Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

Monday, October 13, 2014

ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நாட்டுக்கு நல்லது: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு பேட்டி

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் | கோப்பு படம்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் | கோப்பு படம்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பதுதான் அவருக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
’தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:
ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி நடக்கும் போராட்டங்களை எப்படி பார்க்கிறீர்கள்?
தவறு செய்தவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் எப்படியும் தண்டனை கிடைக்கும் என்பது இந்தத் தீர்ப்பின் மூலம் உறுதியாகி இருக்கிறது. ஆனால், அவரை விடுதலை செய்யக் கோரி நடக்கும் போராட்டங்கள் தன்னிச்சையாக நடக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிமுக பிரபலங்களால் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகிறது என்றுதான் சொல்ல முடியும்.
2ஜி ஊழல் வழக்குக்கு பயந்துதான், இந்தத் தீர்ப்பை திமுக விமர்சிக்கவில்லை என்று கூறப்படுகிறதே?
2ஜி வழக்கில் நீதிமன்ற விசாரணை நடந்துகொண்டிருக் கிறது. வழக்கின் போக்கைப் பொறுத்துதான், இதில் தொடர்புள்ளவர்களின் நிலை குறித்து பேச முடியும். ஆனால், முதலில் மவுனமாக இருந்த திமுக தலைமை, கடந்த ஒரு வாரமாக, ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்ததால், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக சில கட்சிகள் பிரச்சாரம் செய்கிறதே?
அரசியல் வெற்றிடம் என்பதைவிட, தமிழக அரசியல் சூழல் மாறியிருக்கிறது என்பதுதான் உண்மை. இதைப் பயன் படுத்தி, தமிழகத்தில் காமராஜர் காலத்தில் காங்கிரஸுக்கு இருந்த செல்வாக்கை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். இதுவரை காங்கிரஸார் இதற்கு தயாரானார்களா என்று சொல்ல முடியவில்லை. ஆனால், இந்த நேரத்திலாவது காங்கிரஸை வலுப்படுத்த தலைவர்கள் தயாராக வேண்டும்.
காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் ஜி.கே.வாசன்தான் என அவரது ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்வது சரியா?
காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் ஜி.கே.வாசன் என்று கூறுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு காங்கிரஸ் தயாராக இருக்கிறதா என்பதை யோசிக்க வேண்டும். முதலில் அதற்கு தயாராகிவிட்டு, முதல்வர் வேட்பாளர் பற்றி பேசலாம்.
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பிடிப்போம் என பாஜக உள்ளிட்ட சில கட்சிகளின் தலைவர்கள் கூறுகிறார்களே?
அரசியல் கட்சிகள், வாய்ப்பு கிடைக்கும்போது, தங்கள் கட்சியை வளர்க்கப் பார்ப்பார்கள். ஆனால், எவ்வளவு முயற்சித்தாலும் குட்டிக்கரணமே போட்டாலும் தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது.
நடிகர் ரஜினிகாந்தை இழுக்க பாஜக தலைவர்கள் முயற்சிப்பது குறித்து?
ரஜினிகாந்த் எல்லோருக்கும் பொதுவானவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழக மக்களும் தலைவர்களும் அவரை நேசிக் கின்றனர். எனவே, மதசார்பு கட்சியான பாஜகவுக்கு ரஜினி வரமாட்டார் என நினைக்கிறேன். தமிழக மக்களும் மதசார் பின்மையை எப்போதும் கடை பிடிப்பவர்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு தேர்தலிலும் அதை நிரூபித்து வருகின்றனர். இதை ரஜினி அறிந்திருப்பார் என நினைக்கிறேன்.
மோடியைவிட ரஜினி செல்வாக்கு மிக்கவர் என்று நினைத்து, அவரை பாஜக அழைக்கிறதா?
மோடி பிரபலமானவர் என்பதையே நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அவருக்கு எங்கும் செல்வாக்கு இல்லை. மோடி அலை என்பதே ஒரு மாயை. மோடியை மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தால், இடைத் தேர்தலில் குஜராத்திலும் ராஜஸ்தானிலும் பாஜக தோற்று, காங்கிரஸ் எப்படி ஜெயித்தது.
ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நினைக்கிறீர்களா?
ரஜினியைப் பொறுத்தவரை, மக்கள் மத்தியில் பிரபலமானவர். நல்ல மனிதர். மதசார்பு கடந்து, அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் அவரை நேசிக்கின் றனர். எனவே, அவர் ஒரு கட்சிக்குள் தன்னை அடைத்துக் கொள்ளமாட்டார் என்று நினைக்கிறேன். அவர் அரசியலுக்கு வராமல் இருப்பதே அவருக்கும் நல்லது, தமிழ்நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது. 


இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். 


thanx - the hindu


Friday, May 23, 2014

கோச்சடையான் - சினிமா விமர்சனம்


 கோட்டையப்பட்டினம் நாட்டின்  தலைமைத்தளபதி  கோச்சடையான் தன் படை வீரர்களுடன் போருக்குப்போறார். அங்கே வஞ்சகமா எதிரி நாட்டு ஆட்களால் விஷம் வெச்சு அவர் வீரர்கள் சாகும் தருவாயில் இருக்காங்க . விஷ முறிவு  மூலிகை மருந்துக்கு முயற்சி பண்றப்போ  எதிரி “ படை வீரர்கள் எனக்கே கொடுத்துடனும், டீ லா?  நோ டீலா? என்கிறார்.வீரர்களை தானமா கொடுத்துட்டு நாட்டுக்குத்திரும்பும் தளபதி தன்  மன்னனால்  தேச துரோகி பட்டம் சுமத்தப்படறார். 

 அதிமுக ல  ஓபிஎஸ் ஜெ வை விட நல்ல பேர் எடுத்தா ஜெ வுக்கு பிடிக்குமா? அது மாதிரி மன்னரை விட  தளபதிக்கு நாட்டில் நல்ல பேரு. இது மன்னருக்கு பிடிக்கலை . சமயம் பார்த்திட்டிருக்காரு த்ளபதியைப்பழி வாங்க . இந்த சான்ஸ்  கிடைச்சதும்  த்ளபதிக்கு மரண த்ண்டனை விதிக்கறார். 


கோச்சடையான் -ன் மகன்   எதிரியை எப்படிப்பழி வாங்கறார் ? என்பதே மீதிக்கதை . 

 சுருக்கமாச்சொல்லப்போனா  அப்பாவை அநியாயமாக்கொன்னவங்களை ப்பழி வாங்கும் மாமூல் ப்பழைய கதைதான் . 

ஆனால் சவுந்தர்யா வின்  உழைப்பு , முயற்சி , பட்ட பாட்டுக்கு எல்லாம் நல்ல பலன் . கே எஸ் ரவிக்குமாரின்  திரைக்கதை  , வசனம்  வரலாற்றுப்பின்னணியில் இருந்தும்  போர் அடிக்காமல்  போகிறது 

ஹீரோ வா த ஒன் & ஒன்லி  சூப்பர் ஸ்டார் ரஜினி . ஓப்பனிங்க் ஷாட்டில்  குதிரையில்,  வரும்போது ,  அப்பா  ரஜினி  ஓப்பனிங்க்  சீன் , க்ளைமாக்ஸில் 3 வது ரஜினி ஓப்பனிங்க் சீன் என தான் ஒரு மாஸ் ஓப்பனிங்க் ஹீரோ  என்பதை நிரூபிக்கிறார் . அவர் நடை , தோற்றம் எல்லாம்  முடிந்தவரை அப்படியே இருக்கு . குறிப்பா அவர் கம்பீரக்குரல் , ஸ்டைலிஸ் கலக்கல் .  அவர் பஞ்ச் டயக்லாக் பேசும்போது மட்டும்   சவுண்ட் எஞ்சினியர் ஸ்பெஷல் எஃபக்ட் கொடுத்து  ரசிகர்களைக்கை தட்டத்தூண்டுகிறார்


 ஹீரோயினாக   தீபிகா படுகோன் . மெழுகு பொம்மை மாதிரி அழகிய வடிவழகு  கொண்டவரை  நிஜமாகவே  பொம்மை  மாதிரி ஆக்கி விட்டார்கள் . அய்யோ பாவம் 

 பாடல் காட்சிகள்  பிரம்மாண்டம் . லொக்கேஷன் செலக்சன் குட் 


 ஏ ஆர் ரஹ்மாந்ன் இசை     குட் . பின்னணி இசை யில் எப்போதும்  இரைச்சல் .  கொஞ்சம்   அமைதியா விடவே மாட்டேன் என அடம் பிடிக்கிறார் 


 சரத் குமார் வந்து திரையில்  தோன்றும்போது  ராதிகாவுக்கே அடையாளம்  தெரியாது . என்ன கொடுமை மாயா இது ?



 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1.  கோச்சடையான்  கேரக்டர் வடிவமைப்பு , அவர் பேசும்  கூர்மையான  டயலாக்ஸ்  கலக்கல்  ரகம் 

2   படம் போட்ட 10 நிமிடங்களில்  இது அனிமேஷன் படம் என்பதை மறந்து  கதைக்குள் ஆடியன்சை அழைத்துச்செல்லும்  லாவகம்


3  இண்ட்டர்நேசனல் மார்க்கெட்டுக்காக புக் செய்தாலும் ஏ ஆர் ரஹ்மானிடம் ட்யூன் வாங்கிய சாமார்த்தியம் . பார்த்தாயா? என் ரத கஜ துரக பதாதிகளை என ரஜினி பேசும்போது பின்னணி இசை கலக்கல் . அரங்கம் அதிர்கிறது . குட் பிஜிஎம்





இயக்குநரிடம் சில கேள்விகள் 

1.  எதிரியின் மகன் என்பது  தெரிந்தும் நாசர் ஏன்  ரஜினியை த்ளபதியாக தன்னுடன் வைத்திருக்கிறார் ? அவர் பழி வாங்க வருவார்  என தெரியாதா? 


2  என் தங்கச்சி  உனக்கு , உன் தங்கச்சி எனக்கு என பொண்ணு குடுத்து  பொண்ணு  எடுப்பதில்  என்ன  தியாகம்  இருக்கு ? வீரம் இருக்கு ? 


3  பொண்ணைப்பெத்த சாதா ஆளே இப்பவெல்லாம் ஜாக்கிரதையா இருக்கும்போது   ஒரு மன்னர்  இளவரசியை அப்டி அசால்ட்டா தளபதியை லவ்வ விடுவாரா?  

4  விஷம்  வைப்பவன் வெச்சுடறான். எல்லாரும்  சாப்பிடறாங்க . டக்னு சாகாம எதிரியிடம்  போய் ரஜினி டயலாக் எல்லாம் பேசும்வரை கிட்டத்தட்ட  2 மணி  நேரம் எப்படி உயிரோட இருக்காங்க ? அது என்ன ஸ்லோ பாய்சனா?


5  எல்லா கேரட்கர்சும் நடக்கும்போது  காலை  அகட்டி வெச்சு நடப்பது ஏன் ? டெக்னிகல் ஃபால்டா?


மனம் கவர்ந்த வசனங்கள்



1. ஒரு வேளை உணவுக்கே இப்படி ஓடுறாங்களே, இவங்களுக்கு 3 வேளை உணவு கொடுத்துப் பாருங்க.. எப்படி ஓடுறாங்கண்ணு #கோச்சடையான்"


2 கோச்சடையான் தனிமனிதன் அல்ல,.. அவன் ஒரு நாடு -//"


3 தெளிவுரையும், முடிவுரையும் தெளிந்த நீரோடையாக தெரிந்தபிறகு முன்னுரை எதற்கு? #கோச்சடையான்"


4 வாய்புகள் அமையாது- நாம்தான் அமைத்துக்கொள்ளவேண்டும்! #கோச்சடையான்"


5 : மண்ணை ஆள்பவன் மன்னனல்ல; மண்ணில் இருக்கும் மக்களின் மனதை ஆள்பவனே மன்னன் ! #கோச்சடையான்"



=========


6 "ராணா, நீ பகல் கனவு காண்கிறாய்..


 " "ஹாஹாஹா... கனவு காண்பவனுக்கு பகலென்ன இரவென்ன? " #கோச்சடையான்"


--------------


7  நாகேஷ் - நீ சும்மா வந்து நின்னாலே போதும்


============


8  நாசர் - ராணா! நீ புத்திசாலி.எதை யாரிடம் எப்போ எப்படி கேட்கனும் எனும் சூட்சுமம் அறிந்தவன்


9  உங்க நாடு தேவை இல்லை.நாடி வந்தவளே போதும் # சரத்


10 ரஜினி - (இடைவேளை பஞ்ச்) = என்னிடமிருந்து நீ தப்பவே முடியாது # வெளில கேட் சாத்தி இருக்கு தியேட்டர்ல.வாட் எ டைமிங்


11  ஆட்சியில் இருப்பவர்கள் அஞ்சக்கூடாது.நம்மை விஞ்சக்கூடியவர்கள் தடுமாறும் நாள் வரும்.அது வரை காத்திருப்போம் # நாசர்


12 எதிரிகளை ஒழிக்க எத்தனையோ வழி உண்டு.முதல் வழி மன்னிப்பு # ரஜினி


13  எதிரியிடம் உதவி கேட்பது சரியா? 



ரஜினி - எனக்கு என் மக்களின் உயிர் தான் முக்கியம்



14  நாசர் - இனி நீ கனவே காணமுடியாது



ரஜினி - உறங்கினால்தானே கனவு வர/? உன்னை ஒழிக்கும் வரை எனக்கு உறக்கம் இல்லை 


15 ரஜினி - நாடகத்தை ஆரம்பித்தது நீ! அதை கீழே இருந்து நடத்தி முடிக்க இருப்பவன் நான்



16 நாசர் - நீ தண்ட.னைக்கைதி 



ரஜினி - நீ தண்டனை பெறப்போகும் கைதி 


17  நாம் நண்பர்கள் என்பதை மறந்து விடாதே



 ரஜினி - நட்பை விட எனக்கு நாடு முக்கியம் # மோடி ,ஜெ ,ராஜபக்சே ரிலேட்டட் டயலாக்


படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S

1. இது ஒரு பொம்மைப்படம் என பகடி செய்பவர்களுக்கு ரஜினி யின் பஞ்ச் பாடல் - நீயும் பொம்மை .நானும் பொம்மை .நினைச்சுப்பார்த்தா எல்லாம் பொம்மை


2 ஒரு ரஜினி ரசிகர் " தலைவரோட ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் பிரமாதம்" கறார்.ரஞ்சித்தை சொல்றாரா? ஜீவா வை சொல்றாரா?


கோச்சடையான் ரிலீஸ் க்கு முன் = ரஜினி த மாஸ் ஆன பின் = ரஜினி தமாஸ் # சும்மா\\\


4  
கூட்டத்தைப்பார்த்துட்டு ஒரு பைக்வாலா " அட.இன்னைக்கு டோரா புச்சி ரிலீசா?" ன்ட்டுப்போறாரு.அடங்கோ


5  டைட்டில் ல ஏ ஆர் ரஹ்மான் பேர் போடும்போது ஒரு " கொடி பறக்குது # # சவுந்தர்யா சூட்சுமம்


6 ஓப்பனிங் சீன் ல ஒரு அதல பாதாளத்தை அசால்ட்டா குதிரை ல ரஜினி தாண்டறாரு # ஏதோ குறியீடு



7 ஒளிப்பதிவு ,3 டி எபக்ட் ,காஸ்ட்யூம் டிசைன்ஸ் கனகச்சிதம்


8 ரஜினி யின் குரலுக்கு மட்டும் 16 வயதினிலே


9 இடையில் இருந்து உடைவாளை உருவும் சீன் அக்மார்க் ரஜினி பிரான்ட்


10   சரத்குமார் ,தீபிகா படுகோனே இருவர்க்கும் வார்ப்பு சரி இல்லை.சரத் அடையாளமே தெரியவில்லை.நாகேஷ் பாடிலேங்க்வேஜ் குட்


11 பாடல் காட்சியில் ஆர்ட் டைரக்சன் ஷங்கர் படத்துக்கு இணையான அழகியல் ரசனை # வெல்டன் சவுந்தர்யா


12  ரஜினியைத்தவிர வேறு யாருக்கும் தோற்றம் ,வார்ப்பு எடுபடாதது படத்துக்குப்பின்னடைவு # பொம்மைகள் போல்


13  கோச்சடையான் = இடைவேளை .ஏ சென்ட்டர் ரசிகர்கள் ,குழந்தைகளை கவரும்



14  பொம்மை தீபிகா வை லோ கட் ஜாக் ல காட்டும்போது அதை ரசிக்கலாமா? கூடாதா? னு குழப்பம் அடைவான் மிடில் கிளாஸ் தமிழன்


15 ரஜினி சீரியசா பரத நாட்டியம் ஆடறாரு.சலங்கை ஒலி கமல் பாத்தா வருத்தப்படுவார்



16  துயில் எழுவதில் சூரியனை ஜெயிப்போம் னு ரஜினி சாதாரணமாதான் சொல்றாரு.திமுக வை சொல்றாரோனு டவுட்


17 படம் 118 நிமிடங்கள்


18 சூப்பர் ஸ்டார் டைட்டில் அதகளம் இன் 3 டி


19 அண்ணன் சேனா ,தம்பி ராணா ( ஹீரோ) ,அப்பா கோச்சடையான் # 3



20  பலரும் கிண்டல் செய்தது போல்  கோச்சடையான் பொம்மைப்படம் போல் எல்லாம் இல்லை. நல்ல மசாலாப்பாடம் போல் இருக்கு.ஓடி விடும்.வசூல் அள்ளிடும்






சி பி கமெண்ட் -கோச்சடையான் - சவுந்தர்யாவின் உழைப்பு, ரஜினி மாஸ், வாய்ஸ், வசனம், திரைக்கதை + , 
பொம்மை ப்படம் என்ற மக்கள் மவுத் டாக் - 

விகடன் மார்க் =42 ,ரேட்டிங்க் =2.75 / 5


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =42





குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் = 2.75 / 5 


கோச்சடையான் திரைக்கதை நல்லாஇருக்குனு பாரீன் ரிசல்ட் ;-)))




Embedded image permalink a


கோச்சடையான் @ ரம்பா தியேட்டர்,சத்திரம் பஸ் நிலையம் எதிரே,திருச்சி.ரசிகர் ஷோ @ 10 15am  




Embedded image permalinka
 ரஜினி த மாஸ்.2 போலீஸ் வேன் பாதுகாப்புக்கு
ரஜினி ரசிகர்கள் உற்சாக டான்ஸ்
Embedded image permalink
 ரஜினி ரசிகர்கள் உற்சாக டான்ஸ்aa



a









 a




 a





a




Thursday, December 12, 2013

ரஜினி ரகசியங்கள் 12


மார்லன் பிராண்டோ மறைந்தபோது, துயரம் தாங்காமல் ஒரு வாரத்துக்கு அழுத ரசிகர் அவர். இத்தனைக்கும் பிராண்டோ நடித்த ஒரு படத்தைக்கூட அவர் பார்த்தது இல்லை. பின் எப்படி இவ்வளவு நேசம் என்று கேட்டபோது, பிராண்டோவின் பேட்டி ஒன்றைப் பார்த்து அவருக்கு ரசிகரானதாகச் சொன்னார் அவர்.


‘‘உங்கள் கதாபாத்திரத்துக்கான உடைகளை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?’’ என்று நிருபர் கேட்டபோது, “அமெரிக்கச் செவ்விந்தியர்கள் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறார்கள்” என்று மணிக் கணக்கில் பதில் அளித்து நிருபரை பிராண்டோ வெறுப்பேற்றிய பேட்டி அது.


ஒரு சினிமா நாயகனை மக்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் தேவை இல்லை. பிராண்டோ சொன்னதுதான்.‘‘நல்லவனோ, கெட்டவனோ… மக்களுக்குக் கொண்டாடுவதற்குக் கட்டாயம் ஒரு நாயகன் தேவை. அவனைப் பற்றிப் பேசுவதும் கொண்டாடுவதும் அவர்களுக்கு முக்கியம்.’’


ஆனால், ஒரு நாயகன் கொண்டாடப்படும் பின்னணி முக்கியமானது. அது சமூகத்தின் மனநிலையையும் சேர்த்து நாம் பார்க்க உதவுகிறது.


எம்.ஜி.ஆர். - ரஜினி


சுதந்திரத்துக்குப் பின் தேனாறும் பாலாறும் ஓடும் என்று உருவாக்கப்பட்ட மாயைகள் உடைந்து, பணக்காரர்களும் பண்ணையார்களும் கொட்டம் அடித்தபோது, திரைப்படங்களில் அவர்களைத் தட்டிக்கேட்ட நாயகர்கள் உச்சத்துக்குப் போனார்கள். திரையில் அறநெறிகளுடன் ‘வாழ்ந்து காட்டிய’ நாயகர்கள் மக்கள் தலைவர்க ளாகப் பார்க்கப்பட்டார்கள். எம்.ஜி.ஆர். அப்படித்தான் ஜெயித்தார்.


ரஜினி விஷயத்தில் நடந்ததோ தலைகீழ். இந்தியா கலாச்சாரப் பாய்ச்சலுக்குள்ளான காலகட்டம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மீறல் கனவுகளை, ஆழ்மன ஆசைகளைத் திரையில் அநாயசமாக நடத்திக்காட்டினார் ரஜினி. திரையில் அவர் சாமானியராக இருந்தார். சாமானியர்களின் முரட்டுத்தனத்தையும் அப்பாவித்தனத்தையும் பிரதிபலித்தார். சாமானியராக இருந்துகொண்டே சாமானியர்களால் கற்பனைசெய்யக்கூட முடியாத அற்புதங்களை நிகழ்த்தினார். முக்கியமாக, சொந்த விஷயத்தில் தவறுகளோடும் ஒருவன் அடுத்தவர்களுக்கு நல்லவனாகவும் நாயகனாகவும் இருக்க முடியும் என்று காட்டினார். அவருடைய ஆரம்ப கால, பாசாங்கற்ற நடவடிக்கைகள் அவருடைய பிம்பத்துக்கு மேலும் வலுசேர்த்தன.


ரஜினி கோலோச்சத் தொடங்கிய 1980-கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிசுகிசு. ரஜினிக்குப் பெண் மோகம் அதிகம் என்று பத்திரிகைகள் எழுதியபோது, ரஜினி ஒரு பேட்டியில் சொன்னார். ‘‘ஆமாம், உண்மைதான். இதைச் சொல்றதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நான் யாரையும் தேடிப் போகலை. வற்புறுத்தலை. கஷ்டப்படுத்தலை. யாருக்கும் நான் பிராமிஸ் பண்ணலை... யாரையும் ஏமாத்தவும் இல்லை.’’


உதை விழும்


ரஜினியின் திருமணம் இன்றைய தலைமுறையினர் பலருக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடியது. ரஜினி, லதா இருவரின் குடும்பங்களையும் சேர்ந்த சிலர் மட்டும் பங்கேற்ற நிகழ்ச்சி அது. திருப்பதி கோயிலில் நடந்தது. அதிகாலையில் திருமணத்தை முடித்தவர், காலை 10 மணிக்கு எல்லாம் படப்பிடிப்புக்குப் போய்விட்டார்.


திருமணத்துக்கு முன் பத்திரிகையாளர்களை வீட்டுக்கு அழைத்திருந்தார் ரஜினி. முன்கூட்டியே, அவரும் லதாவும் மாலையோடு இருக்கும் படம் ஒன்றை அவர்களிடம் கொடுத்து, ‘‘குறிப்பிட்ட சிலரை மட்டும்தான் அழைச்சு இருக்கேன்னு சொல்லி, திருப்பதி கோயில்ல கல்யாணத்துக்கு ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கியிருக்கேன். என்னோட கல்யாணம் நடந்து முடிஞ்சதும் நீங்க இந்த போட்டோவைப் பயன்படுத்திக்கங்க. தயவுசெஞ்சு திருப்பதிக்கு யாரும் வந்துடாதீங்க’’ என்றார். அப்போது, ‘‘வந்தா?’’ என்றார் ஒரு நிருபர். ‘‘உதைப்பேன்’’ என்று சொன்னார் ரஜினி.


அருகில் இருந்த இன்னொரு நிருபர் ‘‘இந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தாதீங்க... அதை நாங்க பப்ளிஷ் செஞ்சுட்டா, பின்னால அசிங்கமா போயிடும்’’ என்று சொன்னபோது, ரஜினி சொன்னார். ‘‘உங்களோட ஓப்பன் அப்ரோச் எனக்குப் பிடிச்சிருக்கு. ஐ யாம் வெரி ஸாரி. ஆனா, இப்போ ஸாரி சொல்லிட்டேன்னு கல்யாணத்துக்கு வந்துடாதீங்க. அங்கே கேமராவோட யாரையாவது பார்த்துட்டா உதைக்கறதைத் தவிர எனக்கு வேற வழி இல்லை.’

மலராத முட்கள்


நம்மில் பலரையும்போல, ‘முள்ளும் மலரும்’ ரஜினிதான் ரஜினிக்கும் பிடித்தமானவர். இயக்குநர் மகேந்திரன் இன்றைக்கும் அவரை இயக்கியவர்களிலேயே அவர் பெரிதும் மதிப்பவர். ஆனால், ஒருகட்டத்தில், ஒரு மாபெரும் பொழுதுபோக்குக் கலைஞனாக அவர் உருவெடுத்தபோது, தன்னுடைய படங்கள் முழுக்கப் பொழுதுபோக்குக்கானவை என்ற முடிவை அவர் எடுத்தார். தன்னுடைய படங்கள்குறித்துப் போலியான மதிப்பீடுகள் ரஜினியிடம் இல்லை.


‘‘ஆயிரக் கணக்கானவங்க வாழ்க்கை இதுல இருக்கு. என்னை நம்பிப் பணம் போடுறவங்களுக்கு, எனக்குப் பணம் கொடுக்குறவங்களுக்கு, திரும்ப நான் பணம் சம்பாதிச்சுக் கொடுக்கணும். அவங்க நடிக்கவைக்கிறாங்க… நான் நடிக்கிறேன். அவ்ளோதான். இதிலே எந்தக் குழப்பமும் இல்லை’’ என்றார்.


மாபெரும் சுதந்திரம்


ஒரு பேட்டியில் மோகன்லாலிடம் கேட்டார்கள்: ‘‘ரஜினிகாந்தைப் போல வழுக்கைத் தலையோடும் நரைத்த முடியோடும் உங்களால் வெளியே வர முடியுமா?’’


மோகன்லால் சொன்னார்: ‘‘ரஜினி எப்படி வேண்டுமானாலும் வரலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. ஏனென்றால், மக்கள் அவரை அப்படித்தான் எதிர்பார்க்கிறார்கள். அவருடைய தனித்துவமே அதுதான்.’’


உண்மைதான். சமூக வாழ்க்கை சார்ந்து எவ்வளவோ விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டும், திரையில் ரஜினியைப் பார்த்ததும் நாம் பரவசமாகிறோம். ஒவ்வொரு படத்திலும் ரஜினி நிகழ்த்தும் அற்புதங்கள் மேலும்மேலும் அதிகரிக்க வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். அவருக்கு எவ்வளவு வயதானாலும், திரையில் இன்னும் இன்னும் இளமையாகப் பார்க்கவும் பறந்து பறந்து அடிப்பதையும் நாம் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால், ரஜினி என்றால், எதுவும் செய்யலாம் என்ற மாபெரும் சுதந்திரத்தை நாம் அவரிடம் கொடுத்திருக்கிறோம்.


ஏனென்றால், ரஜினியிடம் நாம் பார்ப்பது நமக்குள் இருக்கும் ரஜினியை!





தொடர்புக்கு: [email protected]


இசை விழாக்களும் குளிரும் மார்கழிப்பூக்களும் ஆசிர்வதிக்கும் டிசம்பரில் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் மற்றொரு விஷயம் ரஜினிகாந்தின் பிறந்தநாள். டிசம்பர் 12ம் தேதி பிறந்தநாள் காணும் ரஜினி என்கிற சிவாஜிராவ் குறித்து 12 தகவல்கள்:


#ரஜினி ஒரு நிகழ்ச்சிக்கு பட்டு வேட்டி, சட்டையில் வருகிறார் என்றால் அன்று சென்டிமெண்டாக அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று அர்த்தம். சமீபத்தில் நடந்த இசையமைப்பாளர் அனிருத் சகோதரியின் திருமண நிகழ்ச்சிக்கு அவர் பட்டு வேட்டிச் சட்டையுடன் வந்து கலந்துகொண்டார். வேட்டி சட்டையைப் போலவே ரஜினி விரும்பும் மற்றொரு உடை கருப்பு சட்டை, கருப்பு பேண்ட்.


#ஊழலை எதிர்த்து அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த சமயத்தில் சென்னையிலும் அதுபோல ஒரு உண்ணாவிரதத்தை ஒருங்கிணைத்து நடத்த தீவிரமாக இருந்திருக்கிறார் ரஜினி. ஆனால் நண்பர்களின் ஆலோசனையால் அதை கைவிட்டார். இருப்பினும் அண்ணா ஹசாரேவை நேரில் சந்தித்து ஆதரவையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து வந்தார். அதுபோல சென்னையில் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் உங்களது ஆதரவு வேண்டும் என்று அப்போது கேட்டு வந்திருக்கிறார்.



#‘16 வயதினிலே’ படப்பிடிப்பில் பலமுறை பாரதிராஜாவிடம் திட்டு வாங்கியிருக்கிறார் ரஜினி. அந்த நேரத்தில் அவருக்கு ஒரே ஆறுதல், ஒல்லிப் பையனாக வசனக் குறிப்பேட்டை கையில் வைத்துக்கொண்டு நிற்கும் பாரதிராஜாவின் உதவியாளர் பாக்யராஜ்தான். ‘எல்லாம் நல்லதுக்குத்தான்’ என்று சொல்லி, அவரை உற்சாகப்படுத்துவாராம் பாக்யராஜ்.


#செல்போன் பயன்படுத்துவதில் ரஜினி ஆர்வம் செலுத்துவதில்லை. எப்போது, யார் தொடர்புகொள்ள நினைத்தாலும், அவரது உதவியாளர், ஓட்டுநர்களான ஆறுமுகம், சுப்பையா, கணபதி இந்த மூன்று நபர்களின் வழியாகத்தான் பேச முடியும். ரஜினிக்கு தகவல் போய் சேர்ந்ததும், அவர் விரும்பினால், தன்னை அழைத்த நபரிடம் ரஜினியே போனில் பேசுவார்.


#எந்த ஊருக்கு, வெளிநாட்டுக்கு சென்று திரும்பினாலும் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு ஏதாவது ஒரு பரிசுப்பொருள் வாங்கி வருவதை இப்போதும் கடைபிடித்து வருகிறார்.


#இரவோ, பகலோ மனதில் பட்டால் காரை எடுத்துக்கொண்டு நண்பர்கள் வீட்டுக்குமுன் சென்று நின்றுவிடுகிற பழக்கம் அவருக்கு இப்போதும் உண்டு. அப்படி சந்திக்கும் நண்பர்களை அழைத்துக்கொண்டு சாலைப் பயணமாக, நீண்ட தூரம் காரில் பறப்பார். அவர்களிடம் நாட்டுநடப்புகள், புதிய படங்களின் போக்குகள், இளம் நடிகர்கள், அரசியல் ஆகியவை குறித்து ஆழமாக பரிமாற்றம் செய்துகொள்கிறார்.



#ராகவேந்திரா திருமண மண்டபத்தின் திறப்புவிழா அன்று, 1980களில் இளையராஜாவின் ‘ஹவ் டு நேம் இட்’ நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அன்று நடந்த அந்த நிகழ்ச்சியின் ஞாபகம் வரும்போதெல்லாம் ரஜினி, ராஜாவிடம் சொல்லி சிலிர்ப்பாராம்.


#ரஜினிக்கு கடிதம் கொடுக்க விரும்புகிறவர்கள், ராகவேந்திரா மண்படத்துக்கு வந்து கொடுத்துப்போகலாம். அப்படி வந்து குவியும் கடிதங்களை அக்கறையோடு படித்து வருகிறார் ரஜினி. உதவியாளர்கள் அதில் சிலதை தேவையில்லாதது என்று பிரித்து தனியே ஒதுக்க முயற்சித்தால், ‘அப்படிச் செய்யாதீர்கள்’ என்று அன்புடன் கண்டிக்கவும் செய்வாராம்.


#நீச்சல் என்றால் ரஜினிக்கு உயிர். சென்னை, கடற்கரைச்சாலை பண்ணை வீட்டு நீச்சல் குளத்தில் மணிக்கணக்கில் நீச்சல் அடிப்பதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்.


#சமீப நாட்களாக அவருக்கு பிடித்த விஷயம் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் பழைய தமிழ்ப்படங்களை பார்ப்பது. குறிப்பாக அவர் பரபரப்பான ஷூட்டிங்கில் இருந்த காலகட்டத்தில் வெளிவந்த படங்களை எல்லாம் இப்போது ரசித்து ரசித்து பார்த்து வருகிறார்.


#படப்பிடிப்பு தளத்தில் கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் ஒன்று படிப்பார், இன்னொன்று தூங்குவார்.


#ராகவேந்திரா திருமண மண்டபத்தின் மொட்டைமாடி கீற்று கொட்டகையில் தரையில் அமர்ந்து, வாழை இலை போட்டு சாப்பிடுவதை பெரிதும் விரும்புவார்.



ரஜினிகாந்த், லதாவுடன் கிரேஸி மோகன்
ரஜினிகாந்த், லதாவுடன் கிரேஸி மோகன்
ரஜினியின் படங்களில் அவரது ஸ்டைலுக்கு நிகராக ரசிகர்களை கவரும் மற்றொரு விஷயம் பஞ்ச் டயலாக்குகள். அப்படி அவரது ரசிகர்களைக் கவர்ந்த பஞ்ச் டயலாக்குகளில் ‘அருணாச்சலம்’ படத்தில் வரும், “ஆண்டவன் சொல்றான். அருணாச்சலம் முடிக்கிறான்” என்ற பஞ்ச் டயலாக்கும் ஒன்று. இந்த பஞ்ச் டயலாக் உருவான விதத்தை ரஜினியின் நண்பரும் வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:



ரஜினியின் ‘ராகவேந்திரா’ படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு வந்தபோது நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு இருந்த வேலைப்பளுவால் அந்தப் படத்திற்கு வசனம் எழுத முடியவில்லை. அதற்காக மிகவும் வருத்தப்பட்டேன். 12 வருடங்களுக்கு பிறகு குறிஞ்சி மலர் பூப்பதைப்போல அவர் நடிப்பில் வெளியான ‘அருணாச்சலம்’ படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு அமைந்தது.



படத்தில் ஒரு பஞ்ச் டயலாக் வேண்டும் என்று ரஜினி என்னிடம் கேட்டார். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வாராவாரம் திருவல்லிக்கேணி ராகவேந்திரா கோயிலுக்கு சென்று வருபவன் நான். அப்படி ஒரு வியாழக்கிழமை அதிகாலை கோயிலுக்குப் போனபோது, ‘ராகவேந்திரா சொல்கிறார், அருணாச்சலம் முடிக்கிறார்’ என்ற வசனம் தோன்றியது. கவிதாலயா தயாரிப்பில் வெளிவந்த ராகவேந்திராவில் விட்டதை அருணாச்சலம் படத்தில் பிடித்தோம் என்ற எண்ணத்தில் உள்ளுக்குள் தோன்றியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.


 அதை அப்படியே ஆனாவுக்கு அனா போட்டு ‘ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் முடிக்கிறான்’ என்ற பஞ்ச் டயலாக்கை எழுதி சூப்பர் ஸ்டாரிடம் நீட்டினேன். பார்த்துவிட்டு சந்தோஷமாகப் பாராட்டினார். அவர் மிகச்சிறந்த மனிதர். பல்லாண்டு வாழ வாழ்த்துகள்!



thanx - the hindu

Wednesday, October 09, 2013

ரஜினி என் படத்துல வில்லனா நடிப்பாரா? சத்யராஜ் ஷங்கரிடம் கேள்வி -@ த ஹிந்து தமிழ்

நடிகர் சத்யராஜ் 

கண் முன்னே மகளின் காதல் முடிந்துபோனதில் இதயம் நொறுங்கி ‘ முதல் ஹார்ட் அட்டாக்’கை எதிர்கொள்ளும் உயர் தட்டு அப்பா. ஊருக்காக மகளின் காதலை எதிர்த்துவிட்டு, இரவோடு இரவாக பை நிறையப் பணம் கொடுத்துக் காதலனோடு மகளை அனுப்பிவைக்கும் முறுக்கு மீசை அப்பா. மதிப்பெண்களை முன்னிறுத்தும் கல்விதான் மாணவர்களின் எதிர்காலம் என்று நம்பி, கடைசியில் தனது மாணவனின் தனித்திறமைக்கு மண்டியிடும் பேராசிரியர்...



வித்தியாசமான வில்லனாக அறிமுகமாகிப் பிறகு நாயகனாகப் பரிணமித்த சத்யராஜின் தற்போதைய மென்மையான திரை முகங்கள்தான் இவை. ‘ராஜா ராணி’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படங்களில் சத்தியாராஜின் குணசித்திரம் பார்த்து, நம்ம அப்பாவும் இப்படி இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று ஏங்காத இளம் ரசிகர்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம்.



பசுமை போர்த்திய கோவையில், தாவரவியல் பட்டதாரியாகக் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, எம்.ஜிஆரின் தீவிர ரசிகராகச் சுற்றிக்கொண்டிருந்தார் ரங்கராஜ். கோவையை அடுத்த கோபிச்செட்டிப்ப்பாளைத்தில் நடந்த ‘அன்னக்கிளி’ படப்பிடிப்பு அவரைச் சுண்டி இழுத்துவிட்டது. பிறகு சென்னை வந்து, கோமல் சுவாமிநாதன் நாடகக் குழுவில் இணைந்தார். போதிய நாடக அனுபவங்கள் கிடைக்கும் முன்பே, சினிமா அரவணைத்துக்கொள்ள, ரங்கராஜ் சத்தியராஜ் ஆனார்.



1978இல் ‘சட்டம் என் கையில்’ படத்தின் மூலம் அறிமுகமான இவரை, ரசிகர்கள் சபிக்கும் அளவுக்குத் தமிழ் சினிமா வில்லன் கதாபாத்திரங்களில் வலிக்க வலிக்க முத்திரை குத்தியது. இவரது கல்லூரி நண்பரான இயக்குனர் மணிவண்ணன் ‘24 மணிநேரம்’ படத்தின் மூலம் இவரை திகிலான வில்லன் ஆக்கினார். அந்தப் படத்தில் “ என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேன்றீங்களே?” என்று சத்தியராஜ் பேசிய வசனமும் அதைப் பேசிய விதமும், அவரது அடையாளமாகவே மாறிவிட்டன.



நக்கலும் பகடியும் மிக்க வில்லன்னாக வலம் வந்த சத்யராஜை அதே மணிவண்ணன் ‘முதல் வசந்தம்’ படத்தில் ‘குங்குமப் பொட்டு’ கவுண்டராக ஆக்கி, குணசித்திர வில்னனாக மாற்றினார். சத்தியராஜுக்கு இப்படியும் ஒரு முகம் உண்டா என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள் அந்தப் படத்தை.



“நடிகர் சத்தியராஜை எனக்கு அறிமுகப்படுத்தியதே மணிவண்ணன்தான். மணிவண்ணன் இல்லையென்றால் சத்தியராஜ் இல்லை. அவர் என்னை நடிகனாக மட்டும் ஆக்கவில்லை. வாசகனாகவும் மாற்றினார். சே குவேராவையும், ஹோசிமினையும் படிக்க வைத்தார். என்னை வரலாற்று மாணவன் ஆக்கினார்” என்று நெகிழும் சத்தியராஜுக்கு மணிவண்ணனின் இழப்பு பெரிய அடி. 



மணிவண்ணனும் சத்தியராஜும் கூட்டணி அமைத்த சுமார் 25 படங்கள், அவர்களுக்கேன்று தனிப்பட்ட ரசிகர்களை உருவாக்கின. இவர்களது கூட்டணியில் உருவான ‘அமைதிப் படை’ சமகால அரசியலை நையாண்டி செய்யும் வேலையைச் செய்தது. வால்டர் வெற்றிவேல், மக்கள் என்பக்கம், நடிகன் உள்ளிட்ட படங்கள் அவரை வசூல் நாயகனாகவும் மாற்றின.



ஒரு கட்டத்தில் தனது நக்கல் நையாண்டி நடிப்பு பாணியிலிருந்து விடுபட்டார். ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, ‘பெரியார்’ ஆகியவை சத்தியராஜின் நக்கல் பிம்பத்தைச் சுக்கல் சுக்கலாக நொறுக்கிப்போட்டன. “ என்னை கதாபாத்திரமாக மட்டுமே பார்த்து ஏ.எல். விஜய், பொன்.ராம், அட்லீ மாதிரியான இளம் இயக்குனர்கள் நடிக்க கூப்பிடறாங்க. ராஜாராணிக்குப் பிறகு மகளோட வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற மாலுக்கு ஷாப்பிங் போனேன். 



பெண் பிள்ளைகள் ஒடிவந்து கையப் பிடிச்சுக்கிட்டு உருகுறாங்க. இந்த மாதிரியான ஒரு நெகிழ்ச்சி புதுசா இருக்கு” என்று சிலிர்க்கும் சத்யராஜ், “நிஜத்திலும் நான் நல்ல அப்பாதான்” என்று தன்க்கே உரிய முத்திரையுடன் முடிக்கிறார். தன் திரைப் பயணத்தை இதற்கு முன்பு மடைமாற்றிய மணிரத்னம், பாரதிராஜாவுக்கும் இதில் பங்கு இருக்கிறது என்று நன்றியுடன் நினைவுகூர்கிறார்.



ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்கிறீர்களா என்று இயக்குநர் ஷங்கர் கேட்டபோது அவர் என் அடுத்த படத்தில் வில்லனாக நடிப்பாரா என்று சத்யராஜ் கேட்டதாகச் சொல்வார்கள். அந்த அளவுக்குத் தன் வாய்ப்புகளைப் பற்றிக் கவலைப்படாத சுதந்திரக் கலைஞர் சத்யராஜ். ஆனால் அதே ஷங்கரின் நண்பன் படத்தில் இலியானாவுக்கு அப்பாவாக நடித்து வித்தியாசமான வேடங்களில் தனக்கிருக்கும் ஈடுபாட்டையும் காட்டினார். அதையடுத்து, முன்னணி நடிகைகளின் பாசமுள்ள அப்பாவாக வலம்வர ஆரம்பித்திருக்கிறார். தீபிகா படுகோனே, ஸ்ரீவித்யா, நயன்தாரா என்று இந்தப் பட்டியல் தொடர்கிறது.




சத்யராஜ் தற்போது நடித்துவரும் படங்கள் ஹிட் ஆவதில், அப்பா கதாபாத்திரம் என்றால் சத்யராஜ் என்ற சென்டிமெண்ட் உருவாகியிருக்கிறது. ஆனால் இது போன்ற சென்டிமென்ட்களில் நம்பிக்கையில்லாத பெரியாரின் தொண்டரான சத்யராஜ் இதைப் பற்றி என்ன நினைப்பார்? ‘ராஜா ராணி’யில் ஒரு இடத்தில் அப்பா சத்யராஜ் சொல்வதுபோல சென்டிமென்ட் எல்லாம் அவருக்கு “செட் ஆகாது”. வில்லன், நாயகன் என்று மாறிவரும் திரை முகங்களில் இதுவும் ஒன்று என்று அவர் கலைப் பயணம் தொடர்கிறது.


நன்றி - த ஹிந்து தமிழ்

Sunday, October 06, 2013

மோடி போஸ்டரில் ரஜினி ஏன்? - கமல் காரசாரமான பேட்டி @ த ஹிந்து தமிழ்

திருச்சியில் நடைபெற்ற‌ நரேந்திர மோடியின் கூட்டத்தில் ரஜினியின் போஸ்டரை பயன்படுத்தினார்கள். அதற்கு ரஜினி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதேபோல என்னுடைய போஸ்டரை பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் ஆவேசமாகக் கூறினார். 
 
 
 
ஃபிக்கி அமைப்பின் சார்பாக ஆண்டு தோறும் நடத்தப்படும் 'ஊடகம் மற்றும் சினிமா குறித்த கருத்தரங்கம்' இந்த ஆண்டு அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் பெங்களூரில் நடைபெற இருக்கிறது. இதனை அறிவிப்பதற்காக அந்த அமைப்பின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சனிக்கிழமை பெங்களூர் வந்திருந்தார். கமலின் நண்பரும்,கன்னட நடிகருமான ரமேஷ் அரவிந்த் உடன் இருந்தார். அப்போது கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 



பல்வேறு பிரச்சினைகளை கிளப்பிய 'விஸ்வரூபம்' திரைப்படத்தின் 2-ம் பாகம் தயாராகி விட்டது. நான் எந்த மதத்துக்கும், சாதிக்கும், கட்சிக்கும் எதிரி கிடையாது. அதனால் யாருடைய மனதையும் புண்படுத்தாமல், அனைவரும் ரசிக்கிற‌ வகையில் 'விஸ்வரூபம்-2' உருவாக்கப்பட்டு இருக்கிறது. 



என்னுடைய‌ அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், ஹே ராம், நாயகன் ஆகிய படங்களை புதுப்பித்து புதுபொலிவுடன் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். 'விஸ்வரூபம், தலைவா' விவகாரம் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு சிக்கல் வந்த போது 'நாட்டை விட்டு வெளியேறுவேன்' என நான் கோபத்தில் கூறிய வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொள்ள மாட்டேன். அது ஒரு பிள்ளை, தன் தாய் மீது வைத்திருக்கும் அதீத அன்பின் வெளிப்பாடு. 



எனவே அந்த வார்த்தைகளை வேறு அர்த்தங்களில் புரிந்துகொள்வது அபத்தம். ஆனால் சிலர் வேண்டுமென்றே சர்ச்சையை கிளப்பி படத்தை வெளியிட்டு வருகிறார்கள். நான் ஒரு போதும் சந்தைக்கு மத்தியில் உட்கார்ந்து கொண்டு ஒப்பாரி வைப்பதில்லை. விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் போல தலைவா படத்துக்கும் ஏற்பட்டது. அதுபற்றிய கேள்விகள் எல்லாம் துரத்துகிறது. அவற்றிற்கு நான் ஏன் கருத்து சொல்ல வேண்டும்? 



அரசியல் என்பது சிறந்த சமூகத்தை கட்டமைக்கும் உன்னதமான கருவி. என்னுடைய சினிமா வாழ்க்கையில் இதுவரை பேய் படங்கள் மட்டும்தான் எடுத்ததில்லை. மற்ற எல்லா வகையான படங்களும் எடுத்திருக்கிறேன். இனிமேலும் பேய் படம் எடுக்க மாட்டேன். அதைத் தானே அரசியலில் சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். ராமானுஜரின் தம்பிதான் பெரியார் ரசிகர்களுக்கு எப்படி என்னையும் பிடிக்கும். ரஜினியையும் பிடிக்குமோ, அதே போல எனக்கு காந்தியையும் பிடிக்கும். பெரியாரையும் பிடிக்கும். மூட நம்பிக்கை எந்த மதத்தில் இருந்தாலும் கண்டிப்பேன். பகுத்தறிவையும்,முற்போக்கு சிந்தனைகளையும் எப்போம் போற்றுவேன். இன்னும் சொல்லப்போனால் பெரியார் செய்ததைத்தான் பல ஆண்டுகளுக்கு முன்பே ராமானுஜர் செய்தார். ஆதலால் பெரியாரை ராமானுஜரின் இளைய தம்பி என்பேன். 



சேகுவேராவும் ஆயுதம் ஏந்தினார். பின்லேடனும் ஆயுதம் ஏந்தினார். அதனால் இருவரையும் போராளி என்று சொல்லிவிட முடியுமா? நான் அஹிம்சைவாதி. ஆதலால் காந்தியை நேசிக்கிறேன் மோடியை ஆதரிப்பீர்களா? நான் அரசியலுக்கு வர மாட்டேன். என்னுடைய அரசியல் என்பது வாக்களிக்கும் நேரத்தில் ஆள்காட்டி விரலில் மை இடுவதுதான். அந்த மையை என் கை முழுவதும் பூசி கறையாக்கிக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. 



திருச்சியில் நடைபெற்ற‌ நரேந்திர மோடியின் கூட்டத்தில் பா.ஜ.க.வினர் ரஜினியின் போஸ்டரை பயன் படுத்தினார்கள். அதற்கு அவர் (ரஜினி) எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதேபோல என்னுடைய போஸ்டரை பயன்படுத்த அனு மதிக்க மாட்டேன். ஏனென்றால் என்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை வாக்கு சாவடியில் மட்டுமே தெரிவிப்பேன் என்று கமல்ஹாசன் கூறினார். 
 
 
நன்றி - த ஹிந்து  தமிழ்

Monday, September 09, 2013

கோச்சடையான் - காமெடி கும்மி


1.விநாயகர் சதுர்த்தி அன்னைக்கு அவரை விட கோச்சடையான் தான் ட்ரெண்ட்ல வரும் போல




---------------------




2.தலைவா ரிலீஸ் அன்று 86 அன் பாலோ.கோச்சடையான் ட்ரெய்லர் ரிலீஸ் அன்று 98 # நீதி - வாயையும் ,கையையும் வெச்சுட்டு சும்மா இருக்கனும் ;-)))

--------------------------




3.தீபிகா படுகோனேவை ஏன் ட்ரெய்லர்ல காட்டலை? 




 அஸ்கு புஸ்கு.தியேட்டர்க்கு வந்தா அவரை காட்டுவோம்.அவர் காட்டுவாரு

-----------------------------




4.சென்சார் - இந்தப்படத்தை நாங்க பாக்கத்தேவையே இல்லை.குழந்தைங்க படம் தானே? பார்க்காமயே யூ சர்ட்டிபிகேட் தந்துடறோம்.#கோச்சடையான்

----------------------------




5.கோச்சடையான் யூ ட்யூப் ல பார்த்தா சுமாராவும் தியேட்டர்ல பார்த்தா சூப்பராவும் இருப்பது போல் டெக்னிக்கலா ஒர்க் பண்ணி இருக்கோம்




-------------------------------






6.மேடம்.கோச்சடையானை தடை பண்ண வழி இல்லை.ஜெயா டி வி க்கு ரைட்ஸ் கொடுத்துட்டாங்க 



.ஜெ- ரொம்ப சவுகர்யம்.முதல்ல நம்ம டி வி ல ரிலீஸ் ஆகட்டும்

--------------------------------




7.இதுல சோகம் என்னான்னா ரஜினியே இருந்தும் படத்தைக்காப்பாத்த முடியல :-(

---------------------------------




8.கோச்சடையான் - எல்லாத்தரப்பு மக்களையும் ரீச் அடையான்



------------------------------------



9.கமல் -கோச்சடையான் ஓடாதுன்னு சொல்லலை.ஓடுனா நல்லாருக்க்கும்னுதான் சொல்றேன் # கற்பனை



--------------------------------



10.அம்மாவால படம் ஓடலைன்னா அது தலைவா.மகளால ஓடலைன்னா அது கோச்சடையான்



-------------------------------






11.கமல் - தீபாவளிக்கு விஸ்வரூபம் 2 ரிலீஸ் பண்ணவா?




 ரஜினி - வெந்த புண்ல வேல் பாய்ச்சாதீங்க.நானே கடுப்புல இருக்கேன்



-------------------------------



12.இளைய ராஜா ரசிகர்களுக்கு கொண்டாட்டமா இருக்கும்னு தோணுது.கோச்சடையான் இசை ஏ ஆர் ஆர்



----------------------------------



13.கோச்சடையான் ல 3 ரஜினியாம் - செய்தி # ஒரு ரஜினி நடிச்சா லே 100 நாள் ,3 ரஜினி நடிச்சா எத்தனை நாள் ஓடப்போகுதோ ? ;-))




---------------------------------------



14.சரித்திரப் படம்னு நினைச்சு போகப்போறோம்.செம காமெடிப்படமா இருக்கப்போகுது ;-)



---------------------------------



15.கவுண்டமணி - சுல்தான் த வாரியர் ட்ரெய்லர் இங்கே இருக்கு.கோச்சடையான் ட்ரெய்லர் எங்கே இருக்கு?



 செந்தில் - அந்த இன்னொண்ணும் இதுதாண்ணே்




-------------------------------------




16.அப்பா.உங்க பேரைக்காப்பாத்திடுவேன்.பயப்படாதீங்க. 



பேரு அப்டியேதான் இருக்கும்.சொத்து இருக்குமா?



---------------------------------



17.ரஜினி கஷ்டப்பட்டு பல படங்கள் ல சம்பாதிச்சதை பொண்ணு ஒரே படத்துல இழந்துடும்னு தோணுது :-(

----------------------------------




18.ட்ரெய்லர் பார்த்தாச்சு .ரேட் பேசலாமா? 



 வழக்கமான முறை வேணாம்.ரிஸ்க்.வசூல் ஆவதில் ஆளுக்குப்பாதி .டீலா? நோ டீலா?

--------------------------------



19.ரஜினி மைன்ட் வாய்ஸ் - அனிமேஷன் பிராக்டீசுக்கு நம்ம பொண்ணு நம்மையே பகடைக்காய் ஆக்கி விளையாடுது.ஹூம்




------------------------------------




20.கோச்சடையான் ட்ரெய்லர்ல ரஜினி  ஏன் பஞ்ச் டயலாக் எதுவும் பேசலை?



சவுந்தர்யா  - தலைவா க்கு வந்த நிலைமை தலைவர்க்கு  வந்துடக்கூடாதுனுதான்



-----------------------------------





21. நாளைக்கே படம் படுத்துட்டாக்கூட ஹீரோயின் பேர் ராசி சரி இல்லை.தீபிகா படு கோனே.அதான்னு சமாளிச்சுக்கலாம்



----------------------------------




22.கோச்சடையான் ல ரஜினி யை நேரடியா பார்க்கப்போறோம்னே இன்னும் பலர் நினைச்சுட்டு இருக்காங்க # அனிமேஷன்


-------------------------------




23.  கோச்சடையான் ரஜினி ஸ்டில்"உதய சூரிய" நமஸ்காரம் பண்ணுவது போல் ஸ்டில் இருக்கே? ஏதும் பிரச்சனை வருமோ?




-------------------------------- 



24. கோச்சடையான் ல காமெடிக்குன்னு யாரும் இல்லையாம்.படம் பூரா காமெடி என்பதால் காமெடி டிராக்கே தேவைப்படலையாம்



-------------------------------



25. பாட்ஷா ,படையப்பா,சந்திரமுகி ,மன்னன் மாதிரி ரஜினி தான் வேணும்.பாபா,ஸ்ரீராகவேந்திரர்,நாட்டுக்கு ஒரு நல்லவன் மாதிரி வேண்டாம்்



-----------------------------------





26. சலங்கை ஒலி கமல்க்கு போட்டியாக ரஜினி ஒரு ருத்ர தாண்டவ நடனம் வேற ஆடறாராம் # ரஜினி ராக்ஸ்



-----------------------


27. கே எஸ் ரவிக்குமார் - என் மேல யாரும் பழி சுமத்த முடியாது.டைரக்சன் மேற்பார்வை தான் நான்.மேல பார்த்துட்டு இருந்தேன் னு சமாளிச்சுடுவேன்



----------------------------------