Showing posts with label மோனிகா. Show all posts
Showing posts with label மோனிகா. Show all posts

Tuesday, April 05, 2011

அழகி மோனிகா பேட்டி VS சினிமா எக்ஸ்பிரஸ் - காமெடி கும்மி

http://mimg.sulekha.com/monika/stills/monika_11.jpg 

அத்‌தை‌ பொ‌ண்‌ணு மா‌தி‌ரி‌ இருக்‌கீ‌ங்‌கன்‌னு 
என்‌ ரசி‌கர்‌கள்‌ சொ‌ல்‌றா‌ங்‌க!
- மோ‌னி‌கா‌ ஜி‌லீ‌ர்‌ பே‌ட்‌டி‌

முத்‌துக்‌கு முத்‌தா‌க படத்‌தி‌ல்‌ அன்‌னமயி‌ல்‌ என்‌கி‌ற கி‌ரா‌மத்‌து நர்‌ஸ்‌ கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ மோ‌னி‌கா‌வி‌ன்‌ நடி‌ப்‌பை‌ப்‌ பா‌ர்‌த்‌து, பத்‌தி‌ரி‌ககை‌‌களும்‌ நண்‌பர்‌களும்‌ உறவி‌னர்‌களும்‌ பா‌ரா‌ட்‌டி‌ய சந்‌தோ‌சம்‌. கூடவே‌ நஞ்‌சுபு‌ரம்‌ படம்‌ வெ‌ளி‌யா‌க அதி‌ல்‌ ஆட்‌டுக்‌கா‌ரப்‌ பெ‌ண்‌ணா‌க வரும்‌ மோ‌னி‌கா‌வி‌ன்‌‌ நடி‌ப்‌பு‌ம்‌ பே‌சப்‌படுவதி‌ல்‌ கூடுதல்‌ சந்‌தோ‌சத்‌தி‌ல்‌ இருக்‌கி‌றா‌ர்‌ மோ‌னி‌கா‌. இரண்‌டு வா‌ர இடை‌வெ‌ளி‌யி‌ல்‌ தா‌ன்‌ நடி‌த்‌த இரண்‌டு படங்‌கள்‌ வெ‌ளி‌யா‌கி‌ இருக்‌கும்‌ மகி‌ழ்‌ச்‌சி‌யி‌ல்‌ மோ‌னி‌கா‌வி‌ன்‌ உற்‌சா‌க பே‌ட்‌டி‌.

1. முத்‌துக்‌கு முத்‌தா‌க படத்‌தி‌ல்‌ உங்‌களுக்‌கு கி‌டை‌த்‌த பா‌ரா‌ட்‌டுகளை‌ எப்‌படி‌ உணர்‌கி‌றீ‌ர்‌கள்‌...

முத்‌துக்‌கு முத்‌தா‌க சூ‌ட்‌டி‌ங்‌ நடக்‌கும்‌போ‌தே‌, படக்‌குழுவி‌ல்‌ உள்‌ள அத்‌தனை‌ பே‌ரும்‌ என்‌னோ‌ட நடி‌ப்‌பை‌ பா‌ரா‌ட்‌டுனா‌ங்‌க. அதோ‌ட நா‌ன்‌, வி‌க்‌ரா‌ந்‌த்‌ சம்‌பந்‌தப்‌பட்‌ட கா‌ட்‌சி‌கள்‌ பெ‌ரி‌தும்‌ பே‌சப்‌படும்‌னு சொ‌ன்‌னா‌ங்‌க. படம்‌ வெ‌ளி‌யா‌ன பி‌ன்‌ நி‌றை‌ய தெ‌ரி‌ஞ்‌சவங்‌க, தெ‌ரி‌யா‌தவங்‌க, சி‌னி‌மா‌ இன்‌டஸ்‌ட்‌ரி‌ல இருக்‌கி‌றவங்‌கன்‌னு நி‌றை‌ய பே‌ர்‌ போ‌ன்‌ பண்‌ணி‌ பா‌ரா‌ட்‌டி‌னா‌ங்‌க. கா‌தல்‌ நி‌றை‌வே‌றா‌ம தவி‌க்‌கி‌றத ,வெ‌ளி‌க்‌கா‌ட்‌டுற உங்‌க நடி‌ப்‌பு‌ கண்‌ கலங்‌க வை‌க்‌குதுன்‌னு சொ‌ல்‌றா‌ங்‌க. ரொ‌ம்‌ப சந்‌தோ‌சமா‌ இருக்‌கு. எனக்‌கு இப்‌படி‌ ஒரு வா‌ய்‌ப்‌பு‌ கொ‌டுத்‌த இரா‌சு.மதுரவன்‌ சா‌ருக்‌கு இந்‌த நே‌ரத்‌துல நா‌ன்‌ நன்‌றி‌ சொ‌ல்‌ல கடமை‌ப்‌பட்‌டி‌ருக்‌கே‌ன்‌.

என்னங்க  நீங்க ? அவர் அந்தப்படத்துல  உங்களுக்கு ஓப்பனிங்க் பில்டப்பே குடுக்கல...ஓவியாவுக்கு மட்டும் ஸ்லோமோஷன்ல இன்ட்ரோ குடுத்தாரு.. அதை மறந்துட்டீங்களே..? # நாரதர் நாதமுனி

2. அடுத்‌தது நஞ்‌சுபு‌ரம்‌ வெ‌ளி‌யா‌கி‌ இருக்‌கு. அது பற்‌றி‌ சொ‌ல்‌லுங்‌க...

இவ்‌வளவு‌ சீ‌க்‌கி‌ரமா‌, அதா‌வது இரண்‌டு வா‌ர இடை‌வெ‌ளி‌யி‌ல்‌ நா‌ன்‌ நடி‌த்‌த இரண்‌டு படங்‌கள்‌ வெ‌ளி‌யா‌கி‌ இருப்‌பது ரொ‌ம்‌ப சந்‌தோ‌சமா‌ இருக்‌கு. இப்‌படி‌ என்‌ படங்‌கள்‌ வெ‌ளி‌யா‌கி‌ இருப்‌பது இதுதா‌ன்‌ முதல்‌ தடவை‌. 

நஞ்‌சுபு‌ரம்‌ படத்‌துல மலர்‌ங்‌கி‌ற ஆட்‌டுக்‌கா‌ர பொ‌ண்‌ணா‌ நடி‌ச்‌சி‌ருக்‌கே‌ன்‌. ரொ‌ம்‌ப யதா‌ர்‌த்‌தமா‌ன கே‌ரக்‌டர்‌. இப்‌ப படம்‌ வெ‌ளி‌யா‌கி‌ ஓடி‌ட்‌டி‌ருக்‌கு. நி‌றை‌ய பே‌ர்‌ என்‌ கே‌ரக்‌டரும்‌ நடி‌ப்‌பு‌ம்‌ நல்‌லா‌ இருக்‌குன்‌னு சொ‌ல்‌றா‌ங்‌க. 2011ம்‌ வருஷம்‌ எனக்‌கு சந்‌தோ‌சமா‌ போ‌யி‌ட்‌டி‌ருக்‌கு.

உங்க கேரக்டர், நடிப்பு மட்டுமா நல்லாருக்கு..?வாய்க்கால்ல நீங்க குளிக்கறது கூடத்தான் செம கில்மாவா இருந்தது..#ஜொள் பார்ட்டி ஜெகதீசன் 
http://chennai365.com/wp-content/uploads/actress/Monika/Monika-Stills-007.jpg
3. அழகி‌ மோ‌னி‌கா‌ மீ‌து தமி‌ழ்‌ சி‌னி‌மா‌ ரசி‌கர்‌களுக்‌கு இருந்‌த அபி‌ப்‌ரா‌யம்‌ இப்‌பவு‌ம்‌ அப்‌படி‌யே‌ இருக்‌கி‌றதா‌?

கண்‌டி‌ப்‌பா‌. முன்‌ன வி‌ட கூடுதலா‌வே‌ இருக்‌கு.  அது என்‌னோ‌ட ஈமெ‌யி‌ல்‌ பா‌த்‌தீ‌ங்‌கன்‌னா‌ தெ‌ரி‌யு‌ம்‌. அவ்‌வளவு‌ ரசி‌கர்‌கள்‌ இப்‌பவு‌ம்‌ என்‌னோ‌ட வெ‌ப்‌சை‌ட்‌ பா‌ர்‌த்‌து என்‌ மெ‌யி‌ல்‌ அட்‌ரஸ்‌ கண்‌டுபி‌டி‌ச்‌சு பா‌சமா‌ கடி‌தம்‌ அனுப்பு‌றா‌ங்‌க. என்‌னோ‌ட ஒவ்‌வொ‌ரு படம்‌ வெ‌ளி‌யா‌கும்‌போ‌தும்‌ அவங்‌க சந்‌தோ‌சத்‌தை‌யு‌ம்‌ பா‌ரா‌ட்‌டை‌யு‌ம்‌ சொ‌ல்‌வா‌ங்‌க. இப்‌போ‌ அடுத்‌தடுத்‌து முத்‌துக்‌கு முத்‌தா‌க, நஞ்‌சுபு‌ரம்‌ வெ‌ளி‌யா‌கி‌ அனுபவங்‌கள்‌ கூடி‌னா‌லும்‌ நா‌ன்‌ எப்‌பவு‌மே‌ அழகி‌ மோ‌னி‌கா‌ தா‌ன்‌.


ரைட்டு.. அதை நாங்க நம்பனும்னா உங்க ஈமெயில் அட்ரசை மட்டும் குடுத்தா பத்தாது,... பாஸ்வோர்டும் குடுங்க...இப்படிக்கு பக்கத்து வீட்டை எட்டி பார்க்கும் பன்னாடை பாஸ்கரன்

4. உங்‌களுக்‌கு தனி‌த்‌துவமா‌ன நா‌யகி‌ என்‌ற அடை‌யா‌ளம்‌ ஏன்‌ இன்‌னும்‌ கி‌டை‌க்‌கவி‌ல்‌லை‌?

அதுக்‌கா‌ன நே‌ரம்‌ இப்‌பதா‌ன்‌ வர ஆரம்‌பி‌ச்‌சி‌ருக்‌குன்‌னு நி‌னை‌க்‌கி‌றே‌ன்‌. ஏன்‌னா‌, எனக்‌குன்‌னு தனி‌ அடை‌யா‌ளம்‌ தர்‌ற மா‌தி‌ரி‌ படங்‌கள்‌ அழகி‌க்‌கு அப்‌பு‌றம்‌ எனக்‌கு அமை‌யலே‌ன்‌னு தா‌ன்‌ சொ‌ல்‌லணும்‌. இப்‌போ‌ முத்‌துக்‌கு முத்‌தா‌க, நஞ்‌சுபு‌ரம்‌ அதை‌க்‌ கொ‌ஞ்‌சம்‌ நி‌றை‌வே‌த்‌தி‌ இருக்‌கு. 

மற்‌றபடி‌ நா‌ன்‌ சி‌னி‌மா‌வு‌க்‌குள்‌ள வரும்‌போ‌து, ஒரு ஹீ‌ரோ‌யி‌னா‌ வரல. ஒரு ஹி‌ட்‌ படத்‌தோ‌ட ஹீ‌ரோ‌யி‌னா‌ நா‌ன்‌ அறி‌முகம்‌ ஆகி‌ இருந்‌தா‌ எனக்‌கு இன்‌னும்‌ அடை‌யா‌ளம்‌ கி‌டை‌க்‌கலே‌ங்‌கி‌றது பற்‌றி‌ நா‌ன்‌ கவலை‌ப்‌படலா‌ம்‌. ஆனா‌, நா‌ன்‌ குழந்‌தை‌ நட்‌சத்‌தி‌ரமா‌ அறி‌முகமா‌கி‌, அதுக்‌கப்பு‌றம்‌ சி‌ன்‌னச்‌ சி‌ன்‌ன சப்‌போ‌ர்‌ட்‌டி‌ங் கே‌ரக்‌டர்‌ஸ்‌ பண்‌ணி‌னே‌ன்‌. 
அதுக்‌கப்‌பு‌றம்‌தா‌ன்‌ இந்‌த இடத்‌துக்‌கு வந்‌தி‌ருக்‌கே‌ன்‌. என்‌னை‌ப்‌ பொ‌றுத்‌தவரை‌ நா‌ன்‌ இப்‌ப இருக்‌கி‌ற இடம்‌ உயரமா‌ன இடம்‌ தா‌ன்‌. இந்‌த உயரமே‌ எனக்‌கு சந்‌தோ‌சந்‌தா‌ன்‌. இதை‌வி‌ட உயரமா‌ன இடத்‌தி‌ற்‌கு அடுத்‌தடுத்‌து அமை‌கி‌ற படங்‌கள்‌ என்‌னை‌க்‌ கொ‌ண்‌டு போ‌கும்‌னு நம்‌பு‌றே‌ன்‌.

தமிழன் என்னைக்குங்க தமிழ்ப்பெண்ணை நெம்பர் ஒன் ஹீரோயின் ஆக்கி இருக்கான்? இப்பவெல்லாம் தமிழ் தெரியாத கேரளா,மும்பை ஹீரோயின்களுக்குத்தான் கனவுக்கன்னி கிரீடம் சூட்டறான்..  #உண்மை விளம்பி உலகநாதன்

http://spicy.southdreamz.com/cache/awesome-pictures-of-south-actress/monika-.jpg_650.jpg
5. கி‌ளா‌மரா‌ நடி‌ச்‌சீ‌ங்‌க, அப்‌பு‌றம்‌ நடி‌க்‌க மா‌ட்‌டே‌ன்‌னு சொ‌ன்‌னீ‌ங்‌க... ஏன்‌?

கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கணும்‌னு நா‌ன்‌ எப்‌பவு‌ம்‌ ஆசை‌ப்‌பட்‌டதி‌ல்‌ல. அந்‌தக்‌கதை‌ ரொ‌ம்‌ப பெ‌ரி‌ய அளவு‌ல பே‌சப்‌படும்‌னு நம்‌பி‌னே‌ன்‌. அதோ‌ட அது கதை‌க்‌கு தே‌வை‌ப்‌படுதுன்‌னு இயக்‌குனர்‌ வி‌ரும்‌பி‌ கே‌ட்‌டதா‌ல்‌ நடி‌ச்‌சே‌ன்‌. அதுக்‌கப்‌பு‌றம்‌ கமி‌ட்‌ பண்‌ண படங்‌கள்‌ எல்‌லா‌மே‌ கி‌ளா‌மரா‌ நடி‌க்‌க மா‌ட்‌டே‌ன்‌னு தா‌ன்‌ கமி‌ட்‌ பண்‌ணே‌ன்‌. அதை‌யு‌ம்‌ மீறி‌ ஒரு படத்‌துல ஒரு பா‌ட்‌டுக்‌கு மட்‌டும்‌ கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கச்‌ சொ‌ல்‌லி‌ என்‌கி‌ட்‌ட கெ‌ஞ்‌சி‌னா‌ங்‌க. நா‌ன்‌ எவ்‌வளவோ‌ பி‌டி‌வா‌தமா‌ மறுத்‌தே‌ன்‌. அப்‌பு‌றம்‌ வீ‌ணா‌ பி‌ரச்‌சி‌னை‌ எதுக்‌குன்‌னு அந்‌தப்‌ பா‌ட்‌டுல மட்‌டும்‌ கி‌ளா‌மரா‌ நடி‌ச்‌ச வே‌ண்‌டி‌யதா‌ப்‌ போ‌ச்‌சு. அதுக்‌கப்‌பு‌றம்‌ யா‌ர்‌ என்‌கி‌ட்‌ட கே‌ட்‌டா‌லும்‌ நா‌ன்‌ கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கி‌றதி‌ல்‌லே‌ன்‌னு சொ‌ல்‌லி‌ட்‌டே‌ன்.

அதோ‌ட என்‌ ரசி‌கர்‌கள்‌ மறக்‌கா‌ம என்‌கி‌ட்‌ட கே‌ட்‌டுக்‌கி‌ற ஒரு வி‌ஷயம்‌ நா‌ன்‌ கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கக்‌ கூடா‌துங்‌கி‌றதுதா‌ன்‌. நா‌ன்‌ அவங்‌க வீ‌ட்‌டுப்‌ பொ‌ண்‌ணு மா‌தி‌ரி‌ இருக்‌கே‌னா‌ம்‌. நி‌றை‌ய ரசி‌கர்‌கள்‌ என்‌ அத்‌தை‌ பொ‌ண்‌ணு மா‌தி‌ரி‌ இருக்‌கீ‌ங்‌க. அதனா‌ல கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கா‌தீ‌ங்‌கன்‌னு சொ‌ல்‌றா‌ங்‌க.

ஒரு பொ‌ண்‌ணை‌ அழகா‌ கா‌ட்‌டுனா‌, அதே‌ கி‌ளா‌மர்‌ தா‌ன்‌. அந்‌தக்‌ கி‌ளா‌மர்‌ தே‌வை‌ தா‌ன்‌. முகம்‌ சுளி‌க்‌க வை‌க்‌கி‌ற கி‌ளா‌மர்‌ல நா‌ன்‌ நடி‌க்‌க மா‌ட்‌டே‌ன்‌.

ஆமாங்க.. தமிழர்களுக்கு ஏகப்பட்ட அத்தை பொண்ணுங்க... நீங்க அவங்க பேச்சை எல்லாம் கேட்டுட்டு மூடி டைப்பா இருக்காதீங்க.. ஓப்பன் டைப்பா இருங்க.. ஹா ஹா # தூண்டில்காரன் 

6. பெ‌ரி‌ய இயக்‌குநர்‌கள்‌ படங்‌களி‌ல்‌ நடி‌ப்‌பதி‌ல்‌லை‌யா‌?

அப்‌படி‌ச்‌ சொ‌ல்‌ல முடி‌யா‌து. இப்‌ப இரா‌சு. மதுரவன்‌ சா‌ர்‌ பெ‌ரி‌ய டை‌ரக்‌டர்‌ தா‌ன்‌. என்‌னை‌ நம்‌பி‌ எனக்‌கு வா‌ய்‌ப்‌பு‌ தந்‌தா‌ர்‌. கண்‌டி‌ப்‌பா‌ அதை‌ நா‌ன்‌ கா‌ப்‌பா‌த்‌தி‌ருக்‌கே‌ன்‌னு நம்‌புறே‌ன்‌. அதே‌ மா‌தி‌ரி‌ என்‌னை‌ நம்‌பி‌ எனக்‌கு யா‌ர்‌ வா‌ய்‌ப்‌பு‌ தந்‌தா‌லும்‌ நா‌ன்‌ சி‌ன்‌சி‌யரா‌ உழை‌க்‌க தயா‌ரா‌ இருக்‌கே‌ன்‌. அப்‌படி‌ வா‌ய்‌ப்‌பு‌கள்‌ இனி‌ ஒவ்‌வொ‌ண்‌ணா‌ அமை‌யு‌ம்‌னு நம்‌பு‌றே‌ன்‌.

கே வி ஆனந்த்,ஸ்ரீராம்,சந்தோஷ் சிவன்  மாதிரி ஃபோட்டோகிராஃபர் கம் டைரக்டர்ஸ் படங்கள்ல நடிங்க.. உங்க அழகு இன்னும் மிளிரும் 
http://tamilnews.anytimechennai.com/wp-content/uploads/2009/01/monica281208.jpg
7. இப்‌போ‌து நடி‌த்‌துக்‌கொ‌ண்‌டி‌ருக்‌கும்‌ படங்‌கள்‌...

அகரா‌தி‌ படம்‌ வெ‌ளி‌யா‌கத்‌ தயா‌ரா‌ இருக்‌கு. அகரா‌தி‌ படத்‌தி‌ல்‌ கதை‌யோ‌ட முக்‌கி‌ய கதா‌பா‌த்‌தி‌ரம்‌ நா‌ன்‌ தா‌ன்‌. அதுக்‌கப்‌பு‌றம்‌ வர்‌ணம்‌ படமும்‌‌ வெ‌ளி‌யா‌கத்‌ தயா‌ரா‌ இருக்‌கு. அதுல நா‌ன்‌ ஒரு டீ‌ச்‌சர்‌ கே‌ரக்‌டர்‌ பண்‌ணி‌யி‌ருக்‌கே‌ன்‌. வர்‌ணம்‌ வரும்‌பபோ‌து என்‌னோ‌ட நடி‌ப்‌பு‌ பே‌சப்‌படும்‌னு நா‌ன்‌ நம்‌பு‌றே‌ன்‌. அதோ‌ட வர்‌ணம்‌ என்‌ சி‌னி‌மா‌ வா‌ழ்‌க்‌கை‌யி‌ன்‌ வண்‌ணத்‌தை‌யு‌ம்‌ மா‌ற்‌றும்‌ என நம்‌பு‌கி‌றே‌ன்‌.

இது தவி‌ர, தமி‌ழ்‌ல நரன்‌ என்‌ற படத்‌தி‌ல்‌ நடி‌க்‌கி‌றே‌ன்‌. கன்‌னடத்‌தி‌ல்‌ "ஹே‌ப்‌பி‌ ஹஸ்‌பெ‌ண்‌ட்‌ஸ்‌" படத்‌தி‌ல்‌ நடி‌க்‌கி‌றே‌ன்‌. "நோ‌ என்‌ட்‌ரி‌" இந்‌தி‌ப்‌ படத்‌தி‌ன்‌ ரி‌மே‌க்‌ அது. இந்‌தி‌யி‌ல்‌ இஷா‌ தி‌யோ‌ல்‌ நடி‌ச்‌ச கே‌ரக்‌டர்‌ல நா‌ன்‌ நடி‌க்‌கி‌றே‌ன்‌.  அப்‌பு‌றம்‌ இரண்‌டு தமி‌ழ்‌ படங்‌களி‌ல்‌ நடி‌ச்‌சி‌ட்‌டி‌ருக்‌கே‌ன்‌. அந்‌தப்‌ படங்‌கள்‌ பற்‌றி‌ய அறி‌வி‌ப்‌பு‌கள்‌ வி‌ரை‌வி‌ல்‌ வெ‌ளி‌யா‌கும்‌. முத்‌துக்‌கு முத்‌தா‌க படத்‌தி‌ற்‌கு அப்‌பு‌றம்‌ இரண்‌டு மூ‌ணு படங்‌களுக்‌கா‌க பே‌சி‌ட்‌டி‌ருக்‌கா‌ங்‌க. கதை‌ கே‌ட்‌டுட்‌டி‌ருக்‌கே‌ன்‌. இந்‌த வருஷம்‌ எனக்‌கு ஆரம்‌பமே‌ நல்‌லா‌ இருக்‌கு.

மோ‌னி‌கா‌ அடுக்‌குவதை‌ பா‌ர்‌த்‌தா‌ல்‌ 2011 மோ‌னி‌கா‌ வருடமா‌க இருக்‌கும்‌ போ‌லி‌ருக்‌கு.

"ஹே‌ப்‌பி‌ ஹஸ்‌பெ‌ண்‌ட்‌ஸ்‌" டைட்டிலைப்பார்த்தாலே விவகாரமான கதை மாதிரி தெரியுதே.. இன்னொரு அமலா பால் ஆக ஐடியா பண்றீங்களோ..?#டவுட்டு

Friday, April 01, 2011

நஞ்சுபுரம் - திக் திக் ஸ்னேக் திக் - சினிமா விமர்சனம்


http://mimg.sulekha.com/tamil/nanjupuram/wallpaper/800-600/nanjupuram-desktop-themes91.jpg
தளபதி,ரோஜா,ராவணன் என்று மணிரத்னம் மட்டும் தான் புராணக்கதைகளை உல்டா பண்ணுவாரா? நாங்களும் செய்வமல்ல என சில கோடம்பாக்கத்து இயக்குநர்கள் கிளம்பி இருக்கிறார்கள்... அதில் ஒரு லோ பட்ஜெட் உல்டா தான் இந்த நஞ்சு புரம்.

முனிவரை அவமானப்படுத்திய பரீட்சித்த மகாராஜா பாம்பால் இறக்கும் சாபம் பெற்று, அதே போல் இறந்தாரே.. அதை அப்படியே கொஞ்சம் உட்டாலக்கடி பண்ணி கிராமத்து பின் புலத்தில் கிளாமருக்கு மோனிகாவை காதலி ஆகி விட்டால் நஞ்சு புரம் ரெடி...

பாம்புகள் அதிகம் உள்ள ஒரு கிராமத்துல ஹீரோ ஒரு பாம்பை அடிச்சுட்டு தப்பிக்க விட்றாரு.. அடி பட்ட பாம்பு 40 நாட்களுக்குள் பழி வாங்க வருமாம்.. ( பாம்பு கூட காலண்டரை மெயிண்டெயின் பண்ணுதோ..? #டவுட்டு)அதனால ஹீரோ ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு மேடை அமைச்சு உயரத்துல தங்கறாரு.. 40 வது நாள் அன்னைக்கு என்ன நடக்குதுங்கறதுதான் க்ளைமாக்ஸ்....







https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivD4XXFYPi2zXxZ6H6qE_7iYCbIOz66bAhezid2SD7s2M7eeyoCbToppr9nwLEq0sYRIwqnQsEdITRULMzTuE6MyW0bLgLYgPjLC6PeJIeX9YgjKdK4da2uVPmT2KGRLGbYYUPtb2gY8I/s1600/Monika-at-Nanjupuram-Audio-Launch+%25281%2529.jpg

தமிழ் சினிமா ஹீரோவோட இலக்கணப்படி இவரும் தலையே சீவாம ஃபங்க் தலையோட சுத்திட்டு இருக்காரு.. நடிப்புக்கு பாஸ் மார்க்...ஹீரோயின் அழகி புகழ் மோனிகா...கிராமத்து கதை என்பதால் இவருக்கு டல் மேக்கப் போட்டது இயக்குநரின் அறியாமையா? மேக்கப் மேனின் அசால்டா தெரிய வில்லை...ரொம்ப நாளுக்குப்பிறகு நடிக்க ஸ்கோப் உள்ள கேரக்டர்.. நிறைவாக செய்து இருக்கிறார்...

இயக்குநரை மெச்ச வைக்கும்  சீன்கள்

1. பாம்பு பிடிக்க பானையை துளை செய்து , பாம்பு நுழைந்த பைப்பில் ஒரு புறம் வைத்து மறு புறம் புகை விடுவது அசல் கிராமத்து பாம்பு பிடிக்கும் முறையின் பதிவு...

2. நடு ராத்திரியில் சட்டையை தண்ணீரில் நனைத்து சேவல் திருடன் சேவலை ஒரே அமுக்காக அமுக்குவது...

3.ஹீரோ, ஹீரோயின் லிப் டூ லிப் கிஸ் சீனை மிக கவுரவமாக காட்டியது.. ( அனுஹாசனின் இந்திரா பாதிப்பு இருந்தாலும்.. )

4.கதைக்களம் கிராமம் என்பதால் ஹீரோயின் உட்பட அனைத்துப்பெண் கேரக்டர்களும் எல்லா சீன்களிலும்  கனகாம்பரப்பூவை அணிந்திருப்பது போல் காண்பித்தது..  ( 2 சீன்ல மட்டும் மல்லிகைப்பூ #கிக்குக்காக)

5. ஹீரோ தாமரைப்பூவை குளத்தில் இறங்கிப்பறித்துத்தந்தார் என்றதும் ஹீரோயின் தன் தாவணியால் ஹீரோவின் தலையை துவட்டியதும், 2வது முறையாக இன்னொரு தாமரையை எடுத்து வந்து மீண்டும் அதே போல் தாவணித்துவட்டலை எதிர்பார்ப்பது...,.

6. ஒரு பாடல் காட்சியில் 7 செகண்டே வரும் சீனுக்காக 2 ஆடுகளுக்கு ஆண், பெண் டிரஸ் போட்டு அழகு பார்ப்பது...

7 ஹீரோயின் சாப்பிடும் லாலிப்பாப்பை லபக்க ஹீரோ போடும் ஐடியா... அதைத்தொடர்ந்து வரும் ஹீரோயினின் வெட்கம் கலந்த முக பாவனைகள் ...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjDBchf69q4ntjkJXtq650SDvKaxDqTGbO80w3VuXTXq-4VShZlfT_1-TRRdOWqaFvBm7piiWf5Syo4pOLgOd-XfbGGpTj1tTtI8UeHgC5_5TTDKruB8UygmMis1UrLlhPXS-A5O20XX8/s640/tamil+movie+nanjupuram+hot+actress++monica+masala+wet+bathing+stills-03.jpg
படத்தில் நெஞ்சில் நின்ற வசனங்கள்

1. அண்ணன் ஏன்  ரொம்ப வெட்கப்படறாரு?

நேத்துத்தானே வயசுக்கு வந்திருக்காரு?

2. ஹீரோயின் - நான் முதன் முதலா வயசுக்கு வந்தப்ப சொந்தக்காரங்க எல்லாம் ஸ்வீட்ஸோட வந்ததைப்பார்த்து மாசாமாசம் வந்தா , இதே சம்பவன் நடந்தா எவ்வளவு நல்லாருக்கும்னு நினைச்சேன்..அதே போல் மாசா மாசம் சம்பவம் நடந்தது.. ஆனா ட்யாரும் வர்லை...

3. ஹீரோயின் - யோவ்.. எனக்கு புத்தியே வேலை செய்யறது இல்லை.. இல்லன்னா உன் கிட்டே போய் மாட்டி இருப்பேனா?

4. ஹீரோ - என்னைப்பார்க்க வந்துட்டு ஏன் ஆகாத கதை எல்லாம் பேசறே.. கிளுகிளுப்பா வேற ஏதாச்சும் பேசேன்...

ஹீரோயின் - வேற ஏதாச்சும் பேசுனா வேற ஏதாவது ஆகிடும்... வம்பு
http://www.freedownloadpond.com/wp-content/uploads/2010/12/Hot-Anushka-Sharma-11.jpg
5. சந்திர கிரஹணம் முடிஞ்சுட்டா அந்த பாம்பு ஒண்ணும் செய்யாது..

அதுக்கும். இதுக்கும் என்ன சம்பந்தம்?

ராகு, கேது 2 பாம்புகளும் சந்திரனை விழுங்கறது தானே சந்திரன கிரஹணம்?


6. இங்கே பார்டி.. உன் பொண்ணை நான் எதுவும் செய்யாம இருக்கனும்னா அவளை அசலூர்க்காரனுக்கு கட்டி வெச்சுடு.. என் பார்வைல படக்கூடாது.. உள்ளூர்க்காரனை மாப்பிள்ளை ஆக்குனா.. அவ்ளவ் தான்....


7.  பரீட்சித்த மகாராஜா செத்துப்போன பாம்பை முனிவர் மேல போட்டாரு..செத்த பிராணியை மேல போடறதை விட பெரிய அவமானம் பிராமணனுக்கு இல்லை...

8.. இந்த ஏற்பாட்டுக்கு என் மக சம்மதிக மாட்டா..

அடி போடி.. கோழியை கேட்டுக்கிட்டா குழம்புக்கு மிளகா அரைப்பாங்க..?

9. ஹீரோயின் - நான் உனக்காக எவ்வளவு தடவை நடு சாமம்னு பார்க்காம காத்துட்டு இருந்தேன்.. நீ ஒரு தடவை கூட என்னைப்பார்க்க வர்லையே.. எனக்கு வீட்ல நிச்சயம் பண்ணீட்டாங்க.... ( இந்த சீனில் மோனிகாவின் நடிப்பு கலக்கல் ரகம்)

மைனா படத்துல குணச்சித்திரம் , காமெடி 2லும் கலக்கிய தம்பி ராமையா இதுல வில்லன் வேடத்துலயும் நல்லா பண்ணி இருக்காரு.. ஹீரோயினின் அம்மாவை அவர் ஆசை நாயகியாக வைத்திருப்பது, பின் ஹீரோயினை அடிய நினைப்பது மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqtsO18jFaIYRcYIqI48iahD1qN-yc3IPjHAOXSW9NB5OFKEUJ3cBHb6pfp45BItACnaofB9E5ZbSyhjzZZMBkmJL-ynrdjCbxo47N-KpqZxcuweEui-CbeOZyZm74wfndH-atbPrjAOw/s400/Nanjupuram-hot-stills-06.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்

1. படத்தோட ஓப்பனிங்க் சீன்ல ஒரு பொண்ணோட பாதத்துல பாம்பு கொத்திடுது.. 5 நிமிஷம் கழிச்சு அங்கே வர்ற ஹீரோ கடிவாய்க்கு பக்கத்துல கயிற்றால கட்டு போடறார்.. கடி பட்ட அடுத்த செகண்டே கட்டு போட்டா அது ஓக்கே..  5 நிமிஷம் ஆனதால விஷம் கொஞ்சம் ஏறி இருக்குமே.. முழங்கால்ல தானே கட்டு போடனும்?


2.  பாம்பு கொத்தி உயிருக்குப்போராடிட்டிருக்கற பொண்ணை ஹீரோ தூக்கிட்டுப்போய் காப்பாத்தறதை விட்டுட்டு ஊர்ப்பெரிய மனுஷங்க கிட்டே வாதம் பண்ணிட்டு இருக்காரே..  10 நிமிஷம்..அது ஏன்?

3.  உயரமான இடத்தை விட்டு இறங்கக்கூடாது.. 40 நாட்களுக்கு அங்கேயே இருக்கனும்கறதுதான் ஏற்பாடு.. சாப்பாடு ஹீரோவுக்கு அனுப்பறது ஓக்கே.. அவரு குளிக்கறது, பாத்ரூம் போறது இதுக்கு எல்லாம் கீழே வந்துதானே ஆகனும்?அப்போ பாம்பு அவரை போடாதா?

4.  அதே மாதிரி 40 நாட்கள் ஹீரோ எங்கேயும் போகக்கூடாதுன்னு 4 பேர் காவல் காக்கறாங்க.. அவங்க அதுக்குன்னே நேர்ந்து விடப்பட்டவங்களா?வேற வேலையே கிடையாதா? ஆனா அவங்க தண்ணியைப்போட்டுட்டு மப்புலதான் பாதி நேரம் இருக்காங்க.. 

http://3.bp.blogspot.com/_XqT5QI2tKm0/S43i9kahH_I/AAAAAAAABsY/WKLfBg587xs/s1600/Nanjupuram-hot-stills-01.jpg
5. ஹீ ரோ இந்த 40 நாட்கள் ஹீரோயினை 47 தடவை அருவிக்கரைல சந்திக்கறாரு.. ( #கவுண்ட் டவுன் கண்ணாயிரம்)...எதுக்கு ரிஸ்க்.. அந்த உயரமான இடத்துக்கு ஹீரோயினை வரச்சொல்லிட்டா மேட்டர் ஓவர்..  ( # ஐடியா அய்யா சாமி)

6. கல்யாணம் ஆகாத மகளுக்கு அவளோட அம்மா ஒரு சீன்ல நைட் எட்டேகால்க்கு 4 முழம் மல்லிகைப்பூ வாங்கித்தர்றா... எதுக்கு?அவ வாங்கி தலைல வெச்சுக்கிடு படுத்து தூங்கறா.. என கொடுமை சார் இது/ ( எடிட்டிங்க்ல ஏதாவது கில்மா சீன் கட்டா?)

7.இந்த மாதிரி த்ரில் படத்துக்கு பேக் கிரவுண்ட் மியூசிக் ரொம்ப முக்கியம்.. ஆனா சுமார்தான்... எதுக்கு தேவை இல்லாம 4 பாட்டுக்கள்?

8. வில்லன் ஹீரோயினின் அம்மாவை கரெக்ட் பண்றது ஓக்கே.. ஆனா அப்போ ஹீரோயின் அவனுக்கு மக முறை ஆகுமே...அவளையும் க்ரெக்ட் பண்றானே அது ஏன்?  ( பொறாமைல கேட்கலை.. ஒரு ஜெனரல் நாலெட்ஜை வளர்த்துக்க கேட்டேன்,, )

9. பூரான் கடிச்ச பயத்துல ஒருத்தர் பாம்பு கடிச்சதா நினைச்சு சாகறார்.. பயம் தான் ஆளை கொல்லுதுன்னு சொல்ல வர்றிங்க .. ஓக்கே? ஆனா அவன் வாயில நுரை வந்திருக்கே? அது எப்படி? பூரான் கடிச்சா நுரை வராதே?

10. க்ளைமாக்ஸ்ல ஹீரோ, ஹீரோயின் 10 கி மீ தூரம் ஓடறாங்க.. பாம்பும் விடாம துரத்துதே.. நைட் பூரா அதுக்கு களைப்பே வராதா?

11. க்ளைமாக்ஸ்ல ஹீரோ பாம்பு கிட்டே இருந்து தப்பி வில்லனோட ஆட்கள் ஹீரோயினை வெட்ட வர்றப்ப குறுக்கே வந்து கழுத்துல வெட்டு பட்டு விழறாரு.. துப்பாக்கி குண்டுன்னா அது ஓக்கே... அது எப்படி அரிவாள் வெட்டு அப்படி விழும்.. அந்த ஷாட்டை ஏன் லாங்க் ஷாட்ல க்ளியரா காட்டலை?


https://lh3.googleusercontent.com/-wjdGlSrHAnU/TYalySBjP3I/AAAAAAAAKv8/7VJvRO9lRtg/s320/actress+monica+hot+Nanjupuram+Audio+launch+stills+001.jpg
மொத்தத்துல படம் பாம்பு பயம் உள்ளவங்களுக்கு பிடிக்கும்.. படம் முடியறப்ப சீட் கீழே பாம்பு இருக்கா?ன்னு பயத்தோட பார்க்க வேண்டியதா இருக்கு...

ஏ செண்ட்டர்ல 20 நாட்கள் ஓடும். பி , சி செண்ட்டர்ல 30 நாட்கள் ஓடும்.. படம் லோ பட்ஜெட் என்பதால் ஒரு வாரம் ஓடுனாலே போட்ட காசை எடுத்துடுவாங்க.. இந்த படம் ராமநாராயணன் டைரக்‌ஷன் கிடையாது.. அவர்  இந்தப்படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணீ இருக்கார் அவ்வளவுதான்.. யாரும் பயப்பட தேவை இல்லை..

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க்  - 38

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க்  - ஓக்கே

 ஈரோடு சண்டிகா தியேட்டர்ல இந்தப்படம் பார்த்தேன்.. ரொம்ப சின்னப்படம் 2 மணீ நேரம் தான் ஓடுது

Friday, March 18, 2011

முத்துக்கு முத்தாக - வெற்றிக்கு வித்தாக -சினிமா விமர்சனம்

http://www.sivajitv.com/newsphotos/MuthukuMuthaga1.jpg
மாயாண்டி குடும்பத்தார்,கோரிப்பாளையம் ,பாண்டி,பூ மகள் ஊர்வலம் பட வரிசையில் இயக்குநர் ராசு மதுரவனின் 5 வது ஃபேமிலி செண்ட்டிமெண்ட் படமான இது கல் நெஞ்சையும் கரைக்கும், கண் கலங்க வைக்கும் அம்மா, அப்பா பாசக்கதை...இந்த கால இளைஞர்களுக்கு ஒரு பாடமாக வந்திருக்கும் இந்தப்படம் அடையப்போகும் வெற்றி ரவுடியிசக்கதைகளையே நம்பி குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டும் பாடாவதி இயக்குநர்களுக்கான சவுக்கடி,...

அம்மா, அப்பாவாக வாழ்ந்திருக்கும் இளவரசு - சரண்யா ஜோடிகளின் குணச்சித்திர நடிப்பு அருமை.அதுவும் இளவரசின் அண்டர்ப்ளே ஆக்டிங்கும் அவரது பாடி லேங்குவேஜூம் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு ஒரு பாடம்.

படத்தோட கதை என்ன?5 பசங்க பெத்திருந்தும் கடைசி காலத்துல மருமகள்களின் நயவஞ்சகத்தால் அடைக்கலமோ, பாசமோ கிடைக்காமல் பரிதவிக்கும் பெற்றொரின் கதை தான்...ஏற்கனவே தவமாய் தவமிருந்து, சம்சாரம் அது மின்சாரம்,வானத்தைப்போல போன்ற பல படங்களின் சாயல் இருந்தாலும் இது ஒருகவனிக்கத்தக்க படமே...

படத்தோட ஓப்பனிங்க் சாங்க்ல ஒளிப்பதிவு கண்களை அள்ளுகிறது.அதே போல் ஓப்பனிங்க் ஃபைட் சீனில் பதட்டத்தை ஏற்படுத்தாமல் ஏதோ லவ் தீம் மியூசிக் மாதிரி போட்டு பின்னணி இசையில் ஏன் சொதப்பினார்கள் என்பது தெரியவில்லை.. 


http://monikaonline.in/wp-content/uploads/2011/01/monika-muthukku-muthaga.jpg
கிராமத்து தெம்மாங்குப்பாட்டான  பொண்ணைபார்த்தா விசில் அடிப்பேன்...என்னத்தை பாட்டுக்கு  செமயான கலக்கல் இசை அமைத்து தியேட்டரை எழுந்து ஆட வைத்திருக்க வேண்டாமா? இசை அமைப்பாளர் ரொம்ப வே அடக்கி வாசித்தது ஏனோ..?அந்த பாட்டுக்கு எல்லா ஆண்களும் வேட்டையை அவிழ்த்து அண்டர் டிராயருடன் ஆடுவது மொத்தப்படத்துக்குமான திருஷ்டி...

படம் முன் பாதி வரை கலகலப்பாகப்போகிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம் சிங்கம்புலி. சாதாரண சீனைக்கூட இவர் செய்யும் அலப்பறைகளால் களை கட்டுகிற மாஜிக் தெரிந்தவர் போல..

.கதைக்களனாக  ஐவரில் ஒருவர் வேன் டிரைவராக வருவதும் அவரது வேனில் மோனிகா பயணிப்பதும் அழகு. ஆனால் நாயகி மோனிகாவை எந்த வித பில்டப்பும் இல்லாமல் சர்வசாதாரணமாக அறிமுகப்படுத்தியதை அகில இந்திய ”அழகி ” பட மோனிகா ரசிகர் மன்றத்தை சார்ந்தவன் என்ற முறையில் இயக்குநரை வன்மையாக கண்டிக்கிறேன்..

அதே இயக்குநர் இன்னொரு  நாயகி களவாணி ஓவியாவுக்கு மட்டும்  ஸ்லோமோஷனில் செம பில்டப்போடு அறிமுக சீன் வைத்தது ஏன்?
ஆனால் தாவணீயில் வந்து கிராமத்துமாணவியாக மனதில் பதிந்த ஓவியா இதில் சிட்டி காலேஜ் கேர்ளாக எடுபடவில்லை.. அதுவும் அவரது ஹேர் ஸ்டை பல காட்சிகளில் சகிக்க வில்லை.

http://narumugai.com/wp-content/uploads/2010/09/oviya-4.jpg
மோனிகா காதலன் தனக்கு கிடைக்கமாட்டான் என தெரிந்து கதறுவது செம நடிப்பு.. அவரது கழுத்து நரம்புகள் புடைக்க கதறும் அந்த சீனில் மோனிகாவின் அர்ப்பணிப்பான  நடிப்பு அட்டகாசம்.

ஐந்து மகன்களில் இருவருக்கு திருமணம் ஆகிறது.. அதில் ஒரு மகன் வீட்டோட மாப்பிள்ளையாக போகிறான்.. அந்த சீனில் அந்த மகன் கண் கலங்கிக்கொண்டே வீட்டை விட்டுக்கிளம்பும் சீன் டாப் கிளாஸ் நடிப்பு....

5 மகன்களிடம் அடி வாங்கும் ஆள் இந்த தேன் கூட்டின் மீது கை வைக்காதீர் என கட் அவுட் வைப்பது செம காமெடி சீன்...அதே போல் வேன் வாடகைக்கு ஆசைப்பட்டு ஒரு கல்யாண ஜோடியையே பிரிக்கும் காமெடியும் கலகல ..
சிங்கம்புலியின் கரிமேடு கருவாயன் கெட்டப் நகைக்க வைக்கிறது..

கிளாமர் ஹீரோயின் என்றால் ஸ்லோமோஷன்ல பேஸ்கட் பால் விளையாட வேண்டும், ஜீன்ஸ் பேண்ட் டைட் டீ சர்ட் போட்டு ஜாக்கிங்க் போக வேண்டும் (அதுவும் ஸ்லோ மோஷன்ல தான்) என்ற கோடம்பாக்கத்தின் மாறாத செண்ட்டிமெண்ட்டை வரவேற்கிறேன்.. (ஹி ஹி கிடைச்ச வரை லாபம்....)

http://monikaonline.in/wp-content/uploads/2011/01/Muthukku-Muthaga-Audio-Launch-monika.jpg

என்ன பண்ணி தொலைச்சே.. என் நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுத்துதே  பாட்டுக்கு மோனிகா ஆடும் டான்ஸ் இதம்... பாடல் வரிகள் இலக்கிய நயம். படமாக்கிய விதம் கண்ணியம்..

ஊருக்கு போய் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் ஒரு பையன் அம்மா சேலையையும், அப்பா வேட்டியையும் ஞாபகத்துக்காகவும் , வாசத்துக்காகவும் எடுத்து செல்வது செம செண்ட்டிமெண்ட் சீன்..

ஒரு சுடிதார் பூ வந்து என்னைத்தொட்டு சென்றது.. என் கன்னம் 2-ல் ஹைக்கூ சொல்லி சென்றது 30 நாளும் பவுர்ணமியே பாட்டுக்கு ஓவியா ஆடும் சீனும் கலக்கலான கொரியோகிராஃபி..

இந்த பாடலுக்கு பிளாக் ஜீன்ஸ் + ஸ்கை ப்ளூ டீ சர்ட்டில் ஓவியா ஆடும்போது.. செம கிளு கிளு..

நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு பாட்டுக்கு கிராமத்தின் பெருமையை அறிமுகப்படுத்தும் காமெடி சீன்கள் ஓக்கே ரகம்...
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_145913000000.jpg
முத்துக்கு முத்தான வசனங்களில் நினைவில் நின்றவை...

1. எம் பி பி எஸ் படிச்சுட்டு ஃபாரீன் டாக்டர் ஆகாம் ஏன் இந்த கிராமத்துக்கு வந்தேன்? இங்கே ஜாதிச்சண்டை அதிகம்...நிறைய பேரு வெட்டிக்குவாங்க.. அடிச்சுக்குவாங்க.. 4 காசு சம்பாதிக்கலாம்னுதான்.....

2.  அண்ணே.. உள் குத்து, வெளி குத்து என்ன வித்தியாசம்?

அவங்க ஆள்கள் அவங்களுக்குள்ளேயே அடிச்சுக்கிட்டா அது உள்குத்து.. வெளி ஆட்களை அடிச்சா அது வெளி குத்து...

3.  என்னது வீட்டோட மாப்பிள்ளையாவா..? இது சரி ஆகுமா?

நம்ம பசங்க எப்படி வாழறாங்கன்னு பார்க்கனும்.. எங்கே வாழறாங்கன்னு பார்க்கக்கூடாது..

4. என்னதான் வீட்டுசாப்பாடு ருசியா இருந்தாலும் மாமன் மச்சான் வீட்ல ஓசி சாப்பாடு சாப்பிடற சுகம் இருக்கே,,,.. அடடா...

5.. டே.. எதுக்கு இவ்வளவு பதட்டம்..? முத ராத்திரி ரூம்ல இருந்து வெளில வந்து எதிர்ல இருக்கற பொருளை எல்லாம் தட்டி விடறே.. கைல குடுத்த காபி டம்ளரை தட்டி விட்டே... ஆனா தலைல இருக்கற மல்லைகைப்பூவை தட்டி விடாம இருக்கே..? அதை முதல்ல தட்டி விடடா..

6. எண்ணையை தூக்கி உள்ளே வைடான்னா என்னை தூக்கி உள்ளே உட்கார வைக்கறியா..?

7. ஹீரோ -எந்த அழகான பொண்ணு என் எதிரே வந்தாலும் ஆட்டோகிராஃப் வாங்கறது என் பாலிசிங்க..போடுங்க...

8.சிங்கம்புலி  -எதுக்குய்யா என்னை சுருட்டைன்னு கூப்பிடறீங்க.? சச்சின் டெண்டுல்கர்னு கூப்பிடுங்க..

9.   அண்ணே , என் ஆளு வர இன்னும் 10 நிமிஷம் ஆகும் .எப்படியாவது இவங்களை  சமாளி....

சிங்கம்புலி - ஆமா.. இவனுங்க என்ன கலெக்டர் ஆஃபீஸ்லயா வேலை பார்க்கறானுங்க..?

10. சிங்கம்புலி - வண்டி 10 நிமிஷம் நிக்கும், யூரின் போறவங்க எல்லாரும் போயிட்டு வந்துடுங்க..

யோவ்,, வண்டி கிளம்பியே 10 நிமிஷம் தான் ஆகுது.. அதுக்குள்ளே  யூரின் போன்னா எப்படி வரும்?

11.  சிங்கம்புலி - யோவ்.. இடைத்தேர்தல் வந்தா ஓட்டுக்கு ரூ 10000 கிடைக்கும்.. செத்துத்தொலைய்யான்னா சாக மாட்டேங்கறே.. நீ எல்லாம் என்னய்யா எம் எல் ஏ..?

12. எல்லா நாளும் சண்டேவா இருந்தா ரொம்ப நல்லாருக்கும்.. நாம் எல்லாரும் குடும்பத்தோட சந்தோசமா இருக்கறது  அன்னைக்குத்தானே..

13.  என்னதான் ஏ சி ரூம்ல சாப்பிட்டாலும் அம்மா கையால சாப்பிட்ட மாதிரி வருமா?

14.  சரண்யா - டே.. தம்பி.. காலேஜ்க்கு போ.. படி ஆனா பாஸ் மட்டும் ஆகிடாதே., அப்புறம் எங்களை  பிரிஞ்சு போயிடுவெ...

15.  நாங்கதான் 10 மாசம் சுமந்து பெக்கறோம்..

அடிப்போடி.. உங்களுக்கு அந்த 10 மாசத்தோட முடிஞ்சிடுது மொத்த வேலையும்.. மீதி நாள் பூரா கஷ்டப்படறது நாங்கதான்.. அடுத்த ஜென்மம்னு  ஒண்ணு இருந்தா நான் உனக்கு பொண்டாட்டி ஆகனும், நீ என் புருஷன் ஆகனும். நீ இப்போ நீ  பண்ற சித்திரவதை எல்லாத்தையும் நான் உனக்கு                 பண்ணனும்..

என்ன சாபம் குடுக்கறீங்களா?

கையாலாகாத  ஆம்பளைங்க சாபம் தான் குடுக்க முடியும்.. ( இந்த சீனுக்கு செம க்ளாப்ஸ்.. ஏகப்பட்ட ஆம்பளைங்க பாதிக்கப்பட்டிருக்காங்க போல )
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/05/D-0490.jpg
பல காட்சிகளில் அம்மா செண்ட்டிமெண்ட்டையும், ஆண்களே கண் கலங்க வைக்கும் காட்சிகள் வைத்தும் இயக்குநர் பாராட்டைப்பெறுகிறார்..

மாமனார் மாமியார் வந்ததும் தனது அம்மா வீட்டில் போய் சாப்பிட்டு விட்டு கடையில் டிஃபன் வாங்கி வருவது,பேரனைப்பார்க்க வந்த மாமியார் ஆஸ்துமா பேஷண்ட் என்பதால் தன் குழந்தைக்கும் வந்து விடும் என அவனை அண்ட விடாமல் பண்ணுவது , வீட்டோட மாப்ளையான பையன் அங்கே மரியாதை கிடைக்காமல் மன்ம் ஒடிந்து வந்து அம்மா பசிக்குது சோறு போடு என சொல்லும் இடங்கள் என கண்களை குளம் ஆக்கும் சீன்கள் மட்டும் 13 இடங்கள்.

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. சொல்லி வைத்தது மாதிரி எல்லா மருமகள்களும் அப்படி கொடூரமாக இருப்பார்களா? யாராவது ஒருவரையாவது பாஸிட்டிவ்வாக காண்பித்திருக்கலாம்..

2. மோனிகாவும், ஹீரோவும் செல் ஃபோன் ரிங்க் டோனில் காதல் பாட்டு ரிங்க் டோன்களை மாற்றி மாற்றி வைத்து வேனில் காதல் தூது விடுவது கவிதையான சீன் தான்.. ஆனால் செல் ஃபோனில் ரிங்க் டோனோ அல்லது மெசேஜோ வந்தால் லைட் எரியுமே.. என்னாச்சு? 

3. க்ளைமாக்ஸ் ஃபைட் சீனில்  பின்னணி இசை அந்தகாலத்து பழைய பாணீயில் ஏன்..?

4. கதைக்களன் திண்டுக்கல்லில் நடப்பது போல் காட்டி இருக்கிறீர்கள். புது மணத்தம்பதிகள் கல் உப்புக்குவியலில் கால் வைத்து மிதிப்பது போல் ஒரு சாங்கிய சம்பிராதய சீன் உள்ளது.. உப்பை தாண்டுவாங்க.. மிதிக்க மாட்டாங்க..

5. க்ளைமாக்சில் அரளி விதை அரைத்த துவையலை  ( பச்சை கலர்)சரண்யா மட்டன் குழம்பில் மிக்ஸ் பண்றாங்க... ஆனா அதே கலர்ல தான் குழம்பு இருக்கு மாற்றமே இல்லை கலர்ல..

6. மருமகள் அரளி விதையை அரைச்சு குடிச்சு சாக வேண்டியதுதானே  என திட்டியதால் மனம் உடைந்த சரண்யா கணவனுடன் சாவது ஓக்கே.. ஆனால் தற்கொலைக்கு தூண்டிய வழக்கு மருமகள்  மீது போடலை.. அவளுக்கு தண்டனையே தர்லையே ஏன்?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_txRCodujsFK0B71dlN4xtlPQiunyEcAqqHiqJkebXmXOqjhEaB0T_Pl_pN4hVcD82ZsDas6oP5kcBpYNGYBGdHW67rpIrluwJdKz5zU_FarnQgRbnYJ_LiiEDYqSoleQg9z4azdkO-uk/s320/Kollywood-news-1740.jpg
படம் பார்க்கும் இளைஞர்களுக்கு இயக்குநர் சொல்ல வரும் கருத்துக்கள்

1. கோடி கோடியா கொட்டி கொடுத்தாலும் வீட்டோட மாப்பிள்ளையா போகாதே..ஆரம்பத்துல சுகமா இருக்கும்.. ஆனா போகப்போக மதிக்க மாட்டாங்க..

2. அம்மா, அப்பா செத்த பிறகு அவங்களை நினைச்சு கண்ணீர் சிந்துவதை விட அவங்க உயிரோட  இருக்கறப்பவே அவங்களுக்கு ஏதாவது நல்லது செய்.

படம் முடியற ஸ்டேஜ் வந்ததும் நான் அப்படியே சுத்தி பார்க்கறேன். எல்லாரும் அவசர அவசரமா கண்களை துடைச்சுக்கறாங்க.. அவங்க விடற கண்ணீர் வெளி ஆட்களுக்கு தெரிஞ்சுடக்கூடாதாம்..லைட் போடப்போறாங்கள்ல...
இந்தப்படம் பி  செண்ட்டர்களில்  40 நாட்கள் , சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடும். ஏ செண்டர்களில் 30 நாட்கள் ஓடலாம்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் -ஓக்கே

ஈரோடு ஆனூர்ல படம் பார்த்தேன்.. லட்சுமிலயும் போட்டிருக்காங்க..