Friday, June 24, 2011

எகனை மொகனை செய்திகள் வாசித்து கமெண்ட்டுவது எடக்கு மடக்கு ஏகாம்பரம்


1. பக்தர்களிடம் தொடர்ந்து திருட்டு சுவாமிமலையில் வாலிபர் கைது#அட லூஸாப்பா நீ? உண்டியல்ல கை வைக்க வேண்டியது தானே?

-----------------------------

2. ஊழல் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: லோக்பால் மசோதாவில் அதிகாரம் #அதிகாரின்னா எளக்காரம்,அரசியல்வாதின்னா அதிகாரம்

----------------------

3. மனிதாபிமானமற்ற முறையில் கனிமொழி சிறையில் அடைப்பு: கருணாநிதி#முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் அடைபட்டபோது இப்படிகுரல் கொடுத்திருக்கலாமே?தலைவா

---------------------------

4. மதுரையில் பயன்படுத்தும் ஆணுறை 2.50 லட்சமாக உயர்வு#இதற்கும் எங்கள் ஆருயிர் அண்ணன் அழகிரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

--------------------

5. கையெழுத்து போட லஞ்சம்; கல்வி அலுவலர் கைது #ஒரு கவர்மெண்ட் ஆஃபீசர் ஆட்டோகிராஃப் போட உரிமை இல்லையா? என வாதாடி தப்பிச்சிடப்போறாரு,கபர்தார்

-----------------------

6. மெழுகுவத்தி தயாரிப்பது எப்படி: ஓய்வு நேரத்தில் கனிமொழி பயிற்சி#நான் வெளில இருக்கும்போது சக்கரவர்த்தி ஆனா உள்ளுக்குள்ள மெழுகுவர்த்தி

-------------------

7.  ரூ.100 கோடி நிலம், சொத்துகள் அபகரிப்பு: அரசியல் பிரமுகர்கள் விரைவில் கைது? #ஈரோடு என் கே கே பி ராஜா வெளிநாடு பயணம்னு நாளை நியூஸ்??

---------------------------





8. கூடுதல்சர்க்கரை ஏற்றுமதிக்கு அரசு அனுமதி #ஆல்ரெடி இங்கே சுகர் பேஷண்ட் ஜாஸ்தி எதுக்கு எக்ஸ்ட்ரா சுகர்?அனுப்பி விடுங்க

------------------

9.  நடிகர் கார்த்தி திருமணம்! கோவையில் ஜூலை 3ம்தேதி நடக்கிறது!!#நடிகை தமனா ஜூலை 1ந்தேதி வெளிநாடு பயணம்#இமேஜினேஷன்

--------------------

10  அவன் இவனுக்கு தடை கோரி வழக்கு#சும்மா விட்டாலே அந்தப்படம் 7 நாள்ல ஆல் செண்ட்டர்லயும் எடுத்துடுவாங்க.. இப்படி பரபரப்பைகிளப்புனாஹிட்ஆகிடும்

------------------------

11. மீண்டும் ரவீனா டாண்டன் நடிக்க வருகிறார்#சாரி,ரிப்பீட் ஆடியன்ஸ்னா ஓக்கே,ரிப்பீட் ஆக்ட்ரஸ்னா நாட் ஓக்கே.. செகண்ட்ஸ் இன்னிங்க்ஸ்வேணாம்

------------------

12. கவர்ச்சி மட்டும் நடிப்பல்ல; திறமையும் வேண்டும்: ஸ்ரேயா! #சான்ஸ் வாங்கும் திறமை தானே? அதான் உங்க கிட்டே நிறையா இருக்கே மேடம்?

-------------------------

13.  உதவி இயக்குநரை, இயக்குநராக்குகிறார் சசிகுமார்! #அப்போ இயக்குநரை உதவி இயக்குநர் ஆக்கிடுவாரோ?டவுட்டு

-------------------

14. ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா #ஓக்கே மேடம் ஆனா ஒரு கண்டிஷன்,வீடியோ மட்டும் எடுத்துக்குவோம்,டீலா? நோ டீலா?

------------------------


----14.

Thursday, June 23, 2011

கண் கலங்க வைத்த பெண் பதிவர்கள் - நெல்லை பதிவர் சந்திப்பு பாகம் 4



பதிவுலகில் பெண் எழுத்து என்றாலே பெரும்பாலும் பலர் என்னத்தை இவங்க எழுதிடப்போறாங்க?சமையல் குறிப்பு, கோலம் போடறது எப்படி? மீறிப்போனா காதல் கவிதைகள் எழுதுவாங்க.. என்றெல்லாம் தவறான கருத்துக்களைத்தான் கொண்டுள்ளனர்.. அவர்கள் எண்ணங்களை எல்லாம் தவிடு பொடி ஆக்கியது  பெண் பதிவர்களின் பங்களிப்பும் ,அவர்கள் காட்டிய எழுச்சியும்.... 


இவர் ஆரம்பத்திலேயே போல்டாக சொல்லி விட்டார்.. சார் என் எழுத்துக்கள் மக்களுக்குப்பயன் அளித்தால் போதும்..  அதனால் என் ஃபோட்டோக்கள் எதுவும் பப்ளிஷ் ஆகக்கூடாது என கிட்டத்தட்ட மிரட்டினார்.. இவரது பாடி லேங்குவேஜ் அசாதாரணமான ஒரு அரசியல் தலைவரை  நினைவு படுத்தினாலும். ( டேய் சி பி அருவா அருவா ) அவரது பேச்சுக்கள் உண்மையை பட்டவர்த்தனமாக, எந்த வித மேல் பூச்சும் இன்று வெளிப்படுத்தியது.. (அக்கா ,மன்னிச்சுக்கங்கக்கா)

நான் (அதாவது அக்கா.. )  என் பிளாக்கில் பெரும்பாலும் தம்பதிகளுக்கான ஆலோசனைகளை மட்டுமே வழங்கி வருகிறேன்.. ஆரம்பத்தில் சுமாராகப்போன தளம் இப்போ  பரவாயில்லை.. போகிறது.. பலர் தங்கள் அனுபவங்களை எனக்கு மெயில் பண்ணி ஆலோசனை கேட்கிறார்கள்.. நான் அவர்களுக்கு பதில் அளிக்கிறேன்.. அதையே பதிவா போடறேன்..

( அக்காவுக்கு எம்புட்டு சவுகர்யம்.. பதிவு போட சரக்கில்லாம எங்கேயும் தேட வேண்டியதில்லை.. 100க்கு 98 பேர்  சம்சாரம் கூட சண்டை போட்டுட்டுத்தான் இருப்பான்.. சண்டையே போடாம இருந்தா அது சம்சாரமா? ஆஹா டைட்டில் பிரமாதமா இருக்கே.. நோட் பண்றா.. நோட் பண்றா.. _)

என்னால பலர் பயன் பெறுகிறார்கள்.. தம்பதிகளுக்குள் வரும் மனத்தாங்கல்களை நான் தீர்த்து வைக்கிறேன்..

பதிவை படித்தவர்கள் தங்களின் சில தவறுகளை திருத்திகொண்டதாக / குறைத்துகொண்டதாக சொல்லும்போது மனதிற்கு நிறைவை கொடுப்பதால் தொடர்ந்து அத்தொடரை தொடருகிறேன்..

( இதுக்காகவே அக்கா தளத்துல போய் மைனஸ் ஓட்டு போடனும்  ம்  ம்.. நாம ஏதாவது சாக்கு சொல்லி சம்சாரத்தை கழட்டி விடலாம்னு பார்த்தா இவங்க விட மாட்டாங்க போல இருக்கே.. ?  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்  )


கழுகு என்ற தளத்தை பற்றி நிறைய பேசினாங்க...விழிப்புணர்வு பதிவு ஏதோ ஒன்று , இரண்டு நம்ம தளத்தில் எழுதுவோம், ஆனா அதற்கென்றே இருக்கும் தளம் கழுகு. அப்டின்னார்..


அப்புறம் அக்கா நைஸா பலா பட்டறை சங்கர் சார்ட்ட மெயில் ஐ டி வாங்கி சார் உங்க கட்டுரை ஒண்ணு கழுகுக்கு தேவைப்படுதுன்னார்.. அவரும் ஓக்கே ரெடி பண்றேன்னார்.... இப்படியே பல முக்கிய பதிவர்களிடம் மெயில் ஐ டி , ஃபோன் நெம்பர்  வாங்குனாங்க,..... என் பக்கம் வரவே இல்ல.. நானும் வெட்கத்தை விட்டு அவங்க கிட்டே கேட்டேன்.. (நமக்குத்தான் வெட்கமே இல்லையெ அதை ஏன் விடனும்னு யாரும் கேட்றாதீங்க.. ) 

 ”அக்கா அப்போ நானு? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. ” அதுக்கு அவ்ங்க சொன்னாங்க..” தம்பி.. கழுகு ஒரு சமூக விழிப்புணர்வு தளம்.. ஏதோ அதுக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு.. வாசகர் வட்டம் இருக்கு.. நீ எழுதி இருக்கற பேரையும் கெடுத்துடாதே” ன்னார்..

( இதுக்கு எதுவும் நான் கேட்காமயே இருந்திருக்கலாம்.. இது வீடியோவுல வேற ரெக்கார்டு ஆகிடுச்சு.. அவைக்குறிப்புல இருந்து நீக்கச்சொன்னா அண்ணன் உணவு உலகம் முடியாதுன்னுட்டார்.. ஹூம்.. போற பக்கம் எல்லாம் சொம்பு வாங்கனும்கறது நம்ம தலை எழுத்து போல.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)



 இம்சை அரசன் பாபுவின் அன்புத்தங்கையும்,லேப் டாப் மனோவின் பாச மலர்த்தங்கையும்,வெறும்பய ஜெயந்தின் முதல் தங்கையும் ஆன ஸ்மைலி ராணி & அழுகாச்சி காவியம் கல்பனா அடுத்து பேச எழுந்தாங்க.. 

முதல்ல பெயர்க்காரணம்.. இவர் ஒரு கவிதை தன்னோட அப்பாவைப்பற்றி எழுதி இருக்காங்க.. அந்த கவிதை பலராலும் பாராட்டப்பட்டாலும் சிலரால் கிண்டல் செய்யப்பட்டு அழுகாச்சிக்காவியம் ஆனார்.. அந்த கவிதையை எப்போ படிச்சாலும் அழுதுடுவாராம்.. ஹய்யோ ஹய்யோ ..

இவர் நன்பர்களுக்கு மெசேஜ் அனுப்பும்போது ஓகே என 2 வார்த்தை டைப் பண்ணிட்டு 8 ஸ்மைலி போட்டு அனுப்புவாராம்....இவர் ஒரு அப்பள பிரியை.. இது  எப்படித்தெரிஞ்சுதுன்னா லஞ்ச்ல ஓசி சாப்பாடு சாப்பிடறப்ப நான் பார்த்தவரையே அவர் மட்டும் ஆறு அப்பளம் சாப்பிட்டார்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.

ஆறு மனமே ஆறு.. அவங்க  அபேஸ் பண்ணுன அப்பளம் ஆறு ( சிச்சுவேஷன் சாங்க்)

கல்பனா- 

என் பிளாக் பேரு அறிவியல் . எனக்கு இன்னொரு பிளாக்கும் இருக்கு.. பேரு..நான் ரசித்தவை ரசிக்க வாருங்கள் என்னோடு
எனக்கே உரித்தான " என் தேடல்கள் " உங்களுக்காக ..... அப்டின்னாங்க.. ஹலோ மேடம்.. என்ன சொன்னீங்க .. புரியல.. இன்னொரு முறை சொல்லுங்க.. என கூட்டத்தில் ஒருவர் கிண்டல் அடித்தார்.. அவர் ரிப்பீட்டினதும்  உங்க பிளாக் பேர்  இவ்வளவு நீளமா வெச்சதுக்காகவே உங்களுக்கு அவார்டு தரனும்னாங்க.. ஹா ஹா 

அப்புறம் அவர் படித்த கவிதை.. பாதி படிச்சதுமே டி வி சீரியல் ஹீரோயின் ஆகிட்டாங்க..
இனிப்புபால் புகட்டி
 இதழ் படபடத்த
எனை முதற்  கையில் ஏந்தி
சிரிக்கையில் சிரித்து,
அழுகையில் அன்பால்
எனை அரவணைத்தாயே..!!

கைபிடித்து தோழனாய்
நீ நடக்கையில்
தெருக்கள் சுற்றியும்
உலகம் இனித்தே !!

அன்று
சத்தமிடும் சந்தையிலே
சனமிடையே - என்
மனம் வேண்டுவனக்கு
மௌன பட்டியல்
போட்டாயே !!!

வருடலின் தாலாட்டில்
அணைப்புதனை
கர்வங்கொண்டு
பெருமிதத்தில்
உன்னருகே
உறங்கிய நாட்கள் நெருடுதே..!!

பதினாலுவயசுல
ஆளாகி நின்னவள
பதறாம கண்ணெழுதி
 (கல்பானாவின் அப்பா)
உச்சி மோர்ந்து
ஊரே மெச்ச
விழா தொடுத்த
கனம் மறக்குமோ..??!!

பார்பவையனைத்தும்
உன் சாயல் கொண்டுள்ளதே...
என் முக'வரி உள்ளுட்டு!!

தும்மலுக்கு இசைமீட்டி ரசித்தாயே
விம்மலோடு - இன்று
என் விழிகள் உன் இல்லாமையால்..

"உன்ன விட்டு போறேன் பாரு"- என்ற
என் வெகுளி சொல்லுக்கு உடைந்தையே !!
ஆனால் இன்றோ நீ ???
ஏன்ப்பா.........!!!???

இறந்தார் மீள்வரா
ஐயத்திற்கு
சுற்றம் உரைத்தது..!
'நாடு பொறுக்குமா?'
இருப்பினும்
வாழ்கிறாயே
என் சிந்தையில்..!!

உனக்கு
என்றும் ஐயம் - வேண்டாம் அப்பா
நீ உருக
காதலித்த இதயம்
பொக்கிஷமாய்
தாயுருவில்!!!
இவங்க சொந்த ஊரு விருது நகராம்.. கவிதைக்கு விருது உண்டோ இல்லையோ இவங்க அழுகைக்கு விருது உண்டு..


3.

ஜோஸபின் பாபா  

இவர் பேரே இவர் ஒரு சீரியஸ் பதிவர்னு சொல்லிடுச்சு.பொதுவா பதிவர்கள் யார் எழுதுனாலும் அவங்களோட வாழ்க்கைத்துணை அவ்வளவா அதை விரும்ப மாட்டாங்க.. ஏன்னா தன்னை, தன் குடும்பத்தை கவனிக்காம பிளாக்கை கவனிக்கறாங்கலேன்னு ஒரு எண்ணம் உணடு.. ஆனா இவரோட கணவர் ரொம்ப வித்தியாசம்.. அவர் மனைவிக்கு ரொம்ப ஹெல்ப்பா இருக்கார்.. மனைவியை பார்க்கும் பார்வையிலேயே அவரது கண்களீல் பெருமிதம் மிளிர்ந்ததை கண்டேன்.. காட் பிளஸ் தெம் .. (LET GOD BLESS THEM)
 இவர் பேசுனது........

 


வலைப்பதிவு என்பது அறிவாளிகளால் உருவாக்கபடுவது எழுதப்படுவது என்பதிலும் தாண்டி உண்மை உரைக்கும் இதயத்தால் பேசும் நபர்கள் கொண்டு வழி நடத்தி செல்வதே. ஒரு வலைப்பதிவில் பலவும் வீட்சியும் அதன் தணிக்கையற்ற செய்தி வெளியிடலும் கட்டுபாடற்ற சுதந்திரமான படைப்பு ஆகும்.

வலைப்பதிவுகள் என்பது ஒரு பொழுது போக்கு என்பதையும் தாண்டி சமூக வளர்ச்சிக்கு எடுத்து செல்லவேண்டும். உதாரணமாக திருநெல்வேலி மக்களின் உயிருக்கு எந்த நேரவும் ஆபத்து விளவிக்கும் கூடன்குளம்  அணு-உலை போன்ற வற்றின் செய்தியே மக்கள் மத்தியில் கொண்டு செல்ல உதவ வேண்டும்.

வலைப்பதிவுகள், பொழுது போக்கு அம்சம் என்பதை கடந்து கருத்துரையாடலுக்கு , மாற்று ஊடகமாகவும், தகவல்களை சிறப்பாக பறிமாறி கொள்ள, சமூக சீர்திருத்தம் என பல நிலைகளில் பங்கு ஆற்றுகின்றது. வலைப்பதிவுகள் என்றாலே நாட்குறிப்பீடு என்று ஒரு பொதுவான எண்ணம் உண்டு. ஆனால் வலைப்பதிவுகள் என்பது 3 வகையாக பிரிக்கலாம், நாட்குறிப்புப் பேடு(diary) வகை சார்ந்தது, நோட்டு புத்தகம்(note book)வகை மற்றும் ‘தேடி தேர்ந்து எடுக்க தகுந்தது’ (filter blog) என 3 ஆக வேர்படுத்தலாம்.

வலைத் தளத்தின் ஒரு பாகமான வலைப்பதிவுகளை பொழுது போக்கு அம்சம் என்பதை கடந்து ஈழம் என்ற தங்கள் அடையாளத்தை பேணவும், வெகுசன ஊடங்களால் உண்மையான செய்திகள் அரசியல் காரணங்களால் மறுக்கப் பட்ட போதும் மழுங்கடிக்கப் பட்ட போதும் தங்கள் ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை பறிமாற வலைப்பதிவுகள் உலகில் பல நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள ஈழ தமிழர்களை உதவியது என்று ஆய்வு முடிவில் எட்டியுள்ளேன். மேலும் நிலைத்தை தன் உடமை உறவுகளை இழந்த ம்க்கள் தங்கள் வலைப்பதிவு வழியாக தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள  ஈழம் என்ற தங்கள் அடையாளத்தை வாழ்வை பதிவு செய்ய வலைப்பதிவுகள் பெரிதும் பயண்படுத்துகின்றனர்.

ஊடகத்தின் பணியான அடி நிலை மக்களின்  செய்தியை பெருவதிலும் அதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதிலும் பெரிதும் பங்கு ஆற்றுகின்றது என்றால் மிகையாகாது. என் நிலத்தின் நடக்கும் நிகழ்வுகளை உதாரணமாக எடுத்து கொண்டால் என் பிறந்த ஊரில் நடந்த சபரிமலை ஆபத்து என்பது எங்கோ ஒரு மூலையில் குடியிருக்கும் பத்திர்க்கையாளர்களை விட அந்த மண்ணின் மக்களுக்கு பெரிதும் தெரிந்திருக்கலாம்.  இது வலைப்பதிவாக வரும் சூழலில் உண்மைக்கு வலு  சிறப்பு சேர்க்கின்றது.

அடுத்தாக நம் செய்திகளை மிகவும் துரிதமாக  மிகை குறைந்த செலவில் ஒரு கூட்டம் ஜெனங்களிடம் ஒரே நேரம் கொண்டு சேர்க்க இயல்கின்றது.
வலைப்பதிவுகள் பொழுது போக்கு அம்சம் என்பதையும் கடந்து அவன் சிந்தனை நிலையை தட்டி எழுப்பும் சூழல் உருவாக்குகின்றது.

13 வருடங்களுக்கு முன்பு நான் சென்ற வீடல்ல இன்று என்னுடையது. இன்று நான் வாழ்ந்த அறை என் மேசை கட்டில் ஏன் நான் இந்த உலகை நோக்கிய என் அறைகள் அதன் சன்னல்கள் எல்லாம் என்னில் இருந்து பிரித்தெடுக்கபட்டதாக உண்ர்ந்தேன். என் வீடு என் குழந்தைகள் கணவர் என்று இருக்கும் போது என்னில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட நிலம் இடம் உறவு சார்ந்த வேதனைகளை என் உணர்வுகளை பங்கிட இயல்கின்றது என்பதும் இதன் சிறப்பே.

இவர் இதை பேசறப்ப அழுதுட்டார்.. இலங்கை அகதிகளின் மனக்குமுறல்கள் இவரது பேச்சில் வெளிப்பட்டது..
 4. chella நாய்க்குட்டி -ரூஃபினா.

இவர் தன்னோட சோக நினைவுகளை பகிர்ந்துக்கிட்டார்.. என்னோட அப்பா இறந்துட்டார்.. அதை என் பிளாக்ல தகவலாவும்,அஞ்சலியாவும் போட்டிருந்தேன்.. அதை பார்த்துட்டு அவரோட ஸ்டூடண்ட்ஸ்  காண்டாக்ட் பண்ணி தகவலுக்கு நன்றி சொன்னார்.. எங்கெங்கோ இருக்கற சொந்தங்கலை நண்பர்களை இணைக்கற பாலமா பிளாக் இருக்கு..

அப்டீன்னார்..

4. கொஞ்சம் வெட்டி பேச்சு - சித்ரா

இவரைப்பற்றி நான் சொல்லவேண்டியது எதுவுமே இல்லை.. ஒரு பெண் பதிவர் எப்படி இருக்கனும்கறதுக்கு இவர் ஒரு முன் உதாரணம்.. இவரை தாக்கி எழுதுனாக்கூட சிரிச்சிக்கிட்டே திட்டுவாரு.. சிரிக்காத சித்ராவை யாராலும் பார்க்கவே முடியாது.. எதுக்கெடுத்தாலும் சிரிப்புதான்.. ஆனா பேசறப்ப கொஞ்சம் சீரியஸ் ஆனார்.. ” நான் ஒரு முறை நடு நிசி நாய்கள் பட விமர்சனத்துக்கு கமெண்ட் போட்டேன்.. அந்த விமர்சனம் எழுதுனவர் என்னோட ஃபேமிலி ஃபிரண்ட்.. ஆனா ஒருத்த தனி மெயில்ல 18+ பதிவுக்கு வழக்கமா நீங்க கமெண்ட் போட மாட்டேங்களே.. இதுக்கு மட்டும் ஏன்? அப்டின்னு கேட்கறாங்க..  ஒரு பெண் பதிவர் தன்னோட கருத்தை சுதந்திரமா தெரிவிக்க முடியறதில்லை.. எத்தனை எதிர்ப்புகள்.. எல்லாவற்றையும் தாண்டித்தான் நாங்க செயல்பட வேண்டி இருக்கு..  அப்டின்னு சலிச்சுக்கிட்டார்.. ( ஒரு உபரித்தகவல்.. அப்டி மெயில் அனுப்பிக்கேட்ட பதிவர்.. 6 எழுத்தில் பிளாக் நேம், 9 எழுத்தில் அவர்  பெயரும் கொண்டவர் )

 தொடரும்

சாருநிவேதிதாவுக்கும் அமலாபாலுக்கும் என்ன சம்பந்தம்?

Copying in Exam.

1. 9 லட்சம் இலவச லேப்டாப்:டெண்டர் விடும் பணி துவக்கம்#ஜாக்கிரதையா ஊழல் பண்ணுங்கம்மா.. 5 வருஷம் கழிச்சு அடுத்த ஆட்சில தோண்டிடப்போறாங்க

---------------------------

2. நடிகர் விஜய்  தனது 37வது பிறந்த நாளை நேற்று பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து கொண்டாடினார்.#வேலாயுதம் ரிலீஸ் இல்லைன்னு சொல்லிட்டாரா?

--------------------------------

3. துணைவேந்தர் தேர்வு வெளிப்படையாக அமையுமா?#அதுக்காக இண்ட்டர்வியூவை போர்ட்டிகோவுல வைக்க முடியுமா?தனி ரூம்ல வெச்சாத்தானே கை நீட்டலாம்?

----------------------------

4. கனிமொழியை சந்தித்த கருணாநிதி அப்செட்: ஐ.மு., கூட்டத்தை புறக்கணித்தார்#வெல்செட் என்ற ஜெ இந்த சம்பவம் தொடரும் என கணித்தார்#இமேஜினேஷன்

--------------------------

5. கணக்கு பாடத்தில் சந்தேகம் கேட்டதால் ஆசிரியர்கள் மிரட்டல்:  மாணவர் தற்கொலை#அந்த நாள் முதல் இந்த நாள் வரை கணக்கு கேட்டாலே பிரச்சனை தான்

-------------------------------

Sweet Home Alabama Gif
Reese Witherspoon laying on a bed...she is so cute in this movie!






6. 23 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்#ஆச்சரியமா இருக்கே மேடம்.. கலைஞர்-ன் கடிதம் எழுதும் யுக்தியை நீங்களும்?

----------------------------

7. பிரதமர் பதவியை ராகுல் ஏற்பது குறித்து, அவர் தான் முடிவு செய்ய வேண்டும்- ஜெயந்தி நடராஜன் #இப்படி நீங்க பேட்டி குடுக்கறதைக்கூட அவர் தான் முடிவு செய்யனுமா?

---------------------

8. எல்லா அரசுகளும், தனியார் பள்ளிகளுக்குத் துணையாக இருக்கின்றன-டாக்டர் ராம்தாஸ்#உங்களை CM ஆக்குனா அன்புமணிக்கு துணையா இருப்பீங்களாக்கும்?

-----------------------------

9. சுப்பிரமணியசாமி  சோனியாவின் வீட்டு ஊது குழலாக திக் விஜய் சிங் #இந்தக்காலத்துல எல்லார் வீட்லயும் கேஸ் சிலிண்டர் தான்,புதுசா யோசிங்க ப்ளீஸ்

---------------------

10. சமச்சீர்க்கல்விக்காக சுப்ரீம்கோர்ட் உத்தரவின்பேரில், 9 பேர்கொண்ட குழு .#அம்மாவுக்கு ராசியான நெம்பர் 9 ன்னு கோர்ட்க்கும் தெரிஞ்சிடுச்சா?

--------------------

Cat Pillow Sleep



11. திமுக., கூட்டணியில் இருந்து, காங்கிரஸ் உடனே விலக வேண்டும் -இளங்கோவன் #காங்கிரஸ் தமிழ்நாட்டை விட்டே விலக வேண்டும் - பொதுமக்கள்

----------------------

12.  ஐஸ்வர்யா ராய் கர்ப்பம்! அமிதாப் பச்சன் தகவல்!!#இது எதிர்க்கட்சிகள் சதின்னு யாரும் சொல்லிடாதீங்கப்பா,வில்லங்கமாப்போயிடும்

---------------------------

13.  ஜாகீர் கானுக்கும் எனக்கும் எந்த உறவும் கிடையாது. இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை-இஷா சர்வானி#மனுஷங்களோட வாய்ல இருந்துதான்.

------------------------

14. ரிலீஸ் ஆக இருக்கும் ஜித்தன் ரமேஷ் படத்தில் என்னை வெச்சி காமெடி பண்றாங்களே...? டி.ஆர். வருத்தம்!!#பின்னே உங்களை வெச்சு படமா பண்ண முடியும்?

-------------------------

15.  மீரா ஜாஸ்மின் மேரேஜ்க்குப்பிறகு நடிக்க மாட்டார்-செய்தி# அவரோட ரசிகர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம்,டைவர்சுக்குப்பிறகு நடிப்பாராம்

------------------------------

Optical Illusion Face






16.  ஜூலை15ல் பிரசாந்தின் மம்பட்டியான் ரிலீஸ் #அதே நாளில் ஷகீலா நடித்த  வெரைட்டி தம்புராட்டி இன் மராட்டி ரிலீஸ்,SO தியேட்டர் கிடைப்பது டவுட்

-------------------------

17. சிவாஜி குடும்பத்தில் இருந்து அடுத்த வாரிசு நடிகர்!#சாரி,வந்தாரை,இடை மெலிந்தாரை வாழவைக்கும் தமிழகம்,நொந்தாரை அல்ல,வீ வாண்ட்ஸ் நடிகைஸ் ஒன்லி

--------------------

18.  அமலா பால் இளம்பெண்களை கெடுக்கிறார் -இந்து மக்கள் கட்சி #அவர் என்ன சாரு நிவேதிதாவா?சேட்டிங்க் பண்ணி கெடுக்க?

------------------

19. விரைவில் வருகிறது கேப்டன் செய்திகள் சேனல்! #வந்துட்டுப்போகட்டும்,ஆனா ஒரு கண்டிஷன்,செய்தியை கேப்டனேதான் சொல்வார்னு யாரும் மிரட்டக்கூடாது

---------------------------

20. அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு! சினிமாவுக்கு வரிச்சலுகை தேவையா?#சினிமாவே தேவை இல்லை தான்,என்ன பண்ணறது?

------------------------

கதாவிலாசம் எஸ்.ராமகிருஷ்ணன் பேட்டி

http://lh4.ggpht.com/-oXTk_1S2qSU/TR9wwsV6VfI/AAAAAAAAE4k/iKbvi5-EOfk/DSC06684.JPG 
 
விகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்


1. ''ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?'' 

''அதை வீழ்ச்சி என்று நான் ஒப்புக்கொள்கின்றவன் இல்லை. வாழ்வுரிமை பறிபோய், இன்றும் அகதிகளாக முகாமிலும் பல்வேறு தேசங்களிலும் நிர்க்கதியாக நிற்கும் மக்களின் கண்களில், பேச்சில், சிந்தனையில் ஈழப் போராட்டம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. இவ்வளவு பெரிய மனிதத் துயரத்தை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த தமிழகச் சூழலைத்தான் மனிதாபிமானமற்றுப்போன வீழ்ச்சி என்று சொல்வேன்!''



2. ''தமிழில் நோபல் பரிசுக்குத் தகுதியான எழுத்தாளர் என்று யாரைச் சொல்வீர்கள்?''   

''கி.ராஜநாராயணன். அவர் ஓர் உன்னதமான கதை சொல்லி. மிகப் பெரிய இலக்கிய ஆளுமை. எளிய விவசாயியாக இடைசெவல் என்ற கிராமத்தில் வாழ்ந்து எழுதியவர். கிராம மக்களின் பேச்சுத் தமிழை இலக்கிய மொழியாக்கியவர். கரிசல் இலக்கியம் என்ற தனி வகையை உருவாக்கிய முன்னோடி. கிராமியக் கதைகள், பாடல்கள், சொலவடைகள், நாட்டுப்புற நம்பிக்கைகள் என்று தேடித் தேடிச் சேகரித்து, நமது வாழ்மொழி மரபைக் காப்பாற்றியவர்.  
கரிசல் அகராதி என்று வட்டார வழக்கு அகராதியை உருவாக்கியவர். இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து போராடிய விவசாயி. சங்கீத ஞானத்தில் விற்பன்னர். சங்கீத மேதை விளாத்திகுளம் சாமிகளின் சீடர். 50-க்கும் மேற்பட்ட கரிசல் வட்டார எழுத்தாளர்களை உருவாக்கியவர். இவரது 'கோபல்லபுர கிராமம்’ மிக முக்கியமான தமிழ் நாவல். எகிப்தின் நகுப் மக்பூஸ் (Naguib Mahfouz) நோபல் பரிசு பெற்றபோது, தமிழ் மொழியில் அவருக்கு நிகராக கி.ரா. இருக்கிறாரே என்று தோன்றியது. அந்த ஆதங்கம் எப்போதும் இருக்கிறது!''


3. ''எத்தனையோ இசங்கள் இருக்கின்றன... அவற்றில் உங்களைக் கவர்ந்த இசம்?'' 


''கம்யூனிசம். எல்லா இசங்களும் அறிவாளி களுக்கானவை. கம்யூனிசம் ஒன்று மட்டுமே சாமான்ய மக்களின் நலனுக்கானது. இசங்கள்பற்றி சுந்தர ராமசாமி நீண்ட கவிதை எழுதிஇருக்கிறார். அதில் எனக்குப் பிடித்தமான வரிகள்...

'மேற்கே ரொமான்டிஸிஸம்
நேச்சரலிசம்
ரியலிசம்
அப்பால்
இம்ப்ரஷனிசம்
என் மனைவிக்குத்
தக்காளி ரசம்!’ ''


\
 4.''இயக்குநர் பாலாவுடன் வேலை பார்த்த அனுபவம்?'' 

''ஒரு புத்தகம் எழுதும் அளவு நிறைய அனுபவம் பெற்றிருக்கிறேன். 'இவன்தான் பாலா’ என்று புத்தகம் வழியாகப் படித்து அறிந்த பாலாவுக்கும் பழகிப் பார்த்த பாலாவுக்கும் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.

திறந்த புத்தகம்போலத் தன் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசக் கூடியவர். நட்பை மதிக்கத் தெரிந்தவர். திறமையை அடையாளம் கண்டு கொண்டாடவும் மேம்படுத்தவும் கூடியவர். தான் நினைத்ததை சினிமாவில் காட்சிப்படுத்த 100 சதவிகிதம் முயற்சி செய்யும் பெர்ஃபெக்ஷனிஸ்ட். ஒருநாள் பாலாவைச் சந்திக்க எனது சிங்கப்பூர்  நண்பரை அழைத்துச் சென்றேன். அவர் பாலாவின் எளிமையை, வெளிப்படையாகத் தன்னையே கேலி செய்துகொள்ளும் பண்பைக் கண்டு, 'என்ன அண்ணே, பாலா இப்படி இருக்கிறார்!’ என்று வியந்து பேசினார். ஒன்றரை ஆண்டுகள் அவரோடு சேர்ந்து வேலை செய்தும், அந்த வியப்பு இன்றும் எனக்கும் இருக்கிறது. அதுதான் பாலா.

ஓர் இயக்குநர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, பில்லி வைல்டர் என்ற அமெரிக்க இயக்குநர் சொன்ன பதில் இது:   A director must be a policeman, a midwife, a psycho analyst, a sycophant and a fool. இது பாலாவுக்கும் பொருந்தக்கூடியதே!''


5.  '' 'எங்கள் பகல் உங்கள் இரவுகளைவிடக் கருமையானவை’ என்று பார்வையற்றவர்களின் உலகத்தைச் சொல்லும் புதினம் இதுவரை வந்துள்ளதா? விளக்கவும்?'' 

'' 'நிறங்களின் உலகம்’ என்று தேனிசீருடையான் ஒரு சிறந்த நாவலை எழுதிஇருக்கிறார். அவர் சிறு வயதில் பார்வைஇழந்து, அவதிப்பட்டு, பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் பயின்றவர். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அறுவை சிகிச்சை செய்து, பார்வை கிடைத்திருக்கிறது. தனது இருண்ட வாழ்வனுபவத்தை அவர் ஒரு நாவலாக எழுதிஇருக்கிறார். மிக முக்கியமான நாவல் அது!''


6.  ''அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் கலை - இலக்கியம் ஆரோக்கிய மாக இருக்கும் அளவுக்கு, தமிழகத்தில் இல்லை என்கிறார்கள் (சினிமா விதிவிலக்கு). உண்மையா?'' 


''உண்மையே! நாம் இலக்கியப் பெருமை பேசுகிறோமே தவிர, எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தருவதே இல்லை. தமிழ்நாட்டில் அரசியல், சினிமா, கிரிக்கெட் - இந்த மூன்றுக்கும் தரப்படும் முக்கியத்துவம் வேறு எந்தத் துறைக்கும் தரப்படுவது இல்லை. காரணம், அதன் உடனடி பரபரப்புத்தன்மை.

இலக்கியத்தையும் எழுத்தாளர்களையும் இரண்டாம்பட்சமாகவே நடத்துகிறார்கள். தமிழில் முதன்முறையாக நான் தாகூர் விருது வாங்கி இருக்கிறேன். இங்கு பெரும்பான்மை நாளிதழ்களில் அது செய்தியாகக்கூட வெளியாகவில்லை. ஆனால், அஸ்ஸாமிய எழுத்தாளர் அதே விருது வாங்கியது அங்கே முதல் பக்கச் செய்தி. அரசு அதற்காகப் பாராட்டு விழா நடத்துகிறது.

கல்வி நிலையங்கள் அவரைக் கொண்டாடுகின்றன. இதே சூழல்தான் கேரளாவிலும் கர்நாடகாவிலும் இருக்கிறது.  அங்கே எழுத்தாளர்களை பப்ளிக் இன்டெலக்சுவல் என்று கருதுகிறார்கள். எல்லா முக்கியப் பிரச்னைகளிலும் கருத்து கேட்கிறார்கள், ஆலோசகர்களாக நியமிக்கிறார்கள். கேரளாவில் எழுத்தாளன்தான் தன் குழந்தையின் கையைப் பிடித்து அட்சரம் எழுதக் கற்றுத் தர வேண்டும் என்று மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த எழுத்தாளருக்கும் இன்று வரை அந்த மரியாதை கிடைக்கவே இல்லை!''

 http://maduraivaasagan.files.wordpress.com/2010/12/dhesandhiri.jpg?w=447&h=288
7. ''இணையத்தின் பயன்பாடு அதிகமாகிவிட்ட சூழலில், புத்தகத்துக்கு என்று தனியாக இருக்கும் மதிப்பு குறைந்துவிடுமோ என்ற அச்சம் உங்களை எப்போதாவது சூழ்ந்து உள்ளதா?'' 


''ஒருபோதும் இல்லை. காரணம்,   இணையத்தின் வருகையால் தகவல்களைப் பெறுவது மட்டுமே எளிமையாகி இருக்கிறது. அதிலும், பெரும்பான்மை தகவல்களை நம்ப முடியவில்லை. பெரும்பான்மை வாசகர்கள் இன்றும் புத்தகங்களைத் தேடுகிறார்கள். இணையத்தால் புத்தகங்களின் முக்கியத்துவம் அதிகமாகிவிட்டது. நிறையப் புத்தகங்கள் விற்பனையாகின்றன. ஈபுக் ரீடர். ஐ-பேட், ஐ-போன் போன்ற உபகரணங்களில் காகிதம் இல்லாத புத்தகங்கள் பெருகி வருகின்றன. ஆனாலும், அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கான முக்கியத்துவம் அப்படியே இருக்கிறது.


10 கிராம் உள்ள டூத் பிரஷை என்னால்  ஐந்து நிமிடங்களுக்கு மேல் கையில் வைத்து இருக்க முடியாது. ஆனால், 'பொன்னியின் செல்வன்’ போன்ற ஆயிரம் பக்க நாவலை மணிக்கணக்கில் கையில் வைத்து, அதன் எடை பற்றிய கவனமே இல்லாமல் படிக்க முடிகிறதே, அதுதான் புத்தகத்தின் தனித்துவம். புத்தகம் என்பது வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதம் இல்லை. அது மனித வாழ்வின் அழியாத நினைவுத் திரட்டு. எல்லை அற்ற மனித அனுபவங்களை, நினைவுகளைத் தொகுத்து ஆவணப்படுத்தி வைத்திருப்பதே புத்தகங்களின் இருப்புக்கான முதற் காரணம். அது என்றும் மாறாதது!''


8.  ''அண்ணா ஹஜாரே, ராம்தேவ் ஆகியோரின் போராட்டங்களை ஆதரிக்கிறீர்களா? இல்லை என்றால், ஏன்?'' 

அண்ணா ஹஜாரேவை ஆதரிக்கிறேன். அவர் ஒரு காந்தியவாதி. பல ஆண்டுகாலமாக மக்கள் சேவையில் இருப்பவர். ஆனால், பாபா ராம்தேவை ஆதரிக்கவில்லை. காரணம், அவர் ஒரு மதத் துறவி என்ற அடையாளத்தில் நடமாடும் ஆன்மிக வியாபாரி. 1,000 கோடி சொத்துள்ள ராம்தேவ் ஊழலை எதிர்க்க முன்வந்திருப்பது ஒரு சந்தர்ப்பவாத அரசியல். ஊழலுக்கு  முக்கியப் பிரச்னை, குறுக்கு வழியில்  பணம் சம்பாதிக்க நினைக்கும் பேராசை. இது அரசியல்வாதிகளுக்கு மட்டும் இல்லை, சாமான்ய மக்களுக்கும் இருக்கவே செய்கிறது. 

லஞ்சம்  வாங்குவதைத் தனது திறமை என்று  எண்ணும் மனப்பாங்கு நமக்குள் உருவாகி இருக்கிறது. குற்ற உணர்ச்சி இன்றி அதை நியாயப்படுத்துகிறோம். அந்தத் தொற்றுநோயின் முற்றிய நிலைதான் ஊழல். ஊழல் இன்று தேசிய அடையாளம்போல் ஆகிவிட்டது. 

அதற்கான எதிர்ப்பு உணர்வு ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் துவங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஊழலுக்கு எதிராக தான் என்ன செய்யப்போகிறோம் என்று யோசிக்கவும் செயல்படவும் வேண்டும். கடுமையான சட்டமும், சமூக அக்கறைகொண்ட ஊடகங்களும், மக்கள் சக்தியும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே இது சாத்தியம்!''


- அடுத்த வாரம்... 


''உங்களுக்கு தமிழ்நாட்டில் பிடித்த அரசியல்வாதி யார்?'' 

''உங்களைப்போன்ற எழுத்தாளர்கள் துணிச்சலான அரசியல் கருத்துகளை முன்வைப்பது இல்லையே... பயமா?'' 

''சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன்... யாருக்கு ரசிகர்கள் அதிகம்?'' 


- விறுவிறு பதில்கள் தொடர்கின்றன... 

நன்றி - விகடன்

Wednesday, June 22, 2011

நெல்லையில் நான் ஆற்றிய உரை (இவர் பெரிய டீ மாஸ்டரு..!!) நெல்லை பதிவர் சந்திப்பு பாகம் 3

 


இடம் இருந்து வலமாக முதல் நபர் புது பதிவர்,பெயர் சொல்ல விரும்பவில்லை (PVS),சி.பி ,கோமாளி செல்வா,கூலிங்க் க்ளாஸ் மணி வண்ணன் (வம்பை விலைக்கு வாங்குவோம்ல), வலைச்சரம் சீனா,தாதா தமிழ்வாசி பிரகாஷ்,அவரால் மிரட்டப்படுவது ரசிகன் ஷர்புதீன்

ஜாலியாகபோய்க்கொண்டிருந்த பதிவர் சந்திப்பு நான் பேச எழுந்த போது ஒரு மவுன அலை அரங்கில் நிலவியது.. வீட்டில் மாப்பிள்ளை பார்த்துட்டாங்க.. இனி நம்ம காதல் அவ்வளவு தான் என்று காதலி சொன்னதும் காதலனிடம் ஏற்படும் இறுக்கம் போலவும்,வேலையை விட்டு டெர்மினேட் செய்யப்பட்ட ஊழியரின் கடைசி நாள் பணி நடக்கும்போது ஏற்படும் சங்கடம் போலவும்,சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது யாராவது பசியுடன் நம்மை கை ஏந்தும்போது நம் வயிற்றுக்குள் தோன்றும் அழுகை போலவும் அரங்கில் ஒரு அசாதாரணமான அச்சுறுத்தும் அமைதி பரவியது.. 

பதிவுலகில் நான் வந்ததிலிருந்து இன்று வரை எனக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள்,அப்போது நான் அவற்றால் பாதிக்கப்படாதது போல் வெளியே காட்டுக்கொண்டு உள்ளுக்குள் அழுது கொண்ட சம்பவங்களை நினைவு கூற முடிவு செய்தேன்..

மன பாரங்களை உள்ளுக்குள் இருத்தி வைக்கும் வரை அவை நனைந்த பஞ்சு மூட்டை போல கனமாகவும்,யாரிடமாவது கொட்டித்தீர்த்தால் அது காற்றில் பறக்கும் தூசி போலவும் எளிதாகிவிடும் என்பதால் நான் எல்லாவற்றையும் ஓப்பனாக பேசி விட துணிந்தேன்..


1. என் மேல் வைக்கப்பட்ட முதல் குற்றச்சாட்டு - நான் ஹிட்சுக்காக எழுதுகிறேன் என்பது..

ஒரு பையன் ஸ்கூ;ல்லயோ,காலேஜ்லயோ படிக்கறான்னா அவனும்,அவனோட பெற்றோர்களும் அவன் முதல் ரேங்க் வாங்கனும்னு நினைப்பாங்களா? ஏதோ படிச்சா போதும்னு நினைப்பாங்களா?

எல்லாருக்கும் தான் முன்னணில இருக்கனும், தான் பாராட்டுப்பெற வேண்டும் என எண்ணம் இருக்கும்.அது தான் எனக்கும் இருக்கு.. நீ எந்த வேலை செஞ்சாலும் அதுல பெஸ்ட்டா இரு.. என்பதே எனது கொள்கை.. இதுல என்ன தப்பு இருக்கு..?

நான் பொழுது போக்குக்குத்தான் எழுதறேன்.. எனக்கு எந்த வெறியும் இல்லைன்னு  சொல்றவங்க தாராளமா அப்படி இருந்துக்கலாம்.. நான் கேட்கலையே.. எனக்கு எது சரின்னு படுதோ அதை நான் செய்யறேன்.. உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை நீங்க செய்ங்க.. அடுத்தவனை குறை சொல்லாதீங்க.. 

பதிவுலகுல என்ன பதிவு போட்டா மக்களுக்கு யூஸ் ஆகும்னு பார்த்து பதிவு போடுங்க.. அவன் என்ன பண்றான், இவன் என்ன சொல்றான், இவனை போட்டு தாக்குவோம்னு ஏன் நினைக்கறீங்க.. அவங்கவங்க வேலையை அவங்கவங்க பாருங்க..
2. நான் ஆனந்த விகடன் குரூப்  பத்திரிக்கைகளிடம் இருந்து  பதிவுகளை காப்பி பேஸ்ட் பண்றேன் என்பது.. 

அமரர் சுஜாதா கற்றதும் ,பெற்றதும்ல அவருக்குப்பிடிச்ச ,அவர் படிச்ச நல்ல படைப்புகளை பகிர்ந்துக்கிட்டாரு.. எழுத்தாளர் சாவி என்னைக்கவர்ந்த படைப்புகள்னு ஒரு தொடர் எழுதுனாரு..
அவங்களோட கம்ப்பேர் பண்ண எனக்கு தகுதி இல்லை.. ஆனா அதே மாதிரி நான் எனக்குப்பிடிச்ச ,மக்களுக்குப்பயன் அளிக்கும் என நான் நினைக்கும் படைப்புகளை காப்பி பேஸ்ட் பண்றேன்.. இதுல என்ன தப்பு?

ஆனந்த விகடனின் சேல்ஸ் 8 லட்சம், நம் வலை உலகை ஆக்ரமித்திருக்கும் படைப்பாளிகள் 1789 பேர்.. படிப்பாளிகள் சுமார்  10,000 பேர்.. அதில் என் தளத்திற்கு வந்து படிப்பவர்கள் சுமார் 1000 டூ 2000 பேர் மட்டுமே.. அப்படி இருக்கும்போது நான் காப்பி பேஸ்ட் செய்து பதிவு போட்டால் அதனால் பத்திரிக்கை  சேல்ஸே குறைஞ்சிடும் என்பதும்,அதனால் விகடனில் படிக்க சுவராஸ்யம் இல்லாமல் போய் விடும் என்பதும் கேலிக்கூத்து.. எத்தனை பேர் அவள் விகடன், சக்தி விகடன்,நாணயம் விகடன் வாங்கறாங்க? அப்படி வாங்காதவங்க வந்து படிக்கறாங்க.. பயன் உள்ளதா சொல்றாங்க.. உங்களுக்கு ஏன் கஷ்டமா இருக்கு..?

3. கில்மா படங்களின் விமர்சனம் போடறார் என்ற குற்றச்சாட்டு..

சீன் படம் என்று அழைக்கப்படும் கில்மா பட விமர்சனங்கள் போடறாதல சமூகமே சீரழிஞ்சிடுச்சு.. சி.பி சமுதாயத்தையே கெடுத்துட்டாரு என்பவர்களே.. 
a
 
 பேசுவது ஸ்ரீவில்லிப்புத்தூர் ரத்னவேல்,உணவு உலகம்,வலைச்சரம் சீனா,பலா பட்டறை சங்கர்
 
என் கில்மா பட விமர்சங்களில் ஆபாசமான வர்ணனையோ,உணர்ச்சியை தூண்டும் எழுத்துக்களோ இருந்ததுண்டா..?சீன் படம் பார்க்கப்போகும் ஆண் எப்படி சங்கடப்பட்டுக்கிட்டே தியேட்டருக்குப்போறான் என்பதை காமெடியாகத்தான் சொல்வேன்.. 

சரி , நான் கலாச்சாரக்காவலர்களை ஒன்று கேட்கிறேன்.. நான் அந்த மாதிரி பட விமர்சனங்கள் இதுவரை 19 போஸ்ட் போட்டிருக்கிறேன்.. அந்த பட விமர்சனங்கள் 1500 பேர் படித்தார்கள்.. பல பதிவர்கள் என் பிளாக் லிங்க் குடுத்து இங்கே போய்ப்பார்.. எவ்வளவு மொக்கையா பதிவு போடறான் என சொல்லி மேலும் 2000 பேர் படிக்க காரணம் ஆகிறீர்களே.. உங்களிடம் ஒரு கேள்வி.. 

நான் எத்தனையோ நல்ல போஸ்ட் போட்டேன்.. புது வருட பிறப்பன்று புத்தாண்டில் நாம் எடுக்க வேண்டிய சபதங்கள் என்னும் விழிப்புணர்வு பதிவு போட்டேன்.. அது 180 பேர் மட்டும் தான் படிச்சாங்க.. அதுக்கு லிங்க் கொடுக்க வேண்டியது தானே..? சி .பி நல்ல பதிவு போட்டிருக்கான் இதை போய் படிச்சுப்பாருங்கன்னு ஏன் சொல்லலை..? 


இந்த சமுதாயம் நல்லாருக்கனும்னு நீங்க உண்மையிலேயே நினைச்சா நான் போட்ட 500 நல்ல பதிவுகளை பாராட்டி லிங்க் குடுங்க.. அப்போ நான் தப்பான பதிவு போட்டா தட்டி கேட்டா அதுல ஒரு நியாயம் இருக்கு.. உண்மையான நண்பன்னா என்ன செய்யனும்?நல்ல பதிவு போடறப்ப பாராட்டனும், மோசமான பதிவு போடறப்ப தட்டிக்கேட்கனும்.. நீங்க என்ன பண்றீங்க.. அண்ணன் எப்போ சறுக்குவான், எப்போ திண்ணையை விட்டு துரத்தலாம்னு பார்க்கறீங்க..?

இப்படி குறை சொல்றவங்களை தனி மெயில்ல நீங்க அந்த மாதிரி படங்கள் பார்ப்பீங்களா?ன்னு கேட்டா ஹி ஹி பார்ப்பேன் , ஆனா பப்ளிக்கா வெளில சொல்ல மாட்டேன்.. அப்டீங்கறார்.
 


4. நடிகைகளின்  கிளாமர் ஸ்டில்களை போட்டு ஹிட்ஸ் ஏற்றிக்கிறார்.. குடும்பப்பொண்ணுங்களை,காலேஜ் பொண்ணுங்களை ஸ்டில்ஸ் ஸா போடறார்..

 ஆரம்பத்தில் ஒரு கவர்ச்சிக்காக நடிகைகளின் கிளாமர் ஸ்டில்ஸ் போட்டேன்.. அதற்கு எதிர்ப்பு வந்ததும் காலேஜ்,ஸ்கூல் விழாக்களில் பெண்கள் படம் இடம் பெற்றதை கூகுள்-ல் இருந்து எடுத்துப்போட்டேன் . இப்போ அதற்கும் எதிர்ப்பு வருகிறது.. இவற்றில் நியாயம் இருப்பதாக நான் நினைப்பதால் இனி என் தளத்தில் ஓவர் கிளாமரான நடிகைகள் ஸ்டில்ஸோ, குடும்பப்பெண்களின்  ஸ்டில்ஸோ இடம் பெறாது என்று சொல்லிக்கொள்கிறேன்.. அதற்குப்பதிலாக இயற்கை காட்சிகள், வித்தியாசமான ரசனை  தூண்டும் படங்கள் போடலாம்னு இருக்கேன்..

5. பதிவுக்கும் ,உள்ளடக்கத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் டைட்டில் வைக்கிறாரே..?

 ஒரு சினிமாவுக்கு போஸ்டர் எப்படி முக்கியமோ, ஒரு நாவல் அல்லது கவிதைத்தொகுப்புக்கு அட்டைப்படம் எப்படியோ அப்படித்தான் ஒரு பதிவுக்கு டைட்டில் முக்கியம்.. ஒரு வாசகனை நம் தளத்திற்கு அழைத்து வர அது ஒரு கீ வோர்டு.. அது கிளாமராக வைப்பதில் தப்பு இல்லை.. ஒவ்வொரு முறை ஆட்சியாளர்கள் வாக்குறுதி அளிக்கும்போது கவர்ச்சிகரமாக,பொய்யான வாக்குறுதி கொடுத்து நம்மை ஏமாற்ற வில்லையா?அதை நாம் சகித்துக்கொண்டு மீண்டும் மீண்டும் அவர்களை அரியணையில் மாற்றி மாற்றி உட்கார வைப்பதில்லையா?

6. இவரிடம் சரக்கு தீர்ந்து விட்டது.... அதனால் தான் காப்பி பேஸ்ட் பதிவு போடறார்..

நான் பத்திரிக்கை உலகில் 18 வருடங்களாக படைப்புகள் எழுதி வருகிறேன்.. இதுவரை நான் எழுதிய ஜோக்குகள் மட்டும் ஒரு லட்சத்து எட்டாயிரத்து அறுநூறு.. அவற்றில் பத்திரிக்கைகளில் பிரசுரமான படைப்புகள் மட்டும் 9780... தினமும் 10 ஜோக் என்று போட்டாலே நான் 3 வருடங்களுக்கு  பதிவு போடுவேன்.. சரக்கு  இல்லாமல் அல்ல.. தொடர்ந்து ஜோக்காக  போட்டால் போர் அடித்து விடும் என்பதால் தான் வெவ்வேறு சப்ஜெக்ட்ஸ் போடறேன்..


7. சினிமா விமர்சனம் எழுதினால் கேவலமா?

 சினிமா விமர்சனம் எழுதினால் கேவலம் என சிலர் சொல்றாங்க..  ரொம்ப சீப்பா பார்க்கறாங்க.. சினிமா விமர்சனம் எழுதுவது தான் பதிவு போடறதுலயே  ரொம்ப சிரமம்.ஒரு மொக்கைப்படத்தை ரெண்டரை மணி நேரம் உட்கார்ந்து பார்க்கனும்,அதை நினைவு வெச்சுக்கிட்டு ஒரு மணி நேரம் டைப் பண்ணனும்..
அந்தப்படம் கம்ர்ஷியல் ஹிட்டா? இல்லையா? என்பதை கணிக்கனும்,விகடன் மார்க் எவ்வளவு போடுவாங்க என போடனும்.. 


சினிமா விமர்சனத்தில் எதற்கு வசனங்களை ப்போடறீங்கன்னு கேட்டாங்க.. 

பதிவுலகில் ஏற்கனவே சினிமா விமர்சனம் எழுதுவதில் வல்லவர்களான கேபிள் சங்கர்,ஜாக்கிசேகர்,உண்மைத்தமிழன், அதிஷா மற்றும் பலரது விமர்சன நடையில் இருந்து மாறவும், தனித்திருக்கவும், எனக்கென ஒரு அடையாளத்தினை ஏற்படுத்தவும் அந்த வசனங்கள் எழுதும் உத்தியை கொண்டு வந்தேன்..

இதற்கு மேல் ஏதாவது கேள்விகள் என்னை கேட்க வேண்டுமானால் கேளுங்கள் பதில் சொல்கிறேன்.. 


- தொடரும்.. 

டிஸ்கி - பாகம் 4 -ல் பெண் பதிவர்கள்  6 பேர் என்ன பேசினார்கள் என்பதும், பாகம் 5 இல் மீதி உள்ள பதிவர்களின் பேச்சும் இடம் பெறும்