Showing posts with label tamil film review. Show all posts
Showing posts with label tamil film review. Show all posts

Friday, November 27, 2015

144 - சினிமா விமர்சனம்



செல் ஃபோன்களில் இது டூயல் சிம் காலம். சினிமாவில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் தான் வசதி . 2 ஹீரோ போட்டா அப்டியே 2 ஹீரோயின் போட்டுக்கலாம். 2 ஹீரோயின் போட்டா அவங்க 2 பேரும் போட்டி போட்டுக்கிட்டு நடிப்புத்திறமையையோ அல்லது என்ன வருமோ அந்தத்திறமையை காட்டுவாங்க . ஜனங்களுக்கும் சந்தோசம், புரொடியூசருக்கும்  லாபம்.


சிவா டூப்ளிகேட் சாவி போட்டு திருடுவதில் மன்னன். அசோக்  கார் ரேஸ் வீரர் ஆகனும்னு ஆசை உள்ளவர் . சிவாவுக்கு  ஓவியா  மேல ஒரு கண்ணு . ஓவியா மேல  ஏகப்பட்ட பேருக்கு கண்ணு .  எப்டின்னா  ஓவியா ஒரு டிக்கெட்டு ( கதைப்படி )ஊர் ல ஏகப்பட்ட பார்ட்டிங்க இருக்கும்போது  ஹீரோவுக்கு ஒரு பார்ட்டி மேல  ஏன் லவ் வந்தது?ன்னு  நானும் கேட்டுக்கலை , நீங்களும்  கேட்டுக்காதீங்க . 


அசோக் லவ் பண்றது  வில்லனோட பொண்ணை . வில்லன் கெட்டவன். வில்லனோட பொண்ணு நல்லவ. இன்னொரு வில்லன் இருக்கான் . இவன்  கோல்டு பிஸ்கெட்டை  (150 கோடி  மதிப்புள்ளது) சின்ன சின்ன  விநாயகர்  பொம்மைகளுக்குள் வெச்சு  ஒரு அலிபாபா  குகைக்குள்ளே  ஒளிச்சு வெச்சுடறான். 


 அந்த  பிஸ்கெட்டை  சிவாவும் , அசோக்கும்  லப்க்கிடறாங்க . வில்லன் க்ரூப் 2ம்  எப்படி  அதை  மீட்கறாங்க? என்பதே  காமெடி  கலந்த  திரைக்கதை 


ஹீரோவா  சிவா . அவருக்குன்னு  ஒரு ரசிகர்  கூட்டம்  இருக்கு . அவர்  மொக்கை காமெடி  பண்ணும்போது கை தட்டுது . 

 அசோக் செல்வன்   அய்யோ பாவம் . வாய்பில்லை . நாயகி  கூட ஓப்பனிங்கில்  ஒரு கவிதை  டூயட் பாடறாரு . அம்புட்டுதான்

ஓவியா  குரல்  ஸ்ருதி  கமல்  குரலை விட  கர்ண கொடூரமா  இருக்கு , முடியல . அவரோட  லிப்ஸ்டிக்  தீற்றல்  ஓவர்  டார்க் . முடியல 


திரைக்கதை  எதைபத்தியும்  கவலைப்படாம  மொக்கை  காமெடி சம்பவங்கள் , வசனத்தை  நம்பியே  இருக்கு 


ஒளிப்பதிவு , இசை  எல்லாம்   சராசரி  தரத்தில் , பின்னணி  இசை  அருமை 

கண்டிப்பா  கண்டிப்பா  என அந்த  போலீஸ்  ஆஃபீசர்  செய்யும் காமெடி  கலக்கல்  ரகம் 







மனதைக் கவர்ந்த  வசனங்கள்


சார்.உங்களுக்கு என்ன வேணும்?

2 கிராம் ல செம வெயிட்டா ஒரு மூக்குத்தி வேணும் # 144



2 பகுமானக்கோழி பறந்து பறந்து முட்டை போடுமாம் #144


3 ஓவியா = எனக்கு அவிட்ட நட்சத்திரம்
இயக்குநர் =,ரைட்டு.இந்தப்படத்துல அயிட்டமா நடிக்கறீங்க.#144

4 பல்லுப்போன காலத்துல பட்டாணி சாப்பிட ஆசைப்படலாமா?#144

5 இங்கே யாரும் 100% நல்லவங்களும் இல்லை.100% கெட்டவங்களும் இல்லை #144








சி  பி  கமெண்ட்=144 = ஏ சென்ட்டர் ரசிகர்களுக்கான மொக்கை காமெடிப்படம். விகடன் மார்க் =41 ,ரேட்டிங் =2.75 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -41



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)= ஓக்கே



 ரேட்டிங்=2.75 / 5

உப்புக்கருவாடு - சினிமா விமர்சனம்

ஒரு படைப்பாளியின் பலமும் , பலவீனமும் என்ன  தெரியுமா? தனது முதல் படைப்பை முழு ஈடுபாட்டுடன் படைத்து அதற்கான தன் அர்ப்பணிப்பை அதீதமாய் செய்து விடலே. அதுக்குப்பின் வரும் அவரது ஒவ்வொரு படைப்பும் முதல் படைப்புடனே  ஒப்பீடு செய்யப்படும் என்பதை அறிந்தும் அறியாமலும் அந்த தவறு நிகழ்ந்து விடுகிறது. 


இயக்குநர் ராதா மோகனின்  இந்தப்படமும்  சராசரிப்படத்துக்கு மேல் உள்ள தரத்தில் தான் . ஆனால் அவரது ஆரம்ப கட்டப்படங்களோடு( மொழி , அபியும் நானும்) ஒப்பீடு செய்கையில்  இது ஒரு மாற்று கம்மியே. எனவே சாதாரனமான எதிர்பார்ப்போடு படம் பார்க்க ரசிகர்கள் தயார் நிலையில் வரனும்  


ஹீரோ  ஒரு  டைரக்டர் . புரொடியூசரோட மகளை  ஹீரோவா வெச்சு ஒரு படம் எடுக்கறார். அந்த  ஹீரோயின்  கேரக்டருக்கு இயக்குநரோட காதலிதான் பொருத்தமா இருப்பாங்க . ஆனா சந்தர்ப்ப சூழ்நிலை காரணமா அது  முடியல. அந்த புரொடியூசரோட மகள் கம் ஹீரோயினை ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் கரெக்ட் பண்ணி கூட்டிட்டுப்போய்டறார். புரொடியூசர்  செம காண்ட் ஆகறார். பின்  என்ன ஆகுது? என்பதுதான்  காமெடி கலந்த திரைக்கதை .


ஹீரோவா  காமெடியன் கருணாகரன். இயக்குநரோட  சாமார்த்தியத்தாலும் , திரைக்கதையின் பலத்தாலும் சமாளிக்கிறார். ஆனா ஒரு பட இயக்குநருக்கான கெத்து  , பாடி லேங்குவேஜ் பத்தாது


 ஹீரோயினா நந்திதா.வித்தியாசமான  கேரக்டர். லூஸ்  தனமான  நடவடிக்கை , மோசமான  குரல் , நடிப்பே வராத ஆள்  மாதிரி பண்ணனும் . நல்லா  பண்ணி  இருக்கு . நடிப்பே  வராத கேரக்டர் பண்ணவும் நல்ல நடிப்பு வேணும்ல? ( ஒரு நல்ல \ டான்சர்  டான்சே வராத மாதிரி கேரக்டர் ல பின்னி எடுக்கலையா? - சிப்பிக்குள் முத்து  கமல் ) 


எது சொன்னாலும் எது நடந்தாலும் அதை  பாசிட்டிவ் சகுனமா  எடுத்துக்கும் மயில் சாமியின் டைமிங் காமெடிகள்  பக்கா 


புரொடியூசராக வரும் எம் எஸ்  பாஸ்கரின்  குணச்சித்திர  நடிப்பு  சூப்பர் 

 அந்த   சாமியார்  கேரக்டர்  யாருங்கோ  , செம  கலக்கல் .ஸ்டோரி டிஸ்கஷன் நடக்கும்  எல்லாக்காட்சிகளுமே  சிரிக்க  வைக்கின்றன. 


அசிஸ்டெண்ட்  டைரக்டராக வரும் அந்தப்புதுமுகம்  இங்க்லீஷை தப்பாக பேசுவதும் , டைரக்டர் சொன்ன  டயலாக்கை வெச்சே  ஹீரோயினை கரெக்ட் செய்வதும்  செம  கலக்கல் 


முன் பாதி வரை  காமெடி கலாட்டாவாகப்போகும்  கதை  பின் பாதியில்  சஸ்பென்ஸ் , காதல் , திருப்பம்  என களை கட்டுது 


இசை , ஒளிப்பதிவு  எல்லாம்  சராசரி தரம் 

 வசனகர்த்தா தான் படத்தின்  முதுகெலும்பு ., படத்தில்  மொத்தம் 97 ஜோக்குகள் , 16 தத்துவங்கள்  வருது . அடேங்கப்பா .










மனதைக் கவர்ந்த  வசனங்கள்

சார்.வெளில கிளம்பிட்டு இருக்கீங்க போல?

இல்லை.வெல்டிங் கத்துக்கிட்டிருக்கேன். # உ க


2 பொண்ணு குடுக்கறவனே ஜாதகம் கேட்கறான்.பட வாய்ப்பு தர்ற புரொடியூசர் கேட்கமாட்டாரா? உன் ஜாதகம் வேணுமாம்# உ க


3 என் வாழ்க்கைல டீ விலை என்ன?னு கடைசி வரைக்கும் தெரிஞ்சுக்கவே முடியலை.ஓசி டீ - மயில்சாமி # உ க


4 எப்டி இருக்கே?
ஆண்டவன் கிருபைல அமோகமா இருக்கேன்
அப்போ டீ க்கு காசு குடுத்துடு # உ க


5 இன்ட்டர்நெட்டுக்குப்பிறகு மிகப்பெரிய கண்டு பிடிப்பு நீ தான் # உ க


6 நீ எந்த மாதிரி படம் எல்லாம் பார்ப்பே?
ஒரே கதை தான்.ஆனா நடிகர்கள் மட்டும் மாறி மாறி வந்து போவாங்க.ம்ம்ம்ம். # உ க


7 அன்னை ஓர் ஆலயம் ரஜினி படமும் ஜூராசிக் பார்க்கும் 1,தான்.ஒரே கதைதான் # உ க


8 என்னது?எந்திரன் படமும் ராவணன் படமும் 1 தானா?
ஆமா.2 ஹீரோவும் ஐஸ்வர்யாராய்க்குத்தானே அடிச்சுக்கறாங்க? # உ க


9 மிருகங்கள் இன்னொரு மிருகத்துக்கு துரோகம் பண்ணாது.மனுசன் தான் சக மனுசனுக்கு துரோகம் பண்றான் # உ க


10 சின்ன வயசுல பண்டிகை வரும்போது சந்தோசமா இருக்கும்.சம்பாதிக்க ஆரம்பிச்சதும் பயம் தான் வருது # உ க


11 .சாரி.அவர் சொன்னதை எல்லாம் மனசுல வெச்சுக்காதீங்க.
ம்ம்.ஏற்கனவே மனசுல ஏகப்பட்ட பிரச்னை இருக்கு.இதை எல்லாம் ஏத்திட்டு இருக்கமுடியாது # உ க


12 ஹீரோ கெட்டவன்னா அது உலக சினிமா.நல்லவன் னா க்ளிஷே #,உ க


13 சார்.க்ளிஷே ன்னா என்ன?
நேத்துக்கிண்டுன அல்வாவை சுட வெச்சு இன்னைக்கு சாப்டறது # உ க


14 5 வயசுல அம்மா அடிச்சப்ப கோபம் வந்துச்சு.அதுக்குப்பின் அடிக்கறதுக்கு ஆள் இல்லையேன்னு வருத்தம் வந்துச்சு. # உ க


15 என்னது?கரண்ட் போனா நல்ல் சகுனமா?எப்டி?
இளையராஜா முத முதலா பாட்டு கம்போஸ் பண்றப்ப கரண்ட் போச்சாம் # உ க


16 சினிமா ல ஆடியன்ஸ் கிட்டே பொய் சொல்லலாம்.ஆனா ஏமாத்தக்கூடாது #,உ க


17 தலைகீழா நின்னாலும் நீ தலை ஆக முடியாது # உள்குத்து டயலாக் உ க


18 எதுக்கு கோட் சூட் போட்டுட்டு வந்திருக்கே?
ஹீரோ ன்னா ஒரு பில்டப் வேணாமா?
நாம என்ன பில்லா படமா எடுக்கப்போறோம் ?# உ க


19 செத்துப்போன பிரண்டோட பேரை செல்போன் ல இருந்து அழிக்கும்போது மனசுல ஒரு பாரம் வரும் க( ட்விட்டர் ல இருந்து சுட்டுட்டாக.யூ டூ ராதா மோகன்?)


20 உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்னு ஆரம்பிக்கற எல்லாருமே அவங்க நல்லதுக்குத்தான் னு முடிப்பாங்க #,உ க

21 திருந்த வாய்ப்பில்லாம தான் பாதிப்பேரு இன்னும் குற்றவாளிகளா இருக்காங்க # உ க


22 சாவைக்கண்டு நான் ஏன் பயப்படறேன்னா செத்துட்டா உன்னை நினைக்க முடியாதே? # உ க


23 வலி இல்லாத மனுசனே இந்த உலகத்துல இருக்க முடியாது.வலி இல்லைன்னா அவன் மனுசனே இல்லை # உ க


24 சினிமா உங்களுக்கு பொழுதுபோக்கு.எனக்கு வாழ்க்கை # உ க


25 சார்.எழுதிட்டு இருக்கீங்களா?
இல்லை.எருமை மேய்ச்சுட்டு இருக்கேன் # உ க


26 வாழ்க்கைல ஜெயிக்க மனசுல ் நம்பிக்கை வேணும்
ஆனா மனசுல இருக்கறதை சொல்ல தைரியம் இருந்தா போதும் # உ க


27 என் மனசுல இருக்கறதை எப்படிச்சொல்றதுன்னு தெரியலை.
சில விஷயங்களை சொல்லித்தான் தெரிஞ்சுக்கனும்னு இல்லை # உ க


28 நாம சொந்தம்னு நினைக்கற எதுவுமே நமக்கு சொந்தம் இல்லை.ஒரு துரும்பு கூட சொந்தம் இல்லை # உ க



 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

மொழி ,அபியும் நானும் போன்ற கவித்துவமான படங்களைக்கொடுத்த ராதா மோகன் உப்புக்கருவாடு எனும் அசைவ டைட்டிலை தேர்ந்தெடுத்தது முதல் சறுக்கல்


2 ஹீரோயின் இன்ட்ரோ சீன் ல புலி வேஷம் போட்ட முகத்தோட வருது.சகுனமே சரி இல்லையே# உ க


3 பி சென்ட்டர் ரசிகர்களுக்கான சுமாரான காமெடிப்படம்.இடை வேளை# உப்புக்கருவாடு


4 டாக்டர் ராம்தாஸ் ஜாதி பற்றை நக்கலடிச்சு ஒரு சீன் வெச்சிருக்காங்க.செம # உ க



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1   திரைக்கதை  முழுக்க  காமெடி  மசாலாவைத்தூவி  இருக்கும்  விதம் . படத்தின்  எல்லா கேரக்டருக்குமே  முக்கியத்துவம் கொடுத்திருக்கும் கே பாலச்சந்தர் பாணி  அருமை 


2   அசிஸ்டெண்ட்  டைரக்டருக்கும் , ஹீரோயினுக்கும்  காதல் வரும்  சீன் , பின் ஃபிளாஸ்பேக்கில்  அது  ரிப்பீட் ஆகும்  காட்சியில் ஒரு ட்விஸ்ட் 


3  ஒரு  படம்  ரிலீஸ்  ஆக  எவ்வளவு  சிரமம் , தேவை  இல்லாமல்  தடை  வாங்கும் , தகராறு செய்யும்  டாக்டர்  ராம் தாஸ்  மாதிரி  ஜாதிக்கட்சி ஆட்களுக்கு சவுக்கடி  வீசும்  வசனக்காட்சி  பிரமாதம், அந்த  சீனில்  ஹீரோ கருணாகரன்  நடிப்பு  மார்வலஸ் 




இயக்குநரிடம்  சில கேள்விகள்

தன் மனசுக்குப்பிடிச்ச பொண்ணை (மேரேஜ் பண்ணிக்கப்போற பொண்ணை)யாராவது இன்னொருத்தன் கூட ஜோடியா நடிக்க விடுவாங்களா?.விதிவிலக்கு -செல்வராகவன்( சோனியா அகர்வால்), இயக்குநர் விஜய் ( அமலாபால்).படத்தில் இயக்குநராக வரும் ஹீரோ தன் படத்தில் தன் காதலியை நாயகி ஆக்க முயல்வது ஏனோ? எந்த ஒரு நல்ல காதலன் / உண்மைக்காதலன் தன் கண் முன் தன் காதலி இன்னொரு ஆளுடன் டூயட் பாடுவதை ஏத்துக்குவான் ( என்ன தான் நடிப்புன்னாலும் )



2 பொதுவா நடிகைங்க தொழில் அதிபரை , பசை உள்ள பார்ட்டிங்களைத்தான் லவ்வுவாங்க . மஞ்ச மாக்கான் மாதிரி இருக்கும் அந்த அசிஸ்டெண்ட் டைரக்டரை எப்படி ஹீரோயின் லவ்வுது ? ( விதி விலக்கு தேவயானி - ராஜகுமாரன் , ராதிகா - பிரதாப் போத்தன் )





சி  பி  கமெண்ட்உப்புக்கருவாடு - வசனகர்த்தாவின் ஆளுமையில் ஒரு் காமெடி கதை .பி சென்ட்டரில் க்ளிக் ஆகும்.விகடன் மார்க் =41 ,ரேட்டிங் = 2.75 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -41



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)= ஓக்கே



 ரேட்டிங்=2.75 / 5


ஈரோடு சீனிவாசாவில் படம் பார்த்தேன்


a







a





a




இஞ்சி இடுப்பழகி - சினிமா விமர்சனம்



சின்ன வீடு படத்துல  கே பாக்யராஜ் எடுத்த அதே நாட் தான். தனக்கு வரப்போகும் சம்சாரம் ஜீரோ சைஸ் இடை அழகியா வரனும்னு எதிர்பார்க்கும் ஆள்  எதிர் மாறா பிந்து கோஷ் டைப் பார்ட்டியா அமைஞ்சா என்ன ஆகும்? மேரேஜ்க்கு முன் பொண்ணு குண்டாகி இருந்தா பரவால்லை , உண்டாகித்தான் இருக்கக்கூடாது எனும்  கருத்து தான் படம் /


 அங்கிள் பன் படத்துல ஆல்ரெடி  மொகன் லால் இப்டி ஒரு குண்டு  கேரெக்டர்  பண்ணி இருந்தப்போ யாரும் அதை கண்டுக்கலை. ஆனா அழகு ராணி அஸ்கா உதட்டழகி அனுஷ்கா இப்டி  பிந்துகோஷா வர்றார்னு தெரிஞ்சதும் தமிழன் அப்டியே  பதறிட்டான்.


ஹீரோயின்  சப்ஜெக்ட் படம் இது.அதனால  நாம அப்படியே ஹீரோயின்  கண்ணோடட்டத்தில் தான் படம் பார்க்கனும் ( நாம எந்தக்காலத்துல  ஹீரோவைப்பார்த்தோம் ?) 


ஹீரோ டபுள் ஃபிஃப்டி கேஜி நாயக்கர் மஹால் .உயரமாவும் வளர்ந்து அகலமாவும் வளர்றாங்க. வீட்ல  மாப்ளை பார்க்கறாங்க . எல்லா மாப்ளைங்களும்  பொண்ணு குண்டுன்னு ஒதுக்கிடறாங்க ( தமிழன்  சினிமா ல , பொது இடத்துல  ரசிக்கும்  பெண் செம  கட்டையா இருக்கனும்பான், ஆனா தான் தாலி கட்டும்  பொண்ணு மட்டும் ஸ்லிம்மா இருக்கனும்னு எதிர்பார்ப்பான்) 



அதனால  ஹீரோயின் சைஸ் ஜீரோ ஸ்லிம் ஆக   வில்லனோட  ஜிம்க்குப்போறாங்க . அங்கே  திடீர்னு ஒல்லி ஆகும் இல்லீகல் மருந்து சாப்ட்டு  ஒரு தோழி உயிருக்குப்போராடுது. ஹீரோயின் இன்சிடெண்ட் வெயிட் லாஸ்  போதைக்கு எதிரா விழிப்புணர்வுப்பிரச்சாரம்  மேற்கொண்டு  தோழியை எப்படிக்காப்பாத்தறாங்க என்பது தான் கதை ( படத்தை எப்படிக்காப்பாத்தப்போறாங்களோ? ) 


ஹீரோவா செம ஃபிட்னஸ் ஆர்யா. ஆள்  செம  எனர்ஜெட்டிக்கா  இருக்காரு ( நற நற ) இது ஹீரோயின் ஓரியண்ட்டட் ஃபிலிம் என்றாலும் அனுஷ்கா தான் நாயகின்னு தெரிஞ்சதும் ஒத்துக்கிட்டாராம். வாழ்க அவர் உள்ளம். வந்தவரை அவர் பங்கை கனகச்சிதமா செஞ்சிருக்காரு . ( 2 நாயகிங்க கூட அப்பப்ப ரொமான்ஸ் பண்றதுக்கு கசக்குதா? இதுக்கு  சம்ப்ளம் வேற தனியா ஹூம் ) 


ஹீரோயினா மல்கோவா மாம்பழக்கன்ன அழகி , அஸ்கா  உதட்டழகி அனுஷ்கா .படம் பூரா  இவரை சுத்தி தான்  கதை நகருது ( எங்கே நகருது? ஒரே இடத்துல இல்ல நிக்குது ) செண்ட்டிமெண்ட்ஸ்  சீன்  எல்லாம்  அழுவுது. என்னால  தாங்க  முடியல 


சைடு ஹீரோயினா , வில்லியா ஒயிட் சைட் சோனல் சவுஹான். சோனல்னு பேர் வெச்சதுக்கு கில்மா சேனல்னு வெச்சிருக்கலாம் . கல்யாண விசேசத்துக்குப்போனாக்கூட  லோ ஹிப்  சுடி , லோ கட் டி சர்ட்  தான்  போடுது. தாராள மனசு . பாப்பா  சீக்கிரம் முன்னுக்கு வந்துடும் 


ஊர்வசி  ஹீரோயினுக்கு அம்மா  கேரக்டர். வழக்கம்  போல்  லொட லொட பார்ட்டி 

 வில்லனா பிரகாஷ்  ராஜ் . என்னமோ  மேஜிக் மேன் மாதிரி  கெட்டப் . சுமார்  தான். 


ஒளிப்பதிவு நீரவ்  ஷா. அவர்  திறமைக்கு படத்தில்  வேலை இல்லை . திரைக்கதைக்கே  வேலை இல்லை , அப்புறம் என்ன ? 


கீரவாணி  இசைல  பாட்டெல்லாம்  சராசரி  ரகம்  தான் . பிஜி எம் கூட  சுமார் தான் 


திரைக்கதை , இயக்கம் எல்லாம் கனிகா.எல்லாரும்  ஜிம்க்கு போங்க . வாக்கிங்க் போங்க . சைக்கிளிங்க்  போங்க அப்டின்னு 5  நிமிசத்துல சொல்ல வேண்டியதை  2 1/4  மணி  நேரம்  சொல்றார். சப்பா 











மனதைக் கவர்ந்த  வசனங்கள்

சந்தோசமாக இருக்கும் பெண்கள்தான் அழகான பெண்கள் # இ இ


2 இதெல்லாம் லோக்கல் பஜார்லயே கிடைக்கும்.எக்சைட்டிங்கா ஏதாவது காட்டு.

ஆன்ட்டி.என் கிட்டே அப்டி ஏதும் இல்லையே? # இ இ ( டபுள் மீனிங்)

3 ஆயில் உணவில் அதிகம் ஆனா ஆயுள் குறைஞ்சிடும் #,இ இ

4 90% ஹார்ட் அட்டாக்ஸ் ,ஹார்ட் பிராப்லம்ஸ் சரியா எக்சசைஸ் பண்ணாததாலதான் வருது. # இ இ

5 ஆர்யா = ஏ சி ரூம்ல உக்காந்து ட்வீட் மட்டும் போட்டு சோசியல் சர்வீஸ் பண்றவன் நான் இல்ல #,யாரை தாக்கறாரு ? # இ இ


6 காதலைச்சொல்லும் வழிகள் கடலினும் பரந்தது # இ இ


7 நமக்கு மிகவும் பிடித்தமானவர்கள் எப்போதும் நம்மை விட்டுச்செல்ல மாட்டார்கள் # இ இ


8 வெறும் லாஜிக்கை வெச்சு ஏ டூ இசட் வரைக்கும்தான் யோசிக்க முடியும்.ஆனா கற்பனை க்கு என்றும் எல்லையே இல்லை # இ இ


9 அனுஷ்கா = எப்போ பாரு 8மணி புராணமே பாடறானே? மேரேஜ்க்குப்பின் 8 மணிக்குப்பின் எதுவுமே செய்ய மாட்டானோ? # இ இ


10 என்ன ஆனாலும் சரி.என் ஆர் ஐ எருமையை கட்டிக்க மாட்டேன் -அனுஷ்கா


11 பாசம் இருக்கற இடத்துலதான் கோபம் இருக்கும்.ஆனா என் அம்மா அப்பா என் மேல கோபமே பட்டதில்லை #,இ இ


12 அனுஷ்கா டூ ஒல்லி வில்லி = உனக்கு இருக்கற வேகத்தை பாத்தா இந்தியாவில் இருக்கும் எல்லா கக்கூசையும் நீயே க்ளீன் பண்ணிடுவே போல


13 அழகு முக்கியம் இல்லை.ஆரோக்யம் தான் முக்கியம் # இ இ


14 உன் தலை எழுத்தை நீ தான் எழுதனும்.உன் எதிர் காலத்தை நீ தான் தீர்மானிக்கனும் # இ இ


15 சைஸ் ஜீரோ ஒரு பைத்தியக்காரத்தனம்.இன்சிடென்ட் வெயிட் லாஸ் ஒரு முட்டாள் தனம் # இ இ


16 அரசியல்லயும் மீடியாவுலயும் நிரந்தர நண்பரும் இல்லை.நிரந்தர எதிரியும் இல்லை # இ இ

17 மத்தவங்களுக்காக கஷ்டப்படறவங்க ரொம்ப ரேர் #,இ இ

18 GET FIT ,DONT QUIT

19 போர்க்களம் னு வந்துட்டா தர்மம் எது?அதர்மம் எது? ங்கறது முக்கியம் இல்லை.ஜெயிக்கறது தான் முக்கியம் # இ இ









 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

தியேட்டர் பூரா பொண்ணுங்க கூட்டம்.காலேஜ்க்கு கட் அடிச்ட்டு வந்துட்டாங்க போல.ஆர்யா வரும்போது கை தட்டுற கோஷ்டி மாதிரி தான் தெரியுது.# இ இ


2 ஒருத்தன் காதலி,காதலியோட தங்கச்சியையும் கூட்டிட்டு வந்து நடு சென்ட்டர்ல உக்காந்துக்கிட்டான்.நல்லா இருங்கடே

3 ஓப்பனிங் சீன்ல அனுஷ்கா ஜாக்கெட்க்கு பேக் ல ஜிப் போட்டு விடறாங்க.தெறி ஓப்பனிங் # இ இ

4 சைஸ் ஜீரோன்னு ஒரு குத்தாட்ட்ப்பாட்டுக்கு பிரகாஷ்ராஜ் பிரேக் டான்ஸ் ஆடறாரு.அய்யோ # இ இ

5 பொண்ணு பார்க்க வரும் மாப்ளை கிட்டே தனியா பேச பொண்ணை பெட்ரூம்க்கு அனுப்பறாங்க.இது எந்த ஊர்ல? # இ இ


6 ஓப்பனிங் சீன்ஸ் ல ராஜா ராணி சாயல் தெரியுது # இ இ


7 சாதா காதல் கதை.மிக மெதுவான திரைக்கதை.ஏ சென்ட்டர் ரசிகர்களுக்கு # இ இ இடைவேளை


8 ஆர்யாவுக்கு ஏகப்பட்ட பிகருங்க செட் ஆகுதே எனும் வயிற்றெரிச்சல் அவர் படங்கள் தோல்விஅடைகையில் சரி ஆகிறது # இரண்டாம் உலகம் ,இஞ்சி இடுப்பழகி


9 மீடியம் பிளாப் : இஞ்சி இடுப்பழகி ப்ளாப்ப்பா.... கொஞ்சமாச்சும் தேறாதாண்ணே.."

10 இருக்கு.(தெலுங்குல) ஆனா இல்லை (தமிழ்ல) : lip lock ethum iruka film LA "


11 "அனுஷ்கா இருக்கு : என்ன விஷயம், கதை நல்லா இல்லையா, இல்லை கதையே இல்லையா?"



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1 தெலுங்குப்பதிப்பில் 6 லிப் கிஸ்  சீனாம் .  தமிழ்ல மட்டும்  யு சர்ட்டிஃபிகேட் க்காக  அதை வெட்டிட்டாங்க அதையும்  மீறி  படத்தில்  சில  கிளு கிளு காட்சிகள் , வசனங்கள் . வாழ்க  வளமுடன் 


2 க்ளைமேக்ஸ்  ல  ஏதோ  ஒரு சாக்கை  வெச்சு  கோலிவுட்  விஐபிங்களை  ஒரு சீன்  நடிக்க வெச்சது 


3  படத்தில்  உருப்படியா  ஒரு மெசேஜ்  சொன்னது . பெண்களை  தரக்குறைவாக  கிண்டல் செய்யும்  வசனங்கள் எழுதும்  வாய்ப்பு  இருந்தும்  அதை செய்யாதது 




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  ஹீரோ  ஆர்யா  நிஜமா  யாரை  நேசிக்கறார்னு  தெளிவா  இயக்குநராலயே சொல்ல  முடியலை . 2 ஹீரோயினையும்  சம அளவில்  லவ்வறார் ( அவர் யார் கிடைச்சாலும் லவ்வுவார் என்பது  வேறு விஷயம் , அவர் பர்சனல்  மேட்டர்.  திரைக்கதையில்  தெளிவா  இருக்க  வேணாமா? )


2  ஹீரோயினால்  வாயைக்கட்ட  முடியவில்லை  என்பதை  நாசூக்காக  சொன்னால் போதாதா?  அவரை ஒரு தீனிப்பண்டாரமாக  காட்சிக்கு காட்சி  காட்டிட்டு இருக்கனும்னா? கவர்ச்சி  காட்னா  ரசிக்கலாம். இதை  எல்லாம் எப்டி ரசிக்க? 


3  ஹீரோ  வேற  ஒரு பெண்  கூட  லிப்  கிஸ்  அடிச்சதைப்பார்த்த  பின்பும்  ஹீரோயின் அவர்  மேல்  எந்தக்கோபமும் இல்லாமல்  சகஜமா  இருப்பது  எப்படி?  நிஜ  வாழ்வில்  போட்டு  உலுக்கி  எடுத்துட மாட்டாங்களா? 


4  வில்லன்  அவ்வளவு  சோப்ளாங்கி  யாகவா  இருக்கனும்?  மீடியா  காதுக்கு  விஷயம், போகும் வரை  தேமேன்னா இருப்பான்/?








சி  பி  கமெண்ட் =இஞ்சி இடுப்பழகி = ஆரோக்யமான கதைக்கரு,ஆனால் ஐக்கியம் ஆக முடியாத சுவராஸ்யம் இல்லா திரைக்கதை, விகடன் மார்க் = 40 , ரேட்டிங் = 2.25 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -40



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)= சுமார்



 ரேட்டிங்= 2.25 / 5

ஈரோடு தேவி அபிராமியில் காலேஜ் பொண்ணுங்க கூட்டத்துக்கு நடுவில் பயந்துக்கிட்டே தனி ஆளா படம் பார்தேன். கோபியர் கொஞ்சும் ரமணா