Showing posts with label அவள் விகடன். Show all posts
Showing posts with label அவள் விகடன். Show all posts

Saturday, June 25, 2011

பழ வகையில் பல வகை சமையல் செய்வது எப்படி?(வீட்டில் சமைக்கும் சில பெண்களுக்கு மட்டும் )

 ஃப்ரூட்ஸ் சமையல்

உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் நேரடியாக தரக்கூடியவை பழங்கள் மட்டும்தான். அதனால்தான்... காட்டு வாழ்க்கை நடத்திய வேடர்கள், முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் என அனைவரும் நோய், நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அவ்வளவு ஏன்... இன்றைக்கும்கூட காட்டில் பழங்களைத் தின்றே உயிர் வாழும் விலங்கு மற்றும் பறவைகளை எடுத்துக் கொள்ளுங்  களேன்... அவையெல்லாம் எத்தனை அழகாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றன.

 
உடலின் ஜீரண உறுப்புகளை பலப்படுத்தி, எலும்புகளுக்கு வலுவூட்டி, ரத்தத்தை சுத்தப்படுத்தி என பல வழிகளிலும் உதவும் பழங்கள்... என்றென்றும் இளமையையும் தரக்கூடிய அற்புத வைத்தியரும்கூட!

அத்தகைய பழங்களில் 30 வகை ரெசிபிகளை அசத்தலாக செய்து காட்டியிருக்கிறார் நங்கநல்லூர் பத்மா. அவை அனைத்தும் செஃப் ரஜினியின் கை வண்ணத்தில் அழகழகாக இங்கே இடம் பிடிக்கின்றன.

பழ ரெசிபிகளை செய்து கொடுத்து ஃபேமிலியை பரவசப்படுத்துங்கள்!

1. பலே பருப்பு வடை 

துவரம் பருப்பு, கடலைப்பருப்புடன் சிறிது உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம், 2 பல் பூண்டு, உப்பு, நான்கு தக்காளி சேர்த்து அரைத்து வடைகளாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும். பருப்பு வடையினால் ஏற்படும் வாயுத் தொல்லை, இந்த வடையைச் சாப்பிடும்போது ஏற்படாது.

2. சுலபமான சிப்ஸ் 

உருளைக்கிழங்கை மெல்லிய வட்டங்களாக சீவி, உப்பு சேர்த்து வேக வைத்து, வெயிலில் நன்றாக உலர்த்தி டப்பாவில் வைத்துவிடுங்கள். தேவைப்படும்போது மிளகாய் தூள் சேர்த்து சிப்ஸாக பொரித்துக் கொள்ளலாம்.

3. கொட்டு ரசம் 

மிளகு, சீரகத்துடன் ஒரு கரண்டி துவரம்பருப்பைச் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். புளியை கரைத்து, அரைத்தப் பொடியை சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க வைத்தால்... சட்டென சுவையான 'கொட்டு ரசம்' ரெடி!

4. இஞ்சி பச்சடி 

இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி, தயிருடன் சேர்த்து கலக்கவும். சிறிது எண்ணெயில் சீரகம் தாளித்துக் கொட்டினால் இஞ்சி பச்சடி ரெடி! ஜீரணத்துக்கும் மிகவும் நல்லது.


5. பலா கறி 

பலாக் கொட்டையை நன்றாக வேக வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, பலாக் கொட்டை துண்டுகளை போடவும். இதில் மஞ்சள்தூள், உப்பு, தேங்காய், மாங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

6.  பலாப்பழ சக்கவரட்டி 

தேவையானவை: பலாச்சுளைகள் - 20, வெல்லம் - 200 கிராம், முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 மி.லி.
செய்முறை: சுளையில் உள்ள கொட்டைகளை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது நெய்யில் வதக்கவும். நன்றாக வதங்கியதும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வெல்லத்தை இடித்து சிறிது தண்ணீரில் கரையவிட்டு வடிகட்டி கெட்டியாக பாகு காய்ச்சவும். உருட்டும் பதம் வந்ததும் அரைத்து வைத்துள்ள பலாச்சுளை விழுதைப் போட்டு, நெய் விட்டு மிதமான தீயில் கிளறவும். நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்துப்போட்டு ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு:  இது பலாப்பழ சீசன். இந்த சக்கவரட்டியை தயாரித்து வைத்துக் கொண்டால், குழந்தைகளுக்கு சுகியன், பாயசம், போளி என்று விதவிதமாக தயாரித்துக் கொடுக்கலாம்.


7. பைனாப்பிள் போளி 

தேவையானவை: மைதா மாவு - 250 கிராம், வட்டமாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 6, தேங்காய் - அரை மூடி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வெல்லம் - 200 கிராம், நெய் - 100 மி.லி, கேசரிப்பவுடர் - ஒரு சிட்டிகை.
செய்முறை: மைதா மாவில் கேசரிப்பவுடர் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக போளி மாவு பதத்தில் பிசைந்து மூடி வைக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். பைனாப்பிளை பொடியாக நறுக்கி தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வெல்லத்தை இடித்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி,  சிறிது கெட்டியாக பாகு காய்ச்சவும். அரைத்த பைனாப்பிள் விழுது, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை பாகுடன் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு வாழை இலையில் சிறிது நெய் தடவி, பிசைந்த மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தட்டி, உள்ளே பூரணத்தை வைத்து மூடி போளியாக தட்டவும். தோசைக்கல்லில் நெய்விட்டு இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: வாழை இலைக்குப் பதில் பிளாஸ்டிக் ஷீட்டில் நெய் தடவியும் போளி சுடலாம். ஆப்பிள், வாழை போன்ற விருப்பப்பட்ட பழங்களிலும் இதே முறையில் தயாரிக்கலாம்.

8. மாம்பழ மில்க் ஷேக் 

தேவையானவை: மாம்பழம் - 2, பால் - 500 மி.லி, சர்க்கரை - 150 கிராம்.
செய்முறை: மாம்பழத்தை தோல்சீவி மிக்ஸியில் விழு தாக அரைக்கவும். பாலைக் காய்ச்சி ஆற விடவும். அரைத்த மாம்பழம் விழுது, சர்க்கரை ஆகியவற்றை பாலுடன் சேர்த்து கலந்து நன்றாகக் கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடவும்.

குறிப்பு: மாம்பழம் சூடு என்று சிலர் மாம்பழம் பக்கமே போக மாட்டார்கள். பால் சேர்த்து பருகும்போது, சூடும் தாக்காது; உடம்புக்கும் நல்லது.

9.தர்பூசணி தோசை 

தேவையானவை: தர்பூசணி - அரை கிலோ, புழுங்கல் அரிசி - கால் கிலோ, உளுத்தம்பருப்பு - 150 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். தர்பூசணியின் தோல் மற்றும் விதைகளை நீக்கி, தனியாக அரைத்து, மாவுடன் கலக்கவும். மாவில் உப்பு சேர்த்து கரைத்து காயும் தோசைக்கல்லில் ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு தோசைகளாக வார்க்கவும்.

குறிப்பு: அரிசி, உளுந்துடன் தர்பூசணியை சேர்த்து அரைத்தால் தண்ணீர் சேர்க்க தேவை இல்லை. இந்த தோசை சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

10. பழ வடை

தேவையானவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - 100 கிராம், பச்சை ஆப்பிள், பேரிக்காய் - தலா 1, மிளகு - 6 (எண்ணிக்கையில்), இஞ்சி - ஒரு சிறு துண்டு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து இஞ்சி, மிளகு, உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். பச்சை ஆப்பிள், பேரிக்காயை பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்துப் பிசையவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தீயை மிதமாய் வைத்து, வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பச்சை ஆப்பிள் மிகவும் நல்லது. இதற்கு சாஸ் அல்லது சட்னி சூப்பர் சைட்-டிஷ்!

11.  சப்போட்டா கொழுக்கட்டை 

தேவையானவை: பச்சரிசி - கால் கிலோ, வெல்லம் - 100 கிராம், சப்போட்டா - 4, தேங்காய் - அரை மூடி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: தேங்காயை துருவிக் கொள்ளவும். சப்போட்டாவை தோல் உரித்து, விதை நீக்கி, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து நிழலில் உலர்த்தி, மிக்ஸியில் அரைத்து சல்லடையால் சலிக்கவும். வெல்லத்தைப் பொடித்து சிறிது தண்ணீர் விட்டு கொதித்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்க விடவும். அரைத்த சப்போட்டா விழுது, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை பாகுடன் சேர்த்து கிளறி சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதித்ததும், உலர் அரிசி மாவை சிறிது சிறிதாக தூவி கிளறி, கெட்டியானதும் இறக்கி நன்றாகப் பிசையவும். இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி கிண்ணம் போல் செய்து, சப்போட்டா உருண்டைகளை வைத்து மூடி இட்லி தட்டில் வைத்து வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: பருப்பில்லாமல் பழத்தை வைத்து செய்யும் இந்தக் கொழுக்கட்டை மிகவும் ருசியாக இருக்கும். எல்லாப்பழங்களிலும் இதேபோல் கொழுக்கட்டை தயாரிக்கலாம்.

 12. ஆப்பிள் பர்பி 

தேவையானவை: ஆப்பிள் - 1, சர்க்கரை - 150 கிராம், தேங்காய் - அரை மூடி, ரவை - 4 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: சர்க்கரை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கரைய விடவும். ஆப்பிள் தோல் சீவி பொடியாக நறுக்கி அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். ஆப்பிள் மற்றும் தேங்காயை சர்க்கரைத் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். ரவை தூவி சேர்த்து நெய் விட்டு ஏலக்காய்த்தூள் போட்டு மேலும் கெட்டியாகக் கிளறி, நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி துண்டுகள் போடவும்.

குறிப்பு: தேங்காய் பர்பியை விட, பழங்களில் செய்யும் இதுபோன்ற பர்பி நல்ல டேஸ்டாக இருக்கும்.

13.  வெரைட்டி ஃப்ரூட் இட்லி 

தேவையானவை: மாம்பழம் - 1, புழுங்கல் அரிசி - 250 கிராம், உளுத்தம் பருப்பு - 100 கிராம், ஆப்பிள், பேரிக்காய், கொய்யாப்பழம், பைனாப்பிள் - தலா 4 துண்டுகள், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: பழங்களை பொடியாக நறுக்கவும். அரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து மாம்பழத்துண்டு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அரைத்த மாவில் உப்பு சேர்த்து நறுக்கிய பழத் துண்டுகளை கலந்து இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி மாவை ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: அப்படியே சாப்பிடலாம். ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்தும் செய்யலாம். மாம்பழத்திற்கு பதிலாக பப்பாளி சேர்த்தும் இதே முறையில் இட்லி தயாரிக்கலாம்.

14.  பப்பாளி அப்பம் 

தேவையானவை: அரிசி மாவு, கோதுமை மாவு, பொடித்த வெல்லம் - தலா 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பப்பாளிப் பழத் துண்டுகள் - 100 கிராம், நெய் - 100 மி.லி, தேங்காய் - அரை மூடி.
செய்முறை: அரிசி மாவு, கோதுமை மாவு இரண்டையும் ஒன்றாக சேர்க்கவும். தேங்காயைத் துருவி, வெல்லம், பப்பாளித் துண்டுகள் சேர்த்து அரைத்து ஏலக்காய்த்தூள், மாவுக் கலவை சேர்த்து நன்றாகக் கலந்து பணியாரக் கல்லில் நெய் தடவி அப்பமாக ஊற்றவும். ஒரு குச்சியின் உதவியால் திருப்பிப் போட்டு இருபுறமும் பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.

குறிப்பு: பப்பாளிப்பழம் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. கடாயிலும் எண்ணெய் விட்டு மாவை ஊற்றி ஊத்தப்பமாகவும் செய்யலாம்.

15. வெரைட்டி ஃப்ரூட் சுகியன் 

தேவையானவை: பைனாப்பிள் துண்டுகள் - 100 கிராம், ஸ்ட்ராபெர்ரி - 4, மாம்பழம், வாழைப்பழம் - தலா 2 துண்டுகள், உளுத்தம்பருப்பு, பொன்னிறமாக வறுத்த பாசிப்பருப்பு, பொடித்த வெல்லம் - தலா 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 200 மி.லி.
செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து கெட்டியாக வடை மாவு பதத்தில் அரைக்கவும். வறுத்த பாசிப்பருப்பை ஊற வைத்து பைனாப்பிள் துண்டுகள், மாம்பழத்துண்டுகள், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் சேர்த்து அரைத்து வெல்லம் சேர்த்து கெட்டியாகக் கிளறி பூரணமாக தயாரிக்கவும். இதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து சிறு உருண்டையாக உருட்டவும். ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து அரைத்த உளுந்து மாவில் தோய்த்து காயும் எண்ணெயில் பொரிக்கவும்.

குறிப்பு: தீயை மிதமாக வைத்துதான் பொரிக்கவேண்டும். சூடாக சாப்பிட சுவையாக இருக்கும் இந்த சுகியன்.

16.  ஸ்ட்ராபெர்ரி ஜாம் 

தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி - 20, பேரீச்சம்பழம் - 6, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, உப்பு - தேவையான அளவு, வெல்லம் - ஒரு சிறு துண்டு, எண்ணெய் - 2 ஸ்பூன்.
செய்முறை: இஞ்சி தோல் சீவி நறுக்கி, ஸ்ட்ராபெர்ரி, பேரீச்சம்பழம், உப்பு, வெல்லம் சேர்த்து நன்றாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: பிரெட், சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன். ஆப்பிள், பைனாப்பிள் பழத்திலும் இதேபோல் தயாரிக்கலாம்.

 17. வாழைப்பழ அல்வா 

தேவையானவை: வாழைப்பழம் - 6, சர்க்கரை - 150 கிராம், வறுத்த முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 மி.லி, கேசரிப்பவுடர் - ஒரு சிட்டிகை.
செய்முறை: வாழைப்பழத்தை தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது நெய்யில் வதக்கி நன்றாக மசிக்கவும். இதில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், கேசரிப்பவுடர் சேர்த்து, நெய் விட்டு முந்திரிப்பருப்பு போட்டு நன்றாகக் கிளறி அல்வா பதம் வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: விசேஷ நாட்களில் வாழைப்பழம் மீந்து விட்டால், இந்த அல்வா செய்து ஃப்ரிட்ஜில் ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

18. பழ ஊறுகாய் 

தேவையானவை: கொய்யாப்பழம், பச்சை ஆப்பிள், பேரிக்காய், ப்ளம்ஸ், கிவிப் பழம் - தலா 1, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொய்யாப்பழம், கிவிப் பழத்தை பொடியாக நறுக்கவும். ஆப்பிள், பேரிக்காயின் தோலை சீவி பொடியாக நறுக்கவும். ப்ளம்ஸ் விதையை நீக்கிக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, அதனுடன் உப்பு, மிளகாய்த்து£ள் சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: எண்ணெயே சேர்க்காமல் பழங்களை வைத்தே ஈசியாக இந்த ஊறுகாய் செய்யலாம். பிரெட்டில் தடவி டோஸ்ட் செய்து சாப்பிட அருமையாக இருக்கும்.

19.  பழ பச்சடி 

தேவையானவை: வாழைப்பழம், ஆப்பிள் - தலா 1, கருப்பு திராட்சை - 200 கிராம், தக்காளி - 2, சர்க்கரை - 100 கிராம், செர்ரிப் பழம் - 6.
செய்முறை: வாழைப்பழம், ஆப்பிளை பொடியாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி வேக வைக்கவும். சிறிது வெந்ததும் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை, செர்ரிப் பழத்தை சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: திருமணங்களில் இந்தப் பழப்பச்சடிக்குதான் முதலிடம். விருப்பமான பழங்களிலும் இந்தப் பச்சடியை செய்து கொள்ளலாம்.


20.  மில்க் ஃப்ரூட் தூத்பேடா 

தேவையானவை: பால் - ஒரு லிட்டர், சர்க்கரை, நறுக்கிய சப்போட்டா, நறுக்கிய ஆப்பிள் - தலா 100 கிராம், வாழைப்பழத் துண்டுகள் - 4, பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: பாலை மிதமான தீயில் வைத்து சுண்டக் காய்ச்சவும். சப்போட்டா, ஆப்பிள், வாழைப்பழத்தை மிக்ஸியில் அரைத்து காய்ச்சிய பாலுடன் சேர்த்து கொதிக்க விடவும். பாதாமை ஊற வைத்து முந்திரி சேர்த்து அரைத்து, சர்க்கரை ஏலக்காய்தூள் சேர்த்து கொதிக்கும் பால் விழுதுடன் கலந்து, கெட்டியாக கிளறி ஒட்டாத பதம் வந்ததும் இறக்கவும். நன்றாக பிசைந்து சிறிய வட்டமாக தட்டி வைக்கவும்.

குறிப்பு: இந்த தூத்பேடா மிகவும் ருசியாக இருக்கும். கோவா தயாரிக்காமல் ஜாமூன் மிக்ஸ் பயன்படுத்தியும் செய்யலாம்.

21. சப்போட்டா சத்துமாவு உருண்டை 

தேவையானவை:  சப்போட்டா - 4, கோதுமை, தினை, பொட்டுக்கடலை, கேழ்வரகு, பாசிப்பருப்பு, சர்க்கரை, சோள மாவு - தலா 100 கிராம், முந்திரிபருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு - தலா 10, ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரி - சிறிதளவு, நெய் - 100 மி.லி.
செய்முறை: சப்போட்டாக்களை தோல் உரித்து விதை நீக்கவும். கோதுமை, தினை, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பு, கேழ்வரகு, பாசிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா இவற்றை தனித்தனியே வெறும் கடாயில் வறுத்து சர்க்கரை சேர்த்து மெஷினில் நைசாக அரைக்கவும். இவற்றை ஒன்றாக சேர்த்து, சப்போட்டா பழம், சோள மாவு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக பிசையவும். வறுத்த முந்திரியை சேர்த்து, நெய் விட்டு கெட்டியான உருண்டைகளாகப் பிடிக்கவும்.

குறிப்பு: சத்தான, பழச்சுவையுடன் கூடிய உருண்டை இது. பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

22. பழ பாசந்தி 

தேவையானவை: பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 200 கிராம், ஆப்பிள், வாழைப்பழம் - தலா 1, செர்ரிப் பழம் - 4, உலர்ந்த திராட்சை, வறுத்த முந்திரிப்பருப்பு - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: ஆப்பிள், வாழைப்பழத்தை பொடியாக நறுக்கவும். பாலை பாதியளவுக்கு சுண்டக் காய்ச்சி சர்க்கரை சேர்க்கவும். மீண்டும் கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டக்காய்ச்சி இறக்கி ஆறியதும், நறுக்கிய ஆப்பிள், வாழைப்பழம், உலர் திராட்சை, வறுத்த முந்திரி, செர்ரிப்பழம், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து குடிக்கவும்.

குறிப்பு: பாலும், பழமும் கலந்து வாசனையும், டேஸ்டும் அபாரமாக இருக்கும்.

 23.வாழைப்பழ கேசரி 

தேவையானவை: ரவை - 250 கிராம், வாழைப்பழம் - 4, பால் - 500 மி.லி, சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 மி.லி, வறுத்த முந்திரிப்பருப்பு - 10.
செய்முறை: சிறிது நெய்யில் ரவையை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். வாழைப்பழத்தையும் பொடியாக நறுக்கி நெய் விட்டு வதக்கவும். பாலைக்காய்ச்சி வறுத்த ரவையை போட்டு கிளறி, வதக்கிய வாழைப்பழத்தையும் மசித்து சேர்த்து சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்து நெய் விட்டு கிளறி, இறக்கவும்.

குறிப்பு: சத்யநா ராயணா பூஜையின் போது வாழைப்பழ கேசரி செய்து நைவேத் தியம் செய்வார்கள். கேசரிப்பவுடர் சேர்க்கத் தேவையில்லை.

24. மாம்பழ மோர்க்குழம்பு 

தேவையானவை: மாம்பழம் - 1, மோர் - 500 மி.லி, காய்ந்த மிளகாய் - 2, கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் - அரை மூடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மாம்பழத்தை நறுக்கி லேசாக வேக வைத்து நன்றாகக் கூழாக்கவும். வெந்தயம், காய்ந்த மிளகாயை சிறிது எண்ணெயில் வறுத்து, தேங்காயை துருவி சேர்த்து அரைக்கவும். இதனுடன் மாம்பழக்கூழ், மோர், உப்பு சேர்த்து கரைத்து, சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்து கலந்து லேசாக கொதிக்க விட்டு இறக்கவும்.

குறிப்பு: மாம்பழ சீசனில் இந்த மோர்க்குழம்பு செய்யலாம். காய்ந்த மிளகாய்க்குப் பதிலாக மிளகு சேர்த்தும் செய்யலாம். பொரித்த பப்படம், இதற்கு சூப்பராக இருக்கும்.

25. மிக்ஸ்டு ஃப்ரூட் இடியாப்பம் 

தேவையானவை: புழுங்கல் அரிசி - 250 கிராம், மாதுளை முத்துக்கள், பொடியாக நறுக்கிய  கொய்யா, ஆப்பிள், வாழைப்பழம், உரித்து கொட்டை நீக்கிய கமலா ஆரஞ்சு சுளை - தலா 100 கிராம்.
செய்முறை: புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து தோசை மாவு போல் நன்றாக வழுவழுவென அரைக்கவும். அடுப்பில் கடாயை ஏற்றி, அதில் மாவைப் போட்டு கெட்டியாக கிளறி, உருண்டைகளாக உருட்டவும். பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து, உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போடவும். வெந்ததும் உருண்டைகள் மேல் எழும்பி வரும். அவற்றை தனியே எடுத்து இடியாப்ப அச்சில் போட்டு பிழியவும். இதனுடன் மாதுளை, கொய்யா, வாழைப்பழம், ஆப்பிள், கமலா ஆரஞ்சு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு: வழக்கமான இடியாப்பம் போல் செய்து பழங்களுடன் சேர்த்தும் இதைத் தயாரிக்கலாம்.

26. ஃப்ரூட்ஸ் பால் கொழுக்கட்டை 

தேவையானவை: தேங்காய் - அரை மூடி, அரிசி - 200 கிராம் (ஊற வைக்கவும்), பால் - 500 மி.லி, பொடித்த வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பொடியாக நறுக்கிய ஆப்பிள், மாதுளை முத்துக்கள், பொடியாக நறுக்கிய சப்போட்டா - சிறிதளவு.
செய்முறை: ஊறிய அரிசியுடன் தேங்காயை துருவி சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அடுப்பில் வைத்து கெட்டியாகக் கிளறி நன்றாகப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து உருட்டிய உருண்டைகளைப் போட்டு வேக விட்டு எடுக்கவும். பாலை சுண்டக் காய்ச்சி வேக வைத்த உருண்டைகளைப் போட்டு வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதித்ததும், மாதுளை முத்துக்கள், ஆப்பிள், சப்போட்டா சேர்த்து கலக்கவும்.

குறிப்பு: வாழைப்பழம், பலாப்பழத்திலும் இந்த கொழுக்கட்டை செய்யலாம்.

27. ஃப்ரூட்ஸ் கோஸ்மல்லி 

தேவையானவை: லிச்சிப் பழம் - 10, பாசிப்பருப்பு - 100 கிராம், பொடியாக நறுக்கிய பேரிக்காய், ஆப்பிள், மாதுளை முத்துக்கள் - தலா 50 கிராம், உப்பு - சிறிதளவு, எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்.

செய்முறை: பாசிப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிக்கவும். இதனுடன் பேரிக்காய், லிச்சி, ஆப்பிள், மாதுளை முத்துக்கள், உப்பு சேர்த்து மேலாக எலுமிச்சை சாறு விட்டு நன்றாகக் கலக்கவும்.

 
குறிப்பு: பாசிப்பருப்புக்கு பதிலாக முளைகட்டிய பயறு வகைகளை சேர்த்தும் தயாரிக்கலாம். கடலைப்பருப்பு ஊற வைத்து சிறிது வேக வைத்தும் செய்யலாம். திருமண சாப்பாட்டு பந்தியில் கோஸ்மல்லிக்கு தனி இடம் உண்டு.

28.பலாப்பழ பாயசம் 

தேவையானவை: பலாச்சுளை - 10, பொடித்த வெல்லம் - 100 கிராம், நெய் - 2 டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய்ப்பால் - 200 மி.லி.
செய்முறை: பலாச்சுளையை நெய்விட்டு வதக்கி, மிக்ஸியில் அரைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சி, அரைத்த விழுது, வறுத்த முந்திரி,  ஏலக்காய்த்தூள், தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு: படு ருசியாக இருக்கும் இந்த பலாப்பழ பாயசம்... கேரள மக்கள் விரும்பி சாப்பிடும் ரெசிபி!

 29.ஃப்ரூட் பொங்கல் 

தேவையானவை: அரிசி - கால் கிலோ, வாழைப்பழம், சாத்துக்குடி, பைனாப்பிள் துண்டு, சப்போட்டா - தலா 1, நெய் - 100 மி.லி, கல்கண்டு - ஒரு டேபிள்ஸ்பூன், பால் - 500 மி.லி, முந்திரிப்பருப்பு - 10.
செய்முறை: அரிசியுடன் ஒரு பங்கு பால், நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஐந்து அல்லது ஆறு விசில் வந்ததும் இறக்கவும். சாதத்தை நன்றாகக் குழைத்து, கல்கண்டு, மீதமுள்ள பால், வாழைப்பழம், சாத்துக்குடி, பைனாப்பிள் துண்டு, சப்போட்டா சேர்த்து, நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு: ஒரே ஒரு பழத்திலும் இதேபோல் செய்யலாம். நெய்யில் ட்ரை ஃப்ரூட்ஸ் வறுத்தும் சேர்க்கலாம்

30.மல்டி ஃப்ரூட் லஸ்ஸி 

தேவையானவை: திராட்சை - 10 எண்ணிக்கை, சப்போட்டா, மாம்பழம், சிறிய வாழைப்பழம் - தலா 1, சாத்துக்குடி ஜூஸ் - 200 மி.லி, சர்க்கரை - 50 கிராம், அதிகம் புளிக்காத தயிர் - 500 மி.லி.
செய்முறை: திராட்சை, சப்போட்டா தோல் உரித்து விதை நீக்கவும். சப்போட்டா, மாம்பழம், வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி சர்க்கரை, திராட்சை சேர்த்து மிக்ஸியில் அரைத்து சாத்துக்குடி ஜூஸ், தயிர் சேர்த்து கலக்கவும்.

குறிப்பு: தயிரில் சர்க்கரை மட்டும் சேர்த்து லஸ்ஸி குடிப்பதை விட இந்த ஃப்ரூட் லஸ்ஸி உடலுக்கு மிகவும் எனர்ஜியைத் தரும். ஃப்ரிட்ஜில் வைத்தும் பருகலாம்.

31. ஆப்பிள் அடை

தேவையானவை: புழுங்கல் அரிசி - 250 கிராம், பாசிப்பருப்பு - 150 கிராம், ஆப்பிள் - 2 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து, ஆப்பிள், உப்பு சேர்த்து அடை மாவு பதத்தில் அரைக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக் கவும்.

குறிப்பு: காரம் இல்லாமல் பழ வாசனையுடன் மிகவும் ருசியாக இருக்கும் இந்த அடை. பிடித்தமான பழங்களை வைத்து இதே முறையில் அடை தயாரிக்கலாம்.

32.  ஃப்ரூட் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - 250 கிராம், வெண்ணெய் - 4 டீஸ்பூன், மாம்பழத் துண்டு, சப்போட்டா துண்டுகள் - தலா 6, பைனாப்பிள் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 100 மி.லி.
செய்முறை: மாம்பழம், சப்போட்டா, பைனாப்பிள் இவற்றை அரைத்து கோதுமை மாவுடன் சேர்த்து, வெண்ணெய் போட்டு மிருதுவாக பிசையவும். இந்த மாவிலிருந்து சிறிது எடுத்து, மெல்லிய சப்பாத்திகளாக இட்டு இருபுறமும் நெய்விட்டு சுட்டெடுக்கவும்.

குறிப்பு: இதற்கு சைட்-டிஷ் தேவை இல்லை. புளிப்பும், தித்திப்புமாய் அருமையாக இருக்கும்.

 33. ஃப்ரூட் சூப்

தேவையானவை: ஆப்பிள், சாத்துக்குடி - தலா 1, நறுக்கிய தர்பூசணி, நறுக்கிய கிர்ணிப்பழம், விதையில்லாத திராட்சை - தலா 100 கிராம், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சர்க்கரை - 4 டீஸ்பூன்.
செய்முறை: சாத்துக்குடியின் தோல், விதைகளை நீக்கி சுளையை தனியாக எடுக்கவும். இதனுடன் தோல் சீவிய ஆப்பிள், தர்பூசணி, கிர்ணிப்பழம், திராட்சை, சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதில் மிளகுத்தூள் சேர்த்து கலக்கி அப்படியே பருகலாம்.

குறிப்பு: சூப்பை 'ஜில்’லென்றும் குடிக்கலாம்.

34. கிவி சட்னி

தேவையானவை: கிவிப் பழம் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கடுகு - அரை டீஸ்பூன், புளிக்காத தயிர் - 100 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சித் தோல் சீவி, கிவிப் பழத்துடன் சேர்த்து நன்றாக அரைக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து, அரைத்த பழ விழுது, தயிர், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு: கிவிப் பழம் லேசாக புளிப்பு சுவையுடன் இருக்கும். தேவைப்பட்டால் சுவைக்காக அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். பஜ்ஜி, வடைக்கு ஏற்ற சிறந்த காம்பினேஷன்.

35. சாபுதானா ஃப்ரூட் உப்புமா

தேவையானவை: ஜவ்வரிசி - 200 கிராம், வறுத்த வேர்க்கடலை, பொடியாக நறுக்கிய ஆப்பிள், மாதுளை முத்து, பொடியாக நறுக்கிய பைனாப்பிள் - தலா 100 கிராம், வறுத்த முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை - தலா 10, உப்பு - தேவையான அளவு, நெய் - 100 மி.லி.
செய்முறை: ஆப்பிள், மாதுளை முத்து, பைனாப்பிள் துண்டுகளை மிக்ஸியில் அரைத்து, ஜவ்வரிசியுடன் கலந்து ஊற வைக்கவும். கடாயில் நெய் விட்டு, முந்திரி, திராட்சையை வறுத்து, ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து கிளறவும். வேர்க் கடலையை மிக்ஸியில் பொடித்து மேலாக உப்பு மாவில் தூவி நன்றாகக்  கிளறவும்.

குறிப்பு: இந்த உப்புமா நார்த் இண்டியன் ஸ்பெஷல். பழம் சேர்த்து செய்வதால் ஒரு தனி டேஸ்ட்.


நன்றி - அவள் விகடன்

Saturday, June 18, 2011

சீரக குழம்பு வைப்பது எப்படி?லெமன் ரைஸ்,புளி சாதம்,தக்காளி சாதம் வெரைட்டிஸ் சமையல் குறிப்புகள்



1. எலுமிச்சம்பழ சாத மிக்ஸ் 

தேவையானவை: வேர்க்கடலை, நல்லெண்ணெய் - தலா ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, முந்திரி - 10, கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கீறிய பச்சை மிளகாய் - 1.

எலுமிச்சம்பழ சாதம் செய்ய: எலுமிச்சைச் சாறு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். இதில் முந்திரி, வேர்க்கடலை சேர்த்து வறுத்து... மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்தால் எலுமிச்சம்பழ சாத மிக்ஸ் ரெடி!  

எலுமிச்சம்பழ சாதம் தேவைப்படும்போது, சாதத்தை உதிராக வடித்து... அதில் எலுமிச்சம்பழச் சாறு, உப்பு, எலுமிச்சம்பழ சாத மிக்ஸ் கலந்து பரிமாறவும்.
ஒரு வாரம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

2. .புளிக் காய்ச்சல் 

தேவையானவை: புளி - பெரிய எலுமிச்சம்பழ அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வெல்லம் - சிறிதளவு, வறுத்த வேர்க்கடலை (அ) முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தனியா - அரை டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, எள் - ஒரு டீஸ்பூன் (விருப்பப்பட்டால்) இவற்றை வெறும் கடாயில் சிவக்க வறுத்துப் பொடிக்கவும்.

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, சிவந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து  வறுக்கவும். வேர்க்கடலை (அ) முந்திரி,  கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, கெட்டியான புளிக் கரைசலை விடவும். இதில் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் போட்டு, நன்றாக கொதித்ததும் வறுத்துப் பொடித்த பொடியை சேர்க்கவும்.  மேலாக எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

வெளியூர் பயணத்தின்போது இதை கையோடு எடுத்து சென்றால்,  தேவையானபோது உதிரான சாதத்தில் கலந்து கொள்ளலாம்.

குறிப்பு: வறுத்துப் பொடிக்கும்போது, சிறிது ஜாதிக்காயை உடைத்து, வறுத்துப் பொடித்து சேர்க்கலாம். ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. ஒரு மாதம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

3. தக்காளி சாத மிக்ஸ் 

 தேவையானவை: பழுத்த தக்காளி - 10, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளியில் மூழ்கும்வரை தண்ணீர் விட்டு, 5 நிமிடம் கொதிக்க வைத்து, ஆறியதும் தோல் நீக்கி, மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த தக்காளி விழுதைச் சேர்க்கவும். மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்து வரத் தொடங்கியதும் இறக்கி, சேமித்து வைக்கவும்.

இந்த மிக்ஸை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன் படுத்தலாம். தேவைப்படும் போது, சாதத்தை உதிராக வடித்து தக்காளி மிக்ஸை கலந்து சாப்பிடலாம்.

4.  சீரக குழம்பு

தேவையானவை: சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கடுகு, குழம்பு மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - 2 டீஸ்பூன், கெட்டியான புளிக் கரைசல் - 50 கிராம், மஞ்சள்தூள், வெல்லம், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சீரகத்தைப் போட்டு பொரிக்கவும். காய்ந்த மிளகாயை கிள்ளி சேர்த்து, புளிக் கரைசலை ஊற்றவும். உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு... கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.

குழம்பு வடகத்தை தாளித்தும் சேர்க்கலாம். ஆறிய சாதத்தில் இந்தக் குழம்பை விட்டு, நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட லாம். தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம். ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

5.  பஜ்ஜி மிக்ஸ் 

தேவையானவை: கடலைப்பருப்பு - 200 கிராம், பச்சரிசி - 50 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 8, சோடா உப்பு - ஒரு சிட்டிகை, விருப்பமான காய் (வாழைக்காய், வெங்காயம், கத்திரிக்காய், பீர்க்கங்காய், உருளைக்கிழங்கு, கேரட்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து சேமித்து வைத்துக் கொள்ளவும். இதுதான் பஜ்ஜி மாவு.

பஜ்ஜி தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு பஜ்ஜி மாவு, உப்பு, சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். விருப்பமான ஏதாவது ஒரு காயை நன்றாக சீவி, ஒவ்வொரு துண்டாக மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

குறிப்பு: சோடா உப்புக்கு பதிலாக, ஒரு டேபிள்ஸ்பூன் புளித்த தோசை மாவை பஜ்ஜி மாவுடன் சேர்த்தாலும் உப்பலாக வரும்.  இரண்டு வாரம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.


நன்றி - அவள் விகடன்


டிஸ்கி - இன்று தான் நெல்லை சந்திப்பு,குற்றாலம் டூர் முடிந்து வந்தேன்.இனிமேல் தான் அவை பற்றி எழுதனும்.மேலும் ,அவன் இவன் ,ரதி நிர்வேதம்,அநாகரீகம் படங்கள் விமர்சனமும்.. பொறுத்திருக்க.. ஹி ஹி

Friday, May 27, 2011

ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களே உஷார்.. செப்பல் வாங்கும் முன் கவனிக்க உபயோக டிப்ஸ்

7.jpg (625×893)


அன்ன நடை... சின்ன இடை... என பெண்களின் ஆரம்பகால நடை அழகு எல்லாம் நடையைக் கட்டிவிட்டது. செருப்புக்கு கீழே ஸ்டூல் வைத்த மாதிரி ஹை ஹீல்ஸ் அணிந்துகொண்டு 'பூனை வாக்’ போவதுதான் இப்போதைய ஃபேஷன்!

''பூனை வாக் பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கும். ஆனால், ஹை ஹீல்ஸ் காலணிகளால் ஏற்படும் பாதிப்பு களையும் மனதில் கொள்ள வேண்டும்!'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மற்றும் பாத சிகிச்சை நிபுணரான டாக்டர் ராஜா!

'அழகு என்றால், கூடவே ஆபத்தும் இருக்கத்தானே செய்யும். அதை எல்லாம் நாங்க ஒரு கை பார்த்துடுவோம்ல' என்று இளமைத் துள்ளலில் இந்த எச்சரிக்கையை அலட்சிய மாகக் கடக்க வேண்டாம். டாக்டர் விரிவாகப் பேசுவதைக் கேட்டுவிட்டு, ஹை ஹீல்ஸுக்குள் காலைச் செருகுங்கள் பார்க்கலாம்!

''ஃபேஷன், பர்சனாலிட்டி வசதிக்காகத்தான் பெண்கள் ஹீல்ஸ் அணிகிறார்கள். ஆனால், அது அவர்களுக்கு வசதியாகவும், ஆபத்து இல்லாமலும் இருக்க வேண்டியது முக்கியம் அல்லவா! பொதுவாக, ஒன்றரை இன்ச் அளவுக்குக் கீழ் உள்ள ஹீல்ஸைப் பயன்படுத்தலாம். இதனால் பாதிப்புகள் இருக்காது. அதற்கு மேல் அணியும்போதுதான், உடல் அவதிகள் வரிசை கட்டும்.

ஹை ஹீல்ஸின் பாதிப்பு, நம் நடையின் இயல்பான சாயலையே மாற்றிவிடும். நார்மலாக பெண்களின் இடை, 'எஸ்' வடிவ வளைவுடன்
இருக்கும். ஆனால், தொடர்ந்து ஹீல்ஸ் அணிபவர்களுக்கு அந்த வளைவின் அழகு மாறும். இடுப்புத் தசைகள் இறுகுவதுடன், கால் முட்டி முன்பக்கமாக வளைந்து காணப்படும்!'' என்று புறத்தோற்ற மாறுதல்களை விளக்கியவர், உள் பாதிப்புகளைத் தொடர்ந்தார்.

''நம் பாதம்... முன்பகுதியான 'ஃபோர் புட்’, நடுப்பகுதியான 'மிட் ஃபுட்’ மற்றும் பின் பகுதியான 'ஹைண்ட் ஃபுட்’ என மூன்று பகுதிகள் ஒருங்கிணைந்தது. காலணி அணியும்போது முன் பகுதி நன்றாகஅசைக்கக்கூடிய வகையிலும், நடுப்பகுதி நல்ல சப்போர்ட்டுடனும், பின் பகுதி வசதியாகவும் காலணிக்குள் பொருந்த வேண்டும். முக்கியமாகப் பாதத்தின் ஆர்ச் பகுதியை நன்றாகப் பிடித்துக் கொள்ளும்படி இருக்க வேண்டும். அப்போதுதான் உடம்பின் எடையை பாதம் பேலன்ஸ்டாக தாங்க வசதியாக இருக்கும்.
ஆனால், ஹை ஹீல்ஸ் அணியும்போது மொத்த உடல் எடையில் 75 சதவிகிதம் முன் பாதத்தில் இறங்கிவிடும். அதனால் முன் பாதத்தில் ஆணிக்கால், காய்ப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். மேலும், குதிகால் பாதிப்புடன் ஆடுதசை பகுதியும் இறுக்கமாகலாம்.
தொடர்ந்து ஹை ஹீல்ஸ் பயன்படுத்தும்போது, முழங்கால் மூட்டின் உள் பகுதியான 'மீடியல் கம்பார்ட்மென்ட்’-ல் தேய்மானம் ஏற்படும். ஒரு கட்டத்தில், முழங்கால் மூட்டில் தேய்மானம் அதிகமாவதுடன், முதுகுப் பகுதியிலும் எலும்பு தேய வாய்ப்புகள் அதிகம். அதன் விளைவுகள்... உடல் இயக்கத்தையே சிரமப்படுத்தும்.

மொத்தத்தில் பார்ட்டி, ஃபங்ஷன் என்று ஓரிரு மணி நேரம் வரை ஹீல்ஸ் அணியலாம். தவறு இல்லை. டெய்லி யூஸ் என்றால், பத்து மில்லி மீட்டர் உயரம் கொண்ட ஃப்ளாட் செப்பல்களே பெஸ்ட்!'' - தீர்க்கமாகச் சொல்கிறார் டாக்டர் ராஜா.

'காலுக்குப் பத்தாத செருப்பை கழட்டி எறி!’

- பாட்டிகள் அடிக்கடி சொல்லும் இந்தப் பழமொழியுடன் முடிக்கலாம்தானே இந்தக் கட்டுரையை!



 காலணிகள் வாங்கும்போது, மாலை நேரத்தில் வாங்குவதுதான் நல்லது. இது என்ன புதுக்கதை என்கிறீர்களா? காரணம் இருக்கிறது. காலையில் இருந்து வேலை, விளையாட்டு என்று ஓடிக்கொண்டே இருக்கும் நமக்கு, மாலையில் பாதத்தின் சுற்றளவு ஒரு இன்ச் வரைகூட கூடியிருக்கும். எனவேதான் இந்தப் பரிந்துரை.

 ஷூக்களை டிரயல் பார்க்கும்போது, அவற்றின் முன் பகுதியில் நம் கை கட்டைவிரல் அகலத்துக்கு இடைவெளி இருக்கிறதா... கால் விரல்களை நன்றாக அசைக்க முடிகிறதா... ஷூவின் பின்பக்கம் பாதத்தினை அழுத்தாமல், அதேசமயம் அணைத்தவாறு இருக்கிறதா என்றெல்லாம் சரிபார்க்க வேண்டும்.
 சாக்ஸ் வாங்குவதிலும் கவனம் தேவை. நம் நாட்டின் வெப்பநிலைக்கு காட்டன் சாக்ஸ் அணிவதுதான் நல்லது. லெதர், ரப்பர், பிளாஸ்டிக் சாக்ஸ்களுக்கு வியர்வையை உறிஞ்சும் தன்மை இருக்காது. விளையாட்டு துறையில் இருப்பவர்கள் 'திக் சாக்ஸ்’ அணியலாம். சரியான உடல்வாகு உள்ளவர்கள் 'தின் சாக்ஸ்’ அணியலாம்.

 நீரிழிவு நோயாளிகளுக்கு ஆடுசதை வரை அழுத்தும் 'சீம் சாக்ஸ்’ ரத்த ஓட்டத்தை பாதிக்கும் என்பதால், கணுக்காலுடன் முடியும் 'சீம்லெஸ் காட்டன் சாக்ஸ்’ தேர்ந்தெடுக்கலாம். ஸ்போர்ட்ஸ் நபர்கள் கட்டாயமாக 'சீம் சாக்ஸ்’ அணிய வேண்டும்.

 ஹை(யோ) ஹீல்ஸ்! 

தங்களின் ஹை ஹீல்ஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள் இவர்கள்...
சிந்து (மாடல்) : 

''ஒரு பார்ட்டிக்காக மூன்றரை இன்ச் பாயின்ட்டட் ஹீல்ஸ் போட்டுட்டுப் போனேன். காலையில இருந்து சாயங்காலம் வரை ஒருவித அசௌகரியத்தோடயே இருந்தேன். வீட்டுக்கு வந்தா, கால் வலி உயிர் போயிடுச்சு. வெதுவெதுப்பான நீர்ல ஒத்தடம் கொடுத்தாங்க அம்மா. மறுநாள் டாக்டர்கிட்ட போயும், ஒருவாரம் கழிச்சுதான்தான் சரியாச்சு வலியும் வீக்கமும். அன்னியோட ஹீல்ஸுக்கு சொல்லிட்டேன் பெரிய 'பை'!''

அருட்செல்வி 

(தொகுப்பாளினி, மக்கள் தொலைக்காட்சி): 

''நான் மீடியம் ஹைட் ஹீல்ஸ் போடுவேன். என் ஃப்ரெண்ட் ஒருத்தி ஹை ஹீல்ஸோட பஸ்ல ஏறி தடுக்கி விழுந்து அடி, அவமானப்பட்டதை பார்த்ததில் இருந்து ஹீல்ஸை சுத்தமா விட்டுட்டேன்.''

நிவேதா சீனிவாசன் 

(மருத்துவக் கல்லூரி மாணவி, சென்னை): 

''நான் ரெகுலராவே ஹீல்ஸ் யூஸ் பண்ணினேன். ஆரம்பத்துல ஒண்ணும் தெரியலை. போகப் போக கால் வலி, மூட்டு வலி, முதுகு வலி பிரச்னைகள் படுத்துச்சு. ஆனாலும், என்னால ஹீல்ஸ் க்ரஷ்-ஐ விட முடியலை. அவுட்டிங்-க்கு மட்டும் போடறது, ஃபங்ஷனுக்கு மட்டும் போடறதுனு இப்போ கொஞ்சம் கொஞ்சமா ஹீல்ஸ் பழக்கத்தை கஷ்டப்பட்டு குறைச்சுட்டு இருக்கேன்!''


நன்றி - விகடன்

Sunday, May 15, 2011

கீரை வகைகளும் சமையல் செய்யும் முறைகளும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxTV5iI1sJEviqpmyA2rkmMM0T2Qv-6THaGqQLLPWQOTo6l4EFGrN8lSz2WEZ62f1D4L1RDOifubY9p_NmKyr4rJ9vB_A9DAB5jZoorKp-fJ66_5WVt38i_cuV2HDXt-a2DUUSDQkjvNQ/s400/MUDAKKATTHAAN
புளிச்சக்கீரை குடலுக்கு வலுவூட்டக்கூடியது. இதில் துவையல் செய்து சாப்பிட்டால், வயிற்றுப் புண், வயிற்றுக் கடுப்பு ஆகியவை குணமாகும்.
கீரைகளில் மசியல், கூட்டு செய்யும்போது பயத்தம்பருப்பை சேர்த்துச் செய்ய வேண்டும். இது சுவையைக் கூட்டுவதோடு... உடலுக்குச் சத்தையும், குளிர்ச்சியையும் தந்து தெம்பும் ஊட்டும்.
பாலக்கீரையில் அதிகமாக இரும்புச்சத்து இருக்கிறது. இந்தக் கீரையில் உப்பு சேர்த்து
லேசாக வேக வைத்து, மிக்ஸியில் அரைத்து... கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். மலச்சிக்கலை போக்கி, உடம்பைப் புத்துணர்ச்சியாக வைக்கும்.
வயிற்றில் இருக்கும் அதிகப்படியான சதையை (தொப்பை) குறைக்கச் செய்யும் குணம் பசலைக்கீரைக்கு உண்டு. லேசாக வேக வைத்து பொரியல் செய்துகூட சாப்பிடலாம்.
மணத்தக்காளிக் காய்களை உப்பு, மோரில் பிசிறி வெயில் காய வைத்து, எண்ணெயில் பொரித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். வாய்ப் புண், வயிற்றுப் புண் ஆகியவை குணமாகும்.
  இரவு வேளையில் கீரை சமைத்து சாப்பிடக்கூடாது என்பார்கள். சரிவர ஜீரணமாகாமல் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதுதான் காரணம்.
சிறுகீரை என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், அது தரும் பலன்கள் பெரிதுதான். மிளகு, சீரகம், சோம்பு, தக்காளி, வெங்காயம் இவற்றோடு சிறுகீரையைச் சேர்த்து வேக வைத்து, சிறிது பருப்பையும் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால்... பித்தம், நீர்க்கடுப்பு, கை, கால் வீக்கம் குறையும். சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், இன்சுன் இயல்பாக சுரக்கவும் வாய்ப்பு ஏற்படும்.
எந்தக் கீரையானாலும் துவையல் செய்தே சாப்பிடலாம். கீரையை நிறம் மாறாமல் நன்றாக வதக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், 2 பூண்டு பல், புளி, உப்பு சேர்த்து சிறிது எண்ணெயில் தனியாக வறுக்கவும். பிறகு, வதக்கிய கீரையுடன் சேர்த்து அரைத்தால் துவையல் தயார். இதைச் சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். ருசியாக இருப்பதோடு, சத்துக்களும் அப்படியே உடல் சேரும். 

1. முளைக்கீரை  பருப்பு வடை
தேவையானவை: முளைக்கீரை - ஒரு கட்டு (கழுவி பொடியாக நறுக்கவும்), கடலைப்பருப்பு - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 4, சோம்பு - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), இஞ்சித் துருவல் - அரை டீஸ்பூன், கொத்தமல், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பை ஊற வைத்து வடித்து, காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இதனுடன் சோம்பு, வெங்காயம், முளைக்கீரை, இஞ்சித் துருவல், கொத்தமல், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

2.  உருளை  முருங்கைக்கீரை மசாலா 

தேவையானவை: முருங்கைக்கீரை - அரை கட்டு (உதிர்த்து வேக வைக்கவும்), பட்டை - சிறிய துண்டு, கிராம்பு - 2, சீரகம் - அரை டீஸ்பூன், பூண்டுப் பல் - 3, இஞ்சித் துருவல், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு - 4, பச்சை மிளகாய் - 4, வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்) மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், தக்காளி - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து சிறு துண்டுகளாக நறுக்கவும். வேக வைத்த கீரையை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இஞ்சி - பூண்டுடன், நறுக்கிய பாதி அளவு வெங்காயத்தை சேர்த்து அரைக்கவும். தக்காளி, பச்சை மிளகாயைத் துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சீரகம், மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கு, இஞ்சி-பூண்டு-வெங்காய விழுது, அரைத்த கீரை விழுதை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

3.மல்ட்டி கீரை சூப் 

தேவையானவை: முளைக்கீரை, முருங்கைக்கீரை, பசலைக்கீரை, கொத்தமல், புதினா - தலா ஒரு பிடி, மிளகுத்தூள், சோள மாவு - தலா 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புதினா, கொத்தமல்யுடன் மற்ற கீரைகளையும் நன்றாகக் கழுவி ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்த கீரைகளை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். சோள மாவை சிறிது தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைத்து, கீரைக் கலவையில் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். இதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

4. பாலக் ரைஸ் 

தேவையானவை: பாஸ்மதி அரிசி - 200 கிராம், பாலக் கீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - 1, (பொடியாக நறுக்கவும்), பூண்டு பேஸ்ட் - கால் டீஸ்பூன், இஞ்சித் துருவல், சோம்பு - கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, கிராம்பு - 2, நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து, உதிராக வடித்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு சோம்பு, கிராம்பு தாளித்து... பூண்டு பேஸ்ட், இஞ்சித் துருவல், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியவுடன் வெங்காயம், கீரை சேர்த்து மேலும் வதக்கி, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, வடித்த சாதத்துடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

5. வெந்தயக்கீரை கொழுக்கட்டை 

தேவையானவை: வெந்தயக்கீரை - 2 கட்டு, கடலை மாவு, கோதுமை மாவு - தலா 50 கிராம், மிளகாய்த்தூள், தேங்காய் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கீரையை ஆய்ந்து, நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கவும். இதனுடன் கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, கலந்து பிசையவும். பிறகு, சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

6.  வல்லாரை துவையல் 

தேவையானவை: வல்லாரைக்கீரை - ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, புளி - நெல்க்காய் அளவு, பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வல்லாரைக்கீரையைப் பொடியாக நறுக்கி, சிறிது எண்ணெயில் வதக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். இதனுடன் புளி, உப்பு, வதக்கிய கீரை சேர்த்து துவையலாக அரைக்கவும்.

7. கீரை வெஜிடபிள் ஆம்லெட்
தேவையானவை: பாலக் கீரை - அரை கட்டு, கடலை மாவு - 50 கிராம், தக்காளி - 3, வெங்காயம் - 1, சீஸ் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 4, மிளகாய்த்தூள், மிளகுத்தூள் - தலா கால் டீஸ்பூன், ஜாதிக்காய்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாலக் கீரை, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை அரைத்து சாறு எடுக்கவும். கீரையுடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். கடலை மாவு, வெங்காயம், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், ஜாதிக்காய்தூள், உப்பு, சீஸ் துருவல், கீரை விழுது, தக்காளி சாறு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். தோசைக்கல்லை காய வைத்து, கரைத்த மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி, வேக வைத்து எடுக்கவும்
.
8. கீரை  நட்ஸ் சாலட்
தேவையானவை: காய்ந்த திராட்சை - 50 கிராம், வல்லாரைக்கீரை - ஒரு சிறிய கட்டு (பொடியாக நறுக்கி வதக்கவும்), மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரி - தலா 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து கலக்கவும்.

9. கிரீன் ஸ்மூத்தி
 
தேவையானவை: பழுத்த வாழைப்பழம் - 2, மணத்தக்காளி கீரை - அரை கட்டு (பொடியாக நறுக்கவும்), தேங்காய்ப்பால் - 50 மில், பச்சை திராட்சை - 50 கிராம்.

செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஐஸ் க்யூப் சேர்த்துப் பருகவும்.

10. முருங்கைக்கீரை  காராமணி பொரியல்
தேவையானவை: முருங்கைக்கீரை - அரை கட்டு (உருவிக் கொள்ளவும்), காராமணி - 50 கிராம் (வேக வைக்கவும்), காய்ந்த மிளகாய் - 3, தேங்காய் துருவல் - கால் கப், ஒன்றிரண்டாக பொடித்த தனியா, பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சித் துருவல், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பூண்டு, பெருங்காயத்தூள், சீரகம், தனியா சேர்த்து தாளிக்கவும். இஞ்சித் துருவல், முருங்கைக்கீரை சேர்த்து வதக்கி, காராமணி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து மேலும் சிறிது வதக்கி இறக்கவும்.

11. ரங்கீலா ரொட்டி 

தேவையானவை: பாலக் கீரை - ஒரு கட்டு (விழுதாக அரைக்கவும்), கேரட், பீட்ரூட் - தலா 1 (வேக வைத்து, தனித்தனியே அரைத்து, தனியாக வைக்கவும்), கோதுமை மாவு - 150 கிராம் (3 பங்காக பிரித்துக் கொள்ளவும்), உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
 செய்முறை: அரைத்த கீரையுடன் ஒரு பங்கு கோதுமை மாவு, உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கேரட் விழுதுடன் இரண்டாவது பங்கு கோதுமை மாவு, உப்பு சேர்த்துப் பிசையவும். பீட்ரூட் விழுதுடன் மூன்றாவது பங்கு கோதுமை மாவு, உப்பு சேர்த்துப் பிசைந்து தனியே வைக்கவும். ஒவ்வொரு கலவையிருந்தும் சிறிதளவு எடுத்து, உள்ளங்கையில் வைத்து லேசாக உருட்டிக் கொள்ளவும். இதை சப்பாத்தியாக இட்டு, தோசைக்கல்ல் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

 12.பைங்கன் பாலக்
தேவையானவை: கத்திரிக்காய் - 4, பாலக் கீரை - அரை கட்டு (பொடியாக நறுக்கவும்), பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், பூண்டுப் பல் - 2, இஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 4, நெய் (அ) எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கத்திரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கி... கீறிய பச்சை மிளகாய், கொத்தமல், இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நன்றாக வேகவிடவும். கடாயில் நெய் (அ) எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பெருங்காயத்தூள், தனியாத்தூள், கீரையை சேர்த்து வதக்கி வேக வைக்கவும். வெந்ததும் மசித்து, கத்திரிக்காய் கலவையில் சேர்த்துக் கிளறவும்.

13. மணத்தக்காளிகீரை மிளகூட்டல்
தேவையானவை: மணத்தக்காளிகீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), மிளகு - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரையில் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். வெந்த கீரையில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.

14.முளைக்கீரை  அவல் சாலட்
தேவையானவை: முளைக்கீரை - அரை கட்டு (வதக்கிக் கொள்ளவும்), வறுத்த அவல் - 100 கிராம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு (வேக வைத்து, தோல் உரிக்கவும்) - 1, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பவுல் எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கலந்து வைக்கவும்

15.முளைக்கீரை  தக்காளி மசாலா கிரேவி
தேவையானவை: முளைக்கீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), தக்காளி, உருளைக்கிழங்கு - தலா 3, வெங்காயம் - 1, மஞ்சள்தூள், சீரகம், கரம் மசாலாத்தூள், இஞ்சி - பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - இரண்டு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரைவேக்காட்டில் வேக வைத்து, எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும். தக்காளியை அரைத்து சாறு எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து வதக்கவும். கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், நறுக்கிய கீரை சேர்த்து வதக்கி, தக்காளி சாறு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
இறக்குவதற்கு முன்பு பொரித்த உருளைக்கிழங்கு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

 16.மேத்தி காக்ரா
தேவையானவை: கடலை மாவு, மைதா மாவு, கோதுமை மாவு - தலா 100 கிராம், பொடித்த ஓமம் - ஒரு டீஸ்பூன், வெந்தயக் கீரை - 2 கட்டு, மிளகாய்த்தூள் - எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் கடலை மாவு, மைதா மாவு, பொடித்த ஓமம், வெந்தயக்கீரை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து... சிறிது எண்ணெய் விட்டு பிசைந்து, சப்பாத்தி மாதிரி தேய்த்துக் கொள்ளவும். காயும் தோசைக்கல்ல் ஒவ்வொரு சப்பாத்தியாகப் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு மொறுமொறுப்பாக சுட்டெடுக்கவும்.

17. சிறுகீரை கட்லெட்
தேவையானவை: சிறுகீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), உருளைக்கிழங்கு - 3, பொடித்த வேர்க்கடலை, வறுத்துப் பொடித்த அவல் - தலா 3 டேபிள்ஸ்பூன், இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய், பிரெட் துண்டுகள் - தலா 3, சோள மாவு - இரண்டு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோள மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும். இதில் சிறுகீரையைச் சேர்த்து... பொடித்த வேர்க்கடலை, இஞ்சி - பூண்டு பேஸ்ட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்க்கவும், பிரெட்டை தண்ணீரில் முக்கி உடனே பிழிந்து சேர்க்கவும். எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப் பிசையவும். பிசைந்து வைத்த கலவையிருந்து சிறிது எடுத்து கட்லெட்டுகளாக தட்டி, சோள மாவு கரைசல் முக்கி எடுத்து, அவல் பொடியில் புரட்டி, தோசைக்கல்ல் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக எடுக்கவும்.

18. புதினா பக்கோடா
தேவையானவை: புதினா - ஒரு கட்டு, சேமியா - 100 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, வெங்காயம் - 2, உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொதிக்கும் நீரில் சேமியாவைப் போட்டு, வெந்ததும் வடித்து எடுத்து, குளிர்ந்த தண்ணீரில் அலசவும். இதனுடன் பொடியாக நறுக்கிய புதினா, வெங்காயம் சேர்த்து வதக்கி, முந்திரி, மிளகாய்த்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து பிசைந்து, காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

19. பாலக் பச்சடி
தேவையானவை: பாலக்கீரை - அரை கட்டு, தயிர் - 100 கிராம், பச்சை மிளகாய் - 1, கடுகு, சீரகம், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாலக்கீரையைப் பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிட்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். வெறும் கடாயில் சீரகத்தை வறுத்து, அரைத்த கீரையுடன் சேர்க்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து, கீரைக் கலவை, உப்பு சேர்த்துக் கிளறி, தயிருடன் கலந்து பரிமாறவும்.

 20.பொன்னங்கண்ணி மோர் கூட்டு
தேவையானவை: பொன்னங்கண்ணிக்கீரை - ஒரு கட்டு, துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், சீரகம், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கெட்டித் தயிர் - 100 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கீரையைப் பொடியாக நறுக்கி வேக வைக்கவும். துவரம்பருப்பை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். தேங்காய் துருவல், சீரகம், ஊற வைத்த துவரம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் இவை எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்து... வெந்த கீரை, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். ஆறியதும் கெட்டித் தயிர் சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

21. மேத்தி புலாவ்
தேவையானவை: பாசுமதி அரிசி - 150 கிராம், வெந்தயக்கீரை - 4 கட்டு (பொடியாக நறுக்கவும்), தேங்காய்ப்பால் - 150 மில், ஏலக்காய் - 3 (இடித்துக் கொள்ளவும்), கிராம்பு - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் - 3, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் நெய் விட்டு சீரகம், கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுத்து... பச்சை மிளகாய், வெந்தயக்கீரை சேர்த்து வதக்கவும். இதில் தேங்காய்ப்பால், ஊற வைத்த அரிசி, உப்பு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கிளறி, குக்கரில் வேக வைத்து இறக்கவும். ஏதேனும் ஒரு பச்சடியுடன் பரிமாறவும்.

22. அரைக்கீரை பருப்பு மசியல்
தேவையானவை: அரைக்கீரை - ஒரு கட்டு, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 4 (நீளமாக நறுக்கவும்), துவரம்பருப்பு - 50 கிராம். (வேக வைக்கவும்), புளி - நெல்க்காய் அளவு, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கீரை, தக்காளியைப் பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து... பச்சை மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் வெந்த கீரை, வெந்த துவரம்பருப்பு சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்து மேலும் கொதிக்க விட்டு இறக்கவும்.
இதேபோல் பசலைக்கீரையிலும் செய்யலாம். புளிக்குப் பதிலாக எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டும்.

 23.அகத்திக்கீரை  சுண்டைக்காய் பொரியல்
தேவையானவை: அகத்திக்கீரை - ஒரு கட்டு, துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், (முக்கால் பதத்தில் வேக வைக்கவும்), காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், சுண்டைக்காய் வற்றல் - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பை மலராக வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து... கிள்ளிய காய்ந்த மிளகாய், சுண்டைக்காய் வற்றல்  சேர்த்து வறுக்கவும். இதில் கீரையை நறுக்கி சேர்த்து வதக்கி... வெந்த துவரம்பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்துக் கிளறவும். கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

24. பசலைக்கீரை ஸ்வீட் கார்ன் குருமா
தேவையானவை: பசலைக் கீரை - அரை கட்டு, சீஸ் - 2 க்யூப் (துருவிக் கொள்ளவும்), ஸ்வீட் கார்ன் - 2 (உதிர்த்து வேக வைக்கவும்), டிரை மாங்காய்த்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், கிராம்பு - 1, பட்டைத்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 3 டேபிள்ஸ்பூன், துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, வெங்காயம் (சிறியது) - 1, பயத்தம்பருப்பு - 100 கிராம், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பசலைக் கீரையைப் பொடியாக நறுக்கி... பயத்தம்பருப்பு, வெங்காயம், மஞ்சள்தூள், கிராம்பு, பட்டைத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து மசிக்கவும். கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் சோள முத்துக்கள், மசித்த கீரைக் கலவை, மாங்காய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, கீழே இறக்கி சீஸ் துருவல் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

25. புளிச்சகீரை சட்னி
தேவையானவை: புளிச்ச கீரை - ஒரு கட்டு, காய்ந்த மிளகாய் - 8, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்ந்த மிளகாயுடன் புளிச்ச கீரை சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... அரைத்த கீரை விழுது, உப்பு சேர்த்து நன்றாக சுருளக் கிளறி இறக்கவும்.
தயிர் சாதத்துடன் சாப்பிட ருசியாக இருக்கும்.

26. வெந்தயக்கீரை மலாய் கட்டா
தேவையானவை: கடலை மாவு - 150 கிராம், ஓமம் - அரை டீஸ்பூன், வெந்தயக்கீரை - 2 கட்டு, பச்சை மிளகாய் - 2.கிரேவி செய்ய: வெங்காயம் - 2, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி - 3, தனியாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், பட்டைத்தூள் - கால் டீஸ்பூன், ப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரை, வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை நறுக்கி சாறு எடுக்கவும். கடலை மாவுடன் வெந்தயக் கீரை, ஓமம், பச்சை மிளகாய் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். சிறிது மாவை எடுத்து விரல் நீளத்துக்கு உருட்டி கொதிக்கும் தண்ணீரில் போட்டு 5 நிமிடம் வேக விட்டு, பிறகு வடித்து தனியே வைக்கவும். கட்டா ரெடி! வடித்த நீரை கொட்ட வேண்டாம்.
மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சாறு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி... மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், பட்டைத்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். வடித்து தனியாக வைத்திருந்த நீரை தேவையான அளவு சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க வைத்து, கட்டாக்களை போட்டு மேலும் 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். கிரீம் சேர்த்துப் பரிமாறவும்.

27. பனீர் கிரீன் ஸ்டீம்டு கேக்
தேவையானவை: ஏதேனும் ஒரு கீரை - அரை கட்டு (பொடியாக நறுக்கவும்), பனீர் துருவல், வேர்க்கடலை - தலா 50 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், நெய் (அ) எண்ணெய், உப்பு - தேவையான அளவு. கேக் தயாரிக்க: கடலை மாவு - 150 கிராம், தயிர் - 100 கிராம், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், சமையல் சோடா, பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கேக் செய்ய கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கலக்கவும். கீரையில் உப்பு சேர்த்து, நெய் (அ) எண்ணெய் விட்டு லேசாக வதக்கவும். சிறு சிறு கிண்ணங்களில் லேசாக எண்ணெய் தடவி, துருவிய பனீர், வேர்க் கடலை சிறிது, அதன் மேல் வதக்கிய கீரை, அதற்கும் மேல் கரைத்து வைத்துள்ள கடலை மாவு கரைசல் என கிண்ணத்தில் பாதி அளவுக்கு ஊற்றவும். கிண்ணங்களில் நிரப்பியதும், அவற்றை குக்கரில் வைத்து வெயிட் போடாமல் வேக வைத்து எடுக்கவும். சிறிது ஆறியதும், கத்தியால் எடுத்து, ஒரு தட்டின் மேல் பரப்பி, மேலாக சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும். இதேபோல் தயிர், சமையல் சோடா இல்லாமல் தோசை மாவிலும் செய்யலாம்.

28. பருப்புக்கீரை டிக்கா
தேவையானவை: பருப்புக்கீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), உருளைக்கிழங்கு - 2 (வேக வைக்கவும்) வேக வைத்த பச்சைப் பட்டாணி - 50 கிராம், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), கெட்டித் தயிர் - 50 கிராம், டிரை மாங்காய்தூள் - 2 டேபிள்ஸ்பூன், சாட் மசாலாத்தூள், மிளகாய்தூள் - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல் - சிறிதளவு, சோள மாவு - 5 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரையைத் தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். இதனுடன் எண்ணெய், நீங்கலாக கொடுத்துள்ள மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இந்த கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி கட்டை விரலால் அழுத்தி, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

29. சிறுகீரை  பச்சைப் பட்டாணி கூட்டு
தேவையானவை: சிறுகீரை - ஒரு கட்டு, பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ஃப்ரெஷ் கிரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.  
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுத்து... கீறிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். உப்பு, பொடியாக நறுக்கிய கீரை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும். தண்ணீர் வற்றி கெட்டியானதும், பச்சைப் பட்டாணி, தூள் வகைகள், தயிர் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். கிரீம் சேர்த்து, அடுப்பை சிறியதாக வைத்து நன்றாக கொதிக்க விடவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம். 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

30. சிறுகீரை  பச்சைப் பட்டாணி கூட்டு
தேவையானவை: சிறுகீரை - ஒரு கட்டு, பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ஃப்ரெஷ் கிரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.  
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுத்து... கீறிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். உப்பு, பொடியாக நறுக்கிய கீரை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும். தண்ணீர் வற்றி கெட்டியானதும், பச்சைப் பட்டாணி, தூள் வகைகள், தயிர் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். கிரீம் சேர்த்து, அடுப்பை சிறியதாக வைத்து நன்றாக கொதிக்க விடவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம். 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

நன்றி - விகடன்