Showing posts with label பிலிம் பெஸ்டிவல். Show all posts
Showing posts with label பிலிம் பெஸ்டிவல். Show all posts

Friday, December 19, 2014

சென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 19.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை

Camouflage
Camouflage 
 
 
சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை ரஷ்ய கலாச்சார மையத்தில் திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை. 



காலை 10 மணி
Camouflage / Krzysztof Zanussi / Poland / 1977 / 106'
மாணவர்களை எப்போதும் அச்சப்படுத்திக் கொண்டே இருந்தால் தான் மாணவருக்கும் ஆசிரியிருக்குமான உறவு சரிவர அமைந்திருக்கும் என்று எண்ணும் முதிர்ச்சியான வாத்தியார், மாணவர்களை தோழர்களாக நடத்தினால் மட்டுமே அவர்களின் திறனை முழுவதுமாக வெளிக்கொணர முடியும் என நினைக்கும் இளைஞர். இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் அடிக்கடி கருத்து மோதல் ஏற்படுகிறது. பள்ளியில் பெரிய அளவில் நடத்தப்படும் மொழியியல் போட்டியின் போது இவ்விருவரும் தீர்ப்பு சொல்லும் இடத்தில் அமர்ந்த்திருக்க இவர்களின் கருத்து வேறுபாடு போட்டியில் ஏற்படுத்தும் தாக்கத்தையும், குழப்பத்தையும் பற்றிய படம் தான் இது. 



மதியம் 12 மணி
Mundaspatti / Dir.:Ram / Tamil|2014|133'| TC
புகைப்படம் எடுத் துக்கொண்டால் நோய்வாய்ப்பட்டு இறந்துபோவது உறுதி என்று நம்புகிறார் கள் முண்டாசுப்பட்டி கிராமத்து மக்கள். ஆங்கிலேய ஆட்சியின்போது அந்தக் கிராமத்தில் நடந்த ஒரு அசம்பாவிதம்தான் இந்த நம்பிக்கைக்குக் காரணம். விளைவு அந்தக் கிராமத்தில் கேமராவைக் கண்டாலே தலை தெறிக்க ஓடுகிறார்கள். 




உயிரோடு இருப்பவர்களைப் படம் பிடிக்கக் கூடாது என்பதால் இறந்த பிறகு பிணத்தை அலங்கரித்து புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்வது அவர்கள் வழக்கம். அந்தக் கிராமத்தின் தலைவர் இறந்துபோக, அவரது பிணத்தைப் புகைப்படம் எடுக்க ஹாலிவுட் ஃபோட்டோ ஸ்டுடியோவின் உரிமையாளர் கோபியையும் (விஷ்ணு) அவன் உதவியாளரையும் (காளி வெங்கட்) அழைக்கிறார்கள். ஊர்த் தலைவர் உயிர் போகாமல் இழுத்துக்கொண்டிருக்க, அவர் இறக் கும்வரை அங்கேயே தங்கியிருந்து புகைப்படம் எடுத்துத் தரும் படி ஊர்க்காரர்கள் வேண்டிக்கொள் கிறார்கள். கலைவாணியும் அந்த வீட்டில் தான் இருக்கிறாள். அந்த ஊரிலேயே தங்கும் கோபி, கலைவாணியிடம் தன் காதலைச் சொல்கிறான். அவளுக்கும் அவனைப் பிடிக்கிறது. ஆனால் அவ ளுக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி விட்டது. 



ஊர்த் தலைவர் இறந்ததும் அவர் பூத உடலைப் புகைப்படம் எடுத்துவிட்டு ஸ்டுடியோவுக்குத் திரும்புகிறான் கோபி. ஆனால் எடுத்த புகைப்படம் சரியாக விழவில்லை. அதற்குப் பதிலாக ஒரு தந்திரம் செய்கிறான். ஆனால் குட்டுவெளிப்பட்டு மாட்டிக் கொள்கிறான். ஊர்க்காரர்களின் கோபத்திற்கு ஆளாகி தண்டனை பெறும் கோபியும் அவன் நண்பர்களும் எப்படித் தப்பினார்கள், கோபியின் காதல் என்ன ஆயிற்று என்பதுதான் மீதிக் கதை. 



மதியம் 3 மணி
Thegidi / Dir.: P. Ramesh / Tamil|2014|126'| TC
கிரிமினாலஜி படித்த வெற்றிக்கு (அசோக் செல்வன்) தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. ஒரு நபரைப் பற்றிய தகவல்களைத் திரட்டும்படி இவருக்கு அசைன்மென்ட் கொடுக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபருடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது உள்படப் பல நிபந்தனைகளுடன் வெற்றி களத்தில் இறக்கப்படுகிறான். 



குறிப்பிட்ட நபர் யார், அவர் என்ன வேலை செய்கிறார், அவர் பொழுதுபோக்கு, குடும்பப் பின்னணி, நடமாட்டங்கள் எனப் பல தகவல்களை யும் திரட்டிக் கொடுக்கிறான். நிறுவனம் பாராட்டுகிறது. மேலும் சில அசைன்மென்ட்கள் கொடுக்கப்படுகின்றன. ஒரு அசைன்மென்டின் போது அவன் சந்தேகத்துக்குரிய முறையில் மது (ஜனனி) என்னும் பெண்ணின் கண்ணில் பட்டுவிடுகிறான். அவளைப் பார்த்ததும் பிடித்துப் போவதால் அவளிடம் தன்னைப் பற்றிய தப்பபிப்ராயம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று மெனக்கெடுகிறான். 



எதிர்பாராத திருப்பமாக அவளையே வேவு பார்க்கச் சொல்லி நிறுவனம் உத்தரவிடுகிற்து. வெற்றி வேலையை ஆரம்பிக்கிறான். ஆனால் பணியின் நிபந்தனையை மீறி அவளோடு பழகி நெருக்கமாகிறான். இதை எப்படிச் சமாளிப்பது என்று கவலைப்படும் நேரத்தில் அதைவிடவும் பெரிய பிரச்சினையை அவன் எதிர்கொள்ள நேர்கிறது. 



அடுத்தடுத்து விழும் கொலைகளும் அவற்றின் பின்னணியும் வெற்றியைச் சிக்கலில் மாட்டிவிடுகின்றன. தன் காதலியின் உயிருக்கு ஆபத்து என்பதும் தெரியவருகிறது. தன்னையும் காப்பாற்றிக்கொண்டு காதலியையும் காப்பாற்றிக் கொலைகளின் மர்மத்தையும் கண்டுபிடிக்க அவன் போராடுகிறான். 


நன்றி - த இந்து

சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் | 18.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை


சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை உட்லண்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களின் அறிமுகக் குறிப்புகள் இவை. மாலை 6.15 மணிக்கு துவக்க விழா நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து In the Name of My Daughter திரைப்படம் திரையிடப்படவுள்ளது. 



காலை 10 மணி
Brotherhood of Tears/France/Jean Baptiste Andrea /95’/2014 

 
முன்னாள் துப்பறியும் நிபுணர் காப்ரியல் செவாலியரின் வழியாகத்தான் இப்படத்தின் கதை சொல்லப்படுகிறது. 



சூதாட்டத்தில் வைத்த கடன்கள் தொடர்ந்து தோல்வி எண்ணங்களை தோற்றுவிக்க அவர் தொடர்ந்து போதையில் சிக்குகிறார். தவிர, அவருடைய பதின்ம வயது மகளும் இவருக்கு நிறைய தொல்லை தருகிறாள். ஒரு நடைப்பிணம் போல வாழும் அவர் நெருக்கடியான சூழலைக் கடக்க ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் கூட போதும் என்று நினைக்கிறார். 



இந்த நேரத்தில்தான் அவரைத் தேடி ஒரு வாய்ப்பு வருகிறது. அது நல்லதா கெட்டதா என்பதை படத்தின் பின்பாதி நமக்கு கூறுகிறது. ஒரு பூங்காவில் காத்திருக்கும் அவரைத்தேடி வரும் ஒரு வயதான மனிதர் இவர் செய்யவேண்டிய வேலை பற்றி கூறுகிறார். தொடர்ந்து அவர் கூறிய அலுவலகத்திற்கு இவர் செல்கிறார். ஒரு ஆள் கூட வேலை செய்யாத அலுவலகம் அது. ஒரு மாதிரிய சூன்யமாக இருப்பதை உணர்கிறார். ஒரு கறுப்பு சூட்கேஸ் அவரிடம் கொண்டுவந்து கொடுக்கப்படுகிறது. 



அப்போது அவருக்கு ஒரு அறிவுறுத்தல், இந்த சூட்கேஸை எக்காரணத்தைக்கொண்டும் எப்பொழுதும் எதற்காகவும் திறந்துபார்க்கக்கூடாது. அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்று சூட்கேஸை கொடுத்துவிட்டு வரவேண்டும். காப்ரியல் துணிச்சலோடு அவர்கள் சொன்ன இடத்திற்கு கிளம்புகிறார், அங்கு இருக்கும் ஆபத்தை உணராமல். ஜெராமி ரேனியரின் நடிப்பில் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம். 



மதியம் 12 மணி
Flapping in the middle of nowhere / Dap Canh Giua Khong Trung / Diep Hoang Nguyen / Vietnam / 2014 99' 

 
ஹூயென், டுங் என்ற இரண்டு ஆண்-பெண் விடலைகள், இதில் பெண் விடலை கல்லூரி மாணவி. ஆண் - வேலை செய்து கொண்டிருக்கிறான். இவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தினரை விட்டு வெகுதொலைவில் ஹனாயில் வசிக்கின்றனர். போதுமான அளவுக்கு தவிர இவர்களிடம் பணம் இல்லை. இவர்கள் பொதுவாக அலட்சிய மனோபாவம் கொண்டவர்கள். டுங்கிற்கு உடலுறவு கொள்வதில் ஆர்வம் அதிகம். இதன் விளைவாக ஹூயென் கருத்தரிக்கிறாள். ஆனால் கருவைச் சுமக்க அவள் விரும்பவில்லை. டுங் அவள் எதுகூறினாலும் அதற்கு உடன்பாடாகவே இருந்தான். ஆனால் கருக்கலைப்புக்கு அவர்களிடம் பணம் ஏது? 





மதியம் 3 மணி
The Dark Valley /Austria/Andreas Prochaska/114’/2014
19 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் ஒரு குளிர்காலம். மேற்கு ஆல்ப்ஸ் மலைத்தொடருக்குச் செல்லும் ரகசிய வழியில் கிரீடர் எனும் ஒரு தனியாள் குதிரையில் செல்கிறான். ஆள்நடமாட்டம் அற்ற பள்ளத்தாக்குகளின் வழியே சென்று மலையுச்சியிலிருக்கும் ஒரு ஊரை அடைகிறான். அங்கு ஒரு விதவையின் வீட்டில் தங்குகிறான். அவளுடைய மகள் கவனித்துக்கொள்கிறாள். தன்னை ஒரு புகைப்படக் கலைஞன் என்று கூறிக்கொண்டு மலைச்சூழலை படம்பிடித்துவருகிறான். 



ஆனால் அவன் இருப்பது யாருக்கும் பிடிக்கவில்லை. முக்கியமாக அந்த ஊர் தலைவனுக்கும் அவன் மகன்களுக்கும் இவனைப் பிடிக்க வில்லை. இவன் வந்தபிறகுதான் ஊர்த்தலைவனின் மகன்கள் ஒவ்வொருவராக மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். அடக்குமுறைக்கு ஆளான மக்களின் பிரதிநிதியாக இங்கு வந்துள்ள கிரீடர் அதற்குக் காரணமானவர்களைக் கொல்வதற்காகவே வந்திருக்கிறான் என்பது மெல்லமெல்ல மற்றவர்களுக்குப் புரிய ஆரம்பிக்கும்போது கிட்டத்தட்ட இவன் பலபேரை கொன்றுமுடிக்கிறான். 87வது ஆஸ்கர் அகாதெமி விருதுக்காக சிறந்த வெளிநாட்டுப் படப்பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. 



மாலை 6.15 மணிக்கு துவக்க விழா நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து In the Name of My Daughter திரைப்படம் திரையிடப்படவுள்ளது/ 



In the Name of My Daughter/France/Andre Techine/116’/2014 

 
பிரென்ச் ரிவேராவில் உள்ள நீஸ் எனும் நகரில் உள்ள நட்சத்திர விடுதியின் உரிமையாளர் மேடம் ரேணி லீ ரோக்ஸ். அவளின் மகள் ஏக்னஸ் காணாமல் போனதாக தொடுக்கப்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்த வழக்கை மீண்டும் கொண்டுவருகிறாள். தன் மகள் கொலைசெய்யப்பட்டதாகவும் அதைச் செய்தது வழக்கறிஞர் மௌரீயஸ்தான் எனவும் புகார் தெரிவிக்கிறாள். கதை1976-க்குப் பின்னோக்கிச் செல்கிறது. 



அப்போது நட்சத்திர விடுதியின் கேஸினோ இறங்குமுகத்தில் இருந்தது. அங்கு வந்துபோய்க்கொண்டிருந்த வழக்குரைஞர் மௌரீயஸ் அதை எப்படியாவது கைப்பற்ற நினைக்கிறான். கேஸினோ உரிமையாளர் ரேணியின் மகள் ஏக்னஸுடன் நெருங்கிப் பழகுகிறான். அவளும் இவன் காதல் வலையில் விழுகிறாள். இத்தனைக்கும் அவன் நிறைய பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவன். 



பின்னர் உள்ளூர் மாஃபியா ரௌடி ஃப்ரேட்டினியின் துணையை நாடுகிறான். தாய்க்கும் மகளுக்கும் அவன் சண்டைமூட்டிவிடுகிறான். சிலநாட்களில் ஏக்னஸ் காணாமல் போகிறாள். ஏக்னஸ் லீ ரோக்ஸ் என்பவளின் உண்மைக் கதைதான் இங்கு சுருக்கமான உளவியல் ரீதியான திரைப்படமாகியுள்ளது. ரேணி எழுதிய புத்தகத்திலிருந்து இப்படத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்னதும் இப்படத்தின் இயக்கத்தில் ரேணியின் இளைய மகன் துணைநின்றதும் முக்கியமான விஷயங்கள். 

thanx - the hindu

சென்னை சர்வதேச பட விழா | ஐநாக்ஸ் | 19.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை

Marussia
Marussia
சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை ஐநாக்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை. 



காலை 10 மணி
Marussia/France/Russia/Natalia Saracco/82’/2014
கிழக்கு ஐரோப்பாவிலிருந்து எண்ணற்ற மக்கள் பாரீஸ் போன்ற நகரங்களுக்கு வந்துகொண்டேயிருக்கின்றனர். அங்குள்ள தங்கள் நிலங்களை விட்டுவிட்டு இங்கு வருவதற்குக் காரணம் அங்கு இனி எதிர்காலம் இல்லை என்பதுதான். லூசியாவும் அவளது சிறிய மகள் மாருஷ்யாவும் ரஷ்யாவிலிருந்து வெளியேறியவர்கள். அவர்கள் தெருக்களில் உறங்கி நாடோடிகளாக பிரான்ஸை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். 



பல நேரங்களில் திக்கற்ற அவர்களின் சூட்கேஸ்கள் பரிசோதிக்கப்படுகின்றன. கட்டுப்பாடுகள் மிக்க ரஷ்ய மதகுரு ஒருவர் இவர்களுக்கு முதன்முதலாக தங்குவதற்கு இடம் தர முன்வருகிறார். அதேபோல இரண்டாவது நாள் ஒரு வீடற்றவர்களுக்தான தங்குமிடத்தில் தங்குகின்றனர். இப்படி அடுத்தடுத்து சினிமா தியேட்டரில், கட்சி ஆபீசில், இன்னொருநாள் ஒரு நடிகையோடு பெரிய ஓட்டலில் என தங்குகின்றனர். ரஷ்யாவிலிருந்து பிரான்ஸ்சுக்கு செல்லும் இவர்களின் பயணத்தைப் பேச இப்படம், பயணங்கள், இடைவெளிகள் குறித்து நிறைய அர்த்தங்களை உணர்த்துகிறது. 



மதியம் 12 மணி
Life in Fish Bowl / Zophoniassiolceland/Attila Szasz /130’/2014
நெருக்கடிக்கு முந்தைய ஐஸ்லாந்து நாட்டில் ஒரு சிறிய குடும்பத்தை வைத்து அந்த நாட்டின் பொருளாதார அரசியல் நிலைகளையும் ஆழமாக பேசியுள்ள படம். அப்பா அம்மாவால் வெறுக்கப்பட்ட ஒரு பெண் தனது குழந்தைக்காக நர்சரி வேலையைத் தவிர மற்ற நேரங்களில் செக்ஸ் வொர்க்கராகவும் சென்று பணம் சம்பாதிக்கிறாள். 



அவளுக்குப் பிறந்த மகன் ஓர் எழுத்தாளனாக மாறுகிறான். அவன் செய்துகொண்ட திருமணம் அவனுக்கு நிம்மதியைத் தராமல் சிக்கலைத்தான் தருகிறது. தன்னுடைய மகள் இறந்தபிறகு மனைவியை விவாகரத்து செய்துவிடுகிறான் அந்த எழுத்தாளன். ஒரு முன்னாள் கால்பந்து விளையாட்டு வீராங்கனையான அவனது மனைவி; உலக வங்கிகளில் உயர்ந்துகொண்டே போகிறது அவளது பொருளாதாரம். 



அவனோ வெளி உலகிலிருந்து தன்னை துண்டித்துக்கொண்டு குடியில் மூழ்கிவிடுகிறான். 20 வருடங்களாக இருந்த அவன் இதேநிலையிலிருந்து இறந்தும்போகிறான். பிரமாண்டம், உணர்ச்சிப்பூர்வம், அழகியல் என எதிலும் குறையின்றி வெளிவந்துள்ள படம். 



மதியம் 3 மணி
The Moveable Feast / Zone pro site / Chen Yu-Hsun Taiwan / 2013 / 148'
தைவானின் உள்நாட்டு சுவையுணர்வுப் பண்பாட்டைப்பேசும் இந்தக் கதையை வெளிப்புற சுவைவிருந்து ஒன்று சிறப்பாக பிரதிநிதித்துவம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை வேளாண்மை யுகத்தில் தடம் காண முடியும். அந்தக் காலத்தில் உணவு விடுதிகள் குறைவு. எனவே திருமண வரவேற்பு, விருந்து போன்ற நிகழ்ச்சிகள் வெளி இடங்களிலோ டென்ட் போன்ற முகாம்களிலோதான் நடைபெறும். சாதாரண அடுப்புகள் மற்றும் நீளமான மேஜைகள் ஆகியவற்றுடன் விருந்து சமையல் நடைபெறும். ஒவ்வொரு உணவும் அந்த இடத்திலேயே உடனுக்குடன் தயாரிக்கப்படுவதே. 



சமையல் நடைமுறைகளை, என்ன சமைப்பது போன்றவற்றை முடிவு செய்பவர் தைவானிய மொழியில் ஸோன் ப்ரோ சைட் என்று அழைக்கப்படுவார்.அப்படிப்பட்ட விருந்துக்கு வரும் தலைமைச் சமையலாளி தனது பண்ட பாத்திரங்களுடன் வருவார். ஆனால் விதவிதமான உணவு வகைகளுடன் அவரது படைப்பாற்றலை அவர் காண்பிக்க வேண்டும். அந்த விருந்து எதற்காக நடத்தப்படுகிறதோ அதனை மையமாகக் கொண்டு வித்தியாசமான உணவுகளை சமைக்க வேண்டும். 



என்ன சமையல் பொருட்கள் கொடுத்தாலும் அவர் அந்த விருந்தின் காரணத்திற்கேற்ப வித்தியாசமான உணவு வகைகளை அவர் சமைத்தால்தான் அவரது படைப்பாற்றல் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். விருந்து கொடுப்பவரும், விருந்தாளிகள் அனைவரும் முழுதும் அந்த உணவு வகைகளை நன்கு ருசித்து சாப்பிடவேண்டும் என்பதே சவால். சமையலைக் குறைகூறியே பழக்கப்பட்டவர்கள் கூட புகழ்ந்து விட்டால் அவரை ஒரு சிறந்த சமையல் காராராக ஏற்றுக்கொள்ளப்படுவார். இந்தப் படம் அத்தகைய சமையல்காரரைப் பற்றியும் தைவானிய பண்பாட்டையும் பேசுகிறது.
மாலை 5 மணி
Consequences / Silsile Ozan Aciktan / Turkey / 2014 / 106'
ஒரு கடும் கோடை இரவில் எசி என்பவர் சென்க் என்பவரின் இடத்திற்குச் செல்கிறார். ஏதோ நீண்ட நாட்களுக்கு இருவரும் பிரிந்திருந்தது போல் உணர்கின்றனர். அப்போது திடீரென ஒரு 14 வயதுள்ள கள்வன் வீட்டிற்குள் வருகிறான். அவன் பெயர் கிலிச். ஆனால் இவன் எப்படியோ குடியிருப்பிலிருந்து தப்பிச் செல்கிறான். 



சிறிது நேரத்தில் இன்னொரு கள்வன் இருட்டிலிருந்து வருகிறான். எசி அவனை கடுமையான பொருள் ஒன்றினால் தற்காப்பிற்காக தாக்குகிறார். டெய்ஃபன் என்ற அந்தக் கள்வன் பயங்கர ரத்தத்துடன் தரையில் சாய்கிறான்.
சென்க் என்ன கூறுகிறார் என்றால் டெய்ஃபன் என்ற அந்தக் கள்வனுக்கு நேர்ந்த கதிகுறித்து தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி எசியை வெளியே அனுப்பி விட்டு தனது சிறந்த நண்பரான ஃபரூக்கை உதவிக்கு அழைக்கிறாள் சென்க். 



ஃபரூக்கும் அவரது வழக்கறிஞர் மெர்வ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகின்றனர். ஃபரூக்கும், எசியும் திருமணம் செய்து கொள்ள நிச்சயிக்கப்பட்டவர்கள் என்று தெரிகிறது. பரூக்கும் சென்க்கும் வர்த்தகக் கூட்டாளிகள். சென்க் அப்போதுதான் பட்டப்படிப்பை முடித்து விட்டு அமெரிக்காவிலிருந்து வந்து தனது புரோஜக்டில் பணி செய்ய தொடங்கியிருக்கிறார். 



இதனிடையே முதலில் வீட்டில் திருடனாக நுழைந்து தப்பிச் சென்ற கிலிச், எசியை ஒரு காரில் வலுக்கட்டாயமாகக் கடத்திச் செல்கிறான். காரணம், எசி முதலில் கொலை செய்த டெய்ஃபன் என்ற திருடன் கிலிச்சின் சகோதரன். இதன் பிறகு சங்கிலித் தொடராக நிகழ்வுகள் அடுத்தடுத்து ஏற்படுகிறது. சிக்கலான நகர்ப்புற வாழ்வியல் உறவுகள் சொல்லப்படுகிறது. தொடர் நிகழ்வுகள் ஏற்படுத்தும் மாற்றங்கள் சென்க், பரூக், எசி ஆகியோரது வாழ்க்கையை நிலையாக மாற்றுகிறது.
மாலை 7.15 மணி 



Hadji Sha/Iran/Zamani Esmati /97’/2014
ஹாஜ்ஜி ஷா ஐம்பது வயதுப் பெண்மணி. அவள் கடந்த 30 வருடங்களாக தன்னை ஒரு ஆணைப் போலவே நினைத்துக்கொண்டு தன்னுடைய தங்கையின் குடும்பத்தை காப்பாற்றி வருபவள். அவளுடைய வீட்டுக்கு புதியதாக குடிவரும் பாடகி ஒருத்தி தான் பாடிய பாடல்களை வெளியிடவேண்டும் என்பது அவளது ஆசை. அவர்கள் இருவரும் நல்ல தோழிகளாக இருக்கிறார்கள். 



இருவரும் பெண் என்ற அடையாளம் எவ்வளவு மோசடியானது என்பதை சிந்திக்கிறார்கள். ஆண் சமூகத்தின் அடிமைத்தளையில் சிக்குண்ட பெண்இருப்பை இருவரும் பேசிக்கொள்கிறார்கள். 



ஹாஜ்ஜி தன்னைச்சுற்றியுள்ள எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனிக்கக் கூடியவள். தன்னுடைய தங்கைக்கு வாய்த்த மருமகன் எவ்வளவு கேவலமானவன் என்பதை அவன் வரும்போதே உணர்ந்துவிட்டவன். 



இந்தக் குடும்பத்தின் நிலையை மாற்ற விரும்பி போராடாதவனாக அதில் சுகம்காணுபவனாக அவன் இருப்பதை உணர்கிறாள். தங்கையின் உடல்குறைபாடு கொண்ட பேத்தி பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்ட விஷயம் அவளுக்குத் தெரியவரும்போது எல்லையற்ற கோபத்திற்கு தள்ளப்படுகிறாள். 


thanx - the hindu