Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Monday, January 09, 2012

கோர்ட் கேஸ் , ஜெயில்-ல் நக்கீரன் கோபால் ? - காமெடி கும்மி கலாட்டா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHSb3n_MMlxvf3H4Vevh-NS8TOrDl8KGbjoTT6DpWIlAVgoS1NsH-pymX_XjM3uwNOI_H9sTHvtwLVBRiNEf6Xn6sIN_GYNuGnYpZKN23veNlau2ZotMqoR4A_BNx-JthL4s_Mc3NQjDBD/s1600/1.jpg

1.மன்னா! மகாராணி மாட்டுக்கறி சாப்பிட்டதை  சஞ்சிகைகள் படம் பிடித்து விட்டன, இப்போ என்ன செய்வது? 

சஞ்சிகையை எரித்து விடு, பிரச்சனையை திசை திருப்பி விடு

----------------------------------

2. மிஸ்டர் கோபால்,உங்களுக்கு வேலூர் பிடிக்குமா? பாளையங்கோட்டை பிடிக்குமா?

மொதல்ல போலீஸ்தான் பிடிக்கும் போல

----------------------------------

3. உங்க பத்திரிக்கையை இன்சூர் பண்ணி இருக்கீங்களா? 

அது ஆல்ரெடி பண்ணிட்டேன், என்னைத்தான் இன்னும் பண்னலை, பண்ணனும்

--------------------------------

4. எடிட்டர் - எதையும் பாசிட்டிவ்வா எடுத்துக்கனும். 


அதுக்காக சேல்ஸ் அதிகரிக்க வழிவகை செய்த முதல்வருக்கு நன்றி-னு போஸ்டர் அடிக்கனுமா?

-------------------------------------

5. ஜட்ஜ் - எதுக்காக எடிட்டரை தாக்குனீங்க? 

கைதி- தலையங்கத்துல அவரு எங்க தலைவரை தாக்குனாரு, பதிலுக்கு அவர் தலை, அங்கத்தை நாங்க தாக்குனோம்

------------------------------

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/dece09/13.10.09/yutham1.jpg

6. ஜட்ஜ் - வழக்கை நல்லா விசாரிச்சுட்டேன், சம்பந்தப்பட்ட எடிட்டர்  தன் ஆயுள் முழுவதும் இனி சைவம் மட்டுமே சாப்பிடனும் 

கைதி - இதுக்கு ஆயுள் தண்டனை பெஸ்ட்

--------------------------------------

7. சார்,உங்க புக் பார்த்தேன், நியூஸ் எல்லாம் மட்டனா இருந்துச்சு, உங்க ரசனை ரொம்ப மட்டமா இருந்துச்சு

----------------------------------

8. சிங்கப்பூர்,மலேசியா புகழ் கோபால் பல்பொடிக்கு தடை, கம்ப்யூட்டர் கோர்ஸில் கோபால் லேங்குவேஜ் நீக்கப்பட்டது - ஜெ அதிரடி அறிவிப்பு@இமேஜினேஷன்

-----------------------------------

9. முதல்வர் ஜெயலலிதா சமையலில் ஈடுபடுவதே இல்லை- பொன்னையன் # சட்டசபைக்குப்போகச்சொன்னா அண்ணன் சமையல் அறைல போய் உக்காந்து சாப்பிட்டு இருக்காரு

--------------------------------------
10. ஜெ - நான் வெஜ்னு சொன்னதை அவர் தப்பா புரிஞ்சுக்கிட்டார்..

கோபால் - ஜெ நான்வெஜ்-னு நான் சொல்லவே இல்லை ஜெ நான் -வெஜ் அப்டினுதான் சொன்னேன்

-----------------------------

http://4.bp.blogspot.com/-S7lWYkJLaRU/Tc6HUM5r0II/AAAAAAAAAvA/G2lKaEE6d7Q/s1600/2132_1.jpg

11. பீஃப் எனக்குப்பிடிக்காதுன்னு சொன்னா அவங்க பக்கா  சைவமா இருக்கனும்னு அவசியம் இல்ல, பி எஃப் எனக்குப்பிடிக்காதுன்னா அவங்க பக்கா அசைவமா இருக்கனும்னு அவசியம் இல்ல # கில்மா கண்டு பிடிப்[பு

----------------------------------------

12. நீங்க மட்டன் சாப்பிட்டதை பார்த்த சாட்சிகள் 4 பேர் இருக்காங்க...

  ஓஹோ, அதை பார்க்காத சாட்சிகள் 4 கோடி பேர் இருக்காங்க ,4 பெருசா? 4 கோடி பெரிசா?

-----------------------------------

13. உங்க மேல சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போறோம்

கோபால்- அப்போ இதுவரை எடுத்தது? 

போலீஸ் -சுளுக்கு

-----------------------------------------

14. நான் சைவம் மட்டும் தான் சாப்பிடுவேன், எனக்கே ஓட்டு போடுங்க ... நான்  எதுவுமே சாப்பிட மாட்டேன்,எனக்கே ஓட்டு போடுங்க # 2016 எலக்‌ஷன்

-------------------------------------

15.மாட்டுக்கறி பிரச்சனையில் சிக்கியதால் இனி ஜெ கோமாதா என அழைக்கப்படுவாரா?

-----------------------------------

16. நக்கீரன் கோபால் மீது நெல்லை தொழிலதிபர் தீடீர் மோசடி வழக்கு #  ம்ஹூம்,இது எடுபடலை, யாராவது ஒரு லேடி என் கையைப்பிடிச்சு இழுத்துட்டார்னா OK

----------------------------------------------

17.பார்ப்பதற்கே பயங்கரவாதி தோற்றம் தரும் மீசையுடன் இருந்ததால்தான் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார், மற்றபடி பழி வாங்கும் எண்ணம்  அரசுக்கு இல்லை - ஜெ அதிரடி அறிவிப்பு

---------------------------------------

18. நக்கீரன் கோபால் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு# அட போங்கம்மா, உங்க ராசி நெம்பரை மறந்துட்டீங்களே? இன்னும் 3 சேர்க்கவும்

--------------------------------

டிஸ்கி -

PLAYERS - அபிஷேக் -பிபாஸாபாஷா பாலிவுட் ஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்

 

விநாயகா - HITCH பட தழுவலா?-சினிமா விமர்சனம்

 

குங்குமம் வலைப்பேச்சு வாழ்த்துகள்

 



Saturday, January 07, 2012

நக்கீரன் - ஜெ மோதல் -நடந்தது என்ன? தமிழ்நாடே பரபரப்பு

முதல்வர் ஜெ., குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டமைக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் நக்கீரன் இதழை தீ வைத்து அ.தி.மு.க.,வினர் கொளுத்தினர் . சென்னையில் உள்ள நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.க., தொண்டர்கள் கல் மற்றும் உருட்டுக்கட்டையால் வீசி அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனையடுத்து அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.


சி.பி - வீரப்பன் மேட்டருக்குப்பிறகு நக்கீரன்  சர்க்குலேஷன் இறங்கிடுச்சேன்னு கவலைல இருந்தாரு. இதை வெச்சே 6 மாசம் ஓட்டிடுவாருன்னு நினைக்கறேன்..


நக்கீரன் இதழில் சசிகலாவுடனான பிரச்னையில் ஜெ., இப்போது எவ்வாறு நடந்து கொள்கிறார், அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று அட்டைப்படத்தில் ஜெ., சசிகலா படத்துடன் செய்தி வெளியானது. இதில் கடுமையான வார்த்தைகள் உபயோகித்ததாக அ.தி.மு.க,வினர் இன்று ஆவேசமுற்றனர். மாநிலம் முழுவதும் மதுரை, ஈரோடு, கரூர், நாமக்கல், அரியலூர், ராசிபுரம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, வால்பாறை, திருநெல்வேலி, உள்ளிட்ட பகுதிகளில் இந்த கட்சியின் எம்.எல்.ஏ., மற்றும் கவுன்சிலர்கள் இந்த பத்திரிகையை தீ வைத்து எரித்தனர். சில கடைகளில் அ.தி.மு.க,வினர் புகுந்து புத்தகங்களை அள்ளி சென்றனர்.


சி.பி - இவங்க ரகளை செஞ்சாக்கூட கண்ணியமா செஞ்சிருக்காங்க, சினிமால வர்ற மாதிரி கடை எல்லாம் உடைக்கலை, காசு கொடுத்துத்தான் புக் வாங்கி எரிச்சிருக்காங்க, அந்த வகைல பாராட்டலாம்.. இந்த மேட்டர் இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா கோபால் நக்கீரன் காப்பியை டபுள் ஆக்கி இருப்பாரு.




இதற்கிடையில் இன்று காலையில் சென்னை ராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் அமைந்திருக்கும் நக்கீரன் அலுவலகம் முன்பாக அ.தி.மு.க.,வின் பல்வேறு பிரிவினர் கூடினர். நக்கீரனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அங்கும் இதழ்களை தீ வைத்து கொளுத்தினர். பின்னர் கல் மற்றும் கம்புகளால் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அலுவலக கண்ணாடி , அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தன. தொடர்ந்து போலீசார் வந்தும் தொண்டர்கள் கடும் ஆவேசமாக இருப்பதை காண முடிந்தது.


சி.பி - பத்திரிக்கை சுதந்திரம் இருக்க வேண்டியதுதான், ஆனா நடந்த மேட்டர் ஜாதி வெறியை தூண்டுவதாகவும், தனி நபர் தாக்குதலாகவும் அமைஞ்சிருக்கு.கோபால் அண்ணனுக்கு களி கன்ஃபர்ம்.. .

இது குறித்து நக்கீரன் கோபால் கூறுகையில்: ஆளும் அரசின் அராஜகம் அத்துமீறி போயிருக்கிறது. போலீசாருக்கு பல முறை தொடர்பு கொண்டும் பாதுகாப்புக்கு யாரும் வரவில்லை. காலதாமதமாக வந்த போலீஸ்காரர்கள் முன்னிலையிலேயே தாக்குதல் நடந்தது என்றார்.



சி.பி - அண்ணே, காமெடி பண்ணாதிங்க, நீங்க தாக்குனது சி எம்மை, போலீஸ் எப்படி உங்களுக்கு சப்போர்ட்டா வரும்னு எதிர்பார்க்கறீங்க? எதுக்கும் கொஞ்ச நாள் காட்டுக்குள்ள ஒளிஞ்சுக்குங்க..

கருணாநிதி கண்டனம் : இந்த சம்பவம் குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஜனநாயக நாட்டில் இது போன்று பத்திரிகை அலுவலகத்தை தாக்குவது ஏற்புடையது அல்ல. ஒரு தலைவர் குறித்து அவதூறாக செய்தி வெளியானால் கோர்ட்டில் முறையிட்டு வழக்கு தொடர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதனை விட்டு இவ்வாறு வன்முறை செயல்கள் ஏவி விடப்படுவது ஜனநாயகத்தில் ஏற்புடையது அல்ல. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.


சி.பி - தினகரன் பத்திரிக்கைல அழகிரி ஸ்டாலின் கருத்துக்கணிப்பு வந்தப்ப ஆஃபீஸ் எரிக்கப்பட்டதே அப்போ என்னங்கய்யா சொன்னீங்க?ரிவைண்ட் ப்ளீஸ்


நக்கீரன் மீது அவதூறு வழக்கு : நக்கீரன் செய்தி தொடர்பாக இந்த பத்திரிகை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு செயலர் பொன்னையன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: முதல்வர் ஜெ., மீது களங்கம் ஏற்படுத்தும் விதமாக செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி குறித்து அவதூறு வழக்கு பதிவு செய்யவும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் கட்சி முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சி.பி -ஜாதி வெறியை தூண்டுகிறார் என்று கூட கேஸ் போடலாம்..அந்த அளவு கேஸ்ல ஒர்த் இருக்கு... 


நக்கீரனில் வந்த செய்தி...