Sunday, October 31, 2010

ஹை வோல்ட்டேஜ் -சினிமா விமர்சனம் 18 +

Crank: High Voltage Wallpapers


சின்னப்பசங்க எல்லாம் படிக்கறாங்களே இரும்புக்கை மாயாவி,இந்த லயன் காமிக்ஸ் முத்து காமிக்ஸ்ல எல்லாம் வருமே அந்த கேரக்டரை உல்டா பண்ணி ஒரு ஆக்‌ஷன் படம் (பப்படம்).நான் எப்படி ஏமாந்தேன்னா போஸ்டர்ல டிரான்ஸ்போர்ட்டர் பாகம் 4 அப்படின்னு போட்டிருந்தது.உள்ளே போன பிறகு தான்  மேட்டர்தெரிஞ்சது. (மேட்டரே இல்லாத படம் என)

படத்தோட கதை என்னன்னா (அதாவது என்ன கதை விட்டிருக்காங்கன்னா)
ஹீரோவின் இதயத்தை ஆபரேஷன் பண்ணி எடுத்து ஒரு செயற்கை இதயத்தை பொருத்துகிறார்கள்.அந்த இதயம் வில்லனின் உடம்பில் பொருத்தனும்.ஆனால் ஹீரோ விடுவாரா?என்ன என்னவோ தகிடு தித்தம் பண்ணி தன் இதயத்தை காப்பாற்றுகிறார்.ஆனால்.... (பெரிய சஸ்பென்ஸ்,டப்பா படத்துக்கு என்ன சஸ்பென்ஸ் வேண்டி கிடகக்கு?)


படத்தில் வரும் காது குத்தல் சீன்கள் (சாதா சீன்)


1.எந்த விதமான ஸ்பெஷல் சக்தியும் இல்லாத ஹீரோ ஒரு டிரான்ஸ்ஃபார்மரை தொட்டு பவர் ஏத்திக்கிறார். (நல்ல வேளை இந்த படத்தை விஜய் இன்னும் பாக்கலை).இதுக்கு நரசிம்மாவுல கேப்டன் விட்ட ரீல் எவ்வளவோ தேவலை.


2.ஹீரோவின் உடலில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி வீக் ஆனதும் அதை சார்ஜ் ஏற்றிக்கொள்ள ஏதாவது மனித உடலுடன் உராய்வு ஏற்றிக்கொள் என சயிண்ட்டிஸ்ட் ஐடியா தர (இவர் அல்லவோ நல்ல சயிண்ட்டிஸ்ட்) ஹீரோ இருப்பதோ ஓப்பன் ரேஸ் மைதானம்,என்ன செய்வார் பாவம்?ஒரு 60 வயது லேடியை (கிழ போல்ட்டை) இடிக்கிறார்.என்ன கண்றாவி கற்பனை சார் இது.


3. மேலும் சார்ஜ் பற்றாததால் (அது எப்படி பத்தும்?) ஹீரோயினிடம் ஓப்பன் கிரவுண்டில் தள்ளி ஜல்சா பண்றார்.இந்த ஒரு சீனுக்காகவே ஆஸ்கார் தரலாம்.இன்னொவேஷன் அண்ட் கிரியேட்டிவ் மைண்ட் (INNOVATION AND CREATIVE MIND) ( இந்தக்காலத்துல நாய்ங்க கூட ஒதுக்குப்புறமா மறைவிடத்துக்கு போயிடுது.


Bai Ling stars as Ria in Lionsgate Films' Crank: High Voltage (2009)

டைரக்டர் ரசனை உணர்வு என்றால் கிலோ என்ன விலை?என கேட்பவர் என்பதற்கு நல்ல உதாரணம் படத்தின் வில்லி.மேலே உள்ள ஸ்டில்.WHAT A BAD TASTE? இதுவரை நான் பார்த்த 2786 படங்களில் இவ்வளவு மொக்கை ஃபிகரை (அந்த வார்த்தைக்கே களங்கம்) நான் பார்த்ததே இல்லை.



இந்த லட்சணத்தில் இவர் ஹீரோவை விரட்டி விரட்டி காதலிக்கிறார்.தல தல என அவர் பின்னாலயே அலைகிறார்,ஹீரோவை காதலிப்பவர் ஹீரோயின் தானே எப்படி வில்லி? என புத்திசாலித்தனமாக கேள்வி கேட்போர்க்கு நான் சொல்வது அவர் படத்தில் வில்லி அல்ல, படத்துக்கு அவர் தான் வில்லி.


படத்தோட ஓப்பனிங்க் சீன் வேனா அசத்தல்.ஹீரோ பார்க்க பார்க்க அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வது நல்ல் கற்பனை.
அதே போல் நீலப்பட நடிகர் நடிகைகள் கூலி (!) உயர்வு கேட்டு போராடும் சீன் செம காமெடி.


டைரக்டரையும் அறியாமல் அமைந்து விட்ட காமெடி வசனங்கள்


1.வெத்து வேட்டுப்பசங்களெல்லாம் அவங்களுக்குள்ள அடிச்சுக்கிட்டா அதை சாக்கா வெச்சு நீ தாதா ஆகிடறதா?


2.இந்த செவல கிட்ட வெச்சுக்கிட்டா செவுலு கிழிஞ்சிடும் (இதுக்கு சிரஞ்சீவி படமே பெட்டர்)


3. நீ வேணாம்,எனக்கு பிடிக்கலை,ஐ எஸ் ஐ முத்திரை குத்துன ஆம்பளைன்னா அது அவர்தான்.


4.போலீஸ் - என்ன குட்டி, பெயிலுக்கு அப்ளை பண்ணி இருக்கியா?


கைதி - பின்னே,உன் கூட குடித்தனம் பண்ணிட்டு இங்கேயே லாக்கப்ல்யே இருப்பேன்னு நினைச்சியா?


5.ஏய், கருத்த குட்டி,நீ சிறுத்த் குட்டி மாதிரி இருக்கே..




6.எல்லா வில்லன்களும் சொல்ற அதே டயலாக் தான் அவன் எனக்கு உயிரோட வேணும்..


7. போலீஸ் - மேடம் நடந்தது என்ன? விபரமா சொல்லுங்க?


லேடி - நான் 60 வயசானவ் அப்படினு கூட பாக்காம அவன் என்னை உரசுனான்.


போலீஸ் - ஏம்மா,லைவ் ரிலே ஓடிட்டு இருக்கு,சென்சார் பண்றதுக்கு எல்லாம் நேரம் இல்ல ,அடக்கி வாசி.


லேடி- யோவ்,நீதான்யா நடந்ததை சொல்ல சொன்னே?


போலீஸ் - சரி சரி ஆள் பாக்க எப்படி இருந்தான்?

லேடி - ஆள் வாட்டசாட்டமா, கட்டுமஸ்தா ஜம்முனு தான் இருந்தான்.


போலீஸ் - ஏம்மா, நிஜமா இது கம்ப்ளைண்ட்தானா?


லாஜிக் மீறல்கள் பல இடங்களில் குறிப்பாக 2 கிலோ மீட்டர் தூரம் வேகமாக ஓடி வரும் ஹீரோ வியர்வை துளி கொஞ்சம் கூட இல்லாமல் நிற்பது அநியாயம்.

ஹீரோ தன் பெயரை கெடுப்பதற்காகவே இந்தப்படத்தில் நடித்தார் போல.


படத்தின் விமர்சனம் எங்கே என கேட்பவர்களுக்கு இந்தப்ப்படத்துக்கு விமர்சனம் வேற எழுதனுமா? ஏதோ முடிஞ்ச வரை மொக்க போட்டாச்சு.


கீழே உள்ள படத்தில் தோன்றுவது  ஹீரோயின்.அருகில் இருப்பவர் ஹீரோ அல்ல,அவரது காதலன்.ஹீரோ இறந்து விட்டதாக நினைத்து அவர் இறந்த 37 நாட்களில் காதலிக்கத்தொடங்கிய உத்தம பத்தினி,இறந்து விட்டதாக நினைத்த கணவன் வீடு திரும்பியதும் இந்த பத்தினி என்ன செய்வது என தடுமாறும்போது இந்த காட்சி .20 வருடங்களுக்கு முன் விஜயகாந்த்,ரகுமான்,சுதா சந்திரன் நடித்த கதை இதே சீன் வரும். புதுசா நம்ம ஆளுங்க எங்கே யோசிக்கறாங்க?




டிஸ்கி 1 - 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 2 வது பட ஸ்டில்லை பார்க்கவேண்டாம்.அதே போல் கலாச்சாரக்காவலர்களும் டிட்டோ.


டிஸ்கி 2 - ஆங்கிலப்பட விமர்சனத்தில் எப்படி வசனத்தை இவ்வளவு தெளிவாக மொழி பெயர்க்க முடியும்? என கேட்பவர்களுக்கு இந்தப்படமே தமிழில்தான் டப் ஆகி வந்தது.



Amy Smart stars as Eve and Corey Haim stars as Randy in Lionsgate Films' Crank: High Voltage (2009)