Saturday, July 27, 2013

சொன்னா புரியாது - சினிமா விமர்சனம்

 

 
 மாதவன் ஜோதிகா ஜோடி நடிச்ச டும் டும் டும் படக்கதை முன் பாதி பூரா , இடைவேளைக்குப்பின் கொஞ்சம் ஹேங்க் ஓவர் ஹாலிவுட் படத்தில் இருந்து கொஞ்சம் உருவி க்ளைமாக்ஸில் சொந்தச்சரக்கு 2 ரீல் சேர்த்தால் ஒரு புது படம் தயார்


மேரேஜ் பண்ணிக்கிட்டா டெய்லி ஒரே வீட்டுச்சாப்பாடு தான் சாப்பிடனும் , மேரேஜ் பண்ணலைன்னா டெய்லி விதம் விதமா வெளீல சாப்பிடலாம் , யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க என்ற நல்ல கொள்கை உள்ளவன் ஹீரோ . இவன் தண்ணி அடிப்பான் , பொண்ணுங்களோட சுத்துவான், ஆனா தமிழ் சினிமா பாரம்பரியப்படி நல்லவன்


இப்படிபட்ட  ஆளுக்கு அவனை மாதிரியே  மேரேஜ் பண்ணிக்க பிடிக்காத சரக்கு அடிக்கும் சந்திரிகா வை  எதேச்சையா பொண்ணு பார்க்கறாங்க , 2 குடும்பமும் சேர்ந்து  ஏற்பாடு செய்யும் அந்த மேரேஜை எப்படி 2 பேரும் சேர்ந்து தடுக்கறாங்க? பின் எப்படி அவங்க 2 பேரும் லவ்வறாங்க என்பதை எவ்வளவு நிதானமா கதை சொல்ல முடியுமோ அவ்வளவு நிதானமா சொல்றாங்க . உஷ் அப்பா ஜவ்வுன்னா ஜவ்வு அப்டி ஒரு ஜவ்வு


சிவாவுக்கு ஓப்பன்பிங்க்லயே ஒண்னே ஒண்ணு சொல்லிக்கறேன். கே பாக்யராஜோ , எஸ் வி சேகரோ , கமலோ அவர் கிடையாது . எல்லா சீன்லயும் தானே டாமினேட் பண்ணனும் , எல்லாரையும் மட்டம் தட்டி தான் கை தட்டல் வாங்கிக்கனும் என்ற எண்ணத்தை மாத்திக்கனும். 10 சீன்ல அப்டின்னா பரவாயில்லை , சீனுக்கு சீன் அப்டின்னா?



 மத்தபடி அவர் டைமிங்க் விட் , எல்லாரையும், கலாய்க்கும் ஹியூமர் சென்ஸ் , சோக சீன்களில் கூட காமெடி பண்ணுவது எல்லாம் ஓக்கே . காமெடி நடிகர்னா முகத்தில் கொஞ்சமாவது எக்ஸ்பிரஷன் காட்டனும் , நாகேஷ் , வடிவேல் இதுக்கு நல்ல உதாரணம், அதே போல் பாடி லேங்குவேஜ் க்கு கவுண்டமணி , செந்தில் நல்ல உதாரணம் . சிவாவுக்கு  இந்த 2ம் வர்லை . டெவலப் பண்ணிக்கனும் , நல்லா வருவார் 


ஹீரோயின் வசுந்த்ரா .சூரியகாந்திப்பூவை நல்லெண்னெய் பாட்டில்ல போட்டு வெச்ச மாதிரி அவ்வளவு தெளிவு அவர் முகம் . பீட்ரூட்டை வெய்யில்ல காய வெச்சது மாதிரி  ஒரு இளஞ்சிவப்பு உதடு , மயில் தோகைல  ஐ டெக்ஸ் மை தடவிய மாதிரி ஒரிஜினல் கூந்தல் ( இழுத்துப்பார்த்தியா? ) ஆஹா . இவர் தமிழ் சினிமாவில் நல்லா வளர வாய்ப்பு  இருக்கு. இன்னும் காம்ப்ளான் , பூஸ்ட் எல்லாம் சாப்பிட்டா அபாரமா வளர்ச்சி வரலாம் .இப்போதைக்கு இது போதும்

 இவருக்கு  நடிக்க ஏகப்பட்ட வாய்ப்பு . குஷ்பூ எப்படி தி முக கட்சியை தன் வளர்ச்சிக்கு பயன் படுத்திக்கிட்டாரோ அதே போல் மிகச்சிறப்பா நடிச்சிருக்கார் . பின் பாதியில்  ஹீரோ மேல் காதல் வந்ததும் அவர் முகத்தில் வரும் வெட்கம் குங்குமப்பூ சிவப்பு , லவ்வை சொல்லலாமா? வேணாமா? என பரிதவிப்பது அபாரம் 


மனோபாலா  காமெடியில் பாஸ் மார்க் வாங்குகிறார் , ஹீரோவின் அம்மாவாக  வருபவர் நல்ல குணச்சித்திர நடிப்பு 




 




இயக்குநர்  பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஆர் பார்த்திபன் கவுண்டமணி நடிச்ச வீ ஆர் நாட் டாட்டா பிர்லா மாதிரி ஜேம்ஸ் பாண்ட் டைப்  காமெடி ஆக்‌ஷன் படம் போல் ஒரு போஸ்டர் டிசைனை உருவாக்கியது 



2. பத்திரிக்கை, டி வி , மீடியா பேட்டிகளீல் இது டும் டும் டும் படத்தின் அப்பட்டமான தழுவல் என்பதை மூச்சு விடாதது 

3. ஹோம்லியான ஃபிகரை ஹீரோயின் ஆக்கியது .தேவையான இடங்களில் அவரை ஸ்லோமோஷனில் ஓட விட்டு , குதிக்க விட்டு  கேமரா மேனை  மொட்டை மாடிக்கு அனுப்பி சரியான கோணத்தில் படம் ஆக்கியது ( 6 சீன் ) 


4. ஹீரோ சிவாவின் டைமிங்க் விட் , காமெடி சென்ஸ் , ஹீரோயினின் முக வசீகரம் அழகான நடிப்பு 


5. உங்களுக்கு எல்லாம் எத்தனை தடவை சொன்னாலும் புரியாது , படத்தை பார்த்தாதான் பட்டுத்தெளிவீங்க என்னும் அர்த்தம் வரும் விதத்தில் டைட்டில் வைத்தது



6. மேரேஜை வலியனா நிறுத்த ஹீரோவுக்கு அந்த இடத்தில் அடிபட்டு பல்பு ஃபியூஸ் போன விதத்தை காமெடியாக்கி அடிக்கடி அது போல் சீன் வைத்தது சபாஷ் , ஆடியன்ஸ் செம ரசிப்பு 


 



இயக்குநரிடம் சில கேள்விகள்  


1. மேரேஜ்க்கு பெண் பார்க்க மாப்ளை வீட்டுக்காரர் வரும்போது பாரம்பரியம் மிக்க பண்பாடு மிக்க குடும்பப்பெண்ணாக வருபவர் ஸ்லீவ் லெஸ் ட்ரான்ஸ்பெரண்ட் ஜாக்கெட் தான் போட்டுட்டு வருவாரா?லோ ஹிப் வேற . தர்ம தரிசன தேவியா அவரு? 


2. படத்தில் ஹீரோயின் யார் கிட்டே பை பை சீ யூ  சொன்னாலும் இடது கையால தான் சொல்றார். அதுதான் நாகரீகமா? 


3. ஹீரோயின் மஞ்சள் பூசி மங்களகரமாக இருக்க வேண்டாம் , அட்லீஸ்ட் குங்குமப்பொட்டு வைத்தாவது நீட்டாக இருக்க வேண்டாமா? ஒரு சீனில் கூட அப்டி இல்லை , ஆல் ஸ்டிக்கர் பொட்டுதான் ( மாடர்ன் கேர்ள்ஸ்ன்னா பெண் பார்க்கும் படலத்தில் கூட அப்டி இருக்கக்கூடாதா? 


4. பொண்ணு சரக்கு அடிக்குது , எல்லாம் பண்ணுது , ஆனா  பாய் ஃபிரண்ட்ஸ் கூட டேட்டிங் போகுதா? இல்லையா? என்பதில் தெளிவு இல்லை 


5. அதே போல் ஓப்பனிங்க்கில் ஹீரோ கோகுலத்தில் சீதை கார்த்திக் மாதிரி கில்மா மன்னர் என காட்டி விட்டு தொபுக்கடீர் என்று அவருக்கு எல்லாம் ஜஸ்ட் கேர்ள் ஃபிரண்ட்ஸ் தான் என பம்முவது 

 
6. ஹேங்க் ஓவர் காப்பி சீன்கள் படத்துக்குத்தேவை இல்லை . இடைவேளை ட்விஸ்ட்டுக்கு வலியத்திணிக்கத்தேவை இல்லை . இன்னொரு முக்கிய பாயிண்ட் , திரைகக்தையில்  தேவை இல்லாமல் ஒரு காமெடி படத்துக்கு இடைவேளை ட்விஸ்ட் தேவை இல்லை ( வலுவந்தமா) 


7. லவ் வந்த பின் ஹீரோயின் ஆக்டிங்க் அபாரம், ஆனா ஹீரோ ஏன் முகத்தில் ஃபீலிங்கேஎ காட்டலை ? ஹீரோயின் மாதிரி அவர் அளவுக்கு கிளாமர் தான் காட்ட முடியாது , உணர்ச்சி காட்ட ஏது தடை?


8. பட முதல் பாதியில் பி ஜி எம்மே ( பின்னணி இசை) போடலை , ஒய் ஜி மகேந்திரன் டிராமா மாதிரி மொக்கையா போகுது 


9.  க்ளைமாக்சில் வரும் டி வி போட்டி மகா மொக்கை , கடந்த 20 வருட சினிமா வரலாற்றில் இவ்வளவு மொக்கையான க்ளைமாக்ஸ் ராமராஜன் படத்தில் கூட இல்லை 



10 . வசனகர்த்தா கம் இயக்குநர் பெரிதும் நம்பியது போல் ஹீரோ டப்பிங்க் ஆர்ட்டிஸ்ட்டாய் வந்து ஹாலிவுட் படங்களை நக்கல் அடிக்கும் காட்சிகள் எடுப்டலை . இது எல்;லாம் டி வி ஷோக்களீல் ஆல்ரெடி பார்த்தாச்சு . இது எப்படி இருக்குன்னா பில்லா  படத்துல நயன் தாரா காட வேண்டிய எல்லாத்தையும் காட்டிய பின்  சீதையா நடிச்சது மாதிரி இருக்கு , எடுபடலை 




மனம் கவர்ந்த வசனங்கள் 



1. ஸாரி சார்.நோ கட்டிங் .


1லார்ஜும் ,ஒரு ஸ்மாலும் சேர்ந்தா அது தான் ஒரு கட்டிங்.இது கூடத்தெரியாம.உன்னை யார் வேலைக்கு சேர்த்தது ?


2. தமிழ் நாட்டு மானத்தை நீங்க தான் காப்பாத்தனும்.


 ரோசா ஹை தில் மே ரோசா ஹை.மை தேரே பி ுரேக் பாஸ்ட் தோஸா ஹை.



3. மிஸ்.இங்க நாய்ஸ் ஜாஸ்தி.வாய்ஸ் நாஸ்தி. பீச்க்கு போய்ட்டா வசதி



4. உன் கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசனும்.


நீ என்ன பேசப்போறேனு எனக்குத்தெரியும்.நீ பாட்டுக்கு பேசிட்டு இரு.இதோ வந்துடறேன்



5. இந்த நாள் உன் டைரில குறிச்சு வெச்சுக்கோ.


ம்க்கும்.இப்டி சொல்லி சொல்லியே ஆல்ரெடி 4 டைரி புல் ஆகிடுச்சு



6. டேய்.அதுக்குள்ளே எப்டிடா அவளை கரெக்ட் பண்ணே?



 விட்றா.அழகா இருந்தாலே இந்த மாதிரி பிரச்சனை வரத்தான் செய்யும்



7. டெய்லி குடிக்கலாமாடா ?



க்ரியேட்டிவ் பியூப்பிள்னா அப்டித்தான் # சொ பு ( தவறான கருத்து)



8. என் பையனுக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் எல்லாம் இல்லை.ஆனா டெய்லி நைட் வீட்டுக்கு வரும்போது கொய்யாப்பழம் சாப்டுட்டு வருவான்


9. கோயில்ல ஆந்திரப்பிரதேசமா? அய்யோ அது அங்கப்பிரதட்சணம்.உருண்டு உருண்டு வருவாங்க்ளே


10  உன் கல்யாணத்தன்னைக்குதான் பிளான் பண்ணி என் கல்யாணத்தை நிறுத்தப்போறேன். எப்டியோ என் மேரேஜை நிறுத்தாம இருந்தா சரி





11. எங்க ஊர்ல சரக்கடிச்சா ஊரை விட்டுத்தள்ளி வெச்சுடுவோம்.



நாங்கதான் உங்க ஊரே இல்லையே?


அப்போ இதே ஊர்ல தங்க வெச்சுடுவோம்


12  இதை நம்பாதீங்க.போட்டோ ஷாப் ல ஒர்க் செஞ்ச போட்டோ.


பின்னே மெக்கானிக் ஷாப்லயா ஒர்க் செய்வாங்க?


13. பெரிய பெரிய படைப்பாளிகளுக்கு சரக்கு அடிச்சுட்டு டக் ஆனாத்தான் ஐடியாவே வருமாமே? உண்மையா ?



14. மேட்டரே இல்லை.அதான் மேரேஜை நிறுத்திட்டோம்


15. சின்ன வயசுல கிரிக்கெட் விளையாடும்போது ஒருத்தன் புல்டாஸ் பால் போட்டான்.அதை அடிக்க பேட்டை ஓங்கினேன்.பால் (BALL) மிஸ் ஆகிடுச்சு.ஹி ஹி



16. 3 தடவை அந்த சம்பவம் நடந்துச்சு.


 ஓஹோ.பட்ட கால்லயே படும் பாங்க்ளே.அப்டி ?


17. ஸ்வேதா வண்டில போய் அவளை டிராப் பண்ணிட்டு அப்டியே என்னையும் டிராப் பண்ணிக்கவா ?


 வேனாம்.அவளே அவளை டிராப் பண்ணிக்கறாளாம் #


18. இப்போ தான் வரும் ,இப்போ தான் போகும்னு கணிச்சு சொல்ல இது கரண்ட் இல்லை.காதல்.அது எப்போ வேணாலும் வரும்


19  அவன் எவ்ளவ் பீல் பண்ணி தன் சோகத்தை கொட்டிட்டு இருக்கான்.ஆப் பாட்டில் வாங்கிட்டு வரவா? னு கேட்கறியே? எப்டிடா பத்தும்? புல் வேணும்



20. என்னடா சொல்றே? கடைசில அவன் உன் ஆள் பிளேட்ல்யே கை வெச்சுட்டானா?


21. எனக்காக நீங்க 2 பேரும் ஏன் 1 சேரக்கூடாது ? எனக்காக நீ ஏன் சாகக்கூடாது ?




 



ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  39

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்

ரேட்டிங் =  2.5  / 5


சி பி கமெண்ட் - ஏ செண்ட்டர்ல மட்டும் சுமாரா போகும் , காமெடி ப்ரியர்கள் சிவாவுக்காக டி வி ல போடும்போது பார்த்துக்கலாம் ,மத்த படி படம் தேறாது 



a
 
 
 
 
 
 அடங்கோ மேங்கோ