Showing posts with label கொலை வழக்கு. Show all posts
Showing posts with label கொலை வழக்கு. Show all posts

Tuesday, March 06, 2012

நடிகை அல்போன்சாதான் கொலையாளியா? மர்ம முடிச்சுகள்-காதலன் கொலை வழக்கு விபரங்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMm9y2oZ_COBqX8nhzWB5rovM5KzVzlwKtWs4JbYKT2OJif04Z_zwtJggdakhlNn1ZWku3PGAtgkifWVfRVDKO9vJ_wfKGm1Lhs_evSp4Rx5lej-hA5QR8n8Zy9YzAGLaRTInihEV93sQ/s1600/alfonsa2.jpgஎனது காதல் நிஜமானது. வினோத் குமார் எடுத்த முடிவு எதிர்பாராதது. சாவதற்கு முன்பு என்னை விதம் விதமாக ஆடைகள் கட்டி வரச் சொல்லி எனது அழகை ரசித்தார். நான் கடைசியாக சேலையில் அவர் முன்பு வந்து நின்றபோது அதையும் ரசித்தார். பிறகுதான் அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று நடிகை அல்போன்சா கூறியுள்ளார்.


சி.பி - அடப்பாவமே! என்னா அழகு..!! சாவடிக்கறாடா! அப்டின்னு சொல்வாங்களே.. அது இதுதானா?


தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடன நடிகையாக வலம் வந்தவர் அல்போன்சா. பாட்ஷா, பஞ்சதந்திரம், ஸ்ரீ உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இவரது தம்பிதான் நடன மாஸ்டர் ராபர்ட்.

இவருக்கு ஏற்கனவே துபாயைச் சேர்ந்த ஒருவருடன் கல்யாணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இருப்பினும் தற்போது கணவரைப் பிரிந்து விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார் அல்போன்சா.

சி.பி - வீ வாண்ட் மோர் டீட்டெயில்ஸ்..  அவர் இவரை பிரிஞ்சாரா? இவர் அவரை பிரிஞ்சாரா?


இவரது தம்பி ராபர்ட் மூலம் சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் பழக்கமானார். 

சி.பி - பேக்கரியை நீ பார்த்துக்கோ, அக்காவை நான் பார்த்துக்கறேன்னு  வினோத் சொல்லிட்டார் போல.. 



 நடனம் கற்க வந்த வினோத்குமார், அல்போன்சாவுடன் காதலில் விழுந்தார். இருவரும் ஆரம்பத்தில் நட்புடன் பழகி பின்னர் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் அளவுக்கு தீவிரக் காதலில் விழுந்து விட்டனர். கடந்த ஒரு வருடமாக இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனராம்.


சி.பி - டான்ஸ் பழகறேன்னு உடான்ஸ் விட்டு ஃபிகரை கரெக்ட் பண்ணி இருக்கார்.. ஓக்கே, ஒண்ணும் தப்பில்லை,. எல்லாரும் பண்றதுதான்


இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு தூக்கில் தொங்கிய நிலையில் அல்போன்சா வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் வினோத்குமார். இது தற்கொலை என அல்போன்சா கூறுகிறார். ஆனால் வினோத்குமாரின் குடும்பத்தினர் இது கொலை, அல்போன்சாவும், அவரது தம்பி ராபர்ட்டும் சேர்ந்து வினோத்குமாரை அடித்துக் கொலை செய்து விட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர். எனவே இதை சந்தேக மரணம் என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சி.பி - எனக்கும் இது கொலைன்னுதான் தோணுது.. பொதுவா ஆம்பளைங்க , அதுவும் வினோத் மாதிரி ஆளுங்க தற்கொலை செய்யற மாதிரி இருந்தா மதுவுல விஷம் கலந்து தான் குடிப்பாங்க.. பொண்ணுங்கதான் சேலை தலைப்புல் தூக்கு போட்டுக்குவாங்க.. அதுவும் இல்லாம தூக்கு போட்டு சாகறது என்பது தனிமையில் , துக்கத்தில், விரக்தியில் இருக்கும்போது எடுக்கப்படும் முடிவு.. யாரும் வீட்ல பலரை வெச்சுக்கிட்டு தூக்கு போட்டுக்க மாட்டாங்க.. லெட்டர் எதும் எழுதி வைக்கலை 


வினோத்குமாரின் தந்தை பெயர் பாண்டியன். இவர் திருக்கழுக்குன்றம் நகர எம்ஜிஆர் பேரவை செயலாளராக இருக்கிறார்.

இந்த நிலையில், காதலர் மரணம் குறித்து அல்போன்சா போலீஸாரிடம் சில தகவல்களைக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

நானும், வினோத்குமாரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தோம். எனது சகோதரர் ராபர்ட்ராஜ், வினோத்குமாருக்கு நெருங்கிய நண்பர். அவரிடம் நடனம் கற்றுக்கொள்ள வினோத் வருவார். அப்போது அவரிடம் பழக்கம் ஏற்பட்டது. அவர்தான் முதலில் காதலை சொன்னார்.

எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, ஒரு குழந்தை இருந்ததால், முதலில் அவரது காதலை ஏற்க தயங்கினேன். எனது வீட்டில் இந்த காதலை ஆதரித்தார்கள். முதல் கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு ஒருவருட காலம் பிரிந்து வாழவேண்டும் என்று எனது வக்கீல் சொன்னார். இதனால் எனது முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து ஒரு வருடத்துக்காக காத்திருந்தோம்.

இந்த நிலையில் என்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ள வினோத் விரும்பினார். என்னை சினிமாவில் நடிக்கக்கூடாது என்று கண்டிசன் போட்டார். துபாய்க்கு நடன நிகழ்ச்சி நடத்த போகக்கூடாது என்று சொன்னார். திருமணத்துக்குப்பிறகு அதை ஏற்றுக்கொள்வதாக நான் சொன்னேன்.

தற்கொலை செய்வதற்கு முன்பு இரவு 8 மணி அளவில் வினோத் அவரது தாயாருடன் காரசாரமாக செல்போனில் பேசி சண்டை போட்டார். பின்னர் போனை வைத்துவிட்டு, எனது வீட்டில் வேறு பெண் பார்க்கிறார்கள் என்று கோபமாக சொன்னார். அவரது கோபத்தை தணிக்க நான் அவரை படுக்கை அறைக்கு அழைத்துச்சென்றேன். உங்கள் விருப்பப்படி நடக்கிறேன். தயவு செய்து கோபத்தை விடுங்கள் என்றேன்.

சி.பி - இந்த சீன்ல என்ன நடந்திருக்கும்னா வினோத் அம்மா பேச்சை கேட்டுட்டு அல்போன்சாவை கழட்டி விடலாம்னு பிளான் போட்டிருப்பார்.. அம்மா கிட்டே ஓக்கே சொல்லி இருப்பார்.. உடனே அல்போன்சா சண்டைக்கு வந்திருப்பார்.. வாக்குவாதம் முற்றி இருக்கும்.. அவங்க வினோத்தை போட்டுத்தள்ளி இருப்பாங்க

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihzAmy9UK_kG1-2D13nGAQNwJOI-8UIatXaMn-e7jfsaRSbq2dnFeKktuT8V3F8tJQ4qe0pwBTKzt2inf1Lm6OAZEtqcAzKAoLKWZiTvH9eUrNgOHvkLEMJzGZjMk1vZd0XyVNA4_uQ4A/s1600/thirupachi-aruva.jpg


என்னை வித விதமான ஆடை அணிந்து அழகு காட்டும்படி ஆசையாக கேட்டார். நானும் அதன்படி நடந்தேன். கடைசியாக சேலை கட்டி வரும்படி கூறினார். நானும் சேலை கட்டி வந்தேன். எனது அழகை ரசித்தார். இருவரும் சந்தோஷமாகத்தான் இருந்தோம்.

சி.பி - போறதுக்கு முன்னால கடைசி ஆசையை பாப்பா நிறைவேத்தி இருக்காங்க.. 


பின்னர் சிகரெட் குடிக்க பாத்ரூம் சென்றார். நான் சேலையை கழற்றிவிட்டு, துண்டை கட்டிக்கொண்டு, வேறு உடை அணிய முயற்சித்தேன். பாத்ரூம் சென்ற அவரை நீண்ட நேரம் காணாததால், துண்டோடு படுக்கை அறையைவிட்டு வெளியில் வந்தேன். அப்போது எதிரில் உள்ள இன்னொரு படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது தான், வினோத்குமார் அங்கு தூக்கில் தொங்கியதை பார்த்து, மார்பில் கட்டியிருந்த துண்டோடு வெளியே ஓடி வந்து உதவி கேட்டேன்.

சி.பி - சும்மா ரீல் ரீலா விடாதீங்க.. பெட்ரூம்ல 2 பேருதான், எதுக்கு துண்டு கட்டுனேன், டிரஸ் மாத்துனேன்னு கதை விடறீங்க?இது எல்லாம் செட்டப்.  தூக்குல காதலன் கம் கணவன் உயிருக்கு போராடிட்டு இருக்கும்போது எந்த பொண்ணும் பதறி அவரை காப்பாத்த போய் தாங்கிப்பிடிப்பாங்க.. வெளீல ஓடி வந்து உதவி கேட்க ஏது டைம்? அதுக்குள்ள அவர் போய்ச்சேர்ந்துடமாட்டாரா?காமரா இருக்கறதை தெரிஞ்சுக்கிட்டு ஒரு அலிபி கிரியேட் பண்ண பாப்பா ஆக்ட் குடுத்திருக்கு..


காவலாளி உள்ளிட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் முன்னிலையில்தான், அவரது உடலை தூக்கில் இருந்து இறக்கினோம். அவர் இதுபோல் ஒரு முடிவை எடுப்பார் என்று கனவில் கூட நினைக்கவில்லை. எனது காதல் நிஜமானது என்று அல்போன்சா கூறியுள்ளாராம்.

சி.பி - உங்க காதல் நிஜமானதுதான், ஆனா வினோத் உங்களூக்கு துரோகம் பண்ண நினைச்சிருக்காரு.. அது உங்களுக்கு பொறுக்கலை




அல்போன்சா வசிக்கும் வீடு சியாமளா கார்டன் அடுக்கு மாடிக் குடியிருப்பில் 3வது மாடியில் உள்ளது. இது பெரும் பணக்காரர்கள், சினிமாக்காரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு வளாகமாகும். பல நடிகர், நடிகையர் இங்கு வசிக்கிறார்களாம்.

இந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒவ்வொரு தளத்திலும் கண்காணிப்புக் கேமரா உள்ளது. அல்போன்சா வீட்டின் தளத்திலும் கூட கேமரா உள்ளது. அதில் வினோத்குமார் மரணத்திற்கு முன்பும், பின்பும் யாரும் வீட்டுக்குள் வந்ததாக பதிவு இல்லை. அதேசமயம், அல்போன்சா கட்டிய துண்டுடன் வீட்டை விட்டு வெளியே ஓடி வரும் படம் உள்ளதாக போலீஸார் கூறுகிறார்கள்.

சி.பி - நல்லா உன்னிப்பா பாருங்க.. அல்போன்சா கேமராவை ஒரு தடவையாவது பார்த்திருப்பார்.. சரியா இருக்கா?ரெக்கார்டு ஆகுதா?ன்னு செக் பண்ண? ( உண்மையான பதட்டமா இருந்தா கேமராவை பார்க்க டைம் இருக்காது, தோணாது.. )


ஆனால் வினோத்குமார் மரணத்திற்கு முன்பு ஏதோ விபரீதமாக நடந்துள்ளதாகவும், அதனால்தான் வினோத்குமார் மரணம் நேர்ந்துள்ளதாகவும், யார் தவறு செய்திருந்தாலும் கடும் தண்டனை நிச்சயம் என்றும் போலீஸார் கூறியுள்ளனர். மேலும் மரணத்திற்கு முன்பு, அல்போன்சாவின் துபாய் கணவரின் புகைப்படங்களை வினோத் குமார் கிழித்தெறிந்துள்ளதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.


சி.பி - ஒரு வேளை அல்போன்சா முதல் விக்கெட் கூட செகண்ட் இன்னிங்க்ஸ் ஸ்டார்ட் பண்ணி இருக்கலாம், அது 2 வது விக்கெட்க்கு பிடிக்காம இருக்கலாம்.. 



வினோத்குமாருடன் அல்போன்சா ஆரம்பத்தில் நட்பாக பழக ஆரம்பித்தபோது அதை அல்போன்சாவின் கணவர் விரும்பவில்லை என்று தெரிகிறது. வினோத்குமாருடன் பழக வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அதை அல்போன்சா கேட்கவில்லையாம். தொடர்ந்து பழகியுள்ளார்.
சி.பி - உலகின் முதல் பெண்ணே சொல் பேச்சு கேட்காதவள் தான். ஆப்பிளை சாப்பிடாதேன்னு கடவுளே சொல்லியும் கேட்கலையே?கணவன் சொன்னா மட்டும் கேட்கவா போறாங்க?

இந்த நட்பு நாளுக்கு நாள் தீவிரமடையவே வெறுத்துப் போன அல்போன்சாவின் கணவர் தனது மகள் ஆலியாவை விட்டு விட்டு துபாய் போய் விட்டாராம். அதன் பின்னர்தான் விருகம்பாக்கத்தில் வசதியான வீட்டை எடுத்து வினோத்குமாருடன் தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார் அல்போன்சா.

அல்போன்சா, வினோத்குமாரின் இந்த வாழ்க்கைக்கு அல்போன்சாவின் தந்தை அந்தோணியும், தாயார் ஓமனாவும், தம்பி ராபர்ட்டும் ஆதரவு கொடுத்துள்ளனர். மேலும் கல்யாணம் செய்து கொள்ளவும் ஆதரவு தெரிவித்தனராம். இதையடுத்தே விவாகரத்து செய்ய அல்போன்சா முடிவெடுத்துள்ளார்.

சி.பி - அல்போன்சாவின் பெற்றோர் உன்னை நினைத்து படத்துல வர்ற லைலா பெற்றோர் மாதிரி போல.. எவன் வசதியா இருக்கானோ அவன் கூட ஜாயிண்ட் ஃபேமிலி ஆகிடறது.. 

வினோத்குமாரை அல்போன்சாவும், அவரது தரப்பினரும் அடித்துக் கொலை செய்துள்ளனர் என்று அல்போன்சாவின் காதலர் வினோத்குமாரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் கொடுக்கப் போவதாகவும் அவர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

நடிகை அல்போன்சாவின் காதலராக இருந்து வந்தவரான வினோத்குமார் நேற்று இரவு அவரது விருகம்பாக்கம் வீட்டில் ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இந்த வீட்டில்தான் அவர் அல்போன்சாவுடன் வசித்து வந்தார்.

தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இது ஒரு கொடூரக் கொலை என்று வினோத்குமாரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வினோத்குமாரை அடித்துக் கொன்றுள்ளனர். அவரது காது, முகத்திலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. மேலும் உடல் முழுவதும் ரத்தக்காயங்கள் காணப்பட்டன. அவரை கொடூரமாக அடித்து சித்திரவதை செய்து கொன்று தூக்கில் போட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம்.

இதுதொடர்பாக அல்போன்சா மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் மீது போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதியை நேரில் சந்தித்துப் புகார் கொடுக்கவுள்ளோம் என்றார்.

இந்தப் புகாரால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சி.பி - அன்புள்ள அல்போன்சா.. வினோத்தை சண்டைல அடிச்சிருந்தா நீங்க என்ன பண்ணி இருக்கனும் கார்ல வினோத்தை போட்டுக்கிட்டு ஐ மீன் வினோத் டெட்பாடியை போட்டுகிட்டு ஏதாவது மலைப்பிரதேசத்துக்கு போய் அங்கே இருந்து உருட்டி விட்டு அப்புறம் மலையில் இருந்து கீழே தவறி விழுந்துட்டார்னு ரீல் விட்டிருக்கனும் ஜஸ்ட் மிஸ்டு


துபாயில் நடந்த கலை நிகழ்ச்சிக்குப் போய் விட்டு நள்ளிரவுக்கு மேல் வந்த பிறகுதான் அல்போன்சாவுக்கும், அவரது காதலருக்கும் இடையே மோதல் மூண்டு அது தற்கொலையில் முடிந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhidUApnXlSQCfTy5feMc_wgDujlUfQo_NFpSOmqyazotETE8CqYMfFYzSs2AkQlPTIOrp4lLXr1lS33y33x42-GAV-DiPxmiQtzzSvz5w1ea165VA9_pQwdoDenlBOqEd_yV619PyFwdI/s400/4_%252520AlfonsaRedCholiBelly.jpg
ஒரு காலத்தில் பிசியான குத்தாட்ட நடிகையாக வலம் வந்தவர் அல்போன்சா. ஏகப்பட்ட படங்களில் தனி பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். பின்னர் படிப்படியாக இவர் தனது ஆட்டத்தைக் குறைத்துக் கொண்டார்.

இவரும் கல்பாக்கத்தைச் சேர்ந்தவருமான வினோத்குமாரும் காதலித்து வந்தனர். வினோத்குமாரும் சினிமாவில் நடனம் ஆடி வந்தவர்தான். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி வந்துள்ளனர். விருகம்பாக்கத்தில் வசித்து வந்தனர்.

அல்போன்சா அடிக்கடி துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு கலை நிகழ்ச்சிகளுக்குப் போவது வழக்கம் என்று கூறப்படுகிறது. அப்படித்தான் தற்போதும் அவர் துபாய்க்கு கலை நிகழ்ச்சிக்காக போயிருந்தார். நள்ளிரவு வாக்கில்தான் அவர் நேற்று வீடு திரும்பினார். வீடு திரும்பியதுமே அவருக்கும், வினோத்குமாருக்கும் இடையே மோதல் மூண்டதாக தெரிகிறது.


அதன் பிறகுதான் வினோத்குமாரின் மரணம் நேர்ந்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், வினோத்குமாரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அல்போன்சாவிடம் விசாரணை நடத்த அவர்கள் திட்டமிட்டனர். ஆனால் அதற்குள் அல்போன்சா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டதாக தகவல் வந்தது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர். இதனால் அல்போன்சாவிடம் உடனடியாக விசாரணை நடத்த முடியாத நிலை போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது.

சி.பி -இது சும்மா ஸ்டண்ட்.. தன் மேல் டவுட் வரக்கூடாதுன்னு பண்ணுன டிராமா.. அல்லது பயந்திருப்பாங்க.. 


அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதால் அவர் தேறி வந்த பிறகுதான் விசாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை விசாரித்தால்தான் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரிய வரும் என்கிறார்கள்.

Wednesday, June 01, 2011

ஆ ராசாவுக்கு அடுத்த ஆப்பு,சாதிக்பாட்சா போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கிளப்பும் மர்ம முடிச்சுக்கள் -ஜூ வி கட்டுரை

http://www.vanakkamindia.com/wp-content/uploads/2010/11/a-raja-res.jpg 
 
''சாதிக் பாட்சா சாகடிக்கப்பட்டார்!''

கைதாகும் ஆ.ராசாவின் நண்பர்கள்

'ஸ்பெக்ட்ரம்’ ஆ.ராசாவின் நண்பரும் க்ரீன் ஹவுஸ் புரமோட்​டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான சாதிக் பாட்சா கடந்த மார்ச் 16-ம் தேதி, யாரும் எதிர்பாராத சூழலில், மர்ம மரணம் அடைந்தார்! 

டெல்லிக்குக் கிளம்பிப் போய்,அப்ரூவர் ஆக இருந்த சாதிக் பாட்சா திடீரென இறந்துபோன பின்னணி என்ன? திட்ட​மிட்டுக் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்துகொள்ள யாரும் தூண்​டினார்களா? என்று பல்வேறு வினாக்களைத் தொடர்ந்து எழுப்பி வந்தோம். உண்மையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இப்போது சி.பி.ஐ. இறங்கிவிட்டது. சாதிக் பாட்சா மரணம் குறித்த மர்மத்தைக் கடந்த இரண்டு மாதங்களாகவே கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் இருக்கிறார்கள் சி.பி.ஐ-யின் எஸ்.பி-யான செங்கதிர் மற்றும் டி.எஸ்.பி. சுரேந்திரன்.

சாதிக்கைக் கடைசியாகச் சந்தித்த நபர்களில் போலீஸ்  உயர் அதிகாரி ஒருவரும் பால்ய கால நண்பர் ஒருவரும் அடக்கம். ஆனால், அவர்களை சி.பி.ஐ. இன்னமும் நெருங்கவில்லை. சாதிக்குடன் நெருக்கமாகப் பழகிய சிலரை நேரில் வரவழைக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள், முதலில் அன்பாகவும், பிறகு அவர்களுக்கே உரிய ஸ்பெஷல் கவனிப்பும் கொடுத்துத் தகவல் கறந்து வருகிறார்கள். 

இது தவிர, சாதிக் பாட்சாவின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர் கொடுத்த இறுதி அறிக்கையில், 'டெத் ட்யூ டு நெக் கம்ப்ரெஷன்' என்று குறிப்பிட்டுள்​ளார். அந்த அறிக்கையை முழுவதும் படித்துப் பார்த்த சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு நிறையவே கேள்விகள் எழுந்தன.

அதனால், அவர்களுக்கு எழுந்த டெக்னிக்கல் சந்தேகங்களை எல்லாம் கேள்விகளாகக் கேட்டு, டாக்டரிடம் கொடுத்துப் பதில் கேட்டு இருக்கிறார்கள் என்பதும் இந்த விவகாரத்தின் லேட்டஸ்ட் நிலவரம்!

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் நாம் விசாரித்தோம். ''சாதிக் பாட்சா, திட்டமிட்டுக் கொல்லப்பட்டு இருக்க வேண்டும். சி.பி.ஐ. மற்றும் சென்னை போலீஸ் வட்டாரத்தில் 'நெக் கம்ப்ரஷன்' என்றால் என்ன என்பதுபற்றி பெரிய பட்டிமன்றமே நடக்கிறது. ஏனென்றால், அதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. எங்களைப் பொறுத்த வரை சம்பவம் நடந்த அன்று, அவரை நேரில் சந்தித்த மர்ம ஆசாமிகள் மிரட்டியோ, சமாதானமோ பேசி இருக்க வேண்டும். 

அப்போது, பேச்சுவார்த்தையில் பிரச்னை ஏற்பட்டு இருக்கலாம். அதனால், சாதிக் முரண்டுபிடிக்க, அவரது கழுத்தில் மர்ம ஆசாமிகளில் ஒருவர் கைகளை வைத்து அழுத்தி இருக்க வேண்டும். அல்லது, துணியால் கழுத்தை இறுக்கியிருந்தாலும் உட்புறம் காயம் ஏற்படும். சாதிக்கின் கழுத்தில் ஏற்பட்டதிடீர் அழுத்தத்தின் காரணமாக, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, உடனே அவர் மயங்கி விழுந்து இருக்க வேண்டும்.

ஆனால், வந்த ஆசாமிகள் சாதிக் இறந்துவிட்டதாக நினைத்துப் பயந்து, மறு நிமிடமே உயிருடன் இருந்தவரை தூக்கில் மாட்டி இருக்க வேண்டும். ஏனென்றால், கழுத்து இறுகி மூச்சுத்திணறல் ஏற்பட்டுத்தான் இறந்துபோயிருக்கிறார் என்பது தெளிவாக அந்தக் குறிப்பில் உள்ளது. இதற்கு மேல் இந்த விவகாரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் எப்படி கொண்டுசெல்லப் போகிறார்கள் என்பது இன்னமும் சஸ்பென்ஸாகவே இருக்கிறது...'' என்கிறார்கள்.    

மார்ச் 17-ம் தேதி, சாதிக் உடலைப் பரிசோதனை செய்த ராயப்பேட்டை மருத்துவமனை தடயவியல் பிரிவு டாக்டர் டிகால், 'இறந்தவரின் உடலில், கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட
தழும்பு, சிராய்ப்பைத் தவிர, வேறு எந்த காயங்களும் இல்லை. அவர், மூச்சுத் திணறல் ஏற்பட்டுத்தான் இறந்துபோயிருக்கிறார்.

ஆனால், மூச்சுத் திணறலுக்குக் காரணம் தூக்கு போட்டதால்தான் ஏற்பட்டதா என்பதை அறிய, கழுத்துப் பகுதியின் உட்புறத்தில் உள்ள சதைகளை,  நோய்க்கூறு இயல் ஆய்வுக்கு (பேத்தாலஜி) அனுப்பி உள்ளோம். அந்த முடிவு வந்த பின்புதான், தீர்க்கமாக எதையும் சொல்ல முடியும். மைக்ரோஸ்கோப் மூலம் செய்யப்படும் இந்த ஆய்வில், உயிரோடு இருந்தபோது தூக்கில் தொங்கினாரா, அல்லது இறந்த பின் நடந்ததா என்பது தெரியும். இப்போதைக்கு வேறு எதுவும் சொல்ல முடியாது!' என்றார்.

போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர் குழுவினரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் பல்வேறு கேள்விகள் வைக்கப்பட்டன. அதில் முதல் கேள்வியே திடுக் ரகமாக உள்ளது. 

1. ''போஸ்ட்மார்ட்டம் ஆரம்பிக்கும் முன்பு, அதை உடனே தொடங்காமல் கால தாமதம் செய்யும்படி மருத்துவ இயக்குநரக உயர் அதிகாரி உங்களுக்குச் சொன்னாரா? 'வெளியில் இருந்து வேறு ஒரு டாக்டரை அனுப்புகிறோம். அதுவரை காத்திருக்கவும்’ என்று உத்தரவு வந்ததா?'

 2/ ''பேத்தாலஜி ரிப்போர்ட் உட்பட, பல்வேறு ஆய்வு முடிவுகள் வந்து சேர்ந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. பிரேதப் பரிசோதனை குறித்த ஃபைனல் ரிப்போர்ட்டை எங்களுக்கு மிகவும் தாமதமாகத் தந்து இருக்கிறீர்கள். இடையில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. அந்த நேரத்தில் ரிப்போர்ட் வெளியானால் அது தேர்தலைப் பாதிக்கும் என்று கருதி, ஃபைனல் ரிப்போர்ட்டை முடக்கிவைக்கும்படி யாராவது மிரட்டினார்களா?'' என்று கேட்டதாம் சி.பி.ஐ.

3. ''கழுத்து இறுக்கப்பட்டதால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு அதனால் சாதிக் இறந்திருக்கக்​கூடும் என்று இறுதி அறிக்கையில் சொல்லி இருக்​கிறீர்கள். ஆனால், இறுதி அறிக்கை வெளியிடும் முன்பு, ராயப்பேட்டை மருத்துவமனையின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர், அதாவது முன்னாள்  அமைச்சர் ஒருவரின் மிக நெருங்கிய உறவினர் ஒருவர் உங்களை இது சம்பந்தமாகத் தொடர்புகொண்டு பேசினாரா?''

இதே கோணத்தில் டாக்டர் டிகாலிடமும், பேத்தாலஜி ரிப்போர்ட்டில் குறிப்பிட்டுள்ளது தொடர்பான நுணுக்க​மான விளங்கங்களை, சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை மருத்துவக் கல்லூரியின் பிரபலத் தடய அறிவியல் துறை டாக்டர் சாந்தகுமாரிடமும் கேட்டுத் தெரிந்துகொண்டார்களாம்.

சி.பி.ஐ. கேட்ட கேள்விகள் குறித்துப் பேசும் போலீஸ்​காரர்கள், ''டாக்டர் டிகாலைப் பொறுத்தவரையில், இந்த விவகாரத்தில் பல கசப்பான அனுபவங்களைச் சந்தித்து இருக்கிறார். அதனால், யாருடனும் அவர் இப்போது பேசுவதே இல்லை. மௌனமாகவே நடமாடுகிறார். உயர் அதிகாரி, போன் மூலம் கால தாமதம் செய்யுமாறு டிகாலிடம் கேட்டுக் கொண்டது வாஸ்தவம்​தான் என்று முதல் கேள்விக்கு விடை சொன்னார்கள்.

இரண்டாவது கேள்விக்கு வருவோம். சாதிக்கின் பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தயார் செய்யும் விஷயத்தில், டாக்டர் டிகாலுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் இடையே பெரிய மோதல் வெடித்தது. 'என்னை மட்டும் ஏன் ஃபைனல் ரிப்போர்ட் தரச் சொல்கிறீர்கள்? குழுவாகத்தானே பிரேதப் பரிசோதனை செய்தோம்? எல்லாரும் கையெழுத்து இட்டுப் பதில் சொல்வோம்' என்று இவர் சொல்லி இருக்கிறார். ஆனால் உயர் அதிகாரிகள் அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளாமல், 'நீங்கள் மட்டும்தான் தர வேண்டும். மற்றவர்களைக் கூட்டு சேர்க்காதீர்கள்' என்று கோபமானார்களாம். அதனால், மோதலிலேயே ஒரு மாதம் கழிந்துவிட்டது. கடைசியில், வேறு வழி இல்லாமல், டாக்டர் டிகால் மட்டும் ஃபைனல் ரிப்போர்ட்டைக் கொடுத்தார்.


இந்த விஷயத்தில் டிகால் சந்தித்த டார்ச்சர்கள் அதிகம்தான். ராயப்பேட்டை மருத்துவமனையில், அவர் வேலை செய்வது தற்காலிகப் பணிதான். அதை அவர் வேண்டாம் என்று ராஜினாமா செய்து கடிதம் அனுப்பிவிட்டார். போஸ்ட்மார்ட்டம் முடிந்ததும் நிருபர்களுக்குப் பேட்டி கொடுத்தது, மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட முயன்றதுபோன்ற சில காரணங்களைக் காட்டி, அவருக்கு மெமோ கொடுத்து இருக்கிறார்கள்.

அந்த மெமோவைக் காரணம் காட்டியே, அவரது ராஜினாமா கடிதத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் நிறுத்திவைத்தனர். அதனால், வேறு வேலைக்கும் செல்ல முடியாமல் நட்டாற்றில் நிற்கிறார் டிகால்!'' என்றார்கள்.  

சாதிக் பாட்சா விவகாரம் கொலையாக இருக்கும்பட்​சத்தில், நீதிமன்றத்துக்கு டிகால் வந்து பதில் சொல்ல வேண்டி இருக்கும். கொலைகாரர்கள் தீவிரமாகத் தேடப்பட்டு... சிறைக்குள் தள்ளப்படுவார்கள். ஒருவேளை, தற்கொலை என்று சி.பி.ஐ. முடிவுக்கு வரும் என்றாலும், அதற்குத் தூண்டுதலாக இருந்த வி.ஐ.பி-களைக் கைது செய்து குற்றவாளியாக நிறுத்த முடியும்.''சாதிக் பாட்சா சில மிரட்டல் மனிதர்கள் மூலமாக சாகடிக்கப்பட்டார் என்று சொல்வதற்கான ஆதாரங்களை நோக்கி சி.பி.ஐ. நகர்ந்துவிட்டது.

அது பலமான சாட்சியாக மாறும் போது ஆ.ராசாவின் நண்பர்கள் சுற்றி வளைக்கப்படுவார்கள்!'' என்று தமிழகப் போலீஸ் உயர் அதிகாரிகள் வட்டாரம் சொல்ல ஆரம்பித்துள்ளது.

சி.பி.ஐ. கையில் தான் எல்லாமே இருக்கிறது!

Sunday, April 24, 2011

நாவரசு கொலையில் 'திடுக்' திருப்பம்..தப்பி ஓடிய ஜான் டேவிட்! ஜூ வி பர பரப்பு கட்டுரை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIMGVUPXOJ3j9IO3-SXbinKN2oWeEhtn93H5wozAe67b1NxoBvvxImNFX7qanupWH1ODTVXGPkUol8tiiQENCWpAU06EQZPUtB5s_gQMQInXMkjXsSGvrBw4KSp5PL7sS9S373k_ngWxcE/s1600/0409223w.jpg
15 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தையே திடுக்கிடவைத்தது, நாவரசு கொலை
விவகாரம்! கடந்த ஏப்ரல் 20-ம் தேதிதான் உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளி ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஆனால், ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பி ஓடிவிட்டதால், மீண்டும் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.

ஆமா.. நம்மாளூங்க தப்பி ஓடும் வரை வேடிக்கை பார்த்துட்டு , அதுக்கப்புறமா ஆள் விட்டு தேடுவாங்க.. 


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் நாவரசு. இவரது தந்தை பொன்னுசாமி, அந்தக் காலகட்டத்தில் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தார்.
1996 நவம்பர் 6-ம் தேதி திடீரென்று நாவரசு காணாமல் போனார். 'காணாமல் போனாரா... கடத்தப்பட்டாரா?' என்று போலீஸ் குழம்பியது. நாவரசு காணாமல் போவதற்கு முன்பு கடைசியாக ஜான் டேவிட்டுடன் நடந்து சென்றதைப் பார்த்த மாணவர்கள், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.




அதன் பிறகு ஜான் டேவிட்டை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். நாவரசு படித்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்த ஜான் டேவிட், கரூரைச் சேர்ந்தவர். 'தனக்கு ரெக்கார்டு நோட் எழுதிக்கொடுக்கும்படி ஜூனியரான நாவரசுவை ஜான் டேவிட் டார்ச்சர் செய்தபோது, 'ஜாக்கிரதை... என் தந்தை பல்கலைக்கழகத் துணைவேந்தர்’ என்று கோபமாகச் சொல்லி இருக்கிறார். 

இதனால் ஆத்திரமடைந்த ஜான் டேவிட், 'சமாதானமாகப் போவோம்' என்று பொய்யாகச் சொல்லி நாவரசுவைத் தனியாக அழைத்துச் சென்று கண்மூடித்தனமாகத் தாக்கியதில், நாவரசுக்கு உயிர் பிரிந்துவிட்டது. அதன் பிறகு, உடலைத் துண்டு துண்டாக அறுத்து அப்புறப்படுத்தி இருக்கிறார் ஜான் டேவிட்' என்று முதல் கட்ட விசாரணையில் அப்போதைய கடலூர் மாவட்ட எஸ்.பி-யான ரவிச்சந்திரன் தெரிவித்து இருந்தார்.

15 நாட்களுக்குப் பிறகு பல்கலைக்கழகக் குளத்தில் சிதைந்த நிலையில் ஒரு ஆணின் தலை கிடைத்தது. சென்னை தாம்பரத்திலிருந்து கிளம்பிய 21 ஜி பஸ்ஸில் ஒரு பார்சலில் தலையில்லா முண்டம் கிடைத்தது. மரக்காணம் அருகே ரயில்வே டிராக் பக்கம் கை, கால்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவற்றை எல்லாம் போலீஸார் ஒன்றுபடுத்தி, 'நாவரசுவின் உடல்தான்’ என்று உறுதி செய்தனர். சவாலான இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், 1998-ல் ஜான் டேவிட்டை குற்றவாளி எனக் கருதி இரட்டை ஆயுள் தண்டனை அளித்தது. இதை எதிர்த்து, ஜான் டேவிட் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். போதிய ஆதாரம் இல்லை என்று சொல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பாலசுப்பிரமணியம், வி.பக்தவத்சலு ஆகியோர் ஜான் டேவிட்டை விடுதலை செய்தனர். இதையடுத்து, கிறிஸ்துவ போதகராக மாறி தேவாலயத்தில் பணியாற்றி வந்தார் ஜான் டேவிட்.

 பாவம். அந்த மதத்துக்கே தீராத களங்கம்


2002-ம் வருடம் தமிழக அரசு இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, முகுந்தகம் சர்மா தலைமை​யிலான பென்ச், ''மாணவர் நாவரசு கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக உள்ளது. 

இந்த வழக்கில் சரியான விசாரணை நடத்தாமல், ஜான் டேவிட்டுக்கு கீழ் கோர்ட்​டில் விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை ரத்து செய்ததை ஏற்றுக்கொள்ள முடி​யாது!'' என்று குறிப்பிட்டதோடு, ''ஜூனி​யர் மாணவரான நாவரசுவை, ராகிங் என்கிற பெயரில் திட்டமிட்டு சீனியர் மாணவர் ஜான் டேவிட் கொலை செய்தது, ஆதாரப்பூர்வமாகவும், சாட்சிகள் மூலமாகவும் உறுதி செய்யப்​பட்டு இருப்பதால், ஜான் டேவிட்டுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்​படுகிறது. எனவே, ஜான் டேவிட் கோர்ட்டில் உடனடியாக சரணடைய வேண்டும்!'' என்று தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.


உடுமலைப்பேட்டையில் வசித்து வரும் நாவரசுவின் தந்தை பொன்னுசாமி, மலையாண்டி கவுண்டனூர் என்கிற ஊரில் பொன்.நாவரசு மெட்ரிக் பள்ளி ஒன்றைத் துவக்கி நடத்தி வருகிறார். அவர் அமெரிக்காவில் மகள் வீட்டுக்குச் சென்று இருந்த காரணத்தால், அவர் சார்பாக, மைத்துனர் சிவ.சத்தியசீலன் பேசினார்.

''மருத்துவம் படிக்கப்போன நாவரசுவை, கதறக் கதறக் கொன்ற கொலைகாரன் இத்தனை காலமும் வெளியில் நடமாடியதை நினைக்கும்போது மனதுக்குக் கஷ்டமாக இருக்கும். குற்றம் செய்தால், சட்டத்தின் முன்பு தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என்பதை இந்தத் தீர்ப்பு நிரூபித்து இருக்கிறது!'' என்றார் சோகத்துடன்.

டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதாடிய வக்கீல் தனஞ்செயன், ''இந்த வழக்​கில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளி​களுக்காக ஆஜரான பிரபல வழக்கறிஞர் சுசில்குமார் எதிர்த் தரப்புக்காக வாதாடினார். 

ஜான் டேவிட்டின் சூட்கேஸிலும் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட கருவிகளிலும் நாவரசுவின் ரத்தம் படிந்து இருந்தது முக்கியமான ஆதாரமாக இருந்தது. நாவரசுவுக்கு முன்பே, ஜான் டேவிட் பலரை ராகிங் செய்ததற்கான சாட்சியங்கள், கொலைக்குப் பிறகு பதற்றத்துடன் ஜான் டேவிட் நடமாடியதைப் பார்த்த சாட்சிகளை மேற்கோள் காட்டினேன். 

ஜான் டேவிட்டுக்கு திருமணம் ஆனதையும், அவர் மத போதகராக இருப்பதையும் காட்டி அனுதாபம் பெற முயன்றதைக் கடுமையாக எதிர்த்தேன். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஜான் டேவிட்டுக்கு கீழ் கோர்ட்டில் விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர்!'' என்றார்.

கடலூர் மாவட்ட போலீ​ஸார் ஜான் டேவிட்டை தேடிய​போதுதான், ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்ற தகவல் கிடைத்துள்ளது. உடனே, இன்டர்போல் போலீஸ் உதவியுடன் ஜான் டேவிட்டைத் தேடும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள்!

 கடைசியாக வந்த தகவல் -  சென்னை, கரூர் மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், ஜான் டேவிட் சென்னை அடையாறில் தங்கி, வேளச்சேரியில் உள்ள பி.பி.ஓ., கம்பெனியில் பணிபுரிந்ததை கண்டுபிடித்தனர். போலீசார் தேடுவதையறிந்த ஜான் டேவிட், பாண்டிச்சேரிக்‌கு சென்று விட்டார். இந்நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு கடலூர் மத்திய சிறையில் ஜான் டேவிட் தானாகவே வந்து சரணடைந்தார்.