Sunday, August 29, 2010

கேனை டிவி வழங்கும் கெக்கெக்கே பிக்கெக்கே விருதுகள்

1. இந்த வாரத்தின் சிறந்த  பிழைக்கத்தெரியாத பிலோமினா விருது மெக்சிகோ அழகி ஜிமேனா நவ்ரத்தேவுக்கு,பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது மற்ற அழகிகள் போல் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாமல்,அமைதியாக விருதை வாங்கியமைக்காக.

2.இந்த வாரத்தின் சிறந்த கூச்ச நாச்சமே இல்லாத கூத்தாண்டப்பெருமாள் விருதும்,யார் என்ன நினைச்சாலும் பரவாயில்லை என களம் இறங்கி (!?)
3 ஆம் திருமணம் செய்த டோண்ட் கேர் டோண்டு ராகவன் விருதும் சசிதரூருக்கு.

3.இந்த வாரத்தின் சிறந்தகேள்வியின் நாயகன் விருதும்,லாஜிக் லிங்கேசன் விருதும் கலைஞருக்கு,ரஜினியின் மகள்,மருமகன் சினிமாவுக்கு வரலாம்,என் வாரிசுகள் சினிமாவுக்கோ,அரசியலுக்கோ வரக்கூடாதா? எனக் கேட்டமைக்காக.

4.இந்த வாரத்தின் சிறந்த கள்ள நோட்டு கண்காணிப்பு ஸ்பெஷல் ஆஃபீசர் விருது திருப்பூர் ஐ சி ஐ சி ஐ  பேங்க் மேனேஜர் (டேமேஜர்?!)திரு பிரதீப் சாமியப்பனுக்கு,316 கள்ள நோட்டுகள் பேங்க்கில் கண்டுபிடிக்கப்பட்டபோது,இவை எப்படி வந்தது என்றே தெரியவில்லை என பொறுப்போடு பதில் சொன்னமைக்காக.

5. இந்த வாரத்தின் சிறந்தகவுண்ட்டவுன் கண்ணாயிரம் விருது தினமலருக்கு,திருச்சியில் நடந்த அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் 6 நிமிடத்தில்
37 முறை தொண்டர்கள் அம்மா என அழைத்ததை பொறுப்பாக எண்ணி அதை ஒரு பக்க கட்டுரையாக போட்டதற்கு.
6. இந்த வாரத்தின் சிறந்தஜெராக்ஸ் காப்பி ஜெகதீசன்ஸ் விருது ஆந்த்ரா நீதிபதிகள் 6 பேருக்கு,நீதிபதிகளுக்கான பிரமோசன் தேர்வில் பிட் அடித்து மாட்டிக்கொண்டதற்காக.

7.இந்த வாரத்தின் சிறந்த இண்டீசண்ட் இன்பராஜ் விருது புழல் பட இயக்குநர் அழகுக்கு,படத்தின் விளம்பர டிசைனில் மிக மோசமாக ஆண்களை சித்தரித்தமைக்காக.

8.இந்த வாரத்தின் சிறந்த கிழக்குசீமையிலே கிலாக்கா விருது சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு,தன்மானத்தம்பி விருது முத்துசாமிக்கு. ரக்‌ஷாபந்தன் விழாவில் பழைய பகை மறந்து இருவரும் ராக்கி கட்டி அண்ணன் தங்கை ஆனதற்கு.

9. இந்த வாரத்தின் சிறந்த நஷ்ட ஈடு நாதமுனி விருது கோல்ஃப் விளையாட்டு வீரர் டைகர் உட்சனுக்கு ரூ 3169 கோடி நஷ்ட ஈடாக மனைவிக்கு கொடுக்க நேர்ந்தமைக்கு.இந்த வாரத்தின் சிறந்த பம்ப்பர் லாட்டரி பரிமளா விருது அவரது மனைவி எலின் நர்திகிரன் அவர்களுக்கு.

10.இந்த வாரத்தின் சிறந்த ஒன்னும் தெரியாத பாப்பா விருது அருணாச்சலபிரதேசத்தின்  முன்னாள் முதல்வர் ஜியாங் அபாங் அவர்களுக்கு,பொது விநியோகத்தில் ரூ 1000 கோடி ஊழல் நடந்ததை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்ட பின்னும் எப்படி நடந்தது என்பதே எனக்குத்தெரியாது என சொன்னதற்காக.

11. இந்த வாரத்தின் சிறந்த சமாளிஃபிகேசன் சங்கடராஜ் விருது கலைஞருக்கு,திருச்சியில் ஜெ கூட்டிய கூட்டம் பணம் கொடுத்து கூட்டப்பட்ட கூட்டம்,தானாக கூடிய கூட்டம் இல்லை என சமாளித்ததற்காக.

12. இந்த வாரத்தின் சிறந்த பங்சுவாலிட்டி பரமசிவம் விருது மீண்டும் சசிதரூருக்கு,ஹனிமூனுக்கு கிளம்புகையில் 30 நிமிடம் தாமதமாக
கிளம்பியதற்காக விமானம் தரை இறங்கியதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை லெஃப்ட் & ரைட் வாங்கியமைக்காக.

13.  இந்த வாரத்தின் சிறந்த  ஒண்டிக்கு ஒண்டி சண்டி ராணி விருதும்,காலக்கொடுமையால்  காவியத்தலைவி ஆன (?!) காவ்யா விருது நடிகை குஷ்பூவுக்கு, யாருக்கு கூட்டம் அதிகமாகக்கூடுகிறது பார்ப்போமா? என ஜெவுக்கு சவால் விட்டமைக்காக.