Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts

Thursday, May 16, 2013

GO GOA GONE -சினிமா விமர்சனம்


 

ஒரு படத்தை அல்லது பல படங்களை கிண்டலடிக்கும் ஸ்பூஃப் படங்கள் சமீபத்திய இந்தியன் சினிமாவில் தலை காட்ட ஆரம்பித்துள்ளது. தமிழ் படங்களை, நாயக நாயகிகளை நையாண்டி செய்த `தமிழ் படம்`  இதற்கொரு நல்ல உதாரணம்.  மனித ரத்தத்தை இறையாய் பருகும் ஸோம்பீஸ்களை கிண்டலடித்துள்ள படம் தான் "கோ கோவா கான்". 

நடிகர் சைப் அலிகானின் தயாரிப்பில், ராஜ்-டி.கே (ராஜ் நிடி மொரு-கிருஷ்ணன் டி.கே) என இரு இயக்குனர்களின் கூட்டணியில் வெளிவந்துள்ள படம்.  ஒரே வீட்டில் சிகரெட் குடியுடன் குடித்தனம் செய்யும் மூன்று நண்பர்கள். ஆபீசிலே சக பெண்ணோடு உடலுறவு வைத்துக்கொள்ள முனையும் ஒரு நண்பனுக்கு வேலை போகிறது,


 காதலுக்காக கெட்ட பழக்கங்களை விட்டொழிக்கும் மற்றொரு நண்பனை ஏமாற்றும் காதலியின் துரோகம்.  வாழ்க்கையில் ஒரு மாற்றம் தேவை என இவ்விரு பிறவிகளும் யோசிக்க, வீட்டிற்குள் நுழையும் மூன்றாவது நண்பன் தனது வேலை விஷயமாக கோவா செல்லவிருக்கும் செய்தியை உறைக்கிறான். அவ்வளவுதான் பணிப் பயணம் உல்லாசப் பயணமாய் மாறுகிறது.

 


கோவாவிற்குச் சென்று கூத்தடிக்கும் நண்பர்களுக்கு அருகாமையில் உள்ள தனித்தீவில் ரஷ்யன் மாபியா நடத்தும் பார்ட்டியைப் பற்றித் தெரிய வர, இவர்கள் பயணம் தீவை நோக்கி நகர்கிறது.  தீவில் வினோத போதை மாத்திரை எடுத்துக் கொள்ளும் அனைவரும் காலை எழுந்து பார்க்கையில் ஸோம்பீஸ் என்கிற ரத்தக் காட்டேரிகளாக மாற, அவர்களிடம் மாட்டிக் கொள்ளும் மூன்று நண்பர்கள் கூடவே குளு குளு நாயகி. ‘ஐ கில் டெட் பீபிள்‘ என்று கூறி பெரிய துப்பாக்கிகளுடன் வந்திறங்கும் போரிஸின் (ஸைப் அலிகான்) துணையால் இந்த நால்வரும் எப்படி தீவிலிருந்து தப்பிக்கிறார்கள் என்பதுதான் மீதிக் கதை.

‘டெல்லி பெல்லி‘ பட வெற்றியின் தாக்கம், இரட்டைப் பொருளல்ல நேரடியாக கொச்சைப்படுத்தும் கெட்ட வார்த்தை நெடி படம் முழுவதும் திணித்துக் கிடக்க, பாட்டி முதல் பேத்தி வரை ஒருவரையும் பாரபட்சம் பார்க்காமல் திட்டும் வசனங்கள் முதற்பாதி முழுவதும், ஸைப் அலிகானின் வருகைக்குப் பின் ஸோம்பீஸின் வேட்டை என்று திகிலாக சூடுபிடிக்கும் என எண்ணினால் அதுவும் முதல்பாதியின் பிரதிபலிப்பாக இருப்பது ஏமாற்றம்.


 


கோவாவின் அழகையும் மறக்கடிக்கச் செய்யும் கதாநாயகி பூஜா குப்தாவின் அழகு.  கவர்ச்சிகரமான உடை அணிந்தும் கலாசாரம் கெடாமல், பெண்மைக்குரிய வரையறை மீறாமல் இவர் நடித்துள்ள விதம் சபாஷ்.  வசனகர்த்தா மற்றும் படத்தின் நாயகன் என டபுள் ரோலில் குனால் கேமு, வெகுளித்தனமான பார்வையுடன் விஷமத்தனம் செய்யும் வீர்தாஸ், ‘த்ரீ இடியட்ஸ்‘ ஓமி வைத்யாவை நினைவூட்டும் ஆனந்த் திவாரியும் மனதில் பதிகின்றனர். சச்சின் ஜிட்காரின் பின்னணியும், அறிந்தாம் கதக்கின் படத்தொகுப்பும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

போதைப் பவுடர் (கோக்கைன்) மேலே பட்டவுடன் ‘ஸாம்பீஸ்கள்‘ ஸ்தம்பித்துப் போவது, இல்லாத கோக்கு மாக்குத்தனம் எல்லாம் செய்து கடைசியில் நர்யகர்கள் நன்நெறி பேசுவது தான்  செம்ம காமெடி. தயாரிப்பாளர் என்பதால் ஸைப் அலிகானுக்கு சிறப்புத் தோற்றத்தைத் தாண்டி கொஞ்சம் அதிகமான ரோல் அளிக்கப்பட்டுள்ளது. இளைஞர் பட்டறையில் இவர் மட்டும் முதுமையாகத் தோன்றுகிறார். 


 


ஹாலிவுட்டில் ‘வேகஸ்‘ நகரமென்றாலே கப்பல், காஸினோ, சூது இவைகளைச் சுற்றியே படத்தின் களம் அமைந்திருக்கும். நம் நாட்டில் ‘கோவா‘ என்ற ஊர் வந்தாலே இயக்குனர்கள் மது, மாது, போதை போன்ற லாகிரி வஸ்துக்களை மையப் பொருளாக எடுத்துக் கொள்கின்றனர்.  இந்தப் படமும் இதற்கொரு விதிவிலக்கல்ல. என்ன.. இந்த அம்சங்களுடன் ஸாம்பீஸை இணைத்துள்ளனர் அது தான் புதுமை.

படம் முழுக்க விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை எனக் கூறுவது மிகை.  படத்தில் தொய்வடையும் தருணங்கள் இல்லை போரடிக்காமல் நகர்கின்றது என்று கூறலாம்.

மொத்தத்தில் கோ கோவா கான் – போய் பார்க்கலாம் ஒரு முறை.

  • நடிகர் : சைப் அலிகான்
  • நடிகை : பூஜா குப்தா
  • இயக்குனர் :ராஜ்-டி.கே
 a

thanx - dinamalar

Friday, May 10, 2013

நாகராஜசோழன் எம் ஏ ,எம் எல் ஏ - சினிமா விமர்சனம்

பெண்பார்க்கும் படலம் நடக்கும்போது தரகர் சில சமயம் பொண்ணோட ஃபோட்டோவைத்தராம பொண்ணோட அக்கா ஃபோட்டோ கொடுத்து பார்த்தீங்களா? ரதி மாதிரி இருக்கு? இதனோட தங்கச்சிதான் நீங்க கட்டப்போற பொண்ணுனு அள்ளி விடுவார். நாமளும் மண்டையை மண்டையை ஆட்டுவோம், அப்புறம் பார்த்தா அந்த சக்க ஃபிகரோட தங்கச்சி மொக்க ஃபிகரா இருக்கும். அந்த மாதிரி தான் ஆரவாரமான வெற்றி பெற்ற அமைதிப்படை முதல் பாகம் படம் மாதிரி 20 வருஷம் கழிச்சு வந்திருக்கும் அமைதிப்படை பாகம் 2 படமும் .

சாதாரண எம் எல் ஏ வா இருக்கும் ஹீரோ  சி எம்மையே மிரட்டி உதவி சி எம் ஆகிடறார். அவருக்கும் அவரோட அல்லக்கைக்கும் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் கொஞ்சம் .ஆதிவாசிகள் நிலத்தை அபகரிக்க பண்ற அட்டூழியங்கள்  , கொலைகள் என இன்னொரு டிராக். எப்படி திரைக்கதை எழுதறதுனு ஒரே குழப்பமாகி சும்மா வசனங்களாலும் , சத்யராஜ் - மணி வண்ணன் காம்பினேஷன் காட்சிகளால் மட்டுமே படத்தைத்தூக்கி நிறுத்திடலாம்கற நப்பாசைல எடுத்த படம் இது.


 சும்மா சொல்லக்கூடாது , இத்தனை வருஷங்கள் ஆகியும் சத்யராஜ் - மணி வண்ணன் பிரமாதப்படுத்தி இருக்காங்க . எகத்தாளம் , எள்ளல் நக்கல் எல்லாம் செம.  ஆனா எல்லாம் பிட்டு பிட்டா இருக்கு. அதான் மைனஸ் . படத்தோட ஒட்டலை. ரொம்ப செயற்கையா இருக்கு .





சத்யராஜ்ன் கெட்டப் கன கச்சிதம். போலீஸ் ஆக வரும் இன்னொரு சத்யராஜ் பாவம் சான்ஸே இல்லாமல் சும்மா வந்துட்டுப்போறார். மணி வண்ணனின் மகனுக்கு வேறு ஒரு கேரக்டர் கொடுத்து விட்டதால் அவரை முன்னிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் வேறு .


 சீமான் பொது வாழ்க்கைலயும் சரி , சினிமா வாழ்க்கைலயும் சரி எந்த அளவுக்கு இமேஜை வளர்த்து வெச்சிருந்தாரோ அந்த அளவு கெடுத்துக்கிட்டார். முன்பெல்லாம் அவர் வரும் காட்சிகளீல் எல்லாம் அப்ளாஸ் அள்ளும் . இப்போ சிரிப்பா சிரிக்கறாங்க . 


  மலைவாசிகள் டூயட் பாடும்போது இவர் எதுக்கு கூட கையை காலை ஆட்டி எக்சசைஸ் பண்றார் ? அய்யோ பாவம் 


 இது போக மிருதுளா ( ரொம்ப மிருதுவா இருக்குமோ? )  , ஹன்சிபா , கோமல் ஷர்மா என சில பல ஃபிகர்கள் வந்துட்டுப்போகுது. வர்ணிக்கற அளவு பெருசா இல்லை , ஐ மீன் காட்சிகள் , வாய்ப்புகள் அவங்களுக்குப்பெருசா இல்லை . 




 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. கலைஞர் , கேப்டன்  இருவரையும் குறி வைத்து செம நக்கல் அடிக்கும் காட்சிகள்  வசனங்கள் அபாரம் , 45 இடங்களில் வசனம் கலக்கல் 



2. எல்லா ஊரிலும் முக்கியமான தியேட்டர்களை பிடித்தது செம . ஈரோட்டிலேயே 3 தியேட்டர் . 3ம் ஏ சி டி டி எஸ் ( ரஜினி , அஜித் , விஜய் படங்களுக்குத்தான் இப்டி அமையும் ) 


3. போஸ்டர் டிசைன் , டி வி யில் வரும் விளம்பர க்ளிப்பிங்குகள் எல்லாம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது 


 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. மணிவண்ணன் இயக்கும் படத்தில் டைட்டிலில் அவரே அவர் பேரை இன மான இயக்குநர் என போட்டுக்கறாரே? கூச்சமா இருக்காதா? அடுத்தவங்க படம்னா தேவலை . முரசொலில தமிழ் இனத்தலைவர்னு டாக்டர் கலைஞரே போட்டுக்கற மாதிரி  ( இந்த லட்சனத்துல இவரு அவரை நக்கல் அடிக்கறாரு )


2. ஹீரோ அடிக்கடி மருமகளை ஏழைப்பொண்னு , மலை ஜாதிப்பொண்னு என நக்கல் அடிக்கிறார். ஆனா  8 ஏக்கர் 30 செண்ட் நிலம் அவருக்கு சீரா கொடுத்தாங்கன்னு வசனம் வருது . மிடில் கிளாஸ் ஃபேமிலி கிட்டேயே 5 செண்ட் நிலம் இருக்கறது இல்லை , ஏழைப்பெண்ணுக்கு எபடி 8 ஏக்கர்? 



3. ஹீரோ அடியாட்கள் மூலமா 3 பேரை கொலை பண்ணிடறார். அந்த 3 பிணங்களையும் ஊர்வலமா கொண்டுவரும் காட்சியில் பிணத்தின் கால் கட்டை விரல் பக்கத்து விரலுடன் க்ளோசப் ஷாட்டில் கட்டப்பட்டும் , லாங்க் ஷாட்டில் பிரிந்தும் இருக்கே? எப்டி? எடிட்டிங்க் ஃபால்டா? 



4. ஹீரோவோட சின்ன வீடு ஒண்னு பார்க்க லோக்கல் மாதிரி இருக்கு. 25 ரூபாய்க்கு  மசால் தோசை வாங்கித்தர்ற அளவு கூட ஒர்த் இல்லாத மொக்கை பீசுக்கு அவர்  800 ஏக்கர் கரும்புத்தோட்டம் எழுதி வைப்பதா காட்சி வருவது கொடுமை 



5. போலீஸ் ஆஃபீசர் சத்யராஜ் ஹீரோ சத்யராஜை வந்து மெனக்கெட்டு மிரட்டிட்டு மட்டும் போறாரே? ஏன் கைது பண்ணலை? ஒண்ணா அரெஸ்ட் பண்ணி இருக்கனும் , அல்லது வந்தே இருக்கக்கூடாது  என் புருஷனும் கச்சேரிக்குப்போனான்கற கதையா எதுக்கு தேவை இல்லாம பில்டப் கொடுத்து மொக்கைப்பட்டம் வாங்கனும் ? 


6. மருமக கொலை செய்யப்பட ஆர்டர் வந்தது தெரிஞ்சதும் அவ ஏன் வெளியூர்ல இருக்கும் புருஷனுக்கு தகவல் தெரிவிக்கலை? அட்லீஸ்ட் ஒரு எஸ் எம் எஸ் கூட பண்ணலை? புருஷன்னா எல்லாருக்கும் அவ்வளவு இளக்காரமா?


7. சீமான் படம் பூரா டம்மியா வர்றவர் திடு திப்னு க்ளைமாக்ஸ்ல சிவப்புக்கலர் ரிப்பன் எடுத்து தலைல ( நெத்தில) கட்டிக்கிட்டு புரட்சி வீரன் ஆவது செம காமெடி . 


8. பிரபாகரன் நல்லவேளை இப்போ  இல்லை. சீமானை பிரபாகரன் ரேஞ்சுக்கு உயர்த்தி டயக்லாக்ஸ் வெச்சது அய்யய்யோ அம்மம்மா . விஜயலட்சுமி கூட ரசிச்சிருக்க மாட்டாரு

 


9 தமிழ் நாட்டின் சி எம் தன் மருமகளை கொலை பண்ண பிளான் பண்றாரு , மருமக தன் புருஷன் கிட்டே சொல்லாம ஏதோ இட்லி மெஸ் வெச்சிருக்கும் லேடி கிட்டே வந்து நீங்க தான் என்னைக்காப்பாத்தனும்னு சொல்வது செம காமெடி


10 அமைதிப்படைல அப்ளாஸ் அள்ளிய காட்சிகள் எல்லாத்துலயும் உயிர் இருந்தது அதுக்காக அப்டியே டிட்டோவா காப்பி அடிக்கனுமா? அண்டர் டிராயரை துவைக்க அடிச்சுக்குவது  போர் 


11. வில்லன் கிட்டே அந்த லேடி “ என்னைத்தொடாதே “ என சொல்வது செம காமெடி . புருஷனே கேட்கமாட்டான் , வில்லன் கேட்பானா?


12. சி பி ஐ ஆஃபீஸ்ல எதுக்கோ அனுமதி வாங்கப்போகும் போலீஸ் சத்யராஜ் எதுக்கு கூலிங்க் கிளாஸ் போட்டிருக்கார்? மெட்ராஸ் ஐ யா? ஐய்யோ பாவம் 


13.  மாமனார் சத்யராஜ் - மருமகள் சமப்ந்தப்பட்ட காட்சிகளில் எங்கே சிந்து நதிப்பூ வாசம் அடிச்சுடுமோன்னு பரிதவிக்க வைப்பது எதுக்கு? சஸ்பென்சா? கண்றாவி 


14. லவ் மேரேஜ் பண்ணிக்கிட்ட வசதியான வீட்டுப்பையன் ஏன் தனியா வெளியூர் போறான்? பொண்டாட்டியையும் துணைக்குக்கூட்டிட்டுப்போலாமே? 


15. ரத்தம்னா பயந்துக்கற அந்த லேடி கேரக்டருக்கு ஒரு கிளைக்கதை எதுக்கு? இங்கே மெயின் கதையே தடுமாறிட்டு இருக்கு 

16 வகை தொகை இல்லாம தி முக , தே மு திக என எல்லாரையும் விளாசும் மணீவண்ணன் பேனா ஜெ வைக்கண்டு பம்முவது ஏன்? 




 மனம் கவர்ந்த வசனங்கள்


1. ஓட்டு வாங்கற கட்சியை விட ஓட்டை பிரிக்கற கட்சிக்குத்தான் மரியாதை இப்போ


2. நேத்து சாயங்காலம் 6 மணிக்கு கட்சில சேர்ந்தவன் நீ.என் முன்னாலயே கை நீட்டி எதிர்த்துப்பேசற அளவு ஆகிடுச்சு


3. நகரவாசி கிராமம் வந்தா அவன் கண்ணுக்கு மரம் எல்லாம் சேர் டேபிளா தெரியும்.கிராமவாசி நகரம் போனா சேர் டேபிள் எல்லாம் மரமாத்தெரியும்



4. பெட்ரோல் விலை எல்லாம் ஏறிட்டதால என்னோட 15 சின்ன வீடுகளையும் ஒரே அபார்ட்மெண்ட்ல குடி வெச்சுட்டேன்


5.  அரசியல்வாதிகிட்டே எவ்ளவ் சொத்து இருக்குன்னு அவங்களுக்கே தெரியாது.சிபிஐ வந்து ரெய்டு பண்ணும்போதுதான் கணக்கே தெரியும்


6. நான் பேமிலிமேன் அண்ணா .


 அதெப்பிடிடா கூச்சமே இல்லாம உன்னை பேமிலி மேன்னு சொல்லிக்கறே?


7. நல்ல பையனாப்பார்த்து இவளுக்கு கட்டி வைக்கலாம்னு பார்த்தா நல்ல பையனே கிடைக்கலை.சரினு நானே கல்யாணம் கட்டிக்கிட்டேன் ,ஹி ஹி



8. நீங்க தான் சாமி எங்க தெய்வம். 


எங்களைக்க்டவுள் ஆக்கிட்டு ஏழைங்க நீங்க தெருவுலயே கிடங்க 


9. என் ஆளு எந்த் அளவு ஷை டைப்னா குளிக்கும்போது கூட சேலை கட்டி இருப்பான்னா பார்த்துக்குங்க


10. மணி.உன் சின்ன வீட்டை ஒரு நாள் நம்ம வீட்டுப்பக்கம் கூட்டிட்டு வா.


 



 வேணாங்ணா.அவ ரொம்ப ஷை டைப்.வீட்டை விட்டு வெளில வரமாட்டா 



11. விபத்துல காயம் அடைஞ்ச தலைவர் முகத்துல 100 தையலா? சும்மா ரீல் விடாதீங்க.அது என்ன முகமா? ஜாக்கெட் பிட்டா? 


12. நான் யார்னு உங்களுக்குத்தெரியும்.எங்க ஆதரவு இல்லாம நீங்க மத்தில ஆட்சி பண்ண முடியாதுனு உலகத்துக்கே தெரியும்



13. ஏழைங்க கோபப்படக்கூடாது.நக்சலைட்னு சொன்னாலும் சொல்லிடுவாங்க 


14. நம்ம நாட்ல ஓட்டுப்போடவும் மிஷின்.ஓட்டு போடற ஜனங்களும் மிஷின் 


15. ஆட்சி மாறும்.ஆனா அல்லக்கைகள் மட்டும் என்னைக்கும் மாறாம இருப்பாங்க 




16. அப்பாவை தீர்த்துகட்டிட்டு மகன் ஆட்சியைப்பிடிப்பது நம்ம மொகலாயப்பேரரசு காலத்துல இருந்தே இருக்கே?


17. ஏய் னு நாக்கை மடிச்சுக்கடிக்கற ஆளை எல்லாம் தலைவர் ஆக்கிடுங்க.நாடு உருப்பட்டுடும்


18. நல்லா இருக்கீங்ளா மாமா ? 


ஜெயில் ல இருக்கறவன் கிட்டே விசாரிக்கற விதம் இதானா?என்னமோ நான் பைவ் ஸ்டார் ஹோட்டல்ல ஜெனரேட்டர் வசதியோட இருக்கற மாதிரி கேட்கற? 


19. ஆட்சில இலவசமா மிக்சி குடுத்தீங்க பேன் குடுத்தீங்க.ஆனா இதை எல்லாம் யூஸ் பண்ண கரண்ட் குடுத்தீங்ளா? இலவச ஜெனரேட்டர் தர்றதா வாக்கு தரும் கட்சி தான் அடுத்து ஜெயிக்கும் 


20. அவரு சொந்தமா எப்பவும் டிராக் போடமாட்டாரு.என்னை மாதிரி இளிச்சவாயன் ஆல்ரெடி டிராக் போட்டு வெச்சிருந்தா உஷார் பண்ணிடுவாரு



 



21. பாடிலேங்க்வேஜை பவ்யமா வெச்சுக்கிட்டு சிரிச்சுக்கிட்டே செருப்பால அடிக்கிறது நீ தான் மணி


22. இது தான் மணியோட 4 வது சின்ன வீட்டோட மகளா ?



 நீங்க வேற.அவரோட 4 வது சின்ன வீடே இதுதாணுங் 



23. ‘வயசானவன் இளைஞரணி த்தலைவரா இருக்கும் போது ஆம்பள மகளிர் அணி தலைவரா இருக்க கூடாதா?’,  ( மு க ஸ்டாலின் )



24.  ‘கட்சிக்கு கட்சி தாவிகொண்டே இருப்பவன் எல்லாம் கட்சி தலைவன்!’,( டாக்டர் ராம்தாஸ் )



25 ‘புருஷன் பொண்டாட்டி எல்லாம் சேர்ந்து கட்சி ஆரம்பிக்கராங்கபா! போங்க! போய் தமிழ் நாட்ட பிச்சு தின்னுடுங்க!’  ( கேப்டன் )



26. , ‘தோத்து போனவன்னு நாட்டுக்கே தெரிஞ்சும் உன்னைய ஜெயிக்க வைத்தது சட்டத்தை மீறி தான்’  ( ப சிதம்பரம் )




27 , ‘தமிழ் தமிழ்னு ஊருக்காக வேஷம் போடறவங்க தன் பிள்ளைகளுக்கு மட்டும் ஹிந்தி கற்றுத்தருவது’ ஏன்? ( கலைஞர் ) 


28 வெளிநாட்டுக்காரங்க தங்களோட உரிமைக்காக போராடுவாங்க. நம்ம மக்களுக்கு அதெல்லாம் எங்க இருக்கு? நம்ம அரசியல்வாதிங்க நாட்ட கூறு போட்டு விற்க த்தான் செய்வாங்க! 



29. ‘நாம போராடினா நம்ம அடுத்த தலைமுறை இதை விட வேகமா போராடும்’,



30  நாம இழக்கிறது நம்ம உயிரை மட்டும் தான் போராடறத நிறுத்திட்டா நாளைய தலைமுறையோட உரிமையையும் சேர்த்து  இழப்போம்


 31. பொதுக்குழுவை என்னைக்கு கூட்டி இருக்காங்க? அவங்களா ஒரு முடிவு எடுத்துட்டு அறிவிப்பாங்க?


32. அப்பனும் பையனும் சேர்ந்து அரசியல்ல ஈடுபடுவது அந்தக்காலம்.புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து கட்சி ஆரம்பிப்பது இந்தக்காலம்

 



 சி பி கமெண்ட் - அமைதிப்படை பார்ட் 2 -கதை போறாது ,திரைக்கதை தேறாது - , நாகராஜசோழன் MAMLA -ஆல் பேப்பர்ஸ் அவுட்.  டி வில இன்னும் 20 நாட்கள் ல எப்படியும் போட்டுடுவாங்க பார்த்துக்கலாம் . ஒரு வாரம் தான் தாங்கும் 


எதிர்பார்க்கப்படும் விகடன் மார்க் 35


 குமுதம் ரேங்க் - சுமார் 


 ரேட்டிங்க் - 2 / 5 


 ஈரோடு ஆனூர் தியேட்டரில் படம் பார்த்தேன் 



 டிஸ்கி - மனம் கவர்ந்த வசனங்கள் இன்னும் 20 இருக்கு , இன்னும் அரை மணியில் இதே லிங்க்கில் அப்டேட்டிடறேன் 


 

Monday, May 06, 2013

மூன்று பேர் மூன்று காதல் - சினிமா விமர்சனம்



இந்தப்படத்துல உருப்படியான விஷயம் ஹீரோயினா வரும் 3 உருப்படிகளும் கண்ணுக்கு லட்சணமா இருப்பதும் , ஒளிப்பதிவும்  , யுவன் -ன் இசையும் தான் . அதனால படத்தோட கதைக்கு போகாம நேரடியா 3 ஹீரோயின்களைப்பற்றி முதல்ல பார்த்துடலாம்னா நம்மை எல்லாம் ஜொள் பார்ட்டினு சொல்லிடுவாங்க ( இப்போ மட்டும் என்ன வாழுது ? ) அதனால இந்தப்படத்தோட கதையைஒரு கிளான்ஸ் பார்த்துடுவோம் .


நடிப்பே சுத்தமா வராத களவாணி விமல் தான் மெயின் ஹீரோ .வசனம் உச்சரிப்பே வராத தன்  வாயால  அவர் ஹீரோயின்ட்ட பேசும்போது செம காமெடி .லாசினி தான் இவருக்கு ஜோடி ( பாப்பாவுக்கு என்ன லாஸ் ஆக இருக்கு இனி ? ) ஊர்ல 1008 ஃபிரஸ் பீஸ் இருக்கும்போது ஹீரோ ஆல்ரெடி யாருக்கோ பரிமாறுன சாப்பாட்டு மேல ஆசைப்படறாரு , யாரும் பயப்பட வேண்டாம் , ஃபுல் மீல்ஸ்சும் பரிமாறலை . அதாவது லவ் ஆகி நிச்சயம் ஆகி பிரச்சனையால கேன்சல் ஆன ஃபிகரு .


அப்படிப்பட்ட ஃபிகரை இவரு நாய் மாதிரி பின்னாலயே சுத்தி கிட்டத்தட்ட கரெக்ட் பண்ற ஸ்டேஜ் வந்ததும் ஜகா வாங்கறார்.அவருக்கு திடீர்னு புத்தி வந்துடுது ; லவ் பண்றவனுக்கு ஏது புத்தி அப்டினு லாஜிக் கொஸ்டின் எல்லாம் கேட்கக்கூடாது . அவர் சந்திச்ச 2 லவ் ஜோடிகளின் கதையை அள்ளி விடறார்


a


யதார்த்த நாயகன் சேரன் - பதார்த்த நாயகி தாமிர பரணி பானு ( கறுப்பான கையால என்னை பிடிச்சான்)  ஜோடி கதை . இவரு சமூக சேவகரு சிறைக்கைதிகளுக்கு மறுவாழ்வு  இயக்கம் நடத்தறார்.. ஃபிகர் கிடச்சா போதும்னு  பார்க் பீச்னு கூட்டிட்டுப்போய் காதலியை கூகுள்னு நினைச்சு எதையாவது தேடிட்டே இருக்கும் சாதா காதலன் மாதிரி இல்லை இவரு . பிஹெச்டி படிப்பெல்லாம் படிக்கறாரு. லட்டு மாதிரி ஃபிகர் கிடச்சதும் நம்மாளுங்க பூந்தி ஆக்கிட்டுத்தான் மறு வேலை பார்ப்பாங்க . இவர் என்னடான்னா அன்னை தெரேசா ரேஞ்சுக்கு அவரையும் சமூக சேவகி ஆக்க ட்ரை பண்றார்.


அடுத்து ஆக்‌ஷன் கிங்க் அர்ஜூன் - சுர்வீன் லவ் ஸ்டோரி . இந்த பார்ட் அப்டியே  எதிர் நீச்சல் பின் பாதில இருந்து சுட்டுட்டாங்க போல . ஸ்டோரி டிஸ்கஷன்க்கு உக்கார்ந்த ஆட்கள் ஒரே ஹோட்டல்ல பக்கத்து பக்கத்து ரூம் போட்டு இருப்பாங்க போல அர்ஜூன் ஒரு ஸ்விம் கோச். ஹீரோயினை நீச்சல் வீராங்கனையா ஆக்க பயிற்சி அளிக்கறார் , சைடுல அவரை லவ்வறார். ஆனா பாருங்க ஒரு விபத்துல அவருக்கு அடிபட்டு கழுத்துக்கு கீழே எதுவும்  வேலை செய்ய முடியாத நிலைக்கு போறார். அவர் அப்டி ஆனதால ஹீரோயின் வீட்ல லவ்வுக்கு எதிர்ப்பு . அவரை கழட்டி விட்டுடு அப்டினு அட்வைஸ் பண்றாங்க . ஆனா  தெய்வீகக்காதல்னு அவ பம்மறா


 சுருக்கமா சொல்லப்போனா 3 காதலும் விளங்கலை . அவ்வளவு தான் கதை ஹி ஹி


முதல் ஹீரோ விமல் . டயலாக் டெலிவரிக்காகவே இவர் வாய்க்கு சூடு வைக்கனும்  அப்பா சாமி முடியலை

 


 ஹீரோயின் லாசினி புருவத்தை டெய்லி பியூட்டி பார்லர் போய் ட்ரிம் பண்ணிட்டு வருவார் போல . வரைஞ்சு வெச்சது மாதிரி இருக்கு .தான் ரொம்ப அழகு என்ற கர்வம் அவர் பாடி லேங்குவேஜ்ல தெரியுது .  இன்னும் என்ன வெல்லாமோ தெரியுது . யாராவது அவர் கிட்டே நீங்க நார்மல் ஃபிகர் தான் 50 மார்க் தான் தேறும்னு சொல்லி வெச்சா தேவலை .  அவர் டைட் பனியன் போட்டு வரும் காட்சிகள் 5  . ஸ்லோ மோஷனில் ஓடி வரும் காட்சிகள் 6 . கீழே தேவை இல்லாமல் குனியும் காட்சிகள் 4


அடுத்து சேரன் . இவர் முகம் முத்திடுச்சு . ஆனா பொறுப்பா கண்ணியமா நடிச்சிருக்கார் . மனசுக்குள்ளே ஆட்டோகிராஃப் மாதிரி இன்னொரு ஹிட் குடுக்கனும்னு ஒரு ஆதங்கம் அவர் கண்ல நல்லாத்தெரியுது



இவருக்கு ஜோடியா வரும் பானு  குட் கட்டை . ஆனா படத்துக்கு இயக்குநர் எஸ் ஜே சூர்யான்னா பிரிச்சு மேஞ்சிருப்பார். ஆனா வசந்த் . அவர் ரொம்பவே டீசண்ட் . அதனால பானுவை கண்ணியமாகவே காட்டி இருக்கார்



அர்ஜூன்  ஆக்‌ஷன் பண்ணவோ , பாகிஸ்தான் தீவிரவாதி கிட்டே பஞ்ச் டயலாக் பேசவோ வழி இல்லாம திண்டாடறார். இவர் போர்ஷன் செம போர் . தூங்கிட்டேன் . நான் மட்டும் தனியா தூங்கலை , தியேட்டர்ல இருந்த 87 பேரும் தூங்கிட்டோம் . தூங்காம விழிச்சுட்டு இருந்த அந்த கள்ளக்காதல் ஜோடிகள் 5 செட் என்ன செஞ்சாங்களோ ?

ஹீரோயின் பர்வீன் ( டைட்டில் ல சுர்வீன் ) உதட்டு அழகி . கூந்தல்க்கு மருதாணி , செம்பருத்தி இலை தேய்ச்சு இருப்பார் போல செம்பட்டையா இருந்தாலும் அழகாத்தான் இருக்கு . இவரு நீச்சல் உடையில் வரும் காட்சிகளில் லாங்க் ஷாட் கேமரா ஆங்கிள் வைத்த ஒளிப்பதிவாளருக்கு என் கடும் கண்டனங்கள் . இவங்க மட்டும் தான் ரசிக்கனுமாம் ஹூம் சுயநலம் .





 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. லொகேஷன் செலக்‌ஷன்ஸ் பக்கா .  கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கைக்காட்சிகள்  பிளஸ்


2. மூன்று ஹீரோயின்கள் செலக்‌ஷன் கனகச்சிதம் . நம்மாளுங்க கதை செலக்‌ஷன்ல கோட்டை விட்டாலும் ஹீரோயின் செலக்‌ஷன்ல கோட்டை விடறதில்லை


3. படத்தில் காமெடி டிராக் ஏதும் தனியா வைக்காமல் 3 காதல் கதைகளை மட்டும் எடுத்தது



4. வசனங்களில் ஆங்காங்கே வசந்த் டச்



இயக்குநரிடம் சில கேள்விகள்


1. நீச்சல் கோச்சாக வரும் 50 வயசு அங்கிள் அர்ஜூனிடம் 16 வயசு ஃபிகர்  லவ்வில் விழுந்தது எப்படி ? நீச்சல் கோச் நடக்கும்போது டச்சிங்க் டச்சிங்க் எதுவும் நடக்காம இருக்குமா? ( அதை ஏன் காட்டலை? ஹி ஹி )


2. நீச்சல் பயிற்சிக்கு பகல்ல போகாம ஏன் நடு ராத்திரில போறாங்க?


3. நீச்சல் வீராங்கனையா வரும் சுர்வீன் விமலின் தோழி என வசனத்தில் மட்டும் வருது , காட்சியில் இல்லை


4. மூன்று காதலையும் ஐ மீன் காதல் கதைகளையும் சேர்க்கும் மையக்கோடு என எதுவும் இல்லை . அது சுவராஸ்யத்தை குறைத்து விடுது



5. லவ் ஸ்டோரின்னா லவ்வர்ஸ் சேருவாங்களா? மாட்டாங்களா? என ஒரு எதிர்பார்ப்பை , துடிப்பை ஏற்படுத்தனும் . ஆனா அவங்க சேர்ந்தா என்ன சேராட்டி என்ன? என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது பலஹீனம்



6 . படம் போட்ட முதல் 30 நிமிஷத்துல 3 பாட்டு . விமல் என்ன விஜயா? முடியல . பாடல் காட்சிகள்  2க்கு இடையே போதிய இடை வெளி வேணாமா?


 7. ஹீரோ செலக்‌ஷன் தப்பு . ஏன்னா இது யூத்ஃபுல் லவ் ஸ்டோரி . அங்கிள்ஸ் லவ் ஸ்டோரி இல்லை . அர்ஜூன் , சேரன் எல்லாம் இதுக்கு சூட் ஆகலை



8. காதல் கதைகள் 3 இருந்தும் எதிலும் உண்மைக்காதலோ , அதற்கான சுவடோ இல்லை , எல்லாமே தியாகம், சேவை , டைம் பாஸ்னு போயிடுச்சு , அதனால ஆடியன்ஸ் மனசுல ஒரு பாதிப்பை ஏற்படுத்த முடியல. ஒரு லவ் ஸ்டோரி சக்சஸ் ஆகனும்னா பார்ப்பவர் மனதில் ஒரு பதை பதைப்பு ஏற்படனும்






 தூங்கிய நேரம் போக மிச்சம் மீதி கவனித்ததில் தேறிய மனம் கவர்ந்த வசனங்கள்


1. காதல்ங்கறது காதலி கிட்டே இது வேணும்னு கேட்கறது இல்லை.அவளுக்குப்பிடிச்சதை அவ கேட்காமயே கொடுக்கறது




-------------------


2. ஜெயிச்சவன் தொடர்ந்து ஜெயிச்சுட்டே இருந்தாத்தான் மரியாதை


---------------


3. யோசிச்சுப்பார்த்தா காதலை விடப்பைத்தியக்காரத்தனம் எதுவும் இல்ல.ஆனா யோசிச்சாத்தானே ? 



---------------------


4. அவனவன் தன் காதலியை 1 மணி நேரத்துக்கு 1 முறை போய் பார்க்கறாங்க . பார்க்கனும்னு இந்தக்காலப்பசங்க நினைக்கறாங்க

 நானெல்லாம் அப்டிப்பார்த்தா ஜூரம் வந்துடும் . மொக்கை ஃபிகரு 




=-----------------------


5. அழகா இருப்பா னு சொல்றே.ஆனா பேரு தெரியாதா ? ஒரு பொண்ணை அழகா இருக்கானு சொல்ல அவங்க பேரு எதுக்கு ?



-------------------

 6  குழப்பமான மன நிலைல இருக்கற ஒருத்தனாலதான் காதலிக்க முடியும்


---------------


7. எங்க ஃபேமிலில  எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருப்போம் , ஜோக் எதுவும் சொல்லத்தேவை இல்லை  ஜோக்னு சும்மா சொன்னாலே போதும் சிரிப்போம்



------------------


8. எதுக்கு என் மகளை அப்படி குனிஞ்சு பார்க்கறீங்க? அவ என்ன அவ்வளவு குள்ளமா?



---------------


9. ஒரு பொண்ணை அழகுன்னு சொல்ல அவங்க பேரு எதுக்கு?




-------------



10.  அழகான 2 பேர் ஏன் தனித்தனியா சாப்பிடனும்? வாங்க சேர்ந்தே சாப்பிடலாம்


-------------




11. மிஸ்  ஒருத்தன் ஒரு நாள் ல 86,400 தடவை ஒருத்தியை நினைக்கறான்னா என்ன அர்த்தம்?


 தெரியலையே?


 டெயிலி எல்லா டைமும் அவளையே நினைச்சுட்டு இருக்கான்னு அர்த்தம்



----------



12.  ஹலோ ! நான் சிரிச்சது உங்க ஜோக்குக்குத்தான், உங்களுக்காக இல்லை


 ஆனா அந்த ஜோக் என்னுதுதானே?



---------------


13.  ஏம்ப்பா பஃபே சிஸ்டம் ஓக்கே , இந்த தட்டு இதுதான் லாஆஸ்ட் சைஸா? எக்ஸ்ட்ரா லார்ஜ் கிடையாதா?



--------------


14.  ஃபாரீனர் - ஹாய் . ஐ ஆம் ஃபிராங்க் அண்ட் கோ


 சத்யன் - ஐ ஆம் வசந்த் அண்ட் கோ




-----------

15. உங்க லெஃப்ட் ஹேண்ட் ஏன் அங்கே இருக்கு? கொடுங்க , பத்திரமா நான் வெச்சிருக்கேன்

 ம்ஹூம்

 சரி என் கையை எடுத்துக்குங்க . அது ஃப்ரீயாத்தான் இருக்கு ( நல்ல வேளை )



---------------

16. ஏய். நீ லவ் பண்ற நாய் வீட்டு நாயா? தெரு நாயா? டக்னு சொல்லு பார்ப்போம்



------------


17.  ரெண்டு கால் இருக்கும் நாமே வாக்கிங்க் போகும்போது 4 கால் இருக்கும் நாய்ங்க வாக்கிங்க் போவதில் என்ன தப்பு?



-----------


18. நமக்குப்பிடிச்சதை செய்வது என்பது வேறு . சரியானதைசெய்வது என்பது வேற




------------------


19.  உடம்புல எந்த காயத்தையும் ஏற்படுத்தாத ஒரே அத்லெட் நீச்சல் தான்



---------------


20.  யார் என்னை எப்டி சொன்னாலும் நீ என்னை பாராட்டும்போது வர்ற கிக்கே தனி


-------------


21. மத்தவங்க எல்லாம் என்னை எப்படி கூப்டறாங்க்ளோ அதே மாதிரி நீயும் கூப்பிட்டா என்ன கிக் அதுல ?



-----------------


22.  எல்லா சேம்ப்பியன்சும் ஆல்ரெடி ஒரு முறையாவது தோல்வியை சந்திச்சவங்களாத்தான் இருப்பாங்க



----------------------

23. பொண்ணுங்க உன்னை மாதிரி சுமாரா இருந்தாலே போதுமே , பசங்க பல்லைக்காட்டுவாங்களே


---------------


24. டார்கெட்டையே பார்த்துட்டு இருப்பவன் தான் வின்னர் ஆவான்


--------------


 


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41



எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே


ரேட்டிங்க் -    2.25 / 5


 சி பி கமென்ட் -  தூக்கம் வராம அவதிப்படறவங்க போனா 20 நிமிஷத்துல தூக்கம் கேரண்டி . கள்ளக்காதலர்கள் போலாம்,. தியேட்டர்ல ஆபரேட்டர் கூட இருக்க மாட்டார். ஆன் பண்ணிட்டு போய்டுவார் . எஞ்சாய்  

 

டிஸ்கி - நான் பெண்களை மதிப்பவன் என்பதை காட்டவும் , ஆணாதிக்கவாதி அல்ல என்பதைக்காட்டவும் தான் இப்படி ஆண் ஹீரோக்களின் ஃபோட்டோக்களைத்தவிர்த்திருக்கிறேன் , பெண்ணியவாதிகள் , மாதர் சங்கங்கள்  இதுக்கு ஏதாவது விருது , பரிசு தந்தால் சாரு போல் கூச்சமே இல்லாமல் வந்து வாங்கிக்கொள்வேன் ;-))

Sunday, April 28, 2013

நான் ராஜாவாகப்போகிறேன் - சினிமா விமர்சனம் ( மாற்றான் தோட்டத்து மல்லிகை )

"பாய்ஸ்" நகுல், "காதலில் விழுந்தேன்" படத்தின் மூலம் ஸோலோ ஹீரோ ஆனார்! அதைத்தொடர்ந்து வெளிவந்த "மாசிலாமணி", "கந்தகோட்டை" உள்ளிட்ட படங்களில் சோர்ந்து விழுந்த அவரை, எழுப்பி நிற்க வைக்கும் விதமாக வெளிவந்திருக்கிறது "நான் ராஜாவாகப்போகிறேன்" திரைப்படம் என்றால் மிகையல்ல!

இமாச்சல பிரதேசத்தில் இந்திய எல்லை பகுதியில் தன் தாய் சீதாவுடன், மாமா வாசு விக்ரமின் ஆதரவில் வாழும் ஜீவா எனும் நகுல், சதா சர்வகாலமும் தூங்கி வழியும் கேரக்டர். ஒருநாள் சிறுவர்களுடன் விளையாட்டுத்தனமாக மிலிட்டரி கேம்பிற்குள் அத்துமீறி நுழைந்தார் என்பதற்காக சின்ன தண்டனை பெறும் அவரை பார்க்கும் ஜவான் ஒருவர், சென்னையில் தன்னுடன் படித்த ராஜா மாதிரியே ஜீவாவும் இருப்பதாக சொல்லி கிக்பாக்ஸிங் புலியான ராஜாவின் வீடியோவையும் ஜீவாவிற்கு போட்டு காட்டுகிறார்.



 அந்த வீடியோவைப்பார்த்தது முதல் தன் மாதிரியே இருக்கும் ராஜாவை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆசை ஜீவாவிற்குள் துளிர்விடுகிறது. அம்மா, மாமா ஆகியோர்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கு ரயிலேறுகிறார் ஜீவா அலைஸ் நகுல்!

 



அப்புறம் ? அப்புறமென்ன...?! வழியில் போபாலில் ராஜாவை ஒரு தலையாக காதலித்து தோற்ற அவரது தோழி ரீகா எனும் அவனி மோடியையும் கூட்டிக்கொண்டு சென்னைக்கு வருகிறார். சென்னைக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே, ஜீவா எனும் நகுல் தான் ராஜா என்பதும் தெரிய வருகிறது.


அவரது காதலி சாந்தினி என்ன ஆனார்? ராஜா - ஜீவாவாகக் காரணம்  யார் யார்...? அவர்‌களை ஜீவா அலைஸ் ராஜா எனும் நகுல் எவ்வாறு பழிதீர்த்தார்? காதலி சாந்தினியை கரம் பிடித்தாரா...? இல்லையா...? என்பது நான் ராஜாவாகப்போகிறேன் படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!


‌ஒரே நகுல், ஜீவா - ராஜா என இருவேறு பரிமாணங்களில் வெகுளி பாத்திரத்திலும், வெகுண்டெழும் பாத்திரத்திலும் கிடைத்த கேப்பில் எல்லாம் நடித்து "நான் ராஜாவாகப்போகிறேன்" படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். அதிலும் கிக்பாக்ஸிங் நகுல் செம கிளாஸூங்கோ!

 



சாந்தினி, அவனி மோடி என இரண்டு நாயகியர். இருவரில் சாந்தினி ஹோம்லி, பேமிலி என்றால், அவனி மோடி கிளாமர் ப்ளேவர்... வாவ்., நடிப்பிலும் என்னமாய் மிரட்டுகிறார்கள் அம்மணிகள். சாந்தினி, அவனி மோடி மாதிரியே முஸ்லிம் பெண் தோழியாக வரும் ஜானகியும் நடிப்பில் நம்மை வருகிறார்.

நகுலின் முஸ்லிம் நண்பராக வரும் நிஷாந்த், அடியாள் கூட்ட தலைவராக வரும் "தூங்காநகரம்" இயக்குநர் கெளரவ், சீதா, ஆர்த்தி, கஸ்தூரி, வனிதா விஜயகுமார், செந்தி, ஒருபாடலுக்கு ஆடும் ஸெரீன் கான், நகுலின் அப்பாவாக வரும் மாஜி ஹீரோ சுரேஷ், ஜெயசிம்மா, முத்துராமன், சேத்தன், குமரவடிவேல், டெல்லி கணேஷ், தியாகு, மயில்சாமி, கிரேன், மனோகர், "மூணாறு ரமேஷ் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.


 இவர்கள் எல்லோரையும் காட்டிலும் சிறப்பு தோற்றத்தில் பி.டி.கத்திரிக்காய் உள்ளிட்ட விஞ்ஞானத்தின் விநோதங்களையும், அதன் தீமைகளையும் பேசும் மணிவண்ணனின் சிறப்பு தோற்றமும், அவரது அநியாய மரணம் மற்றும் வில்லாதி வில்லனாக வரும் ஏ.வெங்கடேஷின் கெட்ட-அப்பும் பிரமாதம், பிரமாண்டம்!

 



ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை, வெற்றிமாறனின் வசனம், ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு, ஜோ‌தி பிரகாஷின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், புதியவர் பிருத்விராஜ் குமாரின் எழுத்து இயக்கத்திற்கு வலு சேர்த்துள்ளன.

வழக்கமான தமிழ் சினிமா மாதிரியே இயற்கை உபாதை போவதை எல்லாம் காமெடி எனும் பெயரில் படம் பிடித்து காட்டியிருப்பது உள்ளிட்ட ஒரு சில குறைகள் இருந்தாலும், ஒருசில் சின்ன சின்ன போராட்டங்கள் மூலம், இலங்கை தமிழர் விவகாரத்தையும், பி.டி.கத்திரிக்காய், வேலி கருவேல் மரங்களின் விஞ்ஞான விபரீதத்தையும் இந்தப்படம் அளவிற்கு எந்தப்படமும் அழகாக அறிவுறுத்தியதில்லை... எனும் காரணங்களுக்காகவே "நான் ராஜாவாகப்போகிறேன்" சோடை போகவில்லை! நல்விலை போகும் எனலாம்

மொத்தத்தில், "நான் ராஜாவாகப்போகிறேன்" திரைப்படத்திற்கு தமிழ் ரசிக மந்திரிகள் ஆதரவு நிச்சயம்! நிதர்சனம் எனலாம்!!


நன்றி - தினமலர்

சாந்தினிக்கு கண்ணு பெருசு , மத்ததெல்லாம் சின்னது , அவனி மோடிக்கு கண்ணு ரொம்ப சின்னது ,  மத்ததெல்லாம் பெருசு , இதுதான் வாழ்க்கை 

 
 சாந்தினி , அவனி மோடி

Friday, April 26, 2013

யாருடா மகேஷ் - சினிமா விமர்சனம்

 

யூ ட்யூப் ல சூப்பர் டூப்பர் ஹிட் ஆன ஒய் திஸ் கொலை வெறி டி பாட்டு  இடம் பெற்ற சைக்கோ ஸ்டார் தனுஷ் -ன் 3 அட்டர் ஃபிளாப் ஆச்சே, அதுக்கு அடுத்த வாரிசு , ட்ரெய்லர்லயே செம கலக்கு கலக்கின யாருடா மகேஷ்  பட ட்ரெய்லர் இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்ன ஆச்சு?னு பார்ப்போம் .


ஹீரோ 10 அரியர் வெச்சிருக்கும்  பாடாவதிப்பையன். ஹீரோயின் காலேஜ்லயே ஃபர்ஸ்ட் மார்க் வாங்குன   பொண்ணு. அந்த டக்கர் ஃபிகருக்கு இந்த டொக்குப்பையன் ரூட் விடறான். பெருசா அவன் 1ம் செய்யலை . சும்மா பார்க்கறான், சிரிக்கறான் , பின்னாலயே நாய் மாதிரி அலையறான் , அதுக்கே ஃபிகர் படிஞ்சுடுது. ( நாம எல்லாம் 4 வருஷம் அலைஞ்சாலும் யாரும் திரும்பிக்கூட பார்ப்பதில்லை )

 அது கூடத்தேவலை. படிப்புல நெம்பர் ஒன்னா இருக்கும் ஃபிகரு படுக்கைல யும் நெம்பர் ஒன் ஆக ஆசப்படுது.  வீட்ல அம்மா, அப்பா இல்லாதப்ப ஹீரோவுக்கு ஃபோன் பண்ணி “ டாடி மம்மி வீட்டில் இல்லை , பக்கத்து வீட்டிலும் யாரும் இல்லை ,சீக்கிரம் வாடா  சண்டாளா ஜிகு ஜிகு ஜிச்சு ஜிச்சு  ஜிச்சு டன டன டனடைன் அப்டினு கூப்பிடுது .





 இவனும் போறான். டைனிங்க் டேபிள் ல டிஃபன் சாப்பிடறான், அப்புறம் பெட்ரூம் போய் ஃபுல் மீல்ஸும் சாப்பிடறான் . ( ஹி ஹி ) ஹீரோயினோட , ஹீரோவோட அம்மா , அப்பா எல்லாம் மாமா , அத்தை மாதிரி போல , கண்டுக்கலை . மேரேஜ் பண்ணி வெச்சுடறாங்க . ஒரு குழந்தையும் பிறக்குது .

 இங்கே தான் ஒரு ட்விஸ்ட். ஒரு டைம் ஹீரோயின் ஃபோன்ல “ டேய் , மகேஷ் , உன்னை விட பெரிய இளிச்சவாயன் சிக்கிட்டான் , உன் குழந்தைக்கும் அவனே அப்பா ஆகிட்டான்” அப்டிங்கறா. நமீதாவை 8 கஜம் சேலைல பார்த்த மாதிரி ஹீரோ ஜெர்க் ஆகிடறான். யாருடி அந்த மகேஷ்னு அப்பவே பளார் பளார்னு 2 அறை விட்டு கேட்டிருந்தா படம் 7 ரீல் லயே முடிஞ்சிருக்கும் , 14 ரீல் இழுக்கனுமே? அதனால ஹீரோ துப்பறியும் சாம்பு கணக்கா கிளம்பி உண்மையை கண்டு பிடிக்க முயற்சிக்கறது தான் மிச்ச மீதிக்கதை


ஹீரோ  கன்னட ஆள். சந்தீப். நம்ம சிரிப்பு இளவரசி சினேகாவோட  முன்னாள் நண்பரான ஸ்ரீகாந்த் முகச்சாயலில் இருக்கார் . ஆள் பர்சனாலிட்டி தான் .நமக்குத்தான் ஆம்பளைங்க பர்சனாலிட்டியா இருந்தா பிடிக்காதே . ஹி ஹி . ஆனா நடிப்பு சுமாராத்தான் வருது . டயலாக் டெலிவரி , டான்ஸ் , ரொமான்ஸ் எல்லாம் ஓக்கே . முயற்சி எடுத்தா முன்னுக்கு வரலாம் 


 ஹீரோயின்  டிம்ப்பிள் . முகத்துல ஒரு பிம்ப்பிள் கூட இல்லை .வழிச்சு வெச்ச மொசைக் தரை மாதிரி க்ளீனா இருக்கு . கண்ணா லட்டு தின்ன ஆசையா  ஹீரோயின் சாயல் ல இருக்கு , 65 மார்க் போடலாம். ( நாம வாங்கறது எப்பவும் ஃபெயில் மார்க்கு இந்த லட்சணத்துல ஊர் ல இருக்கறவங்களுக்கெல்லாம் மார்க் போடறது அலம்பல்டா ) .


பாப்பா கிட்டே டைரக்டர் உக்காரும்மான்னு சொன்னா பெட்ஷீட் குடுங்க சார் , விரிச்சு போட்டு படுத்துக்கறேன்னு சொல்லும் போல . ரொம்ப தாராள மனசு. படம் பார்க்கறவங்க 32 பல்லும் தெரியற மாதிரி சிரிக்கறாங்க , ஹி ஹி . பாப்பாவுக்கு முக பாவனைகள் , நடிப்பு நல்லா வருது ( பார்த்தீங்களா? நான்  ஹீரோயின் முகத்தை கவனிச்சிருக்கேன் , நீ நல்லவண்டா) 

 காமெடிக்கு விஜய் டி வி  நண்டு ஜெகன் .  சந்தானம் மாதிரி ஆக ட்ரை பண்ணி இருக்கார் 30 % கூட ஒர்க் அவுட் ஆகலை . 
 

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. யூ ட்யூப் ட்ரெய்லர் ரெடி பண்ணியதுதான் இவரது பிரமாதமான  ஒரே காரியம். பலரையும் எதிர்பார்க்க வைப்பதே ஒரு ட்ரெய்லரின் முக்கியப்பணி என்பதால் 2013ஆம் ஆண்டின் சிறந்த கமர்ஷியல் ட்ரெய்லர் விருது ( ஏப்ரல் வரை வந்ததில் ) இதுக்குத்தான் . 


2. ஹீரோ , ஹீரோயின் செலஷன் அவங்க கிட்டே வேலை வாங்குனது எல்லாம் ஓக்கே .


3. படத்துல  5 பாட்டு . 3 தேறிடும் . ஓடும் உனக்கு இது ரொம்ப ரொம்ப புதுசு , ஆடும் எனக்கு இது ரொம்ப பழசு செம கிக் ஏற்றும் பாடல்.  புதுப்பார்வை தந்தாயே டூயட் சாங்க் ஒளிப்பதிவு , லொக்கேஷன் செலக்‌ஷன் அருமை , என்ன வரின்னே புரியாத, புரியத்தேவை இல்லாத ஒரு கில்மாப்பாட்டு , 


4. ஜெகனுக்கு  அந்த இடத்தில் ஒரு டைம் அடிபடுவது வழக்கமான காமெடி என்றாலும் 2 வது முறை அடிபடும்போது ஒரு முட்டை கிராஃபிக்சில் பறந்து வந்து 2 ஆக உடைந்து 2 குருவிகள் பறப்பதும் பின்னணியில் ஒரு கூட்டுக்கிளியாக , ஒரு தோப்புக்குயிலாக பாட்டு ( படிக்காதவன் ) இடம் பெறுவதும் கலக்கலான காமெடி 


5. ஆங்காங்கே விரச வசனங்களை ஒதுக்கிப்பார்த்தால் காமெடி நல்லா இவருக்கு ஒர்க் அவுட் ஆகும்னு தோணுது 





இயக்குநரிடம் சில கேள்விகள் , திரைக்கதையில் சில ஆலோசனைகள்( கண்ணா லட்டு தின்ன ஆசையா இயக்குநரிடம் உதவி இயக்குநராக இருந்த மதன் குமார் )


1. பார்ட்டிக்குப்போன ஹீரோயின் ஹீரோ கிட்டே “ குழந்தையை பார்த்துக்கோ” என சொல்லிட்டுத்தான் போறா. ஹீரோ திடீர்னு லூஸ் மாதிரி குழந்தையை விட்டுட்டு பார்ட்டிக்கு வந்துடறான், பார்ட்டி முடிஞ்சு ரிட்டர்ன் போனதும் அப்போ வீட்டுக்கு வந்திருக்கும் ஹீரோவின் பெற்றோர் ஹீரொயினை திட்டும்போது  ஹீரோயின் ஏன் பம்மனும்? தப்பு உங்க பையன் மேல தான்னு சொல்லலாமே? 


2. பொதுவா பொண்டாட்டி மேல சந்தேகப்பட்டா அவளை விட்டு விலகனும் , அல்லது நேருக்கு நேர் அவ கிட்டேயே விசாரிக்கனும், அதை விட்டுட்டு சி ஐ டி மாதிரி வேவு பார்ப்பது , அலைவது (இந்தக்கதைக்கு )தேவை இல்லாதது . தெரிஞ்சு என்ன பண்ணப்போறான்?  (அவ வாயாலாயே கேட்டாச்சு , நோ டவுட் , அப்புறம் என்ன ? அவ கிட்டேயே கேட்டுட வேண்டியதுதானே? ) 


3. ஹீரோயின் பணக்காரி , ஜாப்க்கு போறா . ஹீரோ ஹவுஸ் ஹஸ்பெண்டா குழந்தையைப்பார்த்துக்கிட்டு பொறுப்பா வீட்டோட மாப்ளையா இருக்கான். இதுக்கு மேல ஒரு ஹை க்ளாஸ் ஃபிகருக்கு என்ன வேணும் ? அவன் வேலைக்கு போகலையேஅப்டினு எப்போ பாரு ஏன் புலம்பிங்க்? ஆம்பளைங்க நிம்மதியா இருப்பது இந்த பொம்பளைங்களுக்கு பிடிக்காது போல


4. ஹீரோ மேட்டரை முடிச்சுடறான் . ஹீரோயின் மேல் படிப்புக்காக ஃபாரீன் போறா . இவன் “ ஐ ஜாலி என் ஆள் ஊருக்குப்போய்ட்டா” அப்டினு ஜனகராஜ் மாதிரி துள்ளிக்குதிக்க வேணாமா? லூஸ் மாதிரி “ என்னை மறந்துட மாட்டியே?  அடிக்கடி ஃபோன் பண்ணுவியா? அப்டினு பேசிட்டு இருக்கான். இந்தக்காலத்துல மேட்டரை முடிச்ச ஒரு காதலனுக்கு  காதலி மேல இவ்ளவ் அஃபக்‌ஷன் வருமா? 


5. கில்மா காமெடி என்பது கே பாக்யராஜ் பண்ற மாதிரி லேடீசும் ரசிப்பது மாதிரி இருக்கனும் , எஸ் ஜே சூர்யா-து மாதிரி பட்டவர்த்தனமா இருக்கக்கூடாது , எப்போதும் இலை மறை காய் மறைக்கே மதிப்பு , ஆர்வம்  எல்லாம் 


6.  ரோபோ சங்கரின் 3 நிமிஷ காமெடி படு செயற்கை  விரசசத்தின் உச்சம், மாரியம்மன் கோவில் கரகாட்டக்கோஷ்டி கூட இப்படி பச்ச்சையா பேச மாட்டாங்க 


7. படம் நெடுக  நாடகம் பார்ப்பது போன்ற உணர்வு .


8. ஜெகனுக்கு ஜோடியாக வரும் மொக்கை ஃபிகரை செலக்ட் பண்ணினது யாரு?  நல்ல ஃபிகரா போட்டிருக்கலாம் 

9. இடைவேளை வரை வசனங்கள் காப்பாற்றி இருக்கு . இடைவேளை வந்ததும் படம் படுத்துடுது .  திரைக்கதை அமைப்பில் கோட்டை விட்டு விட்டார் இயக்குநர் . ஒரு ஆளைத்தேடிப்போகும் திரைக்கதை தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றதே இல்லை


 10.  நமீதா  தன் தலைல தானே மண்னை  வாரிப்போட்டுக்கொண்ட மாதிரி எந்தப்பொண்ணாவது  தன் கேரக்டரை தானே ஸ்பாயில் பண்ணிக்கொள்வாளா?  டிராமா  என்று சால்ஜாப்பு சொன்னாலும் எடுபடவில்லை 


11. என்னதான் அப்பா , பையன் சகஜமா பழகினாலும் கில்மா சி டி காட்சிகள் எல்லாம் ஓவர் 



 மனம் கவர்ந்த வசனங்கள்   18 + 


1. ''ஏய்... கொஞ்சம் காட்டேன்...''



  ''ச்சீய்...'' -

  ''கொஞ்சம் காமியேன்...''

  ''போடா!''

  ''யாரும் பார்க்க மாட்டாங்க, நான் மட்டும் பார்த்துக்குறேன்.''


''சரி, பார்த்துத் தொலை!''

எக்சாம் பேப்பரைக்காட்ட இந்த சிலுப்பு?


2. ஒரு வயசுப்பையன் ரூமுக்குள்ளே கதவைத்தட்டிட்டு உள்ளே வர வேணாம்?


3. என்னை மாதிரி வயசுப்பையனைக்கூட நம்பிடலாம், ஆனா உன்னை மாதிரி வயசான ஆளை நம்பக்கூடாது

4. மேத்ஸ் எக்சாம் எப்டிடா எழுதுனே? அந்த SUM சுந்தரி மிஸ் முதுகு மாதிரி பெருசா இருக்குடா


5.  டேய் , முன்னாடி , பின்னாடி பார்த்து வண்டி ஓட்டுடா


முன்னால பார்த்தாச்சு , பின்னால இனிமேத்தான் பார்க்கனும்



6.  நாளைக்கு என்னடா பரீட்சை?

 இங்க்லீஷ் டாடி

 ஓஹோ , அதுக்குத்தான் அந்த இங்க்லீஷ் படம் பார்த்துட்டு இருந்தியா?



7.  சார், நிக் நேம் வெச்சு விளையாடறாங்க சார் , உங்களுக்குக்கூட பட்டபேரு இருக்கு

 அப்டியா? என்ன அது?

 வேணாம் சார், எனக்கே  வெட்கமா இருக்கு


 சும்மா சொல்லுங்க

 சின்ன மணிங்கற உங்க பேரை .........


8. இந்த எக்சாம்க்கு கால்குலேட்டர் எதுக்கு கொண்டாந்திருக்கே?


 மேத்ஸ்  எக்சாம்க்கு கால்குலேட்டர் கொண்டு வராம எஸ்கலேட்டரா கொண்டு வருவாங்க ?



9. உங்க 2 பேருக்கும் ஏன் சண்டை வந்தது?


 அவ மொபைல்ல எப்பவும் 50 பைசா தான் பேலன்ஸ் இருக்கும், எப்பவும் மிஸ்டு கால் தான் வுடுவா , நான் தான் பேசுவேன் . ஆனா ஒரு டைம் அவ மிஸ்டு கால் குடுக்கும்போது தெரியாம அட்டெண்ட் பண்ணிட்டேன் ,. இருந்த 50 பைசாவும் போயிடுச்சு , அவளுக்கு அவுட் கோயிங்க் கட். அதான் கோபம்


 த்தூ


10.  டியர் , சினிமாவுக்குப்போலாமா , இது ஒரு கில்மாப்படம்

 ச்சீ நான் வர்லை

 ம்க்கும், அன்னைக்கு போர்வைக்குள் போர்க்களம் மட்டும் வந்தே ?



11.  எனக்கு பாட்டுக்கேட்கலைன்னா தூக்கமே வராது


 நல்ல வேளை பால் குடிக்கலைன்னா தூக்கமே வராதுன்னு சொல்லாம விட்டியே . நீ அங்கே போ , ஏம்மா கொஞ்சம் போர்த்திட்டு படும்மா, எனக்கே ஒரு மாதிரியா இருக்கு . எவனாவது படம் எடுத்திடப்போறான்


12. நீ த்ரிஷா மாதிரியே இருக்கே


 நிஜமாவா? 


 சும்மா, நீ த்ரிஷாவை நேர்ல பார்த்ததே இல்லையா?



13. எங்கேடா போய்ட்டு வர்றே?

 உடம்பு சரி இல்லை,  டானிக் குடிச்சுட்டு வர்றேன்

 டாஸ்மாக்கில் டானிக்கா>?



14.  எங்கே ஆ காட்டு

 ஆ

 அடேங்கப்பா , எவ்ளவ் பெரிய வாய் . வாயே இவ்ளவ் பெருசா இருக்கே....



15.  பிரின்சி பால் - டேய் ராஸ்கல்

 சார், அது எங்கப்பா சார்


16.  இங்கே 1 ஃபிகர் கும்முன்னு இருந்துதே எங்கே காணோம் ?

 அட இங்கே கூட 1 இருக்கு

 மிஸ் , உங்க பேரென்னா?


 உங்களுக்குத்தான் எட்டலையே? ஏன் எம்பறீங்க?




17.  ரூமில் இருக்கும் பிரின்சிபால் ( பக்கத்தில் ஒரு டீச்ச்சர்)

 உள்ளே வாடா

 வேணாம், சார், நானும் வந்தா அது நல்லா இருக்காது


18.  நீ படும்மா


 சார்

 அட, உன் ரூம்ல போய்ப்படும்மா


19.  என்னமோ நீ பெருசா ஃபிலிம் காட்டுனே, அவ ளுக்கு அதை விடப்பிரமாதமா நான் காட்டிட்டு வந்துட்டேன்



20.  டேய் , என்னடா ஜட்டியோட வந்திருக்கே?


 சார். அது வந்து .. என் பேண்ட்டை காணோம், அதைத்தேடித்தான் வந்தேன் ஹி ஹி


21. மேடம், வாங்க உங்களை நான் டிராப் பண்றேன்

 யோவ், என்னமோ பென்ஸ் கார்ல டிராப் பண்ற மாதிரி சொல்றீங்க்ளே, இந்த ரூம் ல இருந்து அந்த ரூம் போகப்போறேன்


22.  என்னடி? நெஞ்சுல கை வைக்கறே? நான் வெச்சா என்ன ஆகும்னு தெரியுமில்ல?


23.  என்னடா ? இவன் பாலா பட ஹீரோ மாதிரி இருக்கான்? பார்த்துடா , கடிச்சு வெச்சுடப்போறான்


24. தூங்கிட்டியா?

 ம் , சொல்


தூங்கிட்ட மாதிரி நடிக்கறியா? போடா


25. அவ என் கூட விடிய விடிய ஃபோன் ல பேசுனாடா

 இப்போ பாரு அவன் கூட பேசிட்டு இருக்கா. ஒரு வேளை 2 பேர் கூடவும் கான்ஃபரன்ஸ் கால் போட்டு பேசி இருப்பளோ ?



26. உன்னை வாத்து மடையன்னு சொல்லிட்டுப்போறான்

 அவனுக்கு எப்டி தெரிஞ்சுது ?



27.  Y, O , U , T ,H  = YOUTH யூத்-னு சொல்றோம் . ஆனா  S, O , U , T ,H  = SOUTH  சவுத்னு ஏன் சொல்றோம்? ஹி ஹி



28.  டேய் , முதல்ல போடு


 வாட்?

 காலைப்போடு

 அவ மேல காலைப்போடனுமா?

 ஸ்டுப்பிட் , CALL  போடுடா


29.  ஏய்


 திரும்பாதடி, திரும்புனா அவன் தண்ணி அடிக்க காசு கேட்பான்


30.  ஜெகனுக்கு கிரிக்கெட் ஆடும்போது பந்து முக்கியமான படக்கூடாத இடத்துல பட்டுடுது , அப்போ ஹீரோயின் கமெண்ட் டூ தோழி


 உன் ஆள் அவர் வாழ்க்கைல அடிச்ச கடைசி ஷாட் இது தாண்டி



31.  டேய் , அங்கே அடி பட்டுடுச்சுடா


 தேய்ச்சு விடுடா

 அது என்ன அலாவுதீன் விளக்கா?



32. டேய் , நீ என் நண்பன் தானே> காண்டம் ஒரு பாக்கெட் வாங்கித்தாடா

 அதை வாங்கி நீ என்னடா பண்னப்போறே?

 ம், பலூன் ஊதி பறக்க விட


33. ம்க்கும் , இவன் காண்டம் வாங்கவே இப்படிப்பம்முறான்.. இவனெல்லாம்


34.  கடைக்காரர் - ஏம்ப்பா பம்முறே?

 மெல்லிய குரலில் - சார் , காண்டம் வேணும்



 ஏன் ஸ்லோவா சொல்றே? (சத்தமா )
 தம்பிக்கு காண்டம் பார்சல் 



35. ஹீரோயின் - வாடா , டைனிங்க் ஹால் போயிடலாம் 

 அங்கே எதுக்கு?

 அதுதான் கம்ஃபர்ட்டபிளா  இருக்கும்


அடிப்பாவி 


36.  நீதாண்டி எஸ் எம் எஸ் ல பி எஃப் க்கு கூப்பிட்டே?

 அடேய், பிரேக் ஃபாஸ்ட் தான் அது  BREAK FAST = BF ) 



37 . இந்தாடா , உனக்காக இட்லியும் வடையும் ரெடி பண்ணி வெச்சிருக்கேன் 


 இதுக்கா இவ்ளவ் தூரம் வந்தேன்?

 தெரியும்,  அதான் பூரியும் பண்ணி இருக்கேன் 



38 . காலையில் மேட்டரை முடிச்சுட்டு வீட்டுக்குப்போன ஹீரோ ஹீரோயினுக்கு ஃபோன் பண்ணி 

 காலைல பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டோம் , நைட் டின்னருக்கு வரலாமா? ஹி ஹி  ( ஏன் லஞ்ச்க்குப்போகலையா? ) 


39.  பெண்ணின் அப்பா - வாட்ஸ் யுவர் ஃபியூச்சர் பிளான்?

 10 அரியர்ஸ் இருக்கு , அதை க்ளியர் பண்ணனும் 


40.  இவனுக்கு எப்டிங்க நம்ம பொண்ணைத்தர்றது?

 இப்போ இருக்கும் பொண்ணுங்க எல்லாம் செம விபரம் . ஃபாரீன் போனதும் இவளே அவனை கழட்டி விட்டுடுவா பாரு 



41.  உன் கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசனும் 

 எஸ் டாடி 

 அந்த கில்மா சி டி எங்கே ? 


 42  நான் கர்ப்பமா இருக்கேண்டா 

 நாம தான் காண்டம் யூஸ் பண்ணினமே?

 நீ எப்படா யூஸ் பண்ணினே? 


43. ஏய் , கல்லு ரொம்ப சூடா இருக்கு 


 உனக்கு தோசை வேணுமா? வேணாமா?  தள்ளி நில்லு 



44.  மேடம், உங்களை நான் எப்பவாவது  இப்படி கட்டிப்பிடிச்சு இருக்கேனா?

யோவ் , இப்போத்தான் அதை பண்ணிட்டு இருக்கீங்க 



45.  ரோபோ சங்கர் - உன்னை நம்பி இவ்ளவ் பெரிய வீட்டைகட்டி வெச்சிருக்கேன்


 மனைவி - ஹூம் வீடு பெருசா இருந்து என்னய்யா பிரயோஜனம்?



46.  வெளில போய்ட்டு வந்த தால அவர் மண்டை சூடாகிடுச்சு , வீட்லயே இருக்கற உனக்கு 


 என்னங்க

 உடம்பு சூடாகிடுச்சுன்னு சொல்ல வந்தேன் 


47. என்னடா மச்சான்? உன் பொழப்பு  என் பொழப்பை விடக்கேவலமா இருக்கு? 


48. ஃபியூஸ் போன பல்பு நீ . உனக்கே அவ்ளவ் கொழுப்பா? 



எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 36 


 குமுதம் ரேங்க் - சுமார் 

 ரேட்டிங்க்  2 / 5 



சி.பி கமெண்ட் -  சி செண்ட்டர் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம். திரு விழாக்களில் கரகாட்டகோஷ்டிகளின் டபுள் மீனிங்க் டயலாக்சை ரசிப்பவர்கள் பார்க்கலாம், மற்றபடி பெண்கள் குடும்பத்துடன் தியேட்டரில் பார்க்க இது உகந்த படம் அல்ல . ஈரோடு சண்டிகா வில் படம் பார்த்தேன்


படம் பார்க்கும்போது ட்விட்டரில் போட்ட ட்வீட் -யாருடா மகேஷ் - சொதப்பலான கதை ,திரைக்கதை .விரசமான மொக்கை வசனங்கள் - விகடன் மார்க் மே பி - 36

Wednesday, April 24, 2013

யார் இவள் - சினிமா விமர்சனம்

 

மேரேஜ் ஆன ஆம்பளைங்களுக்கு பொதுவா பேய் , பிசாசு கண்டா பயம் இருக்காது. ஏன்னா டெயிலி நைட்டும் , பகலும் அவங்கவங்க  சொந்தப்பொண்டாட்டியை க்ளோசப்ல வலுக்கட்டாயமா பார்த்து பார்த்து  மனசு திடம் ஆகி இருக்கும்.அதனால என்னை மாதிரி குழந்தை சுபாவம் உள்ளவங்க, குழந்தைங்க, பெண்கள் தான் பேயைக்கண்டா அலறுவாங்க, பயப்படுவாங்க , அந்த டைப் படம் பார்க்க ஆர்வம் காட்டுவாங்க . அப்பேற்பட்ட படம் தான் இது. அனன்யா ஹீரோயினா நடிச்ச இந்தப்படம் எப்டினு இப்போ பார்க்கப்போறோம். பிரபலமான நாலு நாவல்களை காக்டெயில் ஆக்கி திரைக்கதை அமைச்சிருக்காங்க

கதை 1 ( உல்டா ஆஃப் எண்ட மூரி வீரேந்திர நாத் தின்  திகில் பங்களா )

ஹீரோ சாரு மாதிரி ஒரு நாவல் ஆசிரியர்.  அவர் நாவல் எழுத தன் குடும்பத்தோட ஒரு தீவுக்கு வர்றார். அவருக்கு ஒரே ஒரு சம்சாரம் , ஒரு பொண்ணு .அங்கே வந்து கொஞ்ச நாள் ல யே ஏதோ அமானுஷ்ய சக்தி உலவறதை கண்டு  பிடிக்கறாங்க . 

கதை 2  ( உல்டா ஆஃப்  ஆர்னிகா நாசர் -ன் பனிப்புயல் )


 இப்டியே போனா பயங்கர திகில் கதையா போயிடும் , கொஞ்சம் கிளு கிளுப்பை  ஏத்திக்க வேணாமா?  எழுத்தாளரோட சம்சாரத்துக்கு ஆல்ரெடி ஒரு காலேஜ் மேட் காதலன் இருக்கான்.  அவன் எதார்த்தமாவோ, பதார்த்தமாவோ இங்கே வர்றான், வந்தவன் அப்டியே ஷாக் ஆகிடறான். தன் முன்னால் முன்னாள் காதலி ( எப்டி வாக்கிய அமைப்பு ? ) 


 அடுத்து படம் பார்க்கும் நாம் ஷாக் ஆகிடறோம்,. ஏன்னா ஹீரோயின் மாசமா இருக்கா.  அவ யாரால மாசமா ஆனா? அப்டினு ஒரு ட்விஸ்ட்.  சஸ்பென்ஸ். அடேங்கப்பா ...யாராலும் யூகிக்கவே முடியலை. புருஷன் தான் கர்ப்பத்துக்கு காரணம். ( அட போங்கப்பா , என்ன திரைக்கதை இது ? ) 


 


புருஷன்காரன்  ஒரு டைம் பால்கனில இருந்து தன் சம்சாரம் அவ காதலன் கிட்டே சிரிச்சுப்பேசிட்டு இருக்கறதைப்பார்த்துடறான். நாம பக்கத்துல இருக்கும்போது பல் துலக்கக்கூட வாயைத்திறக்காத சம்சாரம் அவன் கிட்டே மட்டும் பல்லைக்காட்டிப்பேசுதேன்னு கடுப்பு . 


 அபூர்வ ராகங்கள் படத்துல படகுல கூட்டிட்டுப்போய் ரஜினி கமலைப்போட்டுத்தள்ள ட்ரை பண்ணுவாரே , அதே சீனை கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம  சுட்டு எடுத்துட்டாங்க .லவ்வர் க்ளோஸ் 


 நல்லா கேட்டுக்குங்க. இது ஒரு கிளைக்கதை . அவ்ளவ் தான். படத்தை இழுக்கனும் இல்ல? 

கதை 3 -  உல்டா  இந்திரா சவுந்தர் ராஜன் -ன்  மாளிகை தீபம் ) 

அந்த தீவுல ஒரு ஓவியர் இருக்காரு  . அவரோட காதலியை 4 பேர் சேர்ந்து  ஒன் பை ஒன்னா ரேப் பண்ணிடறாங்க . அவ செத்துடறா . இவர் அவ நினைவாவே சுத்திட்டு இருக்காரு . இவருக்கும் மெயின் கதைக்கும் சம்பந்தம் இல்லை ( இப்போ நான் மேலே சொன்ன கதை காட்சி வடிவமா இல்லாம குரல் வடிவுல கதையா வருது )




 மெயின் கதை இனி தான் .இப்போ இன்னொரு ட்விஸ்ட். எழுத்தாளரோட சம்சாரம் அவருக்கு 2 வது சம்சாரம். அவரோட முத சம்சாரத்துக்குப்பொறந்த பொண்ணு தான் இந்த பேய் பிடிச்ச குழந்தை , 2 வது சம்சாரம் முத தடவையா மாசமா இருக்கே  அப்டினு புருஷன் ஆச்சரியமும் படலை , அதிர்ச்சியும் ஆகலை , ஜெர்க் அடிக்கலை . அவன் என்னமோ ஆண்ட்ரியா சர்வ சாதாரணமா “ ஆமா அனிரூத் என் முன்னால் லவ்வர் தான் அதுக்கென்ன இப்போ”ன்னு அசால்ட்டா அடிச்சு விட்டாரே அப்டி இருக்கான்.


 ஒரு மாந்திரீகர் கிட்டே ஆலோசனை கேட்கறாங்க,. ஏன் எழுத்தாளரோட  முதல் சம்சாரத்துக்குப்பிறந்த குழந்தை பேய் பிடிச்ச மாதிரி நடந்துக்குது?  அவரோட 2 வது சம்சாரம் ஏன் சைவமா இருந்தும் மட்டன் சாப்பிடறா? அப்டினு . அப்போதான் அவர் ஒரு கதையை அள்ளி விடறார் . இது கொஞ்சம் கிளு கிளுப்புக்கதை 

 கதை 4  உல்டா ஆஃப்  பேய்க்கதை மன்னன் பி டி சாமியின்  மாய மோகினி




ஒரு ஊர்ல  ஒரு மந்திரவாதி . அதே ஊர்ல ஒரு சந்தனக்கட்டை  மாய மோகினி இருக்கா . மந்திரவாதி கிட்டே ஒரு குரு ஆலோசனை சொல்றாரு  அந்த மாய மோகினியை கரெக்ட் பண்ணி மேட்டரை முடிச்சுட்டா உனக்கு அபூர்வ சக்தி வந்துடும்னு . நானா இருந்தா டக்னு ஒரு கேள்வி கேட்டிருப்பேன். அப்போ நீங்க ஏன் ட்ரை பண்ணலை?னு . ஆனா அவன் அப்டி கேட்கலை 


மாயமோகினியை கசமுசா பண்ணிடறான் , முதல் வசந்தம் ல சத்யராஜ் ( குங்குமப்பொட்டுக்கவுண்டர் ) ஒரு பேயை  ரேப் பண்ணும்போது அது சும்மா இருந்துட்டு மேட்டர் எல்லாம் முடிஞ்ச பின் அய்யய்யோ கற்பு போச்சேன்னு கூப்பாடு போடுமே அப்டி மந்திரவாதி மாய மோகினி இடுப்புல கை வைக்கும்போது கமுக்கமா இருந்துட்டு எல்லாம் முடிஞ்ச பின் ஆர்ப்பாட்டம் பண்றா .  தற்கொலை பண்ணிக்கறா.


 அந்த ஆவி தான் இப்போ இங்கே உலாவது. அந்த ஆவியை யார் திருப்திப்படுத்துனா? ஐ மீன் சாந்தப்படுத்துனா?போலீஸ் ரைட்டர் மேல டவுட் பட்டது ஏன்? இதை எல்லாம் வெண் திரையில் காண்க


ஹீரோவா வர்ற ரைட்டர்  படு கேவலமா தாடி வெச்சுக்கிட்டு தலையே சீவாம  இருக்காரு . அநேகமா ஃபைனான்ஸ் இந்தப்படத்துக்கு இவராத்தான் இருக்கனும். பொதுவா ஆம்பளைங்க நடிப்பைப்பத்தி சிலாகிச்சு நமக்குப்பழக்கம் இல்லாததால் அடுத்த பேராவுக்கு ஸ்கிப் ஆகிக்குவோம்


 ஹீரோயின் அனன்யா . மாடர்ன் டிரஸ் போட்டுட்டு பாந்தமா வர்றார். படம் பூரா ஏகப்பட்ட சுடிதார் , எல்லாத்தையும் ஷூட்டிங்க் முடிச்சுஅப்டியே வீட்டுக்கு கொண்டு போய் இருப்பார்னு நினைக்கறேன் . எல்லாம் செம டிரஸ் . இவர் மாசமா இருக்கும்போது , பேய் பிடிச்ச மாதிரி பாவனை காட்டும்போது ஏகப்பட்ட இடங்கள் ல நடிப்பைக்காட்ட வாய்ப்பு . படத்துல இவர் கிளாமரா நடிக்கலை. அப்டியே நடிச்சாலும் நாம ரசிக்க முடியாது . அப்டி ஒரு பிஞ்சு மூஞ்சி 


அந்தக்குழந்தை  பூ விழி வாசலிலே  பேபி சுஜிதா மாதிரி அழகா இருக்கு. நடிப்பும் ஓக்கே . பேபி ஷாலினி மாதிரி ஓவர் ஆக்டிங்க் பண்ணி கடுப்பேத்தாம இயல்பா நடிச்சிருக்கு 


 


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. போஸ்டர் டிசைனில் இது ஒரு டப்பிங்க் படம் என்பதே தெரியாத மாதிரி அமைச்சது . அனன்யாவை மார்க்கெட்டிங்க் பண்ண உபயோகப்படுத்திக்கொண்டது . பேப்பர் , டி வி விலம்பரங்கள் எல்லாம் கன கச்சிதம் 


2. ஒரு சினிமாவுக்கு ஒரு கதை போதும், ஆனா 4 வெவ்வேற நாவலை அழகா உல்டா பண்ணி கதம்ப மாலை மாதிரி கோர்த்து சொல்லிய விதம் ஓக்கே 


3. திகில் படங்களுக்கே உண்டான ஒளிப்பதிவு , இசை எல்லாம்  சராசரிக்கும் கொஞ்சம் அதிகமான தரத்தில் இருக்கு 

 




 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. பெட்ரூம்ல படுத்திருக்கும்போது கமுக்கமா இருக்கும் அவர் சம்சாரம் ரைட்டர் மும்முரமா கதை எழுதும்போது ரொமான்ஸ்க்கு கூப்பிடுவதும் , அவர் வர மறுத்ததால் கோபம் ஆவதும் ஏன்?  அவர் ஃப்ரீயா இருக்கும்போதே போய் இருக்கலாமே? ( எப்டி முத கேள்வி? ஹி ஹி ) 


2. ரைட்டர் என்ன இதுக்கோசரம் தன் சம்சாரத்தை அவரோட முன்னால் காதலன் கூட பேசிட்டு இரு நான் வந்துடறேன்னு சொல்லிட்டு பால்கனில நின்னு வேடிக்கை பார்க்கறார். எந்த புருஷனும் அப்டி பண்ண ,மாட்டான் . கட் பண்ணி அனுப்பத்தான் பார்ப்பாங்க 


3.  பால்கனில புருஷன் நிக்கறான்.  தன் முன்னாள் காதலன் கூட சிரிச்சு பேசும் ஹீரோயின் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாரா? இப்டியா பப்ளிக்கா நடந்துக்கறது? 



4. ஹீரோயின் தன் புருஷன் கிட்டே குழந்தையோட அப்நார்மல் ஆக்டிவிட்டிஸ் பற்றி சொல்லும்போது அவன் நம்பலை . அவ ஏன் செல் ஃபோன்ல ஃபோட்டோ எடுத்து வெச்சு அவன் கிட்டே ஆதரமா காட்டி இருக்கக்கூடாது ? 


5.  ஹீரோயின் அனாமிகா மட்டன் சாப்பிடும்போது இடது கைல சாப்பிடறாரே? உவ்வே .. 



6. மாசமா இருக்கும் பொண்ணு புது வித டேஸ்ட் விரும்பி சாப்பிடுவா என்று டாக்டர் சொல்வது ஓக்கே , ஆனா சுத்த சைவமா இருக்கும் பொண்ணு அசைவம் சாப்பிடுவது நோ சான்ஸ் 


7. பேய் பிடிச்ச அனாமிகா அந்த சிக்கன் பீசை 10 நிமிஷம் சாப்பிடுவதை க்ளோசப்ல காட்டுவது உஷ் அப்பா முடியல . இன்னொரு உவ்வே சீன் 

 



8. இந்தப்படத்துல வர்ற மாய மோகினி மிஸ் மேட்சிங்க் மோகினியா இருக்கே? அதாவது பச்சைக்கலர் ஜாக்கெட்ட்க்கு சிவப்புக்கலர் பிராவும்  மஞ்சள் கலர் சேலைக்கு  ப்ளூ கலர் பெட்டிகோட்டும் போட்டுட்டு வருதே? ஏன்? 


9. ஹீரோ மேல டவுட் பட்டு வீட்டுக்கு வரும் எஸ் ஐ அப்பவே முட்டிக்கு முட்டி தட்டி விசாரிக்காம “ அடுத்த தடவை வரும்போது நீ உண்மையை சொல்லனும்” அப்டினு அம்போன்னு விட்டுட்டுப்போறது செம காமெடி 


10. கவுரியைக்காணோம்னு ஹிரோ சொன்னதும் அந்த குண்டு ஆள் அந்த ரூம்க்குள்ளே போய் எதுக்கு தாழ்ப்பாழ் போட்டுக்கறார்? அவருக்கு முதல் இரவா நடக்குது? பொண்ணைத்தேடத்தானே போறார்? எதுக்கு தாழ் போடனும்? 


11. பேய் லிப்ஸ்டிக் எல்லாம் பூசிட்டு வருதே , எப்டி?  பியூட்டி பார்லர் கூட போகுமா? 

12. மந்திரவாதி மாய மோகினி இடுப்புல கை வைக்கறார். அப்போ கட் அண்ட் ரைட்டா “ டேய், கையை வெச்சுக்கிட்டு சும்மா இருடா டோய்” அப்டினு கத்தி இருக்கனும் , அல்லது எத்ரிப்பையாவது காட்டி இருக்கனும். அப்டியே சொக்கி கண்ணை மூடி பாவ்லா காட்டிட்டு எல்லாம் முடிஞ்ச பின் அய்யய்யோ போச்சே என்பது ஏன்? 


13. இந்தப்படத்துல மெயின் கதையே அந்த மாய மோகினிதான் அதுக்கு நல்ல கிளாமரா இளமையான நடிகையா போடக்கூடாதா?  45 வயசு ஆண்ட்டியை புக் பண்ணி இருக்கீங்க. அதுவும் பஸ் ஸ்டேண்ட் கிராக்கி மாதிரி இருக்கு.. 


 



ஆனந்த விகடன்  எதிர்பார்ர்பு மார்க் - 40 ( இந்த மாதிரி டப்பிங்க் படத்துக்கு அவங்க விமர்சனமே போட மாட்டாங்க ஹி ஹி ) 


 குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே 


 சி பி கமெண்ட் -  திகில் பட விரும்பிகள் டி வி  ல போட்டா பார்த்துக்கலாம் . மத்த படி பெருசா 1ம் இல்லை , 2ம் இல்லை

Sunday, April 21, 2013

உதயம் என்.ஹெச்-4 - சினிமா விமர்சனம் (தினமலர்)

"பொல்லாதவன்", "ஆடுகளம்" உள்ளிட்ட வெற்றி படைப்புகளை தந்த இயக்குநர் வெற்றிமாறனின் எழுத்து-படைப்பு வடிவமைப்பில், அவரது உதவியாளர் மணிமாறன் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் தான் "உதயம் என்.ஹெச்-4".


பெங்களூரூக்கு படிக்கப்போகும் சென்னை மாணவர் சித்தார்த், உடன் படிக்கும் பெங்களூரூ பெரும்புள்ளி அவினாஷின் மகள் அஷ்ரிதா ஷெட்டியை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் சென்னைக்கு அம்மணியை கல்யாணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் நண்பர்கள் உதவியுடன் கடத்துகிறார். விடுவாரா அவினாஷ்? தன் பண பலத்தையும், படை பலத்தையும் துஷ்பிரயோகம் செய்து சித்தார்த் - அஷ்ரிதா ஜோடியை துரத்துகிறார் பெங்களூரூ என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் மனோஜ் மேனன் எனும் கே.கே.மேனன். 


 

சட்டத்திற்கு அப்பால் சில விஷயங்களில் தனக்கு பெரும் உதவி செய்த அவினாஷூக்கு இவ்விஷயத்தில் சட்டத்திற்கு அப்பாற்பட்டு உதவ முன் வருகிறார். அப்புறம்? அப்புறமென்ன? அன்று இரவு 12 மணிக்கு மேல் 18வயது பூர்த்தியாகும் அஷ்ரிதா ஷெட்டியை, அதற்குள் சித்தகர்த் கையில் இருந்து மீட்டு விட வேண்டுமென்ற கட்டளைக்கு கட்டுப்பட்டு என்.ஹெச் 4 எனப்படும் பெங்களூரூ - சென்னை நேஷனல் ஹைவேஸில் அந்த ஜோடியை துரத்து துரத்தென்று துப்பாக்கியும் கையுமாக துரத்துகிறார்.


 இறுதியில் வென்றது சித்தார்த்தா? கே.கே.மேனனின் துப்பாக்கியா...? என்பது வித்தியாசமும் விறுவிறுப்புமான க்ளைமாக்ஸில், த‌ிகில்-சஸ்பென்ஸ் சரிவிகிதத்தில் கலந்து கலக்கலாக சொல்லப்பட்டிருக்கிறது.


 


"பாய்ஸ் சித்தார்த் தனக்கு இதுநாள் வரை இருந்த சாக்லெட் பாய் இமேஜை தகர்த்தெறிய "உதயம் என்.ஹெச்-4" படத்தை சரியான சந்தர்ப்பமாக்கிக் கொண்டிருக்கிறார். புத்திசாலித்தனமாக லீஸின் மூவ்களை முன்கூட்டியே கணித்து அவர் செய்யும் மூவ்மெண்ட்டுகள் பிரமாதம். பிரமாண்டம்! ஆக்ஷ்ன் அதிரடிகளும் சூப்பர்ப்!!

ரித்திகாவாகவே வாழ்ந்திருக்கும் அறிமுக நாயகி அஷ்ரிதா ஷெட்டியின் நடை, உடை, பாவனைகள், நிச்சயித்து திருமணம் செய்தவர்களையும் காதலிக்க வைக்கும்! அம்மணி அத்தனை ஹோம்லி குல்கந்து! பெங்களூரூ பெரும்புள்ளி அவினாஷ், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் கே.கே.மேனன், சித்தார்த்தின் நண்பர்களாக வரும் அஜெய், கலை, கார்த்தி, தீபக் மற்றும் சித்தார்த்தின் உறவினர்களாக வரும் வக்கீல் பாத்திரத்தில் வரும் ஆடுகளம் நரேன், ரம்யா உள்ளிட்டோரும் உதயத்தின் உருப்படியான உத்தரங்கள்! அதாங்க தூக்கி நிறுத்தும் தூண்கள்!!


 

ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் "யாரோ இவன்..., "ஓரக்கண்ணாலே... உள்ளிட்ட பாடல்களும், வேல்ராஜின் ஒளிப்பதிவும், நடிப்பும்(ஒரு சில சீன்களில் மப்டி போலீஸ் கான்ஸ்டபிளாக மனிதர் கிடைத்த கேப்பில் புகுந்து விளையாடி இருக்கிறார் பலே... பலே!) சூப்பர்ப்!

ஹீரோவின் நண்பர், ஹீரோ சித்தார்த், ஹீரோயின் அஷ்ரிதா என ஆளாளுக்கு அவரவர் பாயிண்ட் ஆப் வியூவில் கதை சொல்வது ஓ.கே, சூப்பர்ப்! அதற்காக அஷ்ரிதா, சித்தார்த்தை துரத்தி அடித்துவிட்டு, தன்னை தூக்கி செல்லும் என்கவுன்டர் மேனனிடம் கதை சொல்வதும், அதற்கு காதலித்து திருமணம் செய்த அவர், அப்பா-அம்மா தான் முக்கியம் என அட்வைஸ் பண்ணுவதும் ரொம்ப ஓவர்! 



இதுமாதிரி ஒருசில குறைகள், க்ளைமாக்ஸ் நெருக்கும் போது ஹைவேஸில் நடைபெறும் இழுவையான ஆக்ஷ்ன் காட்சிகள் ஆகியவற்றை தவிர்த்துவிட்டுப்பார்த்தால், வெற்றிமாறனின் எழுத்திலும், தயாரிப்பிலும், மணிமாறனின் இயக்கத்திலும் "உதயம் என்.ஹெச்.4" அவர்களது விளம்பர வாசகங்களில் இடம் பெறும் டயலாக் மாதிரியே "செம ஸ்பீடு, ஹைஸ்பீடு" எனலாம்!

ஆகமொத்தத்தில், "உதயம்", தமிழ் சினிமாவுக்கு "புதிய உதயம்!"

நன்றி -   தினமலர்

diski - cps review will b posted  monday evening 6 pm

 
 

Saturday, April 20, 2013

கௌரவம் - சினிமா விமர்சனம் ( தினமலர் )

 
 
தினமலர் விமர்சனம்

“அழகியதீயே’மொழி’ அபியும்நானும்’ உள்ளிட்ட வெற்றி திரைக்காவியங்களை தந்த இயக்குனர் ராதா மோகன் - தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் கூட்டணியில் புதிய திரைப்படம் தான் கௌரவம்’. கலை படமாகவும் இல்லாமல் கமர்ஷியல் படமாகவும் இல்லாமல் டாக்குமெண்ட்டரி படங்கள் டைப்பில் தற்போது தமிழகத்தில் இல்லாத ஜாதியத்தையும் இரட்டை டம்ளர் முறைகளைப் பற்றியும் பேசும் “கௌரவம்’ 1970-80களில் வெளிவந்திருந்தால் மேற்படி ராதா மோகன் - பிரகாஷ் ராஜ் கூட்டணிக்கு கௌரவமாக இருந்திருக்கும்.

கதைப்படி. சென்னைவாசியான இளம் ஹீரோ அல்லு சிரீஷ் ஏதோ வேலை விஷயமாக டி.வெண்ணூர் கிராமத்தை காரில் கடக்கும்போது, அவருக்கு தன்னுடன் இன்ஜினியரிங் படித்த சண்முகத்தின் ஞாபகம் வருகிறது. தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்த சண்முகத்திற்கு டி.வெண்ணூர் தான் சொந்த ஊர் என்பதால் நண்பனைத்தேடி அந்த ஊருக்குள் போகிறார். அங்கு நண்பனின் ஒன்றுவிட்ட அண்ணன் குமரவேல், சண்முகம் ஊர் பெரியவரின் மகளை இழுத்துக் கொண்டு ஓடிப் போய்விட்டதாக கூறி அல்லு கிரீஷை சண்முகத்தின் வயசாளியும், நோயாளியுமான அப்பாவிடம் அழைத்து போகிறார். 
 
 
அவரோ அல்லு சிரீஷின் கையை பற்றிக்கொண்டு, ஊர் பெரியவரும், உயர் ஜாதிக்காரருமான பசுபதி ஐயாவின் மகளை இழுத்துக் கொண்டு சண்முகம் ஓடிப்போய்விட்ட பிறகு என்னை கூப்பிட்டு அனுப்பிய பசுபதி ஐயா, இன்று முதல் எனக்கு அவள் மகளும் அல்ல, உனக்கு அவன் மகனும் அல்ல... என்று சத்தியம் செய்துவிட்டு வேறு வேலையை பார்ப்போம் என்றார். அதுமுதல், பெரிய மனுஷன் அவர் சொல்படி கேட்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறேன்.., என்றாலும் அவ்வப்போது பிள்ளை நினைப்பு, வாட்டி வதைக்கிறது... நீதான் தம்பி என் பிள்ளையை தேடி கண்டுபிடித்து தரணும்.... என்கிறார். 


அல்லுசிரீஷ் சென்னை திரும்பி தன் நண்பனை கூட்டிக் கொண்டு மீண்டும் டி.வெண்ணூர் போகிறார். அங்கு கம்யூனிசவாதி நாசரின் மகளும் இளம் வக்கீலுமான கதாநாயகி யாமி கௌதமின் துணையுடன் சண்முகம் ஜோடியை தேடும் படலத்தில் குதிக்கிறார். பசுபதி ஐயாவின் மகனாலும், ஓடிப்போன பெண்ணின் கணவராக காத்திருந்த முறை மாமன் மற்றும் உள்ளூர் போலீஸாலும் மிரட்டல்களுக்கு உள்ளாகிறார். அப்புறம்? 
 
 
அப்புறமென்ன?... சண்முகத்துடனும் தன்னுடனும் படித்த ஒட்டுமொத்த இன்ஜினியர்களையும் அந்த ஊருக்கு வரவழைத்து மீடியாக்களின் உதவியுடன் போராட்டம் நடத்துகிறார். ஒரு கட்டத்தில் பசுபதி ஐயா குடும்பத்தாரால் சண்முகம் ஜோடி கவுரவ கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது. விழுவாரா ஹீரோ? வில்லன்களை பொளந்து கட்டுகிறார்.
 
 
 
 
 
 
 பசுபதியின் மகனை கூண்டில் ஏற்றுகிறார். பசுபதி ஐயா தற்கொலை செய்து கொள்கிறார். நாசரின் மகளும் நாயகியுமான இளம் பெண் வக்கீலுமான யாமி கௌதமுடன் இடையிடையே டூயட் பாடி இறுதியில் ஹீரோ தன் காதலை சொல்கிறார். ஜாதி வெறியால் ஒரு காதல் மடிந்த இடத்தில் ஓர் புதிய காதல் உதயமாகிறது. இதுதான் “கௌரவம்’ படத்தின் மொத்த கதையும் இந்த கதையை எத்தனை மெதுவாகவும் மெருகின்றியும் எடுக்கமுடியுமோ அத்தனை வெறுப்பேற்றும்படியும் விறுவிறுப்பின்றியும் இயக்கியிருக்கிறார் ராதாமோகன்! படத்தின் பல காட்சிகள் இது ராதாமோகன் படமா? சாதா மோகன் படமா? என்றே கேட்க தூண்டும் விதத்தில் இருப்பது பலவீனம்.

கதாநாயகர் அல்லு சிரீஷ்., நாயகி யாமி கௌதம் இருவர் நடிப்பில் நாயகி யாமி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிடுகிறார் என்றால், நாயகர் மூன்றாம் வகுப்பில் கூட தேறமறுத்து நம்மை தேற்ற மறுக்கிறார். பசுபதி ஐயாவாக பிரகாஷ்ராஜ், அவரது மனைவி, மகன், வளர்ப்பு மகன்., ஓடிப்போன பெண்ணின் முறைமாமன் எல்லோருமே பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். பலே! பலே! 


 
 
விஜியின் வசனங்களும், எஸ்.எஸ். தமனின் இசையும் கௌரவம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன என்றால் ப்ரீதாவின் ஒளிப்பதிவு பலவீனத்தை கூட்டியிருக்கிறது.

ராதாமோகன் - பிரகாஷ்ராஜ் கூட்டணி தமிழகத்தில் இப்பொழு இல்லாத ஜாதி கொடுமைகளை ஒழிக்கிறேன் பேர்வழி என தங்களுக்கென நிரந்தரமாக நிரம்பியிருந்த ரசிகர்கள் கூட்டத்தை ஒழித்து கட்டியிருப்பதைதான் கௌரவ கொலை என குறிப்பிட வேண்டும்!

 கௌரவம்’ - சாதாரணம்"!
 
 
diski - readers view - mr ram - என்னை போல் ராதா மோகன் படத்திற்கு வந்தவர்கள் எல்லாம் ஆ என்று அலறியபடி தேடரை விட்டு ஓடி விடுவர். எச்சரிக்கை காதலர்கள் மற்றும் தனிமை விரும்பிகள் தவிர யாரும் இந்த படத்திற்கு செல்ல வேண்டாம், 120 ரூபாய் வேஸ்ட்