தேவதையைக்கண்டேன்,திருவிளையாடல் ஆரம்பம்,மலைக்கோட்டை என தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி கண்ட இயக்குநர் பூபதி பாண்டியனின் 4 வது படம்தான் இந்த காதல் சொல்ல வந்தேன்.'நானும் என் சந்தியாவும்' என 2005இல் பூஜை போட்ட படம் பல கை மாறி இப்போ வந்திருக்கு.2 டைட்டிலுமே கவிதை நயம்.படம்?
கதைக்களம் திருச்சி.மலைக்கோட்டை ஹிட் ஆன செண்ட்டிமெண்ட்?தன்னை விட 2 வருடங்கள் சீனியர் பெண்ணுடன் கொண்ட காதலை எப்படி வெளிப்படுத்துகிறான், அக்கா என தன்னை அழைக்கச்சொன்ன பெண்ணையே எப்படி காதலிக்க வைக்கிறான் என்பதுதான் கதை.வல்லவன் படத்தில் சிம்பு தோற்ற கதைக்கரு பூபதி பாண்டியனின் இயக்கத்தில் வெற்றி பெற்றது ஆச்சரியம்.
புதுமுக நாயகன் பாலாஜி, மேக்னா சுந்தர் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.ஹீரோ தனுஷுக்கு தம்பி மாதிரி இருக்கிறார்.ஹீரோயின் அனுஷ்காவுக்கு அக்கா மாதிரி இருக்கிறார்.ஆனால் கதையின் KNOT (முடிச்சு)
தன்னை விட சீனியர் பொண்ணுடன் காதல் கொள்வது என்பதால் அது ஒரு பெரிய குறையாக தெரியவில்லை.
செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன்தான் ஹீரோ.புதுமுகம் என்ற அளவில் ஓகே ரகம்.மேக்னாவை முதல் முறை பார்த்ததும் உடனே ஓடிப்போய் தன்னுடன் 8வது படித்த பெண்ணுக்கு ஃபோன் போட்டு “அடியே,நான் உன்னை லவ் பண்றேன்னு சொன்னப்ப முடியாதுனு சொன்னதுக்கு தேங்க்ஸ்,அப்ப ஓகே சொல்லி இருந்தா இப்படி ஒரு ஃபிகர் கிடைச்சிருக்குமா என லந்து பண்ணும்போது ஆரம்பமாகும் காமெடி தர்பார் இடை வேளைவரை தொடர்கிறது.
ஹீரோயின் மேக்னா இதழ் விரிப்பில் நயன்தாரா,புன்னகை சிரிப்பில் சித்தாரா,முக சாயலில் ஆசை சுவலட்சுமி என அழகுக்கலவையாக இருந்தாலும் முகத்தில் முற்றல் அதிகம்.தொடர்ந்து கோலிவுட்டில் கோலோச்சுவது சிரமம்.
வழக்கமாக ஹீரோயினைப்பார்த்ததும் உடனே ஹீரோ பாடும் இன்சிடெண்ட் லவ் சாங்க் இதிலும் உண்டு.ஓ சலாம் எனும் அந்தப்பாட்டை ஹீரோ - ஹீரோயின் சந்திப்புகளில் பிட் பிட்டாக போடுவது நல்ல யுக்தி.
படத்துக்கு பெரிய பிளஸ்சே வசனம்தான்.காமெடி களை கட்டியதில் சில சாம்ப்பிள்ஸ்.
1.என்னது ,பார்த்ததுமே லவ்வா?
பின்னே, 15 வருஷம் கழிச்சு லவ் பண்ண சொல்றியா?
2.உனக்கு ஏன் நாநு - நு பெயர் வெச்சாங்க?
குழந்தை பிறந்ததும் ஜோசியர்ட்ட ஐடியா கேட்டாங்க,அவர் நா அல்லது நு அப்படிங்கற எழுத்துல ஆரம்பிக்கற மாதிரி பெயர் வெச்சா நல்லாருக்கும்னாரு,ரொம்ப நல்லாருக்கட்டும்னு 2 எழுத்தையும் சேர்த்தே வெச்சுட்டாங்க.
3.அவளுக்குப்பிடிச்ச இந்த நாயை நான் வீட்டுக்கு எடுத்துட்டு வந்து வளர்த்தா அவளுக்கு லவ் வருமா?
வரும்,உன் மேல இல்ல,நாய் மேல.
4.என்னது,உன் பேரு ஹேப்பி கிங்கா?
அதாங்க ஆனந்தராஜ்
5. டீ குடிக்கலாம் வா
பழக்கமில்லை.காசா குடுத்துடுங்க.செலவுக்கு ஆகும்.
6.நான் உனக்கு மச்சான் வேலை பார்க்கலாம்,நீ எனக்கு மாமா வேலை பார்க்கக்கூடாதா?

ஹீரோயின் அறிமுக்காட்சி எனில் முதல் முறை அவர் முகத்தில் பூக்களைதூவுவதை கோடம்பாக்க இயக்குனர்கள் மாற்றுவது நல்லது,(ஆனால் தியேட்டர்ல கை தட்டறாங்கப்பா.)தோட்டத்தில் பைப் மூலம் தண்ணிர் ஊற்றும் பெண்ணிடம் அதை வாங்கி மினரல் வாட்டர் பாட்டிலின் அடிப்பக்கத்தை சிறு சிறு துளைகளிட்டு ஷவர் மாதிரி செய்து பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் காட்சி கவிதை.
காலேஜ் க்ளாஸ் ரூமில் நுழைந்ததும் ரிங் டோனாக வைத்த சரக்கு வெச்சுருக்கேன் பாட்டு காலை வாரும் சீன் செம காமெடி.அப்பா,நாயை நாமளே வளக்கலாம்ப்பா என்றதும் ஆர்.சுந்தர்ராஜன் ஏற்கனவே வீட்ல நீ,உங்கம்மா 2 நாய்களை வளர்க்க்றேனே போதாதா எனக்கேட்பது நல்ல நக்கல்.
சிங்காக வரும் வில்லன்(?) சந்தியாவை லவ் பண்ணுவதாக சொன்னதும் டேய்,இவன் சந்தியாகிட்ட சிக்கிடக்கூடாதுங்கறதுக்காகவே நீ அவளை லவ் பண்ணனும்டா என சலம்பும்போது தியேட்டரில் கை தட்டல்கள்.
பாடல் காட்சிகளில் தேவதையைக்கண்டேன் தனுஷ் மாதிரி பாடிலேங்குவேஜ்ஜில் டான்ஸ் ஆடுவதை ஹீரோ தவிர்த்திருக்கலாம்.ஹீரோயினிடம் ஹீரோ நான் முதல் வருஷம்,நீங்க? எனக்க்கேட்கும்போது நான் ஃபைனல் இயர் என அவர் பதில் சொல்லும்போது சங்கு ஊதும் சத்தத்தை காண்பிப்பது சூப்பர்.காலேஜ்ஜில் கேர்ள்ஸ் பசங்களை ராகிங் பண்ணும் காட்சிகள் ஜாலி.எங்கள்ல யார் அழகு? என மேக்னா கேட்டதும் கேமரா ஒரு அடாஸ் ஃபிகரின் செஸ்ட்டை ஜூம் பண்ண ,டேய்,மூஞ்சியை பார்த்து சொல்லுங்கடா மூதேவிங்களா என அலறுவதும் அலப்பறை ரகம்.
சியர்ஸ் சொல்லியே பெப்சி பாட்டிலை உடைக்கும் குறும்பும் ரசிக்க வைக்கிறது.ரயில் தண்டவாளத்தில் காது வைத்துக்கேட்கும் சீன் பல படத்தில் வந்தாலும்,இதில் ஒரு புது கான்செப்ட் இருக்கு.
திமிர் படத்தில் விஷால் வரும் காட்சிகளில் ஹோ ஒஹோஹோ என த்ரெட்டன் ம்யூசிக்(THREATEN MUSIC) போடுவாங்களே அது மாதிரி ஓவர் பில்டப்புடன் ஆங்காங்கே வரும் சொட்டைத்த்லை ஆள் கடைசியில் ஒரு பிள்ளைப்பூச்சி எனக்காட்டுவது கிளாசிக் காமெடி.
படத்தில் மொக்கை காமெடிகளும் உண்டு. உன்னைப்பார்க்கும் வரை நான் பக்கி,பார்த்த பின் நான் லக்கி, அனைவரும் போன அது அரசுப்பேருந்து,நீ மட்டும் போனா அது அரசிப்ப்பேருந்து, சின்னப்பைஉஅனை அடிச்ச்ட்டாடா -தப்பா சொல்லாதடா,ரொம்ப்ப ரொம்பச்சின்னப்பையனைப்போட்டு அடிச்சிருக்கா.லவ் பண்ணுனா ஃபேஸ் ஃப்ரெஸ் ஆகுமாமே உண்மையா? ஆமா,ஆனா உனக்கு மட்டும் 5 பேரை லவ் பண்ணுனாத்தான் அப்படி ஆகும்.
காதலிக்கு பரிசு கொடுக்கும் காதலன் ஆசாரியின் மகன் என்பதை நிரூபிக்கும் விதமாய் துறை சார்ந்த பரிசு குடுப்பதும்,மரத்தூளைக்கூட கலரிங் பண்ணி சாமிக்கு பூ அர்ச்சனை செய்வதும் ரசிக்க வைக்கிறது.ஆனால் உடனே ஹீரோயின் கையில் முத்தம் குடுப்பது நம்ப முடியாத சீன்.
இவன் நல்லா வருவாண்டா.என வில்லன் குரூப் சொல்வதும்,நாமளும் நல்லா வருவோம் என எடுபிடிகள் சொல்வதும் காமெடி.இந்த இடத்தில்தான் இயக்குனர் ஒரு தவறு செய்கைறார்,படம் காமெடியாக வர வேண்டும் என்பத்ற்காக படம் முழுதும் ஆளாளுக்கு காமெடி செய்வதில் படத்தின் சீரியஸ்னஸ் போய்விடுகிறது.
முந்தானை முடிச்சு படத்தில் முருங்கைக்காய் மேட்டர் மாதிரி சாக்லெட் சாப்பிட்டால் காதல் உணர்வு பொங்கும் என சொல்வது எந்த அளவு எடுபடும் என சொல்ல முடியாது.
படத்தின் ஒரு பாடல் காட்சியை வஸந்தின் நீ பாதி நான் பாதி பட நிவேதா பாட்டின் சாயலில் காட்சிப்படுத்தியதை இயக்குனர் தவித்திருக்கலாம்.
சாமி வருகுது பாடல் காட்சியில் ஹீரோவின் அர்ப்பணிப்பும்,ஈடுபாடும் தெரிகிறது.ஆனால் ஏனோ அது ரசிகர்கள் மனதை கவரவில்லை.( ரஜினி சத்யராஜ் மிஸ்டர் பாரத்தின் என்னம்மா கண்ணு மாதிரி)
காலேஜ் பிரின்சிபால் ஹீரோயினை சமாதானப்படுத்த தோள் மீது கை வைத்ததும், ஹீரோ டச் பண்ணாம பேசுங்க சார் என சத்தமாக சொல்லி விட்டு பின் மெதுவாக அவ்வளவு சின்சியர் லவ் என மெல்லிய குரலில் சொல்வது டாப்,
ஹீரொயின் ஹீரோவிடம் என்னை ஏன் துரத்திட்டே இருக்கே வா லாட்ஜ்க்கு போலாம் என ஆட்டோவில் அழைத்து செல்லும் பதட்டமான சீனில் பின்னணி இசை பின்னி எடுத்திருக்க வேணாம? யுவனும் சரி,பூபதியும் சரி அதை கண்டு கொள்ளவே இல்லை.அந்த சீரியஸ் காட்சியில் கூட ஆனா லாட்ஜ் வாஅ\டகை நீதான் தரனும் என ஹீரோ காமெடி பண்ணுவது இயக்குனரின் பெரிய சறுக்கல்.
அன்புள்ள சந்தியா நல்ல மெலோடி சாங்க்.மரத்தைக்குடுத்தா ஆசாரி நான் அதை எப்படி வேணாலும் மாத்திடுவேன்,மனசை மாத்தசொன்னா?என கேட்பது டச்சிங் சீன்.
இத்த்னை பிளஸ் இருந்தும் க்ளைமாக்ஸ் சீனில் ஆண்ட்டி க்ளைமாக்ஸ் ஆக்கி படத்தை ,அதன் தரத்தை குறைத்து விட்டார்.(பாணா காத்தாடி போல சோக முடிவு).
1990களில் தழுவாத கைகள் என்ற விஜய்காந்த் படம் வந்தது .அந்த சமயத்தில் அதே போல் ஹீரோ கேன்சரில் க்ளைமாக்சில் சாவது மாதிரி படம் 34 படங்கள் வந்ததாம்.அது மாதிரி இப்போது ஹீரோ பஸ்ஸில் அடிபட்டு சாகும் சீசன் போல.
மொத்ததில் க்ளைமாக்ஸ் தவிர்த்துப்பார்த்தால் படம் ஓகே தான்.பி சி செண்ட்டர்களில் 50 நாட்கள் கேரண்ட்டி,ஏ செண்ட்டர் சுமாராகத்தான் போகும்.