Wednesday, August 24, 2011

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை கைதிகள் 3 பேரின் கடைசி பேட்டி

நானே தூக்கில் ஏறும் கடைசி ஆளாக இருக்கட்டும்!''
ழப் படுகொலைகள் உண்​டாக்கிய துயரமே தமிழக மனங்​களில் ரணமாக வடியும் நிலையில், தூக்குக் கயிறு வடிவில் மீண்டும் துரத்தத் தொடங்கி இருக்கிறது துயரம். ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் மரணத்தின் நிழலில் நிற்கிறார்கள். 

தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைத் தளர்த்தக்கோரி இவர்கள் அனுப்பிய கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. மூவரை​யும் காப்பாற்றக் கோரி கட்சி வேறு​​பாடுகளைக் கடந்து தமிழகம் முழுக்க உணர்வும் உருக்கமுமான போராட்​டங்கள் நடக்கின்றன. மரணத்தின் துரத்தலில் வாடும் அந்த மூவரின் மனப் போராட்டங்களையும் அறிய முடிவெடுத்​தோம். வழக்கறிஞர்கள் ராஜீவ் காந்தி, பாலாஜி மூலமாக கேள்விகளை அனுப்பி வைத்தோம். அதன் தொகுப்பு இங்கே...


முதலில் பேரறிவாளன்...

1. ''எந்த நேரத்திலும் தூக்கு அறிவிப்பு வரலாம் என்கிற நிலையை எப்படி எதிர்கொள்​கிறீர்கள்?''

''முதலில் எங்களுக்காகப் போராடும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம். தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மரணத்தின் நிழலில்தான் நிற்கிறோம். கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதில் மரண நிழல் எங்களைப் பெரிதாக சூழ்ந்திருக்கிறது. மக்களின் ஒருமித்த கைகோப்பு எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் வெளிச்சத்தையும் உருவாக்கி இருக்கிறது.

19 வயதில் உள்ளே வந்தவன். 21 வருடங்கள் இந்தச் சிறையிலேயே பெருவலியோடு கழிகிறது. தூக்கு அறிவிப்பை இந்த வலியில் இருந்து விடுபடும் நாளாக எண்ணி என்னைத் தேற்றிக்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறேன்!''


2. ''தமிழக மக்களிடம் நீங்கள் சொல்ல நினைக்கும் கருத்து?''

''அரசியல் பாகுபாடு பார்க்காமல் அனை​வரும் எங்களுக்காகப் போராடுவது எங்களின் கண்ணீரைத் துடைத்து இருக்கிறது. இன உணர்வு மட்டும் அல்லாது, மனிதநேயமும் ஒருசேர்ந்த போராட்டம் எங்களை சிலிர்க்க வைத்திருக்கிறது. 

பொதுமக்களும் அனைத்துத் தலைவர்களும் ஒரே அணியில் நின்று தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். அனைத்து அரசியல் தலைவர்களும் ஒருமித்த உணர்வோடு திரண்டு தமிழக முதல் அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தால், நிச்சயம் அவர் எங்களின் விடிவுக்கு வழி செய்வார். அவருடைய குரல் எங்களுக்காக காத்திருக்கும் கயிறை நிச்சயம் அறுத்தெரியும்!''


3. ''தமிழக முதல்வரிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?''

''மிகுந்த அறிவும் ஆய்ந்தறியும் பேராற்றலும் கொண்டவர் நீங்கள். இந்த வழக்கில் இருக்கும் குளறுபடிகளை நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அம்மா, மரணம் கோரப்பசியோடு துரத்தும் இந்த நேரத்தில் மட்டும் அல்ல... 20.07.07 அன்றே  உங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். 'வழக்கில் சிக்குபவர்களுக்கு வசதி இல்லை என்றால், அவர்களின் தரப்பு நியாயம் அம்பலம் ஏறாமல் போய்விடும். 

அத்தகைய குறைபாடு கொண்ட கட்டமைப்புதான் இன்றைக்கு நிலவுகிறது. என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் இத்தனை நாள் மரணத்தின் மடியில் படுத்துக் கிடப்பவனாகக் கேட்கிறேன்... தயவுசெய்து தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுங்கள்!’ என அந்தக் கடிதத்தில் உங்களிடம் கோரிக்கை வைத்திருந்தேன்.

பிறருக்கு முன்னுதாரணமான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருகிற சக்தி உங்களுக்கு மட்டுமே இருக்கிறது.மனசாட்சியின் கண்ணீர்க்குரலாகச் சொல்கிறேன்... எங்களுக்குத் தெரிந்து எதுவும் நடக்கவில்லை. சித்திரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக இத்தனை வருடங்கள் வாடும் எங்களுக்காக உங்களின் ஒற்றைக் குரல் ஒலித்தால் போதும் அம்மா!''


4./ ''கருணை மனு நிராகரிக்கப்பட்ட உடன் மரணம் நெருங்கிவிட்டதாக நினைக்கிறீர்களா?''

''99-ம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன் என்னைப் பார்க்க வந்தார். 'வெளியே வந்தால் என்ன செய்வீர்கள்?’ எனக் கேட்டார். 'தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடுவேன்’ எனச் சொன்னேன். காரணம், தூக்கு அறிவிக்கப்பட்ட ஒருவனின் ஒவ்வொரு நிமிஷமும் எத்தகையக் கொடூரமானது  என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான்.

வெளி உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க இப்போது ஆசையாக இருக்கிறது. சிறு குழந்தையின் தவிப்பாக மனது ஏங்குகிறது. எங்​களுக்காகப் போராடும் மக்களை நேரில் பார்த்து கைகூப்பத் தோன்றுகிறது. ஆனால், ஏற்கெனவே பரப்பிய பழிகள் போதாது என 'சாத்தானின் படைகள்’ என்கிற புத்தகத்தை நான் அச்சடித்ததாக சிலர் இப்போது கிளப்பிவிடுகிறார்கள். 

அந்தப் புத்தகத்தை யார் உருவாக்கியது என்பது சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் என்னை இட்டுக்கட்டுவது ஏன்? ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கில் ஒருவேளை மரணம் எங்களை வென்றுவிட்டால், கயிற்றின் முன்னால் நின்று நான் சொல்ல நினைப்பது... தூக்குக்குப் பலியாகும் கடைசி ஆள் நானாக இருக்கட்டும் என்பதுதான்!''


அடுத்து முருகன்...

1.''தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறதா?''


''மரணத்தைவிட மரணத்தின் நாளுக்காகக் காத்திருப்பது கொடுமையானது. அதை ஒவ்வொரு கணமும் அனுபவிக்கும் இந்த சூழலில், மக்களின் ஆதரவுதான் எங்​களை நம்பிக்கையோடு நிமிர வைக்கிறது! தனித்தனியான போராட்டங்களை முன்னெடுக்​காமல், எங்களுக்காக எல்லோரும் ஒருமித்து நிற்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. 

இதர மாநிலங்களில் தண்ணீர் பிரச்னைக்குகூட அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகத் திரளுகின்றன. எங்களின் கண்ணீர் பிரச்னைக்கும் அதேபோல் அனைத்துக் கட்சிகளும் திரண்டு, முதல்வரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். மூன்று உயிர்களுக்காக மொத்த தமிழகமும் கைகோத்து நின்றதை காலக் கல்வெட்டு தமிழனின் உயர்ந்த உணர்வாகப் பதிவு செய்ய வேண்டும்!''


2.''தமிழக மக்களிடம் ஏதாவது சொல்ல விரும்பு​கிறீர்களா?''


''எங்கள் மீதான குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை. மரணத்துக்குப் பயந்து இந்த வார்த்தை​களைச் சொல்லவில்லை. எங்களின் கவனத்துக்குத் தெரியாமல் நடந்த சம்பவத்துக்கு இத்தனை வருட சிறைவாசமே பெரிய கொடுமை. ஒப்புதல் வாக்குமூலத்தில் நாங்களே பல விஷயங்களை ஒப்புக்கொண்டதாக விசாரணை அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்களே தயாரித்து எங்களை அதில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். 

அதற்காக அவர்கள் செய்த சித்ரவதைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மரணக் கொட்டடியின் நெருக்கடிகள் எங்களுக்குப் பழகிப்போனாலும், என்றைக்காவது ஒருநாள் வெளியே வருவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. உறவுகளின் உணர்வுகளால் அந்த நம்பிக்கைப் பலப்படுகிறது. ஒரே வார்த்தையில் எங்களின் உணர்வைச் சொல்வதானால்.... நன்றி!''


அடுத்து ம.தி.சாந்தன்...


1.''ராஜீவ் கொலை விசாரணையில் நிறைய குளறு​படிகள் நடந்ததாகச் சொல்கிறார்களே...?''

''கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத நாங்கள் குற்றவாளிகளாக நிற்கிறோம். இந்த வேதனையைக் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால்தான் புரியும்.


கொழும்பு வழியாக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல என்பதாலேயே நான் இந்தியாவுக்கு வந்தேன்.  இலங்கை அரசு தந்த உண்மையான பாஸ்போர்ட்டுடன் வந்தேன். அதை சி.பி.ஐ. கைப்பற்றி உள்ளது. ராஜீவ் போன்ற பெரிய தலைவரைக் கொல்ல வருபவன் தன்னைப் பற்றிய தகவலைச் சொல்லும் உண்மையான பாஸ்போர்ட்டுடன் வருவானா?


நான் சுமக்கும் மரண தண்டனைக்குப் பெயர் குழப்பமும் ஒரு காரணம். இந்த வழக்கில் கைதாகி விடுதலையான இரும்பொறை என்பவரை நான் ராஜீவ் இறப்பதற்கு முன்னர் சந்தித்ததாகவும், 15 ஆயிரம் பணம் கொடுத்ததாகவும், 'முக்கியமான ஒரு நபரைக் கொல்லப் போகிறோம்’ என்று சொன்னதாகவும் மரண தண்டனையை உறுதி செய்தபோது மாண்புமிகு நீதிபதி கே.டி.தாமஸ் அவர்கள் கூறுகிறார்.  ஆனால், மாண்புமிகு நீதிபதி வாத்வா அவர்கள் அது இறந்துபோன எதிரி திருச்சி சாந்தன் என்கிறார். இன்னொருவர் சொன்னதை நான் சொன்னதாகச் சொல்லி என்னைத் தூக்கில் நிறுத்தப் போகிறார்கள்.


'நானும் சிவராசனும் நளினியை மிரட்டி இந்த​சதிக்கு உடன்பட வைத்தோம்’ என்று நீதிபதி தாமஸ் சொல்கிறார்.  ஆனால், நீதிபதி வாத்வா, 'ராஜீவ் இறந்த அடுத்த நாள்தான்  நளினியை சாந்தன் அறிவார்’  என்கிறார்.


நான் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவில் முக்கியமான ஆள் என்பதற்கு ஆதாரம் இருப்பதாக நீதிபதி தாமஸ் தீர்ப்பில் சொல்கிறார். இவை எதற்கும் ஆதாரம் இல்லை. விடுதலையான இரும்பொறையுடன் நான் சம்பந்தப்பட்டிருந்தேன் என்றோ, நளினியை மிரட்டினேன் என்றோ சி.பி.ஐ.கூடச் சொல்லவில்லை. ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை அவரிடம் கூறி அவரது பதிலை விசாரணை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் என் விஷயத்தில் இது செய்யப்படவில்லையே.. எப்படி?


சிவராசனின் பணத்தை முதலில் காந்தன் என்பவர் கையாண்டார். அவரிடம் இருந்து நான் அந்தப் பொறுப்பினை எடுத்துக்கொண்டதாக நீதிபதி வாத்வா அவர்கள்  தீர்ப்பில் கூறுகிறார். சிவராசனின் பணத்தை நான் பாதுகாத்து கொடுத்ததாகவோ கையாண்டதாகவோ விசாரணை நீதிமன்றம் என்னிடம் கேட்டுப் பதிவு செய்யவில்லை.  இப்படி எல்லாம் குளறுபடிகள் நடந்தன. குளறுபடிகளே எங்களுக்கான முடிவுப் படிகளாக மாறிவிட்டன!''


2.''கருணை மனு நிராகரிக்கப்பட்டது தெரிந்த உடன் என்ன நினைத்தீர்கள்?''


''என் தந்தை ஆறுமுகம் தில்லையம்பலம் அவர்களின் நினைவு வந்தது. அவருக்கு இப்போது 70 வயது. இறுதிக்கட்டப் போருக்குப் பிறகு அவரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. அதற்கு முன்னர் அங்கு விவசாயம் செய்துகொண்டு இருந்தார். அவர் எப்படி இருக்கிறார் என்கிற கவலை என்னைப் பெரிதாக வருத்துகிறது. பெற்ற தகப்பன் இருக்கிறாரா இல்லையா என்பதை நினைத்து அழுவதா? நான் இருப்பேனா மாட்டேனா என்பதை நினைத்து அழுவதா? இந்த அப்பனும் மகனும் விதியெனும் கையில் சிக்கிய விளையாட்டுப் பொம்மைகளாய் அல்லாடுகிறோம்!''

thanx - vikatan

Tuesday, August 23, 2011

NOT A LOVE STORY - சினிமா விமர்சனம்

http://www.andhrulamusic.com/wp-content/uploads/2011/08/Not-A-Love-Story-Songs.jpgராம்கோபால்வர்மா நம்ம ஊரு ஷங்கர் பாதி + மணி ரத்னம் பாதி .அதாவது பரபரப்பான நாட்டு நடப்பை படமா எடுத்து காசாக்கனும், மற்றபடி  ஷங்கரிடம் உள்ள அழகியல் நேர்த்தி , மணி ரத்னத்திடம் உள்ள கலை நுணுக்கம் இதெல்லாம்  அவருக்கு தேவை இல்லை.. 2008 இல்  மும்பையில் நடந்த உண்மைச்சம்பவத்தை அப்டியே எடுத்திருக்காரு..

கன்னட நடிகையும், மாடலுமான மரியா சூசைராஜை நினைவில் இருக்கிறதா? 2008ம் ஆண்டு, தனது காதலன் ஜெரோம் மாத்யூஸுடன் இணைந்து தனது பாய் ஃப்ரெண்ட் நீரஜ் க்ரோவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டாரே... அவரேதான். அவரது வாழ்க்கை வரலாறு தான், குறிப்பாக நடந்ததாக சொல்லப்படும் அந்தக் கொலைதான், ‘நாட் எ லவ் ஸ்டோரி’ இந்திப் படத்தின் கரு.



இந்தியாவையே அதிர வைத்த இந்தக் கொலை சம்பவங்கள் குறித்து பத்திரிகைகளில் வெளியான தகவல்கள் ரத்தத்தை உறைய வைப்பவை.

கன்னடப் படங்களில் நடிக்கத் தொடங்கியிருந்த மரியா சூசைராஜுக்கு ஒரு காதலன் உண்டு. பெயர் ஜெரோம் மாத்யூஸ். இந்திய கப்பற்படையில் பணி
புரியும் ஜெரோமை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக மரியா அறிவித்திருந்தார். அதேநேரம், பெரிய நடிகையாக உயர்ந்த பிறகே அத்திருமணம் என்பதிலும் உறுதியாக இருந்தார். ( ஆஹா, என்ன ஒரு உயர்ந்த உள்ளம்? )


ஆனால், நாட்கள்தான் சென்றதே தவிர, சொல்லிக் கொள்ளும்படி கன்னடத்தில் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. ( வந்ததெல்லாம் ஜொள்ளிக்கற மாதிரிதானா? )எனவே மும்பைக்கு வந்தார். இந்திப் படங்களில் நடிக்க சான்ஸ் தேடினார். அப்போது அவருக்கு அறிமுகமானவர்தான் நீரஜ் க்ரோவர். நட்பாக ஆரம்பித்த அந்த அறிமுகம், ஒரு
கட்டத்தில் இருவரும் மும்பை அப்பார்ட்மெண்டில் ஒன்றாக வசிக்கும் அளவுக்கு வளர்ந்தது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh72sFCBzcE5be1pQyZ-09_vcA6SupkeDUZkm24H553Q3IiRqNwbqk0l_z2NCmPK8EeRsQg0H9VUCzR25vkcEkDpX-NtkvrZo-ZdaJe_t5FY_PTmfmHxRoK5tVrkzdrq9HpyDbiizkFFyES/s1600/Bollywood+Movie+Not+A+Love+Story+2011+First+Look%252CBanner%252CCast%252CWallpaper%252CStill%252CTrailer%252CCrew%252CMovie+Plot%252CBudget%252CPosters.jpg
ஒருநாள் இருவரும் வசிக்கும் அந்த ப்ளாட்டுக்கு ஜெரோம் மாத்யூஸ் வந்தார். தனது காதலி, வேறொரு ஆணுடன் நெருக்கமாக இருப்பதை பார்த்தார்.

இதனையடுத்துதான் அந்த விபரீதம் நடந்தது. மரியா சூசைராஜும், ஜெரோமும் இணைந்து அதே ப்ளாட்டில் நீரஜ் க்ரோவரை துடிக்கத் துடிக்க வெட்டிக்கொன்றார்கள். அந்த சடலத்தின் முன்னாலேயே உறவு கொண்டார்கள். பிறகு அந்தச் சடலத்தை பகுதிப் பகுதியாக வெட்டி, பையில் அடைத்து, தூக்கிப் போட்டார்கள். பிறகு போலீஸ் உண்மையை கண்டறிந்து இருவரையும் கைது செய்தது.


மேலே சொல்லப்பட்ட உண்மைக்கதையில் ஒரே ஒரு திருத்தம்  மட்டும் , படத்தில் காதலன் தான் கொலை செய்கிறான், காதலி அதை வேடிக்கை பார்க்கிறாள், அவ்வளவு தான் வித்தியாசம்.


தேவ் டி’ படம் வழியாக புகழின் உச்சத்தில் இருக்கும் மஹி கில், இப்படத்தின் நாயகி, பார்ட்டி சுமாரான ஃபிகர் தான், ஒண்ணும் மோசம் இல்லை.




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2shKa4b_VBDKaPk_kNp2I3rcr-aFEuE_r85C2-6eUn_qjBNe-1mPnaxakW2bzXeO90TZOSqraY9769Tin7syidVXcfMhjZTH9tACcy5-9TGPSyKTn-mduKpYJ8Z8n05EIbcSHV59mmA93/s1600/Not_A_Love_Story_movie_wallpaper_5.jpg

படத்தில் இயக்குநரிடம் சில கேள்விகள்

1. தனது காதலன் ஃபோன் பண்ணும்போது ஹீரோயின் அதை அவாய்டு பண்றா... பல முறை ட்ரை செஞ்ச காதலன் உடனே ஃபிளைட் பிடிச்சு ஸ்பாட்க்கு வந்துடறான்.. ஏன் அட்டெண்ட் பண்ணலை? இப்போ மூடு அவுட் அப்புறம் கூப்பிடுங்கன்னா வேலை முடிஞ்சுதே? ( ச்சே, அநியாயமா ஒரு சீன் போச்சே?)

2. காதலன் காலிங்க்  பெல் அடிக்கும்போது ஹீரோயின் உடனே ஏன் கதவை திறக்கனும்? அவளோட பாய் ஃபிரண்ட்டை டிரஸ் பண்ணச்சொல்லி ஒளிந்து கொள்ளச் சொல்லி இருக்கலாமே? ஏன் கதவை திறக்க லேட்னு காதலன் கேட்டா குளிச்சுட்டு இருந்தேன்னு சொல்லி இருக்கலாமே? ( இனி தப்பு பண்றவங்க நோட் திஸ் ஐடியா - பை ஐடியா மன்னன் அய்யா சாமி  )

3. தன் கண் முன்னே காதலி தப்பு பண்றதை பார்த்து கோபப்பட்ட காதலன் அவனை போட்டுத்தள்ளறது ஓக்கே, ஆனா காதலியை ஒண்ணுமே செய்யலையே? அது ஏன்? நியாயமா அவ மேல தானே கோபமே வரனும்?அட, எதும் செய்யாட்டி பராவால்ல, தப்பு பண்ணுன காதலி கூட இவனும் தப்பு பண்றானே? உவ்வே!!  இதைத்தான் முள்ளை முள்ளால எடுக்கறதுன்னு சொல்வாங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

4. ஹீரோயின் கடை வீதி போய் பட்டாக்கத்தி வாங்கிட்டு வர்றா, அவ வாங்கறது ஒரு சைஸ் கத்தி.   அப்புறம் ஹீரோயினோட கேர்ள் ஃபிரண்ட் சில நாட்கள் கழிச்சு விசிட் பண்றப்ப என்ன இவ்வளவு பெரிய கத்தின்னு கேட்கறாளே அப்போ காட்றது ஒரு கத்தி. அப்புறம் போலீஸ் விசாரணை பண்றப்ப காட்றது ஒரு கத்தி. ஏன்? கண்டிநியூட்டி மிஸ்ஸிங்க்?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1BgXynq5cevtttHye4GBJnSM0al4Q-8LALwmkTCfhgBDY7wzfFo-qITZxr8syHeuXintkr7MGITqWC0mjKsjGXsg1jxUwEmvaY9tCZnX9hSVeziNM5icH19LIlUiUYXenGeMEgxtwpdA/s640/not-a-love-story-movie-stills-3.jpg

5. கொலை நடக்க, பாடியை கட் பண்ண யூஸ் பண்ண கத்தியை டிஸ் போஸ் பண்ணாம வீட்லயே யாராவது ஷோ கேஸ் மாதிரி வெச்சிருப்பாங்களா?

6. கொலை செய்யப்பட்ட ஆளோட பேண்ட் பாக்கெட்ல இருக்கற செல்ஃபோனை எடுத்து அதை அழிக்காம ஹீரோ அதை சும்மா தூக்கி வீசறாரே? அது எப்படி? யார் கைலயாவது கிடைச்சா கடைசியா கால்  யாருக்கு பண்ணுனாங்கன்னு தெரிஞ்சிடாதுங்கற பயம் இல்லையா? அதுக்கு தண்ணிக்குள்ள தூக்கிப்போட்டிருக்கலாமே?( பக்கத்துலயே ஒரு ஏரி ஓடுது. )

7. டெட் பாடியை கண்டம் துண்டமா வெட்டி கேரி பேக்ல போட்டு  அபார்ட்மெண்ட்டை விட்டு தூக்கிட்டு போறப்ப  பேடு ஸ்மெல் அடிச்சிருக்குமே? ஏன் யாருமே அதை கண்டுக்கலை? அப்படி ஸ்மெல் அடிக்காம இருக்க ஹீரோ ஏன் எந்த பர்ஃபியூமும் யூஸ் பண்ணலை?

8. கிட்டத்தட்ட 4 லிட்டர் ரத்தம் வாஸ்பேசின்ல வாஸ் பண்றப்ப வெளியாகுது.. அதை அபார்ட்மெண்ட்ல யாரும் நோட் பண்ணலையா? அது எபப்டி? 



http://3.bp.blogspot.com/_xK1yCysw9ak/TKy4F_p9LYI/AAAAAAAAQRg/cKSPToYPX1k/s1600/mahi-gill-hottest-bikini-pictures-03.jpg

9. டெட் பாடியை டிஸ்போஸ் பண்ண ஹீரோயின் ஃபிரண்ட் கிட்டே கார் வாங்கிட்டு வர்றா.. வேலை முடிஞ்சதும் கார் பேனட்டை வாஸ் பண்ணாம அப்படியே திருப்பி தர்றா. அது எப்படி? ஸ்மெல் காட்டிக்கொடுக்காதா?

10. கொலை செய்ததை நேரில் பார்த்தது தவிர ஹீரோயின் எந்த தப்பும் பண்ணலை, ஆனா என்னமோ அவ தான் கொலையாளி மாதிரி போலீஸ் ஏன் அவளை அப்படி டார்ச்சர் பண்ணுது..?

11. ஹீரோ பொறுப்பான பதவில இருக்கற ஆள், எதிர்பாராத விதமா கொலை நடந்துடுது, ஓக்கே, ஆனா அவர் என்னமோ சைக்கோ மாதிரி அப்படி நடக்க காரணம் என்ன?எதுக்கு தேவை இல்லாம ஓவர் பில்டப்பு?


12. ஹீரோயினை போலீஸ் விசாரணை பண்றப்ப ஹீரோயின் கூலிங்க் கிளாஸ் போட்டிருக்காங்க, அதெப்பிடி  அலோ பண்ணுனாங்க?
 குற்ற வாளியை விசாரணை பண்றப்ப அவன் உண்மை பேசறானா? பொய் பேசறானா? என்பதை அவன் கண்கள் தானே காட்டிக்கொடுக்கும்? விசாரணை அதிகாரி கேள்விகள் கேட்கறப்ப அவங்க முகத்தையே பார்க்காம எங்கேயே பார்த்துட்டு ஸ்டைல் பண்றாங்க, அது எப்படி?

13. பெண் கைதியை மாலை 6 மணிக்கு மேல லாக்கப்ல வெச்சிருக்கக்கூடாதுன்னு சட்டம் இருக்கறப்ப மிட் நைட்ல எப்படி விசாரண நடக்குது?எடுத்த எடுப்புலயே ஹீரோயினை போலீஸ் ஏன் அப்படி அடிக்குது?


14. ஆரம்பத்துல சினிமா சான்ஸ் தர தன் கற்பை விலை பேசும் ஆளை ஹீரோயின் கோபமா பேசி  ரிட்டர்ன் வந்துடறா, ஆனா அதே கற்பை இன்னொரு ஆளுக்கு தாரை வார்க்கறாளே? அவன் பர்சனாலிட்டி பிடிச்சுப்போனதாலா?






https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjn9VvxkM7idEhpwWYMCCiPVlspu6InvfppuDcHVlBCsALHMt50AeY2ZtSSVnR_AqkGpuYqu_Hrii5AwQzF1BoNJ42m9pn1Hde6oQJvUx_0LBn5kEAaj7p6OMUuMYgDSr1uLQTPUft31Dc/s400/Mahi+Gill2.jpg
ஹீரோவாக வருபவர் நடிப்பு ஓக்கே ரகம்.. ஹீரோயின் தனது திறமையை
 பல இடங்களில் நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஹி ஹி 

இயக்குநர் படத்தை கிட்டத்தட்ட ஒரு டாக்குமெண்ட்ரி போலவே எடுத்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம். நிஜமாகவே கொலை நடந்த அதே அபார்ட்மெண்ட்டில் ஷூட்டிங்க் நடந்தது ஒரு பிளஸ். பின்னணி  இசை இன்னும் பிரமாதப்படுத்தி இருக்கலாம்.


ஹிந்திப்படத்துக்கு விகடனில் மார்க் போடுவதில்லை

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே.

சி .பி  கமெண்ட். - க்ரைம் ஸ்டோரி ரசிகர்கள் பார்க்கலாம்.


விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு ஒரு தகவல்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi37HD9w9foeEDhKClQuNMHobr55zewyLFs3fvG2fnjr9abXam_qk-euhN29i08-7sQ6OI3AFDuHlZyNm1NcDApyZzjoa6ACQsqOfQf0wU2BA9PWawUGLbXqK1IEaMk5g9bkT-HepwSoEs/s1600/maria-susairaj-2.jpg

கொலை வழக்கிலிருந்து தப்பிய மரியா சூசைராஜை தனது படத்தில் நடிக்க வைக்க ராம் கோபால் வர்மா விருப்பம்

டிவி தொடர் தயாரிப்பாளர் நீரஜ் குரோவர் வழக்கிலிருந்து தப்பி வெளியே வந்துள்ள கன்னட நடிகை மரியா சூசைராஜை தனது அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க வைக்க விருப்பம் தெரிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா.



http://www.bestactress.info/wp-content/uploads/2011/08/Mahie-Gill-hot-cleavage-photos.jpg

பின்னர் ஜெரோமும், மரியாவும் சேர்ந்து குரோவரின் உடலை 300 துண்டுகளாக வெட்டி காட்டில் போட்டு விட்டனர்.


இந்த கொலை வழக்கில் இருவரும் கைதாகினர் ஜூலை 11 2011 இவர்களுக்கான தண்டனையை மும்பை கோர்ட் அறிவித்தது. அதில், கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஜெரோம் கொலை செய்யவில்லை. எனவே அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், தடயங்களை அழிக்க முயன்ற குற்றத்திற்காக மரியாவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் அளிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

மேலும் மரியா ஏற்கனவே 3 ஆண்டுகளை சிறையில் கழித்து விட்டதால் அவரை விடுவிக்கவும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து மரியா இன்றைக்குள் விடுதலையாகவுள்ளார்.

இந்த நிலையில் பரபரப்பு இயக்குநரான ராம் கோபால் வர்மா, மரியாவை தனது அடுத்த படத்தில் நடிக்க வைக்கப் போவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்வீட்டரில் கூறுகையில், மரியா ஒரு பிரபல நாயகியாக வர வேண்டும் என்று விரும்பினார். ஆனால் மிகப் பிரபலமான கொலையாளி என்ற பெயர்தான் அவருக்குக் கிடைத்தது. எல்லாம் சரியாக அமைந்திருந்தால் அவருக்கும் ஒரு ரங்கீலா கிடைத்திருக்கும்.

இப்போது அவர் சிறையிலிருந்து வெளியே வரும் நிலை உருவாகியுள்ளது. எனவே எனது அடுத்த படத்தில் அவரை நடிக்க வைக்க விரும்புகிறேன் என்றார்.


ஏற்கனவே குரோவர் கொலை வழக்கை அடிப்படையாக வைத்து நாட் எ லவ் ஸ்டோரி என்ற பெயரில் ஒரு படத்தை உருவாக்கியவர் வர்மா என்பது நினைவிருக்கலாம். இப்போது மரியாவை வைத்து படம் எடுக்க வர்மா தீர்மானித்திருப்பதால் மரியாவின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்குவதாக கருதப்படுகிறது.

 http://reviews.in.88db.com/images/Not-a-love-story-hot-stills/not-a-love-story-hot-still.jpg


ட்விட்டரில் அதிகம் கலாய்க்கப்படுவது தலயா? தளபதியா?


1.டியர். என்ன இவ்வளவு முடி நரைச்சிருக்கு?இள நரையா?

ச்சே ச்சே, நான் அஜித் ரசிகன்,மங்காத்தா கெட்டப்க்காக சுண்ணாம்பு தடவி இருக்கேன்

-------------------------

2. மாப்ளை என்ன பண்றாரு?

டெயிலி 10 கிமீ வாக்கிங்க் போறாரு .

சாரி ,இவரை எப்படி மாப்ளையா ஏத்துக்க?

படம் பூரா வாக்கிங்க் போறவரை ஹீரோவா ஏத்துக்கறாங்க?

----------------------------

3.லண்டன் கலவரம் பரவுகிறது  # கைதுக்குப்பயந்து அழகிரி அண்ணன் அங்கே போய்ட்டாரோ என்னவோ?

----------------------

4. ராக்கி சாவந்த் ரியாலிட்டி ஷோவில் பாபா ராம்தேவ்! # அந்த ஷோவில் ராக்கி சுடிதார் அணியாமல் சேலை அணிதால் நல்லது,பொதுநலன் கருதி வெளியிடறேன்

-----------------------

5. பிரபுதேவாவுக்காக இந்து மதத்திற்கு மாறினார் நயன்தாரா! #இப்படி எல்லாம் பொத்தாம் பொதுவா சொன்னா ஒத்துக்க மாட்டான் தமிழன்,என்ன ஜாதி?

----------------
 


6. மங்காத்தா படத்தில் நான் வில்லன் கேரக்டர் -அஜித் # அய்யய்யோ, தல.!அப்போ பிரேம்ஜிதான் ஹீரோவா? த்ரிஷா கூட டூயட் மட்டும் நீங்களா?அவ்வ்வ்

-------------------------------

7. மயக்கமருந்து கொடுத்து கொள்ளை  -கேரளா பெண் கைது # எதுக்கு மருந்தெல்லாம் கொடுத்து வேஸ்ட் பண்ணுனீங்க?ஜஸ்ட் ஸ்மைல் பண்ணுனாலே மயங்கிடமாட்டாங்க?

---------------------

8. சுட்டி உளவாளிகள் : தமிழுக்கு வரும் 4டி படம்!! #ஏகப்பட்ட 3D, திருடிகளைப்பார்த்தாச்சு,அதனால 4D படமா?

----------------------------

9. தல நமக்கு கத்துக்கொடுப்பது - வாக்கிங்க் போனா நல்லது, தளபதி நமக்கு கத்துக்கொடுப்பது பஞ்ச் டயலாக் பேசறது கெட்டது

----------------------------

10. ஓவர்பில்டப் கொடுத்து ஃபிளாப் ஆனா அது விஜய் படம்,ஓவர்கோட் போட்டு நடிச்சு கொடுத்து ஹிட் ஆனா  அது அஜித் படம்

--------------------



11. தலவலி என்பதன் ஷார்ட் ஃபார்ம் தான் தல, இளைச்ச தளபதி என்பதன் ஷார்ட் ஃபார்ம் தான் இளைய தளபதி

----------------------

12. அஜித்துக்கு காமெடி நடிப்பு வராது,விஜய்க்கு ஆக்‌ஷன் சீன்ல கூட காமெடிபீஸா தான் வருவாரு

-----------------------

13. காதலியும், கர்நாடக சங்கீதமும் ஒன்று தான் புரியாவிட்டாலும் மனதிற்கு அமைதியை தரக்கூடியது

-----------------

14. விஜய் ஆக்‌ஷன் சீன்ல ஓடிட்டே இருப்பாரு,அஜித் ஆல் சீன்ஸ்லயும் வாக்கிங்க் தான்

------------------

15.தெலுங்கானா அமைப்பதற்குஉயிர்த்தியாகம்தான் தேவை என்றால் நான் தற்கொலைக்கு தயார்- விஜயசாந்தி # வெயிட் பிளீஸ்,வேலாயுதம் இன்னும் நாட் ரிலீஸ்டு

------------------------

16. குறைவான பரப்பளவில் அதிக பட்ச எண்ணிக்கையில் கலர் பெயிண்ட்ஸ் அடிக்கப்பட்ட இடம் எது? 

டீச்சர், எனக்கு ஆன்சர் தெரியும் , ஃபிகர் முகம்!!


--------------------------------


17.நேசிப்பவர் கிடைத்து விட்டால் கண்ணீர்த்துளிகளுக்கு வேலையே இல்லை,கிடைத்ததை நேசித்து விட்டால் கண்ணீருக்கு இடமே இல்லை

-----------------



18. இறக்கத்தான் பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருப்போம்




------------------------


19. மழைத்துளிகளை எண்ணிக்கொள்.எத்தனை துளிகள் எண்ணுகிறாயோ அத்தனை அன்பு எனக்குஉன் மேல்,எத்தனை துளிகளை  மிஸ் பண்றியோ அத்தனை அன்பு உனக்கு என்மேல்


----------------------


20. அவசரப்பட்டு உங்கள் அன்புக்குரியவரிடம் குற்றம் கண்டு பிடித்து விடாதீர்கள்,  தவறு சின்னதா இருக்கலாம்,ஆனால் காயப்படும் இதயம் சின்னதல்ல


--------------------------------
 



21.எனக்கு ஒரு நல்ல வாழ்க்கைத்துணையை கொடுன்னு கடவுள்ட்ட  வேண்டிக்கிட்டேன்,என் மேரேஜ்க்குப்பிறகு எனக்கு கடவுள் நம்பிக்கையே போயிடுச்சு


-----------------------------

22.அழகு நிலையம் போய் அலங்கரித்துக்கொள்வதில் பெண்கள் போல் ஆண்கள் அதீத அக்கறை எடுத்துக்கொள்வதில்லை # நீதி 1. பர்ஸ் வீக் 2.இயற்கை அழகே போதும்

-----------------

23.நான் அவளைப்பார்த்து சிரிச்சேன், அவ என்னைப்பார்த்து சிரிச்சா, லவ் ஆச்சு,மேரேஜ் ஆச்சு,ஃபைட் ஆச்சு, இப்போ ஊரே எங்களைப்பார்த்து சிரிக்குது

--------------------------------

24. உங்க ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் ரிசர்வ்டு டைப்பாமே? 


ச்சே! ச்சே! ரிசர்வ் எல்லாம் பண்ணத்தேவை இல்லை, எப்போ வேணாலும் போய் பேசலாம்.

----------------------------

25. நண்பன் வெற்றிக்காக நண்பனில் இணையப் போகும் காஞ்சனா  ஹீரோ  ராகவா லாரன்ஸ்! # விஜய் மேல ஷங்கருக்கும் நம்பிக்கை போயிடுச்சு போல

-----------------------



26 குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பு! சம்சாரம் அது மின்சாரம், அப்போ சம்சாரம் = குப்பை?

-----------------

27. காதலியை விட்டுக்கொடுத்தா அவன் பெரும்போக்கு , காதலியை கூட்டிக்குடுத்தா அவன் பொறம்போக்கு

----------------------------

28. தெம்புக்கு இழுத்தா அது தம்மு ,வம்புக்கு இழுத்தா அது மாமன் பொண்ணு

---------------------

29 குப்பைகளில்மேயும் பன்றிகள் கூட தங்கள் குட்டிகளை பத்திரமாகப்பார்த்துக்கொள்ளும்போது மனிதன் மட்டுமே குப்பைத்தொட்டியில் குழந்தையைபோடுகிறான்


---------------------------

30 காதலித்துப்பார், உனக்கு சொர்க்கம் கிடைக்கும்.


ஓஹோ, தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துப்போயிடுவேன்னு சொல்றீங்களா?

--------------------


Pair of Wandering albatrosses , South Georgia Islands.
Pair%252520of%252520Wandering%252520albatrosses%252520in%252520mating%252520ritual%252520at%252520Albatross%252520Island%25252C%252520South%252520Georgia%252520Islands.%252520The%252520Wandering.jpg

31 மேடம், ஒரு கெஸ்ட் ரோல், சும்மா தலையை மட்டும் காட்டிட்டுப்போனா போதும்..


கவர்ச்சி நடிகை - இப்போ அப்படித்தான் சொல்வீங்க...

--------------------------

32. என் முத பையன் பிஸ்னெஸ் மேக்னெட் ஆகனும்னு MBA  படிக்கறான்

, 2வது பையன்?

அவன் MP  ஆகனும்னு எதுவுமே படிக்காம சும்மாதான் இருக்கான் #அழகிரி

--------------------------

33 தலைவரு பத்மஸ்ரீ பட்டத்துக்காக அலையறாராமே? அது கூடத்தேவலை, நடிகை பத்மா ஸ்ரீக்காகவும் அலையறாராம்

-------------------------

34.தெய்வத்திருமகள் பார்த்து விக்ரமின் காதலியாகி விட்டேன்: ஸ்ரேயா # நல்லவேளை, நீங்க சிம்பு நடிச்ச மன்மதன் படம் பார்க்கல!


-----------------------------
35. நான் தொட்டால் வெட்கத்தால் சிவக்கிறாய்,சரி, மருதாணி தொட்டாலும் சிவக்கிறாயே? தாவரமும் நானும் ஒண்ணா?

-------------------------

36. அன்புக்கணவா!காதலிக்கும்போது “உன் மேல எவனாச்சும் கைவெச்சா தொலைஞ்சான்” என்றாய்! இப்போது நீயே கால் வைத்து உதைக்கிறாயே?


--------------------------------

Monday, August 22, 2011

ஃபிகர்கள் சுடிதார்க்கு ஷால் போடாமல் இருப்பது ஏன்?ஒரு பொழப்பத்த ஆராய்ச்சி.. ஹி ஹி

1.ஒவ்வொரு ஆணுக்கும் 2 தேவதைகள் பரிச்சயம்.தன்னை கருவில் சுமந்த தாய்,தன் கருவை சுமக்கும் மனைவி


---------------------

2. ஃபிகர்கள் சுடிக்கு ஷால் போடாமல் இருப்பது பரிணாம வளர்ச்சியின் காரணமாகவா?பரிமாண வளர்ச்சிக்குறைவின் காரணமாகவா?டவுட்டு

---------------------------

3. ஒரு பெண்ணின் அன்பால் ஆகர்சிக்கப்பட்டவன் இந்த பூவுலகில் இருக்கும்போதே தேவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவன் ஆகிறான்

-----------------

4. பெண்ணின் அன்பு கிடைப்பது சிரமம், ஆனால் மாறாதது(CONSTANT)ஆணின் அன்பு கிடைப்பது எளிது,,ஆனால் அலை பாயும் தன்மையது(OSCILLATING)

-----------------

5. குடும்ப சண்டையில்  பணிந்து போவது  என்பது அடங்கிப்போவது என்ற தவறான கருத்தினால் தான் பல பிரச்சனைகள் வெடிக்கிறது

---------------



6.தன் மனைவியின் கற்பின் மீது ஆணுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும்,ஆனால் தான் தகுதியானவன் தானா?என்ற கேள்வி வாழ்நாள் முழுதும் அவனை உறுத்திக்கொண்டே இருக்கும்

---------------------

7. மென்மையான தேகம் கொண்ட பெண்கள் வன்மையான மனம் கொண்டும்,வலிமையான தேகம் கொண்ட ஆண்கள் மென்மையான மனம் கொண்டும் உலவுகிறார்கள்

--------------------

8. உன் சந்தோஷம் என்னை அடுத்த நிமிஷமே பற்றிக்கொள்கிறது,உன் சோகம் அடுத்த நொடியே தொற்றிக்கொள்கிறது

--------------------

9. மது வகைகளில் எது போதை அதிகம்? என விவாதிப்பவர்கள் மாது வகைகளை அறியாதவராக இருப்பார்கள்#பத்மினி,சித்தினி

----------------------

10. ”சாரி. டியர். 3 மணி நேரம் லேட் ஆகிடுச்சு.போர் அடிச்சுட்டு இருந்தீங்களா?”

“ ச்சே ச்சே .. பீச்ல போற வர்ற ஃபிகருங்க 863 பேரை சைட் அடிச்சேன்

---------------




11. காதல் மட்டுமே சிபாரிசு செல்லுபடியாகாத ஒரே இடம்


----------------

12. அந்த ஃபிகரோட அண்ணன் ரவுடி- பயந்தவன் சொல்வது,அந்த ரவுடியோட தங்கச்சி செம ஃபிகர்டா -துணிந்தவன் சொல்வது #பயம் அறியான்

---------------------

13. உங்கள் நேர்மைக்குப்பலன் கிடைக்கும்,ஆனால் நெடுங்காலம் காத்திருக்க வேண்டும்

-------------------

14. தற்கொலை பண்ணிக்கப்போனவரு ஆத்துல குதிச்சாரு.. அதுல இருந்த மீனை எடுத்து கரைல தூக்கிப்போட்டுட்டு சொன்னாரு,” நான்தான் சாகறேன்,நீயாவது பிழைச்சுகோ”

--------------------

15. முதுகில் குழந்தை யானை சவாரி செய்யும்போது உடலில் பாரம் ஏறும், மனதில் பாரம் இறங்கும்#மழலை விளையாட்டுக்கள்

---------------------






16. ஹீரோ சார்,உங்க ஆதரவை அந்த கட்சிக்கு தரலையே ஏன்?

என் ஆதரவு இல்லாமலேயே  தோத்துடும்னு எனக்கு தெரியும்

----------------------

17 . தலைவர் லவ் மேரேஜா?ன்னு ஏன் கேட்கறே?

நாம் யோசிக்காமல் செய்யும் எந்த ஒரு காரியமும் நம்மை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்னு ஸ்லோகன் எழுதி வெச்சிருக்காரே?

--------

18.ஆஸ்கார் விருது சிலை ஏன் மஞ்சள் கல்ர்ல இருக்கு?

கார்க்கு சிவப்பு கலர்ல பெயிண்ட் அடிக்கக்கூடாதுன்னு அமெரிக்கால சட்டம் இருக்கே?#கடி

-------

19.  20 - 20 மேட்ச் மாதிரி எக்ஸாம்ஸ் ஆனா எப்படி இருக்கும்?

ஒவ்வொரு அடிஷனல் ஷீட் வாங்கறப்பவும் சியர் அப் கேர்ள்ஸ் ஒரு டான்ஸ் ஆடுவாங்க ,ஐ ஜாலி

------------------

20.  நாளைய வெற்றியைத்தீர்மானிப்பது இன்றைய உழைப்பு

-----------------






21. நம் இதயத்தை எப்போதும் நாமே நம்ப முடியாது. ஏன் எனில் அது ”ரைட்” சைடில் இல்லை

--------------

22. சோகம் இருக்கும்போது கூட  சிரித்துக்கொண்டே இரு,. உன் சிரிப்புக்காகவாவது யாராவது உன்னை நேசிக்கக்கூடும்

-----------------


23 வாழ்க்கை என்னும் விளையாட்டை வெற்றி பெறும் எண்ணத்துடன் விளையாடு,எதையும் இழந்துவிடக்கூடாது என்ற பதட்டத்துடன் அல்ல

----------------


24 உண்மையான அன்பு கிடைக்கும்போதுதான் உன்னையே உனக்கு மிகவும் பிடித்து விடும்

---------------------

25. நதிகள் எப்போதும் எதிர்த்திசையில் பயணிப்பது இல்லை,மனிதன் தான் லட்சியங்களில் இருந்து பின் வாங்குகிறான்

------------------

Hairpin Bends In The Tunnels Climbing Toward San Boldo Pass, Treviso District, Veneto, Italy

 

26. கடின உழைப்பு என்பது படிகள் போல ,அதிர்ஷ்டம் என்பது லிஃப்ட் போல,லிஃப்ட் ரிப்பேர் ஆகும்,ஆனால் படிகள் தான் உன்னை உச்சத்துக்கு என்றும் அழைத்துச்செல்லும்

---------------


27. நோட்புக்,ஃபேஸ்புக் என்ன வித்தியாசம்?

நோட்புக்கை டீச்சர் மட்டும் தான் கரெக்ட் பண்ணலாம், ஃபேஸ்புக்ல டீச்சரையே கரெக்ட் பண்ணலாம்

------------

28. வாழ்க்கை உனக்கு பல பாடங்களை கற்றுக்கொடுக்கும்.

டீச்சர்,எனக்கு ஸ்கூல் பாடமே பிடிக்காம கட் அடிக்கற ஆள். இதுல வாழ்க்கைப்பாடம் வேறயா?

-----------


29.உருவம் அற்ற ஒன்று இந்த உலகை ஆள்கிறது என்றால் அது அன்பாக மட்டுமே இருக்க முடியும்

----------------

30.உறவு என்று சொல்லிக்கொள்ள எனக்கு யாரும் இல்லை, ஆனால் உயிர் என்று சொல்லிக்கொள்ள நீ இருக்கிறாய்

--------------------


 


31. நேரில் சிரிக்க வைப்பாள், நினைவில் அழ வைப்பாள் ,காதலி


--------------------

32. இந்த பில்டிங்க் ஒரு சாமியாரின் ஆசிரமம்னு எப்படி சொல்றே?

காம்பவுண்ட் சுவர்ல வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்னு போர்டு இருக்கே?

---------------------

33. டேய்,எங்கப்பாவுக்கு ஐ -ஜி வரை பழக்கம், என் கிட்டே வெச்சுக்காதே!

போடி லூஸூ, எங்கப்பாவுக்கு ஏ,பி,சி டி .. இஜட் வரை பழக்கம் # 26 >2

--------------------

34. காலம் ஒருவனை அறிவாளியாக மாற்றலாம், ஆனால் அன்பு மட்டுமே ஒருவனை மனிதனாக மாற்ற முடியும்

------------------
35. நீ விரும்புவதில் எது பெஸ்ட்டோ அதுக்கு ட்ரை பண்ணு, இல்லையேல் உனக்கு எது கிடைக்குதோ அதை விரும்பும் நிலைக்கு நீ தள்ளப்படுவாய்

----------------------------
nchal Actress Hot stills photos

Saturday, August 20, 2011

ஜெ சவால்- உள்ளாட்சித்தேர்தல் வரும்போது தி முக வி ஐ பிங்க எல்லாரும் உள்ளே இருப்பாங்க!

'உள்ளாட்சித் தேர்தலுக்குள் உள்ளே போடணும்!''

சீறிய ஜெ.! சிலுப்பும் அறிவாலயம்!

நில அபகரிப்புப் புகார் என்ற பெயரில் தி.மு.க-வினரைக் கைது செய்து பழி தீர்த்து வருகிறார் ஜெயலலிதா’ என்று கருணாநிதி ஒரு பக்கம் வெடித்துக்கொண்டு இருக்க... 'அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக காவல் துறையில் புகார் கொடுத்தார்கள். காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை தொடரும்...’ என்று பதில் கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா.


நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தமிழகம் முழுக்க 25 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், நில அபகரிப்புப் புகார் சிறப்புக் காவல் பிரிவும் தொடங்க உத்தரவு இட்டு இருக்கிறார்.

''உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் போது, யார் மீதெல்லாம் புகார் இருக்கிறதோ அவர்கள் அத்தனை பேரும் உள்ளே இருக்கணும்'' என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் வட்டாரம் சொல்கிறது. அதை சட்டரீதியாகத் தடுக்க முடியுமா என்று தி.மு.க-வும் சிலுப்பிக் கொண்டு தயாராகி வருகிறது!


தமிழ்நாடு முழுக்க நில அபகரிப்பு தொடர்பாக இதுவரை வந்த புகார்கள் 2,800-ஐத் தாண்டிவிட்டன. பெரும்பாலும் தி.மு.க. தொடர்புடையவர்கள் மீதுதான் குற்றச்சாட்டு. கடந்த மூன்று மாதங்களில் கைதான தி.மு.க. வி.ஐ.பி-கள் பற்றிய ஓர் அலசல் இது. போலீஸ் போட்டுள்ள எஃப்.ஐ.ஆர். அடிப்படையில் இந்த தகவல்கள் திரட்டப்பட்டன!

ஜெயலலிதா கோபமும்... வீரபாண்டியார் கைதும்... 

சேலத்தில் உள்ள பிரீமியர் ரோலர் ஃபிளவர் மில்லை மிரட்டி வாங்கியதாக அதன் உரிமையாளர் கொடுத்த புகாரில்தான், வீரபாண்டி ஆறுமுகம் மீது கொலை மிரட்டல், நிலத்தை அபகரித்தல் உட்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி சேலம் மத்தியக் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் மூன்று நாட்கள் அவரைக் கஸ்டடியில் வைத்து விசாரித்தது போலீஸ். 

அந்த சமயத்தில் வெளியில் இருந்த தி.மு.க-வினர் சிலர் பச்சை சேலை உடுத்திய ஒருவரை அசிங்கப்படுத்துவதைப்போன்று சில சம்பவங்களை அரங்கேற்றவே, கடுப்பானார் ஜெயலலிதா. தாசநாயக்கன்பட்டி பால மோகன்ராஜ் கொடுத்த நில அபகரிப்பு புகாரில் உடனடியாகக் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார் ஆறுமுகம். இன்னும் ஜாமீன் வாங்கவும் முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார்.


 ஆப்பு வைத்த அரவை மில் அதிபர்! 

பெருந்துறையைச் சேர்ந்த கடலை அரவை மில் அதிபர் ராமசாமி, ஈரோட்டைச் சேர்ந்த பாலசுப்ரமணியத்திடம் ஆறு லட்ச ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். 'அந்தக் கடனுக்காக, ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது மில்லை என்.கே.கே.பி.ராஜாவுக்குக் கொடுக்க வேண்டும் என ஈரோடு மேயரான குமார் முருகேஷ் மிரட்டினார். வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி, அந்த அரவை மில்லை அபகரித்துக்கொண்டார்கள்!’ என்பதுதான் ராமசாமியின் புகார். 

தி.மு.க. ஆட்சியில் பயந்துகொண்டு இருந்த ராமசாமி, ஆட்சி மாறியதும் போலீஸில் புகார் கொடுக்க... கொலை மிரட்டல், நில அபகரிப்பு உட்படப் பல பிரிவுகளில் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ராஜாவையும், மேயர் குமார் முருகேஷையும் நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்து கைது செய்தது ஈரோடு போலீஸ்.

கொலை மிரட்டல்.. ஆக்கிரமிப்பு.. மோசடி! 

சென்னை, நொளம்பூரில் அண்ணாமலை அவென்யூ என்ற 20 ஏக்கர் நிலத்தில் 120 குடும்பங்கள் வசித்து வந்தன. கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வான ரங்கநாதன், அவர்களை மிரட்டிக் காலி செய்யவைத்தார் என்பதுதான் புகார். பாதிக்கப்பட்ட 120 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்று கூடி ரங்கநாதன் மீது புகார் கொடுக்க, விடுமா போலீஸ்? கொலை மிரட்டல், ஆக்கிரமிப்பு, மோசடி செய்தல் என 10 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, ரங்கநாதனைத் தூக்கிவிட்டது. ரங்கநாதன் மீது ஏற்கெனவே நிலுவையில் இருந்த அத்தனை புகார்களும் தூசு தட்டப்படுகின்றன. இப்போது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார் ரங்கநாதன்.


 
குண்டர் தடுப்புச் சட்டத்தில் 'பொட்டு’ சுரேஷ்! 

மதுரை மாவட்டத்தில் உள்ள வேங்கடசமுத்திரத்தைச் சேர்ந்த பாப்பா என்ற பெண்தான் பொட்டு சுரேஷ§க்கு முதல் கொட்டு வைத்தவர். 'எனக்கு சொந்தமான ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள 5.14 ஏக்கர் நிலத்தை, வெறும் 40 லட்சத்துக்கு பொட்டு சுரேஷ§ம், மதுரை மாநகர தி.மு.க. செயலாளர் தளபதியும் சேர்ந்து மிரட்டி எழுதி வாங்கிட்டாங்க!’ என்று புகார் கொடுத்தார். விசாரணைக்கு ஆஜராகும்படி இருவருக்கும் சம்மன் அனுப்பட்டது. 

இருவரும் எஸ்.பி. ஆபீஸுக்கு வர... ஏற்கெனவே போட்டுவைத்த திட்டப்படி இருவரையும் கைது செய்தது போலீஸ். ஆடிட்டர் அமர்நாத் என்பவரின் இடத்தை அபகரித்துக்கொண்டதாக பொட்டு மீது இன்னொரு வழக்கும் பதிவானது. உடனடியாக மதுரை கலெக்டர் சகாயம், 'பொது அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடும் என்பதால், பொட்டு சுரேஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில்வைக்க உத்தரவிடுகிறேன்!’ என்று ஆணை பிறப்பிக்க... வெளியில் வர முடியாதபடி சுரேஷ§க்குக் கிடுக்கிப்பிடி போடப்பட்டது.

 மதுரை குலுங்க.. குலுங்க..! 

தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியவர் 'அட்டாக்’ பாண்டி. மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்கு நேர் எதிராக இருக்கும், சுமார்  2 கோடி மதிப்புள்ள வீடு மற்றும் கடைகளை வாடகைக்கு எடுத்துவிட்டு, ஒப்பந்த காலம் முடிந்த பிறகும்கூட, அதைக் காலி செய்யாமல் ஆக்கிரமித்துக்கொண்டு மிரட்டு வதாகத்தான் 'அட்டாக்’ மீது புகார். 

இதேபோல கல்பனா என்ற பெண்ணும், வாடகைக்கு விட்ட தன்னுடைய வீட்டை 'அட்டாக்’ பாண்டி திருப்பித் தராமல் மிரட்டுவதாகப் புகார் கொடுக்கவே, நில ஆக்கிரமிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளைப் போட்டு அமுக்கிவிட்டது போலீஸ். வீடு, கடைகளை அபகரித்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்ததாக, தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினரான மதுரை வி.கே.குருசாமி மீதும் புகார்கள் எழுந்தன. ஏற்கெனவே சில வழக்குகள் அவர் மீது இருக்கவே, குருசாமியையும் குண்டர் தடுப்புச் சட்டத்திலேயே கைது செய்துவிட்டது போலீஸ்.

திருமங்கலத்தை சேர்ந்த சிவனான்டி என்பவர், தன்னுடைய நிலத்தை எஸ்ஸார் கோபி அபகரித்துக்கொண்டதாக புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர் பாண்டியராஜனை காரை ஏற்றிக் கொலை செய்ததாக அதிரவைக்கும் வழக்கு என அடுத்தடுத்த புகார்களால் கோபியின் தலையும் உருள ஆரம்பித்தது. நில அபகரிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தி.மு.க-வின் தலைமை செயற்குழு உறுப்பினரான கோபியை உள்ளே தள்ளிவிட்டது போலீஸ்.

 சேப்பாக்கம் டு திருப்பூர் 

உடுமலை சீனிவாசனுக்குச் சொந்தமான ஜியான் பேப்பர் மில்லை மிரட்டி எழுதி வாங்கியதாக சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மீது புகார். இந்த வழக்கில் சன் டி.வி. சக்சேனா, அய்யப்பனும் சிக்க... எட்டுப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த அன்பழகனை எழுப்பிக் கைது செய்து, திருப்பூருக்குப் பறந்தது, போலீஸ். கண்டிஷன் பெயிலில் வெளியில் வந்த அன்பழகன், திருப்பூ ரில் தங்கி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வருகிறார்.

 நகராட்சித் தலைவர்களும் உள்ளே... 

குளுகுளுப் பிரதேசமான கொடைக்கானல் நகராட்சித் தலைவராக இருப்பவர், தி.மு.க-வைச் சேர்ந்த முகமது இப்ராஹிம். இவர் மீதும் பண்ணை வீடு ஆக்கிரமிப்பு புகார். கொடைக்கானலில் ஜான் ரோஷன் என்பவர், 'எங்களுக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் பண்ணை வீட்டை இடிச்சிட்டு அபகரிச்சுட்டாங்க. திண்டுக்கல்லைச் சேர்ந்த தொழிலதிபருடன் சேர்ந்து முகமது இப்ராஹிம்தான் இதைச் செய்தார்.’ எனப் புகார் கொடுக்க... அதிரடி ஆக்ஷன்தான்.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை நகராட்சித் தலைவரான கிருஷ்ணமூர்த்தி, தனது வீட்டின் பேரில் கட்டுமானப் பணிகளுக்காக  45 லட்சம் கடன் வாங்கினார். கடனைத் திருப்பி கேட்டு வங்கியில் இருந்து பல முறை நோட்டீஸ் அனுப்பியும் கிருஷ்ணமூர்த்தி கண்டுகொள்ளவே இல்லையாம். கடனைக் கேட்கப் போன வங்கி அதிகாரிகளையும் கிருஷ்ணமூர்த்தி மிரட்டவே, அவர்கள் போலீஸில் புகார் கொடுக்க... அப்புறம் என்ன? ஜெயில்தான்!

 கரூரைச் சேர்ந்த மறைந்த முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ-வான வாசுகியின் கணவர் முருகேசன், தம்பி ரவிக்குமார் இருவரும் நில அபகரிப்பு வழக்கில் கைதாகி இருக்கிறார்கள். தளவாய்பாளையத்தைச் சேர்ந்த பார்வதி என்பவருக்கு சொந்தமான நிலத்தை கிரயம் செய்துகொண்டு, பணம் கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுப்பதாக இவர்கள் இருவர் மீதும் புகார் கொடுக்கப்பட்டது.

திருப்பூர் அருகே முருகம்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் கொடுத்த நில அபகரிப்பு புகாரின் பேரில் பொங்கலூர் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ-வான மணி கைது செய்யப்பட்டதுதான் லேட்டஸ்ட்.

திருச்சி மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளரான குடமுருட்டி சேகர், காரில் கஞ்சா கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கம்பி எண்ணுகிறார். 

கடைகளைச் சேதப்படுத்தியது, பள்ளி மாணவன் விபத்தில் இறந்து போனதற்குக் காரணம் எனப் பல்வேறு வழக்குகள் கலைவாணன் மீது பாய்ந்து இருக்கிறது. முன்னாள் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன், கொலை முயற்சி வழக்கில் சிக்கியிருக்கிறார். தி.மு.க. நகரச் செயலாளரை கொலை செய்யத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து, கைது செய்திருக்கிறது போலீஸ்.

''இத்தோடு முடியவில்லை... இன்னும் நிறை யவே இருக்கு. பார்க்கத்தானே போறீங்க..'' என்று கண் சிமிட்டிச் சிரிக்கிறார் காவல்துறை உயரதி காரி ஒருவர். தி.மு.க.வினர் வயிற்றில் இவை புளியைக் கரைக்க ஆரம்பித்துள்ளது!

thanx - ju.vikatan