Showing posts with label SAMANDHA. Show all posts
Showing posts with label SAMANDHA. Show all posts

Saturday, September 24, 2011

DOOKUDU -சமந்தா இளமை, மகேஷ் ஆக்‌ஷன் - தெலுங்கு சினிமா விமர்சனம்

http://www.mirchi9.com/postyourclip/wp-content/uploads/2011/06/1303967432_mahesh-dookudu.jpg 

படத்தோட டைரக்டர் பற்றி ஒரு வார்த்தை, அண்ணன் இது வரை ஒரு ஃபெயிலியர் படம் கூட தந்ததில்லை ..பேரு சீனு வைத்யாலா. இவரது முந்தைய ஆந்திரா அதிரடி ஹிட்ஸ்.. வெங்கி, கிங்க்,துபாய் சீனு, தி , ரெடி ... 

படத்தோட ஹீரோ மகேஷ் பாபு பற்றி சொல்லவே தேவை இல்லை.. ஒக்கடு ஹீரோ.. இவரும் பல சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தவர் தான்.. இவர் ட்விட்டர்ல டைரக்டர்க்கு சொன்ன ட்வீட் - சார்.. என் வாழ் நாளில் சந்தித்திராத வெற்றியை இந்தப்படம் எனக்கு தரப்போகுது. நன்றி - இது சும்மானாச்சுக்கும் சொன்னதா? படத்தோட பில்டப்புக்காக சொன்னதா? அப்டின்னு பார்த்துடலாம்னு தான் முதல் முறையா ஒரு தெலுங்குப்படத்துக்கு முதல் நாளே போனேன்..

ஈரோடு சீனிவாசா தியேட்டருக்குப்போனா ஒரே ஆந்திரா அழகிகள் கூட்டம். எல்லாம் ஹை க்ளாஸ் ஃபிகர்ஸ் தான்.  அவங்க...... சரி விடுங்க பட விமர்சனத்துல எதுக்கு சம்பந்தம் இல்லாம ஃபிகர்ஸ் பற்றிய வர்ணிப்பு, அப்புறம் இதை சாக்காட்டி, தாக்கி ஒரு பதிவு யாராவது போட்டுடுவாங்க. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjWBnulLMMhuU3YW0HJOnVK07U7-EgncuUfbtpf-cB2CLjRwQtjgEkk9wNzi3y1AWvR0nPA2rId15OvvA_R-aM8l3432H65ocsyPNfoW-5Cbnf77SkL3fFDw8LQGtLp7Ou_gN6wYx2Hy4e/s1600/mahesh-babu-dookudu-heroine-samantha-wallpapers-1.jpg

 பிரகாஷ் ராஜ் நம்ம அன்னா ஹஜாரே மாதிரி மக்கள் ஆதரவு பெற்ற பிரபல அரசியல் தலைவர்.. அவரை ஒரு கும்பல் தாக்குது. விபத்து ஏற்படுத்துது. அதுல அவர் தப்பிச்சாலும் கோமா ஸ்டேஜ்க்கு போயிடறாரு.. அவரோட மகன் தான் ஹீரோ மகேஷ். அப்போ அவர் என்ன செய்வாரு?அப்பாவை கொல்ல முயற்சி செஞ்சது யாரு? ஏன்? அப்டிங்கறதை கண்டு பிடிச்சு பழி வாங்கறாரு.. பலி எடுக்கறாரு.. போதாததுக்கு அண்ணன் ஐபிஎஸ் ஆஃபீசர் வேற. கேட்கனுமா?


மகேஷின் பிளஸ் பாயிண்ட்டே. அவரது முகம் தான், எப்படி ஸ்ரேயா என்னதான் கிளாமர் காட்னாலும் அவரது குழந்தை முகம் அதை மறைச்சுடுதோ அது போல அவருக்கு சைல்டிஸ் ஃபேஸ்.. ஆனா ஆக்‌ஷன் காட்சிகள்ல அவர் காட்ற சுறு சுறுப்பு , டயலாக் டெலிவரில ஷார்ப்னெஸ் எல்லாம் தூள்.. 


ஹீரோயின் சமந்தா.. 60 மார்க் வாங்கற ஃபிகர்..  ( தமிழில் ஏற்கனவே மாஸ்கோவின் காவிரியில் நடிச்சிருக்கே அதே ஃபிகர்.)ஹீரோவோட ஹையர் ஆஃபீசர் நாசரின் மகள்...பாப்பாவுக்கு நடிப்பு சுமாராத்தான் வருது. மற்றதெல்லாம் நல்லாவே வருது.. ஹி ஹி 

http://cdn4.supergoodmovies.com/FilesFour/caaa8aede94d42679fd72a9c3dc55ef7.jpg

பிரகாஷ்ராஜின் நடிப்பு கனகச்சிதம். கம்பீரமான நடிப்பு. நாசருக்கு அதிகம் வேலை இல்லை. காமெடியனாக பிரம்மானந்தம் செம கலக்கு கலக்கறார்.. தமிழில் இந்தப்படம் ரீ மேக் செய்யப்பட்டால் விஜய் - சந்தானம் கரெக்ட் மேட்ச்சாக இருக்கும்.. 

கோட்டா சீனிவாசராவ்க்கும் அதிக வேலை இல்லை.. தமிழ் சினிமாவில் பொதுவாக முதல் பாதியில் காமெடி போர்ஷனை முடிச்சுட்டு செகண்ட் ஆஃப்ஃபில் ஆக்‌ஷனுக்கு தாவிடுவாங்க. இந்தப்படத்துல வித்தியாசம் செகண்ட் ஆஃப்ல ஃபுல் காமெடி. 

பிரகாஷ்ராஜ் கோமால இருந்து எழுந்து வர்றப்ப அவருக்கு பல வருடங்கள் கழிந்தது தெரியாது , மகன் ஐபிஎஸ்னு தெரியாது எம் எல் ஏ என் நினைக்கிறார் என்பது ஒரு சுவராஸ்ய முடிச்சு. அவரை நம்ப வைக்க ஹீரோ ரியாலிட்டி ஷோ நடத்துவது காமெடி கலாட்டாக்களூக்கு வழி வகுக்கிறது

படத்தில் உத்தேசமாகப்புரிந்த வசனங்கள்

http://www.movies.stanzoo.com/gallery/images/Samantha-latest-gallery13.jpg

1. எதுக்காக அவனை சுட்டே?

அவன் ரொம்ப ஓவரா பேசுனான்.. போலீஸ்க்கும், போஸ்ட் மேன்க்கும் வித்தியாசம்  தெரிய வேணாம்..?அதான்.. ( போலீஸ்னா மிரட்டி மாமூல் வாங்குவார், போஸ்ட் மேன் கெஞ்சி இனாம் வாங்குவார். இதை சொல்லாம ஒரு ஆளையே போடனுமாண்ணே?)

2.  சேல்ஸ் கேர்ள் இன் ஜவுளிக்கடை - XQS மீ சார்.. வாட் யூ வாண்ட்?

இதை பேக் பண்ணுங்க.. 

சார்!!!!!!!!!!! இது பிரா... ( ஏன்? பிராவை பேக் பண்ண முடியாதா?)

ஓ . சாரி நாட் திஸ். 

3.  உன் கலருக்கும், என் கலருக்கும் மேட்ச் ஆகாதுடா... 

சோ வாட்? 

கோ டூ ஹெல் ( நரகத்துக்குப்போ)

( அப்போ கறுப்பா இருக்கறவனுக்கெல்லாம் கல்யாணமே ஆகாதா சமந்தா மேடம்.. ?)

4.  ஆம்பளைங்கள்ல 2 வகை இருக்கு.. 

1. தன்னை லவ் பண்ற பொண்ணுங்களுக்காக உயிரையே கொடுக்கறவங்க. 

2. தன்னை நம்பி வந்த பொண்ணுங்களை ஏமாத்தி யூஸ் பண்றவங்க.. நீ 2 வது வகை.

( அப்போ பாப்பா பல பேரை பார்த்துட்டு தான் வந்திருக்கு போல.. )

5  உனக்கு பத்ம ஸ்ரீ பட்டம் வாங்கித்தர்றேன்.

அந்த அளவு உனக்கு செல்வாக்கு இருக்கா?

டேய் நாயே. நீ நல்லா நடி.. அவங்களே தருவாங்க. 

http://www.kerals.com/kerala/wp-content/uploads/2010/11/Samantha.jpg

6. ரியாலிட்டி ஷோன்னா என்னன்னு தெரியுமா/?

ம். தெரியுமே.. ஷில்பா ஷெட்டி பிரச்சனை பண்ணாங்களே அதானே.? ஐ நோ ஆல்..

7.  பத்ம ஸ்ரீ பட்டத்துக்கு நாமினேசன் தாக்கல் பண்ணீட்டேன். இப்போ மக்களுக்காக உழைக்கப்போறேன்.. 

8.   மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணீட்டேன். ப்ளைண்ட்னு....

9.  என்னய்யா அவர் அநியாயத்துக்கு பணக்காரரா இருக்காரு. வீட்டுக்கு விருந்தாளியா வந்தவங்களுக்கு காபி குடுத்தா அதுக்கே டிப்ஸா 1 லட்சம் ரூபா தர்றாரே.?

10.  இவர் யாரு.?


மாமாவோட லோக்கல் ஒயிஃப்... 

அப்டின்னா..?

அவர் போற ஊர்ல எல்லாம் ஒரு ஆளை செட்டப் பண்ணிக்குவார். 

( அப்போ அண்ணனுக்கு எஸ் டி டி ஒயிஃப் நிறைய இருக்குமே..?)

இடைவேளைக்குப்பிறகு வரும் பல காட்சிகளில் காமெடி கொடி கட்டிப்பறந்தது.. அந்த ஆந்திரா ஃபிகர்ஸ் 24 பேரும் குலுங்கி குலுங்கி சிரிச்சதை உத்தேசமாத்தான் புரிஞ்சுக்க முடிஞ்சது,., லைட்ஸ் ஆஃப்ல இருந்ததால டீட்டெயிலா எதுவும் பார்க்க முடியல... 

3 பாட்டு செம ஹிட் அடிக்கும். 

http://s4.hubimg.com/u/3836279_f520.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. கோமாவில் இருந்து மீண்டு வந்த பிரகாஷ்ராஜ் ஏன் அந்த பங்களாவை விட்டு வெளியேவே போக வில்லை.? வில்லன் கண்ணில் படாமல் மாறுவேஷத்தில் கூட வெளி உலகம் பார்க்க ஆசைபடமாட்டாரா?

2.  வீட்டிலேயே இருப்பவர்  டி வி கூட பார்க்க மாட்டாரா? நியுஸ் சேனல் பார்த்தா தெரிஞ்சிடுமே. ( ஒரே சீன்ல ஹீரோ செட்டப் பண்ணுன டி வி யை பார்க்கறாரு. )

3. ஐ பி எஸ் ஆஃபீசரின் ஹையர் ஆஃபீசராக வரும் நாசர் அப்படித்தான் கேனத்தனமாக நடந்துக்குவாரா? தன் மகளை ஹீரோவுக்கு கூட்டிக்கொடுக்காதது ஒன்று தான் குறை. 

4. தனது பேக்கை ஹீரோயின் தொலைத்து விடுகிறார். ஹீரோ ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அதை கொண்டு வந்து கொடுத்ததும் காதல் வந்துடுதே, அது எப்படி? 

5. ஹீரோ ஏன் இருட்டில் கூட கூலிங்க் கிளாஸ் போட்டுட்டே வர்றார். அவ்ளவ் பில்டப் தேவைன்னு சொன்னாரா?

6. ஐ பி எஸ் ஆஃபீசராக வரும் ஹீரோ எப்போதும் லைட்டான தாடியுடன் வருகிறார். அது கூட தேவலை..  யூனிஃபார்ம் போட்டிருக்கும்போது முதல் சர்ட் பட்டனை கழட்டி விட்டே தான் வருகிறார். அவர் போலீஸா? ரவுடியா?

7.  வில்லனை கொலை செய்ய ஹீரோ பிரகாஷ் ராஜை ஒரு ஹாஸ்பிடலுக்கு கூட்டி செல்கிறார். கதைப்படி அவர் 20 வருஷத்துக்கு முந்தைய கால கட்டத்தில் இருக்கிறார். அப்போ நவீன மாற்றங்கள், பஸ் ,சாலைகள் பற்றி எந்த  கேள்வி, சந்தேகமும் கேட்கலையே ஏன்?


http://1.bp.blogspot.com/_FDULgrSOClk/TLe_igffPTI/AAAAAAAAHvA/WkbOc-48PGw/s1600/brindaavanam-images0118.jpg

தெலுங்கு படங்களூக்கு ஆனந்த விகடன்ல நோ விமர்சனம்.. 

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - ஜாலியான ஆக்‌ஷன் படம் தான் பார்க்கலாம். பார்த்து வெச்சுக்கிட்டா விஜய் நடிப்பில் வரும்போது கும்ம வசதியா இருக்கும். 

 டிஸ்கி - ஹீரோ ஃபோட்டோ 1 தான் இருக்கு ஆனா ஹீரோயின் ஃபோட்டோ எதுக்கு இத்தனை என கேட்பவர்களூக்கு . படத்துல தான் ஹீரோவோட டாமினேஷன் ஜாஸ்தியா இருக்கு, விமர்சனத்துலயாவது ஹீரோயின் டாமினேஷன் இருக்கட்டும்னு தான் ஹி ஹி

http://www.thedipaar.com/pictures/resize_20110627070412.jpg