Showing posts with label ஃபேஸ்புக். Show all posts
Showing posts with label ஃபேஸ்புக். Show all posts

Wednesday, September 10, 2014

ஃபேஸ்புக் அடிமையானால் தனிமை உணர்வுக்கு ஆளாகும் அபாயம்!

கோப்புப் படம்
நீங்கள் எவ்வித நோக்கமும் இல்லாமல் ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுகிறீர்களா?
உங்களது விழிகள் திரையை விட்டு நீங்காமல் இருக்கின்றதா? 



இவ்விரண்டு கேள்விகளுக்குமான பதில் 'ஆம்' எனில், மன அழுத்தத்தை உள்ளாகும் அபாயத்துக்கான அறிகுறிகள் உங்களிடம் இருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு.
அதிக நேரம் ஃபேஸ்புக்கில் செலவழிப்பவர்கள் பலர் மன அழுத்தத்தில் மூழ்கும் அபாயத்தில் இருக்கிறார்கள் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. 


மேலும், ஃபேஸ்புக் தளத்துக்கு அடிமையாவோர், தனிமை உணர்வால் வாடும் நிலைக்குத் தள்ளப்படும் சூழலுக்கு ஆளாவார்கள் என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கிறது.
என்னதான் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் நம் அனைவரையும் இணைக்கும் வண்ணம் காட்சியளித்தாலும், அதிக நேரம் இவற்றை பயன்படுத்துவது ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும். 



"ஒருவர் மனதில் தங்கும் சோகத்துக்கும், ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவழிப்பதற்கும் உளவியல் ரீதியான தொடர்பு இருக்கிறது" என்கின்றனர் ஆஸ்டிரியன் உளவியலாளர்களான கிறிஸ்டீனா சஜொய்கலோவும் டோபியாஸ் கிரிட்மேயரும். 



மூன்று கட்டமாக நடந்த இந்த ஆய்வில், முதல் கட்டமாக 123 ஜெர்மன் பேசும் ஃபேஸ்புக் வாசகர்களைக் கொண்டு ஆராய்ந்தனர். பெரும்பாலானவர்கள் ஃபேஸ்புக்கில் சிறிது நேரம் செலவிட்டவுடன் அவர்களின் மனநிலையில் மாற்றம் காணப்பட்டது. 'அமேசான் மெகேனிகல் டர்க்' என்ற திட்டத்தின் மூலம் இதன் இரண்டாம் கட்ட ஆராய்ச்சியில் 263 பேர் பங்கேற்றனர். அதில் பங்கு பெற்றவர்களின் மனநிலையிலும் மாற்றம் காணப்பட்டது. 


இந்த ஆராய்ச்சியின் கடைசி கட்டமாக 101 ஃபேஸ்புக் வாசகர்களிடம் "ஃபேஸ்புக் பக்கங்களைப் பார்ப்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்குமா அல்லது சோகத்தை உண்டாக்குமா?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்த கட்டத்திலும்,ஃபேஸ்புக்கிலிருந்து வெளிவரும்போது தங்கள் வாழ்க்கையில் தனிமை ஏற்படுகிறது என்று பதிலளித்தார்கள் என வைரல் க்ளோபல் நியூஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.



இது தொடர்பான ஆராய்ச்சி தகவல்கள் 'கம்பியூடர்ஸ் இன் ஹுயூமன் பிஹேவியர்'என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே, கூச்ச சுபாவம் உள்ளவர்கள், பிறரிடம் அதிகம் பேசாத உள்முக சிந்தனையாளர்கள் ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவழிப்பதால் தம் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பகிர்வது சிறிதே என்றும் அலபாமா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.



thanx - the hindu

Tuesday, March 12, 2013

சி.பி.செந்தில்குமாரை நக்கல் அடித்த ஆனந்த விகடன்,அட்ரா சக்க அதிர்ச்சி

ஃபேஸ்புக் போராளி ஆவது எப்படி?
பேங்க் அக்கவுன்ட் இருக்கிறதோ இல்லையோ, இப்போவெல்லாம் நம் தமிழர்களுக்கு ஃபேஸ்புக் அக்கவுன்ட் இருக்கிறது. பல்லு விளக்கியதைப் பத்து வரிகளில் ஸ்டேட்டஸாகப் போடும் சில அற்ப ஆன்மாக்கள் உலாவும் இதே ஃபேஸ்புக்கில், ஒரு ஃபேஸ்புக் போராளியாக நீங்கள் உருவாவது எப்படி என்பதற்காகச் சின்னதாய் ஒரு கோர்ஸ்.




முதலில் காலை வணக்கம். அலுவலகம் போனதும் சேகுவேரா முகம் தெரியும் கோப்பையில் காபி நுரைத்துப்பொங்கும் படத்தைப் போட்டு தூய யுனிகோடு தமிழில் 'காலை செவ்வணக்கம்...’ என்று தட்டுங்கள். சிட்டுக்குருவி பற்றிய தலையங்கம், மன்மோகன் சிங்கின் மந்தமான பொருளாதாரக் கொள்கை, பசி பட்டினியைப் பொருட்படுத்தாத ப.சி பட்ஜெட் எனப் பத்திரிகைகளில் வரும் அலசல் கட்டுரைகளை காப்பி பேஸ்ட் அடித்து அப்படியே ஸ்டேட்டஸ் ஆக இறக்கிவைக்கத் தெரிந்திருக்க வேண்டும். 



ஆர்வக்கோளாறில் அம்புட்டையும் கட் அண்ட் பேஸ்ட் பண்ணினால், முதலுக்கே மோசம் பாஸ். நீங்க காப்பி பேஸ்ட் போராளி என்பது தெரிஞ்சு மானம் மல்லாக்கப் பறக்கும். எடுக்கவோ தொடுக்கவோங்கிற கதையா அழகா அங்கங்கே கொஞ்சம் கொஞ்சம் கட் பண்ணி ஒரு பாரா எழுதினாலே போதும். எந்தக் காரணத்தைக்கொண்டும் ரெண்டு பாரா எழுதி காலையிலேயே எழவைக் கூட்டிறாதீங்க. ஏன்னா, இப்போது எல்லாம் மொபைல் ஃபோன்லயே ஃபேஸ்புக் பார்க்கிற வங்கதான் அதிகம். நீங்கபாட்டுக்கு பத்து பாராவை ஸ்டேட்டஸா ஆர்வக்கோளாறுல இறக்கிவெச்சீங்கன்னா டக்குனு 'மொக்கை போடுறானே சவத்து மூதி’னு கடந்து போயிருவாங்க.


அடுத்து தமிழ் வெப்சைட்களை ரெகுலரா ஒருவாட்டி காலையில எந்திரிச்சதும் படிச்சிருங்க. அதில் வரும் வித்தியாசமான செய்திகளைக் க.க.க.போ பண்ணி உங்கள் ஸ்டைலில் உல்டா அடிங்களேன். 'பெண் கிடைக்கலை... பணத்துக்கும் எருமைக்கும் பெண்ணை விலைக்கு வாங்கும் ம.பி மாப்பிள்ளைகள்’னு ஒரு மேட்டர். அதை நீங்க எப்படி எழுதணும்னா 'இந்தியாவில் பெண்களின் விகிதாச்சாரம் படிப்படியாகக் குறைந்து அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ளது.



 கடந்த பத்தாண்டுகளில் பெண் சிசுக் கொலைகள், கருக்கலைப்பு, வரதட்சணைக் கொடுமை போன்ற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளால் பலியான பெண்களின் எண்ணிக்கை 70 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் இதன் விகிதம் 90 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது என்கிறது அதிர்ச்சியூட்டும் சர்வே ஒன்று’ என நீங்களே கண், காது, மூக்கு வைத்து அதிர்ச்சியூட்டும் 'இல்லாத சர்வே’யைப் போட்டு கூகிள் இமேஜில் ஒரு பெண் முக்காடிட்டு மூலையில் உட்கார்ந்து இருக்கும் சில்-அவுட் போட்டோவையோ பெண்ணின் கையில் விலங்கு போடப்பட்டு ரத்தம் ஒழுகும் காட்சியோ போட்டு இந்த மேட்டரை ஷேர் செய்தால், ஃபேஸ்புக்கில் இதற்காகவே உலாவும் சகப் போராளிகளால் அதிகம் லைக் பண்ணப்படும்.



சில நேரங்களில் முதல் ஸ்டேட்டஸாக எதைப் போடலாம் என தடுமாற்றம் வரலாம். ரொம்பவெல்லாம் மெனக்கெட வேண்டாம். எஃப்.எம். ரேடியோவில் யாழ் சுதாகர் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு வாழ்த்துச் சொல்லிப் பாட்டுப் போடுவது காதில் விழுகிறதா... கூகிள் இமேஜ் தேடுபொறியில் 'புக்ஸ் வித் ஸ்டூடண்ட்ஸ்’ எனத் தேடுங்க... தலைகீழாக மண்டையைப் பிய்த்துக்கொண்டு படிக்கும் பள்ளிப் பிள்ளைகளின் போட்டோக்கள் கடகடவெனக் கொட்டுகிறதா? 



அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு 'புத்தகங்களே கவனமாக இருங்கள், எங்கள் குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்’ என்ற கவிக்கோ அப்துல் ரகுமானின் ஓப்பனிங்கோடு கல்வி முறையை 'சாட்டை’ படத்து வசனங்களால் சாடுங்கள். என்னது, 'சாட்டை’ பட வசனங்கள் தெரியாதா? 'சாட்டை பட விமர்சனம்’ எனத் தேடுபொறியில் தேடினால், கொட்டும். உங்களுக்காகவே மாய்ந்து மாய்ந்து படத்தின் வசனங்களை தியேட்டரில் இருந்தே எழுதும் சென்னிமலை சி.பி. செந்தில்குமார் போன்றோர் இருக்கிறார்கள். அது போன்ற வலைப்பூக்களை நல்லா ஈயடிச்சான் காப்பி அடிச்சுக்கங்க. அப்புறம் என்ன? அசத்துங்க.


தலைகீழா நின்னாவது சுடுதண்ணீரை வெயில்ல குடிச்சுட்டு ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடும் நிஜப் போராளிகளுக்கு நட்புக் கோரிக்கை கொடுத்திருங்க. அப்புறம், லாஸ்ட் பட் நாட் லீஸ்ட். ஓசியில வடை சுடுறது எப்படி? ஷேரிங் நல்லதுன்னு டீச்சர் சொல்லித்தரலையா? அதுபோல நல்ல விஷயம் எவனாச்சும் எங்கிட்டாவது ஷேர் செஞ்சா கவனமா அதை நீங்க கொத்திக்கிட்டு வந்து, உங்க ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இருக்கும் 50 பேருக்காவது ஷேர் பண்ணுங்க. அப்படி செஞ்சீங்கனாதான், வெளில இருந்து உங்க புரொஃபைலைப் பார்க்கிறவங்களுக்கு இந்த மனுஷன் இப்படியா 24 மணி நேரமும் மத்தவங்களுக்காக உழைச்சுக்கிட்டும் சிந்திச்சுக்கிட்டும் இருப்பான்னு  உயர்வா நினைப்பாய்ங்க. நீங்க ஷேர் செஞ்சுட்டு சாட்டிங்ல கீதாவோட கடலை போடுறதெல்லாம் அவிய்ங்களுக்குத் தெரியவாப் போகுது?



அப்புறம் என்ன பட்டையக் கௌப்புங்க... குட்டையக் குழப்புங்க... ஃபேஸ்புக் போராளியாக வாழ்த்துகள். சாருக்கு ஒரு சே குவேரா தேனீர் சட்டை பார்சேல்ல்ல்!


-ஆர்.சரண்

நன்றி - விகடன்

Monday, November 26, 2012

PM பற்றி அரசியல் ஜோக் ஃபேஸ்புக்கில் போட்டதால் மும்பை சைபர் க்ரைம் போலீஸால் இருவர் கைது

Two Air India employees arrested for Facebook posts, spend 12 days in custody

ஃபேஸ்புக்ல சும்மா ஜாலிக்கு கூட அரசியல்வாதிக்ளை கிண்டல் பண்ணிடாதீங்கப்பா, ஆப்பு காத்திருக்கு , டைம் சரி இல்லை, சமூக வலைதளங்களுக்கு , எச்சரிக்கை 

Two Air India employees arrested for Facebook posts, spend 12 days in custody

Mumbai: Even as outrage over the arrest of two Maharashtra girls for their Facebook post on Bal Thackeray continues, another instance of harassment involving two Air India employees has come to light.

Air India cabin crew members Mayank Mohan Sharma and KVJ Rao were arrested by the cyber crime cell of the Mumbai police in May this year for material they put up on Facebook.

The two are alleged to have shared lewd jokes about politicians, made derogatory comments against the Prime Minister and insulted the national flag in their posts. That prompted a past-midnight police raid at their homes and arrest under the controversial 66(A) and 67 sections of the Information Technology Act. The two spent 12 days in police custody and were suspended by Air India.

Mr Rao said they had merely shared content easily available on the Internet.

It took the police nearly two months to make the arrests after lodging the FIR in March. Mr Sharma said the cyber cell wing investigated the complaint for over a year but never summoned them even once. The police were unavailable for comment.

Mr Rao alleged the police acted under political pressure from NCP politician Kiran Pawaskar. 


நன்றி -

Saturday, October 27, 2012

லீனா மணிமேகலையின் ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த சின்மயி சர்ச்சை விவாதங்கள்

http://www.thehindu.com/multimedia/dynamic/00877/30MPLEENA2_877930g.jpg 

சின்மயி குறித்த என் தரெட்ல கூட வந்து சிலர்," நீ அவளா? இவளா? பணம் வாங்கற, போற" என்று ஒரே அவதூறு. சின்மயி பற்றியும், கைது செய்யப்பட்டவரின் தொனியிலேயே கமென்ட் போடுகிறார்கள். பொது வாழ்க்கைக்கு வந்துட்டா, எந்தப் பெண்ணையும் வாயில வந்தத பேசறது செக்சிஸம் , பாலியல் அத்துமீறல் என்று கண்டித்தால், குட்டி ரேவதி போன்றவர்கள் கூட அதை இறக்குமதி கான்செப்ட் என்கிறார்கள்.



 ஒரு பார்ப்பனப் பெண்ணின் மீது நடந்த தாக்குதல்என்பதாலேயே அதை தாக்குதல் இல்லை என்று எப்படி வாதிட முடியும். இல்லை அதை கண்டிப்பதாலேயே , ஒடுக்கப்பட்டப் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறையில் அக்கறையில்லை என்பது எவ்வளவு அபத்தம். சின்மயி பேசியது கடும் தவறு தான் . அதனாலேயே அவர் மீது பாலியல் தாக்குதலை ஏவியது சரி என்று குட்டி ரேவதி போன்றவர்களே பேசுவது சகிக்க முடியவில்லை


மனுஷ்யபுத்திரனிடம் நடந்த உரையாடலை நினைத்துப்பார்த்தாலே அருவருப்பாய் இருக்கிறது. என்ன ஒரு ஆண் திமிர். என்ன ஒரு தடித்தனம். சக மனுஷி மீது எந்த மரியாதையும் தர இயலாதபோது எதற்கு விவாதத்திற்கு வர வேண்டும்? ராஜன் லீக்ஸ் இண்டெர்நெட் செக்ஸிஸ்ட் என்றால், மனுஷ்யபுத்திரன் ஒரு இலக்கிய செக்ஸிஸ்ட். அவ்வளவு தான்!

ஐயோ, என்னை சும்மா இருக்க விட மாட்டேங்குறாங்களே
ஒரு பொண்ணு பார்ப்பனப் பொண்ணா இருக்கிறதனாலேயும் , பொறுப்பில்லாம அரசியல் தவறா பேசினாங்க என்பதாலும், அவர் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் செய்யலாம் என்று எப்படி தீர்ப்பளிப்பது?
மனுஷ்யபுத்திரன் மன்னிப்பு கேட்க சொல்கிறார், இதை சின்மயியையும் அவர் தாயாரையும் பாலியில் ரீதியாக பேசுவதற்கு முன்னல்லவா செய்ய வேண்டும்,

அப்புறம், குட்டி ரேவதி - சண்டை கோழி பிரச்சினை தொடங்கி இப்ப வரைக்கும், பேட்டி, தலையங்கம் எல்லாத்திலயும் பெண் கவிஞர்களை பற்றி செக்ஸிஸ்ட் கமெண்ட் தருகிறீர்களே? நீங்க எப்ப மனுஷ்யபுத்திரன் மன்னிப்பு கேட்க போறீங்க?


 
 இதனால், நண்பர்களுக்கு, குறிப்பாக பத்திர்கை நண்பர்களுக்கெலாம் சொல்லிக்கொள்வது, பேராசிரியர் மார்க்சும், தோழர் ஷோபா சக்தியும் என் முகநூல் நண்பர்கள் பட்டியலில் கூட இல்லை. யாருக்கும் ஏதும் கணக்கு தீர்க்கனும் என்றால் என்னிடமே கேட்கலாம். எப்போதும் விவாதத்திற்கு நான் தயாராகவே இருக்கிறேன். லீனா அதை செய்த போது ஏன கண்டிக்கவில்லை? இதை செய்தபோது ஏன மெளனம் காத்தீர்கள் என்று அவர்களிடம் எதற்கெடுத்தாலும் கேட்டுக்கொண்டிருப்பது காமெடி கூட இல்லை. செம கடி!
  • Raja Sethuramavarma your feeling so correct and good
  • Deiva Kandaswamy அப்படிப்பேச வைத்ததே ஒரு பிராமணிய சூழ்ச்சி என்றுதான் புரிந்துகொள்ளப்படுகிறது, அதுவே எதிர் கருத்துகளுக்குக் காரணமாகிறது.
  • சாத்தப்பன் நா அவர்கள் வரம்பு மீறி விமர்சித்தது உண்மைதான். ஆனால் நீங்கள் அதை மட்டும் கடுமையாக விமர்சித்துவிட்டு சின்மயியின் பெரிய தவறுகளை மென்மையாக விமர்சிப்பது வருத்தத்தைத் தருகிறது.
  • Leena Manimekalai Sathappan Nகருத்தியல் மோதலுக்கும் பாலியல் வன்முறைக்கும் வேறுபாட்டை, உங்களுக்குமா சொல்லி புரிய வைக்கணும்!
  • Venkatesh Chakravarthy நான் ஒரு சினிமா குடும்பத்தில் பிறந்தவன் என்பதால் பள்ளிமுதல் கல்லூரிவரை தேவிடியாள் வீட்டில் பிறந்தவன் என்ற ஒரு முத்திரையை அல்லது அடையாளத்தை எப்படி அந்த காலக்கட்டத்த்தில் எதிர்கொள்ள வேண்டும் என்று தெரியாமலே, இன்று எனக்கு எட்டிய அறிவின் உதவியுடன் கடந்து வந்து விட்டேன். எனக்கு இந்த விவாதத்தில் இருக்கும் ஒரே பயம் வசைப்பாடுபவர்களை எதிர்க்கும் அதே சமயத்தில் கண்காணிப்பு இயந்திரங்களை ஆதரிக்கின்றோமா என்பதே.
  • Leena Manimekalai எனக்கு அதில் இரண்டு வேறு கருத்துகள் இல்லை Venkatesh Chakravarthy . என்வரையில் எப்பொழுதும் வசையை, அவதூறை, பாலியல் அத்துமீறலை எழுத்தின் மூலமாகவே
    எதிர்த்திருக்கிறேன். ஆனால் அதையே ஒரு பெண் சட்டபூர்வமாக எதிர்க்க முடிவெடுத்தால், அதை ஆதரிப்பதை தவிர எனக்கு வெறு கருத்தில்லை
  • Venkatesh Chakravarthy My humble plea is, the pressure of public opinion is better than the initiation of a new law and its violent mechanisms which will have a far reaching effect in policing social networks and mobile phones. The fact that we are debating this itself unlike the times of my school or college days indicates a positive change. We must exercise patience and not rush things in a such a manner that we lose the very freedom on the basis of which such interventions become possible in the new public spheres these devices have opened up.
  • Venkatesh Chakravarthy Moreover, if such laws have come into place we must oppose it.
  • Venkatesh Chakravarthy There is a limit to all kinds of political correctness.
  • J P Josephine Baba குட்டி ரேவதி // ஒரு புகழ் பெற்ற சமூக அக்கரையுள்ள குறும்பட இயக்குனர் ஆச்சே. அப்படி சொல்வாரா?
  • J P Josephine Baba இந்த விவாதத்தில் இருக்கும் ஒரே பயம் வசைப்பாடுபவர்களை எதிர்க்கும் அதே சமயத்தில் கண்காணிப்பு இயந்திரங்களை ஆதரிக்கின்றோமா என்பதே//
  • Shankar Krishnamurthy this should be seen only as a legal re-joinder to personal abuse and attack beyond what is accepted and described in the legal framework.. no other consideration or talk should come here.. such things are only diverting the issue ..
  • Venkatesh Chakravarthy Shankar Krishnamurthy...why should we reduce it to the mere question of 'legality' as if the law is unquestionable.
  • Venkatesh Chakravarthy அதே சமயம்...சின்மையின் மீது இன்று செய்யப்படும் தாக்குதல்களையோ மற்றும் நமது பெண் கவிஞர்கள் மீது, லீனா உள்பட; பல ஆண்டுகளாக செய்யப்படும் தாக்குதல்களையோ நான் என்றும் ஆமோதித்ததில்லை. அவை எல்லாமே இன்று அதீத வீரியம் அடைந்து வரும் ஆண் ஆதிக்க போக்குகளின் கொடூரமான வெளிபாடுகள் என்பதால் அவற்றை முழுமையாக நான் கண்டனம் செய்கிறேன் என்பதையும் இங்கு பதிவு செய்வது முக்கியம்.
  • Shankar Krishnamurthy Venkatesh Chakravarthy that can be decided and judged only by the person affected Sir.. we cannot give unsolicited advice.. in the current situation she decided to go legal and she is entitled to that.. as simple as that.. whether an offence of such nature occured or not, evidences, witnesses, all such things to be decided during the trial only.. if law is questionable even for that there is a remedy in the form of challenging such laws ... many provisions of laws have been removed, amended, altered only through such remedy process
  • Venkatesh Chakravarthy "இந்தப் பெண்ணியம், பாலியல் தாக்குதல், செக்ஸிசம் எல்லாமே இறக்குமதி செய்யப்பட்ட பிழைப்புவாதங்கள்" என்று குட்டி ரேவதி போன்றவர்கள் சொல்வது சற்று வேடிக்கையாக இருக்கிறது. அப்படியேன்றால மனித உரிமை, சுதந்திரம், சுயமரியாதை இவைகளும் வெரும் பிழைப்பு வாதங்கள்மட்டும் தானா? இந்த கருத்துகள் எங்கிருந்து வந்தால் என்ன? அவை இங்கு இறக்குமதி செய்யப்படாவிட்டால் இன்று நமது கதி என்ன?
  • Shankar Krishnamurthy Universal Declaration of Human Rights in 1948 released by UN is the basic document for all rights in the world.. most countries are signatories to that including India.. even our Constitution came after that only.. we cannot take something and leave something according to our convenience..
  • Venkatesh Chakravarthy True Shankar Krishnamurthy...but we should not place any limit on the debate that is taking place on that count. Even that's a matter of legality if your prefer that phrase 'freedom of expression' as enshrined in our constitution.
  • Leena Manimekalai Filmmaker Bharathi, சின்மயி பேசியதை பிற்போக்கென்றும், தவறென்றும் , கண்டனத்திற்குரியதென்றும், தொடர்ந்து நான் சொல்லியே வருகிறேன். கைதான ராஜன் என்பவரின் தகுதி, கீழ்க்கண்ட லிங்க் ஒன்றிலிருந்தே விளங்குகிறது. 'லக்பீம' இதழில் ஜெயலலிதாவை ஆபாசமாக வரைந்திருந்த கார்டுனைவிடக் கேவலமானது அந்தக் கார்டுனுக்கு ராஜன் லீக்ஸ் கொடுத்திருந்த 'கமென்ட்'. http://www.use.com/showoriginal.pl?set=0579a6a74773f1b6118e&p=10. மேலும், இணையம் எங்கும் விரவியிருக்கும் சின்ம்யி டிவிட்டர் உரையாடலை காம்ன் சென்ஸ் இருப்பர்கள் படித்தாலெ புரியும். அவர் எவ்வளவு வக்கிரமாக தாக்கப்பட்டிருக்கிறார் என்று. எனக்கு எந்த குழப்பமும் இல்லை. உங்களை சற்று அனலைஸ் செய்து பாருங்கள். நன்றி
  • வி.சு. சத்தியமூர்த்தி தன் மீது வெறுப்பும் தன்னபிக்கைன்மையும் வரும்போது அதை மற்றொருவரிடம் தான் காட்டமுடியும் .பாட பாடல்கள் இல்லை .நடிக்க கூப்பிட்டார்கள் போகவில்லை (எந்த டைரக்ரர் கூப்பிட்டார் ) இதனால் பிரபலமாக ஒரேவழி பப்பிளிசிடி தான்.
  • Leena Manimekalai @வி.சு.சத்தியமூர்த்தி. பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லத் துணியும் எந்த பெண்ணும் உங்களைப்போன்றவர்களின் இந்த இத்துப்போன விமர்சனத்தைக் கடந்து வந்தவர்கள் தான்
  • Arunkumar Cheyyaru Rahmaniac Paaliyal comment pottadhu Rajan illa.
  • Rajan Robert Accept creative criticism,just ignore others,let them go to hell....!
  • A V Sendhil Kumar இன்டர்நெட் இல் பாலியல் பலாத்காரம் செய்பவர்களின் அம்மாவுக்கோ அல்லது சகோதரிக்காகளுக்கோ சட்டம் தண்டிக்க வேண்டும்!
  • Shoba Sakthi சின்மயி விவகாரத்தில் கவிஞர் குட்டி ரேவதி வெளியிடும் கருத்துகள் அதிர்ச்சியளிக்கின்றன. சின்மயி மீதான பாலியல் வசவு வன்முறையை வாயளவில் கண்டிக்கக் கூட அவர் தயாரில்லை.

    'சண்டை கோழி' திரைப்படத்தில் "குட்டி ரேவதி துப்பட்டாவ கையில் எடுத்துட்டுச் சுத்தறவ" என்று வரும் வசனத்திற்காக எவ்வாறு கொதித்துப் போய் போராடினார் குட்டி ரேவதி என நினைத்துப் பார்க்கிறேன். அவருக்கு ஆதரவாக தோழர்கள் திரண்டிருந்தார்கள். வசனம் எழுதிய எஸ். ராமகிருஷ்ணனின் 'தலை தரையில் உருளும்' என்றெல்லாம் எச்சரிக்கை விடப்பட்டன. நான்கூட எஸ்.ராவைக் கண்டித்து எழுதினேன்.

    இன்று சின்மயிக்கு நடந்திருப்பதோ குட்டி ரேவதிக்கு இழைக்கப்பட்டதைவிட பன்மடங்கு பெரிய பாலியல் துன்புறுத்தல். சின்மயியின் தாயார் கூட அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்.

    இதை just like that என்று எப்படியாம் கடப்பது..

    'என்னங்க நடக்குது இங்க' என்று தங்கர்பச்சான் போல என்னய என் தங்கச்சிக புலம்ப வைத்துவிட்டார்கள்!
  • Shoba Sakthi சொல்ல மறந்தது: குட்டி ரேவதிக்கு ஆதரவாக பார்ப்பன சாதியைச் சேர்ந்த பெண்களும் அவர் கூடவே நிகழ்வு நடைபெற்ற மண்டபத்தில் அன்று நின்றிருந்தார்கள்.
  • Kamalam ManiMaran பார்ப்பன பெண்ணிற்கு முற்போக்கலர்களும் ஊடகங்களும் காவல்துறையும் அக்கறைபடுவதும் நேரம் ஒதுக்கி விவாதிப்பதும் ஒரு வகை. மதிப்பிற்குரிய சின்மயி அவர்களின் அதிகார வர்க்க தொடர்புகளும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.பாலியல் ரீதியிலான தாக்குதல் என்பதுகூட பார்ப்பனர் மீதான தாக்குதல் என்றவுடன் தான் எதிர்ப்பு வீரியம் பெறுகிறது.ஆனால் ஒன்று மட்டும் நிதர்சனமாக தெரிகிறது நமக்குள் இவ்வளவு விமர்சன விவாதங்களை ஏற்படுத்தி இன்றளவும் வெற்றி பெற்று வருவது பார்ப்பனர்கள் மட்டுமே.
  • Ramani Gandhan shoba sakthi+ Leena Manimekalai sonna adharkku mel vivaadhikka ondrumea illai...avargal solvadhudhaan sari.....
  • Viswanathan Subramanian அய்யா சொபா சக்தி, நீங்க தமிழச்சிக்கு எதிரா அவுத்துவிட்டத விடவா?????
  • David Jebaraj @leena manimekalai : லீனா அவர்களுக்கு, இந்த எளியவன் எழுதிக்கொள்வது, சின்மயி - ராஜன் விவகாரத்தில் உறுதியான நிலைப்பாடு எடுக்க அவர்கள் இருவருடன் குறைந்த பட்சம் இரண்டு வருடங்களாவது பயணித்திருக்க வேண்டும். ராஜனின் நிலைப்பாடுகள், செயல்பாடுகள், போர்க்குணம் என பலவற்றை அருகிருந்து பார்த்தவன், அதேபோல் சின்மயியின் சிறுபிள்ளைத்தனத்தையும் உடனிருந்து பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன்
     
    //சின்மயி பேசியது கடும் தவறு தான் . அதனாலேயே அவர் மீது பாலியல் தாக்குதலை ஏவியது// என்று சொல்கிறீர்களே, இக்கைது நடவடிக்கை இரு வருடங்களாக அவர்களிருவருக்குள் நடக்கும் பனிப்போரின் வன்ம வெளிப்பாடு என்பதை அறிவீர்களா??. சாதி பற்றி நானிங்கு குறிப்பிடவில்லை.

    உங்களிடம் சில கேள்விகள். பதிலளிக்க விருப்பமில்லை எனினும் முழுவதுமேனும் படித்து விடுங்கள். 
     
    1) சின்மயியிடம் ராஜன் நேரடியாக ட்விட்டரில் பேசியது ஒரேஒரு தடவை அதுவும் ஏழோ எட்டோ (கண்ணியமான) ட்விட்டுகள் என்பதை உங்களால் நம்பமுடிகிறதா?? http://twitoaster.com/country-in/chinmayi/exists-but-not-in-pratise-why/

    2) பெற்றோர் இல்லாமல் அனாதையாக, தானே படித்து, தானே உழைத்து அரசாங்க வேலை வாங்கி, (அதுவும் இப்போது பறிபோய்விட்டது) தன்னைப்போல் ஒரு அநாதை பெண்ணை கரம்பிடித்த ராஜனின் இன்னொரு பக்கத்தை நீங்கள் அறிவீர்களா??

    3) ட்விட்டரில் ராஜனின் எழுத்துக்களை (அ) அவரது பிளாக்கில் அவரது எழுத்தாளுமையை படித்திருக்கிறீர்களா??

    4) தமிழில் பாடி சம்பாதிக்கும் அப்பாடகி இதுவரை தமிழிலில் ட்விட்டுவதை கவுரவ குறைச்சலாக நினைப்பதை நீங்கள் அறிவீர்களா??

    5) சின்மயியின் மீது பாலியல் தாக்குதலை ராஜன் ஏவியிருக்கிறார் என்ற தொனியில் நீங்கள் பேசிவிட்டு ஆதாரமாக கார்டூன் விமர்சனத்தை தானே சொல்கிறீர்கள்? ராஜன் சின்மயியின் மீது பாலியல் தாக்குதலை ஏவியதற்கான ஆதாரம் ஏதும் உளதா??

    6) அந்த சிங்கள கார்ட்டூன் வெளியான அன்று ராஜன் ட்விட்டரில் தனது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்ததை நீங்கள் அறிவீர்களா?? (ஸ்க்ரீன்ஷாட் எடுத்தவர்கள் விவரமாக அதை தவிர்த்துவிட்டனர்)

    7) அதன் பின் ஒரு நாள் மன்மோகன்சிங் அணுஉலை விடயத்தில் மௌனமாகவே இருப்பதை சீண்டும் விதத்தில் 'இந்தாள் இதுக்காவது வாயத் தொறப்பாரா?' என்ற எள்ளல் தொனிக்க அக்கார்ட்டூனை பற்றி அவர் பேசியதே நீங்கள் பார்த்த அந்த ஸ்க்ரீன்ஷாட். (அது அருவருக்கத்தக்க கமன்ட் என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை) அது ஒன்றை வைத்து அவரின் முழு குணநலனை எவ்வாறு கணித்தீர்கள்??

    8 ) இவ்வாறான அசிங்கமான ஒரு சில ட்விட்டுகள் தவிர்த்து, கிட்டத்தட்ட 50,000 ட்விட்டுகளுக்கும் மேல் பெண்ணியத்திற்கு, அணுஉலை எதிர்ப்பு, தமிழர் நலன், மீனவர் வாழ்வு, சினிமா என்று ட்விட்டரிலும், அவரது பிளாக்கிலும் அவர் எழுதி தள்ளிய எத்தனை எழுத்துக்களை நீங்கள் படித்திருக்கிறீர்கள்??

    cont...
  • David Jebaraj 9) இரு வருடங்களாக அவர்களுக்குள் நடக்கும் பனிப்போர் குறித்து கிஞ்சித்தேனும் உங்களுக்கு தெரியுமா?? (எனக்கு தெரியும்)

    10) முக்கியமாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் 'The badshas of entertainment' வகைமையில் ட்விட்டர் பிரபலங்கள் வரிசைபடுத்துகையில் சின்மயிக்கு நான்காவது இடத்தையும் அடுத்த ஐந்தாவது இடத்தில் ராஜனை தெரிவு செய்து வெளியிட்ட எடிட்டரிடம் ஆற்றாமையினால் இரு நாட்கள் அதை நீக்க சின்மயி போராடியதை அறிவீர்களா?? (இது எல்லாருக்குமே தெரியும். அவரும் ஒத்துகொள்கிறார்). நீக்கமுடியாது என்று எடிட்டர் மறுத்துவிடுகிறார். வன்மவிதை துளிர்விட்ட இடமிது http://www.hindustantimes.com/Brunch/Brunch-Stories/The-other-voices/Article1-823273.aspx

    11) ஆறு மாதங்களாக சின்மயியிடம் சமரசம் பேச நினைத்தும் அதற்குரிய ஆட்கள் கிடைக்காமல் அல்லாடிய ராஜனை உங்களுக்கு தெரியுமா?? அது சம்பந்தமான அவரின் பதிவு http://www.rajanleaks.com/2012/03/blog-post.html



    12) வழக்கு பதிவு செய்வதற்கு 15 நாட்கள் முன்பு கூட ராஜனுக்காக (ராஜனும்) நாங்கள் சின்மயி அம்மாவிடம் மன்றாடிய தொலைபேசி உரையாடலை கேட்டிருக்கிறீர்களா?? அத்தொலைபேசி உரையாடலில் வன்மம் தெறிக்க அவர் எங்களை மட்டுமில்லாது லண்டன் வாழ் ஈழத்தமிழ் பெண்ணான 'கண்ணம்மா' என்பவரை வாய்க்கு வந்தபடி பேசிய பேச்சுக்களை நீங்கள் அறிவீர்களா?? இன்னும், பாடகர் 'கிருஷ்'ஷை (சம்பந்தமே இல்லாமல்) அப்பெண்ணுடன் சம்பந்தப்படுத்தி அவர் வசைபாடியதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?? http://soundcloud.com/puthiyavan/singer-krish-threatened-by (இது பகுதி பேச்சு மட்டுமே)

    13) அதிகாரம் தன்பக்கம் உள்ளது என்று நிரூபிக்கும் சின்மயி, இனி அவரை எதிர்த்து யாரும் பேச யோசிக்கவேண்டும் என்று மறைமுக எச்சரிக்கை விடுகிறார் என்பதையாவது உணருகிறீர்களா?? (சமீபத்திய உதாரணம் : கொற்றவை புதிய தலைமுறை தொ.கா யில் நிகழ்த்திய விவாதத்தை எள்ளலாக குஷ்பூவிடம் விமர்சித்தது)

    14) ஜெயலலிதாவை, கருணாநிதியை இன்னும் பிற அரசியல் தலைவர்களையே இப்படி சகட்டுமேனிக்கு விமர்சிப்பவர் என்னை எப்படியெல்லாம் விமர்சித்திருப்பார் என்பதை குயுக்தியான ஆதாரங்களை கொண்டு முன்வைத்து சின்மயி விஷயத்தை திசைதிருப்புகிறார் என்பதை அறியாதவரா நீங்கள்??

    இன்னும் ஆயிரம் கேள்விகள் உள்ளன லீனா அவர்களே. உலகம் முழுவதும் உங்களைப் போன்றோர் பேசுவதை உன்னிப்பாக கேட்டுகொண்டிருக்கிறார்கள் என்பதை தயவுசெய்து கருத்தில்கொண்டு இருபக்கமும் காதுகொடுத்து கேட்டு பதிவு செய்யுங்கள். என் கேள்விகளுக்கு நீங்கள் விடையளிக்காவிடினும் ஏதேனும் சிறு அதிர்வை ஏற்படுத்தியிருந்தால், கீழிறங்கி இன்னும் கொஞ்சம் விளக்கங்கள் கேட்டுக்கொள்ளுங்கள். எங்களிடமும் ஆயிரமாயிரம் வெடித்தழவியலா விம்மல்கள் உள்ளன...
     
    தொடர்புடைய சில இடுகைகள் : http://www.twitlonger.com/show/jobjp7 http://www.twitlonger.com/show/jp6uj3
  • Sheik Pareeth மதிப்பிற்குரிய லீனா மணிமேகலை அவர்களுக்கு.. இது குறித்து மேலும் காட்டமாக நீங்கள் விமர்சிக்கும் முன்பாக மேலே நண்பர் டேவிட் கொடுத்த லிங்க் களை பொறுமையாக படிக்கவும்.. அதன் பின்பு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.. எதையும் மேலோட்டமாக பார்த்து விமர்சிப்பது அழகல்லவே..??
  • Ajitha James ஒரு ஆண்மகனை sexist என சொல்வதும் ஆபாசம்
  • Kamal Kamal ப்ரீயாவுடு அண்ணே உண்மை விளங்காது அவர்களுக்கு,
  • Manion Ramasamy David Jebaraj Sheik Pareeth they knew chinmaye but do not know about their Cold War.if u say they will think u r justifying.
  • Shanmugam Raja சின்மயி மீது எந்தவிதமான பாலியல் தக்குதல் நடத்தப்பட்டது என்பதை,அவர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியே ஆகவேண்டும்..நண்பர் டேவிட்டின் கேள்விகள் அவருக்கான கேள்விகள் மட்டுமல்ல மணிமேகலை.. பிரபலமல்லாத,மிகச்சாதாரணமான ஒருவருக்கு இவ்வளவு ஆதரவா எனும்போதே,அவருக்கான நியாயம் அறியப்பட்டிருக்க வேண்டும்..
  • Antony Anbarasu நீங்க முதல்ல சின்மயிகிட்டே அவங்க இதுவரை டெலிட் பண்ணிருக்கு டுவிட்டுகளோட லிஸ்ட கேளுங்க ..அப்புறம் மத்தத புரிஞ்சிக்கலாம்
  • Sivasubramanian Paramanandam சகோதரி லீனா அவர்களே இவ்விடயத்தை மிக கவனமாக கையாள வேண்டுகிறேன்!
  • Jei Pandian தவறு செய்தவனை தண்டியுங்கள் - அதற்கான உரிமை உங்களுக்கு உண்டு ..
    பட் இங்க ராஜன் செய்த தவறு என்ன???????
    உங்களுடைய நண்பர் ஒருவர் 99 % மார்க் எடுத்து அவருக்கு உரிய சீட் கிடைக்க வில்லை என்பதற்காக நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு என்ன வேணாலும் ட்விட் போடுவீங்க,ஆனா
    ...See More
    • Mahendhiran Kilumathur பாலியல் ரீதியாக எங்களை துன்புறுத்துகிறார்கள் இந்த ஆணாதிக்கவாதிகள் என பெண்ணியவாதம் பேசும் பெண்கள் பேசுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் "அய்யா சாமி தர்மம் பன்னுங்க".... அடியேன் ஆணாதிக்க வியாதியல்ல பெண்ணியம் பேசும் பெரியாரும் அல்ல ஆண் என்பதாலேயே அடக்கி ஆளவும் பெண் என்பதாலேயே சலுகைகளை வழங்கவும் முன்வராத சராசரி மனிதன்,
    • Jayaraman Bharatwaj மகேந்திரன் கிலுமத்தூர்...........பெண்கள் யாரும் இங்கு தட்டு ஏந்தி பிச்சை கேட்டு வரவில்லை.. அவர்களின் அடிப்படை உரிமையை வாழ்வாதாரத்தின் நிலையையும் உயர்த்தவே போராடுகிறார்கள் இன்று வரையில் அது நடந்த பாடில்லை... இதில் நீங்கள் எந்த மனோநிலையில் இந்த விவாதத்தில் உங்கள் கருத்தை முன் மொழிகிறீர்கள்...? பெண் என்பதாலே அவள் பாலியல் ரீதியாய் துன்புறுத்த பட வேண்டுமா..? நாயினமாய் இருந்தாலும் பெண்ணின் ஒப்புதல் இல்லாமல் புணரமுடியாது...!!! அதை புரிந்து கொள்ளுங்கள்...!!!
    • Syed Abuthahir பெண் இனத்திற்கு அதிகம் போராடியவர்கள் ஆண்கள் தான்...உடன்கட்டை ஏறும் கொடிய பழக்கத்தை எதிர்த்த ராஜாராம் மோகன்ராய்,பெண் கல்வி,பெண் விடுதலைக்காக போராடிய பெரியார்...இன்னும் பலரை சொல்லலாம்...
    • Jayaraman Bharatwaj எதற்காக இப்போது அவர்களின் பெயர்களை சொல்லுகிறீர்கள்...? அப்போது கூட ஆண்கள் இல்லாமல் பெண்களுக்கு ஏதும் நடவாது என்று சொல்வதற்
 நன்றி - லீனா மணிமேகலை


டிஸ்கி -

டிஸ்கி - 1 - சின்மயி போலீசில் புகார் - http://www.adrasaka.com/2012/10/blog-post_3736.html



டிஸ்கி 2 - சமாதான முயற்சிகள் , சின்மயி தரப்பு விளக்கங்கள் | அட்ரா சக்க


http://www.adrasaka.com/2012/10/blog-post_24.html

டிஸ்கி 3 -  ஆனந்த விகடனில் சின்மயி சர்ச்சை | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_25.html


டிஸ்கி 4  -சின்மயி - புதிய தலைமுறை - நேர்படப்பேசு - விவாதங்கள் | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_7117.html


டிஸ்கி 5 -  சாருநிவேதிதா சின்மயி புகார் பற்றி சொன்ன கருத்து |

http://www.adrasaka.com/2012/10/blog-post_26.html


டிஸ்கி 6. - ஜெயமோகன் கருத்து - சின்மயி புகார் பற்றி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_27.html