Wednesday, March 29, 2023

படகோட்டி (1964) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @ மெகா டிவி

   ஸ்பாய்லர்  அலெர்ட்



 நாயகன்  , நாயகி  இருவரும்   சுறா , திருக்கை  என்று  சொல்லப்படும்   இரு  வெவ்வேறு  மீனவ  சமூகத்தை  சேர்ந்தவர்கள் .  நாயகன்  அவர்களது  சமூக  மீனவர்களைத்தூண்டி  வில்லனிடம்  குறைவான  விலைக்கு  மீன்கள்  விற்பதை  தடுக்கிறார்.  அதிக  விலை  கொடுக்க  வேறு  ஒரு ஆள்  தயாராக  இருக்கிறார். ஆனால் வில்லனிடம்  அட்வான்ஸ்  வாங்கிய  பணத்தை அடைக்க  வேண்டும் .  அதற்கு  நாயகன்  போராடுகிறார். இந்த  போராட்டங்கள்  எல்லாம்  சைடு  டிராக்கில்  ஓட  நாயகன்  மெயின்  ட்ராக்கில் நாயகியை  ஓட்டிட்டு  இருக்கார் . இறுதியில்  என்ன  ஆச்சு  என்பதுதான்  திரைக்கதை 


 படம்  போட்டு  ஒரு  மணி  நேரம்  ஆகியும்  படத்தின்   கதை  என்னவாக  இருக்கும் ? என  யூகிக்க  முடியவில்லை .  படம்  பூரா  நாயகன்  நாயகி  கூட  சுத்திட்டுதான்    இருக்கார் , அப்பப்ப   டைம்  பாஸ்க்கு  வில்லன்  கிட்டே  சவால்  விடறார், மீனவர்களிடம்  ஏதோ  பேசறார் . திடீர்னு  க்ளைமாக்ஸ்  வந்துடுது 


 நாயகனாக  எம் ஜி ஆர்.  வழக்கம்  போல்  ரெடிமேடு  கதாபாத்திரம் , இதில் அம்மா  செண்ட்டிமெண்ட், தங்கை செண்ட்டிமெண்ட்  இல்லாதது  ஆச்சரியம்.


நாயகியாக கன்னடத்துப்பைங்கிளி  சரோஜாதேவி, மீனவப்பெண்மணியாக  கொஞ்ச  நேரம் , கோடீஸ்வரப்பெண்மணியாக  நிறைய  நேரம்  தோன்றுகிறார்


 வில்லனாக  நம்பியார். அதிக  வாய்ப்பில்லை , எடுபுடி  வில்லனாக  அசோகன், பாவம்,  சின்ன  ரோல்


 காமெடிக்கு  நாகேஷ் , மனோரமா  இருக்கிறார்கள், ஆனால்  காமெடி  இ;ல்லை 


வாலியின்  வரிகளில்  எட்டு  பாடல்கள்  செம  ஹிட்டு , பாட்டுக்காகப்பார்க்கலாம் 


 ஒளிப்பதிவு ஈஸ்ட்மென்  கலர்ல  கலர்ஃபுல்லா  எடுத்திருக்காங்க. விஸ்வநாதன்  ராமமூர்த்தி  இசை  இனிமை , ஆனால்  பிஜிஎம்  சுமார்  ரகம்  தான் 



சபாஷ்  டைரக்டர்  ( டி பிரகாஷ் ராவ்) 


1  உப்பு  சப்பு  எதுவும்  இல்லாத  கதையை  சூப்பர்  ஹிட்  சாங்க்ஸ்  எட்டு  மட்டும்  வெச்சு  ஒப்பேற்றிய  லாவகம் 


2    ஈஸ்ட்மென்  கலர் ல  படம்  பூரா  கல்ர்ஃபுல்லா  எடுத்த  விதம் 




செம  ஹிட்  சாங்க்ஸ்


1  தரை  மேல்  பிறக்க  வைத்தான்  எங்களை  தண்ணீரில்  பிழைக்க  வைத்தான்  (  எம் ஜி ஆர்  படங்களில்  ஹீரோ  ஓப்பனிங்  சாங்  சோகப்பாடலாக  அமைந்தது  இதுவே  முதலும்  கடைசியும்)


2  என்னை  எடுத்து தன்னைக்கொடுத்து  போனவன்  போனானடி   (  நாயகி  சோக  சாங்க் ) 


3    தொட்டால்  பூ  மலரும், தொடாமல்  நான்  மலர்ந்தேன்  (  ஃபர்ஸ்ட்  டூயட்  சாங்) 


4   கொடுத்ததெல்லாம்  கொடுத்தான்  , அவன்  யாருக்காகக்கொடுத்தான்? ஒருத்தருக்கா  கொடுத்தான் , இல்லை  ஊருக்காகக்கொடுத்தான் ( வில்லனுக்கான   ஹீரோவின்  தத்துவ  சாங் ) 


5  அழகு  ஒரு  ராகம்   ஆசை ஒரு  தாளம்  (  வில்லனின்  முன் கிளாமர்  டான்ஸ் ) 


6  நான்  ஒரு  குழந்தை  நீ  ஒரு  குழந்தை  ஒருவர்  மடியிலே  ஒருவரடி  (  நாயகன்  மாறு  வேட்டமிட்டு  நாயகியை  கலாய்க்கும்  சாங் ) 


7    பாட்டுக்கு  பாட்டெடுத்து  நான்  பாடுவதைக்கேட்டாயோ? ஹோய் , துள்ளி  வரும்  வெள்ளலையே, நீ போய்  தூது   சொல்ல  மாட்டாயோ?  ( பிரிவுத்துயர்  சாங் )


8  கல்யாணப்பொண்ணு  கண்ணானக்கண்ணு   கொண்டாடி  வரும்  வளையல்   (  நாயகன்  மாறுவேடத்தில்  வந்து  வில்லனின்  இருப்பிடத்தில்  நாயகியை  சந்திக்கும்  சாங் ) 


  ரசித்த  வசனங்கள் 


1   உதவினு  கேட்டா  அது  எதிரியாக  இருந்தாலும்  உதவனும், அதுதான்  பண்பு


2  யார்  கிட்டே  என்ன  பேசறே?

  என்  மக்கள்  கிட்டே  அவங்க  உரிமை  பற்றி  பேசறேன்


3  என்னம்மா  குழம்பு  ஊற்றச்சொன்னா  மோர்  ஊத்தறே? ரொம்பகுழம்பி  இருக்கே  போல 


4    என்ன  மாணிக்கம் ? சரித்திரத்தை  மாற்றி  எழுத  நினைக்கிறயா? முதலாளிகளுக்குள் எப்பவும்  போட்டியே  இருக்காது , நாங்க  ஒற்றுமையாதான்  இருக்கோம் 


5  நல்லது  செய்யலாம்னுதான்  மாணிக்கமா  இருந்தேன், ஆனா  இந்த  உலகத்துல  வேஷத்துக்குதான்  மதிப்பு 

6  நான்  நல்லது  செய்தாலும்  மற்றவர்களுக்கு  அது  தப்பா தான்  படும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நீச்சல்  தெரியாதவங்க  ஒரு  நீர்  நிலைல  மூழ்கினா  அவங்க  உள்ளே தான்  போவாங்க , இதுல  ஒரு  ஆளு  மூணு  தடவை  நீர்  மட்டத்துக்கு  மேலே  வந்து  காப்பாத்துங்க   காப்பாத்துங்கனு  கையால  அபய  சைகை  எழுப்பறாரு , அதுக்கு  வாய்ப்பே  இல்லை   


2  மற்ற  படகோட்டிங்க  எல்லாம்  எப்பவும்  நார்மலா  இருக்காங்க, ஆனா  நாயகன்  மட்டும்  எப்போப்பாரு  படகோட்டி  யூனிஃபார்ம்லயே  இருக்காரு , அது  ஏன் ? தொப்பியைக்கழட்றதே  இல்லை , அதே  போல  காமெடியன் நாகேஷ்  ஒரு  சீன் ல  தூங்கி  எழும்போது  கூட  தலையில்  மீனவரின்  அடையாளமான  தொப்பி  இருக்கு , எதுக்கு ?


3   நாயகிக்கும், நாயகனுக்கும்  முன்  பின்  அறிமுகமே  இல்லை , கடற்கரையில்  மயங்கி  விழுந்த  நாயகனை  நாயகி  அப்போதுதான்  பார்க்கிறார், ஆனா  நாயகனுக்கு  ஒட்டி  உறவாடி  மசாஜ்  பண்றாரு , முதுகுல  பாங்காங்க்  அழகிகளுக்கு  20,000  ரூபா  ஃபீஸ்  கட்டுனாக்கூட  இவ்ளவ்  பிரமாதமா  மசாஜ்  பண்ண  மாட்டாங்க 


4  காலம்  காலமா  சினிமாக்களில்  யாராவது  சாப்பிட  உட்காரும்போது  சாப்பிடப்பிடிக்கலைன்னா  சாப்பாடு இருக்கும்  தட்டத்தில்  தண்ணீர்  ஊற்றி  கை  கழுவறாங்க . ஏன்  உணவை  வீண்  ஆக்கனும்?  நிஜத்தில்  ஒரு  மூடி போட்டு  மூடி  வைத்து பின்  சாப்பிடுவதுதானே  வழக்கம் ? நாயகன் , நாயகி  இருவரும்  இப்படி  உணவை  வீண்  பண்றாங்க 


5  லாங்க்  ஷாட்ல  காட்டும்போது  அசோகன்  மனோரமா  படகை  தன்  படகால்  வீழ்த்தி  அவரை  தண்ணீரில்  விழ  வைக்கும்போது  நீர்  நிலையின்  மையப்பகுதியைக்காட்றாங்க, க்ளோசப்  ஷாட்ல  கரைல  இருக்கற  மாதிரி  காட்றாங்க 


6  படகோட்டிகளா  வரும்  அனைத்துத்துணை  நடிகர்களும்  மங்கலா  இருக்காங்க ,  நாயகன்  மட்டும்  தங்கம்  மாதிரி  மின்னுறாரு , க்ரூப்ல  டூப்  மாதிரி  இருக்கு .  பத்துப்பேரில்  நாலு  பேரை  கலரா உலவ  விட்டிருக்கலாம்

7  அப்பா  கிட்டே  சொல்லாம  என்னை  ஏன் சந்திக்க  வந்தே? அப்டினு  நாயகன்  நாயகி  கிட்டே  கோவிச்சுக்கறாரு . வாய்  தான்  அப்படி  சொல்லுதே  தவிர  கைகள்  நாயகியை  தடவிட்டு  தான்  இருக்கு 


8  நாயகி  ஓப்பனிங் ஷாட்ல  மீனவப்பெண்ணாக  கச்சிதமான  காஸ்ட்யூம்ல  இருக்கார்  , ஆனா  நான்காவது  ரீலில்  இருந்து  ஜமீந்தார்  பொண்ணு  மாதிரி  மாறிடறார்.நாயகன்  கேட்கவே  வேண்டாம், மற்ற  மீனவர்கள்  எல்லாம்  சாதா  காட்டன்  சட்டை  இவர்  மட்டும்  ஜிலு  ஜிலுஜ்  சிலுக்கு  சட்டை . ஒட்டவே  இல்லை தனியா  தெரியுது


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  எதுவும்  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   எம் ஜி ஆர்  ரசிகர்கள் ,  பழைய  பாடல்  ரசிகர்கள்  மட்டும்  பார்க்கலாம்  ஜெனரல்  ஆடியன்ஸ்  ஒன்  ஸ்டெப்  பேக் . ஆவரேஜ்  மசாலா  படம்  தான் .  ரேட்டிங்  2.5 / 5 


சுவராஸ்ய  தகவல் -  வாட்சப்  க்ரூப்  நண்பர்  சங்கர்ஜி  சொன்ன  தகவல் . இந்தப்படத்தில்  கம்யூனிச  சித்தாந்தத்தில்  கலக்கலான  பாடல்கள்  எழுதிய  கவிஞர்  வாலியை  கவிஞர்  கண்ணதாசன்  நேரில்  சந்தித்துப்பாராட்டினாராம், கை வசம்  பணம்  இல்லாததால்  தன்  கழுத்தில்  இருந்த  தங்க  செயினை  பரிசாக அளித்து  வாழ்த்தினாராம்.


நன்றி - ஆனந்த விக்டன் 


https://www.vikatan.com/lifestyle/nostalgia/my-vikatan-article-about-old-mgr-movie


படகோட்டி
இயக்கம்டி. பிரகாஷ் ராவ்
தயாரிப்புஜி.என். வேலுமணி
சரவணா பிலிம்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஎம். ஜி. ஆர்
சரோஜா தேவி
எம். என். நம்பியார்
மனோரமா
நாகேஷ்
விநியோகம்நாகேஷ்வர ராவ்
வெளியீடுநவம்பர் 31964
நீளம்4550 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்







Tuesday, March 28, 2023

PATHAAN ( 2023) ஹிந்தி - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா) @ அமெசான் பிரைம்

 


கடந்த  சில   மாதங்களாக  பாலிவுட்  உலகத்துக்கு  சனி  திசை  நடக்கிறது  என்பதைப்போல  அங்கே  தொடர்ந்து  படங்கள்  தோல்வியைத்தான்  சந்தித்து  வருகின்றன. 2018ஆம்  ஆண்டு  ஜீரோ  என்ற  தோல்விப்படம்  கொடுத்த  ஷாரூக்கான்  4  வருட  இடைவெளிக்குப்பின்  பாலிவுட்டில்  கொடுத்திருக்கும்  ஹிட்  படம்  தான்  இது  225  கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்   உருவான  இப்படம் 1055  கோடி  வசூல்  சாதனை  செய்து கலக்கிக்கொண்டு  இருக்கிறது. தமிழில்  சரியாகப்போகவில்லை  என்றாலும்  அங்கே  இது  மெகா  ஹிட் , ஜேம்ஸ்  பாண்ட்  பாணி யில்  நம்ம  ஊர்  விஜயகாந்த் ,, அர்ஜூன்,சரத்குமார்  வகையறாக்கள்  அடிச்சு  துவைச்சு  காயப்போட்ட  இந்தியா - பாகிஸ்தான்  உளவுத்துறை  கதைதான்  இது 

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் , வில்லன்  இருவருமே  இந்தியாவின்  ரா  ஏஜெண்ட்ஸ். வில்லன்  ரா  ஏஜெண்ட்  ஆக  இருந்தபோது  நாட்டுக்காக  பணி  செய்தவர்தான், ஆனால்  ஒரு  கட்டத்தில்  எதிரி  நாட்டினரால் பணயக்கைதிகளாகப்பிடிபட்ட  அவர் , அவரது நிறைமாத  கர்ப்பிணி மனைவி  இருவரும்  சித்திரவதைக்கு  ஆளான  போது  இந்தியா  வாய்ப்பிருந்தும்  அவர்களைக்காப்பாற்றாமல்  விட்டு  விட்டது . எதிரி  நாடு  வில்லனின்  மனைவியை  சுட்டுக்கொன்றது . இதனால்  இந்தியா  மீது  கடுப்பான  வில்லன்  எதிரி  நாட்டுடன்  சேர்ந்து  கொண்டு  இந்தியாவை  அழிக்கத்துடிக்கிறான்


காலாவதி  ஆன  அம்மை  வைரசை மீண்டும்  உருவாக்கி  அந்த  திட்டத்தை  இந்தியாவில்  நிறைவேற்ற  வில்லன் பாடுபடுவதும்  நாயகன்  எப்படி  அதை  முறியடிக்கிறார் என்பதும்தான்  கதை . 


நாயகன் - வில்லன்  கதை  மட்டும்  இருந்தால்  கிளாமர்  இருக்காது  என்பதால்  நாயகனுக்கு  உதவி  செய்ய  பாகிஸ்தான்  ஏஜெண்ட்  ஆக  நாயகி  கேரக்டர்  டிசைன்  வடிவமைக்கப்ப்ட்டிருக்கிறது 


நாயகனாக ஷாரூக்கான். தில்வாலே  துல்ஹனியா  லே  ஜாயெங்கே  படத்தில்  தான்  இவரை  காதல்  நாயகனாக  நாம்  கொண்டாடினோம். விஜய்  வித்தியாசமான  கேரக்டரில்  நடித்த  பிரியமுடன்  படத்தின் ஒரிஜினல்  வெர்சன்  ஆன  பாசிகர்  படத்தில்  ஷாரூக்கின்  நடிப்பு  மிரட்டல்  ஆக  இருக்கும், அவற்றை  எல்லாம்  பார்த்து  விட்டு  இப்போது  முதிர்ச்சியான  முகத்துடன்  களை  இழந்த  ஷாரூக்கைப்பார்க்கும்போது  உத்தம  புத்திரன்  படத்தில்  யாரடி  நீ மோகினி  என்  ஸ்டைல்  காட்டிய  சிவாஜிகணேசனை  என்  தமிழ்  என்  மக்கள் படத்தில்  எப்படி  பரிதாபமாகப்பார்த்தோமோ  அப்படி  பார்க்க  வேண்டி இருக்கிறது


 வில்லனாக  ஹான்  ஆப்ரகாம்  கலக்கி  இருக்கிறார். ஜிம்  பாடி , மசில்ஸ்  பைசெப்ஸ்  எல்லாம்  தெறிக்க  அவர்  நடந்து  வரும்போதே  அள்ளுகிறது. அவரை  ஹாரூக்  ஃபைட்  போட்டு  ஜெயிக்கும்போது  காமெடியாக  இருக்கிறது 


நாயகியாக தீபிகா  படு கோனே . காஸ்ட்யூம்  டிசைனருக்கு  சம்பள  பாக்கி போல . 80  செமீ  ஜாக்கெட்  பிட்டை  இரண்டாகக்கிழித்து  40 செமீ ல  ஒரு  மேலாடை , மீதி  40  செமீ  ல  ஒரு  கீழாடை  என  படம்  முழுக்க  கிளாமராக  வருகிறார்.  சில  காட்சிகளில்  இவர்  உடை  அணிந்திருக்கிறாரா? சும்மா  ஷால்  மட்டும்  போட்டிருக்காரா? என  சந்தேகம்  வருகிறது . ஒரு  ஃபைட்  சீனில்  நல்லா  பண்ணி  இருக்கார் 


டிம்ப்பிள்  கபாடியா கமலின்  விக்ரம்  படத்தில்  இளமையாகப்பார்த்தது , இப்போ  பாட்டி  வயது  ஆகி  விட்டது ., பாவமாக  இருக்கிறது . உயர்  அதிகாரியாக  வருகிறார்


எக்தா  டைகர் , டைகர்  ஜிந்தாபாத்  ஆகிய  படங்களில்  நடித்த  சல்மான்கான்  இதில்  நாயகனுக்கு  உதவும்  கெஸ்ட்  ரோலில்  வந்து  அப்ளாஸ்  அள்ளுகிறார். ஹம்  ஆப்  கே  ஹேங்  கோன்ல  சாக்லெட்  பாய்  ஆகப்பார்த்து  விட்டு  இதில்  சத்யா  கமல்  கெட்ட்ப்பில்  தாடி  மீசை  உடன்  பார்க்க  என்னவோ போல்  இருக்கிறது 


  விஷால்  சேகர்  இசையில்  2  பாடல்கள்  நன்றாக  இருக்கின்றன . பிஜிஎம் மில் இன்னும்  கலக்கி  இருக்கலாம் . சச்சித்  பாலோஸ்  ஒளிப்பதிவில்  பிரம்மாண்டமான  காட்சிகள்  கண்  முன்  விரிகின்றன , அந்த  பனிப்பிர்தேச  பைக்  ரேசில் பின்னி  எடுத்து  விட்டார்கள் . ஆரிக்கின்  எடிட்டிங்கில்  145  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது , ஆக்சன்  சீக்வன்ஸ்  எல்லாம்  அதகளம்,  காதில்  பூக்கூடைக்ள்தான் 

சபாஷ்  டைரக்டர்  ( சித்தார்த்  ஆனந்தா)


1  லாக்கரை  திறக்க  குறிப்பிட்ட  நபரின்  கை ரேகை  தேவை , அதைப்பெற தீபிகா  படுகோனே  போடும்  ஐடியா  செம . வழக்கமா  வில்லனை ஏமாற்ற  கேவலமான  ஒரு  கிளப்  டான்ஸ்  பாட்டு  இருக்கும், அது  இங்கே  மிஸ்சிங் , ஆனா  அந்த  எஃபக்ட்  இருந்தது 


2  தீபிகா  பாத்ரூமில்  வெயிட்  பண்ணி  அந்த  ஃபாரீன்லேடி  வ்ந்ததும்  அவள்  கெட்டப்க்கு  மாறுவது  செம  சீன், இந்த  சீனில்  எடிட்டர்  மிக  நேர்த்தியாக கட்  பண்ணி  இருந்தார் 

3   இரு  எதிர்  எதிர்  திசைகளில்  தலா  10  கிமீ  தூரத்தில்  இருந்து  இருவரும்  கிளம்பி  வர  விமானத்தை  நியமிப்பதும் , அந்த  காட்சி  எக்ஸிகியூசனும்  ஹாலிவுட்  படங்களுக்கு  நிகரான  பிரம்மாண்டம் 

4  ஆபாவாணனின்  இணைந்த  கைகள்  இண்டர்வெல்  பிளாக்  சீனை  நினைவுபடுத்தினாலும்  ஷாரூக் - தீபிகா  இருவரும்  ரோப்பில்   ஒரே  புள்ளியில்  இணையும்  காட்சி  அப்ளாஸ்  அள்ளும்  காட்சி 


  ரசித்த  வசனங்கள்  ( அப்பாஸ் டயர்வாலா)

1  மண்பானை  உடைஞ்சு  போச்சுன்னா  விரிசல்  விழுந்த  பகுதில  தங்கத்தால  ஜப்பானியர்கள்  ஒட்ட  வைப்பாங்க . அதன்  உறுதியும் அழகும்  அதிகம்  ஆகிடும், அதன்  விலை  மதிப்பும்  கூடிடும் அது  மாதிரி  தான்  போரில்  காயம்  பட்ட  ராணுவ  வீரர்களும்


2  நான்  எங்க  பாஸ்க்கு  அவரோட  சிம்மாசனத்தை  திருப்பித்தர்றேன்


3  எங்களுக்குனு  எந்த  ரூல்சும்  இல்லை , அதனால  ரூல்சை  மதிப்பவர்களுக்கு  எங்களைப்பிடிக்காம  போச்சு 


4   பிரசிடெண்ட்  கூட  ஒரு  செல்ஃபி  எடுத்திருந்தா  என்  சம்சாரத்தை  இம்ப்ரெஸ்  பண்ணி  இருக்கலாம்


  மேரேஜ்  ஆகி  30  வருசம்  ஆகியும்  இதுக்கு  மேலெ  உன்  சொந்த  சம்சரத்தை இம்ப்ரெஸ்  பண்ணி  என்ன  பண்ணப்போறே? 


5  சீட்டாட்டத்தில்  கைக்கு  வரும்  கார்டு  வெச்சுதான்  நாம  ஆட முடியும். இந்த  ஆட்டத்தைப்பொறுத்தவரை  மொத்த  ஏஸ் சும் என்  கிட்டே  தான்  இருக்கு 


6  பலவீனமானவங்கதான்  மண்டி  இடுவாங்க , சோல்ஜர்ஸ் இல்லை


7  மிஸ்!  போலீஸ்க்கு  நீ  இங்கே  இருப்பது  தெரிஞ்சா  பிரச்சனை  ஆகிடும் 


ஏன்?


 ஏன்னா  நீ  பாம்  மாதிரி  இருக்கே


8  சதுரங்கத்துல  ராணி  தனக்காக  உயிரை  விடப்போறா  என  ராஜா  நினைப்பான், அவன்  கான்செண்ட்ரேஷன் எல்லாம்   ராணியைக்காப்பாத்தறதுல தான்  இருக்கும்


9உன்னை  செமயா  அடிச்சிருக்காங்க , இந்த  பெயின்  கில்லர்  டேப்லெட்ஸ்


  புலிகளுக்கு  என்னைக்கும்  வலி  தெரியாது


10   ஒரு  பெண்ணை  எப்பவும்  காக்க  வைக்கவே  கூடாது 


11 இந்த  பாரீஸ்  சிட்டில  ரெண்டு  பேரு  ஒண்ணா  போனா  அது  கப்பிள் , மூணு  பேரு  போனா  அத்  கிரவுடு



12  யூ  லுக்கிங்  குட்


ஆல்வேஸ்...


 காதல்  என்பது  ,முதல்  பார்வைலதான்  வரும்னு  உனக்கு  யார்  சொன்னது ?


13   எது  வைரல் ஆகுதோ  அதுதான்  விலை  போகுது 


14   பயம்  மனுசங்களொட  கண்ணை  மறைச்சிடும் 


15   எங்கே  பார்ட்டி  நடந்தாலும்  கூப்பிடாமயே  ஆஜர்  ஆகிடறே!


16  நாடு  தனக்காக  என்ன  செஞ்சுது?னு  ஒரு  சோல்ஜர்  கேட்கவே  மாட்டான், நாட்டுக்காக நாம   என்ன  செஞ்சோம்?னு  தான்  யோசிப்பான்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வில்லன்  சரியான  பேக்கு  அப்டினு  நினைக்கறேன். யாருக்குமே  தான்  யார்னு  தெரியக்கூடாதுனு  முழு  முகக்கவசம்  கம்  ஹெல்மெட்  போட்டிருக்கும்  அவன்  ஹீரோ  கிட்டே  ஹெல்மெட்  கழட்டி  என்னை யார்?னு  தெரியுதா? நான்  செத்துட்டேனு  தானே  நினைச்சே? நான்  இன்னும்  சாகலைங்கறான். அடேய்  ரானா  ஹெக்சாடாக்டைலா 


2  பொதுவா  கோட்  சூட்  போட்டுட்டு  பந்தாவா  கூலிங்  கிளாஸ்  போட்டுட்டு  பஞ்ச்  டயலாக்  பேசுவாங்க. இதுல  கிறுக்கு  வில்லன்  ஸ்விம்மிங்  பூல்ல  இருந்து  வெறும்  அண்டர் டிராயரோட  எழுந்து  பந்தாவா  கூலிங்  கிளாஸ்  போடறான்.  சிரிப்பா  வருது .இதை  ஷூட்  பண்ணும்போது  கேவலமா  அவங்களுக்கு  தோன்றி  இருக்காதா?


3  தீபிகா  லாக்கரில்  கை  வைக்கும்போது  கிளவுஸ்  போடாம  திருட்டு  வேலை  பண்றாரே? கை  ரேகை  ஆதாரமா  சிக்கிடாதா?


4  ஷாரூக்  அந்த  ரகசியத்தை  கைப்பற்றியதும் பேண்ட்  பாக்கெட்டிலோ  ஜெர்கின்  பாக்கெட்டிலோ  வைத்து  இருக்கலாமே? எதற்கு  தீபிகா  மேலே  இருந்து  அதை  வீசு  என்றதும்  இவர்  வீச  வேண்டும் ? 


5  க்ளைமாக்ஸ் ல  வில்லன்   ஸ்பைடர் மேன்  இறக்கை  மாதிரி எதையோ  ஃபிட்  பண்ணி  எஸ்  ஆகறான், அது  அவன்  இடம் , அவன்  ஆராய்ச்சி  பண்ணி  ட்ரெயல்  பார்த்து  ரெடி  பண்ணின  சாதனம், ஆனா  அது  பற்றிய  எந்த  நாலெட்ஜூம்  இல்லாத  ஹீரோ  அதே  மாதிரி  இன்னொரு  உடுப்பை  எடுத்து  மாட்டிக்கிட்டு  அவர்  பாட்டுக்குக்கிளம்பிடறாரு, எப்படி  ஆபரேட்  பண்றதுன்னே  தெரியாம  என்ன  செய்யபோறாரு?


6  வில்லன்  கிளம்பும்போது  தான்  யூஸ்  பண்ண  மாதிரி  ஒரு  சாதனம் எக்ஸ்ட்ராவா  ஒண்ணு  வெச்சுட்டா  போவான்,? அதை  எரேஸ்  பண்ணிட்டோ ,செயல்  இழக்க  வெச்சுட்டோதானே  போவான்?


7   வில்லனோட  பிளான்  என்ன?னு  யாருக்குமே  தெரியாது , அவன்  பாட்டுக்கு  சும்மா  இருந்திருந்தா  அவன்  பிளான்  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கும், அவன்  என்னடான்னா  கிறுக்கன்  மாதிரி  ஹீரோ கிட்டே  இடம் சுட்டி  பொருள் விளக்கிட்டு  இருக்கான். இந்த  ரிமோட் இருந்தாதான்  அதை  தடுக்க  முடியும், இதை  என்  கி ட்டே இருந்து  பிடுங்க  நினைக்காதேங்கறான், அய்யோ  ராமா 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - லிப்  லாக்  சீன்ஸ்  18+  காட்சிகள்  ஏதும்  இல்லை , நாயகி  தீபிகா  மட்டும்  அரைகுறையா  உலா  வருவார் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஆக்சன்  ரசிகர்கள்  , மாமூல்  மசாலாப்படப்பிரியர்கள்  பார்க்கலாம் .  ரேட்டிங்  2.5 / 5 



Pathaan
Pathaan film poster.jpg
Theatrical Release Poster
Directed bySiddharth Anand
Written byAbbas Tyrewala (dialogues)
Screenplay byShridhar Raghavan
Story bySiddharth Anand
Produced byAditya Chopra
Starring
CinematographySatchith Paulose
Edited byAarif Sheikh
Music byScore:
Sanchit Balhara
Ankit Balhara
Songs:
Vishal–Shekhar
Production
company
Distributed byYash Raj Films
Release date
  • 25 January 2023
Running time
146 minutes[a]
CountryIndia
LanguageHindi
Budgetest. ₹225 crore[3]
Box officeest. ₹1,048.30 crore[4] (US$130 million)

Monday, March 27, 2023

CAUGHT OUT ;CRIME,CORRUPTION,CRICKET (2023) -சினிமா விமர்சனம் ( டாக்குமெண்ட்ரி ) @ நெட்ஃபிளிக்ஸ்


கிரிக்கெட்  ரசிகர்கள்  மட்டும்  அல்லாமல்  பத்திரிக்கைத்துறை  மற்றும்  இன்வெஸ்டிகேஷன்  ஜர்னலிசம்ல  ஆர்வம்  உள்ளவர்களும்  பார்க்கத்தகுந்த  இந்த படம்  டாகுமெண்ட்ரி  ஸ்டைலில்  எடுக்கப்பட்ட  ஒரு சின்ன  படம் . படத்தின்  மொத்த  ட்யூரேஷனே  ஒன்றே  கால்  ,மணி  நேரம்  தான். நெட்  ஃபிளிக்ஸ்ல  ரிலீஸ்  ஆகி  உள்ளது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


1990 களில்  கிரிக்கெட்  இந்தியா  மட்டுமல்லாமல்  உலகம்  பூரா  கொண்டாடப்பட்ட  ஒரு  விளையாட்டாக , ஒரு  திருவிழாவாக  இருந்தது . தெஹல்கா  டாட்  காம்  எனும்  பத்திரிக்கை  கிரிக்கெட்டில்  நிகழ்ந்த  ஊழல்  , மேட்ச்  ஃபிக்சிங்  பற்றி  ஆவணங்களை  வெளியிட்டு உலகத்துக்கு  ஊழல்வாதிகளை  வெளிச்சம்  போட்டுக்காட்டியது 


இந்திய  வீரர்களைப்பொறுத்தவரை  மனோஜ்  பிரபாகர் , கபில் தேவ் , அசாருதீன்  ஆகியோர்  மீது  குற்றச்சாட்டு  வைக்கப்ப்ட்டது . இதில்  கபில்  தேவ்  மீது  வைக்கப்பட்ட  குற்றச்சாட்டுகள்  நிரூபிக்கப்படவில்லை.  மீதி  இருவருக்கும்  வாழ்நாள்  தடை  விதிக்க[ப்பட்டது 


 இது  பற்றிய  டாகுமெண்ட்ரி  படம்  தான்  இது 


 இதில் அசாருதீன் , மனோஜ்  பிரபாகர்  ஆகியோரின்  பேட்டிகளும் , கபில்  தேவின்  சிறிய  உரையும்  இணைக்கப்பட்டுள்ளது 


சுப்ரியா சோப்தி  குப்தா  தான்  இதன்   டைரக்டர்



  ரசித்த  வசனங்கள் +  முக்கிய  தகவல்கள் 


1 கிரிக்கெட்  வீரர்களை  ரசிகர்கள்  கடவுளாக  நினைத்தார்கள், ஆனால்  அவர்களும்  மனிதர்கள் தானே? அந்த  பலவீனத்தைக்காட்ட  ஆரம்பித்தார்கள் 

2   1990கள் தான் கிரிக்கெட்  உலகின் உச்சம். கிரிக்கெட்  வீரர்கள் கடவுளாக  கொண்டாடப்பட்டார்கள் 

3  பிரஸ்  பாக்ஸ் ல  உட்கார்ந்திருப்பவர்கள்  புக்கீஸ்  கிட்டே  ஃபோன்ல  பேசக்கூடாது, அது  இல்லீகல் 

4  சூதாடுபவர்கள்  எப்போதும்  ஜெயித்துக்கொண்டே  இருப்பதில்லை , புக்கீஸ்  ஒரு போதும்  தோறபதில்லை

5  நைண்ட்டீஸ்ல  கேபிள்  கனெக்சன்  வந்ததால  கிராமங்கள்  பூரா  கிரிக்கெட்  மேட்ச்  பார்க்க  ஆரம்பிச்சாங்க . பெரும்பாலானவர்களின்  கனவு  இந்தியாவுக்காக கிரிக்கெட்  விளையாடுவது

6  மனோஜ்  பிரபாகர்  ஒரு  வேகப்பந்து  வீச்சாளர், ஆல்ரவுண்டர். ஏழைகளின்  கபில்தேவ்  என  அழைக்கப்ட்டார் 

7   நீங்க  ரொம்ப  கோபக்காரர்னு  சொல்றாங்களே?  

மனோஜ்  பிரபாகர்   -  கிரவுண்ட்ல  கோபத்தைக்காட்டலைன்னா  உங்க  கதை  அங்கேயே  முடிஞ்சிடும் 

8  மனசுல  இருக்கறதை  வெளில  சொல்ல  வாய்ப்பு  இல்லை. அதுக்கு  பயமும்  ஒரு  காரணம் 

9  1997ல்தான்  இது  பற்றிய  நியூஸ்  வெளில  வந்தது

10  பாகிஸ்தானுக்கு  ஆதரவாக  மேட்சை  திருப்பி  விட  அதாவது  நாங்கள்  மோசமாக  விளையாட  25  லட்சம்  ரூபாய் தரப்பட்டது  என  மனோஜ் பிரபாகர்  சொன்னார்

11  ஸ்போர்ட்ஸ்  என்ப்து  எழுதி  வெச்சு  பேசி  வெச்சு  அதன்படி  நடப்பது  கிடையாது . எதிர்பாராத  நேரத்தில்  யாரும்  எதிர்பாராதது  நடப்பதுதான் அழகு

12   1997ல்  புகார்  எழுந்தாலும்  2000ம்  ஆண்டில்  தான்  விஷயம்  வெளில  வந்தது 

13   தென்  ஆப்பிரிக்க  வீரர்  ஆன  ஹான்சி க்ரோஞ்சி  ஒரு  குக்கீஸ்  கிட்டே  பேரம்  பேசிய  டேப்  வெளியானது 

14  தெஹல்கா  டாட்  காம்  பத்திரிக்கையின்  நோக்கம்  ஊழலை  வெளிக்கொண்ருவது. இது  ஒரு  உருது  வார்த்தை . உண்ர்ச்சி  தாக்கம்  பற்றிக்கொண்டு  வெடித்தல்   இதன்  ஸ்லக்  லைன்  நியூஸ்  வியூஸ்  ஆல்   த ஜூஸ் 

15  இந்தியாவிலேயே  முதன்  முறையாக  ஸ்பை  கேமரா  ஹிடன் காமரா  யூஸ்  பண்ணுனது  இந்த  கிரிக்கெட்  மேட்ச்  ஃபிக்சிங்  விவகாரத்தை  வெளிக்கொணர்வதில்தான்

16  ஃபாலன்  ஹீரோஸ்   எனும்  முதல்  டாக்குமெண்ட்ரி  எடுத்தோம்

17  கபில்  தேவ் ,மனோஜ் பிரபாகர்  இருவருக்குமிடையே  இருந்த  தனிப்பட்ட  விரோதம்  காரணமா? 

18  மேட்ச்  ஃபிக்சிங்கில் சம்பந்தப்பட்ட  கிரிக்கெட்  வீரர்களின்  பெயர்  வெளி  வந்தது , ஆனால்  புகீஸ்  பேரு  வர்லை 

19 ஹான்சி க்ரோஞ்சி  =30,000  டாலர்  லஞ்சமா  கொடுத்தாங்க 

20 முகேஷ்  குப்தா  தான்  தானாக  முன்  வந்து  சாட்சி  சொன்னவர்

21 அசாருதினின்  மணீக்கட்டை  கடவுள்  பொறுமையா  அருமையா  படைச்சிருக்கார்னு  தோணும், பவுலரின்  ஈகோவை  உடைக்கும்  வல்லமை  கொண்டது  அவர்  மணிக்கட்டு

22  அசாருதீன்  முதல்  மேட்சிலேயே  சதம்  அடித்தார். 2வது  3 வது  மேட்சிலும்  சதம் அடித்தார்

23   இந்த  கிரிக்கெட்  மேட்ச்  ஃபிக்சிங்கில்  அசார்  பேர்  அடிக்கடி வர  ஆரம்பித்தது

24  அசாருதினின்  கேர்ள்  ஃபிரண்ட்  ஃபெஷன்  ஷோவுக்கு  பணம்  தேவைபபட்டதாக  அஜய்  சர்மாவிடம்  சொல்லி  இருக்கார்

24  டெல்லி  தாஜ்  ஹோட்டல் - எம் கே  குப்தா  - அசார்  மீட்டிங்

25  ஒரு  குக்கிக்கு  மற்ற  வீரர்களை  விட  கேப்டன் தான்  அதிக  ஃபொகஸ்

26  அமெரிக்கா -ஹரோட்ஸ்   ல பர்ச்சேஸ்  பண்ணிய  அசார்  பில்லை  வேற  ஒரு  குக்கி 

27  மேட்ச்  ஃபிக்சிங்  இல்லீகல்  ஆனா  கிரிமினல்  குற்றம்  இல்லை 

28 அசாருதீன்  மனைவி சங்கீதா  வீட்டில்  ரெய்டு


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -     இது  ஒரு  வரலாற்று  ஆவணம்  என்பதால்  நியூஸ்  பேப்பர்  படிக்கும்  ஆர்வம்  உள்ளவர்கள்  பார்க்கலாம்.  போர்  அடிக்காமல்  சுவராஸ்யமான  தகவலுடன்  படம்  நகர்கிறது , ரேட்டிங் 2.5 / 5 

Friday, March 24, 2023

KRANTI (2023)=கன்னடம் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா) @ அமேசான் பிரைம்

 


க்ராந்தி  என்றால் புரட்சி  என்று  அர்த்தம், ஆனா  இந்தப்படத்துல  அது பெயர்ச்சொல் . நாயகனின்    பெயரே க்ராந்தி  தான். நாயகி  பேரு  அவருக்கு  மேட்சுக்கு  மேட்ச்சா   சாந்தினு  வெச்சிருக்கலாம். எதுகை  மோனை  ரசனை  இல்லாதவங்க  போல   , உஷானு  வெச்சிருக்காங்க 

படத்தின  நாயகன்  தர்ஷன்  23  ஆண்டுகளாக  நடித்து  வருகிறார். இதுவரை 50 படங்களுக்குமேல்  நடித்து  முடித்து  விட்டார். இவர்  மீடியாக்கள்  மீது  கோபமாக  இருப்பவர். பர்சனல்  லைஃப்  பற்றி கமென்ட்  செய்யும்  மீடியாக்களை  கண்டபடி  திட்டுபவர். இந்தப்படத்துக்கான் ப்ரமோ  நிகழ்வு  ஒன்றில் இவர்  பேசிய  பேச்சு  சர்ச்சை  ஆனது. அதிர்ஷ்ட  தேவதை  எப்போதும் உங்கள்  வீட்டுக்கதவை  தட்ட  மாட்டாள். அவள்  வ்ரும்போது  அவ்ளை  வீட்டுக்குள்  இழுத்து  உடைகளைக்களைந்து  நிர்வாணம்  ஆக்கி  விடுஙகள், அப்போதுதான்  உங்களுடனேயே  இருப்பாள், உடைகளைத்தந்தால் அவள்  வெளியே  போய்  விடுவாள்  என  பேசியது  பெரும்  கண்டனத்துக்கு  உள்ளானது. மேடையிலேயே ஒருவர்  செருப்பை  வீசி  தன்  எதிர்ப்பை  பதிவு  செய்தார் 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  சின்னப்பையனா  இருந்தப்போ ஸ்கூல்  படிக்கும்போதே அநியாயத்தைக்கண்டு  ஓவரா  பொங்கி  வ்ழிந்து  வன்முறைல  ஈடுபடும்  ஆளாக  இருப்பதைப்பார்த்து  அப்பா  கடுப்பாகி  அவனை  வீட்டை  விட்டு , இந்த  ஊரை  விட்டு , இந்த  நாட்டை  விட்டே  அனுப்பிடறாரு. சொந்தகாரர்  வீட்ல  தங்கிப் படிச்சு  திடீர் சாம்பார் ,  திடீர் பிரியாணி  மாதிரி  நாயகன்  திடீர்  பிரபல  தொழில்  அதிபர்  ஆகிடறார்.  எப்படி  ஆனார்?னு  யாரும்  கேட்கக்கூடாது .எப்படியோ  ஆகிடறார்


உலகப்புகழ்  பெற்ற  தொழில்  அதிபரா  ஆன  அவருக்கு  அவரோட  ஸ்கூல்  வாத்தியார்  ஃபோன்  பண்ணி  ஸ்கூலோட  100 வது  ஆண்டு  விழா  நடக்குது  , அவசியம்  வரனும்னு  அழைப்பிதழ்  வாய்  மூலமா  அனுப்பறார்


 உடனே நாயகன் ஃபிளைட்ல தாய்  நாடு  வந்து  ஹெலிகாப்டர்ல  அந்த  ஏரியா  வந்து  ரயில்ல  பிரயாணம்  பண்றாரு. ஏன்னா  அப்போதான்  படத்தை  இழுக்க  முடியும், நாயகி  கூட மொக்கை  காமெடி , டூயட்  எல்லாம்  பாட  முடியும் 


நாயகன்  எருமைக்கடா  மாதிரி  இருக்கார் , நாயகி  மல்லிகைப்பூச்சரம்  மாதிரி  இருக்காங்க. நாயகிக்கு    பெரியப்பா  மாதிரி  தான்  நாயகன்  இருக்கார் , ஆனா  மனசாட்சியே  இல்லாம  இருவரும்  க்ளாஸ்  மேட்  அப்டினு  அடிச்சு  விடறாங்க 


இருவரும்  டூயட்  பாடி  முடிச்சு  ஊர்  வந்து  சேர்றாங்க. இப்போதான்  நமக்கு  கதை  புரியுது . அதாவது  தனுஷ்  நடிச்ச  வாத்தி   ப்டமும் இதுவும்  ஒரே  பட  டிவிடியைப்பார்த்துதான்  அட்லீ  ஒர்க்  பண்ணி  இருக்காங்கனு  புரியுது


 அரசுப்பள்ளிகளை  ஒழிச்சுட்டா  தனியார்  பள்ளி  மூலம்  சம்பாதிக்கலாம்னு  கார்ப்பரேட்  வில்லன்  சதி  பண்றான், அதுக்கு  கல்வி  அமைச்சர்  உடந்தை . இவங்க  திட்டத்தை  நாயகன்  எப்படி  முறியடிக்கிறார்  என்பதுதான்  கதை ‘

‘  நாயகனாக  தர்ஷன். முற்றிப்போன  கத்திரிக்கா  மாதிரி  முகம் , ஜிம்  போய்  டெவலப்  பண்ணி அடியாள்  மாதிரி  உடம்பு . டூயட்  சீன்ல  நாயகியைக்காதலா  லுக்  விடத்தெரியாம  டாப்லெஸ்  போஸ்ல  வர்றாரு 


 தமிழ்  சினிமா ல கமல் , சரத்குமார் , அர்ஜூன்  எல்லாம் இந்த  கேட்டகிரிதான்  , அவசியம்  இருக்கோ  இல்லையோ  சட்டையைக்கழட்டி  ஜிம்  பாடியைக்காட்டலைன்னா  தூக்கம்  வராது 


இவர்  போடற  ஃபைட்  சீன்கள் , ஆக்சன்  சீக்வன்ஸ்  எல்லாம்  பார்த்தா  தெலுங்குப்பட  ஹீரோக்கள்  எல்லாரும்  சூசையிட்  பண்ணிக்குவாங்க 


நாயகியாக ரச்சிதா  ராம், நம்ம ஊர்  அனுஷ்கா  மாதிரி  கொழுக் மொழுக்  அழகு . பானுப்ரியா  மாதிரி  அழகிய  கண்கள் 


டம்மி  வில்லனாக தருன்  அரோரா..காமெடிக்கு  சாது  கோகிலா  ( இவர்  ஒரு  ஆண்  ) நம்ம  ஊர்  வடிவேலு  மாதிரி  முக  பாவனை    உடல்  மொழி  மூலம்  காமெடியில்  கலக்குபவர் 


இயக்கி  இருப்பவர்  ஹரி கிருஷ்ணாR



சபாஷ்  டைரக்டர்


1 ஹீரோ  தான்  படம்  முழுக்க  ஒன் மேன்  ஷோ    மாதிரி  நடக்கறார் நடக்கறார் நடந்துட்டே  இருக்கார்


2 திரைக்கதை  அப்படினு  ஒரு  டிபார்ட்மெண்ட்  இருப்பதையே  மறந்தது  அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1  ஒவ்வொரு  ரிஸ்க்  ஃபேக்டருக்கும்  ஒரு  விலை  உண்டு 


2  சோறு  போடும்  விவசாயி  தலை  குனிந்து  வணங்க  வேண்டியது  பூமித்தாய்க்கு  மட்டும் தான்


3   20  வருச்மா  நீ  மாறவே  இல்லை  அப்படியே  இருக்கே


வாழ்றதுக்கு கத்துக்குடுத்தீங்க ,   மாறுவதற்கு  கத்துத்தர்லையே?


4 மதர்ஸ் டே . ஃபாதர்ஸ்  டே , டீச்சர்ஸ்  டே   வி  இந்தியன்  செலிபிரேட்ஸ்  எவரி டே


5  கல்வி  இல்லாதவனுக்கு  எந்த ஆளுமையும்  இருக்காது


6  கத்தி  வெச்சவங்க  எல்லாம்  மன்னன்  ஆகிட  மாட்டாங்க 

 கிரீடம்  வெச்சவங்க  எல்லாம்  ராணி  ஆகிட  மாட்டாங்க 


7 உஷா  உஷா  உஷா  நீ  ஓக்கே  சொன்னா  எடுப்பேன் விசா  விசா  விசா


8   இவ்ளோ  பெரிய  ஆளா  வளர்ந்த  பிறகு  சொந்த  ஊர்லயே  இருக்கனும்னு  அவன்  நினைக்க  மாட்டான்


மரம்  வானத்தை  நோக்கி  வளர்ந்தாலும்  அதன்  வேர்கள்  பூமிக்க்க்கீழேதானே  போகும் ?


9 நீங்களா  முன்  வந்து  கொடுப்பது  தானம், அது  வேணாம்,, அரசாங்கத்தைகொடுக்க  வைப்பதுதான்  தர்மம் 


10  மரத்தை வெட்டுனவனையே  செடியை  நட  வைக்கனும் 


11  ஒரு  கிமீ  தூரத்துக்கு  அஞ்சு  டாஸ்மாக்  வைக்க  அனுமதி  கொடுக்கும்  அரசாங்கம்,  அஞ்சு  கிமீ  தூரத்துக்கு  ஒரு  ஸ்கூல்  வைக்க  அனுமதி  தர  யோசிக்குது 


12  பணக்கார்க்குழந்தைங்க  முன்னேற  ஏகப்பட்ட  வழிகள்  இருக்கு , ஆனா  ஏழைக்குழந்தைகள்  முன்னேற  கல்வி  மட்டும்  தான்  இருக்கு 


13  கெடுக்க்றதுக்கு  100  பேர்  இருந்தா  காப்பாத்தறதுக்கு  கண்டிப்பா  ஒருத்தனாவது  இருப்பான்


14  பொய்  கோட்  சூட்  போட்டு  ஓடிக்கிட்டிருந்தா  உண்மை ஒட்டுத்துணி  கூட  இல்லாம  திண்ணைல  படுத்திருக்கும் 


15  நான்  இருக்கற  இடத்துல என்னை  நிம்மதியா  இருக்க  விடு , உன்  இடத்துக்கு  நான்  வந்துட்டா  நீ  அங்கே  இருக்க  மாட்டே 


16   இந்த  உலகத்துல  கரெக்சன்  பண்ண  முடியாதது  எது?னு  கேட்டா  அது  கரப்ஷன்  தான் 


17  எல்லாரும்  சரஸ்வதி  பூஜை  கொண்டடுனப்ப  என்  மகன்  அதே  ஸ்கூலில்  ஆயுத  பூஜை  கொண்டாடுனான்


18  எமனோடசேர்ந்து   எருமைக்கால்  சூப்  சாப்பிடற  கெட்ட  பையன்  நான் 


19  இதுதான்  உங்க  ஃபைனல்  முடிவா?


 என்  கிட்டே  ஃபர்ஸ்ட்  1  ஃபைனல் 1  கிடையாது, ஃபர்ஸ்ட் தான்  ஃபைனல் 1 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நூற்றாண்டு  விழா  அன்னைக்கு  முந்தின  நாள்  ஸ்கூல்  பூரா  பாம்  வெச்சிருக்கேன், அப்டினு  வில்லன்  நாயகனிடம்  மிரட்றான்/ நாயகன்  பேக்கு   மாதிரி  பார்த்துட்டு  இருக்காரு. அப்பவே  வில்லனை  அதே  இடத்துல  கட்டிப்போட்டு  நீ  வினை  வைத்தாய்  நீயே  அதன்  பலனை  அறூவடை  செய்னு  சொல்லி  இருக்கலாமே? தனியா  வந்த  வில்லனை  அம்போனு  அனுப்பிட்டு  வேடிக்கை பார்க்கறாரு


2   ஸ்கூல்  பில்டிங்க்  எல்லாம்  இடிஞ்சு  மாணவர்கள் , ஆசிரியர்கள்  காயம்  பட்டு  விழுந்துட்டு  இருக்காங்க ., நாயகன்  பேக்கு  மாதிரி  ஸ்போர்ட்ஸ்  கொடிக்கம்பம்  கீழே  விழாம  இருக்க  அதை  தாங்கிப்பிடிச்சுட்டு   இருக்காரு . தேசியக்கொடி  மாதிரி  காட்டி இருந்தாக்கூட  ஏத்துக்கலாம் 


3 இடிபாடுகளுக்கு  இடையே  மாட்டிக்கொண்டு  மயக்கம்  ஆகிக்கிடக்கும்  டீச்சர்  ஜனனியை  காப்பாற்றும்  நாயகன்  டக்னு  ஹாஸ்பிடலில்  அவரை  சேர்க்காம  ஜனனி ஜனனி  எந்திரி  அப்டினு  அஞ்சலி  பட  க்ளைமாக்ஸ்  ல  வர்ற  மாதிரி  கூப்டுட்டே  இருக்காரு


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் =- படத்துல்  கண்ட்டெண்ட்டுக்கே  பஞ்சம் , இதுல  எங்கே  அடல்ட்  கண்டெண்ட்?



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பொழுது  போகலைன்னா , தூக்கம்  வர்லைன்னா  பார்க்கலாம், நல்லா  தூக்கம்  வரும், ரேட்டிங் 2 / 5 



Kranti
Kranti film poster.jpg
Theatrical release poster
Directed byV. Harikrishna
Produced byB. Suresha
Shylaja Nag
StarringDarshan
Rachita Ram
Ravichandran
CinematographyA. Karunakar
Edited byPasha
Music byV. Harikrishna
Production
company
Distributed byMedia house
Release date
26 January 2023
Running time
163 minutes
CountryIndia
LanguageKannada
Box office 33 crores[1]

Thursday, March 23, 2023

THOTTAPAN (2019) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்

 


தொட்டப்பன்  என்றல்  காட்  ஃபாதர்  என  அர்த்தம்.குழந்தை  முதலே  தன்னை  வளர்த்த  வளர்ப்புத்தந்தையை  காட்ஃபாதர்  ரெஞ்சுக்கு  உய்ர்த்தி  அவர்  சொல்வதை  வேத  வாக்காகக்கடைப்பிடிக்கும்  ஒரு   மகளின்  கதை . இது  ஸ்லோ மெலோ  டிராமா. முதல் 45  நிமிடங்கள்  மிக  மெதுவாக  நகரும்  திரைக்கதை . 2019ல் தியெட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இந்தப்படம் இப்போது  நெட்  ஃபிளிக்ஸ்  ஒடிடி  தளத்தில்  காணக்கிடைக்கிறது.

ஷன்வாஸ் கே பவாக்குட்டி 2016ல்  ரிலீஸ்  ஆன  கிஸ்மத்  எனும்  படத்துக்காக கேரளா  அரசின்   சிறந்த  இயக்குநருக்கான  விருதைப்பெற்றவர் . 3  வருடங்கள்  கழித்து  இவ்ரது  இரண்டாவது  படமாக  தொட்டப்பன்  ரிலீஸ்  ஆகி  உள்ளது 2013ல் இவர்  இயக்கிய  பிளாக்  போர்டு  எனும்  குறும்படம்  பாலக்காடு  ஃபிலிம்  ஃபெஸ்டிவலில்  விருது  பெற்றது . 2014ல்  இவர்  இயக்கிய  கிணறு  எனும்  குறும்படம்  சிறந்த  டாகுமெண்ட்ரி  ஃபிலிம்  அவார்டைப்பெற்றது


 இவ்ர்  ஒரு  விருதுப்பட  இயக்குநர். அதனால்  இவரது  படம்  தரமாக  இருக்கும், ஆனால்  மெதுவாகத்தான்  காட்சிகள்  நகரும்

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  சின்னக்குழந்தையா  இருக்கும்போது நாயகியோட  அப்பாவும், அப்பாவின்  நண்பரும்   திருடர்களா  இருக்காங்க. எங்கே  போனாலும்  ரெண்டு  பேரும்  சேர்ந்துதான்  போவர்கள் , வருவார்கள் . ஒரு  கட்டத்தில்  ஒரு  திருட்டுக்கான  அசைன்மெண்ட்க்காக  நாயகியின்  அப்பா  தனியா  போகிறார். அதுக்குப்பின்  அவரைப்பற்றிய  த்கவல் இல்லை. அதனால  சின்னக்குழந்தையான  நாயகியை  அப்பாவின்  நண்பர்  தான்  தத்து  எடுத்து  வளர்க்கிறார்


வளர்ப்புத்தந்தை  என்றாலும்  இருவருக்குள்  இருக்கும்  அப்பா  மகள்  பாண்டிங்  மிகவும்  நெருக்கமாக  உருக்கமாகவே  இருக்கிறது. ஒரு  நாள்:  ஒரு  கல்யாண  விழாவுக்கு  நாயகியும், வளர்ப்புத்தந்தையும்  போகிறார்கள் . அங்கே  ஒரு  பெரிய  மனிதரின் தங்க்ச்சங்கிலி  திருடு  போய்  விடுகிறது. அந்த  திருட்டை  நிகழ்த்தியது  நாயகியின்  வளர்ப்புத்தந்தைதான்  என  குற்றம்  சாட்டபப்டுகிறார், அவமானப்படுத்தப்படுகிறார்


ஆனால்  நிஜக்குற்றவாளி  வேறு  ஒரு திருடன். அவன்  தான்  நாயகன். நாயகன்  நாயகியை  விரும்பினாலும்  நாயகி  பெரிதாக  நாயகனைக்கண்டு  கொள்ளவில்லை . நாள்டைவில்  நாயகியின் வளர்ப்புத்தந்தைக்கு  நெருக்கம்  ஆகும்  நாயகன்  இருவரும்  கூட்டுக்களவாணிகளாக  திருடப்போகும்  அளவுக்கு  க்ளோஸ்  ஆனதும்  வீட்டுக்கு  வர  போக  இருப்பதால்  நாயகிக்குப்பழக்கம்  ஆகி  இருவரும்  காதலிக்கிறார்கள் 


 ஒரு  கட்டத்தில்  வளர்ப்புத்தந்தை  ஊரார்  முன்னிலையில்  தன்  மகளை  நாயகனுக்குத்தான்  கட்டிக்கொடுப்பேன்   என  அறிவித்து  விடுகிறார்


 அந்த  ஊரில்  ஒரு  பெட்டிக்கடை  நடத்திப்பிழைத்து  வருபவர்  வயதான  நபர் ., அவர்  விழி  ஒளி  இழந்தவர் . அவர்  தன்  துணைக்காக இள  வயதுப்பெண்ணை  திருமணம்  செய்து  வாழ்ந்து  வருகிறார். அந்தப்பெண்ணுடன்  நாயகனுக்கு  ஒரு கள்ளத் தொடர்பு  ஏற்படுகிறது . இந்த  விஷயம்  அந்த  கணவருக்கும் , வளர்ப்புத்தந்தைக்கும்  தெரிய  வருகிறது . திருமணம்  நிறுத்தப்படுகிறது


இந்த  கள்ளக்காதல்  விஷயம்  நாயகிக்கு  தெரிந்து  விடக்கூடாது  என்பதற்காக  நாயகன்  வளர்ப்புத்தந்தையைக்கொலை  செய்து  விடுகிறான். இதற்குப்பின்  கதையில்  ஏற்படும் திரு[ப்பங்கள்  தான்  திரைக்கதை 


நாயகனாக  வில்லத்தனம்  மிக்க  ரோலில் கப்பீலா  நாயகன்  ரோஷன்  மேத்யூ  நடித்திருக்கிறார். வஞ்சகத்த்னம்  மிக்க  சிரிப்பு  இவரது ஸ்பெஷல்  பிராண்ட். புகுந்து  விளையாடி  இருக்கிறார்


நாயகியாக  புதுமுகம்  ப்ரியம்வதா கிருஷ்ணன் பாராட்டத்தக்க  புது  வரவு . காதல்  காட்சிகள்  ஆகட்டும், சின்னப்பையன்  கூட  சேர்ந்து பெட்டிக்கடையில்  திருடும்  குறும்புத்தனம்  ஆகட்டும்  துள்ளலான  நடிப்பு , அப்பா  எது  சொன்னாலும்  அதை  வேத  வாக்காக  எடுத்துக்கொள்ளும்  கேரக்டர்  டிசைன்  அருமை 


 நாயகன், நாயகி  இருவரை  விட  அதிக  காட்சிகள்  வருவதும், அதிகம்  ஸ்கோர்  செய்வதும்  வளர்ப்புத்தந்தை   வினாயகன்  தான். அசால்ட்டான  நடிப்பு , நம்ம  ஊர்  குணச்சித்திர  நடிகர்  பசுபதி  போல  ஒரு  மாறுபட்ட  பாணியில்  நடித்திருக்கிறார். படம்  முழுக்க  இவரது  ராஜ்ஜியம்  தான் 


மனோஜ்  கே  ஜெயன்  ஒரு  மாறுபட்ட  காமெடி  ரோலில் அசத்தி இருக்கிறார்


140  நிமிடங்கள்  ஓடும்  அளவுக்கு  பட்த்தை  ட்ரிம்  செய்து எடிட்  பண்ணி  இருப்பவர் ஜிதின்  மனோஹர் 

ஏரியல்  வியூஷாட், நைட்  எஃபக்ட்  ஷாட்ஸ்   என ஒளிப்பதிவில் புகுந்து  விளையாடி  இருப்பவர்  சுரேஷ்  ராஜன்


லீலா  எல்  க்ரீஷ் குட்டன், ஜஸ்டின்  வர்கீஸ்  இருவரும்தான்  இசை ., இரண்டு  பாடல்கள்  நல்ல  மெலோடி. பிஜிஎம்  குட் 


மெலோ டிராமாவாகப்போகும்  கதை  க்ரைம்  த்ரில்லர்  டோன் அப்க்கு  மாறிய  பின்  படம்  சூடு  பிடிக்கிறது  



சபாஷ்  டைரக்டர் ( ஷன்வாஸ் கே பவாக்குட்டி )


1  விழி  ஒளி  இழந்தவர்  பெட்டிக்க்டையில்  இருக்கும்போது  திருடர்கள்  வந்தால்  பூனை  மியாவ்  சத்தம்  கொடுத்து  காட்டிக்கொடுப்பது . அதற்கு  கருவாட்டை  லஞ்சமாகக்கொடுத்து  நாயகி  காரியம்  சாதிப்பது குட்  ஒன் 


2  க்ரைம்  த்ரில்லராக  பின் பாதியில்  மாறினாலும்  படம்  முழுக்க  பேசுபொருளாக  அமைந்தது  நாயகி - வளர்ப்புத்தந்தை  பாசப்பிணைப்புதான் 


 ரசித்த  வசனங்கள் 


1 தீராத  நோய்க்கு  சிகிச்சை  எடுப்பதை  விட  மரணிப்பதே  மெல் 


2  உலகம்  முழுக்க  திருடர்கள்  நிறைந்திருக்கிறார்கள், எப்படி  வாழ்க்கையை  நடத்த  வேண்டும்  என்பது  அவர்களுக்கு  நன்றாகத்தெரியும்


3  பணக்காரன்  திருடுனாலும்  சமூகம்  அவனை  சந்தேகப்படாது , ஆனா  ஒரு  ஏழை  திருடலைன்னாலும்  அவனை  சந்தேகப்படும் 


4  சாகப்போறோம்கற பயம் , மட்டும்  இல்லைன்னா நாம  என்ன  வேணா செய்ய முடியும் 


5  காயத்துக்கு  மருந்து  போடுவதை  நான் எதிர்க்கிறேன், ஃபீல்  த  பெயின் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகியின்  வளர்ப்புத்தந்தைக்கு  நாயகன்  பற்றிய உண்மை  தெரிந்ததும்  அதை  ஏன்  நாயகியிட,ம்  சொல்லவில்லை ? அதற்கு  சரியான  காரணம்  சொல்லப்படவில்லை .,  அப்பா  சொன்னா  சரிதான்  என  மகள்  நட்ந்து  கொள்வதை  உயர்வு  நவிற்சியாகக்காட்டவே  அது  யூஸ்  ஆகிறது


2 விழி  ஒளி  இழந்தவர்  காலை முதல்  மாலை  வரை  பெட்டிக்கடையில்  தான்  இருக்கிறார். நாயகனும்  வெட்டாஃபீஸ் தான் ., வீட்டில்  யாரும்  இல்லாத  காலை  10  டூ  மாலை  7  வரை  கள்ளக்காதல்  நிகழ்த்த  வாய்ப்பிருந்தும்  நாயக்ன்  ஏன்  மடத்தனமாக  நைட் 8  மணிக்கு  வீட்டுக்குப்போய்  மாட்டிக்கொள்ள  வேண்டும் ? 


3  வளர்ப்புத்தந்தை  ஒரு  திருடன்.  நாயகனைப்பற்றிய  உண்மையை மகளிடம்  கூறப்போவதாக  நாயகனிடம்  சொல்வது  மடத்தனமானது . ஆல்ரெடி  கூறி  விட்டேன்  என  சொல்லி  இருந்தால்  உயிர்  தப்பி  இருப்பார் 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  அப்படி  ஏதும்  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - குடும்பத்துடன்  பார்க்கத்தக்க  கண்ணியமான  படம்  தான்  நெட்  ஃபிளிக்சில்  காணக்கிடைக்கிறது 

ரேட்டிங்  2.5 / 5 


Thottappan
Thottappan.jpg
Promotional Poster
Directed byShanavas K Bavakutty
Written byP.S. Rafeeque
Francis Noronha
Produced byDevadas Kadancheri
Shailaja Manikandan
Starring
CinematographySuresh Rajan
Edited byJithin Manohar
Music byLeela L. Girish Kuttan
Justin Varghese
Release date
  • 5 July 2019 (location)
Running time
140 minutes
CountryIndia
LanguageMalayalam

Wednesday, March 22, 2023

KUTTAE(2023)ஹிந்தி - சினிமா விமர்சனம் (ஆக்சன் த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ்

 


குத்தே  என்ற  ஹிந்தி  சொல்லுக்கு  நாய்கள்  என்று  அர்த்தம். இயக்குநருக்கு  போலீஸ்  டிபார்ட்மெண்ட்  மீது  என்ன  கோபமோ  தெரியவில்லை , படத்தில்  வரும்  எல்லா  போலீஸ்  கேரக்டர்களும்  கெட்டவர்களாகவே  சித்தரிக்கப்பட்டு  இருக்கிறார்கள் . டைட்டில்  தெள்ளத்தெளிவாக  போலீஸ்  இலாகாவைத்தான்  நையாண்டி  செய்கிறது . வசனங்களை  தடை  செய்யும்  சென்சார்  எப்படி  இது  போன்ற சென்சேசனலான டைட்டிலைக்கண்டு  கொள்ளாமல்  விட்டு  விடுகிறார்களோ  தெரியவில்லை 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  போலீஸ்  இன்ஸ்பெக்டர். அவருக்கு  உதவியாக  போலீஸ்  ஏட்டு  ஒருவர்  இருக்கிறார். இருவரும்  சேர்ந்து  செய்யும்  ஊழல்களில்  இருவரும்  பங்கிட்டு  பணத்தைப்பிரித்துக்கொள்வார்கள் . ஒர்  போதை  மருந்து  கடத்தல்  கேசில்  2 லட்சம்  ரூபாய்  மதிப்புள்ள  சரக்கை இவர்கள்  அபேஸ்  செய்கிறார்கள் , ஆனால்  செக்கிங்கில்  மாட்டி  சஸ்பெண்ட்  ஆகிறார்கள் 


மீண்டும்  உடனடியாக  பணிக்குத்திரும்ப அசிஸ்டெண்ட்  கமிஷனர்  ஆஃப்  போலீஸ்  ஒருவரை  சந்திக்கிறார்கள் . இருவரையும்  உடனடியாக  பணிக்கு  சேர்த்துக்கொள்ள  வைத்தால்   2  கோடி ரூபாய்  லஞ்சம்  தருவதாக  சொல்கிறார்கள் 


அந்த  அசிஸ்டெண்ட்  கமிஷனரின்  முன்னாள்  கொலீக்  ஒருவரை  சந்திக்கிறார். முதலில்  போலீஸ்  ஆஃபீசராக  இருந்து  இப்போது  ஏ டி எம் களில்  பணம்    வைக்கும்  ஆளாக  பணி  புரிகிறார். அவரது  வேனில்  இப்போது  3  கோடி  ரூபாய்  பணம்  இருக்கிறது


அந்தப்பணத்தை  ஆட்டையைப்போட  நாயகன்  திட்டம்  இடுகிறான். 


போதை  மருந்து  கேங்க்  லீடரின்  மகள்  அவரது  கார்  டிரைவரைக்காதலிக்கிறாள் . இருவரும்  ஓடிப்போக  முடிவு  செய்கிறார்கள்  . அதற்கு  பணம்  தேவை . இந்த  வேனில்  இருக்கும்  3  கோடி  ரூபாய் பணம்  இவர்கள்  கவனத்துக்கு  வருகிறது 


 முக்கோணக்காதல்  கதை  மாதிரி இது  முக்கோண  த்ரில்லர்  கதை . ஒரே  ஒரு வேனில்  இருக்கும்  3  கோடி  ரூபாய்  பணத்துக்காக  மூன்று  வெவ்வேறு  குழுக்கள்   அடித்துக்கொள்வதுதான்  கதை , இதில் யார்  வெற்றி  பெறுகிறார்கள் என்பது க்ளைமாக்ஸ் 


நாயகன்  ஆக  அர்ஜூன்  கபூர்  கயமைத்தனம்  கலந்த  வில்லத்தன்ம், இவரை  நாயகன்  என  சொல்வதை  விட்  ஆண்ட்டி  ஹீரோ  என  சொல்லலாம், நெகடிவ்  ஷேடு  நிறைந்த  கதாபாத்திர்ம் , மங்காத்தா  படத்தில்  அஜித்  ஏற்று  நடித்தது  போல  ஒரு  கேரக்டர்


அசிஸ்டெண்ட்  கமிஷனர்  ஆக  தபு . முகத்தி ல்  முதுமை  தெரிகிறது. இவ்ருக்கும்  வில்லித்தனம்  மிக்க  கதாபாத்திரம்  தான் 


 முன்னாள்  போலீஸ்  மற்றும்  இந்நாள்  எ எடி எம்  சர்வீஸ்  ஆளாக  ஆசிஸ்  வித்யார்த்தி , கொஞ்ச  நேரமே  வந்தாலும்  கலகலப்பு 


ட்ரக் டீலராக  நஸ்ருதீன்  ஷா  அதிக  வேலை  இல்லை , அவரது  மகளாக  ராதிகா  மாடன்  அழகிய  முகம் . கச்சிதமான  நடிப்பு 


விஷால்  பரத்வாஜின்  இசையில்  எட்டு  குட்டி  குட்டி பாடல்கள் . 2  பாட்டு  ஹிட்டு 


ஒளிப்பதிவு  ப்ர்ஹத்  அஹமத்  த்விவேதி   இருட்டான  காட்சிகளில்  காமரா  புகுந்து  விளையாடுகிறது 


ஸ்ரீகர் பிரசாத்தின்  எடிட்டிங்கில்   கனகச்சிதமாக 108  நிமிடங்களில்  ட்ரிம் செய்து  விறுவிறுப்பாக  தந்திருக்கிறார்


திரைக்கதை, இயக்கம்  ஆஷ்மான்  பரத்வாஜ். த்ரில்லிங்கான  கதையை  விறுவிறுப்பாக  சொல்லி  இருக்கிறார்’’

நெட்  ஃபிளிக்சில்  வெளியாகி  உள்ளது 


சபாஷ்  டைரக்டர்


1   ஓப்பனிங்  போலீஸ்  ஸ்டேஷன்  லாக்கப்  ரூமில்  தீவிரவாது  லேடி  சொல்லும்  காடு , சிங்கம் ,, நாய் , ஆடு  கதையில்   நாடு ,அரசாங்கம், போலீஸ் , மக்கள்   என  கனெக்ட்  பண்ணிய விதம்  டச்சிங்


2 டைரக்டர்  அல்லது  வசனகர்த்தா எட்டாவது , 12 வது ல  படிச்ச  பல  சின்ன சின்ன  கதைகளை  ஊடால  திரைக்கதைல  சேர்த்துடறார், குறிப்பா  1  தவ்ளை , ஆறு ,  தேள்  கதை  , 


3  நக்சல்  போராளியாக  வரும்  நடிகையின்  நடிப்பும்  அவர்  பேசும்  வசனமும்  நச்  ரகம் 



  ரசித்த  வசனங்கள் 


1  காட்டில்  வசித்தால்  இரண்டே  ஆப்சன்  தான் . வேட்டையாடு  அல்லது  வெட்டையாடப்படுவாய் 


2  ஒரே  சமயத்தில்  இரண்டு  குதிரைகளில்  சவாரி  செய்யனும்னு  நினைச்சா  அது  ஆபத்தில் தான்  முடியும் 


3  சிங்கத்துக்கு  தாகம்  எடுத்தா  அது  விஷத்தை  குடிக்காது 


4  எல்லாரும்  என்னை  ராணி  மாதிரி  ட்ரீட்  பண்றாங்க , அவங்க  கண்ல  ஒரு  பயம்  தெரியுது . எனக்கு  சாதாரண    வாழ்க்கை  வாழ  ஆசை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   காதல் ஜோடி  வழக்கமா  சந்திப்பது போல  ஒரு  மீட்டப்  நடத்தறாங்க ,எதேச்சையா  போலீஸ்  வேனை  ஃபாலோ  பண்றப்ப  அந்தப்பொண்ணு  பைனாகுலர்  எடுத்து  நோட்டம்  பார்க்குது . எப்படி  பைனாகுலர்  அவங்க  கைக்கு  கிடைச்சுது ? அவங்க  புரொஃபஷன்ல் ஸ்மெக்லர்னா  ஓக்கே... 


2  பொதுவா  ஒரு  போலீஸ்காரன்  கிரிமினல்  மாதிரி  யோசிப்பான், ஆனா  போலீஸ்  ஆஃபீசர்  ஜீப்பை  ஒருத்தன்  ஃபாலோ  பண்ணீட்டு  வர்றதையே  அவனால  கண்டு  பிடிக்க  முடியாம  இருக்குமா? 


3  போலீஸ்  ஆஃபீசரான  தபு  3  திருட்டுப்பசங்களோட   கூட்டணி  வெச்சு  ஒரு  கொள்ளை  அடிக்கும்  திட்டம்  போடறப்ப  ஒரு  வாட்சப்  க்ரூப்  அஞ்சு  பெருக்கும்  சேர்த்து  ஆரம்பிக்கறாங்க . 2  போலீஸ்  3  திருடன்க.   சைபர்  க்ரைம்  போலீஸ்க்கு  இது  பின்னாளில்  தெரிஞ்சிடுமே? என்ன  தைரியத்துல  அதுக்கு  ஒத்துக்கறாங்க ? 


4  கோடிக்கணக்கான  சொத்துக்கு  அதிபதியாக  அப்பா  இருக்கும்போது  மகள்  ஜஸ்ட்  3  கோடி  ரூபாய்க்காக  அல்லல்படுவது , துப்பாக்கி  தூக்குவது  எல்லாம்  நம்ப  முடியாத காரணம் 


5  பஞ்சும்  , நெருப்பும்   பக்கத்தில்  இருந்தால்  பற்றிக்கொள்ளும்  என்ற  பழமொழி  தெரியாதா? அந்த   ட்ரக்  மாஃபியாவுக்கு? தன்  மகளுக்கு  கார்  டிரைவராக  ஒரு  இளைஞரை  ஏன்  நியமிக்கனும் ? லேடி  டிரைவர்  அல்லது  வயதான  நப்ரை  நியமிக்கலாமே? 


6  நாயகன் தனி  ஒரு  நபராக  க்ளைமாக்சில்  அந்த  போராளிகள்  கேங் 100  பேரை  வெல்வது  எல்லாம்  வேற  லெவல் சினிமாத்தனம் 

 டல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - இது  16+ வகை  படம்  தான். ஒரு  லிப் லாக்  சீன்  இருக்கிறது 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   விறுவிறுப்பான  ஆனால்  நம்ப  முடியாத  திரைக்கதை  அம்சம்  கொண்ட   ஆக்சன் த்ரில்லர்  படம்,பார்க்கலாம் , ரேட்டிங்  2.25 / 5 





Kuttey
Kuttey film poster.jpg
Theatrical release poster
Directed byAasmaan Bhardwaj
Written by
Produced by
Starring
CinematographyFarhad Ahmed Dehlvi
Edited byA. Sreekar Prasad
Music byVishal Bhardwaj
Production
companies
Distributed byYash Raj Films
Release date
  • 13 January 2023
Running time
108 minutes[1]
CountryIndia
LanguageHindi
Box officeest. ₹4.65 crore[2]