Showing posts with label கலைஞர் டிவி. Show all posts
Showing posts with label கலைஞர் டிவி. Show all posts

Tuesday, November 08, 2011

நாளைய இயக்குநர் - ஃபேண்டசி கதைகள் -விமர்சனம்

இன்னைக்கு (6.11.2011) கீர்த்தி  ரெட் கலரா?  ஆரஞ்சா?ன்னு சொல்ல முடியாத ரெட்டிஸ் ஆரஞ்ச் கலர் கவுனில் எண்ணெய் வைக்காத, தலை சீவாத  தலையுடன் , எப்போதும் போல் குங்குமம் வைக்காத நெற்றியுடன் மங்களகரமாக(!!!) வந்தார் .. 

”உங்க படங்கள்ல வர்றது எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையா? சொந்த அனுபவம் கலந்திருக்கா?”


சுந்தர் சி  - எல்லா படைப்பாளிகளும் முழுக்க முழுக்க கற்பனை பண்றதில்லை, சொந்தக்கதைல கற்பனையை சேர்த்துக்குவாங்க.. 



கே பாக்யராஜ் -  அந்த 7 நாட்கள் படம் சந்திரபாபு கதை.. இன்று போய் நாளை வா முழுக்க முழுக்க என் வாழ்வில் நான் செய்த கலாட்டாக்களின் தொகுப்பு..




1. இயக்குநர் பெயர் - யாகேஷ் - குறும்படத்தின் பெயர் - 20 (இருபது)  வகை - ஃபேண்டசி


ஒரு மாற்றுத்திறனாளி .. அவனால் பேச முடியாது.. தாழ்வு மனப்பான்மை வேற.. நண்பர்களால் கிண்டல் அடிக்கப்படுகிறான்.. அவன் விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணுக்கு ரத்த தானம் பண்றான்.. அந்தப்பொண்ணு அவன் கிட்டே நட்பா இருக்கு.. அவனுக்கு ஆறுதல் வார்த்தை சொல்லுது.. இதை பார்க்கும் அவன் நண்பர்களுக்குப்பொறாமை + ஆச்சரியம்.. எப்படி அந்த ஃபிகர் அவன் கிட்டே மாட்டுச்சுன்னு..

அப்புறம் பார்த்தா எல்லாம் அவன் கற்பனை.. அந்த பொண்ணு விபத்துல இறந்துடுச்சு..  குடைக்குள் மழை , மூடு பனி படத்துல வர்ற மாதிரி நடக்காத ஒண்ணை நடந்ததா நினைக்கற  மன நோய்.. க்ளை மாக்ஸ்ல அந்த பொண்ணோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பார்க்கறப்பத்தான் நமக்கு உண்மை தெரியுது.. 

இயக்குநர்க்கு சில ஆலோசனைகள்

1. ஹீரோயினா நடிச்ச பொண்ணு வசனத்தை ஒப்பிக்கறாங்க.. அதுவும் எப்டி? மறந்துட்டா என்ன பண்றதுன்னு வேக வேகமா.. அதை கவனிக்கலையா நீங்க? 

2. ஹீரோவா நடிச்சவருக்கு செம பதட்டம் போல.. ரொம்ப அன் ஈஸியா இருந்தாரு.. 

3. வாய் பேச முடியாத கேரக்டர் ஹீரோ என்பதால் மாண்டேஜ் சீன்களை அவாய்டு பண்ணி இருக்கலாம்.. சில காட்சிகளில் ஹீரோ ஏதோ பேசறது போலவே இருக்கு..

4. டைட்டில்ல எதுக்கு 20? அநேகமா 20 வயசு பையனின் அனுபவம்னு நினைச்சீங்களா? ம்ஹூம், எடுபடலை.. வேற டைட்டில் வெச்சிருக்கலாம்



2. இயக்குநர் பெயர் - மித்ரன் - குறும்படத்தின் பெயர் - தருணம், வகை -உண்மைக்கதை @ ரியலிஸம்


இந்தப்படத்தோட ஸ்பெஷல்  இதனோட இயக்குநர் நியூ ஜெர்சில இருந்து படம் அனுப்பினதுதான். இயக்குநரோட அம்மா, அப்பா நிகழ்ச்சிக்கு வந்தாங்க.. 

என் பையன் கிட்டே நாங்க எதிர் பார்க்காத திறமை இருப்பது மகிழ்ச்சின்னாங்க.. பார்க்க சந்தோஷம்.. 

மிகப்பெரிய மாற்றங்களுக்கு மிகச்சிறிய தருணங்கள் போதும்கற கேப்ஷனோட படம் ஆரம்பிச்சுது.. 

ஒரு சின்னப்பையன்.. அவன் இந்தியன்.. அவன் மற்ற அமெரிக்க இளைஞர்களால் ராக்கிங்க் செய்யப்படறான்.. அவன் கடுப்பாகி மூடு அவுட் ஆகிடறான்..  தாத்தா வந்து சமாதானப்படுத்தறார்.. அட்வைஸ் பண்றார்.. 

அடுத்த டைம் ராகிங்க் செய்யப்படும்போது அவன் சத்தியாக்கிரக வழியை பின்பற்றி அமைதியா இருக்கான்,, கலாட்டா செஞ்ச இளைஞர்கள்ல ஒருத்தன் நட்பாகறான்.. எதிர் காலத்துல மற்ற இளைஞர்களும் திருந்துவாங்க என்ற சுட்டிக்காட்டலுடன் படம் முடியுது.. 

இது நியூ ஜெர்சியில் உண்மையில் நடந்த சம்பவமாம்.. குட்.

ரசிக்க வைத்த வசனங்கள்

1. விழுவது தோல்வி அல்ல , விழுந்து கிடப்பதுதான் தோல்வி..

2. எத்தனை தடவை விழுந்தாலும் எந்திரிச்சு நிக்கற பார்த்தியா அதான் உண்மையான வெற்றி.. 

3.  காந்தி யார் தெரியுமா? அவர் ஒரு சூப்பர் மேன்.. நீயும் அஹிம்சை செய் ,சூப்பர் மேன் ஆகலாம்.. 

4. லைஃப்ல வெற்றி பெறனும்னு நினைக்கறவங்க ஒரு தடவையாவது விழனும்.. அப்புறம் எழனும்.. 

5.  பறக்கறவன், சுடறவன் மட்டுமே சூப்பர் மேன் கிடையாது, காந்தி வழியை பின்பற்ற ஆளும் சூப்பர் மேன் தான்

மேலே சொன்ன 5 பாயிண்ட்ஸ்ல 2 ஏற்கனவே நாம படிச்சதா இருந்தாலும் அதை கரெக்ட்டா பேக்கிங்க் செஞ்சதுல இயக்குநர் நிக்கறார்.. இது பெஸ்ட் ஃபிலிம் அவார்டு வாங்குச்சு

இயக்குநர்க்கு சில யோசனைகள்

1. ஹீரோவா  வந்த அந்தபையன் தமிழ் தெரியாதுன்னு சொல்றீங்க ஓகே, ஆனா அவன் எல்லாமே ஆங்கில வசனத்துல பேசறது எல்லாருக்கும் புரியாது. தமிழ் சப் டைட்டில் குடுத்திருக்கலாம்..

2. அந்த பையனுக்கு 10 வயசுதான் இருக்கும், ராகிங்க் பண்ற பசங்களுக்கு 21 வயசு ஆகுது.. அவன் வயசுப்பையன்களையே செலக்ட் செஞ்சிருக்கலாம்.. 

3. வசனத்துல அன்னா ஹசரே பேர் வர்றப்ப மியூட் பண்ணீட்டீங்களா? சென்சாரா? 




3. இயக்குநர் பெயர் -செந்தில் - குறும்படத்தின் பெயர் - சுவாமி வகை-காமெடி

உலகத்துல எத்தனையோ பிஸ்னெஸ் இருந்தாலும் சாமியார் பிஸ்னெஸ் தான் செம லாபம்.. அதை கிண்டல் செஞ்சு ஒரு கதை.. சாப்பாட்டுக்கே வழி இல்லாத ஒரு பர தேசிப்பையனை பிடிச்சு அவனை சாமியார் வேஷம் போட வெச்சு அவனை உபதேசங்கள் சொல்ல வெச்சு வீடியோ எடுத்து அவனை ஆன் லைன் சாமியார் ஆக்கி  காசு பார்க்க ஐடியா போடறாங்க 2 பேரு.. அவங்க வீட்ல வீடியோ செசன்ஸ் நடக்கறப்ப டீக்கடைக்காரன் அதை பார்த்துடறான் .. உடனே அவனை அமுக்கி அவன அமுக்கி சின்ன சாமியார் ஆக்கி ஜோதில ஐக்கியம் ஆக்கிடறாங்க.. 

காமெடியில் களை கட்டிய வசனங்கள்

1. இந்த உலகத்துல நடக்காத விஷயம்னு ஏதாவது இருக்கா? என்ன?

2. இந்த உலகத்துல எல்லா மனுஷங்களுக்கும் கவலை, கஷ்டம் எல்லாம் இருக்கும், ஆனா ஒவ்வொரு மனுஷனும் தனக்கு மட்டும் தான் கஷ்டம் இருக்கறதா நினைக்கறாங்க.. 

3. ஒவ்வொரு சாமியாருக்கும் ஒரு கேப்ஷன் இருக்கும், இந்த மூஞ்சிக்கு மேட்ச் ஆகற மாதிரி ஒரு பஞ்ச் லைன் பிடிங்க.. 

கவலைப்படாதீங்க.. அதை நான் பார்த்துக்கறேன்...

ஆஹா, சூப்பர்..  கவலைகள் வேண்டாம்,  கடவுளாய் நான் இருக்கிறேன்.. எல்லாம் எனக்குள் அடக்கம்.. எப்டி பஞ்ச் லைன்..?

4. அதிகாலையில் கூட்டி விட்டுக்கிளம்பும் பறவைக்கே இரை கிடைக்கும்- இதுல இருந்து என்ன தெரியுது?

நேரத்துலயே கண் முழிச்சு வெளீல வர்ற புழுக்களுக்கு அற்பாயுசுன்னு தெரியுது   ( ஜோக் இன் தின மணிக்கதிர் @  12. 6 2008 ரிட்டர்ன் பை சீர்காழி வி ரேவதி )

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. சாமியாராக நடித்தவரின் நடிகர் தேர்வு.. அவரது நடிப்பு செம காமெடி.. 

2. ஒவ்வொரு ஃபிரேமிலும் ஆடியன்ஸ் சிரிக்க வேண்டும் என மெனக்கெட்டு அமைத்த திரைக்கதை.. வசனம் எல்லாம் டாப்.. 

3. மக்களுக்கு விழிப்புணர்வுக்கதை சொன்ன மாதிரியும் ஆச்சு..  சிரிக்க வெச்ச மாதிரியும் ஆச்சு.. 



4. இயக்குநர் பெயர் சந்திரகாந்த்- குறும்படத்தின் பெயர் - கத்திரி கரனம் வகை-ஆர்ட் ஃபிலிம்


வாழ்ந்து கெட்ட கோடீஸ்வரன் இப்போ ஏழையா தன் குழந்தையோட தனி வீட்ல இருக்கான்.. அவன் குழந்தைக்கு இதயத்துல ஓட்டை.. ஆபரேஷன் பண்ண பணம் இல்லை.. அவங்க வீட்டுக்கு திருட வர்ற ஒரு திருடன் இரக்கப்பட்டு வேற பக்கம் திருடிட்டு வந்து உதவி செய்யறான்.. அரதப்பழசான கதை.. 1970 களில் வந்த கு அழகிரிசாமியின் சிறுகதைத்தொகுப்புலயே இந்த கதை வந்துடுச்சு..

திருடன் திருந்த பர்ஃபக்ட்டான லாஜிக் காட்டலை.. சும்மா குழந்தையின் சிரிப்பை மட்டும் பார்த்து மயங்கிட்டதா  காட்டிட்டாங்க

ரசிக்க வைத்த வசனங்கள்

1. ஒரு தடவை தப்பு பண்ணுனா திரும்ப திரும்ப அதே தப்பு தான் பண்ணத்தோணும். ( ஏன் ஒவ்வொரு தடவையும் வெவ்வேற தப்பு பண்ணத்தோணாதா?)

.2. கெட்டவன் ஆகனும்னு வேலண்ட்ரியா  யாரும் ட்ரை பண்றதில்லை..

இயக்குநருக்கு சில ஆலோசனைகள்

1. கதை ஓக்கே. காட்சி வடிவமைப்பில் ஆழம் இல்லை..

2. ஹீரோவா நடிச்சவர் இயக்குநரான உங்க அப்பா என்பதாலும் அவர் , அனுபவம் உள்ள சினிமா நடிகர் என்பதாலும்தான் படம் ஓரளாவது தப்பிச்சிது



5. இயக்குநர் பெயர் -ஷபி  -  குறும்படத்தின் பெயர் - நிலா வகை- ஃபேண்டசிஃபிலிம்

இது கொஞ்சம் வித்தியசமான கதை.. ஒரு கல்யாணம் ஆன புது தம்பதி.. ( டேய்,, கல்யானம் ஆனாத்தாண்டா அவங்க தம்பதி.. ) ஒரு சின்ன ஊடல்.. யார் முதல்ல பேசறதுன்னு.. யார் முதல்ல இறங்கி வர்றதுன்னு.. நிலாவுல பாட்டி வடை சுட்டதா கதைல படிச்சமே.. அந்த பாட்டி நிலாவுல இருந்து வந்து ஹீரோயின் செல்ஃபோனை எடுத்து ஹீரோவுக்கு மெசேஜ் அனுப்புது... சாரின்னு.. உடனே ஹீரோ சமாதானம் ஆகிடறான்.. அவன் இறங்கி வந்துடறான்... லைஃப்ல பலருக்கு இந்த பிரச்சனை இருக்கும்.. 

புருஷன் , பொண்டாட்டிக்குள்ள சண்டைன்னா யார் முதல்ல இறங்கி வந்து மன்னிப்பு கேட்கறதுன்னு.. அதை அழகான திரைக்கதைல சொல்லி இருக்கார். அமரர் சுஜாதா உயிரோட இருந்திருந்தா இந்தக்கதையை விகடன்ல மென்ஷன் பண்ணி  இருப்பார்..

 ரசித்த வசனங்கள்

1. அவளுக்கு என்னை விட்டா யார் இருக்கா? கோபப்பட?

2. ஈகோ என்பது ஒவ்வொரு மனிதனின் வீக்னெஸ்

3. என் மேல கோபம் இருந்தும், என் கூட பேசக்கூடாதுன்னு வைராக்யம் இருந்தும் எனக்கு எஸ் எம் எஸ் மட்டும் நீ எப்படி அனுப்பினே?

நான் எதும் அனுப்பலையே..?


இந்தப்படத்தின் இயக்குநர் நல்ல சைக்காலஜிக்கல் பிரச்சனைகளூக்குத்தீர்வு சொல்லும் கதைக்கருக்களை பிற்காலத்தில் எடுப்பார் என்று நம்பிக்கை இருக்கிறது.. வாழ்த்துகள்