Tuesday, January 31, 2023

நண்பகல் நேரத்து மயக்கம் (2023) - மலையாளம்-/ தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்


இயக்குநர்  லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி  கேரளாவில்  கொடி  கட்டிப்பறக்கும்  மாறுபட்ட  இயக்குநர். 2019ம் ஆண்டு  இவர்  இயக்கிய  ஜல்லிக்கட்டு எனும்  மலையாளப்படம்  ஆஸ்கார்  விருது  போட்டிக்கு   அனுப்பப்பட்டது. ஒளிப்பதிவில்  ஜால வித்தை  செய்த  படம் . 2017ல்  இவர்  இயக்கிய  அங்கமாலி டைரீஸ்  யதார்த்தமான  கதையை  பதிவு  செய்த  படம் . 2021ல்  ரிலீஸ்  ஆன  சுருளி  இவருக்கு  ஏராளமான  ரசிகர்களை  ஓ டி டி  மூலம்  பெற்றுத்தந்தது. வழக்கமாக  சின்ன  நடிகர்களை  வைத்து  படம்  எடுக்கும் இவர்  முதன்  முதலாக  மெகா  ஸ்டார்  மம்முட்டியை  வைத்து  படம்  தந்திருக்கிறார். இது  மம்முட்டியின்  சொந்தப்படம்  என்பதால்  எதிர்பார்ப்பு  எக்கச்சக்கமாக  எகிறியது 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  கேரளாவில்  இருந்து  தமிழ்  நாட்டுக்கு  டூர்  வருகிறார். வேளாங்கண்ணி  போய்  விட்டு  தன்  குடும்பம், உறவினர்களுடன்  கேரளா  ரிட்டர்ன்  போய்க்கொண்டிருக்கும்  சமயம்  வேனை  ஒரு  இடத்தில்  நிறுத்தச்சொல்கிறார். வேனில்  இருக்கும்  மற்றவர்கள்  எல்லாம்  உறங்கிக்கொண்டிருக்க  இவர்  மட்டும்  தனியாக  வேனை  விட்டு  இறங்கி  நடந்து  போய்  அருகில்  இருக்கும்  கிராமத்திற்கு  செல்கிறார்

அந்த  கிராமத்தில்  இருக்கும்  ஒரு  வீட்டில்  புகுந்து  அங்கே  லுங்கி  , சட்டை  மாற்றிக்கொண்டு  ஒரு மொபட்டை எடுத்துக்கொண்டு  ஊரை  சுற்றிப்பார்க்கக்கிளம்புகிறார். அந்த  ஊர்  மக்கள்  ஆரம்பத்தில்  அவரை    திருடன்  என  நினைக்கின்றனர்


 இதற்குள்  வேனில்  இருந்த  நாயகனின்  குடும்பத்தினர்  விழித்து  அவரைத்தேடி  கிராமத்துக்கு  வருகின்றனர் . ஆனால்  நாயகன்  அவர்களுடன்  வரத்தயார்  இல்லை . நீங்கள் எல்லாம்  யார்? என  அவர்களையே  கேள்வி  கேட்கிறார். குடும்பத்தினருக்கு  பயங்கர  அதிர்ச்சி 


அந்த  கிராமத்தில்  உள்ள  மனிதர்களின்  பெயரை  எல்லாம்  சரியாகச்சொல்லி  தனக்கு  அந்த  ஊரில்  நெடு நாள்  பந்தம்  உள்ளவர்  போல்  நடந்து  கொள்கிறார்


 இவருக்கு  முன்  ஜென்ம  நினைவு  வந்து  விட்டதா?  ஸ்பிலிட்  பர்சனாலிட்டியா?   என்பதை  பின்  பாதி  திரைக்கதை  விளக்குகிறது   


நாயகனாக  மம்மூட்டி, இரு மாறுபட்ட  பாத்திரங்களில்  அட்டகசமாக  அண்டர்  ப்ளே  ஆக்டிங்  செய்திருக்கிறார். ஓப்பனிங்  பில்டப்போ  , ஹீரோ டாமினேஷனோ  இல்லாமல்  கதையின்  நாயகனாக  வாழ்ந்திருக்கிறார்


படத்தின்  மிகப்பெரிய  பிளஸ்  மம்முட்டியின்  கேரக்டர்  டிசைன்.  பக்காவாக அவர்  பாத்திரம்  வடிவமைக்கப்பட்டு  இருக்கிறது. படத்தின்  மைனஸ்  அவரது  கேரக்டர்  தவிர  மற்ற  எல்லா  கேரக்டர்களுமே  ஏனோ  தானோ  என்று  தான்  டிசைன்  செய்து  இருக்கிறார்கள் 


ரம்யா  பாண்டியன்  சில  காட்சிகளில்  கண்களாலேயே  நடித்திருக்கிறார். இவருக்கு  கொஞ்சம்  வசனங்களும்,  சிறிது  ஸ்க்ரீன்  ஸ்பேசும்  தந்திருக்கலாம்


  கதை பெரும்பாலும்  தமிழக  எல்லையிலேயே  நடப்பதால்  உரையாடல்கள்  தமிழில்   அதிகம்  உள்ளது . ஒரு  தமிழ்ப்படம்  பார்ப்பது  போல்  தான்  உள்ளது 


படத்தில்  பின்னணி  இசை  என்று  தனியாக  எதுவும்  இல்லை . ஏற்கனவே  வெளி  வந்த  படங்களின்  பாடல்களை  , வசனங்களை  காட்சிக்கு  ஏற்றபடி    ரேடியோ , டி வி  மூலமாக பொருத்தி  இருக்கிறார்கள். சில  இடங்களில்  இந்த  உத்தி  ரசிக்க  வைக்கிறது, பல  இடங்களில்  போர்  அடிக்கிறது 


கவுரவம்  படத்தில்  இரு  மாறுபட்ட  சிவாஜி  ரோல்களில்  மம்முட்டி  நடித்து  காட்டும்  காட்சி  ஒரு  கிளாசிக்கான  காட்சி 


எஸ்  ஹரீசின்  திரைக்கதை  அமைப்பு மிக  மெதுவாக  நகர்கிறது.  தேனி  ஈஸ்வரின்  ஒளிப்பதிவில்  கிராமத்தைக்கண்  முன்  கொண்டு  வந்திருக்கும்  அழகிய  காட்சிகள் . 105  நிமிடங்கள்  மட்டுமே  ஓடும்  அளவு  எடிட்டர்  தீப்பு  எஸ்  ஜோசஃப்  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார் 

 இது  வழக்கமான  மசாலா  படம்  இல்லை  என்பதால்  பொறுமையாக  படம்  பார்க்கும்  ரசிகர்களுக்கு  மட்டும் தான்  படம்  பிடிக்கும்

சபாஷ்  டைரக்டர் (லியோ ஜோஸ்  பெள்ளிசேரி)


1  கமல்  நடித்த  பேசும்  படத்தில்  படம்  முழுக்க  வசனங்கள்  இல்லை, இந்தக்குறை  தெரியாமல்  இருக்க  இயக்குநர்  சிங்கீதம்  சீனிவாச்ராவ்  ஒரு  உத்தியைக்கையாண்டார். பின்னணியில்  ரேடியோ  பாட்டு ,  வசனம்  அவ்வப்போது  சுவரஸ்யமாய்  வருமாறு  பார்த்துக்கொண்டார், அது  நல்லா  ஒர்க்  ஆவுட்  ஆனது, அதே  டெக்னிக்கை  இந்த  இயக்குநர்  பின்பற்றி  இருக்கிறார்


2   சில்லுக்கருப்பட்டி  இயக்குநர்  எடுத்த  ஏலே  படத்தில்  வரும்  கிராமத்தில்  பல  காட்சிகளைப்படம்  பிடித்தது. அந்த்பப்டத்தின்  காட்சிகளை  அட்லீ  வேலை  செய்ததாக  அந்த  இயக்குநர்  குற்றம்  சாட்டினாலும்  ரசிக்கும்  விதத்தில் தான்  உள்ளது 


3      வீடு  வரை  உறவு , வீதி  வரை  மனைவி  காடு  வரை  பிள்ளை  கடைசி  வரை  யாரோ பாடலையும்   இருக்கும்  இடத்தை விட்டு  இல்லாத  இடம்  தேடி  பாட்லையும்  ப்ளேஸ்  செய்த  விதம் 


4  தேனி  ஈஸ்வரின்  ஒளிப்பதிவும்   லாங்க்  ஷாட்டில்  அவரது  மெனக்கெடல்களும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ்  , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1    ஒன்றே  முக்கால்  மணி  நேரம்  மட்டுமே  ஓடும்  அளவு கச்சிதமாக  ட்ரிம்  செய்யப்ப்ட்ட  படத்தில்  கதைக்கு  வர  முதல் 30  நிமிடங்கள்  எடுத்துக்கொண்டது   ஓவர் 


2   நாயகன்  ஊரில்  உள்ள  எல்லோரையும்  பேரை  சொல்லிக்கூப்பிடுகிறார், சில  சம்பவங்களை  நினைவு  கூர்கிறார், ஆனால்  சொந்த    மகளிடம்  ஒரு  வார்த்தை  கூட  ஃபேஸ்  டூ  ஃபேஸ்  பேசவில்லை , சொந்த  மனைவியிடம்  அன்பாக  பேசவில்லை . முக்கியமாக  இந்த  இருவர்  தானே  அவரை  அடையாளம்  காண  வேண்டும் ?


3   நாயகன்  ஜேம்ஸ் சுந்தரமாக  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  ஆகும்போது  அந்த  ஊர்  மக்கள்  அனைவரும்  அட  அவனை  மாதிரியே நடந்துக்கறானே  என  வியக்கின்றனர் , ஆனா  நமக்கு  சுந்தரம்  கேரக்டர்  காட்டப்படவே  இல்லை , அவரை  காட்டி  இருந்தால்தானே  நமக்கு  அது  புரியும் ? அது  இல்லாமல்  நாயகன்  எப்படி  நட்ந்து  கொண்டாலும்  அட  சுந்தரம்  மாதிரியே  இருக்கே  என  அவங்களே  சிலாகித்துக்கொள்ள  வேண்டியதுதான்


4  சுந்தரம்  காணாமல்  போய்  2  வருடங்கள்  ஆகின்றன  என  டயலாக்  வருது .  அவன் பால்  சப்ளை  செய்தவன் , இப்போது  நாயகன்  பால்  சப்ளை  செய்யப்போகும்போது  ஊர்  மக்கள்  வேண்டாம், வேறு  ஆள்  பால்  ஊற்றுகிறான்  என்கிறார்கள் , அப்போ  பசுவை  மட்டும்  வைத்து  அந்த  குடும்பம்  என்ன  பண்ணுது ? அந்த  வீட்டில்  சுந்தரத்தின்  அப்பா, மனைவி மகள்  என  3  கேரக்டர்கள்  யாராவது  பால் சப்ளை  செய்து  இருக்கலாமே? 


5  காணாமல்  போன  சுந்தரத்தின்  லுங்கி   சட்டையை  எதற்கு  கொடியில்  காய  வைத்திருக்கிறார்கள்? 


6  நாயகன்  சுந்தரத்தின்  மனைவியோடு  ஒரு  வார்த்தை  கூட  பேசவில்லை , ஆனால்  மனைவி  நாயகனை  சுந்தரம்  போலவே  ந்டந்து  கொள்வதாக  சிலாகிக்கிறார். அது  எப்படி ? 


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட்  - இது அனைத்துத்தரப்புக்கான  படம்  அல்ல, மாறுபட்ட  கதை  அம்சம்  கொண்ட    படங்களை  ரசிப்பவர்களுக்கு  மட்டுமே , பொறுமையை  ரொம்ப  சோதிக்கும்  படம் ,  ஆனால்  பார்க்கலாம்  ரேட்டிங் 3 / 5 

Nanpakal Nerathu Mayakkam
Nanpakal Nerathu Mayakkam Title.jpeg
Theatrical release poster
Directed byLijo Jose Pellissery
Screenplay byS. Hareesh
Story byLijo Jose Pellissery
Produced byMammootty
Lijo Jose Pellissery
StarringMammootty
Ramya Pandian
Ashokan
CinematographyTheni Eswar
Edited byDeepu S. Joseph
Production
companies
Mammootty Kampany
Amen Movie Monastery
Distributed byWayfarer Films
Release dates
12 December 2022 (IFFK)
19 January 2023
CountryIndia
LanguagesMalayalam
Tamil[1]
Box office₹13cr[2]

பிகினிங் (2023) -தமிழ் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்)

 


ஒரு  பிரபலமான  நாளிதழ்  சண்டேன்னா  ரெண்டு  என  விளம்பரப்படுத்தி அதைப்புகழ்  பெற்ற  வாசகம்  ஆக்கியது . இப்போது  செல்ஃபோன்  உபயோகிப்பவர்கள்  பெரும்பாலும்  டூயல்  சிம்  ஃபோன்களைத்தான்  உபயோகிக்கிறார்கள் . தமிழ்  சினிமா  ஹீரோக்கள்  தங்கள்  வாழ்நாளில்  குறைந்த  பட்சம் ஒரே  ஒரு  டபுள்  ஹீரோ  சப்ஜெக்ட்  படத்திலாவது  நடித்து  விட  வேண்டும் என  கங்கணம்  கட்டிக்கொண்டு  இருக்கிறார்கள் . தமிழ்  சினிமாவில்  இரா  பார்த்திபன் , கமல் ஹாசன்  இருவர்  மட்டும் தான்  புதுமை  விரும்பிகளாக  இருக்க  வேண்டுமா?  இதோ நானும்  களத்தில்  இறங்குகிறேன்  என  ஒரு  புதிய  முயற்சியில்  பலரது  புருவங்களை  உயர  வைத்திருப்பவர்தான் இயக்குநர்  கம்  தயாரிப்பாளர்  ஜெகன்  விஜயா

ஆசியா  கண்டத்திலேயே  முதல்  முறையாக  வெளியாகும்  ஸ்பிளிட்  ஸ்க்ரீன் சினிமா  என்ற  அறிமுக  லேபிளுடன்  வரும்  படம்  இது. அது  என்ன  ஸ்பிளிட்  சினிமா? திரை  அரங்கில்  இருக்கும்  வெண்  திரை  இரண்டாகப்பிரிக்கப்பட்டு  இடது  புறம்  ஒரு  கதைக்கான  காட்சி  ஓடும் , வலது  புறம்  வேறு  ஒரு  கதைக்களம்  காட்சி  ஓடும் , பின்  ஒரு  சமயம்  இரண்டும்  இணைந்து  ஒரே  காட்சியாக  உருவாகும் . இதுதான்   ஸ்பிளிட்  ஸ்க்ரீன்  சினிமா . ஒரே  நேரத்தில்  இரு  காட்சிகள்  ஓடினால்  குழப்பமாக  இருக்காதா? வசனம்  கசமுசா என  ஓடுமே? என  கேள்வி  வரும், சாமார்த்தியமாக  அதை    டீல்  செய்திருக்கிறார்கள் . இடது   புறம்  ஓடும்  கதையில்  வசனம்  இருக்கும், வலது  புறம்  ஓடும்  கதையில்  காட்சிகள்  மட்டும்  நகரும், பேலன்சாக  படம்  போகும் 


சரி , படத்தின்  கதை  என்ன?  நாயகன்  மனவளர்ச்சி  குன்றியவர். திக்குவாய்  குறைபாடு  உள்ளவர். இவருக்குத்தேவையான  உணவை  தயார்  செய்து  விட்டு  இவரது  அம்மா  இவரை  வீட்டில்  ஒரு  அறையில்  வைத்து  பூட்டி  விட்டு  வேலைக்கு  சென்று  விடுவார். அம்மா  வேலைக்கு  சென்ற  பின்  இவர்  பாத்திரங்களை  எல்லாம்  கழுவி  விட்டு  டி வி  பார்ப்பார் . இதுதான்  இவரது  தினசரி  பழக்கம். இந்த  காட்சிகள்  இடது  புற  திரையில்  ஒரு  பக்கம்  ஓடுகிறது 


 நாயகி யை  சிலர்  ஒரு  சூட்கேஸ்க்குள்  வைத்து  கடத்தி  ஒரு  வீட்டின்  அறையில்  அடைத்து  விடுகின்றனர், பின்  நாயகியின்  காதலனையும்  கடத்துகின்றனர். நாயகி  அடைத்து  வைக்கபப்ட்ட  அறையில்  ஒரு    பழைய  அலைபேசி  கிடைக்கிறது , அதில்  சில  பட்டன்கள்  இல்லை , எனவே  போலீசுக்கு  ஃபோன்  போட  முடியவில்லை , அதனால்  கைக்கு  வந்த  ஏதோ  ஒரு  எண்ணுக்கு  கால்  பண்ணும்போது   அந்த  மனநலக்குறைபாடு  உள்ள  நாயகன்  செல் ஃபோனுக்கு  கால்  போகிறது 


 நாயகி  மிக  சிரமப்பட்டு  தன்  நிலையை  நாயகனுக்கு  விளக்குகிறார்.  அடைபட்ட  அறையில்  கிடக்கும்  நாயகியை  இன்னொரு  இடத்தில் அடைபட்டுக்கிடக்கும்  நாயகன்  எப்படி  காப்பாற்றினார்  என்பதே  மீதி  திரைக்கதை 


நாயகனாக  வினோத்  கிஷன் அற்புதமாக  நடித்திருக்கிறார். நந்தா  படத்தில்  சின்ன  வயது  சூர்யாவாக  வந்தவர்  இவர். அப்போதே  பர பரப்பாக  பேசப்பட்டார். கார்த்தி  நடித்த நான்   மகான்  அல்ல  படத்திலும்  நடித்திருக்கிறார். இவரது  முக  பாவனைகள்  , உடல்  மொழி  எல்லாம்  பிரமாதம்  , பாத்திரத்தின்  தன்மை  உணர்ந்து  நடித்திருக்கிறார்


நாயகியாக கவுரி ஜி  கிஷன்  கச்சிதமாக  நடித்திருக்கிறார். விஜய்  சேதுபதி  நடித்த  96  காதல்  காவியத்தில்  த்ரிஷாவின்  இளவயது  கதாபாத்திரமாக  ஸ்கூல்  மாணவியாக  வந்து  நம்  உள்ளங்களைக்கொள்ளை  கொண்டவர் தான்  இவர் . இவரது  பதட்டமான  முகமே  பாதி  நடிப்பை  பூர்த்தி  செய்து  விடுகிறது , தமிழ்  சினிமா  உலகில்  பய  முகம்  காட்டுவதில்  விற்பன்னர்கள்  யார்? , நூறாவது நாள்  புகழ்  நளினி யும்,  ஹலோ  யார்  பேசறது  புகழ்  ஜீவிதாவும் , அவர்களுக்கு  இணையான  பய  முகம்  இவருக்கு 


நாயகனின்  அம்மாவாக  ரோகினி  பொருத்தமான  தேர்வு 


நாயகியைக்கடத்தும்  வில்லனாக சச்சின்  எனும்  லகுபரன். இவர்  சைக்கோ  சிரிப்பு சிரிக்கும்போது  நமக்குக்கோபம்  வருவது  இவரது  கேரக்டர்  டிசைனுக்குக்கிடைத்த  வெற்றி 


படம்  முழுக்க  இரண்டே  இரண்டு  அறைகளில்  நடப்பதால்  ஒளிப்பதிவாளருக்கு  சவாலான  வேலை  தான் , வீரக்குமார்  கச்சிதமாக  அந்த  சவாலை  எதிர்கொள்கிறார். 111  நிமிடங்கள்  ஓடும்  அளவுக்கு  கச்சிதமாக  எடிட்டிங்கில்  படத்தை  ட்ரிம்  செய்திருக்கிறார்  எடிட்டர்  பிரேம்  குமார் .  இது  போன்ற  த்ரில்லர்  மூவிக்கு  எந்த  மாதிரி  பிஜிஎம்  பொருத்தமாக  இருக்கும்  என  சுந்தரமூர்த்திக்கு  நன்றாகவே  தெரிந்திருக்கிறது   


பாடல்கள்  இல்லாதது  படத்துக்கு  ஒரு  பிளஸ்


திரைக்கதை , இயக்கம்  ஆகிய  பொறுப்புகளோடு  தயாரிப்பிலும்  பங்கெடுத்திருக்கும்  ஜெகன்  விஜயா  தயாரிப்பு  நிறுவன  பெயர்  திருப்பதி  என  இருப்பதாலோ  என்னவோ  மூன்று  நாமம்  குறிக்கும்  111  என்பதையே  பட  டியூரேஷனாக  வைத்திருப்பது  சிறப்பு. மாறுபட்ட  ஒரு  அழகிய  முயற்சி   



Beginning
Directed byJagan Vijaya
Produced byVijaya Muthusamy
Jagan Vijaya
Starring
CinematographyVeerakumar
Edited byC. S. Premkumar
Music byK. S. Sundaramurthy
Production
company
Lefty Manual Creations
Distributed byThirrupathi Brothers
Release date
  • 26 January 2023
Running time
111 mins
CountryIndia
LanguageTamil

குரு (1980) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா) @ ராஜ் டிவி


  1973 ல் ரிலீஸ்  ஆன  ஜூக்னு  எனும்  ஹிந்திப்படத்தின்  அஃபிஷியல்  ரீமேக்  இது . இது  தமிழ் , தெலுங்கு  என  இரு  மொழிகளில் ரீமேக்  செய்யப்பட்டது. இது  தமிழில்  சூப்பர்  ஹிட்  ஆனது. பாக்ஸ்  ஆஃபீசில்  365 நாட்கள்  ஓடிய  படம்  பட்டியலில்  இடம்  பிடித்தது. கதைக்கு  சம்பந்தம் இருக்கோ , இல்லையோ  பாடல் காட்சி , ஆக்சன்  சீக்வன்ஸ்  எல்லாம்    ஹெலிகாப்டரில்  அதிகம்  படமாக்கப்பட்ட  படமாக  பேர்  வந்தது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


முன்  கதை- சுதந்திரம்  கிடைப்பதற்கு  முன்  நடந்த  சம்பவம்  இது . நாயகனின்  தாத்தா  கோடீஸ்வரர், ஆனால்  ஆங்கிலேயருக்கு  அடிமைப்பட்டுக்கிடந்தவர், ஆனால்  அவர்  மகன்  அதாவது  நாயகனின்   அப்பா  புரட்சி  வீரர், ஆங்கிலேயரை  எதிர்த்துப்போராடியவர், ஆனால்  அப்போதைய  அரசாங்கத்தின்  பார்வையில்  அவர்  தீவிரவாதி. போலீஸ்  அவரைக்கைது  செய்ய  வரும்போது நாயகனின்  அம்மா  கர்ப்பவதியாக  இருந்தார் , அப்பாவை  போலீசின்  பிடியில்  இருந்து  காப்பாற்றுகிறார். போலீஸ்  அவரைத்துரத்துகிறது ஆனால்  அவர்  சிக்கவில்லை , அவர்  உயிருடன்  இருக்கிறாரா? இல்லையா? தெரியவில்லை 


நாயகனின்  அம்மாதான்  பிரசவத்துக்குப்பின்  நாயகனைப்படிக்க  வைத்து  பெரிய ஆள் ஆக்குகிறார். அம்மா  இறந்து விடுகிறார். (  நாயகனின்  அம்மாவை நாயகியின்  அப்பா  ரேப்  செய்ய  முயற்சித்த  போது  நாயகன்  துப்பாக்கியால்  சுட்டுக்கொன்று  விடுகிறார்)


நாயகன்  பெரியவன்  ஆனதும்  பார்வதி  நிலையம்  என்ற  அம்மா  பெயரில்  அனாதை  நிலையம்  தொடங்கி  1000  குழந்தைகளுக்கு  அடைக்கலம்  தருகிறான்.   பெரிய  செல்வந்தன்  ஆக  இருக்கிறான்


நாயகன்  பெயர்  அசோக். நாயகனின்  முகச்சாயலில்  ஒரு  கொள்ளைக்காரன்  இருக்கிறான், அவன்  பெயர்  குரு 


 நாயகன்  அசோக்கிற்கு  நாயகியுடன்  காதல். நாயகியின்  வீட்டுக்குப்போன  போது  அங்கே  தன்  மாமனார்  ஃபோட்டோ  பார்த்த  பின்  தான்  தான்  கொலை  செய்த  நபர்  இவர்  என  அறிந்து  குற்ர  உணர்ச்சியால்  காதலியுடனான  சந்திப்புகளை  தவிர்க்கிறார்


நாயகன்  தன்  அப்பாவை  உயிருடன்  சந்தித்தாரா?

 நாயகியுடனான  காதல்  வெற்றி  பெற்றதா?


 நாயகனான  அசோக்கிற்கும் , கொள்ளைக்காரனான  குருவிற்கும்  என்ன   சம்பந்தம்? 


 இவற்றை எல்லாம்  பின்  பாதி  திரைக்கதை  விளக்குகிறது 


  நாயகனாக , கொள்ளைக்காரனாக  இரு  வேடங்களில்  கமல் .  ஸ்ரீதேவி யுடன்  ஜோடி  சேரும்போது  மட்டும்  இவர்  முகத்தில்  ஒரு  கொண்டாட்டம்  காணப்படும்  ( ஒரு  கால  கட்டத்தில்  ஸ்ரீ  தேவியை  பெண்  கேட்டு  அவர்  அம்மாவிடம்  பேசியதாகவும், அம்மா  மறுத்ததாகவும்  ஸ்ரீ தேவி  ஸ்டார்  டஸ்ட்  ஹிந்தி  பத்திரிக்கையில் பேட்டி  கொடுத்திருந்தார் )


  ஸ்ரீ தேவி  கிளாமராக  ,அழகாக  வந்து  போகிறார்.  டூயட்  பாடுவது  போக  இவருக்கு  கொஞ்சம்  நடிக்கவும்  வாய்ப்பு  உண்டு 


 நாயகனின்  அப்பாவாக  முத்து ராமன்  ,   வில்லனாக  நம்பியார்  .   அவரவர்  பங்களிப்பை  கச்சிதமாக  செய்திருக்கிறார்கள்  

 ஜெயமாலினியின்  அலங்கோலப்பாட்டு  டான்ஸ்  ஒன்று  உண்டு 




சபாஷ்  டைரக்டர்  (  ஐ வி  சசி)


1   முதல்  10  நிமிடத்தில்  ஃபிளாஸ்  பேக்  காட்சிகள்  முடிவு  பெற்று  விடுகிறது. அதுதான்  படத்தின்  முக்கியக்கதை , ஆனால்  அதற்குப்பின்  வரும் ரெண்டே  கால்  மணி  நேரக்காட்சிகள்  நாயகன்  சாக்சம், நாயகியுடனான  டூயட் , ரொமான்ஸ்  என  ஜனரஞ்சகமாக  செல்கிறது 


2   ஓப்பனிங்  ஷாட்டில்  ஆள்  மாறாட்டம்  செய்து  ரயிலில்  வைரங்களை  கொள்ளை  அடிக்கும்  காட்சி  ஏ ஒன் 


3  பலத்த  பாதுகாப்பில்  எலக்ட்ரிக்  வேலி  எல்லாம்  போட்டு  சேஃப்  ஆக  இருக்கும்  தங்க  மீனை  நாயகன்  கொள்ளை  அடிக்கும்  காட்சி  அழகு. இதே  காட்சி  பின்னாளில்  வந்த  என்  சுவாசக்காற்றே  படத்தில்  வந்தது 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1 பறந்தாலும்  விட மாட்டேன்  ( ஹெலிகாப்டர்  சேசிங்  சாங் )

2   ஆடுங்கள்  பாடுங்கள் , பிள்ளைப்பொன்  வண்டுகள் (  ஹீரோ  ஓப்பனிங்  சாங்)

3 எந்தன் கண்ணில் 

4  பேரைச்சொல்லவா  அது  நியாயம்  ஆகுமா? (  ஸ்ரீ தேவி )

5 நான்  வணங்குகின்றேன்  சபையினிலே ( ஸ்ரீ  தேவி  அரங்கேற்ற  பரதநாட்டியம் )

6  மாமனுக்கு பரமக்குடி  ( ஜெயமாலினி  அயிட்டம்  சாங்)


  ரசித்த  வசனங்கள் 


1  காதல்  தான்  ஒரு  மனிதனின்  பலவீனம்னு  சொல்வாங்க ,ஆனா  என்  விஷயத்துல  காதல்  ஒரு  வெறுப்பா  மாறிடுச்சு 


2    சில  கேள்விகளுக்கு  பதில்  சொல்ல  முடியாது , சில  செயல்களுக்கு  காரணம்  சொல்ல  முடியாது 


3  காலம்  யாருக்காகவும்  காத்துக்கொண்டு  இருக்காது 




 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஹெலிகாப்டர்ல  இருந்து  ஒரு  வட்ட  வடிவ  காந்தம்  வந்து  ஒரு  காரையே  அலாக்கா  தூக்கிடுது . காரோட  வெயிட்  எவ்வளவு ? அந்த  காந்தத்தோட  வெயிட்  எவ்வளவு ? வாய்ப்பே  இல்லை , ஏதோ  இங்க்லீஷ்  படத்தைப்பார்த்து  அரைகுறையா    உருவி  இருக்காங்க 


2   பரத  நாட்டியக்கலைஞரான நாயகி  ஸ்ரீதேவி  லேடி  ஜேம்ஸ்பாண்ட்  போல  க்ளைமாக்ஸில்  ஹெலிகாப்டரில்  சாக்சம்  செய்வது  எப்படி  ? கன்  ஃபைட்  காஞ்சனா  போல  ஃபைட்  எல்லாம்  போடறார்


3   வில்லன்  நம்பியார்  புல்லட்  ப்ரூஃப்  ஜாக்கெட்  போட்டிருக்கார் , கமல்  அவரை  சுட்டும்  குண்டு  ஒண்ணும்  பண்ணலை, அவர்  தலையை  குறி  பார்த்து  சுடலாமே? 


4  ஒரு  துப்பாக்கில  6  புல்லட்ஸ்  இருக்கும், 3  டைம்  சுட்ட  பின்  கமல்  துப்பாக்கி  எம்ப்ட்டி  ஆகிடுது 


5    தங்க  மீனைக்கடத்தி  கமல்  பைக்கில்  பயணிக்கும்போது  அந்த  தங்க  மீனை  ஒரு  ஹேண்ட்  பேக்கிலோ  , சூட்கேசிலோ  போட்டு  எடுத்துச்செல்ல  மாட்டாரா?  மீனவன்  போல  இடுப்பில்    ஓப்பனாக  அணிந்து  செல்வது  ஏன் ?


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  அந்தக்கால  படங்களில்  உறுத்தலாக  இருக்கும்  ஓவர்  மேக்கப் , விக்  பிரச்சனைகளை  சமாளித்துக்கொண்டால்  ஜாலியான  ஒரு  மசாலா  படம்  . ரேட்டிங் 2 .25 / 5


Guru
Guru 1980 poster.jpg
Poster of Tamil version
Directed byI. V. Sasi
Written byHaasan Brothers (dialogues)
Based onJugnu
Produced byPrakash R. C.
Starring
CinematographyJayanan Vincent
Edited byK. Narayanan
Music byIlaiyaraaja
Production
company
Shiv Sakthi Films
Release dates
  • 18 July 1980 (Tamil)
  • 19 July 1980 (Telugu)
Running time
159 minutes
CountryIndia
LanguagesTamil
Telugu

அதானி பங்குகளின் வீழ்ச்சியால் எல் ஐ சி , எஸ்பிஐ க்கு அதிக பாதிப்பா?

 


கடந்த  புதன் மற்றும்  வெள்ளி  ஆகி ய  இரு  நாட்களில்  அதானி  குழும  ஷேர்களின்   விலை 15%   டூ  20  %  இறங்கி  இருக்கிறது. ஹிடன்பெர்க்  கம்பெனியின் 88  கேள்விகள் அடங்கிய  ரிப்போர்ட்  அதானி  குழும  ஷேர்கள்  ஓவர்  வேல்யூடு  எனவும் , மிக  அதிக  விலையில்  இப்போது  விற்கபடுகிறது  அந்த  அளவு  அவை  ஒர்த்  இல்லை  எனவும்  சொன்னதால்  அந்த  செய்தியின்  தாக்கத்தில்  கம்பெனி  ஷேர்கள்  இறங்கி  வருகின்றன


தனி  நபர்கள்  ஷேர்கள்  போக  ஷேர்  மார்க்கெட்டில்  இவைகளில்  அதிக  முதலீடு  செய்திருப்பது   எல்  ஐ  சி  யும்  ஸ்டேட்  பேங்க்  இண்டியா  வும்  தான்  என  சொல்கிறார்கள் . அதானி  குழும  பங்குகளால்  அவர்களுக்கு  பாதிப்பு  ஏற்படுமா? அது  எந்த  அளவு  இருக்கும் ? 


அதானி  க்ரூப்  ப்ளெட்ஜ்டு  ஷேர்ஸ்

1   அதானி  ட்ராண்ஸ்மிஷன் - இதில்  பிரமோட்டர்ஸ்  ஹோல்டிங் 74.19%. அதில்  அவர்கள்  பிளெட்ஜ்  பண்ணி  கடன்  வாங்கியது 4.92%  , மியூச்சுவல்  ஃபண்ட்ஸ்  முதலீடு  3.78 %  எல் ஐ சி  முதலீடு  3.65^

2  அதானி  டோட்டல்  கேஸ்-  இதில்  பிரமோட்டர்ஸ்  ஹோல்டிங் 74.80%. அதில்  அவர்கள்  பிளெட்ஜ்  பண்ணி  கடன்  வாங்கியது ஜீரோ , மியூச்சுவல்  ஃபண்ட்ஸ்  முதலீடு  6.09 %  எல் ஐ சி  முதலீடு  5.96^

3  அதானி  எண்ட்டர்பிரைசஸ்   72.64   இதில்  பிரமோட்டர்ஸ்  ஹோல்டிங் 72.64%. அதில்  அவர்கள்  பிளெட்ஜ்  பண்ணி  கடன்  வாங்கியது 1.94%  , மியூச்சுவல்  ஃபண்ட்ஸ்  முதலீடு  5.45 %  எல் ஐ சி  முதலீடு  4,23^

4  அதானி  வில்மர்  இதில்  பிரமோட்டர்ஸ்  ஹோல்டிங் 87.94%. அதில்  அவர்கள்  பிளெட்ஜ்  பண்ணி  கடன்  வாங்கியது ஜீரோ  , மியூச்சுவல்  ஃபண்ட்ஸ்  முதலீடு  0.24 %  எல் ஐ சி  முதலீடு  ஜீரோ

5  அதானி  க்ரீன்  இதில்  பிரமோட்டர்ஸ்  ஹோல்டிங் 60.75%. அதில்  அவர்கள்  பிளெட்ஜ்  பண்ணி  கடன்  வாங்கியது 2.65%  , மியூச்சுவல்  ஃபண்ட்ஸ்  முதலீடு  1.40 %  எல் ஐ சி  முதலீடு  1.28^


6  அதானி பவர்   இதில்  பிரமோட்டர்ஸ்  ஹோல்டிங் 74.97%. அதில்  அவர்கள்  பிளெட்ஜ்  பண்ணி  கடன்  வாங்கியது 18.75%  , மியூச்சுவல்  ஃபண்ட்ஸ்  முதலீடு  ஜீரோ  எல் ஐ சி  முதலீடு  ஜீரோ


7  அதானி  போர்ட்ஸ்  இதில்  பிரமோட்டர்ஸ்  ஹோல்டிங் 65.13%. அதில்  அவர்கள்  பிளெட்ஜ்  பண்ணி  கடன்  வாங்கியது 11.28%  , மியூச்சுவல்  ஃபண்ட்ஸ்  முதலீடு  14.46 %  எல் ஐ சி  முதலீடு  9.14%


8  ஏ சி சி இதில்  பிரமோட்டர்ஸ்  ஹோல்டிங் 56,69%. அதில்  அவர்கள்  பிளெட்ஜ்  பண்ணி  கடன்  வாங்கியது 6.64%  , மியூச்சுவல்  ஃபண்ட்ஸ்  முதலீடு 18.64 %  எல் ஐ சி  முதலீடு  6.41^

9  என் டி டி வி -இதில்  எல் ஐ சி      மியூச்சுவல்  ஃபண்ட்ஸ்  முதலீடு  செய்யவில்லை 

10   அம்புஜா சிமெண்ட்  இதில்  பிரமோட்டர்ஸ்  ஹோல்டிங் 63.15%. அதில்  அவர்கள்  பிளெட்ஜ்  பண்ணி  கடன்  வாங்கியது ஜீரோ  , மியூச்சுவல்  ஃபண்ட்ஸ்  முதலீடு  16.75 %  எல் ஐ சி  முதலீடு  6.33^


இப்போ    மக்கள்  பேசிக்கொள்வது  அதானி  ஷேர்கள்  20%  இழப்பினால்  அதில்  அதிகம்  பணம்  போட்ட  எல் ஐ சிக்கு  அதிக  இழப்பு  இருக்குமோ? என்கிறார்கள் .


 ஆனால்  2022ல்  அதானி  க்ரூப்  ஷேர்கள்  அபரித  வளர்ச்சி  அபரித  லாபம்  ஈட்டிய  போது  இதே  எல ஐ சி  இதில்  லாபம்  கண்டிருக்கும்  அதன்  லாப  சதவீதம்    50%  மினிமம்  இருக்கும்  , இப்போது  அடைந்திருக்கும்  20%  நட்டம்  என்பது  லாபத்தில்  இருந்து  நட்டம்  அவ்வளவே  


 பிராஃபிட்  புக்  பண்ணி விட்டார்களா? இல்லையா? தெரியவில்லை 

 எப்படிப்பார்த்தாலும் பலரும்  நினைப்பது  போல  எல் ஐ  சி  க்கு  பெரிய  நட்டம்  எல்லாம்  இல்லை 

சமீபத்தில் எல் ஐ சி  நிறுவனம்  விட்ட  அறிக்கை


 2022ம் ஆண்டு  இறுதி  வரை எல் ஐ சி  அதானி  குழும ஷேர்களில்  முதலீடு  செய்த  தொகை 36,000 கோடி  ரூபாய்   மட்டுமே, இது  எங்கள்  மொத்த  சொத்து  மதிப்பில் 1%  மட்டுமே.  ஆனால் அதானி  குழும  பங்குகளின்  மூலம்  சம்பாதித்த  லாபத்துடன்  இப்போது அதன்  மதிப்பு 56,000  கோடி  ரூபாய், எனவே  சமூக  வலைத்தளங்களில்  மீம்ஸ்  வருவது  போல  எல் ஐ  சி  நிறுவனம்  ஒன்றும்  நட்டத்தில்  இல்லை. லாபத்தில்  குறைவான  நட்டம்தான்  ஆகி  உள்ளது , எனவே  முதலீட்டாளர்கள்  கவலைப்பட  வேண்டாம்

Monday, January 30, 2023

தேடி வந்த மாப்பிள்ளை (1970) தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @ ராஜ் டி வி


எம்  ஜி  ஆர்  ஹாலிவுட்  படங்களைப்பார்த்து  அவருக்குப்பிடித்திருந்தால் அதை  தமிழுக்கு  ஏற்றவாறு   ரெடி  செய்வதில்  வல்லவர் . ஆல்ஃபிர்ட்  ஹிட்சாக்  இயக்கி 1959 ல்  ரிலீஸ்  ஆன நார்த்  பை  நார்த்வெஸ்ட்  எனும்   ஹாலிவுட்  படத்தை   தமிழுக்கு  ஏற்றவாறு  திரைக்கதை அமைக்கச்சொல்லி  இயக்குநர்  பி ஆர்  பந்துலு விடம் சொன்னார், அவரும்  ரெடி  செய்தார், ஆனால் அப்போது  எம் ஜி ஆரிடம்  கால்ஷீட்  இல்லை, அதனால் டைம் வேஸ்ட்  பண்ண  வேண்டாம்  என  பி ஆர்  பந்துலு   எம் ஜி ஆர்  அனுமதியுடன்  ராஜ்குமார்  நடிப்பில்  ஒரு  கன்னடப்படம்  பண்ணினார்,


 1967ல்  ரிலீஸ்  ஆன  கன்னடப்படமான  பீடி பசவண்ணா  எனும்   அந்த  கன்னடப்படத்தின்  ரீமேக்  தான்  இது . தமிழக அரசின் சிறந்த  மாநில  மொழிப்படமாக  விருது  பெற்ற  படம் 


ஒரிஜினல்  ஹாலிவுட்  படத்தின்  கதை  என்ன? ஒருவன்  ஒரு  கோடீஸ்வரனின்  சொத்துக்களை  அபகரித்து  விட்டு  அவனைக்கொலை  செய்து  விட்டு  வேறு  ஒரு  ஆளின்  பெயரில்  வேறு  ஒரு ஐ டி  யில்  வாழ்கிறான் , அவன்  எப்படி  மாட்டுகிறான்  என்பதுதான்  கதை 


ஸ்பாய்லர்  அலெர்ட்


தமிழ்ப்படத்தின்  கதை  என்ன?  நாயகனின்  அப்பா  கோடீஸ்வரர் , அவரை யாரோ  கொலை  செய்ய  முயற்சி  செய்கிறார்கள் . அவரது  வீட்டு  வேலைக்காரன்  தான்  சொத்துக்கு  ஆசைப்பட்டு  கொலை  முயற்சியில்  ஈடுபட்டிருப்பான்  என  தப்பாக  முதலில்  நினைக்கிறார்  அவர் . ஆனால்  உண்மையான  குற்றவாளி  கிடைத்ததும்  வேலைக்காரனிடம்  கோடீஸ்வரர்  மன்னிப்புக்கேட்கிறார்.


 கோடீஸ்வரரின்  மனைவியும்  , மகனும்  மிஸ்  ஆகி  விடுகிறார்கள் , அவர்களைக்கண்டுபிடித்து  தன்  சொத்துக்களை  எல்லாம்  அவர்களிடம்  ஒப்படைக்கும்  பணியை  கோடீஸ்வரர்  வேலைக்காரனிடம்   ஒப்படைக்கிறார். அந்த  வேலைக்காரனுக்கு  ஒரு  மகள் , அந்த  மகளை  தன்  மகனுக்கு கட்டித்தர  வேண்டும்  என  நிபந்தனையும்  விதிக்கிறார்



இந்த  விபரம்  எல்லாம்  நாயகனுக்கு  தெரிய  வந்ததும்  அம்மாவிடம்  சொல்லாமல்  கொள்ளாமல்  நாயகன்  பட்டணம்  கிளம்புகிறார். அவர்  சொத்துக்களை  எப்படி  மீட்டார்  என்பதுதான்  மீதி  திரைக்கதை 


நாயகனாக  எம்  ஜி ஆர். வழக்கமான  அவர்  ஃபார்முலா  ஆன  அம்மா  பாசக்காட்சியுடன்  தான்  ஓப்பனிங்  சீனே  ஆரம்பிக்கிறது , பிறகு  அவர் யாரையோ  தேடிப்போறேன்  என்கிறார் ஆனா  பொண்ணுங்க  பின்னால  தான்  ரவுண்ட்  அடிச்சுட்டு  இருக்கார். வழக்கமாக  அவர்  வயதான  தாத்தா  மாதிரி  ஒரு  கெட்டப்  போடுவாரே  அதுவும்  இதில்  உண்டு 


அவரது  டிரஸ்சிங்  சென்ஸ்  அபாரம்,  படம்  முழுக்க  கோட்  சூட்  தான்.  குறிப்பாக  சிவப்புக்கலர்  சர்ட்  கோட்  சூட்டில்  பிரமாதமா  இருக்கார் 


 நாயகியாக  ஜெ  ஜெ . நடிக்க அதிக  வாய்ப்பில்லை ,  பாட்டு  டான்ஸ்  என  ஜாலி  ரோல்


 காமெடிக்கு  சோ  ராமசாமி .   வில்லனாக  அசோகன் , இவருக்கும்  அதிக  வாயுப்பில்லை


  ஜெ  வின்  அப்பாவாக  மேஜர்  சுந்தர்  ராஜன். இவரது  அடையாளமான  ஆங்கிலத்தில்  ஒரு  டயலாக்  தமிழில்  அதே டயலாக்   ஃபார்முலா  இதில்  மிஸ்சிங்



சபாஷ்  டைரக்டர்


1  ஒரு  க்ரைம்  கதையை  எப்படி  மசாலாப்படமாக  ஆக்க  முடியும்  என்பதற்கு  இதன்  திரைக்கதை  ஒரு  உதாரணம்,  பாட்டு   ஃபைட்டு  டூயட்டு  என  ஜாலியாகப்போகும்  கதை , மெயின்  கதை  சும்மா  ஓரமா  அது  பாட்டுக்கு  இருக்கும். பி  ஆர்  பந்துலுவின்  திரைக்கதை  பக்கா  கமர்ஷியல் 


2  ஃபைட்  சீன்  ஒன்று  பிரமாதமாக  இருக்கும், சாமுண்டியாக  வருபவருடன்  ஹீரோ  போடும்  ஒன்  டூ ஒன்    ஃபைட்  செமயாக  இருக்கும் 


3   சோ  காமெடியனாக  வந்தாலும்  அவரது  டிரஸ்சிங்,   பாடி  மெயிண்ட்டனன்ஸ்  எல்லாம்  பக்காவாக  இருக்கும், படத்தில்  வரும்  பெரும்பாலான  கேரக்டர்கள்  தொப்பையுடன்  இருக்கும்  போது  இவர்  மட்டும்  ஃபிட்டாகத்தெரிவார்




செம  ஹிட்  சாங்க்ஸ்


1  வெற்றி  மீது  வெற்றி  வந்து  என்னைச்சேரும், அதை  வாங்கித்தந்த  பெருமை  எல்லாம்  உன்னைச்சேரும் 


2  ஆடாத  உள்ளங்கள்  ஆட  ஒரு  அச்சாரம்  தந்தால்  என்ன?ஹலோ  சார்  கமான்  சார்


3  சொர்க்கத்தைத்தேடுவோம்... டபலா  மாமா  டோலக்குத்தாத்தா, டபலா  மாமி  டோலக்குப்பாட்டி


4 இந்த  இடமோ  சுகமானது  சுவையோ பதமானது   நேரமோ இதமானது


5  தொட்டுக்காட்டவா? மேலை  நாட்டு  சங்கீதத்தைத்தொட்டுக்காட்டவா? வட்டம்  போடவா? வாலிபத்தின்  வேகத்தோடு  வட்டம்  போடவா?


6  ஆறுமுகம்  , இது  யாரு  முகம் ?   தாடி  வெச்சா  வேறு  முகம் ,தாடி  எடுத்தா  தங்க  முகம் 


7  மாணிக்கத்தேரில்  மரகதக்கலசம்  மின்னுவதென்ன?  என்ன? மன்னன்  முகம்  கனவில்  வந்தது 


  ரசித்த  வசனங்கள் 


1  நாம  சாப்பிடும்போது  நம்ம  பல்லே  நம்ம  நாக்கைக்கடிச்சுடுது , அதுக்காக நாம  பல்லுக்கு  தண்டனை  தர்றமா? அது  மாதிரி தான்  நம்ம  வீட்டுக்குழந்தைகள்  குறும்பு  பண்றதும்  அதுக்கு  நாம  தண்டனை  தராம  இருப்பதும்



2  ஏய்  மிஸ்டர் , என்ன  ரயில்  டிக்கெட்டைக்கேட்டா  பிளாட்ஃபார்ம்  டிக்கெட்டைக்காட்றீங்க ?


 நான்  ஏறுவதும்  பிளாட்ஃபார்ம்ல  இறங்குவதும்  பிளாட் ஃபார்ம்ல  அதான் பிளாட்  ஃபார்ம்  டிக்கெட்  எடுத்தேன் 



3  இந்தக்காலத்துல  ஜனங்க  ரயிலில்  போவதை  ஓசி  டிராவல்னே  முடிவு  பண்ணிட்டாங்க , இவங்களை  தடுக்க  ரயிலில்  ஒரு ஜெயில்  ரெடி  பண்ணனும்



4  இந்தக்காலத்துல  மேனகையே  ஆடுனாலும்  ஓ சி  ல  ;பார்த்துட்டுப்போகத்தான்  ஆளுங்க  ரெடியா  இருக்காங்க


5  நான்  ஏழை  தான் ஆனா  கோழை  இல்லை , நீ  யாரு ?


  எமன், என்  வழில  குறுக்கிடறவங்களுக்கு  எமன்


6  பாதிக்கிணறு  தாண்டும்  பழக்கம்  எனக்கு  இல்லை 



7  இதைக்குடிங்க, குடிச்சா  நீங்க  சிரிப்பீங்க 


 இதைக்குடிச்சா?  நான்  சிரிப்பேனா? என்னைப்பார்த்து  மத்தவங்க  சிரிப்பாங்களா? 

8  உங்களுக்கு  குல்லா  போட்டு  அனுப்பறேன்


 எனக்கே  குல்லாவா? 


9  உங்க  பேர்  என்ன ?


 கவ்  காட்


 அப்டின்னா  


பசுபதி 


10  பாவத்தின்  சின்னம்  தான்  பணம், அதுதான்  உங்க  கிட்டே  நிறைய  இருக்கே? 

11   ஏம்மா  அழறே?


 அழுகை  மட்டும்தானே  ஒரு பெண்ணுக்கு  ஆறுதல் ?


12  பம்பரத்தோட  கழுத்துல  கயிற்றில்  சுற்றுவது  அதை  இறுக்க  அல்ல , அதை  சுதந்திரமா  ஆட  விட , பெண்ணுக்கு  திருமணமும்  அப்படித்தான் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வெறும்  ஆளின்  பெயரை  மட்டும் வைத்துக்கொண்டு  நாயகன்  எப்படி  சென்னையில்  அவ்ளோ பெரிய  பரப்பளவு  உள்ள    ஊரில்  மேஜர்  சுந்தர் ராஜன்  வீட்டைக்கண்டு  பிடிக்கிறார் ?


2  பெண்ணுக்கு  பாட்டு  டீச்சர்  வேண்டும்  என்றால்  பெண்  டீச்சரைத்தானே  நியமிப்பாங்க, சினிமாக்களில்  மட்டும்  தான்  ஆண்களை  நியமிக்கறாங்க 


3   எம் ஜி ஆர்  - ஜெ  இருவரும் கணவன்  மனைவியாக  நடிக்கிறார்கள்   அதை  நம்பும்  பெண்  என்ன  கழுத்தில்  தாலி  இல்லையே? என  கேட்கவே  இல்லை  நாயகி  ஒரு  இந்து . குங்குமம்  வைத்திருக்கிறார். அப்போ  தாலி , மிஞ்சி  போன்ற  மேரேஜ்  அடையாளங்கள்  எதுவுமே  இல்லாமல்  இருக்கும்போது  அது  பற்றி  கேள்விகள்  வராதா ? 


4  தூக்க  மருந்து   வேலை  செய்ய  அட்லீஸ்ட் 1  நிமிடமாவது  ஆகும், ஆனால்  டாக்டர்  ஹீரோவுக்கு  இஞ்செக்சன்  போட்ட  அடுத்த  நொடியே  அவர்  தூங்குவது  அல்லது  மயக்கம்  போடுவது  எப்படி ?


5   மேஜர்  சுந்தர் ராஜன்  அடிபட்டு  மயங்கி  கீழே  விழுந்திருக்கிறார். ஹீரோ  வில்லன்  கூட  ஃபைட்  போட்டுக்கிட்டு  இருக்கார் , அது  முடிய  10  நிமிசம்  ஆகுது , அதுவரை  ஹீரோயின்  ஜெ  வேடிக்கை  பார்த்துட்டே  இருக்கார் , வீட்ல  ஃபோன்  இருக்கு , டாக்டருக்கு  ஃபோன்  பண்ண  மாட்டாரா?  யாராவது  அப்பா  ஆபத்தில்  இருக்கும்போது  வேடிக்கை  பார்த்துட்டு  இருப்பாங்களா?


6  க்ளைமாக்சில்  ஹீரோவோட  அம்மா  அவரோட  அம்மாதான்  என்பதற்கு  என்ன  சாட்சி  என  வக்கீல்  கேட்கும்போது  வில்லனின்  மிரட்டலால்  அம்மா  பொய்  சொல்கிறார்.  ஹீரோ  ரேஷன்  கார்டை  காட்டி  இருக்கலாமே? அல்லது  அந்தக்காலத்தில்  ரேஷன்  கார்டில்  அப்படி  குடும்ப  உறுப்பினர்  பெயர்  இருக்காது  எனில்   அக்கம்  பக்கம்  வீட்டு  ஆட்களை  சாட்சியாக  வரவைத்து  இருக்கலாமே? 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  இல்லை 


டிஸ்கி - வழக்கமாக  மாநில  அரசின்  விருது  பெறும்  படங்கள்  ஒரிஜினல்  கதையாக  இருக்க  வேண்டும், அட்லீ  டைப்  பட்டி  டிங்கரிங்க்  கதைக்கோ , ரீமேக்  கதைக்கோ  விருது  தருவதில்லை . இந்த  விதியை  மீறி  எப்படி  இந்த  படத்துக்கு  விருது  கிடைத்தது  என  தெரியவில்லை . அது  போகவே   விருது  பெறும்  அளவுக்கு  பிரமாதமான  கதையும்  இல்லை 

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  எம்  ஜி  ஆர்  ரசிகர்கள்  பார்க்கலாம், டைம்  பாஸ்  மூவி  அவ்வளவுதான் , இது  அந்தக்காலத்தில்  ஹிட்  படமாம் . ரேட்டிங்  2.25  / 5 


ActorRole
M. G. Ramachandranas Shankar, (Music professor Edward, "Thotu Katava...")
S. A. Ashokanas Suresh
Major Sundarrajanas Pasupathy Rabhagavadhor (alias Solaimalai)
Cho Ramaswamyas Karpagam
J.Jayalalithaaas Uma Mageshswari
M. V. Rajammaas Parvati Ammal, Shankar's mother
Jothilakshmias Jaya (alias Mangai Thirumangai)
Vijayasreeas seducer of the trap ("Sorgathai Theduvom...")
Gandhimadhias Chellam, Pasupathy's wife
K. K. Soundaras TTR
Rajakokilaas Radha, Uma Mageshswari 's friend
Ennatha Kannaiyaas jeweler
Justinas Samoundhi
B. R. Panthulu (Not mentioned)as Thanikachalam, Shankar's father (in photo)





Thedi Vandha Mappillai
Thedi Vantha Mappillai.jpg
Theatrical release poster
Directed byB. R. Panthulu
Screenplay byPadmini Pictures Story Department
Story byRajasri
Produced byB. R. Panthulu
Starring
CinematographyA. Shanmugam
Edited byR. Devarajan
Music byM. S. Viswanathan
Production
company
Padmini Pictures
Release date
  • 29 August 1970
Running time
151 minutes
CountryIndia
LanguageTamil

ஜாதி மல்லி (1993)தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா ) @ராஜ் டி வி

 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி புகழ்  பெற்ற  கஜல்  இசைப்பாடகி , ஹைதராபாத்தில்  வசித்து  வருகிறார். ஒரு  இசை  நிகழ்ச்சியின்போது  தீவிரவாதிகளின் தாக்குதலில் நாயகியின் அம்மா  இறந்து  போனதால்  மிகுந்த  மன  வேதனை  அடைந்த  நாயகி  பாடுவதை , கச்சேரிக்கு  புக்  ஆவதை  தவிர்க்கிறார்.சோகத்தை  மறக்க , மனமாறுதலுக்காக  தமிழ்  நாட்டில்  ஊட்டிக்கு  வருகிறார். அங்கே  நாயகனை  சந்திக்கிறார். நாயகன்  ஒரு  டாக்சி  டிரைவர் கம்  ஓனர். அவர்  வண்டியில்  பயணிக்கிறார்  அவர்  கூட  பழக்கம்  ஏற்படுகிறது . அவர்  வீட்டில்  பேயிங்க்  கெஸ்ட்டாக  தங்குகிறார். 


நாயகன்  முன்னாள்  கர்நாடக  இசைப்பாடகர், குடும்பத்தில்  சொத்து  தகறாரு  ஏற்பட்டு  சொந்த  பந்தங்கள்  அடித்துக்கொண்டபோது  தனக்கு  எந்த  சொத்தும்  வேண்டாம்  என  எழுதிக்கொடுத்து  விட்டு  தனியாக  வந்து  விட்டவர் 


வீட்டை  விட்டு  ஓடி  வந்த  ஒரு  காதல்  ஜோடி  அவர்கள்  வீட்டில்  தஞ்சம்  அடைகிறது


குன்னூரில்  ஒரு  கோடீஸ்வரர்  நாயகியின்  தீவிர  ரசிகர் , அவர்  நாயகி  வீட்டுக்கு  வந்து   தன்னுடன்  வருமாறு  கெஞ்சிக்கேட்கிறார். ஆரம்பத்தில்  மறுத்த  நாயகி  நாயகனுடனான  ஒரு  ஊடல்  சம்பவத்தால் ஒரு  வீராப்புக்காக  அவனுடன்  அவன்  வீட்டில்  தங்க  சம்மதிக்கிறார்


ஆனால்  அந்த  ரசிகன்  வீட்டில்  நாயகியால்  சுதந்திரமாக  இருக்க  முடியவில்லை , கூண்டுக்கிளியாக  இருப்பதாகவே  உணர்கிறாள்

இந்த  இரண்டு  காதல்  ஜோடிகளும்  வாழ்க்கையில்  இணைந்தார்களா? இல்லையா? என்பதுதான்  மீதி  திரைக்கதை


 நாயகனாக  மலையாள  நடிகர்  முகேஷ் .  உற்சாகம்  இல்லாத  முகம், ஆனால் கச்சிதமான  நடிப்பு 


 நாயகியாக  குஷ்பூ .  புகழின்  உச்சியில்  குஷ்பூ  இருந்தபோது  ரிலீஸ் ஆன  படம்  இது. இவர்  அடிக்கடி  ம்ச்ச்  ம்ச்ச்  என  உதட்டில்  சுளிப்பது  அந்தக்காலத்தில்  ஹிட்  ஆன  மேனரிசம்


காதல்  ஜோடிகளாக  வினித் , யுவராணி   கச்சிதம் 


 ரஜினி  ரசிகர்களை  தாமுவின்  மிமிக்ரி  குரலை  வைத்து  ஏமாற்றி  பணம்  சம்பாதிக்கும்  மதன்  பாப்  காமெடி  டிராக் , விசித்ராவின்  ஃபோர்  ட்வெண்ட்டி  விஷயங்கள் எல்லாம்  சுமார் தான் . டைரக்டர்  நாசர்  ஷூட்டிங்  ஸ்பாட்டில்  அடிக்கடி  கோபம்  கொள்வது , அனைவரையும்  திட்டுவது  இவை  எல்லாம்  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாதவை 



செம  ஹிட்  சாங்க்ஸ்


1  மறக்க  முடியவில்லை  மறக்க  முடியவில்லை


2  கம்பன்  எங்கு  போனான் ? ஷெல்லி என்ன  ஆனான் ? நம்மைப்பாடாமல்


3  மன்மத  லீலையை  வென்றார்  உண்டோ  சொல்  ( ரீமிக்ஸ்)


4  அழைத்தால்  வருவாளே  ஸ்ரீ  ரஞ்சனி ( எனக்கா  தெரியாது?)


5 சொல்லடி  பாரத  மாதா 

சபாஷ்  டைரக்டர்


1  நாயகன்  , நாயகி  இருவரும்  மனதால் நெருங்கி  வருவதை  கொடிகளில்  எதிர்  எதிரே  காய  வைத்திருக்கும்  வேட்டி , சேலை  இரண்டும்  காற்றில்  பறந்து  தொட்டுக்கொள்ளும்  காட்சி 


2   வினீத் , யுவராணி  இருவருக்கும்  ஃபாரீன்   நகரத்துப்பெயர்களான  மாஸ்கோ , பெர்லின்  என  வைத்து மனி ஹெயிஸ்ட்  கேரக்டர்களுக்கு  முன்னோடியாக  இருந்தது .  அவர்கள்  மத  அடையாளங்களை  மறைக்க  அந்த  டெக்னிக்  என  இயக்குநர்  ஒரு  பேட்டியில்  சொல்லி  இருந்தார்


  ரசித்த  வசனங்கள்


1   உங்க  சோகங்களை  என்  கிட்டே  சொன்னா  அதை  நான்  பகிர்ந்துக்க  முடியாது , ஆனா  உங்க  மன  பாரங்கள்  என்  கிட்டே  சொல்வதால்  பாதியாகக்குறையும் 


2  உங்க சோகங்கள்  உங்களுக்கு    பெருசாத்தெரியக்கூடாதுனு  என்  சோகங்களை  மிகைப்படுத்தி  சொன்னேன் 


3  ஆத்மா வுக்கு  நடுவே  ஒரு  எஸ்  சேர்த்தா  ஆஸ்த்மா 


4  எங்க  கிராமத்தில்  பாம்பாட்டிக்குக்கூட  வைப்பாட்டி இருக்கு  சின்ன வீடு  இல்லைன்னா  மனுசனாவே  மதிக்க  மாட்டாங்க 


5  இதுதான்  என்  வாழ்க்கைல  சொல்ற  கடைசி  சாரி 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   மறக்க  முடியவில்லை  மறக்க  முடியவில்லை பாடல்  வரிகளில்  சரணத்தில் அம்மா  தந்த  பட்டுச்சேலை   மறக்க  முடியவில்லை  , அந்த  சேலையில்  ரத்தம்  தோய்ந்த  நாள்   மறக்க  முடியவில்லை    என்ற  வரி  வருது , அப்போ  ஃபிளாஸ்பேக்  சீன்ல  தீவிரவாதிகள்  அம்மா  வை  சுட  உடையில்   ரத்தம்  படுவதைக்காட்டுகிறார்கள் , ஆனால் இருவர்  சேலையும்  பட்டுச்சேலை  கிடையாது., இன்னொரு   விஷயம்  நாயகியின்  சேலையில் கூட  ரத்தமே  படலை , அம்மா  வின்  முதுகில்   குண்டு  பட்டு  ஜாக்கெட்  தான்  ரத்தச்சிவப்பு  ஆகுது , சேலைக்கு  ஏதும்  ஆகல


2  தீவிரவாதிகள்  அந்த  மண்டபத்துக்கு  வந்து  நாயகியை , அம்மாவை  சுடனும்னா  ஈசியா  வந்ததும்  சுட்டிருக்கலாம், அதை  விட்டுட்டு  லூசுங்க  மாதிரி  ஆடியன்சை  சுட்டு  டைம்  வேஸ்ட்  பண்ணி  10  நிமிசம்,    கழிச்சு  அம்மாவை  சுடறாங்க 


3  கம்பன்  எங்கு  போனான் ? ஷெல்லி என்ன  ஆனான் ? நம்மைப்பாடாமல்  பாடல்  காட்சியில்  வினீத் ,யுவராணி  இருவரும்  அவரவர்  லக்கேஜ்  பேக்கை  கைல  வெச்சுக்கிட்டே  சிரமப்பட்டு ஏன்  டான்ஸ்  ஆடறாங்க ?  ஓரமா  வெச்சு  டான்ஸ்  முடிஞ்சதும்  அதை  எடுத்துக்கக்கூடாதா?


4  வினித் , யுவராணி  இருவரும்  வீட்டை  விட்டு  வெளியேறும்போது  ஆளாளுக்கு  ஒரு  பேக்  எடுத்துட்டு  வர்றாங்க, அதில்  அதிக  பட்சம் ஒரு  செட்  டிரஸ்  தான்  வைக்க  முடியும். டவல் ,  லுங்கி  நைட்டி  கூட  எக்ஸ்ட்ரா  வைக்க  இடம்  இல்லை , ஆனா  பல நாட்கள்  பல  வித   டிரஸ்  போட்டுட்டு  இருக்காங்க


5  ஃபிராடு  ஆளாக  வரும்  விசித்ரா  ஆளும்  கட்சி  எம் எல் ஏ  என  ஒரு  ஆளை  ஏமாத்துது . ஏம்மா  மின்னல், ஐ டி  கார்டு  காட்டு   அப்டினு  அந்த  ஆள்  கேட்க  மாட்டானா?  லூஸ்  மாதிரி  உங்களை  எப்;படி  எம் எல் ஏ   என  நம்புவது ?னு  பம்மறான்


6 வில்லன்  நாயகியை  ஏமாற்ற  முடிவெடுத்தவன்  நாயகியை  உடல் ரீதியாக  அடையும்  முன்பே  எப்படி  தன்  சுயரூபத்தைக்காட்டுகிறான்? பொதுவாக  ஆண்கள்  தங்கள்  காரியம்  ஆகும்  வரை  நல்லவன்  முகமூடி  போடுவதுதானே  வழக்கம் ?


7  நாயகி  வில்லனின்   பங்களாவில்  அவள்  விருப்பத்துக்கு  மாறாக  அடைக்கப்படிருக்கிறாள்  என்று  போலீசில்  புகார்  கொடுக்கலாமே? நாயகன்  ஏன்  அதை  செய்யவில்லை ?


8  வில்லனின்  வீட்டு  லேண்ட்  லைன்  ஃபோன்  நெம்பர்  நாயகன் , வினித்  என  எல்லோருக்கும்  எப்படித்தெரிகிறது ?


9  வில்லனின்  வீட்டில்  நாயகி  பல  நாட்களாக  அடைபட்டு  இருக்கிறார். வில்லன்  ஒரு  மாங்கா  மடையனாக  இருந்தால்  கூட  நாயகியை அடைய  நினைப்பவன்  உணவில்  மயக்க  மருந்து  கொடுத்து  ஏதாவது  செய்திருக்கலாம், ஆனா  அந்த  ம ஞ்ச  மாக்கான்  அதை  எல்லாம்  செய்யாமல்  நாயகன்  நாயகியைக்காப்பாற்ற  அவன்  வீட்டுக்கு  வந்த போது  அவன்  எதிரே  இப்போ  இவளை   பலாத்காரம்  பண்றேன் , முடிஞ்சா  தடு  என   அநியாயமா  அடி  வாங்கறான் 


10  கலவரம்  நடக்கும்  இடத்தில்  போலீஸ்  வினித் - யுவராணி  ஜோடியை  சுட்டுக்கொல்வது  மடத்தனமான  க்ளைமாக்ஸ்


11  படம்  முடிஞ்சு  க்ளைமாக்ஸ்  பார்த்துட்டு  ஆடியன்ஸ்  எல்லாரும்,  எஸ்கேப்  ஆனபிறகு நாயகி  குஷ்பூ  காந்தி  சிலையைப்பார்த்து  பத்து நிமிஷம்  இங்க்லீஷ்ல  ஏதோ  டயலாக்  பேசுது , அது  போதாதுனு   ஒரு  சோகப்பாட்டு  வேற , எதுக்கு  அது ?



படம்  ரிலீஸ்  ஆனபோது  இது  பத்திரிக்கைகள்  விமர்சன  ரீதியாக  பாராட்டித்தள்ளினாலும்  கமர்ஷியலாக  இது  வெற்றி  பெற்ற  படம்  இல்லை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - மறக்க  முடியவில்லை  மறக்க  முடியவில்லை  பாடல்  ஓப்பன்  ஆகும்  முன்  அதற்கான  லீடிங்  சீனாக  ஒரு  பெண்  தன்  குழந்தைக்கு  தாய்ப்பால்  கொடுப்பதை க்ளோசப்  ஷாட்டில்  காட்டுவார்கள்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - குஷ்பூ, யுவராணி  ரசிகர்கள்  அவர்கள்  அழகுக்காக  பார்க்கலாம், கே  பாலச்சந்தர்  ரசிகர்கள்  ரசிக்கும்  அளவு  பெரிய  டைரக்சன்  டச்  சீன்கள்  எதுவும்  இல்லை , சுமார்  ரகம்  தான் . ரேட்டிங்  2 . 5 



ஜாதி மல்லி (திரைப்படம்)
கதைகே.பாலச்சந்தர்
அனந்து
இசைமரகத மணி
நடிப்புமுகேஷ்
குஷ்பூ
நாசர்
வினீத்
யுவராணி
ஒளிப்பதிவுஆர். ரகுநாதரெட்டி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Saturday, January 28, 2023

DHAMAKA(2022) தெலுங்கு - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசலா) @ நெட் ஃபிளிக்ஸ்


40  கோடி  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டு  100  கோடி   வசூல்  செய்த  ஆக்சன்  மசாலா  படம்  இது . ரவிதேஜாவின்  சினிமா  கேரியரில்  முதல்  100 கோடி வசூல்  படம்  அது  போக  தெலுங்கு  சினிமாவின்  டாப்  டென்  வசூல்  ப்டங்களில் இது  எட்டாவது  இடத்தில்  இருக்கிறது 

ஸ்பாய்லர்  அல்ர்ட்


நாயகனின்  அப்பா  பெரிய  தொழில் அதிபர்  கம்  கோடீஸ்வரர். ஆனால்  அவருக்கு  ஒரு  தீர்க்க  முடியாத  வியாதி  இருக்கிறது. அவர்  இன்னும்  இரண்டு  மாதங்களில்  இறக்கப்போகிறார். அவருக்குப்பிற்கு  அவரது  ஒரே  மகனான நாயகன் தான்  கம்பெனிக்கு  தலைமைப்பொறுப்பு  ஏற்க  இருக்கிறார். நாயகனின்  அப்பா  தன்  பிறந்த  நாள்  விழாவில்  இந்த  கம்பெனியின்  பங்குகள்  சரி  சமமாக  தொழிலாளர்கள்  அனைவருக்கும்  பகிர்ந்து  அளிக்கப்படுகிறது  என  அறிவிக்கிறார். அதன்படி அனைத்து  தொழிலாளர்களும்  முதலாளளிகள் 


வில்லன்   ஒரு தொழில்  அதிபர், அவருக்கும்  ஒரு  மகன் . வில்லனுக்கு  நாயகனின்  கம்பெனியை  அபகரிக்க  திட்டம்  போடுகிறார். தன்  பெயருக்கு  கம்பெனியை  எழுதி  வைக்கும்படி  மிரட்டுகிறார்


நாயகி  ஒரு  வேலை  இல்லாத  இளைஞனைக்கண்டதும்  காதல்  வசப்படுகிறார், நாயகியின்  அப்பா  தன்  மகளுக்கு  ஒரு  கோடீஸ்வர  மாப்பிள்ளையை  வரன்  பார்த்து  வைத்திருக்கிறார். நாயகியை  அழைத்து  அவனை  அறிமுகப்படுத்துகிறார். பார்த்தால்  உருவ  அமைப்பில்  நாயகி  காதலித்த  நபரும் , அப்பா  காட்டிய  மாப்பிள்ளையும்  ஒரே  மாதிரி  இருக்கிறார்கள் ., ஒருவர்  தொழில்  அதிபர் , இன்னிருவர்  ஏழை . இந்த  விஷயத்தை தன்  அம்மாவிடம்    சொல்கிறார். நாயகியின்  அம்மாவோ  நி  இருவரிடமும்  பழகிப்பார். யரைப்பிடிக்கிறதோ  அவரை  திருமணம்  செய்து  கொள்  என்கிறார்


 இதற்குப்பின் நாயகி  என்ன  முடிவு  எடுத்தார்?  வில்லனின்  ஆசை  நிறைவேறியதா?  என்பதை  திரையில் காண்க 


நாயகனாக  மாஸ்  மசாலா  ஹீரோ  ர்வி  தேஜா. இரு  வித  கெட்டப்பிலு,ம்  அசத்துகிறார். ஆக்சன்  காட்சிகளில்  அநியாயத்துக்கு  ஓவர்  சாகசம்  பண்ணுகிறார்.  தெலுங்கு  ரசிகர்களுக்கு  மசாலா  விருந்து  படைக்கிறார்


நாயகியாக  ஸ்ரீ லீலா அழகிய  முகம் ,  துள்ளும்  இளமை ,  காண்பவரை வசீக்ரிக்கும்  புன்னகை  என  வந்து 4  டூயட்டுக்கு  டான்ஸ்  ஆடி  விட்டு  செல்கிறார்


 வில்லனாக  ஜெயராம் .,இவரை  இதுவரை  காமெடியனாகவும், கேரக்டர்  ஆர்ட்டிஸ்ட்டாகவும்  பார்த்து பழக்கப்பட்ட  நமக்கு வில்லன்  ரோலில்   பார்க்க  புதுசாக  இருக்கிறது


நாயகனின்  நிஜ  பெற்றோர் , வளர்ப்புப்பெற்றோர்   அனைவரின்  செண்ட்டிமெண்ட்  காட்சிகளும்  கச்சிதம்


பீம்ஸ்  இன்   இசையில்  4   டப்பாங்குத்துப்பாடல்கள்  ஹிட்  அடித்து  இருக்கின்றன. எல்லாமே  தரை  லோக்கல்  பாடல்கள் , கார்த்திக்கின்  ஒளிப்பதிவில்  காட்சிகள்  கண்ணுக்குக்குளுமை . 2  மணி  நேரம் 10  நிமிடங்கள்  ஓடும் இந்தபடத்தை  பிரவின்  புடி  எடிட்  செய்து  இருக்கிறார்


ட்விஸ்ட்  அண்ட்  டர்ன்ஸ்  எதுவுல்  இல்லாமல்  நேரடியாக  கதை  சொல்லி  இருக்கிறார்கள் . இது  போல  ஏகப்பட்ட  ஆக்சன்  மசாலாப்படங்கள்  நாம்  பார்த்து  விட்டோம், பத்தோடு பதினொன்று , அத்தோடு  இதுவும்  ஒன்று 


2022  டிசம்பர்  மாதம்  25 ல்  கிறிஸ்துமஸ்க்கு  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இந்தப்படம் இப்போது  நெட்  ஃபிளிக்ஸில்  ரிலீஸ்  ஆகி  உள்ளது . 


ரசித்த  வசனங்கள் 



 1   மரத்தின்  வேர்கள்  எந்த  அளவு ஆழமா  உன்றி இருக்கோ அந்த  அளவுக்கு  பலமா  இருக்கும் , நம் கிரவுண்ட்  ஒர்க்  எந்த  அளவு  நல்லா  பண்ணி  இருக்கோமோ  அந்த  அளவு  வெற்றி  இருக்கும்\


2 தன்னைத்தானே  பாதுகாத்துக்கொள்ள  முடியாதவன்  அரசனாக  இருக்க  முடியாது 


3  ஏழையா  இருக்க்றவன்  பணத்தேவை  இருக்கும், பணக்காரனுக்கு பவர்  தேவைப்படும் , இந்த  உலகமே  பவரை  நோக்கித்தான்  பயணத்தை  ஆரம்பிச்சிருக்கு 


4  பேசிக்கிட்டு  இருக்கும்போதே  எதுக்கு  மேன்  அவனை  அடிச்சே?

 அவன்  கிட்டே  ஒரு வில்லனை  பார்த்தேன். எதிராளி  கிட்டே  வில்லத்தனத்தை  பார்த்தா  என்  கிட்டே  ஹீரோயிசம்  நீங்க  பார்க்க  வேண்டி  வரும் 


5 பலவீனமா  இருக்கும்  சிங்கத்தின்  அமைதியைப்பார்த்து  அது  வீக்னெஸ்னு  நினைக்காதீங்க, அது  வயலண்ட்டா  மாறுனா  தாங்க  மாட்டீங்க 


6  சிங்கம்  பசியா இருக்கும்போது  அது  வேட்டையை  ஆரம்பிக்கும்,  இது  கானக  விதி 


7  ப்ரப்போஸ்  பண்ற  பையனுக்கு  ஓகே  சொல்ல  லேட்டானா  பரவால்லை, ஆனா  நோ  அப்படினு  சொல்ல  லேட்  பண்ணக்கூடாது , ஏன்னா  நிராகரிப்பின்  வலி  பல  மடங்கு  பெரியது 


8  இது ஹவுசா? பிக் பாஸ்  ஹவுசா? இவ்ளோ   ட்ராமா  போகுது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1  நாயகன்  சொந்தப்பெற்றோருடன்  ஒரு  நாள் , வளர்ப்புப்பெற்றோருடன்  ஒரு  நாள்  என  வசிக்கிறார், எதுக்கு  அலைச்சல்? ஒரே  பங்களாவில்  இரு  பெற்றோரையும்  தங்க  வைக்கலாமே?


2 நாயகன்  புகழ்  பெற்ற  தொழில்  அதிபர்., மீடியாவில்  அவர்  ஃபோட்டோ  எல்லாம்  ஷேர்  ஆகி இருக்கும் . அப்படி  இருக்கும்போது  அதே  கெட்டப்பில்  வேறு கம்பெனியில்  வேலைக்கு போகும்போது  அந்த  எம்  டி க்கு  அது  தெரியாதா?


3  நாயகனின்  அப்பா  பெரிய  தொழில்  அதிபர் . வில்லன்  அடிக்கடி  மிரட்டுகிறான். போலிசில்  புகார்  தர  மாட்டாரா?  படம்  முழுக்க  ஒரு  சீனில்  கூட  போலீஸே  இல்லை 


4  வில்லனின்  அடியாட்கள்  கேஜிஎஃப்  ல  வர்ற  ஹீரோ  கைல  வெச்சிருக்கும்  மெகா  சுத்தியல்களோடு  அடிக்கிறார்கள் , ஹீரோ  ஒரே  ஒரு  பைக்  சைலன்சரை  வெச்சு  எல்லாரையும்  பிளந்து  கட்டுகிறார்


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட்  - நல்ல  சினிமா  பார்க்கும்  ரசனை  உள்ளவர்கள்  தவிர்க்கவும் .  மாமூல்  மசாலாப்படம்னா  பார்ப்பேன்  என  அடம்  பிடிப்பவர்கள்  பார்க்கலாம், ரேட்டிங்  2 / 5 


 

Dhamaka
Dhamaka 2022.jpg
Theatrical release poster
Directed byTrinadha Rao Nakkina
Written byPrasanna Kumar Bezawada
Produced byAbhishek Agarwal
T. G. Vishwa Prasad
Starring
CinematographyKarthik Ghattamaneni
Edited byPrawin Pudi
Music byBheems Ceciroleo
Production
companies
People Media Factory
Abhishek Agarwal Arts
Release date
23 December 2022
Running time
139 minutes
CountryIndia
LanguageTelugu
Budget₹40 crore[1]
Box office₹100 crore[2]