1 சார், பேசுன சம்பளத்துல பாதிதான் கொடுத்திருக்கீங்க? ஏன்?
பாதிக்கதை தானே கேட்டேன்.இதுக்குத்தான், எப்டி நம்ம ஐடியா?
==================
2 சார், பேபி கேரக்டர் ஓவர் ஆக்டிங்னு சிலர் சொல்றாங்களே?
ஹீரோவுக்கு ஆக்டிங்கே வர்லை.அவர் ஆக்டிங்கையும் சேர்த்து நடிக்க சொல்லிட்டோம்
==================
3
சார், 60 அடி உயர பாலத்தில் இருந்து நீங்க டூப் போடாம குதிக்கனும்
இன்னும் சம்பளம் தர்லை, எப்போ தருவீங்க?
அதைத்தர முடியாததாலதான் குதிக்கவே சொல்றோம்
================
4 அம்மா.சோறு போடு.
எதுக்கு?
பசிக்குது.
இப்பதான் படம் பாத்துட்டு வந்து புல் மீல்ஸ் சாப்ட்ட மாதிரி இருந்துதுன்னே?
============
5 படிப்படியா மது விலக்குன்னா என்ன?விளக்குங்க
முதல்ல குவாட்டர் கட்.பின் ஆப் கட்.லாஸ்ட்டா புல் கட்
==============
6 டியர்.நீ எனக்கு இன்னொரு அம்மா
யோவ்.அப்டின்னா ?
சித்தி மாதிரி.
சுத்தம்.உங்க அம்மாவே சித்தி தானே?
===========
7 சார்.படத்துல உங்களுக்கு 2 ஜோடி.
ஐ ஜாலி.
ஆனா தொடக்கூடாது.1 ஜோடி அம்மா மாதிரி.இன்னொரு ஜோடி பெரியம்மா மாதிரி
==============
8 கட்சியை இளைஞர்களிடம் ஒப்படைக்கிறேன்
அதை நீங்களே வெச்சுக்குங்க தலைவரே!. சொத்தை யார் கிட்டே ஒப்படைப்பீங்க ?
================
9 சார், ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம்னீங்களே காட்டுங்க
அதோ அது தியேட்டர் ஓனரோட சம்சாரம் இது ஆபரேட்டர் சம்சாரம், இது டிக்கெட் கிழிக்கறவரோட மச்சினி
==================
10 யுவர் ஆனர் , என் சின்ன வீட்டோட பேரு ஆர்த்தி. அவருக்கு மெயின்ட்டெனன்ஸ் செலவுக்கு 5000 ரூபா தந்தேன்
தப்பில்லையே
ஆரத்தி எடுத்தார், பணம் தந்தார்னு பிடிச்ட்டாங்க
================
11 மிஸ்! என்னை வீடு வரை ட்ராப் பண்ண முடியுமா?
வித் பிளசர்
கார் வேணாம், ஸ்கூட்டிலயே டிராப் பண்ணுங்க. வசதி
அய்யோ. சந்தோசமான்னேன்
================
12
சார் , ஆல் டைம் ரெக்கார்டு அப்டினு பேப்பர்ல விளம்பரம் வருதே?
எப்போ ரிலீஸ் பண்ணாலும் பாலிமர் சேனல் காரன் ஆல் டைம் ரெக்கார்டு பண்ணிடறாங்க
=================
13 சார் , படம் செம ஹிட் சார்
ஓஹோ, எப்டி கண்டுபிடிச்சீங்க?
பேப்பர்லயே போட்டுட்டாங்களே?
யோவ், அது புரொடியூசர் பணம் கொடுத்து வர வைக்கும் விளம்பரம்
================
14 டாக்டர், தமனாவை எந்த ஆங்கிள் ல பார்த்தாலும் எனக்கு கிக் (போதை)வர்லை
உங்க சம்சாரம் சைடு ஆங்கிள்ல உங்களை முறைக்குது. வீட்டுக்குப்போங்க .கிக் (உதை)நிச்சயம்
==================
15 சார், இந்தப்படம் 10 துப்பாக்கிக்கு சமம்னு சொன்னீங்க?
தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. ஹீரோ 10 சீன்ல துப்பாக்கியோட வருவார்னேன்.
=============
16 ஷாரூக்கான் ன் FAN ஹிந்திப்படம் தமிழ் ல டப் ஆகி இருக்கா?
சாரி.அதுக்குப்பதிலா விஜய் தோன்றும் ரசிகன் பாருங்க.FAN க்கு தமிழ்ல ரசிகன் தானே?
==============
17 தலைவரே! நமக்கு தேர்தல்ல தெறி வெற்றி கிடைக்குமா?
போற போக்கைப்பார்த்தா புலி வெற்றி கூட கிடைக்காது போல
==============
18 சார்.நீங்க நடுநிலைனு சொன்னீங்க.ஆனா அதிமுக ஜெயிக்கும்னு சொல்றீங்களே?
அதிமுக வுக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்லலையே?தேர்தல் ரிசல்ட் கணிப்பு அது
===============
19 டாக்டர். லெமன் தயிர் கத்தாழை தக்காளி சேத்து அரைச்சு முகத்துக்கு போட்டுட்டு இருந்தா கறுப்புப்புள்ளி மறைஞ்சிடுமா?
முகமே மறைஞ்சிடும்
=============
20 தலைவரே.படிச்சவங்க எல்லாம் நம்ம பக்கம்.ஏன் கவலை?
சினிமா அரசியல் 2 லும் வெற்றியைத்தீர்மானிப்பது பாமர மக்களே
================