Showing posts with label POLITICS. Show all posts
Showing posts with label POLITICS. Show all posts

Tuesday, August 21, 2018

= இன்ஸ்டன்ட் சாதங்களில் எது பெஸ்ட்?

DR.குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுப்பது, சர்க்கரை நோய், இதய நோய், இரத்தம் அழுத்தம் உடையவர்களின் உடலுக்கு மேலும் தீங்கு விளைவிக்கும்.னு சொல்றாங்களே ,நிஜமா?
குழந்தைகளோடு செலவளிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் ஆயுளைக்கூட்டுமே தவிர குறைக்காது.அது விளையாட்டோ ,கற்பித்தலோ


===============


2 நெட் தமிழன் ரொம்ப நேர்மையானவன்.தன் கட்சிக்காரன் ,தன் அபிமான ஹீரோவின் ரசிகர் னா லைக்காம் ,எதிர்க்கட்சி,நடுநிலைவாதினா டிஸ்லைக்காம்


=============


3 சின்ன வீடா உன்னை நான் வெச்சுக்கறேன் என்பதன் கவிதை வெர்சன்தான்
"தாலியே தேவையில்ல நீ தான் என் பொஞ்சாதி "


===============


4 கீரை வகைகளில் தமிழகத்தில் இப்போது 27 வகைகள் கிடைக்கிறது.கிராமங்களில் இது ஒரு கட்டு /pkt 5 ரூபா−10 ரூபா
நகரங்களில் 15 ரூபா,பெருநகரங்களில் ,மோநகரங்களில் 25 ரூபா,,தினமும் ஒரு கீரை உணவில் சேர்த்துக்கொள்வது மிக நல்லது



=============



5 நெருக்கமான தோழிகள்னு காட்டிக்க பொண்ணுங்க ஒரே டிபியை ரதி டிபியா (காமன் டிபி க்கு பெண்பால்)வெச்சுக்கறாங்க.அதனால டிஎம் அனுப்பறவங்க ஜாக்கிரதையா அனுப்பவும் ,மாத்தி அனுப்பி மாட்டிக்காதீங்க (நான் அனுப்பலை)


==============


6 Data Network, பஸ் ட்ராவல்ல கிடைக்கிற மாதிரி consistentட்டா ட்ரெயின் ட்ராவல்ல கிடைக்கிறதில்லயே.. Any specific reasons?
1 ஊரை விட்டு ஒதுக்குப்புறமாவே track போறதால 2 பெரும்பாலான டவர்ஸ் பஸ் ட்ராக்ல ,அருகாமைல தான் நடப்படுது


==============


7 அழகிரிக்கு அதிகபட்சம் மதுரை வாக்குவங்கி மட்டுமே உண்டு,சும்மா மீடியா ல பரபரப்பு கிளபகபலாம் மத்தபடி டம்மி தான்

==============


8 திமுக பிளவுபடனும்னா கனிமொழி மனசு,வெச்சாதான் உண்டு,ஆ.ராசா வை முன்னிறுத்தி அழகிரியுடன் சேர்ந்து போர்க்கொடி தூக்கனும்,ஆனா அது இப்ப நடக்காது,ஒரு வேளை திமுக 2019 தேர்தல் (எதிர்பாராதவிதமா)ஜெயிச்சா அப்ப பிரச்சனை பண்ணுவாப்டி


=============


9 பொதுவா ராஜ்ஜியங்கள் பிளவுபடுவது ஒரு பெண்ணால்தான்.திமுக வின் பெரும்பான்மை ஆதரவு ஸ்டாலினுக்கே!பாஜக,எதுனா,சதி செய்யனும்னா 2ஜி யை வெச்சு"கனிமொழியை கார்னர்,பண்ணலாம்,பண்ணுவாங்க



===============


10 நீ என்னை நம்பறியா?
காதல் ங்கறதே நம்பிக்கைதானே? ( malaiyalam) crime thriller ( இந்த வசனம் பாலகுமாரன் ன் இனிது இனிது காதல் இனிது கட்டுரைத்தொகுப்பில் வந்தது)


==============


11 ஒவ்வொரு புதிய தினம் தொடங்கும்போதும் ஒரு புதிய எதிர்பார்ப்பு கிளம்பும் (malaiyalam ,crime thriller)



===============


12 கேரளா பத்தணம்திட்டா மாவட்டம் செங்கண்ணூர் செர்ரி தியேட்டர் ,பிரமாதமான சீட்ஸ் ,ஏஸி டிடிஎஸ் பக்கா ,டிக்கெட் ரேட் 150 ,250
NEELI - crime thriller malaiyalam









=================


13 பேங்க்ல இருந்து புது நோட்டு வாங்கும்போது நோட்ல ஒரு ஸ்மெல் வருமே அது மாதிரி ஒவ்வொரு புதுப்பெண்ணை சந்திக்கும்போதும் புது வாசம் நுகர்வேன் ,அது ஒரு போதை (malaiyalam)crime thriller


==========


14 neeli (malaiyalam) -மம்தா மோகன்தாஸ் ரசிகர்கள்(யாராவது இருந்தால்)அவரது முகத்துக்காக பார்க்கலாம்,மற்றபடி வேஸ்ட்.120 நிமிடங்கள்.துரோகம் இழைத்த புருசனை பொண்டாட்டி போட்டுத்தள்ளும் க்ரைம் கதை,ரேட்டிங்க் 2.25 / 5


===========


15 கிட்னி"ல கல் னு பலரும் சிரமப்படறாங்க,வாரம் ஒரு முறை வாழைத்தண்டு பொறியல் சாப்பிட்டா/வாழைத்தண்டு ஜூஸ் குடித்தா கிட்னி பெய்லியர் ஆனாக்கூட"கிட்னில கல் வராது.அதே போல் தினமும 1 லிட்டர் தண்ணீர் குடிக்கனும்.யூரின் வர்றப்ப அதை அடக்கி வைக்கவும் கூடாது


=\=============


16 தேர்தல் என்பது அந்த நேரத்தில் மக்கள் மன நிலை யின் பிரதிபலிப்பு.தேர்தலுக்கு 3 1/2 வருடம் முன் கருத்துக்கணிப்பு நடத்துவது நயன்தாராவின் அடுத்த காதலர் யார்?என யூகிப்பதற்கு சமம்,அது நயன்தாரா வுக்கே தெரியாது


=================


17 நான் தான் கலைஞரோட முதல் மகன் ,அம்னீஷியா சரி ஆகி இப்பதான் நினைவு வந்ததுனு அ்ம்ருதா (ஜெ) மாதிரி யாரும் இன்னும் கிளம்பலயா? (ஐடியா தர்லை,ஒரு ஆர்வம் தான்,பொழுது போகனுமில்ல)

=============



18 குருவே!இன்ஸ்டன்ட் சாதங்களில் எது பெஸ்ட்?
1 புளிசாதம் ( 2 நாட்கள் கெடாது,வாழை இலையில் பேக்"பண்ணா வாசம் தூக்கும்) 2 லெமன் சாதம் ( 24 மணி நேரம் −36 மணி நேரம் கெடாது) 3 தக்காளி சாதம் ( நாக்குக்கு ருசி ,ஒரே மைனஸ் 18 மணி நேரம் தான் தாங்கும்) 4 தயிர் சாதம் (பால் பாதி)


================


19 நெட் தமிழன் புதுசா ஒரு டெக்னிக்க கண்டுபிடிச்சிருக்கான்.10 பொண்ணுங்களை வேணும்னே"ம்யூட் பண்றது,அப்பறம் அவங்களுக்கு மென்சன் போட்டு தெரியாம கை பட்டுடுச்சு னு சொல்லிட்டு சாப்ட்டாச்சா?என்ன சமையல்?னு ஆரம்பிச்சடறாங்க,இந்த டெக்னிக் நமக்கு தோணாம போச்சே?


==============


20 தலைவர் பதவி தேடி வந்தும் அதை மறுத்தவர் பெரியார் பிரதமர் ஆக வாய்ப்பு இருந்தும் மறுத்தவர் காமராஜர் தனது வாரிசுகளை அரசியலில் பதவி தராதவர் அறிஞர் அண்ணா கழகம் ஒன்றும் சங்கரமடம் அல்ல என்று மக்களை ஏமாற்றி கழக சீனியர் அன்பழகனை தவிர்த்து தன் மகனை முன் நிறுத்தியவர் தானைத்தலைவர் கலைஞர்


=============

திமுக ஒரு பகுத்தறிவுக்கட்சி னு மார்தட்னவங்க அப்டியே லைன்ல வாங்க

1    பா.ஜ.,வைச் சேர்ந்த, ஹரியானா முதல்வர், மனோகர் லால் கட்டாருக்கு, மாநிலத்தில், எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என தெரியவில்லை. - டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்: # கவர்னர் கூட சண்டை போட்டுட்டு இருக்கறதுதான் நல்லாட்சியா?


==========


2   உலகின் ஆறாவது பொருளாதார சக்தியாக, இந்தியா உருவெடுத்துள்ளது. அதே சமயம், வளர்ச்சியின் பலன்கள், சமுதாயத்தின் விளிம்பு நிலை மக்களுக்கும் சென்றடைவதை, நாம் உறுதி செய்ய வேண்டும் - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு:  # நாட்டை விட்டு ஓடிப்போற பொருளாதாரக்குற்றவாளீகளை தடுத்தாலே பாதி பொருளாதாரம் சரி ஆகிடும் போல


===============



3   சில நேரங்களில், வெற்றி வசப்படும்; சில நேரங்களில், அது வாய்க்காது. எனவே, ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தல் தோல்வியை, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் உள்ள குறைபாடு என, கருதக் கூடாது -  சோனியா:  # சரி , 2019 லயும் இதே டயலாக் தானா?


===============


4  கருணாநிதியின் உடலை, மெரினாவில் அடக்கம் செய்ய தடையாக இருந்த, நான் தொடுத்த வழக்கு, வாபஸ் பெறப்பட்டதாக, ஊடகங்களில் தகவல் வெளியானது. உண்மையில் அந்த வழக்கை, நான் வாபஸ் பெறவில்லை. என் வழக்கறிஞரை மிரட்டி, வழக்கை வாபஸ் பெறச் சொல்லி, தி.மு.க.,வினர் அடித்து துன்புறுத்தினர். எனக்கும் மிரட்டல்கள் வந்தன. நான் தொடுத்த வழக்கு, அடிப்படை ஆதாரம் இல்லாதது என, தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான ஆணையை, உயர்நீதிமன்றம் இன்னும் தரவில்லை  - சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி # டிராபிக் ராமசாமி பாகம் 2 படத்தை சன் டி வியே எடுப்பாங்க 
===============


 இந்தியா முழுவதும் பெரிய அளவில், எங்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது -   கமல் # “கட்சி “விஸ்வரூபம்” எடுக்கும்னு இன்னும் நம்பறார் போல 


==============


6    'உழைப்பு, உழைப்பு, உழைப்பு' என்ற அந்த மூன்று வார்த்தைகள் தான், தலைவர் எனக்கு விட்டுச் சென்ற மந்திரச் சொற்கள். மூன்று வேளையும், என்னை இயக்கப் போகும் சாவி அது தான். அந்த உழைப்பு - ஸ்டாலின் # மற்றவர்களீன் உழைப்பில் வாழ்வதுதானே அரசியல்வாதிகளின் பிழைப்பு, ? அதை மாற்றினா சரி


=============


7     பா.ஜ., ஆட்சி நடக்கும் மாநிலங்களில் மட்டும், ஏன் அதிகளவில் பெண்கள், பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்? - ராகுல் # காங் ஆட்சில வெளீல விஷயம் வர்ல, இப்போ வந்திருக்கு


============

8  வெளிநாட்டுக்கு தப்பும் பொருளாதார குற்றவாளிகளை தடுக்கும் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் # அப்ப ஏற்கனவே தப்புன விஜய்மல்லய்யா,நீரவ் மோடி,லலித மோடி எல்லாம் அவ்ளோதானா?போனது போனது தான்?



=================



9 அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்க ரஜினிக்கு இடமில்லை - அமைச்சர் செல்லூர் ராஜூ # பாஜக"தலைமை கட்டளை இட்டாலும் இதே பதிலா?



===============



10 2 ஆண்டுகளில் 400 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி - செய்தி
# அப்ப 2 வருசமா இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் லாங் லீவ்ல இருந்துதா?


==============


11 சாதியை சொல்லிக் கூப்பிட்டா என்னைப் பொறுத்தவரை அது பெரிய கெட்டவார்த்தை - # தேவர் மகன் ன்னா கொக்கா?
சபாஷ் நாயுடு


=============



12 குடும்ப பிரச்சனையால் திமுக பலவீனம் அடைந்துவிடக் கூடாது – திருமாவளவன்
# ஓஹோ,குடும்பத்துல பிரச்சனை இருக்குதா?நீங்க சொல்லி தான் தெரியும்,அழகிரி அண்ணன் ஆக்டிவ் மோட்



===============


13 சூரியனிலிருந்து மின்சாரம் எடுத்தால் சூரியபகவான் கோபப்படுவார் -
MP அசோக் சக்சேனா. # சூரிய நமஸ்காரம் பண்ணி சரி பண்ண முடியாதா?யார்யா இவரு?செல்லூர் ராஜுவுக்கே டப் பைட் தர்றவரு?


=================


14 ராகுலுக்கு பதில் சொல்ல எனக்கு இத்தாலி மொழி தெரியாது - அமீத்ஷா #
நீங்க ஹிந்தில சொல்லுங்க,அதை மொழி பெயர்த்து ராகுல்ட்ட சொல்ல ஆள் இருக்கு,ஆடத்தெரியாத நாட்டியக்காரி மேடை கோணல்னாளாம்


=================



15 அதிமுகவில் மக்களை கவரக்கூடிய தலைவர்கள் இல்லை - செல்லூர் ராஜூ
# அதனாலதான்"மக்கள் மனம்"கவரந்த ரஜினி யை அதிமுக தலைவர் ஆக்கப்போறாங்களாமே?



===============


16 அரசியலுக்குள் குற்றவாளிகள் நுழையக்கூடாது : உச்ச நீதிமன்றம் கண்டிப்பு # நாட்டு நிலவரம் தெரியாம இருக்காரு,அரசியல்க்கு வந்தவங்க 90% பேரு திருடன்,கேப்மாரி,மொள்ளமாரி,முடிச்சவுக்கிதானே?நல்லவன் உழைச்சு சாப்பிடுவான்


===============


17 கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர் - மு க அழகிரி
# ரஜினி ஒரு"தீர்க்கதரிசி,இது"தெரிஞ்சுதான்"பல வருடங்களுக்கு"முன்பே "அண்ணன்"என்ன"?தம்பி என்ன?சொந்தம் என்ன?பந்தம் என்ன?னு பாடினார்

================


18 கேரளாவில் கனமழை: சபரிமலைக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் தேவசம் போர்டு வேண்டுகோள் # அடுத்த வருசம் கூட சாமியை பாத்துக்கலாம்,எங்கயும் போகாது,வந்து வெள்ளத்துல,நோய்க்கிருமிகள்ட்ட மாட்டிக்காதீங்க மக்களே,தேங்கிக்கிடக்கும் தண்ணீர் வடிய பல நாட்கள் ஆகும்


==============


19 திமுகவை அழிக்க நினைப்பவர்களை கருணாநிதியின் ஆன்மா தண்டிக்கும் - மு.க.அழகிரி
# திமுக ஒரு பகுத்தறிவுக்கட்சி னு மார்தட்னவங்க அப்டியே லைன்ல வாங்க,அடிக்கவெல்லாம் மாட்டேன்..


======================



20 திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
# பந்திலயே உட்காரவேணாம்னு"கட்சியை விட்டு துரத்திட்டாங்க,இவரு இப்ப வந்து இலைல ஓட்டைங்கறாரு


=


=================

Monday, August 20, 2018

ரத்னபாலா

சைனா ல டூப்ளிகேட் சரக்குக்கு மதிப்பு அதிகமாமே?நல்ல மார்க்கெட்டாமே?


ஆமா,அதுக்கென்ன இப்ப?
நம்மாளு படம் சைனால டப் பண்றாங்க,100 கோடி வடை சுட ஆரம்பிச்சுடுவாங்களே?


=========


2 குருவே!கவுதம புத்தர் கூட ஸ்ரீ கிருஷ்ணரோட அவதாரமாமே?


வாய்ப்பே இல்ல
எப்டி?
கிருஷ்ணரோட எந்த அவதாரத்துலயாவது சம்சாரமோ,ஜோடியோ இல்லாம இருந்திருக்காரா?லாஜிக் இடிக்குதே



==========


3 டைரக்டர் சார்,படம் பாத்தேன் ,வில்லன் ஒரு ஹீரோயினை கொல்றாரு,பதிலுக்கு ஹீரோ வில்லன் க்ரூப்ல எல்லாரையும் கொல்றாரு


பார்க்கற ஆடியன்சையும் தான்



============


4 25 வருட காலத்தில் ஒருமுறை கூட FDFS பார்த்ததில்லை.


ஓஹோ,நீங்க பாக்கறது"பூரா செகண்ட்ஸ்"தானா?



==========


5 குருவே!தாத்தாவோட சொத்து பேரனுக்குத்தான்னு"சொல்றாங்களே,அது"நிஜமா?


ஆமா,ஆனா அது"தாத்தா உழைச்சு"சம்பாதிச்சதா இருக்கனும்



============


6 கமலோட அடுத்த படம் ரிலீஸ் பண்ற தியேட்டர்கள் கிளாமரா மாறிடும்


எப்டி?
சபாஷ் நாயுடு ஹால் ஆகிடுமில்ல?



===========



7 புல்லட்"ரயில்ல கவுண்டர்கள் மட்டும்தான் போவாங்களாமே ,நிஜமா?


இது என்ன புதுப்புரளி?
ஒரு காலத்துல புல்லட் பைக் னாலே கவுண்டர்கள் தான்னு ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலா இருந்துச்சே?




==========


8 டாக்டர்,பப்பாளி பழத்தை சீனி போட்டு சாப்பிடலாமா?

ஏம்மா,அஸ்கா சர்க்கரை"கெடுதல்,சுகர் பேஷண்ட்"சாப்பிட உகந்த பழம் பப்பாளி,அதுல அஸ்கா வை தொட்டு சாப்பிடறதுக்கு பஞ்சு மூட்டை குடோன்லயே இருக்கலாம்"சந்தானம்"காமெடி பார்க்கவும்


=================


9 Multi talented ன்னா என்ன .?

ஊருக்கு வெளில"மல்ட்டிகாம்ப்ளெக்ஸ் தியேட்டர் மால் கட்டி அதுல கேண்ட்டின் ல 4 மடங்கு விலை"அதிகமா பொருள்கள் விற்பது,தியேட்டருக்கு வர்ற ஜனங்களை வாட்டர் கேன்"கூட கொண்டு வரக்கூடாது னு தடை விதிப்பது



=============


10 அம்மன்
கோவிலில் முதல் முதலாக
பால்குடம் எடுக்கப்போறேன்
வாழ்த்துங்க
வாழ்த்துக்கள்,எடுத்த குடத்தை ,திருப்பி எப்போ கொண்டுபோய் வைப்பீங்க?


=================


11 vகுருவே!டோல் கேட்களில்
பிச்சைக்காரர்கள் இல்லாதது
ஆச்சர்யமாக இருக்கிறதே?
ஒரே ஏரியாவில் 2 தரப்பு எப்டி பிச்சை எடுக்கும்?ஏரியா பிரிச்சு வெச்சுப்பாங்க"இல்ல?


==============


12 வீட்டுக்கு வீடு மரம் வளருங்க ்னு சொல்றாய்ங்க
சந்தன மரக் கன்று நட்டா அடிக்க வராய்ங்க
நல்ல வேள,கஞ்சா செடி பயிரிடலை


============


13 தமிழ் செம்மொழி ஆனது
அவள் என்னை மாமா என்று அழைத்த போது
அத்தான்"னு கூப்ட்டிருந்தா செம்மொழி செம மொழி ஆகி இருக்கும்



=============


14 இங்க யாராவது Dermatologist
இருக்கீங்களா?
சொல்லுங்க ,உங்களுக்கு என்ன பிரச்சன?
தோள் ல ஒரு பிராப்ளம்
அதுக்கு வேற ஆள் இருக்காங்க,இது தோல் வியாதிக்கு.ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்


==============


15 தலைவரே!உங்க அப்பா நட்புக்கு இலக்கணம் வகுத்தவராமே?

ஆமா
60 வருடங்களா அரசியல்ல பக்கபலமா இருந்தவருக்கு நட்பின் நாயகன்னு பட்டம் கொடுத்தாராமே?
ஆமா

ஆனா,தன்னோட தலைவர் பதவியை ஒரு வருசம் விட்டுக்குடுத்திருக்கலாமே"நண்பனுக்கு,ஏன் செய்யல?
பட்டம்னா ஓசி,தரலாம்,பதவி தந்தா வருமானம் லாஸ்


===================


16 தலைவரே!கடந்த 15 வருசமா"வந்த ரத்னபாலா இதழ்கள் 15×18=270 புக் கூரியர்ல வந்திருக்கு

எதுக்கு?
பாரதரத்னா கேட்டோமில்ல,ரத்னபாலா தான் ஒர்த்தாம் நமக்கு


================


17 தலைவரே!நம்ம தலைவருக்கு"தலைவர் பதவி தந்தது அறிஞர் அண்ணா தானே?

ஆமா
அதுக்கு நன்றிக்கடனா அண்ணா வோட வாரிசுகளுக்கு பதவி தந்து வழிகாட்டியாவும் இருந்து நன்றிக்கடன் ஏன் செய்யல?
யோவ்,சொந்த மகனுக்கே கடைசி வரை வழி விடல


==============


18 வயசான காலத்துல இவருக்கு பதவி எதுக்கு னு காமராஜருக்கு எதிரா பிரச்சாரம் பண்ணுனது யாரு?;

நம்ம தலைவர்தான்
அப்ப காமராஜருக்கு என்ன வயசு இருக்கும்?
50
நம்ம தலைவர் எத்தனை வயசு வரை பதவில இருந்தாரு?
93 வரை
வயசான காலத்துல இவரு மட்டும் பதவிக்கு"ஆசைப்படலாமா?


=================


19 தலைவரே!காமராஜரை விட நம்ம தலைவர் தான் சிறந்தவர்னு ஒரு பிரச்சாரம் நடக்குது,எப்பிடி?

காமராஜர் இறந்தப்ப அவரோட சொத்து எவ்வளவு?
வெறும் 500 ரூபா நம்ம தலைவருக்கு?
ஒரு லட்சம் கோடி பணம்,18 டிவி சேனல்கள்... etc
காமராஜருக்கு வாரிசு? அவர் பிரம்மச்சாரி நம்ம தலைவருக்கு?
ஹிஹி ,சரிசரி

==============


20 தலைவரே!நம்ம கட்சிக்கு கெட்ட பேரு எதனால?

ரவுடியிசம்,சாராயம்
ரவுடியிசத்தால பாதிக்கப்பட்டது யாரு?கட்சிய விட்டு விலக்கப்பட்டது யாரு?
மு.க.அழகிரி குடிப்பழக்கத்தால வாழ்க்கையை தொலைச்சது யாரு?
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் கறது இதுதான்
மு.க. முத்து

============