Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Tuesday, April 23, 2019

சூரியனே தாமரையை ஆதரிக்குதே

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாரா முதல்வர் பழனிசாமி?- அதிமுக விளக்கம் # கரகாட்டக்காரன் வாழைப்படக்காமெடிக்கு அடுத்து இந்த வாழைப்பழ சேல்ஸ் வீடியோ தான் வைரல் ஆகிட்டு வருது


===============


2  

கனிமொழி தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை # உடனே திமுக காரங்க மொழிப்போராட்டத்தில் ஈடுபட்டிருப்பாங்களே?


===============


3  

மாநிலத்தில் நம் ஆட்சி; மத்தியில் நாம் 'கை' காட்டும் ஆட்சி: ஸ்டாலின் கடிதம் # கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்



ராகுல்தான் பிரதமர்னு சொல்லிட்டு இப்போ திடீர்னு ஸ்ருதி குறையுதே?


==============

  


நூறு சதவீதம் திமுக ஆட்சி அமைக்கும்: வைகோ உறுதி # போன தேர்தல்ல மக்கள் நலக்கூட்டணி ஆட்சி அமைச்ச மாதிரியா?


===============

5    பொதிகைத் தென்றலைப் போல திமுக மக்களை அரவணைக்கும் -வைகோ  # பொதிகை சேனலையும் வாங்கிடும் போல , ஆக்ரமிக்கும் என்பதைத்தான் அரவணைக்கும்கறாரோ?


================


6    

திமுக அணிக்கு வாக்களிப்பது நமது தலையை நாமே கொள்ளிக்கட்டையால் சொறிந்து கொள்வதற்கு ஒப்பாகும்: ராமதாஸ் விமர்சனம்  # எரியற கொள்ளில எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி?



=============


7   

யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதைப் பார்க்க முடியும்.. வாக்குச்சாவடியில் மோடி கேமரா வைத்துள்ளார்: சர்ச்சையான பாஜக எம்.எல்.ஏ. மிரட்டல் பேச்சு # இந்த 2000 ரூபா நோட்டுல சாட்டிலைட் மூலம் கண்காணிக்கற சிப்ஸ் வெச்சிருந்த மாதிரியா?


===============

8  

தேசம் மக்களால் ஆளப்பட வேண்டும்; தனிமனிதரால், ஒற்றை சித்தாந்தத்தால் அல்ல: ராகுல் காந்தி தாக்கு # ஜோசியர் ஒற்றைப்படை ராசி இல்லைன்னுட்டார் போல, மன்மோகன் எனும் பொம்மை ஆள் பின்னால் இருந்து சோனியுஆ இயக்க ஆட்சி நடக்குமோ?>


===============

9  

நான் பாஜகவுக்கு ஆதரவு': ரவிந்திர ஜடேஜா வெளிப்படை: பிரதமர் மோடி வாழ்த்து # ரவின்னா சூரியன், சூரியனே தாமரையை ஆதரிக்குதேனு பேசப்போறாங்க



==============



10    

நோயாளியின் உடல்நிலையை பரிசோதிக்க ஒரு இடத்தில் ரத்தம் எடுப்பீர்களா.. 20 இடத்தில் எடுப்பீர்களா?- தலைமை தேர்தல் ஆணையர் கேள்வி # ரத்தம் வர்லைன்னா வர்ற இடம் தேடுவது டாக்டர் வழக்கம் தானே?


================


11  நிதின் கட்கரி, சேலத்தில் பிரசாரம் செய்த போது, 'சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை, கட்டாயம் அமைக்கப்படும்' என்றார். கூட்டணி கட்சி தலைவர் பேசும்போது குறுக்கிடுவது, தவறு என்பதால் தான், முதல்வர், இ.பி.எஸ்., அதற்கு, எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.-அமைச்சர், ராஜேந்திர பாலாஜி #சரி , இப்போதான் அவர் பிரச்சாரத்தை முடிச்சுட்டுப்போய்ட்டாரே?இப்ப உங்க முதல்வரை அறிக்கை விடச்சொல்லுங்க் பார்ப்போம்

----------------


12   'சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை-மக்கள் நலனை கருத்தில் கொண்டு, முதல்வர் முடிவு எடுப்பார்.-அமைச்சர், ராஜேந்திர பாலாஜி # மத்திய அரசை எதிர்த்து? இதை நாங்க நம்பனும்?


=================


13   ரொம்ப கோபத்தில், நான் அரசியலுக்கு வந்தவன்; வியாபாரத்திற்காக வரவில்லை. மக்களின் கோபம் தணியும்போது தான், என் கோபமும் தணியும் -கமல் # கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு தப்பு பண்ணிட்டேன்னு பின்னாளில் வருத்தப்படப்போறாரு


உங்க கோபம் கலைஞர் , ஜெ உயிரோட இருந்தப்போ ஏன் வரலை?

================


14 'ஸ்டாலினின் கொடுக்கு உதயநிதி' என  அன்புமணி பேசுகிறார். அது உண்மை தான்... நான் கொடுக்கு தான்; தவறு செய்பவர்களை, கொட்டிக் கொண்டு தான் இருப்பேன். -உதயநிதி #  அதாவது ஆளுங்கட்சி செய்யும் தவறுகளைத்தானே?


===============

15 : ஜி.எஸ்.டி.,யால், தொழில்கள் பாதிக்கப்பட்டு இருப்பது போலவும், கோவையில் தொழில்கள் வளர்ச்சி அடையாதது போலவும், பொய்யான தோற்றத்தை உருவாக்க, தி.மு.க., - காங்., - கம்யூ., கூட்டணி கட்சிகள் முயல்கின்றன. ஜி.எஸ்.டி.,யில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என, தொழில் துறையினர் விரும்புகின்றனரோ, அவை ஒன்றன் பின் ஒன்றாக, சரி செய்யப்பட்டு வருகின்றன. -  ராதாகிருஷ்ணன் # இன்னும் 5 வருஷம் ஆகுமா? அதுக்கு?

=================

16  அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும், தமிழக நலன்களை கூட்டணி போட்டு சூறையாடியது போதாது என, தேர்தல் களத்திலும், கூட்டணி அமைத்துள்ளன-தினகரன்:   # ஜனாதிபதி தேர்த;ல்ல நாம  மட்டும் பாஜகவை ஆத்ரிக்கலையா?நமக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வ்ந்தா தக்காளிச்சட்னியா?


=============

17  எனக்கு எந்த கிராமத்தில் அதிக ஓட்டு கிடைக்கிறதோ, அங்கு முன்னுரிமை அடிப்படையில் வசதிகளை செய்து தருவேன் -மத்திய அமைச்சர் மேனகா # என்ன ? ஏலம் போடறாரு? ஒரு வேட்பாளரா இப்படிப்பேசறதே தப்பு, ஒரு அமைச்சர் இப்படிப்பேசலாமா?

================


18    லோக்சபா தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கப் போவது இல்லை-சித்தராமையா: # காங்கிரஸ்காரருக்கே காங் மேல நம்பிக்கை இல்லைன்னா ஜனங்க எப்படி நம்பி ஓட்டுப்போடுவாங்க?


================


19  ''ஒரு குடும்பத்துக்கு அடிமையாக இருப்பது தான், காங்கிரசின் அடையாளமாக மாறிவிட்டது,'' ...-பிரதமர் மோடி  # இவருக்கு இன்னும் திமுக பற்றித்தெரியல போல

==============

20  
தமிழகத்தில் மோடி ஆட்சி நடக்குது:  சந்திரபாபு நாயுடு  # ரமணா படத்துல யூகிசேது சொன்ன மாதிரி இதையே இப்போதான் கண்டுபிடிக்கறாங்களா?


=================

Monday, April 22, 2019

நயன்தாரா ஆதரவு பெற்ற கட்சி

இடம் மாறினாலும் தடம் மாற மாட்டேன் - நாஞ்சில் சம்பத்
# பிரமாதம்,ஆனா எதுகை மோனையா பேசறவங்க பெரும்பாலும் எதுனா தப்பு பண்ணி மாட்டிக்கறாங்க ,அது ஏனோ?


=============


2 பி-2 படிவத்தை நிரப்பாத காரணத்தால் கனிமொழி வேட்பு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு # ஒரு விண்ணப்பப்படிவத்தையே ஒழுங்கா பில்லப் பண்ண முடியாதவங்க,தெரியாதவங்க எப்படி ஜனங்க எதிர்பார்ப்பை,தேவை யை பூர்த்தி செய்ய முடியும்?


===============


3 தமிழச்சி தங்கபாண்டியனிடம் சொந்தமாக கார் கூட இல்லையாம்.. ஒரே ஒரு டிவிஎஸ் எக்ஸெல் மட்டுமே.. சொத்து விவரம்! # இது என்ன அண்டப்புளுகா இருக்கு,அவங்க கிட்ட இருக்கற நகைகள் ,பட்டுப்புடவைகள் மதுரை மீனாட்சி அம்மன் கிட்ட கூட இல்ல..


===============

4 இரட்டை இலை வென்றால் அது மோடியின் வெற்றி என்று சேலத்தில் கூறினார் முன்னாள் அமைச்சர் பொன்னையன் # எம்ஜியாரை வேற யாரும் இப்படி அவமானப்படுத்தி இருக்க மாட்டாங்க.அவங்க கட்சிக்காரங்களே .


================


5 மோடியும், அமித் ஷாவும் 'உ.பி.யை ஏமாற்றும் இரு குஜராத்திகள்’:பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட ஐ.பி.சிங் தாக்கு # இதுல உ.பி என்பது உத்திரப்பிரதேசம்.எனவே உடன்பிறப்புகள் அவசரப்பட்டு பொங்கி அறிக்கை விட்டு மாட்டிக்காதீங்க



===============



6 என்னுடைய சொத்து ரூ.115 கோடி; நிலுவையில் 2 குற்ற வழக்குகள்!'- வேட்புமனுவில் ஜெகத்ரட்சகன் தகவல் # கணக்குல காட்டுன பணத்தை பேங்க்ல போட்டாலே பேங்க் வட்டி 2 தலைமுறைக்குப்போதுமே,இன்னும்"சம்பாதிக்க ஆசை?


============


7 பெரம்பலூர் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தாமதமாக வந்ததால் வேட்புமனு ஏற்க மறுப்பு
#கடைசி நாள் அன்னைக்கு கரண்ட் பில் ,பைப் வரி கட்ற பழக்கத்துல இதுலயும் கோட்டை விட்டாச்சா?இல்ல இப்டி பண்ணுனா இவ்ளோ பைசா தர்றோம்னு வேட்பாளருக்கு திராவிடக்கட்சி எதுனா சாணக்கியத்தனம் (மொள்ளமாரித்தனம்) பண்ணுச்சா? தெரில


================


மோடி பிரதமரானால் நாட்டை விற்று விடுவார்: நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா கடும் தாக்கு # வித்தா நாம வாங்கிடலாம்,நம்ம கிட்ட இல்லாத காசு இந்தியால வேற யார் கிட்ட இருக்கு?


==============


9 “மக்களவை தேர்தலில் அதிமுக கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், அக்கட்சிக்கு சமக ஆதரவு!” - சரத்குமார்# சன் டிவி"ல மனைவி"ராதிகா வோட சீரியல்"டைம் 9.30 pm ல இருந்து 6.30 pm ஆக உள்நோக்கம் கொண்டு மாற்றப்பட்டது,இதுல ராடன் க்கு செம லாஸ்,பழி வாங்கும் பொருட்டு எதிரியின் எதிரி க்கு ஆதரவு



===============
10 ”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது!"- கமல்ஹாசன் கிடையாதுனு ஒரு அர்த்தம்"வந்துடுதே


===============


11 தூத்துக்குடியில் புதிய தொழில் முதலீடுகள் வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்: கனிமொழி # சாராய ஆலை பிராஞ்ச் ஓப்பன் பண்ணிடுவாரோ?

===========

12 நான் பிராமணன். காவல்காரன் வேலையை என்னால் பார்க்க முடியாது." - சுப்பிரமணியன் சுவாமி | சுவாமி ஜி . # போலீஸ் வேலை பிடிக்கலைன்னா திருடன் வேலைதான் அடுத்து,அது ஓகே வா?


=================



அதிமுக கூட்டணியில் உள்ள தென்காசி மக்களவை தொகுதியின் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிப்பு!
# ஜாதிப்பெருமை பேசுபவர் தோற்பதே சமூகநலனுக்கு நல்லது


==================



ராதாரவி மீது நடவடிக்கை - ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி
# இதுதான் சாக்கு னு நயன்தாரா ஆதரவு பெற்ற கட்சி னு வாக்கு கேட்டுடாதீங்கய்யா,கட்சியோட பாரம்பரியம் போய்டும்


==============


15 ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை ஏப்ரல் 26-ம் தேதி வரை கைது செய்ய தடை - டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். # தேர்தல் முடிஞ்சதும் ஜெயிலுக்குப்போற டிக்கெட்களுக்கு எதுக்கு எம.பி தேர்தல்"ல டிக்கெட்?



===============


16 ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள்? சொல்லுங்கள் ஸ்டாலின்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்! # ஏன்னா ஒரு நடிகர்தான் அப்பா கிட்ட கணக்கு கேட்டாரு.தனிக்கட்சி ஆரம்பிச்சு ஜெயிச்சு ஆப்பு வெச்சாரு..அப்ப இருந்து நடிகர்னாலே ஒரு பயம்தான்


================


17 சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டி # ஜாமீன்ல வந்துட்டாரு போல.இவரு ஜெயிச்சார்னா ஜெயிலுக்கு"போகாம தப்பிக்க யோகம் உண்டு,ஆனா ஜெயிக்கற யோகம் இருக்கா தெரில


=================


18 2019 தேர்தலில் பாஜக வெற்றி பெறும்,ஆனா மோடி,பிரதமர்"ஆக"மாட்டார்"− சு.சுவாமி,# கட்சிக்குள்ள இருந்துட்டே இவ்ளோ"தில்லா"பேட்டி குடுக்கறாரே?யோகி தைரியம்"தந்திருப்பாரோ?


==============+


19 சீனியர்களுக்கு 'ஓய்வு' கொடுக்கும் கட்சிகள்.. அத்வானி, ஜோஷி வரிசையில் ஓரங்கட்டப்பட்ட முலாயம்சிங்! "கூட சீனியர்தான் ,யோகி ஒரு நாள் மோடி ஆவாரு,மோடி அத்வானி"ஆவாரு


===============



20 துரோகிகளுடன் சேருவதை விட கடலில் குதிப்பது எவ்வளவோ மேல்.. டிடிவி தினகரன் கொந்தளிப்பு# இவரும்",சசிகலாவும் ஜெ க்கு துரோகம் பண்ணாங்க.OPS & EPS இவருக்கு"துரோகம் பண்ணாங்க,வாழ்க்கை"ஒரு"வட்டம்


==================

Sunday, April 21, 2019

தம்பி,இன்னும் பெண் பார்க்கும் படலமே வர்ல,அதுக்குள்ள மச்சினி மேல் ஆசை இல்லைன்னா எப்டி?

வன்னியர்கள் மீது ஸ்டாலின் காட்டும் அன்பு என்பது, ஆடு மீது ஓநாய் காட்டும் அன்பு போன்றது”- ராமதாஸ் # குறிப்பிட்ட பிரிவுன்னு இல்லங்க,பொதுவாவே இந்துக்கள் மீது அவர்கள்"காட்டும் போலி அன்பு தேர்தலுக்காக,வாக்குக்காக.தேர்தல் முடிஞ்ச அடுத்த நாள்ல இருந்து இந்துக்களை கேவலமாப்பேச ஆரம்பிச்சிடுவாங்க



=============



ஒழுங்கா ஆட்சி நடத்துகிறார்களா என்று

அம்மா ஆவி எங்களை கண்காணிக்கிறது: ஓபிஎஸ்
#அது உண்மைன்னா ஜெ உயிரோட இருந்தப்ப நீங்க பதவி ஏற்கும்போது நடிகர் திலகம் ரேஞ்சுக்கு பர்பார்மென்ஸ் தந்துட்டு ஜெ இறந்தபின் நிகழ்ந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அசால்டா இருந்திருக்க மாட்டீங்களே?ஆவி"கண்காணிக்கும்னு ஆக்டிங் பண்ணி இருப்பீங்களே

==============


காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையால், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பே தமிழக மக்களுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது− ஸ்டாலின

# கடைசி வரை நம்ம வெற்றி ஆன்லைன்ல
நக்கீரன்ல
முரசொலி ல மட்டும்தான் போல.



==============


4 “அடுத்த 5 ஆண்டுகள் ஏழைகளுக்கான ஆட்சியாக இருக்கும்”
- அமித்ஷா # அப்ப இந்த முறை ஆண்ட 5 வருஷமும் பணக்காரர்கள் ,தொழில் அதிபர்களுக்கான ஆட்சியா இருந்ததுனு ஒத்துக்கறாரா?


==============


5 அமித்ஷா நடந்து வந்தாலே வெற்றி.. இப்போ பறந்து வந்துள்ளதால் வெற்றி நிச்சயம்.. தமிழிசை # சமீப காலமா இவரு எதுகை மோனைல பஞ்ச் டயலாக்கா விட்டுட்டு இருக்காரே?டெல்லில இருந்து பறந்து தான் வரமுடியும்,நடந்து வந்தா எலெக்சனே முடிஞ்சிடுமே?


==============


6 துரைமுருகன் வீட்டில் ரெய்டு.. தேமுதிக மீது கை வைத்தால் இதுதான் கதி.. பிரேமலதா பாய்ச்சல்!
# என்ன?சாபம் எல்லாம் விடறீங்க? எங்க தளபதி கூடத்தான் நக்கல் பண்ணாரு,உங்க பவரை காட்டுங்க பார்ப்போம்


===============

7 நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் - காங். தேர்தல் அறிக்கை
# அப்ப காங் கிரசை எதிர்க்கும் மாநிலங்களில் காங் ரத்து செய்யப்பட்டு கலைக்கப்படுமா?சும்மா அடிச்சு விடறது



===========


8 பா.ஜ.க.விற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என நாடு முழுவதும் உள்ள 200 எழுத்தாளர்கள் கூட்டறிக்கை
# அடடா!200 ஓட்டு போச்சே!இதனால ஆட்சி அமைக்க முடியாம போய்டுமே?200 பேரால ஒரு ஆட்சியே மாறப்பாகுது,பொலிடிக்கல் மிராக்கிள்


===============


9 துரைமுருகன் வீட்டில் மீண்டும் வருமான வரி சோதனை
# ரெய்டு வர்றப்ப எல்லாம் பாத்ரூம் போய்டறாரு,பயமா?பதுக்கலா?தெரில.எதுக்கும் வீட்ல இருக்கற பாத்ரூமை இடிச்சு தேடுங்க,எதுனா சிக்கும்


================


10 மோடி வீட்டில் கறுப்புப்பணம் உள்ளது என நான் புகாரளித்தால் சோதனை நடத்துவார்களா?
- மு.க.ஸ்டாலின் # நம்ம ஆட்சி நடந்தப்ப / நடக்கறப்ப நம்ம ஆளுங்க மேல புகார் அளித்தா நாம நடவடிக்கை எடுப்பமா?


==============


11 துரைமுருகன் வீட்டில் சோதனை நடப்பது நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும்” - EPS # நீங்கள் தமிழக முதல்வர்தானே?

அதுவும் சசிகலா சொன்னப்ப தான் தெரியும்


==================


12 துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனைக்கும் மத்திய பாஜக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை
- பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் # இது"கட்சியின் கருத்து அல்ல,அவரது"தனிப்பட்ட கருத்து − தமிழிசை


===================


13 அதிமுகவை அடிமை எனக்கூறும் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியிடம் கொத்தடிமையாக இருக்கிறார்
நாங்கள் பாஜகவுக்கு 5 தொகுதிகள் தந்துள்ளோம், ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் தந்துள்ளார் ஸ்டாலின்
- அமைச்சர் செல்லூர் ராஜூ # நாளைக்கு தோத்ததும் அவங்க மேல பழி போட்டு தப்பிச்சுக்கலாமே?


==================


14 பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் காவிரியில் தண்ணீர் வரும்

- தம்பிதுரை # என்ன?ஓட்டு கேட்கறப்ப பணிவா கேட்காம மிரட்டி கேட்கறாரு?


===============


15 குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் – மு.க.ஸ்டாலின் கடும் சாடல் # தலைவரே!முன்னாடி கண்ணாடி



==============


16 திமுக ஆட்சியில் மின்சார கட்டணத்தை ஏற்றியதே கிடையாது - ஸ்டாலின் # ஒரு சின்ன திருத்தம்,திமுக ஆட்சியில் கரண்ட் 24 மணி நேரம் ஒரு"நாள் கூட இருந்ததே கிடையாது,சின்னத்தம்பி"கவுண்டமணி பாணி ல சொல்லனும்னா உங்க ஆட்சில ஒரே உபயோகம் ,கரண்ட் பில் அதிகம்"கட்டவே வேண்டியதில்லை


================
17 'சொல்வதைச் செய்பவர், செய்வதைச் சொல்பவர் பிரதமர் மோடி" -மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் # இது ரஜினியோட பஞ்ச் டயலாக்குங்கோ,குரு சிஷ்யன் ல பேசுவாரு,அதை பட்டி,டிங்கரிங்க் பண்ணி கலைஞர் பேசுனாரு,இப்ப நீங்க


==========


18 மத்திய அமைச்சராகும் ஆசை எனக்கு இல்லை - ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்
# தம்பி,இன்னும் பெண் பார்க்கும் படலமே வர்ல,அதுக்குள்ள மச்சினி மேல் ஆசை இல்லைன்னா எப்டி?


==============


19 தனக்கு ரூ. 8,97,44,503 கடன் உள்ளதென்றும், மனைவி ஸ்ரீநிதிக்கு 8,43,36,613 ரூபாய் கடன் உள்ளதென்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்
# கடன் காரக்குடும்பமா இருக்கே? இவங்க கடனை அடைக்க குறுக்கு வழி தேர்தல் ல ஜெயிக்கறது?



=================


20 உழைப்பை நம்பி திமுக தேர்தல் களத்தில் நிற்கிறது அதிமுக, பா.ஜ. பணத்தை நம்பி போட்டியிடுகிறது: திருச்சி சிவா எம்.பி. பேச்சு
# பணம் செலவு பண்ண மனசு வராதுங்கறது எல்லாருக்கும் தெரியுமே?அதனாலதானே கட்சிக்காரங்களே ஆர்கே நகர்ல மாத்தி ஓட்டுப்போட்டு நமக்கு டெபாசிட் போச்சு?



===============

Thursday, April 18, 2019

இப்போ நடக்கறது நாடாளுமன்றத்தேர்தலா? சட்டமன்றத்தேர்தலா?

 1 எங்கள் கட்சியின் சின்னமான, 'டார்ச்லைட்' வெளியே தெரியக்கூடாது என, மறைக்க சிலர் முயற்சி செய்கின்றனர்.   -கமல்  # லைட்டா எடுத்துக்குங்க, இதெல்லாம் ஒரு பிரச்சனையா?


--------------

2  பூரண மது விலக்கு கொண்டு வந்தால், மாபியாக்கள், கள்ள மார்க்கெட், கொலைகாரர்கள், கடத்தல்காரர்கள் உருவாவர். மது விலக்கு சாத்தியமில்லாதது  - கமல்ஹாசன்: @

= இவருக்கு குஜராத்ல பூரண மதுவிலக்கு இருப்பது தெரியாது போல, அங்கே எப்படி சமாளிக்கறாங்கனு கேட்டு தெரிஞ்சுக்கலாமே? 

=================

3   : தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், முதல் வேலையே, ஊழல்வாதிகள், ஜெ., மரணத்துக்கு காரணமானவர்களை தண்டிப்பது தான்  -ஸ்டாலின்  # ஊழல்வாதிகளை தண்டிப்பீங்களா? அப்போ உங்க கட்சி ஆளுங்க  மனம் புண்படாதா?


=================


4  : கருணாநிதியை மானசீக குருவாக ஏற்றவன் நான். தி.மு.க.,வில் உறுப்பினராகவில்லையே தவிர, எவ்வித நிபந்தனையும் இன்றி, அக்கட்சியுடன் பழகி வருகிறேன்  - திருமாவளவன்  # 2016 ல மானசீக குரு விஜயகாந்த்தா?2019 ல கலைஞர், அப்போ 2021 ல யாரு?


=================

5   . ஜி.எஸ்.டி., வரி விதிப்பால், விலைவாசி தொடர்ந்து உயர்கிறது. லட்சக்கணக்கான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆறு கோடி பேர் வேலை இழந்துள்ளனர் -புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி  # ஜிஎஸ்டி பற்றி முதன்முதலா திட்டம் போட்டதே காங்கிரஸ்தானே? மாமியார் உடைச்சா மண்குடம், மருமக உடைச்சா பொன்குடம்?


================


6  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், காங்., ஆட்சியில், 163 ரூபாயாக இருந்த ஊதியம், 229 ரூபாயாக உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது. -பொன்.ராதா  # பெட்ரோல் டீசல் விலை உயர்வு மாதிரியா?


==========


பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை,  ரஜினிகாந்த் உட்பட, அனைவரும் வரவேற்றுள்ளனர்.-அமைச்சர் சீனிவாசன் # இதுதான் சாக்குன்னு ரஜினியின் ஆதரவு பெற்ற கட்சினு பிரச்சாரத்த ஆரம்பிச்சிடுவாரோ?


=================

: நாட்டுக்குள் ஊடுருவியவர்களை களையெடுக்க, பா.ஜ., விரும்புகிறது-  அமித் ஷா # அப்டியே லோன் வாங்கிட்டு நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்ல ஊடுருவறங்களையும் தடுங்க

==============


9  பாகிஸ்தானில் இருந்து, ஒரு துப்பாக்கி தோட்டா சுடப்பட்டால், இங்கிருந்து, வெடிகுண்டுகள் வழியாக பதிலடி தரப்படும்-அமித் ஷா  # ஆளீல்லாத இடத்துல குண்டு போட்டுட்டு வந்துடுவாங்களா?


===============


10  மோடி ஆட்சியில், பல துறைகள் சீர்குலைக்கப்பட்டுள்ளன. கருத்துரிமை, பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது-முத்தரசன் # இப்போ நீங்க பேசிட்டு இருக்கறதே பேச்சுரிமை பறிக்கப்படலை என்பதற்கு சாட்சி தானே?




==================

11     தெலுங்கானா மாநிலத்தில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் அத்துமீறி நுழைந்து, புகைப்படம் எடுத்த, ஆளும் கட்சி பிரமுகர், கைது  # செல்பி மோகம் உயிரைப்பறிக்குது, ஜெயிலுக்கும் அனுப்புது


==============


12  ராகுலை புத்தராக பார்க்கிறேன் - காங்., தலைவர் அழகிரி  # அப்போ திடீர்னு எல்லாத்தையும் துறந்துட்டு போய்டுவாரா? அப்போ அவர் பிர்தமர் ஆனாலும் பிரயோஜனம் இல்லையே?


============


13  தேர்தலில், மக்கள் தான் எஜமானர்களாகவும், நீதிபதிகளாகவும் செயல்படுகின்றனர்-ஓபிஎஸ்  # அதனால தேர்தல் வரும்போது மட்டும் ஜனங்களுக்கு பயந்து நடக்க வேண்டியதா இருக்கு?


==============


14   ''நாங்கள் எதற்கு பணம் பட்டுவாடா செய்யப் போகிறோம். நானே அப்பிராணியாக இருக்கிறேன்,'' - கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு  #  ஒரு அமைச்சரே அப்பிராணியா இருக்கலாமா? உஷரா இருக்க வேணாம்?


==================


15   'எந்த காலத்திலும், ஸ்டாலின் முதல்வராக வரப் போவதில்லை,''- சரத்குமார்  # ராகு(ல்) காலம் வந்தாலுமா?

===============




16 

ஸ்டாலினால் முதல்வர் ஆக முடியாது: ஓ.பி.எஸ்., # இப்போ நடக்கறது நாடாளுமன்றத்தேர்தலா? சட்டமன்றத்தேர்தலா? ஆளாளுக்கு இதையே சொல்றீங்க?


=============


17   இரட்டை இலை, துரோகிகள் கையில் உள்ளது,'' - அ.ம.மு.க., துணை பொதுச் செயலர் தினகரன்   #  சின்னத்தைப்பற்றி எங்களூக்கு கவலை இல்லைன்னீங்களே?


===============


18  நான் நடித்த, கரகாட்டக்காரன் படத்தில், 'காரை வைச்சிருந்த சொப்பன சுந்தரியை, இப்ப யார் வைச்சிருக்காக...' என்று கேட்பது போல, அ.தி.மு.க., இப்போது பன்னீர் செல்வத்திடமா அல்லது பழனிசாமியிடமா அல்லது மோடியிடமா என, தெரியவில்லை.-

நடிகர் செந்தில் # போன தேர்தல்ல வடிவேலுக்கு மார்க்கெட் போன மாதிரி இந்தத்தேர்தல்ல செந்திலுக்கா?


=============


19 மற்ற கட்சிகளின் கூட்டங்கள், பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டன. 'ஆனால், மக்கள் நீதி மையத்திற்கென யாரையும் அழைக்காமல் தொண்டர்கள் தானாக வருகின்றனர்.-கமல் # நேரில் பேசறதைப்பார்த்தாலாவது உங்க பேச்சு புரியுமா?னு பார்க்கவா இருக்குமோ?


=================


20  பிரதமர் வந்த ஹெலிகாப்டர் தரையிறங்கிய பின், அதில் இருந்த கறுப்பு நிற பெட்டி, இன்னோவா கார் ஒன்றில் ஏற்றப்பட்டது.இது குறித்து விசாரணை நடத்த வேண்டு-காங்., செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா, # கறுப்புப்பெட்டி என்பதால் கறுப்புப்பணம் இருக்கும்னு நினைக்கறாரோ?


=================