Showing posts with label அலசல். Show all posts
Showing posts with label அலசல். Show all posts

Sunday, May 20, 2012

நல்ல தங்காள் ஆட்சி - நல்லவை 10 , அல்லவை 10 - விகடன் கட்டுரை

ரண்டாம் ஆண்டில் அடிஎடுத்து வைத்துவிட்டார் அம்மா! அதற்கான கொண்டாட்டங்களில் மூழ்கி இருக்கிறது அ.தி.மு.க. 80 சாதனைகளைச் சொல்லி, ஜெயலலிதா மகிழ்ச்சியைத் தெரிவிக்க... எத்தனையோ வேதனைகளை அடுக்கி மக்கள் அவஸ்தையை வெளிப்படுத்துகிறார்கள். நியாயமாகப் பார்த்தால் இரண்டின் கலவையாகவே முதல் ஆண்டைக் கடந்திருக்கிறார் ஜெயலலிதா!


 நல்லவை  10


தி.மு.க. ஆட்சியில் அதிகாரம், போலீஸைப் பயன்படுத்தி அடித்துப் பிடுங் கப்பட்ட நிலங்களை மீட்க எடுத்த முயற்சி கள், இன்றைய நில அபகரிப்பு மனிதர் களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்தது. வருமானத்துக்கு அதிகமாக, அடித்துப் பிடித்துச் சொத்து சேர்த்த தி.மு.க. மந்திரிகளின் வீட்டுக்குள் லஞ்ச ஒழிப்புத் துறை யைவிட்டு ரெய்டுகள் நடத்தியதும், அதற் கெனத் தனி நீதிமன்றம் அமைக்க முயற்சித் ததும் அனைத்துத் தரப்பினராலும் வரவேற் கப்பட்டது.


சசிகலா குடும்பத்தின் ஆக்டோபஸ் கரங்கள் வெட்டி எறியப்பட்டன. ஜெ. பதவி ஏற்ற மே மாதம் முதல் சசி டிஸ்மிஸ் செய்யப்பட்ட டிசம்பர் மாதம் வரை, இந்தக் குடும்ப உறுப்பினர்கள் செய்த காரியங்களுக்குத் தடை விழாமல் இருந்திருந்தால், 3-வது ஆண்டு விழாவின்போது தமிழ்நாடே தனியார் சிலருக்குச் சொந்தமாகி இருந்துஇருக்கும். இந்தக் கும்பலுக்குத் தடுப்பணை விழுந்தது எல்லோரும் வரவேற்பது.



இரண்டு விஷயங்களில் ஜெ. சிறப்புக் கவனம் செலுத்தினார். ஒன்று, மதுரையை அடாவடி மனிதர்களின் ஆதிக்கத்தில் இருந்து மீட்பதில் உறுதி காட்டியது. இரண்டாவது, அ.தி.மு.க-வினர் சிலருக்கே பிடிக்காதது. ஆனால், ஜெ. தயக்கம் இல்லாமல் செய்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை முறைகேடு இல்லாத தேர்வு அமைப்பாக மாற்ற அவர் எடுத்த முயற்சிகள் இளைஞர்களுக்கு நம்பிக்கை கொடுத்தன.



மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது வேறு. அண்டிப் பிழைப்பது வேறு. பாதகமான காரியங்கள் நடந்தாலும் ஒரு மாநில அரசு சுயாட்சி உரிமைகொண்ட தாகச் செயல்பட வேண்டும் என்பதை நடைமுறையில் காட்டிய தைரியம் ஜெயலலிதாவின் தனித்தன்மையை உறுதிப் படுத்துகிறது.



ஈழத் தமிழர் விவகாரத்தில் கடந்த காலத்தில் இன விரோத நிலைப்பாடுகளை எடுத்தாலும், ஆட்சியைப் பிடித்த பிறகு கொண்டுவந்த தீர்மானங்கள், விடுத்த அறிக்கைகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் முதல்வரின் செல்வாக்கை அதிகரித்து உள்ளது.


தினமும் தலைமைச் செயலகம் வருவது, அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்துரையாடுவது, முக்கியப் பிரச்னைகள்பற்றி அடிக்கடி ஆலோசிப்பது போன்றவை பழைய ஜெயலலிதாவைவிட இன்றைய ஜெ. உற்சாகமானவர் என்றே காட்டுகிறது. சட்டப் பேரவை நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்று விவாதங்களில் கலந்துகொண்டு வாத வல்லுநராகவும் திகழ்கிறார்.


தி.மு.க. ஆட்சியில் பல அமைச்சர்கள் தலைகால் புரியாமல் ஆடினார்கள். அந்தச் சூழ்நிலை இப்போது இல்லை. ஆளும் கட்சியினர் காவல் நிலையங்களுக்குச் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்வதும் குறைந்துவருகிறது. 'பதவியை வைத்து ஆடினால், அம்மா ஆப்பு அடித்துவிடுவார்’ என்ற அசரீரிக் குரல் கேட்பதே தப்பைக் குறைக்கிறது.



வெண்மைப் புரட்சிக்கு வித்திடும் வகையில், கறவை மாடுகள், ஆடுகள் வழங் கியதும், ஏழைப் பெண்களின் திருமணத் துக்கு தாலிக்குத் தங்கம் வழங்கியதும் கிராமப்புற மக்களுக்கு நல்ல உதவியாக அமைந்து இருக்கிறது.



கல்வித் துறையிலும் சிறப்புக் கவனம் செலுத்தினார் ஜெ. பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்குவதில் தொடங்கி, 55 ஆயிரம் ஆசிரியர் நியமனம் வரை நடந்தால்... தமிழகப் பள்ளிக் கல்வி செழிக்கும்.





தன்னுடைய இலக்கு இதுதான் என்பதை வரையறுத்து 'விஷன் 2023’ வெளியிட்டார் முதல்வர். தன்னுடைய எண்ணங்களை அடுத்த 10 ஆண்டுகளுக்கு உரியதாக சொன்ன தன்னம்பிக்கை அனை வராலும் பின்பற்றத்தக்கது.


அல்லவை  10


சென்ற தி.மு.க. ஆட்சியில் எகிறி வந்த விலைவாசி, கடந்த ஆண்டு ஏகத்துக்கும் ஏறியது. விலைவாசியைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கையில் இல்லை என்ற மெத்தனம் ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. இதைத் தடுக்க முயற்சிக்காத ஜெ., பால் விலையையும் பஸ் கட்டணத்தையும் தன் பங்குக்கு ஏற்றிவைத்தார்.



மின் வெட்டு முழுமையாக இல்லாத தமிழ்நாட்டை எப்போது பார்க்க முடியும் எனத் தெரியவில்லை. இதற்கான திட்டமிடுதல்களில் ஜெயலலிதா முழுக் கவனம் செலுத்தியதாகவும் தெரியவில்லை. 6 முதல் 8 மணி நேரம் வரை மின் வெட்டு இருந்ததும்... இன்னும் பல இடங்களில் இருப்பதும் வேதனையானது.



தமிழ்நாட்டின் பொதுச் சொத்தான மணல், பட்டப்பகலில் கொள்ளை அடிக் கப்படுகிறது. என்ன சட்டதிட்டப்படி, யார் எடுக்கிறார், எவ்வளவுக்கு விற்கிறார் என்ற வரைமுறையே இல்லாமல் பூட்டு உடைக்கப்பட்ட வீடாக ஆறுகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. இதுபற்றியவெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.



கருணாநிதி கொண்டுவந்தவை என்பதற்காக, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தையும் தலைமைச் செயலகத்தையும் மருத்துவமனை ஆக்க முயற்சித்தார். சமச்சீர்க் கல்வியை என்ன செய்தேனும் ஒழிக்க முயற்சித்தார். செம்மொழி நூலகம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.


மூன்று தமிழர் தூக்கு, கூடங்குளம் எனப் பல முடிவுகளை மாற்றிக்கொண்டே இருந்தார். அதிகாரிகளும் அமைச்சர்களும் முதல் ஆறு மாதத்தில் பந்தாடப்பட்டே வந்தார்கள். 'எடுத்த முடிவில் எப்போதும் தெளிவானவர்’ என்ற பெயரை ஜெ. இழந்தார்.



ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்கும் என்ற நினைப்பில் மண் விழுந்தது. குற்றம் நடக்காத நாளே இல்லை எனலாம். இதற்கு முக்கியக் காரணம், போலீஸ் - குற்றவாளிகள் இடையிலான நட்புதான். இந்தக் கண்ணியை உடைக்காமல், நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியாது.



அப்பழுக்கற்ற அரசாங்கம் நடக்கிறது என்று சொல்ல முடியவில்லை. கடந்த ஆட்சியைவிட கமிஷன் சதவிகிதம் உயர்த் திய அமைச்சர்களும் இருக்கிறார்கள். கான்ட்ராக்ட் மனிதர்களின் நடமாட்டமும் தலைமைச் செயலகத்தில் அதிகம். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே புரோக்கர்களாக மாறிய அவலமும் தொடர்கிறது.



சசிகலாவைக் கட்சியைவிட்டு நீக்கியபோது உயர்ந்த இமேஜ், அவரை மறுபடியும் சேர்த்துக்கொண்டபோது சரிந்தது. 'சசிகலா செய்தது எதுவும் எனக்குத் தெரியாது’ என்று ஜெ. சொன்ன வாதத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை.


சட்டப் பேரவையில் அளவுக்கு மீறி அம்மா புகழ் பாடும் ஜால்ரா சத்தமே கேட்கிறது. ஆளும் கட்சியை விமர்சித்துப் பேச எதிர்க் கட்சிகளை அனுமதிப்பது இல்லை. அமைச்சர்கள் முதல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் வரை அனைவருமே தங்கள் சொந்த அம்மாவைக்கூட இத்தனை தடவை 'அம்மா’ என்று அழைத்திருப்பார்களா என்ற சந்தேகமே எழுகிறது.



முதல்வர் மீது மரியாதை இருக்கலாம். பக்திகூட இருக்கலாம். பயம் இருந்தால், அது அவருக்கேகூடப் பயன்படாது. அதுவும் சில அமைச்சர், அதிகாரிகளுக்கு மரண பயமே இருக்கிறது. இத்தகைய மனிதர்களை வைத்து ஜெயலலிதாவால் நல்லாட்சி தரவே முடியாது. நெகிழ்வுத்தன்மை உள்ளவராக ஜெயலலிதா தன்னை மாற்றிக்கொண்டால் மட்டுமே வெற்றியைத் தக்கவைக்க முடியும்.


Wednesday, July 27, 2011

மணிரத்னம் ஒரு சகாப்தமா? ஒரு அழகிய ஆராய்ச்சி

http://shotpix.com/images/16161806371053495878.png 

தமிழ் சினிமாவை அடுத்த தளத்துக்கும், புதிய ரசனைக்கும் கொண்டு சென்றது பாலச்சந்தர், பாரதிராஜா,மகேந்திரன் என்றால் முதன்முறையாக இந்தியாவை , பாலிவுட்டை தமிழ்நாட்டின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது, உலகளாவிய சந்தையை கொண்டு வந்தது மணிரத்னம் என்றால் அது மிகை இல்லை.. 


எந்த ஒரு இயக்குநரிடமும் அசிஸ்டெண்ட்டாக ஒர்க் பண்ணாமல் டைரக்ட்டாக ஃபீல்டில் இறங்கி டைரக்ட் பண்ணி ஹிட் கொடுத்த முதல் டைரக்டர் என்ற பெருமையையும், தமிழ் சினிமா வசனங்களின் பிடியில் கிடந்த போது காட்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து விசுவல் டேஸ்ட்டை புதிய பாணியில் தந்த அளவில் இவர் முக்கியத்துவம் பெறுகிறார்.  

இவரது எல்லா படங்களிலும் மழை,குதிரை கண்டிப்பாக இடம் பெற்று விடும். இவர் படங்களில் வசனங்கள் சி செண்ட்டர் ரசிகர்களுக்குப்புரிவதில்லை என்ற குறையும் உண்டு. ஒளிப்பதிவில் இவர் தனி கவனம் கொள்வார்.

ஜூன் 2, 1956 இல் பிறந்த இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ் இயக்குனர்களுள் ஒருவர். காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய பாணி. ஏ. ஆர். ரகுமானை திரையிசைக்கு அறிமுகம் செய்தவரும் இவரே.

ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை பள்ளியில் படித்துவிட்டு, சென்னையில் உள்ள டி.வி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். யாரிடமும் உதவி இயக்குநராக பணி செய்யாமல், தன் முதல் படமாகிய "பல்லவி அனுபல்லவி" படத்தினை இயக்கினார். சென்னையில், மனைவி சுஹாசினி மற்றும் மகன் நந்தனுடன் வாழ்கின்றார் மணிரத்னம்.

இவருடைய படங்கள் சுருக்கமான வசனங்களுக்கும் நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும் பெயர் பெற்றவை. இவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்தும இளையராஜா மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் இருவரின் இசையமைப்பில் வெளியாகியுள்ளன. இவரது முதல் திரைப்படமான பல்லவி அனுபல்லவி முதல் தளபதி வரை இளையராஜா இசையிலும், ரோஜா முதல் இன்று வரை ஏ. ஆர். ரஹ்மான் இசையிலும் வெளியாகியுள்ளன.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSFIR-oU-3iXDT99ri5VO_VjNTh3TombkMRMqd4PqeCmBkJfz849u5bV6l9e-ksXc9ALeVDFyTdchhdKNelk6b4N4FI21q3Mmt637Df0fIxyKrMYQCOTYzLeH0ljAVlRCYLnee9hl6HyI/s1600/PALLAVI+ANUPALLAVI2.jpg

1.  (கன்னடம்)- பல்லவி அனுபல்லவி (1983) -பிரபல இயக்குனரான மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்த கன்னட மொழி திரைப்படமாகும். மணிரத்தினம் இயக்கிய முதல் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்தில் பிரபல இந்தி திரைப்பட கதாநாயகன் அனில் கபூர் கதாநாயகனாகவும், நடிகை லட்சுமி கதாநாயகியாவும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா ஆவார் மற்றும் இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.இப்படத்தின் சிறந்த திரைக்கதைக்காக மணிரத்தினம் கர்நாடக அரசின் மாநில விருதைப் பெற்றார். இப்படம் தமிழில் பிரியா ஓ பிரியா என்று மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

 2. 1984 - உணரு (மலையாளம்) -இந்தப்படம் மணிரத்னம் பாணி எல்லாம் இல்லாமல் அந்த கால கட்ட மலையாளப்பட பாணியில் எடுக்கப்பட்டது.

3.1985 - இதய கோவில் -மதர்லேண்ட் பிக்சார்ஸ்சின் கோவைத்தம்பியின் உதய கீதம் வெள்ளி விழா கண்ட நேரம்,பெரும் எதிர்பார்ப்புகளுடன் வந்த இதய கோவில் தோல்வியைத்தழுவினாலும் பி செண்ட்டர்களில் 40 நாட்கள் ஓடின, பாடல்கள் சூப்பர் ஹிட்

1.கூட்டத்திலே கோவில் புறா - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
2. நான் பாடும் மொஉன ராகம் - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
3.இதயம் ஒரு கோவில் (Male) - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
4.இதயம் ஒரு கோவில் - இளையராஜா, எஸ்.ஞானகி
5.பாட்டு தலைவன் - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
6.யார் வீட்டு ரோஜா - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
7.வானுயர்ந்த - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
8.ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு - இளையராஜா

 4. 1985 - பகல் நிலவு - சத்யராஜின் மார்க்கெட்டை ஒரு புரட்டு புரட்டிய படம்.. இதில் அவரது வித்தியாசமான நடிப்பு பரவலாக பேசப்பட்டது.வில்லன்கள் என்றால் பக்கம் பக்கம் வசனம் பேசியே பார்த்தகண்களுக்கு புதுமையான அனுபவமாக இது அமைந்தது.. விமர்சன ரீதியில் பெரும் பாராட்டைப்பெற்றாலும் வசூல் பிரமாதம் என சொல்ல முடியாது.


http://123tamilforum.com/imgcache/11/67532.jpg

5.1986 - மௌன ராகம் - கார்த்திக்கிற்கு வாழ்வில் மறக்க முடியாத படம். அவர் வரும் காட்சிகள் குறைவு என்றாலும் சுறு சுறு , துறு துறு நடிப்புக்கு பாடமாக இருந்தது.. படத்தின் கதைச்சுருக்கம்

பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு ஏற்ப சந்திரகுமாரை (மோகன்) மணந்து கொள்ளும் திவ்யா (ரேவதி) தனது காதலனை இழந்த பழைய நினைவுகளை மறக்க முடியாது தனது கணவரின் கைகளில் இருந்து விலகிச்செல்ல விவாகரத்துக் கேட்கின்றார்.அவரின் விருப்பத்திற்கேற்றாற் போல விவாகரத்துப் பெற்றுத் தருகின்றார் சந்திரகுமார்.நீதிமன்றத்தின் தீர்ப்பின் பேரில் ஒரு ஆண்டு காலத்தில் ஒன்றாக வாழ்கின்றனர்.இக்கால கட்டத்தில் இருவருக்கும் ஏற்படும் காதல் இருவரையும் ஒன்று சேர்க்கின்றது.

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையா? பாடல் உட்பட எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்..  இது ஈரோடு பிரபா தியேட்டரில் 40 நாட்கள் ஓடின

6.1987 - நாயகன்  - தமிழ் சினிமாவின் போக்கு,கமலின் வாழ்க்கை,மணிரத்னத்தின் மார்க்கெட் வால்யூ எல்லாவற்றையும் ஒரு புரட்டு புரட்டிய படம்.மேலும் இத்திரைப்படம் டைம் வார இதழின் உலகின் நூறு சிறந்த திரைப்படங்களிள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இத்திரைப்படத்தில் சிறந்த நடிகருக்கான 1988 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தேசிய விருதினை கமலஹாசன் பெற்றுக்கொண்டார்.

 "நீங்க நல்லவரா கெட்டவரா" என்று மகளின் கேள்விக்கு  கமலின் பதிலான “தெரியல” எனும் வார்த்தையும் சூழ்நிலைக்கேற்ற வசனமாக அமைந்தது.நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல எனும் பதில் செம ஹிட் ஆனது.. 

பாடல்கள் செம ஹிட் . நிலா அது வானத்து மேலே, நீ ஒரு காதல் சங்கீதம்.. தென்பாண்டி சீமையிலே ..லோட்டஸ் விருது- சிறந்த நடிகர் - கமலஹாசன்வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த ஒளிப்பதிவு- பி.சி. ஸ்ரீராம்வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த கலை இயக்கம் - தோட்டா தரணி

இந்தப்படம் ஆஸ்கார் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டது என விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் காட் ஃபாதர் படத்தின் ரீ மேக் என்பதால் நோ சான்ஸ்.. இது ஈரோடு ஆனூர் தியேட்டரில் 90 நாட்கள் ஓடின. 

http://lh4.ggpht.com/_lMxNrZCbDdY/TFoI6MERK0I/AAAAAAAADC4/UKwnZdD03tw/agninatchathiram.jpg

7. 1988 - அக்னி நட்சத்திரம் - படம் பார்த்த ஆடியன்ஸ் தியேட்டர் விட்டு வெளியே போகும்போதே பாதிப்பேர் அடுத்த ஷோவுக்கு ரிப்பீட் ஆடியன்ஸாக லைனில் நின்றார்களாம். அந்த அளவு இது மெகா ஹிட் .கதை சிங்கிள் லைனில் வைத்துக்கொண்டு ட்ரீட்மெண்ட்டில் புகுந்து விளையாடிய படம். பிரபுவும், கார்த்திக்கும் சந்திக்கும் ஒவ்வொரு சீனும் பொறி பறக்கும்.. அப்போ ஒரு பேக் கிரவுண்ட் மியூசிக் வரும்.. கலக்கல் ரகம்.. மணிரத்னம் படத்தில் முதல் வசூல் மழை பொழிந்த படம் இது தான்.. 

அமலாவின் இடையை இந்த அளவு அழகியல் நேர்த்தியோடு இதற்கு முன் யாரும் காட்டியதே இல்லை.. நிரோஷா என்ற சுமார் ஃபிகரைக்கூட குளத்தில் குளிக்க விட்டு இளமை பொங்க படம் ஆக்கினார்.. பிரபுவும் சரி,கார்த்திக்கும் சரி இது போல் ஒரு வெற்றியை இதற்குப்பின் பெறவே இல்லை.படத்தில் ஃபேமஸான வசனம். 

1.நான் ஒரு நல்ல அப்பாவாக இல்லாம போய் இருக்க்கலாம், ஆனா உனக்கு நல்ல கனவனா இருந்திருக்கேன்

2. நீங்க நல்லா அப்பாவாத்தான் நடந்துக்க முடியல, அட்லீஸ்ட் எங்கம்மாவுக்கு நல்ல புருஷனாவாவது நடந்தீங்களா?

இந்தப்படம் ஈரோடு ஆனூர் தியேட்டரில் 100 நாட்கள் ஓடியது




8. 1989 - கீதாஞ்சலி (தெலுங்கு) -இதயத்தை திருடாதே (தமிழ்) -

ஒரு காதல் கதை இந்த ஓட்டம் ஓடும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நாகார்ஜூன் -கிரிஜா நடிப்பில் வெளிவந்த படம்,படம் முழுக்க செம ஜாலியாக போகும். ஓடிப்போலாமா என்ற வசனம் செம ஹிட்.. அந்த கால கட்டத்தில் எல்லா இளைஞர்களும் ஃபிகர்களைப்பார்த்து கிண்டலாக அப்படி கேட்க தொடங்கினர். 

ஓ பிரியா பிரியா,காட்டுக்குள்ளே, உட்பட 7 சூப்பர் ஹிட் பாடல்கள்.ஒளிப்பதிவு கண்களில் ஒத்திக்கொள்ளும்படி இருந்தது.ஈரோடு தேவி அபிராமியில் 120 நாட்கள் ஓடியது..

9. 1990 - அஞ்சலி - குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் எல்லா வயது ரசிகர்களும் பார்க்கும் வண்ணம் எடுக்க முடியும் என்று சர்வசாதாரணமாக  நிரூபித்தார்.

சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த குழந்தை நட்சத்திரம்- ஷாமிலி, தருண்- சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த ஒலிப்பதிவு- பாண்டு ரங்கன் சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த வட்டாரத் திரைப்படம் 

- அஞ்சலி - மணிரத்னம் என 3 விருதுகள்.சூப்பர் ஹிட் பாடல்கள் பை இளையராஜா 1.வானம் நமக்கு  2. மொட்ட மாடி 3. இரவு நிலவு- எஸ்.ஜானகி  4. அஞ்சலி அஞ்சலி  5. சம்திங் சம்திங் 6. ராத்திரி நேரத்தில்- எஸ்.பி. பாலசுப்பிரமணியம்  7. வேகம் வேகம்- உஷா உதுப்

இதில் வேகம் வேகம் பாடல் மட்டும் ஈ டி பட இன்ஸ்பிரேஷன் என சொல்லப்பட்டது.. க்ளைமாக்சில் பேபி ஷாம்லியின் நடிப்பு கிளாஸிக். ரகுவரன்,ரேவதியின் நடிப்பில் இந்தப்படம் ஒரு மைல்கல்.

இரு குழந்தைகளுக்குத் தாயானவர் தனது மூன்றாம் குழந்தை மனநோயால் பாதிப்படைந்த குழந்தை என்பதனை அறியாமல் இருக்கின்றார். மூன்றாவதாக குழந்தை பிறக்கவுமில்லை என்ற கணவனின் கூற்றை ஏற்ற தாய் பின்னைய காலங்களில் அக்குழந்தையினைப் பற்றிய தகவல்களைப் பெறுகின்றார். தங்களுடனேயே அக்குழந்தையினை வளரவேண்டுமென்று அவர்கள் வாழும் இடத்திற்கே அழைத்தும் செல்கின்றனர். அங்கு வளரும் அச்சிறிய குழந்தையும் அவளின் சகோதரர்களால் ஆதரவு வழங்கப்படாமல் பின்னர் அவர்களின் அரவணைப்பைப் பெறுகின்றது.க்ளைமாக்சில் நெகடிவ் முடிவு..ஈரோடு அபிராமி தியேட்டரில் 60 நாட்கள் ஓடியது

http://www.envazhi.com/wp-content/uploads/2009/12/thalapathi_5.jpg

10. தளபதி - 1991 கமல் நடிப்பில் நாயகன் உருவான போதே ரஜினியை வைத்தும் எடுப்பார் என பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.இந்தப்படம் தான் தமிழ் சினிமாவில் மிக அதிக எதிர்பார்ப்பில் உருவான படம் ( இப்போ எந்திரன்). இந்தப்படம் ரிலீசின் போது ஈரோடு அபிராமி தியேட்டரில் பால்கனி டிக்கெட் விலை ரூ 6 .ஆனால் பிளாக்கில் ரூ 90க்கு விற்கப்பட்டது.. கிட்டத்தட்ட 15 மடங்கு.. இது பர பரப்பாக பேசப்பட்டது..

இந்தப்படத்தில் இருந்துதான் மணி பாரத இதிகாசங்களில் இருந்து கதைக்கரு எடுக்க ஆரம்பித்தார்.. மகாபாரதக்கதையில் வரும் துரியோதணன்-கர்ணன் நட்பு தான் அடிப்படை.. அதற்கு மாடர்ன் கலர் கொடுத்தார்..

சூப்பர் ஹிட் பாடல்கள் ஆடியோ சேல்சில் பின்னி எடுத்தது.

1.யமுனை ஆற்றிலே - எஸ்.பி பாலசுப்பிரமணியம், ஸ்வர்ணலதா

2. சுந்தரி கண்ணால் - எஸ்.பி பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி


3. புத்தம் புது பூ - யேசுதாஸ், எஸ். ஜானகிசின்னத் தாயவள் - எஸ். ஜானகி

4. மார்கழிதான் - எஸ்.பி பாலசுப்பிரமணியம், ஸ்வர்ணலதா, குழு


5. ராக்கம்மா கையத்தட்டு -எஸ்.பி பாலசுப்பிரமணியம், ஸ்வர்ணலதா

6.காட்டுக்குயிலு - எஸ்.பி பாலசுப்பிரமணியம், யேசுதாஸ்

பட ரிலீசுக்கு முன்பிருந்த ஆர்வம் படரிலீசுக்குப்பின் வரவில்லை. ஓவர் வன்முறை முக்கிய காரணம். இந்தப்படத்தில் 2 பாடல் காட்சி தவிர படம் முழுக்க ரஜினி சிரிக்காமல் இறுக்கமான முகத்துடனே வருவார்.. ரஜினிக்கு முக்கியமான படம்.அர்விந்த்சாமி இதில் தான் அறிமுகம். கலெக்டராக வருவார் .



தொடரும்


நன்றி - விக்கி பீடியா ஃபார் புள்ளி விபரங்கள்

Friday, January 14, 2011

பொங்கல் ரிலீஸ் படங்கள் - ஒரு பார்வை

http://www.tamilmaxs.com/Admin/event/1085_thamna.jpg

1. சிறுத்தை - பொங்கலுக்கு ரிலீஸ் ஆகற படங்கள்லேயே ரொம்ப
பிரம்மாண்ட படைப்பும், பெரிய பேனர்,ஸ்டார் வேல்யூ உள்ள படமும்
இதுதான்.ஆனால் டிரெயிலரைப்பார்த்தால் படு டப்பா படம் போல் தோணுது.
தெலுங்கு ரீமேக்னு அவங்களே ஓப்பனா சொல்லீட்டாங்க..அடிதடி வெட்டு குத்து வன்முறைன்னு படம் பக்கா மசாலாவா இருக்கும்.சந்தானம் காமெடி படத்துக்கு பிளஸ் ஆக இருக்கும்னு எதிர்பார்க்க முடியாது.. இந்த மாதிரி ஆக்‌ஷன் ரீவேஞ்ஜ் சப்ஜெக்ட்ல காமெடி சும்மா ஊறுகாய் மாதிரிதான் இருக்கும்.தமனா செம கிளாமரா இதுல
நடிச்சிருக்கறதா கேள்விப்பட்டேன். கார்த்தி - தமனா கெமிஸ்ட்ரி ஏற்கனவே பையா படத்தில் ஒர்க் அவுட் ஆனதால் இதிலும் காதல் காட்சிகள் பட்டாசைக்கிளப்பும் என எதிர்பார்க்கலாம்.

ஆனால் என்னைப்பொறுத்தவரை இந்த மாதிரி வன்முறையைத்தூண்டும் மாமூல் மசாலாப்படங்களோ,தெலுங்கு ரீமேக்குகளோ ஹிட் ஆகாமல் இருப்பதே நல்லது மினிமம் பட்ஜெட் படங்கள் ஹிட் ஆனால்தான் கதாசிரியருக்கும், நம்மைப்போன்ற இளம் படைப்பாளிகளுக்கும் வாய்ப்பும்,மரியாதையும் கிடைக்கும்.

ஹீரோயிச படங்கள் ஹிட் ஆவதால் மேலும் மேலும் அவர்களது சம்பளம் உயருமே தவிர கோலிவுட்டில் ஆரோக்கியமான சூழல் நிலவாது.கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களே ஹிட் ஆக வேண்டும்.

ஈரோட்டில் இந்தப்படம் 4 முக்கிய தியேட்டரில் ரிலீஸ் ஆகுது. அபிராமி தியேட்டரில் காவலன் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்தேன்,ஆனால் தியேட்டர் மேனேஜர் சிறுத்தையை அபிராமியில் போட்டு,காவலனை தேவி அபிராமியில் ரிலீஸ் பண்ண முடிவெடுத்து விட்டார்.( அபிராமியில் 1280 சீட்,தேவி அபிராமியில் 680 சீட்) அவரது கால்குலேஷன் மிஸ் ஆகி
சிறுத்தையை விட காவலன் ஹிட் ஆகட்டும் என வாழ்த்துகிறேன்.(!?)
http://narumugai.com/wp-content/uploads/2011/01/Tapsee.jpg
2. ஆடுகளம் - தனுஷ் படம் என்பதால் அல்ல படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகம். படத்தின் ஹீரோயின் புதுமுகம் என்பதாலும், பார்ட்டி நல்ல ஃபிகர் மாதிரி உத்தேசமான ட்ரெயிலர் பார்வையில் தெரிவதாலும் இளைஞர்களின் ரசனைக்குத்தீனி கன்ஃபர்ம்.பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாத படம் என்பதே இதற்கு ஒரு பிளஸ் பாயிண்ட்.எந்தப்படம் அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகிறதோ, அது ஃபிளாப் ஆவதும் சத்தமே இல்லாமல் ரிலீஸ் ஆகும் படங்கள் ஹிட் ஆவதும் கோலிவுட்டுக்கு புதுசில்லை.

பெரிய பட்ஜெட் படங்களான சிறுத்தை,காவலன் ஆகிய படங்களுக்கு
நல்ல நல்ல தியேட்டர்கள் புக் ஆகி விட்டதால் இந்தப்படத்துக்கு
சுமாரான தியேட்டரே கிடைச்சிருக்கு. பார்ப்போம்.
http://www.123tamilcinema.com/images/2010/11/Kaavalan-e1290671207347.jpg
3. காவலன். - தொடர்ந்து 6 தோல்விபடங்கள் கொடுத்து விட்டதால்
விஜய் இந்தப்படத்தில் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
காமெடியை நம்பினோர் கைவிடப்படார் என்பது அனைத்து மொழிகளிலும்
நிரூபிக்கப்பட்டது என்பதாலும் ,ஏற்கனவே சூப்பர் ஹிட் படமான ஃபிரண்ட்ஸ்
பட இயக்குநர் சித்திக்கின் படம் என்பதாலும் இந்தப்படம் குடும்பத்துடன்
பார்க்கும்படி இருக்கும் என நம்பி போகலாம்.

ஏற்கனவே மலையாளத்தில் இந்தப்படம் ஹிட் ஆகி இருக்கிறது
என்பதும், அந்த படத்தை பார்த்தவர்கள் படம் நல்லாருக்கு என கருத்து சொல்லி
இருப்பதாலும் விஜய்யும், அவரது ரசிகர்களும் தெம்பாக இருக்கிறார்கள்.

அசின் ஜோடி என்றாலும் இன்னொரு ஃபிகரும் தட்டுப்படுது.பார்ட்டியும் ஷோக்காத்தான் இருக்கு.ஒளிப்பதிவு நல்ல கிளாரிட்டி.எனது தனிப்பட்ட எதிர்பார்ப்பு இந்தப்பொங்கலில் ஹிட் அடிக்கப்போவது காவலன் தான் .
http://tamil.chennaivision.com/wp-content/uploads/2010/11/ilaignan.jpg
4. இளைஞன் - இந்தப்படத்தின் விளம்பரங்களில் உங்கள் அபிமான தியேட்டர்களில் ட்ரெயிலர் அதிர்கிறது என வாசகம் வந்தது செம காமெடி.கலைஞர் வசனம் என்பதால் எப்படியாவது ஒப்பேற்றி விடலாம் என நினைக்கிறார்கள்.பாடல் ஆசிரியர் விஜய் ஜஸ்ட் பாஸ் ஆவது ஆக வேண்டும் என பிரார்த்தித்தபடி இருக்கிறார். ட்ரெயிலரை பார்த்தால் படம் பத்தோடு பதினொண்னு அத்தோட இதுவும் ஒண்ணு என்றே தோணுது.

டிஸ்கி -1 ; கடைசியா வந்த தகவல்படி (ஆமா,இவரு பெரிய நியூஸ் சேனல் நடத்தறாரு..) காவலன் இன்னைக்கு ரிலீஸ் ஆகலை.

டிஸ்கி 2 : நான் ஆடுகளம் படம் விமர்சனம் டைப் பண்ணிட்டு இருக்கேன். 5 மணிக்கு  போட்டுடுவேன்.( ஆமா, இவரு எவரெஸ்ட் சிகரத்தை டச் பண்ணீட்டாரு, இந்தியக்கொடியை நட்டு மானத்தை காபாத்தப்போறாரு...)