Monday, July 26, 2010

சுஹாசினியா இப்படி நடித்தார்?திரை உலகம் அதிர்ச்சி


 http://www.manoranjanmovies.com/images/suhasini_laura_2.jpg


கடைசியாக உயிர் படத்தில் அண்ணி கேரக்டரில் நடித்த சங்கீதா சர்ச்சையில்
சிக்கினார்,சர்ச்சைக்கு காரணம் கணவனின் தம்பியை அடைய கணவனையே போட்டுத்தள்ளும் கேரக்டர்.அந்தப்படம் வந்த போது அதிர்ச்சி அலைகள் எழுந்தன.கண்டனங்கள் விழுந்தன.மாதர்சங்கங்கள் பொங்கின.
இப்போது அதே மாதிரி சர்ச்சையில் சிக்கியுள்ளவர் நடிகை சுகாசினி.இவர் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகையாக பெயர் எடுத்தவர்.கே.பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் படத்தில் நர்ஸ் கேரக்டரில்,சிந்துபைரவியில் பாடகியாக வாழ்ந்து காட்டியவர்.ஜெயா டி வி யில் ஹாசினி பேசும் படம் என நல்ல விமர்சனகர்த்தாவாகவும் பன்முகம் காட்டியவர்.இந்தியாவின் சிறந்த டைரக்டர் மணிரத்னத்தின் மனைவி.ராவணன் படத்தின் வசனகர்த்தா.

இவ்வளவு திறமைசாலி இப்போது  தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்படும் “உள்ளமெல்லாம் தள்ளாடுதே” எனும் படத்தில் சர்ச்சைக்குரிய
கேரக்டரில் நடிக்கிறார்.நந்திதாதாஸ் ஃபயர் படத்தில் நடித்தபோது எழுந்த
சர்ச்சை இப்போது கோடம்பாக்கத்தை ஆட்கொண்டுள்ளது.

இந்த வார குங்குமம் இதழ் கூட தன் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது.அப்படி என்ன கேரக்டர்?
தன் மகளின் காதலனை ஆசைப்படும் கேரக்டராம்.
அட ராவணா!



Friday, July 23, 2010

SALT - சினிமா விமர்சனம்

சால்ட்-அ”சால்ட்”டா ஒரு அதிரடி-ஹாலிவுட் திரை விமர்சனம்-  சால்ட்-உலகின் சிறந்த உதட்டழகி என்று பெயரெடுத்த SIN பட புகழ் ஏஞ்ஜலினாஜூலி நடித்த சுத்த சைவப்படம்.அவ்ர் நடித்த படங்களிலேயே லோகட்,லோஹிப் என ஒரு சின்ன சீன் கூட
இல்லாமல் நடித்த படமும் இதுதான்.



உயிரே படத்தின் ஹீரோயின் ம்ணீஷாகொய்ராலாவின் கேரக்டர்மாதிரிதான் ஏஞ்ஜலினாஜூலி யின் கேரக்டரும்.அமெரிக்காவில் வேலை செய்யும் ரஷ்ய உளவாளி.காதல் கணவனை பிணைக்கைதியாக்கி ,மிரட்டி அமெரிக்க அதிபரை கொல்லப்பணிக்கப்படுகிறாள்.ஒரு கட்டத்தில் கணவனை அவர்கள் கொன்று விட அவள் எடுக்கும் முடிவுதான் படம்.

படத்தின் ஓப்பனிங் சீனே பரபரப்பாக குருதிப்புனல் கமல்-நாசர் சந்திப்பு மாதிரி தொடங்குகிறது.தீவிரவாதி-சால்ட் விசாரணைக்காட்சிகள் செம டெம்ப்போவை ஏற்றுகிறது.விசாரனை  செய்யப்படும் குற்றவாளி சால்ட்டின் மேல் பழி சுமத்த திடீர் என அந்த ஆஃபீசே அவருக்கு எதிராக மாறுவது நல்ல டர்னிங்க் பாய்ண்ட்.அப்போ ஓட ஆரம்பிக்கும் ஜூலி படம் பூரா வெற்றிவிழா கமல் மாதிரி ஓடிக்கொண்டே இருக்கிறார்.

தப்பிக்கு ம் ஒரு சீனில் கண்காணிப்புக்கேமராவை செயலிழக்க வைக்க அவர் தன் உள்ளாடையை அகற்றி செய்யும் சாகசம் ரொம்ப நாசூக்கு+நளினம்.
என்ன தான் அவர் சாகசங்கள் செய்தாலும் சிரிப்பழகி சினேகாவை எப்படி நம்மால் வைஜயந்தி ஐ.பி.எஸ் ஆக பார்ப்பது சிரமமாக இருக்குமோ அப்படி ,மனசு கேட்காமல்தான் இருக்கு.

சேசிங் காட்சிகள் உயிரோட்டமாக இருந்தாலும் ஏஞ்ஜலினாஜூலியிடம் துடிப்போ,துள்ளலோ இல்லை.வயது மேக்கப்பை மீறி முதிர்ச்சியை காட்டுகிறது.நடு ரோட்டில் அவர் 50 போலீஸ்களூக்கு  டேக்கா கொடுக்கும் காட்சிகள் நம்பும்படி இல்லை.ஒரு ஜாக்கிசானோ,ஒரு ஜீன் ஹிலாடு வேண்டம்மோ செய்யவேண்டிய ஆக்‌ஷன் காட்சிகளை இவர்  சர்வசாதாரணமாக செய்வது குருவி தலையில் பனைமரத்தையே வைத்தது போல் ஓவெர் லோடு. மாடியில் தொங்கிக்கொண்டே ஒரு வீட்டு ஜன்னலை அவர் தட்டி சைகையால் ஜன்னல் கதவை திறக்கும்படி சொல்ல அந்தக்குழந்தை அவருக்கு டாட்டா காட்டுவது புன்ன்கையை வரவைக்கிறது.


ரயிலிலிருந்து தப்பிக்கும் சீன் செம விறு விறு ப்பு.கைவிலங்குடன் காரில் இருந்து தப்பிப்பது காதில் பூகூடையை வைப்பது போல் உள்ளது.
பிரசிடெண்ட்டை டார்கெட் வைத்து அவர் துரத்துவதும்,போலீஸ் காவலை மீறி கச்சிதமாக அவர் வேலையை முடிப்பது வரை பரபர ஆக்‌ஷன் காட்சிகள்.
ஆண் வேடத்தில் வரும் சீன் அருமை.அவ்ர் மாஸ்க்கை கழட்டும்போதுதான் நமக்கே அடையாளம் தெரிகிறது.”நான் சொல்றபடி நீங்க செய்யலைனா நீங்க பார்க்கற கடைசி ஆள் நானாகத்தான் இருக்கும்” என்று ஜூலி வசனம் பேசும்போது உயிரே படத்தில் மறக்கமுடியாத வசனமான “பார்த்துக்கோ நீ பாஅர்க்கற கடைசி சூர்யோதயம் இதுவாத்தான் இருக்கும்” ஞாபகம் வருகிறது.
க்ளைமாக்சில் நிராயுதபாணியாக ஜூலி,காயம் பட்டு போலீஸின் பார்வையில் நல்லவனாக காட்சி அளிக்கும் வில்லன்.என்ன நடக்கபோகிறதோ என எதிர்பார்க்கும்போது ஒரு ஜம்ப் பண்ணி கை விலங்கு சங்கிலியால் வில்லனின் கழுத்தை இறுக்கி அந்தரங்கத்தில் தொங்கும்போது தியேட்டரே அதிர்கிறது கை தட்டலால். நடப்புக்காட்சி வரும்போதே அதனோடே பயணிக்கும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் கவிதை,பிண்ணனி இசை ஒரு ஆக்‌ஷன் படத்திற்கு எவ்வ்ளவு முக்கியம் என உணர்ந்து டைரக்டர் பணீ ஆற்றி இருக்கிறார்.

படத்தில் கம்யூனிச வசனங்கள்,தீவிரவாதம்,நாட்டின் உளவாளிகள் பற்றிய சர்ச்சைக்குரிய வசனங்கள் உண்டு என்பதால் த்மிழில் பார்ப்பது சாலச்சிறந்தது.
காமெடி மருந்துக்கு கூட இல்லை.மூச்சு விடக்கூட நேரம் இல்லாமல் கேரக்டர்கள் ஓடிக்கொண்டு இருக்கும்போது காதல் ,காமெடி எல்லாம் வைத்தால் படத்தின் டெம்ப்போ குறைந்து விடும் என டைரெக்டர்
நினைத்திருக்கலாம்.மிகச்சரியான முடிவு


பிரமாதமான ஆக்‌ஷன் படம் எனக்கொண்டாட முடியாவிட்டாலும் பார்க்க போரடிக்காத ஆக்‌ஷன் படம் என சொல்லலாம்..

தில்லாலங்கடி-சினிமா விமர்சனம்




-ஜெயம்,எம்.குமரன் சன் ஆஃப் மஹாலட்சுமி,உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் எனும் ரீமேக் வரிசையில் டைரக்டர் ராஜாவின் புதிய காதல் கலாட்டா கதைதான் தில்லாலங்கடி.
எல்லாத்துலயும் பர்ஃபெக்‌ஷன் பார்க்கற ஆளுக்கும் ,எதுலயுமே ப்ர்ஃபெக்‌ஷன் இல்லாத ஆளுக்கும் காதல் வந்தால் எப்படி இருக்கும் என்ற ஒன் லைன் தான் கதை.அதை முடிந்தவரை கலாட்டா,காமெடி .கடி எல்லாம் கலந்து கொஞ்சம் காதில் பூவையும் சுற்றியும் சொல்லி இருக்கிறார்.



படத்தோட ஓபெனிங் சீன்லயே தமனாவை யோகா செய்வதை க்ளோசப்பில் காட்டும்போதே நமக்கு புரிந்து விடுகிறது இயக்குனரின் எண்ணம்.தியேட்டரில் என்ன ஒரு விசில்.தமிழ் ரசிகர்களூக்கு யோகா மேல் இவ்வளவு ஆர்வமா?



சத்யன் &கோவிற்கு காதல் கை கூட ஜெயம் ரவியும்,தமனாவும் உதவும் காமெடி கலாட்டா ரசிக்க வைக்கிறது என்றாலும் அதில் அநியாயத்துக்கு நாடோடிகள் வாசம்.


காத்லுக்காக 14 தடவை கையை வெடிக்கிட்டவன் நான் என்ற சத்யனின் அறிமுகம் டாப்.எனக்கு கல்யானம் நடக்குமா?கருமாதி நடக்குமா?என சந்தேகமாக அவர் கேட்கும்போது எது நடந்தாலும் நான் பார்த்துக்கறேன்,ரெண்டுக்கும் எனக்கு மந்திரம் தெரியும் என புரோகிதர் சொல்வது வெடிச்சிரிப்பு.



தமன்னாவுக்கு காமெடி நடிப்பு,ஆச்சரியம்,வெட்கம் என எல்லா ஆக்டிங்கும்
வந்தாலும் சோக நடிப்பில் அவர் இன்னும் ஆனந்த தாண்டவம் மதுமிதா பாதிப்பிலிருந்து வெளிவரவில்லை.



ஒவ்வொரு சந்திப்பிலும் ரவி தம்னாவிடம் தயவு செஞ்சு என்னை லவ் பண்றேன்னு உடனே சொல்லிடாதே,எனக்கு கிக்கே போயிடும்,நல்லா அலைய வை என சொல்லி த்லை சுற்ற விடுவது நல்ல கற்பனை.


ரவி பேராண்மை பாதிப்பிலிருந்து அநாசயமாக வெளி வந்து அசால்ட்டாக நடித்திருக்கிறார்,அவ்ரது கேரக்டர் சந்தோஷ்சுப்ரமனியம் ஜெனீலியா
கேரக்டரையும், உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் சந்தோஷ் கேரக்டரையும் மிக்ஸ் பண்ணியது மாதிரி வடிவமைத்தது டைரக்டரின் சாமார்த்தியம்.



ஓப்ப்னிங்கில் அவர் என்ன்னோட ஒரு முகத்தைத்தானே பார்த்திருக்கே,இன்னொரு முகத்தை காட்டற மாதிரி வெச்சுக்காதே  என பஞ்ச் டயலாக் சொல்லி விட்டு பின் அவரே ஏன்னா எனக்கு ஒரே ஒரு முகம்தான் என நக்கலடிப்பது நல்ல கிண்டல்.



ஜெயம் ரவியை வெறுப்பேற்றுவதற்காக தமனா வடிவேலுவை லவ் பண்ணுவதாக டூப் விடுவதும் ,அவர் கூட பைக்கில் ரைடு போவதும் செம அப்ளாஷ் வாங்கும்சீன்.


வடிவேலு-தமனா பிட் டூயட்டுக்கு ரசிகர்களிடம் அப்படி ஒரு ரெஸ்பாண்ஸ்.


இடைவேளை வரை ஜாலியாகப்போகும் கதையில் ஷாம் வந்ததும் ஒரு தேக்கம் வருகிறது.படத்தில் ட்விஸ்ட் வேண்டும் என டைரக்டர் நினைத்து வைத்த ஷாம் கேரக்டர் எடுபடவில்லை.


திடீர் என கதை ட்ராக் மாறுகிறது.ஜெண்டில்மேன் அர்ஜூன் மாதிரி இருப்பவர்களிடம் இருந்து எடுத்து இல்லாதவர்களிடம் கொடுக்கும் ராபின்ஹூட் ஆகிறார் ஜெயம் ரவி.


பிறகு அவர் கஜினி மாதிரி பழசெல்லாம் மறப்பதாக நடிப்பதும் தமனா நம்புவதும் ,ம்ஹூம் எடுபடவில்லை.


இடைவேளை வரை வடிவேலு காமெடி என்றால் அதற்குப்பிறகு சந்தானம் காமெடி.பல இடங்களில் நாடகத்தன்மை வர ஜெயம் ரவியின் கேரக்டர் சரியாக வடிவமைக்கப்படாததே காரணம்.



மன்சூரலிகான் போலீஸாக வந்து காமெடி பண்றார்.இடுப்புக்கு கீழே பைக்கில் அடி பட வைத்த வடிவேலுவிடம் என்னை குடும்பம் நடத்த விடாம பண்ணிட்டு நீ மட்டும் நல்லா வாழ விட்றுவேனா பழிக்குப்பழி என அவரும் வடிவேலுவை அதே பைக் ஏற்றி அதே இடத்தை டேமேஜ் பண்ணுவது வயிறு குலுங்கச்சிரிக்க வைக்கும் காமெடி.

சொல்பேச்சு கேட்காத சுந்தரியே சரியான ஹிட் பாட்டு.ஆனால் அது அப்படியே தூள் படத்தில் வரும் பாட்டின் நகல்.ஆர்ட் டைரக்‌ஷன்,டான்ஸ் மூவ்மெண்ட் என அப்படியே காப்பி அடித்திருக்க வேணுமா?



உனக்கு ஏதோ சொல்லனும் போல் இருக்கா?எனக்கு ஏதோ கேட்கனும் போல் இருக்கு  , மறதி சந்தோசமான விஷயம் ,அவங்கவங்க ஆசையை அவங்கவங்களே நிறைவேத்திகறதுல என்ன கிக் இருக்கு,அடுத்தவங்க ஆசையை நிறைவேத்தறதுலதான் கிக் என்பது போன்ற மெச்சூரிட்டியான வசனங்களும் உண்டு.



ஹீரோ வரும் பல சீன்களில் அன்னியன் பட ஹம்மிங் தீம்மை சுட்டு போட்டிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.


பாடல்களில் 3 தேறுகிறது.படம் ஃபுல்லா மலேசியாவில் எடுத்திருப்பதால் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை.



நல்ல காதல் கதையாக ஜாலியாகப்போன கதையில் தேவை இல்லாமல் ஆக்‌ஷனை நுழைத்து தானும் குழம்பி  ,ரசிகனையும் குழப்பி விட்டார் டைரக்டர்.


பிரபு கெஸ்ட் ரோல்.மகனுடன் தண்ணி அடிக்கும் காட்சி அருமை.ஆனால் காதல்ன் பட நினைவு வருதே.


அதிகமாக அறிமுகமில்லா குழந்தைக்காக ஹீரோ 20 லட்சம் செலவு செய்வது நம்பும்படி இல்லை.என் பேரை மறுபடி மாத்திக்கறேன் என வடிவேல்

சொல்லும்போதும்,பிறந்தமேனியா நோய் என சந்தானம் சொல்லும்போதும் தியேட்டரில் வெடிச்சிரிப்பு.



இனி தான் கேம் ஸ்டார்ட் ஆகுது -இந்த டயலாக்கை படத்தில் ஆளாளுக்கு சொல்கிறார்கள்.ஏன் என்று தெரியவில்லை.(தியேட்டர் ஆடியன்ஸ் கமெண்ட்-படத்தை ஸ்டார்ட் பண்ணுங்கப்பா.)



வடிவேல்,சந்தானம் இவர்களோடு இணைந்து ஜெயம் ரவியின் காமெடி ,த்மனாவின் இளமை படத்தின் பலம்.ஷாம் கேரக்டர்,ஆக்‌ஷன் காட்சிகள்,நாடகத்தனமான் காட்சி அமைப்புகள் படத்தின் பலவீனம்.



பி,சி செண்ட்டர்களில் 50 நாள் ஓடும்.


Thursday, July 22, 2010

அரசியலில் குதிக்க முடிவெடுத்த நடிகை ‘கற்பு” காஞ்சனாவுடன் ஒரு பேட்டி.



அரசியலில் குதிக்க முடிவெடுத்த நடிகை ‘கற்பு” காஞ்சனாவுடன் ஒரு பேட்டி. 



நிருபர் : வணக்கம் மேடம். பேட்டிக்குள்ளே போலாமா? 
]
நடிகை : ஓ தாராளமா? என்னமோ வேட்டிக்குள்ளே போலாமா?-ங்கற மாதிரி ஏன் தயங்கித் தயங்கி கேட்கறீங்க. ரிலாக்ஸா கேளுங்க .. 

நிருபர் : மேடம் முத கேள்வி உங்க பெயர்க்கு முன்னால ஒரு அடை மொழி இருக்கே. அதுக்கு என்ன காரணம்? சினி‡பீல்டுலயே  நீங்க மட்டும் தான் கற்புள்ள நடிகையா? 

நடிகை : அதெல்லாமில்லைங்க. நல்ல கலரா, சிவப்பா இருக்கற நடிகைகளே வரிசையா ஹிட் ஆகிட்டே இருந்த நேரம், ஒரு ட்ரெண்ட் செட்டிங்கா கறுப்பா இருக்கற நான் என்ட்டர் ஆனேன். ஹிட் ஆகிட்டேன். அந்த நன்றியை மறக்காம இருக்கனும்கறதுக்காக ‘கறுப்பு” காஞ்சனா-னு டைட்டில்ல போடச் சொன்னேன். அது அப்படியே மருவி ‘கற்பு” காஞ்சனா-னு ஆகிடுச்சு. 
நிருபர் : ஓ.கே. மேடம். ஒரு பேட்டில நீங்க ஒரு வகைல மன்னர் பரம்பரைல வந்ததா சொல்லியிருந்தீங்க. அது எப்படி? 

நடிகை : மன்னர்கள்னா புறமுதுகு காட்டி ஓடறது வழக்கம் தானே, அதே மாதிரி நானும் என்னால முடிஞ்சவரை புறமுதுகு அக முதுகு எல்லாத்தையும் காட்டி நடிச்சேன் என் படங்களைப் பார்த்த ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆராய்ஞ்சு (எதை ஆராய்ஞ்சுனு கேட்காதீங்க) நான் மன்னர் பரம்பரையாத்தான் இருக்கும்னு யூகமா சொன்னார். அவர் என்னிடம் வழிஞ்சதை நான் நிரூபரிடம் வழிமொழிஞ்சேன். 

நிருபர் : மேடம்! முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் பற்றி நினைக்கும் போதெல்லாம் ரசிகர்களுக்கு உங்க ஞாபகம் வந்துடறதா சொன்னீங்களாமே? அவருக்கும், உங்களுக்கும் ஏணி வெச்சாக்கூட எட்டாதே? அவரு கல்பாக்கம், நீங்க கோடம்பாக்கம், எப்படி லிங்க்-னு சொல்லுங்க.
  
நடிகை : நீங்க நினைக்கற மாதிரி இல்லை, அப்துல்கலாம்னா ‘ராக்கெட்” விட்டது நினைவு வரும். நான்-னா விதவிதமா அதை  வெச்சு சொன்னேன்.  

நிருபர் : அடடே நீங்க போட்டுட்டு வர்ற ஜாக்கெட் டிசைனைப் பார்க்க குடும்பப் பெண்களெல்லாம் காத்திட்டு இருப்பாங்களாமே? 

நடிகை : விதவிதமான டிசைன்ல நான் ஜாக்கெட் போடறதால அது எப்படி இருக்கும்னு  பார்க்க பெண் ரசிகர்களும், ஜாக்கெட் போடாம நான் நடிக்கறப்ப ஆண் ரசிகர்களும் Q ல நின்னு ரசிக்கறாங்க.    

நிருபர் : மேடம் சினி‡பீல்டுல கொடி கட்டி பறந்த நீங்க திடீர்னு சின்னத் திரைக்கு வந்துட்டீங்களே ஏன்? 
நடிகை : சினிமா தான் எனக்க சோறு போட்டுது அதுல எந்த மாற்றமும் இல்லை. அதை மறுக்கவும் இல்லை. ஆனா டி.வி எனக்கு பிரியாணியே போட்டுது. அதான் டி.விக்கு ஜம்ப் பண்ணிட்டேன்.  

நிருபர் : புரியலையே இந்த சோறு- பிரியாணி மேட்டர். 

நடிகை : அதாவது சினிமால நடிச்சா ஒரு படத்துக்கு 60 நாள் கால்ஷீப் வாங்கி நைட், பகல்-னு ட்ரில் எடுத்து 30 லட்சம் தர மூக்கால அழுவாங்க, செக் தருவாங்க, பவுன்ஸ் ஆகும். ஆனா டி.வி.ல அப்படி இல்லை கைல காசு வாயில தோசை. காலைல 9.00 மணிக்கு நடிக்கப் போவேன் மாலை 6 மணிக்கு கிளம்பிடுவேன். அப்பவே ரூ 2 லட்சம் டவுன் பேமண்ட்.   

நிருபர் : ஓஹோ, இதுல இப்படி ஒரு தொழில் ரகசியம் இருக்கா? ஓ.கே மேடம், உங்க எழில் ரகசியம் என்ன?-னு சொல்லுங்க. 

நடிகை : நான் என் வீட்டுக்காரரோட சண்டையே போடமாட்டேன் அதனால எப்பவும் சந்தோஷமா இருப்பேன். 

நிருபர் : மேடம் உங்க ஹவுஸ் ஓனரைப் பற்றி இப்ப எதுக்குப் பேச்சு? 

நடிகை : ஹய்யோ வீட்டுக்காரர்னா ஹஸ்பெண்ட்.

நிருபர் : ஓஹோ, அதான் மேரேஜ் ஆன ஆளுங்க எல்லாம் பெண்டு கழண்டு முதுகு பெண்ட் ஆகி இருக்காங்களா? மேடம். என்னால நம்பவே முடியலை. புருஷன்- பெண்டாட்டின்னா சண்டை வரத்தானே செய்யும்? ஏப்படி வராது னு சொல்றீங்க?

நடிகை : புருஷன் கூட சண்டை ஸ்டார்ட் ஆச்சுன்னா, நான் காரை ஸ்டார்ட் பண்ணி கோர்ட்டுக்கு போய் டைவர்ஸ் வாங்கிடுவேன். ஜாக்கெட்டை மாத்தற மாதிரி புருஷனை மாத்திடுவேன் ஆயிரம் புருஷனை மாற்றிய அபூர்வ சிகாமணி- னு பெயர் எடுக்க ஆசை. 
நிருபர் : ஓஹோ, ஹாலிவுட் நடிகைக்கு சவால் விடும் விதத்தில் இருப்பேன்னு நீங்க சொன்னீங்களே அது இந்த விஷயத்துல தானா? நாங்க கூட நடிப்புல வெரைட்டி காண்பிப்பீங்கனு பார்த்தா நீங்க இதுல வெரைட்டி காட்;டறீங்களா?

நிருபர் : மேடம் ஒரு முன்னணி ஹீரோ கூட லவ் இருந்ததா கிசுகிசு வந்தது. 

நடிகை : இது ஒரு பெரிய மேட்டரா? மார்க்கெட் அவுட் ஆன ஹீரோவையா லவ் பண்ண முடியும்? லீடிங் ஹீரோவை லவ் பண்ணுனா தான் அவர் நடிக்கற படத்துல எல்லாம் என்னையே ஹீரோயின் ஆக்குவாரு.
நிருபர் : அந்த ஹீரோ கூடவே 26 படம் பண்ணி இருக்கீங்க. இதுக்கு உங்க 2 பேருக்கும் பாடி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிட்டதாலா?

நடிகை : ஆமா பிஸிக்கலா நாங்க சேர்ந்துட்டோம். கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சு. இப்போ என் உடம்புல பயாலாஜிக்கல் (biological) மாற்றங்கள்.  

நிருபர் : ஓ.கே மேடம், ஹீரோவை லவ் பண்ணுன நீங்க திடீர்-னு ஒரு டைரக்டரை மேரேஜ் பண்ணிட்டீங்களே. 

நடிகை : அந்த ஹீரோ ஜீரோ ஆகிட்டாரு நான் டைரக்டர் ஆ‡ப் த டைரக்டர்-னு பேரெடுக்க ஆசைப்பட்டேன். 

நிருபர் : ஓ.கே. மேடம் படிப்பறிவே இல்லாத நீங்க உங்க பேருக்குப் பின்னால BA.BL.-னு பட்டம் போட்டுக்கிட்டீங்களே? எப்படி? 

நடிகை : சாதாரண வக்கீலே B.L. பட்டம் போடறப்ப ஒரு ஜட்ஜ் B.AB.L னு பட்டம் போடறது 
தப்பா?

நிருபர் : மேடம் மாசமா இருக்கறது நீங்க. ஆனா எனக்கு தலை சுத்துது. படத்துலதான் நீங்க பேசற வசனங்கள் புரியறதில்லை, பேட்டிலயுமா?

நடிகை : டி.வி. டான்ஸ் புரோக்ராம்ல ஜட்ஜா வர்றேன். அதைச் சொன்னேன்.  

நிருபர் : ஓஹோ தமிழ்நாட்ல இருக்கற பல ஜட்ஜுங்க ரிசைன் பண்ணுனதுக்கு காரணமே நீங்க ஜட்ஜ் ஆனது தானா? சுப்ரீம் கோர்ட், ஹைகோர்ட்-னு ஜட்ஜ் பஞ்சம் உருவாகிடுச்சே.. சரி அது போகட்டும,; மேடம். திருச்சில உங்க ரசிகர்கள் உங்களுக்கு சுடுகாடு கட்டி இருக்கறதா கேள்விப்பட்டமே அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க . 

நடிகை : எனக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் பண்றதா ரசிகர்கள் சொன்னாங்க. ஆனா அற நிலைத்துறைல விடலை. அவங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கனும் என்பதற்காக ஆப்போசிட்டா சுடுகாடு கட்டிட்டாங்க.  

நிருபர் : அந்த சுடுகாடு கட்டுனதுல யாருக்கு என்ன லாபம்? 

நடிகை : பொதுவா சினிமா ரசிகர்களுக்கு நடிகையை நேர்ல பார்க்கனும் தொட்டு பேசனும்-னு நினைப்பாங்க. சில கணவர்கள் மனைவி கூட படுத்திருக்கறப்ப தங்களோட அபிமான நடிகையை மனசுக்குள்ள நினைச்சுக்கு வாங்க-னு உளவியல் நிபுணர்கள் கூட சொல்றாங்க, என் பேர்ல இயங்கி வர்ற அந்த சுடு காட்ல ஒரு மேடை அமைச்சிருக்கோம். என் ரசிகர்கள் அங்கே வந்து உண்டியல்ல காணிக்கை போட்டுட்டு கல் மேடைல கொஞ்ச நேரம் படுத்திருந்துட்டு போயிடுவாங்க. 

நிருபர் : O.K மேடம் கோயில்ல செருப்புக் காலோட கால் மேல கால் போட்டு உட்கார்ந்து பிரச்சனைல மாட்டிக்கிட்டீங்களாமே? 

நடிகை : அட நீங்க வேற, என் கணவருக்கு ஊயடட பண்ணுனேன் நாட் ரீச்சபிள்னு வந்தது. அதனா ல  CALL  மேல CALL போட்டேன். அதை பத்திரிக்கைங்க திரிச்சு கால் மேல கால் போட்டு உட்கார்ந்ததா எழுதிட்டாங்க.
நிருபர் : கருமாதிக்கு முன்னாலயே படையல் போட்ரனும்-னு நீங்க ஒரு கருத்து சொன்னீங்களாமே? ஏன்? 

நடிகை : கல்யாணத்துக்கு முன்னாலயே உறவு வெச்சுக்கலாம்-னு நான் சொன்ன கருத்து பயங்கர பிரச்சனை ஆகிடுச்சு. அதை டைவர்ட் பண்றக்காக கருமாதி மேட்டரை சொன்னேன். 

நிருபர் : உங்க மேல 1730 வழக்கு போட்டாங்களாமே?

நடிகை : அதை ஏன் கேட்கறீங்க? ஆல் இண்டியா டூர் போன மாதிரி கோர்ட் கோர்ட்டா அலைஞ்சு என் சொத்துல பாதி கரைஞ்சிடுச்சு. நான் சினிமா ஆர்ட்டிஸ்டா? கோர்ட்டிஸ்ட்டா?-னு டவுட்டே வந்திடுச்சு. 

நிருபர் : எப்படியோ உங்களுக்கு சாதகமா தீர்ப்பு வந்துடுச்சு, இப்போ உங்க கருத்துல ஏதாவது மாற்றம் உண்டா?

நடிகை : இன்னும் கொஞ்சம் அட்வான்ஸா போய் பெண்கள் நிச்சயதார்த்தத்திற்கு முன்னமே உறவு கொள்ளலாம்-னு சொல்லப் போறேன்
.
நிருபர் : ஹீம். ஜென்மக்கூறு பேட்டா செருப்பால அடிச்சாலும் திருந்தாதுங்கறது சரியா இருக்கு. நல்ல வேளை பெண்கள் வயதுக்கு வரும் முன்பே உறவு கொள்ளலாம்-னு சொல்லாம விட்டீங்களே? OK  மேடம், திடீர்னு அரசியல்ல இறங்கி இருக்கீங்களே ஏன்?

நடிகை : இதெல்லாம் ஒரு கேள்வியா? மார்க்கெட் போன நடிகை தொழில் அதிபரை கல்யாணம் பண்றதும், பரபரப்பா நியூஸ்ல வரனும்னு நினைக்கற நடிகை பாலிடிக்ஸ்ல குதிக்கறதும் சகஜம் தானே?

நிருபர் : குறிப்பா இந்தக் கட்சில இணைய எதாவது காரணம் இருக்கா?

நடிகை :  ஆளுங்கட்சியா இருக்கே அந்த ஒரு காரணம் போதாதா?

நிருபர் : மக்களுக்கு சேவை செய்யத்தான் அரசியலுக்கு வந்தீங்களா?

நடிகை : வீட்ல புருஷனுக்கு இதுவரை ஒரு லெமன் சேவை கூட செஞ்சதில்லை சரி மக்களுக்காவது செய்யலாம்னு பார்த்தேன். 

நிருபர் : சரி உங்களால அரசியல்ல ஜொலிக்க முடியுமா?

நடிகை : சினி ஸ்டார் ஜொலிக்காம இருக்கமா? மேக்கப்புக்கே டெய்லி 5 மணி நேரம் செலவு பண்றேன். 

நிருபர் : கட்சில பதவி வேணும்-னு கேப்பீங்களா? மேலவைக்கு போட்டியிடுவீங்களா?

நடிகை : CM. போஸ்ட் லட்சியம,; MLC. சீட் நிச்சயம்.

நிருபர் : உங்களை அந்த கட்சி தாங்காதுனு ஒரு பத்திரிக்கையை தலையங்கம் எழுதி இருக்காங்களே?

நடிகை : நான் வெறும் 82 கிலோ தான்.  இதைக் கூட பாரம்பரியம் மிக்க கட்சி தாங்காதா என்ன?

நிருபர் : அரசியலுக்கு வந்துட்டீங்க. இனி சினிமால நடிப்பீங்களா?

நடிகை : சினிமால நடிக்கறனோ இல்லையோ, மேடைல நடிப்பேன். சினி‡பீல்டுல இருக்கற ஆள் தான் தமிழ்நாட்டின் CM. ஆக முடியும்கற விதியை நிரூபிக்கறேன்.  OK உற்சாகமா இருந்தீங்க, இப்ப ஏன் டல்லா இருக்கீங்க?

நிருபர் : தமிழனோட தலையெழுத்தை நினைச்சேன். எனக்கு தலைவலி வந்திடுச்சு. 

நடிகை : விடுங்க. எல்லாம் அவங்கவங்க தலைவிதி 

diski-   this is republished from my own blog.

Wednesday, July 21, 2010

DON -சினிமா விமர்சனம் -


அனுஷ்காவுக்கு ஒரு ராசி உண்டு.எந்த நடிகருடன் நடித்தாலும்,அவருக்கு அக்கா மாதிரி தோற்றம் அளிக்கும் முற்றிய முகம்.வேட்டைக்காரனிலும்
சரி,சிங்கம் படத்திலயும் சரி,விஜய்க்கும்,சூர்யாவுக்கும் அக்கா மாதிரிதான் தெரிந்தார்.ஏதோ வெல்வெட் இடுப்பு  இருப்பதால் சமாளிக்கிறார்.


இந்த டான் படத்தில் அந்த பிரச்சனை இல்லை.ஏன்னா நாகார்ஜூன் அனுஷ்காவிற்கு பெரியப்பா மாதிரி இருப்பதால்.

ராகவா லாரன்ஸ் டைரக்ட் பண்ணி உள்ள இந்தப்படத்தில் தெலுங்குப்படத்துக்கே உரித்தான அனைத்து அலப்பறைகளும்,அன்சகிக்கபிள்(நன்றி -சுஜாதா) மேட்டர்களும் உண்டு.


லோக்கல் தாதா நாகார்ஜூன்,அவரது அல்லக்கை ...சாரி வலது கை ராகவா லாரன்ஸ்,இண்ட்டர்நேஷனல் தாதாவுக்கும் இடையே நடக்கும் மோதல்களே படம்.இடை இடையே அனுஷ்காவை ஊறுகாய் மாதிரி தொட்டுக்கொள்கிறார் ஹீரோ.


படத்தோட   டைரக்டரே 2வது  ஹீரோ என்பதால் ஹீரோவுக்கு 60 சீன்கள்
என்றால் 2வது ஹீரோவுக்கு 70 சீன்கள் வைத்துக்கொண்டார்.

படத்தின் முதல் அபத்தம் பில்லா படத்தில் வருவது போல் படத்தில் வரும் 189 கேரக்டர்களும் 24 மணி நேரமும் கூலிங்கிளாஸ் அணீந்து கொண்டே இருப்பதுதான்.

2வது அபத்தம் நாகார்ஜுனின் மேக்கப்மேன்.இதயத்தை திருடாதே படத்தில் யங் ஹீரோவாக வரும்போதே நாகார்ஜுனை நரசிம்மராவின் வாரிசு மாதிரி இருப்பார்.போதாக்குறைக்கு ஓவர் பவுடர் அடித்துக்கொண்டு க்ளோசப்
காட்சிகளில் மிரட்டுகிறார்.


ராகவா லாரன்ஸ் ஓவர் அலம்பல்.அவர் செய்யும் லூட்டிகள் தாங்க முடியலை.தனிநபர் துதிகளும் ஆங்காங்கே உண்டு.
ஆண்டாண்டு காலமாக சினிமாக்களில் ரெகுலராக வரும் க்ளிஷேக்கள் இதிலும் உண்டு.ஹீரோயின் மாடர்ன் டிரஸ்ஸில் முதல் 4 ரீலுக்கு ஆட்டம் போடுவார்.ஹீரோவுடன் காதல் வந்ததும் நானிக்கோணி சேலையில் வந்து தலை குனிந்து நிற்பார்.இருந்தாலும் அனுஷ்கா சிவப்பு கலர் சேலையில் லோஹிப்பில் வந்து நிற்கும்போது பெருமூச்சு விடாத ஆண்களே தியேட்டரில் இல்லை.

வில்லனாக வரும் வெள்ளைக்காரர் கவனிக்க வைக்கிறார். படையப்பா
படத்தில் வருவது போல் ஹீரோவை நிற்க வைத்து வில்லன் உட்கார்ந்து சீட் தராமல் அவமானப்படுத்தும் போது ஹீரோ உடனே அடிப்பொடி கைத்தடிகளை
கைகளாலேயே ஆசனம் அமைக்கவைத்து ஏறி உட்கார்ந்து வில்லனை பார்த்து எகத்தாளமாக சிரிக்கும்போது இன்னும் 100 வருஷம் ஆனாலும் ஆந்திராக்காரர்கள் திருந்தமாட்டார்கள் என உள்ளங்கை நெல்லிகனி போல் தெரிகிறது.

காமெடி பண்ணுவதாக நினைத்துக்கொண்டு மொக்கை போடும் சீன்களும் ஏராளம்.லாரன்ஸுக்கு ஜோடியாக வரும் பார்ட்டி அனுஷ்காவை தூக்கி சாப்பிடும் அழகு.

அவர் வில்லியாக மாறி வில்லனுக்கு ஜோடி ஆகி டர்னிங் பாய்ண்ட்களா அள்ளி விடுவது படு அபத்தம்.

படத்தில் வரும் சூப்பர் காமெடி சீன் -

லாரன்ஸுக்கு ஜோடியாக வரும் பார்ட்டி வில்லி என்பதை காட்ட தான் அணிந்திருக்கும் சேலையை கழட்டி உள்ளே மாடர்ன் டிரஸ் (பெட்டிகோட்-பிரா) போட்டிருப்பதை காண்பிப்பதுதான்.இந்த ட்விஸ்ட்
சிரிப்பு வரவில்லை.எரிச்சல்தான் வருது.

 நாகார்ஜூன்- ராகவா லாரன்ஸ்,இருவரும் ஒன்றாக நடனம் ஆடும் காட்சிகளில் தியேட்டர் சுவரில் போய் முட்டிக்கொள்ளலாம் என
தோன்றுகிறது.போக்கிரி படமே தெலுங்கிலிருந்து சுட்ட கதைதான்.இதில்

போக்கிரியிடம் இருந்து சுட்ட காட்சிகள் அதிகம்.

பி.கு-டான் பட போஸ்டரில் அனுஷ்கா காட்டிய சர்ச்சைக்குரிய கிளாமர் சீன் படத்தில் இல்லை.எனவே யாரும் அதற்காகப்போய் ஏமாற
வேண்டாம்.(அடடா,என்ன ஒரு சமூக நல  சிந்தனை)

படத்தில் காமெடி காட்சிகள் இல்லாதது,திடீர் என லாரன்ஸ் தளபதி பட ஸ்டைலில் தியாகி ஆவது எதுவுமே ஏற்கவே முடியவில்லை.

படம் இடைவேளை விட்டதும் பாதிப்பேர் (20) டான் டான் என வீட்டுக்கு கிளம்பி விட்டார்கள்.இதற்காகவே டான் என டைட்டில் வைத்தார்களோ?