Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Wednesday, April 17, 2019

டீக்கடை வெச்சவங்க ,வீடியோ"கேசட் வாடகைக்கு விட்டவங்க எல்லாம் பெரிய பெரிய பதவிக்கு வந்துடறாங்க , அது எப்படி?

1  எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக ஐ.டி. துறையை பயன்படுத்துவதா?: திருமாவளவன் கண்டனம் # திருட்டுத்தனமா சொத்து சேர்த்து கணக்கில் காட்டாம பணம் வெச்சிருக்கறவங்கதான் ஐடி ரெய்டு பாத்து பயப்படனும்,நாமதான் நேர்மையானவர்களாச்சே?ஏன் கை காலெல்லாம் நடுங்குது?



=============



2 விவசாயி நாட்டை ஆளலாம், விஷவாயு நாட்டை ஆளலாமா..? ஸ்டாலின் விமர்சனம்..! பாய்ண்ட்.நம்ம கழகத்தலைமை பொறுப்பு ,பொருளாளர்,இளைஞர் அணித்தலைவர் இந்த பதவிக்கு எல்லாம் ஏதாவது விவசாயியை நியமிக்கலாமே?எதுக்கு குடும்பத்துக்குள்ளயே கும்மி அடிக்கறீங்க?




==============




3 இந்தியா சுட்டு வீழ்த்தியதாக சொன்ன எப்-16 போர் விமானம் பத்திரமாக உள்ளது.. கன்ஃபார்ம் செய்த அமெரிக்கா # அது வந்து f61 மாத்தி சொல்லிட்டோம்னு சமாளிப்பாங்களோ?




============




4 போலீஸ் வாகனத்தில் செல்கிறது அதிமுகவினரின் பணம்” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு



தலைவரே!அந்த விஷயம் உங்களுக்கு எப்படித்தெரிஞ்சது?

நாங்க ஆளுங்கட்சியா இருக்கும்போது"அப்படித்தானே செஞ்சோம்?.......... ஜாடை ..... க்குத்தானே தெரியும்?



=============


5 திமுக கூட்டணி தலைவர்கள் செயற்கை கோள் மூலம் கண்காணிப்பு : தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் புகார்

# யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை?
கண்ணியமானவனுக்கு கண்காணிப்பு பற்றி எதுக்கு கவலை?



=============


6 ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமி வேனில் சென்று வாக்கு கேட்டு இருப்பாரா!” -மு.க.ஸ்டாலின்


உயிரோட இருந்தப்ப நாமளே அம்மையார் அம்மையார்னு தானே பம்முனோம்?



================


7 லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் கருத்துக் கணிப்பு


தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி 27 முதல் 33 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு # டெபாசிட் கிடைச்சாலே வெற்றி அப்டினு நினைச்ட்டாங்க போல



==============


8 கூடவே இருந்து எட்டப்பர்கள் குழிபறிக்கிறார்கள்!’- துரைமுருகன் மகன் வேதனை "கட்சிக்காரங்க எல்லாம்" செயின் பறிக்கறவங்க ,நிலத்தை முறைகேடா,பறிக்கறவங்க னு தெரியும்,இப்போ இது வேறயா?


================


9 தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய காங்கிரஸ் தேர்தல் அறிக்கை − செய்தி # கூட்டத்துல யாராவது ஜோக் சொன்னா எல்லாரும் சிரிப்போம்,அது ஒரு அதிர்வலை தானே?


=============


10 மோடிக்கு எதிராக என்னைத் தூண்டிவிட்டதே திமுக தான்… அய்யா கண்ணு பகீர் குற்றச்சாட்டு !! # ஏன்?நமக்கு சுயமரியாதை,சுய சிந்தனை,சுய அறிவு எல்லாம் சம்மர் வெகேஷனுக்குப்போய் இருக்கா?


=============

11 “விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்பது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும்!” - பிரேமலதா விஜயகாந்த்
# கொளுத்தும் வெய்யிலில் அவரை அலைய விடாதீங்க.அவருக்குத்தேவை ஓய்வு


==================

12 திமுக நினைத்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும்-கனிமொழி. # சம்பவ இடத்துக்கு,கிட்ட"வந்துட்டாங்க,ஏன்னா ஊழலின் ஊற்றுக்கண்ணே திமுக தானே?


=============


13 வருமானவரி சோதனையால் தி.மு.க.வுக்கு அனுதாப ஓட்டுகள் கிடைக்கும்- துரைமுருகன் பேட்டி பிடியில் வகையா சிக்கிக்கிட்ட ஒரு திருடனைப்பார்த்து அனுதாபப்டறவன் இன்னொரு திருடனாத்தான் இருப்பான்,அதிகபட்சம் 28% கிடைக்கும்,அவ்ளோதான்


==================


14 ரஜினியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளேன்.. ஆதரவு அளிப்பார்.. கமல்ஹாசன் # வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் அவரை மறைமுகமா தாக்கறது.ஆனா ஆதரவு மட்டும் ஈசியா கேட்டு்டறாரு


=================


15 அனல் வீசும்" - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
# தினசரி 6 லிட்டர் தண்ணீர் குடிக்கனும்.பழ ரசங்கள் ஐஸ்,அஸ்கா"சர்க்கரை இல்லாம /கலக்காம குடிக்கனும்.வெளில போறப்ப குடையுடன் செல்லனும்.பருத்தி,காட்டன் ,கதர் உடைகளை உடுத்தனும்


================


16 துரைமுருகன் கற பாலுக்கு உறை ஊத்தியாச்சு,அடுத்தது திருமா,க்கு குருமா #33 கோடி , 2 கோடி


================

17 நான் மேயரானதும் மழை பெய்தது'; தி.மு.க., தலைவரின், 'பகுத்தறிவு' பிரசாரம்"# தீபாவளி,நியூ இயர்,கிறிஸ்துமஸ் மாதிரி பண்டிகை தினங்களில் பிறந்தவங்க என் பிறந்த நாளை உலகமே கொண்டாடுது"னு சந்தோஷப்படற மாதிரி தான்.கரெக்டா மழை பெய்யும் தினமா"வானிலை அறிக்கை பாத்து பதவி ஏத்துட்டு பேச்சைப்பாருங்க


================


18 வழக்கை சந்திக்கும்போது ஒரு முறை கூட வாய்தா கேட்டாரா...எந்த குற்றமும் இல்லை என்று நிருபித்து குற்மற்றவராக வெளியில் வந்தவர் தான் ஆ ராசா − ஸ்டாலின் # மேல் முறையீடு"தீர்ப்பு வந்துடட்டும்,வெய்ட்.அப்போ நீரா ராடியா ஆடியோ டேப் ,சாதிக்பாட்சா கொலை வழக்கு எல்லாம் என்ன ஆகறது?


=================

19 நீங்க கடையில டீ குடிக்கிறீங்க... ஆனா நாங்க டீக்கடையே நடத்தியிருக்கோம்!”- ஓ.பி.எஸ்
# டீக்கடை வெச்சவங்க ,வீடியோ"கேசட் வாடகைக்கு விட்டவங்க எல்லாம் பெரிய பெரிய பதவிக்கு வந்துடறாங்க


==================


20 தமிழகத்திலேயே பெரிய கட்சி நாம் தமிழர்தான் - சீமான் ?கத விடறதுலயா?


=================

Monday, April 15, 2019

தங்கைக்கோர் கீதம் பாடறப்போ ராகம் தாளம் பல்லவி பாடறாரே?

சென்னை - சேலம் எட்டு வழி சாலை வழக்கில், தீர்ப்பு வந்துள்ளது. :  விவசாயிகள் நலனை காக்கும் வகையில், அந்த முடிவு இருக்கும்-ஜெயகுமார்  # 8 வழி சாலையே விவசாயிகளின் ஜாதகத்தில் அஷ்டமத்துல சனிதானே?


================

2  : சென்னை - சேலம் எட்டு வழி சாலை வழக்கில், தீர்ப்பு வந்துள்ளது. தீர்ப்பு நகல் கிடைத்த பின், அரசு உரிய முடிவு எடுக்கும்.-ஜெயகுமார்  # நகல் கிடைத்த பின் அரசின் அசல் முகம் தெரிய வரும்?

==============\\

3 விவசாயிகள் நலனை காக்கும் வகையில், அந்த முடிவு இருக்கும்-ஜெயகுமார்

முதல்வர் கூட ஒரு விவசாயிதான், அவரோட நலனைக்காக்கும் விதமா இருக்குமோ?

==============


4    : தமிழிசைக்கு வேறு தொகுதி கிடைக்கவில்லையா? - ஸ்டாலின்  # அதானே? க்ரெக்டா தங்கைக்கோர் கீதம் பாடறப்போ  ராகம் தாளம் பல்லவி பாடறாரே?


===============

ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல பிரச்னைகள் உள்ள துாத்துக்குடியில், தோற்பதற்காகவே, அவர் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. தமிழிசைக்கு எதிராக, பா.ஜ., சதி செய்துள்ளது-ஸ்டாலின் # எங்களுக்கென்னவோ உங்க தங்கைக்கு எதிரா நீங்க சதி செய்யறிங்களோனு தோணுது


=================

6  நாங்கள், ஜெயலலிதாவின் ஆன்மாவிற்கு பயந்து, மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்-ஓபிஎஸ்

சிவாஜி , கமல் ரேஞ்சுக்கு பின்னிப்பெடல் எடுக்கறாரே?


அப்போ மக்கள் கேள்வி கேட்பாங்க அப்டிங்கற பயம் எல்லாம் இல்ல?


=================


7    பா.ஜ., மதவாத கட்சி என்றால்,  ஸ்டாலின், 'ஹிந்துக்களுக்கு நாங்கள் எதிரி இல்லை' என்கிறார்.-தினகரன் # தேர்தல் முடியும் வரை இந்துக்களுக்கு எதிரி இல்லை என திருத்தி வாசிக்கவும்


=============


8  எங்கள் குடும்பத்திலும், கோவிலுக்கு செல்கின்றனர்' என, பா.,ஜ.,வினர் போல் பேசுகிறார் ஸ்டாலின்,. இதன் மூலம், தி.மு.க., கூட்டணி, மதசார்பற்ற கூட்டணி இல்லை; அது, பா.ஜ.,வின், அடுத்த பிரிவு எனத் தெரிகிறது= தினகரன்  # தூத்துக்குடில போட்டி இடற கனிமொழி தூத்ஹ்டுக்குடில பிரச்சாரத்தை ஆரம்பிக்காம அருகில் இருக்கும் திருச்செந்தூர் முருகனை வழிபட்டு பிரச்சாரத்தை ஆரம்பிக்கலையா?


=============


9  நேற்று வரை, ஆட்சி மீது புகார் கூறி வந்த, பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகள், மக்களை மறந்து, பதவிக்காக, அ.தி.மு.க.,-வுடன், கூட்டணி அமைத்திருக்கின்றன.- செ.கு.தமிழரசன் # அப்போ அவங்க ஜெயிச்சிடுவாங்கனு ஒத்துக்கறீங்களா?


===============


10   குத்துச் சண்டையில், ஒரு போட்டியாளரின் கை, கால்களை கட்டி போட்டுவிட்டு, மற்றொரு போட்டியாளர் வெற்றி பெற்றதாகக் கூறுவதை எப்படி ஏற்க முடியாதோ, அதேபோல் தான், எங்கள் வீட்டில், வருமான வரித்துறை சோதனை நடத்திவிட்டு, தேர்தல் பணிகளை அடியோடு முடக்கிவிட்டு, எங்களை வீழ்த்தி விட்டோம் எனக் கூறுவது, நியாயமாக இருக்காது  -துரைமுருகன் # அப்போ ரெய்டில் கைப்பற்றப்பட்ட பணம் உங்களுதுதான்னு ஒத்துக்கறீங்களா?


============:
11  . பூஜ்ஜியத்திற்கு உள்ளே ஒரு ராஜ்ஜியம் என, ஸ்டாலின் வாழ்ந்து வருகிறார். வெளியே வந்து பார்த்தால், பா.ஜ., சதம் அடித்திருப்பது, அவருக்குத் தெரியும்.-பொன்.ராதா  # 100 தொகுதிதான் பாஜக வுக்கு கிடைக்கும்னு அர்த்தமா?


==============



12  'லாலுவுக்கு, 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 'ஆனால், லாலு சிறையில் இருந்தது, 24 மாதம் தான். எனவே, 'ஜாமின்' வழங்க முடியாது-நீதிபதிகள்  # அப்போ இன்னும் 3 மாசம் கழிச்சு 27 மாசம் ஆனதும் ஜாமீன் விடுவாங்களா? தேர்தலே முடிஞ்சிடுமே? எப்படி பிரச்சாரம் பண்ணுவாரு?



==================


13  ஊழல் செய்வதற்காகவே ஆட்சிக்கு வரத் துடிக்கிறது காங்கிரஸ்: மோடி # ஆட்சி செய்வது என்றாலே ஊழல் செய்வது என்றுதான் அர்த்தம்கறாரா?


=================


14  ரூ. 38 ஆயிரம் கட்டண பாக்கி வருண் மீது பி.எஸ்.என்.எல்., புகார் # வரும் வரும்  வெய்ட் பண்ணுங்க - வருண்


================



15  துரைமுருகன் மகன் மீது வழக்கு: எந்நேரமும் கைதாக வாய்ப்பு  $ ப  சிதம்பரத்துக்கு அடுத்து குடும்பத்தோட ஜெயிலுக்குப்போன அரசியல்வாதில இவர் பேரும் வருமோ?


==================

16   தி.மு.க., ஹிந்து விரோதக் கட்சி' என, சிலர் கூறுகின்றனர். -ஸ்டாலின்  #எப்பவும் எதிரினு சொல்லிட முடியாது  , தேர்தல் வரும்போது நண்பர்கள்தான் , அவங்க ஓட்டு வேணுமில்ல?


============


 17  ஹிந்து மதம், பா.ஜ.,வுக்கு மட்டும் சொந்தமானதல்ல. ஹிந்துக்களைப் பாதுகாப்பதாகக் கூறி, பா.ஜ.,வினர் நாடகமாடுகின்றனர். எந்தவொரு ஜாதி, மதத்திற்கும், தி.மு.க., எதிரானதல்ல. -ஸ்டாலின் #  அப்போ கலைஞர் டிவி ;ல  இந்துப்பண்டிகைகளுக்கு விடுமுறை தின சிறப்புத்திரைப்படம் போடுவது ஏன்? இந்துப்பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துக்கூறாதது ஏன்?

==================


18  சமுதாய நலனை பேணிக் காக்கும் கடமை கொண்ட இயக்கம். மதசார்பற்ற அரசு மத்தியில் உருவாக வேண்டும். அதேநேரம், எல்லா மதத்தினரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதே, எங்கள் எண்ணம்.-ஸ்டாலின்   # நிச்சயம், அப்போத்தானே எல்லா மத ஓட்டுகளும் கிடைக்கும்?


=====================


19  கர்நாடகாவில், காங்., வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தபோது, நடிகை குஷ்புவை, கூட்டத்தில் இருந்த இளைஞன் சில்மிஷம் செய்தான். ஆவேசமடைந்த குஷ்பு, அந்த இளைஞன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் # கன்னத்துல வை அப்டினு அந்த  இளைஞர் பாடி இருப்பாரோ? அதான் பளார்னு வெச்ட்டார்


================


20  மோடியின் புஜபல பராக்கிரமம் என்ன என்பது இந்த தேர்தலில் முழுவதுமாக தெரிந்து விடும்-ராகுல் # நடப்பது தேர்தலா? குஸ்திப்போட்டியா?


=================

Sunday, April 14, 2019

திட்டத்திட்ட திண்டுக்கல்

: சென்னை - சேலம், எட்டு வழிச்சாலை தொடர்பான, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மத்திய, மாநில அரசுகள், மேல்முறையீடு செய்யக் கூடாது. விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்காக, உச்ச நீதிமன்றத்தில், என் சார்பில், 'கேவியட்' மனு தாக்கல் செய்யப்படும் -அன்புமணி  # நம்ம கூட்டணிக்கட்சி தானே? நேருக்கு நேரா சொல்லலாமே?


=============


2   என் கொள்ளு தாத்தா நேரு, பாட்டி இந்திரா, பெரியப்பா ராஜிவ் ஆகியோர், இதற்கு முன், பிரதமர்களாக பதவி வகித்துள்ளனர். அவர்களை விட, தற்போதைய பிரதமர் மோடி தான், சர்வதேச அளவில், நம் நாட்டுக்கு அதிக பெருமை சேர்த்துள்ளார் - *பா.ஜ., - எம்.பி., வருண்:   # ஜால்ரா சத்தம் ஜாஸ்தியா இருக்கே?



==================


3    தமிழகத்தில், அ.தி.மு.க.,வை மிரட்டி, பா.ஜ. கூட்டணி அமைத்துள்ளது -இ.கம்யூ., தேசிய செயலர் சுதாகர் ரெட்டி: # மிரட்டலான படம்னு திகில் , பேய்ப்படங்களுக்கு விளம்பரம் தர்றது மாதிரி இது ஒரு அரசியல் மிரட்டல் கூட்டணிங்கறீங்களா?


===================


4   பா.ஜ., இருக்கும் அணிக்கு, த.மா.கா., தலைவர் வாசன் சென்றது, வேதனைக்குரியது. இதை, எந்தவொரு உண்மையான காங்கிரஸ்காரனும், ஏற்றுக் கொள்ள மாட்டான்.=கார்த்தி சிதம்பரம்   # ஜனங்க  ஏத்துக்கிட்டாப்போதாதா?
============

 5  த.மா.கா.,வுக்கு, சைக்கிள் சின்னம் கிடைத்ததில், எனக்கும் பங்கு உண்டு. சைக்கிள் சின்னம், கவுரவமானது. அந்தச் சின்னம் இப்போது, அவர்களுக்குக் கிடைக்காததில் மகிழ்ச்சி -கார்த்தி சிதம்பரம் - என்ன ஒரு நல்ல எண்ணம், அடுத்தவனுக்கு ஒரு கஷ்டம்னா நமக்கு சந்தோஷம்



===============


6    சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது, பின்னடைவு கிடையாது. இது சம்பந்தமாக, அரசு மேல்முறையீடு செய்யும் -  ராஜேந்திர பாலாஜி # மேல்முறையீட்டிலும் அந்த திட்டத்துக்கு பால் ஊத்திட்டாங்கன்னா? என்ன ப்ன்றது? பால்வளத்துறை அமைச்சரே?


===============

7    தொழில் துறை வளர்ச்சிக்கு, சாலை வசதி மிகவும் அவசியம். அடுத்தக்கட்டமாக, கூட்டணிக் கட்சி தலைவர்களை அழைத்துப் பேசி, யாரும் பாதிக்காத அளவுக்கு, முதல்வர் முடிவெடுப்பார்   -ராஜேந்திர பாலாஜி   # விவச்சாயிகள் பாதிக்காதவாறு சொல்றீங்களா? கூட்டணிக்கட்சிகளை கவனிக்கறதுல பாதிப்பு இல்லாம செட்டில்மெண்ட்டா?


==============


அரசியல் களம் எனக்குப் புதிது. முதலில் நான், கள நிலவரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்த முறை நான், வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்றால், இம்முறை நான், மக்களைச் சந்தித்து, அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்; என்னையும், மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, தலைவர் முடிவு எடுப்பதற்கு முன், இம்முறை நான் போட்டியிடவில்லை என்ற என் நிலைப்பாட்டை, அவரிடம் தெரிவித்து விட்டேன்  -    ஸ்ரீபிரியா # அப்போ சட்டமன்றத்தேர்தல்ல நிச்சயம் சீட் கேட்பாருன்னு இப்பவே துண்டு போட்டுட்டாரு


==============


 தி.மு.க., வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, ஹீரோ. காங்., தேர்தல் அறிக்கை, சூப்பர் ஹீரோ.-   ஸ்டாலின் # அப்போ காங்கிரசை விட திமுக ஒரு மாற்று கம்மினு ஒத்துக்கறாரா?


===============



10   பா.ஜ., வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், மக்களுக்கு பயன்படும் எந்தத் திட்டங்களும் இல்லை. மோடி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, ஜீரோ. இந்தத் தேர்தலில், மத்திய, மாநில அரசுகளை, வீட்டுக்கு அனுப்ப வேண்டும். -ஸ்டாலின்


கணக்குல ரொம்ப முக்கியமான எண்  ஜீரோ தான்னு அவங்க வாதிடுவாங்களா?


=================

11   துரைமுருகன்: என் வீட்டில் நடத்தப்பட்ட, வருமான வரி சோதனையின் போது, என் மகன் கதிர்ஆனந்தை கழிப்பறைக்கு செல்லவோ, காபி குடிக்கவோ அதிகாரிகள் அனுமதிக்காமல் அலைக்கழித்தனர்.- துரைமுருகன்:# துரை முருகனை CRYமுருகன் ஆக்கீட்டாங்க போல


ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்னு வீரவ்சனம் எல்லாம் பேசுனிங்க?4 மணி நேரம் காபி குடிக்காம கூட இருக்க முடியல, நீங்க எல்லாம் எப்படி மக்கள் நலனுக்காக உண்ணாவிரதம் இருக்கப்போறீங்க?


=================


12  கடந்த, 2011ல், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தது தான் தவறு. அன்று வைக்காமல் இருந்தால், விஜயகாந்த் தான் இன்று முதல்வராக இருந்திருப்பார் -பி ரேமலதா: #  இன்னும் 2 வருசம் கழிச்சு 2019 ல் கூட்டணி வைத்தது தவறு , தனியாக நின்றிருந்தால் விகாந்த் தான் பிரதமர் ஆகி இருப்பார்னு சொல்வாரோ?


====================


13 வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பதை, தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்- தமிழக, காங்., தலைவர், கே.எஸ்.அழகிரி:  #ஆமாங்க , ஆரத்தி எடுத்தா காணிக்கை போடனும், தண்டச்செலவு


==================


14    தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., சேரவில்லை என்ற கோபத்தில், தேர்தல் பிரசாரத்தில் என்னை, திட்டித் தீர்க்கிறார், ஸ்டாலின்.-ராமதாஸ் # திட்டத்திட்ட திண்டுக்கல்னு போய்க்கிட்டே இருங்க



================


15  தி.மு.க.,வில் இருந்து, எம்.ஜி.ஆர்., எப்போது வெளியே போனாரோ, அப்போதே, தி.மு.க., அழிந்துவிட்டது-ராமதாஸ்  # அப்போ நாம ஏன் அழிந்து போன கட்சியோட கூட்டணி வெச்சோம்?


================


16  இன்று, அ.தி.மு.க., பெரிய கட்சியாக வளர்ந்து இருப்பதற்கும், தி.மு.க.,வினர் தான் காரணம்-ராமதாஸ்   # அப்போ நீங்க அதிமுக கூட கூட்டணி வெச்சதுக்கும் திமுக தான் காரணம்? அப்போ நன்றி சொல்லிடுங்க


================


17  ஜெயலலிதா மரணம் குறித்து, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை திசை திருப்பவே, கருணாநிதியின் மரணம் குறித்து, முதல்வர், இ.பி.எஸ்., விமர்சிக்கிறார். இது, கண்டனத்திற்குரியது. முதல்வர் தகுதிக்கு, இது பண்பல்ல. அரசியல் தலைவர்களின் விமர்சனங்கள், தற்போது தரம் தாழ்ந்து விட்டன. தரமற்ற அரசியல்வாதிகளை, பொதுமக்கள் தேர்ந்தெடுப்பதே இதற்குக் காரணம்.-திருநாவுக்கரசர் : #  ஈபிஎஸ் சை முதல்வராக பொதுமக்களா தேர்ந்தெடுத்தாங்க?


==============


18 கறுப்பு பணம் இருந்தால் தான், இலவசமாக கல்வி வழங்க முடியும். என்னிடம், கறுப்பு பணம் கிடையாது. -தம்பிதுரை # அப்போ உங்க கூட்டணி ல இருக்கற ஏ சி சண்முகம் இலவசககல்வி தர்றாரே? அவர் கிட்டே கறுப்புப்பணம் இருக்குங்கறீங்களா?


================


19 45 கல்லுாரிகள் எனக்கு இருப்பதாக, பொய் பிரசாரம் செய்யும் ஸ்டாலின் மீது, விரைவில் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்படும். என் மீது கூறி வரும் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் நிரூபித்தால், அரசியலை விட்டு விலகத் தயார். அப்படி நிரூபிக்காவிட்டால், அவர் அரசியலை விட்டு விலகத் தயாரா?-தம்பிதுரை # இன்னும் ஒரு தடவை கூட முதல்வரா ஆகலை, அதுக்குள்ளே அரசியலை விட்டு விலகச்சொன்னா எப்படி?-ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ்



================


20  ஆட்சியை மீண்டும் பிடிக்கும் கட்சி, எவ்வளவு பொறுப்போடு ஒரு தேர்தல் அறிக்கையை கொடுக்க முடியுமோ, அந்த வகையில், சிறப்பான தேர்தல் அறிக்கையை, பா.ஜ., கொடுத்துள்ளது. பா.ஜ., தேர்தல் அறிக்கையை ஸ்டாலின், 'பூஜ்ஜியம்' எனக் கூறியதன் அர்த்தம் புரியவில்லை.-பொன்.ராதா # பூஜயம்னா சுழி. பாஜக வுக்கு அதிர்ஷ்டச்சுழினு சொல்றாரு போல 


===================

Wednesday, March 20, 2019

நாட்டு நடப்பு நையாண்டிச்சிரிப்பு

தமிழக அரசு, பொள்ளாச்சி வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,யில் இருந்து, சி.பி.ஐ.,க்கு தானாக மாற்றி இருக்கிறது. இது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது -திருமாவளவன்:  # இதையே திமுக ஆட்சில செஞ்சிருந்தா தானே மாற்றிய தானைத்தலைவன் வாழ்கனு கோஷம் போட்டிருப்பாரு


மாத்தினாலும் ஏசும், மாத்தலைன்னாலும் புறம் [பேசும் , வையகம் இதுதானடா


===================


எங்கள் கட்சி சார்பில், வேட்பாளர்கள் தேர்வு நடந்து வருகிறது. வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பின், தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல உள்ளேன்.-சரத்குமார்: # 40 பேரு கிடைக்கனும் இல்ல? லேசுப்பட்ட காரியமா?

===========

3 லோக்சபா தேர்தலில், நான் போட்டியிடவில்லை.-சரத்குமார்:  #எம். பி ஆகாமயே பிரதமர் ஆக ரூட் கண்டுபிடிச்ட்டாரோ?


============

4பா.ஜ., ஆட்சியில், பெரு நிறுவன முதலாளிகள் மட்டுமே, சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளனர். நடுத்தர, சாதாரண மக்கள், தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்- மார்க்., கம்யூ., கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர், பிரகாஷ் கராத்:  # அப்போ ஆளூங்கட்சிக்கு டெபாசிட்டே கிடைக்காதுங்கறீங்களா?


=================

 தொண்டர்களின் விருப்பம் காரணமாக, லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும், தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்-தீபா: # 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் கண்டுபிடிக்கவே மாமாங்கம் ஆகுமே?

அப்படி விரும்புன தொண்டர்கள் லிஸ்ட் ஆதார் கார்டோட தர முடியுமா?நம்ம கட்சில தொண்டர்கள் இருக்காங்க என்பதே அதிர்ச்சியான செய்திதான்


====================


தேர்தல் முடிவுக்குப் பிறகு, ஆட்சி அமைப்பதற்கு, பா.ஜ.,வுக்கு மற்ற கட்சிகளின் தயவு தேவைப்படும். அந்த நிலையில், மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்-சரத்பவார்:  # அப்போ எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காதுனு நீங்களே ஒத்துக்கறீங்க?


=================

ஜெயலலிதாவுக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்ற, அ.தி.மு.க., கோரிக்கையை, நிச்சயமாக ஆதரிப்போம்-அன்புமணி:  # வேற வழி ?

இல்ல, எதிர்த்துதான் பாருங்களேன்

 ஜெ படம் திறக்க எதிர்ப்பு, நினைவகம் அமைக்க எதிர்ப்பு , இதுக்கு மட்டும் ஆதரவு?

================

இந்தியாவுக்கு, பொய் சொல்லாத பிரதமர் வேண்டும்.-இந்திய கம்யூ., மாநில செயலர், முத்தரசன் #அதுக்கு அரிச்சந்திர மகாராஜாவைத்தான் கூட்டிட்டு வரனும்



=============

எங்கள் கூட்டணி, தேர்தலுக்காக உருவான கூட்டணி அல்ல; மக்கள் நலனுக்காக, மாநில அரசியல் சட்டத்தை பாதுகாக்கவும், மதச்சார்பின்மையை பாதுகாக்கவும், கூட்டணி அமைத்து போராடி வருகிறோம்=  இந்திய கம்யூ., மாநில செயலர், முத்தரசன் # மக்கள் நலக்கூட்டனிக்கு போன தடவையே தோல்விதானே கிடைச்சது?

===================


10 தமிழகத்தில், லோக்சபா தேர்தலுக்காக, எங்களை யாரும் கூட்டணிக்கு அழைக்கவே இல்லை.-  அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின், தமிழ் மாநில பொதுச் செயலர், பி.வி.கதிரவன் # உண்மையை ஓப்பனா ஒத்துக்கற அந்த மனசுதான் சார் கடவு:ள்

  ஜெ  தீபா , சரத்குமார் சமக்  இப்படி உதிரிக்கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டணி:  உருவாக்கலாமே?


================
1  ஸ்டாலின்,  என்ன பேச வேண்டும் என்று தெரியாமல், வாய்க்கு வந்தபடி உளறுகிறார். 'திருப்பூரில், துறைமுகம் அமைப்பேன்' என்கிறார். அங்கு எப்படி துறைமுகம் அமைப்பார் என்றே தெரியவில்லை. -அ.தி.மு.க., - எம்.பி., -கே.என்.ராமச்சந்திரன்   # இது என்ன பிரமாதம்? முதல்ல கடல் அங்கே கொண்டுவரப்படும், பிறகு துறைமுகம் அமைக்கப்படும்
================
12     லோக்சபா தேர்தலுக்காக, அ.தி.மு.க., அமைத்துள்ள, 'மெகா' கூட்டணியை கண்டு, எதிர்க்கட்சிகள் கதிகலங்கி உள்ளன-கே.என்.ராமச்சந்திரன் #   அதிமுக வை திட்டுன கட்சி, திட்டிட்டு இருக்கற கட்சி கூட கூட்டணி வெச்சா?
 மக்களே கதிகலங்கி இருக்காங்க

================
13மற்றவர்கள், தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள, ஏதேதோ செய்கின்றனர் என்பதற்காக, தி.மு.க.,வின் இளைஞர் பட்டாளமும், தங்களை சதா வெளிப்படுத்திக் கொண்டிருக்க தேவையில்லை. ராணுவ வீரர்கள், தினந்தோறும் சாலையில் நின்று, தங்கள் பலத்தைக் காட்ட வேண்டிய அவசியமில்லை. போர் வந்தால்தான், அவர்களின் வீரம் வெளிப்படும்.- தி.மு.க., கொள்கை பரப்புச் செயலர், சிவா #  எதுக்கு ரஜினியை வம்புக்கு இழுக்கறிங்க?=================
14   :அ.தி.மு.க.,வில், எம்.ஜி.ஆரால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்று, சட்டசபையிலும், லோக்சபாவிலும் பணியாற்றி உள்ளேன். நீண்ட நாட்களுக்குப் பின், என் தாய் கட்சியான, அ.தி.மு.க.,வில், இரட்டை இலை சின்னத்தில், வேலுார் லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளேன். இக்கூட்டணியில் நான் இணைந்தது, என் தாய் வீட்டுக்கு வந்த சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது-ஏ.சி.சண்முகம் # பொதுவா தாய் வீட்டுக்கு வரும் பொண்ணூங்க சீதனமா எதையாவது தாய் வீட்ல இருந்து சுருட்டிட்டு போய்டுவாங்களாம், நாம எப்படி>
===============
15  ஓட்டு உரிமை என்பது, துப்பாக்கி தோட்டாக்களை விட, மிகப்பெரிய சக்தி. இதை, அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் ஓட்டு தான், நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது-இந்திய துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு # எனை நோக்கி பாயும் தோட்டானு ஆளாளுக்கு கதி கலங்கி இருக்காங்க
===================
16 மக்கள் நீதி மையத்தோடு கூட்டணி வைத்தால், நாம் காணாமல் போய்விடுவோம் என்ற பயம், ஆண்ட கட்சிகளுக்கு இருக்கிறது. - கவிஞர் சினேகன் # ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது
============
17  கமலை கூட்டணிக்காக நெருங்க,அரசியல்வாதிகள் பயப்படுகின்றனர். - கவிஞர் சினேகன்   # கூட்டணீப்பேச்சுவார்த்தைல கமல் என்ன பேசறார்னே புரியாதே?அதான் [பம்மறாங்க
===============
18  மக்கள் மனம் கவர்ந்த நடிகராக கமலை பார்ப்பதே, இந்த பயத்திற்குக் காரணம். மற்றபடி, எங்களுக்கு ஓட்டு வங்கி இல்லை என்பதெல்லாம், பரிசுத்தமான பொய்.- கவிஞர் சினேகன் # ஒரு தேர்தலிலாவது நின்னு வாக்கு வாங்கின பின்னாடிதான் வாக்கு வங்கியைப்பத்தியே பேச முடியும்
=================
19  உண்மையான, அ.தி.மு.க.,வினர், எப்போதும் எங்கள் பக்கமே உள்ளனர். டெண்டர்களுக்காக சென்றவர்கள் மட்டுமே, இ.பி.எஸ்.,சிடம் உள்ளனர்-  கர்நாடக மாநில, அ.ம.மு.க., செயலர் புகழேந்தி #  தொண்டர்கள் இருக்காங்களா? கண்ணுக்கு எட்டுனவரை கட்சி குண்டர்கள் தான் தெரியறாங்க
=====================
20   லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் 
தேர்வையே, பா.ஜ., தான் செய்யப் போகிறது.- கர்நாடக மாநில, அ.ம.மு.க., செயலர் புகழேந்தி# ஓஹோ அப்போ பாஜக வேட்பாளர் தேர்வை அதிமுக செய்யுமா? எக்சேஞ்ச் ஆஃபரா?