Showing posts with label வைரமுத்து. Show all posts
Showing posts with label வைரமுத்து. Show all posts

Thursday, November 15, 2012

பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி அமைவது விஷப்பரீட்சை - வைரமுத்து பேட்டி

http://www.pkp.in/images/Tamil%20Star%20Families/Vairamuththu_Family.jpg 
விகடன் மேடை - கவிப்பேரரசு வைரமுத்து பதில்கள் !

அன்பு கவிதா, புதுக்கோட்டை. 
 ''இந்த உலகத்தில் முக்கியமான நபர் யார்?'' 


 ''உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தன்னை முக்கியம் என்றுதான் நினைத்துக்கொள்கிறான். ஆனால், இந்த உலகம் யாரையும் முக்கியம் என்று நினைக்கவில்லை. எவனொருவன் இறக்கும்போது இந்த பூமி நின்றுபோகிறதோ அல்லது சில கணங்கள் நின்று சுற்றுகிறதோ, அவன்தான் முக்கியமானவன்.''


ராஜகுமாரன், வேளாங்கண்ணி. 


 ''உங்கள் மகன்களின் திறமைபற்றித் தந்தை நிலையில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?'' 



 ''பிள்ளைகளுக்குப் பெற்றோர் பி.ஆர்.ஓ. ஆகக் கூடாது. முகம் கொடுப்பது நம் பொறுப்பு; முகவரி அவர்கள் பொறுப்பு. திசை காட்டுதல் நம் கடமை; பயணம் அவர்கள் பெருமை. பிள்ளைகளின் பெருமை யைப் பெற்றவரா பேசுவது? அவர்கள் பூவாக இருந்தால், புதருக்குள் பூத்தாலும் வாசத்தால் அறியப்படுவார்கள். கல்வி - கடமை - உண்மை - உழைப்பு - நேர்மை - பண்பு என்பவற்றை ஊட்டி வளர்த்திருக்கிறோம். இனி, அவரவர் வானம்; அவரவர் சிறகு.''



செந்தாமரை காளிமுத்து,  கோயம்புத்தூர்-6. 



''வயதுக்கும் கவிதைக்கும் சம்பந்தம் இருக்கிறதா?'' 


''இல்லை என்பதுதான் எஸ்.பி.பி. என் மீது வைக்கும் குற்றச் சாட்டு. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்’ படத்துக்காகப் பாட வந்தார் எஸ்.பி.பி. வழக்கம்போல் நான் வரிகளைச் சொல்லச் சொல்ல எழுதிக்கொண்டே வந்தார்.


'கண்டார் மயங்கும்
வண்டார் மலரே
நின்றோர் மொழி சொல்லடி-உன்
பின்னே பிறந்து
முன்னே வளர்ந்தது
என்னே செழுமையடி’


என்ற வரிகளைச் சொன்னபோது, எழுதுவதை நிறுத்திவிட்டு இதழ்க்கடையில் குறும்பு கொப்புளிக்க 'வயதுக்கு மீறிச் சிந்திக்கிறீர்கள்’ என்றார்.



'எழுத்தாவது இளமையாய் இருக்கட்டுமே’ என்றேன்.


படைப்பாளன் முதிர முதிரப் படைப்பு இளமையாவதுதான் கலையின் ரசவாதம்.''



கே.பாலு, செய்யாறு. 


''ஜெயலலிதாவைப் பற்றி கலைஞர் எப்போதாவது உங்களிடம் பாராட்டிச் சொன்னது உண்டா?'' 


''ஒரு சம்பவம் சொல்கிறேன்.

கலைஞர் முதலமைச்சர் - ஜெயலலிதா
அம்மையார் எதிர்க் கட்சித் தலைவர். அப்போது குங்குமம் பத்திரிகையில் கேள்வி - பதில் எழுதிக்கொண்டிருந்த எனக்கு ஒரு வினா வந்தது.

'ஜெயலலிதா நடித்ததில் உங்களுக்குப் பிடித்த படம் என்ன?’
'எங்கிருந்தோ வந்தாள்’ - அந்தப் படம் மட்டும் 'கிலோனா’ என்ற இந்திப் படத்தின் தமிழ்ப் பதிப்பாக இல்லாமல் இருந்தால், அப்போதே அவருக்குத் தேசிய விருது கிடைத்திருக்கும்’ என்று விடை எழுதினேன்.



பதிலைப் படித்ததும் ஆசிரியர் குழு மேஜையில் புயல் அடித்தது. 'தவிர்த்துவிடலாமா’ என்றார்கள் என்னிடம். 'கூடாது; அப்படியே பிரசுரிக்க வேண்டும்’ என்றேன் நான்.



கலக்கமுற்றவர்கள் கடைசியில் கலைஞரின் பார்வைக்கு என் பதிலைக் கொண்டுசென்றுஇருக்கிறார்கள். கலைஞர் படித்துப் புன்னகைத்தாராம். 'பிழையில்லையே; பிரசுரிக்கலாமே’ என்றாராம். எழுத்து மாறாமல் அது அச்சானது.



அப்படியானால், என் கருத்துதானே கலைஞரின் கருத்தும். கலை வேறு - அரசியல் வேறு என்பது கலைஞருக்குத் தெரியாதா என்ன?''



எம்.நாகராஜன், முடிகொண்டான். 


' ' இதுவரை நான்’ சுயசரிதையில் விட்டுப்போன சம்பவம் ஏதாவது?'' 



''பதினொரு வயதிருக்கும் எனக்கு. அழுது அழுது கண் சிவந்த என் அத்தைமார்களுள் ஒருவர் என்னை அழைத்தார்.


'வைரமுத்து நான் சொல்றதச் செய்வியா?’


'செய்யிறேன் அத்தை’.


'பக்கத்து ஊரு தாமரைக்குளத்துல இன்ன தெருவுல, இத்தனாம் நம்பர் வீட்டுக் கதவு மேல விடிய்ய சாணியடிச்சுட்டு வீடு வந்து சேரு.’


அத்தையின் சித்தத்தைச் சிரமேற்கொண்ட நான், எங்கள் வீட்டுப் பண்ணையாள் கருத்தக்கண்ணனைத் துணைக்கு அழைத்துக்கொண்டேன். அவன் பிரம்புக் கூடையில் சுமந்து வந்த சாணியை அந்த வீட்டுக் கதவில் 'சப்புச் சப்பு’ என்று எறிந்துவிட்டு வீடு வந்து சேர்ந்தோம். அது இன்னொரு மதத்தைச் சேர்ந்த இளம் விதவையின் வீடு என்று மறு நாள் தெரிந்துகொண்டோம்.


அதுவரை காணாமல் போயிருந்த மாமன் சில நாளில் வீடு வந்து சேர்ந்தார். அதன் பிறகு, அத்தை என்னை எங்கும் சாணியடிக்கச் சொல்லவில்லை.


ஆனால், இலக்கமில்லாத கதவுகளும் கதவு இல்லாத வீடுகளும் மாமனுக்கு அத்துபடி


என்பதை அய்யோ பாவம், அத்தை அறியவில்லை.''


ம.சுயம்புலிங்கம், சென்னை-33. 


''வழக்கமான கேள்விகளால் சலித்துப் போயிருப்பீர்கள். மாறுதலுக்கு ஒரு கேள்வி: சிறுநீர் - சிறுகுறிப்பு வரைக?'' 


''நன்றி.
இந்த உலகம் கடல் நீரால் சூழப்பட்டு இருப்பதுபோல், உயிர்கள் சிறுநீரால் சூழப்பட்டு இருக்கின்றன. சிறுநீர் இழிவானதன்று. மாரடைப்பைத் தடுக்கும் மருந்து சிறுநீரில் தயாரிக்கப்படுகிறது. சிறுநீரில் தங்கமெடுக்க முனைந்த ஆராய்ச்சி வெள்ளை பாஸ்பரஸ் கண்டுபிடிப்பதில் முடிந்தது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரைக்கும் தோலின் மினுமினுப் புக்கு உடம்பெங்கும் சிறுநீர் பூசிக்கொண்டார் கள் இங்கிலாந்துப் பெண்கள்.



சிறுநீரில் ஊறிய புல்லைத்தான் பல் துலக்கப் பயன்படுத்துகிறார்கள் எஸ்கிமோக்கள். கோமேயம்தான் சிறந்த கிருமி நாசினி என்று கண்டுபிடித்தவர்கள் இந்துக்களும் ஆப்பிரிக்கர் களும்.


ஒரு டஜன் எலிகள் கூடி ஒரு நாள் முழுக்கச் சிறுநீர் கழித்தாலும் ஒரு டீஸ்பூன்கூட நிரம்பாதாம். ஆனால், ஒரு யானை ஒரு நாளில் 49 லிட்டர் சிறுநீர் கழிக்கிறதாம்.



கொசுவுக்கும் சிறுநீர் உண்டு. ஆனால், அதன் கழிப்பறைதான் உலகத்திலேயே உயர்ந்தது. மனித உடல்தான் கொசுவின் சிறுநீர்க் கழிப்பறை. உடம்பில் ஊசிபோடும் கொசு, தன் சிறுநீரை உடம்புக்குள் கழித்துவிட்டு அந்தக் காலி இடத்தை நம் ரத்தத்தால் நிரப்பிக்கொள்கிறது.


சிங்கத்தின் சிறுநீர் வாசம் அத்துணை சீக்கிரம் தீராது. காடுகளில் குறிப்பிட்ட எல்லைகளில் சிறுநீர் கழித்துச் செல்லுமாம் சிங்கம். இது என் காடு, இதற்கு மேல் எதிரிகள் வரக் கூடாது என்று எச்சரிக்கை செய்யுமாம் சிங்கத்தின் சிறுநீர் வாசம்.


ஆட்டுக் கிடாய் தன் உடம்பெங்கும் சிறுநீரைப் பூசிக்கொள்ளுமாம். அது வெள்ளாட்டைப் பாலுணர் வுக்கு அழைத்து வெறியூட்டுமாம். ஆடுகளுக்கு 'சென்ட்’ ஆகிவிடுகிறது சிறுநீர்.


மொஹியோ பாலைவனத்து ஆமைகளின் உடம் பில் மூன்றில் ஒரு பங்கு சிறுநீர்தானாம். உடம்பில் நீர்ச் சத்து குறைந்துபோனால், சிறுநீரைத்தான் சுழற்சிக்கு அனுப்புமாம்.


மனிதனின் பிரச்னைகள் ஆரம்பமாவது இரண்டில். சிறுநீர் அதிகம் பிரிவது; மற்றும் சிறிதும் பிரியாதது. அவரவர் சிறுநீர் பருகுதல் அவரவர் நோய்தீர்க்கும் என்பதும் ஒரு மருத்துவ நம்பிக்கை.


எனவே, சிறுநீர் என்பது சிறுமைக்குரிய நீரல்ல. 'சிறுநீர் இன்றியும் அமையாது இவ்வுலகு’.''

http://www.bharatstudent.com/ng7uvideo/bs/gallery/normal/events/kw/2010/sep/vairamuththu-son-wedding-stills/vairamuththu-son-wedding-stills_031.jpg


பழனி பாஸ்கர், மன்னார்குடி. 


''பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி இனிமேல் சாத்தியமா?'' 



''நீண்ட ஆண்டுகளாகக் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கு என் மௌனமே பதிலாக இருந்தது. இன்று அந்தப் போலி மௌனத்தின் பூட்டை உடைக்கிறேன்.
பாரதிராஜா - இளையராஜா இருவரும் தமிழ் சினிமாவில் தடம் சமைத்தவர்கள்; தத்தம் துறையில் தலைமை பூண்டவர்கள். அவர்கள் பெற்ற வெற்றியில்தான் நான் ஒட்டிக்கொண்டேனே தவிர, என்னால் அவர்கள் வெற்றிபெற வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், என் வருகைக்கு முன்னும் பிரிவுக்குப் பின்னும் வெற்றி பெற்றவர்கள் அவர்கள்.



பிரிந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணைய முடியுமா என்கிறீர்கள். ஆனால், ஒரு தலைமுறை கடந்துவிட்டது. சமூகம் இடம்பெயர்ந்துவிட்டது. சரக்கு உன்னதமாக இருந்தாலும் சந்தையின் தேவை மாறிவிட்டது.



இப்போது இணைந்தால் பழைய பாணி எடுபடுமா? அறுபதாம் கல்யாணத்துக்குப் பிறகும் தம்பதிகள் ஒரே அறையில் தங்கலாம். அதற்குப் பெயர் முதலிரவா?



வாத்தியங்களில் இருந்த இசை தொழில்நுட்பத்துக்குத் தாவிவிட்டது. மீண்டும் பழைய பாணியில் பாடல்கள் அமைத்தால் நவீனமாக இல்லை என்பார்கள். நவீனமாக இசையமைத்தால் பழைய பாடல் போல் இல்லை என்பார்கள். ஆகவே, எங்களின் பழைய பாடல்களை ரசித்துக்கொண்டிருப்பதுதான் ரசிகனுக்கு விஷப்பரீட்சை இல்லாத விருந்தாக இருக்கும். எனவே, நாங்கள் இணைவது என்றாவது சாத்தியமாக இருக்கலாம்; இயங்குவது சாத்தியமாக இருக்குமா?''



- இன்னும் பேசுவோம்...

நன்றி 0 விகடன்  


டிஸ்கி -

இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்? - வைரமுத்து பேட்டி

 

http://www.adrasaka.com/2012/12/blog-post_4667.html

நான் ஓர் எழுத்து வியாபாரி - வைரமுத்து பேட்டி @ விகடன்

 




என்னை யார் தாக்கினாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கனும் - வைரமுத்து நக்கல் பேட்டி

 

http://www.adrasaka.com/2012/12/blog-post_13.html

 

தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://www.adrasaka.com/2012/12/blog-post_9476.html

 

 


http://onlysuperstar.com/wp-content/uploads/2011/06/Vaali_Rajini_Vairamuththu.jpg

Saturday, February 25, 2012

ரஜினியின் பாராட்டில் நனைந்த எஸ் ராமகிருஷ்ணன் -இலக்கிய விழா உரை

கனடாவிலிருந்து வழங்கப்படும் இயல் விருது 2011 ஆம் ஆண்டுக்கு இலக்கியத்தில் வாழ்நாள் சாதனைக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது. அதற்கான பாராட்டு விழா சென்னை காமராசர் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வருகைதந்து பாராட்டு விருதை எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கிய ரஜினிகாந்த், தனக்கும் அவருக்கும் உள்ள நட்பைப் பற்றி சிலாகித்துப் பேசினார். 

வரவேற்புரையாற்றிய கவிஞர் மனுஷ்யபுத்திரன், "எஸ்.ராமகிருஷ்ணனுடன் சமகாலத்தில் ஒப்பிடக்கூடிய இன்னொரு எழுத்தாளரைக் காணமுடியாது. இளைஞர்களுக்கு உலக சினிமாவை, உலக இலக்கியத்தை அறிமுகம¢ செய்யக்கூடியவராக அவர் இருக்கிறார். நமது மொழிக்கும் நமது இலக்கியத்துக்கும் எஸ். ராவுக்கு அளிக்கப்பட்டிருக்கிற விருது பெருமை சேர்க்கிறது. அதைவிட அந்த விருதுக்கே கிடைத்த கௌரவம் என்று சொல்லலாம்" என்றார். 


அடுத்து பேசிய செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ. பெருமாள், "இந்த விழாவிற்கு சூப்பர்ஸ்டார் ஏன் வருகிறார் என்று என்னிடம் நண்பர்கள் கேட்டார்கள். ராமகிருஷ்ணனுக்கு பாபாவே அவர்தான் என்று அவர்களிடம் சொன்னேன். எழுத்தாளர்களை மதிக்காத இந்தக் காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வந்திருந்து வாழ்த்துவது வியப்புக்குரிய விஷயம். பெரிய மரியாதையையும் பெரிய மகிழ்ச்சியையும் இந்த விழா ஏற்படுத்தியிருக்கிறது. புதிய எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக எஸ்.ரா இருக்கிறார்" எனறு பாராட்டியவர் அவரது நாவல்களைப் பற்றி விரிவாகப் பேசினார்.


வெ.இறையன்பு, உலக இலக்கியங்களை வாசிப்பதில் உலகின் சிறந்த திரைப்படங்களைப் பார்ப்பதில் எஸ்.ரா ராட்சத பசியுள்ளவராக இருக்கிறார் என்று சுட்டிக்காட்டினார். நிறைய விருதுகளைப் பெற்ற பின்னரும்கூட அவர் அமைதியாக இருக்கிறார் என்றார்.


 நான் பெரிதும் நேசிக்கும் எழுத்தாளராக எஸ். ரா இருப்பதாகச் சொன்னார் கவிஞர் வைரமுத்து, "சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த விழாவிற்கு வந்திருப்பது பற்றி ஆச்சரியமாகப் பேசுகிறார்கள். ஓர் உண்மையைச் சொல்லவேண்டும். ரஜினிகாந்த் ஒரு மிகச்சிறந்த வாசகர். அவரை உணர்ந்து சொல்கிறேன். நிறைய கதைகள் அவரிடம் இருக்கின்றன. ஞானபீடம் விருதுபெற்ற ஜெயகாந்தனை முதல் நாள் இரவே வீட்டுக்குப் போய் வாழ்த்தி வந்தவர் அவர். இங்கு வந்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.


 எஸ். ராமகிருஷ்ணன் அனுபவங்களைத் தேடி பயணம் செய்துகொண்டே இருக்கிறார். படித்துக்கொண்டே இருக்கிறார். படிக்காத ஒருவர் பெரிய படைப்பாளியாக இருக்கமுடியாது. படிப்புதான் மழை. படிப்புதான் ஜீவன். என்னைவிட அதிகம் படித்தவராக எஸ். ரா இருக்கிறார் என்பதை நேர்மையோடு ஒப்புக்கொள்கிறேன்" என்றார்.


அடுத்து ப்ரெண்ட்லைன் ஆசிரியர் விஜயசங்கர், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஆகியோர் பேசினார்கள். 


தனது ஏற்புரையில் எஸ். ராமகிருஷ்ணன், ''இது என் வாழ்நாளில் மறக்கமுடியாத நாள். ஒரு மகத்தான ஆத்மாவாக ரஜினிகாந்த் இருக்கிறார். அவரை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது என்றால் குறையாத தாயன்பை வைத்திருக்கிறார். சிறந்த நடிகராக சிறந்த வாசகராக இருக்கிறார். வரலாற்றைத் தேடித்தேடி படிக்கிறார். பல மூத்த படைப்பாளிகளை நேரில் சென்று பார்த்திருக்கிறார். அவர் வந்திருந்து வாழ்த்தியதை பெருமையாக நினைக்கிறேன். எனக்குக் கிடைத்திருக்கிற இந்த விருது தமிழ் மொழிக்குக் கிடைத்த விருதாக நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

ரஜினிகாந்த் பேசியபோது, "என்னோட ப்ரெண்ட் ஒருத்தன் கேட்டான். எழுத்தாளர் பாராட்டுவிழா போஸ்டரில் உன் பெயரைப் பார்த்தேன். என்னால் நம்பமுடியவில்லை. உண்மையா? என்று கேட்டான். நான் வந்திருப்பது சந்தோசமாக இருக்கிறது. நான் பார்த்த சபைகள் வேறு. இந்த சபையில் பெரிய எழுத்தாளர்கள் மீடியாக்காரர்கள் வந்திருக்கிறார்கள். மைக் முன்னால் வந்தாலே எனக்கு மொழி மறந்துபோய்விடுகிறது.


 தமிழ், கன்னடம், தெலுங்கு தெரியும். ஆனால் எதுவும் முழுமையாகத் தெரியாது. ஆங்கிலம் தெரியும். அதுவும் அரைகுறைதான். இப்போது தமிழ் வார்த்தைகள் மறந்துபோய்விட்டன. எப்படி எஸ். ராமகிருஷ்ணன் நண்பரானார் என்பதைச் சொல்லவேண்டும். எனக்கு உடல்நலம் சரியில்லாமல் போனபோது என்னைப் பார்க்க பலரும் விருப்பப்பட்டார்கள். யாரும் வரவேண்டாம். நானே வருகிறேன் என்று சொன்னேன். ஒருநாள் எஸ்.ராவைச் சந்திக்கலாம் என்று போனில் கேட்டேன். அப்போது ரஷ்யாவில் இருப்பதாகச் சொன்னார். மறுநாள் ராமேஸ்வரத்தில் இருந்தார்.


 ஏழு நாட்களுக்கு முன்புதான் சென்னையில் இருந்தார். அவரது வீட்டிற்குப் போய் அவரை அழைத்துக்கொண்டு பேசிக்கொண்டே சென¢னை முழுவதும் ஒரு ரவுண்ட அடித்தோம். பாபா படத்தில் சொர்க்த்தை விஷூவலாக எப்படி காட்டமுடியும் என்பதற்காக எழுத்தாளர் சுஜாதா சொல்லி, அவரிடம் பேசினேன். எனக்குத் தெரியாத பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டே இருந்தார். பிரமித்துப்போனேன்.


 அவருடன் ஆந்திரா, கர்நாடகா என்று பல ஊர்களில் சுற்றியிருக்கிறேன். எந்த இடத்தைப் பார்த்தாலும் குழந்தையைப்போல ஆச்சரியமாகப் பார்த்துப் பேசுகிறார். எழுத்து என்பது கடவுள் கொடுத்த வரம். குடும்பத்தைப் பற்றி கவலைப்படாமல் அவர் எழுதிக்கொண்டே இருக்கிறார். எதிர்காலத்திலும் நிறைய எழுதவேண்டும்" என்று பல ஆன்மிக தத்துவ கதைகளை எடுத்துக்காட்டி சுவாரசியமாகப் பேசினார். 

 நன்றி - த சண்டே இந்தியன்