Friday, July 30, 2010

குமுதம் ஷாக்--ஞாநி வெளியிட்ட கடிதங்கள்-பரபரப்பு-


இந்த வாரக் குமுதம் இதழில் ஏன்  ‘ஓ’ பக்கங்கள் இல்லை
என்று கேட்டு பல வாசகர்களிடமிருந்து எனக்குத் தொலைபேசி,
மின்னஞ்சல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இனி வரும் குமுதம் இதழ்களிலும் ‘ஓ’பக்கங்கள் வெளி வரா.
காரணத்தை அறிய இந்த இரண்டு கடிதங்களைப் படியுங்கள்.


கடிதம் 1 :


அன்புக்குரிய டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அவர்களுக்கு


வணக்கம்.


சென்ற வாரம் குமுதம் ஆசிரியர் திரு ப்ரியா கல்யாணராமனுக்கு அனுப்பிய என்
மின்னஞ்சல் கடிதத்தினைக் கீழே தருகிறேன். ஏற்கனவே அதை உங்கள் பார்வைக்கு
வைக்கும்படி அவரிடம் சொல்லியிருந்தேன்.


இந்த வாரமும் நிலையில் மாற்றம் ஏதுமில்லை. இந்த வாரக் கட்டுரையில் சவுக்கு இணைய
தளம் பற்றிய சில பகுதிகளுக்கு நம்மிடம் ஆதாரம் இல்லாத நிலையில் அவற்றை வெளியிட
இயலாது என்று நீங்கள் கூறியதாக ஆசிரியர் குழுவிலிருந்து டாக்டர் திரு மணிகண்டன்
இன்று மாலை என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார். இது எனக்கு உடன்பாடானதல்ல.
குமுதத்தில் வெளிவரும் எல்லாமே ( அரசியல், சினிமா கிசு கிசு செய்திகள் உட்பட)
தங்கள் வசம் ஆதாரங்கள் இருப்பதால்தான் வெளிவருகின்றன என்று இப்போது அறிவது
எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.


என் கட்டுரையில் சவுக்கு இணையதளத்தில் சில முக்கியமானவர்களைப் பற்றி
குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்றுதான் நான் எழுதியிருக்கிறேனே தவிர,
அந்த காவல் அதிகாரிகள், பத்திரிகையாளர் யார் பெயரையும் நான் குறிப்பிடவில்லை.
அந்த இணையதளம் ஒளிநகல்களை வெளியிட்டுள்ளது என்று குறிப்பிட்டபோதும் நான்
பெயர்களைக் குறிப்பிடவில்லை. அந்த செய்திகள் எல்லாம் உண்மையாக
இருக்கும்பட்சத்தில் நம் கவலைக்குரியவை என்றே நான் எழுதியிருக்கிறேன். அந்த
இணையதளத்தின் மொழி நடை எனக்கு உடன்பாடானதல்ல என்றும் குறிப்பிட்டிருக்கிறேன்.
இதை விடப் பொறுப்பாக ஒரு விமர்சகன் எழுத முடியாது.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் தொடர்ந்து நான் என்  ‘ஓ’ பக்கங்களை குமுதம் இதழில்
எழுத விரும்பவில்லை. எந்த முன் தணிக்கையும் இல்லாமல், என் கருத்துச்
சுதந்திரத்துக்கு மதிப்பளித்து நான் எழுதியவற்றை நீக்காமல், மாற்றாமல்,
முழுமையாக வெளியிடும் சூழலில் மட்டுமே என்னால் எழுத முடியும். தங்கள் இதழின்
தேவைகளுக்காக என் 35 ஆண்டு கால வாழ்க்கை, தொழில் நெறிகளில் நான் சமரசம்
செய்துகொள்ள இயலாது.


இப்போது தங்களிடம் இருக்கும் என் கட்டுரையை முழுமையாக வெளியிட இயலாதென்றால்,
அதில் எந்தப் பகுதியையும் வெளியிடவேண்டாம்.


”குமுதத்தின் எடிட்டோரியல் பாலிசியுடன் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டினால் ஞாநி
இனி குமுதத்தில்  ‘ஓ’ பக்கங்களை எழுத இயலாது என்று தெரிவித்திருக்கிறார்.” என்ற
அறிவிப்பை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


கடந்த சுமார் மூன்று ஆண்டுகளாக என் பத்தியை வெளியிட்டு லட்சக் கணக்கான
வாசகர்களிடம் என் கருத்துகளை கொண்டு சேர்த்தமைக்காக உங்களுக்கும் இதழின்
ஆசிரியர் குழுவினருக்கும் என் நன்றி.


பிரிவோம். சந்திப்போம்.
அன்புடன்
ஞாநி
26 ஜூலை 2010
மாலை 6.30 மணி
-----------------------


-----
கடிதம் 2:


*திரு ப்ரியா கல்யாணராமனுக்கு ஜூலை 17,2010 காலை 11.35 க்கு அனுப்பிய
மின்னஞ்சல் விவரம்: *


அன்புள்ள ஆசிரியர் திரு ப்ரியா கல்யாணராமன் அவர்களுக்கு


வணக்கம்


தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக என் ஓ பக்கங்கள் கட்டுரையில் தங்கள்
அலுவலகத்தின் குறுக்கீடு என் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுவதாக
அமைந்துள்ளது.  தி.மு.க, ஆட்சி, அதன் தலைவர், அவரது குடும்பத்தினர் சார்ந்த
பொது வாழ்க்கை விஷயங்கள் பற்றியெல்லாம் விமர்சனங்கள் செய்யவேண்டாம் என்று
வேண்டுகோள் தொடர்ந்து என்னிடம் வைக்கப்பட்டது.ஓரிரு வாரங்களில் நிலைமை
சரியாகிவிடும் என்று சொல்லி என்னை சமாதானப்படுத்தி வந்தீர்கள். மூன்று
மாதங்களாகியும் நிலைமை அவ்வாறே உள்ளது.


இன்றும் என் கட்டுரையில் காமராஜர் நினைவிடத்தில் அணையாவிளக்கு வைப்பதாக
முதல்வர் அறிவித்தது பற்றி நான் எழுதிய விமர்சனம் நீக்கப்படுவதாக்
தெரிவித்திருக்கிறீர்கள். இது எனக்கு உடன்பாடானதல்ல.


எனவே முழு சுதந்திரத்துடன் எழுதும் வாய்ப்பில்லையென்றால் நான் குமுதத்தில்  ‘ஓ’
பக்கங்களைத் தொடர்ந்து எழுத விரும்பவில்லை. இப்போது தங்களிடம் இருக்கும் என்
கட்டுரையையும் முழுமையாக வெளியிட இயலாதென்றால், அதில் எந்தப் பகுதியையும்
வெளியிடவேண்டாம்.


”குமுதத்தின் எடிட்டோரியல் பாலிசியுடன் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டினால் ஞாநி
இனி குமுதத்தில் ஓ பக்கங்களை எழுத இயலாது என்று தெரிவித்திருக்கிறார்.” என்ற
அறிவிப்பை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


இதுவரை எனக்கு நீங்களும் உங்கள் அலுவலக நண்பர்களும் அளித்துவந்த ஆதரவுக்கும்
ஒத்துழைப்புக்கும் என் நன்றி.


அன்புடன்
ஞாநி
-------------
 

Thursday, July 29, 2010

ஓ பக்கங்கள் ஞானிக்கு குமுதத்தில் கல்தா ஏன்?

ஆனந்த விகடன் இதழில் சில காலம் அரசியல் சாட்டையடிகளை நிகழ்த்தி,வாசகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றவர் ஞானி.
பிறகு ஆனந்த விகடன் இதழின் ஆசிரியருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அங்கே இருந்து வெளியேறினார்.
அண்ணன் எப்போ எந்திரிப்பாரு,திண்ணை எப்போ காலியாகும் என்று எதிர்பார்த்திருந்த குமுதம் அப்படியே அவரை தன்னகத்தே இழுத்துக்கொண்டது.
தொடர்ந்து 3 வருடங்களாக காரசாரமாக குட்டு.திட்டு,ஷொட்டு என அரசியல் உலகை விமர்சித்தவர் சில வாரங்களாக உருளைக்கிழங்கு சாப்பிடுவதாலேற்படும் நன்மைகள்,வாக்கிங் போனால்.. என்பது மாதிரி மருத்துவக்குறிப்புகள் எழுத ஆரம்பித்தார்.
அப்போதே வாசகர்கள் சந்தேகப்பட்டனர்.ஏதோ உள் குத்து நடக்கிறது என்று.
பதிவர் சவுக்கு கைதுக்கு முன் அந்த பிளாக்கில் தரப்பட்ட சில விஷயங்களை
குமுதத்தில் பகிர முற்பட்ட ஞானியை பிரியாகல்யாணராமன் அழைத்து ஆளுங்கட்சிக்கு எதிராகவோ,கலைஞர் குடும்பத்தை தாக்கியோ இனி எழுத வேண்டாம் என நிபந்தனை விதித்திருக்கிறார்.
வெகுண்டு எழுந்த ஞானி வெளியேறி விட்டார்.ஆனால் குமுதத்தில் அதை பற்றி எந்த அறிவுப்பும் இல்லை.

ராகுல்காந்தி கலைஞருக்கு வைத்த முதல் செக்

கோவை செம்மொழி மாநாடு நடத்தி காங்கிரசை வியக்க வைத்து கூட்டணிக்கு மாற்று யோசனை இல்லாமல் பண்ண வேண்டும் என கலைஞர் நினைத்தார்.ஆனால் ஜெ அதிரடியாக அதே கோவையில் அதே அளவு கூட்டத்தை கூட்டி தி.மு.க வின் வயிற்றில் புளியை கரைத்தார்.
பதிபக்தி இல்லாதவர் என ஜெ சோனியாவை விமர்சித்ததை காங்கிரசார் மறந்துவிடக்கூடாது என கலைஞர் புலம்பும் அளவுக்கு ஜெவின் கோவைக்கூட்டம் அபரிதமான பாதிப்பை ஏற்படுத்தியது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ராகுல் ஒரு புதிய முடிவை எடுத்திருக்கிறார்.
கவர்னரை மாற்றுவது என.தேர்தல் சமயத்தில் தி.மு.க கள்ள ஓட்டு தில்லுமுல்லுகள் செய்துவிடக்கூடாது எனும் நோக்கத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே 2 முறை அதிகாரப்பூர்வமாகவும்,ஒரு முறை ரகசிய விசிட்டாகவும் ராகுல் தமிழகத்துக்கு வந்தபோது மரியாதை நிமித்தமாகக்கூட கலைஞரை சந்திக்காமல் சென்றது பரப்ரப்பாக பேசப்பட்டது.கலைஞரை,அவர் கூட்டணியை அவர் விரும்பவில்லை என கூறப்படுகிறது.விஜய் தானாக முன் வந்து இளைஞர் காங்கிரசில் இணைவதாக சொன்னபோது கூட அவர் மறுத்தது
தமிழகத்தில் அவர் தனித்து கோலோச்ச விரும்புகிறார் என்றே நினைக்க வைக்கிறது.
விஜய்காந்துக்கு 12% ஓட்டு பரவலாக தமிழகம் முழுக்க அனைத்து தொகுதிகளிலும் இருப்பது அவர் கவனத்துக்குகொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே ராகுல் விஜய்காந்த் கூடவோ ஜெ கூடவோ ,அல்லது இருவருடனும் ஒரே கூட்டணி ஏற்படுத்த விரும்புகிறார் என்றே அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது்
ஜூனியர் விகடனில் வெளியான “அரசியல் எனக்கு சலித்து விட்ட்து,ஆளை விடுங்க” என கலைஞர் சலித்துகொண்டது ராகுலின் இந்த கவர்னர் மாற்றம் ஐடியாவின் அடிப்படையில் தான்.
கூட்டணியை தொடர விரும்புவர்கள் ஏன் கவர்னரை மாற்ற வேண்டும் என கலைஞர் அன்பழகனிடம் புலம்பியதாகதெரிகிறது.
ஆ.ராசாவின் அபாரமான ஊழலும் ராகுலின் அதிருப்திக்கு ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.எது எப்படியோ தமிழக அரசியல் வானில் ஒரு பெரிய மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.யார் வந்தாலும் தமிழனின் த்லை எழுத்து மாறப்போவதில்லை.

Wednesday, July 28, 2010

குமுதம் மீது ஜெ தொண்டர்கள் ஆத்திரம்

4.8.10 தேதி இட்ட குமுதம் வார இதழில் தமிழருவி மணியன் பேட்டி இடம் பெற்றது.அதில் குமுதம் கேட்ட கேள்விகளுக்கு சற்று காரசாரமாகவே பதில் அளித்து இருந்தார்.
காங்கிரஸ் தனித்து போட்டி இடுமா?காமராஜர் ஆட்சி கனவு என்னாச்சு ?போன்ற கேள்விகளுக்கு அவருக்கெ உரித்த நடையில் பதிலளித்து இருந்தார்.பேட்டி திடீரென திசை திரும்பியது.ஜெ பற்றி உங்கள் கருத்து என்ன என கேட்ட போது அவர் நிதானம் தவறி ,வார்த்தையை விட்டார்.
எதிர்க்கட்சிக்கான எந்த தகுதியும் இல்லாதவர் ஜெயலலிதா.அவ்ர் ஒரு நடிகை.ஒரு ஷாட்டுக்கும் ,அடுத்த ஷாட்டுக்கும் இடையே கிடைக்கும் கேப்பில்,கேரவுனுக்குள் போய் ரெஸ்ட் எடுக்கும் நடிகை போல் ஜெ
ஆட்சியில் சுகமாக இருப்பார்.ஆட்சி முடிந்ததும் கொட நாட்டுக்கு போய் விடுவார்,பிறகு தேர்தல் ஷாட் ரெடி என்றதும் பிரச்சாரத்துக்கு வருவார்
கேரவுனில் உட்கார்ந்து ஓய்வு எடுக்கும் நடிகைக்கும்,ஜெ வுக்கும் பெரிய வித்யாசம் ஏதும் கிடையாது  என்று பேட்டியில் தெரிவித்தார்.

28.7.10 அன்று வெளியான குமுதத்தில் இந்த பேட்டி வெளியானது அ.தி.மு.க தொண்டர்களுக்கு அன்று இரவே தெரிய வந்தது.ஆங்காங்கே போராட்டம் வெடித்துள்ளது.ஏற்கனவே குமுதம் நிர்வாகத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.ஒரு முறை கே.பாலச்சந்தர்-குஷ்பு கல்யாணம் என ஏப்ரல் ஃபூல் நிகழ்ச்சி நடத்தி வாசகர்களிடம் நன்கு வாங்கிக்கட்டிக்கொண்டது.
இந்தப்பிரச்சனையால் அவருக்கும்,அவரது இல்லத்திற்கும் பாதுகாப்பு வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.பொதுவாக தமிழருவி மணியன்அழகான தமிழ் நடைக்கும்.பிரவாகமான பேச்சாற்றலுக்கும் பெயர் போனவர்,சிறந்த பேச்சாளர்.யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் ஏதோ ஒரு ஆவேசத்தில் அவர் அளித்த பேட்டி இப்பொது அவருக்கே எதிரி ஆகிப்போனது.