு எல்லாம் கேட்டுக்கிட்டேன்.. சம்பவம் நடக்கறது  23.6.2012 சனிக்கிழமை மாலை 6 டூ நைட் 11. ( சம்பவம் சம்பவம்னு சொல்றாங்களே அதுக்கு ஒரே ஒரு அர்த்தம் தானா?) சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு மாயவரத்தான்க்கு செல்லுல ஒரு எஸ் எம் எஸ் தட்டி விட்டேன்.. சேலத்துக்கு ரயிலா? பஸ்சா? ... உடனே ரிப்ளை - கார்ல .....


யார் பக்கமும் சாயாத பாபா அல்ல ஒரு பக்கமா சாஞ்சு நிக்கும் பாபா

அப்போ நான் பெருந்துறை வந்துடறேன், பிக்கப் பண்ணிக்கறீங்களா? .....


ஒய் நாட் ஸ்யூர். 


அப்டினு ரிப்ளை.. அப்புறம் அவரே கால் பண்ணார்.. 

“ சாயங்காலம் 4 மணிக்கு கிளம்பறதா  ஐடியா. ஈரோடே வர்றதா இருந்தாலும் வந்துடறோம். ”\\

“ றோம்? பன்மை? கூட யாரு?”

 கணேஷ்.. என்கிற பிழை திருத்தி”


ஓ. ஓக்கே நீங்க கிளம்பும்போது சொல்லுங்க.. நான்  பெருந்துறை வந்து வெயிட் பண்றேன்.. பிக்கப் பண்ணிக்குங்க”


தேவைப்பட்டா ஈரோடே வந்துடறேன்.?





 வேணாம், அது உங்களுக்கு சுத்து வழி.. 19 கி மீ அதிகம் வந்துடும்.. அதனால நானே பெருந்துறை வந்துடறேன்..


அப்புறம் அவங்க அவினாசி கிராஸ் பண்றப்போ கன்ஃபர்மேஷன் கால் குடுத்தாங்க.. நான் கிளம்பி கலெக்டரேட் பஸ் ஸ்டாப்ல  நின்னேன்.. பெருந்துறை பஸ்ல ஏறி பெருந்துறை வந்தேன்.. அப்போ மணி 5 ஆகி இருந்துச்சு.. அவங்க வர இன்னும் அரை மணி நேரம் ஆகும்.. அதுக்குள்ள அவங்களை பற்றி ஒரு ட்ரெய்லர் ஓட்டிடறேன்..


மாயவரத்தான் 1973 ல பிறந்தவர்..() ஆனந்த விகடன் மாணவ பத்திரிக்கையாளர் போட்டில வெற்றி பெற்று அங்கே ஒர்க் பண்ணவர்.. இவர் ஆர்ட்டிகிள் பல ஜூ வி ல ஆ வி ல வந்திருக்கு,.,. ஜி போஸ்ட் கவுதம் இவர் செட் தான்.. ( சூர்ய கதிர் மாதம் இரு முறை இதழின் முன்னாள் கவுரவ ஆசிரியர்).. இவர் மலேசியாவில் ரத்தினக்கல் பிஸ்னெஸ் எல்லாம் பண்ணுனவராம்.. யார் அந்த ரத்தினம் என்ற விபரம் எல்லாம் சரியா கிடைக்கலை.. இப்போ கோவை வாசி..


பிழை திருத்தி என்கிற கணேஷ்.() இவர் ஊட்டி வாசி.. பிறந்தது, வளர்ந்தது, பல பெண்களின் வாழ்க்கையில் விளையாண்டது எல்லாமே ஊட்டில தான்.. பல பெண்கள் அவங்க வாழ்க்கைல தாயக்கரம், செஸ், கேரம் விளையாடும்போது அவரும் கூட விளையாண்டாரு. வேற ஏதும் இல்லை..




இவருக்கு பிழை திருத்தி என்ற பெயர் எப்படி வந்தது? அதுக்கு ஒரு சுவராஸ்யமான கதை உண்டு.. அதாவது ஆஃபீஸ்ல, பப்ளிக் ப்ளேஸ்ல யாராவது நமக்கு தெரிஞ்ச பொண்ணோ, தெரியாத பொண்ணோ லோ ஹிப்லயோ, லோ கட்லயோ டிரஸ் பண்ணிட்டு வந்தா நாம என்ன செய்வோம்? கமுக்கமா ரசிச்சிட்டு கம்முனு இருப்போம்.. சிலர் தன் ஃபிரண்ட்ஸ்சை கூப்பிட்டு தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்கற பாலிஸி பிரகாரம்..அவங்களுக்கும் அதை காட்டுவாங்க..


ஆனா நம்ம அண்ணன் கணேஷ் என்ன பண்ணுவார்னா  அவங்க செஞ்ச பிழையை கூப்பிட்டு சுட்டிக்காட்டுவாரு.. அதாவது “ இங்கே பாரம்மா.. இது இது இப்படி இருக்கு.. சண்டே ஈஸ் லாங்கர் தன் மண்டே..  ப்ளீஸ் கரெக்ட் இட்.. அப்டினு டக்னு சொல்லிடுவாரு.. இந்த மாதிரி லேடீஸ் பண்ற பிழைகளை எல்லாம் திருத்தறதால ஊட்டியில் உள்ள ஜேசீஸ் இளைஞர்கள் நற்பணி மன்றம் இவருக்கு இந்த பட்டத்தை கொடுத்திருக்கு.. பிழை திருத்தி... அண்ணன் அதையே  ட்விட்டர் கேண்டிலாவும் வெச்சுக்கிட்டார்..


இவரைப்பறி இன்னொரு சுவராஸ்யமான தகவல் இருக்கு.. அது முறைப்படி பாகம் 4 ல தான் வரனும்.. ஆனா பாருங்க.. இந்த தமிழ் சினிமா பார்த்து பார்த்து சஸ்பென்ஸ் மெயிண்ட்டெயின் பண்றதுக்குப்பதிலா இடைவேளைக்கு முன்னாலயே க்ளைமாக்ஸ் சீன்ல இருந்து 2 க்ளிப்பிங்க் முன் பாதிலயே காட்டி டெம்ப்போ ஏத்துவாங்களே,. அது பார்த்து பார்த்து எனக்கும் அது பழகிடுச்சு.. மிஸ்டர் அனாமிகா அண்ணன் பிழை திருத்தியை பற்றி சொன்ன தகவல் ஆக்சுவலி சேலம் பற்றிய பதிவில் தான் வரனும்.. இருந்தாலும் இப்பவே சொல்லிடறேன்..
 

 அண்ணன் பிழை திருத்தி தனது செல் ஃபோனில் உள்ள அரிய புகைப்படங்களின் கலெக்‌ஷனை காட்டு காட்டுனு காட்டறப்போ மாயவரத்தான் அதை க்ளிக் பண்ணி அவர் ட்விட்டர்ல போட்ட ஃபோட்டோ. இது ஒரு காபி பேஸ்ட் ஃபோட்டோ

 கார்ல அண்ணன் பிழை திருத்தியும்,( கணேஷ்) மிஸ்டர் அனாமிகா அண்ட் கோ 4 பேரும் போஉ இருக்காங்க.. அப்போ கார்ல பெட்ரோல் போட பெட்ரோல் பங்க் கிட்டே நிறுத்தி இருக்காங்க.. ( பின்னே பிளட் பேங்க்  முன்னாலயா நிறுத்தி இருப்பாங்க?)அப்போ அண்ணன் பிழை திருத்தி


“ இங்கே வேணாம்.. இங்கே கலப்பட பெட்ரோல் இருக்கும்..”

 அப்டியா? வேற எங்கே  நல்ல பெட்ரோல் இருக்கும்?


போங்க , சொல்றேன்

 அண்ணே.. ஹிந்துஸ்தான் பாரத் பெட்ரோல் பங்க் வந்தாச்சு.. இங்கே அடிக்கலாமா?


 ச்சே ச்சே.. இங்கே எல்லாம் வேணாம்..

 அப்போ எங்கே தான் அடிக்கறது?


இன்னும் போங்க.. எப்பவும் பெட்ரோல் பங்க் மெயின் சிட்டில அடிக்கக்கூடாது.. ஹை வேல தான் அடிக்கனும்.. அதே மாதிரி ஹோட்டலுமே பஸ் ஸ்டேண்ட், ரயில்வே ஸ்டேன்ட்ல சாப்பிட செலக்ட் பண்ணக்கூடாது.. கொஞ்சம் தள்ளித்தான் பார்க்கனும்.. அந்த மாதிரி..

சரிங்கண்ணே.. இது ஓக்கேவா?




அண்ணன் பிழை  திருத்தி உடன்

இப்போ அண்ணன் பிழை திருத்தி காரை விட்டு இறங்கி வலது கையை வலது இடுப்புல வெச்சு ( அவரோட இடுப்புல தான் )இடது கையை நீட்டி அங்கே இருக்கற பெட்ரோல் போடற பையனை பார்த்து “ ஏய்.. தம்பி.. இங்கே பெட்ரோல் நல்லாருக்குமா?:”அப்டினு கேட்டிருக்காரு,,


அதுக்கு அந்த பையன் “ ஏதோ சுமாரா இருக்கும்ணே”

அப்டினு பதில் சொல்லி இருக்கான்.. உடனே இவரு “ ஆங்க்.. ஏப்பா இங்கேயே பெட்ரோல் அடிச்சுக்கலாம்ப்பா.. அவனே சொல்லிட்டான்”

 இப்போ கார்ல உள்ளவங்க நிலைமையை கொஞ்சம் கற்பனை பண்ணிப்பார்த்துக்குங்க.. செம காண்ட் ஆகிட்டாங்க.. 

யோவ்.. ஒழுங்கா நாங்க அங்கேயே அடிச்சிருப்போம்.. எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி எங்களை எல்லாம் காய விட்டுட்டியேப்பா” அப்டினு கலாட்டா பண்ணி இருக்காங்க..

கட் த ஃபிளாஸ்பேக்.. அவங்க வந்துட்டாங்க..

மாயவரத்தான் ட்விட்டர் டி பில இருக்கற மாதிரியே தான் நேர்லயும் இருந்தாரு,, கணேஷ் கொஞ்சம் மாற்றம் இருந்தது.. கை கொடுத்து அறிமுகம் பண்ணிக்கிட்டோம்..


“ டீ சாப்பிட்டுக்கிட்டே பேசுவோமே?”

 சரி..வாங்க.. பஸ் ஸ்டேண்ட்ல ஒரு கடை இருக்கு, அங்கே போலாம்..


 வேணாம்ப்பா .. வேற ஒரு கடை இருக்கு.. அங்கே போலாம்னு  கூட்டிட்டு போனாங்க. பாருங்க நான் லோக்கல் ஆள் ( ம்க்கும், நீ லோக்கல்னு தான் எல்லாருக்கும் தெரியுமே?) எனக்கே தெரியலை.. ஆனா இவங்களுக்கு தெரிஞ்சுருக்கு..


பெருந்துறைல பழைய பஸ் ஸ்டேண்ட்க்கு பக்கத்துல  இன்ஃப்ரா டெக்ஸ்னு ஒரு எக்ஸ்போர்ட் கம்ப்பெனி.. அதுக்கு பக்கத்துல ஒரு பேக்கரி கடை.. அங்கே போனோம்.. அப்போ டைம் சரிஒயா 5.30.. அந்த கம்ப்பெனில இருக்கறவங்களுக்கு அதுதான் டீ டைம்.. இவங்க 2 பேரும் அதெல்லாம் தெரிஞ்சே தான் கரெக்ட்டா அந்த டைம்க்கு வந்தாங்களா? அல்லது எதேச்சையா அமைஞ்சுதான்னு தெரியலை..


காரை அங்கே நிறுத்தும்போதே தகராறு.. கடைக்காரர் அங்கே நிறுத்த வேணாம்..  தள்ளி நிறுத்துங்க. அந்த எக்ஸ்போர்ட் கம்ப்பெனி கார் வந்தா ஹார்ன் அடிச்சே கொல்வானுங்க..

 அப்டின்னாரு,,


 இன்னைக்கு ஒரு ஃபைட் கன்ஃபர்ம்னு நினைச்சேன்.. ஆனா ஆச்சரியம் பாருங்க.. மாயவரத்தான் எந்த சண்டையும் போடாம காரை தள்ளி நிறுத்திட்டு வந்துட்டார்..




 பதிவுலக வழக்கப்படி ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம் ( பதிவுல போட வேணாமா?)பிழை திருத்தி வெச்சிருக்கற கூலிங்க் கிளாஸ் என்னுதை விட நல்லாருந்தது. அதுல ரேபான்னு போட்டிருந்ததால அது ஒரிஜினல்னு நினைச்சு அண்ணே , 2 பேரும் டெம்பரவரியா கிளாஸ் மாத்திக்கலாம்.. ஃபோட்டோ எடுத்துக்கிட்டு எக்ஸேஞ்ச் பண்ணிக்கலாம்னேன். ஓக்கேன்னுட்டாரு.,.

 கார்ல , ஐ மீன் கார்க்கு வெளில நின்னு 3 ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம்..ரோட்ல போறவங்க எல்லாம் ஒரு மாதிரியா பார்த்தாங்க.. ஏன்னா ஊட்டி, கொடைக்கானல் மாதிரி டூர் ஸ்பாட்ல நீங்க என்ன பண்ணாலும் யாரும் எதுவும் கண்டுக்க மாட்டாங்க.. ஆனா பெருந்துறை மாதிரி  ஒரு ஊர்ல ஒரு மாதிரி பார்க்கத்தான் செய்வாங்க..

2 டீ , ஒரு பால் சொன்னோம்.. மாயவரத்தான் ஒரு பன் சாப்பிட்டார்.. கணேஷ் ஒன் பை டூ ( பன்னை)

  சாப்பிட்டுக்கிட்டு ட்விட்டர் வம்பு தும்புகள் பற்றி பேசிட்டு இருந்தோம்..


இங்கே இருந்து சென்னிமலை எவ்ளவ் துரம்?


 11 கி மீ தான்.. வாங்க  மலைக்கு போயிட்டு போகலாம்.

 இன்னொரு நாள் வர்றோம்.. இப்போவே டைம் ஆகிடுச்சு.. கிளம்பலாம்..


 நான் பில் பே பண்னப்போனேன். மாயவரத்தான் தடுத்து நானே குடுக்கறேன்.. ஏன்னா நான் தான் உன்னை விட சீனியர்னாரு,,


 எங்க ஊருக்கு வந்திருக்கீங்க... நான் தான் செலவு  பண்ணுவேன் ( 2 டீ ஒரு பால், ஒரு பன் என்றாலும் செலவு செலவு தானே..?)


சின்னத்தம்பி பெரிய தம்பி படத்துல ஓப்பனிங்க் ஷாட்ல சத்யராஜூம், பிரபுவும் ஒரு காமெடி ஃபைட் போட்டு கடைசி வரை பில்லே கொடுக்காம எஸ் ஆவேங்களே. அந்த மாதிரி ஆகிடுமோனு கடைக்காரர் பயந்துட்டார்.. ஏப்பா , யாராவது ஒருத்தர் பில்லைக்கொடுங்கப்பா அப்டின்னார். அப்புறம் சீனியரான மாயவரத்தான் பில் பே பண்ணூனார்.. யூத் நான் கம்முன்னு இருந்துட்டேன்..


தொடரும்...



டிஸ்கி 1 - ஆல்ரெடி ஈரோடு பதிவர் சந்திப்பு, சென்னை மெகா ட்வீட்டப் இதெல்லாம் ஓப்பனிங்க் நல்லாதான் போச்சு, ஃபினிஷிங்க் சரி இல்லைன்னு வடிவேல் பண்ணுன காமெடி மாதிரி ஆனதால செண்ட்டி மெண்ட்டலா.. மில்லி மெண்ட்டலா திங்க் பண்ணி என்ன முடிவு பண்ணி இருக்கேன்னா.. ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு தனி டைட்டில்.. ( ஏன்னா பாகம் 1, 2, 3 எல்லாம் போட்டா கிண்டல் பண்றாங்க..


டிஸ்கி 2 - என்னென்ன டைட்டில்ல பதிவு போடலாம்னு யோசிச்சு வெச்சிருக்கேன்னா


1. சேலம் லக்‌ஷமண்-ஸ்ருதி ஆர்க்கெஸ்ட்ரா - விமர்சனம்


2. சேலம் பதிவர் சந்திப்பு


3.சேலம் சாப்பாட்டுக்கடை


4. ஹோட்டல் ரூமில் நடந்த காமெடி கலாட்டாக்கள் (இரவு 12 டூ 2 ரூமில் நடந்தது என்ன/)


5. ஏற்காடு - ஒரு பார்வை


6.  திரைக்கு வர இருக்கும் , பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் ஒரு படத்தின் கதை திரைக்கதை


7. கமல் கலந்து கொண்ட சினிமா ஷூட்டிங்கில் நடந்த காமெடி கலாட்டா


8. மொக்கை ஃபிலிம் கிளப் - ஊட்டி பிளான்


9. சேலம் பெண்கள்  VS  ஈரோடு பெண்கள் ஒரு ஒப்பீடு


10. லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் ரசிகர்களா நீங்கள்?

11. தொலை தூர கார் பயணத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை


12. சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் சில கேள்விகள்

13. ஏரியில் போட்டிங்க் போவோர் கவனத்திற்கு


14. ஏற்காடு - சாப்பாட்டுக்கடை


15. மிஸ்டர் அனாமிகா பதிவர் சொன்ன சுவராஸ்யமான கேரக்டர்கள் - ஒரு அறிமுகம் ( ஆத்தா குரு)


16. பிரபல பதிவர்கள் சிம்பு- தனுஷ் ரேஞ்சுக்கு இருந்தவர்கள் திடீர் என ஆர்யா மாதவன் போல் நட்பு பாராட்டும் மர்மம் ( ஒரு ஃபிளாஸ்பேக் கதை)


17. பவர் ஸ்டார் டாக்டர் ஆக்டர் சீனிவாசன் - சேலம் மக்கள் சந்திப்பு பேட்டி


18. திருடா திருடி படத்தில் தனுஷ் இன் அப்பா கேரக்டரில் நடித்த பாடகர் கம் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் சேலத்தில் சந்தித்த பிரச்சனைகள்


19. இரவு நேரத்தில் திலை தூரப்பயணம் செய்கையில் கவனிக்க வேண்டியவை


டிஸ்கி 3 - டிஸ்கி 3 - ஒரே ஒரு டைம் சேலம் போய்ட்டு எதுக்கு இத்தனை பதிவுனு கேட்பவர்களூக்கு - இதயம் பேசுகிறது இதழில் மணியன் ஒரு நாட்டுக்கு போய்ட்டு வந்தா 34 வாரம் தொடர் எழுதறார். கல்கண்டு லேனா . தமிழ் வாணன் ஒரு டைம் ஊருக்கு போனா  50 தன்னம்பிக்கை கட்டுரை எழுதறார்.. ஏதோ ஏழைக்கு ஏத்த எள்ளுரண்டை. நான் முதல்ல  12 பதிவு தான் போடுவதா இருந்துச்சு, மாயவரத்தான் தான் ஒரு ட்வீட்ல 20 பதிவு போடப்போறார்னு நக்கல் அடிச்சார். அதான் 20 ஹி ஹி